14 August 2015

இந்திய சுதந்திர போரில் முஸ்லிம்களின் பங்கு!

இந்திய ‬முஸ்லீம்களின்‪ மறைக்கப்பட்ட ‬வீர வரலாறுகள் எண்ணிலடங்கா..!!""

இஸ்லாமிய தியாகிகள் இந்திய சுதந்திரப் போராட்டத்துக்காக தங்களின் உடல் , பொருள், ஆவியை தியாகம் செய்த பல இஸ்லாமியப் பெருமகன்களின் வரலாற்றை கண்டு வருகிறோம்.

இந்திய சுதந்திரப் போராட்டத்தில் சிறைக்கு சென்றவர்களிலும் உயிர்களை தியாகம் செய்தவர்களிலும் முஸ்லிம்கள்அவர்களின் மக்கள் தொகையின் விகிதாச்சாரத்தோடு ஒப்பிடும்போது மிக அதிகமாகவே இருந்தார்கள்
என்று பிரபல எழுத்தாளர் குஷ்வந்த் சிங் இல்லஸ்ட்ரேடட் வீக்லி பத்திரிகையில் எழுதி அது 20/12/1975 அன்று வெளிவந்தது.

ஆனால் மறு புறத்தில் முஸ்லிம்கள் செய்த தியாகங்களை குறைத்து மதிப்பிடுகிற ஒரு கூட்டம் பொய்களை அள்ளி விட்டுக் கொண்டிருக்கிறது.

முஸ்லிம்களை ஏதோ ஒரு வேண்டாத தலைச்சுமை போல ஆட்சியாளர்களும் அவர்களின் அடிவருடிகளும் நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள்.

இன்னும் ஒரு சிலர் இந்த நாட்டை விட்டு அப்புறப்படுத்தவேண்டுமென்றும் அள்ளிவிட்டுக் கொண்டிருக்கொண்டிருக்கிறார்கள்.

அரசியல் சட்டத்துக்கு விரோதமான அவர்களின் இந்தக் கருத்துக்கள், சட்டபூர்வமான நடவடிக்கைகளை அவ்விதம் பேசுவோர் மீது ஏவி விடப்பட்டாலும்,அவை யாவுமே கண் துடைக்கும் காரியங்கள்தான்.

அந்நியனுக்கு அடிமைச் சேவகம் செய்தவர்கள் எல்லாம் இன்று ஆட்சிக் கட்டிலிலும், அதிகார இடங்களிலும் அமர்ந்து கொண்டு சுதந்திரத்திற்கு தங்கள் எதிர்கால சந்ததியினரின் நலன்களை அர்ப்பணித்த சமுதாயத்தை அடக்கியாள்கின்ற
அவலம் ஒருபுறம் ;

😞சுதந்திரத்துக்காக வாளேந்திய சமுதாயம் வாழ்வுரிமை கேட்டு வீதியில் நிற்கும் அவலம் மறுபுறம்.

கிழக்கிந்திய கம்பெனிக்கு அவர்களின் பிரதிநிதிகளாக இருந்த கிஸ்தி வசூ¬லித்து தந்தவர்கள் எல்லாம் , இன்று தியாக வேஷம் போட்டு முஸ்லிம்களின் தியாகத்தின் சூரியனின் கதிர்களை , கரங் கொண்டு மறைத்து விடலாம் என்று நினைக்கலாம், ஆனால் ஆயிரம் கரம் கொண்டு மறைத்தாலும் ஆதவன் மறைவதில்லை.

இந்திய மண்ணின் கடைசி இஸ்லாமியர் இருக்கும் வரை இந்தியாவின் விடுதலைக்கு இஸ்லாமியர்கள் ஆற்றிய அரும்பணிகள் மறையாது. எவ்வளவு காவிச்சாயம் அடித்தாலும் இந்த தியாகங்களை மறைக்க முடியாது.

இந்த சரித்திர நாயகர்கள் நமது இந்திய சுதந்திர போராட்ட களத்தில் தலையாய கடமையாற்றியவர்கள்:ا

1.ஆங்கிலேயர்களுக்கு எதிராக முதல் புரட்சிக் குரல் கொடுத்தவர்-
நவாப் சிராஜுத் தௌலா
2.மைசூர் புலி ஷஹீத் திப்பு சுல்தான்
3.ஹஜரத் ஷாஹ்வலியுல்லாஹ் முஹத்திஸ் தெஹ்லவி
4.ஹஜரத் ஷாஹ் அப்துல் அஜீஸ் முஹத்திஸ் தெஹ்லவி
5.ஹஜரத் சையத் அஹ்மத் ஷஹீத்
6.ஹஜ்ரத் மவுலானா விலாயத் அலி சாதிக்பூரி
7.அபு ஜஃபர் சிராஜுத்தீன் முஹம்மத் பஹதுர்ஷா ஜஃபர்
8.அல்லாமா ஃபஜ்ல ஹக் கைராபாதி
9.ஷஹ்ஜாதா ஃபைரோஜ் ஷாஹ்
10.மவுல்வி முஹம்மத் பாகர் ஷஹீத்
11.பேகம் ஹஜ்ரத் மஹால்
12.மவுலானா அஹ்மதுல்லாஹ் ஷாஹ்
13.நவாப் கான் பஹாதுர் கான்
14.அஜீஸான் பாய்
15.ஷாஹ் அப்துல் காதிர் லுதியானவி
16.ஹஜ்ரத் ஹாஜி இம்தாதுல்லாஹ் முஹாஜிர மக்கி
17.ஹஜ்ரத் மவுலானா முஹம்மத் காஸிம் நானொத்தவி
18.ஹஜ்ரத் மவுலானா ரஹ்மதுல்லா கைரானவி
19.ஷேகுல் ஹிந்த் ஹஜ்ரத் மவுலான மஹ்மூதுல் ஹஸன்
20.ஹஜ்ரத் மவுலானா உபைதுல்லாஹ் ஸிந்தி
21.ஹஜ்ரத் மவுலானா ரஷீத் அஹ்மத் கங்கோஹி
22.ஹஜ்ரத் மவுலானா அன்வர் ஷாஹ் கஷ்மீரி
23.மவுலானா பர்கதுல்லாஹ் போபாலி
24.ஹஜ்ரத் மவுலானா முஃப்தி கிஃபாயதுல்லாஹ்
25.ஸஹ்பானுல் ஹிந்த் மவுலானா அஹ்மத் ஸயீத் தெஹ்லவி
26.ஹஜ்ரத் மவுலானா சையத் ஹுஸைன் அஹ்மத் மதனி
27.ஸய்யீதுல் அஹ்ரார் மவுலானா முஹம்மத் அலி ஜவ்ஹர்
28.மவுலானா ஹஸரத் மூஹானி
29.மவுலானா ஆரிஃப் ரிஜ்வி
30.மவுலானா அபுல் கலாம் ஆஜாத்
31.ரயீஸுல் அஹ்ரார் மவுலானா ஹபீபுர் ரஹ்மான் லுதியானவி
32.டாக்டர் ஸயீஃபுத்தீன் கிச்லு
33.மஸீஹுல் முல்க் ஹகீம் அஜ்மல்கான்
34.மவுலானா மஜாஹிருல் ஹக்
35.மவுலானா ஜஃபர் அலி கான்
36.அல்லாமா இனாயதுல்லாஹ் கான் மஷ்ரீகி
37.டாக்டர் முக்தார் அஹ்மத் அன்ஸாரி
38.ஜெனரல் ஷாஹ்னவாஜ் கான்
39.ஹஜ்ரத் மவுலானா முஹம்மத் மியான்
40.மவுலானா ஹிஃப்ஜுர் ரஹ்மான் ஸுயுஹாரி
41.ஹஜ்ரத் மவுலானா அப்துல் பாரி ஃபிரங்கிமஹாலி
42.கான் அப்துல் கப்பார் கான்
43.முஃப்தி அதீகுர் ரஹ்மான் உஸ்மானி
44.டாக்டர் சையத் மஹ்மூத்
45.கான் அப்துல் சமத் கான்
46.ரஃபீ அஹ்மத் கித்வாயீ
47.சுஃப் மெஹர் அலி
48.அஷஃபாகுல்லாஹ் கான்
49.பாரிஸ்டர் ஆஸிஃப் அலி
50.ஹஜரத் மவுலானா அதாவுல்லாஹ் ஷாஹ் புகாரி
51.மவுலானா கலீலுர் ரஹ்மான் லுதியானவி
52.அப்துல் கையூம் அன்ஸாரி
53.பாரிஸ்டர் பதுருத்தீன் தையப்ஜி
54.சுரைய்யா தையப்ஜி (நமது இந்திய தேசிய கொடியை வடிவமைத்த பெண்மணி)
இவர்களைப் போல இன்னும் பல லட்சம் முஸ்லீம்கள் நமது நாட்டு சுதந்திரத்திற்காக ரத்தம் சிந்தி போராடியுள்ளனர்.ا

இத் தகவலை  அனைத்திந்திய  அளவிலும், ஏன் உலகலளவிலும் உரத்து தெரிவிக்க வேண்டியது நமது தற்போதைய கட்டாய கடமையாகும்.ر

1. காதிர் முஹைத்தீன் மரைக்காயர் (பர்மா, கிலாபாத், ஒத்துழையாமை)
2. மி.இ. முஹம்மது அப்துல் காதர் சாஹிபு  தென்காசி (கிலாபத், அந்நியத் துணி எரிப்பு, ஒத்துழையாமை இயக்கம்)
3. அப்துல் ஹமீதுகான் 1932ல் சென்னை மேயராக பணியாற்றியவர் (சுதந்திரப் போராட்டத்திற்காக சென்னை சட்டசபையில் குரல் கொடுத்தார்.)
4. முகமதலி சேலம் (கள்ளுக்கடை மறியல்)
5. பி.என். அப்துல் கபீர் தாராபுரம் (வில்லுப்பாட்டு மூலம் தேசப் பற்றை வளர்த்தார், கிலாபத்திலும் கலந்து கொண்டார்)
6. பண்டிட் அப்துல் மஜீத் பளைக்குளம் (கிலாபத்)
7. கலிபுல்லாஹ் திருச்சி (கிலாபத்)
8. நூர்மல் சென்னை (பகத்சிங் படத்தை அடையில் வைத்து விற்றதாக கைது செய்யப்பட்டு, 18-1 அச்சு சட்டப்படி வழக்குத் தொடரப்பட்டது.)
9. அப்துல் ஹமீது
10. மௌலானா அப்துல் காதர்

வீரத்தாய் ந. பியாரி பீபீ - வரலாறு

இந்தியாவின் விடுதலைப் போரில் இஸ்லாமியரின் பங்கு மகத்தானது.

நாடெங்கிலும் நடந்த ஆங்கிலேயரின் அடக்குமுறையில்ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் அல்லுற்றனர்.

காந்தி அடிகளின் அறைகூவலை ஏற்று சுதந்திர வேள்வியில் தம்மை ஈடுபடுத்திக் கொண்ட இஸ்லாமியர்கள் ஏராளம்.

நேதாஜியின் இந்திய தேசீய இராணுவத்தில் பல இஸ்லாமிய தியாகிகள் தேச விடுதலைக்காகப் பெரும்பங்கு ஆற்றியுள்ளனர்.

தெருவில் இறங்கி ஆங்கிலேயே ஏகாதிபத்தியத்தை எதிர்த்த லட்சக்கணக்கான தொண்டர்களை இந்த நாட்டு மக்களும் அரசும் மறந்து விட்டது.

எங்கேயோ வாழ்ந்து இறந்த விடுதலைப் போராட்ட தலைவர்களைப் பற்றிப்பேசி மகிழ்பவர்கள், தங்கள் வசிக்கும் உள்ளூரிலேயே இருக்கும் விடுதலைபோராட்ட வீரர்களைப் பற்றியும் அவர்கள் பட்ட துன்பத்தையும் அவர்கள்செய்த தியாகத்தையும் அறியாமல் இருக்கின்றனர்.

