வெள்ளி வசந்தம்

ஆலிம் பெருமக்கள் அள்ளித் தரும் ஆழிய கருத்துகளை ஆசிரியர்கள் தொகுத்து .வழங்கும் ஜும்ஆஉரைகள்

சட்டங்கள்

வணக்கம்,வழக்கம்,வணிகம்,இல்லறம்,நல்லறம்,தொடர்பான வினாக்களுக்கு ஆதாரத்துடன் அளிக்கப்பட அருமையானபதில்கள்

குழந்தைப் பெயர்கள்

அரபு மற்றும் அர்த்தத்துடன் முஸ்லிம் குழந்தைகளுக்கான அழகுத் திருப் பெயர்கள்

அரபுக் கல்லூரிகள்

தரணி எங்கும் தலைசிறந்து விளங்கும் அரபுக் கல்லூரிகள்

வலைதள வல்லுநர்கள்

இந்த தளத்தில் அரும்பணியாற்றும் ஆசிரியப் பெருமக்கள்

03 September 2015

மக்கா மதீனாவின் மாண்புகள்

             மக்கா மதீனாவின் மாண்புகள்

 إِنَّ أَوَّلَ بَيْتٍ وُضِعَ لِلنَّاسِ لَلَّذِي بِبَكَّةَ مُبَارَكًا وَهُدًى لِّلْعَلَمين

 (இறை வணக்கத்திற்கென) மனிதர்களுக்காக வைக்கப் பெற்ற முதல் வீடு நிச்சயமாக பக்காவில் (மக்காவில்) உள்ளது தான்; அது பரக்கத்து (பாக்கியம்) மிக்கதாகவும், உலக மக்கள் யாவருக்கும் நேர்வழியாகவும் இருக்கிறது.
                                                                      அல் குர்ஆன் 3:96
கஃபாவின் பராமரிப்பு
கஃபாவை ஆரம்ப காலத்தில் குஸாஆ என்ற குரைஷியக் கோத்திரத்தில் ஒரு பிரவினர் நிர்வகித்து வந்தனர், இவர்களின் காலத்தில்தான் சிலைகள் இல்லாத தூய்மையான புனித அந்த இல்லத்தில் சிலைவைக்கப்பட்டு, அதன் நோக்கம் மாசுபடுத்தப்பட்டது. அந்தப்பாவத்தை முதல் முதலில் அம்று பின் லுஹை அல்குஸாயி என்பவனே அதனுள் அரங்கேற்றினான். அதனால் நபி (ஸல்) அவர்கள் அம்றுபின் லுஹைல் அல்குஸாயை நரகத்தில் அவனது குடல்களை இழுத்துக் கொண்டு வேதனை செய்யப்படுவதைக் கண்டேன், அவனே கஃபாவில் முதல்முதலில் சிலை வணக்கத்தை உண்டாக்கியவன் எனக் கூறினார்கள். (புகாரி).
இவர்களின் பின்பு குரைஷியரிடம் அதன் நிர்வாகம் கைமாறியது. அதிலும் இறையற் கோட்டபாட்டில் இணைவைத்தலும், பல சமூகக் கொடுமைகளும் அரங்கேறவே செய்தன. உயர் சாதி குரைஷியர் அவர்களின் குலத்தில் இல்லாத, தாழ்த்தப்பட்ட மக்களை? புனித கஃபாவில் ஆடையின்றி நிர்வாணமாக தவாஃப் செய்ய விட்டனர், எல்லோரும் அரஃபாவில் தங்கி இருக்க, இவர்களோ முஸ்தலிபாவில் தங்குவர், இப்படி பல நடைமுறைகள். இவர்களின் ஆட்சியில்தான் கஃபாவினுள் 360 சிலைகள் வைக்கப்பட்டன. அவற்றை அல்லாஹ்வின் தூதர் ஹிஜ்ரி 8வது வருடம் மக்கா வெற்றியின் போது ‘ சத்தியம் வந்தது, அசத்தியம் ஒழிந்தது, அசத்தியம் ஒழிந்தே தீரும் என்ற திருமறைவசனத்தைக் கூறியவர்களாக உடைத்தெறிந்தார்கள்.      (பார்க்க : புகாரி, முஸ்லிம்).
கஃபாவை தகர்க்க எடுத்து முயற்சி சுக்குநூறாகியது
அபீஸீனிய மன்னனின் ஆட்சியில் ஏமன் நாட்டின் பிரதிநிதியாக செயல்பட்டு வந்த ஆப்ரஹா என்பவன் கி.பி. 571-ல் பிரமாண்டமான யானைப் படை ஒன்றைத் தயார் செய்து கஃபாவை இடிப்பதற்காக அனுப்பிவைத்தான், அதை அழிப்பதற்காக அபாபீல் என்ற பறவைகளின் சொண்டுகிளில் சூடேற்றப்பட்ட கற்களை கவ்விக்கொண்டு வரச் செய்து, அந்தப்படையை மெண்டு துப்பிய வைக்கோலைப்போல் அல்லாஹ் ஆக்கினான் என்பதை அல்ஃபீல் அத்தியாயம் தெளிவு படுத்துகின்றது.
அபாபீல் பறகைள் சுமந்து வந்தது அணுவைத்தான் என்று விளக்க முற்படுவது அறியாமையின் உச்சமாகும்.
கஃபா குரைஷியரால் புணர் நிர்மானம் செய்யப்படுதல்
குரைஷியரின் நிர்வாகத்தின் கீழ் இயங்கிய கஃபா வரலாற்றுச் சிறப்புமிக்கதோர் புணர் நிர்மானத்திற்கு உட்படுத்தப்பட்டது. நபி (ஸல்) அவர்கள் அன்னை ஆயிஷா (ரழி) அவர்களிடம்: உனக்குத் தெரியுமா? உனது சமூகத்தவர்கள் (குரைஷியர்) கஃபாவைக் கட்டிய போது பொருளாதார நெருக்கடியால் இப்ராஹீம் (அலை) அவர்களின் அடித்தளைத்தைச் சுருக்கிவிட்டனர், உனது சமுதாயவத்தவர் புதிதாக இஸ்லாத்தில் இணைந்த மக்களாக இல்லை என்றால் அதை இடித்துவிட்டு, நான் அதை இப்ராஹீம் (அலை) அவர்களின் சரியான அடித்தளத்தின் மீது கட்டி, ஆறுமுளம் அதிகப்படுத்தி, ஹிஜ்ரையும் கஃபாவினுள் ஆக்கி, அதற்கு கிழக்கு மற்றும், மேற்கு வாசல்களையும் வைத்திருப்பேன் எனக் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்).
இந்த  ஹதீஸ் கஃபா சாதாரண ஒரு உயரத்தில் இருந்து வந்துள்ளதையும், இப்ராஹீம் நபியின் அடித்தளம் சுருக்கப்பட்டு கட்டப்பட்டதற்கு பொருளாதாரத நெருக்கடி காரணம் என்பதையும் மறைமுகமாக விளக்குகின்றது. அப்படியானால் அந்தப் பகுதி என்ன என்பது பற்றி அறிய முற்பட்டால் மக்கள் ‘ஹிஜ்ரு இஸ்மாயீல் என்றழைக்கும் ‘ஹிஜ்ர்’ என்ற அந்த வளைவு மூலை என்பது ஹதீஸ்களில் குறிப்பிடப்படுகின்றது. அது பற்றிய செய்தி பின்னர் தரப்படும்.
அப்துல்லாஹ்பின் சுபைர் (ரழி) அவர்கள் புணர் நிர்மானம்
ஹிஜ்ரி 60- முதல் 72- வரையுள்ள காலம் வரை இப்னு சுபைர் (ரழி) அவர்கள் மக்காவின் ஆட்சியாரளராக இருந்தார்கள். ஹிஜ்ரி: 64ல் சிரியாவில் இருந்து வந்த யஸீத் பின் முஆவியாவின் படை அப்துல்லாஹ்பின் சுபைர் (ரழி) அவர்களுடன் புனித கஃபாவில் எறிகணைகளைக் கொண்டு போர்தொடுத்தது. அதனால் புனித கஃபா தீப்பிடித்தது. அதன் கட்டடம் ஆட்டம் கொடுத்தது, அதன் கற்கள் உதிரத்தொடங்கியது. அதனால் நபி (ஸல்) அவர்கள் அன்னை ஆயிஷா ரழி அவர்களிடம் கூறிய ஹதீஸின் அடிப்படையிலும், மக்காவாசிகளின் ஆலோசனையையும் பெற்று கஃபாவைப் புணர் நிர்மானம் செய்தார்கள். ஹிஜ்ர் பகுதியில் கூடுதலாக ஆறுமுளம் அதிகரித்ததோடு, அதற்கு கிழக்கு, மற்றும் மேற்கு வாசல்களையும் வைத்தார்கள். அதன் வாசல்களை நிலத்தோடு படும்படியாகவே செய்தார்கள். அப்போது அதன் நீளம் மொத்தம் பதினெட்டு முளமாக இருந்தது என்ற செய்தியினை முஸ்லிமில் பார்க்கின்றோம்.
உமைய்யா ஆட்சியாளரான அப்துல் மலிக் பின் மர்வான் என்பவர் ஆட்சிக்கு வந்தார். அவர் ஒரு நாள் கஃபாவைத் தவாஃப் செய்து கொண்டிருந்த போது, உம்முல் முஃமினீன் பேரில் பொய்யுரைத்து காஃபாவையும் இடித்து இவ்வாறு செய்த இப்னு சுபைர் அவர்களை அல்லாஹ் நாசமாக்குவானாக எனத்திட்டினார். அதைகேட்டுக் கொண்டிருந்த ஹாரிஸ் என்பவர் அமீருல் முஃமினீன் அவர்களே! அவர்களை நீங்கள் திட்ட வேண்டாம், அன்னை ஆயிஷா அவர்கள் கூற நானும்தான் செவியுற்றுள்ளேன் என்றார். அப்படியா எனக்கு அந்தச் செய்தி தெரிந்திருப்பின் நான் உடைக்காமல் அவரின் புணர் நிர்மான அமைப்பில் விட்டிருப்பேனே என 
 அப்துல்மலிக் வருத்தப்பட்டார். (பத்ஹுல் பாரி- பாடம்: மக்காவின் சிறப்பும், அதன் புணர் நிர்மானமும் ).
ஹஜ்ஜாஜ் பின் யூஸுப் என்பவனின் நச்சரிப்பினால் இதன் மேற்கு வாசல் மூடப்பட்டது, ஹிஜ்ரில் இணைக்கப்பட்டதும் இப்போதுள்ள போன்று திறக்கப்பட்டது, இந்தப் புணர் நிர்மானத்தை சீர்குலத்ததில் அப்துல் மலிக்கை விட அவரின் கவர்னர் ஹஜ்ஜாஜ் என்ற கொடியவனுக்கே அதிக பங்குண்டு எனக் கூறமுடியும். (பார்க்க: முஸ்லிம்).

