21 October 2015

ஆஷுரா நோன்பும் ஹுஸைன் (ரலி) அவர்களின் மாண்பும்





قاﻝ اﻟﻠﻪ ﻋﺰ ﻭﺟﻞ ﻓﻴﻤﺎ ﺃﻗﺴﻢ ﺑﻪ: {ﻭاﻟﻔﺠﺮ ﻭﻟﻴﺎﻝ ﻋﺸﺮ}  (اﻟﻔﺠﺮ:2 )
228 - ﺃﺧﺒﺮﻧﺎ ﺃﺑﻮ ﻧﺼﺮ ﺑﻦ ﻗﺘﺎﺩﺓ، ﺃﺧﺒﺮﻧﺎ ﺃﺑﻮ ﻣﻨﺼﻮﺭ اﻟﻨﻀﺮﻭﻱ، ﺣﺪﺛﻨﺎ ﺃﺣﻤﺪ ﺑﻦ ﻧﺠﺪﺓ، ﺣﺪﺛﻨﺎ ﺳﻌﻴﺪ ﺑﻦ ﻣﻨﺼﻮﺭ، ﺣﺪﺛﻨﺎ ﻧﻮﺡ ﺑﻦ ﻗﻴﺲ، ﺣﺪﺛﻨﺎ ﻋﺜﻤﺎﻥ ﺑﻦ ﻣﺤﺼﻦ، ﺃﻥ اﺑﻦ ﻋﺒﺎﺱ، ﻛﺎﻥ ﻳﻘﻮﻝ ﻓﻲ ﻭاﻟﻔﺠﺮ ﻭﻟﻴﺎﻝ ﻋﺸﺮ. (اﻟﻔﺠﺮ:1) ﻗﺎﻝ: اﻟﻔﺠﺮ ﻫﻮ اﻟﻤﺤﺮﻡ ﻓﺠﺮ اﻟﺴﻨﺔ.

முஹர்றம் பத்தாம் நாள் ஆஷுரா தினம் அதிவிசேடங்களை உள்ளடக்கிய மாதினமாகும்.
·         அன்றுதான் நபீ ஆதம் (அலை) அவர்களை அல்லாஹ் மன்னித்தான்
·         அன்றுதான் நபீ நூஹ் (அலை) அவர்களுடைய கப்பல் தூபான் வெள்ளப் பெருக்கிலிருந்து காப்பாற்றப்பட்டு ஜூதி மலையில் தரை தட்டியது.
·         அன்றுதான் நபீ மூஸா (அலை); நபீ ஈஸா (அலை) பிறந்தார்கள்.
·         அன்றுதான் சர்வாதிகாரி நும்ரூதால் நெருப்புக்கிடங்கில் எரியப்பட்ட நபீ (இப்றாஹிம்) அலை காப்பாற்றப்பட்டார்கள்.
·         அன்றுதான் நபீ யூனுஸ் (அலை) அவர்களின் சமூகத்தை விட்டு வேதனை நீக்கப்பட்டது.
·         அன்றுதான் நபீ ஐயூப் (அலை) அவர்களின் துன்பம் நீங்கியது.
·         அன்றுதான் நபீ யஃகூப் (அலை) அவர்கள் தனது மகன் யூசுப் (அலை) அவர்களை இழந்ததால் தேய்ந்திருந்த கண்பார்வையை மீண்டும் பெற்றார்கள்.
·         அன்று பாழ்கிணற்றில் எறியப்பட்ட நபீ யூசுப் (அலை) அதிலிருந்து வெளியேற்றப்பட்டார்கள்.
·         அன்றுதான் உலகம் படைப்பதற்கு ஆரம்பமாக்கப்பட்டது.
·         அன்றுதான் பூமியில் முதன் முதலாக மழை பெய்தது.
·         அன்றுதான் அல்லாஹ்வின் அருள் பூமியில் உள்ளவர்களுக்கு இறங்கியது.
·         தூபான் வெள்ளத்தின் பின் பூமியில் முதன் முதலாக சமையல் செய்யப்பட்டது. இதை நூஹ் நபீ அவர்களே செய்தார்கள்.
·         அன்றுதான் சுலைமான் நபி அவர்களுக்கு முழு உலக ஆட்சியும் வழங்கப்பட்டது.
·         அன்றுதான் நபீ ஸக்கரிய்யா (அலை) அவர்களுக்கு நபீ யஹ்யா (அலை) அவர்கள் பிறந்தார்கள்.
·         அன்றுதான் பிர்அவ்னும் அவனதும் சூனியக்காரர்களும் தோற்கடிக்கப்பட்டனர்.
·         அன்றுதான் பிர்அவ்ன் நீரில் மூழ்கடிக்கப்பட்டு இறந்தான்
·         அன்றுதான் நபீ பேரர் ஹுசைன் (ரளி) அஹ்லுல்பைத் என்றழைக்கப்படுவோரில் அநேகரும் கொலை செய்யப்பட்டனர்.