அப்படிப்பட்ட இவர்களை மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதேஇக்கட்டுரையின் நோக்கமாகும்.

தில்லையாடி வள்ளியம்மை என்ற தமிழச்சி தென்ஆப்பிரிக்காவில்வெள்ளையர் ஆதிக்கத்தை எதிர்த்து போராடியதை நாம் அறிவோம். இந்தநாடு அறியும்.

நம்மில் எத்தனை பேருக்கு நா. பியாரி பீபீயை தெரியும். இதே கரூரைச்சேர்ந்த தமிழச்சிதான் இவர்.

இவரின் தியாகத்தை ஒப்பிட்டு பார்த்தால் மற்ற எவரின் தியாகத்திற்கும்குறைந்தது அல்ல.

இஸ்லாமியப் பெண் என்ற ஒரே காரணத்திற்காக இந்த வீரத்தாயின் தியாகம் மறைக்கப்பட்டுள்ளது.

வீரத்தாய் பியாரி பீபீ ஒரு 100% இஸ்லாமியப் பெண் என்பதை முதலில் மனதில் பதிய வைத்துக் கொண்டு இவரின் வரலாற்றை படித்துப் பார்த்தால்இவரின் தியாகத்தை புரிந்து கொள்ள முடியும்.

இவர் திண்டுக்கலில் காவல்துறை அதிகாரியாக இருந்த சையத்இஸ்மாயிலுக்கு 1922-ல் மகளாகப் பிறந்தார்.

இவருக்கு விடுதலைப் போராட்ட வீரர் கரூர் நன்னா சாகிபு அவர்களுடன்திருமணம் நடைபெற்றது.

அது முதல் இவரும் சுதந்திரப் போராட்டத்தில் பங்கு கொண்டார்.

கி.பி. 1941-ல் இந்திய பாதுகாப்பு விதியின் கீழ் கைது செய்யப்பட்டு 5 மாதம் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டார்.

விடுதலைப் போராட்டத்தில் கலந்து கொண்டு சிறை சென்ற ஒரு முஸ்லிம் பெண்மணி இவரே என்பது குறிப்பிடத்தக்கது.

முஸ்லிம் பெண்ணான இவர் விடுதலைப் போராட்டத்தில் பங்கு கொண்டுசிறை சென்றதற்கு கரூர் நகர முஸ்லிம் மக்கள் மிகப் பெரிய எதிர்ப்பைத்தெரிவித்தனர்.

ஜமாத்தில் இருந்த இவரது குடும்பத்தையே சிறிது காலம் ஒதுக்கிவைத்தனர்.

மேலும், இவர் சிறை செல்லும் பொழுது ஐந்து மாத கர்ப்பவதியாகஇருந்தார்.

பின்பு சிறையிலேயே கருக்கலைப்பும் ஏற்பட்டுவிட்டது.

முஸ்லிம் பெண் இதுபோன்ற போராட்டங்களில் ஈடுபடுவதை விரும்பாதசில முஸ்லிம்கள், பியாரி பீபீ போலிசாரால் கைது செய்யப்பட்டு கொண்டு செல்லும் போது, அவர் மீது கற்கலை எறிந்து எதிர்ப்பை தெரிவித்தனர்.

பெரும்பாலும் தம்பதியர் பிரிந்தே வாழ்ந்தனர்.

கணவர் கரூர் நன்னா சாகிபு அவர்களை முழுமையாக சுதந்திரப் போரில் பங்குபெற அனுமதித்தார்.

கி.பி. 1920 முதல் கி.பி. 1947 வரை அனைத்து போராட்டத்தில் கலந்து கொண்டார் சாகிபு.......

கப்பல் ஓட்டிய வஉசி -க்கு அந்த கப்பலை ஒரு லட்ச ரூபாய் போட்டு வாங்கித்தந்தது யார்....?
நேதாஜிக்கு இந்திய தேசிய ராணுவம் அமைக்க ஆயுதம் வாங்க எல்லாம்... ஒரு கோடி ரூபாய் பட்ஜெட் ஸ்பான்சர்  யார்....?
காந்திஜிக்கு தென் ஆப்ரிக்காவில் வேலை போட்டுக்கொடுத்து... அங்கே போக வர வைத்து அவரை பிரிட்டிஷ் எதிர்ப்புக்கு தூண்டியவர் யார்....? 
காங்கிரசின் சுதேசி கதர் ஆடையை கண்டுபிடித்தது யார்...?
ஆங்கிலேயரை எதிர்த்த முதல் இந்தியர் யார்..?
இந்திய தேசிய கோடியை வடிவமைத்தவர் யார்..?

------எல்லா கேள்விக்கும் விடை... 'முஸ்லிம்'..! 

இதுபோல நாம் இதுவரை சிந்திக்காத... நாம் இதுவரை பள்ளி பாட எழுத்து காட்சி ஊடக வரலாறில் அறியாத ஆச்சர்யங்கள் இன்னும் எக்கச்சக்கம்..! 



1. முதன்மையாளர்கள்

இந்திய விடுதலைக்காக சிறை சென்றவர்களிலும் உயிர் நீத்தவர்களிலும் இஸ்லாமியர் அதிகமாகவே இருந்தனர். அவர்களது மக்கள் தொகை விகிதாச்சாரத்தை விட விடுதலைப் போரில் மாண்டோர் எண்ணிக்கையின் விகிதாச்சாரம் அதிகமாகவே இருந்தது. - (குஷ்வந்த்சிங், இல்லஸ்டிரேட் வீக்லி, 29-12-1975.
)


வடக்கில் சிந்திய முதல் ரத்தம்

வர்த்தகம் செய்ய வந்த ஆங்கிலேயருக்கு இந்த மண்ணின் வளத்தை நிரந்தரமாய் அனுபவிக்கும் எண்ணம்
 ஆசையாய்உருவானது. ஆங்கிலேயரின் நிர்பந்தங்களுக்கு இங்குள்ள ஆட்சியாளர்கள் பலர் அச்சத்துடன் அள்ளிக் கொடுத்தனர். அண்ட இடமும் கொடுத்தனர். தங்கள் ஆட்சிப்பரப்புக்குள் ஆங்கிலேயர் சுதந்திரமாய் பவனிவர பாதை அமைத்தனர். ஏனென்றால் பிரிட்டீஷாரின் துணை, தங்கள் பகை அரசுகளிடம் இருந்து தங்களைக் காக்கும் என்ற சுயநலத்தினால். நம் ஆட்சியாளர்களின் இச்சுயநலம் பிரிட்டீஷாருக்கு நிரந்தரமாய் இம்மண்ணை ஆள்வதற்கான எளிய வாய்ப்பாக அமைந்தது.

இந்த காலகட்டத்தில், வியாபாரம் செய்ய வந்தவர்களுக்கு நாடாளும் ஆசை வந்துவிட்டது என்பதை முதலில்
 கணித்து,ஆங்கிலேயரின் நிர்பந்தங்களுக்கு எதிராய் இந்த மண்ணில் முதலில் நிமிரிந்து நின்றவர்தான் வங்காளத்தை ஆண்ட சிராஜ்-உத்-தௌலா.
1757-ல்
ஆங்கிலேயரை அவர் சந்தித்த பிளாசிப் போர்தான் பிரிட்டீஷ் ஏகாதிபத்தியத்திற்கு எதிராய் இம்மண்ணில் நடந்த முதல் இந்திய சுதந்திரப்போர்...!  இதுவே பெரிய யுத்தம்..! இப்போரில் கைதாகும் இந்திய வீரர்களை அடைப்பதற்காக ஆங்கிலேயர் கட்டிய சிறைக்கூடத்திலேயே ஆங்கிலேயர்களைக் கைது செய்து அடைத்த மாவீரர்தான் சிராஜ்-உத்-தௌலா. நமது வரலாற்றாசியர்களின் வாதப்படி 'முதல்ல்ல்ல்ல் இந்திய சுதந்திரப்போர்' எப்போதாம்..?
1
857..? ஏன்..? ஏன்..? ஏன்..? ஏன்...?
ஏன்... இந்த வரலாற்று திரிபு..???


ஆங்கிலேயரின் நாடாளும் ஆசையை முளையில் கிள்ளும் தௌலாவின் முயற்சியை முறியடிக்க பிரிட்டனிலிருந்து
 கடல் மார்க்கமாக வந்த ஆங்கிலப்படை கல்கத்தா துறைமுகத்தில் மிகப்பெரிய எதிர் முற்றுகையைச் சந்தித்தது. கல்கத்தா துறைமுகத்தில் ஆங்கிலேயரை எதிர்கொண்ட தௌலாவுக்கு இயற்கை மட்டும் ஒத்துழைத்திருந்தால்… இந்திய சரித்திரமே மாறியிருக்கும். ஆனால் இயற்கை ஒத்துழைக்க மறுக்க, நான்கு மணி நேரம் பெய்த கடுமையான மழையினால் தௌலா படையின் வெடிமருந்துகள் நனைந்தன. அவரது முயற்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

பிரிட்டிஷ் எதிர்ப்பில் சிந்திய முதல் இந்திய ரத்தம்.. வங்காளத்தில் சிராஜ்-உத்-தௌலா சிந்திய ரத்தம்தான். அதன் மீதுதான் பிரிட்டீஷ் ஏகாதிபத்தியம் தன் முதல் கால்
 கோளை இந்திய மண்ணில் ஊன்றியது. ஆமாம் இந்தியாவில் பிரிட்டீஷாரின் ஆட்சி முதலில் வங்காளத்தில்தான் ஏற்பட்டது.

 

வடக்கில் சிந்திய முதல் ரத்தம்

 

நம் ஆட்சியாளர்களின் இச்சுயநலம் பிரிட்டீஷாருக்கு நிரந்தரமாய் இம்மண்ணை ஆள்வதற்கான எளிய வாய்ப்பாக அமைந்தது.  இந்த காலகட்டத்தில், வியாபாரம் செய்ய வந்தவர்களுக்கு நாடாளும் ஆசை வந்துவிட்டது என்பதை முதலில் கணித்து, ஆங்கிலேயரின் நிர்பந்தங்களுக்கு எதிராய் இந்த மண்ணில் முதலில் நிமிரிந்து நின்றவர்தான் வங்காளத்தை ஆண்ட சிராஜ்-உத்-தௌலா.  ஆப்கானியப்படைவீரர் அலிவர் திகான் கி.பி. 1726ல் துருக்கியிலிருந்து இந்தியா வந்து வங்காளப் படையில் சேர்ந்தார். பின்பு 1740ல் வங்காளத்தின் நவாப் ஆனார். அவருக்குப்பின் 24 வயதான அவரது பேரர் சிராஜ்-உத்-தௌலாவங்காள நவாபாக ஆனார்.


சிராஜ்-உத்-தௌலா மற்ற நவாப்கள் போலல்லாமல் ஆங்கிலேயர்களுக்கு எதிராக கிளர்ச்சி செய்து அவர்களை கலங்கடித்த மாவீரராவார். ஆங்கிலேயர்களுக்குச் சிம்ம சொப்பனமாக திகழ்ந்த சிராஜுத்தெளலாவின் புகழ் வடக்கே மிக விரைவாக பரவியது. 
1757-ல் ஆங்கிலேயரை அவர் சந்தித்த பிளாசிப் போர்தான் பிரிட்டீஷ் ஏகாதிபத்தியத்திற்கு எதிராய் இம்மண்ணில் நடந்த முதல் பெரிய யுத்தம்.

இப்போரில் கைதாகும் இந்திய வீரர்களை அடைப்பதற்காக ஆங்கிலேயர் கட்டிய சிறைக்கூடத்திலேயே ஆங்கிலேயர்களைக் கைது செய்து அடைத்த மாவீரர்தான் தௌலா.  ஆங்கிலேயரின் நாடாலும் ஆசையை முளையில் கிள்ளும் தௌலாவின் முயற்சியை முறியடிக்க பிரிட்டனிலிருந்து கடல் மார்க்கமாக வந்த ஆங்கிலப்படை கல்கத்தா துறைமுகத்தில் மிகப்பெரிய எதிர் முற்றுகையைச் சந்தித்தது.


