فَإِذَا قَضَيْتُمْ مَنَاسِكَكُمْ فَاذْكُرُوا اللَّهَ كَذِكْرِكُمْ آبَاءَكُمْ أَوْ أَشَدَّ ذِكْرًا (القرآن 2:200)
அல்லாஹ் கூறினான்:
உங்கள் (ஹஜ்) கிரியைகளை நீங்கள்
நிறைவு செய்துவிட்டால், உங்கள் முன்னோர்களை
நீங்கள் நினைவுகூர்வதைப்போன்று, அல்லது அதைவிட
அதிகமாக அல்லாஹ்வை நினையுங்கள்.
(அல்குர்ஆன் 2:200)
عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ
قَالَ قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ حَجَّ هَذَا الْبَيْتَ
فَلَمْ يَرْفُثْ وَلَمْ يَفْسُقْ رَجَعَ كَيَوْمِ وَلَدَتْهُ أُمُّهُ (بخاري)
அபூஹுரைரா (ரளி) அறிவிக்கிறார்கள்: யார் தீய பேச்சு, பாவச் செயல ஆகியவற்றில் ஈடுபடாமல் அல்லாஹ்வி(ன் அன்பைப் பெறுவதற்)காகவே ஹஜ் செய்கிறாரோ அவர், தம்மைத் தம்முடைய தாய் ஈன்ற நாளில்
இருந்த்தைப் போன்று (பாவமில்லாதவராகத்) திரும்புவர் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி-1521)
வாருங்கள் ஹாஜிகளை சங்கை செய்வோம்
அல்லாஹ்வின்
வீட்டை தரிசித்துவிட்டு தங்களது தாயகத்திற்கு திரும்பிக் கொண்டிருக்கும் புனித ஹாஜிகளின்
விஷயத்தில் நாம் எவ்வாறு நடந்து கொள்ளவேண்டும் என்பதைப் பற்றிநாம் யோசித்துப் பார்பதற்கு
இந்த ஜும்ஆவில் கடமைப்பட்டுள்ளோம்.
1.கண்ணியப்படுத்த வேண்டும்:
தாயகம்
திரும்புகின்ற ஹாஜிகளை அந்தந்த மஹல்லாவாசிகள் கட்டாயம் அவர்களை கண்ணியப்படுத்துதலும்
சங்கைசெய்தலும் வேண்டும். காரணம் அவர்கள் அல்லாஹ்வுடைய நேசர்கள், அன்று பிறந்த பாலகர்களை
போன்றோர்கள், அப்பலுக்கற்றவர்கள், பாவத்தைவிட்டும் பரிசுத்தமானவர்கள், நபியவர்களின் வார்தைப்படி போர்
செய்வதைக்காட்டிலும் ஹஜ் செய்வது சிறந்தது என்ற சிறப்பினை அடையப்பெற்றவர், எல்லாவற்றிகும் மேலாக
அல்லாஹ்வின் இல்லத்தையும் நபியவர்களின் ரவ்லாவையும் தரிசித்து வந்தவர் ஹாஜிமார்கள்
என்பதை நாம் நினைவு கூறுவதற்கு கடமைப்பட்டுள்ளோம்.
ஹாஜிகளின்
அந்தஸ்தை விளங்கிய அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள்:
حَدَّثَنَا مُسَدَّدٌ حَدَّثَنَا
عَبْدُ الْوَاحِدِ حَدَّثَنَا حَبِيبُ بْنُ أَبِي عَمْرَةَ قَالَ حَدَّثَتْنَا عَائِشَةُ
بِنْتُ طَلْحَةَ عَنْ عَائِشَةَ أُمِّ الْمُؤْمِنِينَ رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْقُلْتُ
يَا رَسُولَ اللَّهِ أَلَا نَغْزُو وَنُجَاهِدُ مَعَكُمْ فَقَالَ لَكِنَّ أَحْسَنَ
الْجِهَادِ وَأَجْمَلَهُ الْحَجُّ حَجٌّ مَبْرُورٌ فَقَالَتْ عَائِشَةُ فَلَا أَدَعُ
الْحَجَّ بَعْدَ إِذْ سَمِعْتُ هَذَا مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ
وَسَلَّمَ. ( صحيح البخاري)
நபிகள்
பெருமான் (ஸல்) அவர்களிடம் ஆயிஷா (ரலி) அவர்கள் நாங்கள் உங்களோடு போர் செய்யலாமா என்று
அனுமதி கேட்டபோது பெருமானார் உரைத்த பதில் போர்களில் சிறந்ததும் அழகானதும் ஹஜ் செய்வதாகவே
இருக்கும் என்றார்கள். இதை கேட்டவுடன் அம்மையார் அவர்கள் கூறியது “இந்த விஷயத்தை நபியவர்களிடமிருந்து
கேட்டதற்கு பின் ஹஜ் செய்வதை விடமாட்டேன்”என்றார்கள்.
அம்மையாரின் நாவிலிருந்து வெளியான வார்தை ஹாஜிகளின் பெருமைகளை நமக்கு நன்றாகவே உணர்துகின்றது.
வரலாற்று ஆய்வாலர்கள் இப்படி ஓர் விஷயத்தை குறிப்பிடிகின்றார்கள் மிஃராஜிலே மூஸா (அலை)
அவர்கள் பெருமானாரை தொழுகையை குறைக்கும்படி மீண்டும் மீண்டும் ஏன் அனுப்பினார்கள் நினைத்திருந்தால்
ஒரே முறையில் இத்தனை ரக்ஆத்களாக குறைத்து வாருங்கள் என்று கூறியிருக்கலாமே என்ற கேள்விற்கு
பதில் கூறுகின்றனர் அல்லாஹ்வை தரிசித்து வந்த நபியவர்களின் கண்களை தானும் தரிசிக்க
வேண்டும் என்று எண்ணினார்கள் எனவே தான் மீண்டும் மீண்டும் அனுப்பினார்கள் என்ற நுட்பமான
செய்தியிலிருந்து நமக்கு கிடைக்கின்ற தகவல் ஹாஜிமார்கள் அல்லாஹ்வின் புனித இல்லத்தை
தரிசித்து வந்துள்ளனர் எனவே புனிதம் நிறைந்த அந்தக கண்களைக்காண வேண்டுமே என்கின்ற ஆவலில்
அவர்களை சந்தித்து கண்ணியப்படுத்துதல் வேண்டும்.
எனவே தான் பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்
عن عبد الله بن عمر قال
: قال رسول الله صلى الله عليه و سلم إذا لقيت الحاج فسلم عليه وصافحه ومره أن يستغفر
لك قبل أن يدخل بيته فإنه مغفور له. (رواه احمد)
நீங்கள்
ஹாஜிமார்களை சந்தித்தால் அவர்களுக்கு ஸலாம் கூறுங்கள் மேலும் அவர்களை முஸாஃபஹா செய்யுங்கள்
மேலும் அவர்கள் தங்களுடைய வீடுகளுக்குள் நுழைவதற்கு முன்னால் உங்களுக்காக பாவமன்னிப்பு
கேட்டகுமாரு கூறுங்கள் ஏனெனில் அவர்களுக்காக (பாவங்கள்)மன்னிக்கப்படுகின்றன என்கின்ற
ஹதீஸின் மூலமாக நமக்கு கிடைக்கின்ற தகவல் பகட்டு, பிடிவாதம்,
ஆணவம்,
குரோதம்,
துவேஷம் என எது இருந்தாலும் அதனை மூட்டைக்கட்டி வைத்துவிட்டு
அவர்களின் நன்மதிப்பையும், துஆவையும் பெற முயற்சித்தல் வேண்டும் என்பதனையே எடுத்துரைக்கின்றது. ஹாஜிகளை சந்தித்தல்
அவர்களிடம் நமக்காக பாவமன்னிப்பு கேட்குமாறு கூறுவது என எல்லா விஷயங்களும் வருகின்ற
ஹாஜிமார்களிடத்தில் நாம் நடந்து கொள்ள வேண்டிய ஒழுங்குமுறையை போதிக்கின்றது.
