17 November 2014

அறிவுச்சுடர் இமாம் ஷாஃபிஈ (ரஹ்)


இமாமாவர்கள் தனது பாடத் திட்டத்தை வகைப்படுத்தி, முதலில் குர்ஆன் மற்றும் அதன் விரிவுரை என்றும், அதற்குப் பின் ஹதீஸ் கலை, அதனையடுத்து, இஸ்லாமிய (ஃபிக்ஹு) சட்டக் கலை, அதனை அடுத்து உச்சரிப்பு மற்றும் அரபி மொழி ஆகியவற்றைக் கற்றுக் கொடுத்தார்கள். எகிப்தில் இருக்கும் காலத்தில் தனது எழுத்துப் பணியை விடாது செய்து வந்தார்கள், இஸ்லாமியச் சட்டக் கலை மற்றும் அதன் சட்ட திட்டங்கள் பற்றியும், இன்னும் அவரது மிகப் பிரபலமான நூலான அல் உம்மு நூலையும் இங்கு வைத்துத் தான் எழுதினார்கள்.

இமாமவர்களின் வாழ்வினை நாம் கூர்ந்து கவனித்தோமென்றால், கல்விக்காக அவர்கள் பல நாடுகள் சென்று, அங்குள்ள மார்க்க அறிஞர்களிடம் கல்வி கற்றதோடு, அதன் மூலம் மார்க்கத்தில் நல்ல புலமையையும் பெற்றுக் கொண்டதைக் காண முடிகின்றது. எனவே தான் மதீனாவில் அவர் பெற்றுக் கொண்ட கல்வியையும், இன்னும் ஈராக் கில் வாழ்ந்த அறிஞர்களின் விவேகத்தையும் இணைத்து, அதன் மூலம் பெற்றுக் கொண்ட அறிவை இஸ்லாமிய உலகுக்கு வழங்க முடிந்தது. அவரது கல்விப் பணியை அடுத்து, அவரது தன்மைகள், நேர்மை, நற்பண்புகள் போன்றவற்றை நாம் காண முடிகின்றது.
இமாம் அவர்களுக்கு அல் குர்ஆனைப் பற்றி எந்த அளவுக்கு ஆழமான விளக்கம் இருந்தது என்பதை நாம் பார்தால் ஒருமுறை சூரா வல்அஸர் அத்தியாயத்தைப் பற்றி சொல்லும்போது இமாம் அவர்கள் சொன்னார்கள், ''அல்லாஹ் திருமறையின் வேறு அத்தியாயங்களை இறக்காமல் இந்த அத்தியாயம் ஒன்றை மட்டும் இறைக்கி இருந்தாலும் இது மனித குலத்துக்குப் போதுமானதாகும்'' என்றார்கள்.
''காலத்தின் மீது சத்தியமாக. நிச்சயமாக மனிதன் நஷ்டத்தில் இருக்கின்றான். ஆயினும், எவர்கள் ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்த, சத்தியத்தைக் கொண்டு ஒருவருக்கொருவர் உபதேசம் செய்து, மேலும் பொறுமையைக் கொண்டும் ஒருவருக்கொருவர் உபதேசிக்கிறார்களோ அவர்களைத் தவிர (அவர்கள் நஷ்டத்திலில்லை)''. (திருக்குர்ஆன்: 103 : 1,2,3)


அறிவுச்சுடர் இமாம் ஷாஃபிஈ ரஹ்மதுல்லாஹி அலைஹி
ஆசிய மற்றும் ஆப்ரிக்கத் துணைக் கண்டத்தில் இமாம் ஷாஃபிஈ ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களின் மத்ஹப் மிகப் பிரபலமானது. அனைவராலும் அறியப்பட்டதொரு மத்ஹபாக இருந்து வருகின்றது. குறிப்பாக எகிப்து, தெற்கு அரேபியா மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் இந்த மத்ஹபை மக்கள் பரவலாகப் பின்பற்றி வருகின்றார்கள்.