கல்கத்தா துறைமுகத்தில் ஆங்கிலேயரை எதிர்கொண்ட தௌலாவுக்கு இயற்கை மட்டும் ஒத்துழைத்திருந்தால்… இந்திய சரித்திரமே மாறியிருக்கும். ஆனால் இயற்கை ஒத்துழைக்க மறுக்க, நான்கு மணி நேரம் பெய்த கடுமையான மழையினால் தௌலா படையின் வெடிமருந்துகள் நனைந்தன. அவரது முயற்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.


தங்களுக்கு எதிராக மிகப் பெரிய சக்தியாக வளர்ந்து வரும் சிராஜுத்தெளலாவின் செல்வாக்கை முறியடிக்க ஆங்கிலேயர் ஒரு சதித் திட்டம் தீட்டினர். 22”க்கு 14” அளவு கொண்ட ஓர் இருட்டறையில் 144 ஆங்கிலேயர்களை அடைத்து வைத்து கொடுமைப்படுத்தியதாக ‘ஹோல்வேல்’ என்ற ஆங்கிலேயன் அவதூறு பரப்பினான். உடனே சென்னையிலிருந்து ‘அட்மிரல் லாட்ஸன்’ மற்றும் ‘சிலாலோ’ இருவரும் கல்கத்தா புறப்பட்டுச் சென்றார்கள். இவர்கள் வெளிப்படையாக சிராஜுத்தெளலாவுடன் ஒப்பந்தம் செய்து கொண்டு மறைமுகமாக அவரை வீழ்த்த கீழறுப்பு வேலைகளை செய்யத்துவங்கினர்.


சிராஜுத்தெளலாவின் ஆலோசகர் மீர் ஜஃபரை இலஞ்சம் கொடுத்து விலைக்கு வாங்கினர். 1757ல் வெள்ளையர் முகாமிட்டிருந்த கல்கத்தா துறைமுகத்தை சிராஜுத்தெளலா தாக்கினார். நான்கு மணி நேரம் கடும் மழையிலும் காற்றிலும் வெடிமருந்துகள் அனைத்தும் செயலிழது விட்ட போதிலும் இறுதிவரை அஞ்சாது போரிட்டார்.  கி.பி 1757ல் பிளாசி மைதானத்தில் நடந்த யுத்தத்தில் மீர் ஜஃபரின் சதியால் அஞ்சா நெஞ்சகர் சிராஜுத்தெளலா தோல்வியுற நேர்ந்தது. அதன் பின்னர் மீர் ஜஃபரின் மகன் மீறான் சிராஜுத்தெளலாவை வஞ்சகமாக கொன்றான். இவ்வாறு வடக்கே தங்களுக்குப் பெரும் தலை வேதனை தந்த மாவீரன் சிராஜுத் தௌலாவை ஆங்கிலேயர் சதியால் கொன்றனர்.

ஹைதர்  அலி & திப்பு சுல்தான்..!
மைசூர் சாம்ராஜ்ஜியத்தின்
சுல்தான் ஹைதர் அலி ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனியின் ராபர்ட் கிளைவ்க்கு கப்பம் கட்டிப்பணிய மறுத்து 1766 முதல் 1782 ல் இறக்கும்வரை பிரிட்டிஷ் படையுடன் வரலாற்றில் முதன்முறையாக ராக்கெட் தொழில் நுட்பத்துடன் போரிட்டார்..! 18ம் நூற்றாண்டில் சிறந்த தளபதியாகத் திகழ்ந்தவர் ஹைதர் அலி. இவர் ஆங்கிலேயரின் ஆதிக்கத்தை எதிர்த்து நடத்திய போர் 'முதலாம் மைசூர் போர்' எனப்படுகிறது. ஹைதர் அலியின் தாக்குதலைச் சமாளிக்க முடியாமல் ஆங்கிலேயர் தோற்று ஓடினர். ஆனால், இரண்டாம் மைசூர் போரில் ஆங்கிலேயர் சூழ்ச்சி செய்து இவரைத் தோற்கடித்தனர்.

சுல்தான் ஹைதர் அலியின் இறப்புக்கு பின்னர், அவரின் மகன்,
மாவீரன் திப்பு சுல்தான் ஆங்கிலேயரை எதிர்த்து பல முறை போரிட்டு வென்று, ஆனால், இறுதியில் தன் 48-வது வயதில் 1799-ல் ஆங்கிலேயரால் மற்றொரு போர்முனையில் கொல்லப்பட்டு வீரமரணம் அடைந்தாரே..? ஏன் இதை எல்லாம் இந்திய சுதந்திரப்போராட்டத்தில் சேர்த்துக்கவில்லை..?

1799 ஆண்டு மே மாதம் நான்காம் தேதி சாதாரண சிப்பாய் போல் ஆங்கிலேய அந்நிய படைக்கெதிராக களமிறங்கி தனது உடலில் கடைசி மூச்சு நிற்கும் வரை உறுதியுடன் போராடி உயிர் தியாகியானார் மாவீரன் திப்பு. அந்த வீரத் திருமகனின் வரலாற்றை நினைவுக்கூறுவது இந்திய தேசத்தின் விடுதலை வரலாற்றையே நினைவுக்கூறுவதற்கு சமமாகும்.


‘கிழக்கிந்தியக் கம்பெனியின் குலை நடுக்கம்’ திப்புசுல்தானின் மைசூர் அரசுக்கு அன்று லண்டன் பத்திரிகைகள் வைத்த பெயர் இதுவாகும். இந்தியாவில் ஆங்கிலேயர்களின் உள்ளங்களில் பீதியை விதைத்த தீரர் தான் திப்பு. அதனால்தான் திப்பு சுல்தான் தனது இன்னுயிரை தியாகம் செய்த வேளையில் அவரின் வீரமரணத்தை கேள்விப்பட்டு மனம் மகிழ்ந்த ஆங்கிலேய ஜெனரல் ஹாரிஸ் இவ்வாறு கூறினான்: ‘இன்று முதல் இந்தியா நம்முடையது’ என்று.


அடுத்து வந்த நூற்றி ஐம்பது ஆண்டுகள் ஆங்கிலேய ஆட்சி இந்தியாவில் நிலைபெற திப்புவின் மரணம் ஆங்கிலேயர்களுக்கு உதவியது. ஆனால் அந்த மாபெரும் வீரனின் தீரமிக்க போராட்டத்தை மறைப்பதற்காக அந்நியக் கைக்கூலிகள் இந்தியாவின் முதல் விடுதலைப் போராட்டம் 1857 ஆம் ஆண்டிலிருந்துதான் துவங்கியது என்ற வரலாற்றுப் புரட்டை எழுதி வைத்துள்ளனர்.


இந்தியாவின் முதல் பிரதமரான பண்டிட் ஜவஹர்லால் நேரு அவர்கள் தமது டிஸ்கவரி ஆஃப் இந்தியா என்ற நூலில் ”ஆங்கிலேயர்களுக்கு சிம்ம சொப்பனமாகவும், பெரும் சவாலாகவும் இருந்தவர்கள் ஹைதர் அலியும், திப்பு சுல்தானும். அவர்கள் பிரிட்டீஷாருக்கு கடுமையான தோல்வியின் மூலம் வேதனைமிக்க அனுபவத்தை ஏற்படுத்தினார்கள். கிழக்கிந்திய கம்பெனியின் அதிகாரத்தை உடைத்தெறியும் அளவுக்கு அவ‌ர்க‌ள் நெருங்கினார்கள்” எனக் குறிப்பிடுகிறார்.(‘Haider Ali and Tipu Sultan were formidable adversaries who inflicted a severe defeat on the British and came near to breaking the power of the East India Company‘ என The Discovery of India, (6th edn., London, 1956, pp.272-73)).


1750 நவம்பர் 20ல் ஹைதர் அலி ஃபக்ருன்னிஸா தம்பதியருக்கு மகனாய்ப் பிறந்த திப்புசுல்தான், தனது 17ம் வயதிலேயே போர்ப்படைத் தளபதியாக நின்று வாணியம்பாடி யுத்தத்தில் ஆங்கிலேயரை வென்றார்.


1761ல் மைசூர் மன்னராக பொறுப்பேற்ற திப்பு சுல்தானின் தந்தை ஹைதர் அலி 1767-1769ல் முதலாம் மைசூர் யுத்தம், 1780ல் இரண்டாம் மைசூர் யுத்தம் உட்பட ஆங்கிலேயரை எதிர்த்து பலயுத்தம் கண்டு வெற்றி பெற்றார்.


திப்பு கி.பி 1767 ல் தமது 17 ம் வயதில் ஜோசப் ஸ்மித் தலைமையில் போரிட்ட ஆங்கிலப் படையை எதிர்த்து வாணியம்பாடியில் தமது முதல் வெற்றிக்கனியை பறித்தார் கி.பி.1767 முதல் கி.பி.1769 வரை தமிழ்நாட்டில் பரவலாக பல இடங்களில் ஆங்கிலப் படைக்கும் மைசூர் படைக்கும் நடந்த போர்களில் எல்லாவற்றிலும் வெற்றியே பெற்றார் திப்பு.


1782 டிசம்பர் 6ல் தந்தை ஹைதர் அலி மரணத்தைத் தொடர்ந்து 1782 டிசம்பர் 26ல் தமது 32ம் வயதில் திப்புசுல்தான் மைசூர் மன்னரானார். மேற்கு கடற்கரையிலிருந்து ஆங்கிலேயர்களை துரத்த வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு பிரெஞ்சுப் படையினரையும் சேர்த்துக் கொண்டு ஆவேசத்துடன் போரைத் தொடர்ந்தார் திப்பு.


ஆனால் பிரஞ்சு மன்னன் பதினாறாம் லூயி பிரிட்டனுடன் சமரசம் செய்துக் கொண்டதால் திப்பு வேறுவழியில்லாமல் போரை நிறுத்த வேண்டியதாயிற்று. 1784 ஆம் ஆண்டு முடிவுற்ற இப்போரில் ஆங்கிலேய தளபதி உள்ளிட்ட 4000 சிப்பாய்கள் திப்புவால் போர்க் கைதிகளாக பிடிக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர். இந்த அவமானம் ஆங்கிலேயர்களுக்கு திப்புவை நினைத்து குலை நடுங்கச் செய்தது.


கி.பி.1790 ஆம் ஆண்டு முதல் 1792 ஆம் ஆண்டுவரை நடைபெற்ற மூன்றாவது மைசூர்போர் ஆங்கிலேயனின் கைக்கூலியான திருவிதாங்கூர் மன்னனான தர்மராஜாவால் தூண்டி விடப்பட்டது. திருவிதாங்கூர் எங்களது நட்பு நாடு அதனை போரில் ஆதரிப்பது எமது கடமை எனக்கூறி ஜெனரல் கார்ன் வாலிஸ் திப்புசுல்தானுக்கெதிராக போர் புரிய தயாரானான்.


இச்சூழலில் திப்புவிற்கெதிராக போர்புரிய ஆற்காட்டு நவாபும், தொண்டைமான், ஹைதராபாத் நிஜாம், மைசூர் அரசின் முன்னாள் பாளையக்காரர்கள் அனைவரும் ஆங்கிலேயருடன் இணைந்துக் கொண்டனர். இதில் சற்றும் கலங்காத திப்பு எதிரிகளை தன்னந்தனியாக துணிச்சலுடன் எதிர்கொண்டார்.


