இமாம் அபூஹனீபா(ரஹ்)அவர்களின்
வாழ்க்கை வரலாறு
يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول وأولي ألأمر منكم விசுவாசங்கொண்டோரே!நீங்கள் அல்லாஹ்வுக்கு கீழ்ப்படியுங்கள்:
(அவனது )தூதருக்கும் கீழ்ப்படியுங்கள்.இன்னும் உங்களில் (அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் கீழ்படிந்து நடக்கும் )அதிகாரம் உடைய (தலை)வர்களுக்கும் கீழ்ப்படியுங்கள்.அல் குர்ஆன் 4:59
கூஃபா நகரமும் அதன் சிறப்பும்
**************************************************************************
ஹழ்ரத் உமர் பாரூக் (ரலி)அவர்களின் ஆட்சிக் காலத்தில் ஈராக் இஸ்லாமிய ஆட்சிக்குட்பட்டது."மதாயின்" என்னும் நகரமே ஈராக்கின் தலைநகரமாகவே இருந்தது.ஹழ்ரத் சஅது பின் அபீவக்காஸ் (ரலி),
ஹழ்ரத் சல்மான் பார்ஸி (ரலி),ஹழ்ரத் ஹுதைபதுல் யமான் (ரலி) ஆகிய
ஸஹாபாக்களின் ஆலோசனைப்படி கூஃபா நகரம் நிர்மாணிக்கப்பட்டது.
ஹிஜ்ரி 17ல் இந்நகரில் 40ஆயிரம் பேர் வாழ்ந்து வந்தனர்.
கூஃபா அன்று மிகப்பெரும் கல்விக் கேந்திரமாக திகழ்ந்து வந்தது.இமாம் புகாரி (ரஹ் ) அவர்களின் புகாரி ஷரீபின் அறிவிப்பார்களின் முன்னூறுக்கு மேற்ப்பட்டவர்கள் கூஃபா வாசிகளே!.
இத்தகு கல்விக் கேந்திரத்தில்,கல்வியாளர்கள் இடையில் தான் இமாம் அபூஹனீபா(ரஹ்)அவர்கள் பிறந்து வளர்ந்து வந்தார்கள்.இமாம் அவர்கள் துவக்க காலத்தில் இல்முல் கலாம் (இஸ்லாமிய கொள்கைகள்)பற்றிய கல்வித் துறையில் ஆர்வம் கொண்டிருந்தார்கள்.இத்துறையில் இமாம் அவர்கள் பெரும்பாண்டிதியம் பெற்றவர்களாக திகழ்ந்தார்கள்.அன்றையக் கொள்கை குழப்பவாதிகளான "காரிஜிய்யா"களுடன்,பல்வேறு விவாத அரங்கு நடத்தி வெற்றி கண்டுள்ளார்கள்."இல்முல் அதபு","இல்முல் மன்திக்"ஆகிய கலைகளிலும் இமாம் அவர்கள் மிகப்பெரும் திறமைப் பெற்றவர்களாக இருந்தார்கள்.
இமாம் அவர்களைப் பற்றி அறிமுகம்
***************************************************************************************
இமாம் அவர்கள் ஹிஜ்ரி 80ம் ஆண்டில் கூஃபாவில் பிறந்தார்கள்.70 ஆண்டு காலம் வாழ்ந்து ஹிஜ்ரி 150ஆம் ஆண்டில் பக்தாதில் மறைந்தார்கள்.
வமிசவழி:-
*****************
பாரசீகக் குடும்பமொன்றை சேர்ந்தவர்களான இவர்கள் கூபா நகரில் பிறந்தார்கள். நுஃமான் பின் தாபித் பின் ஜௌத்தி பின் யஹ்யா பின் ஜைத் பின் அஸத் பின் ராஷிதுல் அன்ஸாரி என்றும், அவர்களுடைய பாட்டனார் ஜௌத்தி ஆப்கானிஸ்தானிலுள்ள காபூலில் சிறைக் கைதியாக பிடிக்கப்பட்டு அரபு நாட்டுக்கு கொண்டு வரப்பட்டவர் என்றும் சிலர் குறிப்பிட்டுள்ளனர்.
ஆனால் அவர்களுடைய சரியான வமிசவழியானது நுஃமான் பின் தாபித் பின் ஜௌத்தி பின் மாஹ் என்பதாகும். ஜௌத்தி அவர்கள் அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் முன்னிலையில் இஸ்லாத்தினை ஏற்று நுஃமான் என்ற பெயரை அடைந்து கொண்டார். இமாம் அவர்களின் தந்தையான தாபித் பிறந்தபோதும் அவர்களைத் தந்தை நுஃமான் ஹஜ்ரத் அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் சமூகத்திற்கு கொண்டு சென்று அவர்களின் நல்லாசியைப் பெற்றுச் சென்றுள்ளார்.
தோற்றப் பொலிவு:
*****************************
இமாம் அவர்கள் ஒல்லியான உடலும், நடுத்தரமான உயரமும் உடையவர்கள். தலை நிமிர்ந்த நடையுடையவர்கள், பாரசீகப் பரம்பரைக்கேற்ற எடுப்பான நாசியும், கவர்ச்சிகரமான முக வசீகரமும் பெற்றிருந்ததோடு அறிவின் விசாலத்தைக் காட்டும் அகன்ற நெற்றியையும் அதில் தகத்தக அற்புதமான ஒளியையும் உடையவர்களாகவும் விளங்கினார்கள்.
