வெள்ளி வசந்தம்

ஆலிம் பெருமக்கள் அள்ளித் தரும் ஆழிய கருத்துகளை ஆசிரியர்கள் தொகுத்து .வழங்கும் ஜும்ஆஉரைகள்

சட்டங்கள்

வணக்கம்,வழக்கம்,வணிகம்,இல்லறம்,நல்லறம்,தொடர்பான வினாக்களுக்கு ஆதாரத்துடன் அளிக்கப்பட அருமையானபதில்கள்

குழந்தைப் பெயர்கள்

அரபு மற்றும் அர்த்தத்துடன் முஸ்லிம் குழந்தைகளுக்கான அழகுத் திருப் பெயர்கள்

அரபுக் கல்லூரிகள்

தரணி எங்கும் தலைசிறந்து விளங்கும் அரபுக் கல்லூரிகள்

வலைதள வல்லுநர்கள்

இந்த தளத்தில் அரும்பணியாற்றும் ஆசிரியப் பெருமக்கள்

Showing posts with label ABBAS RIYAZI. Show all posts
Showing posts with label ABBAS RIYAZI. Show all posts

22 March 2016

"மறுமையின் பத்து அடையாளங்கள்" -2

                     


சென்ற வாரத்தின் இறுதியில் புகைமூட்டம் வரை பார்த்தோம் அதனை தொடர்ந்து மீதமுள்ள அடையாளங்களை பாப்போம்!

1 - புகை மூட்டம்
2 - தஜ்ஜால்
3 - (அதிசயப்) பிராணி
4 - சூரியன் மேற்கிலிருந்து உதிப்பது
5 - ஈஸா (அலை) இறங்கி வருவது
6 - யஃஜுஜ், மஃஜுஜ்
7 - கிழக்கே ஒரு பூகம்பம்
8 - மேற்கே ஒரு பூகம்பம்
9 - அரபு தீபகற்பத்தில் ஒரு பூகம்பம்

31 December 2015

நற்குணங்களின் தாயகம் நபிகள் நாயகம்!


அஸ்ஸலாமு அழைக்கும் சங்கை மிகுந்த ஆலிம்களே மேலான்மைகுழு சார்பாக இந்த வார ஜும்ஆ தலைப்பு அண்ணலார் ஒரு அழகிய முன்மாதிரி என்று தரப்பட்டதை தாங்கள் அறிவீர்கள். சென்ற வாரம் தவூதிகள் சார்பாக இதே தலைபில் மிக அற்புதமாக பல செய்திகளை தந்து குறிப்பு வழங்கி பல ஆலிம்கள் சென்ற ஜும்ஆவில் பேசியும் இருப்பதால் இந்த வார தலைப்பு (நற்குணங்களின் தாயகம் நபிகள் நாயகம்) தங்களுக்கு தோதுவாக மாற்றப்படுகிறது.             

                                       
                                 وَاِنَّكَ لَعَلٰى خُلُقٍ عَظِيْمٍ‏ 
மேலும், (நபியே) நிச்சயமாக நீர் மிக உயர்ந்த மகத்தான நற்குணம் உடையவராக இருக்கின்றீர்.
(68:4)

மனிதர்களில் சிறந்தவர்கள் பணம் படைத்தவர்கள் அல்லர். மாறாக நற்குணம் படைத்தவர்களே மனிதர்களில் சிறந்தவர்கள் ஆவர். நற்குணம் படைத்தவர்கள் புகழ் தேடி அலைய வேண்டிய அவசியம் இல்லை. அவர்களைத் தேடி புகழ் ஓடி வருகிறது. 

27 August 2015

ஹஜ்ஜின் மாண்புகள்!




ஹஜ் எனும் புனித பயணம்!

