தொடக்க கல்வியில், மொழியின் முக்கியத்துவத்துடன் குழந்தையின் மொழித் திறமையும் பரவலாக
ஏற்றுக்கொள்ளப்பட்டதாகும். பரவலான பலரும் ஒப்புக்கொள்ளப்பட்டதற்கான காரணங்களை
ஆராய்ந்து தெரிவது என்பது மிகவும் கடினம். குழந்தைகளுக்கு மட்டுமின்றி, நம் ஒவ்வொருக்கும், தொடர்பு கொள்ள மொழி மிகவும் அவசியம் என்பது கண்கூடு.
ஆகையால், எல்லாப் பாடங்களையும் புரிந்து தெளிவதற்கு மொழி அறிவு
அவசியமாகிறது. கணிதம், அறிவியல், அல்லது வேறு எந்த
அறிவுத் துறையினைப் புரிந்து தெளிவதற்கும் மொழியின் முக்கியத்துவம் உணரப்படும். உண்மையில், மொழியின் துணைகொண்டுந்தான் குழந்தை சிந்திக்க, முடிவெடுக்க, செயல்பட முடிகிறது. கல்வியின் அனைத்துத் தன்மைகளையும்
தொடர்ப்பு படுத்திப் பார்க்கிறது. நினைப்பது, முடிவெடுப்பது, செயல்படுவது – ஆகிய அனைத்தையும் மொழி மூலமாகவும், மொழியின் உதவியாலுமே குழந்தை செய்கிறது. சமூகத்தின் ஓர் அங்கமாக குழந்தை
இருப்பதற்கு, மொழிதான் முதன்மை இடத்தை வகிக்கிறது. இது குழந்தைக்கு
மட்டுமின்றி, அனைவருக்கும் பொருந்தும்.
நபிமார்கள் மக்கள் விளங்கும் பொருட்டு அவர்களின் மொழிகளிலேயே பேசினார்கள்
وَمَا
أَرْسَلْنَا مِنْ رَسُولٍ إِلَّا بِلِسَانِ قَوْمِهِ لِيُبَيِّنَ لَهُمْ فَيُضِلُّ
اللَّهُ مَنْ يَشَاءُ وَيَهْدي مَنْ يَشَاءُ وَهُوَ الْعَزِيزُ الْحَكِيمُ
14:4
14:4.
ஒவ்வொரு தூதரையும்
அவருடைய சமூகத்தாருக்கு அவர் விளக்கிக் கூறுவதற்காக அவர்களுடைய மொழியிலேயே
(போதிக்கும் படி) நாம் அனுப்பிவைத்தோம்; அல்லாஹ் தான் நாடியோரை வழிதவறச் செய்கின்றான், தான் நாடியோருக்கு நேர்வழியையும் காண்பிக்கின்றான்; அவன் மிகைத்தவனாகவும் ஞானமுடையவனாகவும் இருக்கின்றான்.
மொழியைத் திறமையாகக் கையாண்டு, பயன்படுத்துவது தான் மொழிக்கற்றல் என்பதாகும். பொருளை அறிதல், பொருளை உணர்தல், பொருளை வெளிப்படுத்துதல் ஆகிய அனைத்தும் மொழிக்கற்றலின்
பால் படும்.
உலகில் அதிக மொழிகளை பேசும்
நாடு என பெருமை கொண்ட இந்தியாவில் மட்டுமே சுமார் 1652 மொழிகள் பேச்சு வாக்கில் உள்ளதாக விக்கிபீடியா
தெரிவிக்கிறது. தொழில் நுட்ப மாற்றங்களாலும், குறிப்பிட்ட மொழி பேசும் இனத்தவர்களின் அழிவினாலும் உலகம் முழுவதும் சுமார் 3000 க்கும் அதிகமான
மொழிகள் அழிவு நிலையில் உள்ளதாம். இந்தியாவில் மட்டும் சுமார் 53 மொழிகள் அழிவு
நிலையில் இருக்கிறதாம். ஓரிரு தலைமுறையில் இந்த மொழிகள் அழிந்து விடும் அபாயத்தில்
இருக்கிறதால் பின்னர் வரும் சந்ததியினருக்கு இவைகளை பற்றி தெரியாமலே போய் விடும்.
இந்த அழிவு நிலையில் உள்ள
மொழிகளை காக்க பின்னர் வரும் சந்ததியினரும் இந்த மொழிகளை பற்றி அறிந்து கொள்ள
கூகுள் Linguistic Diversity நிறுவனத்துடன் இணைந்து ஒரு புதிய திட்டத்தை உருவாக்கி உள்ளது. அதற்காக www.endangeredlanguages.com என்ற புதிய தளத்தை உருவாக்கி உள்ளது. இந்த தளத்தில் சென்று Explore பட்டனை அழுத்தி உலக வரைபடம்
வரும் அதில் எந்தெந்த நாடுகளில் எத்தனை மொழிகள் அழிவு நிலையில் உள்ளது என்ற முழு
பட்டியலையும் பார்த்து கொள்ளலாம்.
உலகில் எத்தனை மொழிகள் இருந்தாலும்
அழிந்தாலும் நிலையான மொழி அரபி மொழி மட்டும் தான். காரணம் அது
நபிகளாருக்கு பிடித்த
மொழி
قَالَ
رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَحبُّوا الْعَرَب لثلاث
لِأَنِّي عَرَبِيّ وَالْقُرْآن عَرَبِيّ وَكَلَام أهل الْجنَّة عَرَبِيّ
1/357
மூன்று காரணத்திற்காக அரபி மொழியைப் பிரியம்
கொள்ளுங்கள்
1) நான் அரபி 2) குர்ஆனின் மொழி அரபி 3) சொர்க்கவாசிகளின் மொழி அரபி
(தபராணி)
உலகில் அதிகம்
பேசப்படும் மொழிகள்!!!