ஸ்ரீரங்கப்பட்டினம் 30 நாட்களுக்கு மேலாக முற்றுகையிடப்பட்ட போதிலும் எதிரிகளால் திப்புவின் கோட்டைக்குள் நுழைய இயலவில்லை. இதனைக் குறித்து ஆங்கிலேய தளபதி மன்றோ கூறுகையில், ‘30 நாட்கள் முற்றுகையிட்டும் எங்களால் அந்தக் கோட்டையையும், தீவையும் தூரத்திலிருந்துக் கொண்டு தரிசிக்கத்தான் முடிந்தது’. என்று குறிப்பிட்டான்.


போரின் துவக்கத்தில் வெற்றிப் பெற்ற திப்பு போரின் இறுதிக்கட்டத்தில் மராட்டியர்கள் நயவஞ்சகத்தனமாக ஆங்கிலேயர்களுடன் இணந்துக் கொண்டதால் ஒப்பந்தம் செய்துக் கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டார். மைசூரின் பாதி நிலப்பரப்பும் எதிரிகள் வசம் சென்றது. இழப்பீடுத் தொகையாக 3.3 கோடி நிர்ணயிக்கப்பட்டது. இழப்பீடு தொகையை செலுத்துவரை திப்புவின் இருமகன்கள் பிணையக் கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டனர். இழப்பீட்டுத் தொகையை செலுத்தி தனது மகன்களை மீட்ட திப்பு 1792 ஆம் ஆண்டு நடந்த போருக்கு பதிலடிக் கொடுக்க வலிமையான முறையில் படையையும், பொருளாதாரத்தையும் கட்டமைத்தார்.


திப்பு சுல்தானை போரில் நேரில் சந்திக்க திராணியற்ற ஆங்கிலேயர்கள் குறுக்கு வழியை கையாள ஆரம்பித்தனர். லஞ்சத்தை ஆயுதமாக பயன்படுத்தி திப்புவின் அமைச்சர்களையும் அதிகாரிகளையும் விலைக்கு வாங்கினர். இதனைக் குறிப்பிட்டு வெல்லெஸ்லி ஆங்கிலத் தலைமைக்கு இவ்வாறு கடிதம் எழுதினான், ‘இனி நாம் துணிச்சலாக திப்புவின் மீது போர்த்தொடுக்கலாம்’ என்று.


ஆங்கிலேயனுக்கு எதிராக நடைபெற்ற இறுதிப் போரில் தன்னந்தனியாக களமிறங்கினார் திப்பு. துரோகிகள் ஒருபக்கம் கூட இருந்தவர்களின் குழிபறித்தல் ஒருபக்கம் என எதிர்ப்புகள் ஒன்றிணைந்து தம்மை சந்தித்த பொழுதும் உதவிக்கு வருவதாக வாக்களித்திருந்த நெப்போலியனுக்கு வர இயலாத போதிலும் கலங்காமல் தமது 11 ஆயிரம் படைவீரர்களுடன் தானும் ஒரு போர் வீரனாக தீரமுடன் போரிட்டார் திப்பு.


குண்டுக் காயங்களுடன் கோட்டை வாயிலில் சரிந்து கிடக்கும் திப்புவிடம். “அரசே! யாரேனும் ஒரு ஆங்கிலேய அதிகாரியை அழைக்கட்டுமா, சரணடைந்து விடலாம்” என்று பதறுகிறான் அவருடைய பணியாள். “முட்டாள்… வாயை மூடு” என்று உறுமுகிறார் திப்பு. ஆம்! “ஆடுகளைப் போல 200 ஆண்டுகள் பிழைப்பதை விடப் புலியைப் போல 2 நாட்கள் வாழ்ந்து மடியலாம்” என்று பிரகடனம் செய்த அந்தப் வேங்கை போர்க் களத்திலேயே தன் கண்ணை மூடியது.


எதிரிகள் உயிர் தியாகத்தின் வாசலை திப்புவுக்கு திறந்துக் கொடுத்தனர்..!


திப்புவின் பீரங்கிகள் பிரபலமானவை..! அதன் மூலம் பெற்ற வெற்றிகளும் பிரதானமாணவை..!



திப்பு சுல்தான் நவீன தொழில் நுட்பத்தின் முன்னோடி ஆங்கிலேய ஏகாதிபத்தியவாதிகளை எதிர்ப்பதற்கு தொழில் முறையில் பயிற்சிப் பெற்ற ராணுவமும், தொழில் நுட்பமும் தேவை என்பதை உணருகிறார் திப்பு சுல்தான். இதனால் ராணுவத்தில் ஏவுகணைத் தொழில் நுட்பத்தை புகுத்தியதில் முன்னோடியாக திகழ்ந்தார் அவர். இதனை டாக்டர் அப்துல்கலாம் தனது ‘அக்னி சிறகுகள்’ என்ற நூலில் தான் அமெரிக்காவின் ‘நாசா’ விண்வெளி மையத்திற்கு சென்றபொழுது தி ப்புசுல்தான் பயன்படுத்திய ஏவுகணையின் புகைப்படத்தை அங்கே பார்த்ததாக ஆச்சரியத்துடன் கூறுகிறார்.


இதனை இந்திய பாதுகாப்புத் துறையின் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிப்பிரிவின் (Defence Research and Development Organisation – DRDO) தலைமை இயக்குனரும் இந்தியாவின் பிராமோ ஏவுகணையின் வளர்ச்சியில் முக்கியப் பங்காற்றிய விஞ்ஞானியான திரு. சிவதாணு பிள்ளை, ‘இரு நூற்றாண்டுகளுக்கு முன்பே திப்பு சுல்தான் பயன்படுத்திய ஏவுகணைகளுக்கான தொழில் நுட்ப அடிப்படைக் கோட்பாடுகளை விவரிக்கும் ஆதாரங்களுக்கான அனைத்து ஆவணங்களையும் தயார் செய்யும் பணியில் DRDO முழு மூச்சுடன் இறங்கும்’ என்றும் தெரிவித்துள்ளார்.


அத்துடன், ‘ஏவுகணை வரலாற்றில் ஒரு மைல் கல்லான திப்பு சுல்தானின் படைகள் பயன்படுத்திய 2 கி.மீ தூரம் வரை சென்று இலக்கைத் துல்லியமாகத் தாக்கக்கூடிய ஏவுகணைகளுக்கான பகுப்பாராய்வு ஆவணங்கள் தற்போது இலண்டனில் உள்ள ஆர்ட்டிலரி பொருட்காட்சி மையத்தில் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளன’ என்று கூறியிருந்தார்.





சஞ்சய்கான் ’the sword of tippu’ என்ற தொலைக்காட்சித் தொடரை படமாக்கிய ப்ரீமியர் சினிமா ஸ்டுடியோவுக்கு தீவைக்கப்பட்டதால் 55 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். ஏராளமான பொருள்சேதம் ஏற்பட்டது. சஞ்சய்கான் பலத்தகாயங்களுடன் பலமாத சிகிட்சைக்குப் பின்னர் உயிர் தப்பினார். இந்தியாவை ஆட்சி செய்த காங்கிரஸ் அரசு திப்பு சுல்தானின் உண்மையான வீரமிக்க வரலாற்றை ஒளிபரப்ப ஒரு நபர் தணிககை குழுவை நியமித்தது. அந்த நபர் பாசிச சிந்தனைக் கொண்ட மல்கானியாவார். அவரோ தீரன் திப்புவின் தியாகவரலாற்றை ’கற்பனைக்கதை’ என்று குறிப்பிடவேண்டும் என்று கூறினார்.

புராணங்களும், நம்ப முடியாத சம்பவங்களெல்லாம் உண்மை நிகழ்வுகளைப்போல் தொலைக்காட்சியில் ஒளிபரப்ப படும்பொழுது மாபெரும் வீரனின் வரலாற்றை ‘கற்பனை கதை’ எனக்குறிப்பிட்டதன் மூலம் இந்தியாவை நெடுங்காலம் ஆளும் காங்கிரஸ் அரசு திப்புசுல்தானுக்கு அவமரியாதையை செய்தது.


சமீபத்தில் 200 ஆண்டுகளுக்கு முன்னால் திப்புவிடமிருந்து ஆங்கிலேய ஏகாதிபத்தியவாதிகள் அபகரித்த பொருட்களில் ஒன்றான வாள் 3.5 கோடிக்கு லண்டனில் ஏலமிடப்பட்ட பொழுது அதனை வாங்கி நினைவுச்சின்னமாக பாதுகாக்கக்கூட நமது இந்திய அரசு தயாராக இல்லை.


அந்நிய கரன்சிக்கும், சொகுசு வாழ்க்கைக்கும் ஆசைப்பட்டு பிறந்த தேசத்தின் ரகசியங்களை அந்நியனுக்கு தாரைவார்க்கும் கும்பல்களுக்கு திப்புவின் தியாக வாழ்க்கையில் பாடம் பெறவேண்டியுள்ளது. ஏகாதிபத்தியத்திற்கும், பயங்கரவாத தேசத்திற்கும் கொடை பிடித்து இந்திய தேசத்தின் இறையாண்மையை காவுக்கொடுக்கும் ஆட்சியாளர்களுக்கு திப்புவின் தியாகத்தில் படிப்பினைகள் உள்ளன.


அநீதிக்கெதிராகவும், அக்கிரமத்திற்கெதிராகவும், பாரபட்ச நீதிக்கெதிராகவும், அரச பயங்கரவாதத்திற்கெதிராகவும், மனித உரிமை மீறல்களுக்கெதிராகவும், வறுமை, லஞ்சம், ஊழல், நிர்வாக சீர்கேடுகள், தேசத்தை அழிக்க காத்திருக்கும் பாசிசம், உலகமயமாக்கல் போன்ற கொள்கைகளுக்கும் எதிராகவும் போராடுபவர்களுக்கு திப்புவின் தியாக வாழ்க்கை உத்வேகமாகவும், உந்துசக்தியாகவும் மாற வேண்டும் . அதுவே இந்நாளில் அந்த மாபெரும் தியாகிக்கு நாம் செய்யும் மரியாதையாகும்.


கிளிங்கர்கள்


மலேசிய திருநாட்டின் பினாங்கு தீவில் வாழும் தமிழர்கள் முன்பு கிளிங்கர்கள் எனப் பிறமொழி பேசுபவர்களால்அழைக்கப்பட்டனர். கிளிங்கர்கள் என்ற பினாங்கு வாழ் தமிழர்களின் பட்டப் பெயரின் பின்னால் இந்திய
 சுதந்திரப் போராட்ட வீரர்களின் தியாக வரலாறு ஒன்று ழிந்திருக்கின்றது.

தமிழகத்தில் சிவகங்கைச் சீமையை ஆண்ட மருது சகோதரர்கள் ஆங்கிலேயரை எதிர்த்துப் போரிட்டு இறுதியில் தூக்கிலிடப்பட்டது வரலாறு..!மருது சகோதரர்களைத் தூக்கிலிட்டதோடு திருப்தியடையாத ஆங்கில அரசு,
 அன்னாரது குடும்பத்தைச் சார்ந்த இளைஞர்கள் மற்றும் தளபதிகள், வீரர்கள் என 72 பேரைப் பினாங்கு தீவிற்கு நாடு கடத்தியது.

அவ்வாறு 
நாடு கடத்தப்பட்டவர்களுக்கு விலங்கிட்டு, கைகால்களை இரும்புச் சங்கிலியால் பிணைத்து நடமாட விட்டிருந்தனர். அவர்கள் நடக்கும் போது சங்கிலிச் சத்தம் கிளிங் கிளிங் எனக் கேட்டதால் அக்கைதிகள் கிளிங்கர்கள் என அழைக்கப்பட்டனர்.நாளடைவில் அப்பெயர் அங்கு குடியேரிய தமிழர்களை அழைப்பதற்குரிய பெயராக மாறியது.

