சத்தியத்தை இவ்வுலகத்தில்
நிலைநிறுத்தவே எண்ணற்ற நபிமார்களை அல்லாஹ் அனுப்பிவைத்தான். நபித்துவம் எங்கே தோன்றியதோ அங்கே அதற்கான எதிர்ப்பும் முளைக்கிறது. நபி மூஸா அலை அவர்களுக்கு
பிர்அவ்னை போல, நபி இப்ராஹீம் அலை
அவர்களுக்கு நம்ரூதைபோல, நபி ஸல் அவர்களுக்கு
அபூ ஜஹ்லை போல, அசத்தியவாதிகள் ஒவ்வொரு
காலத்திலும் தோன்றினார்கள். இறுதியில் அவர்களும், அவர்களின் கொள்கைகளும்
தோன்றிய இடத்திலேயே அடையாளம் தெறியாமல் புதைக்கப்பட்டுவிட்டது...
أَمْ حَسِبْتُمْ أَنْ تَدْخُلُوا
الْجَنَّةَ وَلَمَّا يَأْتِكُمْ مَثَلُ الَّذِينَ خَلَوْا مِنْ قَبْلِكُمْ مَسَّتْهُمُ
الْبَأْسَاءُ وَالضَّرَّاءُ وَزُلْزِلُوا حَتَّى يَقُولَ الرَّسُولُ وَالَّذِينَ آمَنُوا
مَعَهُ مَتَى نَصْرُ اللَّهِ أَلَا إِنَّ نَصْرَ اللَّهِ قَرِيبٌ. (القرآن 2: 214)
(நம்பிக்கையாளர்களே!) உங்களுக்கு முன்
சென்றவர்களுக்கு ஏற்பட்டது போன்ற (கஷ்டமான) நிலைமை உங்களுக்கு வராமலே நீங்கள்
சுவர்க்கத்தில் நுழைந்து விடலாமென்று நினைத்துக் கொண்டீர்களோ? (உங்களைப்
போல) நம்பிக்கை கொண்ட அவர்களையும் அவர்களுடைய தூதரையும், வாட்டும்
வறுமையிலும், நோயிலும்
பீடித்து (அவர்கள் வருந்தித் தங்களுடைய கஷ்டங்களை நீக்கி வைக்க)
"அல்லாஹ்வுடைய உதவி எப்பொழுது (வரும்? எப்பொழுது வரும்?)" என்று கேட்டதற்கு
"அல்லாஹ் வுடைய உதவி நிச்சயமாக (இதோ) சமீபத்திலிருக்கிறது" என்று (நாம்
ஆறுதல்) கூறும் வரையில் அவர்கள் ஆட்டி வைக்கப்பட்டார்கள்.
துன்புறுத்துதல்:
நபி (ஸல்) அவர்களின் பகிரங்க அழைப்பைத் தொடர்ந்து பல மாதங்கள் எதிரிகள் மேற்கொண்ட தடுப்பு முயற்சிகள் அனைத்தும் தோல்வியைத் தழுவின. தாங்கள் கையாண்ட வழிமுறைகளால் எவ்வித பயனுமில்லை என்று அவர்களின் அறிவுக்கு மெதுவாக உரைத்த பிறகு அடுத்த கட்ட நடவடிக்கையாக மாற்று வழியைக் கையாண்டனர். அதாவது, ஒவ்வொரு சமூகத்தலைவரும் எஜமானரும் தன்னுடைய ஆளுமையின் கீழுள்ளவர்கள், அடிமைகள்- இவர்களில் யாராவது இஸ்லாமைத் தழுவினால் அவர்களைத் துன்புறுத்த வேண்டும். அவர்களுக்கு இன்னல்கள் விளைவிக்க வேண்டும் என முடிவு செய்தனர்.
தலைவர்களுடன் அவர்களது எடுபிடிகளும் சேர்ந்துகொண்டு முஸ்லிம்களை வாட்டி வதைத்தனர். குறிப்பாக, சாதாரண எளிய முஸ்லிம்களுக்கு அவர்கள் தந்த நோவினைகளைக் கேட்கும்போதே உள்ளம் கசிந்துருகும். அவற்றை சொல்லி மாளாது.
செல்வமும் செல்வாக்குமுள்ள ஒருவர் இஸ்லாமைத் தழுவினால் அவரிடம் அபூஜஹ்ல் நேரே சென்று “உன் செல்வத்தையும் செல்வாக்கையும் ஒன்றுமில்லாமலாக்கி விடுவேன்” என்று மிரட்டுவான். அவர் கொஞ்சம் பலமில்லாதவராக இருந்தால் அடித்துத் துன்புறுத்துவான். (இப்னு ஹிஷாம்)
உஸ்மான் (ரழி) அவர்களது தந்தையின் சகோதரர் அப்பாவி முஸ்லிம்களை பேரீத்தங்கீற்றுப் பாயில் சுருட்டி வைத்து அதற்குக் கீழே புகை மூட்டி மூச்சு திணறடிப்பர். (ரஹ்மத்துல்லில் ஆலமீன்)
தனது மகன் முஸ்லிமாகி விட்டதை அறிந்த முஸ்அப் இப்னு உமைர் (ரழி) அவர்களின் தாயார் அவருக்கு உணவு, தண்ணீர் கொடுக்காமல் வீட்டிலிருந்து விரட்டிவிட்டார். மிக ஆடம்பரமாக வாழ்ந்து வந்த அவர் பெரும் துன்பத்தை அனுபவித்தார். பசி, பட்டினி என்ற வறண்ட வாழ்க்கையினால் அவர்களது மேனியின் தோல் சுருங்க ஆரம்பித்தது. (அஸதுல் காபா)
ஸுஹைப் இப்னு ஸினான் (ரழி) நினைவிழக்கும் வரை கடுமையாக தாக்கப்படுவார். (அஸதுல் காபா)
பிலால் (ரழி) அவர்கள் உமய்யா இப்னு கலஃபுடைய அடிமையாக இருந்தார்கள். உமையா அவர்களது கழுத்தில் கயிற்றைக் கட்டி சிறுவர்களிடம் கொடுப்பான். சிறுவர்கள் அவரை மக்காவின் கரடு முரடான மலைப் பாதைகளில் இழுத்துச் செல்வார்கள். கயிற்றின் அடையாளம் அவர்களது கழுத்தில் பதிந்துவிடும். அவர்கள் “அஹத்! அஹத்!“” என்று சொல்லிக் கொண்டிருப்பார்கள். சில வேளைகளில் உமையா பிலாலை மிக இறுக்கமாகக் கட்டி தடியால் கடுமையாகத் தாக்குவான். பிறகு சூரிய வெப்பத்திலும் போடுவான். உணவளிக்காமல் பசியால் துடிக்க வைப்பான். சுட்டெரிக்கும் சூரிய வெப்பத்தில் பாலைவன மணலில் கிடத்தி அவர்களது நெஞ்சின்மீது பாறாங்கல்லைத் தூக்கி வைப்பான். அப்போது பிலாலை நோக்கி, “அல்லாஹ்வின் மீதாணையாக! நீ சாக வேண்டும். அல்லது முஹம்மதின் மார்க்கத்தை நிராகரித்து லாத், உஜ்ஜாவை வணங்க வேண்டும். அதுவரை நீ இப்படியேதான் இருப்பாய். உன்னை விடவே மாட்டேன்” என்பான். அதற்கு பிலால் (ரழி) அஹத்! அஹத்! என்று சொல்லிக் கொண்டே, “இந்த “அஹத்’ என்ற வார்த்தையைவிட உனக்கு ஆவேசத்தை உண்டு பண்ணும் வேறொரு வார்த்தை எனக்குத் தெரிந்தால் நான் அதையே கூறுவேன்” என்பார்கள்.
ஒரு நாள் பிலால் (ரழி) சித்திரவதைக்குள்ளாகி இருக்கும்போது அவர்களைக் கடந்து சென்ற அபூபக்ர் (ரழி) அவர்கள் ஒரு ஹபஷி அடிமையை கிரயமாகக் கொடுத்து பிலால் (ரழி) அவர்களை வாங்கி உரிமை விட்டார்கள். சிலர் “ஐந்து அல்லது ஏழு ஊகியா வெள்ளிக்குப் பகரமாக வாங்கி உரிமை விட்டார்கள்” என்று கூறுகின்றனர். (இப்னு ஹிஷாம்)
அம்மார் இப்னு யாஸிர் (ரழி), அவர்களது தகப்பனார் யாஸிர், தாயார் ஸுமய்யா ஆகிய மூவரும் மக்ஜூம் கிளையைச் சேர்ந்த அபூ ஹுதைஃபா இப்னு முகீரா என்பவனின் அடிமைகளாக இருந்தார்கள். மூவரும் இஸ்லாமைத் தழுவினர். இம்மூவரையும் அபூஜஹ்ல் தலைமையில் ஒரு கூட்டம் “அப்தஹ்’ என்ற இடத்துக்கு அழைத்துச் சென்று மதிய வேளையில் சுடு மணலில் கிடத்தி கடுமையாக சித்திரவதை செய்தனர். இதனைக் கண்ட நபி (ஸல்) அவர்கள் “யாஸின் குடும்பத்தாரே! பொறுமையை மேற்கொள்ளுங்கள். உங்களுக்கு சொர்க்கம் வாக்களிக்கப்பட்டுள்ளது” என ஆறுதல் கூறினார்கள். நிராகரிப்பவர்களின் வேதனையாலேயே யாஸிர் (ரழி) இறந்துவிட்டார்கள். வயது முதிர்ந்து இயலாதவராக இருந்த அம்மான் தாயாரான சுமைய்யா பின்த் கய்யாத் (ரழி) அவர்களை அபூ ஜஹ்ல் அவர்களது பெண்ணுறுப்பில் ஈட்டியால் குத்திக் கொலை செய்தான். இவரே இஸ்லாமிற்காக உயிர் நீத்த முதல் பெண்மணியாவார்.
அவர்களது மகனாரான அம்மாரை பாலைவனச் சுடுமணலில் கிடத்தி நெஞ்சின் மீது பாறாங்கல்லை வைத்தும், நினைவிழக்கும் வரை தண்ணீல் மூழ்கடித்தும் சித்திரவதை செய்தனர். “முஹம்மதை திட்ட வேண்டும் அல்லது லாத், உஜ்ஜாவைப் புகழ வேண்டும். அப்போதுதான் உன்னை இத்தண்டனையிலிருந்து விடுவிப்போம்” என்றும் கூறினர். வேதனை தாளாத அம்மார் (ரழி) அவர்கள் நிராகரிப்பவர்களின் கட்டளைக்கு இணங்கிவிட்டார். அதற்குப் பின் நபி (ஸல்) அவர்களிடம் வந்து அழுது மன்னிப்புக் கோரினார். அப்போது அல்லாஹ் பின்வரும் வசனத்தை இறக்கியருளினான். (இப்னு ஹிஷாம்)
(ஆகவே,) எவரேனும் நம்பிக்கை கொண்டதன் பின்னர், அல்லாஹ்வை (நிராகரித்தால் அவனைப் பற்றிக் கவனிக்கப்படும்.) அவனுடைய உள்ளம் நம்பிக்கையை கொண்டு முற்றிலும் திருப்தியடைந்தே இருக்க, எவனுடைய நிர்ப்பந்தத்தின் மீதும் அவன் (இவ்வாறு) நிராகரித்தால் (அவன்மீது யாதொரு குற்றமுமில்லை.) எனினும், அவனுடைய உள்ளத்தில் நிராகரிப்பே நிறைந்திருந்(து இவ்வாறு செய்)தால் அவன் மீது அல்லாஹ்வுடைய கோபம்தான் ஏற்படும். அவனுக்கு கடுமையான வேதனையுமுண்டு. (அல்குர்ஆன் 16:106)
அஃப்லஹ் அபூ ஃபுகைஹா (ரழி) அவர்கள் அப்து தார் கிளையைச் சார்ந்த ஒருவருடைய அடிமையாக இருந்தார். இவரது இரு கால்களையும் சங்கிலியால் பிணைத்து, ஆடைகளைக் கழற்றிவிட்டு சுடுமணலில் குப்புறக் கிடத்தி அசையாமலிருக்க பெரும் பாறையை முதுகின் மீது வைத்து, சுய நினைவை இழக்கும்வரை அவரை அதே நிலையில் விட்டுவிடுவார்கள். இவ்வாறான கொடுமைகள் தொடர்ந்தன. ஒருமுறை அவரது கால்களைக் கயிற்றால் பிணைத்துச் சுடுமணலில் கிடத்தி கழுத்தை நெறித்தார்கள். அவர் சுயநினைவை இழந்தவுடன் இறந்துவிட்டாரென எண்ணி விட்டுவிட்டார்கள். அப்போது அவ்வழியாக வந்த அபூபக்ர் (ரழி) அஃப்லஹை விலைக்கு வாங்கி உரிமையிட்டார்கள். (அஸதுல் காபா)
கப்பாப் இப்னு அரத் (ரழி) அவர்கள் உம்மு அன்மார் என்ற பெண்ணின் அடிமையாகவும், கொல்லர் பணி செய்பவராகவும் இருந்தார்கள். அவர் இஸ்லாமைத் தழுவியதை அறிந்த எஜமானி பழுக்கக் காய்ச்சப்பட்ட இரும்பால் அவர்களது தலையிலும் முதுகிலும் சூடிட்டு “முஹம்மதின் மார்க்கத்தை விட்டுவிடு” என்று கூறுவாள். ஆனால் இவ்வாறான வேதனைகளால் அவர்களது ஈமானும்” மன உறுதியுமே அதிகரித்தது. உம்மு அன்மார் மட்டுமின்றி ஏனைய நிராகரிப்பவர்களும் அவரது முடியைப் பிடித்திழுப்பார்கள்; கழுத்தை நெறிப்பார்கள். நெருப்புக் கங்குகளின் மீது அவரைப் படுக்க வைப்பார்கள். அந்த நெருப்பு அவரது உடலைப் பொசுக்க, அப்போது இடுப்பிலிருந்து கொழுப்பு உருகி ஓடி, நெருப்பை அணைத்துவிடும். (அஸதுல் காபா)
ரோம் நாட்டைச் சேர்ந்த அடிமையான ஜின்னீரா (ரழி) என்ற பெண்மணி இஸ்லாமை ஏற்றதற்காக பலவிதமான கொடுமைக்கு ஆளானார். அப்போது கண்ணில் ஏற்பட்ட காயத்தின் காரணமாக பார்வையை இழந்தார். “இவரது கண்ணை லாத், உஜ்ஜா பறித்துவிட்டன” என்று நிராகரிப்பவர்கள் கூறினர். அதற்கு ஜின்னீரா, “நிச்சயமாக இல்லை! அல்லாஹ்வின் மீது ஆணையாக! இது அல்லாஹ்வின் புறத்திலிருந்து ஏற்பட்டது. அவன் நாடினால் எனக்கு நிவாரணமளிப்பான்” என்று கூறினார். மறுநாள் அவர்களது பார்வையை அல்லாஹ் சசெய்தான். அதைக் கண்ட குறைஷியர்கள் “இது முஹம்மதின் சூனியத்தில் ஒன்று” எனக் கூறினர். (இப்னு ஹிஷாம்)
உம்மு உபைஸ் (ரழி) என்ற பெண்மணி அஸ்வத் இப்னு அப்து யகூஸ் என்பவனின் அடிமையாக இருந்தார். இவன் நபி (ஸல்) அவர்களின் கொடும் விரோதியாகவும் நபியவர்களை பரிகசிப்பவனாகவும் இருந்தான். அவன் உம்மு உபைஸை கொடூரமாக வேதனை செய்தான். (இஸாபா)
அம்ர் இப்னு அதீ என்பவனின் அடிமைப் பெண்ணும் இஸ்லாமை ஏற்றார். அவரை (அப்போது இஸ்லாமை ஏற்காதிருந்த) உமர் (ரழி), தான் களைப்படையும் வரை சாட்டையால் அடித்துவிட்டு “நீ மரணிக்கும்வரை உன்னை நான் விடமாட்டேன்” என்று கூறுவார். அதற்கு அப்பெண்மணி “அப்படியே உமது இறைவனும் உம்மைத் தண்டிப்பான்” என்று கூறுவார். (இப்னு ஹிஷாம்)
இஸ்லாமை ஏற்றதற்காக கொடுமை செய்யப்பட்ட அடிமைப்பெண்களில் நஹ்திய்யா (ரழி) என்பவரும் அவரது மகளும் அடங்குவர். இவ்விருவரும் அப்துத்தான் கிளையைச் சேர்ந்த ஒரு பெண்ணிடம் அடிமையாக இருந்தனர். (இப்னு ஹிஷாம்)
இஸ்லாமை ஏற்றதற்காகக் கொடுமை செய்யப்பட்ட ஆண் அடிமைகளில் ஆமிர் இப்னு புஹைரா (ரழி) என்பவரும் ஒருவர். நினைவிழந்து சித்தப் பிரமை பிடிக்குமளவு அவரை கொடுமைப்படுத்தினார்கள். (இப்னு ஹிஷாம்)
இம்மூவரையும் அபூபக்ர் (ரழி) விலைக்கு வாங்கி உரிமையிட்டார்கள். இதைக் கண்ட அவர்களது தந்தையான அபூ குஹாஃபா “நீ பலவீனமான அடிமைகளை விலைக்கு வாங்கி உரிமை விடுகிறாய். திடகாத்திரமான ஆண் அடிமைகளை வாங்கி உரிமையளித்தால் அவர்கள் உனக்கு பக்கபலமாக இருப்பார்களே!” என்றார்.