ஆஷுரா நோன்பு (முஹர்ரம் மாத பிறை 10):

இப்னு அப்பாஸ் (ரளி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: நபி (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வந்த போது யூதர்கள் ஆஷீரா தினத்தன்று நோன்பு நோற்பதைக் கண்டார்கள். அவர்களிடம் நபி (ஸல்) அவர்கள் நீங்கள் நோன்பு நோற்கும் இந்நாளின் சிறப்பு என்ன? என்று கேடட்டார்கள். அதற்கு யூதர்கள் , இது ஒரு புனிதமான நாள், இன்று தான் அல்லாஹ் மூஸா (அலை) அவர்களையும் அவரது சமூகத்தினரையும் (அவர்களது) விரோதிகளான ஃபிர்அவ்ன், அவனது கூட்டத்தினரிடமிருந்து காப்பாற்றி அவனையும் அவனது கூட்டத்தினரையும் நீரில் மூழ்கடித்தான். அதற்கு நன்றி செலுத்தும் விதமாக நாங்கள் நோன்பு வைக்கின்றோம் என்று கூறினார்கள்.

நபி (ஸல்) அவர்கள், மூஸா (அலை) அவர்களுக்கு உங்களை விட நானே அதிக உரிமையும், தகுதியும் உடையவன் என்று கூறி விட்டுத் தாமும் நோன்பு நோற்று, பிறரையும் நோன்பு நோற்கும்படி ஏவினார்கள். (புகாரி, முஸ்லிம், அஹ்மத்)

ஆஷீரா தினத்தை யூதர்கள் கண்ணியப்படுத்தி நோன்பு நோற்கின்றார்கள் என்று நபி (ஸல்) அவர்களிடம் சில நபித்தோழர்கள் கூறியபோது , அடுத்த ஆண்டு நான் உயிரோடிருந்தால் (யூதர்களுக்கு மாற்றமாக) ஒன்பதாம் நாளும் நோன்பு நோற்பேன் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆனால் மறுவருடம் இந்த தினத்திற்கு முன்பே நபி (ஸல்) அவர்கள் மரணமடைந்து விட்டார்கள். (முஸ்லிம்)
صيام يوم عاشوراء احسب على الله ان يكفر السنة التى قبله. (مسلم-1163)
அபூகதாதா (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: '' நபி(ஸல்) அவர்களிடம் ஆஷீரா நோன்பு பற்றி வினவப்பட்டது. அதற்கு அவர்கள், '' கடந்த ஒரு வருட பாவங்களுக்கு அது பரிகாரமாகும்'' என்று கூறினார்கள். (முஸ்லிம்) ஆக முஹர்ரம் மாதம் ஒன்பது மற்றும் பத்தாவது நாட்களில் நோன்பு நோற்பது நபிவழி என அறியலாம்.

அல்லாஹ்வுக்குவிருப்பமானது:
ஹிஜ்ரி ஆண்டின் முதல் மாதம் முஹர்ரம். முஹர்ரம் என்பதன் பொருள் புனிதமானது என்பதாகும். இதனை அல்லாஹ்வின் மாதம் என்று நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்டது இதன் மகத்துவத்துக்கு இன்னுமொரு சான்றாகும்.
ﻋﻦ ﺃﺑﻲ ﻫﺮﻳﺮﺓ، ﻗﺎﻝ: ﻗﺎﻝ ﺭﺳﻮﻝ اﻟﻠﻪ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ: «ﺃﻓﻀﻞ اﻟﺼﻴﺎﻡ ﺑﻌﺪ ﺷﻬﺮ ﺭﻣﻀﺎﻥ ﺷﻬﺮ اﻟﻠﻪ اﻟﻤﺤﺮﻡ، ﻭﺃﻓﻀﻞ اﻟﺼﻼﺓ ﺑﻌﺪ اﻟﻔﺮﻳﻀﺔ ﺻﻼﺓ اﻟﻠﻴﻞ. (مسلم, احمد)
நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹூரைரா (ரளி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: '' ரமளானுக்குப் பின் நோற்கும் நோன்புகளில் மிகவும் சிறப்பான நோன்பு அல்லாஹ்வின் மாதமான முஹர்ரம் மாதத்தின் நோன்பாகும். கடமையான தொழுகைக்குப் பின் மிகச் சிறப்பான தொழுகை இரவுத் தொழுகையாகும் '' (முஸ்லிம், அஹ்மத்)

