07 November 2014

பொதுநலம் பேணுவோம்; சுயநலம் சுட்டெரிப்போம்


                                           --- மவ்லானா ஷாஹுல் ஹமீது ஃபைஜி 
இன்றைய சமுதாயத்தின் நிலையும் குணுமும் மாறிக்கொண்டும் மழுங்கிக்கொண்டும் வந்து கொண்டேயிருக்கிறது. சமூகத்தில் மூடு பழக்கங்கள் ஒரு புரம் தலைவிரித்தாடினாலும் மறுபுறம் மக்களின் குணங்களின் தரத்தில் குறைவும் தேய்வும் காணப்படுகிறது.

உலகில் அதிகமான கொலை கொள்ளை , அடுத்தவரை நிம்மதியாக வாழ விடக்கூடாது என்ற எண்ணம், மனிதனை மேலும் மேலும் வழிகேட்டில் தள்ளுகிறது. ஆனால் ஒன்றை தெளிவாக விளங்கவேண்டும்: சுயநலப்போக்குக் கொண்டு பொதுநலம் கொஞ்சமும் இல்லாத அல்லாஹ்வும் , இரசூலும் விரும்புவது இல்லை.

பொதுநலம் இஸ்லாத்தின் ஒரு அங்கம். உண்மை முஸ்லிமின் அடையாளம். சுருக்கமாக வேறொரு வார்த்தையில் சொன்னால் அது ஈமானின் ஒரு பகுதி.
பொதுநலம் இல்லாது  அடுத்தவர் நலன் கருதாது வாழுபவர் இஸ்லாத்தின் பண்பாடு வட்டத்திலிருந்து அவர் வெளியேறிகொண்டிருக்கிறார்.

قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «الْإِيمَانُ بِضْعٌ وَسَبْعُونَ - أَوْ بِضْعٌ وَسِتُّونَ - شُعْبَةً، فَأَفْضَلُهَا قَوْلُ لَا إِلَهَ إِلَّا اللهُ، وَأَدْنَاهَا إِمَاطَةُ الْأَذَى عَنِ الطَّرِيقِ، وَالْحَيَاءُ شُعْبَةٌ 
مِنَ الْإِيمَانِ» صحيح مسلم


நபி ஸல்லல்லாஹீ அலைஹி வஸல்லம் சொன்னார்கள்: ஈமான்  70 சொச்ச கிளைகள் அதில் சிறந்தது லாயிலாஹ இல்லல்லாஹு என்ற கலிமா, அதில் தாழ்ந்தது வழியில் மற்றவருக்கு இடையூறு தரும் பொருளை நீக்குவது.

ஈமானின் ஒரு அங்கம் பொதுநலச் சிந்தனை என்பதின் விளக்கம் தான் இந்த சில வார்த்தைகளும் ஒரு வழியும் என்பதை நாம் உணரவேண்டும்.
நாயகம் ஸல்லல்லாஹீ அலைஹி வஸல்லம் அவர்கள் நபியாக அனுப்படுவதற்கு முன்பும் அதிகமான பொதுநல வாழ்க்கையில் ஈடுபட்டிருந்தார்கள். அவர்களை பின்பற்றும் நாம் அவர்களை பின்பற்றினால் அல்லாஹ்வின் அன்பு கிட்டும் என குர்ஆனில்  அல்லாஹ் கூறிய பிறகும் முஸ்லிம்களாகிய நாம் சுயநலத்துடன் இல்லாமல் பொதுநலச்சிந்தனையை 
உருவாக்கவேண்டும்.

தன் இளம் வயதில் நாயகம் ஸல்லல்லாஹீ அலைஹி வஸல்லம் அவர்கள் 
மக்களுக்கு தேவையான வேலைகளை செய்வதில் ஈடுபட்டிருந்தார்கள். மக்களும் இவர்களை நம்பி தங்கள் பொருள்களையும் அலுவல்களையும் தந்தார்கள். அதுமட்டுமில்லாமல் அவர்களின் இளம் வயதில் ஒரு நலச்சங்கம் மக்காவில் அமைக்கப்பட்டது. மக்களுக்கான பிரச்சனைகளை தீர்ப்பது , அவர்களுக்கு பாதுகாப்பு தருவது போன்ற திட்டங்கள் தீட்டப்பட்டது. அந்த சங்கத்தில் நாயகம் அவர்களும் கலந்துகொண்டார்க
ள். அதில் கலந்துக்கொள்வது தனக்கு பிரியம் என்று ஸஹாபாக்களுக்கும் சொன்னார்கள்.
قال بعد أن شرّفه الله بالرسالة: «لقد شهدت مع عمومتي حلفا في دار عبد الله بن جدعان ما أحب أن لي به حمر النّعم  ولو دعيت به في الإسلام لأجبت