மஹ்மூதரசரை கண்ட மாமனிர்கள்
عَنِ
ابْنِ عُمَرَ, عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ , قَالَ:مَنْ حَجَّ
فَزَارَ قَبْرِي بَعْدَ وَفَاتِي كَانَ
كَمَنْ زَارَنِي فِي حَيَاتِي. (المعجم
الكبير للطبرانى-13315)
இப்னு உமர் (ரளி) அறிவிக்கிறார்கள்: ஹஜ்ஜை முடித்துவிட்டு, எனது மரணத்திற்குப் பிறகு என் கப்ரையும் ஜியாரத் செய்தவர் உயிரோடு இருக்கும் போது என்னை சந்தித்தவரைப்போலாவார் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஃஜமுல் கபீர்-தப்ரானி-13315)
مَنْ
زَارَنِي مُتَعَمِّدًا كَانَ فِي جِوَارِي يَوْمَ الْقِيَامَةِ، بيهقى-شعب
الايمان-3856)
என்னை சியாரத் செய்யவேண்டும் என்றே வருகைதந்து ஜியாரத் செய்தவர் நாளை மறுமையில் எனக்கு அருகில் இருப்பார் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (பைஹகீ-ஷுஃபுல் ஈமான்-3856)
ஜம்ஜம்
நீருக்கு முக்கியத்துவம் தருதல்:
எப்படி
ஹாஜிகளை கண்ணியப்படுத்தவேணடுமோ அதேபோன்று அவர்கள் சுமந்து வரும் ஜம்ஜம் நீரையும் பேரித்தம்
பழத்தையும் அலட்சியப்படுத்தாமல் அதன் மகிமை உணர்ந்து பருகுதல் அவசியமாகும். ஹாஜிகளின்
வருகை என்றதும் நம் நினைவுக்கு வருவது ஜம்ஜம் நீரும், பேரித்தம் பழமும்தான்.
இவ்விரண்டும் இறக்குமதி செய்யப்பட்டு உலகம் முலுக்க கிடைத்தாலும் கூட இதனை முஸ்லிம்களின்
பிரத்யேக உணவு என்றும் கூறலாம். இன்றைக்கும் இதனால் மனிதர்களுக்கு ஏற்படும் உடல் ஆரோக்யத்தையும், நோய் நிவாரணத்தையும்
கண்டு விஞ்ஞானம் மலைத்துப்போய் நிற்கின்றது. எவ்வளவு பெரிய நவீன கருவிகளைக் கொண்டு
வந்து ஆளத்தைத் தோண்டி தண்ணீரை இறைத்தாலும் அதனை வற்றச்செய்வதில் நவீனகருவிகளும், ஆற்றல் படைத்த விஞ்ஞானிகளும்
தோற்றுப்போகின்றனர் என்பதை நாம் அறிவோம். இடையிடையே ஜம்ஜமைப்பற்றி அவதூறுகளை கட்டவிழ்த்துவிடப்பட்டாலும்
அவையெல்லாம் முறியடிக்கப்பட்டன. இத்தகு ஜம்ஜம் கிணற்றின் ஆழம் ஐந்து அடியே ஆகும், 18 அடி
அகலமும், 14 அடி நீளமும்கொண்டது. இப்ராஹிம் நபி அவர்கள் தமது மனைவி ஹாஜர் அவர்களையும், மகன் இஸ்மாயிலையும் அப்போது மக்கள் குடியிருக்காத வெட்ட வெளியில் இறைவன் கட்டளைப்படிகுடியமர்த்தினார்கள்.
குழந்தை இஸ்மாயில் தண்ணீரின்றி தவித்தபோது தன்னுடைய காலால் அடித்த இடத்திலேயே ஜம்ஜம்
தண்ணீர் ஊற்றெடுத்து ஓடியது என்பதை நாம் அறிவோம். இத்தகு பாக்கியம் நிறைந்த நீரை பருகும்
போது அவர்களின் நினைவை நம் மனதில் ஓடவிடுவது கட்டாயம் ஆகும்.
பேரித்தம்
பழத்திற்கு முக்கியத்துவம் தருதல்:
அதே
போன்று ஹாஜிகள் எடுத்துவரும் பேரித்தம் பழங்களை அதன் மகிமையை உணர்ந்து உண்ண வேண்டும்.
இன்றைக்கு உள்ள எல்லா நோய்களுக்கும் பேரித்தம் பழம் மருந்தாக உள்ளது. புற்றுநோயுக்கு
எதிராக பாதுகாப்பு வழங்குகிறது ஏனெனில் இதில் மெக்னீசியம் சத்து உள்ளது. இரத்த சோகைக்கு
பேரித்தம் பழம் மருந்தாகும் ஏனெனில் இதில் இரும்புச்சத்து அதிக சதவீதம் உள்ளது.எலும்பு
மற்றும் பற்களை வலுவாக்க உதவுகின்றது ஏனெனில் இதில் பாஸ்பரஸ் மற்றும் கால்சியச் சத்துக்கள்
அதிகமாக உள்ளன.கல்லீரல் நோய்கள்,
மஞ்சள் காமாலை போன்ற நோய்களுக்கு மருந்தாக அமைகின்றது காரணம்
இதில் வைட்டமின் அதிக அளவில் உள்ளது. இப்படி ஏராளமான நோய் கொல்லிகளுக்கெல்லாம் பேரித்தம்
பழம் மருந்தாக திகழ்வதினால் பெருமானார் (ஸல்) அவர்கள் பேரித்தம் பழத்தின் முக்கியத்துவத்தைப்பற்றி
ஏராளமான இடங்களில் பேசியுள்ளார்கள்
عن عائشة رضي الله عنها
ت قالت قال رسول الله صلى الله عليهوسلم : " إنَّ في عجوة العالية شفاءً"
. رواه مسلم (14/3) و أحمد (6/152)
நிச்சையமாக
அஜ்வதுல் ஆலியாவிலே (நோய்களுக்கு) நிவாரணம் இருக்கின்றதுஎன்பதாக பெருமானார் கூறினார்கள். (முஸ்லிம்-3:14,
அஹ்மது-6:152)
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ
بْنُ مَسْلَمَةَ بْنِ قَعْنَبٍ حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ مُحَمَّدِ بْنِ طَحْلاَءَ
عَنْ أَبِى الرِّجَالِ مُحَمَّدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ عَنْ أُمِّهِ عَنْ عَائِشَةَ
قَالَتْ قَالَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- « يَا عَائِشَةُ بَيْتٌ لاَ تَمْرَ
فِيهِ جِيَاعٌ أَهْلُهُ يَا عَائِشَةُ بَيْتٌ لاَ تَمْرَ فِيهِ جِيَاعٌ أَهْلُهُ أَوْ
جَاعَ أَهْلُهُ ». قَالَهَا مَرَّتَيْنِ أَوْ ثَلاَثًا.
