இஸ்லாமியப் பெருநாட்களில் என்னவெல்லாம் இருக்கும்?வணக்கம் இருக்கும்! எல்லோருக்கும் மத்தியில் ஒரு இணக்கம் இருக்கும்!!ஏழைகளை ஆதரிக்கிற ஏற்றமான பண்பு இருக்கும்.உறவினர்களை உபசரிக்கிற உயர்ந்த குணம் இருக்கும்.அண்டை வீட்டாரை அனுசரிக்கிற அழகிய பண்பாடு இருக்கும்.கைகொடுத்து கொடுத்து கட்டித் தழுவி- கரத்துடன் கரம் சேர்த்து- அன்பை அள்ளி வழங்கி- பாசத்தைப் பகிர்ந்துகொள்கிற பண்பாடு இருக்கும்.வேற்றுமையை வேரறுத்து- ஒற்றுமையோடு ஓங்கி ஒலிக்கிற தக்பீர் இருக்கும்.மனக்கசப்புகளை மறந்து- மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிற ஒரு மாற்றம் இருக்கும்.இதுதான் இஸ்லாமியப் பெருநாள்; இன்பத் திருநாள்.இஸ்லாமியப் பெருநாட்களிலே குதூகலத்திற்கு குறைவிருக்காது; ஆனால் அந்த குதூகலமும் மகிழ்ச்சியும் மார்க்கம் அனுமதித்துள்ள மாண்பார்ந்த வழிகளிலே இருக்கவேண்டும்.
திருநாட்களில் மகிழ்ச்சியை வெளிப்படுத்தவும் ஆனந்தத்தை அள்ளிப் பருகவும் ஆகுமான வழிகளை வழங்கியுள்ளது இஸ்லாம். ஏராளமான எடுத்துக்காட்டுகள் இதற்கு உள்ளன.
விளையாட்டுப் போட்டிகள் நடத்தி வீரத்தை ரசிக்கலாம்.ஒரு பெருநாள் தினத்தில் பள்ளிவளாகத்தில் அபீஸீனிய வீரர்கள் வீர விளையாட்டில் ஈடுபட்டிருந்த போது, நபிகள் நாயகத்தின் பின்னால் நின்று நானும் பார்த்துக் கொண்டிருந்தேன். நானாகத் திரும்பும் வரை அவர்கள் எனக்குத் துணை நின்றார்கள் என்று ஆயிஷா (ரலி) அறிவிக்கிறாரகள். (புகாரி 5190)
பெருநாள் சிந்தனை-தியாகம் மலரட்டும் தீன் வளரட்டும்
இறுதி நபி முஹம்மது(ஸல்) அவர்கள் இஸ்லாத்தின் பேரால் இந்த உம்மத்துக்கு அறிமுகப்படுத்தியது இரண்டு ஈத்கள் (பெருநாள்கள்) மட்டுமே. “ஒன்று ஈகைத் திருநாள். மற்றொன்று தியாகத் திருநாள். இரண்டு பெருநாட்களும் மாபெரும் இலட்சிய அடிப்படையில் அமைந்துள்ளன.
ரமழான் முழுதும் நோன்பு நோற்று, தனது அத்தியாவசியத் தேவைகளை இறை ஆணைக்குக் கட்டுப்பட்டு, தடுத்துக் கொள்வதன் மூலம். ஏழைகளின், இல்லாதவர்களின் நிலை எப்படி இருக்கும்? அவர்களின் கஷ்டங்கள் எப்படிப்பட்டவை? என்பவற்றை அனுபவத்தால் உணர வைத்து. இல்லாதோருக்கு ஈந்து மகிழ்ந்து கொண்டாட்டம் ஒரு நன்நாளாக ஈகைத் திருநாள் அமைந்துள்ளது.
அதே போல், நாம் அல்லாஹ்வின் அடியார்கள். அடியான் எஜமானனின் கட்டளைகளுக்குப் பூரணமாக கட்டுப்பட வேண்டும். அப்து( அடியான்) விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் சரியே என்று அடிமைத் தன்மையை முழுமையாகப் பிரதிபலிக்கும் பொன்னாளாகத் தியாகத் திருநாள் அமைந்துள்ளது. நமக்கு “முஸ்லிம்” என்று பெயரிட்ட நபி இப்றாஹிம்(அலை) அவர்களது வாழ்வோடு இணைந்த இறை அடிமைத் தன்மையின் முழுமையான வடிவத்தை நாம் ஞாபகப்படுத்துவதன் மூலம், அதன் பிரதிபலிப்புகள் நம்மிலும் ஏற்பட, முயற்சிகள் செய்வோமாக.
இஸ்லாமிய பண்டிகைகளில் ஆட்டம் பாட்டத்திற்கோ,வீண்கேளிக்கைகளுக்கோ,விரயங்களுக்கோ இடமில்லை.
இஸ்லாத்தில் இரு ஈதுப்பெருநாட்களும் கடமையான வணக்கத்தின் முடிவில் அமைக்கப்பட்டிருக்கிறது.
நோன்பை நிறைவு செய்கிறபோது ஈதுல்பித்ரையும்,ஹஜ்ஜை நிறைவு செய்கிறபோது ஈதுல்அள்ஹாவையும் அல்லாஹுத்தஆலா இந்த உம்மத்துக்கு தந்துள்ளான்.
அவனை வணங்குவதற்கு வாய்ப்பளித்த அந்த வல்ல நாயனை பெருமைப்படுத்தவும்,நன்றிகூறவும்,நினைவுகூறவுமே முஸ்லீம்கள் ஒன்று கூடுகின்றனர்.
