சங்கை மிகுந்த ஷஃபான்:
நபி (ஸல்) அவர்கள் ரமழானைத் தவிரவுள்ள ஏனைய மாதங்களில்
கூடுதலாக நோன்பு நோற்ற ஒரு மாதமென்றால் அது ஷஃபான் மாதம் தான் என்பதை ஹதீஸ்களில் மூலம்
நாம் காணலாம். இதன் மூலம் ஷஃபான் மாத நோன்பின் சிறப்பையும் அதன் மகத்துவத்தையும் விளங்கிக்
கொள்ளலாம்.
روى البخاري ومسلم عن أمِّ المؤمنين عائشة -رضي الله
عنها- قالتْ: "ما رأيتُ رسولَ الله صلى الله عليه وسلم استكملَ صيام شهر قطُّ إلا شهر رمضان، وما رأيتُه في شهرٍ أكثر
صيامًا منه في شعبان". وفي رواية لأبي داود قالتْ: "كان أحبّ الشهور إلى
رسول الله صلى الله عليه وسلم أنْ يصومَه شعبان، ثم يَصِله برمضان".
நபி (ஸல்) அவர்கள் ரமழானைத் தவிரவுள்ள வேறு எந்த
மாதத்திலும் பூரணமாக நோன்பு நோற்றதை நான் கண்டதில்லை. அவ்வாறே ஷஃபான் மாதத்திலே தவிர
வேறு எந்த மாதங்களிலும் அதிகமாக அவர்கள் நோன்பு நோற்றதையும் நான் பார்த்ததில்லை, என அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
(புகாரி, முஸ்லிம்).
وقد روى الترمذي والنسائي عن أسامة بن زيد، قَال:
قُلتُ: يا رسول الله، لمْ أرَكَ تصوم شهْرًا من الشهور ما تصوم مِنْ شعْبان. قال:
«ذلك شهْرٌ يغْفُل الناس عنْه بيْن رجب ورمضان، وهو شهْرٌ تُرْفَع فيه الأعْمال إلى
ربِّ العالمين، فأحبُّ أنْ يرْفعَ عملي وأنا صائمٌ».
உஸாமா (ரலி) இந்த ரகசியம் பற்றி இவ்வாறு அறிவிக்கின்றார்கள்
:
நான் நபி (ஸல்) அவர்களிடம், அல்லாஹ்வின் தூதரே! ஷஃபான் மாதத்தில் நீங்கள்
நோன்பு நோற்பதைப் போன்று ஏனைய மாதங்களில் நீங்கள் நோன்பு நோற்பதை நான் காணவில்லையே!
என்று கேட்டேன். அதற்கவர்கள், அது ரஜபுக்கும், ரமழானுக்குமிடையில் வரும் மாதமாகும். இம்மாதம்
பற்றி மக்கள் கவனக் குறைவாக இருக்கின்றார்கள். இம்மாதத்தில் அடியார்களுடைய அமல்கள் அல்லாஹ்விடம்
எடுத்துக் காட்டப்படுகின்றன. இம்மாதத்தில் நோன்புடன் இருக்கும் நிலையில் எனது அமலும்
அல்லாஹ்விடம் எடுத்துக் காட்டப்பட வேண்டும் என்றே நான் விரும்புகின்றேன் எனக் கூறினார்கள்.
(அபுதாவூத், நஸஈ,ஸஹீஹ் இப்னு ஹுஸைமா).
- நபித்தோழர்களும் தாபிஈன்களும் இந்த மாதத்தின் நோன்புக்கு முக்கியத்துவம் தந்துள்ளனர் என்பதும் ரமளான் மாத வணக்கத்திற்காக ஷஃபானிலிருந்தே தன்னைத் தாயார் படுத்தி வணக்கத்திலும் குர்ஆன் ஓதுவதிலும் தான தர்மங்கள் செய்வதிலும் கச்சை கட்டிக் கொண்டு இறங்கி விடுவார்கள் என்பதை கீழ்க்கண்ட வரிகளில் அறியலாம் :
فعن لؤلؤة -مولاة عمار- قالت: "كان عمارُ
رضي الله عنه يتهيَّأ لصوم شعبان كما يتهيَّأ لصومِ رمضانَ".
لقدْ كانوا يهتمون بهذا الشهر اهتمامًا خاصًّا؛
لِمَا عرفوا من نفَحَاته وكَرَاماته، فكانوا ينكبُّون على كتاب الله يتلونه ويتدارسونه،
ويتصدقون من أموالهم، ويتسابقون إلى الخيْرات، وكأنهم يُهيِّئون قلوبَهم لاستقبال نفحات
رمضان الكُبرى، حتى إذا دخلَ عليهم رمضان دَخَلَ عليهم وقلوبُهم عامرةٌ بالإيمان وألسنتُهم
رطبةٌ بذِكْر الله، وجوارحُهم عفيفةٌ عن الحرام طاهرةٌ نقيَّةٌ، فيشعرون بلذَّة القيام
وحلاوة الصيام، ولا يَملُّون من الأعمال الصالحة؛ لأنَّ قلوبَهم خالطتها بشاشةُ الإيمان
وتغلغَل نورُ اليقين في أرواحِهم.
ولذلك قال سلمة بن كهيل الحضرمي الكوفي التابعي
-رحمه الله تعالى- عندما رأى قومَه إذا أقْبَلَ عليهم شهر شعبان تفرَّغوا لقراءة القرآن
الكريم: "شهرُ شعبان شهرُ القُرَّاء".
وكانَ عمرو بن قيس إذا دَخَلَ شهرُ شعبان أغْلَقَ
حانوتَه، وتفرَّغ لقراءة القرآن.
بل كانوا يقولون: شهرُ رجب هو شهرُ الزرع، وشهرُ شعبان هو شهرُ سَقْي
الزرع، وشهرُ رمضان هو شهْرُ حَصادِ الزرع. بل شبَّهوا شهرَ رجب بالريح، وشهرَ شعبان
بالغيم، وشهْرَ رمضان بالمطَرِ، ومَن لم يَزْرعْ ويَغْرِسْ في رجب، ولم يَسْقِ في شعبان،
فكيف يريد أن يحْصدَ في رمضان؟
ரஜப் விதைக்கும் மாதம்; ஷஃபான் நீர் பாய்ச்சும் மாதம்; ரமழான் அறுவடை செய்யும் மாதம் என்றும் அந்த மேன்மக்கள் கூறுவார்கள்.
அந்த ஷஃபான் மாதத்தின் பதினைந்தாவது இரவுதான்
பாக்கியமுள்ள பராஅத் இரவு:
حم (1) وَالْكِتَابِ الْمُبِينِ
(2) إِنَّا أَنْزَلْنَاهُ فِي لَيْلَةٍ مُبَارَكَةٍ إِنَّا كُنَّا مُنْذِرِينَ (3)
فِيهَا يُفْرَقُ كُلُّ أَمْرٍ حَكِيمٍ(4)
ஹாமீம்!
தெளிவான இவ்வேதத்தின்
மீது சத்தியமாக! நிச்சயமாக இதனை மிக்க பாக்கியமுள்ள ஓர் இரவில் இறக்கி வைத்தோம். நிச்சயமாக
நாம் (இதன் மூலம்) அச்சமூட்டி எச்சரிக்கை செய்கிறோம் உறுதியான எல்லா காரியங்களும் அதில்
தான் நம்முடைய கட்டளையின் படி (நிர்மானிக்கப்பட்டு) பிரித்துக்கொடுக்கப்படுகின்றன.
(அல் குர்ஆன் 44:1, 2, 3, 4.)
இந்த வசனத்தில் இடம்
பெற்றுள்ள புனித இரவைக் கொண்டு உத்தேசம் என்ன? லைலதுல் கத்ருடைய இரவா? பராஅத் இரவா? இதில் சிறிய கருத்து வேறுபாடு இருந்தாலும், சரியான கருத்து லைலத்துல் கத்ருடைய இரவு என்றிருந்தாலும் பராஅத்
இரவில் இறைத்தீர்புகள் எழுதப்படுகிறது என்பதில் எந்தக்கருத்து வேறுபடும் இல்லை. ஏனெனில்
இது பற்றி நபி மொழி தெளிவாக இருக்கிறது. இந்த இரண்டு இரவிலும் காரியங்கள் தீர்மானிக்கப்படுகிறது,
என்று, இறை வசனத்திலிருந்து நபி மொழியிலிருந்தும் பெறப்படுகிறது. இது இந்த இரண்டு இரவின்
சிறப்பை பறை சாட்டுவதாக இருக்கிறது என்று (மிஷ்காத் நபி மொழி தொகுப்பின் விரிவுரையாளர்)
அல்லாம முல்லா அலி காரி (ரஹ்) கூறுகிறார்கள். (மிஷ்காத் நபி மொழி எண்: 1305 விரிவுரை மிர்காத்).