أخرجه أبو داود (3/362 ،
رقم 3831) ، والترمذى (4/264 ، رقم 1815) وقال : حسن غريب . وابن ماجه (2/1104 ، رقم
3327) ، والطبرانى (24/299 ، رقم 758) . وأخرجه أيضا : أحمد (6/188 ، رقم 25590) ،
ومسلم (3/1618 ، رقم 2046) ، وابن حبان (12/5 ، رقم 5206)
ஆயிஷாவே
எந்த வீட்டில் பேரித்தம் பழம் இல்லையோ அந்த வீட்டில் வசிப்பவர்கள் பசியோடு இருப்பார்கள்
என பெருமானார் (ஸல்) கூறியுள்ளார்கள். வீடுகளில் பேரித்தம் பழம் இருக்க வேண்டியதை வலியுருத்தி
நபிகளார் மொழிந்த இந்த ஹதீஸின் பிண்னணியை விஞ்ஞான ரீதியில் அலசிப்பார்த்தால் பேரித்தம்
பழத்தின் அருமை புரியும். இன்றைய விஞ்ஞானிகள் மனிதன் உணவின்றி இறப்பதற்கு காரணத்தை
கூறும்போது அவன் உடலில் தேவையான கலோரி இல்லாமையே அதற்க்கு காரணம் என்கின்றனர். அதே
சமயம் மூன்று நாட்களுக்குத் தேவையான கலோரி ஒரே ஒரு பேரித்தம் பழத்தில் உள்ளது என்கின்ற
பிரம்மிப்பூட்டும் விஷயத்தையும் சேர்த்தே தருகின்றனர். நாம் சொல்ல வருகின்ற செய்தி
இது தான் ஒருவன் உணவில்லாமல் இறந்துபோகிறான் என்றால் அவன் பசியால் இறந்தான் என்பது
அர்த்தமல்ல அவன் உடலில் தேவையான கலோரி இல்லாமையால் இறந்தான் என்பதே பொருள். அப்ப, அவனிடம் உணவில்லாவிட்டாலும்
ஒரே ஒரு பேரித்தம் பழம் இருந்தால் போதும் அவன் இறப்பதையும் கூட தடுத்துவிடலாம். எனவே
தான் பெருமானார் அவர்கள் ஒவ்வொரு வீட்டிலேயும் பேரித்தம் பழம் இருக்க வேண்டியதின் அவசியத்தையும்
அதனை உண்பதை வலியுறித்தியும் நிறைய இடங்களில் பேசியுள்ளார்கள். பேரித்தம்பழம் கொடிய நோய்கொல்லிகளுக்கு மருந்தாக மட்டும் இல்லை ஓர் முஃமினுக்கு
உதாரணமாகவும் திகழ்கின்றது
حَدَّثَنِى مُحَمَّدُ بْنُ
عُبَيْدٍ الْغُبَرِىُّ حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ حَدَّثَنَا أَيُّوبُ عَنْ أَبِى
الْخَلِيلِ الضُّبَعِىِّ عَنْ مُجَاهِدٍ عَنِ ابْنِ عُمَرَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ
-صلى الله عليه وسلم- يَوْمًا لأَصْحَابِهِ « أَخْبِرُونِى عَنْ شَجَرَةٍ مَثَلُهَا
مَثَلُ الْمُؤْمِنِ ». فَجَعَلَ الْقَوْمُ يَذْكُرُونَ شَجَرًا مِنْ شَجَرِ الْبَوَادِى.
قَالَ ابْنُ عُمَرَ وَأُلْقِىَ فِى نَفْسِى أَوْ رُوعِىَ أَنَّهَا النَّخْلَةُ فَجَعَلْتُ
أُرِيدُ أَنْ أَقُولَهَا فَإِذَا أَسْنَانُ الْقَوْمِ فَأَهَابُ أَنْ أَتَكَلَّمَ فَلَمَّا
سَكَتُوا قَالَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- « هِىَ النَّخْلَةُ » (رواه المسلم)
இப்னு
உமர் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு சமயம் ஸஹபாக்களிடம்
கேட்டார்கள் எனக்கு ஒரு மரத்தை பற்றி கூறுங்கள் அந்த மரம் முஃமினுக்கு உதாரணமாக இருக்கும்
என்று கூறினார்கள். உடனே கூட்டத்தில் இருந்தவர்கள் ஒவ்வொரு மரத்தின் பெயர்களையும் கூறினர்.
அப்போழுது என் மனதில் அது பேரித்தம் பழமரம் என்று தோன்றியது என்னைவிட அந்தக் கூட்டத்திலே
வயதில் பெரியவர்கள் இருந்தமையால் நான் மௌனமாக இருந்துவிட்டேன். எல்லோரும் அமைதியான
போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அது பேரித்தம் பழமரம் என்று கூறினார்கள்.
இங்கு
பெருமானார் (ஸல்) அவர்கள் ஒர் முஃமினுக்கு உதாரணமாக பேரித்தம் பழத்தை குறிப்பிட்டிருந்தார்கள்.
நம்முடைய வாழ்கை பேரித்தம் பழம் போன்று இருக்க வேண்டும் அது எப்படி பிறரின் நோய்களுக்கு
மருந்தாக அமைகின்றதோ அதே போன்று ஒரு முஃமின் மற்றவர்களின் இடர்களை நீக்குபவனாகவும், பிறரின் சுமைகளைச் சுமக்கும்
சுமைத்தாங்கியாகவும் இருத்தல் வேண்டும்.
பேரித்தம்
பழம் தான் அழிந்தாலும் பிறருக்கு பயன் தருகின்றது அதே போன்று ஒரு முஃமின் தனக்கு பிறர்
துன்பங்களைக் கொடுத்தாலும் அவர்களுக்கு நல்லதையே செயதல் வேண்டும். அவ்வாரே நபிகளாரும்
வாழ்ந்துக் காட்டினர். பேரித்தம் பழம் தருகின்ற இந்த வாழ்வியல் தத்துவம் அதனை நாம்
உண்ணும்போது நம் மனதில் ஓடவேண்டும்.
(BILALIA ULAMA'S
ASSOCIATION'S VELLIARANGAM)
புறப்படும்போது மற்றவர்களின்
துஆவை வேண்டுகின்ற ஹாஜி, தன் ஹஜ்ஜை முடித்து
விட்டுத் திரும்பும்போது அவருடைய துஆவிற்காக மற்றவர்கள் காத்திருக்கும் நிலைக்கு உயருகிறார்.
உளத்தூய்மையுடன் கூடிய ஹஜ்ஜுக்கு
மட்டுமே இந்தச் சிறப்பு கிடைக்கும். ஹஜ்ஜில் உளத்தூய்மை மிக அவசியம்.