அதைக் கேட்ட அபூபக்ர் (ரழி) அவர்கள் “நான் அல்லாஹ்வின் திருப்தியை நாடியே செய்கிறேன்” என்றார்கள். அல்லாஹ் அவர்களைப் புகழ்ந்தும் இஸ்லாமின் எதிரிகளை இகழ்ந்தும் அடுத்துள்ள வசனங்களை இறக்கினான்.
(மக்காவாசிகளே!) கொழுந்து விட்டெயும் நெருப்பைப் பற்றி நான் உங்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்கின்றேன். மிக்க துர்பாக்கியம் உடையவனைத் தவிர, (மற்றெவனும்) அதற்குள் செல்ல மாட்டான். அவன் (நம்முடைய வசனங்களைப்) பொய்யாக்கிப் புறக்கணித்துவிடுவான். (அல்குர்ஆன் 92:14-16)
இவ்வசனத்தில் கூறப்பட்டுள்ள துர்பாக்கியமுடையவன் உமைய்யாவும் அவனுடைய வழியில் முஸ்லிம்களை கொடுமைப்படுத்தியவர்களுமாவர்.
இறையச்சமுள்ளவர்தான் அதிலிருந்து தப்பித்துக் கொள்வார். (அவர் பாவத்திலிருந்து தன்னைப்) பரிசுத்தமாக்கிக் கொள்ளும் பொருட்டுத் தன்னுடைய பொருளை(த் தானமாக)க் கொடுப்பார். அவர் பதில் செய்யக்கூடியவாறு எவருடைய நன்றியும் அவர் மீது இல்லாதிருந்தும், மிக்க மேலான தன் இறைவனின் முகத்தை விரும்பியே தானம் கொடுப்பார். (இறைவன் அவருக்கு அளிக்கும் கொடையைப் பற்றிப்) பின்னர் அவரும் திருப்தியடைவார். (அல்குர்ஆன் 92:17-21)
இவ்வசனத்தில் இறையச்சமுள்ளவர் என குறிப்பிடப்படுபவர் அபூபக்ர் (ரழி) அவர்களாவார். (இப்னு ஹிஷாம்)
அபூபக்ர் (ரழி) அவர்களும் துன்புறுத்தப்பட்டார்கள். நவ்ஃபல் இப்னு குவைலித் என்பவன் அபூபக்ர் (ரழி), தல்ஹா இப்னு உபைதுல்லாஹ் (ரழி) இருவரையும் தொழக்கூடாது என்பதற்காக ஒரே கயிற்றில் இருவரையும் பிணைத்துவிட்டான். ஆனால், கட்டவிழ்ந்து அவ்விருவரும் தொழுவதைக் கண்ட நவ்ஃபல் அஞ்சி நடுங்கினான். இருவரும் ஒரே கயிற்றில் பிணைக்கப் பட்டதால் அவர்களை “கரீனைன் - இணைந்த இருவர்” என்று கூறப்படுகிறது. சிலர் இருவரையும் கட்டியது நவ்ஃபல் அல்ல, தல்ஹாவின் சகோதரன் உஸ்மான் இப்னு உபைதுல்லாஹ்தான் என்று கூறுகின்றனர்.
(மேற்கூறிய சம்பவங்கள் மக்கா முஸ்லிம்கள் பட்ட இன்னல்களுக்கு எடுத்துக் காட்டாகும்.) இஸ்லாமைத் தழுவிய எவரையும் அவர்கள் துன்புறுத்தாமல் விட்டதில்லை. எளிய முஸ்லிம்களைப் பாதுகாக்கவும் அவர்களுக்காகப் பழிவாங்கவும் எவருமில்லை என்பதால் அவர்களைக் கடுமையாகத் தண்டிப்பது நிராகரிப்பவர்களுக்கு மிக எளிதாக இருந்தது. அடிமைகளாக இருந்தவர்களை அவர்களது எஜமானர்களும் அவர்களைச் சுற்றியிருந்தவர்களும் கொடுமைப் படுத்தினர். இஸ்லாமைத் தழுவியவர் செல்வமும் செல்வாக்கும் உடையவராக இருந்தால், அவர்களுக்கு அவர்களது கூட்டத்தார் பாதுகாவலாக இருந்தனர். சில வேளைகளில் குரோதத்தின் காரணமாக அவர்களது கூட்டத்தினரே அவர்களை கொடுமை செய்தனர்.

நபியவர்கள்
மீது அத்துமீறல்:
நபி (ஸல்) அவர்களுக்கு நபித்துவம் அருளப்பட்டு அழைப்புப் பணியைத் தொடங்கும் வரை குறைஷியர்கள் அவர்களை தங்களில் மதிக்கத்தக்க நபராகவே கருதி வந்தனர். அழைப்புப் பணியைத் தொடங்கியதும் அவர்கள் சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு நபி (ஸல்) அவர்கள் மீது அத்துமீறாதிருந்தனர். தற்பெருமையும் ஆணவமும் கொண்டிருந்த அவர்களால் நபி (ஸல்) அவர்களின் செயல்பாடுகளை நீண்ட நாள் சகித்துக் கொண்டிருக்க முடியவில்லை. குறைஷித் தலைவர்களில் ஒருவனான அபூ லஹப் அழைப்புப் பணியின் முதல் நாளிலிருந்தே நபி (ஸல்) அவர்களிடம் கடும் பகைமையைக் காட்டி வந்தான் என்பதை ஹாஷிம் கிளையாரின் சபையிலும் ஸஃபா மலை நிகழ்ச்சியிலும் நாம் அறிந்திருக்கிறோம்.
நபித்துவத்துக்கு முன் நபி (ஸல்) அவர்கள் தங்களின் மகள்கள் ருகையா, உம்மு குல்ஸும் (ரழி) அவர்களை அபூலஹபின் மகன்களான உத்பா, உதைபாவுக்கு மணமுடித்துக் கொடுத்திருந்தார்கள். நபி (ஸல்) அவர்கள் ஏகத்துவப் பிரச்சாரத்தைத் தொடங்கியதும் அபூ லஹப் தனது மகன்களை நிர்ப்பந்தித்து விவாகரத்துச் செய்ய வைத்துவிட்டான். (இப்னு ஹிஷாம்)
நபி (ஸல்) அவர்களின் இரண்டாவது மகனாரான அப்துல்லாஹ் சிறு வயதில் மரணமடைந்த போது அபூலஹப் மட்டில்லா மகிழ்ச்சியுடன் தனது தோழர்களிடம் “முஹம்மது சந்ததியற்றவராகி விட்டார்” என்ற சுபச் செய்தியைப் பெற்றுக் கொள்ளுங்கள் எனக் கூறினான். (தஃப்ஸீர் இப்னு கஸீர்)
ஹஜ்ஜுடைய காலங்களிலும் கடைத்தெருக்களிலும் அபூலஹப் நபி (ஸல்) அவர்களுக்குப் பின்னால் சுற்றி வந்து அவர்களைப் “பொய்யர்” என்று கூறுவான். அது மட்டுமல்லாமல் ரத்தம் கொட்டும்வரை அவர்களது பிடரியில் பொடிக்கற்களால் அடித்துக்கொண்டே இருப்பான். (கன்ஜுல் உம்மால்)
அபூ லஹபின் மனைவியும் அபூ ஸுஃப்யானின் சகோதரியுமான உம்மு ஜமீல் நபி (ஸல்) அவர்களுக்கு நோவினை கொடுப்பதில் தனது கணவனைவிட குறைந்தவளும் அல்ல! சளைத்தவளும் அல்ல! முட்களை நபி (ஸல்) செல்லும் பாதையிலும் அவர்களது வீட்டின் வாசலிலும் வைத்து விடுவாள். மிகக் கெட்டவளான இவள் எந்நேரமும் நபி (ஸல்) அவர்களை ஏசிப் பேசிக்கொண்டிருந்தாள். பல பொய்களைப் பரப்பிக் கொண்டே இருப்பாள். நபி (ஸல்) அவர்களுக்கு எதிராகக் குழப்பம் விளைவித்துக் கொண்டும், பிரச்சினையின் நெருப்பை மூட்டிவிட்டுக் கொண்டும் இருப்பாள். இதனால்தான் அல்குர்ஆன் அவளை “ஹம்மாலதல் ஹத்தப்” விறகை சுமப்பவள் என்று வர்ணிக்கிறது.
தன்னைப் பற்றியும் தனது கணவனைப் பற்றியும் குர்ஆனின் வசனம் இறங்கியதை அறிந்து அவள் நபி (ஸல்) அவர்களிடம் வந்தாள். அப்போது நபி (ஸல்) அவர்களும் அபூபக்ரும் (ரழி) கஅபத்துல்லாஹ்விற்கு அருகில் உட்கார்ந்திருந்தார்கள். அவளது கையில் குழவிக் கல் இருந்தது. இருவருக்கும் அருகில் அவள் வந்தவுடன் அவளது பார்வையை நபி (ஸல்) அவர்களைப் பார்க்க முடியாமல் அல்லாஹ் பறித்து விட்டான்.
அபூபக்ரைப் பார்க்க முடிந்த அவளால் நபி (ஸல்) அவர்களைப் பார்க்க முடியவில்லை. “அபூபக்ரே உமது தோழர் எங்கே? அவர் என்னை கவிதைகளில் ஏசுகிறார் என்று எனக்கு தெரிய வந்துள்ளது. அல்லாஹ்வின் மீது ஆணையாக! அவரை நான் பார்த்தால் இக்குழவிக் கல்லால் அவரது வாயிலேயே அடிப்பேன். அறிந்து கொள்! அல்லாஹ்வின் மீது ஆணையாக! எனக்கும் நன்றாகக் கவி பாடத்தெரியும்” என்று கூறிய பின் அடுத்து வரும் கவிதையைப் படித்தாள்.
“இழிவுக்குரியவரைத்தான் நாங்கள் ஏற்க மறுத்தோம்; அவரது கட்டளையை புறக்கணித்தோம்; அவருடைய மார்க்கத்தையும் வெறுத்தோம்.”
பிறகு அவள் திரும்பிச் சென்றுவிட்டாள். அப்போது அபூபக்ர் (ரழி) அவர்கள் “அல்லாஹ்வின் தூதரே! அவள் உங்களைப் பார்த்ததை நீங்கள் பார்க்கவில்லையா?” என வினவ “அவள் என்னைப் பார்க்கவில்லை. அல்லாஹ் என்னை பார்க்க முடியாமல் அவளது பார்வையை மறைத்து விட்டான்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (இப்னு ஹிஷாம்)
இச்சம்பவம் பற்றி “முஸ்னத் பஜ்ஜார்’ எனும் நூலின் அறிவிப்பில் வருவதாவது: அவள் அபூபக்ரிடம் வந்து “அபூபக்ரே! உங்கள் தோழர் என்னை கவிதையில் திட்டுகிறார்” என்றாள். அதற்கு அபூபக்ர் (ரழி) “இந்த வீட்டின் இறைவனின் மீது சத்தியமாக! அவருக்கு கவிதை பாடத் தெரியாது” என்று கூறினார்கள். “ஆம்! நீங்கள் சரியாகத்தான் கூறினீர்கள்” என்று கூறிவிட்டு சென்றுவிட்டாள்.
நபி (ஸல்) அவர்களின் தந்தையின் சகோதரனாகவும் நபி (ஸல்) அவர்களின் அண்டை வீட்டுக்காரனாகவும் இருந்த அபூலஹபும் இவ்வாறே செய்து கொண்டிருந்தான். அவனது வீடு நபி (ஸல்) அவர்களின் வீட்டுடன் இணைந்திருந்தது. அவனும் அவனைப் போன்ற நபி (ஸல்) அவர்களின் மற்ற அண்டை வீட்டார்களும் நபி (ஸல்) அவர்கள் வீட்டினுள் இருக்கும்போது நோவினை அளித்துக் கொண்டே இருப்பார்கள்.