அதனால் தான் ரமலானை நிறைவு செய்யும்போது அல்லாஹுத்தஆலா,
وَلِتُكْمِلُوا الْعِدَّةَ وَلِتُكَبِّرُوا اللَّهَ عَلَى مَا هَدَاكُمْ وَلَعَلَّكُمْ تَشْكُرُونَ [البقرة: 185
எண்ணிக்கையை நீங்கள் முழுமையாக்குவதற்காகவும், உங்களுக்கு நேர் வழி காட்டியதற்காக நீங்கள் அல்லாஹ்வைப் பெருமைப்படுத்திடவும், நன்றி செலுத்திடவும் (வேறு நாட்களில் நோற்கும் சலுகை வழங்கப்பட்ட து) என்று கூறுகிறான்.
அதைப்போல ஹஜ்ஜை நிறைவு செய்யும்போது,
وَاذْكُرُوا اللَّهَ فِي أَيَّامٍ مَعْدُودَاتٍ) [البقرة: 203]
குறிப்பிட்ட நாட்களில் அல்லாஹ்வை நினையுங்கள் என்று கூறுகிறான்.
புத்தாடைகள் அணிவதோ,நறுமணங்களை பூசிக்கொள்வதோ மட்டும் ஈதின் நோக்கமல்ல,மாறாக படைத்தவனையும்,படைப்புக்களையும் சந்தோஷப்படுத்துவதே உண்மையான நோக்கமாகும்.
அதனால் தான் இமாம் ஹஸன் ரஹ் அவர்கள் கூறுகிறார்கள்.
يقول الحسن -رحمه الله-: "كل يومٍ لا نعصِي اللهَ فيه فهو عيد، وكلُّ يومٍ نقضِيه في طاعة الله -جل وعلا- فهو عيد
அல்லாஹ்வுக்கு மாறுசெய்யாத ஒவ்வொரு நாளும்,அவனுடைய வணக்கத்தில் கழிகிற ஒவ்வொரு நாளும் உனக்கு ஈது தான்.
இஸ்லாம் மகிழ்ச்சிக்கு தடைபோடவில்லை,அல்லாஹ்வை மறக்கடிக்கிற
சந்தோஷம் வேண்டாம் என்று தான் சொல்கிறது.
ஒரு அறிஞன் சொன்னான்: இந்த உலகில் நீ எதை இழந்தாலும் அதற்கு பகரம் உண்டு!ஆனால் நீ அல்லாஹ்வை இழந்துவிட்டால் அதற்கு பகரமே கிடையாது.
பெருநாள் என்பது ஒரு முஸ்லிம் கட்டுப்பாடுகளிலிருந்து தன்னை விடுவிக்கும் நாளல்ல!மேலும் அல்லாஹ்வுடன் உள்ள நம் உறவை முறித்துக்கொள்ளும் நாளுமல்ல.தக்பீர்தான் பெருநாள் தினத்தின் பெரு முழக்கமாகும்.அதுவே நம் கொள்கையின் பிரகடனமாகும்.
அதனால் தான் ஒரு முஸ்லிமின் வாழ்வின் முக்கிய தருனங்களில் தக்பீருக்கு முக்கியத்துவம் தரப்படுகிறது.
பாங்கில்,இகாமத்தில்,தொழுகையில்,போராட்டத்தில்,போர்களத்தில், அனைத்திலும் தக்பீர்மயம்.
زينوا أعيادكم بالتكبيرஉங்களின் ஈதுப்பெருநாட்களை தக்பீரக் கொண்டு அழகுபடுத்துங்கள் என நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.
இது நபி இப்ராஹீம் அலை அவர்களின் தியாகங்களை நினைவு கூறும் நன்நாளாகும்.தியாகத்தில் உச்சகட்ட தியாகம் நம்முடைய காரியங்களை அல்லாஹ்விடம் ஒப்படைப்பதும்,அவன் எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவது ம் தான்.இதுவே நபி இப்ராஹீம் அலை போன்ற நபிமார்களின் தியாகமாகும்.
அசைக்க முடியாத நம்பிக்கையின் வெளிப்பாடாக சகல விதமான இறைக்கட்டளைகளுக்கும் நபி இபுறாகீம் கட்டுப்பட்டார்.
அவருக்கு பல்வேறு விதமான சோதனைகளை கொடுத்த்தாகவும் அவை அனைத்திலும் அவர் வெற்றி பெற்றதாகவும் குர் ஆன் கூறுகிறது.
وَإِذْ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ قَالَ إِنِّي جَاعِلُكَ لِلنَّاسِ إِمَامًا قَالَ وَمِنْ ذُرِّيَّتِي قَالَ لَا يَنَالُ عَهْدِي الظَّالِمِينَ
وفي الموطأ وغيره عن يحيى ابن سعيد أنه سمع سعيد بن المسيب يقول: إبراهيم عليه السلام أول من اختتن وأول من ضاف الضيف وأول من قلم أظفاره وأول من قص الشارب وأول من شاب فلما رأى الشيب قال: يا رب ما هذا؟ قال وقار قال: يا رب زدني وقارا
இந்த நாகரீகங்களை அவர் முதன்முதலாக நடை முறைப் படுத்தியபோது அது ஒரு கடும்சோதனையாக இருந்த்து. அதனால்தான் “இக்கடமைகளை கொண்டுஇறைவன் இபுறாகீமை சோதித்தபோது அவர் அவற்றைநிறைவேற்றினார் “ என்று குர் ஆன்கூறுகிறது.
அவரது அர்ப்பணிப்பின் உச்சம்தான் மகனை அறுக்கத் அவர் துணிந்த்து.
குர்பானி என்பது காசு பணத்தை செலவளித்து ஆடடை அறுப்பது மடடுமல்ல. இபுறாகீம் அலை அவாகளது உணர்வை – நடைமுறைகளை சுன்னத்துகளை –நினைவில் கொள்வதோடுஅத்தகைய அர்ப்பணிப்புகளுக்குகுறைந்த படச அளவிலாவது நாம் தயாராக வேண்டும்.