SHAHUL ULAVI.knr SHAHUL ULAVI.knr, [10.11.14 17:23]
இமாம் அஷ்ஷாஃபிஈ ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் பாலஸ்தீனில் உள்ள காஸா என்ற இடத்தில் ஹிஜ்ரி 150 ல் பிறந்தார்கள். இமாம் அவர்களின் ஏழாவது தலைமுறையினர், இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களினுடைய தலைமுறையும் அப்துல் மனாஃப் என்ற கிளையினரிலிருந்து வந்தவர்கள் என்று அறியப்படுகின்றது.
இமாம் அவர்கள் இளமையிலேயே தனது தந்தையை இழந்து விட்டார்கள், அதன் பின் அவரது தயார் தனது பிறந்தகமான மக்காவுக்கு தனது மகனைக் கொண்டு சென்று, அங்கேயே கல்வி கற்க வைத்தார்கள். இமாம் அவர்கள் தனது ஆரம்பக் கல்வியை, அரபி மொழி, இலக்கியம் போன்வற்றிலிருந்து தான் ஆரம்பித்தார்கள், ஆனால் இமாம் அவர்களின் புத்திசாலித்தனத்தினால் கவரப்பட்ட அறிஞர்கள், அவரை குர்ஆன், ஹதீஸ் கலை மற்றும் ஃபிக்ஹுத் துறையில் கவனம் செலுத்துமாறு அறிவுரை கூறினார்கள்.
மக்காவில் தனது ஆரம்பக் கல்வியை முடித்து விட்ட இமாம் அவர்கள், அதாவது மக்காவில் உள்ள அனைத்து இமாம்களிடம் இஸ்லாமியக் கல்வியைக் கற்று முடித்த பின், மேலும் கல்வியைத் தேடும் ஆவலில் மதீனாவிற்கு - அதாவது அல் முஅத்தா ஹதீஸ் தொகுப்பை எழுதிய இமாம் மாலிக் அவர்களிடம் கல்வி கற்க வேண்டும் என்ற ஆவலில் மதீனா நோக்கிப் பயணப்பட்டார்கள்.
இயல்பிலேயே அனாதையாக ஆகி விட்ட இமாமவர்கள், தனது எழுது பொருட்களாக ஒட்டக எலும்புகளையும், ஈச்ச மர ஓலைகளையும் பயன்படுத்திக் கொண்டார்கள். எனவே, இவ்வளவு பளுவான எழுது பொருட்கள் மற்றும் தனது உடமைகளை எல்லாம் தூக்கிக் கொண்டு, மதீனாவிற்கு பயணப்பட மிகவும் சிரமப்பட்டார்கள். எனவே, தான் இதுவரை எலும்புகளிலும், ஈச்ச ஓலைகளிலும் எழுதி வைத்திருப்பவற்றை தூக்கிக் கொண்டே செல்வதை விட, அவற்றை மனனமிட்டுக் கொண்டால் என்ன என்று அவருக்குத் தோன்றியது.
இன்னும் சிறிய வயது முதற்கொண்டே அதாவது தனது 9 வது வயதிலேயே குர்ஆனை மனனமிட்டு விட்டதனால் ஏற்பட்ட பயிற்சியானது, இதற்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்தது. எனவே, தான் சேகரித்து வைத்திருந்த இன்னும் தன்னால் குறிப்பு எழுதப்பட்ட அத்தனை தகவல்களையும், தனது அறையை அடைத்துக் கொண்டு மனனமிட ஆரம்பித்து விட்டார்.
இமாம் மாலிக் அவர்களிடம் மாணவராகச் சேர்வதற்கு முன்பாகவே, அவரது அல் முஅத்தா நூலைப் பெற்றுக் கொண்டு, அதன் அநேகப் பகுதிகளையும் மனனமிட்டுக் கொண்டார். அதன் பின் மக்காவின் கவர்னரிடம் சென்று, தான் மதீனாவில் கல்வி கற்பதற்காக வேண்டி, ஒரு பரிந்துரைக் கடிதம் ஒன்றை மதீனா கவர்னருக்கு எழுதித் தருமாறு கேட்டுக் கொண்டார். இமாம் அஷ்ஷ

SHAHUL ULAVI.knr SHAHUL ULAVI.knr, [10.11.14 17:23]
ாஃபிஈ அவர்களைப் பற்றி நன்கு அறிந்திருந்த மக்காவின் கவர்னர் அவர்கள், ஒரு பரிந்துரைக் கடிதத்திற்குப் பதிலாக இரண்டு கடிதங்களை எழுதினார், அதாவது ஒன்றை மதீனா கவர்னருக்கும், இன்னொன்றை இமாம் மாலிக்கி அவர்களுக்கும் எழுதிக் கொடுத்தார்.
அந்தக் கடிதத்தைப் பார்த்த இமாம் மாலிக் அவர்கள் அதிர்ச்சி அடைந்தவராக, கல்வி கற்பதற்குக் கூடவா இப்பொழுது பரிந்துரைக் கடிதம் தேவைப்படுகின்றது என்று ஆச்சரியத்துடன் கேட்டார்கள். இமாம் மாலிக் மற்றும் இமாம் ஷாஃபிஈ அவர்களுக்கிடையேயான சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டது, இருவரது சந்திப்பும் இனிமையாகவே நடந்தது, மேலும் இமாம் மாலிக் அவர்களுடனான சந்திப்பானது பல வகையிலும் இமாம் ஷாஃபிஈ அவர்களுக்கு உதவியது.