عَنْ عَائِشَةَ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ
وَسَلَّمَ قَالَ: «هَل تدرين مَا هَذِه اللَّيْل؟» يَعْنِي لَيْلَةَ النِّصْفِ مِنْ
شَعْبَانَ قَالَتْ: مَا فِيهَا يَا رَسُولَ اللَّهِ فَقَالَ: «فِيهَا أَنْ يُكْتَبَ
كلُّ مَوْلُودٍ مِنْ بَنِي آدَمَ فِي هَذِهِ السَّنَةِ وَفِيهَا أَنْ يُكْتَبَ كُلُّ
هَالِكٍ مِنْ بَنِي آدَمَ فِي هَذِهِ السَّنَةِ وَفِيهَا تُرْفَعُ أَعْمَالُهُمْ وَفِيهَا
تَنْزِلُ أَرْزَاقُهُمْ»
அன்னை ஆயிஷா (ரலி)
அவர்களிடம் இந்த ஷஃபான் பதினைத்தாவது (இரவான பராஅத்) இரவின் சிறப்பு என்னவென்று தெரியுமா?
என அண்ணல் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம்
அவர்களிடம் கேட்டு விட்டு கூறினார்கள்; இதில் தான் இந்த வருடத்திற்கான மனித பிறப்பும் இறப்பும் எழுதப்படும். இதில் தான்
அவர்களின் அமல்கள் (செயல்கள்) உயர்த்தப்பும். இதில் தான் அவர்களின் ரிஸ்க் (வாழ்வாதரங்கள்)
இறங்கும். நபிமொழி. பதிவு: பைஹகி. ஆதாரம் மிஷ்காத்: 1305.
படைத்தவன் போடும் பட்ஜெட் இரவு:
இறப்பு, பிறப்பு, வாழ்வாதாரம் உள்ளிட்ட எல்லா காரியங்களின் தீர்ப்புகள் பராஅத்
இரவில் எழுதப்பட்டு, லைலதுல் கத்ருடைய
இரவில் அதை மலக்குகளிடம் பிரித்துக் கொடுக்கப்படுகிறது, என்று இன்பு அப்பாஸ் (ரலி) அவர்கள் விளக்கமளிப்பார்கள். இந்த
வகையில் பராஅத் இரவு என்பது, அடுத்த ஆண்டுக்கான
வரவு செலவு பட்ஜெட், லைலத்துல் கத்ருடைய
இரவில் தாக்கல் செய்வதற்குரிய பூர்வாங்கப் பணிகளை துவங்கும் நாளாகும்.
ஏற்கனவே எழுதப்பட்ட விதியை நகல் எடுக்கும் நாள்:
“வானம் பூமி படைப்பதற்கு
50 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்
அல்லாஹ் விதிகளை எழுதி விட்டான்.” நபிமொழிப் பதிவு.
முஸ்லிம்: 2653.
குடும்பக் கட்டுப்பாடு சம்பந்தமான ஒரு கேள்விக்கு நாயகம் (ஸல்) அவர்கள் பதிலளிக்கையில்; “நீங்கள் சந்திக்கப்போகும் எல்லா விஷயம் குறித்தும் (விதி) எழுதிய பேனா (மை) உலர்ந்து விட்டது. செய்யுங்கள் அல்லது செய்யாமல் போங்கள்” என்று எச்சரித்தார்கள்.
விதி என்பது இவ்வுலக கட்டமைப்பிற்கான அல்லாஹ் போட்ட பிளான் (திட்ட வரைவு) ஆகும். மனிதன் போட்ட பிளான் மாறும். அல்லாஹ் போட்ட பிளான் மாறாது. முடிவெடுக்கப்பட்ட இத்தீர்மான்கள் யாவும் “லவ்ஹுழ் மஹ்பூழ்” (பாதுகாக்கப்பட்ட பேழையில்), முறையாக முன்னமே பதிவு செய்யப்பட்டுள்ளது.
அல்லாஹ்வின் இந்த தீர்மானகளை நடைமுறைப் படுத்துவதற்காக ஒவ்வொரு
ஆண்டும் அந்த ஆண்டிற்கான கழா கத்ரு தீர்மானங்களை நகல் எடுக்கும் பணி அதாவது லவ்ஹுல்
மஹ்பூழிலிருந்து பிரதியெடுக்கும் பூர்வாங்க வேலைகள் இந்த பராஅத் இரவில் தொடங்கி லைலதுல்
கத்ருடைய இரவில் நிறைவு பெறும். இந்த இறை திட்ட மாதிரி வடிவங்களை அது சம்பந்தப்பட்ட
இறை மேலதிகாரிகளான வானவர்களிடம் புனித லைலதுல் கத்ருடைய இரவில் ஒப்படைக்கப்படும். இந்த
வகையில் தான் இந்த இரண்டு இரவுகளில் காரியங்கள் தீர்மானிக்கப்பட்டு பிரித்துக் கொடுக்கப்படுகிறது
என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
கழா கத்ரு மாறுமா? மாறாது. ஆனால் சில விஷயங்களை அல்லாஹ் சஸ்பென்ஸாக
வைத்திருக்கிறான். அடியான் கேட்டால் (துஆ செய்தால்) கொடுக்கலாம். அல்லது இன்ன நன்மையான
செயல் அவன் புரிந்தால் இந்த பாக்கியம் அவனுக்கு வழங்கலாம். அவனது ஆயுளை நீடிக்கலாம்.
இரண பாக்கியம் கூடுதலாக கொடுக்கலாம். அல்லது குறைத்து விட வேண்டியதுதான், அவன் தர்மம் செய்தால் அவனுக்கு வர வேண்டிய பேராபத்துக்களை,
துர்மரணகளை, துர்முடிவுகளை தடுக்கலாம் என இறைவன் தீர்மாநித்திருப்பான். அதன்
படி நடந்தால் எல்லா காரியங்களும் சு(ல)பமாக நடந்தேறும். இல்லையெனில் மாறாகத்தான் நடந்தேறும்.
இதுமாதிரியான கழா கத்ருக்கு “கழா முஅல்லக்”
என்று பெயர். இது மேற்படி விதத்தில் மாறும். “கழா முப்ரம்” முடிவான இறை விதி மாறாது.
لِكُلِّ أَجَلٍ كِتَابٌ (38) يَمْحُو اللَّهُ مَا يَشَاءُ وَيُثْبِتُ
وَعِنْدَهُ أُمُّ الْكِتَابِ (39)
“ஒவ்வொன்றுக்கும் தவணை (குறிப்பிட்டு) எழுதப்பட்டுள்ளது எனினும் அல்லாஹ் அவன் நாடியதை (அதில்) அழித்து விடுவான். (அவன் நாடியதை) உறுதியாக்கிவிடுவான் அவனிடத்தில் அசல் பதிவு இருக்கிறது” (அல் குர்ஆன். 13:38, 39)
«مَنْ أَحَبَّ أَنْ يُبْسَطَ لَهُ فِي رِزْقِهِ، وَيُنْسَأَ لَهُ فِي
أَثَرِهِ، فَلْيَصِلْ رَحِمَهُ»
“எவர் தனது ரிஸ்க் (வாழ்வாதாரம்) விரிவடைய வேண்டும் தனது ஆயுள் நீளமாக வேண்டும் என்று விரும்புவாரோ அவர் தனது உறவுகளை சேர்த்துக்கொள்ளட்டும்” நபி மொழி. புகாரி: 5986. முஸ்லிம்: 1982.