இப்னு இஸ்ஹாக் (ரஹ்) கூறுகிறார்: நபி (ஸல்) வீட்டினுள் இருக்கும்போது நபி (ஸல்) அவர்களின் அண்டை வீட்டார்களான அபூலஹப், ஹகம் இப்னு அபுல்ஆஸ் இப்னு உமைய்யா, உக்பா இப்னு அபீமுயீத், அதீ இப்னு ஹம்ராஃ ஸகஃபீ, இப்னுல் அஸ்தா ஆகியோர் எப்போதும் நபி (ஸல்) அவர்களுக்கு மிகுந்த நோவினை அளித்து வந்தனர். இவர்களில் ஹகம் இப்னு அபுல் ஆஸைத் தவிர வேறு யாரும் இஸ்லாமை ஏற்றுக் கொள்ளவில்லை. தொழுது கொண்டிருக்கும் போது ஆட்டின் குடலை நபி (ஸல்) அவர்களை நோக்கி வீசுவார்கள். நபி (ஸல்) அவர்கள் வீட்டில் சமைப்பதற்காக சட்டியை வைக்கும்போது அதில் ஆட்டுக்குடலை போடுவார்கள். இதற்காகவே இவர்களிலிருந்து தன்னை மறைத்துக் கொள்வதற்காக ஒரு சுவரை ஏற்படுத்திக் கொண்டார்கள். இவர்கள் அசுத்தங்களை தூக்கி எறியும்போது அதைக் குச்சியில் வெளியே எடுத்து வந்து தனது வீட்டு வாசலில் நின்றவண்ணம் “அப்து மனாஃபின் குடும்பத்தினரே! இதுதான் அண்டை வீட்டாருடன் மேற்கொள்ளும் ஒழுக்கமா?” என்று கேட்டு, அதை ஓர் ஓரத்தில் தூக்கி வீசுவார்கள். (இப்னு ஹிஷாம்)
உக்பா இப்னு அபூமுயீத் விஷமத்தனத்தில் எல்லை மீறி நடந்து கொண்டான். இதைப் பற்றி ஒரு சம்பவத்தை இப்னு மஸ்ஊது (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்:
நபி (ஸல்) அவர்கள் கஅபாவுக்கு அருகில் தொழுது கொண்டிருந்தார்கள். அபூஜஹ்லும் அவனது கூட்டாளிகளும் அங்கு குழுமியிருந்தனர். அவர்கள் தங்களுக்குள் “நம்மில் ஒருவர் இன்ன குடும்பத்தாரின் ஒட்டகங்கள் அறுக்குமிடத்திற்குச் சென்று அங்குள்ள குடலை எடுத்து வந்து முஹம்மது சுஜூதிற்கு” சென்ற பின் அவரது முதுகில் வைக்கவேண்டும். யார் அதனை செய்வது?” என்று கேட்டனர். அக்கூட்டத்திலே மிகவும் திமிர் கொண்டவனான உக்பா எழுந்து சென்று குடலை எடுத்து வந்து நபி (ஸல்) அவர்கள் சுஜூதிற்குச் சென்றவுடன் அவர்களது இரு புஜங்களுக்கு இடையில் முதுகின் மீது வைத்து விட்டான். இதை நான் பார்த்துக் கொண்டிருந்தேன். என்னால் எதுவும் செய்ய முடியவில்லை. எனக்கு தடுக்கும் சக்தி இருந்திருக்க வேண்டுமே! அவர்கள் தங்களுக்குள் மமதையாகவும், ஏளனமாகவும் ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து விழுந்து விழுந்து சிரித்தனர். நபி (ஸல்) அவர்கள் தலையை உயர்த்த முடியாமல் சுஜூதிலேயே இருந்தார்கள். அங்கு வந்த ஃபாத்திமா (ரழி) அதை அகற்றியபோதுதான் நபி (ஸல்) அவர்கள் தலையைத் தூக்கினார்கள்.
பிறகு, “அல்லாஹ்வே! நீ குறைஷிகளைத் தண்டிப்பாயாக!” என்று மூன்று முறை கூறினார்கள். இது குறைஷிகளுக்கு மிகவும் பாரமாகத் தெரிந்தது. மக்காவில் செய்யப்படும் பிரார்த்தனை அங்கீகரிக்கப்படும் என்று அவர்கள் நம்பியிருந்தார்கள். பிறகு, பெயர் கூறி குறிப்பிட்டு “அல்லாஹ்வே! அபூ ஜஹ்லை தண்டிப்பாயாக! உக்பா இப்னு ரபீஆவையும், ஷைபா இப்னு ரபீஆவையும், வலீத் இப்னு உக்பாவையும், உமைய்யா இப்னு கலஃபையும், உக்பா இப்னு அபூ முயீதையும் நீ தண்டிப்பாயாக!” ஏழாவது ஒருவன் பெயரையும் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆனால் எனக்கு அது நினைவில் இல்லை. என் உயிர் எவன் கைவசம் இருக்கிறதோ அவன் மீது சத்தியமாக! ரஸூலுல்லாஹ் (ஸல்) அவர்கள் பெயர் குறிப்பிட்ட நபர்கள் அனைவரும் கொல்லப்பட்டு பத்ரு கிணற்றில் தூக்கி எறியப்பட்டதை நான் பார்த்தேன். (ஸஹீஹுல் புகாரி)
உமையா இப்னு கலஃப் ரஸூலுல்லாஹ் (ஸல்) அவர்களை பார்க்கும்போதெல்லாம் பகிரங்கமாக ஏசிக்கொண்டும், மக்களிடம் அவர்களைப்பற்றி இரகசியமாகக் குறை பேசிக்கொண்டும் இருப்பான். இவன் விஷயமாக சூரத்துல் ஹுமஜாவின் முதல் வசனம் இறங்கியது.
குறை கூறிப் புறம் பேசித் திரிபவர்களுக்கெல்லாம் கேடுதான். (அல்குர்ஆன் 104:1)
இப்னு ஹிஷாம் (ரஹ்) கூறுகிறார்: “ஹுமஜா’ என்றால் பகிரங்கமாக ஒருவரை ஏசுபவன். கண் சாடையில் குத்தலாக பேசுபவன். யிலுமஜா’ என்றால் மக்களைப்பற்றி இரகசியமாக குறைகளை பேசுபவன். (இப்னு ஹிஷாம்)
உமையாவின் சகோதரன் உபை இப்னு கலஃபும் உக்பாவும் நபி (ஸல்) அவர்களுக்கு நோவினையளிப்பதில் ஒரே அணியில் இருந்தனர். ஒருமுறை உக்பா நபி (ஸல்) அவர்களுக்கருகில் அமர்ந்து அவர்கள் ஓதும் சிலவற்றைச் செவிமடுத்தான். இது உபைம்க்குத் தெரிய வந்தபோது உக்பாவைக் கடுமையாகக் கண்டித்தான். மேலும், நபி (ஸல்) அவர்களிடம் சென்று அவர்களது முகத்தில் எச்சிலைத் துப்பி வருமாறு அனுப்ப அவனும் சென்று துப்பி வந்தான். உபை இப்னு கலஃப் ஒருமுறை மக்கிப்போன எலும்புகளை நொறுக்கி, பொடியாக்கி நபி (ஸல்) அவர்களை நோக்கி காற்றில் ஊதிவிட்டான்.(இப்னு ஹிஷாம்)
அக்னஸ் இப்னு ஷரீக் என்பவனும் நபி (ஸல்) அவர்களை நோவினை செய்தவர்களில் ஒருவனாவான். இவனைப் பற்றி குர்ஆனில் இவனிடமிருந்த ஒன்பது குணங்களுடன் கூறப்பட்டுள்ளது.
(நபியே! எடுத்ததற்கெல்லாம்) சத்தியம் செய்யும் அந்த அர்ப்பமானவனுக்கு நீங்கள் வழிப்படாதீர்கள். (அவன்) எப்பொழுதும் (புறம்பேசிக்) குற்றம் கூறி, கோள் சொல்வதையே தொழிலாகக் கொண்டுத் திரிபவன். (அவன்) எப்போதுமே நன்மையான காரியங்களைத் தடை செய்யும் வரம்பு மீறிய பெரும்பாவி. கடின சுபாவமுள்ளவன். இதற்கு மேலாக அவன் மக்களிலும் ஈனன். (அல்குர்ஆன் 68:10-13)
அபூஜஹ்ல் சில சமயம் நபி (ஸல்) அவர்களிடம் வந்து திருமறையின் வசனங்களை செவிமடுத்துச் செல்வான். ஆனால், நம்பிக்கை கொள்ளவோ, அடிபணியவோ மாட்டான். ஒழுக்கத்துடனோ, அச்சத்துடனோ நடந்து கொள்ளவும் மாட்டான். தனது சொல்லால் நபி (ஸல்) அவர்களுக்கு நோவினை அளிப்பதுடன் அல்லாஹ்வின் வழியிலிருந்து பிறரைத் தடுத்தும் வந்தான். தனது இச்செயலை புகழ்ந்து பேசுவதற்குரிய நற்காரியம் என்றெண்ணி அகந்தையுடனும் மமதையுடனும் நடந்து செல்வான். இவனைப் பற்றியே பின்வரும் திருமறை வசனங்கள் இறங்கின.
(அவனோ அல்லாஹ்வுடைய வசனங்களை) உண்மையாக்கவுமில்லை தொழவுமில்லை. ஆயினும் (அவன் அவற்றைப்) பொய்யாக்கி வைத்து(த் தொழாதும்) விலகிக்கொண்டான். பின்னர், கர்வம்கொண்டு தன் குடும்பத்துடன் (தன் வீட்டிற்குச்) சென்றுவிட்டான். (அல்குர்ஆன் 75:31-33)
நபி (ஸல்) அவர்களை கண்ணியமிகு பள்ளியில் தொழுதவர்களாகப் பார்த்த தினத்திலிருந்தே அங்கு தொழுவதிலிருந்து நபி (ஸல்) அவர்களைத் தடுத்து வந்தான். ஒருமுறை நபி (ஸல்) அவர்கள் மகாம் இப்றாஹீமிற்கு” அருகில் தொழுததைப் பார்த்த அவன் “முஹம்மதே! நான் உன்னை இதிலிருந்து தடுத்திருக்க வில்லையா?” என்று கூறிக் கடுமையாக எச்சரித்தான். அதற்கு நபி (ஸல்) அவர்களும் தக்க பதில் கூறி அவனை அதட்டினார்கள். அதற்கு அவன் “முஹம்மதே! எந்த தைரியத்தில் நீ என்னை மிரட்டுகிறாய்? அல்லாஹ்வின் மீது ஆணையாக! இவ்வோடையில் வசிப்போரில் நானே பெரியசபையுடையவன் (ஆதரவாளர்களைக் கொண்டவன்) என்பது உனக்குத் தெரியாதா?” என்றான். அப்போது,
ஆகவே, அவன் (தன் உதவிக்காகத்) தன் சபையோரை அழைக்கட்டும். நாமும் (அவனை நரகத்திற்கு அனுப்ப, நரகத்தின்) காவலாளிகளை அழைப்போம்.. (அல்குர்ஆன் 96:17, 18) ஆகிய வசனங்களை அல்லாஹ் இறக்கினான்.
மற்றுமொரு அறிவிப்பில் வந்திருப்பதாவது: நபி (ஸல்) அவர்கள் அவனது கழுத்தைப் பிடித்து உலுக்கி, உனக்குக் கேடுதான்; கேடுதான்! உனக்குக் கேட்டிற்கு மேல் கேடுதான்!! (அல்குர்ஆன் 75:34, 35) என்ற வசனத்தை கூறினார்கள்.
அதற்கு அல்லாஹ்வின் விரோதியாகிய அவன் “முஹம்மதே! என்னையா நீ எச்சரிக்கிறாய்? நீயும் உனது இறைவனும் என்னை ஒன்றும் செய்துவிட முடியாது. மக்காவில் இரு மலைகளுக்குமிடையில் நடந்து செல்பவர்களில் நானே மிகப்பெரும் பலசாலி” என்று கூறினான். (தஃப்ஸீர் இப்னு கஸீர்)
இவ்வாறு கண்டித்ததற்குப் பிறகும் கூட அபூஜஹ்ல் தனது மடமையிலிருந்து சுதாரித்துக் கொள்ளாமல் தனது கெட்ட செயலை தீவிரமாக்கிக் கொண்டேயிருந்தான். இதைப் பற்றி ஒரு சம்பவத்தை அபூ ஹுரைரா (ரழி) அவர்களின் வாயிலாக இமாம் முஸ்லிம் (ரஹ்) அறிவிக்கிறார்கள்:
“முஹம்மது உங்களுக்கு முன்னிலையில் தனது முகத்தை மண்ணில் வைத்து தேய்க்கிறாராமே” என்று அபூஜஹ்ல் கேட்டான். குழுமியிருந்தவர்கள் “ஆம்!” என்றனர். அதற்கவன் “லாத், உஜ்ஜாவின் மீது சத்தியமாக! நான் அவரைப் பார்த்தால் அவரது பிடரியின் மீது கால் வைத்து அழுத்தி அவரது முகத்தை மண்ணோடு மண்ணாக ஆக்கி விடுவேன்” என்று கூறினான். சிறிது நேரத்திற்குப் பிறகு நபி (ஸல்) அவர்களிடம் வந்தான். நபி (ஸல்) அவர்கள் தொழுது கொண்டிருந்தார்கள். அவன் நபி (ஸல்) அவர்களின் பிடரியை மிதிக்க முயன்றபோதெல்லாம் பின்னோக்கி விழுந்து தன் கைகளால் சமாளித்துத் தன்னைக் காப்பாற்றிக் கொண்டான். மக்கள் “அபூ ஜஹ்லே! என்ன நேர்ந்தது?” என்று கேட்டனர். அதற்கு அவன் “எனக்கும் அவருக்குமிடையில் நெருப்பாலான அகழியையும், மிகப்பெரியபயங்கரத்தையும், பல இறக்கைகளையும் பார்த்தேன்” என்று கூறினான். பிறகு நபி (ஸல்) அவர்கள் “அவன் எனக்கருகில் நெருங்கியிருந்தால் வானவர்கள் அவனுடைய ஒவ்வொரு உறுப்பையும் இறாவியிருப்பார்கள் (பிய்த்து எறிந்திருப்பார்கள்)” என்று கூறினார்கள்.
இதற்கு முன் நாம் கூறியதெல்லாம் தங்களை அல்லாஹ்வின் சொந்தக்காரர்கள், அவனது புனித பூமியில் வசிப்பவர்கள் என்று பீற்றிக்கொள்ளும் இணைவைப்பவர்களின் கரங்களால் நபி (ஸல்) அவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் ஏற்பட்ட அநியாயம் மற்றும் கொடுமையின் ஒரு சிறிய தகவல்தான். இத்தகைய இக்கட்டான கால கட்டத்தில் நபி (ஸல்) அவர்கள் முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட சோதனையையும், வேதனையையும் முடிந்த அளவு இலகுவாக்கி அவற்றிலிருந்து முஸ்லிம்களைப் பாதுகாக்க மதி நுட்பமான ஒரு திட்டத்தைத் தீட்ட வேண்டுமென்ற முடிவுக்கு வந்தார்கள். இதற்காக இரண்டு திட்டங்களை நபி (ஸல்) அவர்கள் வகுத்தார்கள். அவ்விரு திட்டங்களால் அழைப்புப் பணியை வழி நடத்துவதிலும், இலட்சியத்தை அடைவதிலும் பற்பல பலன்கள் கிட்டின. அவையாவன:
1) அழைப்புப் பணிக்கு மையமாகவும், ஒழுக்க போதனைக்கு உறைவிடமாகவும் “அர்கம் இப்னு அபுல் அர்கம் மக்ஜூமி’ என்பவன் வீட்டை நபி (ஸல்) அவர்கள் தேர்ந்தெடுத்தார்கள்.
2) முஸ்லிம்களை ஹபஷாவிற்கு (எதியோபியா) குடிபெயருமாறு கட்டளையிட்டார்கள். (அர்ரஹீக்குல் மக்தூம்)

சஹாபாக்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை பற்றிய நபிமொழிகள்
عن خَبَّاب بن الأرَتّ قال: قلنا: يا رسول الله، ألا تستنصر لنا؟ ألا
تدعو الله لنا؟ فقال: "إنّ من كان قبلكم كان أحدهم يوضع المنشار على مفْرَق
رأسه فيخلص إلى قدميه، لا يَصْرفه (4) ذلك عن دينه، ويُمْشَطُ بأمشاط الحديد ما
بين لحمه وعظمه، لا يصرفه ذلك عن دينه". ثم قال: "والله ليتمن الله هذا
الأمر حتى يسير الراكب من صنعاء إلى حضرموت لا يخاف إلا الله والذئب على غنمه،
ولكنكم قوم تستعجلون. (تفسير ابن كثير)
கப்பாப் பின் அல்அரத்
(ரளி) அறிவிக்கிறார்கள்: ‘’நாங்கள் (நபி ஸல் அவர்களிடம்) அல்லாஹ்வின் தூதரே! (எதிரிகளால் துன்புறுத்தப்படும்) எங்களுக்காக அல்லாஹ்விடம்
நீங்கள் உதவி கோரமாட்டீர்களா? எங்களுக்காகப் பிரார்த்திக்கமாட்டீர்களா? என்று கேட்டோம்.