ஒரு சமூகத்தில் எந்த அளவு தியாக உணாவு மேலேங்கி இருக்கிறதோ அந்த அளவே அதனுடைய நாகாகம் முதிர்ச்சியடைகிறது.
நீச்சல் தெரியாத ஒருவர் கிணற்றில் விழுந்துவிட்டார். ஆந்த வழியாக வநத ஒருவர் உடனடியாக நீரில் குதித்து அவரை காப்பாற்றினார்.அவருக் நன்றி சொன்ன மனிதர்அத்தாடு நிற்காமல் உங்களுக்குபரிசாக ஒரு 50 காசு தரலாம் என்று தான் நினைக்கிறேன் ஆனால் பாருங்கள் என்னிடம் ஒரு ரூபாய்நாணயம்தான் இருக்கிறது. என்றார். மற்றவர் அவரை மீணடும் கிணற்றிலேயே தள்ளிவிட்டு “இன்னும் ஒரு முறை காப்பாற்றுகிறேன் ஒரு ரூபாயாக கொடுத்து விடுங்கள் என்றாராம் .
தியாக உணர்வு குறைகிற போது மனித சமூகம் தனது உயரிய மதிப்புகளை இழந்து விட நேரிடும்.
ஓரு சமூக அமைப்பில் ஒன்றினைந்து வாழ்கிற போது சில சமயஙகளில் நமது விருப்பங்களை விட அடுத்தவாகளின் விருப்பத்திற்கும் நமது தேவைகளை விட அடுத்தவாகளின் தேவைக்கும் நாம் முன்னுரிமை தர வேணடியது வரும்.
அந்த சமயங்களில் நாம் தியாக உணாவை கைகொள்ள தவறினால் நமது மானுட உணாவு கேலிக்குரியதாகி விடும்
தியாக உணாவுக்கு நம்மை தயார் படுத்திக் கொள்ளும் ஒரு பாசறையாக ஹஜ்ரத் இபுறாகீம் அலை அவாகளது வரலாறு இருக்கிறது.
வல்ல இறைவன் மனிதாகளது எந்த அர்ப்பணிப்புக்கும் உரிய மாயாதையை கொடுக்காமல் இருப்பதில்லை.நபி இபுறாகீம் அலை அவாகளின் தன்னிகரற்ற தியாகச்செயல்களுக்கு பாசாக அவரது ஒவ்வொரு அசைவையும் காலம் தோறும் மனித சமூகம் கடைபிடிக்க வேணடிய கடமைகளாக அல்லாஹ் ஆக்கியமைமைத்தான்.
அவை ஹஜ்ஜின் நடைமுறைகளாக இன்று பரிணாம்ம் பெற்றிருக்கின்றன்.
இன்றைய ஹஜ்ஜுப் பெருநாளில் ஆதமுடைய மகன் செய்யக்கூடிய அமல்களில் அல்லாஹ்வுக்கு மிகவும் பிடித்தது இரத்தத்தை ஓட்டுவதுதான் (குர்பானிதான்!)
- நபி (ஸல்).
ஏன்? அல்லாஹ்வுக்கு இறைச்சித் துண்டு என்றால் மிகவும் பிடிக்கும் என்பதாலா?
''அவற்றின் இறைச்சித்துண்டுகளோ இரத்தமோ அல்லாஹ்வை அடைவதில்லை. மாறாக உங்கள் இதயத்திலிருந்து எழும் இறையச்சமே அவனை அடையும்.'' --அல்குர்ஆன்
நிச்சயமாக அல்லாஹ் உங்கள் உருவங்களையோ தோற்றங்களையோ கவனிப்பதில்லை; உங்கள் உள்ளங்களையும் செயல்களையும்தான் பார்க்கிறான்.- ஹதீஸ்
எந்த எண்ணத்தில் குர்பானி கொடுக்கிறோம் என்பதுதான் முக்கியம்.
நாலு பேர் புகழவேண்டும் என்பதற்காகவா?
இறைச்சி வழங்க முடியாதவர்கள் என்ன செய்யலாம்?
இறைச்சி இல்லாவிட்டால் என்ன..மகிழ்ச்சி வழங்கலாமே !
''இன்சொல் கூறுவதும் தர்மமே''. -- நபி (ஸல்)
இன்சொல்லில் ஆகச் சிறந்தது ஸலாம் (முகமன் வாழ்த்து ) அதை இந்நாளில் அதிகம் பரப்புவோம்!
நபிகளார் நவின்றார்கள்:
''உங்களுக்குள் சலாமைப் பரப்புங்கள்( சாந்தியைப் பரப்புங்கள்)''
ஒரு பெருநாள் அன்று பெருமானார் (ஸல்) உணர்வூட்டும் உபதேசம் ஒன்று செய்தார்கள் :
''பெண்களே தான தர்மங்களை தாராளமாகச் செய்யுங்கள். உங்களை நரகத்தில் நான் அதிகமாகக் கண்டேன்.''
இதன் பிறகு பிலால் ரலி துண்டை விரித்துக் கொண்டு பெண்களிடம் சென்றார்கள். சுப்ஹானல்லாஹ்!
பெண்கள் தங்கள் கழுத்துகளிலும் கைகளிலும் கிடந்த பொன் நகைகளை கழற்றி தானம் செய்தார்கள். இது உண்மையான வரலாறு.
நாம் பொன் நகையைத் தருவது இருக்கட்டும்.முதலில் புன்னகையாவது தருகிறோமா?
உன் சகோதரனைப் பார்த்து புன்சிரிப்பதும் தர்மமே! (அதற்கும் நன்மை உண்டு) –- நபி (ஸல்)
எனவே இந் நன்னாளில் ஒருவருக்கொருவர் முகத்தைக் காட்டுவோம் ;
மூஞ்சியை அல்ல!