சில அறிவிப்புகளில்., “அல்லாஹுவைப் பயந்து கொள்ளட்டும் தனதுபெற்றோரை மதித்து அவர்களுக்கு நன்மை செய்யட்டும்” என்று கூடுதலாக வந்துள்ளது. இந்த நபிமொழியில் ஒரு மனிதனின் ஆயுள் காலம், அவனது ரிஸ்க் கூடவும் குறையவும் செய்யும் என்று தெரிகிறது.
சில அறிவிப்புகளில்., “அல்லாஹுவைப் பயந்து கொள்ளட்டும் தனதுபெற்றோரை மதித்து அவர்களுக்கு நன்மை செய்யட்டும்” என்று கூடுதலாக வந்துள்ளது. இந்த நபிமொழியில் ஒரு மனிதனின் ஆயுள் காலம், அவனது ரிஸ்க் கூடவும் குறையவும் செய்யும் என்று தெரிகிறது.
“அல்லாஹ்வுடைய விதியான ஆயுள் காலம் எப்படி அதிகரிக்கப்படும்” என்று, இந்த நபிமொழித் தொடரில்., இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள்., அல்லாஹ் குர்ஆனில், “அவன் தான் உங்களைக் களிமண்ணால் படைத்து (உங்களுக்குரிய) தவணையை (வாழ்நாளைக்குறிப்பிட்டு) நிர்ணயம் செய்தவன். அவனிடத்தில் ஒரு குறிப்பிட்ட தவணையும் உண்டு” என்று 6:2-ல் கூறுகின்றான். இந்த வசனத்தில் இரண்டு (அஜலை) தவணையை குறிப்பிடுகிறான் முதல் தவணை என்பது பிறப்பிலிருந்து இறப்புவரை உள்ள இவ்வுலக ஆயுள் காலம் ஆகும். இரண்டாவது தவணை என்பது இறந்த பிறகு இறைவனை (மறுமையில்) சந்திக்கும் வரையில் உள்ள கபுறுடைய ஆயுள் காலம் ஆகும். ஒருவன் அல்லாஹ்வுக்குப் பயந்து தனது பெற்றோர்களை ஆதரித்து, உறவினர்களை சேர்த்துக்கொண்டால் அவனுடைய கபுருடைய ஆயுள் காலத்திலிருந்து அவன் நாடுமளவு எடுத்து இவ்வுலக ஆயுள் காலத்தை நீட்டுவான். இதன்படி கபுறுடைய ஆயுள் காலம் அவன் எடுத்த அளவு குறையும். அல்லாஹ்வுக்கு மாறு செய்து உறவுகளைத் துண்டித்து வாழ்ந்தால் இவ்வுலக ஆயுளைக் குறைத்து கபுறுடைய ஆயுளைக் கூட்டிவிடுவான். ஆக, மொத்தத்தில் மாற்றம் நிகழாமல், இவ்வுலக ஆயுள் காலம் கூடவும் குறையவும் செய்யும், என்று அற்புதமான விளக்கத்தை இப்னு அப்பாஸ் (ரலி) வழங்கினார்கள் (தப்ஸீர் குர்துபி: 1339 விரிவுரை)
யாசீன் ஓதி துஆ செய்ய என்ன காரணம்?
وَمَا اجْتَمَعَ قَوْمٌ فِي بَيْتٍ مِنْ بُيُوتِ اللهِ، يَتْلُونَ
كِتَابَ اللهِ، وَيَتَدَارَسُونَهُ بَيْنَهُمْ، إِلَّا نَزَلَتْ عَلَيْهِمِ السَّكِينَةُ،
وَغَشِيَتْهُمُ الرَّحْمَةُ وَحَفَّتْهُمُ الْمَلَائِكَةُ، وَذَكَرَهُمُ اللهُ فِيمَنْ
عِنْدَهُ،
அண்ணல் நபிகள்
நாயகம் (ஸல்) அருளினார்கள்., “அல்லாஹ்வின் இல்லத்தில்
கூட்டமாக அமர்ந்து குர்’ஆன் ஓதினால் அவர்கள்
மீது சகீனத் என்னும் அமைதி இறங்கும். இறையருள்- ரஹ்மத் அவர்களை மூடிக்கொள்ளும். மலக்குகள்
அவர்களைச் சூழ்ந்துகொள்வர். அல்லாஹ் அவர்களைப் பற்றி தன்னிடமிருப்பவர்களிடம் பெருமையாக
எடுதுக்கூருகிறான்”. பதிவு- முஸ்லிம்:
2699. அபூ தாவூத்: 1455.மலக்குகள் இறங்கி இருக்கும் மஜ்லிஸில்- கூட்டத்தில் துஆக் கேட்டால் அதை அல்லாஹ் கபூலக்குவான். “சேவல் கூவும் சப்தம் கேட்டால் நீங்கள் அல்லாஹ்விடம் அவனது அருளைக் கேளுங்கள் ஏனெனில் அது மலக்கைக்கண்டு தான் கூவும்”. நபி மொழி புகாரி: 3303. முஸ்லிம்: 2729. இந்த நபி மொழி மலக் இருக்கும்போது துஆச் செய்வதை பரிந்துரைக்கின்றது என்றால் அப்போது அது கபூலாகும் என்பதால்தானே!. “குர்ஆன் ஒதும் மஜ்லிஸில் மலக்குகள் இறங்குவர்” என்று புகாரி ஷரீபிலும் முஸ்லிம் ஷரீபிலும் ஹதீஸ் வந்துள்ளது. குர்ஆன் ஓதிய பின்னர் மலக்குகள் இருக்கும்போது துஆக் கேட்டால் அது கபூலாகும் என்றால் பத்து முறை குர்’ஆன் ஓதியதற்குச்சமமான யாஸீன் ஓதி துஆச் செய்தால் அது கபூல் ஆகாதா?
«إِنَّ لِكُلِّ شَيْءٍ قَلْبًا، وَقَلْبُ القُرْآنِ
يس، وَمَنْ قَرَأَ يس كَتَبَ اللَّهُ لَهُ بِقِرَاءَتِهَا قِرَاءَةَ القُرْآنِ عَشْرَ
مَرَّاتٍ»
“ஒவ்வொரு வஸ்துவுக்கும் ஒரு
இதயம் உண்டு. குர்ஆனின் இதயம் யாஸீன் ஆகும். எவர் யாஸீனை ஒரு முறை ஓதுவாரோ அவருக்கு
பத்து முறை குர்ஆன் ஓதிய நன்மையை அல்லாஹ் எழுதிவிட்டான். (நபி மொழி. திர்மிதி: 2887).
“எவர் முற்பகலில் யாஸீன்
ஓதுவாரோ அவருடைய தேவை நிறைவேற்றப்படும்” (நபி மொழி. தாரமி: 3418. மிஷ்காத்: 2171).
“யாஸீனை காலையில் ஓதினால்
மாலை வரை, மாலையில் ஓதினால்
காலை வரை அன்றைய தினத்தின் காரியங்கள் கைகூடும்” என்று இப்னு அப்பாஸ் (ரலி) அறிவிக்கின்றார்கள் (தாரமி) ஆகவே
தான் யாஸீன் ஓதி பராஅத் (மக்ரிப்) துஆவை நாம் கேட்டு வருகிறோம்.
பராஅத் இரவில் ஓதப்படும் துஆவிற்கு ஆதாரம்:
மிஷ்காத் ஹதீஸ் எண் 1308. விரிவுரையில், அல்லாமா முல்லா அலி காரி (ரஹ்) அவர்கள் தனது மிர்காதில் எழுதுவதாவது:
وَعَنْ كَثِيرٍ مِنَ السَّلَفِ، كَعُمَرَ بْنِ الْخَطَّابِ، وَابْنِ
مَسْعُودٍ وَغَيْرِهِمَا، أَنَّهُمْ كَانُوا يَدْعُونَ بِهَذَا الدُّعَاءِ: اللَّهُمَّ
إِنْ كُنْتَ كَتَبْتَنَا أَشْقِيَاءَ فَامْحُهُ وَاكْتُبْنَا سُعَدَاءَ، وَإِنْ كُنْتَ
كَتَبْتَنَا سُعَدَاءَ فَأَثْبِتْنَا، فَإِنَّكَ تَمْحُو مَا تَشَاءُ وَتُثْبِتُ وَعِنْدَكَ
أُمُّ الْكِتَابِ،
ஹழ்ரத் உமர பின் கத்தாப்,
ஹழ்ரத் இப்னு மஸ்ஊத் முதலான நாயகத் தோழர்கள் மற்றும்
முன்னோர்களான நாதாக்கள் (ரலியல்லாஹு அன்ஹும்) அதிகமானோரும் பின் வரும் துஆவை ஓதி வந்தார்கள்:
அல்லாஹும்ம இன் குந்த
கதப்தனா அஷ்கியாஅ /பம்ஹுஹு வக்துப்னா சுஅதாஅ வஇன் குந்த கதப்தனா சுஅதாஅ /பஅஸ்பித்னா
/பஇன்னக தம்ஹு மா தஷாஉ வதுஸ்பிது வஇன்தக உம்முல்கிதாப்
(யா அல்லாஹ்! நீ எங்களை
அபாக்கியவான்களாக பதிவு செய்து இருந்தால் அதை அழித்து எங்களை பாக்கியவான்களாக எழுது.