உலக அளவில் 6500க்கும் மேற்பட்ட மொழிகள் பேசப்படுகின்றன. இதில் சுமார் 2000 மொழிகள் 1000த்திற்கும் குறைவான மக்கள் தொகையினரால் மட்டுமே
பேசப்படுகின்றன.
உலகில் 10 கோடிக்கும்
மேற்பட்ட மக்கள் தொகையினரால் பேசப்படும் மொழிகள் 13 மட்டுமே ஆகும். அவை, மண்டேரியன் சீனம், ஆங்கிலம், ஹிந்தி, ஸ்பெயின், ரஷ்ய மொழி, அரபு, வங்காள மொழி, போர்த்துகீசிய மொழி, மலாய் இந்தோனேசியா மொழி, பிரெஞ்சு மொழி, ஜப்பானிய மொழி, ஜெர்மனிய மொழி மற்றும் உருது ஆகியனவாகும்.
உலகில் அதிக மக்கள் தொகையினரால்
பேசப்படுகின்ற மண்டேரியன் சீன மொழியானது 6000 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாகும். உலகில் 6 மொழிகளே பழமையான
மொழிகள் அவை, தமிழ் மொழி, அரபு மொழி, சீன மொழி, சமஸ்கிருத மொழி, கிரேக்க மொழி, இலத்தீன் மொழி.
உலகில் இலத்தீன் மொழியினை ஆட்சி
மொழியாகக் கொண்ட ஒரே நாடு வத்திக்கான் ஆகும்.
உலகில் அதிக மொழிகள்
பேசப்படுகின்ற நாடு பவுவா நியூ கினியா ஆகும். பசுபிக் சமுத்திரத்தின் தென் மேற்கே
அமைந்துள்ள இந்த நாட்டில் 850-க்கும் மேற்பட்ட மொழிகள் பேசப்படுகின்றன.
ஆப்பிரிக்காவில் 2000-க்கும் மேற்பட்ட மொழிகள் பேசப்படுகின்றன. இதில் 80 சதவீத மொழிகளுக்கு எழுத்து வடிவம் இல்லை. உலகில் பேசப்படுகின்றன
மொழிகளில் பாதிக்கும் மேற்பட்ட மொழிகள் ஆசியாவிலும், பசுபிக் தீவுகளிலும் பேசப்படுகின்றன.
( நன்றி: தமிழ்வலைப்பதிவுகள் அரங்கம்)
இப்படி
எத்தனையோ தொன்மையான மொழிகள் இருக்க அந்த ரப்புக்கு பிடித்த மொழி அரபியாகத் தான்
இருக்கிறது. அதனால்
தான் என்னவோ அவன் இறுதி வேதத்தை அரபியில் இறக்கி வைத்தான் போலும்.
நாம் விளங்குவதற்காக
அரபி மொழியில்
إِنَّا
أَنْزَلْنَاهُ قُرْآنًا عَرَبِيًّا لَعَلَّكُمْ تَعْقِلُونَ 12:2
12:2. நீங்கள்
விளங்கிக் கொள்வதற்காக, இதனை
அரபி மொழியிலான குர்ஆனாக நிச்சயமாக நாமே இறக்கி வைத்தோம்.
{إِنَّا
أَنزلْنَاهُ قُرْآنًا عَرَبِيًّا لَعَلَّكُمْ تَعْقِلُونَ} وَذَلِكَ لِأَنَّ
لُغَةَ الْعَرَبِ أَفْصَحُ اللُّغَاتِ
وَأَبْيَنُهَا وَأَوْسَعُهَا،
)ابن كثير(
மொழிகள்
வேறுபாடு படிப்பினைக்காகத் தான்
وَمِنْ آيَاتِهِ خَلْقُ السَّمَاوَاتِ
وَالْأَرْضِ وَاخْتِلَافُ أَلْسِنَتِكُمْ وَأَلْوَانِكُمْ إِنَّ فِي ذَلِكَ
لَآيَاتٍ لِلْعَالِمِينَ
30:22. மேலும் வானங்களையும், பூமியையும் படைத்திருப்பதும்; உங்களுடைய மொழிகளும் உங்களுடைய நிறங்களும் வேறுபட்டிருப்பதும், அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளவையாகும். நிச்சயமாக இதில் கற்றரிந்தோருக்கு
அத்தாட்சிகள் இருக்கின்றன.
وَاخْتِلافُ
أَلْسِنَتِكُمْ وَأَلْوانِكُمْ) اللِّسَانُ فِي الْفَمِ، وَفِيهِ اخْتِلَافُ
اللُّغَاتِ: مِنَ الْعَرَبِيَّةِ وَالْعَجَمِيَّةِ وَالتُّرْكِيَّةِ
وَالرُّومِيَّةِ. وَاخْتِلَافُ الْأَلْوَانِ فِي الصُّوَرِ: مِنَ الْبَيَاضِ
وَالسَّوَادِ وَالْحُمْرَةِ، فَلَا تَكَادُ تَرَى أَحَدًا إِلَّا وَأَنْتَ
تُفَرِّقُ بَيْنَهُ وَبَيْنَ الْآخَرِ. وَلَيْسَ هَذِهِ الْأَشْيَاءُ مِنْ فِعْلِ
النُّطْفَةِ وَلَا مِنْ فِعْلِ الْأَبَوَيْنِ، فَلَا بُدَّ مِنْ فَاعِلٍ، فَعُلِمَ
أَنَّ الْفَاعِلَ هُوَ اللَّهُ تَعَالَى، فَهَذَا مِنْ أَدَلِّ دَلِيلٍ عَلَى
الْمُدَبِّرِ الْبَارِئِ. (إِنَّ فِي ذلِكَ لَآياتٍ لِلْعالِمِينَ
(تفسير قرطبي)
இப்படி வேறுபட்ட பல மொழிகளில் நாம் கற்கவேண்டிய முக்கியமான முதன்மையான மொழி அரபி மொழி. ஏனென்றால் நம்முடைய தொழுகையின் எல்லா நிலைகளிலும் அரபியில் தான் ஓதுகிறோம்.