மக்காவிற்குப் பல பெயர்கள் உள்ளன. அவை

1. மக்கா, 2. பக்கா, 3. அல் பலதுல் அமீன் (அபயமளிக்கும் ஊர்), 4. உம்முல் குரா (நகரங்களின் தாய்),

கிஸ்வா (Kiswa) துணிப்பற்றி;

காபாவின் மீது போடப்பட்டுள்ள கருப்பு நிறத்திலுள்ள துணிவிற்கு கிஸ்வா (kiswa) எனப்பெயர். இது ஒவ்வொரு ஆண்டும் புதிதாக தயாரித்து மாற்றுவார்கள். இதை மக்காவிலுள்ள கம்பேனியில் உருவாக்குவார்கள். இந்த கிஸ்வா துணியின் மதிப்பு சுமார் 17 மில்லியன் சவுதி ரியால் ஆகும். இத்துணி 670கிலோ வெள்ளி சாயம் புசப்பட்ட துணியால் ஆனது. 120கிலோ சுத்த தங்கத்தாலும், 50கிலோ வெள்ளியாலும் அத்துணியின் மீது குர்ஆன் வசனங்கள் பொரிக்கப்பட்டு இருக்கிறது. இந்த துணியின் மொத்த சுற்றளவு 658 சதுரமீட்டர்கள்.

 கிஸ்வா துணி எப்படி உருவானது ?

  முதன் முதலில் تبع الحميري என்பவர்தான் கிஸ்வாவை  அறிமுகம் செய்தார்.
முதல் கிஸ்வா

1. கி.பி 400-ல் யமன் நாட்டை ஆண்ட ஹுமைரி மன்னன் மக்கா வந்த போது அங்குள்ள மக்கள் அவரை சரிவர மரியாதை செலுத்தாததால் கஃபாவை இடித்துத்தள்ள எண்ணிய சமயம் கடுமையான நோய்க்குள்ளானார். அறிஞர்கள் பலரின் ஆலோசனையின் பேரில் உம்ரா செய்து, அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கேட்க நோய் நீங்கப் பெற்றார். பின்னர் கண்ட கனவின் பலனாக அல்லாஹ்விற்கு நன்றி செலுத்தும் பொருட்டு கிஸ்வாவை போர்த்தியதாக ஆதாரங்கள் உள்ளன. இந்த கிஸ்வா உலர்ந்த பனை ஓலையாலும் நூலாலும் நெய்யப்பட்டதாக இருந்ததாம்.
2. பெருமானார்(ஸல்) அவர்கள் மக்கா வெற்றிக்குப் பிறகு செய்த ஹஜ்ஜின் போது யமன் நாட்டிலிருந்து கொண்டுவரப்பட்ட கிஸ்வாவை போர்த்தினார்கள்.

3. கலீபா உமர்(ரலி) அவர்கள் கி.பி 634-ல் (ஹிஜ்ரி 13) எகிப்திலிருந்து கொண்டு வரப்பட்ட கிஸ்வாவை போர்த்தினார்கள்.

4. கலீபா உஸ்மான்(ரலி) அவர்கள் ஆட்சியின் போது ஒவ்வொரு ஆண்டும் ரமளான் பிறை 27-லும் துல்ஹஜ் மாதம் ஹஜ்ஜுக்கு முன்னரும் இருமுறை கிஸ்வா அணிவிக்கப்பட்டது.

5. கலீபா முஆவியா(ரலி)யின் காலத்தில் முஹர்ரம் 10-ம் நாள் அன்று பட்டுத்துணியாலும் ரமலான் கடைசியில் கபாத்தி என்ற கட்டித் துணியாலும் போர்த்தினார்கள்.

6. இவர் காலத்தில் தான் ”லாஇலாஹ இல்லல்லாஹ்” ‘வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு நாயனில்லை’ என்ற அரபி வாக்கியம் பொறித்த கிஸ்வாக்கள் பயன்படுத்தப்பட்டன.

7. காலப் போக்கில் ஒரு முறை அணிவித்த கிஸ்வாவை அகற்றாமலேயே அதன் மீது மீண்டும் கிஸ்வாவை அணிவித்து வந்தனர். இதனால் கஃபாவின் மீது பெருத்த பளு சேரவே ஹிஜ்ரி 160-ல் (கி.பி.775) கலீபா அல்மஹ்தீ அல் அப்பாஸி பழைய கிஸ்வாக்களை அகற்றிவிடப் பணித்தார்.