நீ எங்களைப் பாக்கியவான்களாக எழுதி இருந்தால் அதை அப்படியே உறுதிப்படுத்து ஏனெனில்
நீ நாடுவதை அழிப்பாய் (நாடுவதை) உருதிப்படுத்துவாய் உன்னிடம் மூலநூல் உள்ளது).
இந்த துஆவை ஷாஅபான்
15ஆவது (பராஅத்) இரவில் ஓதியதாக
ஹதீஸில் வந்துள்ளது. (மிர்காத்: 3/976)
பராஅத் இரவில் நாமும்
சஹாபாக்களைப் பின்பற்றி இந்த ஹதீஸில் வந்த துஆவைத் தான் ஓதி வருகிறோம்.
عن عائشة رضي الله عنها قالت: دخل علي رسول الله صلى الله عليه وسلم
فرفع عنه ثوبيه ثم لم يستتم أن قام فلبسهما فأخذتني غيرة شديدة ظننت أنه يأتي بعض صويحباتي
فخرجت أتبعه فأدركته بالبقيع بقيع الغرقد يستغفر للمؤمنين والمؤمنات والشهداء فقلت:
بأبي أنت وأمي أنت في حاجة ربك وأنا في حاجة الدنيا فانصرفت فدخلت في حجرتي ولي نفس
عال ولحقني النبي صلى الله عليه وسلم فقال: ما هذا النفس يا عائشة فقلت: بأبي أنت وأمي
أتيتني فوضعت عنك ثوبيك ثم لن تستتم أن قمت فلبستهما فأخذتني غيرة شديدة ظننت أنك تأتي
بعض صويحباتي حتى رأيتك بالبقيع تصنع ما تصنع
قال يا عائشة: أكنت تخافين أن يحيف الله عليك ورسوله بل أتاني جبريل
عليه السلام فقال هذه الليلة ليلة النصف من شعبان ولله فيها عتقاء من النار بعدد شعور
غنم كلب لا ينظر الله فيها إلى مشرك ولا إلى مشاحن ولا إلى قاطع رحم ولا إلى مسبل ولا
إلى عاق لوالديه ولا إلى مدمن خمر
قالت: ثم وضع عنه ثوبيه فقال لي: يا عائشة أتأذنين لي في القيام
هذه الليلة فقلت: نعم بأبي وأمي فقام فسجد ليلا طويلا حتى ظننت أنه قد قبض فقمت ألتمسه
ووضعت يدي على باطن قدميه فتحرك وسمعته يقول في سجوده: أعوذ بعفوك من عقوبتك وأعوذ
برضاك من سخطك وأعوذ بك منك جل وجهك لا أحصي ثناء عليك أنت كما أثنيت على نفسك فلما
أصبح ذكرتهن له فقال يا عائشة: تعلمتيهن فقلت: نعم فقال: تعلميهن وعلميهن فإن جبريل
عليه السلام علمنيهن وأمرني أن أرددهن في السجود. (تفسير الدر المنثور)
அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்., ஒருநாள் இரவு அண்ணல் நபி (ஸல்) அவர்களைக் காணாமல் தேடி அலைந்தபோது இறுதியில் அவர்கள் ஜன்னத்துல் பகியி (மதீனா கபுறுஸ்தானி)ல் நின்று உருக்கமாக துஆச் செய்து கொண்டிருந்தார்கள். எனது தாயும் தந்தையும் தாங்களுக்கு அர்ப்பணம். நான் (எனது) உலக நலனில் அக்கறை கொண்டு (தேடிவந்து)ள்ளேன். ஆனால் நாயகமே தாங்களோ (மக்கள் நலனுக்காக) உங்கள் இறைவனிடம் தேவையாகி நிற்கிறீர்களே! (என மெய்சிலிர்த்தேன்) அங்கிருந்து வேகமாக கிளம்பி எனது அறைக்கு வந்து சேர்ந்தேன் வேகமாக நடந்து வந்ததால் எனக்கு மூச்சு வாங்கியது எனக்குப்பின் எனது இல்லம் வந்து சேர்ந்த சர்தார் நபி (ஸல்) அவர்கள் இதைக் கவனித்து விட்டு, இதென்ன ஆயிஷா! இப்படி மூச்சு வாங்குது? என வினவினார்கள். அதற்கு, நான் அவர்களை காணமல் தேடி அலைந்து இறுதியில் ஜன்னத்துல் பகியில் கண்டு பிடித்து பிறகு மிக வேகமாக இல்லம் திரும்பிய கதையை அவர்களிடம் சொன்னேன். “என்ன ஆயிஷா! அல்லாஹ்வும் அவனது தூதரும் உங்களுக்கு அநியாயம் செய்வார்கள் என்று எண்ணிக்கொண்டீர்களா? ஜிப்ரீல் (அலை) அவர்கள் என்னிடம் வந்து இது ஷ/பான் 15-வது இரவு. இதில் அல்லாஹ் அடியார்களுக்கு விடுதலை அளிக்கிறான் எனக்கூறினார்கள்”. (எனவே அடியார்களுக்கு மன்னிப்பும் நரக விடுதலையும் கிடைக்க துஆ செய்வதற்காக கபுறு ஜியாரத்திற்கு வந்தேன்).
கபுற் ஜியாரத் முடித்து
விட்டு இல்லம் திரும்பிய கண்மணி நாயகம் (ஸல்) அவர்கள், ஆயிஷா! இன்றிரவு நின்று வணங்க எனக்கு அனுமது அளிப்பீர்களா?
என்று என்னிடம் வினவினார்கள் அதற்கு நான்,
“எனது தாயும் தந்தையும் தாங்களுக்கு
அர்ப்பணம் தாங்கள் என்னுடன் எனக்கருகே இருப்பதைத் தான் விரும்புகிறேன் ஆனாலும் உங்களது
விருப்பத்தை தேர்வுசெய்கிறேன்” எனக்கூறினேன் உடன்
எழுந்து தொழ ஆரம்பித்துவிட்டார்கள் நீண்ட நெடிய நேரம் தொழுகையில் சுஜீதிலேயே இருந்தார்கள்.
எந்த அளவு நீளமான சுஜீது செய்தார்கள் என்றால் நான் அவர்களுடைய உயிர் கைப்பற்றப்பட்டு
விட்டதோ என்று கருதிவிட்டேன். எழுந்து போய் அவர்களின் பாதத்தை தொட்டபோது அதில் உயிர்த்துடிப்பு
இருந்தது. அப்போது தான் எனக்கு சந்தோசமே வந்தது சுஜீதில் அவர்கள் ஓதியதை நான் கவனித்து
கேட்டேன்., “அஊது பிஅ/ப்விக மின்
இகாபிக வஅஊது பிரிழாக்க மின் சகத்திக வஅஊது பிக மின்க இலைக்க ஜல்ல வஜ்ஹுக லா உஹ்ஸீ
ஸனாஅன் அலைக்க அந்த கமா அஸ்னைத்த அலா ந/ப்ஸிக”
(யா அல்லாஹ் உனது மன்னிப்பைக்கொண்டு
உனது தண்டனையை விட்டும் பாதுகாப்புத்தேடுகிறேன் உனது திருப்பொருத்தத்தை கொண்டு உனது
கோபத்தை விட்டும் பாதுகாப்புத்தேடுகிறேன் உன்னைக்கொண்டு உன்னைவிட்டும் உன்னளவில் பாதுகாபுத்தேடுகிறேன்
உனது திருமுகம் மகத்தானது நீ உன்னை புகழ்ந்ததைப்போல நான் உன்னைப் புகழ இயலாதவனாக இருக்கிறேன்)
நான் இவ்வாறு செவிமடுத்ததை
காலையில் நபி (ஸல்) அவர்களிடம் கூறினேன் அதற்கு அவர்கள், ஆயிஷா! இதைக் கற்றுக்கொண்டாயா (நல்லது) இதைக் கற்று,
கற்றுக்கொடுங்கள். ஜிப்ரயீல் (அலை) அவர்கள்,
இவ்வாறு இதை கற்றுக்கொடுத்து இதை சுஜூதில் திரும்பத்
திரும்ப மடக்கி மடக்கி கூறிக்கொண்டிருக்கும்படி எனக்கு உத்தரவிட்டார்கள்.