அரபியை சிறு வயதிலிருந்தே கற்றுக்கொள்ள நாம் பிள்ளைகளை ஏவ வேண்டும். காரணம் முப்பது நாற்பது வயதை தாண்டிய பிறகு கற்றுக்கொள்வது சிரமத்தை ஏற்படுத்தும்.
கதைக்காக சொல்லுவார்கள், ஒரு ஊரில் ஒரு ஆலிம் நாற்பது வயதை தாண்டிய நபருக்கு யஸ்ஸர்னல் குர்ஆன் கற்றுக் கொடுத்தாராம்.அப்பொழுது (حتي جاء ) ஹத்தா ஜாஅ என்று சொல்வதற்கு பதிலாக நாற்பது வயதை
தாண்டிய நபர் அத்தா சாக என்று கூறினாராம். படிப்பதற்கு சிரிப்பாக இருந்தாலும் எதார்த்தம் இது தான். தமிழில் கூறுவார்கள் இளமையில் கல் என்று. சிறு வயதில்
படிப்பது பசுமரத்தாணி போல் சிறுவர்களுக்கு மனதில் பதிந்து விடும்.
நிச்சயம் இது
இறைவேதமே
أَفَلَا يَتَدَبَّرُونَ الْقُرْآنَ وَلَوْ
كَانَ مِنْ عِنْدِ غَيْرِ اللَّهِ لَوَجَدُوا فِيهِ اخْتِلَافًا كَثِيرً 4:82
குர்ஆன் இறைவேதமென பறைசாற்றும் வசனங்கள் ஒரு
பார்வை....
பூமியிலிருந்து மேலேறிச் செல்பவற்றைத்
திருப்பியனுப்பும் தன்மை வானத்திற்கு உண்டு என்ற அறிவியல் உண்மை - 86:11
மனித உடலின் தோல்களில் தான் வேதனையை உணரும் நரம்புகள்
உள்ளன என்ற அறிவியல் விளக்கம் - 4:56
விண்வெளிப் பயணம் மேற்கொள்ளும் போது மனித இதயம்
சுருங்கும் என்ற அறிவியல் உண்மை - 6:125
பூமியில் மட்டும் தான் உயிரினங்கள் வாழ முடியும் என்ற
உண்மை - 2:36, 7:24, 7:25
ஆகாயத்தில் பறந்து கொண்டிருக்கும் பறவைகள் பூமியின்
மீது மோதாமல் இருப்பதற்குப் புவி ஈர்ப்பு விசையே காரணம் என்ற உண்மை - 16:79, 67:19
விண்வெளியில் எவ்வளவு தொலைவு செல்ல முடிந்தாலும், பூமிக்கு அடியில்
மலையின் உயரம் அளவுக்குச் செல்ல இயலாது என்ற பேருண்மை - 17:37
பூமி உருண்டை என்பதை உணர்த்தும் துல்கர்ணைன் பயணம் - 18:90
பூமி தொட்டிலாக அமைக்கப்பட்ட அற்புதம் - 20:53, 43:10, 78:6
பெரு வெடிப்பின் மூலமே உலகம் தோன்றியது என்ற தற்காலக்
கண்டுபிடிப்பு குறித்த அறிவியல் முன்னறிவிப்பு - 21:30
கருவில் வளரும் குழந்தை மூன்று மாதங்கள் கழித்தே மனித
உருவம் பெறும் - 23:14
நிலத்தடி நீர் எவ்வாறு சேமிக்கப்படுகிறது - 23:18
கடல்கள் ஒன்றோடொன்று இணைந்திருந்தாலும் அவற்றுக்கு
இடையே தடுப்பு உள்ளது என்ற அறிவியல் உண்மை - 25:53, 27:61, 35:12
55:19,20
காற்றின் சராசரி வேகம் எவ்வளவு என்பதைக் கணித்துச்
சொல்லும் அற்புதம் - 34:12
வானங்களுக்கும் பூமிக்கும் இடையே ஈர்ப்பு சக்தி - 35:41
பல கிழக்குகள், பல மேற்குகள் என்று கூறுவதன் மூலம் பூமி உருண்டை
என்பதை நிரூபித்தல் - 37:5, 55:17, 70:40
பெரு வெடிப்புக்குப் பின் தூசுப் படலத்திலிருந்து
கோள்கள் உருவாயின - 41:11
மனித இனம் உள்ளிட்ட அனைத்து உயிரினங்களும்
பூமியிலிருந்தே தங்கள் எடையை எடுத்துக் கொள்கின்றன என்ற உண்மை - 6:98, 50:4, 71:17
விண்வெளிப் பயணம் சாத்தியமே என்று அறிவித்தல் - 55:33-35
விரல் ரேகை தான் மனிதனின் முக்கிய அடையாளம் - 75:4
உயிரின உற்பத்தியில் பெண்களுக்கும் பங்குண்டு - 76:2
தேனீக்களின் வாயிலிருந்து தேன் வெளிப்படவில்லை, வயிற்றிலிருந்து
வெளியாகின்றது என்ற அறிவியல் - 16:69
கடலின் மேற்புறத்தில் மட்டுமின்றி கடல் ஆழத்திலும்
பேரலைகள் ஏற்படுகின்றன என்ற அறிவியல் கருத்து - 24:40
அன்னியப் பொருள் எதையும் ஏற்காத கர்ப்ப அறை, கருவை மட்டும்
குறிப்பிட்ட காலம் வரை ஏற்றுக் கொள்ளும் அற்புதம் - 13:8
பொய் சொல்வதற்கான நரம்புகள் மூளையின் முன் பகுதியில்
தான் உள்ளன என்ற விஞ்ஞானக் கூற்றை முன்பே தெரிவித்தது - 96:15
காற்றிலுள்ள ஆக்ஸிஜன் நீக்கப்பட்டால் அது அனைத்தையும்
அழித்து விடும் என்ற அறிவியல் உண்மை - 51:41,42
கைகளை விலாப்புறத்துடன் சேர்த்துக் கொள்வது பயத்தைக்