அதற்கு அவர்கள், உங்களுக்கு முன்னர் வாழ்ந்தவர்களில் (ஏக இறைவனை ஏற்றுக்கொண்ட) ஒருவரின்
தலை வகிட்டில் ரம்பம் வைக்கப்பட்டு அவருடைய பாதங்கள்வை அது செலுத்தப்படும். (அவர் இரண்டாகப்
பிளக்கப்படுவார்.) அதுகூட அவரை அவரது மார்க்கத்திலிருந்து பிறழச்செய்யவில்லை. இரும்பிலான
சீப்புகளால் அவர் (மேனியில்) கோதப்பட, அது அவரது தசையையும் எலும்பையும் கடந்துசெல்லும்.
அதுவும்கூட அவரை அவரது மார்க்கத்திலிருந்து பிறழச்செய்யவில்லை.
அல்லாஹ்வின் மீது ஆணையாக! இந்த விஷயம்
(இஸ்லாம் மார்க்கம்) முழுமைப்படுத்தப்படுவது உறுதி. இறுதியில் ஒரு பயணி (யமனிலுள்ள)
‘ஸன்ஆ’ எனும் இடத்திலிருந்து ‘ஹள்ர மவ்த்’ வரை (பயணம்) செல்வார்.
(வழியில்) அல்லாஹ்வையும், தனது ஆட்டின் விஷயத்தில்
ஓநாயையும் தவிர வேறெதற்கும் அவர் அஞ்சமாட்டார். ஆனால், நீங்கள்தான் (பொறுமையிழந்து)
அவசரப்படுகிறீர்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி-3612)
أخرج ابن ماجة وابن مردويه
عن ابن مسعود رضي الله عنه قال: أول من أظهر اسلامه سبعة
رسول الله صلى الله عليه وسلم
وأبو بكر وسمية أم عمار وعمار وصهيب وبلال والمقداد فأما رسول الله صلى الله عليه وسلم
فمنعه الله بعمه أبي طالب وأما أبو بكر فمنعه الله بقومه وأما سائرهم فأخذهم المشركون
فألبسوهم ادراع الحديد فإنه هانت عليه نفسه في الله وهان على قومه فأخذوه فأعطوه الولدان
فجعلوا يطوفون به في شعاب مكة وهو يقول: أحد أحد.
باب ما لقي النبي صلى الله
عليه وسلم وأصحابه من المشركين بمكة
حدثنا الحميدي حدثنا سفيان
حدثنا بيان وإسماعيل قالا سمعنا قيسا يقول سمعت خبابا يقول أتيت النبي صلى الله عليه
وسلم وهو متوسد بردة وهو في ظل الكعبة وقد لقينا من المشركين شدة فقلت يا رسول الله
ألا تدعو الله فقعد وهو محمر وجهه فقال لقد كان من قبلكم ليمشط بمشاط الحديد ما دون
عظامه من لحم أو عصب ما يصرفه ذلك عن دينه ويوضع المنشار على مفرق رأسه فيشق باثنين
ما يصرفه ذلك عن دينه وليتمن الله هذا الأمر حتى يسير الراكب منصنعاء إلى حضرموت ما
يخاف إلا الله زاد بيان والذئب على غنمه.
( بخاري-3639)
َنْ خَبَّابِ بْنِ الأَرَتِّ
قَالَ : شَكَوْنَا إِلَى رَسُولِ اللَّهِ , صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ , وَهُوَ
مُتَوَسِّدٌ بُرْدَةً لَهُ عِنْدَ الْكَعْبَةِ أَنْ يَدْعُوَ اللَّهَ لَنَا , عَزَّ
وَجَلَّ ؛ قُلْنَا : " أَلا تَسْتَنْصِرُ لَنَا ؟ قَالَ : فَجَلَسَ مُغْضِبًا
مُحْمَرًّا وَجْهُهُ قَالَ : " كَانَ الرَّجُلُ مِنْ قَبْلِكُمْ يُؤْخَذُ فَيُوضَعُ
الْمِنْشَارُ عَلَى مَفْرِقِ رَأْسِهِ فَيُشَقُّ اثْنَيْنِ ، مَا يَصْرِفُهُ ذَلِكَ
عَنْ دِينِهِ ، وَيُمْشَطُ بِأَمْشَاطِ الْحَدِيدِ مَا دُونَ عَظْمِهِ مِنْ لَحْمٍ
أَوْ عَصَبٍ ، وَلَيُتَمِّمَنَّ اللَّهُ هَذَا الدِّينَ حَتَّى يَسِيرَ الرَّاكِبُ
مِنْ صَنْعَاءَ إِلَى حَضْرَمَوْتَ لا يَخَافُ إِلا اللَّهَ , تَعَالَى , أَوِ الذِّئْبَ
عَلَى غَنَمِهِ ، وَلَكِنَّكُمْ تَعْجَلُونَ. (بخارى)
حمل عامة أصحاب النبي صلى
الله عليه وسلم الشدائد ما لقي الصحابة من الأذى من المشركين
أخرج ابن إسحاق عن حكيم عن
سعيد بن جبير قال: قلت عبد الله بن عباس رضي الله عنهما: أكان المشركون يبلغون من أصحاب
رسول الله من العذاب ما يعذرون به في ترك دينهم؟ قال: نعم، والله، إن كانوا ليضربون
أحدهم، ويجيعون، ويعطشونه، حتى ما يقدر أن يستوي جالسا من شدة الضر الذي به، حتى يعطيهم
ما سألوه من الفتنة حتى يقولوا له: اللات والعزى إلهان من دون الله؟ فيقول: نعم، حتى
إن الجعل ليمر بهم، فيقولون له: أهذا الجعل إلك من دون الله؟ فيقول: نعم: افتداء منهم
بما يبلغون من جهده - كذا في البداية.
ما لقيه عليه السلام من الأذى
من قريش ما أجابهم به
وأخرج الطبراني عن الحارث
بن الحارث قال: قلت لأبي: ما هذه الجماعة؟ قال: هؤلاء القوم الذين اجتمعوا على صابىء
لهم. قال: فنزلنا فإذا رسول الله صلى الله عليه وسلم يدعو الناس إلى توحيد الله عز
وجل والإيمان، وهم يردون عيه ويؤذونه، حتى انتصف النهار وانصدع الناس عنه، أقبلت إمرأة
قد بدا نحرها تحمل قدحا ومنديلا، فتناوله منها فشرب وتوضأ ثم رفع رأسه فقال: «يا بنية،
خمري عليك نحرك، ولا تخافي على أبيك» . قلنا من هذه؟ قالوا: هذه زينب إبنته. قال الهيثمي:
رجله ثقات' وعنده أيضا عن منبت الأزدي قل: رأيت رسول الله صلى الله عليه وسلم في الجاهلية
وهو يقول: «يا أيها الناس، قولوا لا إله إلا الله تفلحوا» فمنهم من تفل في وجهه، ومنهم
من حثا عليه التراث، ومنهم من سبه، حتى انتصف النهار، فأقبلت جارية بعس من ماء، فغسل
وجهه ويديه وقال: «يا بنية، لا تخشي على أبيك غيلة، ولا ذلة» . فقلت: من هذه؟ قالوا:
زينب بنت رسول الله صلى الله عليه وسلم وهي جارية وضيئة. قال الهيثمي: وفيه منبت بن
مدرك، ولم أعرفه، وبقية رجاله ثقات.
وأخرج البخاري عن عروة رضي
الله عنه قال: سألت ابن العاص رضي الله عنه فقلت: أخرني بأشد شيء صنعه المشركون برسول
الله صلى الله عليه وسلم قال: بينما النبي صلى الله عليه وسلم يصلي في حجر الكعبة؛
إذ أقبل عليه عقبة بن أبي معيط فوضع ثوبه على عنقه خنقه خنقا شديدا، فأقبل أبو بكر
رضي الله عنه حتى أخذ بمنكبه ودفعه عن النبي صلى الله عليه وسلم وقال: {فإذا استويت
أنت ومن معك على الفلك فقل الحمد لله الذى نجانا من القوم الظالمين. )المؤمنون: 28.
الآية؛ كذا في البداية.
وعند ابن أبي شيبة عن عمرو
بن العاص رضي الله عنه قال: ما رأيت قريشا أرادوا قتل النبي صلى الله عليه وسلم إلا
يوما ائتمروا به وهم جلوس في ظل الكعبة ورسول الله صلى الله عليه وسلم يصلي عند المقام،
فقام إليه عقبة بن أبي معط، فجعل رداءه في عنقه ثم جذبه حتى وجب لركبتيه ساقطا، وتصايح
الناس، فظنوا أنه مقتول. فأقبل أبو بكر رضي الله عنه يشتد حتى أخذ بضبعي رسول الله
صلى الله عليه وسلم من ورائه ويقول: «أتقتلون رجلا أن يقول ربي الله؟» ثم انصرفوا عن
النبي صلى الله عليه وسلم فقام رسول الله صلى الله عليه وسلم فصلى فلما قضى صلاته مر
بهم - وهم جلوس في ظل الكعبة - فقال: يا معشر قريش، أما والذي نفس محمد بيده، ما أرسلت
إليك إلا بالذبح» وأشار بيده إلى حلقه. فقال له أبو جهل: ما كنت جهولا. فقال له رسول
الله صلى الله عليه وسلم «أنت منهم» - كذا في كنز العمال. وأخرجه أيضا أبو يعلى والطبراني
بنحوه، قال الهيثمي: وفيه محمد بن عمرو بن علقمة، وحديثه حسن، وبقية رجال الطبراني
رجال الصحيح. انتهى. وأخرجه أيضا أبو نعيم في دلائل النبوة (ص 67) .
أخرج أحمد عن عروة بن الزبير
عن عبد الله بن عمرو رضي الله عنهما قال: قلت له: ما أكثر ما رأيت قريشا أصبت من رسول
الله صلى الله عليه وسلم فيما كانت تظهر من عداوته؟ قال: حضرتهم - وقد اجتمع أشرافهم
في الحجر - فقالوا: ما رأينا مثل ما صبرنا عليه من هذا الرجل قط سفه أحلامنا، وشتم
آباءنا، وعاب ديننا، وفرق جماعتنا، وسب آلهتنا. لقد صبرنا منه على أمر عظيم - أو كما
قالوا -. قال: فبينما هم في ذلك إذ طلع عليهم رسول الله صلى الله عليه وسلم فأقبل يمشي
حتى استقبل الركن، ثم مر بهم طائفا بالبيت. فلما مر بهم غمزوه ببعض ما يقول. قال: فعرفت
ذلك في وجهه، ثم مضى. فلما مر بهم الثانية غمزوه بمثلها، فعرفت ذلك في وجهه، ثم مضى.
فل مر بهم الثالثة فغمزوه بمثلها، فقال: «أتسمعون يا معشر قريش؟ أما والذي نفس محمد
بيده، لقد جئتكم بالذبح» . فأخذت القوم كلمته حتى ما منهم رجل إلا على رأسه طائر واقع،
حتى إن أشدهم فيه وضاءة قبل ذلك ليرفؤه بأحسن ما يجد من القول، حتى إنه ليقول: إنصرف
يا أبا القاسم، إنصرف راشدا. فوالله ما كنت جهولا. فانصرف رسول الله صلى الله عليه
وسلم
حتى إذا كان الغد إجتمعوا
لي الحجر - وأنا معهم - فقال بعضهم لبعض؛ ذكرتم ما بلغ منكم وما بلغكم منه، حتى إذا
باداكم بما تكرهون تركتموه؟ فبينما هم في ذلك إذ طلع عليهم رسول الله صلى الله عليه
وسلم فوثبوا إليه وثبة رجل واحد، فأطافوا به يقولون: أنت الذي تقول كذا وكذا؟ - لما
كان يبلغهم من عيب آلهتهم ودينهم - قال فيقول رسول الله صلى الله عليه وسلم «نعم، أنا
الذي أقول ذلك» قال: فلقد رأيت رجلا منهم أخذ بمجمع ردائه، وقام أبو بكر رضي الله عنه
دونه يقول وهو يبكي: أتقتلون رجلا أن يقول ربي الله؟ ثم انصرفوا عنه، فإن ذلك لأشد
ما رأيت قريشا بلغت منه قط. قال الهيثمي: وقد صرح ابن إسحاق بالسمع، وبقية رجاله رجال
الصحيح انتهى.
وأخرجه أيضا البيهقي عن عروة
رضي الله عنه قال: قلت لعبد الله بن عمرو بن العاص رضي الله عنهما: ما أكثر ما رأيت
قريشا - فذكر الحديث بطوله نحوه كما ذكر في البداية.
وأخرج أبو يعلى عن أسماء بنت
أبي بكر رضي الله عنهما أنهم قالوا لها: ما أشد ما رأيت من المشركين بلغوا من رسول
الله صلى الله عليه وسلم فقالت: كان المشركون قعدوا في المسجد يتذاكرون رسول الله صلى
الله عليه وسلم وما يقول في آلهتهم، فبينما هم كذلك إذ أقبل رسول الله صلى الله عليه
وسلم فقاموا إليه فأجمعهم، فأتى الصريخ إلى أبي بكر رسول الله صلى الله عليه وسلم رضي
الله عنه، فقالوا: أدرك صاحبك. فخرج من عندنا وإن له لغدائر أربع، وهو يقول: ويلكم/
«أتقتلون رجلا أن يقول ربي الله وقد جاءك بالبينات من ربكم؟» . فلهوا عن رسول الله
صلى الله عليه وسلم وأقبلوا على أبي بكر. قالت: فرجع إلينا أبو بكر فجعل لا يمس شيئا
من غدائره إلا جاء معه، وهو يقول: تباركت يا ذا الجلال والإكرام. قال الهيثمي وفيه:
تدروس جد أبي الزبير، ولم أعرفه؛ وبقية رجاله ثقات. انتهى. وذكره ابن عبد البر في الإستيعاب
عن ابن عيينة، عن الوليد بن كثير، عن ابن عبدوس، عن أسماء رضي الله عنها - فذكره بنحوه،
وبهذا الإسناد أخرجه أبو نعيم في الحلية - مختصرا، وفيه: ابن تدروس عن أسماء. وأخرج
أبو يعلى عن أنس بن مالك رضي الله عنه قال: لقد ضربوا رسول الله صلى الله عليه وسلم
مرة حتى غشي عليه، فقام أبو بكر رضي الله عنه فجعل ينادي: ويلكم/ «أتقتلون رجلا أن
يقول ربي الله؟» . فقالوا: من هذا فقالوا: أبو بكر المجنون. وأخرجه أيضا البزار - وزاد:
فتركوه وأقبلوا على أبي بكر، ورجاله رجال الصحيح كما قال الهيثمي. وأخرجه أيضا الحاكم.
وقال: حديث صحيح على شرط مسلم، ولم يخرجاه.
ما أصابه عليه السلام من شدة
العيش
وأخرج ابن أبي الدنيا عن الحسن
رضي الله عنه مرسلا قال: كان رسول الله صلى الله عليه وسلم يواسي الناس بنفسه حتى جعل
يرقع إزاره بالأدم وما جمع بين غداء وعشاء ثلاثة أيام ولاء حتى لحق بالله عز وجل.