கஅபாவின் சிறப்பு

''நபி (ஸல்) அவர்கள் ''ஹஸ்வா'' என்ற ஒட்டகத்தின் மீது நின்றவர்களாக மக்காவை நோக்கி, ''நீ தான் அல்லாஹ்வுடைய பூமியில் சிறந்த ஊராவாய்! அல்லாஹ்வுடைய பூமியில் மிகவும் விருப்பத்திற்குரிய ஊராவாய்! என்னுடைய சமுதாயம் (உன்னை விட்டும்) என்னை வெளியேற்றி இருக்காவிட்டால் நான் வெளியேறி இருக்க மாட்டேன். (ஆனால், அவர்களோ என்னை வெளியேற்றி விட்டார்கள்.)'' என்று கூறினார்கள். அப்துல்லாஹ் பின்அதீ (ரலி) திர்மிதீ 3860
மக்காவை நோக்கி நபி (ஸல்) அவர்கள் கூறிய இச்சொற்கள், அவர்கள் மக்காவின் மீது கொண்டுள்ள அளப்பரிய பற்றை வெளிப்படுத்துகிறது.
அபய பூமி
மக்கமா நகரத்தை அல்லாஹ் அபயமளிக்கக் கூடிய பூமியாக ஆக்கியுள்ளான். அல்லாஹ் கூறுகிறான்:
அபயம் அளிக்கும் புனிதத் தலத்தை அவர்களுக்காக வசிப்பிடமாக நாம் ஆக்க வில்லையா? ஒவ்வொரு கனி வர்க்கமும் நம்மிடமிருந்து உணவாக அதை நோக்கிக் கொண்டு வரப்படுகிறது. எனினும் அவர்களில் அதிகமானோர் அறிய மாட்டார்கள். (அல்குர்ஆன் 28:57)
அதில் நுழைந்தவர் அபயம் பெற்றவராவார். (அல்குர்ஆன் 3:97)
இப்ராஹீம் (அலை) அவர்களின் 'துஆ'வின் காரணத்தால் அல்லாஹ் மக்காவைப் புனித நகரமாக்கினான்.
நபி (ஸல்) கூறினார்கள், ''இப்ராஹீம் (அலை) மக்காவை புனிதமாக்கினார். அதற்காக பிரார்த்தனை செய்தார். இப்ராஹீம் மக்காவைப் புனிதமாக்கியது போல் நான் மதீனாவைப் புனிதமாக்கி உள்ளேன். நபி இப்ராஹீம் (அலை) மக்காவிற்காக பிரார்த்தனை செய்தது போல், நான் மதீனாவிற்கு அதனுடைய ஸாவு (என்ற அளவையிலும்) முத்து (என்ற அளவையிலும் அபிவிருத்தி செய்யுமாறு) பிரார்த்தனை செய்துள்ளேன். அப்துல்லாஹ் இப்னு ஸைத் (ரலி) புகாரி.
இப்ராஹீம் நபி செய்த பிரார்த்தனையை திருக்குர்ஆனில் அல்லாஹ் சொல்லிக் காட்டுகிறான்.
''இறைவா! இவ்வூரைப் பாதுகாப்பு மையமாக ஆக்குவாயாக! இவ்வூராரில் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பியோருக்குக் கனிகளை வழங்குவாயாக!'' (அல்குர்ஆன் 2:126)
அல்லாஹ் அவருடைய பிரார்த்தனையை ஏற்று மக்காவைப் பாதுகாப்பு மையமாக ஆக்கினான்.
திருக்குர்ஆன் அபயபூமி என அறிவித்து 14 நூற்றாண்டுகளைக் கடந்த பின்பும், எத்தனையோ ஆட்சி மாற்றங்கள் நடந்த பின்பும் அது இன்றளவும் அபயபூமியாகவே உள்ளது. 14 நூற்றாண்டுகளாக எந்தத் தாக்குதலுக்கும் உள்ளாகாத வரலாற்று சிறப்பு மிக்க ஆலயமாகவும் இது இருந்து வருகிறது. குர்ஆன் இறைவனின் வார்த்தைகள் தான் என்பதற்கு இது மிகப் பெரும் சான்றாக அமைந்துள்ளது.
மேலும் உலகத்தில் விளைகின்ற அனைத்து கனி வர்க்கங்களும் மக்காவில் தாராளமாக வந்து குவிந்து கொண்டிருப்பதும், இது இறைவனின் வார்த்தைகள் என்பதற்குச் சான்றாகத் திகழ்கிறது.
அல்லாஹ்வுடைய பாதுகாப்பு
'கஅபா' ஆலயத்திற்கு அல்லாஹ் தன்னுடைய நேரடிப் பாதுகாப்பை வழங்கியுள்ளான். கியாமத் நாள் வரை அதை எந்தப் படையாலும் அழித்து விட முடியாது. பின்வரும் வரலாற்றுச் சம்பவம் அதற்குச் சிறந்த சான்றாகும்.
அப்ரஹா எனும் மன்னன் தன்னுடைய யானைப் படையுடன் கஅபாவைத் தகர்ப்பதற்காக வந்தான். அவனை எதிர்த்துப் போராடக் கூடிய எந்தப் படையும் அப்போது மக்காவில் இல்லை. என்றாலும், அல்லாஹ் ஒரு வகையான பறவைகளை அனுப்பி, அந்த யானைப் படையை அழித்து தன்னுடைய ஆலயத்தைப் பாதுகாத்தான்.
இதைப் பற்றி அல்லாஹ் கூறுகிறான்:
''(முஹம்மதே!) யானைப் படையை உமது இறைவன் எப்படி ஆக்கினான் என்பதை நீர் அறியவில்லையா? அவர்களின் சூழ்ச்சியை அவன் தோல்வியில் முடிக்கவில்லையா? அவர்களிடம் பறவைகளைக் கூட்டம், கூட்டமாக அனுப்பினான். சூடேற்றப்பட்ட கற்களை அவர்கள் மீது அவை வீசின. உடனே அவர்களை மெல்லப்பட்ட வைக்கோல் போல் ஆக்கினான். (அல்குர்ஆன் 105:1-5)
மேலும் கியாமத் நாள் நெருங்கும் போது ஒரு படை 'கஅபா'வை இடிப்பதற்காகப் படையெடுத்து வருவார்கள். அல்லாஹ் அவர்களையும் அழித்து கஅபாவைப் பாதுகாப்பான் என்ற செய்தியை பின்வரும் நபிமொழி மூலம் அறிந்து கொள்ளலாம்.
''ஒரு படையினர் கஅபாவின் மீது படையெடுப்பார்கள். வெட்ட வெளியான ஒரு பூமியில் அவர்கள் இருக்கும் போது அவர்களில் முதலாமவர் முதல் கடைசி நபர் வரை உயிருடன் பூமிக்குள் புதையுண்டு போவார்கள்'' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ''அல்லாஹ்வின் தூதரே! அவர்களில் முதலாம் நபர் முதல் கடைசி நபர் வரை எவ்வாறு புதையுண்டு போவார்கள்? அங்கு அவர்களைச் சேராதவர்களும் இருப்பார்கள். கடைவீதிகளும் இருக்குமே!'' எனக் கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ''முதலாமவர் முதல் கடைசி நபர் வரை புதையுண்டு போகத் தான் செய்வார்கள். எனினும் அதற்குப் பிறகு அவரவரது எண்ணத்திற்கேற்ப எழுப்பப் படுவார்கள்'' என்று கூறினார்கள். ஆயிஷா (ரலி) நூல்: புகாரி 2118
இறைவன் 'கஅபா' ஆலயத்திற்கு தன்னுடைய நேரடிப் பாதுகாப்பை வழங்கியிருப்பது அதனுடைய சிறப்பைக் காட்டுகிறது.
கொலை, போர் செய்தல் கூடாது
நகரங்களின் தாயான மக்காவிற்கு இறைவன் வழங்கியுள்ள சிறப்பு அம்சங்களில் சில:
அங்கு கொலை செய்வதோ, போர் புரிவதோ கூடாது. மேலும் அங்குள்ள வேட்டைப் பிராணிகளை விரட்டுவதும், மரங்களை வெட்டுவதும், செடி, கொடிகளைப் பறிப்பதும் கூடாது.
''அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்கா வெற்றியின் போது (மக்களிடையே) எழுந்து நின்று, ''அல்லாஹ் வானங்களையும், பூமியையும் படைத்த போதே மக்காவை புனிதப்படுத்தி விட்டான். ஆகவே, அது அல்லாஹ் புண்ணியப்படுத்திய காரணத்தால் இறுதி நாள் வரை புனிதமானதாகும். எனக்கு முன்பும் எவருக்கும் இங்கு போர் புரிவது அனுமதிக்கப் படவில்லை. எனக்குக் கூட சிறிது நேரம் மட்டுமே இங்கு போர் புரிய அனுமதிக்கப்பட்டது. இங்குள்ள வேட்டைப் பிராணிகளை விரட்டக் கூடாது, இங்குள்ள மரங்களை வெட்டக் கூடாது. இங்குள்ள புற்பூண்டுகளைக் கிள்ளக் கூடாது. பிறர் தவற விட்ட பொருளை அதை அறிவிப்பவர் தவிர வேறெவரும் எடுக்கக் கூடாது'' என்று சொன்னார்கள். உடனே அப்பாஸ் பின் அப்துல் முத்தலிப் (ரலி) அவர்கள் ''அல்லாஹ்வின் தூதரே! 'இத்கிர்' எனும் புல்லைத் தவிரவா? ஏனெனில், அது உலோகத் தொழிலாளர்களுக்கும், வீடுகளுக்கும் தேவைப்படுகின்றதே'' என்று கேட்க நபி (ஸல்) அவர்கள் (சிறிது நேரம்) மௌனமாயிருந்து விட்டு பிறகு ''இத்கிரைத் தவிர தான். ஏனெனில் அதை வெட்டிப் பயன்படுத்துவது அனுமதிக்கப்பட்டதாகும்'' என்று பதிலளித்தார்கள். இப்னு அப்பாஸ் (ரலி) புகாரி 4313, 1834                                                                                                                     னிதமிக்க மக்கா நகரில் பாவமான காரியங்களைச் செய்வோருக்குக் கடுமையான வேதனை உள்ளது என அல்லாஹ் எச்சரித்துள்ளான்.
(ஏக இறைவனை) மறுத்தோருக்கும், அல்லாஹ்வின் பாதையை விட்டும், மஸ்ஜிதுல் ஹராமை விட்டும் தடுத்தோருக்கும், மற்றும் அங்கே அநீதியின் மூலம் குற்றம் புரிய நாடுவோருக்கும் துன்புறுத்தும் வேதனையைச் சுவைக்கச் செய்வோம். (அல்குர்ஆன் 22:25)
நபி (ஸல்) அவர்கள், ''அல்லாஹ்விடத்தில் மூன்று நபர்கள் மிகவும் வெறுப்புக்குரியவர்கள். 1. ஹரம் ஷரீஃபில் அநீதியின் மூலம் குற்றம் புரிபவன், 2. இஸ்லாத்தில் அறியாமைக் கால நடைமுறையை நாடக்கூடியவன், 3. தகுந்த காரணமின்றி ஒரு உயிரைப் பறிக்க நாடுபவன். இப்னு அப்பாஸ் (ரலி) புகாரி 6882
காஃபிர்கள் நுழைவதற்குத் தடை
இஸ்லாமிய வணக்கத்தலங்களான பள்ளிவாசல்களுக்கு மற்றவர்கள் வருவதை இஸ்லாம் தடுக்கவில்லை.
ஆயினும் உலகின் ஒரே இறைவனை வணங்குவதற்கு எழுப்பப்பட்ட முதல் ஆலயமான கஃபா மற்றும் அதன் வளாகத்திற்கு மட்டும் பல கடவுள் நம்பிக்கை கொண்டவர்களை அனுமதிக்கக்கூடாது என அல்லாஹ் கட்டளையிட்டுள்ளான்.
நம்பிக்கை கொண்டோரே! இணை கற்பிப்போர் அசுத்தமானவர்களே. எனவே அவர்கள் மஸ்ஜிதுல் ஹராமை இவ்வாண்டுக்குப் பின் நெருங்கக் கூடாது (அல்குர்ஆன் 9:28)
ஹஜ்ஜத்துல் வதாவுக்கு முந்தைய வருடம் நபி (ஸல்) அவர்கள் அபூபக்கர் (ரலி) தலைமையில் மக்களை ஹஜ்ஜுக்கு அனுப்பி வைத்தார்கள். துல்ஹஜ் பிறை பத்தாம் நாள், ''எச்சரிக்கை! இந்த வருடத்திற்குப் பின்னர் இணை வைப்பவர்கள் யாரும் ஹஜ் செய்யக் கூடாது. கஅபாவை நிர்வாணமாகத் தவாஃப் செய்யக் கூடாது'' என அறிவிக்கச் செய்தார்கள். அபூஹுரைரா (ரலி) புகாரி 1622
பல கடவுட் கொள்கை கொண்டவர்களைத் தடை செய்வது மனித நேயத்திற்கு எதிரானது என்று கருதக் கூடாது.
ஏனெனில் கஃபாவை அபய பூமியாக இறைவன் அமைத்துள்ளான். அந்த ஆலயத்திற்கும், அதன் வளாகத்திற்கும் தனிச் சட்டங்கள் உள்ளதைப் பார்த்தோம். அங்கே பகை தீர்க்கக் கூடாது; புல் பூண்டுகளைக் கூட கிள்ளக் கூடாது என்பன போன்ற விதிகள் உள்ளன.
இந்தச் சிறப்பான விதிகளை இஸ்லாத்தை ஏற்றவர்களால் தான் கடைப்பிடிக்க இயலும். உலகம் அழியும் நாள் வரை அறிவிக்கப் பட்டுள்ள அபயபூமியாக அது அமைந்துள்ளதால் தான் இவ்வாறு மற்றவர்களுக்கு அங்கே தடை விதிக்கப்படுகிறது.
ஆனால் மற்ற பள்ளிவாயில்களில் அவர்கள் செல்வதற்கு எந்தத் தடையுமில்லை.
புனிதப் பயணம் மேற்கொள்ளுமிடம்
இஸ்லாத்தில் மூன்று இடங்களைத் தவிர வேறு எங்கும் புண்ணியத்தை நாடி பயணம் செய்வது கூடாது. அவ்வாறு செய்வது பாவமான காரியமாகும்.
புண்ணியத்தை நாடி பயணம் செய்யும் மூன்று இடங்களில் முதலாவது இடமாக நபி (ஸல்) அவர்கள் கஃபதுல்லாஹ்வைக் கூறியுள்ளார்கள்.
''(புண்ணியத்தைத் தேடி) மூன்று பள்ளிவாசல்களைத் தவிர வேறு எங்கும் பயணம் மேற்கொள்ளக் கூடாது. 1. அல் மஸ்ஜிதுல் ஹராம், 2. மஸ்ஜிதுன் நபவி, 3. மஸ்ஜிதுல் அக்ஸா'' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அபூஸயீதுல் குத்ரீ (ரலி) புகாரி 1189
மேலும் செல்வமும், உடல் வலிமையும் உடையவர்கள் தம்முடைய வாழ்நாளில் ஒரு தடவையாவது ''கஃபா'' ஆலயம் சென்று ''ஹஜ்'' செய்வது கட்டாயக் கடமையாகும்.
அந்த ஆலயத்தில் அல்லாஹ்வுக்காக ஹஜ் செய்வது, சென்று வர சக்தி பெற்ற மனிதர்களுக்குக் கடமை. (அல்குர்ஆன் 3:97)
அளவற்ற நன்மை
'கஅபா' ஆலயத்தில் தொழுகின்ற ஒரு தொழுகை மற்ற பள்ளிகளில் தொழுகின்ற ஒரு இலட்சம் தொழுகைகளை விட அதிகமான நன்மைகள் நிறைந்ததாகும்.
என்னுடைய பள்ளி (மஸ்ஜிதுன் னபவி)யில் தொழுவது மற்ற பள்ளிகளில் தொழுகின்ற ஆயிரம் தொழுகைகளை விடச் சிறந்ததாகும். அல் மஸ்ஜிதுல் ஹராம் (கஅபா)வைத் தவிர! (ஏனென்றால் அதற்கு அதை விட அதிகமான நன்மைகள் உள்ளது.) அபூஹுரைரா (ரலி) புகாரி 1190
'மஸ்ஜிதுல் ஹராமில் ஒரு தொழுகை தொழுவது மற்ற பள்ளிகளில் ஒரு இலட்சம் தொழுகை தொழுவதை விடச் சிறந்ததாகும்'' என நபி (ஸல்) கூறியுள்ளார்கள். ஜாபிர் (ரலி) இப்னுமாஜா 1396, அஹ்மத் 14167
எந்நேரமும் வழிபடலாம்
நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்ட நேரங்களில் தொழுவதற்குத் தடை விதித்துள்ளார்கள். அந்நேரங்களில் தொழுவது கூடாது. உதாரணத்திற்கு சூரியன் உதிக்கும் போதும், உச்சியிலிருக்கும் போதும், மறையத் துவங்கும் பொழுதும் தொழுவது கூடாது.
ஆனால் இந்தத் தடை ''கஅபா''விற்கு மட்டும் கிடையாது. அங்கு எந்நேரமும் தொழுது கொள்ளலாம். வணக்க வழிபாடுகளை நிறைவேற்றலாம்.
நபி (ஸல்) அவர்கள், அப்து மனாஃப் குடும்பத்தினரே! இரவிலோ, பகலிலோ எந்த நேரத்திலும், ஒருவர் தான் நாடிய பொழுது இந்த (கஅபா) வீட்டை வலம் வருபவரையோ, தொழுபவரையோ தடுக்காதீர்கள்.
ஜுபைர் இப்னு முத்இம்(ரலி) திர்மிதீ 795
தஜ்ஜாலை விட்டும் பாதுகாப்பு
இறுதி நாளின் அடையாளங்களில் ஒன்று தஜ்ஜாலின் வருகையாகும். இவன் உலகினுடைய அனைத்துப் பகுதிகளுக்கும் செல்வான். ஆனால் மக்காவிற்கும், மதீனாவிற்கும் மட்டும் செல்ல முடியாது.
''மக்கா, மதீனாவைத் தவிர, தஜ்ஜால் கால் வைக்காத எந்த ஊரும் இருக்காது. அவற்றின் (மக்கா, மதீனா) ஒவ்வொரு நுழைவு வாயிலிலும் மலக்குகள் அணிவகுத்து அவனைத் தடுத்தவர்களாக இருப்பார்கள்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அனஸ் பின் மாலிக் (ரலி) புகாரி 1881, முஸ்லிம் 5236
கஅபா இடிக்கப்படுதல்
கியாமத் நாள் வரை கஅபாவில் ஒவ்வொரு ஆண்டும் ஹஜ் செய்யப்படும். கஅபாவில் ஹஜ் செய்யப்படாத நாள் வந்த பிறகே கியாமத் நாள் ஏற்படும்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யஃஜுஜ், மஃஜுஜ் கூட்டத்தார் வந்த பிறகும் இவ்வாலயத்தில் ஹஜ்ஜும் செய்யப்படும். உம்ராவும் செய்யப்படும். 'கஅபா'வில் ஹஜ் செய்யப்படாத நாள் வந்த பிறகே கியாமத் நாள் வரும். அபூஸயீத் (ரலி) புகாரி 1593.
கஅபாவில் ஹஜ் செய்யப்படாத நாள் வரும் போது சிலர் அதனை இடித்துப் பாழ்படுத்துவார்கள்.
இதைப் பற்றி அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கும் செய்தி புகாரியில் இடம் பெற்றுள்ளது.
நபி (ஸல்) அவர்கள், அபீஸீனியாவைச் சேர்ந்த மெலிந்த கால்களைக் கொண்ட மனிதர்கள் கஅபாவை இடித்துப் பாழ்படுத்துவார்கள் கூறினார்கள். புகாரி 1591, 1896
''வெளிப்பக்கமாக வளைந்த கால்களை உடைய, கருப்பு நிறத்தவர்கள், ஒவ்வொரு கல்லாகப் பிடுங்கி கஅபாவை உடைப்பதை நான் பார்ப்பது போன்றிருக்கிறது'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். இப்னு அப்பாஸ் (ரலி) புகாரி 1595.
கியாமத் நாள் வரும் வரை தான் அல்லாஹ் கஅபாவை அபய பூமியாகவும், பாதுகாப்புத் தலமாகவும் ஆக்கியுள்ளான். எனவே கியாமத் நாள் வரும் போது ''கஅபா'' இடிக்கப்படுவது இறைவனுடைய பாதுகாப்புக்கு எதிரானது கிடையாது.
உலகில் உள்ள இடங்களில் அரபு பகுதிகளில் உள்ள மக்காவை அல்லாஹ் சிறப்பு படுத்தி வைத்திருக்கிறான். தன் திருஇல்லமாம் கஃபாவை அமைத்து அந்த இடத்தை ஒரு பாதுகாப்பிற்குரிய இடமாக அல்லாஹ் அமைத்துவைத்திருக்கிறான்.