அவர்களோடு உரையாடுபவர்கள் அவர்களை விட்டுப் பிரிந்து போகவே விரும்பாதபடி இனிமையாகப் பேசுவார்கள்.
இமாம் அவர்கள் சதாவும் உயர்தரமான உடையே அணிவார்கள். சில நேரங்களில் ஓரங்களில் அருமையான பூ வேலைப்பாட்டுடன் கூடிய மெல்லிய துணியிலான சட்டையும் அணிவார்கள். தாங்கள் நல்லவிதமாக உடுத்துவதுடன் வசதி படைத்தவர்களை நல்லபடியாக உடைகள் வாங்கி உடுத்துமாறு அவர்கள் ஏவியிருக்கிறார்கள்.
குணாதிசயங்கள்:
***************************
இமாம்அவர்களின் சீடரான இமாம் அபூயூசுப் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் 'இமாம் அவர்கள் மிகவும் பேணுதலுடையவர்களாகவும்,ஆகாத கருமங்களை விட்டும் அப்பால் விலகிக் கொள்பவர்களாகவும்,பெரும்பாலும் மௌனமாகவும் இருப்பார்கள். ஆனால் சதாவும் சிந்தித்துக் கொண்டிருப்பார்கள். யாரேனும் ஒரு பிரச்சனைக்குப் பதில் கேட்டு வந்தால் மட்டும் பதிலளிப்பார்கள். ஒப்பற்ற கொடை வள்ளல். யாரிடமும் எதையும் வேண்டாதவர்கள். ஆட்சியாளர்களின் பதவி பட்டங்களை துச்சமாக மதித்தவர்கள். யாரைப் பற்றியும் புறம் பேசியே அறியாதவர்கள். தங்கள் திரண்ட செல்வத்தை எல்லாம் தேவைப்பட்டோருக்கு வாரி வழங்கியது போல மாபெரும் பொக்கிஷமான தமதுஅறிவுச் செல்வத்தையும் கேட்டோர்க்கெல்லாம் வாரி வழங்கினர்' என்று கலீபா ஹாரூன் ரஷீத் அவர்களிடம் கூற அது கேட்ட கலீபா அவர்கள், 'இவையே உத்தம சீலர்(ஸாலிஹீன்)களின் நற்பண்புகளாகும்' என்று கூறினார்.
கல்வி:
**********
இமாம் அவர்கள் ஹிஜ்ரி 80 ல் பிறந்தார்கள். தந்தையின் ஜவுளி வியாபாரத்தை இளமையிலேயே பார்த்து வந்தனர். முஸ்லிம்களுக்கு கற்பிக்கப்படும் சாதாரண கல்வியையே அவர்கள் பயின்றார்கள். அன்னையின் சொல் தவறாது நடப்பவராக இருந்தார்கள்.
தங்களுடைய பதினாறாம் வயது வரை மேல்படிப்பு படிக்க வாய்ப்பின்றி வர்த்தகத்திலேயே ஈடுபட்டிருந்தார்கள். ஒரு சமயம் அபூ ஹனீபா அவசரமாகக் கடைவீதிக்குப் போய் கொண்டிருந்தார்கள். வழியில் அக்காலத்திய அறிஞர்களுள் ஒருவரான இமாம் ஷுஅபி அவர்கள் அபூஹனீபாவை நோக்கி 'உங்கள் முகத்தில் கல்விக் கலை தெரிகிறது. எனவே நல்ல ஆசானைத் தேடிக் கல்வி பெறு'மாறு கூறினார்கள். அதன்பிறகு இமாம் அவர்கள் கல்வி கற்க ஆயத்தமானார்கள்.
இமாம் அவர்கள் அடிப்படைக் கல்வியை ஓராண்டில் கற்று விட்டு தத்துவ சாஸ்திரத்தை (இல்முல் கலாமை) கற்பதில் விசேச கவனம் செலுத்தினார்கள். ஆனால் பிற்காலத்தில் பிக்ஹில் கூபாவில் இமாமாக விளங்கிய பிக்ஹு ஆரியப் பெருந்தகை ஹம்மாது அவர்களிடம் பிக்ஹு கல்வி பயின்றார்கள். இந்த ஹம்மாது அவர்கள் சஹாபிப் பெருந்தகையான ஹஜ்ரத் அனஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்களைச் சந்தித்து பல ஹதீதுகளைக் கேட்டுள்ளார்கள். தாபியீன்கள் பலரிடமும் அமர்ந்து பல்வேறு பாடங்களை கற்றிருந்தார்கள். ஹழ்ரத் அப்துல்லாஹ் இப்னு மஸ்வூது ரலியல்லாஹு அன்ஹு அவர்களிடமிருந்து வெளிப்பட்ட பிக்ஹு பாடத்தை அதே அடிப்படையிலேயே இமாம் ஹம்மாதும் போதித்து வந்தார்கள். இவ்வளவு திறமையும், புகழும் வாய்ந்த பெரியாரிடம் இரண்டாண்டுகள் இமாம் அவர்கள் பிக்ஹு கற்று தேர்ந்தார்கள்.