وعند البخاري عن أنس رسول
الله صلى الله عليه وسلم قال: لم يأكل النبي صلى الله عليه وسلم على خوان ولم يأكل
خبزا مرققا حتى مات. وفي رواية: ولا رأى شاة سميطا بعينه قط. كذا في الترغيب.
تحمل عمار بن ياسر وأهل بيته
رضي الله عنهم الشدائد ما بشرا عمارا وأهل بيته حين رآهم يعذبون في الله
أخرج الطبراني، والحاكم، والبيهقي،
وابن عساكر عن جابر رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم مر بعمار وأهله وهم
يعذبون، فقال: «أبشروا آل ياسر فإن موعدكم الجنة» . قال الهيثمي: رجال الطبراني رجال
الصحيح غير إبراهيم بن عبد العزيز المقوم وهو ثقة اهـ.
وعند الحاكم في الكنى وابن
عساكر عن عثمان رضي الله عنه قال: بينما أنا أمشي مع رسول الله صلى الله عليه وسلم
بالبطحاء إذ بعمار وأبيه وأمه يعذبون في الشمس ليرتدوا عن الإسلام. فقال أبو عمار.
يا رسول الله، الدهر هكذا؟ فقال: «صبرا يا آل ياسر. اللهم إغفر لآل ياسر، وقد فعلت»
. وأخرجه أيضا أحمد، والبيهقي، والبغوي، والعقيلي، وابن منده، وأبو نعيم، وغيرهم بمعناه
عن عثمان رضي الله عنه كما في الكنز. وأخرجه ابن سعد عن عثمان رضي الله عنه بنحوه.
سمية أم عمار أول شهيد في
الإسلام
وأخرج أبو أحمد الحكم عن عبد
الله بن جعفر رضي الله عنهما قال: مر رسول الله صلى الله عليه وسلم بياسر وعمار وأم
عمار وهو يؤذون في الله تعالى، فقال لهم: «صبرا يا آل ياسر، صبرا يا آل ياسر؛ فإن موعدكم
الجنة» . ورواه ابن الكلبي عن ابن عباس رضي الله عنهما نحوه - وزاد: وعبد الله بن ياسر؛
وزاد: وطعن أبو جهل سمية في قبلها فماتت، ومات ياسر في العذاب، ورمي عبد الله فسقط
- كذا في الإصابة. وعند أحمد عن مجاهد قال: أول شهيد كان في أول الإسلام إستشهد أم
عمار سمية، طعنها أبو جهل بحربة في قبلها. كذا في البداية.
إشتداد الأذى على عمار حتى
أكره على قول الكفر وقلبه مطمئن بالإيمان
وأخرج أبو نعيم في الحلية
عن أبي عبيدة بن محمد بن عمار قال: أخذ المشركون عمارا رضي الله عنه فلم يتركوه حتى
سب رسول الله صلى الله عليه وسلم وذكر آلهتهم بخير. فلما أتى رسول الله صلى الله عليه
وسلم قال: «ما وراءك؟» قال: شر يا رسول الله، ما تركت حتى نلت منك وذكرت آلهتهم بخير.
فقال رسول الله صلى الله عليه وسلم «فكيف تجد قلبك؟» قال: أجد قلبي مطمئنا بالإيمان.
قال: «فإن عادا فعد» . وأخرجه ابن سعد عن أبي عبيدة نحوه. وأخرج أيضا عن محمد: أن النبي
صلى الله عليه وسلم لقي عمارا وهو يبكي، فجعل يمسح عن عينيه وهو يقول: «أخذك الكفار
فغطوك في الماء؛ فقلت كذا وكذا، فإن عادوا فقل ذاك لهم» . وأخرج أيضا عن عمرو بن ميمون
قال: أحرق المشركون عمار بن ياسر بالنار. قال فكان رسول الله صلى الله عليه وسلم يمر
به ويمر يده على رأسه فيقول: «يا نار كوني بردا وسلاما على عمار كما كنت على إبراهيم
عليه السلام، تقتلك الفئة الباغية» .
حمل مصعب بن عمير رضي الله
عنه الشدائد
أخرج ابن سعد عن محمد العبدري
عن أبيه قال كان مصعب بن عمير فتى مكة شبابا وجمالا وسبيبا، وكان أبواه يحبانه، وكانت
أمه مليئة كثيرة المال تكسوه أحسن ما يكون من الثياب وأرقه، وكان أعطر أهل مكة، يلبس
الحضرمي من النعال. فكنت يذكره ويقول: «ما رأيت بمكة أحدا أحسن لة. ولا أرق حلة، ولا
أنعم نعمة من مصعب بن عمير» فبلغه أن رسول الله صلى الله عليه وسلم يدعو إلى الإسلام
في دار أرقم بن أبي الأرقم فدخل عليه فأسلم وصدق به، وخرج فكتم إسلامه خوفا من أمه
وقومه. فكان يختلف إلى رسول الله صلى الله عليه وسلم سرا، فبصر به عثمان بن طلحة يصلي
فأخبر أمه وقومه. فأخذوه فحبسوه فلم يزل محبوسا حتى خرج إلى أرض الحبشة في الهجرة الأولى،
ثم رجع مع المسلمين حين رجعوا، فرجع متغير الحال قد حرج - يعني غلظ - فكفت أمه عنه
من العذل.
حمل عبد الله بن حذافة السهمي
رضي الله عنه الشدائد ما لقي عبد الله من الأذى من ملك الروم
وتقبيل عمر لرأسه حين قدم عليه
أخرج البيهقي، وابن عساكر
عن أبي رافع قال: وجه عمر بن الخطاب رضي الله عنه جيشا إلى الروم وفيهم رجل يقال له
عبد الله بن حذافة من أصحاب النبي صلى الله عليه وسلم فأسره الروم، فذهبوا به إلى ملكهم،
فقالوا له: إن هذا من أصحاب محمد. فقال له الطاغية: هل لك أن تنصر وأشركك في ملكي وسلطاني؟
فقال له عبد الله: لو أعطيتني ما تملك وجميع ما ملكته العرب، على أن أرجع عن دين محمد
صلى الله عليه وسلم طرفة عين ما فعلت. قال: إذا أقتلك. قال: أنت وذاك. فأمر به فصلب،
وقال للرماة: أرموه قريبا من يديه، قريبا من رجليه، وهو يعرض عليه وهو يأبى. ثم أمر
به فأنزل، ثم دعا بقدر فصب فيه ماء حتى احترقت، ثم دعا بأسيرين من المسلمين فأمر بأحدهما
فألقي فيه وهو يعرض عليه النصرانية وهو يأبى، ثم أمر به أن يلقى فيها. فلما ذهب به
بكى، فقيل له: إنه قد بكى، فظن أنه جزع فقال: ردوه فعرض عليه النصرانية؛ فأبى. فقال:
ما أباك إذا؟ قال: أبكاني أني قلت في نفسي تلقى الساعة في هذه القدر فتذهب، فكنت أشتهي
أن يكون بعدد كل شعرة في جسدي نفس تلقى في الله. قال له الطاغية: هل لك أن تقبل رأسي
وأخلي عنك؟ قال له عبد الله: وعن جميع أسارى المسلمين؟ قال: وعن جميع أسارى المسلمين.
قال عبد الله: فقلت في نفسي: عدو من أعداء الله، أقبل رأسه يخلي عني وعن أسارى المسلمين
لا أبالي. فدنا منه فقبل رأسه، فدفع إليه الأسارى. فقدم بهم على عمر رضي الله عنه،
فأخبر عمر بخبره؛ فقال عمر: حق على كل مسلم أن يقبل رأس عبد الله بن حذافة وأنا أبدأ،
فقام عمر فقبل رأسه. كذا في كنز العمال. قال في الإصابة: وأخرج ابن عساكر لهذه القصة
شاهدا من حديث ابن عباس رضي الله عنهما موصولا، وآخر من فوائد، هشام بن عثمان من مرسل
الزهري. انتهى.
இன்றைய
முஸ்லிம்களின் நிலை?
கடந்த இருபதாண்டுகளில் உலக
முஸ்லிம்கள் பல்வேறு நெருக்கடிகளையும், சோதனைகளையும் சந்தித்து வருகின்றனர். கல்வி மற்றும் பொருளாதார ரீதியான மிகமோசமான பின்னடைவை கொண்டிருக்கும் ஒரு சமுதாயம்,
அரசியல் ரீதியான நெருக்கடிகளையும் தற்போது சந்தித்து வருகின்றனர். அவர்களின் வாழ்க்கைச் சுதந்திரமும், வணக்கச்சுதந்திரமும்
கேலிக்குறியதாகவும், கேள்விக்குறியதாகவும்
ஆக்கப்பட்டிருக்கிறது.
இஸ்லாத்திற்கெதிரான மேற்குலகம்
தொடுத்திருக்கும் நவீன இண்டெர்நெட் போர் இஸ்லாமோ போபியோ. அதாவது இஸ்லாம் உலகிற்கு
அச்சுறுத்தல், அபாயம். முஸ்லிம்களின் வாழ்வாதாரத்தையும், இருப்பையும் மறுபரிசீலனை
செய்யச்சொல்லும் யுத்தப்பிரகடனம். ஒரு இண சுத்திகரிப்புச்செய்வதற்கான
முன்னோட்டம் மாத்திரமல்ல,
இது ஒரு நவீன சிலுவை
போருக்கான தயாரிப்பு இஸ்லாம் எதிர்ப்பில்
வளர்ந்தமார்க்கம் என்பதை கடந்த காலங்களில் முஸ்லிம்கள் இவர்களுக்கு புரியவைத்திருக்கின்றனர்.
முஸ்லிம்கள் எத்தனையோ நெருக்கடிகளையும், சோதனைகளையும் சந்தித்ததுண்டு. அப்பொழுதெல்லாம் இனி இஸ்லாத்திற்கு எதிர்காலம் இல்லையென்றே எதிரிகள்
எதிர்பார்த்தனர்.
ஆனால் மீண்டும் இஸ்லாம்
உற்சாகத்துடன் உயிர்பெற்றது. பலஸ்தீனில், ஈராக்கில், ஆப்கானிஸ்தானில், பர்மாவில் முஸ்லிம்கள் வெறிநாய்களின் தாக்குதல்களுக்கு ஆளாக்கப்பட்டு கொலைசெய்யப்படுவதை
காணும் ஒரு முஸ்லிம் நம்பிக்கை இழக்க வேண்டாம். துவண்டு விடவேண்டாம். ஏனெனில் முஸ்லிம்கள்
இதைவிடவும் பெரிய சோதனைகளையும் வென்றுள்ளனர். இஸ்லாத்தை அழிக்க
நினைப்பவர்களின் சூழ்ச்சியை தாண்டி இஸ்லாம் வளரும் என்றும், உலகில் அனைத்து மதங்களையும்
இஸ்லாம் வெற்றிகொள்ளும் என்றும் திருக்குர்ஆன் கூறுகிறது.
يُرِيدُونَ أَنْ يُطْفِئُوا نُورَ اللَّهِ بِأَفْوَاهِهِمْ وَيَأْبَى
اللَّهُ إِلَّا أَنْ يُتِمَّ نُورَهُ وَلَوْ كَرِهَ الْكَافِرُونَ (32) هُوَ الَّذِي
أَرْسَلَ رَسُولَهُ بِالْهُدَى وَدِينِ الْحَقِّ لِيُظْهِرَهُ عَلَى الدِّينِ كُلِّهِ
وَلَوْ كَرِهَ الْمُشْرِكُونَ. (القرآن 9:32,33)
அல்லாஹ்வின் ஒளியைத் தமது
வாய்களால் ஊதி அணைக்க நினைக்கின்றனர். (தன்னை) மறுப்போர் வெறுத்தாலும் அல்லாஹ் தனது
ஒளியை முழுமைப்படுத்தாமல் விடமாட்டான். இணை கற்பிப்போர் வெறுத்தாலும், எல்லா மார்க்கங்களை
விட மேலோங்கச் செய்வதற்காக நேர் வழியுடனும், உண்மை மார்க்கத்துடனும் அவனே தனது தூதரை அனுப்பினான்.(அல்குர்ஆன்
9:32,33)
நபி ஸல் அவர்களின் தோழர்கள்
இஸ்லாத்தின் சோதனைகளை கண்டு துவண்டுவிடும் போதெல்லாம் நபி ஸல் அவர்கள் தம் தோழர்களுக்கு
இஸ்லாத்திற்கு வளமான எதிர்காலம் உண்டு என்று ஆறுதல் கூறுவார்கள். (http://usmanihalonline.blogspot.in)
மியான்மார் முஸ்லீம்களின் அவலம்:
இலங்கை முஸ்லீம்கள் தொலைவில் இல்லை
உலகில் இனச்சுத்திகரிப்பிற்கு உள்ளாக்கப்பட்டுக் கொண்டிருப்பவர்களில்
மியான்மார் ரோகின்கியா முஸ்லீம்களும் அடங்குவர். பௌத்த அடிப்படைவாதிகளால் இனச்சுத்திகரிப்பிற்கு
உள்ளாக்கப்படும் இவர்கள் உலகில் திட்டமிட்ட தீவிர அழிப்பிற்கு உள்ளாக்கப்படும் மக்கள்
கூட்டங்களில் ஒன்று என ஐ.நா தெரிவிக்கின்றது. எல்லைகளற்ற மருத்துவர்கள் எனக் கூறப்படும்
தன்னார்வ நிறுவனம் அகதி முகாம்களில் இட நெருக்கடிகளைக் கட்டுப்படுத்த முடியாமல் பலர்
மடிந்து போகின்றனர் என்று தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. இன்று வெளியிடப்பட்ட இந்த
நிறுவனத்தின் அறிக்கை பல அதிர்ச்சித் தகவல்களை உள்ள்டக்கியுள்ளது. கொல்லப்படும் வரை
காத்திருந்து எஞ்சியவர்களை காப்பதாகக் கூறும் இத்தன்னார்வ நிறுவனங்கள் மக்களின் நண்பர்கள்
அல்ல எனினும் இவர்களின் அறிக்கைகளே பல சமயங்களில் தரவுகளாகக் கிடைக்கின்றன.
பௌத்த துறவிகள் மற்றும் குழுக்களால் மிருகத்தனமான இனப்படுகொலைக்கு
உள்ளாக்கப்படும் மியான்மார் முஸ்லீம்கள் மீதான தாக்குதலை அந்த நாட்டின் அரசு கண்டுகொள்வதில்லை.
உலகின் மிகப்பெரும் ஜனநாயக வாதியாகப் போற்றப்படும் அன் யான் சூ கி மியான்மார் இஸ்லாமியர்களின்
படுகொலைகள் குறித்து வாய் திறப்பதில்லை.
இலங்கையில் பொது பல சேனா என்ற அமைப்பு இஸ்லாமியர்களுக்கு எதிரான
தாக்குதல்களை நடத்திவருகிறது. இலங்கை அரச ஆதரவு பௌத்த பயங்கரவாதியான ஞானதாச தேரர், மியான்மார் நிலைமைகளைக் கற்றுக்கொள்வதற்காக
கடந்த மாதம் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். மியான்மார் இனப்படுகொலைகளுடன் தொடர்புடைய
969 இயக்கத்தைச் சேர்ந்த பௌத்த பயங்கரவாதியான
அஷ்வின் விராது தேரர் பொதுபல சேனா அமைப்பின் அழைப்பை ஏற்று இலங்கை சென்றார்.