ஹஜ் கடமையைப் பற்றி கூறப்படும்
வசனம் லில்லாஹி என்று தான் துவங்குகிறது. உளத்தூய்மை இல்லாமல் ஹஜ் செய்பவர்களின் எண்ணிக்கை
கடைசி காலத்தில் பெருகும் என்பதைப் பற்றியும்
وَلِلَّهِ عَلَى النَّاسِ حِجُّ الْبَيْتِ مَنِ
اسْتَطَاعَ إِلَيْهِ سَبِيلًا (97ال عمران) عن أنس رضي الله عنه قال قال رسول الله
صلي الله عليه وسلم يأتي على الناس زمان يحج أغنياء الناس للنزاهة وأوساطهم للتجارة
وفقراؤهم للمسألة وقراؤهم للسمعة والرياء (كنز العمال)
தன்னுடைய அமலைப்பற்றி தானே
பெருமைப்பட்டுக் கொள்வது மனிதனை நாசமாக்கும் செயல்களில் ஒன்றாகும்
عَنْ أَنَسٍ قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى
اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: " ثَلَاثٌ مُهْلِكَاتٌ شُحٌّ مُطَاعٌ وَهَوًى مُتَّبَعٌ
وَإِعْجَابُ الْمَرْءِ بِنَفْسِهِ، وَثَلَاثٌ مُنْجِيَاتٌ خَشْيَةُ اللهِ فِي السِّرِّ
وَالْعَلَانِيَةِ، وَالْقَصْدَ فِي الْغِنَى وَالْفَقْرِ، وَكَلِمَةُ الْحَقِّ فِي
الرِّضَا وَالْغَضَبِ (بيهقي)
ஹாஜியிடம் நமது ஹஜ்ஜை அல்லாஹ்
ஏற்றுக் கொள்வான் என்ற ஆதரவும், அதே நேரத்தில் நம்முடைய ஹஜ் ஏற்றுக் கொள்ளப்படாமல் ஆகிவிடுமோ
என்ற அச்சமும் இருக்க வேண்டும். இத்தகையவர் தன் அமலைப்பற்றி பெருமைப்பட மாட்டார்
تَتَجَافَى جُنُوبُهُمْ عَنِ الْمَضَاجِعِ يَدْعُونَ
رَبَّهُمْ خَوْفًا وَطَمَعًا وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنْفِقُونَ (السجدة16) وَادْعُوهُ
خَوْفًا وَطَمَعًا (56الاعراف) عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيِّبِ أَنَّ عُمَرَ بْنَ الْخَطَّابِ
رَضِيَ اللهُ عَنْهُ اشْتَكَى فَدَخَلَ عَلَيْهِ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ
وَسَلَّمَ يَعُودُهُ فَقَالَ: كَيْفَ تَجِدُكَ يَا عُمَرُ ؟ فَقَالَ:أَرْجُو وَأَخَافُ
فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:مَا اجْتَمَعَ الرَّجَاءُ
وَالْخَوْفُ فِي قَلْبِ مُؤْمِنٍ إِلَّا أَعْطَاهُ اللهُ الرَّجَاءَ وَأَمَّنَهُ الْخَوْفَ
(شعب الايمان للبيهق)
ﻭﻋﻨﻪ ﻗﺎﻝ: ﻗﺎﻝ ﺭﺳﻮﻝ اﻟﻠﻪ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ: «اﻟﻌﻤﺮﺓ
ﺇﻟﻰ اﻟﻌﻤﺮﺓ ﻛﻔﺎﺭﺓ ﻟﻤﺎ ﺑﻴﻨﻬﻤﺎ ﻭاﻟﺤﺞ اﻟﻤﺒﺮﻭﺭ ﻟﻴﺲ ﻟﻪ ﺟﺰاء ﺇﻻ اﻟﺠﻨﺔ". (متفق عليه)
ﻭﻋﻦ ﻋﺎﺋﺸﺔ ﻗﺎﻟﺖ: اﺳﺘﺄﺫﻧﺖ اﻟﻨﺒﻲ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ
ﻓﻲ اﻟﺠﻬﺎﺩ. ﻓﻘﺎﻝ: «ﺟﻬﺎﺩﻛﻦ اﻟﺤﺞ». (متفق عليه)
ﻭﻋﻦ اﺑﻦ ﻣﺴﻌﻮﺩ ﻗﺎﻝ: ﻗﺎﻝ ﺭﺳﻮﻝ اﻟﻠﻪ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ
ﻭﺳﻠﻢ: «ﺗﺎﺑﻌﻮا ﺑﻴﻦ اﻟﺤﺞ ﻭاﻟﻌﻤﺮﺓ ﻓﺈﻧﻬﻤﺎ ﻳﻨﻔﻴﺎﻥ اﻟﻔﻘﺮ ﻭاﻟﺬﻧﻮﺏ ﻛﻤﺎ ﻳﻨﻔﻲ اﻟﻜﻴﺮ ﺧﺒﺚ اﻟﺤﺪﻳﺪ
ﻭاﻟﺬﻫﺐ ﻭاﻟﻔﻀﺔ ﻭﻟﻴﺲ ﻟﻠﺤﺠﺔ اﻟﻤﺒﺮﻭﺭﺓ ﺛﻮاﺏ ﺇﻻ اﻟﺠﻨﺔ» . ﺭﻭاﻩ اﻟﺘﺮﻣﺬﻱ ﻭاﻟﻨﺴﺎﺋﻲ)
ﻭﻋﻦ ﺃﺑﻲ ﻫﺮﻳﺮﺓ ﻋﻦ اﻟﻨﺒﻲ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﺃﻧﻪ
ﻗﺎﻝ: «اﻟﺤﺎﺝ ﻭاﻟﻌﻤﺎﺭ ﻭﻓﺪ اﻟﻠﻪ ﺇﻥ ﺩﻋﻮﻩ ﺃﺟﺎﺑﻬﻢ ﻭﺇﻥ اﺳﺘﻐﻔﺮﻭﻩ ﻏﻔﺮ ﻟﻬﻢ» . (ﺭﻭاﻩ اﺑﻦ ﻣﺎﺟﻪ)
அபூஹுரைரா (ரளி)
அறிவிக்கிறார்கள்: ஹாஜியும்,
முஃதமிரும் (உம்ரா செய்பவர்) அல்லாஹ்வின் விருந்தாளிகள் ஆவர். அவர்கள் துஆ செய்தால்
ஏற்கப்படும்; அவர்கள் பாவமன்னிப்பு கேட்டால் மன்னிக்கப்படும்
என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(இப்னுமாஜா)
ﻭﻋﻨﻪ ﻗﺎﻝ: ﺳﻤﻌﺖ ﺭﺳﻮﻝ اﻟﻠﻪ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﻳﻘﻮﻝ:
«ﻭﻓﺪ اﻟﻠﻪ ﺛﻼﺛﺔ اﻟﻐﺎﺯﻱ ﻭاﻟﺤﺎﺝ ﻭاﻟﻤﻌﺘﻤﺮ» . (ﺭﻭاﻩ اﻟﻨﺴﺎﺋﻲ ﻭاﻟﺒﻴﻬﻘﻲ ﻓﻲ ﺷﻌﺐ اﻹﻳﻤﺎﻥ)
அபூஹுரைரா (ரளி) அறிவிக்கிறார்கள்: அறப்போறாளி, ஹாஜி, முஃதமிர் (உம்ரா செய்பவர்) ஆகிய
மூவரும் அல்லாஹ்வின் விருந்தாளிகள் ஆவர் என நபி (ஸல்)
அவர்கள் கூறினார்கள். (நஸாயீ, பைஹகீ-ஷுஃபுல் ஈமான்)
عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ
صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: " مَنْ خَرَجَ حَاجًّا أَوْ
مُعْتَمِرًا أَوْ
غَازِيًا ثُمَّ مَاتَ فِي طَرِيقِهِ كَتَبَ اللهُ لَهُ أَجْرَ الْغَازِي وَالْحَاجِّ
وَالْمُعْتَمِرِ إِلَى يَوْمِ الْقِيَامَةِ" (بيهقى-شعب الايمان-3806)
அபூஹுரைரா (ரளி) அறிவிக்கிறார்கள்:
ஹஜ் செய்யவோ, உம்ரா செய்யவோ, அறப்போரில் யுத்தம்
செய்யவோ நாடி சென்றவர் வழியிலேயே மரணித்தால், அறப்போராளிக்கு போர்
செய்த நன்மையம், ஹாஜிக்கு ஹஜ் செய்த நன்மையும், மற்றும் முஃதமிருக்கு
உம்ரா செய்த நன்மையும் மறுமையில் அல்லாஹ் எழுதுகிறான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(பைஹகீ-3806)
ஹஜ்ஜுக்குச் சென்று திரும்பும் ஹாஜியிடம்
முஸாஃபஹா செய்வதும்அவர்களிடம் துஆ
வேண்டுவதும்
ﻭﻋﻦ اﺑﻦ ﻋﻤﺮ ﻗﺎﻝ: ﻗﺎﻝ ﺭﺳﻮﻝ اﻟﻠﻪ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ: «ﺇﺫا ﻟﻘﻴﺖ اﻟﺤﺎﺝ
ﻓﺴﻠﻢ ﻋﻠﻴﻪ ﻭﺻﺎﻓﺤﻪ ﻭﻣﺮﻩ ﺃﻥ ﻳﺴﺘﻐﻔﺮ ﻟﻚ ﻗﺒﻞ ﺃﻥ ﻳﺪﺧﻞ ﺑﻴﺘﻪ ﻓﺈﻧﻪ ﻣﻐﻔﻮﺭ ﻟﻪ». (ﺭﻭاﻩ ﺃﺣﻤﺪ)
இப்னு உமர் (ரளி) அறிவிக்கிறார்கள்: ஹாஜியை நீர் சந்தித்தால் அவருக்கு சலாம் கூறு!; அவரிடம் முஸாஃபஹா செய்!. அவர் தனது வீட்டில் நுழைவதற்கு முன்பாக
உமக்காக அவரிடம் பாவமன்னிப்பு தேடச்சொல்!, ஏனெனில் அவர் பாவங்கள் மன்னிக்கப்பட்டவர் ஆவார் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அஹ்மது)
المُصَافَحَة والمُعَانَقة
முஸாஃபஹா என்றால் ஒருவரின்
உள்ளங்கை மற்றொருவரின் உள்ளங்கையோடு சேருவது என்று அர்த்தம்
المصافحة : هِيَ مُفَاعَلَة مِنْ الصَّفْحَة وَالْمُرَاد بِهَا الْإِفْضَاء
بِصَفْحَةِ الْيَد إِلَى صَفْحَة الْيَد (فتح الباري)
முஸாஃபஹாவை முதலில்
அறிமுகப்படுத்தியவர்கள் யமன் வாசிகள்
عَنْ أَنَسِ رضي الله عنه قَالَ لَمَّا جَاءَ أَهْلُ الْيَمَنِ قَالَ
رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَدْ جَاءَكُمْ أَهْلُ الْيَمَنِ
وَهُمْ أَوَّلُ مَنْ جَاءَ بِالْمُصَافَحَةِ (أَبُو دَاوُدَ)
عَنْ الْبَرَاء لَقِيت رَسُول اللَّه صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ
فَصَافَحَنِي فَقُلْت: يَا رَسُول اللَّه كُنْت أَحْسِب أَنَّ هَذَا مِنْ زِيّ الْعَجَم
فَقَالَ:نَحْنُ أَحَقّ بِالْمُصَافَحَةِ.