ஹம்மாதையன்றி பல்வேறு பிக்ஹு ஆசான்களிடமும் பிக்ஹு பாடம் கேட்டுள்ளார்கள். அத்துடன் ஹதீதுகளைப் பற்றிய பாடங்களையும் விரிவாக படிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது. ஹஜ்ஜுக்கு சென்றிருந்த சமயம் ஹஜ்ரத் அத்தாரிப்னு அபீ ரிபாஹ் என்ற பெரியாரிடம் ஹதீதுகளைக் கற்றுக் கொண்டனர். பின்பு மதீனா சென்று அங்குள்ள ஆசான்களிடமும் ஹதீதுகளைக் கற்றனர். இமாம் அவர்கள் மக்கா செல்லும்போதெல்லாம் ஹஜ்ரத் அத்தார் அவர்களைப் போய்ப் பார்ப்பதும், அவர்களோடு அளவளாவுவதுமாக இருந்தார்கள்.இதே போன்று மக்கா, மதீனா செல்லும்போது அங்குள்ள பெரியார்களிடம் சென்று தங்களுக்கு வேண்டிய விளக்கங்களை பெற்றுக் கொண்டிருக்கிறார்கள்.
இமாம் மாலிக் அவர்கள் இமாம் அபூ ஹனீபாவை விடப் பதிமூன்று வயது சிறியவர்களாயினும் அவர்கள் நடத்திய வகுப்பிலும் சென்றமர்ந்து இமாம் அபூஹனீபாஅவர்கள் பாடம் கேட்டுள்ளார்கள். மக்காவின் பிரபல ஹதீது விரிவுரையாளரான அம்ருப்னு தீனாரிடமும் பாடங்கள் பயின்றிருக்கிறார்கள்.
இவ்விதமாக இமாம்அவர்கள் ஹதீது கலை பயின்ற பலருள் இமாம் ஷுஅபி, சல்மா பின் குயைல், மஹாரிப், அபூ இஸ்ஹாக் ஸப்யி,ஒளன், சம்மாக், உமர் பின் மர்ரா, மன்தருல் அம்ரு, அஃமஷ்,இப்றாஹீம் பின் முஹம்மது, அதீ, அத்தாரிப்னு ஸாயிப், மூஸா,அல்கமா, ஹிஷாம், சுலைமான், கதாதா, அத்தாரிப்னு அபீ ரிபாஹ்,இக்ரிமா, மக்ஹுல் ஆகியோர் முக்கியமானவர்கள்.
இமாம் அவர்களின் தீர்ப்பு
**************************************

ஒருநாள் ஒரு வீட்டுக்குள் கொள்ளையன் புகுந்து வீட்டுக்காரனை கட்டிப்போட்டு,வீட்டிலுள்ள அனைத்து பொருட்களையும் கொள்ளையடித்துச் சென்றான்.போகும்போது வீட்டுக்காரனிடம் "திருடன் யார் என்று சொல்லமாட்டேன்,அப்படிச் சொன்னால் என் மனைவி தலாக்"
என்று குர்ஆனை கையில் கொடுத்து சத்தியம் செய்யச் சொன்னான்.இல்லையெனில் கொலை செய்து விடுவதாக மிரட்டியதால் உயிருக்கு பயந்து வீட்டுயுடையவர் அப்படியே சத்தியம் செய்துவிட்டார்.
மறுநாள் இவருடைய பொருட்களை இவருக்கு முன்பாகவே தைரியமாக விற்றுக் கொண்டிருக்கிறான். இவரால் ஒன்றும் செய்யவோ,சொல்லவோ முடியவில்லை.அப்படி சொன்னால் தலாக் நிகழ்ந்து விடுமே.ரெம்ப கைசேதத்தோடு இமாம் அபூஹனீபாஅவர்களிடம் சென்று தனக்கு நேர்ந்த அவலத்தை அழாத குறையாக எடுத்துக்கூறினார்.
அதற்கு இமாம் அவர்கள்,அவரிடம் உனது மஹல்லாவிலுள்ள முக்கியஸ்தர்களை அனைவரையும் ஒன்று கூட்டி வை. நான் அங்கு வந்து அவர்களிடம் பேசி இதற்கு தீர்வு காண முடியும் என்றார்கள்.அவ்விதம் எல்லோரும் வந்து சேர்ந்ததும்,நீங்களெல்லாம் இவருடைய கொள்ளையடிக்கப்பட்ட பொருட்கள் யாவும் திரும்ப இவருக்கு கிடைக்க வேண்டும் என்று விரும்புகின்றீர்களா?அப்படியானால் உங்க மஹல்லாவிலுள்ளஅனைவரையும் உங்கள் மஸ்ஜிதில் வரவழைத்து,எல்லோரும் வந்த பின்பு ஒருவர் பின் ஒருவராக வெளியே வரும்போது (திருடன்)இவரா?என இவரிடம் கேட்கவேண்டும்.இவர் இல்லை இல்லை என்று மறுத்துக் கொண்டே இருக்கவேண்டும்.