இலங்கை-மியான்மார் பௌத்த பயங்கரவாதிகளின் சந்திப்பு:
இஸ்லாமியர்களாலும் மற்றைய
மதங்களாலும் பௌத்த மதம் தாக்குதலுக்கு உட்படுத்தப்படுவதால் பௌத்த மதத்தைப் பாதுகாக்க
உலகளாவிய ஒத்துழைப்பை உருவாக்குவோம் என மியான்மார் இனக்கொலையாளியைச் சந்திக்கும் போது
ஞானதாச தேரர் கூறினார்.
இலங்கையில் தமிழ்ப் பேசும் முஸ்லீம்கள் அரச சார்பு தரகு முதலாளித்துவ
தலைமைகளால் ஏமாற்றப்படுகின்றனர். ஏழை உழைக்கும் முஸ்லிம்களை சுரண்டி பொது பல சேனாவை
உருவாக்கிய அரசின் அடிமைகளான தலைமைகளை நிராகரித்து இலங்கை முஸ்லீம்கள் அரசுக்கு எதிராகத்
தம்மைப் பாதுகாத்துக்கொள்ளத் தவறினால், ரோகின்யா முஸ்லீம்களின் நிலை இலங்கை முஸ்லீம்களுக்கு உருவாகும்.
ஏனைய ஒடுக்கப்படும் தேசிய இனங்களோடும், சிங்கள மக்களின் அரசிற்கு எதிரான முற்போக்கு ஜனநாயக சக்திகளோடும்
இணைந்து தன்னுரிமைக்கான போராட்டத்தில் முஸ்லீம்கள் தம்மைப் பலப்படுத்தாவிட்டால் எதிர்காலம்
ஆபத்தானதாகவே அமையும். (http://inioru.com)
மியான்மர் முஸ்லீம்
மக்களை கொல்லும் பவுத்த மதவெறி
பவுத்தம் என்றால் புத்தர்
சிலைகளின் தியான இருப்பு,
அசோகருக்கு வழி காட்டிய
ஆன்மீக நெறி, தலித் மக்களுக்கு
கண்ணியமிக்க புகலிடமாக அம்பேத்கர் காட்டிய மார்க்கம், சிலப்பதிகாரத்தின்
அறம், தலாய் லாமாவின் துறவி
வேடம் என்ற பிம்பங்கள் மட்டும் முழுமையில்லை. ஈழத்தமிழர்களை இன அழிப்பு செய்து எஞ்சிய
மக்களை அச்சத்தின் பிடியில் வைத்திருக்கும் சிங்கள-பவுத்த பேரினவாதம், மியான்மாரில் ரொகிங்கியா
முஸ்லிம் மக்கள் மீது தொடர் இனவெறி தாக்குதல்கள் நடத்தும் பவுத்த மதவாதம் போன்ற சமூக
எதார்த்தங்ககள் இன்றி பவுத்த மதம் இல்லை.
ரொகிங்கியா மக்கள்:
ரொகிங்கியா இன மக்கள் வரலாற்றின்
பக்கங்களில் மறைந்து போவதற்கான சாத்தியங்கள் இருக்கின்றன. ஐ.நா-வின் கூற்றுப்படி
உலகிலேயே அதிக இன்னல்களுக்கு ஆளாகும் இனமாக ரொகிங்கியா முஸ்லிம் மக்கள் இருக்கிறார்கள்.
கடல் நீர் மட்டம் உயர்வு காரணமாக மாலத்தீவுகள் நூறு வருடங்களுக்கு பிறகு அழிந்து போகும்
ஆபத்து சூழ்ந்து இருப்பதை போல எதிர்காலத்தில் ரொகிங்கியா இன மக்கள் வரலாற்றின் பக்கங்களில்
மறைந்து போவதற்கான சாத்தியங்கள் இருக்கின்றன.
ரொகிங்கியா மொழி இந்திய-ஐரோப்பிய
மொழிக் குடும்பத்தை சேர்ந்தது. ரொகிங்கியா இன மக்கள் மியான்மரின் ரக்கீன் மாகாணத்தில்
கணிசமாக வாழ்ந்து வருகிறவர்கள். மியான்மரில் எட்டு லட்சம் ரொகிங்கியா இனத்தவர் இருப்பதாக
கணக்கிடப்பட்டுள்ளது. இவர்கள் தம்மை மியான்மரின் பூர்வகுடிகள் என்று கருதும் போது பிரிட்டிஷ்
ஆட்சி காலத்தில் பங்களாதேஷிலிருந்து மியான்மருக்கு குடிபுகுந்தவர்கள் என்று அந்நாட்டு
பெரும்பான்மை மதவாதிகள் கூறுகின்றனர். 1950-க்கு முன்புள்ள எந்த பர்மீய ஆவணத்திலும் ரொகிங்கியா என்ற சொல்
குறிப்பிடப்படவில்லை என்று கூறி இவர்களை சட்டவிரோத வந்தேறிகளாக பாவித்து அடிப்படை உரிமைகள்
அனைத்தையும் மறுத்து வருகிறது மியான்மர் அரசாங்கம்.
1948-ல் ஆங்கிலேயர்கள் மியான்மரை விட்டு வெளியேறிய பிறகு அமைந்த அரசு
ரொகிங்கியாக்களை தனித் தேசிய இனமாக அங்கீகரிக்க மறுத்தது. 1978-ல் ரொகிங்கியா மக்கள், ராணுவ சர்வாதிகார
கும்பலால் கடுமையாக ஒடுக்கப்பட்டார்கள். 1982-ம் வருடம் புதிய குடியுரிமை சட்டம் கொண்டு வரப்பட்டு ரொகிங்கியாக்களின்
குடியுரிமை பறிக்கப்பட்டது. இதன் காரணமாக இம்மக்களுக்கு கடவுச்சீட்டு மற்றும் முறைப்படியான
ஆவணங்கள் எதுவும் பெற முடியாமல் போனது. ஒரு தனி அடையாள அட்டை வழங்கப்பட்டிருந்தது.
தங்கள் பகுதியை விட்டு அவர்கள் இதர பகுதிகளுக்கு செல்ல முடியாது.
உத்தர பிரதேச மாநில முசாபர்நகரில்
ஜாட் சாதி பெண் ஒருவர் இஸ்லாமிய இளைஞர்கள் சிலரால் ஈவ்டீசிங் செய்யப்பட்டதாக சொல்லி
இந்து மதவெறியர்கள் பின்னிருந்து எப்படி ஒரு பெரும் வன்முறை முஸ்லிம்கள் மீது கட்டவிழ்க்கப்பட்டதோ, அதே போன்றதொரு சம்பவம்
2012 மே மாதம் ரொகிங்கியா
மக்கள் மீது நிகழ்த்தப்பட்டது. வீடு திரும்பும் ஒரு பவுத்த பெண்மணி அடையாளம் தெரியாத
நபர்களால் வன்புணர்ச்சி செய்யப்பட்டு, கொல்லப்படுகிறார். அடுத்த சில மணி நேரங்களிலே பர்மீய போலிஸ்
மூன்று ரொங்கியா இளைஞர்களை கைது செய்கிறது. சில நாட்கள் கழித்து ரொகிங்கியா மக்களை
ஏற்றிக் கொண்டு வந்த ஒரு பேருந்தை அடித்து நொறுக்கி 10 முஸ்லிம்களை கொன்றழிக்கின்றனர்
பவுத்த மத வெறியர்கள்.
ரொகிங்கியா அகதிகள்:
பவுத்த வெறியர்களுக்கு பிரச்சினையை
முடிக்க மனமில்லை. அதே மாதம் ரொகிங்கியா மக்களின் வீடுகள் தீக்கிரையாக்கப்படுகின்றன.
ஒரே இரவில் 14 கிராமங்கள் எரியூட்டப்பட்டன.
மக்கள் பெருமளவுக்கு இடம்பெயர்கிறார்கள். சுமார் தொண்ணூறாயிரம் முஸ்லிம்கள் தாங்கள்
வாழ்ந்த பகுதிகளை விட்டு வெளியேறினார்கள். ரக்கீனின் தலைநகரான சித்வேக்கு ஓடிய பலரை
பிடித்து அகதிகள் முகாமில் அடைத்தது போலிஸ். மக்கள் தாய்லாந்து-பர்மா எல்லை வரை ஓடினார்கள்.
அதே வருடம் அக்டோபர் மாதத்தில்
திரும்பவும் இரண்டாவது அலையாக ரொகிங்கியா முஸ்லிம்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டன.
இந்த முறை ரொங்கியா மக்கள் ஆபத்தான கடல் பயணங்களை மேற்கொண்டு மலேசியாவுக்கு தப்பினார்கள்.
வழியில் படகு கவிழ்ந்து பலர் மாண்டார்கள். 1.45 லட்சம் ரொகிங்கியா முஸ்லிம்கள் மியான்மருக்கு உட்பட்ட பகுதிகளிலே
சிதறி ஓடி பதுங்கி வாழ்கின்றனர். தாய்லாந்து. பங்களாதேஷ், மலேசியாவுக்கு ஓடியவர்கள்
ஒரு லட்சத்திற்கு மேல் இருப்பார்கள் என்று மனித உரிமை ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
இதனை அரசின் முழுமையான ஆதரவோடு நிகழ்த்தப்பட்டிருக்கும் இன சுத்திகரிப்பு நடவடிக்கை
என்று மனித உரிமை அமைப்புகள் குற்றம் சாட்டுகின்றன.
மேற்குலக நாடுகளின் ஆதரவை
பெற்ற ‘ஜனநாயகத்தின் தேவதை’ ஆங் சான் சூ கீ ரொகிங்கியாக்களுக்கு
எதிரான வன்முறையை கண்டித்து ஒரு வார்த்தையையும் தெரிவிக்கவில்லை. 20 வருட சிறை வாழ்க்கையை
முடித்துக் கொண்டு வந்த பின்னர் பிபிசி செய்தி நிறுவனத்துக்கு அவர் வழங்கிய பேட்டியில்
ரொகிங்கியாக்கள் பிரச்சினை எழுப்பப்பட்டது. அப்போது அவர் வன்முறையை கட்டவிழ்த்து விடும்
பவுத்த இனவெறியர்களையும்,
வன்முறைகளில் ஒவ்வொரு
முறையும் பாதிக்கப்படும் ரொகிங்கியாக்களையும் ஒரே தட்டில் வைத்தார். பவுத்த இனவாதத்தை
உரத்து கண்டிப்பதற்கு பதில் ‘எதிர் தரப்பு குறித்த அச்சம் இரு தரப்பிலும் நிலவுவதாகதெரிவித்தார்.
இவருக்குத்தான் அமைதிக்கான நோபல் பரிசு கிடைத்தது.
இனப்படுகொலை எதிர்ப்பு
ஆர்ப்பாட்டம்:
“ரொகிங்கியா இனப்படுகொலையை நிறுத்து”இந்த வருடம் மார்ச்
மாதம் நடந்த வன்முறையில் நாற்பது ரொகிங்கியாக்கள் கொல்லப்பட்டனர். இதனை அடுத்து 8,900 ரொகிங்கியாக்கள்
இந்தியாவுக்குள் வந்திருப்பதாக அரசின் புள்ளிவிபரம் தெரிவிக்கிறது. ஆனால், இந்தியாவுக்குள் அடைக்கலம்
நாடியிருக்கும் ரொகிங்கியாக்களின் எண்ணிக்கை 15,000 வரை இருக்குமென்பது சமூக ஆர்வலர்களின் கணக்கு.
பங்களாதேஷிலிருந்து இந்தியாவுக்குள் குடிபுகும் மக்களை கடுமையாக எச்சரித்து தனது தேர்தல்
பரப்புரைகளின் போது அசாமிலும், மேற்குவங்கத்திலும் மோடி பேசியது நினைவிருக்கலாம். அசாமில் மோடி
உரையாற்றிவிட்டு வந்த சில நாட்களிலே முஸ்லிம்களுக்கு எதிராக பெரும் வன்முறை நிகழ்த்தப்பட்டது.
எனவே மியான்மரிலிருந்து இந்தியாவுக்கு வரும் ரொகிங்கியாக்கள் மீது புதிய அரசின் பார்வை
எப்படி இருக்கும் என்ற நினைப்பே மிகுந்த அச்சத்தை ஏற்படுத்துவதாக இருக்கிறது.
ரொகிங்கியா மக்களுக்கு கொடுமைகள்
2012-ம் வருடத்திலிருந்து
மட்டும் இழைக்கப்படவில்லை. இந்தியாவின் சிறுபான்மையினர் மீது ஆர்.எஸ்.எஸ் வளர்த்து
வரும் வெறுப்பு அரசியலைப் போன்று நீண்ட வரலாறு கொண்ட பழைய வெறுப்புக்கு பலியானவர்கள்.
ரொகிங்கியா மக்களை மைய நீரோட்டத்திலிருந்து முழுவதுமாக ஒதுக்கி வைப்பதில் முழுமையான
வெற்றியை கண்டுள்ளது பவுத்த பெரும்பான்மை சமூகம். அம்மக்கள் மீதான தாக்குதலுக்கு சமூக
ஒப்புதல் பெறும் வண்ணம் பவுத்த பெரும்பான்மை சமூகத்திடம் விரிவான இனவாத அரசியலை வளர்த்து
வருகின்றனர், பவுத்த பிக்குகள்.
மதவெறியால் வேட்டையாடப்படும்
ரொகிங்கியா மக்கள்:
நியூ யார்க் டைம்ஸ் இதழின்
செய்தி கட்டுரையில் அசின் விராத்து என்னும் பவுத்த பிக்கு கூறும் போது ”அன்பும், கருணை உள்ளமும் கொண்டிருக்க
வேண்டியது தான்; அதற்காக ஒரு வெறிநாயுடன்
தூங்க முடியுமா?” என்று ரொகிங்கியாக்களை
வெறிநாயாக சித்தரித்து இருந்தார். ”இஸ்லாமியர்களுடன் எக்காரணம் கொண்டும் இணையாதீர்கள். அவர்கள்
நமது நிலங்களையும், உடைமைகளையும் பறித்துக்
கொள்வார்கள்; எனவே அவர்களை தனிமைப்படுத்துங்கள்” என்று பவுத்த பெரும்பான்மை
சமூகத்திடம் விரிவான பரப்புரைகள் மேற்கொள்ளப்பட்டன. 2007-ம் ஆண்டு ராணுவ சர்வாதிகார
கும்பல் அரசை எதிர்த்து போராடிய பவுத்த பிக்குகளுக்கு முழு ஆதரவையும், சுதந்திரத்தையும்
வழங்கி வருகிறது, தற்போதைய ராணுவ கும்பலின்
‘ஜனநாயக’ அரசு.
இப்படி பவுத்த பிக்குகளின்
இனவாத அரசியலும், ராணுவ சர்வாதிகார
கும்பல் அரசின் இனவாத கொள்கையும் இணைந்து பவுத்த பெரும்பான்மை மக்களிடமிருந்து முழுவதுமாக
ரொகிங்கியா முஸ்லிம்களை முற்றிலுமாக அந்நியப்படுத்தி உள்ளது. அகதி முகாம்களில் அடைபட்டுக்
கிடக்கும் ரொகிங்கியாக்கள் தமது தற்போதைய வாழ்க்கைக்கு சற்று முன்பான வாழ்க்கையாவது
கிடைக்குமா என்று ஏங்கி தவித்துக் கொண்டிருக்கிறார்கள்.
இலங்கையில் பொது பல சேனா உருவாக்கியிருக்கும்
சமூக பலத்தில் ராஜபக்சே, மியான்மரில் பவுத்த
பிக்குகள் உருவாக்கியிருக்கும் சமூக பலத்தில் ராணுவ சர்வாதிகார கும்பல், இந்தியாவில் ஆர்.எஸ்.எஸ்
உருவாகியிருக்கும் சமூக உளவியல் பலத்தில் பாஜக என்று நம்மை பாசிசம் சூழ்ந்து நிற்கிறது.