நபி (ஸல்) காலத்தில் முஸாஃபஹா, முஆனகா
இருந்ததா?
عَنْ قَتَادَةَ رضي الله عنه قَالَ قُلْتُ لِأَنَسٍ
أَكَانَتْ الْمُصَافَحَةُ فِي أَصْحَابِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
قَالَ نَعَمْ (بخاري) عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ قَالَ رَجُلٌ يَا رَسُولَ اللَّهِ
الرَّجُلُ مِنَّا يَلْقَى أَخَاهُ أَوْ صَدِيقَهُ أَيَنْحَنِي لَهُ قَالَ لَا قَالَ
أَفَيَلْتَزِمُهُ وَيُقَبِّلُهُ قَالَ لَا قَالَ أَفَيَأْخُذُ بِيَدِهِ وَيُصَافِحُهُ
قَالَ نَعَمْ (ترمذي)
عَنْ رَجُلٍ مِنْ عَنَزَةَ أَنَّهُ قَالَ لِأَبِي
ذَرٍّ حَيْثُ سُيِّرَ مِنْ الشَّامِ إِنِّي أُرِيدُ أَنْ أَسْأَلَكَ عَنْ حَدِيثٍ مِنْ
حَدِيثِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِذًا أُخْبِرُكَ
بِهِ إِلَّا أَنْ يَكُونَ سِرًّا قُلْتُ إِنَّهُ لَيْسَ بِسِرٍّ هَلْ كَانَ رَسُولُ
اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَافِحُكُمْ إِذَا لَقِيتُمُوهُ قَالَ
مَا لَقِيتُهُ قَطُّ إِلَّا صَافَحَنِي وَبَعَثَ إِلَيَّ ذَاتَ يَوْمٍ وَلَمْ أَكُنْ
فِي أَهْلِي فَلَمَّا جِئْتُ أُخْبِرْتُ أَنَّهُ أَرْسَلَ لِي فَأَتَيْتُهُ وَهُوَ
عَلَى سَرِيرِهِ فَالْتَزَمَنِي فَكَانَتْ تِلْكَ أَجْوَدَ وَأَجْوَدَ (ابوداود)
عن الشعبي لما قَدِمَ جعفر رضي الله عنه من الحبشة
ضَمَّه النبي صلى الله عليه وسلم وقَبَّل ما بين عينيه وقال ما أدري بأيهما أنا أشد
فرحا فتح خيبر أو قدوم جعفر-عَنِ الشَّعْبِيِّ أَنَّهُ قَالَ: كَانَ أَصْحَابُ مُحَمَّدٍ
صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا الْتَقَوْا صَافَحُوا فَإِذَا قَدِمُوا مِنْ
سَفَرٍ عَانَقَ بَعْضُهُمْ بَعْضًا (بيهقي)
ஒரு முஸ்லிம் மற்ற
முஸ்லிமிடம் முஸாஃபஹா செய்வதின் நன்மைகள் பற்றி...
عَنْ أَنَسٍ رضي الله عنه عَنِ النَّبِيِّ صَلَّى
اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: مَا مِنْ مُسْلِمَيْنِ الْتَقَيَا فَأَخَذَ أَحَدُهُمَا
بِيَدِ صَاحِبِهِ، إِلَّا كَانَ حَقًّا عَلَى اللهِ عَزَّ وَجَلَّ أَنْ يَحْضُرَ دُعَاءَهُمَا
وَلَا يُفَرِّقَ بَيْنَهُمَا حَتَّى يَغْفِرَ لَهُمَا (بيهقي) عن أَبي هُرَيْرَةَ:
رضي الله عنه وَقَفَ نَبِيُّ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى حُذَيْفَةَ
فَقَالَ: يَا حُذَيْفَةُ هَلُمَّ يَدَكَ فَكَفَّ حُذَيْفَةُ فَقَالَ الثَّانِيَةَ فَكَفَّهَا
حُذَيْفَةُ ثُمَّ قَالَ الثَّالِثَةَ فَقَالَ حُذَيْفَةُ: يَا رَسُولَ اللهِ إِنِّي
جُنُبٌ وَإِنِّي أَكْرَهُ أَنْ تَمَسَّ يَدِي يَدَكَ قَالَ: " هَلُمَّهَا، أَمَا
عَلِمْتَ يَا حُذَيْفَةُ أَنَّ الْمَرْءَ الْمُسْلِمَ إِذَا لَقِيَ أَخَاهُ فَسَلَّمَ
عَلَيْهِ، وَصَافِحْهُ تَحَاتَّتْ - أَوْ قَالَ: تَحَاطَّتِ - الْخَطَايَا وَالذَّنُوبُ
بَيْنَهُمَا، كَمَا يَتَحَاتُّ الْوَرَقُ مِنَ الشَّجَرِ "(رواه البيهقي في شعب
الايمان)
ஒருவருக்கொருவர் முஸாஃபஹா செய்வதால் மன வருத்தங்கள் நீங்கி,
நம்முடைய அமல்கள் ஏற்றுக்கொள்ளப்பட வழி பிறக்கும்
عَنْ عَطَاءِ بْنِ أَبِي مُسْلِمٍ عَبْدِ اللَّهِ
الْخُرَاسَانِيِّ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ تَصَافَحُوا
يَذْهَبْ الْغِلُّ وَتَهَادَوْا تَحَابُّوا وَتَذْهَبْ الشَّحْنَاءُ عَنْ أَبِي هُرَيْرَةَ
رضي الله عنه أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ تُفْتَحُ
أَبْوَابُ الْجَنَّةِ يَوْمَ الْاثْنَيْنِ وَيَوْمَ الْخَمِيسِ فَيُغْفَرُ لِكُلِّ
عَبْدٍ مُسْلِمٍ لَا يُشْرِكُ بِاللَّهِ شَيْئًا إِلَّا رَجُلًا كَانَتْ بَيْنَهُ وَبَيْنَ
أَخِيهِ شَحْنَاءُ فَيُقَالُ أَنْظِرُوا هَذَيْنِ حَتَّى يَصْطَلِحَا أَنْظِرُوا هَذَيْنِ
حَتَّى يَصْطَلِحَا(رواهما مالك فِي الْمُوَطَّأ) عَنْ الْوَلِيد بْن أَبِي مُغِيث
عَنْ مُجَاهِد قَالَ إِذَا اِلْتَقَى الْمُسْلِمَانِ فَتَصَافَحَا غُفِرَ لَهُمَا قَالَ
قُلْت لِمُجَاهِدٍ بِمُصَافَحَةٍ يُغْفَر لَهُمَا؟قَالَ مُجَاهِد أَمَا سَمِعْته يَقُول
لَوْ أَنْفَقْت مَا فِي الْأَرْض جَمِيعًا مَا أَلَّفْت بَيْن قُلُوبهمْ وَلَكِنَّ
اللَّه أَلَّفَ بَيْنهمْ(63الانفال)"فَقَالَ الْوَلِيد لِمُجَاهِدٍ أَنْتَ أَعْلَم
مِنِّي-عَنْ عُمَيْر بْن إِسْحَاق قَالَ كُنَّا نَتَحَدَّث أَنَّ أَوَّل مَا يُرْفَع
مِنْ النَّاس الْأُلْفَة (تفسير ابن كثير)عن أنس رض عن النبي صَلَّى اللَّهُ عَلَيْهِ
وَسَلَّمَ قال قُبْلَةُ المسلمِ أخاه المصافحة (كنز العمال)
عَنْ أَبِي أُمَامَةَ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ
عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:مِنْ تَمَامِ عِيَادَةِ الْمَرِيضِ أَنْ يَضَعَ أَحَدُكُمْ
يَدَهُ عَلَيْهِ وَيَسْأَلُهُ كَيْفَ هُوَ وتَمَامُ تَحِيَّتِكُمُ الْمُصَافَحَةُ
(بيهقي)
முஸாஃபஹா செய்யும்போது