திருடியவன் வெளியே வரும்போது மட்டும் மறுப்பேதும் தெரிவிக்காமல் பேசாமல் இருக்க வேண்டும்.ஆமா என்றும் சொல்லக்கூடாது,இல்லை என்றும் சொல்லக்கூடாது.மௌனமாக நிற்க வேண்டும்.அப்போது இவர் சொல்லாமலே திருடன் யார் என்று தெரிந்துவிடும்.மனைவியும் தலாக்
ஆக மாட்டாள். என்று தங்களுக்கே உரிய நுண்ணறிவை கொண்டு சட்டத்தின் தீர்ப்பை வழங்கினார்கள் இமாம் அபூஹனீபா அவர்கள்.
இன்னலைப் போக்கிய இமாமுல் அஃலம்:
***********************************************************
கணவன் மனைவி இருவர் இருந்தனர். கணவன் மனைவியை மிகவும் நேசித்தான். ஆனால் மனைவிக்கோ கணவனைக் கொஞ்சமும் பிடிக்கவில்லை. ஆகவே எப்படியேனும் அவனைப் பிரிந்து சென்று விட வேண்டும். என ஆசைப்பட்டாள். தலாக் திருமண விடுதலை செய்து விடு என்று கேட்டாள்…?
கணவன் தலாக் கொடுப்பானா....? அவன் தான் அவளை நேசிக்கிறானே.? அவளை அவன் கஷ்டப்படுத்துவதில்லை. அவன். தன் அன்பை பலவகையிலும். வெளிப்படுத்தியும் கூட அவள் அறுத்துக் கொண்டு ஓடிவிடவே விரும்பினாள்.
ஓரு நாள் இருவரும் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தனர். மனைவி என்னவோ கோபமாய்க் கூறினாள். அதற்க்கு பதிலளிக்கும் வகையில் கணவனும் கடிந்துரைத்தான். அவளுக்கு கோபம் வந்தது விட்டது. பேச்சை நிறுத்திக் கொண்டாள். அவன் எவ்வளவோ பேசியும் வாய் திறப்பதாயில்லை.
கணவனுக்கு கோபத்தின் அளவு கூடியது. நாளை சுபுஹ் சாதிக் (அதிகாலை) நேரம் வருவதற்க்கு நீ என்னிடம் பேசிவிட வேண்டும். உன் மீது தலாக் நிகழ்ந்து விடும். என்று வெடித்தான். இந்தப் பேச்சினால் விளையவிருக்கும் அவன் அப்போது அறிந்து கொள்ளவில்லை.
கணவனின் இந்தப் பேச்சைக் கேட்ட மனைவி மனதிற்க்குள் சிரித்துக் கொண்டாள். எந்த விடுதலைக்காக அவள் ஏங்கிக் கொண்டிருந்தாளோ அந்த விடுதலை, நாளை அதிகாலை வரை அவனிடம் பேசாமல் இருந்தால் போதும் அது தானாக கிடைத்துவிடும். என்று கணித்து வாயைக் கெட்டியாக மூடிக் கொண்டாள். அவன் வந்த போதெல்லாம் முகத்தைத் திருப்பிக் கொண்டாள். அவள் மனதிலும் முகத்திலும் மகிழ்ச்சி.
நேரம் செல்லச் செல்லக் கணவன் மிரட்ச்சியடைந்தான். விவேகம் இல்லாமல் பேசி விட்டோமே. மனைவியை இழக்க நேர்திடும் போல் இருக்கிறதே என்று கலங்கினான்.
மனைவியைக் காப்பாற்றிக் கொள்ள வழிதேடி ஆலிம்களிடம் ஓடினான். நடந்ததைச் சொல்லி ஏதாவது வழி கூறுங்களேன் என்று வேண்டி நின்றான். அழுது கெஞ்சினான்.
ஆலிம்கள் அனைவரும் கைகளை விரித்துவிட்டார்கள் எப்படியாவது அவளை நாளை அதிகாலை பஜ்ருக்கு பாங்கு சொல்வதற்க்கு முன் பேச வைத்துவிடு. தவறினால்.....நாளை பஜ்ருக்குப் பாங்கு சொல்ல ஆரம்பித்ததும். கூண்டைத் திறந்த்தும் பறக்கும் கிளீ போல் உன் மனைவியும் உன் வீட்டை விட்டு மூட்டைக் கட்டிக் கொண்டு புறப்பட்டு விடுவாள் என்றார்கள்.
கையைத் தலையில் வைத்துக் கொண்டு கண்ணீருடன் திரும்பிக் கொண்டிருந்தவனுக்கு திடிரென பெரிய ஹழ்ரத் இமாமுல் அஃலம் அபூஹனிபா (ரஹ்) அவர்களின் நினைவு வந்தது. எதற்க்கும் கடைசி முயற்ச்சியாக அவர்களிடமும் ஓரு பேச்சி கேட்டுப் பார்த்து விடுவோம். என்று முடிவு செய்து கொண்டு அவர்களின் வீட்டை நோக்கி ஓடினான்.
அவனுடைய நல்ல நேரம் ஹழ்ரத் அவர்கள் வெளியே அமர்ந்திருந்தார்கள். ஓடிச் சென்று அவர்களின் கைகளைப் பிடித்துக் கொண்டு அழுது கெஞ்சினான். ஹழ்ரத்….! நான் மோசம் போனேன். ஆத்திரத்தில் அறிவிழந்தேன். என்னைக் காப்பாற்றுங்கள். என்றான்.