அக்கைதிகளில் இருவருக்கு மட்டும் நடக்கக் கூட முடியாத அளவிற்கு சங்கிலிப் பிணைப்போடு பெரிய இரும்புக்
 குண்டுகளைக் கைச்சங்கிலியில் தொங்க விட்டிருந்தனர். ஏனென்றால் அவர்கள் இருவரும் அந்தக் கைதிகள் கூட்டத்தில் தலைமை சான்றவர்களாவர். அவர்களில் ஒருவர் இளைய மருதுவின் மகன் முத்துவடுகு என்ற துரைச்சாமி. மற்றவர் முக்கிய படைத்தளபதிகளில் உருவாசேக் உசேன் எனற இஸ்லாமிய இளைஞர்*.

யார் இந்த சேக்உசேன்?


(
* Miltry consultations, Vol.307(19.1.1803), P.1249 - இல் பினாங்குக்கு நாடு கடத்தப்பட்ட 72 பேர் பெயர் பட்டியலில் சேக் உசேன் பெயர் இடம் பெற்றுள்ளது. பார்வை:மேற்படி பக்கம்.45.)

இந்திய சுதந்திரப்போராட்ட வரலாற்றின் ஆரம்ப கட்ட புரட்சிகளுள் தென்னிந்தியக் கிளர்ச்சி 
[1800-1801முக்கியத்துவம் பெற்றதாகும். ஆங்கிலேயர்க்கு எதிராகத் தென்னிந்திய குறு நில மன்னர்களும் பாளையக்காரர்களும் ஒருங்கிணைந்த கூட்டு நடவடிக்கையாக இக்கிளர்ச்சி அமைந்தது. மலபார் கேரளவர்மா, மருது பாண்டியர், திப்புசுல்தானின் குதிரைப்படைத் தலைவராகப் பணியாற்றிய கனீஷாகான் (Khan-i-Jah-Khan)மராத்தியில் சிமோகா (Shimoga) பகுதியை ஆண்ட தூண்டாஜி வோக் (Dhondaji Waug), விருப்பாச்சி பாளையக்காரர் கோபால நாயக்கர், திண்டுககல் பாளையக்காரர் போன்றோர் ஒரு கூட்டமைப்பை உருவாக்கினர்.

இக்கூட்டமைப்பைச் சார்ந்த வடக்கு-தெற்கு ஆட்சியாளர்களை இணைக்கும் வாயிலாக கனீஷாகான் செயல்பட்டார். இந்தப் புரட்சிப்படை யுத்தத்திற்குத் தலைமை தாங்கி, காவிரிக்கு வடக்கிலுள்ள படைகளை
 நடத்தும் பொறுப்பு கனீஷ்கானிடம் ஒப்படைக்கப் பட்டது. இக்கூட்டமைப்பின் முக்கிய திட்டமே கோவையிலுள்ள பிரிட்டீஷாரின் ராணுவக் கோட்டையைத் தகர்ப்பதாகும். ஆந்தப் பொறுப்பையும், கோவை-சேலம் பகுதிகளைக் கைப்பற்றும் பொறுப்பையும் கனீஷ்கான் ஏற்றிருந்தார். 4000 குதிரைப்படை வீரர்களுடன் இத்தாக்குதலில் கனீஷ்கான் ஈடுபட்டார்.* ரகசியமாகத் தீட்டப்பட்ட இத்திட்டம் பிரிட்டீஷாருக்குத் தெரிந்துவிட, இம்முயற்சி தோல்வியில் முடிவடைகிறது. இக்கிளர்ச்சியில் கைதான 42 பேருக்கு சேலம் கலெக்டர் மாக்லியோட் (Macleod) உத்தரவுப்படி சேலம் ராணுவ கோர்ட்டில் தூக்குத்தணடனை என தீர்ப்பு வழங்கப்பட்டு அனைவரும் தூக்கிலிடப்பட்டனர்**
(
* K.Rajayyan, South Indian Rebellion, The First War of Independence. 1800-1803,, PP.110-111.) (**libd.,P.125)

அவ்வாறு தூக்கிலிடப்பட்டவர்களில் ஒரு சிலரைத் தவிர அனைவரும் முஸ்லிம் வீரர்களாவர்.
* இம்மண்ணின் விடுதலைக்காக ஜமா’அத்தாக (கூட்டாக) தூக்கு கயிற்றை முத்தமிட்ட தியாக வரலாற்றினை இஸ்லாமியர் படைத்துள்ளனர்.

இந்த தென்னிந்தியக் கிளர்ச்சியில் மருதுபாண்டியர் படையைத்தலைமை தலைமை தாங்கி நடத்திச் சென்றவருள்
 ஒருவர்தான் பினாங்குக்கு நாடு கடத்தப்பட்ட சேக் உசேன். இச்சப்பட்டி அமில்தார் சேக் உசேன் என்று அழைக்கப்பட்ட இவர், சுதந்திரக் கிளர்ச்சிப் படையின் முதல் தாக்குதலுக்குத் தலைமை தாங்கினார். இவரைத் திண்டுக்கல் புரட்சிக் கூட்டத்தின் எழுச்சி வீரர், சிறந்த போராளி என்று வரலாற்று அறிஞர் கே.ராஜய்யன் குறிப்பிடுகிறார்.**

இந்த சேக்உசேன் தான் மருதுபாண்டியர் வீழ்ச்சியின் போது ஆங்கிலேயரால் கைது செய்யப்பட்டு பினாங்கு
 தீவில் சங்கிலியால் பிணைக்கப்பட்டு நடமாடக் கூட முடியாமல் பட்டினியால் வாடி அங்கேயே காலமானவர். இம்மண்ணின் விடுதலைக்கான ஆரம்பக்கட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்துச் சென்று தியாக வரலாறு படைத்தவர்களாக கனீஷாகான், சேக்உசேன் போன்ற இஸ்லாமிய தீரர்கள் விளங்கியுள்ளனர்.
(
* செ.திவான், இந்திய விடுதலைப்போரில் தமிழக முஸ்லிம்கள். பக்கம் 41.)
(** K.Rajayyan, South Indian Rebellion, The First War of Independence, 1800-1803..,Page.274.)






பகதுர்ஷா..!

ஒரு பிடி மண்


பிரிட்டீஷாரின் அதிகாரம் இந்தியா முழுவதும் பரவியிருந்த காலகட்டம். தங்களது ஆட்சி விரிவாக்கத்திற்காக
 ராஜாக்கள், நவாப்கள் மட்டுமல்லாமல் டில்லி முகலாய மன்னர்களின் ஆட்சியிலும் தலையிட்டனர். மன்னர்களுக்கு பிறந்த நாள் பரிசளிக்கும் வழக்கத்தை நிறுத்தினர். இந்தச் சூழலில் தான் 1837 -இல்-பகதுர்ஷா ஜஃபர் டில்லி அரியணையில் ஏறினார். மக்கள் மத்தியில் பகதுர்ஷாவுக்கு இருந்த செல்வாக்கை முறியடிக்க பிரிட்டீஷார் செய்த முயற்சிகள் பல.





1847 - இல் ஆங்கில அதிகாரி கெய்த் தன் மனைவிக்கு எழுதிய கடிதத்தில்,
 நாளை ஈத் பெருநாள். முஸ்லிம்கள் மாடுகளைக் குர்பான் (பலி) கொடுப்பர். இந்துக்களின் புனித வழிபாட்டுக்குரியதான மாடுகளை முஸ்லிம்கள் குர்பான் கொடுப்பதா? என்று இந்துக்கள் கொதித்தெழும் சூழலை உருவாக்கியுள்ளேன். எனவே நான் நாளை டில்லியில் இந்து - முஸ்லிம் கலவரத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன். நான் எதிர் பார்க்கும் நல்ல செய்தியும் அதுவாகத்தான் இருக்கும்.-என்று பகதுர்ஷா ஆட்சியை சீர்குலைக்க இந்து - முஸ்லிம் கலவரத்தைத் தூண்டிவிடும் தன் எண்ணத்தை வடித்துள்ளான்.

இந்த நாசப்பின்னணியை அறிந்த பகதுர்ஷா ஈத் பெருநாளுக்கு முந்திய நாள் இரவு, "ஆடுகளை மட்டுமே
 குர்பான் கொடுக்க வேண்டும் மாடுகளை வெட்டக்கூடாது" - என்று பிரகடனப் படுத்துகிறார். நடக்க இருந்த கெய்த்தின் சூழ்ச்சி கானல் நீரானது. ஏமாற்றம் அடைந்த கெய்த் தனது மனைவிக்கு எழுதிய அடுத்த கடிதத்தில், "என் எண்ணம் ஈடேறவில்லை. வருத்தமாக இருக்கிறது. பகதுர்ஷா முந்திக் கொண்டார்" - என்று எழுதியுள்ளான். இப்படி பிரிட்டீஷ் அரசாங்கம் பகதுர்ஷாவுக்கு கொடுத்த இன்னல்கள் ஏராளம்.

பிரிட்டீஷாரை இந்தியாவை விட்டு விரட்ட தீவிரமாக சிந்தித்து வந்த பகதுர்ஷாவின் தலைமையில் மிகப்பெரிய
 திட்டம் உருவானது. 
இந்தியாவின் புதல்வர்களே! உறுதியுடன் முடிவு செய்து கொண்டோமேயானால், எதிரியை நொடியில் அழித்துவிட
 நம்மால் முடியும்.அவனை முடித்து உயிரினும் அருமையான நமது நாட்டையும், சமயங்களையும், அவற்றை எதிர்பட்டுள்ள அபாயங்களிலிருந்து காப்போம்.- என்ற அரசு பிரகடனத்தைத் துணிச்சலுடன் வெளியிட்டார்.*

தேசத்தின சுதந்திர விரும்பிகளான ராஜாக்கள், நவாப்கள், சிறுபரப்புகளை ஆளும் தலைவர்கள் அனைவரையும்
 ஒருங்கிணைத்து, பிரிட்டீஷாருக்க எதிரான ஒன்றுபட்ட எதிர்ப்புக்கு - போர் தொடுக்க திட்டம் வகுக்கப்பட்டது. அத்திட்டத்தைச் செயல்படுத்த 1857 மே மாதம் 31-ஆம் தேதியையும் தேர்ந்தெடுத்தனர்.

... ஹிந்துக்களும் முஸ்லிம்களும் தோளோடு தோள் நின்று தேசத்தின் சுதந்திரத்திற்காகப் போர் புரிய வேண்டும்
 என்றும், இந்தியா சுதந்திரம் பெற்றதும் இந்திய மன்னர்களின் தலைமையில் ஐக்கிய அரசாங்கத்தை அமைக்க வேண்டுமென்றும் முடிவெடுத்தனர்.**
(
* காஸிம் ரிஸ்வி, இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் பகதுர்ஷா ஜஃபர் பக்கம், 7., ** வீரசாவர்க்கர்,எரிமலை. பக்கம்,58.)

இம்முயற்சியில் ஒன்றுபட்ட ஜான்ஸிராணி லடசுமிபாய், நானா சாஹிப், தாந்தியா தோப், ஒளத் பேரரசி பேகம்
 ஹஜரத் மஹல், பீஹாரின் சிங்கம் குவர்சிங், மௌல்வி அஹமதுல்லா ஷாஹ், ஹரியானா - ராஜஸ்தான் - மகாராஷ்டிரா மன்னர்கள் மே 31-ஆம் தேதிக்காக - ஒன்று பட்டு ஆங்கிலேயரை ஒழித்துக்கட்டும் அந்நாளுக்காக காத்திருந்தனர்.

...ஹிந்துஸ்தான் சரித்திரத்திலேயே மிகப்பிரசித்திப் பெற்ற அந்த நாட்களை (1857 மே மாதம்) நாம் ஒரு
 காலத்திலும் மறக்க முடியாது. இந்துக்களும் முஸ்லிம்களும் விரோதிகளல்ல என்பதும், சகோதரர்களே என்பதும் அப்போதுதான் உலகமறிய பிரகடனம் செய்யப்பட்டது.- வீரசாவர்க்கர், எரிமலை, பக்கம், 99.