ஆகவே, இதை நாமும் கற்று மற்றவர்களுக்கும் கற்றுக்கொடுப்போம்.
பராஅத் இரவில் சுஜுதில் இருந்துகொண்டு இதை நாமும் கூறிக்கொண்டிருப்போம்.
(அன்னலாருக்கும் அன்னை ஆயிஷா ரலி அவர்களுக்கும் இடையே இவ்விரவில் நடந்த உரையாடல் துணுக்கு துணுக்காக பல அறிவிப்புகளில் வந்துள்ளது அவற்றை அடிக் குறிப்பில் காண்க! 1)
(அன்னலாருக்கும் அன்னை ஆயிஷா ரலி அவர்களுக்கும் இடையே இவ்விரவில் நடந்த உரையாடல் துணுக்கு துணுக்காக பல அறிவிப்புகளில் வந்துள்ளது அவற்றை அடிக் குறிப்பில் காண்க! 1)
கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும் :
أن النبي صلى الله عليه وسلم قال: "إذا كانت ليلة النصف من
شعبان فقوموا ليلتها وصوموا يومها، فإن الله تبارك وتعالى ينـزل فيها لغروب الشمس إلى
سماء الدنيا، فيقول : ألا من مستغفر فأغفر له ألا من مسترزق فأرزقه ألا من مبتل فأعافيه
ألا كذا ألا كذا حتى يطلع الفجر"
பராஅத் இரவிலே முதல் வானம் வரைக்கும் இறங்கி மூன்று அறிக்கைகளை வெளியிடுகிறான்
1.என்னிடம் மன்னிப்பு தேடுபவர் உண்டா? கேளுங்கள் மன்னிக்கிறேன்
2.என்னிடன் இரணம் வேண்டுபவர் உண்டா வேண்டுங்கள் வழங்குகிறேன்
3.நோயில் சிக்கியவர் உண்டா? நிவாரணம் அளிக்கிறேன் (இப்னு மாஜா)
மன்னிப்பு கேளுங்கள் மன்னிக்கிறேன்: ألا من مستغفر فأغفر له
தவறு செய்வது மனித இயல்புதான் ஆனால் அதை உணர்ந்து மன்னிப்புக் கேட்பதுதான் சிறந்த பண்பு.
كل بني آدم خطاء وخير الخطائين التوابون
இறைவன் கருணையாளன். அவனிடம் மன்னிப்புக் கேட்பதையே அவன் விரும்புகிறான். சில மதங்களில் மதகுருவிடம் மன்னிப்புக்கேட்டால் போதுமானது என்று வைத்துள்ளார்கள்.அப்படி சொல்லி உங்களை நான் ஏமாற்ற விரும்பவில்லை.
ஒரு ஆலயம். மதகுரு மக்களுக்கு முன்பு நின்று மன்னிப்பு சீட்டு வழங்கிக் கொண்டிருந்தார். ''இதோ பாருங்கள் ஒரு சீட்டு 50ரூபாய்தான். ஒன்று வாங்கினால் போதும். இங்கள் அத்தனை பாவங்களும் மன்னிக்கப்பட்டு விடும்'' என்றார்.
''அட 50 ரூபாய் செலவில் அத்தனை பாவங்களும் மன்னிக்கப்படுமா? பரவாயில்லையே..''
மக்கள் கூட்டம் முண்டியடித்துக் கொண்டு வாங்கினர். செம வசூல்.
ஒருத்தன் மட்டும் 100 ரூபாய் கொடுத்து 2 சீட்டு வாங்கினான். பாதிரியாருக்கு ஆச்சரியம். இவன் மட்டும் ஏன் 2 வாங்குகிறான்?சரி. நமக்கு தேவை காசு. யார் எத்தனை வாங்கினால் என்ன?
மக்கள் கூட்டம் முண்டியடித்துக் கொண்டு வாங்கினர். செம வசூல்.
ஒருத்தன் மட்டும் 100 ரூபாய் கொடுத்து 2 சீட்டு வாங்கினான். பாதிரியாருக்கு ஆச்சரியம். இவன் மட்டும் ஏன் 2 வாங்குகிறான்?சரி. நமக்கு தேவை காசு. யார் எத்தனை வாங்கினால் என்ன?
பாதிரியார் வசூலை அள்ளி முடிந்துகொண்டு அடுத்த ஊருக்கு கிளம்பினார் வசூலுக்கு.
வழியிலே தன்னந்தனியாக சென்றுகொண்டிருந்தார். ஒருவன் வழிமறித்தான். கையிலே கத்தி.
வழியிலே தன்னந்தனியாக சென்றுகொண்டிருந்தார். ஒருவன் வழிமறித்தான். கையிலே கத்தி.
''யோவ்.. மரியாதையா இந்த பணமூட்டையை கொடுத்திடு.''
''டேய். இது அநியாயம். ஒரு மதகுருவிடமே 'ஆட்டையைப்' போடுவது பெரிய பாவம். இந்த பாவம் உன்னை சும்மா விடாது.''
''அதுலாம் எங்களுக்குத் தெரியும். அதுக்காகத்தான் 100 ரூபாய் கொடுத்து இரண்டு சீட்டு வாங்கி வச்சிருக்கோம். ஒன்று நான்ஏற்கனவே செய்த பாவத்திற்கு. மற்றொன்று இப்ப செய்யப்போற இந்த பாவத்துக்கு'' அப்படின்னான்.
மதகுரு மக்களை ஏமாற்றினார். அவரை ஏமாற்றுவதற்கும் ஒரு ஆள் இருந்திருக்கிறான். பாவம் அவருக்குத் தெரியவில்லை. அந்தமதகுரு மாதிரி நான் சீட்டு விற்க விரும்பவில்லை. உங்கள் அனைவரையும் இறைவனிடம் மன்னிப்புக் கேட்கவே அழைக்கிறேன்வாருங்கள் மக்களே இந்த புனித இரவில் நாம் அனைவரும் சேர்ந்து அவனிடம் மன்னிப்புக் கேட்போம்.
.-------------------
இரணம் கேளுங்கள்; இரணம் தருகிறேன்: ألا من مسترزق فأرزقه
இந்த இரவு அடியார்களின் ஆயுள். இரணம் நன்மை தீமை முடிவு செய்யப்பட்டு யாருக்கு எவ்வளவு என்று பட்ஜெட் போடப்பட்டுஅந்தந்த துறை அதிகாரிகளிடம் (வானவர்களிடம்) பொறுப்புகள் ஒப்படைக்கப்படுகின்றன. எனவே இந்த பட்ஜெட் இரவில் துஆசெய்து இரணத்தை அள்ளிப் போடலாம் மரணத்தை தள்ளிப் போடலாம்
துஆ விதியை மாற்றும் என்பது நபிமொழி.
இரணத்தை இறைவனிடம் கேட்பதோடு கடமை முடிந்து விடாது; அதற்காக முயற்சி உழைப்பு அவசியம்.
''பறவைகளைப் போன்று நீங்களும் தவக்குல் வைத்தால் அவைகளுக்கு இரணம் அளிப்பதைப் போன்று உங்களுக்குதருவான். அவைகள் காலையில் பசித்த வயிறுடன் பறந்து செல்கின்றன; மாலையில் வயிறு நிரம்பி வந்துசேருகின்றன.''