ஒடுக்கப்படும் மக்கள் பிரிவுகளிடம் ஒற்றுமையை வளர்த்து இந்த நச்சு சூழலை வெட்டி வீழ்த்துவோம். (http://www.oodaru.com)
சுமார்
15
இலட்சம் முஸ்லி்ம்கள் பர்மாவில் வாழ்கிறார்கள். இதில் பத்து
இலட்சத்திற்கு மேற்பட்டவர்கள் பர்மியர்கள். மீதமானவர்கள் வங்காளிகள். இந்தியாவில்
இருந்து சென்றவர்கள். தமக்கென தனியான மொழி கலாச்சாரங்களை கொண்டவர்கள். அராபிய
மன்னன் அரகனினால் பலாத்காரமாக நாடுகடத்தப்பட்ட அரபு முஸ்லிம் வர்த்தகர்கள் தங்கள்
வணிக கலம் நடுக்கடலில் விபத்துக்கு உள்ளானதனால் பர்மாவின் பக்கம் வந்து
சேர்ந்தனர். பர்மிய பெண்களை மணந்து அங்கேயே கீழைத்தேய வர்த்தகத்தை தங்கள்
கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். இது நடந்தது 9ம் நுற்றாண்டுகளில். மொகாலாய படைகள் தங்கள் எல்லைகளை
விரித்த போது இவர்கள் அவர்களிற்கான வர்த்தக முகவர்களாக செயற்பட்டனர். இதன் பலனாக
அதிகாரம் மிக்கவர்களாகவும், பணபலமிக்கவர்களாகவும்
திகழ்ந்தனர். இது தான் இன்றைய தினத்தில் பெரிய தவறாக பார்க்கப்படுகிறது. பர்மாவை
காட்டி கொடுத்தவர்கள். பர்மாவின் செல்வங்களை அரேபியாவிற்கு சுரண்டி விற்றவர்கள்,
பர்மிய பெண்களை கற்பழித்தவர்கள் பலாத்காரமாக மணந்தவர்கள்
போன்ற அரசியல் குற்றச்சாட்டுகளே இன்றைய இனவாத சங்காரத்தின் ஊற்றுவாய்கள்.
1950 களில் ரோகீங்கியா பிரதேசம் தனி பிரதேசமாக இனங்காணப்பட்டது. இதில் இந்திய வங்காள இனத்தவர்கள் ஒன்று சேர்ந்து காணப்பட்டனர். அராஜகமான தங்கள் இராணுவ அரசியல் இருப்பினை பேணிக்கொள்ள பர்மிய ஜெனரல்கள் ரோகீங்கிய முஸ்லிம்களிற்கு எதிரான இனவாத அரசியலை அதன் செயல்நெறிகளில் சுயமாக செயற்பட அனுமதியளித்தனர். பிக்குகள் சொல்லும் திசையில் சுடுமாறு போலிஸாரையும் பிக்குகள் காட்டும் பக்கத்தில் குண்டெறியுமாறு இராணுவத்தையும் பணித்தார்கள் இந்த பாசிஷ இராணுவ ஆட்சியாளர்கள்.
பர்மியா மலாய் முஸ்லிம்கள், பர்மிய சீன முஸ்லிம்கள் போன்றவர்கள் கவனமாக தவிர்க்கப்ட்டு இந்த ரோகீங்கிய முஸ்லிம்கள் மட்டும் இலக்கு வைக்கப்பட்டனர்.

தாக்கப்படும் முஸ்லிம்கள்:
இந்த குழந்தைகள் அந்த பாவிகளை என்ன செய்தது?
என்ன குற்றத்திற்காக இவர்கள் கொல்லப்பட்டனர்? கூட்டாக பள்ளிவாசலில் தொழ முடியாது. பள்ளிவாசல் கட்ட
முடியாது. மதரஸா நடத்த முடியாது. பெரிய வியாபார முயற்சிகளில் ஈடுபட முடியாது.
இளைஞர்கள் போலிஸில் பதிவு செய்ய வேண்டும். மியன்மாரின் இரசாயன
கழிவுகள் இவர்கள் பகுதியிலேயே கொட்டப்படுகின்றன. கடல்களில் மீன் பிடிக்க முடியாது. 1
ஏக்கரிற்கு மேல் விவசாயநிலங்களை வைத்திருக்க முடியாது. அவசர பந்தோபஸ்து
சட்டத்தின் கீழ் 5 வருடங்கள்
தடுத்து வைக்க முடியும். பெண்கள் அவர்கள் சம்மதம் இன்றி கட்டாய குடும்ப
கட்டுப்ப்பாட்டிற்கு உள்ளாக்கப்படுவர்.
கற்பழிக்கப்பட்டாலோ, படுகொலை செய்யப்பட்டாலோ வைத்திய சான்றிதழை பெறுவது குற்றம். (இந்த கோரத்தை செய்தது மனிதர்கள்தானா? அல்ல மிருகங்கள்)
இராணுவ அதிகாரிகள் நினைத்த இடத்தில் நினைத்த நேரத்தில் நினைத்த பெண்களை ட்ரக்குகளில் அள்ளி செல்வர். அது தொடர்பில் பொலிஸில் முறையிட்டால் முறைப்பாட்டாளர் பின்னர் பிணமாக்கபடுவார். பல ரோஹியான்கள் மியன்மார் இராணுவத்தில் கூலி வேலை செய்கிறார்கள். இவர்கள் ஆயுட்கால கொத்தடிமைகள். (சோகத்திலெல்லாம் பெரிய சோகம் சொந்த மண்ணை பிரியும் சோகமல்லவா?)

இவர்கள் இப்போது கண்ட இடத்தில் நாயை சுடுவது போல
சுட்டுக்கொல்லப்படுகிறார்கள். வகைதொகையின்றி கற்பழிக்கப்படுகிறார்கள். உலக
மீடியாக்கள் செய்தியாக சிலதை சொல்லி பலதை விட்டு விடுகின்றன. இலங்கை விவகாரத்தில்
ஜெனீவாவரை சென்று ஆட்டம் போடும் அமெரிக்கா இங்கு நடுநிலை என்கிறது. அரபு நாடுகள்
மௌனிக்கின்றன.
16. March.1997 - மண்டலாயின் முதல் மஸ்ஜித் தாக்கப்படுகிறது. 2000 க்கும் மேற்பட்ட பவுத்த கூட்டம் பள்ளிவாசலினுள் புகுந்து குரான் பிரதிகளை பற்ற வைக்கிறது. மஸ்ஜிதை நெருப்பிடுகிறது. பின்னர் உடனடியாக அந்த கூட்டம் முஸ்லிம் வர்த்தக மையங்களை சூறையாடுகிறது. அகப்பட்ட முஸ்லிம்களை போட்டு தாக்குகிறது. ஏன் கொலையும் செய்கிறது. வீடுகள் சூறையாடப்படுகின்றன. இளஞ்சிறுமியர் கற்பழிக்கப் படுகின்றனர். பெண்கள் தீ வைத்து கொளுத்தப்படுகின்றனர். இந்த அநியாயங்களை செய்தவர்கள் மியன்மாரிய இராணுவத்தினர் அல்ல. அங்குள்ள புத்த பிக்குகள். அவர்களே இந்த கொடூரங்களுக்கு தலைமை தாங்கினர். 100 பிக்குகள் கைது செய்ய்ப்பட்டு தேசிய வீரர்களாக பின்னர் விடுதலை செய்யப்படுகின்றனர்.
(தொழும் பள்ளி வாசலைக் கூட கொலைகளமாக்கும் பவுத்தர்கள்.
மற்றுமொரு காத்தான்குடி)
12.February.2001 - இம்முறை கலவரத்திற்கு ஆளான பிரதேசம் சிட்வே, மற்றும் டாவுன்கு. கேக் விற்பனையில் ஈடுபட்ட ஒரு முஸ்லிம் பெண்ணிடம் கேக் வாங்கி சாப்பிட்ட புத்த பிக்குகள் கும்பல் பணம் தருவதற்கு மறுக்கிறது. அவளுடன் அங்க சேஷ்டையில் ஈடுபட முனைகிறது. ஆத்திரமடைந்த பெண் அவர்களை தாக்க முற்படுகிறாள். அவள் உறவினர் உதவிக்கு விரைந்து அவர்களை விரட்டியடிக்கிறார். சில மணி நேர இடைவெளியில் தலைமை நாயக்க தேரர் தலைமையில் பிக்குகள் வந்து கலகம் செய்கின்றனர். அவர்கள் பின்னால் குண்டர்கள் வன்முறையில் ஈடுபட ஆரம்பிக்கின்றனர். பற்றி எரிகிறது நகரம். கொலை, கொள்ளை, சித்திரவதை, கற்பழிப்பு என எதுவெல்லாம் செய்ய முடியுமோ அதையெல்லாம் செய்து முடிக்கிறது கும்பல். 200 முஸ்லிம்கள் வெறித்தனமாக கொல்லப்படுகின்றனர். (இந்த உடல்களை எல்லாம் கடலில் கலந்தால் கடலின் நிறம் கூட சிகப்பாக மாறி விடுமே! ரமலானில் நோன்பு வைத்த நிலையில் தாக்கப்பட்ட தாய் முஸ்லிம்கள்.)

15.
May.2001 - தபூ பிரதேசம் கொளுந்து விட்டு எரிகிறது.
முஸ்லிம்களிற்கு எதிரான துவேஷ பரப்புரைகள் பிக்குகளால் பன்சலைகளில்
செய்யப்படுகின்றன. பன்சலை மணியை அடித்தவுடன் மக்கள் திரண்டு பிக்குகளை பாதுகாக்க
முஸ்லிம்கள் மீது தாக்குதல் செய்யும் நிகழ்ச்சி நிரல் நாடு முழுதும்
பயிற்றுவிக்கப்படுகிறது. தேவையான பொழுதுகளில் பன்சலை மணி அடிக்கப்படுகிறது. Han
Tha மஸ்ஜிதுனுள் புகுந்த பவுத்த கூட்டம் அவர்களை
அடித்து விரட்டுகிறது. பின்னர் பிக்குகள் கட்டளையிடுகின்றனர். ”முஸ்லிம்கள் பள்ளிவாசலில் தொழுகை நடத்த முடியாது”
என. அது சட்ட ரீதியற்ற ஆனால் அதிகாரமிக்க கட்டளையாக
பர்மாவில் உருப்பெருகிறது.
(பர்மிர்களுக்கும் இஸ்லாத்துக்கும் எந்த அளவு நெருக்கம் என்பதை விவரிக்கும் அந்த கால அராபிய எழுத்துருக்களைக் கொண்ட நாணயங்கள். இஸ்லாத்தின் அடிப்படையான 'ஏக இறைவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை. முகமது நபி இறைவனின் தூதராக உள்ளார்கள்' என்ற வாசகம் அந்த நாணயத்தில் பொறிக்கப்பட்டுள்ளது)
பர்மிய ஜீன்டா அரசினுள் ஆதிக்கமிக்க சக்தியாக உள்ளவர்கள் தேசியவாத சிந்தனைகொண்டவர்களும், Theravada Buddhism மதவாதிகளுமாவர். இவர்களே இந்த அநியாயங்களின் பின்னணியில் செயற்படுபவர்கள். மதவாதிகளினதும், தேசியவாதிகளினதும், இராணுவத்தினரினதும் ஒரு கூட்டு தாக்குதலையே ரோகீங்கிய முஸ்லிம்கள் எதிர்கொண்டுள்ளனர்.
2012 June. இராணுவ ஒத்துழைப்புடன் முஸ்லி்ம்களி்ற்கு எதிரான அநியாயங்கள் நிகழ்த்தப்பட்டு வருகின்றன. கூட்டு கொலை, கூட்டு கற்பழிப்பு, கூட்டு சூறையாடல் என ஒரு ஒழுங்குபடுத்தப்பட்ட நிலையில் குழுக்களாக இவை நிகழ்த்தி முடிக்கப்படுகின்றன. மீடியாக்கள் உள்நுழைய முடியாத இரும்பு திரைக்கு பின்னால் பல கொலைகளங்கள் உள்ளன.
கொத்து கொத்தாக இங்கே கொல்லப்படுபவர்கள் முஸ்லிம்கள். முஸ்லிம் சகோதரர்கள். முஸ்லிம் சகோதரிகள். பொஸ்னியாவை நினைவிற்கு கொண்டு வரும் கூட்டு கற்பழிப்பிற்கு உள்ளாக்கப்படுபவர்கள் முஸ்லிம் சகோதரிகள். ஆனால் முஸ்லிம் உம்மா வேடிக்கை பார்க்கிறது. எகிப்தின் முர்ஸி பற்றி பெருமிதப்படும் இஹ்வான்கள் ஒரு அறிக்கையுடன் மியன்மாரை மறந்து விட்டனரா? கிலாபா கனவுகானும் ஹிஸ்பு தஹ்ரீர் தோழர்கள் ரத்தத்தினால் நிரம்பும் மியன்மார் பற்றி சிந்திக்க மாட்டார்களா. பேரீத்தம் பழ பெட்டிகளை அனுப்புதாலும், குர்பான் இறைச்சிகளை அனுப்புவதாலும் மியன்மரிற்கு உரியதை செய்து விட்டோம் என அரபு தேசங்கள் நிம்மதியடைய போகின்றனவா?
மியன்மார் என்பது பொஸ்னியாவின் களத்தை விட மோசமானது. ஹேர்ஸிகோவினாவினது களத்தை விட மோசமானது. கொஸாவோ களங்களை விட மோசமானது. ஈழத்து சோகத்தை விட பெரும் சோகமயமானது. இங்கு காஷ்மீரின் கண்ணீர், காஸாவின் பஞ்சம், செச்னியாவின் அவலம், ஆப்கானின் இரத்தம், முள்ளி வாய்க்காலின் கொடூரம், ஈராக்கின் சோகம் என எல்லாமே கலந்து நிற்கிறது. எல்லாம் நடந்து முடிந்த பின் “ த கில்லிங் ஃபீல்ட் ஆஃப் பர்மா” என டாக்குமெண்டரி தயாரிக்க பலர் உள்ளனர். ஆனால் கொல்பவர்களை தடுக்கவோ அல்லது கொல்லப்படுபவர்களை காக்கவோ யாரும் இல்லை. அவர்களுக்கு இறைவனைத் தவிர உதவ கூடியவர்கள் எவரும் இல்லை. அவர்களின் மரண ஓலங்கள் இன்றும் பல நாடுகளைக் கடந்தும் . நெடுந் தொலைவுக்குக் கேட்டுக் கொண்டிருக்கிறது.
சில வாரங்கள் முன்பு லண்டன் வந்திருந்த பர்மாவைச்சேர்ந்த நோபல் பரிசு பெற்ற ’’ஆங்க் சான் சூசீ ‘’ கூட ’’ரோகிங்னியா முஸ்லிம்கள் பர்மாவின் நிரந்தர பிரஜைகள் அல்ல’’ என்ற ரீதியில் தனது கருத்தை தெரிவித்தார். மேலும் ரோகிங்னியா முஸ்லிம்களின் படுகொலைகளை அவர் கண்டிக்கவுமில்லை, மாறாக நாட்டில் இனங்களுக்கிடையில் குழப்ப நிலை உருவாகியுள்ளது. மிகவும் நுணுக்கமாக கையாளா வேண்டும்’’ என்றுமே குறிப்பிட்டார். இந்த மக்களுக்கு ஆதரவு கரம் நீட்ட தற்போது உலகில் எந்த அரசும் தயாராக இல்லை. தற்போதய பர்மிய முஸ்லிம்கள் எந்த அளவு பர்மாவுக்கு சொந்தக்காரர்கள் என்பதை விவரிக்கும் பர்மாவில் புழக்கத்தில் இருந்த இஸ்லாமிய நாணயம்.