என்ன சொல்ல வேண்டும்
وَأَنَّهُ يُسْتَحَبّ عِنْد الْمُصَافَحَة حَمْد
اللَّه تَعَالَى وَالِاسْتِغْفَار وَهُوَ قَوْله يَغْفِرُ اللَّهُ لَنَا وَلَكُمْ
(تحفة الاحوذي)عن البراء رضي ا لله عنه قال:قال رسول الله صلى الله عليه و سلم إِذَا
اِلْتَقَى الْمُسْلِمَانِ فَتَصَافَحَا وَحَمِدَا اللَّه تَعَالَى وَاسْتَغْفَرَا غَفَرَ
اللَّه عَزَّ وَجَلَّ لَهُمَا (فتح الباري)
عَنْ أَنَس رضي الله عنه عَنْ النَّبِيّ صَلَّى
اللَّه عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَا مِنْ عَبْدَيْنِ مُتَحَابَّيْنِ فِي اللَّه يَسْتَقْبِلُ
أَحَدُهُمَا صَاحِبَهُ فَيُصَافِحُهُ فَيُصَلِّيَانِ عَلَى النَّبِيّ صَلَّى اللَّه
عَلَيْهِ وَسَلَّمَ إِلَّا لَمْ يَتَفَرَّقَا حَتَّى تُغْفَر ذُنُوبُهُمَا مَا تَقَدَّمَ
مِنْهَا وَمَا تَأَخَّرَ (عون المعبود)(تفسير الثعالبي)(تحفة الاحوذي)
சலாம் சொல்லாமல் வெறுமனே
முஸாஃபஹா மட்டும் செய்யலாமா ?
عَنْ جُنْدُبٍ رضى قَالَ:كَانَ رَسُولُ اللَّهِ
صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:إِذَا لَقِيَ أَصْحَابَهُ لَمْ يُصَافِحْهُمْ حَتَّى
يُسَلِّمَ عَلَيْهِمْ (رواه الطبَرَاني في المعجم الكبير)
பெண்களிடம் முஸாஃபஹா- நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
அவர்கள் அந்நியப் பெண்களின் கைகளைப் பிடித்து பைஅத் செய்ததில்லை
عن عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا زَوْجَ النَّبِيِّ
صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَتْ كَانَتْ الْمُؤْمِنَاتُ إِذَا هَاجَرْنَ
إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَمْتَحِنُهُنَّ بِقَوْلِ اللَّهِ
تَعَالَى {يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِذَا جَاءَكُمْ الْمُؤْمِنَاتُ مُهَاجِرَاتٍ
فَامْتَحِنُوهُنَّ} إِلَى آخِرِ الْآيَةِ قَالَتْ عَائِشَةُ فَمَنْ أَقَرَّ بِهَذَا
الشَّرْطِ مِنْ الْمُؤْمِنَاتِ فَقَدْ أَقَرَّ بِالْمِحْنَةِ فَكَانَ رَسُولُ اللَّهِ
صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا أَقْرَرْنَ بِذَلِكَ مِنْ قَوْلِهِنَّ قَالَ
لَهُنَّ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ انْطَلِقْنَ فَقَدْ بَايَعْتُكُنَّ
لَا وَاللَّهِ مَا مَسَّتْ يَدُ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
يَدَ امْرَأَةٍ قَطُّ غَيْرَ أَنَّهُ بَايَعَهُنَّ بِالْكَلَامِ وَاللَّهِ مَا أَخَذَ
رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى النِّسَاءِ إِلَّا بِمَا
أَمَرَهُ اللَّهُ يَقُولُ لَهُنَّ إِذَا أَخَذَ عَلَيْهِنَّ كَلَاما (بخاري) ولا يجوز
للرجال أن يصافحوا النساء الأجنبيات ولا يمسوهن لا بحائل ولا من غير حائل حتى لو كان
هناك حائل من قفاز أو من وراء العباءة أو من وراء قماش؛ لأن هذه مصافحة ولو كانت من
وراء حائل؛ لأن الذي يريد الشر يمكن مع المصافحة أن يغمزها ليشعر بالسوء فالبعد عن
ذلك هو الواجب وهو المتعين فليس للرجل أن تمس يده يد امرأة أجنبية أو يمس جسم امرأة
أجنبية اللهم إلا إذا كان هناك ضرورة علاج أو ما إلى ذلك فهذا شيء آخر.(شرح سنن ابي
داود)
இரு கைகளால் முஸாஃபஹா
செய்வது
عن ابْنَ مَسْعُودٍ يَقُولُ عَلَّمَنِي رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ
عَلَيْهِ وَسَلَّمَ وَكَفِّي بَيْنَ كَفَّيْهِ التَّشَهُّدَ كَمَا يُعَلِّمُنِي السُّورَةَ
مِنْ الْقُرْآنِ التَّحِيَّاتُ لِلَّهِ وَالصَّلَوَاتُ وَالطَّيِّبَاتُ السَّلَامُ
عَلَيْكَ أَيُّهَا النَّبِيُّ وَرَحْمَةُ اللَّهِ وَبَرَكَاتُهُ السَّلَامُ عَلَيْنَا
وَعَلَى عِبَادِ اللَّهِ الصَّالِحِينَ أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَأَشْهَدُ
أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ....(بخاري)(وَصَافَحَ حَمَّاد بْن زَيْد اِبْن
الْمُبَارَك
بِيَدَيْهِ) (بخاري-باب الأَخْذِ بِالْيَدَيْنِ))
عَنْ أَبِي إِسْمَاعِيل بْن إِبْرَاهِيم قَالَ : رَأَيْت حَمَّاد بْن
زَيْد وَجَاءَهُ اِبْن الْمُبَارَك بِمَكَّة فَصَافَحَهُ بِكِلْتَا يَدَيْهِ (فتح الباري)
முகமலர்ச்சியுடன்
முஸாஃபஹா செய்வது
عَنِ الْحَسَنِ رض أَنْ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ
عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: إِنَّ مِنَ الصَّدَقَةِ أَنْ تُسَلِّمَ عَلَى النَّاسِ،
وَأَنْتَ مُنْطَلِقُ الْوَجْهِ -عن عُمَرَ بْنَ الْخَطَّابِ رضي الله عنه يَقُولُ:
قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: إِذَا الْتَقَى الْمُسْلِمَانِ فَسَلَّمَ كُلٌّ مِنْهُمَا عَلَى صَاحِبِهِ
وَتَصَافَحَا كَانَ أَحِبَّهُمَا إِلَى اللهِ تَعَالَى أَحْسَنُهُمَا بِشْرًا لِصَاحِبِهِ،
وَنَزَلَتْ بَيْنَهُمَا مِائَةُ رَحْمَةٍ: لِلْبَادِي تَسْعَوْنَ، وَلِلْمُصَافِحِ