குறைக்கும் என்ற மனோதத்துவ உண்மை - 28:32
விந்து எங்கிருந்து வெளியேறுகின்றது என்ற அறிவியல்
உண்மை - 86:7
வான்வெளியிலும் பாதைகள் உண்டு என்று கூறும் வானியல்
விஞ்ஞானம் - 51:7
பூமிக்கு ஈர்க்கும் சக்தி உள்ளது என்ற அறிவியல் உண்மை
- 13:2, 31:10
சூரியனும் கோள்களும் ஓடுகின்றன என்ற அறிவியல் உண்மை - 13:2, 31:29, 35:13, 36:38, 39:5
சந்திரன் பிளந்தது பற்றியும் அதற்கான சான்று
சந்திரனில் பதிவாகி உள்ளது பற்றியும் அறிவித்திருப்பது - 54:2
வான் எல்லை விரிவடைந்து கொண்டே செல்கின்றது என்ற அறிவியல்
விளக்கம் - 51:47
உயிரினங்கள் மட்டுமின்றி அனைத்திலும் ஜோடி உண்டு என்ற
உண்மை - 13:3, 20:53, 36:36, 43:12, 51:49
உலக வெப்ப மயமாதலால் பனிப்பாறை உருகி, கடல் மட்டம்
உயர்ந்து நிலப்பரப்பு குறையும் என்ற அறிவியல் முன்னறிவிப்பு - 13:41, 21:44
வான் மழை எவ்வாறு உருவாகின்றது என்பது பற்றி இன்றைய
விஞ்ஞானிகளின் கூற்றை அப்படியே முழு விபரத்துடன் விளக்கும் அதிசயம் - 24:43
அணு ஆயுதங்கள் தயாரிக்க முடியும் என்பது பற்றிய
முன்னறிவிப்பு - 105:1-5, 11:82, 15:74, 26:173, 27:58,
51:32
"இருள்கள்" என்று பன்மையாகக் கூறுவதன் மூலம் நிறங்களுக்கு
அலை நீளம் உண்டு என்பதையும், நிறத்திற்கு நிறம் அலை நீளம் மாறுபடும் என்பதையும்
விளக்கியுள்ளது - 2:17, 2:19, 2:257, 5:16, 6:1, 6:39,
6:59, 6:63, 6:97, 6:122, 13:16, 14:1, 14:5, 21:87, 24:40, 27:63, 33:43, 35:20,
39:6, 57:9, 65:11
பொருட்களைக் கெட்டுப் போகாமல் பாதுகாக்கும் தொழில்
நுட்பம் பற்றிய முன்னறிவிப்பு - 2:259
குளோனிங் சாத்தியம் என்பது பற்றி 14 நூற்றாண்டுகளுக்கு முன்பே கூறியது - 19:21, 19:29,30, 21:91, 23:50
ஒட்டகத்தின் விந்தையான உடலமைப்பைப் பற்றிய விளக்கம் - 88:17, 36:41,42
இரும்பு இப்பூமியில் உருவாகவில்லை, வானிலிருந்து
இறக்கப்பட்டது என்பது பற்றி அறிவியல் உண்மை - 57:25
படுவேகமாகச் சுழலும் பூமியை அதிர்விலிருந்து காக்கும்
முளைகளாக மலைகள் உள்ளன - 13:3, 15:19, 16:15,
21:31, 27:61, 31:10, 41:10, 50:7, 77:27. 78:7, 79:32
பூமி உருவானதற்குப் பின்னர் தான் மலைகள் உருவாயின
என்ற விஞ்ஞானிகளின் கூற்றை உண்மைப்படுத்துகிறது. - 41:9,10
நவீனக் கருவிகளும் ஆய்வுக் கூடங்களும் இல்லாத
காலத்தில், பாலூட்டி
உயிரினங்களிடம் பால் எவ்வாறு உற்பத்தியாகின்றது என்பது குறித்த அறிவியல் உண்மை - 16:66
மனிதனைத் தூக்கிச் செல்லும் அளவுக்குப் பெரிய பறவைகள்
உலகத்தில் இருந்தன என்ற அறிவியல் உண்மை - 22:31
வருடத்திற்கு எத்தனை மாதங்கள் என்பது
நெறிமுறைப்படுத்தப்படாமல் இருந்த காலத்தில் 12 மாதங்கள் தான்
என்று அறிவித்தது - 9:36
கவலையில் ஆழ்ந்திருப்பவர்களுக்கு, தவறான தகவல் மூலம்
அதைவிடப் பெருங்கவலையை ஏற்படுத்தினால் கவலை மறைந்து விடும் என்ற மனோதத்துவ
விளக்கம் - 3:153
முன்னறிவிப்புகள்
கஃபா ஆலயம் காலாகாலம் நிலைத்திருக்குமென்ற
முன்னறிவிப்பு - 2:125, 3:97, 5:97, 14:35, 28:57, 29:67,
95:3, 105:1-5, 106:3,4
மக்காவாசிகள் வளமான வாழ்வை அடைவார்கள் என்ற முன்னறிவிப்பு
- 9:28
நபிகள் நாயகம் மக்களோடு கலந்து வாழ்ந்திருந்தும், அவர்களை
மனிதர்களால் கொல்ல முடியாது என்று பிரகடனம் - 5:67
பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் கடலில்
மூழ்கடிக்கப்பட்ட ஃபிர்அவ்ன் என்பவனது உடல் பாதுகாக்கப்பட்டுள்ளது என்ற
முன்னறிவிப்பு - 10:92
குதிரை, ஒட்டகங்கள் போன்ற வாகனங்களை மட்டுமே மனிதன்
அறிந்திருந்த காலத்தில், நவீன வாகனங்கள் எதிர்காலத்தில் கண்டுபிடிக்கப்படும்
என்ற முன்னறிவிப்பு - 16:8