குர்ஆனில் அல்லாஹ் மூன்று கூட்டத்தை சொல்கிறான் 1. பாவம் செய்த கூட்டம் 2. பாவம் செய்யாமல் பாவத்தை தடுக்காத கூட்டம் 3. பாவம் செய்யாமல் பாவத்தை தடுத்த கூட்டம்.
இதில் அல்லாஹ் இரண்டை அழித்து ஒன்றை காப்பாற்றினான். பாதுகாப்புபெற்ற கூட்டம் மூன்றாவது கூட்டம். காரணம் அடுத்தவன் அழிவில் இருக்கும்போது எனக்கு என்ன? என்று போகிற சுயநல போக்கை இஸ்லாம் விரும்புவது கிடையாது.

وَاسْأَلْهُمْ عَنِ الْقَرْيَةِ الَّتِي كَانَتْ حَاضِرَةَ الْبَحْرِ إِذْ يَعْدُونَ فِي السَّبْتِ إِذْ تَأْتِيهِمْ حِيتَانُهُمْ يَوْمَ سَبْتِهِمْ شُرَّعًا وَيَوْمَ لَا يَسْبِتُونَ لَا تَأْتِيهِمْ كَذَلِكَ نَبْلُوهُمْ بِمَا كَانُوا يَفْسُقُونَ (163)  وَإِذْ قَالَتْ أُمَّةٌ مِنْهُمْ لِمَ تَعِظُونَ قَوْمًا اللَّهُ مُهْلِكُهُمْ أَوْ مُعَذِّبُهُمْ عَذَابًا شَدِيدًا قَالُوا مَعْذِرَةً إِلَى رَبِّكُمْ وَلَعَلَّهُمْ يَتَّقُونَ (164) فَلَمَّا نَسُوا مَا ذُكِّرُوا بِهِ أَنْجَيْنَا الَّذِينَ يَنْهَوْنَ عَنِ السُّوءِ وَأَخَذْنَا الَّذِينَ ظَلَمُوا بِعَذَابٍ بَئِيسٍ بِمَا كَانُوا يَفْسُقُونَ (165سورة الاعراف
عن ابن عباس رضي الله عنهما أنه توقف فيه . ونقل عنه أيضاً : هلكت الفرقتان ونجت الناهية ، وكان ابن عباس إذا قرأ هذه الآية بكى وقال : إن هؤلاء الذين سكتوا عن النهي عن المنكر هلكوا ، ونحن نرى أشياءننكرها ، ثم نسكت ولا نقول شيئا

அதனால்தான் அடுத்தவன் வழித்தவறி போகும்போது நமக்கென்ன என சுயநலம் விரும்பாத இஸ்லாம் அதை தடுக்கும் வழியின் அளவை சொல்லும்போது:
رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «مَنْ رَأَى مِنْكُمْ مُنْكَرًا فَلْيُغَيِّرْهُ بِيَدِهِ، فَإِنْ لَمْ يَسْتَطِعْ فَبِلِسَانِهِ، فَإِنْ لَمْ يَسْتَطِعْ فَبِقَلْبِهِ، وَذَلِكَ أَضْعَفُ الْإِيمَانِ» .
صحيح مسلم 1ஃ 69

