வெள்ளி வசந்தம்

ஆலிம் பெருமக்கள் அள்ளித் தரும் ஆழிய கருத்துகளை ஆசிரியர்கள் தொகுத்து .வழங்கும் ஜும்ஆஉரைகள்

சட்டங்கள்

வணக்கம்,வழக்கம்,வணிகம்,இல்லறம்,நல்லறம்,தொடர்பான வினாக்களுக்கு ஆதாரத்துடன் அளிக்கப்பட அருமையானபதில்கள்

குழந்தைப் பெயர்கள்

அரபு மற்றும் அர்த்தத்துடன் முஸ்லிம் குழந்தைகளுக்கான அழகுத் திருப் பெயர்கள்

அரபுக் கல்லூரிகள்

தரணி எங்கும் தலைசிறந்து விளங்கும் அரபுக் கல்லூரிகள்

வலைதள வல்லுநர்கள்

இந்த தளத்தில் அரும்பணியாற்றும் ஆசிரியப் பெருமக்கள்

24 December 2014

உத்தம நபியின் உதயம்


வசந்த காலம் வந்துவிட்டது..
ரபிஉல் அவ்வல் மாதம் மனித இனத்திற்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவொன்று. ஏனெனில் மனிதசமூகத்தை இருளிலிருந்து ஒளியின் பால், வழிகேட்டிலிருந்து நேர்வழியின் பக்கம் வழி நடத்த வந்த நபி முஹம்மது (ஸல்) அவர்கள் பிறந்த மாதம் இது.
ரபீஉன்என்றால் வசந்தம் என்பது பொருள். வசந்தகாலம் பூமிக்கு பசுமையையும் அழகையும் வனப்பையும் கொண்டு வருகின்றது.

ஏந்தல் நபி குறித்து ஏனைய சாட்சியங்கள்

மவ்லானா முப்தி முகம்மது தாஜுதீன் காசிமி மற்றும் மவ்லானா அப்துர் ரஹ்மான் ஹசனி மற்றும் சுல்தான் சலாஹி போன்றோர் வழங்கிய குறிப்புகள் இடம் பெறுகின்றன...

நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கையிலே...

1. நபி (ஸல்) அவர்கள் பிறப்பு :
20-04-570 திங்கட்கழமை, ரபீஉல்
அவ்வல் மாதம் பிறை 12
2. பிறந்த இடம் : திரு மக்கா
3. பெற்றோர் : அப்துல்லாஹ் -
அன்னை ஆமீனா

22 December 2014

பள்ளிவாசலில் விற்பனை கூடுமா?


கேள்வி: பள்ளிவாசலில் தொப்பி போன்ற பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது, இது கூடுமா?

பதில்: ஹனஃபி மத்ஹபின்படி இஃதிகாஃப் இருப்பவர்களை தவிர பிற நபர்களுக்கு பள்ளிவாசலில் விற்பதோ வாங்குவதோ வெறுக்கத்தக்கதாகும்.

ஃபஜ்ருடைய தொழுகையில் குனூத்

கேள்வி: இமாம் ஃபஜ்ருடைய தொழுகையில் குனூத்து ஓதினால் ஹனஃபி முக்ததியீன்கள் என்ன செய்ய வேண்டும்?

பதில்: இமாம் ஃபஜ்ருடைய தொழுகையில் குனூத்து ஓதினால் அவரைப் பின்பற்றித் தொழுகிற ஹனஃபி முக்ததியீன்கள் அமைதியாக நிற்க வேண்டும்.

தந்தையின் விபச்சாரத்தின் மூலம் பிறந்த பெண்ணைத் திருமணம் ?


கேள்வி: ஒரு ஆண் தன் தந்தைக்கு விபச்சாரத்தின் மூலமாக பிறந்த மகளை திருமணம் செய்துக்கொள்ளலாமா?


பதில்: ஒரு ஆண் தன் தந்தைக்கு விபச்சாரத்தின் மூலமாக பிறந்த மகளை திருமணம் செய்யக்கூடாது. ஏனெனில் விபச்சாரத்தின் மூலமாகவும் உறவுகள் ஏறபடுகிறது. எனவே அந்த மகள் இந்த ஆணுக்கு சகோதரியாக ஆகிவிடுகின்றாள்.அப்பொழுது சகோதரியை திருமணம் செய்வது தடை செய்யப்பட்டுள்ளது.