மக்காவில் முஸ்லிம்கள் அடி உதைகளுக்கு ஆளாகிக்
கொண்டிருந்த காலத்தில், விரைவில் இஸ்லாமிய ஆட்சி உருவாகும் என்ற முன்னறிவிப்பு
- 73:20
முஸ்லிம்கள் மிகச் சிறுபான்மையாக இருந்த காலத்தில், நபிகள் நாயகத்தின்
எதிரிகள் தோற்கடிக்கப்படுவார்கள் என்ற முன்னறிவிப்பு - 17:76, 54:45
நபிகள் நாயகம் காலத்தில் பாரசீகர்களால் ரோமாபுரி
வல்லரசு தோற்கடிக்கப்பட்டு, நிர்மூலமாக்கப்பட்டது. ரோமாபுரி வெற்றி பெறும் என்று
கற்பனை கூடச் செய்ய முடியாத நேரத்தில், "சில ஆண்டுகளில் ரோமாபுரி, பாரசீகத்தை வெற்றி
கொள்ளும்" என்ற முன்னறிவிப்பு - 30:2,3,4
நபிகள் நாயகம் அவர்கள் உயிருக்குப் பயந்து மக்காவை
விட்டு வெளியேறி அகதியாக இருந்த நிலையில், அவர்கள் மக்காவை வெற்றி கொள்வார்கள் என்ற
முன்னறிவிப்பு - 28:85
பாலைவனமாக இருந்த மக்காவுக்கு, உலகின் பல
பகுதிகளிலிருந்தும் கனிகள் வந்து சேரும் என்ற முன்னறிவிப்பு - 28:57
ஒரு மலைக் குகையில் வேதச் சுவடிகள் பாதுகாக்கப்பட்டது
பற்றிய முன்னறிவிப்பு - 18:9
முஹம்மது நபியின் பெரிய தந்தையான அபூலஹப் என்பவன்
இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ள மாட்டான் என்ற முன்னறிவிப்பு - 111:1,2
பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட பிரளயத்தின்
போது நூஹ் என்ற இறைத்தூதர் கப்பலில் காப்பாற்றப்பட்டார். அந்தக் கப்பல் ஒரு மலை
மீது பாதுகாக்கப்பட்டுள்ளது என்ற முன்னறிவிப்பு - 11:44, 29:15, 54:15
மதீனாவில் ஆதிக்கம் செய்து கொண்டிருந்த நயவஞ்சகர்கள், விரைவில்
வெளியேற்றப்படுவார்கள் என்ற முன்னறிவிப்பு - 33:60
குர்ஆன் காலாகாலத்துக்கும் பாதுகாக்கப்படும் என்ற
முன்னறிவிப்பு - 15:9 அல்லாஹு அக்பர்
குர்ஆன்
ஓதுவதினால் பரிசுத்த மலக்குகளின் வருகை
أَنَّ
أَبَا سَعِيدٍ الْخُدْرِيَّ، حَدَّثَهُ أَنَّ أُسَيْدَ بْنَ حُضَيْرٍ بَيْنَمَا
هُوَ لَيْلَةً يَقْرَأُ فِي مِرْبَدِهِ، إِذْ جَالَتْ فَرَسُهُ، فَقَرَأَ، ثُمَّ
جَالَتْ أُخْرَى، فَقَرَأَ، ثُمَّ جَالَتْ أَيْضًا، قَالَ أُسَيْدٌ: فَخَشِيتُ
أَنْ تَطَأَ يَحْيَى، فَقُمْتُ إِلَيْهَا، فَإِذَا مِثْلُ الظُّلَّةِ فَوْقَ
رَأْسِي فِيهَا أَمْثَالُ السُّرُجِ، عَرَجَتْ فِي الْجَوِّ حَتَّى مَا أَرَاهَا،
قَالَ: فَغَدَوْتُ عَلَى رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ،
فَقُلْتُ: يَا رَسُولَ اللهِ بَيْنَمَا أَنَا الْبَارِحَةَ مِنْ جَوْفِ اللَّيْلِ
أَقْرَأُ فِي مِرْبَدِي، إِذْ جَالَتْ فَرَسِي، فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى
اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «اقْرَأِ ابْنَ حُضَيْرٍ» قَالَ: فَقَرَأْتُ، ثُمَّ
جَالَتْ أَيْضًا، فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «اقْرَأِ
ابْنَ حُضَيْرٍ» قَالَ: فَقَرَأْتُ، ثُمَّ جَالَتْ أَيْضًا، فَقَالَ رَسُولُ اللهِ
صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «اقْرَأِ ابْنَ حُضَيْرٍ» قَالَ: فَانْصَرَفْتُ،
وَكَانَ يَحْيَى قَرِيبًا مِنْهَا، خَشِيتُ أَنْ تَطَأَهُ، فَرَأَيْتُ مِثْلَ
الظُّلَّةِ فِيهَا أَمْثَالُ السُّرُجِ، عَرَجَتْ فِي الْجَوِّ حَتَّى مَا
أَرَاهَا، فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «تِلْكَ
الْمَلَائِكَةُ كَانَتْ تَسْتَمِعُ لَكَ، وَلَوْ قَرَأْتَ لَأَصْبَحَتْ يَرَاهَا
النَّاسُ مَا تَسْتَتِرُ مِنْهُمْ»
1460. உசைத் பின் ஹுளைர்
(ரலி) அவர்கள் கூறியதாவது: நான் ஓர் இரவில் எனது பேரீச்சங்(கனிகளை உலரவைக்கும்)
களத்தில் குர்ஆன் ஓதிக் கொண்டிருந்தேன். அப்போது எனது குதிரை கடுமையாக மிரண்டது.