ஒரு நபர் அடுத்தவருக்கு பாதுகாப்பு வழங்குவார். இன்றைய விஞ்ஞான காலத்தில் சில இயந்திரங்கள் பாதுகாப்பு கொடுக்கும். ஆனால்; ஒரு இடம் பாதுகாப்பு தரும் என்பது ஆச்சர்யம். குறிப்பாகு சொன்னால் ஒரு இடம் அங்குள்ள மக்களை மட்டுமல்லாமல் அதன் பகுதியில் அமைந்திருக்கிற செடி கொடிகள் அங்கு ஓடி வரும் தண்டனைக்குறியவரையும் பாதுகாக்கும் என்றால் அது ஆச்சர்யத்திலும் பெரிய ஆச்சர்யம். அந்த விந்தயை மக்கா செய்கிறது.
சில நபர்கள் சொல்வார்கள்' அந்த ஊருக்கு போன போதும் அவனுக்கு பாதுகாப்பு இருக்கு அவன் பொழச்சிபான் '. ஆனால் இந்த வார்த்தைகளெல்லாம் அந்த ஊரில் உள்ள மக்கள் அவனை காப்பாற்றுவார்கள் என்பதை தான் அவ்வாறு கூறுவார்கள். ஆனால் மக்கா அவ்வாறு அல்ல.
மக்காவில் உள்ள மக்களே ஒரு ஆபத்தை கண்டு பயந்து ஒதுங்கி இருந்தாலும் மக்கா அம்மக்களை காப்பாற்றும்.
நாம் அறிந்த பீல் சுராவில் அமைந்த நிகழ்வு. கஃபாவை இடிப்பதற்கு வந்த அப்ரஹா படையை எதிர்க்க திராணி இல்லாத பயந்த பின்வாங்கிய அரபு மக்களை மக்காவில் அமைந்துள்ள கஃபாவின் சிறப்பால் அல்லாஹ் காப்பாற்றினான்.
قَالَ تَعَالَى {إِن أول بَيت وضع للنَّاس للَّذي ببكة مُبَارَكًا وَهدى للْعَالمين فِيهِ آيَات بَيِّنَات مقَام إِبْرَاهِيم وَمن دخله كَانَ آمنا}
பரக்கத்து பொருந்திய மக்காவின் மிகப்பெரிய சிறப்பு கஃபாவின் இறைஇல்லம்தான். அதற்காகத்தான் அந்த இடத்திற்கு இத்துனை சிறப்பு. அந்த இறை இல்லத்தில் அதன் பகுதிக்குள் நுழைந்தவர்கள் பாதுகாப்பு பெற்றவர்கள். அதில் பல அத்தாட்சிகள் உள்ளன என இறைவன் கூறுகிறான்.
ஹசன் இப்னு அபில் ஹசன் அல் பசரி என்கின்ற பெரியாரின் நண்பர் மக்காவில் இருந்தார். அவரும் மார்க்க பற்றும் இறைபக்தியும் மிகைத்த ஒரு இறையச்சமுள்ளவர். ஆவரிக் பெயர் அப்துர் ரஹீம். அவர் மக்காவை விட்டு வேற பகுதிக்கு செல்ல நினைத்தபோது ஹசன் என்ற பெரியார் தன் நண்பர் மக்காவை விட்டு செல்லவேண்டாம் என வலியுருத்தி அது சிறப்பிற்குரிய இடம் என சுட்டிக்காட்டும் முகமாக மக்காவின் சிறப்பை பற்றி ஒரு நூலை எழுதி அனுப்பினார்.
ஒரு இடம் குர்ஆனில் அதிகம் சொல்லப்பட்டு அங்கு அதிகமான அல்லாஹ்வின் அடையாளச்சின்னங்கள் உள்ளதாக சொல்லப்பட்ட ஒரு இடம் மக்கா மட்டும்தான். அங்கு செல்வதே வணக்கம். அங்கு இருப்பதே சிறப்பு உலகில் உள்ள சிறந்த இடம் நீரும் இறை இல்லமும் அங்கு தான் உண்டு. அப்பேற்பட்ட இடத்தில் தான் பெருமானார் அவர்களின் பிறப்பும் அல்லாஹ் அமைத்தான்.
மக்காவின் சிறப்புகளை அதன் மகத்துவத்தை விளக்கும் வசனங்கள்.