SHAHUL ULAVI.knr SHAHUL ULAVI.knr, [10.11.14 17:25]
முதலாவது, அவர் வாழ்ந்த காலத்தில் மிகவும் பிரபலமாக மதிக்கப்பட்ட இமாம் மாலிக் அவர்களிடம், இளைஞரான இமாம் ஷாஃபிஈ அவர்கள் கல்வி கற்கும் நற்பாக்கியம் கிட்டியது.
இரண்டாவதாக, இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பள்ளியில் கல்வி கற்பதெற்கென்றே பல்வேறு பகுதிகளில் இருந்து வந்துள்ள மார்க்க அறிஞர்களின் அறிமுகம் கிடைத்தது. இவர்களின் பலரது அறிவுக் கூர்மை மற்றும் திறமைகள் மிகவும் பயனுள்ள மார்க்க விளக்கத்தைப் பெற்றத் தந்தன.
இமாம் மாலிக் அவர்கள் தனது மாணவரான ஷாஃபிஈ அவர்களைத் தனது துணை ஆசியராகவே நியமித்துக் கொண்டார்கள் என்று வரலாறு கூறுகின்றது. ஒவ்வொரு நாள் விரிவுரையின் முடிவிலும் மாணவர்களுக்கு அல் முஅத்தாவைப் படித்துக் கொடுக்கும் பொறுப்பு, இமாம் ஷாஃபிஈ அவர்களுக்கு வழங்கப்பட்டது.
இமாம் மாலிக் அவர்கள் இறந்த பின்பு, இமாம் ஷாஃபி அவர்களை நஜ்ரான் பகுதிக்குப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டு, எமன் தேசத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டார்கள்.
எனினும், இமாம் ஷாஃபிஈ அவர்களது எமன் வருகையானது பலருக்கு பிடிக்கவில்லையாதலால், இவர் கலவரக்காரர்களாகப் பார்க்கப்பட்ட அப்பாஸியர்களின் ஆதரவாளர் என்ற முத்திரை இவர் மீது குத்தப்பட்டது. அதன் பின் அப்பொழுது பாக்தாதைத் தலைநகராக வைத்து, இஸ்லாமிய கலீபாவாக ஆண்டு கொண்டிருந்த கலீஃபா ஹாரூன் ரஷீத் அவர்கள், இமாம் ஷாஃபிஈ அவர்களை பாக்தாதிற்கு வரவழைத்து, அங்கே வைத்து அவரைக் கைது செய்து சிறையில் அடைத்தார்கள்.
அல்லாஹ்வின் கருணை மற்றும் இமாம் ஷாஃபிஈ அவர்களின் புத்திக் கூர்மை காரணமாக, கொலைத் தண்டனையிலிருந்து தப்பித்தார்.
இமாம் அவர்களின் கல்வித் தகுதி மற்றும் புத்திக் கூர்மையைக் கண்டு, அதனால் கவரப்பட்ட கலீஃபா அவர்கள், அன்னாருக்கு மரியாதை அளித்ததோடு, அவரிடம் தாராளமாக நடந்து கொண்டார். சிறிது காலம் பாக்தாதில் தங்கி இருந்த இமாமவர்கள், அங்கிருந்த அறிஞர்களுடன் கலந்துரையாடல், விவாதம், போன்றவற்றில் ஈடுபட்டதோடு, மக்களுக்குக் கல்வியைப் புகட்டி வந்ததோடு, பல நூல்களையும் எழுதினார். பின் ஹிஜ்ரி 181 ல் மக்காவிற்கு மீண்டும் திரும்பிய இமாமவர்கள், மூன்றாவது முறையாக பாக்தாதிற்குப் பயணமாகும் வரைக்கும், 17 வருடங்கள் மக்காவிலேயே தங்கி விட்டார்கள். எகிப்திற்குச் செல்வதற்காக இமாமவர்கள் பாக்தாதினை விட்டும் கிளம்பிய பொழுது, இரண்டாவது ஹிஜ்ரி நூற்றாண்டு முடிவடையும் தருவாயில் இருந்தது.
இமாமவர்கள் தனது இறுதிக் காலத்தை எகிப்திலேயே கழித்தார்கள், அங்கேயே ஹிஜ