முதலில் கையால் தடுக்க வேண்டும். இரண்டாவது நாவால் அதற்கு முடியவில்லையெனில் தன் மனதில் அந்த விஷயத்தை நினைத்து வெறுக்கவேண்டும்.
அதாவது அடுத்தவன் சீரழிவை பார்க்கும்போது நம் உள்ளத்தில் ஒரு உருக்கமும் கவலையும் இருக்கவேண்டும் என்பது நாயகம் சொல்லவருகிற கருத்து.
عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ
صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: ' بَيْنَا رَجُلٌ بِفَلَاةٍ مِنَ الْأَرْضِ، فَسَمِعَ صَوْتًا فِي سَحَابَةٍ: اسْقِ حَدِيقَةَ فُلَانٍ، فَتَنَحَّى ذَلِكَ السَّحَابُ، فَأَفْرَغَ مَاءَهُ فِي حَرَّةٍ، فَإِذَا شَرْجَةٌ مِنْ تِلْكَ الشِّرَاجِ قَدِ اسْتَوْعَبَتْ ذَلِكَ الْمَاءَ كُلَّهُ، فَتَتَبَّعَ الْمَاءَ، فَإِذَا رَجُلٌ قَائِمٌ فِي حَدِيقَتِهِ يُحَوِّلُ الْمَاءَ بِمِسْحَاتِهِ، فَقَالَ لَهُ: يَا عَبْدَ اللهِ مَا اسْمُكَ؟ قَالَ: فُلَانٌ - لِلِاسْمِ الَّذِي سَمِعَ فِي السَّحَابَةِ - فَقَالَ لَهُ: يَا عَبْدَ اللهِ لِمَ تَسْأَلُنِي عَنِ اسْمِي؟ فَقَالَ: إِنِّي سَمِعْتُ صَوْتًا فِي السَّحَابِ الَّذِي هَذَا مَاؤُهُ يَقُولُ: اسْقِ حَدِيقَةَ فُلَانٍ، لِاسْمِكَ، فَمَا تَصْنَعُ فِيهَا؟ قَالَ: أَمَّا إِذْ قُلْتَ هَذَا، فَإِنِّي أَنْظُرُ إِلَى مَا يَخْرُجُ مِنْهَا، فَأَتَصَدَّقُ بِثُلُثِهِ، وَآكُلُ أَنَا وَعِيَالِي ثُلُثًا، وَأَرُدُّ فِيهَا ثُلُثَهُ '،
صحيح مسلم

ஒரு மனிதர்  பொட்டல்காடான இடத்தில் இருக்கும்போது வானத்தில் ஒரு சத்தம் இன்னாள் இடத்திற்குச்சென்று அங்கு தண்ணீர் பாய்ச்சு என ஓர் ஓசை. அதை கேட்டு அந்த மேகத்தை பின்தொடர்ந்து சென்றார். அங்கு ஒரு விவசாயி வீட்டு நிலத்தில் தண்ணீர் பாய்ச்சியது. இவரிடத்தில் அந்த மனிதர் நடந்த சம்பவத்தை எடுத்து சொல்லி இந்த சிறப்பிற்கு என்ன காரணம் என கேட்டார். ஆதற்கு அந்த விவசாயி நான் என் நிலத்தில் விழையும் பொருட்களை மூன்றாக பிறிப்பேன்.
ஒரு பங்கு என் குடுப்பத்திற்கு இரண்டாவது பங்கு என் நிலத்திற்கு அடுத்த வருட விதைக்கு மூன்றாவது பங்கு ஏழைகளுக்கு தானம் செய்துவிடுவேன் என்றார்கள்.
இப்படி பொதுநலச்சிந்தனையுடன் செயல்பட்டதற்காகத்தான் அந்த விவசாயிற்கு அல்லாஹ் தண்ணீர் அனுப்பிவைத்தான் என பார்க்கும்போது பொது நலத்திற்க்கு அல்லாஹ்வின் அருள்உண்டு என்பது நமக்கு தெளிவாகிறது.
நபி ஸல்லல்லாஹீ அலைஹி வஸல்லம் கூறினார்கள்:

وَاللهُ فِي عَوْنِ الْعَبْدِ مَا كَانَ الْعَبْدُ فِي عَوْنِ أَخِيهِ،

ஒருவன் மற்ற சகோதரருக்கு உதவி செய்தால் அல்லாஹ் அவனுக்கு உதவி செய்கிறான்.
அடுத்தவர் நலனை  விரும்பி வேலை செய்பவர் தன் நலத்திற்கு அல்லாஹ் பொருப்பேற்றுக்கொள்கிறான் என்ற எண்ணம் ஏற்;பட வேண்டும்.

عن أبي هريرة ، رضي الله عنه ، قال : قيل للنبي صَلى الله عَلَيه وسَلَّم : إن فلانة تقوم الليل وتصوم النهار ، وتصدق وتفعل ، وتؤذي جيرانها بلسانها. فقا
ل رسول الله صَلى الله عَلَيه وسَلَّم : لا خير فيها ، هي من أهل النار. قالوا : وفلانة تصلي المكتوبة وتصدوا بأثوار ولا تؤذي أحدًا. فقال رسول الله صَلى الله عَلَيه وسَلَّم : هي من أهل الجنة.

நபி ஸல்லல்லாஹீ அலைஹி வஸல்லம் அவர்களிடம் கேட்கப்பட்டது: ஒரு பெண் இரவில் நின்று வணங்கி பகலில் நோன்பு நோற்று தானம் செய்கிறாள் ஆனால் அவள் தன் நாவால் அடுத்தவர்களுக்கு நோவினை தருகிறாள் மற்ற பெண் கடமையான வணக்கங்களை தொழுது அடுத்தவருக்கு இடையூறு இல்லாமல் வாழ்கிறாள் என இரண்டு பெண்களை பற்றி கேட்ட போது நாயகம் சொன்னார்கள்: முதலாவது பெண் நரகவாசி இரண்டாவது பெண் சொர்கவாசி என்றார்கள்.