இந்த நபிமொழியில் பறவைகளின் தவக்குலைப் போன்று நமது தவக்குல் இருக்கவேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. பறவைகள்அல்லாஹ் தருவான் என்று கூட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடப்பதில்லை. நம்பிக்கையோடு பறந்து சென்று பாடுபடுகின்றனமுழங்காலைக் கட்டிக்கொண்டு வீட்டிலேயே முடங்கிக் கிடந்தால் அல்லாஹ் தருவானா?
இன்று அநேகர் அப்படித்தான் நினைக்கிறார்கள்.
ஒருமுறை முல்லா சந்தையிலே ஒரு மேடையேறி நின்றார். படபடவென்று கைகளைத் தட்டி மக்களை அழைத்தார். ''மக்களே!முயற்சி இல்லாமல் முன்னேறவேண்டுமா? பாடுபடாமலேயே பணம் குவியவேண்டுமா? உழைக்காமலேயே ஊதியம்பெறவேண்டுமா? வாருங்கள்''
மக்கள் முண்டியடித்துக்கொண்டு ஒன்று கூடினார்கள். நோகாமலேயே நொங்கு திங்க யாருக்குத்தான் ஆசை இல்லை?
முல்லா சொன்னார்; ரொம்ப நல்லா சொன்னார்: ''அப்படி ஒருவழி எனக்குத் தெரியவரும்போது அவசியம் உங்களுக்குசொல்கிறேன்'' என்று சொல்லிவிட்டு விறுவிறுவென்று நடையைக் கட்டினார். மக்களின் மனநிலையை முல்லா படம் பிடித்துக்காட்டிவிட்டார்.
இன்று நிறைய பேர் இப்படித்தான் உழைக்காமல் திரிகிறார்கள்.
ஒரு சகோதரி கண்ணீரோடு கவிதை எழுதினாள்:
''நான் பீடி சுற்றுகிறேன்
என் அம்மா முறுக்கு சுற்றுகிறாள்
என் அண்ணன் பொறுப்பில்லாமல்
ஊர் சுற்றுவதால்.''
''நான் பீடி சுற்றுகிறேன்
என் அம்மா முறுக்கு சுற்றுகிறாள்
என் அண்ணன் பொறுப்பில்லாமல்
ஊர் சுற்றுவதால்.''
ஒரு வாலிபன் இப்படித்தான் சும்மா சுற்றிக் கொண்டிருந்தான்.
அந்த ஊர் அஜரத் அவனை அழைத்தார்.
''தம்பி உழைத்தால் உயரலாம்''
''அஜரத் நான் என்ன செய்வேன்? இந்த ஊரில் ஒரு வேலையும் அமையலையே?''
''தம்பி இந்த உலகம் விசாலமானது. பரந்து விரிந்தது. கிளம்பிப் போ. தேடிப்பார். வேலை கிடைக்கும்.''
அவன் உடனே புறப்பட்டான் வேலை தேடி.
இரண்டே நாட்களில் ஊருக்கு வந்து விட்டான்
அஜரத் கேட்டார்: ''ஏம்பா திரும்பி வந்துட்டே?
அவன் சொன்னான்: ''நான் போன வழியிலே இளைப்பாறுவதற்காக ஒரு மரத்தடியில் அமர்ந்து இருக்கும்போது ஒரு காட்சியைகண்டேன். திரும்பி வந்துட்டேன்''
''என்ன காட்சி?''
''அந்த மரத்தின் கிளையிலே ஒரு நொண்டிக் குருவி பறந்து செல்ல முடியாமல் பசியுடன் அலறிக்கொண்டிருந்தது. அந்த நேரம்அழகான குருவி ஒன்று வாயில் இரையுடன் வந்து நொண்டிக் குருவிக்கு ஊட்டிவிட்டது. இதைப் பார்த்து ஒரு முடிவுக்கு வந்தேன்இந்த குருவிக்கு எங்கிருந்தோ கொண்டு வந்து ரிஸ்கை கொடுக்கிற நாயன் நமக்கும் கூரையைப் பொத்துக்கிட்டுகொடுக்கமாட்டானா? அதான் வந்துவிட்டேன்''
''தம்பி அந்த இரண்டு குருவிகளில் நீ எந்த குருவி?''
''அஜரத். என்ன சொல்றீங்க?
''ஆமாப்பா. யாராவது வந்து தரமாட்டாங்களா என்று யாசகம் கேட்கும் நொண்டிக் குருவியா? அல்லது உழைத்து தானும் உண்டுபிறருக்கும் உதவிய அந்த நல்ல குருவியா?
வாலிபன் மனம் மாறினான் உடனே ஒரு லட்சியத்தோடு உழைக்க புறப்பட்டான்.
நோயில் சிக்கியவரா? ஆரோக்கியம் தருகிறேன்: ألا من مبتل فأعافيه
நோயற்ற நீண்ட ஆயுளை இந்த இரவில் கேட்கிறோம். ஆயுளை முடிவு செய்பவன் அல்லாஹ். அவனிடமே கேட்டுப்பெறவேண்டும் சில ஏமாற்றுப் பேர்வழிகள் உங்களுக்கு நீண்ட ஆயுளைத் தருகிறோம் வாருங்கள் என்பார்கள்.ஏமாந்துவிடவேண்டாம்.
முதலாம் உலகப் போருக்குப் பின் மத்திய ஐரோப்பாவில் 'இல்யுக்டேட்' எனும் அமைப்பு ஆரம்பிக்கப்பட்டு ஒரு விஷேசமானமருந்தை சப்ளை செய்தது. எல்லா மருந்துக் கடைகளிலும் விளம்பரம் வைக்கப்பட்டிருந்தது.
முதலாம் உலகப் போருக்குப் பின் மத்திய ஐரோப்பாவில் 'இல்யுக்டேட்' எனும் அமைப்பு ஆரம்பிக்கப்பட்டு ஒரு விஷேசமானமருந்தை சப்ளை செய்தது. எல்லா மருந்துக் கடைகளிலும் விளம்பரம் வைக்கப்பட்டிருந்தது.
''மனிதர்களை விட யானைகள் நீண்ட காலம் உயிர் வாழ்கின்றன என்பது அனைவரும் அறிந்த விஷயம். 150வருடத்திற்கு மேல் வாழ்கின்றனவாம். இந்த நீண்ட ஆயுளுக்கு என்ன காரணம் என்ற இரகசியம் இதுவரை யாருக்கும்தெரியாமல் இருந்தது. இப்போது ஆய்வு செய்து நாங்கள் கண்டுபிடித்துள்ளோம். ஒருவித காட்டு மூலிகையையானைகள் சாப்பிடுகின்றன. அந்த மூலிகையைக் கண்டுபிடித்து அதிலிருந்து இந்த 'இல்யூக்டேட்' தயாரித்துள்ளோம்.இதை சாப்பிட்டால் நீண்ட காலம் வாழலாம்''
இந்த விளம்பரத்தில் மயங்கி மக்கள் போட்டி போட்டு வாங்கினர். செம வசூல். காப்பித்தூள், தேயிலைக்குப் பதிலாக மக்கள் இந்த'இல்யூக்டேட்' ஐ பயன்படுத்த தொடங்கினர். அறிவியலார் அந்த மருந்தை
ஆய்வுக்குட்படுத்திய பொழுது அதிர்ச்சிக்குள்ளானார்கள். அந்த பாக்கெட்டுகளில்
இருந்தது என்ன தெரியுமா? சொன்னால் நம்பமாட்டீர்கள். யானைச் சாணம். நாகரீகம் வாய்ந்த 20-ம்
நூற்றாண்டில் மக்கள் யானைச் சாணத்திலிருந்து கசாயம் இறக்கிக் குடித்தது பெரிய
வேடிக்கைதான். எனவே நீண்ட ஆயுள் என்பது இறைவனின் கையில். அதை அவனிடம் கேட்டுப்
பெறுவதோடு உணவிலும் உணர்விலும் சில வழிமுறைகளைக் கையாண்டால் நீண்ட ஆயுள் பெறலாம்.
வானவர்களின் பெருநாட்கள் :
புவியில் இருக்கும்
முஸ்லிம்கள் இரு தினங்களை பெருநாட்களாக எடுப்பதுபோன்று வானத்து மலக்குகளுக்கு இரண்டு
இரவுகள் பெருநாட்களாக உள்ளன. வானத்து மலக்குகளுக்கான பெருநாள் பராஅத் இரவும்,
அதாவது ஷஃபான் பதினைந்தாவது இரவும், லைலத்துல் கத்றுடைய இரவுமாகும்.