SHAHUL ULAVI.knr SHAHUL ULAVI.knr, [10.11.14 17:25]
்ரி 204 ஆம் ஆண்டு மரணித்தார்கள். எகிப்தில் மிகவும் பிரபல்யமான பள்ளிவாசலாகப் போற்றப்பட்ட அம்ர் இப்னுல் ஆஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் பள்ளியில் வைத்து, காலையில் இருந்து மதியம் வரைக்கும், ஆண்களும் பெண்களுமாக வந்திருந்து இமாமாவர்களிடம் மார்க்கக் கல்வியைக் கற்று விட்டுச் சென்றார்கள்.
இமாமாவர்கள் தனது பாடத் திட்டத்தை வகைப்படுத்தி, முதலில் குர்ஆன் மற்றும் அதன் விரிவுரை என்றும், அதற்குப் பின் ஹதீஸ் கலை, அதனையடுத்து, இஸ்லாமிய (ஃபிக்ஹு) சட்டக் கலை, அதனை அடுத்து உச்சரிப்பு மற்றும் அரபி மொழி ஆகியவற்றைக் கற்றுக் கொடுத்தார்கள். எகிப்தில் இருக்கும் காலத்தில் தனது எழுத்துப் பணியை விடாது செய்து வந்தார்கள், இஸ்லாமியச் சட்டக் கலை மற்றும் அதன் சட்ட திட்டங்கள் பற்றியும், இன்னும் அவரது மிகப் பிரபலமான நூலான அல் உம்மு நூலையும் இங்கு வைத்துத் தான் எழுதினார்கள். இந்த அல் உம்மு என்ற நூல் தான் ஷாபிஈ மத்ஹபின் மிகப் பிரபலமான நூலாகப் போற்றப்படுகின்றது.
இமாமவர்களின் வாழ்வினை நாம் கூர்ந்து கவனித்தோமென்றால், கல்விக்காக அவர்கள் பல நாடுகள் சென்று, அங்குள்ள மார்க்க அறிஞர்களிடம் கல்வி கற்றதோடு, அதன் மூலம் மார்க்கத்தில் நல்ல புலமையையும் பெற்றுக் கொண்டதைக் காண முடிகின்றது. எனவே தான் மதீனாவில் அவர் பெற்றுக் கொண்ட கல்வியையும், இன்னும் ஈராக் கில் வாழ்ந்த அறிஞர்களின் விவேகத்தையும் இணைத்து, அதன் மூலம் பெற்றுக் கொண்ட அறிவை இஸ்லாமிய உலகுக்கு வழங்க முடிந்தது. அவரது கல்விப் பணியை அடுத்து, அவரது தன்மைகள், நேர்மை, நற்பண்புகள் போன்றவற்றை நாம் காண முடிகின்றது.
உதாரணமாக, பாக்தாதில் அவருக்குக் கிடைத்த அந்தப் பரிசுப் பொருட்களை தான் வைத்திருக்காமல், தான் அந்த இடத்தை விட்டும் நகர்வதற்கு முன்பாகவே, அங்குள்ள தொழிலாளர்களுக்கும், தேவையானவர்களுக்கும் பிரித்துக் கொடுத்து விடக் கூடியவராக இருந்தார்.
இன்னும், இமாமவர்கள் பாக்தாதிலிருந்து மக்காவிற்கு பயணப்பட்ட பொழுது, தன்னுடன் கொண்டு வந்திருந்த ஆயிரக்கணக்கான தங்க நாணயங்களை, மக்காவிற்குள் நுழைவதற்கு முன்பாகவே மக்காவில் வாழ்ந்த மக்களுக்கு தானமாக வழங்கி விட்டார்கள்.
இன்னும், அவரிடம் இரக்கம், நெகிழ்ந்து கொடுக்கும் தன்மை, நற்குணங்கள் ஆகியவை யாவும், அவரை அறிஞராக மட்டுமல்ல, அவரது இந்தக் குணங்களும் அவரது மதிப்பை என்றென்றும் நாம் உதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடிய வகையில் அமைந்திருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
இன்னும், இமாம் அவர்களுக்க

SHAHUL ULAVI.knr SHAHUL ULAVI.knr, [10.11.14 17:25]
ு அல் குர்ஆனைப் பற்றி எந்த அளவுக்கு ஆழமான விளக்கம் இருந்தது என்பதை நாம் பார்தால் ஒருமுறை சூரா வல்அஸர் அத்தியாயத்தைப் பற்றி சொல்லும்போது இமாம் அவர்கள் சொன்னார்கள், ''அல்லாஹ் திருமறையின் வேறு அத்தியாயங்களை இறக்காமல் இந்த அத்தியாயம் ஒன்றை மட்டும் இறைக்கி இருந்தாலும் இது மனித குலத்துக்குப் போதுமானதாகும்'' என்றார்கள்.
''காலத்தின் மீது சத்தியமாக. நிச்சயமாக மனிதன் நஷ்டத்தில் இருக்கின்றான். ஆயினும், எவர்கள் ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்த, சத்தியத்தைக் கொண்டு ஒருவருக்கொருவர் உபதேசம் செய்து, மேலும் பொறுமையைக் கொண்டும் ஒருவருக்கொருவர் உபதேசிக்கிறார்களோ அவர்களைத் தவிர (அவர்கள் நஷ்டத்திலில்லை)''. (திருக்குர்ஆன்: 103 : 1,2,3)

SHAHUL ULAVI.knr SHAHUL ULAVI.knr, [10.11.14 21:07]
இஸ்லாம் பெற்ற அறிவுலக மேதைகள்.

01 .இமாம் அபீ ஹனீபா (ரஹ்) ஹி 80-150 (70 வயது)
02 .இமாம் மாலிக் இப்னு அனஸ் (ரஹ்) ஹி 93-179 (86வயது)
03 .இமாம் முஹம்மது இப்னு இத்ரீஸ் (ரஹ்) ஹி 150-204 (54வயது)
04 .இமாம் அஹ்மது இப்னு ஹன்பல் (ரஹ்) ஹி 164-241 (77வயது)
05 .இமாம் அல்லைத் இப்னு ஸஅத் (ரஹ்)
06 .இமாம் அவ்ஸாயீ (ரஹ்)
07. இமாம் அல் இஸ்ஸு இஸ்ஸுத்தீன்(ரஹ்)
08 .இமாம் ஸுப்யானுத் தவ்ரீ (ரஹ்)
09 .இமாம் இப்னு ஹஸம் (ரஹ்)
10 .இமாம் இப்னு தைமிய்யா (ரஹ்)
11 .இமாம் இப்னு கையிம் அல்ஜவஸிய்யா (ரஹ்)
12 .இமாம் முஹம்மது இப்னு அப்துல்ஹ்ஹாப்(ரஹ்)
13 .இமாம் நாஸிருத்தீன் அல்பானி (ரஹ்)