அடுத்தவர் நலனை கருத்தில் கொள்ளாது பிறருக்கு துன்பம் தர விரும்புவர் என்ன அமல் செய்தாலும் அவர் அல்லாஹ்விடத்தில் மிகுந்த கோபத்திற்கு சொந்தக்காரர் என்பது இந்த ஹதீஸில் நாம் விளங்கும் கருத்து.
நாயகம் முன்பு வாழ்ந்த இரண்டு பெண்களை பற்றி சொன்னார்கள்: ஒரு பெண் விபச்சாரி ஆனால் தாகத்தில் இருந்த ஒரு நாயின் மீது இரக்கப்பட்டு அதற்கு தன் ஷPவால் கிணற்றிலிருந்து தண்ணீர் இறைத்து கொடுத்ததால் அவள் சொர்கம் அடைந்தால். ஒரு பெண் நல்ல வணக்கசாலி அவள் தன் பூனையை கட்டிப்போட்டு தான் வெளியே சென்றுவிட்டதால் அது உணவில்லாமல் இறந்துபோய்விட்டது. பூனையின் மீது இரக்கம் காட்டாமல் இருந்தமையால் அவள் நரகவாதி என்ற நாயகத்தின் வாக்கை பார்க்கும்போது அடுத்தவருக்கு இடையூறு தரும் துன்பம் அது மிருகங்களுக்காக இருந்தாலும் அல்லாஹ் நம்மீது கோபம் கொள்கிறான்.

عن أبى ذر قال قال النبي صلى الله
عليه وسلم يا يا أبا ذر إذا طبخت مرقة فأكثر ماء المرقة وتعاهد
جيرانك أو اقسم في جيرانك


அபுதர்ரே ந{ங்கள் குழப்பு செய்தால் அதில் அதிகம் தண்ணீரை ஊற்;றி உங்கள் பக்கத்து வீட்டுக்காரருக்கு தாருங்கள்.


كان خيثمة يجعل صررا فيجلس في المسجد فإذا رأى رجلا من أصحابه في ثياب رثة (1) اعترض فأعطاه صرة

கைசமா என்ற பெரியார் பல பன முடிச்சுகளுடன் மஸ்ஜிதில் அமருவார். தன் தோழர்கள் யாராவது பங்கரை ஆடையில் வந்தால் அவருக்கு ஒரு பன முடிச்சை தருவார்.

كان للحسن البصري بيت إذا فتح بابه فهو إذنه فجاء أعرابي فصادفه مفتوحا فدخل والحسن في المذهب فجاء إلى شيء تحت سرير الحسن فأخرجه وجعل يأكل فنظر إليه الحسن وجعل يبكي فقيل له : « ما يبكيك يا أبا سعيد ؟ » فقال : « ذكرني هذا أخلاق قوم قد مضوا »

ஹஸன் பஸரி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களின் வீடு திறக்கப்பட்டு இருந்தால் யார் வேண்டுமானாலும் உள்ளே வந்து சாப்பிட்டுக்கொள்ளலாம் என பழக்கம் வைத்திருந்தார்கள். அப்படி ஒரு நபர் இவர்கள் கழிவறையில் இருக்கும்போது உள்ளே நுழைந்து சாப்பிட்டு கொணடிருந்தார்கள். பின் அவர்களின் கட்டிலுக்கு கீழ் இருந்த உணவை எடுத்து சாப்பிட்டுகொண்டிருந்தார்கள். இதை பார்த்த ஹஸன் அவர்கள் அழுது விட்டு கூறினார்கள்: முன் சென்றவர்களின் நடைமுறையை இந்த செயல் எனக்கு நியாபகப்படுத்துகிறது.

இவ்வாறு அடுத்தவருக்காக அடுத்தவரின் நலனுக்காக என்றுதான் முன்னோர்கள் வாழ்ந்து சென்றார்கள். ஆனால் நாம் இஸ்லாம் என்றும் விரும்பாத சுயநலத்தை ஆடையாக அணிந்து அடுத்தவரின் சிரமத்தை புரியாமலேயே வாழ்கிறோம். வாழ்க்கையை மாற்றுவோம் வாழ்ந்து சாதிப்போம்.

3 comments:

அல்ஹம்து லில்லாஹ்

அல்ஹம்து லில்லாஹ்

بارك الله, خير ك الله حياتك

Post a Comment