ஆனால் மே 10-ஆம் தேதியே சிப்பாய் கலகம் வெடித்துவிட்டது. இதனால் பகதுர்ஷா தலைமையில் தீட்டிய
 திட்டம் செயல்படாமல் போனாலும், இத்திட்டத்தில் இணைந்தவர்கள் தனியாகவும் கூட்டாகவும் சிப்பாய் கலக காலகட்டத்தில் பிரிட்டீஷாருக்கு எதிரான போர் நடவடிக்கைகளில் முழுமையாக இறங்கினர்.

தங்களுக்குள் இருந்த வேறுபாடுகளை எல்லாம் தூக்கி எறிந்து விட்டு பகதுர்ஷா தலைமையில்
 சுதந்திர இந்தியாயை உருவாக்க வடஇந்திய மக்கள் அன்று சிந்திய ரத்தம் கொஞ்சமல்ல.

மாமன்னர் பகதுர்ஷா குடும்பத்துடன் கைது செய்யப்பட்டு ஜீனத் மஹல் மாளிகையில் சிறை வைக்கப்பட்டார்.
 

ஒரு நாள் காலை... 


காலை உணவு பெரிய தட்டுகளில் துணியால் மூடப்பட்டு எடுத்து வரப்படுகிறது.


உடன்
 வந்த மேஜர் ஹட்ஸன் முகத்திலோ விஷமச் சிரிப்பு.

ஹட்ஸன்: பகதுர்ஷா...! நீண்ட காலமாக நிறுத்தப்பட்டிருந்த கம்பெனியின் பரிசுகள் இவை!


என்றவனாக,
 உணவுத் தட்டுகளை மூடியிருந்த துணிகளை அகற்றுகிறான். அங்கே... தட்டில்... உணவுக்கு பதில்.... பகதுர்ஷாவின் மகன்கள் மிர்ஜா மொஹல், கிலுருசுல்தான் இருவரின் தலைகள் இருந்தன..! இருவரையும் சுட்டுக்கொன்று, தலைகளை வெட்டித்தட்டுகளில் ஏந்தி வந்ததோடு... இது பிரிட்டீஷ் கம்பென்யாரின் பரிசுகள் என்று கிண்டலுடன் நிற்கிறான் ஹட்ஸன்.

திடநெஞ்சுடன் அவனைப் பார்த்து...


பகதுர்ஷா: தைமூர் வம்சத் தோன்றல்கள் தமது முன்னோர்களுக்கு இவ்வாறு தான் தங்கள் புனிதத்துவத்தை
 நிரூபிப்பார்கள்!

கம்பீரமான இந்த வார்த்தைகளைக் கேட்டு அதிர்ந்த ஹட்ஸன், பகதுர்ஷா கண்களில் கண்ணீர்
 வராததைக் கண்டு ...

ஹட்ஸன்: உமது கண்களில் என்ன... நீர் வற்றி விட்டதா?


பகதுர்ஷா: ஹட்ஸன் ... அரசர்கள் அழுவதில்லை!


என்று பெருமிதத்துடன் ஷா கூற...

தலை குனிந்த வாறு
 வெளியேறுகிறான் ஹட்ஸன்.*


அன்புக் கரங்களால் அள்ளி அணைத்து உச்சி முகர்ந்த மகன்களின் முகங்கள்... உடம்பிலிருந்து துண்டாய்... தனியாய்... காலை உணவாக...! பெற்ற
 மனம் எப்படி பதறி இருக்கும்..? அதனைத் தேசத்திற்கான அர்ப்பணிப்பாய் நினைத்ததால் பேரரசர் பகதுர்ஷா ஜாஃபர் துளியும் கலங்கவில்லை..!

* Kasim Rizwi, The Great Bahadur Sha Jaffer, P.10.


சிப்பாய் கலகவாதிகளான புரட்சியாளர்களுக்கு உதவி செய்தார். 47 ஆங்கிலேயர்களைக் கொலை செய்தார்
 எனப் பல குற்றங்களைப் பகதுர்ஷாமேல் சுமத்தி, அவரை பர்மாவிலுள்ள ரங்கூனுக்கு பிரிட்டீஷ் அரசு நாடு கடத்தியது. மன்னராக இருந்தவர் என்கிற காரணத்தினால் மாதம் 600 ரூபாய் உபகாரச் சம்பளம் வழங்க பிரிட்டீஷ் அரசு முன்வந்தது. "என் மண்ணின் செல்வத்தை எடுத்து எனக்கே கொடுப்பதற்கு நீயார்." - என்று அதனை ஏற்க மறுத்துவிட்டார்.

கேப்டன் ஹாட்ஸன், பகதுர்ஷாவின் மூன்று இளவல்களைச் சுட்டுக் கொன்றான். அந்த உடல்கள் போலிஸ் ஸ்டேசனுக்கு முன் கழுகுகளுக்கு இரையாகும்படி எடுத்தெரியப்பட்டன. அவை வெகுநேரம் வரை கழுகுகளுக்கு ஆகாரமான பின்னர் தான் ஆற்றில் இழுத்தெரியப்பட்டன.- வீரசாவர்க்கர், எரிமலை, பக்கம், 296-297.


தாய் மண்ணில் இனி சமாதியாகும் பாக்கியம் தனக்கு கிடைக்காது என வருந்தியவராக, இறந்த பின் தன்னை
 அடக்கம் செய்யும் சமாதியில் தூவ ஒரு பிடி இந்திய மண்ணை கையில் அள்ளியவராக ரங்கூனுக்கு கப்பல் ஏறினார். 1862 நவம்பர் 7-இல் தனது 92-ஆம் வயதில் ரங்கூனில் காலமானார்.


நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் தேச விடுதலைக்காக ஜப்பானியர் உதவி வேண்டி, பர்மாவைத் தளமாகக்
 கொண்டு படை திரட்டிக் கொண்டிருந்த காலத்தில் ரங்கூன் யார்க் சாலையில் உள்ள பகதுர்ஷாவின் சமாதியை பல லட்சரூபாய் செலவில் புதுப்பித்தார். பகதுர்ஷா சமாதியில் இருந்து ஒருபிடி மண்ணை எடுத்து தமக்கு மக்கள் அன்புடன் அளித்த தங்க வாளின் பிடியில் அடைத்து,*அவ்வாளினை ஓங்கிப் பிடித்தவராக, "நம் வீரர்களின் நெஞ்சில் நம்பிக்கையும், இம்மஹானிடம் இருந்தது போல் தேசபக்தியும் அணுவளவாவது இருக்கும் வரையில், இந்துஸ்தான் வாள் மிகக் கூர்மையாக இருப்பதுடன், ஒரு நாள் லண்டனின் வாசற்படியையும் தட்டும்..!" - என்று சபதமேற்றார். இந்திய சுதந்திர வரலாற்றில் கம்பீரமிக்கப் போராளியான நேதாஜிக்கே ... ஒருதூண்டுதலை ஏற்படுத்திய பெருமகன் மாமன்னர் பகதுர்ஷா ஜஃபர்.
(
* அமீர்ஹம்ஷா, நேதாஜியின் மாலைக்கு ரூபாய் 5 லட்சம், தினமணி சுதந்திர பொன்விழா மலர், பக்கம். 69.)
 

 மண்ணிற்காக மார்க்க அறிஞர்கள்

கதராடை அணியாத மணமகனின் திருமணத்தில் உலமாக்கள் (மார்க்க அறிஞர்கள்) கலந்து கொள்ள மாட்டோம்.-மௌலானாஅப்துல் ஹமீது பாக்கவி.


ஒரு மனிதன் ஒரு பட்டாளம்

மீரட் ராணுவ முகாமுக்கு அருகில் வசித்து வந்த ஒரு பக்கிரியை, சர்க்கார் அவ்விடத்தை விட்டுச்சென்று விடும்படி உத்தரவிட்டது. சர்க்காரின் உத்தரவு கிடைத்ததும் அப்பக்கிரி ஒன்றும் அறியாத ஒரு சாதுவைப் போல யாதொரு பதிலும் கூறாமல் தன் யானை மீதேறி பக்கத்திலுள்ள கிராமத்துக்குச் சென்று சிப்பாய்களின் வீடுகளில் சொந்தமாக வசித்துக் கொண்டு, தமது அலுவல்களைக் கவனிக்க முற்பட்டார். அவர் தான் அதிதீவிர தேசபக்தரான மௌல்வி அஹமதுஷா என்பவர். அவரது புனிதமான பெயரானது ஹிந்துஸ்தானத்துக்கே ஒரு ஜோதியைக் கொடுத்திருக்கிறது. - என்று வீரசாவர்க்கரால் புகழப்பட்ட ஒப்பற்ற விடுதலைப் போராட்டதியாகிதான் மௌல்வி செய்யது அஹ்மதுல்லாஹ் ஷாஹ்.*

சென்னையில் பிறந்து வளர்ந்து உத்திரப் பிரதேசத்தில் வாழந்தவர்.புரட்சி விதையை நாடெங்கும் விதைப்பதற்காக வடஇந்தியாவின் பல பகுதிகளில் யாத்திரை செய்தவர். லக்னோவில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டிருந்த பொதுக்கூட்டத்தில் அவர் பகிரங்கமாக சுதந்திரப் பிரச்சாரம் செய்தார். ''ஆங்கிலேயர்களைக் கொன்று குவித்து தேசத்திலிருந்து அவர்களை ஒழித்தாலன்றி நாம் நம் தாய் நாட்டையோ மதங்களையோ பாதுகாக்க முடியாது'' - என்றார். ஆங்கில அரசு விதித்திருந்த 
பல தடைகளை மீறி இவ்விதம் பிரச்சாரம் செய்ததற்காக அவர்மீது ராஜத்துரோக குற்றம் சாட்டி, ஆங்கில அரசு அவருக்குத் தூக்குத் தண்டனை விதித்தது. (* வீரசாவர்க்கர்,எரிமலை,பக்கம்.65.)

கைது செய்யப்பட்டு பைசாபாத் சிறையில் அடைக்கப்பட்டார். 1857 - இல் நடந்த சிப்பாய் கிளர்ச்சியின் போது சிறைச்சாலையை உடைத்து சிப்பாய் போராளிகள் இவரை விடுவித்தனர். சிறந்த ராணுவ யுத்த நிபுணரான அஹமதுல்லா ஷாஹ் தனக்கென ஒரு சிறுபடையைத் திரட்டி, லக்னொவின் ஒரு பகுதியைக் கைப்பற்றி ஒரு குட்டி அரசையே நடத்தினார். சுதந்திர யுத்தத்திற்கான வலைகளை வெகு திறமையுடன் வீசி வந்தார். அந்த வலைகள் லக்னோவிலும் ஆக்ராவிலும் உள்ள மூலை முடக்குகள் எல்லாம் பரவிக்கிடந்தது. தன் தனித்துவங்களின் காரணமாக மக்கள் மத்தியில் மிகுந்த செல்வாக்கினைப் பெற்றிருந்தார்.

ஆங்கில அதிகாரிகளின் கண்ணெதிரிலேயே ஒரு மகத்தான இயக்கத்தை ரகசியமாக உருவாக்கிய நானா சாஹிப், மௌல்வி அஹமதுல்லா ஷாஹ், அலி நத்ஹிகான் போன்றத்தலைவர்களின் இணையற்ற திறமையை எவ்வளவு புகழ்ந்தாலும் தகும். - வீரசாவர்க்கர், எரிமலை, பக்கம்.77.

