வெள்ளி வசந்தம்

ஆலிம் பெருமக்கள் அள்ளித் தரும் ஆழிய கருத்துகளை ஆசிரியர்கள் தொகுத்து .வழங்கும் ஜும்ஆஉரைகள்

சட்டங்கள்

வணக்கம்,வழக்கம்,வணிகம்,இல்லறம்,நல்லறம்,தொடர்பான வினாக்களுக்கு ஆதாரத்துடன் அளிக்கப்பட அருமையானபதில்கள்

குழந்தைப் பெயர்கள்

அரபு மற்றும் அர்த்தத்துடன் முஸ்லிம் குழந்தைகளுக்கான அழகுத் திருப் பெயர்கள்

அரபுக் கல்லூரிகள்

தரணி எங்கும் தலைசிறந்து விளங்கும் அரபுக் கல்லூரிகள்

வலைதள வல்லுநர்கள்

இந்த தளத்தில் அரும்பணியாற்றும் ஆசிரியப் பெருமக்கள்

10 March 2016

"ஹலால் ஹராம்"

அல்லாஹ்வின் அச்சமின்றி,ஹலாலை  ஹராமாக,ஹராமை ஹலாலாக,ஆகுமென கூறுவதற்கும்,திருத்துவதற்கும்,மாற்றுவதற்கும் எந்த மேதைக்கும் அதிகாரம் கிடையாது,தகுதியுமில்லை.
அல்லாஹ் சிலவற்றை கடைமையாக்கியுள்ளான்.அவற்றை கடந்து விடாதீர்கள்.சில எல்லைகள் வகுத்துள்ளான்.தாண்டிவிடாதீர்கள் சில
வற்றை  ஹராமாக்கியுள்ளான்.மீறி விடாதீர்கள். என நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள்.
ஹராமனவற்றால் வளர்ந்த எந்த சதையும் சொர்க்கம் போகாது என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
 أمرهم ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا  
அல்லாஹ்வும்,ரஸூலும் ஒரு செயலை,கடைமையாக்கிவிட்டால்,
அவ்விஷயத்தில் (மாற்றமாக)  அபிப்ராயம் கொள்ள,எந்த முஃமினான ஆணுக்கும் பெண்ணுக்கும் உரிமை இல்லை.எவர் அல்லாஹ்வுக்கும் ரஸூலுக்கும் மாறு செய்கிறார்களோ,அவர்கள் பகிரங்கமாக வழி கெட்டுவிட்டார்கள். (அல் குர்ஆன் 33:36)