முகம் என்றால் என்ன? மூஞ்சி என்றால் என்ன?
திருவள்ளுவர் அழகாகச் சொல்வார்:
''முகத்தான் அமர்ந்து இனிது நோக்கி- அகத்தானாம்இன்சொலினதே அறம்.''
புன்சிரித்து இன்சொல் கூறுவதும் தர்மமே! என்கிறார்.
புன்சிரிப்பது முகம் ; சிடுசிடுன்னு இருப்பது மூஞ்சி.
தியாகத் திருநாள் வந்துவிட்டது.
இந்த பக்ரீத் பண்டிகையை ஹஜ்ஜுப் பெருநாள் என்றும் தியாகத் திருநாள் என்றும் மக்கள் மகிமையோடு அழைப்பதுண்டு. காரணம் இதில் பிரதான வணக்கமாய் ஹஜ்ஜும் அந்த ஹஜ்ஜுக்கே முன்னோடியாய் நபி இப்றாஹீம் அலை அவர்களும் அவர்களின் குடும்பமும் செய்த தியாகமும் இந்த பெருநாளில் பின்னிப் பிணைந்திருக்கிறது.
ஹஜ்ஜின் அதிகமான கிரியைகளைக் உற்றுநோக்கினால் ஒரு உண்மை புரியும்:
இப்றாஹீம் அலை அவர்களும் அவர்களின் குடும்பமும் செய்த மிக யதார்த்தமான செயல்களைக் கூட அல்லாஹ் ஹஜ்ஜில் முக்கிய வணக்கமாக ஆக்கிவிட்டான்.
நபியவர்களின் குழந்தை இஸ்மாயீல் அலை தண்ணீர் இல்லாத பாலை மணலில் தாங்கமுடியாத தாகத்தில் தவித்து அழுதபொழுது தாயார் ஹாஜர் அலை அவர்கள் தண்ணீர் தேடி ஸஃபாவிற்கும் மர்வாவிற்கும் இடையே ஓடிய அந்த யதார்த்த்மான செயல் கூட இன்று ஹஜ்ஜிலே பிரதானமான ஒரு வணக்கம். செய்யவில்லை என்றால் ஹஜ் நிறைவேறாது என்ற அளவில் அல்லாஹ் அமைத்தான். தண்ணீர் தேடி ஓடிய தாயின் பரிதவிப்புக்குகூட தக்க மரியாதையை தந்தான் இறைவன்.
இளவல் இஸ்மாயீலை அழைத்துக்கொண்டு இறைவனின் ஆணையை இனிதே நிறைவேற்ற இப்றாஹீம் அலை செல்லும் நேரம் இப்லீஸ் வந்து இடைமறித்தான்:
''இப்றாஹீமே.. உம் மகனைப் பலியிட பணித்தது படைத்தவன் அல்ல.. பாதகன் இப்லீஸ். அவனின் திருவிளையாடல்தான் இது என்பதைப் புரியாமல் புதல்வனை பலிகொடுக்க பூரிப்போடு செல்கிறீரே..என்றான் வயோதிகன் உருவில் வந்த இப்லீஸ் .
வந்திருப்பது யார் என்று புரிந்துகொண்ட நபியவர்கள், '' அடே அல்லாஹ்வின் எதிரியே! ஆதித்தந்தையர் ஆதமையும் ஹவ்வாவையும் வழிகெடுத்த அயோக்கியனே! நில்லாதே என் முன்! அல்லாஹ்வின்மீது ஆணையாக அவனின் ஆணையை நிறைவேற்றியே தீருவேன்'' என்று கூறி ஏழு கற்களை எடுத்து எறிந்து அவனை விரட்டி அடித்தார்கள். சிறிது தூரம் சென்றதும் மீண்டும் வந்து தடுக்க முனைந்தான் இவ்வாறு மூன்று முறை அவன் தடுக்க முனைந்தபொழுது ஏழு ஏழு கற்களை எடுத்து எறிந்தார்கள். அந்த யதார்த்தமான எறிதலைக் கூட எல்லா ஹாஜிகளுக்கும் வணக்கமாய் ஆக்கினான் வல்ல நாயன்.
தொழுகையின் தொடக்கம் தொடுத்து தொழுகையின் இறுதிவரை இறைவனின் நேசர் இப்றாஹீம் அலை அவர்களை நினைவலைகளை அல்லாஹ் அள்ளித் தெளித்தான். ஆமாம் அன்பர்களே!
ஆரம்ப தக்பீருக்குப் பின் அடக்கத்துடன் ஓதுகிற வஜ்ஜஹ்து இப்றாஹீம் அலை கற்றுத் தந்த இனிய பழக்கம் என்றால் தொழுகையின் இறுதியில் அத்தஹிய்யாத் இருப்பில் இப்றாஹீம் அலை அவர்களையும் அவர்களின் குடும்பத்தையும் கூறித்தான் தொழுகையை நிறைவு செய்கிறோம். அதாவது இப்றாஹீம் அலை அவர்களின் வார்த்தையுடன் ஆரம்பம் செய்கிறோம்; அவர்களின் வாழ்த்துடன் நிறைவு செய்கிறோம்.