ஆலம்பாக்கில் உள்ள பிரிட்டீஷ் ராணுவத் துருப்புகளுக்கு கான்பூரில் இருந்து ஆயுதங்கள் கொண்டு வருவதை அஹமதுல்லா ஷாஹ் அறிகிறார். ஆந்த ஆயுதங்களைக் கைப்பற்றுவதற்காக 1858 ஜனவரி 15 - இல் கான்பூர் நோக்கிப் படை நடத்தினார். மேஜர் அவுட்ராம் படைக்கும் மௌல்வி படைக்கும் மிகப்பெரிய மோதல் நடைபெற்றது. அந்த யுத்தத்தில் கையில் தோட்டா பாய்ந்து காயமடைந்தார். ஆனால் வீரர்கள் அவரை ஆங்கிலேயர் கையில் சிக்கவிடாமல் ஒரு டோலியில் வைத்து லக்னோ கொண்டு வந்துவிட்டனர். தனக்கு ஏற்பட்ட காயம் பூரணமாக குணமடையுமுன் பிப்ருவரி 15 - இல் மீண்டும் போர் முனைக்கு வந்துவிட்டார்.

கான்பூரில் இருந்து அவுட்ராமின் படை தங்கியிருந்த பகுதிக்கு ஆங்கிலத் தளபதி காலின் வருவதாகத் தகவல் கிடைத்தது. காலின் வந்து சேருமுன் அவுட்ராமை ஒழித்துவிட வேண்டுமென்ற திட்டத்துடன் தன் தாக்குதலைத் தொடர்ந்தார். ஆனால் மௌல்வியின் முயற்சி தோல்வியடைந்தது. என்றாலும் மௌல்வியின் இத்தாக்குதல்கள் ஆங்கிலேயருக்குப் பெரும் அச்சத்தையும் பல சிக்கல்களையும் ஏற்படுத்தின.

அஹமதுல்லா ஷாஹ்வின் இணையற்ற தைரியத்தை ஆங்கில வரலாற்று அறிஞர் ஹோம்ஸ் குறிப்பிடும் போது:புரட்சிக்காரர்களின்... தலைவரான பைசாபாத் மௌல்வி அஹமதுஷா மகத்தான சார்த்தியமும் தைரியமும் உத்வேகமும் வாய்க்கப்பெற்றவர். ஓர்உயர்ந்த இலட்சியத்திற்காகப் போராடும் ஆற்றல் படைத்தவர். ஒரு பெரும் ராணுவத்தையும் நடத்தும் சக்தி பெற்றவர். என்று புகழ்ந்துள்ளார்.* (* வீரசாவர்க்கர், எரிமலை., பக்கம்.354.)

அதன்பின்னர் லக்னோவின் இருதயம் போன்ற ஷாஹத்கன்ஞைக் கைப்பற்றி, கோட்டை போன்ற கட்டிடத்தில் இருந்து ஆங்கிலேயரது பீரங்கிப் படையைத் தாக்கினார். இவரை அப்பகுதியில் இருந்து விரட்ட ஆங்கில அரசு 21 படைப்பிரிவுகளை அனுப்பி வைத்தது. இதனால் லக்னோவில் இருந்து 29 மைல் தூரத்திலுள்ள பாரியில் முகாமிட்டார்.

அயோத்தி பகுதியில் சிற்றரசு நடத்திய பான்ராஜா ஜகன்னாத சிங் தனக்கு உதவுவார் என்ற எண்ணத்துடன் அவருக்கு கடிதம் அனுப்புகிறார். ஜகன்னாத சிங்கிடம் இருந்து அஹமதுல்லா ஷாவிற்கு அழைப்பு வருகிறது. அவர் அழைப்பின் பிண்ணனியில் பின்னப்பட்டிருந்த சூழ்ச்சியை அறியாத அஹமதுல்லா ஷாஹ். ஆரவாரம் ஏதுமின்றி யானை மீதமர்ந்து பாவன்ராஜாவின் கடி நகருக்குள் நுழைகிறார். அவர் கோட்டைக்குள் நுழைந்ததும் கோட்டைக் கதவுகள் மூடப்பட்டன. கோடடைச்சுவரின் மீது காவலர்கள் சூழ ராஜா ஜகன்னாத சிங் நின்று கொண்டிருந்தார். சதிவலைக்குள் அகப்பட்டு விட்டோம் என்பதை உணர்ந்த மௌல்வி, தப்பிக்க முயற்சிக்கு முன் ராஜாவின் தம்பி பல்தேவ் சிங் துப்பாக்கியால் சுட... தோட்டாக்களை மார்பில் ஏந்தி மண்ணில் சாய்கிறார்அஹமதுல்லா ஷாஹ்.

ஆங்கிலேயருக்கு தங்கள் விசுவாசத்தைக் காட்டுவதற்காகவும் வெகுமதிகளைப் பெறுவதற்காகவும் ராஜாவும் அவர் தம்பியும் வீரமரணமடைந்த மௌல்வியின் தலையை வெட்டி எடுத்துக் கொண்டு, 13 மைல் தூரத்திலுள்ள தாணாவில் முகாமிட்டிருந்த ஆங்கிலேயரிடம் ஓடினர். 


மௌல்வியின் தலையைக் கைப்பற்றிய ஆங்கிலேயர், அதனை ஒருகம்பில் செருகி போலிஸ் கொத்தவால் சாவடியில் எல்லோரும் பார்க்கும் படி ஊன்றி வைத்துத் தங்கள் ஆத்திரங்களுக்கு ஆறுதல் தேடிக் கொண்டனர். அன்னாரது உடலைத துண்டு துண்டாக வெட்டி தீயிலிட்டுப் பொசுக்கினர். இந்த மண்ணிற்காக உயிர் நீத்த அப்பெருமகனின் 
உடல்கூட முறைப்படி நல்லடக்கம் செய்யும் வாய்ப்பைப் பெறமுடியாமல் போயிற்று. அவரது தலை மட்டும் அஹ்மத்பூர் ஹான் மஹல்லாவில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

ஒரு கையில் வாளையும் மறுகையில் பேனாவையும் ஏந்தி அவ்வீரத்தியாகி (மௌல்வி அகமதுஷா) புரிந்த தொண்டிற்கு இணையே இல்லை ! - வீரசாவர்க்கர், எரிமலை, பக்கம்.354.

ஆங்கிலேயருக்கு விசுவாசமாக நடந்து கொண்டதற்காக ராஜா ஜகன்னாத சிங்கிற்கு ஆங்கில அரசு 50 ஆயிரம் ரூபாய் வெகுமதி அளித்துப் பாராட்டியது.

மௌல்வி செய்யது அஹ்மதுல்லா ஷாஹ்வின் தீரத்தைப் பற்றி ஜெனரல் தாமஸ் என்ற ஆங்கில அதிகாரி : இந்திய சுதந்திரத்திற்காகப் புரட்சி செய்தவருள் இவரைவிட மேலான வீரர் எவருமில்லை. ஸர், ஆலன் கேம்பல் என்ற மாபெரும் ஆங்கிள தளபதி, யுத்தக் களத்தில் வெற்றி பெற முடியாமல் போனதற்கு இவரே காரணம். தன் தாய்நாடு விடுதலை பெற வேண்டும் என்று போராடியதில் இவர் ஒரு நிகரற்ற தீரர்;. - என்று குறிப்பிட்டுள்ளது உண்மை ... வெறும் புகழ்ச்சி இல்லை!*
(* ஏ.என்.முகம்மது யூசுப், இந்தி விடுதலைப் போராட்ட வீரர்கள், பக்கம்,60-6
1.)


 
 



ஃபத்வா

தென்னகத்தில் இயங்கி வந்த அரபிக் கல்லூரிகளும் மதரசாக்களும் அன்று தேச விடுதலைப் போராட்டக் கேந்திரங்களாகத் திகழ்ந்தன. இந்நிறுவனங்களில் பணியாற்றிய உலமாக்கள் ஆங்கில அரசின் கடுமையான நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்பட்டனர். 1831 மே 6 - இல் நடைபெற்ற பாலகோட் யுத்தத்தில் நூற்றுக்கணக்கான உலமாக்கள் உயிரிழந்தனர்.
தேச விடுதலைப் போராட்டம் மார்க்க அமல் (வழிபாடு) தொடர்பானது – என்ற தேசாபிமான முழக்கங்களுடன் ஆங்கிலேயருக்கு எதிராக எழுதியும் பேசியும் தங்கள் சுதந்திரப் பங்களிப்பைத் தந்த தேவ்பந்த் உலமாக்களின் ங்கு மகத்தானது. ஆங்கிலேயர் மீதுள்ள வெறுப்பினை அவர்களது மொழியின் மீதும் காட்டினர். ஆங்கிலம் படிப்பது ஹராம் - என்று தேவ்பந்த் உலமாக்கள் பத்வா(மார்க்கத்தீர்ப்பு) கொடுத்தனர்.

அந்நியப் பொருட்களைப் பரிஷ்கரிக்க வேண்டும் சுதேசிப் பொருட்களையே வழங்கவேண்டும் என்ற காந்திஜியின் சுதேசி இயக்கம் நாடெங்கும் ஆங்கிலேயருக்கு எதிரான ஒரு கலாச்சார இயக்கமாக உருவாகியது. இதில் இஸ்லாமியர்களின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கதாகும்.

முஸ்லிம்கள் பிரிட்டீஷாரின் ராணுவத்தில் பணியாற்றுவது ஹராம் (Haram ; Unlawful). 
-1921 ஜுலையில் கராட்சியில் நடைபெற்ற கிலாபத் மாநாட்டின் தலைமை உரையில் மௌலானா முகம்மது அலி.*

சுதந்திரப் போராட்ட காலகட்டத்தில் திண்டுக்கல்லை மையப்படுத்தி உலமாக்கள் பலர் இந்த தேசிய இயக்கத்தை ஆங்கிலேயருக்கு எதிராக உயர்த்திப் பிடித்துள்ளனர். மௌலானா அப்துல் ஹமீது பாக்கவி அவர்கள்,** கதராடை அணியாத மணமகனின் திருமணத்தில் உலமாக்கள் கலந்து கொள்ளக்கூடாது – என்ற பகிரங்க அறிவிப்பை விடுத்தார். அதற்கு அன்றைய உலமாக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு இருந்தது.

1920 - இல் ஈரோட்டில் நடைபெற்ற உலமாக்களின் மாநாட்டில் முழுக்க முழுக்க தேசிய பிரச்சனைகளே பேசப்பட்டன. மௌலான முகம்மது அலி இம்மாநாட்டில் ஆற்றிய உரை அன்று தமிழக உலமாக்கள் தேசிய நடவடிக்கைகளில் வேகமாக ஈடுபட உந்து சக்தியாக அமைந்தது. பள்ளிவாசல்களையும் அரபிக்கல்லூரி – மதரசாக்களையும் சுதந்திரத்தைப் பற்றிச் சிந்திக்கின்ற – பேசுகின்ற – செயல்பாட்டுக்குரிய களங்களாக மாற்றிய உலமாக்களின் சுதந்திர பங்கேற்பு மகத்தானது.

(* Shan Muhammad, Freedom Movement in India – The Role of Ali Brothers, P.153.)
(** சிராஜுல் மில்லத் அ.க.அப்துஸ்ஸமது சாஹிப் அவர்களது தந்தையார்.)


 

"கொடிகாத்த குமரன்" என்று பட்டம் தந்து கவுரவித்து வானளாவிய புகழ்பரப்பும் நம் இந்திய வரலாறு, கூடவே... அந்த ஏழு பேர் பற்றியும் ஒரு சிறு குறிப்பாவது தந்திருக்க வேண்டாமா..? எதற்காக இந்த பெயர்கள் மறைக்கப்பட்டன..?



எங்கள் சுதந்திர தேசம்
பாருக்குள்ளே திலகமாய் திகழ வேண்டும்.
அதன் வசந்த விடியல்களுக்காய்
இஸ்லாமியரின் அர்ப்பணிப்புகள் தொடர வேண்டும்
அதோடு இந்த மண்ணில்
இஸ்லாமியர் அமைதியாக வாழவிடப்பட வேண்டும் ... என்பதே !

 


தேசிய கொடியை வடிவமைத்த முஸ்லிம் பெண்...