قَالَ تَعَالَى {إِنَّمَا أمرت أَن أعبد رب هَذِه الْبَلدة الَّذِي حرمهَا}
وَقَالَ تَعَالَى {بَلْدَة طيبَة وَرب غَفُور}
وَقَالَ تَعَالَى {إِن الصَّفَا والمروة من شَعَائِر الله فَمن حج الْبَيْت أَو اعْتَمر فَلَا جنَاح عَلَيْهِ أَن يطوف بهما وَمن تطوع خيرا فَإِن الله شَاكر عليم} وَقَالَ تَعَالَى {فَإِذا أَفَضْتُم من عَرَفَات}
فاذكروا الله عِنْد الْمشعر الْحَرَام واذكروه كَمَا هدَاكُمْ
وَقَالَ تَعَالَى {أَو لم نمكن لَهُم حرما آمنا يجبى إِلَيْهِ ثَمَرَات كل شَيْء رزقا من لدنا}
(وَقَالَ تبَارك وَتَعَالَى {جعل الله الْكَعْبَة الْبَيْت الْحَرَام قيَاما للنَّاس والشهر الْحَرَام}
وَقَالَ تَعَالَى لنَبيه إِبْرَاهِيم عَلَيْهِ السَّلَام {وَأذن فِي النَّاس بِالْحَجِّ يأتوك رجَالًا وعَلى كل ضامر يَأْتِين من كل فج عميق}
وَقَالَ تَعَالَى {فليعبدوا رب هَذَا الْبَيْت الَّذِي أطْعمهُم من جوع وآمنهم من خوف}
وَقَالَ تَعَالَى {رَبنَا إِنِّي أسكنت من ذريتي بواد غير ذِي زرع عِنْد بَيْتك الْمحرم رَبنَا ليقيموا الصَّلَاة فَاجْعَلْ أَفْئِدَة من النَّاس تهوي إِلَيْهِم وارزقهم من الثمرات لَعَلَّهُم يشكرون}
وَقَالَ تَعَالَى {قد نرى تقلب وَجهك فِي السَّمَاء فلنولينك قبْلَة ترضاها فول وَجهك شطر الْمَسْجِد الْحَرَام وَحَيْثُ مَا كُنْتُم فَوَلوا وُجُوهكُم شطره}
وَقَالَ تَعَالَى {فَإِذا قضيتم مَنَاسِككُم فاذكروا الله كذكركم آبَاءَكُم أَو أَشد ذكرا}
وَقَالَ تَعَالَى {سُبْحَانَ الَّذِي أسرى بِعَبْدِهِ لَيْلًا من الْمَسْجِد الْحَرَام إِلَى الْمَسْجِد الْأَقْصَى الَّذِي باركنا حوله}
وَقَالَ تَعَالَى {وَضرب الله مثلا قَرْيَة كَانَت آمِنَة مطمئنة يَأْتِيهَا رزقها رغدا من كل مَكَان}
وَقَالَ تَعَالَى {الْحَج أشهر مَعْلُومَات فَمن فرض فِيهِنَّ الْحَج فَلَا رفث وَلَا فسوق وَلَا جِدَال فِي الْحَج}
وَقَالَ تَعَالَى {أجعلتم سِقَايَة الْحَاج وَعمارَة الْمَسْجِد الْحَرَام كمن آمن بِاللَّه وَالْيَوْم الآخر وجاهد فِي سَبِيل الله}
 


முதல் ஆலயம்

மக்கள் அல்லாஹ்வை மட்டும் வணங்குவதற்காக முதலில் கட்டப்பட்ட பள்ளிவாசல் மக்காவிலுள்ள 'கஅபா' ஆலயமாகும்.
அகிலத்தின் நேர்வழிக்கு உரியதாகவும், பாக்கியம் பொருந்தியதாகவும் மனிதர்களுக்காக அமைக்கப்பட்ட முதல் ஆலயம் பக்கா(எனும் மக்கா)வில் உள்ளதாகும். (அல்குர்ஆன் 3:96)
'கஅபா' ஆலயத்தை முதன் முதலில் கட்டியவர்கள் நபி ஆதம் (அலை) அவர்களாவார்கள். அதைப் புனர் நிர்மாணம் செய்தவர்கள் நபி இப்ராஹீம் (அலை) ஆவார்கள். ஆதம் (அலை) அவர்கள் முதலில் கஅபாவைக் கட்டி, 40 வருடங்களுக்குப் பிறகு பாலஸ்தீனத்தில் உள்ள ''மஸ்ஜிதுல் அக்ஸா''வைக் கட்டினார்கள். இதற்குப் பின்வரும் செய்தி சான்றாக உள்ளது.
நான் நபி (ஸல்) அவர்களிடம் ''பூமியில் முதலில் அமைக்கப்பட்ட பள்ளி எது?'' எனக் கேட்டேன். அதற்கு அவர்கள், 'அல் மஸ்ஜிதுல் ஹராம்' (கஅபா) என்று கூறினார்கள். பிறகு எது? என்றேன். 'அல் மஸ்ஜிதுல் அக்ஸா' என்று கூறினார்கள். ''இந்த இரண்டிற்கும் மத்தியில் எத்தனை (வருடங்கள் இடைவெளி?)'' என்று கேட்டேன். ''நாற்பது வருடங்கள்'' என்று கூறினார்கள்.அபூதர் (ரலி) புகாரி 3366
ஆதம் (அலை) அவர்களால் கட்டப்பட்ட 'கஅபா' நாளடைவில் பாழடைந்து செடி, கொடிகள் சூழப்பட்டதாக மாறியது. இஸ்மாயீல் (அலை) அவர்கள் வாலிபப் பருவத்தை அடையும் பொழுது தான் அல்லாஹ் கஅபாவைப் புணர் நிர்மாணம் செய்யுமாறு கட்டளையிடுகிறான்.
எங்கள் இறைவா! எனது சந்ததிகளை உனது புனித ஆலயத்திற்கருகில், விவசாயத்துக்குத் தகுதி இல்லாத பள்ளத்தாக்கில், இவர்கள் தொழுகையை நிறை வேற்றுவதற்காகக் குடியமர்த்தி விட்டேன். (அல்குர்ஆன் 14:37) என இப்ராஹீம் (அலை) அவர்கள் கூறினார்கள்.
ஹாஜரா, கைக்குழந்தை இஸ்மாயீலையும் பாலைவனத்தில் விட்டு வரும் போது நபி இப்ராஹீம் (அலை) மேற்கண்ட 'துஆ'வை கூறினார்கள் என்பது ஹதீஸின் (புகாரி 3364) மூலம் தெளிவாகிறது.
எனவே சிதிலமடைந்த பள்ளிவாசலைத் தூய்மை செய்யுமாறும், அதன் அடித்தளத்தை உயர்த்துமாறும் அல்லாஹ் கட்டளையிடுகிறான்.
''தவாஃப் செய்வோருக்காகவும், இஃதிகாஃப் இருப்போருக்காகவும், ருகூவு, ஸஜ்தா செய்வோருக்காகவும் இருவரும் எனது ஆலயத்தைத் தூய்மைப்படுத்துங்கள்!'' என்று இப்ராஹீமிடமும், இஸ்மாயீலிடமும் உறுதி மொழி வாங்கினோம். (அல்குர்ஆன் 2:125)
அந்த ஆலயத்தின் அடித் தளத்தை இப்ராஹீமும், இஸ்மாயீலும் உயர்த்திய போது ''எங்கள் இறைவா! எங்களிடமிருந்து (இப்பணியை) ஏற்றுக் கொள்வாயாக! நீயே செவியுறுபவன்; அறிந்தவன்'' (என்றனர்.)          (அல்குர்ஆன் 2:127) 
கஃபா (முதல் இறையில்லம்) வரலாறு
அகில உலகங்களையும் படைத்த அல்லாஹ், தான் ஒருவன் மட்டும் தான் கடவுள் என்பதற்கு, அவற்றை அத்தாட்சிகளாகவும் ஆக்கினான். இவை இன்றளவும் அல்லாஹ் மட்டும் தான் ஒரே கடவுள் என்பதற்கு ஆதாரமாகத் திகழ்கின்றன.
அப்படிப் பட்ட அத்தாட்சிகளில் உள்ளவை தான் அவனுடைய புனிதமிக்க ஆலயமாகிய கஅபாவும் அது அமைந்துள்ள மக்கமா நகரமும் ஆகும்.
உலக முஸ்லிம்களுக்கு நேர்வழி காட்டுமிடமாகவும், உலக முஸ்லிம்களின் ஒருமைப்பாட்டைப் பறைசாற்றக் கூடியதாகவும் இவ்வத்தாட்சிகள் அமைந்துள்ளன.
'கஅபா' ஆலயத்திற்கும், மக்கமா நகரத்திற்கும் மற்ற ஆலயங்களை விடவும், நகரங்களை விடவும் தனித்த சிறப்புகளும், சட்டங்களும் உள்ளன. அப்படிப்பட்ட சிறப்புகளில் சிலவற்றைக் காண்போம்.
உலக முஸ்லிம்களின் ஒரே கிப்லா
கஅபா' ஆலயம் தான் உலக முஸ்லிம்கள் அனைவருக்கும் தொழுகையின் போது முன்னோக்கும் திசையாக அமைந்துள்ளது. இது உலக முஸ்லிம்களின் ஒருமைப்பாட்டிற்கு ஓர் எடுத்துக்காட்டாகத் திகழ்கின்றது. ஒரு முஸ்லிம் எங்கிருந்தாலும் அவன் தொழுகையின் போது கஅபாவை முன்னோக்க வேண்டும்.