சிறிது நேரம் சிந்தனையில் ஆழ்ந்த இமாமுல் அஃலம் ரஹ் அவர்கள், பிடிக்காத மனைவியிடம் பிடி கொடுக்காமல்லவா பேச வேண்டும். நீ ஏன் அப்படி பேசினாய் என்று கேட்டுவிட்டு சரி கவலைப்படாமல் வீட்டிற்க்கு போ. உன் மனைவி மேல் தலாக் நிகழாது. என்றார்கள்.
மகிழ்ச்சியுடன் புறப்பட்ட அம்மனிதன் பாதையில் முன்பு கண்டு பேசிய ஆலிம்கள் சிலரை சந்தித்தான். அவர்கள் இமாமுல் அஃலம் என்ன சொன்னார்கள். என்றுகேட்டார்கள். என்ன இருந்தாலும் பெரிய ஹஜ்ரத், பெரிய ஹஜ்ரத் தான். தலாக் ஆகாது எனக் கூறிவிட்டார்கள். என்றான்.
இமாமுல் அஃலம் அறிவித்த முடிவை அறிந்து உலமாக்கள் வியந்தார்கள். சட்டத்தில் சிக்கல் ஏதும் இல்லை. மனைவி பேசாவிட்டால் தலாக் நிகழ்ந்து விடும். பொழுது விடிந்தால் தெரியும் ஹஜ்ரத் அவர்களின் பேச்சி என்று ஆலிம்கள் ஓருவருக்கொருவர் பேசிக்கொண்டனர்.
அவர் விட்டாலும் இவங்க விட மாட்டாங்க போல இருக்கே என கவலையடைந்த கணவன். அன்றிரவெல்லாம் எவ்வளவோ முயற்ச்சிகள் செய்துப் பார்த்தான். அவளைப் பேச வைக்க அவனால் முடியவில்லை. அயர்ந்து உறங்கிப் போனான். பாங்கு ஓலி எப்போது கேட்க்கும் என்று காதுகளைத் தீட்டிக் கொண்டு பொய்த் தூக்கம் தூங்கிக் கொண்டிருந்தாள் மனைவி.
அன்று அதிகாலை சுப்ஹுக்கு அரைமணி நேரம் முந்தி இமாமுல்அஃலம் அபூஹனீபா (ரஹ்)அவர்கள் தன் இல்லத்திலிருந்து எழுந்து அருகிலிருக்கும் மஸ்ஜிதுக்குச் சென்று தஹஜ்ஜுத் தொழுகைக்கான பாங்கை உரத்துக் குரலில் உரைத்தார்கள். வின்னில் விரிந்து வலம் வந்தது பாங்கொலி.
குதித்தெழுந்த மனைவி கணவனை அழைத்து தலாக் ஆகிவிட்டது. நான் உன்னிடமிருந்து விடுதலைப் பெற்றுவிட்டேன் என்றாள் எக்களிப்புடன். அடுத்து சிறிது நேரத்திற்க்குப் பிறகு சுப்ஹு வேளை வந்த பிறகு பஜ்ர் தொழுகைக்கான பாங்கு கூறப்பட்டது.
பஜ்ர் தொழுகை முடிந்தது. கணவன் இமாம்களுக்கு முன் வந்து சோர்ந்தவனாக நின்றான்.
இமாமவர்கள் என்னவென்பது போல் ஏறிட்டுப் பார்த்தார்கள். பாங்கு சப்தம் கேட்டதும் தலாக் ஆகிவிட்டது என்று என்னிடம் கூறினாள் மனைவி என்றான்.
இமாமவர்கள் கேட்டார்கள். இன்று எத்தனை பாங்குகள் ஓலித்தன... இரண்டு அவன் பதில். முதல் பாங்கைக் கேட்டதும் மனைவி உன்னிடம் பேசினாளா...? இரண்டாவது பாங்கு கேட்ட பிறகு பேசினாளா...? இமாம். முதல் பாங்குக்குப் பின் பேசினாள் அவன் பதில். முதல் பாங்கு சுப்ஹு சாதிக் நேரமல்ல தஹஜ்ஜுத் நேரம் அது சுப்ஹு சாதிக்குக்கு முன்பே் போனார்கள். (மாஷா அல்லாஹ்)
மற்றொரு சம்பவத்தில்
************************************
அபு ஹனீபா (ரஹ்மத்துல்லாஹி அலைஹி) அவர்கள் இடம் ஒருவர் கேட்டார். இமாம் அவர்களே! குர்ஆன், சுன்னா மூலம் தாங்கள் தீர்வு கூறுகிறீர்களே! அவ்வாறு செய்யும் போது உங்களின் மனதுக்கு நெருடலான தீர்ப்பு எதுவும் செய்ததுண்டா? என கேட்டார். இமாம் அவர்கள் ஆம்! ஒரு தீர்ப்பு உண்டு. அது இன்றுவரை என் உள்ளத்தை நெருடிக்கொண்டு இருக்கிறது