عَشْرٌ(رواها البيهقي في شعب الايمان)
عَنْ أَبِي هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ
عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:إِنَّكُمْ لَا تَسَعُونَ النَّاسَ بِأَمْوَالِكُمْ وَلَكِنْ
يَسَعُهُمْ مِنْكُمْ بَسْطُ الْوَجْهِ، وَحُسْنُ الْخُلُقِ (شعب الايمان)
عَنْ مُوَرِّقٍ الْعِجْلِيِّ، أَنْ نَبِيَّ اللهِ
صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: " إِنَّ اللهَ تَعَالَى يُحِبُّ السَّهْلَ
الطَّلِيقَ-عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، قَالَ: " مَكْتُوبٌ فِي
الْحِكْمَةِ: فَلْيَكُنْ وَجْهُكَ بَسْطًا، وَكَلِمَتُكَ طَيِّبَةً تَكُنْ أَحَبَّ
إِلَى النَّاسِ مِنَ الَّذِي يُعْطِيهِمُ الْعَطَاءَ (رواها البيهقي في شعب الايمان)
முஸாஃபஹா செய்பவர்கள் தாமாக கைகளை விடுவிக்கும் வரை
நபி ஸல்ல ல்லாஹு அலைஹி வஸல்லம் தன் கைகளை விடுவிக்க மாட்டார்கள்
عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ رضي الله عنه قَالَ كَانَ النَّبِيُّ صَلَّى
اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا لَقِيَ الرَّجُلَ فَكَلَّمَهُ لَمْ يَصْرِفْ وَجْهَهُ
عَنْهُ حَتَّى يَكُونَ هُوَ الَّذِي يَنْصَرِفُ وَإِذَا صَافَحَهُ لَمْ يَنْزِعْ يَدَهُ
مِنْ يَدِهِ حَتَّى يَكُونَ هُوَ الَّذِي يَنْزِعُهَا وَلَمْ يُرَ مُتَقَدِّمًا بِرُكْبَتَيْهِ
جَلِيسًا لَهُ قَطُّ (ابن ماجة)
உம்ராவுக்கு புறப்பட்ட உமர் (ரழி) அவர்களிடம்
தனக்காக துஆ செய்ய சொன்ன நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
عَنْ
ابْنِ عُمَرَ عَنْ عُمَرَ رض أَنَّهُ اسْتَأْذَنَ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ
وَسَلَّمَ فِي الْعُمْرَةِ فَأَذِنَ لَهُ وَقَالَ لَهُ يَا أُخَيَّ أَشْرِكْنَا فِي
شَيْءٍ مِنْ دُعَائِكَ وَلَا تَنْسَنَا (ابن ماجة)
முகஸ்துதிக்காகச்
ஹஜ் செய்தல்
மக்களின் புகழைப் பெறுவதற்காக
ஒரு காரியத்தைச் செய்து, உலகத்திலேயே அதற்கு
"புகழும்" கிடைத்துவிட்டால் மறுமையில் அவருக்கு எவ்வித நற்கூலியும் கிடைக்கவே
செய்யாது.
''இன்னும், (கவனமற்ற) தொழுகையாளிகளுக்குக் கேடுதான். அவர்கள் எத்தகையோர்
என்றால் தம் தொழுகையில் பராமுகமாக(வும், அசிரத்தையாக)வும் இருப்போர். அவர்கள் பிறருக்குக்
காண்பிக்(கவே தான் தொழு)கிறார்கள்.'' (அல்குர்ஆன் 107: 4 - 6)
நல்லறங்கள் செய்யும் சமயம்
அதிலே முகஸ்துதி ஏற்படுவதற்கு வாய்ப்புகள் குறைவுதான். ஆனால், ''புனித ஹஜ் பயணம்"
மேற்கொள்வதில் "முகஸ்துதி" ஏற்பட வாய்ப்புகள் அதிகம் உள்ளது. ஏனெனில் ஒருவர்
தொழுகை, நோன்பு, ஜகாத் - தர்மம் போன்ற கடமைகளை செய்யும் சமயம் அவருக்கு மற்றவர்கள், வழியனுப்பு விழா, பாராட்டுவிழா போன்றவற்றை
நடத்துவதில்லை. ஆனால், ஒருவர் "ஹஜ்"
பயணம் மேற்கொள்ளும் சமயம் (சில ஹாஜிகள்) தங்களுக்கு பிரமாண்டமான முறையில், வழியனுப்பு விழா நடத்த
வேண்டும், சால்வைகள் போடவேண்டும், பூ மாலைகள் போடவேண்டும், புகைப்படம் மற்றும்
வீடியோக்கள் எடுக்க வேண்டும் என்றெல்லாம் புகழை விரும்புகின்றனர்.
ஹஜ்ஜை முடித்துவிட்டு வரும்
சமயம், "ஹாஜிகளே வருக வருக!"
என்று சுவரொட்டிகள் ஒட்டப்பட வேண்டும். தங்களை "ஹாஜியார்" என்றே அழைக்க வேண்டும்
என்பதுபோன்ற எண்ணங்கள் ஏற்படுமானால் அது எவ்வளவு பெரிய வணக்கமாக இருந்தாலும்
"புகழை" உலகிலேயே அல்லாஹ் வழங்கிவிட்டு மறுமையில் ஒன்றுமில்லாமலாக்கி விடுவான்..
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
கூறிய ஒரு நீண்ட ஹதீஸின் கருத்தாவது... மறுமையில் விசரணையின்போது ஷஹீத் - வீர மரணமடைந்தவர், செல்வந்தர், மார்க்க அறிஞர் ஆகியோரை
விசாரிக்கும்போது அவர்களில் புகழுக்காக தங்களது செயல்கலைப் புரிந்தவர்களை அல்லாஹ் நரகில்
இழுத்துத்தள்ளும்படி உத்தரவிடுவான் எண்று கூறினார்கள். (ஆதாரம்: முஸ்லிம் 3527, நஸாயீ 3086, அஹமது 7928)
எனவே நல்லறங்கள் செய்வதுடன்
மேலே எச்சரிக்கப்பட்டுள்ள காரியங்களை செய்யாமல் இருந்தால்தான் அவற்றுக்குறிய நற்கூலியை
மறுமையில் முழுமையாக பெற்றுக்கொள்ள முடியும் என்பதை நினைவில் கொள்வோமாக, அல்லாஹ் நல்லருள்
புரிவானாக
ஒரு ஹாஜி ஹஜ்ஜைமுடித்தபிறகு தாடியை நீக்கிவந்தார் அவரைப்பார்த்து மெளலானா கேட்டார் ஹாஜி
என்ன தாடியை எடுத்துவிட்டீர்கள் என்றார் அதற்கு அவர், மெளலானா தாங்கள்தானேகூறினீர்கள் ஹஜ்ஜைமுடித்தவர் அன்று பிரந்தபாலகனைப்போன்று என்ரீர்களே
பாலகனுக்கு தாடி இருக்குமோ என்றார் ஹாஜி
இந்தநிலை வந்துவிடக்கூடாது
ஹஜ்ஜூ்க்குமுன்பு இருந்த நிலையைவிட நல்லமாற்றம் வரவேண்டும் அதுதான் மப்ரூரான ஹஜ்ஜின் அடயாலம்
ஹாஜிகளை வரவேற்றல்:
عن ابن عباس رضي اللهم عنهمما قال لما قدم
النبي صلى اللهم عليه وسلم مكة استقبلته أغيلمة بني عبدالمطلب فحمل واحدا بين يديه
وآخر خلفه
عن حبيب بن أبي ثابت قال خرجت مع ابن عمر
نتلقى الحاج فنسلم عليهم قبل أن يتدنسوا
அருளைச் சுமந்த ஹாஜிகளே.. வருக..!