SHAHUL ULAVI.knr SHAHUL ULAVI.knr, [10.11.14 21:17]
புகழ்மிகு தஃப்ஸீர்களும் தஃபஸீர் கலை மேதைகளும்
1. திருக்குர்ஆனின் முதற்பெரும் விரிவுரையாளர் அண்ணல் நபி (ஸல்) அவர்களேயாவர்.
2. அவர்களுக்குப்பின் ஸஹாபாக்களில் குர்ஆனுக்கு தப்ஸீர்-விரிவுரை செய்தவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் :

01. அபூ பக்ர் இப்னு அபீ குஹாஃபா (ரலி)
02. உமர் இப்னுல் கத்தாப் (ரலி)
03. உத்மான் இப்னு அஃப்பான் (ரலி)
04. அலி இப்னு அபீ தாலிப் (ரலி)
05. அப்துல்லாஹ் இப்னு மஸ்வூது (ரலி
06. அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (ரலி)
07.உபை இப:னு கஃபு (ரலி)
08.ஸைத் இப்னு தாபித் (ரலி)
09.அபூ மூஸல் அஷ.அரி (ரலி)
10 அப்துல்லாஹ் இப்னு ஸுபைர் (ரலி)

தாபியீன்களில் புகழ் வாய்ந்த முபஸ்ஸிர் :
இமாம் முஜாஹித்(ரஹ்)

உலகில் இதுவரை இரண்டு இலட்சம் தஃப்ஸீர்கள்(விளக்கவுரைகள்), மொழிபெயர்ப்புகள் வெளி வந்துள்ளன. அவற்றுள் முக்கியமானவை:-

புகழ் வாய்ந்த தஃப்ஸீர்கள், தொகுத்தவர்கள்
1 ஜாமிவுல் பயான்-ஃபீ தப்ஸீருல் குர்ஆன் (ஆசிரியர்-இமாம் முஹம்மது இப்னு ஜரீர் அத்தபரீ ஹி-310)
2 அல் ஜாமிவு லி அஹ்காமில் குர்ஆன் (இமாம் குர்துபீ)
3 தப்ஸீருல் குர்ஆனுல் அளீம் (இமாம் இப்னு கதீர்-இமாதுத்தீன் அபுல் ஃபிதா)
4 தப்ஸீருல் கஷ்ஷாஃப் (இமாம் அபுல் காஸிம் மஹ்மூது இப்னு உமர் ஸமக்ஸரி ஜாருல்லாஹ்)
5 தப்ஸீர் ரூஹுல் மஆனி (இமாம் ஷிஹாபுத்தீன் அலூஸி)
6 அல்பஹ்ருல் முஹீத் (இமாம் அபூ ஹய்யான்)
7 தப்ஸீர் பஹ்ருல் உலூம் ஸமர்கந்தீ (இமாம் அபுல்லைத் நஸ்ர் இப்னு முஹம்மது அஸ்ஸமர்கந்தீ)
8 மஆலிமுத் தன்ஸீல்-தப்ஸீர் பகவீ ( இமாம் அபூ முஹம்மது அல்- ஹுஸைன் இப்னு மஸ்வூது அல்பகவீ)
9 அத்துர்ருல் மன்தூர் (இமாம் ஜலாலுத்தீன் அஸ்ஸுயூத்தி)
10 தப்ஸீர் ஜலாலைன் (இமாம் ஜலாலுத்தீன் ஸுயூத்தி ஹி-864, இமாம் ஜலாலுத்தீன் மஹல்லீ ஹி-911. இருவரும் சேர்ந்து தொகுத்தது)
11 அன்வாருத்தன்ஸீல் வ அஸ்ராருத்ஃவீல்-தப்ஸீர் பைளாவி- (இமாம் நாஸிருத்தீன் அபுல்கைர் அப்துல்லாஹ் அல்பைளாவீ)
12 அத்தப்ஸீருல் கபீர் -மஃபாதீஹுல்கைப்- (இமாம் பக்ருத்தீன் முஹம்மது இப்னு உமர் அத்தைமீ ராஸி ஹி-606)
13 தப்ஸீர் அபுஸ்ஸுஊது (இமாம் அபுஸ்ஸுஊது இப்னு முஹம்மது அல் இமாதீ)
14 தப்ஸீர் இப்னு மாஜா (இமாம் இப்னு மாஜா அபூ அப்துல்லாஹ் முஹம்மது இப்னு யஸீத்)
15 தப்ஸீர் நைஸாபூரீ (இமாம் நைஸாபூரீ)
16 தப்ஸீர் நஸஃபீ (இமாம் நஸஃபீ)
17 தப்ஸீர் அல் கதீப் (இமாம் அல் கதீப்)
18 அல்-கஷ்ஃபு வல்பயான்-தப்ஸீர் தஃலபீ- (இமாம் அபூ இஸ்ஹாக் அஹ்மது இப்னு இப்றாஹீம் அத்தஃலபீ)
19 அல் முஹர்ரர்