வஜ்ஜஹ்து வரலாறு:
وَكَذَلِكَ نُرِي إِبْرَاهِيمَ مَلَكُوتَ السَّمَوَاتِ وَالأَرْضِ وَلِيَكُونَ مِنَ المُوقِنِينَ * فَلَمَّا جَنَّ عَلَيْهِ اللَّيْلُ رَأَى كَوْكَباً قَالَ هَذَا رَبِّي فَلَمَّا أَفَلَ قَالَ لاَ أُحِبُّ الآفِلِينَ * فَلَمَّا رَأَى القَمَرَ بَازِغاً قَالَ هَذَا رَبِّي فَلَمَّا أَفَلَ قَالَ لَئِن لَّمْ يَهْدِنِي رَبِّي لأَكُونَنَّ مِنَ القَوْمِ الضَّالِّينَ * فَلَمَّا رَأَى الشَّمْسَ بَازِغَةً قَالَ هَذَا رَبِّي هَذَا أَكْبَرُ فَلَمَّا أَفَلَتْ قَالَ يَا قَوْمِ إِنِّي بَرِيءٌ مِّمَّا تُشْرِكُونَ * إِنِّي وَجَّهْتُ وَجْهِيَ لِلَّذِي فَطَرَ السَّمَوَاتِ وَالأَرْضَ حَنِيفاً وَمَا أَنَا مِنَ المُشْرِكِينَ ﴾ ( الأنعام:75 ـ79).
ஒரு நாள் சிறுவர் இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அகண்ட பாருலகை பார்த்தார்கள் விரிந்த வானைப் பார்த்தார்கள் இறைவனின் படைப்புகளைப் பார்த்தார்கள் மனிதர்களைப் பார்த்தார்கள் மக்களைப் பார்த்தார்கள்; பறவைகளைப் பார்த்தார்கள் புழுக்களைப் பார்த்தார்கள் எல்லாம் அவர்களுக்கு ஒரே வியப்பாக இருந்தது. இவற்றை எல்லாம் படைத்தவன் யார்? இவற்றை ஏன் படைத்தான்? என்ற வினாக்கள் அவர்களுடைய மூளையில் சுழலத் தொடங்கியது.
இருள் சூழ்ந்தது. காரிருள் கவ்வியது. அவர்கள் வானத்தை உற்று நோக்கிக் கொண்டிருந்தார்; அப்பொழுது திடீரென ஒரு விண்மீன் தோன்றி பிரகாசித்தது. இதுதான் என்னுடைய இறைவனாக இருக்குமோ என்று எண்ணினார்கள் சற்றுநேரத்தில் அந்த விண்மீன் மறைந்ததும் இது அல்ல என் இறைவன்; மறையக் கூடியது இறைவனாக இருக்க இயலாது' என்று தமக்குள் கூறிக்கொண்டார்கள்.
பின்னர் வெண்ணிலா விசும்பின் அடியிலிருந்து வெளிவருவதைக் கண்டு இதுதான் என்னுடைய இறைவனாக இருக்குமோ என்று எண்ணினார்கள். அதுவும் வான்வெளியில் அன்ன நடை நடந்துவிட்டு மறையவே, இதுவும் என் இறைவனல்ல; இறைவன் எனக்கு நேர்வழியைக் காட்டவில்லையெனில் நானும் வழிதவறியவர்களில் ஆகிவிடுவேன்' என்று அவர்கள் கூறினார்கள். விடிந்தது. சூரியன் தன் பொற்கிரணங்களை அள்ளி வீசியவாறு வெளியே வந்தது. அதைக் கண்டதும் ஆ.. இது மிகவும் பெரியதாயுள்ளதே. இதுதான் என் இறைவனாக இருக்குமோ' என்று எண்ணினார்கள். ஆனால் அது அந்நாளின் இறுதியில் மறையவே மறையக் கூடியது என் இறைவனல்ல..
﴿ إِنِّي وَجَّهْتُ وَجْهِيَ لِلَّذِي فَطَرَ السَّمَوَاتِ وَالأَرْضَ حَنِيفاً وَمَا أَنَا مِنَ المُشْرِكِينَ﴾ ( الأنعام:79)
வானங்களையும் பூமியையும் படைத்த அந்த வல்ல நாயனை நோக்கி என் முகத்தை திருப்புகிறேன். நான் முஸ்லிம்؛ இணைவைப்பவனல்ல.'' என்று கூறினார்கள்.
தொழுகைக்கு மட்டுமா அவர்கள் ஆரம்பம்?
தொன்றுதொட்டு நிலவி வரும் நல்ல பழக்கங்களுக்கெல்லாம் அவர்கள்தானே முன்னோடி.
குழந்தை பிறந்தால் அதற்கு அகீகா கொடுத்தல்
விருத்த சேதனம் செய்தல்
மீசையை உதட்டின் விளிம்பிற்கு வெளியே வராமல் கத்தரித்தல்
அக்குள் மற்றும் அரை முடியை மழித்தல்
பல்துலக்க மிஸ்வாக்கைப் பயன்படுத்துதல்
புனித மாதங்களைக் கவுரவித்தல்
இதுபோன்ற ஏராளமான இனிய பழக்கங்களை அறிமுகப்படுத்தியவர்கள்
இப்றாஹீம் அலை அவர்கள்தான். இதற்கும் மேலாக ஒரு குடும்பப் பெண் என்பவள் வீட்டின் வாயிற்படி போல என்ற அருமையான உதாரணத்தைக் கூறி இல்லற வாழ்க்கைக்கும் இனிய வழிகாட்டியாய் இருப்பவர்கள் இப்றாஹீம் அலை அவர்கள்.
விருத்த சேதனம் செய்து விருத்தியோடு வாழ வழிகாட்டியவர்:
விருத்த சேதனம் செய்துகொண்டவர்களுக்கு எய்ட்ஸ் வருவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு என்றும் அதில் ஏராளமான சுகாதார நன்மைகள் உண்டு என்றும் இன்று கண்டுபிடித்து அநேக யூதர்களும் கிறிஸ்தவர்களும் ஏனைய மதத்தைச் சார்ந்த ஏராளமான மருத்துவர்களும் சுன்னத் செய்துகொள்கிற நிலையப் பார்க்கிறோம். இந்த அருமையான நடைமுறைக்கு ஆரம்ப வழிகாட்டி இப்றாஹீம் அலை.