சரியா? தவறா? நாம் இறைவனிடம் குற்றம் பிடிக்கப்படுவோமா? என்று சொல்லிக் கொண்டே இருக்கிறது என்றார்கள். அது என்ன என்று வினவ, இமாம் அவர்கள் சொன்னார்கள். ஒரு நிறை மாத கர்ப்பினி இறந்து விட்டாள். ஆனால் அவளது வயிற்றில் குழந்தை உயிருடன் இருக்கிறது. என்ன தீர்ப்பு சொல்ல என்று திகைத்தேன். பின்பு அந்த ஜனாஸாவின் வயிற்றைக் கிழித்து குழந்தையை எடுத்து விட்டு அதை தைத்து அடக்கம் செய்யலாமா? அல்லது அவ்வாறு செய்யும் போது ஜனாஸாவுக்கு நோவினை செய்த குற்றமாகுமா? மேலும் வயிற்றிலிருந்து எடுக்கும் போது அந்த குழந்தை பிழைக்குமா? இறந்து விடுமா? என்று உள்ளம் பதைபதைத்தது. எனினும் துணிந்து இறைவன் மீது தவக்கல் வைத்து அந்த குழந்தையை எடுத்து விட்டு வயிற்றைத் தைத்துக் கொள்ளுங்கள் என்று தீர்ப்பு கூறிவிட்டேன். ஆனால் இன்று வரை என் உள்ளம் நெருடலாக இருக்கின்றது. அந்த குழந்தை பிழைத்துள்ளதா? மேலும் நாம் செய்த தீர்ப்பு சரியானதா? என்று எனக்கு நெருடலாகவே இருந்து வருகிறது. இந்த செயலினால் இறைவன் என்னை குற்றம் பிடித்து விடுவானோ என்று அஞ்சுகிறேன் என்று இமாம் அவர்கள் சொன்னார்கள். உடனே கேள்வி கேட்டவர் சொன்னார் இமாம் அவர்களே! அந்த குழந்தை வேறு யாருமில்லை. அது நான் தான் என்று சொன்னார்கள். இமாம் அவர்கள் மகிழ்வடைந்தார்கள்.
சந்ததிகள்:
****************
இமாம் அவர்களுக்கு ஹம்மாது என்ற ஒரு புதல்வர் மட்டும் இருந்தார். வேறு புதல்வரோ, புத்திரியோ இல்லை. தம் மகனுக்கு தம் ஆசிரியரின் பெயரை சூட்டியிருந்தார்கள். ஹம்மாது அவர்கள் கல்வியில் சிறந்து விளங்கினார். தம் தந்தையாரின் மறைவிற்குப் பின் அவர்களிடமிருந்த பலராலும் ஒப்படைக்கப்பட்டிருந்த அமானிதப் பொருட்களை எல்லாம் எடுத்துச் சென்று பக்தாது பிரதம காஜியான ஹஸன் பின் அம்மாரிடம் ஒப்படைத்து விட்டார். ஆட்சியாளர்களோடு எவ்வித தொடர்பும் அற்றவராக வாழ்ந்திருந்து ஹிஜ்ரி 176 ல் காலமானார்.
ஹம்மாது அவர்களுக்கு நான்கு புதல்வர்கள். உமர், இஸ்மாயில், அபூ ஹய்யான், உதுமான் ஆகியோரில் இஸ்மாயில் மிகவும் பிரபலமாயிருந்து கலீபா மாமூனுர் ரஷீதின் ஆட்சியில் பிரதான காஜியாகவும் வேலை பார்த்திருக்கிறார்.
தின அலுவல்கள்:****************************
இமாம் அவர்கள் தினமும் அதிகாலையில் எழுந்து சுப்ஹுத் தொழுகைக்கு மஸ்ஜிதுக்குப் போய்விடுவார்கள். சுப்ஹு தொழுகை முடிந்ததும் அங்கேயே அமர்ந்து பல்வேறு பாடங்களையும் நடத்துவார்கள். பின்னர் வெளியூரிலிருந்து வரும் பிக்ஹு மஸ்அலா தொகுக்கும் வேலை நடைபெறும். பிறகு லுஹர் தொழுகை முடித்து வீடு போய் விடுவார்கள். வெயிற்காலமாயின் இச்சமயம் சற்று தூங்கி விடுவதுண்டு. அதுமுதல் அசர் தொழுகை வரை வியாபார விஷயங்களை கவனிப்பார்கள். அசர் தொழுகைக்குப் பின் நண்பர்களைக் காணவோ, நோயாளிகளைப் பார்க்கவோ போகவேண்டியிருப்பின் போவார்கள். மிஃரிபுக்குப் பின் இஷா வரை பாட போதனை நடைபெறும். இஷாவிற்குப் பின் நீண்ட நேரம் விழித்திருந்து வணங்குவார்கள்.