நான் தொடர்ந்து ஓதிக்கொண்டே இருந்தேன். மீண்டும் குதிரை மிரண்டது. தொடர்ந்து நான்
ஓதிக் கொண்டேயிருந்தேன். மீண்டும் அது மிரண்டது. (அங்கு படுத்திருந்த என் மகன்)
யஹ்யாவை அந்தக் குதிரை மிதித்துவிடுமோ என்று நான் அஞ்சிய போது அதை நோக்கி எழுந்து
சென்றேன். அங்கு மேகம் போன்றதொரு பொருளை என் தலைக்கு மேலே கண்டேன். அதில்
விளக்குகள் போன்ற (பிரகாசிக்கும்) பொருள்கள் இருந்தன. நான் பார்த்தவுடன் அது
வானில் உயர்ந்து (என் கண்ணைவிட்டு மறைந்து)விட்டது; பிறகு நான் அதைக் காணமுடியவில்லை. காலையில் நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்)
அவர்களிடம் சென்று ”அல்லாஹ்வின் தூதரே! நான் நேற்றிரவு பாதி இரவில் எனது
பேரீச்சங்களத்தில் குர்ஆன் ஓதிக்கொண்டி ருக்கையில் என் குதிரை கடுமையாக மிரண்டது”
என்று (நடந்ததைச்) சொன்னேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ”இப்னு ஹுளைரே, தொடர்ந்து ஓதியிருக்கலாமே?” என்று கேட்டார்கள். ”நான் தொடர்ந்து ஓதினேன். மீண்டும் எனது குதிரை மிரண்டது”
என்று நான் சொன்னேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ”இப்னு ஹுளைரே, தொடர்ந்து ஓதியிருக்கலாமே?” என்று கேட்டார்கள்.
”நான் தொடர்ந்து ஓதினேன். மீண்டும் எனது குதிரை மிரண்டது” என்று சொன்னேன். ”இப்னு
ஹுளைரே, தொடர்ந்து ஓதியிருக்கலாமே!” என அல்லாஹ்வின் தூதர் (ஸல்)
அவர்கள் (மீண்டும்) கூறியபோது, ”(என் மகன்)
யஹ்யாவைக் குதிரை மிதித்துவிடுமோ என்று அஞ்சினேன். அவன் அதன் அருகில் இருந்தான்.
எனவே, நான் திரும்பிச் சென்றேன். நான் (எனது தலையை உயர்த்தி
வானைப் பார்த்தபோது) அங்கு மேகம் போன்றதொரு பொருளைக் கண்டேன். அதில் விளக்குகள்
போன்ற (பிரகாசிக்கும்) பொருள்கள் இருந்தன. நான் பார்த்தவுடன் அது வானில் உயர்ந்து
(என் கண்ணைவிட்டு மறைந்து)விட்டது; பிறகு நான் அதைக் காணவில்லை” என்று கூறினேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ”உன் குரலைக் கேட்டு நெருங்கி வந்த வானவர்கள்தாம் அவர்கள். நீர் தொடர்ந்து
ஓதியிருந்தால் காலையில் மக்களும் அதைப் பார்த்திருப்பார்கள். மக்களைவிட்டும் அது
மறைந்திருக்காது” என்று கூறினார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில்
வந்துள்ளது.
(ஸஹீஹ் முஸ்லிம் அத்தியாயம் : 6. பயனிகள் தொழுகையும் சுருக்கத் தொழுகையும்)
ராகமிட்டு ஓதப்படும்
ஒரே வேதம்
عَنِ
الْبَرَاءِ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ
عَلَيْهِ وَسَلَّمَ: «زَيِّنُوا الْقُرْآنَ بِأَصْوَاتِكُمْ، فَإِنَّ الصَّوْتَ
الْحَسَنَ يَزِيدُ الْقُرْآنَ حُسْنًا» حاكم 2125
இனிமையான
குரலைக் கொண்டு குர்ஆன் ஓதுவதை அழகுபடுத்துங்கள் . ஏனெனில், இனிய குரல் குர்ஆன் ஓதுவதின் அழகை அதிகரிக்கச் செய்கிறது. (ஹாகிம்: 2125)
1. அழகிய
குரலில் ஓதுவதை அல்லாஹ்வும் அவனது
தூதரும்
பிரியப்படுகிறார்கள்.
عَنْ
أَبِي هُرَيْرَةَ، أَنَّهُ سَمِعَ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ،
يَقُولُ: «مَا أَذِنَ اللهُ لِشَيْءٍ مَا أَذِنَ لِنَبِيٍّ حَسَنِ الصَّوْتِ
يَتَغَنَّى بِالْقُرْآنِ، يَجْهَرُ بِهِ».
(بَابُ اسْتِحْبَابِ تَحْسِينِ الصَّوْتِ
بِالْقُرْآنِ) (مسلم)
திருக்குர்ஆனை இனிமையான குரலில்
ஓதும் நபியின் சப்தத்தை கவனமாகக் கேட்பது போல், அல்லாஹ் மற்றவர்களின் சப்தத்தை கேட்பதில்லை.
