இந்த உலகம் நிரந்தரமானது
அல்ல என்பதை நாம் அனைவரும் அறிவோம். எனவே நமக்கு கிடைகப்பற்ற சொற்ப கால
வாழ்க்கையில் மறுமைக்கான சேமிப்பை நாம் செய்தோம் என்றால் இவ்வுலகிலும் வெற்றி
மறுஉலகிலும் வெற்றி. உலக வாழ்வின் மாயையில் சிக்கி நமது வாழ்வை சீரழித்தோம்
என்றால் நம்மைவிட நஷ்டவாளி மறுமையில் கிடையாது. எனவே இவ்வாழ்வு மறுமைக்கான
தயாரிப்பை செய்து கொள்வதற்கு தரப்பட்ட கால அவகாசம் என்பதை புரிந்து கொள்வோமாக! ஒரு
நாள் அனைவரும் மரணித்து மறுமையை நோக்கி பயணம் செய்வோம். அந்த பயணத்தின் பயணிகளாக நநாம் உள்ளோம். அந்த நீண்ட
பயணத்திற்கு தேவையான கட்டுச்சாதம் மிக அவசியம்.