உலகம் முழுவதும் ஹஜ் வணக்கத்தை நிறைவேற்றிட புனித கஅபாவை நோக்கி இலட்சக்கணக்கான முஸ்லிம்கள் பயணித்து வரும் நிலையில் இஸ்லாத்தின் இறுதிக் கடமையான  ‘ஹஜ்’ குறித்து சில விஷயங்ளை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். கிழக்கே சீனா முதல் மேற்கே அமெரிக்கா வரை உலகிலுள்ள எல்லா நாடுகளில் இருந்தும் முஸ்லிம்  சமுதாயத்தைச் சார்ந்த எல்லா மனிதர்களும் நிறம், இனம், தோற்றம், பணம், பதவி போன்ற பாகுபாடுகளுக்கு அப்பால் குறிப்பிட்ட இடத்தில் , குறிப்பிட்ட நாட்களில் ஒன்று கூடி, தங்களின் ஒரே இறைவனை ஒரே உடையில் மிகவும் எளிய தோற்றத்தில் வணங்கிடும் அமல் தான் ஹஜ்ஜுடைய அமலாகும்

14 August 2015

இந்திய சுதந்திர போரில் முஸ்லிம்களின் பங்கு!

இந்திய ‬முஸ்லீம்களின்‪ மறைக்கப்பட்ட ‬வீர வரலாறுகள் எண்ணிலடங்கா..!!""

இஸ்லாமிய தியாகிகள் இந்திய சுதந்திரப் போராட்டத்துக்காக தங்களின் உடல் , பொருள், ஆவியை தியாகம் செய்த பல இஸ்லாமியப் பெருமகன்களின் வரலாற்றை கண்டு வருகிறோம்.

இந்திய சுதந்திரப் போராட்டத்தில் சிறைக்கு சென்றவர்களிலும் உயிர்களை தியாகம் செய்தவர்களிலும் முஸ்லிம்கள்அவர்களின் மக்கள் தொகையின் விகிதாச்சாரத்தோடு ஒப்பிடும்போது மிக அதிகமாகவே இருந்தார்கள்

24 July 2015

மக்தப்களின் அவசியம்!

     




  ‌يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْۤا اِنَّ مِنْ اَزْوَاجِكُمْ وَاَوْلَادِكُمْ عَدُوًّا لَّكُمْ فَاحْذَرُوْهُمْ‌ۚ وَاِنْ تَعْفُوْا وَتَصْفَحُوْا وَتَغْفِرُوْا فَاِنَّ اللّٰهَ غَفُوْرٌ رَّحِيْمٌ‏ 
ஈமான் கொண்டவர்களே! நிச்சயமாக உங்கள் மனைவியரிலும், உங்கள் மக்களிலும் உங்களுக்கு விரோதிகள் இருக்கின்றனர்; எனவே அவர்களைப் பற்றி நீங்கள் எச்சரிக்கையாக இருங்கள்; அதையும் (அவர்களின் குற்றங் குறைகளை) மன்னித்தும், அவற்றைப் பொருட்படுத்தாமலும், சகித்துக் கொண்டும் இருப்பீர்களாயின் - நிச்சயமாக அல்லாஹ் மிகவும் மன்னிப்பவன். மிக்க கிருபையுடையவன்.(64:14)

26 June 2015

பாவமன்னிப்பு!





பாவம் செய்தல் மனிதனின் பிறப்பு அம்சங்களில் ஒன்று.மனிதன் மலக்கு அல்ல அவன் பாவத்தை அறியாமல்,தெரியாமல் இருப்பதற்கு.

இஸ்லாம் மனிதனை மனிதனாகத் தான் பார்க்கின்றது. அவன் நல்லதையும் அறிந்தவன்.கெட்டதையும் தெரிந்தவன் என்ற கண்ணோட்டத்தில் தான் மனிதனை அணுகுகிறது.

19 June 2015

ரமளானின் ரஹ்மத்தும், நோன்பின் சட்டங்களும்!

                                                      بسم الله الرحمن الرحيم 


சந்கைமிகுந்த ரமலான் நம்மை அலங்கரிக்க வந்திருக்கிறது. ரமலான் என்றாலே நம் உள்ளத்தில் ஒரு விதமான சந்தோஷம் ஏற்படுகிறது. இது தான் ஈமானிய உணர்வு
ரமழானின் முப்பது நாட்களை மூன்று பிரிவாக பிரித்துமுதல் பத்தில்
அல்லாஹ்வின் ரஹ்மத்தையும், இரண்டாம் பத்தில்பாவ மன்னிப்
பையும், மூன்றாமது பத்தில் நரக விடுதலையையும்வல்ல நாயனிடம் 
மன்றாடி கேட்க வேண்டுமென நபி {ஸல்}அவர்கள் கூறுவார்கள்.