( முஸ்லிம் )
ஓதுபவருக்கு கியாமத்
நாளில் கிடைக்கும் சிறப்பு
عَنْ
عَبْدِ اللهِ بْنِ عَمْرٍو، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
قَالَ: يُقَالُ، يَعْنِي لِصَاحِبِ الْقُرْآنِ،: اقْرَأْ وَارْتَقِ وَرَتِّلْ
كَمَا كُنْتَ تُرَتِّلُ فِي الدُّنْيَا، فَإِنَّ مَنْزِلَتَكَ عِنْدَ آخِرِ آيَةٍ
تَقْرَأُ بِهَا.
هَذَا
حَدِيثٌ حَسَنٌ
صَحِيحٌ.
ترمذي :2914
கியாமத் நாளில் குர்ஆன்
உடையவரிடம் சிறப்புமிக்க குர்ஆனை ஓதிக் கொண்டே செல், சுவனத்தின் படித்தரங்களில் ஏறி நிறுத்திக் கொண்டே செல்.
உலகில் நிறுத்தி, நிறுத்தி ஓதிக் கொண்டிருந்தது போல் , இங்கும் நீர் நிறுத்தி ஓது. நீர் கடைசி ஆயத்தை ஓதி முடிக்கும் இடம் தான் உமது
தங்குமிடம் என்று சொல்லப்படும்.
( திர்மிதி )
குர்ஆன் ஓதப்படாத
வீடு மன்ணறைக்குச் சமமானது
عَنْ
أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ:
«لَا تَجْعَلُوا بُيُوتَكُمْ مَقَابِرَ، إِنَّ الشَّيْطَانَ يَنْفِرُ مِنَ
الْبَيْتِ الَّذِي تُقْرَأُ فِيهِ سُورَةُ الْبَقَرَةِ
(بَابُ اسْتِحْبَابِ
صَلَاةِ النَّافِلَةِ فِي بَيْتِهِ، وَجَوَازِهَا فِي الْمَسْجِدِ)
(مسلم)
உங்கள் வீடுகளை மன்ணறைகளாக
ஆக்கிவிடாதீர்கள். எந்த வீட்டில் சூரத்துல் பகரா ஓதப்படுகிறதோ அங்கிருந்து ஷைத்தான் விரண்டோடுகிறான். ( முஸ்லிம்)
மார்க்கத்தை
விளங்காததால் வந்த விளைவு
முஸ்லிம்
அல்லாதவர்களிடம் இஸ்லாம் போய்ச் சேர்வதற்கு நாம் பலவகையான வழிகளில் மார்க்க
பிரசாரங்களை முன்னெடுத்து வருகிறோம். ஏன், இஸ்லாத்தைப் பற்றி நாம் அதிகமாக தெரிந்து வைத்திருக்கிறோம்
என்ற தோரணயைில் நமக்குள்ளேயே மோதிக்கொள்கிறோம். இதனால் முஸ்லிம்கள் பல
பிரிவுகளாக சிதறுண்டு தங்களுக்குள் அடித்துக்கொள்ளும் அளவுக்கு நிலைமை
மோசமாகியுள்ளது. ஆனால், இந்தியாவில்
இஸ்லாத்தை தெரியாத ஒரு முஸ்லிம் கிராமம் மதம் மாறுவதற்கு தயாரான செய்தி
உங்களுக்குத் தெரியுமா?
இந்தியாவிலுள்ள
பல்வேறு குக்கிரமாங்களில் பள்ளிவாசல்கள் இல்லை. இதனால் அங்குள்ளவர்களுக்கு
இஸ்லாத்தைப் பற்றி முழுமைாகத் தெரிவதில்லை. இந்தியாவில் ஒரு அமைப்பின் கணக்கெடுப்பின்படி
பெரும்பாலான கிராமங்களில் பள்ளிவாசல்களே கிடையாது. இஸ்லாம் என்றால் என்வென்று கூட
தெரியாமல் அங்கு முஸ்லிம் மக்கள் வாழ்கின்றனர்.
தமிழகத்தின்
பல கிராமங்களில் குடிசைகளிலேயே பள்ளிவாசல்கள் இயங்கிவருகின்றன. இங்கு இஸ்லாத்தைப்
பற்றிய புரிதல்களை ஏற்படுத்தக்கூடிய எவ்வித வசதிகளும் இல்லை. இவ்வாறனதொரு
இடம்தான் திருச்சியை அடுத்துள்ள சமயபுரம் இருங்கலூர் உள்ளூராட்சிக்கு உட்பட்ட
சோழமொழி கிராமம். இங்கு 35 முஸ்லிம் குடும்பங்கள் வாழ்கின்றனர். இவர்களுக்கு
இஸ்லாத்தைப் பற்றித் தெரியாது. மார்க்க கடமைகள் பற்றி தெரியாது. தொழுகை, நோன்பு பற்றியெல்லாம் தெரியாது. அதை அவர்கள் செய்து
பார்த்திருக்கவும் மாட்டார்கள். பெயரவில் முஸ்லிம்களாக இருந்த இம்மக்களுக்கு
இஸ்லாம் பற்றிய விழிப்புணர்வு கிடைக்கவில்லை.
சோழமொழி
கிராம மக்கள் அனைவரும் குடிசைகளிலேயே வாழ்ந்து வருகின்றனர். அன்றாடம் கூலித்
தொழில் செய்து தங்களது வயிற்றைக் கழுவி வந்தனர். அருகிலுள்ள கிறிஸ்தவ
தோட்டமொன்றில் வேலைபார்த்தனர். இதனை சாதகமாகப் பயன்படுத்திக்கொண்ட
கிறிஸ்தவர்கள், எங்கள்
மதத்துக்கு வந்துவிட்டால் இலவச வீடு உள்ளிட்ட சகல வசதிகளையும் செய்து தருவதாகக்
கூறி ஆசைகாட்டியுள்ளனர். மிகவும் வறுமைக்கோட்டில் வாழ்ந்துவரும் இவர்கள்
தங்களுக்கு நிரந்தர வீடுகள் கிடைக்குமென்ற நப்பாசையில் கிறிஸ்தவ மதத்துக்கு மாறத்
தயாராகிவிட்டனர்.