மீசையைக் குறைத்தல்:
வீரப்பன் போல் மீசையை வளர்ப்பது வீரத்தின் அடையாளமாய் இன்று சினிமாக்களில் காட்டப்பட்டாலும் உண்மை என்ன? தாடிதான் ஆண்மையின் கம்பீரம். மீசையைக் குறைத்துக்கொள்வதுதான் நாகரீகம் என்பதை இன்று நாம் மட்டும் கூறவில்லை பல சமய அறிஞர்களும் மருத்துவர்களும் ஒப்புக்கொள்கிற உண்மை.
மறைமலை அடிகளார் தன் 'மனித வசியம் 'என்ற நூலில் எழுதுகிறார்:
''மனிதன் சுவாசிக்கும்போது சுத்தமான காற்றை (ஆக்சிஷன்) உள்ளே இழுக்கிறான்; கிருமிகள் நிறைந்த அசுத்தமான காற்றை (கார்பண்டை ஆக்ஸைடு) வெளியிடுகிறான் அப்படி காற்றை வெளியிடும்போது அதிலுள்ள கிருமிகள் மீசை அடர்த்தியாக இருந்தால் அதற்குள்ளே சென்று படிகின்றன. அதன் பின்னர் நாம் ஏதாவது உண்ணும்போது பருகும்போது அவற்றில் அந்த கிருமிகள் கலந்து மீண்டும் நம் உடலுக்குள் சென்று கடும் விளைவுகளை உண்டாக்குகிறது... ஆகவே மீசையக் குறைக்கவேண்டும்''
இல்லத்தரசி என்பவள் இல்லத்தின் நிலைப்படி என்று இயம்பிய இப்றாஹீம் அலை:
இப்றாஹீம் அலை அவர்கள் மனைவி மகனை பள்ளத்தக்கிலே விட்டுவிட்டு சென்று பல வருடங்களுக்குப் பிறகு பருவ வயதை அவர் அடைந்த போது அவருக்கு ஜுர்ஹூம் கிளையார், தங்களிலிருந்து ஒரு பெண்ணை மணமுடித்து வைத்தனர். இஸ்மாயீலின் தாயார் (ஹாஜர்) இறந்துவிட்டார். இஸ்மாயீல் (அலை) அவர்கள் மணம் புரிந்து கொண்ட பின்பு இப்ராஹீம் (அலை) அவர்கள், தாம் விட்டுச் சென்ற (தம் மனைவி மகன் ஆகிய)வர்களின் நிலையை அறிந்துக் கொள்வதற்காக (திரும்பி) வந்தார்கள். அப்போது இஸ்மாயீல் (அலை) அவர்களை (அவர்களது வீட்டில்) காணவில்லை.
ஆகவே, இஸ்மாயீல் (அலை) அவர்களின் மனைவியிடம் இஸ்மாயீலை குறித்து விசாரித்தார்கள். அதற்கு அவர் எங்களுக்காக உணவு தேடி வெளியே சென்றிருக்கிறார் என்று சொன்னார். பிறகு அவரிடம் அவர்களுடைய வாழ்க்கை நிலைப் பற்றியும் பொருளாதாரம் பற்றியும் விசாரித்தார்கள். அதற்கு அவர் நாங்கள் மோசமான நிலையில் உள்ளோம். நாங்கள் கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறோம் என்று இப்ராஹீம் (அலை) அவர்களிடம் முறையிட்டார்.
உடனே இப்ராஹீம் (அலை) அவர்கள் உன் கணவர் வந்தால் அவருக்கு (என் சார்பாக) ஸலாம் கூறி அவரது நிலைப்படியை மாற்றி விடும்படி சொல் என்று சொன்னார்கள். இஸ்மாயீல் (அலை) அவர்கள் (வீட்டிற்கு) வந்தபோது, எவரோ வந்து சென்றிருப்பது போல் உணர்ந்தார்கள். எவரேனும் உங்களிடம் வந்தார்களா? என்று கேட்டார்கள். அவருடைய மனைவி, ‘ஆம்’ இன்னின்ன (அடையாளங்கள் கொண்ட) பெரியவர் ஒருவர் வந்தார். எங்களிடம் உங்களைப் பற்றி விசாரித்தார். நான் அவருக்கு (விவரம்) தெரிவித்தேன்.
என்னிடம் உங்கள் வாழ்க்கை நிலை எப்படி உள்ளது என்று கேட்டார். நான் அவரிடம், நாங்கள் பெரும் சிரமத்திலும் கஷ்டத்திலும் இருக்கிறோம் என்று சொன்னேன் என்று பதிலளித்தார். அதற்கு இஸ்மாயீல் (அலை) அவர்கள் உன்னிடம் தம் விருப்பம் எதையாவது அவர் தெரிவித்தாரா என்று கேட்க, அதற்கு அவர் ‘ஆம்’ உங்களுக்கு தன் சார்பாக ஸலாம் உரைக்கும்படி எனக்கு உத்தரவிட்டு, உன் நிலைப்படியே மாற்றிவிடு என்று (உங்களிடம் சொல்லச்) சொன்னார் என்று பதிலளித்தார். இஸ்மாயீல் (அலை) அவர்கள் அவர் என் தந்தைதான். உன்னைவிட்டு பிரிந்து விடும்படி எனக்கு உத்திரவிட்டுள்ளார்.