08 May 2015

கொஞ்சும் குழந்தைகளை கஞ்சம் கவனியுங்கள்!


ரப்புல் ஆலமீன் நமக்கு  நிறைய அருட்கொடைகளை வழங்கி இருக்கிறான் அவற்றில்  மிக உயர்ந்தது நமது பிள்ளை செல்வங்கள்தான். எனவே தான் அருள்மறையில் குழந்தை செல்வங்களை பற்றி பேசுகிற போது
لِلَّهِ مُلْكُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ يَخْلُقُ مَا يَشَاءُ يَهَبُ لِمَنْ يَشَاءُ إِنَاثًا وَيَهَبُ لِمَنْ يَشَاءُ الذُّكُورَ (49)

அல்லாஹ்வுக்கே வானங்களுடையவும் பூமியுடையவும் ஆட்சி சொந்தமாகும்; ஆகவே தான் விரும்பியவற்றை அவன் படைக்கின்றான்; தான் விரும்புவோருக்குப் பெண் மக்களை அளிக்கிறான்; மற்றும் தான் விரும்புவோருக்கு ஆண் மக்களை அளிக்கின்றான்..அல்லது அவர்களுக்கு அவன் ஆண்மக்களையும், பெண் மக்களையும் சேர்த்துக் கொடுக்கின்றான்; அன்றியும் தான் விரும்பியோரை மலடாகவும் செய்கிறான் - நிச்சயமாக, அவன் மிக அறிந்தவன்; பேராற்றலுடையவன்.(42:49,50)

03 April 2015

பாவமும் பரிகாரமும்!

இவ்வுலகில் மிக தீர்க்கமான வழிகாட்டுதல்கள் கொடுக்கப்பட்ட ஒரே மார்க்கம் சத்திய தீனுல் இஸ்லாம் தான்.
நாம் வாழும் காலத்தில் எப்படியெல்லாம் நம் வாழ்கையை அமைத்து கொள்ள வேண்டும் என்ற போதனைகளை சொல்லி கொடுத்து அதுபோன்று வாழ்ந்தால் உன்னதமான சுவர்க்கமும் அதற்கு மாற்றமாக வாழ்ந்தால் கொடிய நரகமும் உண்டு என்ற  எச்சரிக்கைகளோடு இவ்வுலகில் அனுப்பப்பட்டவர்கள் முஸ்லிம்கள்

26 February 2015

இஸ்லாமிய உயர்வுக்கு வாலிபர்களின் பங்கு!

ரப்புல் ஆலமீன் நமக்கு வழங்கிய  அருட்கொடைகளில் உடல் ரீதியிலான அருட்கொடைகள் மிக அதிகம். நாம் அந்த அருட்கொடைகளை சரியாக பயன் படுத்தும் தருணம் வாலிப பருவம் தான்.

19 February 2015

இஸ்லாம் வழிகாட்டித் தந்த சகோதரத்துவம்!


அன்று இவ்வுலகில் இஸ்லாம் பரவிய பல காரணங்களில் ஒன்று சத்திய ஸஹாபாக்கள் தங்களுக்கு மத்தியில்  சகோதரத்துவத்தோடு வாழ்ந்தது தான்.

இன்று இஸ்லாமை பற்றி தவறாக பேசப்படும் பல காரணங்களில் ஒன்று நாம் நமக்கு மத்தியில்
சகோதரத்துவத்தோடு வாழாதது தான்.

12 February 2015

காதலர் தினமா? கழிசடை தினமா?


                          رُّبَمَا يَوَدُّ الَّذِينَ كَفَرُوا لَوْ كَانُوا مُسْلِمِينَ          
 தாங்களும் முஸ்லிம்களாக இருந்திருக்க வேண்டுமே, என்று காஃபிர்கள் (மறுமையில் பெரிதும்) ஆசைப்படுவார்கள்.(15:2) 
عن سفيان بن عبد الله قال:قلت يا رسول الله قل لى في الإسلام  قولا لا أسأل عنه أحدا بعدك :قال   قل آمنت بالله فاستقم