நீர் எங்கிருந்து புறப்பட்டாலும் உமது முகத்தை மஸ்ஜிதுல் ஹராம் திசையில் திருப்புவீராக! எங்கே நீங்கள் இருந்தாலும் உங்கள் முகங்களை அதன் திசையிலேயே திருப்பிக் கொள்ளுங்கள்! அவர்களில் அநீதி இழைத்தோரைத் தவிர (மற்ற) மக்களுக்கு உங்களுக்கு எதிராக எந்தச் சான்றும் இருக்கக் கூடாது என்பதும், எனது அருட்கொடையை உங்களுக்கு நான் முழுமைப் படுத்துவதும், நீங்கள் நேர் வழி பெறுவதுமே இதற்குக் காரணம். (அல்குர்ஆன் 2:150)
فيه ايث بينت

 அதில் தெளிவான அத்தாட்சி கள் உள்ளன

அதில் ஒன்று :ஜம் ஜம் நீர்

ماء زمزم لما شرب له إن شربثه تستشفى به شفاك الله و إن شربته لشبعك أشبعك الله به و ان شربته لييقط ضمءك قطعه الله
"ஜம்  ஜம்"நீர் எந்த நோக்கத்திற்காக அருந்தப்படுகின்றதோஅந்த நோக்கம் நிறைவேறும்.நோய் குணமடைய வேண்டுமென அருந்தினால் நோய் குணமாகிவிடும். பசி தீர்ந்துவிட வேண்டுமென அதனை அருந்தினால் பசி தீர்ந்துவிடும்.{நூல்:ஹாகிம்}

 وقال أبو عبد الله محمد بن علي الترمذي وحدثني أبي - رحمه الله - قال : دخلت الطواف في ليلة ظلماء فأخذني من البول ما شغلني ، فجعلت أعتصر حتى آذاني ، وخفت إن خرجت من المسجد أن أطأ بعض تلك الأقدام ، وذلك أيام الحج ; فذكرت هذا الحديث ، فدخلت زمزم فتضلعت منه ، فذهب عني إلى الصباح
இமாம் திர்மிதீ {ரஹ்}அவர்கள் தனது தந்தை மூலமாக அறிவிக்கிறார்கள் 
ஒரு நாள் இருளான இரவில் நான் தவாப் செய்ய ஹரம் ஷரீப் சென்றேன்.
அந்த சமயத்தில் எனக்கு சிறுநீர் கழிக்கும் தேவை ஏற்பட்டது.நான் சிறுநீர் கழிக்காமல் அதை அடக்கிக் கொண்டிருந்தேன்.வெளியில் சென்றால் மக்களின் பாதங்களை மிதித்துக் கொண்டு செல்லவேண்டிய நிலை ஏற்படும் என்பதினாலும் அது ஹஜ்ஜு  டைய   காலம் என்பதாலும் நான் அவ்வாறு செய்தேன்.அப்போது இந்த ஹதீஸ் எனக்கு நினைவுக்கு வந்தது.உடனே ஜம்ஜம் கிணற்றுக்கு சென்று அதன் நீரை வயிறு நிறம்பக் குடித்தேன்.அதன் பரக்கத்தால் அடுத்த நாள் காலை வரை சிறுநீர் கழிக்க வேண்டிய தேவை எனக்கு ஏற்படவில்லை என்றார்கள்.{நூல் :தப்ஸீருல் குர்துபி,பாகம் 9}
و روي عن عبد الله بن عمرو :إن في زمزم عينا في الجنة من قبل آلركن 
அப்துல்லாஹ் பின் அம்ர் {ரலி]அவர்கள் மூலம் அறிவிக்கப்படுகிறது:
ஜம்ஜம் கிணற்றிலிருந்து ருக்னுல் யமானியின் திசையின் வழியாக சுவர்க்கத்தின் பக்கம் ஒரு ஊற்று இருக்கின்றது.
  {நூல் :தப்ஸீருல் குர்துபி,பாகம் 9}
 
ஜம் ஜம் நீரை ஆய்வு செய்து அதனுள் நோய் நிவாரண மூலம் பொருட்களை கண்டுபிடித்துள்ளவைகளில் சில.............
MAGNESIUM SULPHATE மக்னீசியம் சல்பேட் 
உடல் உஷ்ணம் வெளியேறுகிறது.தலைச் சுற்றல்,மயக்கம் ஆகியவை தடுக்கப்படுகின்றன.உடலில் கொழுப்பு குறைகிறது.
 SODIUM SUPHATE சோடியம் சல்பேட்
இதனால் மலச்சிக்கல்,முழங்கால் வலி, சர்க்கரை நோய்,நாவறட்சி ஆகியவை நீக்கப்படுகின்றன.இது இரத்த சுத்திக்கும் மருந்தாகும்.
 SODIUM CHLORIDE சோடியம் குளோரைடு 
இதனால் இரத்த விருத்தி ஏற்பட்டு உடல் நலம் பெறுகிறது,வைற்றுப் போக்கு நிறுத்தப்படுகிறது.உடல் உறுப்புகளுக்கு வலு ஏற்படுகிறது.
CALCIUMCARBOHYDRATE கால்சியம் கார்போஹைட்ரேட் 
இதனால் உணவு செறிக்கிறது.மூட்டுகளின் வலி நீங்குகிறது.
POTASSIUM NITRATE பொட்டாசியம் நைட்ரேட் 
இதனால் சிறுநீரும்,வியர்வையும் உடலிலிருந்து வெளியேறுகிறது.
HYDROGEN SULPHATE ஹைட்ரஜன் சல்பேட் 
இதனால் தோல் வியாதி,ஜலதோஷம் ஆகியவை நீக்கப்படுகின்றன.நினைவாற்றல் அதிகமாகும்.
  

மதீனாவின் மாண்பு:

மதீனா என்பதற்கு பட்டணம்,நகரம் என்பது பொருளாகும். இது ஸவூதி அரேபியாவின் மேற்கு மாநிலத்தில் (பழை ஹிஜாஸ் மாநிலத்தில் யான்பு துறைமுகத்திலிருந்து கிழக்கே 215கிலோ மீட்டர் தொலைவிலும்,மக்காவிற்கு வடக்கே 400 கிலோ மீட்டர் தொலைவிலும், ஜித்தாவிற்கு வடக்கே 400 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது.

துவக்கத்தில் ‘யஸ்ரிப்’ என்று அழைக்கப்பட்டு வந்த இந்நகரம் நபி (ஸல்) அவர்கள் மக்காவிலிருந்து ஹிஜ்ரத் பயணம் மேற்கொண்டு குடியேறிய பின்னர் நபியின் பட்டணம் என்ற பொருளில் ‘மதீனத்துந் நபி’ (நபியின் நகரம) என்றும் ஒளிபொருந்திய நகரம் என்ற பொருளில் ‘மதீனா முனவ்வரா’ என்றும் அழைக்கப்பட்டு பின்னர் சுருக்கமாக மக்களால் ‘மதீனா’ என்று அழைக்கப்படுகிறது.

இதற்கு பல்வேறு பெயர்கள் இருப்பதாகவும், தவ்ராத்தில் மட்டும் நாற்பது பெயர்கள் இடம் பெற்றிருப்பதாகவும் கூறப்படுகிறது.

குடியேற்றங்கள்

இது குறித்து ஆய்வாளர்களின் பல் வேறுவிதக் கருத்துகளைக் காணமுடிகிறது:-

1. நபி நூஹ் (அலை) அவர்களின் ஒரு மகனுடைய பெயர் ‘யஸ்ரிப்’ இவர் இன்றைய மதீனாவில் அன்று ஏற்பட்ட வெள்ளப் பிரளயத்திற்குப் பிறகு குடியேறினார். அவரிலிருந்து கி.மு 3900 ஆணடுகளில் ஆரம்பமான அந்த ஊரில் பலரும் குடியேறத் துவங்கினர். (ஆதாரம் :இப்னு கஸீர்)

2. நம்ரூதின் கொடுமையிலிருந்து தப்பி ஹிஜாஸில் அடைக்கலம் புகுந்து வாழ்ந்து வந்த ‘அமாலிக்’ கூட்டத்தினர் இதனை கி.மு 2200க்கும், கி.மு 1600க்கும் இடையில் நிறுவியி ருக்கலாம் என்று வரலாற்றாசிரியர்கள் குறிப்பிடுகின்றனர்.அவர்களுடைய தலைவனின் பெயரால் ‘யஸ்ரிப்’ என்று அழைக்கப்படுகிறது எனக் கூறப்படுகிறது. நபி (ஸல்) அவர்கள் பிறப்பதற்கு ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே யஸ்ரிப் நகரம் தோன்றிவிட்டதாக வரலாறு கூறுகிறது.

3. ஹஜ்ஜு செய்துவிட்டு நபி மூஸா (அலை) அவர்கள் தம் கூட்டத்தாருடன் திரும்பும் போது இங்கே சிலநாட்கள் தங்கினர் என்றும்,அவர்களில் சிலர் தவ்ராத்தில் முன்னறிவிப்பு செய்யப்பட்ட இறுதி நபியின் இருப்பிடம் இதுவாக இருக்குமெனக் கருதி இங்கேயே தங்கிவிட்டனர் என்றும் இதிலிருந்து இங்கே யூதர்களின் ஆதிக்கம் ஏற்படலாயிற்று என்றும் வரலாற்றாசிரியர்கள் குறிப்பிடுகின்றனர்.

