கனவு
ஓர் ஆய்வு
கனவு பற்றி
இஸ்லாம் என்ன சொல்கிறது?
عَنْ أَنَسِ بْنِ
مَالِكٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «الرُّؤْيَا
الحَسَنَةُ، مِنَ الرَّجُلِ الصَّالِحِ، جُزْءٌ مِنْ سِتَّةٍ وَأَرْبَعِينَ جُزْءًا
مِنَ النُّبُوَّةِ»
6983. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்“ நல்ல மனிதர் காணும் நல்ல (உண்மையான) கனவு, நபித்துவத்தின் நாற்பத்தாறு
பாகங்களில் ஒன்றாகும். என அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார். ஸஹீஹ் புகாரி
கனவிற்கும்
அர்த்தமுண்டு
எல்லோருக்குமே சகஜமாக கனவு
வரத்தானே செய்கிறது என்று கனவை நாம் சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது. கனவிற்கும்
பலவிதமான அர்த்தங்கள் உண்டு. இஸ்லாத்தின் மிக முக்கிய அடையாளமான பாங்கு சொல்லும் முறை
ஸஹாபாக்களுக்கு கனவின் மூலம்தான் அறிவிக்கப்பட்டது. பல முக்கிய நபர்கள் இஸ்லாத்தில்
நுழைவதற்கும் கனவு காரணமாக அமைந்துள்ளது.