புவியில் வாழும் முஸ்லிம்கள்
நோன்புப் பெருநாளையும், ஹஜ்ஜுப் பெருநாளையும்
கொண்டாடுகின்றனர். இதனால்தான் ஷஃபான் பதினைந்தாவது இரவை மலக்குகள் பெருநாளாகக் கொண்டாடுகின்றனர்.
அல்லாமா ஸுப்கி தனது
தப்ஸீரில் இப்படிக் கூறுகின்றார்,
இந்த இரவில் செய்யும்
அமல்கள் வருடம் முழுவதும் செய்யும் குற்றத்திற்கு பரிகாரமாக உள்ளது. ஜும்ஆ இரவு அந்த
வாரத்தில் செய்யும் குற்றங்களுக்கு பரிகாரமாக இருக்கும். லைலத்துல் கத்று வருடம் முழுவதிற்குமான
குற்றங்களுக்கு பரிகாரமாக இருக்கும்.
இந்த இரவுகளை வணக்கத்தால்
உயிர்ப்பிப்பதனால் இப்பரிகாரங்களைப் பெற முடியும். இதனால் இந்த இரவுக்கு பரிகாரமளிக்கும்
இரவு என்று ஒரு பெயர் உண்டு. உயிர்ப்பிக்கும் இரவு என்றும் கூறப்படுகின்றது.
“பெருநாள் இரவையும்
பராஅத் இரவையும் வணக்கத்தால் உயிர்ப்பிப்பவரின் உள்ளம் மற்றவர்கள் இதயங்கள் மரணிக்கும்
வேளையில் உயிர் பெற்றிருக்கும்“ என்ற ஹதீஸை மர்பூஆனதாக
(அறிவிப்பாளர் பட்டியல் நபியவர்கள் வரை சேர்ந்ததாக) இமாம் முக்திரி அறிவித்துள்ளார்கள்.
பராஅத் இரவுக்கு ‘ஷபாஅத்திற்குரிய இரவு‘ என்றும் ஒரு பெயர் உண்டு. றஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லமவர்கள்
ஷஃபான் பதின்மூன்றாவது இரவு தனது உம்மத்திற்குரிய ஷபாஅத்தை அல்லாஹ்விடம் கேட்டார்கள்.
மூன்றில் ஒரு பகுதியினருக்குரிய ஷபாஅத்தை வழங்கினான். பதினான்காவது இரவும் அல்லாஹ்விடம்
கேட்டார்கள். மூன்றில் இரண்டைக் கொடுத்தான். பதினைந்தாவது இரவும் கேட்டார்கள். எல்லோருக்கும்
ஷபாஅத் செய்யும் பாக்கியத்தை வழங்கினான். ஆனால் ஒட்டகத்தைப் போன்று அல்லாஹ்வின் றஹ்மத்தை
விட்டும் தூரமாக விரண்டு ஓடியவனைத் தவிர அதாவது குற்றம் புரிந்து தானாகவே அல்லாஹ்வின்
அருளை விட்டும் தூரமானவனைத் தவிர,
“பங்கீடு செய்வதும், விதியைத் தீர்மானிப்பதுமான
இரவு“ என்றும் கூறப்படுகி்ன்றது.
ஹளரத் அதா இப்னு யஸார்
ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் கூறுகின்றார்கள்,
ஷஃபான் பதினைந்தாவது
இரவன்று மலக்குல் மௌத் இஸ்றாயீல் அலைஹிஸ்ஸலாமை அழைத்து ஷஃபானிலிருந்து எதிர்வரும் ஷஃபான்
வரையிலான காலப்பகுதிக்குள்ள மரணிக்க இருப்பவர்களின் பெயர் பட்டியல் வழங்கப்படும்.
ஒருவர் மரம் நாட்டுவார், திருமணம் முடிப்பார், உயர் கட்டிடம் கட்டுவார்.
ஆனால், அவர் பெயர் மரணிப்பவரின் பட்டியலிலிருக்கும். மலக்குல்
மௌத் ஆகிய இஸ்றாயீல் அலைஹிஸ்ஸலாம் அவரின் உயிரை எடுப்பதற்கு, அல்லாஹ்வின் கட்டளையை எதிர்பார்த்துக் கொண்டேயிருப்பார்கள்.
பராஅத் நோன்பு:
1. பொதுவாக ஷஃபானில் அதிகம் அதிகம் நபியவர்கள் நோன்பு வைத்துள்ளார்கள் என்பது நாம் ஆரம்பத்தில் ஆதாரங்களுடன் குறிப்பிட்டுள்ளோம்.
2, இது அய்யாமுல் பீழுடைய
(13, 14, 15, ஆகிய வெளுப்பு) நாட்களில்
ஒன்று. இந்த மூன்று தினங்கள் நோன்பு பிடிப்பது சுன்னத் ஆகும்.
صَوْمُ ثَلاَثَةِ أَيَّامٍ صَوْمُ الدَّهْرِ كُلِّهِ
“ஒவ்வொரு மாதமும் (இந்த) மூன்று தினங்கள் நோன்பு
பிடிப்பது காலமெல்லாம் நோன்பு வைப்பதாகும்” நபிமொழி புகாரி: 1979. முஸ்லிம்: 1159.
3, பராஅத் நோன்பு. நாயகம்
(ஸல்) அவர்கள் நவின்றார்கள்.,
إذا كانت ليلة النصف من شعبان فقوموا ليلتها وصوموا يومها
“ஷ/பான் 15-வது இரவு வந்தால் நின்று வணங்குங்கள், அதன் பகலில் நோன்பு பிடியுங்கள்” (இப்னு மாஜா: 1388)
இப்படி, சாந்த நபி (ஸல்) அவர்கள் முழுமையாக அல்லது அதிகமாக
நோன்பு வைக்கும் ஷ/பான் மாதத்தின் வெளுப்பு தினமான 15ல் வரும் பராஅத் நோன்பு பொதுவாகவும் குறிப்பாகவும் நோன்பு வைப்பது
ஏற்றம் நிறைந்த நபி மொழியும் வழியும் ஆகும்.
பராஅத் இரவில் பாக்கியமிழக்கும்
பாவிகள்:
“ஷ/பான் 15-வது இரவு அல்லாஹ் தனது படைப்புகளுக்கு பிரசன்னமாகி
அவனது அனைத்து அடியார்களையும் மன்னிக்கிறான்” என்று அறிவித்த அண்ணலார் (ஸல்) அவர்கள் இதில் விதி விளக்கானவர்களையும்
பட்டியலிடுகிறார்கள் அவர்கள் வருமாறு:-
1, இறை மறுப்பாளர்கள்
2, இறைவனுக்கு இணை வைப்பவர்கள்
3, விரோதம் கொண்டிருப்பவர்கள்
4, தற்கொலை செய்தவர்கள்
5, உறவுகளைத் துண்டித்தவர்கள்
6, தாய் தந்தையருக்கு
மாறு செய்து நோவினை செய்தவர்கள்
7, குடிகாரர்கள்
8, கரண்டைக்குகீழே உடை
உடுத்தி இருப்பவர்கள்
9, சதிகாரர்கள்
10, சூனியம் செயவபர்கள்
(குறிப்பு:
>> பராஅத் சம்மந்தமான
அதிகமான அறிவிப்புகள் தனிப்பட்டமுறையில் ளயீ/பானதுதான். என்றாலும் அதிகமான பல அறிவிப்பாளர்கள்
தொடர்களில் இது அறிவிக்கப்படுவதால் இது பலமானதாகிவிடும் என்று சட்ட மேதைகளான /புகஹாக்களும்
ஹதீஸ் கலை வல்லுனர்களான முஹத்திஸீன்களும் கூறுகிறார்கள்.