ஹஜ்ஜை முடித்தநல் ஹாஜீரே
அச்சம் இறையுடன் கொண்டோரே
இச்சை துறந்திடும் பண்பீரே
பச்சைக் குழந்தையாய் ஆனீரே!
மஹ்ஷர் நினைவினில் கூட்டத்தில்
அஹ்மத் நபிகளும் காண்பித்த
இஹ்ராம் உடையுடன் ஓட்டத்தில்
இஹ்சான் உணர்வுடன் சென்றீரே!
கண்ணீர் வடித்ததால் பாவங்கள்
தண்ணீர் கழுவிய தோற்றத்தில்
எண்ணம் முழுவதும் உள்ளத்தில்
வெண்மை மொழுகிடச் செய்தீரே!
வண்ணம், இனங்களும் வேறாகி
வெண்மை உடுத்திய தோற்றத்தில்
எண்ணம் , நினைவுகள் ஒன்றாகி
கண்ணில் நிறுத்திய கஃபாவில்
சுற்றி வருவதும் குர்பானி(யால்)
பற்றை அறுப்பதும் செய்தீரே
கற்றுத் தெளிந்ததும் ஈமானில்
சற்றும் விலகிடாச் சான்றோராய்!
கோபம் குறைகளை மன்னித்து
பாபச் சுமைகளை நிந்தித்து
தீபச் சுடரெனத் தீன்ஏந்தி
சாபம் களைந்திடச் செய்தீரே!
பல்லா யிரமெனப் பாரோரும்
கல்லால் எறிந்ததேன் ஷைத்தானை
உல்லா சமாகவே இல்லாமல்
அல்லாஹ் விதித்தநல் லாணைக்கே!
வற்றாக் கிணறென ஜம்ஜம்நீர்
முற்றும் குடித்தநல் ஹாஜீரே!
இற்றைப் பொழுதினில் இன்பம்தான்
சுற்றம் சுகம்பெறத் தந்தீரே!
மங்காச் சுடரென மக்காவில்
பொங்கும் அருளொளி ஈமானை
எங்கள் இடத்தினில் ஏற்றீரே
தங்க மனத்துடன் வாரீரே! (”கவியன்பன்” கலாம்)
அகங்காரம் அட்டகாசம்
அகல வீசி அனிதிகளை தூர வீசி
நிகரில்லா படைத்தவனின்
நிலையான பரிகாரம் தேட
ஆஜரான ஹாஜிகளே! வருக
கஃபாவை தழுவி அகமழுது
கண்ணீர் அடங்கா கறை
அழியும் வரை தேம்பி
பாலகனாய் பிரசவித்த
ஹாஜிகளே! வருக
உச்சி உஷ்ன அறபாவிலே
உன்னையே! மறந்து
உள்ளதையே! இழந்து
பாதக் குருதி உரிகிவர நடந்து
படைத்தவனிடம் பரிகாரம்
பெற்ற ஹாஜிகளே! வருக
போலி இம்மையென உணர்ந்து
உருகி நெஞ்சம் நீ வடித்து
நபிகளாரின் நினைவலைகள்
நெஞ்சத்தில் உருவெடுத்து
மன்றாடி மீட்சி பெற்ற
ஹாஜிகளே! வருக.
பாவங்களை அகற்றும்
இறுதிக்கடமை ஹஜ்ஜி
மன்றாடி மகிழ்ச்சி பெற்று
நரகத்தின் விடுதலை ஏற்று
பாலகனாய் பருவம் சூடிய
ஹாஜிகளே! வருக
ஹாஜிகளுக்கு ஒரு வார்த்தை: ஹாஜி என்ற வார்த்தை பெருமைக்குரியது தான் - தற்பெருமைக்குரியது
அல்ல. ஒரு உன்னதமான வணக்கத்தை
அற்ப பெயருக்கு ஆசைப்பட்டு பாழாக்கி விடவேண்டாம்.
ஹாஜி என்ற வார்த்தைக்கு ஒரு
கடமையை நிறைவேற்றிவிட்டோம் என்று மட்டுமே அர்த்தம். ஹஜ் வாழ்நாளில் ஒரு முறை மட்டுமே
கடமை என்பதால் ஹஜ்ஜுக்கு மட்டும் இந்த "பட்டம்" ஒரு சரியான ஹாஜியின்
உண்மையான கவலை ஹஜ்ஜுக்குப் பிறகு அவர் நடந்து கொள்ளும் நடை முறையில் ஹஜ் அங்கீகரிக்கப்
பட்டதற்கான அடையாளம் இருக்க வேண்டும். அல்லாஹ் ஹஜ்ஜை அங்கீகரிக்க
வேண்டுமே என்ற கவலை இருக்க வேண்டும்.
எனவே, இந்த
ஆண்டின் ஹஜ்ஜை முடித்துவிட்டு தாயகம் திரும்பும் அனைத்து ஹாஜிகளிள் ஹஜ்ஜையும் ஹஜ் மப்ரூர்
(ஒப்புக்கொள்ளப்பட்ட ஹஜ்ஜாக) அல்லாஹ் ஆக்கி
அருள்புறிவானாக! இவர்களுக்கும், கிரேன் விழந்து ஷஹீதான, மினாவின்
நெறிசலில் அகப்பட்டு ஷஹீதான ஷுஹதாக்களுக்கும்
அவனது உயர்ந்த ஜன்னதுல் ஃபிர்தவ்ஸை வழங்குவானாக! அந்த அல்லாஹ்வின்
அருளை சுமந்துவரும் ஹாஜிகளை நாமும் முடிந்தால் விமான நிலையத்திலோ
அல்லது அவரது வீட்டிற்குள் செல்வதற்கு முன்பாகவோ சென்று இன்முகத்தோடு வரவேற்று அவர்களிடம்
முஸாஃபஹா, முஆனகா செய்து நமக்காக துஆ செய்யச் சொல்வதோடு, பிழைபொருக்க
தேடும்படியும் சொல்லி பாவங்கள் மன்னிக்கப்ட்டவர்காளக மாற முயற்சிசெய்வோமாக! அத்தகை
வாய்ப்பினை நம் அனைவருக்கும் அல்லாஹ் வழங்கி அருள்வானாக! ஆமீன்
யாரப்பல் ஆலமீன்.
قبل الله حجك, وغفر الله ذنبك, واخلف الله نفقتك آمين
தகவல் வழங்கியோர்: நஸீர் மிஸ்பாஹி, சுல்தான் ஸலாஹி, மவ்லவி ஹஸன்,
புதுகை ஜபருல்லாஹ் முனீரி, தொகுத்து வழங்கியவர்: ஹனீப் ஜமாலி.
0 comments:
Post a Comment