ஆகவே, நீ உன் (தாய்) வீட்டாருடன் போய் சேர்ந்து கொள் என்று சொல்லிவிட்டு, உடனே அவரை விவாகரத்து செய்துவிட்டார். பின்னர் ஜுர்ஹும் குலத்தாரிலிருந்தே வேறொரு பெண்ணை மணமுடித்துக் கொண்டார். பிறகு, இப்ராஹீம் (அலை) அவர்கள் இறைவன் நாடிய காலம் வரை அவர்களை (ப் பார்க்க வராமல்) விலகி வாழ்ந்தார். அதன் பிறகு அவர்களிடம் சென்றார். ஆனால், இஸ்மாயீல் (அலை) அவர்களை (இந்த முறையும்) அவர் (அங்கு) காணவில்லை. ஆகவே, இஸ்மாயீல் (அலை) அவர்களுடைய (புதிய) துணைவியாரிடம் சென்று இஸ்மாயீலைப் பற்றி விசாரித்தார். அதற்கு அவர் எங்களுக்காக வருமானம் தேடி வெளியே சென்றிருக்கிறார் என்று சொன்னார்.
இப்ராஹீம் (அலை) அவர்கள், நீங்கள் எப்படியிருக்கிறீர்கள் (நலம்தானா?) என்று கேட்டார்கள். மேலும், அவர்களுடைய பொருளாதார நிலை குறித்தும் மற்ற நிலைமைகள் குறித்தும் அவரிடம் விசாரித்தார். அதற்கு இஸ்மாயீலின் துணைவியார், நாங்கள் நலத்துடனும் வசதியுடனும் இருக்கிறோம் என்று சொல்லிவிட்டு உயர்ந்தவனும் வல்லவனுமாக அழ்ழாஹ்வைப் புகழ்ந்தார். இப்ராஹீம் (அலை) அவர்கள், உங்கள் உணவு எது? என்று கேட்க அவர், இறைச்சி என்று பதிலளித்தார். அவர்கள், உங்கள் பானம் எது? என்று கேட்க தண்ணீர் என்று பதிலளித்தார். இப்ராஹீம் (அலை) அவர்கள் இறைவா! இவர்களுக்கு இறைச்சியிலும், தண்ணீரிலும் பரக்கத்தை அருள் வளத்தை அளிப்பாயாக! என்று பிரார்த்தனை புரிந்தார்கள்.
இதை கூறிக்கொண்டே வந்த நபி (ஸல்) அவர்கள், ''அந்த நேரத்தில் அவர்களிடம் உணவு தானியம் எதுவும் இருக்கவில்லை. அப்படி எதுவும் இருந்திருந்தால் அதிலும் அருள் வளம் தரும்படி இப்ராஹீம் (அலை) அவர்கள் பிரார்த்திருப்பார்கள். ஆகவே தான் மக்காவைத் தவிர பிற இடங்களில் அவ்விரண்டையும் (இறைச்சியையும் தண்ணீரையும்) வழக்கமாக பயன்படுத்தி வருபவர்களுக்கு அவை ஒத்துக்கொள்வதே இல்லை என்று சொன்னார்கள்.
''இப்ராஹீம் (அலை) அவர்கள் உன் கணவன் வந்தால் அவருக்கு (என் சார்பாக) ஸலாம் உரை. அவரது (வீட்டு) நிலைப்படியை உறுதிப்படுத்தி வைக்கும்படி சொல் என்று சொன்னார்கள். இஸ்மாயீல் (அலை) அவர்கள் (வீட்டிற்குத் திரும்பி) வந்த போது, உங்களிடம் எவரேனும் வந்தார்களா? என்று கேட்க, அவருடைய மனைவி, ‘ஆம்’ எங்களிடம் அழகிய தோற்றமுடைய முதியவர் ஒருவர் வந்தார் என்று (சொல்லிவிட்டு) அவரை புகழ்ந்தார். (பிறகு தொடர்ந்து) என்னிடம் நமது பொருளாதார நிலை எப்படி உள்ளது என்று கேட்டார். நான் நாங்கள் நலமுடன் இருக்கிறோம் என்று தெரிவித்தேன் என்று பதில் சொன்னார். அவர் உனக்கு அறிவுரை ஏதேனும் சொன்னாரா? என்று இஸ்மாயீல் (அலை) கேட்டார்கள். அதற்கு அவர் ‘ஆம்’ உஙகளுக்கு ஸலாம் உரைக்கிறார். உங்கள் நிலைப்படியை உறுதிப்படுத்திக் கொள்ளும்படி உங்களுக்கு கட்டளையிடுகின்றார் என்று சொன்னார். இஸ்மாயீல் (அலை) அவர்கள் அவர் என் தந்தை. நீ தான் அந்த நிலைப்படி உன்னை (விவாகரத்து செய்யாமல்) அப்படியே மனைவியாக வைத்துக் கொள்ளும்படி எனக்கு உத்தரவிட்டுள்ளார்; என்று சொன்னார்கள். ( புகாரீ)
ஒரு இல்லத்தின் நிலைப் படி சரியாக இருப்பது எவ்வளவு முக்கியமோ அதுபோல இல்லத்தரசி சரியாக இருப்பது குடும்பத்திற்கு முக்கியம். இதை அருமையாக உணர்த்தியவர்கள் இப்றாகீம் அலை.
நமக்கு பல லட்சம் கிடைத்தால் போதும் என்று பணக்கார வீட்டில் பார்த்து மகனுக்கு சம்பந்தம் பேசி அவனைப் பாலுங்கிணற்றில் தள்ளிவிட்டுவிட்டு அவன் அங்கே அனுபவிக்கும் அவஸ்தையை எல்லாம் அலட்டிக்கொள்ளாமல் பார்த்து ரசிக்கும் எத்தனையோ பெற்றோர்களுக்கு மத்தியில் இப்றாஹீம் அலை ஒரு முன்மாதிரி. தன் பிள்ளைகளின் வாழ்க்கைத் தரம் எப்படி உள்ளது என்பதில் அக்கறை காட்டி அவர்கள் வளமாக நலமாக வாழ்வதற்கும் வழிகாட்டிய இப்றாஹீம் அலை அவர்கள் உண்மையில் பாராட்டுக்குரியவர்கள்.