SHAHUL ULAVI.knr SHAHUL ULAVI.knr, [10.11.14 21:17]
அல்-வஜீஸ் (இமாம் அபீ முஹம்மது அப்துல்ஹக் இப்னு காலிப் இப்னு அதிய்யா)
20 அல்-ஜவாஹிருல் ஹஸ்ஸான் (இமாம் அபூ ஸைது அப்தூரஹ்மான் அத்தஆலபீ அல்ஜஸாயிரீ)
21 தப்ஸீருல் காஸின் (இமாம் காஸின்)
22.ஃபத்ஹுல் கதீர் -தப்ஸீருஷ்-ஷவ்கானீ- (இமாம் அஷ்-ஷவ்கானி)
23 அல்புர்ஹானு ஃபீ உலூமில் குர்ஆன் (இமாம் அஸ்-ஸர்கஸீ)
24 தைஸீருல் கரீமுர்ரஹ்மான் (அஷ்-ஷைகு அப்துர் ரஹமான் அஸ்-ஸஃதீ)
25 ஸாதுல் மஸீர் ஃபீ இல்மித்ப்ஸீர் (இமாம் இப்னுல் ஜவ்ஸீ)
26 மஹாஸினுத் தஃவீல் (இமாம் அல்-காஸிமீ)
27 அத்தஃஸீருல் முனீர் லி மஆலிமுத்தன்ஸீல் (இமாம் முஹம்மது இப்னு உமருல் ஜாவீ நவவீ கி.பி 1898)
28 அஹ்காமுல் குர்ஆன் (இமாம் ஷாபியீ (ரஹ்) )
29 தஃப்ஸீருல் மனார் (அஷ்-ஷைகு முஹம்மது ரஷீது ரிளா)
30 தஃப்ஸீர் ஸூரத்துந்நூர் (ஷைகுல் இஸ்லாம் இமாம் இப்னு தைமிய்யா)
31 அத்தஹ்ரீர் வத்தன்ஸீல் (அல்லாமா அத்தூனிஸித்தாஹிர் இப்னு ஆஷூர்)
32 அய்ஸருத் தபாஸீர் (அஷ்-ஷைகு அபூபக்ர் அல் ஜஸாயிரீ)
33 ஸஃப்வத்துத் தஃபாஸீர் (அஷ்-ஷைகு அஸ்-ஸாபூனி)
34 நைலுல் மராம் மின் தஃப்ஸீர் ஆயாதில் அஹ்காம் (ஷைகு முஹம்மது ஸித்தீக் ஹஸன் கான்)
35 தப்ஸீர் ஷஃராவி (ஷைகு அஷ்-ஷஃராவி)
36 அந்நபவுல் அளீம் (அறிஞர் முஹம்மது அப்துல்லாஹ் தராஸ்)
37 அல்ஜவாஹிர் ஃபீ தஃப்ஸீரில் குர்ஆனில் கரீம் (ஷைகு தந்தாவி ஜவ்ஹரீ (1870-1940)
(இது விஞ்ஞான விளக்கக்களோடு எழுதப்பட்ட முதல் விரிவுரை நூல்)
38 அத்தப்ஸீர் ஃபீ ளிலாலுல் குர்ஆன் (அஷ்-ஷைகு ஷஹீத் சையிது குதுப்)
39 பைளுல் கபீர் (அஷ்-ஷைகு ஷா வலியுல்லாஹ் அத்தெஹ்லவி)
40 நள்ராத் ஃபீ கிதாபில்லாஹ் (அஸ்-ஸய்யிதா ஸைனபுல் கஸ்ஸாலி)
(முதல் பெண் குர்ஆன் விரிவுரையாளர்)

SHAHUL ULAVI.knr SHAHUL ULAVI.knr, [10.11.14 21:22]
சுவனவாசிகள்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நாயகத்தோழர், தோழியரைப்பற்றி பலசந்தர்பங்களில் ”இவர்கள் சுவர்க்கவாசிகள் ‘ என அறிவித்துள்ளார்கள். இறைவன் மீது அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டு, தங்களின் கடமைகள் யாவற்றையும் சரிவர நிiவேற்றி பல்வேறு தியாகங்கள் செய்தவர்களைப்பற்றி இறைவன் திருமறையில் புகழ்ந்துரைத்துள்ளான். இவர்களில் இஸ்லாத்தை முதலில் ஏற்றுக் கொண்டவர்கள், அகபா,ஹுதைபிய்யா உடன்படிக்கைகளில் கலந்து கொண்டோர், தங்களின் உற்றார் உறவினரையும் பொருள் உடைமைகளையும் துறந்து nஹிஜ்ரத் செய்த முஹாஜிர்கள்,அவர்ளுக்கு உதவிய அன்ஸார்கள், பத்று ஸஹாபாக்கள் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.