இமாம் அவர்கள் ஆயிரம் தடவை தங்கள் கனவில் இறைவனைக் கண்டதாகவும், அப்பொதெல்லாம் அவர்கள் அவனிடம் தாங்கள் ஈமான்
ஸலாமத்துடன் மரணிப்பதற்கான ஒரு அமலை சொல்லித் தரும்படி கேட்டதாகவும், அதன் பயனாய் 'அல்லாஹும்ம அஹ்யினீ அலல் கிதாபி வஸ்ஸுன்னத்தி வத வஃப்பனீ அலல் ஈமானி வத்தௌபத்தி. அல்லாஹும்ம ஸல்லி அலா செய்யிதினா முஹம்மதின் வஆலிஹி வஸல்லிம் வப்அல்பினா தாலிக்க வபி ஜமீஇல் முஸ்லிமீன்(அல்லாஹ்வே, திருக்குர்ஆனின் போதனைக்கேற்பவும், நபி பெருமானின் முன் மாதிரியின்படியும் நான் வாழ்ந்திருக்க அருள்புரி! பாவமன்னிப்புடனும்,மெய்விசுவாசத்துடனும் நான் மரணிக்க கிருபை செய்! முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும்,அவர்கள் வம்சத்தார் மீதும் ஸலவாத்தும், ஸலாமும் சொல்வாயாக! நாங்களும் மற்ற முஸ்லிம்கள் அனைவரும் இதை அமல் நடத்தி வர அருள்புரிவாயாக!) என்ற துஆவை ஓதி வரும்படி உத்தரவாயிற்று என்றும், அதைத் தாங்கள் நியமமாக ஓதி வந்ததாகவும் அவர்கள் கூறியதாக காணப்படுகிறது.
இமாம் அபூஹனீபா அவர்களின் ஹதீஸ் கலை மாணாக்கர்கள்:
*************************************************************************************************
இமாம் அபூஹனீபா (ரஹ்) அவர்களின் ஹதீஸ் கலை மாணாக்கர்களின் இமாம் "அலி பின் அஸிம்"பிராதனமானவர்,இவரிடம் ஹதீஸ் கலையை முப்பதினாயிரம் பேர் கற்றுள்ளனர் என இமாம் வாஸிதி (ரஹ்)அவர்கள் கூறுகின்றார்கள் (தத்கிரதுத்துல் ஹுப்பாஜ் 1-359)
இமாம் அபூஹனீபா (ரஹ்) அவர்களின் ஹதீஸ் கலை மாணவர் "யஜீது பின் ஹாரூன்"ஹதீஸ் கலையின் பிரபலமான இமாமாக இருந்தார்கள்.இவரிடம் சுமார் எழுபதாயிரம் பேர் ஹதீஸ் கலையை பயின்றுள்ளனர்.(தத்கிரதுத்துல் ஹுப்பாஜ் 1-295)
இமாம் அபூஹனீபா (ரஹ்) அவர்கள் ஒரு தாபியி:
***************************************************************************
நாயகத் தோழர்களான ஸஹாபாக்களை நேரில் கண்டவர்களை "தாபியி" எனக் கூறப்படும்.இமாம் அபூஹனீபா (ரஹ்) அவர்கள் பல ஸஹாபிகளை நேரில் கண்டுள்ளதும் ஸஹாபிகளிடமிருந்து ஹதீஸ்களை "ரிவாயத்"செய்திருப்பதும் வரலாற்று நூல்களில் காண முடிகிறது. ஸஹாபிகளில் கடைசியாக மரணம் அடைந்தவர்கள் அபுத்துபைல் (ரலி) என்பவராவர்கள்.இவர்கள் உஹத் யுத்தத்தன்று பிறந்தார்கள்.நபி (ஸல்)அவர்களின் மரணித்தின் போது இவர்களின் வயது ஒன்பது.ஹிஜ்ரி 110ம் ஆண்டு இவர்கள் மரணமடைந்ததாக இமாம் தஹபீ (ரஹ்)-இப்னு ஹஜர்(ரஹ்) ஆகியோர் கூறியுள்ளார்கள்.இவர்களின் மரணத்தின் போது
இமாம் அபூஹனீபா அவர்களின் வயது முப்பது.
இமாமின் மறைவு:
*****************************
இமாம் அவர்கள் ஏற்கனவே தலைமை நீதிபதி பதவியை ஏற்க மறுத்ததும், அதற்காக நூறு கசையடிகள் தண்டனை பெற்றதும் கலீபா அவர்களுக்குத் தெரியுமாதலால் அந்தப்படியே நடக்க முடிவு செய்து இமாம் அவர்களை அரசவைக்கு வரச் செய்து தலைமை நீதிபதியாக இருக்க வேண்டுகோள் விடுக்க, இமாம் அவர்கள் மறுத்துவிட்டார்கள். இதனால் இமாம் அவர்களை சிறையிலடைக்க கலீபா ஹிஜ்ரி 146 ல் உத்திவிட்டார். இப்போது இமாம் அவர்களுக்கு வயது அறுபத்தாறு. சிறையில் இமாம் அவர்கள் பாடபோதனை நடத்தினார்கள்.
தொடர்ந்து இமாம் அவர்களை கண்காணிக்க முடியாமல் இமாம் அவர்களின் உணவில் விஷம் கலந்து விட்டார். உணவை உட்கொண்டதும் விஷம் தங்கள் உடலில் வேலை செய்வதை இமாம் அவர்கள் உணர்ந்தார்கள். தங்களை சிரசை சஜ்தாவில் வைத்தார்கள். இந்நிலையிலேயே அவர்களின் ஆன்மா பிரிந்தது. அவர்கள் காலமானது ஹிஜ்ரி 150 ஷஃபான் மாதம் பிறை 2 (கி.பி. 766) ஆகும்.