4. இதன் பின் கிறிஸ்துவ சகாப்தம் 4-ஆம்; நூற்றாண்டில் யமன் நாட்டின் நீர் தேக்கம் (அணைக்கட்டு) உடைந்து பெருவெள்ளம் ஏற்பட்டதன் காரணமாக அங்கு வாழ்ந்து வந்த அவ்ஸ், கஸ்ரஜ் ஆகிய இரு அரபிக் கிளையினர் இங்கு வந்து குடியேறி வாழலாயினர்.
.நபி ஸல் அவர்கள் நேசித்த பூமி:
كَانَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم إِذَا قَدِمَ مِنْ سَفَرٍ فَأَبْصَرَ جُدُرَاتِ الْمَدِينَةِ أَوْضَعَ نَاقَتَهُ (أَيْ أَسْرَعَ) وَإِنْ كَانَتْ دَابَّةً حَرَّكَهَا مِنْ حُبِّهَا .
நபி ஸல் அவர்கள் எந்த பயணத்திலிருந்து திரும்பும்போது மதீனாவின் சுவர்களை கண்டுவிட்டால் விரைந்து வாகனத்தை ஓட்டுவார்கள்.ஏனெனில் மதீனாவின் மீது அவர்கள் கொண்டிருந்த அன்பே காரணம்.
اللَّهُمَّ حَبِّبْ إِلَيْنَا الْمَدِينَةَ كَحُبِّنَا مَكَّةَ أَوْ أَشَدّ 
யா அல்லாஹ்.மக்காவை நாங்கள் நேசிப்பது போல மதினாவை எங்களுக்கு நேசமாக்குவாயாக என நபி ஸல் அவர்கள் துஆச்செய்தார்கள்
2.குழப்பமான காலத்திலும் கியாமத் நெருக்கத்திலும் அடைக்கமாகுவதற்கு மதீனாவே சிறந்தது
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” “யமன் வெற்றி கொள்ளப்படும். உடனே, ஒரு கூட்டத்தினர் ஒட்டகங்களை ஓட்டிக் கொண்டு, தம் குடும்பத்தினரையும் தம் கட்டுப்பாட்டிற்குள் உள்ளவர்களையும் அழைத்துக் கொண்டு (யமன் நாட்டிற்குச்) செல்வார்கள்! ஆயினும், மதீனாவே அவர்களுக்குச் சிறந்தது! இதை அவர்கள் அறிந்திருக்கக் கூடாதா? பின்னர் ‘ஷாம்’ வெற்றி கொள்ளப்படும். உடனே, ஒரு கூட்டத்தினர் ஒட்டகங்களை ஓட்டிக் கொண்டு, ‘தம் குடும்பத்தினரையும் தம் கட்டுப்பாட்டிற்குள் உள்ளவர்களையும் அழைத்துக் கொண்டு அங்கே செல்வார்கள்; ஆயினும், மதீனாவே அவர்களுக்குச் சிறந்தது! இதை அவர்கள் அறிந்திருக்கக் கூடாதா? பின்னர் இராக் வெற்றி கொள்ளப்படும்; உடனே, ஒரு கூட்டத்தினர் ஒட்டகங்களை ஓட்டிக்கொண்டு, தம் குடும்பத்தினரையும் தம் கட்டுப்பாட்டிற்குள் உள்ளவர்களையும் அழைத்துக் கொண்டு அங்கே செல்வார்கள்! ஆயினும், மதீனாவே அவர்களுக்குச் சிறந்தது! இதை அவர்கள் அறிந்திருக்கக் கூடாதா?’ என சுப்யான்(ரலி) அறிவித்தார்

தஜ்ஜாலை விட்டும் பாதுகாக்கப்பட்ட பூமியாகும்

كما أخرج البخاري ومسلم في صحيحيهما من حديث أبي هريرة قال رسول الله صلى الله عليه وسلم: «على أنقاب المدينة ملائكة لا يدخلها الطاعون ولا الدجال

மதீனாவின் தெருக்களில் மலக்குகள் நடமாடுவார்கள்.அங்கு காலராவும் தஜ்ஜாலும் நுழையமுடியாது.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” தஜ்ஜால் (மதீனாவை நோக்கி) வருவான்; மதீனாவின் வாசல்களில் நுழைவது அவனுக்குத் தடுக்கப்பட்டிருக்கிறது; எனவே, (மதீனாவுக்கு வெளியே), மதீனாவின் உவர் நிலத்தில் அவன் தங்குவான்; அவனை நோக்கி மக்களில் சிறந்த ஒருவர் அன்று புறப்படுவார்; அவர் அவனிடம், ‘இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (அடையாளம்) சொல்லிய தஜ்ஜால் நீதான் என்று உறுதியாகக் கூறுகிறேன்!” என்பார். அப்போது தஜ்ஜால் (மக்களை நோக்கி), ‘நான் இவனைக் கொன்று, பிறகு உயிர்ப்பித்தால் (என்) விஷயத்தில் நீங்கள் சந்தேகம் கொள்வீர்களா?’ என்று கேட்பான். மக்கள் ‘கொள்ள மாட்டோம்!” என்பார்கள். உடனே, அவன் அவரைக் கொன்று, பின்னர் உயிர்ப்பிப்பான். அப்போது, அந்த நல்ல மனிதர் உயிர்ப்பிக்கப்பட்டதும், ‘அல்லாஹ்வின் மீது ஆணையாக! இன்றைய தினத்தை விடத் தெளிவாக உன்னைப் பற்றி நான் (இதற்கு முன்) ஒருபோதும் அறிந்திருக்கவில்லை!” என்று கூறுவார். தஜ்ஜால் ‘நான் இவரைக் கொல்வேன்!” என்பான். ஆனால், அவனால் அவரைக் கொல்ல முடியாது!”
என அபூ ஸயீத்(ரலி) அறிவித்தார். தஜ்ஜால் பற்றி நபி(ஸல்) அவர்கள் நீண்ட விளக்கம் தரும்போது இதைக் கூறினார்கள் என்றும் அறிவித்தார்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” “மக்கா, மதீனா தவிர தஜ்ஜால் கால் வைக்காத எந்த ஊரும் இராது! மதீனாவின் எந்தவொரு வாலானாலும் அங்கே வானவர்கள் அணிவகுத்து அதைக் காப்பார்கள். பின்னர் மதீனா, தன் குடிமக்களுடன் மூன்று முறை நிலநடுக்கத்திற்குள்ளாகும்; அப்போது ஒவ்வொரு காஃபிரையும் முனாஃபிக்கையும் (இறைமறுப்பாளனையும் நயவஞ்சகனையும்) அல்லாஹ் (மதீனாவிலிருந்து) வெளியேற்றி விடுவான்!” என அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.
5.கடும் நோயை விட்டும் பாதுகாக்கப்பட்ட புனித பூமியாகும்
யிஷா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் மதீனாவிற்கு வந்தபோது அபூ பக்ர்(ரலி), பிலால்(ரலி) ஆகியோருக்குக் காய்ச்சல் ஏற்பட்டது. அபூ பக்ர்(ரலி) தமக்குக் காய்ச்சல் ஏற்படும்போது, ‘மரணம் தன்னுடைய செருப்பு வாரை விடச் சமீபத்தில் இருக்கும் நிலையில் ஒவ்வொரு மனிதனும் தன் குடும்பத்தாருடன் காலைப் பொழுதை அடைகிறான்!” என்ற கவிதையைக் கூறுவார்கள். பிலால்(ரலி) காய்ச்சல் நீங்கியதும் வேதனைக் குரலை உயர்த்தி, ‘இத்கிர், ஜலீல் எனும் புற்கள் என்னைச் சூழ்ந்திருக்க, ஒரு பள்ளத்தாக்கில் ஓர் இராப் பொழுதையேனும் நான் கழிப்பேனா? ‘மஜின்னா’ எனும் (சுனையின்) நீரை நான் அருந்துவேனா? ஷாமா, தஃபீல் எனும் இரண்டு மலைகள் (அல்லது இரண்டு ஊற்றுகள்) எனக்குத் தென்படுமா?’ என்ற கவிதையைக் கூறுவார்கள். மேலும், பிலால்(ரலி) ‘இறைவா! ஷைபா இப்னு ரபிஆ, உத்பா இப்னு ரபீஆ, உமய்யா இப்னு கலஃப் ஆகியோர் எங்கள் நாட்டிலிருந்து எங்களை (அப்புறப்படுத்தி) இந்த நோய்ப் பிரதேசத்திற்கு விரட்டியது போல், அவர்களை நீ உன் கருணையிலிருந்து அப்புறப்படுத்தி (சபித்து) விடுவாயாக!” என்று கூறுவார்கள். நபி(ஸல்) அவர்கள், ‘இறைவா! நாங்கள் மக்காவை நேசித்தது போல் அல்லது அதைவிட அதிகமாக மதீனாவை எங்கள் நேசத்திற்குரியதாக ஆக்கு! இறைவா! எங்களுடைய (அளவைகளான) ஸாவு, முத்து ஆகியவற்றில் (எங்கள் உணவில்) எங்களுக்கு நீ பரக்கத் செய்! இவ்வூரை எங்களுக்கு ஆரோக்கியமானதாக ஆக்கு! இங்குள்ள காய்ச்சலை ‘ஜுஹ்ஃபா’ எனும் பகுதிக்கு இடம் பெயரச் செய்!” என்று பிரார்த்தித்தார்கள். நாங்கள் மதீனாவிற்கு வந்தபோது, அது அல்லாஹ்வின் பூமியிலேயே நோய் நொடிகள் அதிகமான (பிரதேசமாக இருந்தது; (ஏனெனில்) ‘புத்ஹான்’ எனும் ஓடையில் மோசமான (கெட்டுப்போன) தண்ணீர் ஓடிக் கொண்டிருந்தது! 