இவர்களில் செயற்கரிய செயல்கள் செய்த சிலரைப்பற்றி பூரிப்படைந்த இறைதூதர் அவர்களும் மக்கள் புரிந்து கொள்வதற்காகவும், அவர்களின் அந்த அற்புதச் செயல் களை ஆற்றிவருவதற்காகவும் இனம் காட்டியுள்ளார்கள்.

அவர்கள் ஆண்களிலும் உள்ளனர். பெண்களிலும் உள்ளனர். மாண்புக்குரிய அந்த பெருமக்களைப்hற்றியும், சுவர்க்கத்திற்குரிய அவர்களின் அற்புதச்செயல்களைப்பற்றியும் நாமும் தெரிந்து கொள்ள வேண்டாமா ?

அந்த ஆசை எல்லோருக்கும் இருக்கும் என்பதை தெரிந்து அவர்களைப்பற்றி நாம் விரிவாகத் தெரிந்து கொள்வதற்கு முன் முதலில் அவர்கள் யார் யார்? என்பதைப் பார்ப்போம்..

சுவக்கவாசிகளில் 52 பேர்:-
1. ஆண்கள்
01 அஷரத்துல் முபஷ்ஷரா’ என்னும் பத்து பேர். (இவர்களின் பெயர்கள் வரலாற்று ஒளியில்-1ல் குறிப்பிட்டுள்ளோம்.)
11. அல்-ஹஸன் (ரலி) பெருமானாரின் பேரர்.
12. அல்-ஹுஸைன் (ரலி) பெருமானாரின் பேரர்.
13. யாஸிர் இப்னு ஆமிருல் கிந்தீ (ரலி)
14. பிலால் இப்னு ரபாஹா (ரலி)
15. அம்மார் இப்னு யாஸிர் (ரலி)
16. ஜஃபர் இப்னு அபீதாலிப் ‘ அத்தைய்யார்’ (ரலி)
17. உகாஷh இப்னு முஹ்ஸின் (ரலி) ”பாரிஸுல் அரப்”
18. ஸஃது இப்னு மஆத் (ரலி)
19. அம்ர் இப்னு தாபித் (ரலி)
20. ஹாரிதத் இப்னு ஸுராக்கா (ரலி)
21. அப்துல்லாஹ் இப்னு ஸலாம் (ரலி)
22. உமைர் இப்னுல் ஹம்மாம் (ரலி)
23. அல்-அஃராபிய்ஷ; ஷஹீத் (ரலி)
24. அல்-அப்துல் அஸ்வத் (ரலி) ‘அல்-ஜுன்திய்யுல் மஜ்ஹூல்’
25. அஷ்-ஷஹீதுல் மஜ்ஹூல் (ராமித் தம்ராத்)’ (ரலி)
26. ரபீஆ இப்னு மாலிக் (ரலி)

2. பெண்கள்
1.குர்ஆன் கூறும் இருவர்.
01 அன்னை மர்யம் (அலை)
02 அன்னை ஆசியா (அலை)

02. உம்மஹாத்துல் முஃமினீன்

01. அன்னை கதீஜா பின்த் குவைலித் (ரலி)
02. அன்னை ஸவ்தா பின்த் ஸம்ஆ (ரலி)
03. அன்னை ஆயிஷா பின்த் அபீ பக்ர் (ரலி)
04

SHAHUL ULAVI.knr SHAHUL ULAVI.knr, [10.11.14 21:22]
. அன்னை ஹஃப்ஸா பின்த் உமர் (ரலி)
05. அன்னை ஸைனப் பின்த் குஸைமா(ரலி)
06. அன்னை உம்மு ஸலமா பின்த் அபீ உமையா(ரலி)
07. அன்னை ஸைனப் பின்த் ஜக்ஷ் (ரலி)
08. அன்னை ஜுவைரிய்யா பின்த் ஹாரித் (ரலி)
09. அன்னை ஸஃபிய்யா பின்த் ஹுயய் (ரலி)
10. அன்னை உம்மு ஹபீபா ரம்லா பின்த் அபீ ஸுஃப்யான் (ரலி)
11. அன்னை மைமூனா பின்த் ஹாரித் (ரலி)

(வ அஸ்வாஜுஹு உம்மஹாதுஹும் (நபி) அவர்களின் மனைவியர் விசுவாசிகளின் தாய்மார்கள். அல்-குர்ஆன்33:6)

13. ஸைய்யிதத்துந்நிஸா ஃபாத்திமா (ரலி)
14. ஸுமைய்யா பின்த் கபாத் (ரலி)(உம்மு அம்மார்)
15. அஸ்மா பின்த் அபீ பக்ர் (ரலி)
16. அஸ்மா பின்த் உமைஸ் (ரலி)
16. உம்மு உமாரா நுஸைபா (ரலி)
17. உம்மு ரூமான் (ரலி)
18. உம்மு ஐமன், பரக்கா (ரலி)
19. உம்மு ஸுலைம் பின்த் மல்ஹான்(ரலி) (ருமைஸா)
20. உம்மு ஹராம் பின்த் மல்ஹான் (ரலி)
21. உம்மு வரக்கா பின்த் அப்துல்லாஹ் (ரலி)
22. உம்மு ளஃபர் (ரலி)
23. உம்முல் ஃபள்லு (லுபாபத்துல் குப்ரா) (ரலி)
24. ஸல்மா பின்த் உமைஸ் (ரலி