>> பராஅத் சம்பந்தமான
ஹதீஸ்கள் பத்து நபித்தோழர்கள் வழியாக அறிவிக்கப்பட்டுள்ளது
>> பலவீனமான ஹதீஸ்களைக்
கொண்டு அமல்செய்வது கூடும் என்பது ஹதீஸ் கலை ஆய்வாளர்களின் கருத்து
>> இதல்லாமல் காலங்களில்
சிறந்த காலத்தவர்களான சஹாபாக்கள், தாபியீன்கள்,
தபஉத் தாபியீன்கள் காலமுதல் இன்று வரை இந்த பராஅத்
இரவு விசேஷம் அனுஷ்டிக்கப்பட்டு இந்த இரவில் அதிகமாக இபாதத் செய்து முக்கியத்துவப்படுத்துவதும்
நடைமுறையில் இருந்து வருகிறது.
ஆகவே இதை பித்அத்
என்று பிதற்றுவதோ, இது அடிப்படை அற்ற
விசயம் என்று ஒதுக்கித்தள்ளுவதோ அர்த்தமற்றதாகும். எனவே சரியான விஷயம் என்னவென்றால்
இது சிறப்பிற்குரிய ஒரு இரவாகும். இதற்கு தனிப்பட்ட ஒரு முக்கியத்துவம் இருக்கிறது.
இதில் இரவு விழித்து இபாதத்தில் ஈடுபடுவது மிகப்பெரும் கூலியை பெற்றுத்தருவதாகும்.
அல்லாமா முல்லா அலி
காரி அவர்கள் தனது மிர்க்காத் (மிஷ்காத் விரிவுரை) யில் கூறுகிறார்கள்,. லயீ/பான ஹதீஸைக் கொண்டு அமல் செய்வது கூடும். பராஅத்
இரவில் விஷேசமாக இபாதத் செய்வதை இஸ்லாமிய அறிஞர்கள் எதிர்க்கவோ மறுக்கவோ இல்லை.
இந்த புனிதத்தை மறுப்பவர்கள் யார்?
أَرَأَيْتَ الَّذِي يَنْهَى (9) عَبْدًا إِذَا صَلَّى (10)
“(நபியே!) ஒர் அடியார்
தொழுதால் அதைத் தடை செய்கின்றவனை நீங்கள் பார்த்தீர்களா?” (அல் குர்ஆன்: 96:9,10)
பராஅத் போன்ற சிறப்பான
இரவுகளில் தொழுகின்ற அடியார்களை தடைசெய்கின்றவர்களைக் குறித்து அன்றே அல்லாஹ் அடையாளப்
படுத்தி இருப்பதைப் பார்த்தீர்களா?
----------------------------------------------------------------
தொகுத்து வழங்கியவர் நபிப் பித்தன்
----------------------------------------------------------------
1. عن عائشة، رضي الله عنها، قالت:" لما كانت ليلة النصف من شعبان
انسل رسول الله صلى الله عليه وسلم من مرطي، ثم قالت: والله ما كان مرطنا من خز، ولا
قز، ولا، كرسف، ولا كتان، ولا صوف فقلت: سبحان الله فمن أي شيء؟ قالت: إن كان سداه
لشعر، وإن كانت لحمته لمن وبر الإبل، قالت: فخشيت أن يكون أتى بعض نسائه، فقمت ألتمسه
في البيت فيقع قدمي على قدميه وهو ساجد فحفظت من قوله وهو يقول: «سجد لك سوادي وخيالي،
وآمن لك فؤادي، وأبوء لك بالنعم، وأعترف بالذنوب العظيمة، ظلمت نفسي فاغفر لي إنه لا
يغفر الذنوب إلا أنت، أعوذ بعفوك من عقوبتك، وأعوذ برحمتك من نقمتك، وأعوذ برضاك من
سخطك، وأعوذ بك منك لا أحصي ثناء عليك أنت كما أثنيت على نفسك» قالت: فما زال رسول
الله صلى الله عليه وسلم يصلي قائما وقاعدا حتى أصبح، فأصبح وقد اضمعدت قدماه، فإني
لأغمزها، وقلت: بأبي أنت وأمي، أتعبت نفسك، أليس قد غفر الله لك ما تقدم من ذنبك وما
تأخر؟ أليس قد فعل الله بك؟ أليس أليس؟ فقال: «بلى يا عائشة، أفلا أكون عبدا شكورا؟
هل تدرين ما في هذه الليلة؟» قالت: ما فيها يا رسول الله؟ فقال: " فيها أن يكتب
كل مولود من بني آدم في هذه السنة، وفيها أن يكتب كل هالك من بني آدم في هذه السنة،
وفيها ترفع أعمالهم، وفيها تنزل أرزاقهم، فقالت: يا رسول الله: ما أحد يدخل الجنة إلا
برحمة الله؟ فقال: «ما من أحد يدخل الجنة إلا برحمة الله» قلت: ولا أنت يا رسول الله؟
فوضع يده على هامته فقال: «ولا أنا إلا أن يتغمدني الله منه برحمة» يقولها ثلاث مرات
"
عن أنس بن مالك، قال: بعثني النبي صلى الله عليه وسلم إلى منزل عائشة
رضي الله عنها في حاجة، فقلت لها: أسرعي فإني تركت رسول الله صلى الله عليه وسلم يحدثهم
عن ليلة النصف من شعبان، فقالت: يا أنيس اجلس حتى أحدثك بحديث ليلة النصف من شعبان،
إن تلك الليلة كانت ليلتي من رسول الله صلى الله عليه وسلم فجاء النبي صلى الله عليه
وسلم فدخل معي في لحافي، فانتبهت من الليل فلم أجده، فقمت فطفت في حجرات نسائه فلم
أجده فقلت لعله ذهب إلى جاريته مارية القبطية فخرجت فمررت في المسجد فوقعت رجلي عليه
وهو ساجد وهو يقول: «سجد لك سوادي وخيالي، وآمن بك فؤادي، وهذه يدي جنيت بها على نفسي،
فيا عظيم، هل يغفر الذنب العظيم إلا الرب العظيم، فاغفر لي» قالت: ثم رفع رأسه وهو
يقول: «اللهم هب لي قلبا تقيا نقيا من الشر، بريا لا كافرا ولا شقيا» ثم عاد فسجد،
وهو يقول: " أقول لك كما قال أخي داود عليه السلام: أعفر وجهي في التراب لسيدي
وحق لوجه سيدي أن تعفر الوجوه لوجهه "، ثم رفع رأسه فقلت: بأبي وأمي أنت، قال:
«يا حميراء، أما تعلمين أن هذه الليلة ليلة النصف من شعبان؟ إن لله في هذه الليلة عتقاء
من النار بقدر شعر غنم كلب» قلت: يا رسول الله، وما بال شعر غنم كلب؟ قال: " لم
يكن في العرب قبيلة قوم أكبر غنما منهم، لا أقول ستة نفر: مدمن خمر، ولا عاق لوالديه،
ولا مصر على زنا، ولا مصارم، ولا مضرب، ولا قتات "
عن عائشة، رضي الله عنها، قالت: فقدت النبي صلى الله عليه وسلم ذات
ليلة فخرجت أطلبه، فإذا هو بالبقيع رافعا رأسه إلى السماء، فقال: «يا عائشة أكنت تخافين
أن يحيف الله عليك ورسوله؟» قالت: قلت: وما بي ذلك، ولكنني ظننت أنك أتيت بعض نسائك،
فقال: «إن §الله عز وجل ينزل ليلة النصف من شعبان إلى سماء الدنيا فيغفر لأكثر من عدد
شعر غنم كلب»
குறிப்பு வழங்கிய பெருமக்கள் :
MOULANA HANEEF JAMALI , MOULANA PEER FAIZY, MOULANA MOHAMED ASHIQ, MOULANA MOHAMED THAJUDHEEN QASIMI MOULAN NASEER MISBAHI, MOULANA ABU THALHA தொகுத்து வழங்கியவர் நபிப் பித்தன்
3 comments:
குறிப்பு வழங்கிய பெருமக்களுக்கும்
இணைப்புகளின் உரிமையாளர்களுக்கும்
வாசிக்கும் வலைதள நேயர்களுக்கும்
ஆழமான நன்றிகள் ஆயிரம் ஆயிரம்!
குறிப்புகள் அணைத்தும் அருமை.அல்ஹம்துலில்லாஹ்.துஆ செய்கிறேன்.வஸ்ஸலாம்.
அல்ஹம்துலில்லாஹ் மவ்லானா.
Post a Comment