இமாம் அவர்கள் காலமாகிவிட்ட செய்தி வெகு துரிதமாகப் பக்தாத் நகர் முழுவதும் பரவி விட்டது. அவர்களுடைய பூத உடலை பக்தாத் நகரத் தலைமை நீதிபதியான ஹஸன் பின் அம்மார் என்ற பெரியார் முன்னின்று குளிப்பாட்டினார்கள். இமாம் அவர்களின் உடல் ஜும்ஆ மஸ்ஜிற்கு கொண்டு செல்லப்பட்டதும் முதல் தடவை நடத்தப்பட்ட ஜனாஸாத் தொழுகையில் ஐம்பதாயிரம் பேர்கள் கலந்து கொண்டனர். பக்கத்து ஊர்களிலிருந்தும் கூட்டம் கூட்டமாக மக்கள் வரவே பல தடவை ஜனாஸா தொழுகை நடத்தப்பட்டது.
அதன்பின் அன்னாரின் உடல் பக்தாதில் ஆக்கிரமிக்கப்படாத இடம் என்று பெயர் பெற்ற கீஜ்ரான் என்ற இடத்தில் அடக்கம் செய்யப்பட்டது. பின்னர் வந்த கலீபா அலப் அர்ஸலான் ஹிஜ்ரி 459 ல் இமாம் அவர்களின் அடக்கதலத்தின் மீது குப்பா ஒன்றைக் கட்டினார். அத்துடன் கலாசாலை ஒன்றையும் நிர்மாணித்தார். பக்தாதில் நிறுவப்பட்ட முதல் கலாசாலையான இது 'மஷ்ஹத் ஹனீபா' என்ற பெயருடன் விளங்கியது.
படிப்பினை:
******************
பெருமானாரின் காலங்களில் குர்ஆனுடைய வசனங்கள் எழுதி வைக்கப்பட்டும்,அனால் அவர்களுடைய பொன் மொழிகளான "ஹதீஸ்கள்"எழுதப்படாமல் வாய்மொழிப்பாடமாகவே ஸஹாபாக்களால் பாடம் பண்ணப்பட்டும் வந்திருக்கின்றன.அதே போல் நபிகளாரின் காலத்திற்க்குப் பின்பும் அந்த நூற்றாண்டின் இறுதிக் கட்டம் வரை "ஹதீஸ்"கள் ஸஹாபிகளின் வாய்மொழிப் பாடமாகவே பரப்பப்பட்டு வந்திருக்கின்றன.
பின்பு முதல் நூற்றாண்டின் இறுதிக் காலத்தில் ஸஹாபாக்கள் ஒருவர் பின் ஒருவராக இறையடி சேர்ந்துக் கொண்டிருந்ததாலும்,அவர்களோடு நபிமொழிகளும் மறைந்துக் கொண்டிருந்ததாலும்இனிமேலும் அவை தொகுக்கப்பட்டு நூலாக்கப்பட வில்லையானால்,அவை முற்றிலும் மறைந்துவிடும் என்ற நூலை விட்டது.
இந்நிலையை உணர்ந்த அக்காலத்தவர்கள் அந்நூற்றாண்டின் இறுதிக் கட்டத்தில் நபிமொழிகளை சேகரித்து நூல் வடிவாக்குவதில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டார்கள்.
அதன் பின் கிட்டத்தட்ட ஐந்தாம் நூற்றாண்டு வரை பல்வேறு அறிஞர் பெருமக்கள்,மார்க்க வல்லுனர்கள் ஹதீஸ்களை சேகரித்து நூல் வடிவாக்குவதில்அரும்பாடு பட்டனர்.அதற்காக சொல்லொன்னாத் துன்பங்களையும்,சிரமங்களையும் மேற்கொண்டனர்.
அதன் (குர்ஆன்,ஹதீஸ்)மூலம் ஃபிக்ஹு கிதாபுகள் ஒரு கேடையமாக அமைந்திருக்கிறது என்று சொன்னால் இதற்கு நிகர் எதுவுமில்லை.
நம் அனைவருக்கும் நபி (ஸல்)அவர்களின் துஆவினாலும்,
இமாம்களின் துஆவினாலும்,நல்லோர்களின் கூட்டத்தில் சேர்த்து அருள் புரிவானாக!ஆமீன்
00am, 20/10/2015] Barakath Baqavi: இமாம் அபூ ஹனீபா (ரஹ்) | ஆன்லைன் சுன்னாஹ் - http://www.onlinesunnah.com/
இமாம் அபூ ஹனீபா (ரஹ்) | ஆன்லைன் சுன்னாஹ்
http://www.onlinesunnah.com/2015/07/03/%E0%AE%87%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AA%E0%AF%82-%E0%AE%B9%E0%AE%A9%E0%AF%80%E0%AE%AA%E0%AE%BE-%E0%AE%B0%E0%AE%B9%E0%AF%8D/
இமாம் அபூ ஹனிபா வாழ்க்கை வரலாறு
http://googleweblight.com/?lite_url=http://www.mailofisl
குறிப்புகளை வழங்கியவர்கள்:
மௌலவி:நஸீர் மிஸ்பாஹி
மௌலவி:ஹஸன் ஹழ்ரத்
மௌலவி:பரக்கத் பாகவி
மௌலவி:ஹனீப் ஜமாலி
மௌலவி:ஷாகுல் ஹமீத் ஹழ்ரத். மௌலவி
தொகுத்து வழங்கியவர்:
கம்பம் சுல்தான் ஸலாஹி