நாம் இப்போது உபயோகிக்கும் இந்திய நாட்டின் தேசிய கொடியை, சரியான நீள அகலத்தில், சரியான வண்ணத்தில் ஓவியமாக ஒரு துணியில் வரைந்து, தனது கணவரிடம் தந்து, அதை அவர் காந்திஜியிடம் காட்ட, அண்ணல் அதற்கு இசைவளிக்க, அப்படியாக... 1947 ஜூலை 17 அன்று  பிறந்ததுதான் நமது இந்திய தேசிய கொடி..!

வடிவமைத்த அந்த ஓவிய பெண்மணியின் பெயர் ஸுரய்யா தியாப்ஜி. 

ஐடியா தந்த அவரின் கணவரின் பெயர் பத்ருதீன் தியாப்ஜி. 

( பலரும்  தவறாக நினைத்துக்கொண்டு இருப்பது போல... அல்லது வேண்டுமென்றே வரலாற்றை திரித்து தவறாக பரப்பப்படுவது போல... இந்திய தேசிய கொடியை வடிவமைத்தது பிங்காலி வெங்கையா அல்ல..! அல்லவே அல்ல..! )



இந்த பத்ருதீன் தியாப்ஜிதான்... இந்திய தேசிய காங்கிரசை நிறுவியவர்களில் முக்கியமான முதல் ஐவரில் ஒருவரின் பேரன்..!

அந்த ஐவரில் மீதி நான்கு பேரை பள்ளி வரலாற்றில் படித்து இருப்பீர்கள். ஆலன் அக்டேவியன் ஹியூம், வில்லியம் வெட்டர்பன், ஒமேஷ் சந்திர பானர்ஜி, தாதாபாய் நவ்ரோஜி ஆகிய நால்வரை அடுத்த பெயர்தான்... முல்லா தியாப் அலியின் மகன் பாரிஸ்டர்.பத்ருதீன் தியாப்ஜி..! (காலம் : 1844 – 1906)


சர். ஆலன் அக்டேவியன் ஹியூம்,  சர்.வில்லியம் வெட்டர்பன் போன்ற ஆங்கிலேயர்களால், மெத்தப்படித்த இந்தியர்களை அழைத்து, 1885 இல், INC துவக்கப்பட்டது. நோக்கம், பிரிட்டிஷ் அரசுடன் எந்த பிரச்சினை ஆனாலும் சுமுக பேச்சுவார்த்தைக்காக வேண்டி. அதன் முதல் தலைவர்...W.C.பானர்ஜி. 

1886 இல், இ.தே.கா.-இன் இரண்டாம் தலைவர்,  பாரிஸ்டர். D. நவ்ரோஜி.

அடுத்த வருடம், 1887 இல் மூன்றாம் தலைவரானவர்தான் பாரிஸ்டர். பத்ருதீன் தியாப்ஜி. 

இவர்தான் பிரிட்டிஷ் இந்தியாவின் முதல் இந்திய பாரிஸ்டர். (1867)
பின்னர் பிரிட்டிஷ் இந்தியாவின் முதல் இந்திய சீஃப் ஜஸ்டிஸ். (1902)
இவரின் மகன்தான் பிரிட்டிஷ் இந்தியாவின் முதல் முஸ்லிம் பொறியாளர்.
இவரின் மகளோ முதலில் வெளிநாடு சென்று படித்து வந்த டாக்டர். 

இவரின் பேரன்தான்.... நாம் முதலில் பார்த்தவர்... அவரின் பெயரும் தாத்தாவின் பெயரேதான்..! பத்ருதீன் தியாப்ஜி..!

பிப்ரவரி - 20, 1947 : ஆளும் அதிகாரத்தை இந்தியர்களுக்கு விட்டுவிடப் போவதாக இங்கிலாந்து பிரதமர் கிளிமென்ட் அட்லீ அதிகாரபூர்வமாக அறிவிக்கிறார்.

ஜூன் 3, 1947 : வைஸ்ராய் மவுன்ட் பேட்டன், பாகிஸ்தான் - இந்தியா என்று இரு நாடுகளாக பிரிப்பது பற்றிய தனது திட்டத்தை காங்கிரஸ் & முஸ்லிம் லீக் கட்சிகளிடம் சொல்கிறார். ஆகஸ்ட் 15 ஆட்சி மாற்றம் நடைபெறப் போவதாகவும் குறித்து தெரிவிக்கிறார்.

அத்துடன், வைஸ்ராய் மவுன்ட் பேட்டன், இந்தியா & பாகிஸ்தான் ஆகிய இரு நாட்டின் கொடிகளிலும், தங்கள் பிரிட்டிஷ் நாட்டின் சின்னமான யூனியன் ஜாக்கை (நீள பின்புலத்தில் சிகப்பு வெள்ளையில், ஒரு பெருக்கல் குறி மீது ஒரு கூட்டல் குறி)  தத்தம் கொடியின் மூலையில், பத்தில் ஒரு பங்கு அளவில் வைக்குமாறு கோரிக்கை விடுக்கிறார். ( ஆஸ்திரேலியா, நியூசிலாந்து கொடிகளில் தற்போது உள்ளது போல...! )

இதனால், கடுப்பாகிப்போன இருவரும், தங்களுக்கான தனித்துவ கொடி வடிவமைப்பில் முழுமூச்சாக இறங்குகின்றனர். முக்கியமாக அந்த பிரிட்டிஷ் கொடியின்  'யூனியன் ஜாக்' இருக்கவே கூடாது என்று முடிவெடுத்தவர்களாக..!

ஜூன் 23 1947 : கொடி வடிவமைக்க ஒரு அட்ஹாக் கமிட்டி அமைக்கப்படுகிறது. ( Ad-hoc Committee; Dr. Rajendra Prasad (Chairman), Abul Kalam Azad, C. Rajagopalachari, Sarojini Naidu, K. M. Pannikkar, K. M. Munshi, B. R. Ambedkar, S. N. Gupta, Frank Anthony and Sardar Ujjal Singh)

முன்னர், 1916 இல் பிங்காலி வெங்கையாவால் வடிவமைக்கப்பட்ட, சுதந்திரம் வாங்க போராடிய "இந்திய  தேசிய காங்கிரஸ் கொடியே நம் நாட்டின் தேசிய கொடி" என்ற வாதம் வலுப்பெறுகிறது..! 


மேலே  உள்ள இந்திய அரசின் தபால் தலையில் இவர் வடிமைத்த கொடி எவை எவை என்று மிகவும் தெளிவாகவே உள்ளது..!கவனியுங்கள்

இந்நிலையில், மும்பையில் இருந்து டெல்லிக்கு ஆர்.எஸ்.எஸ். இன் சாவர்கர், முக்கிய காங்கிரஸ் தலைவர்களுக்கு இப்படி ஒரு அவரசர தந்தி அடிக்கிறார். அதில், கொடி முழுக்க காவி நிறம் இருக்க வேண்டும் என்றும்(?!) இராட்டை இடம்பெறவே கூடாது என்றும்(?) வேறு எந்த சின்னமும் இருக்கலாம்(!) என்றும் கூறி..!

வேறு சிலர், புலிச்சின்னம் உள்ள நேதாஜி ஏற்றிய கொடிதான் வேண்டும் என்கின்றனர். இப்படியாக ஆளாளுக்கு ஒரு கருத்து சொல்லிக்கொண்டு இருக்க, அனைத்து கருத்துக்களையும் அமைதியாக கேட்டு வைக்கிறது அட்ஹாக் கமிட்டி.

இப்போதுதான், முதல் பத்தியில் நாம் பார்த்த பத்ருதீன் தியாப்ஜி, சீனில் என்ட்ரி ஆகிறார்..! அவர், கமிட்டி தலைவர் டாக்டர் பாபு ராஜேந்திர பிரசாத்தை சந்தித்து, அவரின் தேசிய கொடியின் மாதிரியை சொல்கிறார். தலைவருக்கு இது பிடித்து விடவே, அதற்கு காந்திஜியின் ஒப்புதலையும் பெற்று வருமாறு அனுப்பி வைக்கிகிறார். காந்திஜியிடம், ராட்டைக்கு பதில் அசோக சக்கரம் மாற்றப்படுவதற்கு காரணத்தை இப்படி சொல்கிறார், பத்ருதீன் தியாப்ஜி.


அதாவது, "கிடைமட்டமான சம அளவு மூவர்ணம் கொண்ட இந்திய தேசிய கொடியின் இருபக்கத்தில் இருந்து அதை பார்த்தாலும், இடம் வலம் மாறாமல் கொடி அதே போலவே தெரியவேண்டும். இதற்கு அசோக சக்கரம்தான் சரியாக வரும். இந்திய தேசிய கொடியின் 'இராட்டை' சரியாக வராது" என்றார்..! 

கூர்ந்து கேட்டுவிட்டு இதனை, ஏற்றுக்கொண்ட காந்திஜி, அவரையே உடனே ஒரு 'மாதிரி கொடி' தயார் செய்து கொண்டு வந்து காட்டுமாறு கூறுகிறார்.

மூன்று அளவு நீளமும், இரண்டு அளவு அகலமும் கொண்ட காதி கைத்தறி துணி ஒன்றை வாங்கிக்கொண்டு போய், தனது மனைவி ஸுரியாவிடம் தருகிறார். அவர் ஒரு கைதேர்த்த வண்ணத்தூரிகையாளர்.

கிடைத்த வாய்ப்பை கச்சிதமாக பயன்படுத்திய அந்த அம்மையார், சிகப்பு+மஞ்சள் கலந்து காவி மேலேயும், கரும்பச்சையை கீழேயும், நடுவில் வெள்ளையில் கரு நீல வண்ணத்தில் 24 கால்கள் கொண்ட அசோக சக்கரமும் மிக எழிலாக வரைந்து தருகிறார்.

தியாப்ஜி அதை கொண்டு போய் காந்திஜியிடம் காண்பிக்க, அதற்கு காந்திஜி இன்முகத்துடன் ஒப்புதல் தந்து அட்ஹாக் கமிட்டிக்கு அனுப்ப, அந்த 'கொடி வடிவமைப்பு கமிட்டி' அதையே சுதந்திர இந்தியாவின் தேசிய கொடியாக  ஜூலை 17, 1947 அன்று அதிகாரபூர்வமாஅறிவிக்கிறது...!

  தேசிய கொடியை வடிவமைத்த அப்பெண்மணிக்கு, கோடி கரங்கள் தடுத்து மறைத்தாலும் வரலாற்றில் தக்க  இடம் நிச்சயமாக உண்டு..!

ஆதார ஆவணங்கள்
Who designed National Flag : Mrs. Badruddin Tyabji
http://muslims4india.com/contribution/freedom/national-flag.html (The wheel of truth, by Mr.K.Natwar Singh)
http://aicc.org.in/new/past-president-detail.php?id=3



 குறிப்பு வழங்கியவர்கள்: நஸீர் மிஸ்பாஹி ஹழ்ரத்,  புதுகை ஜபருல்லாஹ் முனீரி ஹழ்ரத், முஹம்மது அபு பக்கர் ஹழ்ரத், ஜாபர் சாதிக் உலவி ஹழ்ரத், mufthi தாஜ் காசிமி ஹழ்ரத்,செய்யத் அபு பக்கர் சித்தீக் ஹழ்ரத், வாட்சப்பில் பரகத் பாகவி ஹழ்ரத்,
கோர்வை:

5 comments:

شكرا جزاك الله خيرا في الدارين

இந்த கட்டுரையில் சில குறிப்புகள் படங்களை எனது கட்டுரைக்கு பயன்படுத்திட அனுமதி எதிர்பார்க்கும் அன்பன். கா.மு.இஸ்மாயில்

இந்த கட்டுரையில் சில குறிப்புகள் படங்களை எனது கட்டுரைக்கு பயன்படுத்திட அனுமதி எதிர்பார்க்கும் அன்பன். கா.மு.இஸ்மாயில்

மாஷா அல்லாஹ் அருமையான வரலாற்று பதிவுகள்

சிறந்த பதிவு.

Post a Comment