எனவே
தோழர்களே! தோழிகளே! உங்களின் வருமானத்தில் ஒரு பகுதியை இந்த மக்களை நோக்கி
திருப்பி விடுங்கள். ஜகாத் பணம், ஃபித்ரா பணம், அன்பளிப்பாக கொடுக்க நினைத்த பணம் அனைத்தையும் இந்த ஏழை
மக்களின் அடிப்படை தேவைகளை போக்குவதாக இருக்கட்டும். பணம் கொழிக்கும் அரபு
செல்வந்தர்கள் தங்களின் செல்வத்திலேயே மித மிஞ்சிய மயக்கத்தில் உள்ளனர். இறைவன்
நினைத்தால் ஒரு நொடியில் நிலைமையை தலைகீழாக மாற்றி விடுவான் என்பதை மறந்து
வாழ்கின்றனர்.
"சீனா உலகத்தின் தாதா'வாக (வல்லரசு) நடந்து கொள்ள முயன்று வருகிறது. தனது நாட்டின் சக்தியை நிலைநாட்டிக் கொள்ளும் குறுகிய மனப்பான்மையுடன், வடகொரியா, பர்மா போன்ற மோசமான கொடுங்கோல் அரசுகளுக்குத் துணை நிற்கிறது. இந்தியாவும், சீனாவை அப்படியே காப்பி அடிக்க முயல்கிறது' என்கிறார் அமர்த்யா சென்.
"இந்தியா உலகளவில் செல்வாக்கற்ற நாடாக இருந்த காலங்களில் உலக நாடுகளுக்கு ஒழுக்கம் பற்றி பாடம் எடுப்பதிலேயே நேரத்தை கழித்துக் கொண்டிருந்தோம். சீனா அளவிற்கு இல்லையென்றாலும், ஓரளவிற்கு இப்பொழுது ஆற்றல் பெற்றவுடன், ஒழுக்கத்தையும், விழுமியங்களையும் குழிதோண்டிப் புதைத்து விட்டு, நமது பொறுப்புகளைத் தட்டிக் கழிக்கிறேம்'' என்கிறார் சென். “உலகின் மனிதாபிமானம் மிக்க தலைவர்களில் ஒருவரான, எனது இந்திய நாட்டின் பிரதமர் மன்மோகன் சிங், மியான்மரின் கொலைகார ஆட்சியாளர்களுக்கு சிவப்புக் கம்பளம் விரித்து, அவர்களுடன் கைகுலுக்கி மகிழ்ச்சியுடன் இணைந்து நின்று புகைப்படும் எடுத்துக் கொள்கிறார். இதனைப் பார்க்கும்போது, இந்தியாவின் விசுவாசக் குடிமகனான எனது இதயம் நொறுங்கி விட்டது'' என்று பேசியுள்ளார் அமர்த்யா சென். பர்மாவில் உள்ள கொடுங்கோலாட்சி பற்றியும் அங்கு உள்ள மோசமான மனித உரிமைச் சூழல் பற்றியும் இந்திய மக்களிடம் பொதுக்கருத்து சிறிதும் இல்லை என்கிறார் அமர்த்யா சென். (http://suvanappiriyan.blogspot.in)
ரோஹிஞ்சா முஸ்லீம்கள்:
பிராந்திய நாடுகள் ஏற்கத்தயங்குவது ஏன்?
குடியுரிமை உள்ளிட்ட அடிப்படை
மனித உரிமைகள் மறுக்கப்படுவதன் காரணமாக மியன்மாரிலிந்தும், வங்கதேசத்திலிருந்தும்
தப்பித்துக் கடல்வழியாக மிக ஆபத்தான படகுப் பயணங்களை மேற்கொண்டு வரும் பல்லாயிரக்கணக்கான
ரோஹிஞ்சா குடியேறிகள் பிரச்சினை, அந்த பிரதேசத்தின் வலய நாடுகளில் பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது.
அந்தமான் கடல் வழியாக படகுகள்
மூலம் சட்டரீதியற்ற முறையில் வரும் ரோஹிஞ்சா மற்றும் வங்கதேச முஸ்லிம் குடியேறிகள்
அந்த பிரதேசத்தில் உள்ள, தாய்லாந்து, மலேசியா, மற்றும் இந்தோனேசியா
ஆகிய நாடுகளில் தமது வாழ்வை புதிதாக ஆரம்பிப்பதை நோக்காக கொண்டு வருகின்றனர். அதிலும்
குறிப்பாக ,மலேசியா மற்றும் இந்தோனேசியா
ஆகியன முஸ்லிம் நாடுகள் என்பதால், குடியேறிகளின் பார்வை இந்த இருநாடுகளின் பால் பெரிதும் திரும்பியுள்ளது
என கூறப்படுகிறது.
குடியேறிகளது பயணங்களை ஒழுங்கு
செய்யும் ஆட்கடத்தற்காரர்கள் ,குடியேறிகளை நடுக்கடலில் தத்தளிக்க விட்டுவிட்டுச் சென்றுவிடுகின்றமை, அவர்களது நிலமையை
மேலும் பரிதாபத்திற்குள்ளாக்கியுள்ளதாக ,கவலை வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த இரண்டு வாரங்களில் மாத்திரம், 3600க்கும் அதிகமான ரோஹிஞ்சா
குடியேறிகள், தாய்லாந்து, இந்தோனேசியா மற்றும்
,மலேசியா ஆகிய நாடுகளை
வந்தடைந்த நிலையில், கடலின் நடுவே இன்னும்
பல நூறுபேர் தத்தளித்துக் கொண்டிருப்பதாக அச்சம் வெளியிடப்பட்டுள்ளது. ஆபத்தான கடல்
பயணங்களை மேற்கொண்டு ,கடலில் தத்தளிக்கும்
குடியேறிகள் தேவையான உணவு வழங்கல் மற்றும் குடிநீர் வசதியுமின்றி அல்லலுற்ற நிலையிலும், அவர்களுக்கு உதவக்
கூடாது என, இந்தோனேசிய அதிகாரிகள்
தமது மீனவர்களுக்கு ஆரம்பத்தில் கட்டளையிட்டிருந்தனர்.
ஐக்கிய நாடுகள், மற்றும் மனித உரிமை
அமைப்புக்களின் கடும் அழுத்தம் காரணமாக, தமது கொள்கையினை, பின்னர் தளர்த்திக் கொண்ட இந்தோனேசியா, தாய்லாந்த், மலேஷியா தற்போது கடலில்
தத்தளிக்கும் குடியேறிகளை மீட்கும் முயற்சியை ஆரம்பித்துள்ளன. அதேசமயம் இப்படி மீட்கப்படும்
குடியேறிகளுக்கு தற்காலிக அடைக்கலமே வழங்கப்படும் என தெரிவித்துள்ள இந்த நாடுகள், குடியேறிகளின் பிரச்சினை
தொடர்பில் மேலும் தீர்மானங்களை எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மறுபரிசீலனை செய்யும்
மலேஷியா:
கடலில் பெருந்தொகையான குடியேறிகள்
தத்தளிப்பதை அடுத்து ,அவர்களை மீட்டு அவர்களுக்கு
தற்காலிக அடைக்கலம் வழங்குவதற்கு மலேசியா முன்வந்துள்ளமை சரியான தீர்மானமே என, பெரும்பாண்மையான மலேசியர்கள்
கருதுகின்றனர்.
பொஸ்னியா ,மற்றும் வியட்நாம்
நாட்டு அகதிகளை ஏற்றுக் கொண்ட நாம், ஏன் ரோஹிஞ்சாக்களை ஏற்றுக்கொள்ள மாட்டோமா? என மலேசிய உள்நாட்டு
செய்தித்தாள் ஒன்று, செய்தியாக பிரசுரித்துள்ளது.
பெரும்பாலும் அகதிகளாக வரும்
ரோஹிஞ்சா முஸ்லிம்களின் தெரிவாக, மலேசியாவே உள்ள நிலையில், கடந்த காலங்களில் 45000 வரையான ரோஹிஞ்சா
முஸ்லிம்களுக்கு, ஏற்கனவே மலேசியா அடைக்கலம்
அளித்துள்ளது.
இந்த நிலையில், மேலும் அவர்களுக்கு
அடைக்கலம் வழங்குகின்றமையானது, இவ்வாறு சட்டத்துக்குப் புறம்பான முறையில் வரும் அகதிகளை மேலும்
ஊக்கப்படுத்துவதாக அமைந்து விடும் என, மலேசியா அச்சம் வெளியிட்டுள்ளது. மியன்மாரில் அச்சுறுத்தலை எதிர்கொள்ளும்
சிறுபாண்மை ரோஹிஞ்சாக்களின் விடயத்தை கையாள்வது தொடர்பில், அந்த நாட்டிற்கு மலேசியா
அழுத்தங்களைக் கொடுக்கவில்லை என ,சழுக வலைதளங்களில் மலேசியர்கள் தமது ஆதங்கங்களையும் பதிவிட்டு
வருகின்றனர்.
"இந்தோனேஷியாவில் இடமில்லை"
உயிரைப்பணயம் வைத்து மேற்கொள்ளும்
பயணத்தில் கரை சேர உத்தரவாதமில்லை. மறுபுறம், இந்தோனேசியாவில் மில்லியன் கணக்கான மக்கள் ஏழ்மை மற்றும் கல்வியறிவின்மை
போன்ற பல அடிப்படைவசதிகளின்றி உள்ள நிலையில், புதிதாக வரும் குடியேறிகளை பராமரிப்பது சவாலான ஒரு விடயமே.
எவ்வாறாயினும், முஸ்லிம் நாடான இந்தோனேசியாவில்
உள்ள முஸ்லிம் மக்கள் ,ரோஹிஞ்சாக்களின் பிரச்சினையை
தமது சக முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட பிச்சினையாக பார்ப்பதுடன், மியன்மாரில் பெரும்பாண்மை
புத்தமதத்தவர்களால் ஒடுக்கப்படும் முஸ்லிம்களை பாதுகாக்க வேண்டும் என்றும் குரல் கொடுக்கும்
பெரும்பாண்மை இந்தோனேசியர்கள், குடியேறிகளுக்கு அடைக்கலம் கொடுக்குமாறு இந்தோனேசிய அரசாங்கத்தை
கேட்டுக் கொண்டுள்ளனர்.
மியன்மாரிலிருந்து, ரோஹிஞ்சா முஸ்லிம்கள்
எவ்வளவு பேர் அண்டை நாடான வங்க தேசத்திற்கு சென்று வாழ்கிறார்கள் என்பது தொடர்பில்
முறையான விவரங்கள் தெரியவில்லை. வங்கதேச அரச தகவலின் படி அது 400 000 தொடக்கம் 500 000 பேர் ஆக கணக்கிடப்பட்டுள்ளது.
"ஆஸ்திரேலிய அரசு ஆதரிக்கத் தயாரில்லை" ரோஹிஞ்சா குடியேறிகளில்
பெண்களின் நிலைமை கூடுதல் மோசம்:
பிராந்தியத்தில் செல்வந்த
நாடாக விளங்கும் ஆஸ்திரேலியா, சட்டவிரோதப் படகுப் பயணிகள் தொடர்பில் தொடர்ந்தும் கடும் போக்கினையே
பின்பற்றி வரும் நிலையில் ,இவ்வாறு வருபவர்களுக்கு
ஆஸ்திரேலியா அடைக்கலம் வழங்காது என தெரிவித்த ஆஸ்திரேலிய பிரதமர் டொனி அபோட், அவ்வாறு ஆஸ்திரேலியா
அடைக்கலம் வழங்கினால், அது எதிர்காலத்தில்
மேலும் சட்டவிரோத குடியேறிகளை ஊக்குவிப்பதாக அமைந்து விடும் என்றும் தெரிவித்திருக்கிறார்.
இந்த விடயத்தில் ஆஸ்திரேலியாவின்
பங்கு குறித்து அகதிகளின் உரிமைகளுக்காக குரல் கெடுக்கு ரிபியூஜி அக்ஷன் சார்பாக மெல்போனில்
பேசிய கிரிஸ் பிரீன், வலயத்தில் பணக்கார
நாடாக விளங்கும் ஆஸ்திரேலியர் ,தமக்கென ஒரு நாடு இல்லாத ரோஹிஞ்சா இனத்தவர்களை, ஆஸ்திரேலியாவில் நிரந்தரமாக
குடியேற்றுவதன் மூலம், இந்த நெருக்கடிக்கு
தீர்வு காண முடியும் என்றும் அவர்களுக்கு தற்போது அவசரமாக தேவைப்படுவது மனிதாபிமான
உதவியே தவிர ,கொடுமை அல்ல எனவும்
வலியுறுத்தினார். (http://www.bbc.com)
எனவே, யாஅல்லாஹ்! முஸ்லிம்களை
காப்பாற்றுவாயாக! உலகில் கண்ணியமாக வாழச்செய்வாயாக! எங்கெல்லாம் முஸ்லிம்களை இனப்படுகொலை செய்யப்படுகிறதோ அங்கெல்லாம் உனது கருணையினால்
உயிர் காப்பாயாக! உனது பாதுகாப்பு வளையத்தை இஸ்லாமியர்களின் மீது
விரிப்பாயாக! இஸ்லாத்தை ஓங்கச் செய்வாயாக! ஈமானை இறுதிவரை நிழைக்கச் செய்வாயாக! முஸ்லிம்களின் மனதிள் ஒற்றுமையை ஏற்படுத்துவாயாக! உனது
சத்திய மார்க்கத்தை பாதுகாப்பாயாக! ஆமீன்
யாரப்பல் ஆலமீன்.
(குறிப்பு:
புதன்கிழமை அன்று மவ்லானா தாஜீத்தீன்
காஸமி அவர்கள் ஸஹாபாக்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள் சார்ந்த
நிறைய நபிமொழிகளை வழங்கி இருந்தார்கள். அனைத்து நபிமொழிகளையும் மொழிபெயர்ப்பதற்கு கால
அவகாசம் இல்லாத காரணத்தால், இதை படிப்பவர்கள் அனைவரும் ஆலிம்கள்தானே அவர்கள் சுயமாக
படித்து தெறிந்து கொள்வார்கள் என்ற நோக்கத்தில் அனைத்து நபிமொழிகளையும் விடாமல் வழங்கி
இருக்கிறேன். அவைகளை கவனமாக படித்துவிட்டு அதன் சாரம்சத்தை மட்டும் சுறுக்கி கூற முயற்ச்சி
செய்யுங்கள். முடியவில்லை என்றால் படித்து வைத்துக்கொண்டு, சந்தர்ப்பம் வரும்போது பயன்
படுத்திக்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.)
தகவல் வழங்கியோர்:
முஃப்தி முஹம்மது தாஜீத்தீன் காஸிமி, நஸீர் மிஸ்பாஹி, ஃபீர் பைஜி, அப்பாஸ் ரியாஜி, மேலதிக தகவலோடு தொகுத்து வழங்கியவர்:
ஹனீப் ஜமாலி.
0 comments:
Post a Comment