இவர்கள் மதம்
மாறப்போகும் செய்தியைக் கேள்வியுற்ற ஐக்கிய நலக் கூட்டமைப்பு (United
Welfare Organization – UNWO) சோழமொழி
கிராமத்துக்குச் சென்று, குறித்த
முஸ்லிம் மக்களிடம்
சென்று
அவர்கள் மதம் மாறுவதற்கான காரணங்களை கேட்டனர். அங்குதான் ஆச்சிரியம்
காத்திருந்தது. இஸ்லாத்திலிருந்து செல்வது பற்றி அவர்களுக்கு எவ்விதமான அறிவும்
இல்லை. யார் உதவி செய்தாலும், அந்த மதத்துக்கு மாறும் அளவுக்கு அவர்களது மனநிலை இருந்தது.
இஸ்லாத்திலிருந்து பிரிந்து செல்வதை அவர்கள் பாவமாக நினைக்கவில்லை. அங்கு
பள்ளிவாசலோ, தொழுகையோ
இருக்கவில்லை. இஸ்லாம் பற்றி அறிவின்மையால், அவர்கள் மதம் மாறுவதை ஒரு பொருட்டாகவே எடுக்கவில்லை.
உடனே விரைந்து
செயற்பட்ட ஐக்கிய நலக் கூட்டமைப்பு அங்கு குடிசை ஒன்றில் பள்ளிவாசலை நிறுவியது.
பிலால் ஜும்ஆ மஸ்ஜித் என்ற பெயரில் நிறுவப்பட்ட அப்பள்ளிவாசலில் ஐநேரத் தொழுகைகள், வாரம் இருமுறை மார்க்க சொற்பொழிவுகள் மற்றும் தப்லீக்
ஜமாஅத் கஸ்துகள் என்பன நடைபெற்றன. இப்பள்ளிக்கு இமாமாக இருப்பவர் பாணந்துறையைச்
சேர்ந்த அல்ஹாபிஸ் மெளலவி அப்துல் கரீம் (ரஹீமி) என்பவர். இவர் கொழும்பு
இஹ்ஸானியா அரபுக் கல்லூரியில் பட்டம்பெற்றவர். ஒருநாள் சமயபுரம் பள்ளிவாசலில்
தொழுகைக்காக வந்த இவர், சோழமொழி
மக்கள் இஸ்லாத்திலிருந்து மதம்மாறுவதைக் கேள்வியுற்று அவராகவே முன்வந்து பிலால்
ஜும்ஆ மஸ்ஜிதில் இமாமாக பொறுப்பேற்றார்.
இவரது
வருகையினால், சோழமொழி
கிராமத்திலுள்ள மக்கள் அனைவரும் ஐநேரமும் தொழுபவர்களாகவும், குர்ஆன் ஓதுபவர்களாகவும் மாறினர். இதுவே அவரது ஒரேயொரு
குறிக்கோளாகும்.
அல்லாஹ்விற்கு
உரித்தானவர்களாக மாறுவோம்
عَنْ أَنَسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ:
قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ لِلَّهِ أَهْلِينَ
مِنَ النَّاسِ» قَالُوا: مَنْ هُمْ يَا رَسُولَ اللَّهِ؟ قَالَ: «أَهْلُ
الْقُرْآنِ
هُمْ
أَهْلُ اللَّهِ وَخَاصَّتُهُ حاكم:2046
அல்லாஹ்விற்கென்றே
சொந்தமானோர் மக்களில் சிலர் இருக்கின்றனர் என்று நபி (ஸல்) கூறிய போது யா
ரசூலுல்லாஹ் அவர்கள் யார் என ஸஹாபாக்கள் கேட்டனர். அவர்கள் குர்ஆன் உடையவர்கள்.
அவர்கள் தான் அல்லாஹ்விற்கு உரியவர்கள் , அல்லாஹ்விற்கு சொந்தமானவர்கள் என நபி (ஸல்) கூறினார்கள்.
(ஹாகிம்)
எனவே அல்லாஹ்விற்கு உரியவர்களாகவும் அவனுக்கு சொந்தக்காரர்களாகவும் அல்லாஹ் குர்ஆனின் பொருட்டால் நம்மை ஆக்குவானாக
ஆமீன்.
குறிப்பு:
இந்த வாரத்திலிருந்து சிறந்த ஜும்ஆ குறிப்பு தந்த உலமாக்கள்
பெயர்கள் இந்த தளத்த்தில் இடம்பெறும். அந்த வகையில்
இந்த வாரம் சிறந்த ஜும்ஆ குறிப்பு தந்தவர்கள்.
மவ்லவி. ஹனீஃப்,
ஜமாலி,
மவ்லவி. முஹிப்புத்தீன்,
அன்வாரி,
மவ்லவி. ஷாகுல்,
ஃபைஜீ,
மவ்லவி. அப்துர்ரஹ்மான், ஹஸனீ,
மவ்லவி. ஷேக் ஆதம், தாவூதீ,
மவ்லவி. கயாசுத்தீன்,
அன்வாரி,
மவ்லவி. அப்துஸ்
ஸலாம், யூசுஃபி,
தொகுத்து தந்தவர்
மவ்லவி. பீர் முஹம்மது, ஃபைஜீ
3 comments:
அல்ஹம்து லில்லாஹ்.
செவ்வாய். கிழமையே பயான் வெளியானது. குறித்து மிக்க மகிழ்ச்சி
அல்ஹம்து லில்லாஹ் இதே போன்றுஒவ்வொரு வாரமும் விரைவாகவே பயான் தயார் செய்ய அல்லாஹ் தஆலா இல்மில் ஆக்கமும் ஊக்கமும் தர வேண்டும்.
ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன்!
Post a Comment