ஷஃபாஅத் பூமி

وَقَالَ صلى الله عليه وسلم : (( مَنْ اسْتَطَاعَ أَنْ يَمُوتَ بِالْمَدِينَةِ فَلْيَفْعَلْ فَإِنِّي أَشْفَعُ لِمَنْ مَاتَ بِهَا

மதீனாவில் மரணிக்கும் வாய்ப்பு கிடைத்தால் அங்கு மரணித்துவிடுங்கள் ஏனெனில் அங்கு மரணிப்பவருக்கு நான் ஷபாஅத் செய்வேன்.

عَنْ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ :
( اللَّهُمَّ ارْزُقْنِي شَهَادَةً فِي سَبِيلِكَ ، وَاجْعَلْ مَوْتِي فِي بَلَدِ رَسُولِكَ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ )
رواه البخاري (رقم/1890)

யா அல்லாஹ்.உன் ரஸூலின் பூமியில் ஷஹாதத் மரணத்தை எனக்கு தருவாயாக என உமர் ரலி அவர்கள் துஆ செய்தார்கள்.

وقد علق عليه الإمام النووي رحمه الله بقوله :
" يستحب طلب الموت في بلد شريف " انتهى.
" المجموع " (5/106)

சிறப்பான ஊரில் மரணிப்பது முஸ்தஹப்பு என இமாம் நவ்வி ரஹ் அவர்கள் கூறுவார்கள்.

.மஸ்ஜிதுன் நபவி (நபியுடைய மஸ்ஜித்) என்று அழைக்கப்படக்கூடிய மஸ்ஜிதின் சிறப்புகள்

 عَنْ عَبْدِ اللَّهِ بْنِ زَيْدٍ الْمَازِنيِّ أَنَّ رَسُولَ اللَّهِصَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَا بَيْنَ بَيْتِي وَمِنْبَرِيرَوْضَةٌ مِنْ رِيَاضِ الْجَنَّةِ (مسلم 

'எனது வீட்டுக்கும், மிம்பருக்கும் மத்தியில் சுவர்கத்தின் பூங்காக்களில்நின்றும் ஒரு பூங்கா இருக்கிறது' என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். 
 {அப்துல்லாஹ் இப்னு ஸைதுல் மாஸினி (ரலி). ஆதாரம்: புஹாரி.}
'மஸ்ஜிதுல் ஹராம், மஸ்ஜிதுன் நபவி, மஸ்ஜிதுல் அக்ஸா ஆகிய மூன்றுபள்ளிகளைத் தவிர (அதிக நன்மையை எதிர்பார்த்து)ப் பயணம் மேற்கொள்ளக்கூடாது என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
மதீனாவாசிகளுக்கு தீங்கு செய்பவர்களைப் பற்றி நபி ஸல் அவர்கள் எச்சரித்த ஹதீஸ் 
عن سَعْد رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ سَمِعْتُ النَّبِيَّ صَلَّىاللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ لَا يَكِيدُ أَهْلَ الْمَدِينَةِأَحَدٌ إِلَّا انْمَاعَ كَمَا يَنْمَاعُ الْمِلْحُ فِي الْمَاءِ (بخاري
عن بن خلاد وكان من أصحاب النبي صلى الله عليه و سلم أن رسول الله صلىالله عليه و سلم قال : من أخاف أهل المدينة أخافه الله وعليه لعنة اللهوالملائكة والناس أجمعين لا يقبل منه صرف ولا عدل (نسائ 

ஜியாரத்:
எவர் என்னுடைய மரணத்திற்குப் பிறகு என்னை ஜியாரத் செய்வாரோ, அவர் என்னுடைய வாழ்நாளில் என்னை ஜியாரத் செய்தவர் போலாவார். – தப்ரானீ

நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்:

 எவர் என்னை ஜியாரத் செய்ய வருவாரோ, மேலும் அது அல்லாத வேறு எந்த நிய்யத்தும் அவருக்கு இல்லையானால் அவருக்காக சிபாரிசு செய்வேன்.


நபி(ஸல்) அவர்களின் முபாரக்கான சமூகத்தில் நின்று, அண்ணலார் அவர்களுக்குப் பணிவாக ஸலாம் கூற வேண்டும். மேலும், ஹழ்ரத் அபூபக்கர் (ரலி), ஹழ்ரத் உமர் (ரலி) ஆகிய இருவரும் அண்ணலாரின் அருகிலேயே இருப்பதால் அவர்கள் இருவருக்கும் பணிவாக ஸலாம் கூறவேண்டும். ஒவ்வொரு பர்ளான தொழுகைக்குப் பிறகும் ஸலாம் கூறுவது விரும்பத்தக்கது.
அமீருல் முஃமினீன் ஹஜ்ரத் அலீ (ரலி) அவர்களிடம் நபி(ஸல்) அவர்களை எவ்விதம் நேசித்தீர்கள்? என வினவப்பட்டது. அதற்கு அவர்கள், ‘நாயகம் (ஸல்) அவர்கள் எங்களுக்கு எங்கள் பொருட்களை விடவும் எங்கள் பிள்ளைகள், எங்கள் பெற்றோர்களை விடவும் எங்களுக்கு மிகவும் பிரியமானவர்களாக இருந்தார்கள். மேலும் கடும் தாகத்தின் போது கிடைக்கும் குளிர்ந்த நீரை விடவும் அவர்கள் எங்களுக்கு மிகப் பிரியமானவர்களாக இருந்தார்கள்’ எனக் கூறினார்கள்.



ஹஜ்ரத் அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

 உஹதுப் போரில், ஹஜ்ரத் அபூதல்ஹா (ரலி) அவர்கள், நபி(ஸல்) அவர்களின் முன்னிலையில் எதிரிகளின் மீது அம்பு வீசிக் கொண்டிருந்தார்கள். ஹஜ்ரத் அபூதல்ஹா (ரலி) அவர்கள் அவர்களுக்கு முன்னால் இருந்தார்கள். அபூதல்ஹா (ரலி) அவர்கள் நபி(ஸல்) அவர்களுக்குக் கேடயமாக இருந்து அவர்கள் மீது அம்பு பாய்வதை விட்டும் தடுத்துக் கொண்டிருந்தார்கள்.

 ஹஜ்ரத் அபூதல்ஹா (ரலி) அவர்கள் அம்பு எய்வதில் திறமையானவர்களாக இருந்தார்கள். அவர்கள் அம்பு எய்தினால் அவர்களின் அம்பு எங்கெங்கு சென்று விழுகிறது? என நபி(ஸல்) அவர்கள் தங்கள் பார்வையை உயர்த்திப் பார்ப்பார்கள். அதே போன்று நபி(ஸல்) அவர்களை நோக்கி அம்பு வந்தால், அதைத் தடுத்து நெஞ்சை உயர்த்தித் தாங்கிக் கொள்வார்கள்.



 அப்பொழுது, ‘யாரஸுலல்லாஹ் ! என் தாயும், தந்தையும் தங்களுக்கு அர்ப்பணமாகட்டும் ! தங்களின் மீது அம்பு படாமல், என் கழுத்து தங்களின் கழுத்துக்கு அருகிலேயே இருக்கும்’ என்று கூறிவிட்டு மேலும் ‘யாரஸுலல்லாஹ் ! நிச்சயமாக நான் பலசாலியாக உள்ளேன். தங்களுடையத் தேவைகளுக்கு என்னை அனுப்பி வையுங்கள். தாங்கள் நாடியதை எனக்கு ஏவுங்கள்’ என்று ஹஜ்ரத் அபூதல்ஹா (ரலி) அவர்கள் கூறினார்கள்.

இவ்வாறு ஸஹாபாக்கள் நபி(ஸல்) அவர்களைத் தங்களின் உயிரைவிட மேலாக நேசித்தார்கள்

 நபி(ஸல்) அவர்களை நாம் நம் உயிரை விட மேலாக நேசிக்க வேண்டும். அவ்வாறு இல்லையானால், அவர் பரிபூரண மூஃமினாக மாட்டார். ஹஜ்ஜுக்குச் செல்லும் ஹாஜி மதீனா சென்று நபி(ஸல்) அவர்களை உள்ளன்போடு ஜியாரத் செய்ய வேண்டும்

 மக்காவில் உள்ள ஜன்னத்துல் முஅல்லா என்ற அடக்க ஸ்லத்திற்குச் சென்று ஸஹாபாக்களையும், தாபிஈன்களையும் ஜியாரத் செய்து கொள்ள வேண்டும். நபி(ஸல்) அவர்களின் பிரியத்திற்குரிய துணைவியார், அன்னை ஹழ்ரத் கதீஜா (ரலி) அவர்களும் இங்கேயே அடங்கப் பெற்றுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது

 மதீனாவின் மஸ்ஜிதுன்நபவி எதிரில் ஜன்னத்துல் பகீஃ என்ற அடக்கஸ்தலம் அமைந்துள்ளது. நபி(ஸல்) அவர்களின் துணைவியர்களும் அடங்கியுள்ளனர். இன்னும் ஸஹாபாக்களும் அங்கு தான் அடங்கியுள்ளனர். அங்கே நின்று அனைவருக்கும் ஸலாம் உரைத்து ஜியாரத் செய்து கொள்ள வேண்டும்.


யால்லாஹ் எங்களுக்கு உன்னுடைய வீடாம் கஅபாவிற்கு சென்று தவாப் செய்யும் பாக்கியத்தையும்,நபி {ஸ ல்} அவர்களின் ரவ்ழா ஷரீபுக்கு முன் நின்று அஸ்ஸலாமு அலைக்க யா ரசூல்லாஹ் எனும் ஸலாம் சொல்லக்கூடிய பாக்கியத்தையும் தந்தருள் புரிவாயாக ஆமீன்.

இநத வார ஜுமுஆ குறிப்பு வழங்கியவர்கள்:
மௌலவி நசீர் மிஸ்பாஹி 
மௌலவி அப்பாஸ் ரியாஜி 
மௌலவி ஜபருல்லாஹ் முனீரி
மௌலவி அப்துர் ரஹ்மான் ஹஸனீ

மேலதிகத் தகவலோடு தொகுத்தவர்:
கம்பம் சுல்தான் ஸலாஹி.