SHAHUL ULAVI.knr SHAHUL ULAVI.knr, [10.11.14 21:26]
குர்ஆனில் கூறப்பட்ட இறைதூதர்கள் 25 பேர். அவர்களின் பெயர்கள், வருடம், குர்ஆனில் வரும் இடங்கள் (வரிசையாக) வருமாறு

1. ஆதம்(அலை). கிமு. 5872-4942 (25 இடங்கள்
2. இத்ரீஸ்(அலை).கிமு4533-4188 (02 இடங்கள் )
3. நூஹ்(அலை).கிமு 3993-3043 (43 இடங்கள்)
4. ஹுத்(அலை)கிமு. 2450-2320 (07 இடங்கள்)
5. ஸாலிஹ்(அலை)கிமு .2150-2080 (09 இடங்கள்)
6. இப்ராஹீம்(அலை)கிமு. 1997-1822 (69 இடங்கள்)
7. லூத்(அலை)கிமு.1950-1870 (27 இடங்கள்)
8. இஸ்மாயில்(அலை)கிமு 1911-1774 (12 இடங்கள்)
9. இஸ்ஹாக்(அலை)கிமு 1897-1717 (17 இடங்கள்)
10.யாகூப்(அலை)கிமு 1837-1690 (16 இடங்கள்)
11.யூசுஃப்(அலை)கிமு 1745-1635 (27இடங்கள்)
12.சுஅய்ப்(அலை)கிமு 1600-1490 (11 இடங்கள்)
13.அய்யூப்(அலை)கிமு 1540-1420(04 இடங்கள்)
14.துல்கிப்லு(அலை)கிமு 1500-1425 (02 இடங்கள்)
15.மூஸா(அலை)கிமு 1527-1407 (136 இடங்கள்)
16.ஹாரூன்(அலை)கிமு 1531-1408 (19 இடங்கள்)
17.தாவூத்(அலை)கிமு 1041-0971 (16 இடங்கள்)
18.சுலைமான்(அலை)கிமு 0989-0931 (17 இடங்கள்)
19.இல்யாஸ்(அலை)கிமு 0910-0850(03 இடங்கள்)
20.அல்-யஸவு(அலை)கிமு 0885-0795 (02 இடங்கள்)
21.யூனுஸ்(அலை)கிமு 0820-0750 (06 இடங்கள்)
22.ஸக்கரியா(அலை)கிமு 0091-0031(08 இடங்கள்)
23.யஹ்யா(அலை)கிமு 0001-0031(04 இடங்கள்)
24.ஈஸா(அலை)கிமு 0001-கி.பி 0032(25 இடங்கள்)
25.முஹம்மது (ஸல்)கி.பி 0632- கி.பி0571(05 இடங்கள்)


உலகின் முதல் ஆலயம் மஸ்ஜிதுல் ஹராம்

மஸ்ஜிதுல் ஹராம். இதன் பொருள் மாண்பார்ந்த தொழுமிடம் என்பதாகும். இறைவன் தன் திருமறையில் .(அல்-குர்ஆன் 17:1) கஃபாவைக் குறிப்பிட இச்சொல்லைப் பயன்படுத்தியுள்ளான்.

’புனித பயணம் மேற்கொள்ளவேண்டிய மூன்று பள்ளிவாயில்களில் முதலாவதாக மஸ்ஜிதுல் ஹராம் இடம் பெறுகிறது. மற்ற இரண்டு பள்ளிகள் மஸ்ஜிதுந்நபவீயும் மஸ்ஜிதுல் அக்ஸாவும் ஆகும்.’ (நபிமொழியின் சுருக்கம் :புகாரி,முஸ்லிம்.)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

’(ஒருவர்) ஏனைய பள்ளிகளில் தொழும் தொழுகையைவிட மஸ்ஜதுல் ஹராமில் தொழும் தொழுகை ஓரிலட்சம் மடங்கு மேலானதாகும்’ (அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி) ஆதாரம் : அஹ்மது)

கஃபாவைச்சூழ முற்றவெளி இடப்பட்டு அதற்கப்பால் சுற்றிலும் மிகப்பெரிய கட்டடம் துருக்கிய ஆட்சியாளர்களால் எழுப்பப்பட்டது. பின்னர் மீண்டும் அதைச்சுற்றிலும் பிரமாண்டமான புதிய கட்டடம் 60 ஆண்டுகளுக்கு முன் மன்னர் அப்துல் அஸீஸ் இப்னு ஸுவூது அவர்களால் 100 மில்லியன் ரியால் செலவில் கட்டப்பட்டது.

அதன் பிறகு மன்னர் ஃபஹ்து இப்னு அப்துல் அஸீஸ் அதை விரிவுபடுத்தி முகப்புப் பகுதியில் ஆறு பில்லியன் பொருட்செலவில் நவீன குளிர் சாதன வசதிகளுடன் கட்டடம் எழுப்பினார்

0 comments:

Post a Comment