ஒரு குடும்பத்திற்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த சமூகத்திற்கு வேண்டிய அத்தனை அம்சங்களுக்கும் அருமையான வழிகாட்டியாக அமைந்திருப்பதால்தான் அல்லாஹ் அவர்களை ஒரு தனிமனிதரல்ல.. அவர் ஒரு சமுதாயம் என்கிறான்
(إِنَّ إِبْرَاهِيمَ كَانَ أُمَّةً قَانِتاً لِلّهِ حَنِيفاً وَلَمْ يَكُ مِنَ الْمُشْرِكِينَ (النحل : 120)
நபி இபுறாஹீம் (அலை) அவர்களுடைய வாழ்க்கையில் ஏற்பட்ட சோதனைகளையும் வேதனைகளையும், துன்ப துயரங்களையெல்லாம் அவர்கள் பொறுமையுடன் சகித்திருந்து இறைவனிடம் பிரார்த்தித்து வெற்றி பெற்ற வீர வரலாற்றையும் நாம் தெரிந்து கொள்ள வேண்டியது கட்டாய கடமையாகும். நபி இபுறாஹீம் (அலை) அவர்களுடைய வாழ்க்கையில் ஏற்பட்ட சோதனைகளை சுருக்கமாக கூறுவதானால்,
அவர்கள் தம் இளம் பிராயத்திலேயே ஓரிறை கொள்கையான இஸ்லாத்தை எடுத்து சொன்னதின் காரணத்தினால், அவருடைய தந்தையாராலேயே வீட்டைவிட்டும் விரட்டப்பட்ட சோதனை. அல்குர் ஆன் 19:46
கொடுங்கோல் ஆட்சி புரிந்த மன்னன் நம்ரூது என்பவனை எதிர்ததினால் நெருப்பு குண்டத்தில் எறியப்பட்ட சோதனை. அல்குர் ஆன் 21:68,69
திருமணமாகி பல்லாண்டு காலம் பிள்ளைப்பேறு இன்றி பரிதவித்த சோதனை. அல்குர்ஆன் 37:100,101
முதிர்ந்த பருவத்தில் உள்ள இபுறாஹீம் (அலை) அவர்களுக்கு நபி இஸ்மாயீல் (அலை) பிறக்கிறார்கள். சிறிது காலத்திற்கு பின்பு அல்லாஹ்வின் உத்தரவின் பேரில் தம் மனைவி ஹாஜிரா அம்மையாரையும், மகன் நபி இஸ்மாயீல் (அலை) அவர்களையும் பாலைவனத்தில் தகிக்கும் சுடுமணலில் தன்னந்தனியாக விட்டுப் பிரிந்த சோதனை. ( புகாரீ)
அல்லாஹ்வின் உத்தரவிற்கு கட்டுப்பட்டு தம் அருமை மைந்தரான நபி இஸ்மாயீல்(அலை) அவர்களை அறுத்து பலியிட துணிந்த சோதனை. அல்குர்ஆன் 37:02,03
ஆக வாழ்நாளில் பல அடுக்கடுக்கான சோதனைகளை சந்தித்தும்கூட மனம் தளராமல் எல்லாம் வல்ல இறைவனிடமே பிரார்த்தனை செய்து பொறுமையுடன் துன்பங்களை சகித்து கொண்டிருந்ததினால் சோதனைகளெல்லாம் சாதனையாக மாறிய சாகஸ வரலாற்றை குர்ஆனில் காணலாம். கிட்டத்தட்ட 5000 வருடங்களுக்கு முன்பாக நடந்த சில நிகழ்ச்சிகளை குர்ஆன் நமக்கு படம் பிடித்து காட்டுகிறது.
தியாகத் திருநாள் தரும் படிப்பினை இவைதான். நாம் அல்லாஹ்வின் அடிமைகள். அவனே நமது எஜமானன். நாம் அவனுக்காகவே வாழ்ந்து, அவனுக்காகவே மடிவதே நமது நீங்காத இலட்சியமாகும்.
“(நீர்) கூறும்!
எனது தொழுகை, எனது ஹஜ்ஜின் கிரியைகள், என் வாழ்வு, என் மரணம் (அனைத்தும்) ரப்புல் ஆலமீனாகிய அல்லாஹ்வுக்கே.” (அல்குர்ஆன் 6: 162)
எந்த ஒரு காரியத்திலும் நமது மனைவி மக்களது, உலக மக்களது அபிலாசைகளை விட, அல்லாஹ்(ஜல்)வின் கட்டளையை நிறைவேற்ற முற்படுவதே நமக்கு வெற்றியையும் இறுதியில் மகிழ்ச்சியையும் அளிக்கும். மறுமையில் ஈடில்லா பெரும் பேறுகளைத் தரும். நமது, நமது மனைவி மக்களது, உலக மக்களது அபிலாசைகளுக்கு இடம் கொடுத்தால், ஷைத்தானின் வலையில் சிக்கி விடுவோம். நாம் எதை எதிாபார்த்தோமோ, அந்தச் சந்தோசமும் நம்மை விட்டுப் போய்விடும். இறுதியில் ஷைத்தான் நம்மை மீளா நரகில் கொண்டு சேர்த்து விடுவான். அது தங்கும் இடங்களில் மிகக் கெட்டது. அதிலிருந்து மீட்சி இல்லாமலும் போகலாம். ஆகவே இது விஷயத்தில் நாம் மிக எச்சரிக்கையாக இருப்பது கடமை. படிப்பினை பெறுவோமாக! ஆமீன்.
குறிப்பு...