பத்தாம் நாளோடு சேர்த்து ஒன்பதாம் நாளும் நோன்பு நோற்பது சுன்னத்தாகும்
1. அடுத்த வருடம் நான் உயிருடன் இருந்தால் ஒன்பதாம் நாளையும் நோற்பேன் என்றார்கள். (முஸ்லிம்)
2. ஆஷுரா தினத்தன்று நபி (ஸல்) அவர்கள் நோன்பு நோற்று அதை நோக்கும்படி ஏவிய போது இது யூதர்களும் கிறிஸ்தவர்களும் கண்ணியப்படுத்தும் நாளல்லவா அல்லாஹ்வின் தூதரே! என நபித்தோழர்கள் கேட்டார்கள், அதற்கு நபி(ஸல்) அவர்கள், அல்லாஹ் நாடினால், எதிர்வரும் வருடம் ஒன்பதாவது நாளையும் (சேர்த்து) நோற்பேன் என்றார்கள். அடுத்த வருடம் வருவதற்கு முன்பே நபி (ஸல்) அவர்கள் மரணித்து விட்டார்கள். (முஸ்லிம்)
3. ஆஷுரா நாளின் நோன்பை நோருங்கள் அதற்கு முன் ஒருநாள் அல்லது அதற்கு பின் ஒருநாள் நோன்பு நோற்று யூதர்களுக்கு மாறும் செய்யுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கின்னறார்கள். (அஹ்மத், இப்னு குஸைமா, பைஹகி) அல்லாஹ் மிக நன்கறிந்தவன்.

முஹர்ரம் மாதத்தின் சிறப்பு:
இம்முஹர்ரம் மாதம் அல்லாஹ்வின் மாதம் என எம்பெருமானார் (ஸல்) அவர்களால் புகழ்ந்துரைக்கப்பட்ட சிறப்புமிகு மாதம் ஆகும்.
முஹர்ரம் மாதத்திற்கென்று பல்வேறு தனிச்சிறப்புக்கள் உள்ளன. அவற்றில் தலையாயவை இரண்டாகும். இம்மாதம் இஸ்லாமிய வருடப்பிறப்பின் ஆரம்ப மாதமாகும்.
இம்மாதத்தின் 10ஆம் நாள் இறைத்தூதரான மூஸா (அலை) அவர்களையும் அவர்களின் சத்திய அழைப்பிற்கு செவிசாய்த்து, ஏக இறைவன்மீது நம்பிக்கைக் கொண்ட சமூகத்தினரையும் (பனூ இஸ்ரவேலர்), அவர்களை அழித்தொழிக்கப் புறப்பட்ட ஃபிர்அவ்னிடமிருந்து வல்ல இறைவன் பாதுகாத்த நாளாகும்.
افضل الصيام بعد رمضان شهر الله المحرم. (مسلم)
"ரமலான் நோன்பிற்குப் பிறகு சிறந்த நோன்பு அல்லாஹ்வுடைய மாதமாகிய முஹர்ரத்தின் நோன்பாகும்" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூ ஹூரைரா (ரலி) அவர்கள். நூல்: முஸ்லிம்.

மேற்கண்ட ஹதீஸில் இம்மாதத்தை அல்லாஹ்வின் மாதமாக நபி (ஸல்) அவர்கள் சிலாகித்துக் குறிப்பிடுகின்றார்கள். மட்டுமல்ல, முஹர்ரம் மாதம் 9 (தாசுஆ) மற்றும் 10 (ஆஷுரா) ஆகிய இரு தினங்களில் அனுசரிக்கப்படும் நோன்புகள் ரமலான் மாத நோன்புகளுக்கு அடுத்தபடியான சிறந்த நோன்புகளாக நபி (ஸல்) அவர்களால் இங்கு அடையாளப் படுத்தப்படுகிறது.

ஆஷூரா நோன்பைப்பற்றி நபி (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. (அதற்கு), "சென்ற வருடத்தின் பாவங்களுக்கு (அது)பரிகாரமாக அமையும்" என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அபூகதாதா (ரலி), நூல்: முஸ்லிம். ஒரு வருட பாவங்களுக்குப் பரிகாரமாக விளங்கும் இந்த ஆஷூரா தினம் என்பது முஹர்ரம் மாதத்தின் 10ஆம் நாள் என்பது அனைவரும் அறிந்த விஷயமே.

"மூஸா (அலை) அவர்களைப் பெருமைப்படுத்துவதற்கு யூதர்களைவிட நான் அதிகத் தகுதி வாய்ந்தவன்" எனக் கூறி அவ்வருடம் முஹர்ரம் 10 அன்று நோன்பு நோற்ற நபி (ஸல்) அவர்கள், "எதிர்வரும் வருடம் (உயிருடன்) இருந்தால் ஒன்பதாவது நாளும் நோன்பு நோற்பேன்" (அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள். நூல்: முஸ்லிம்.) எனக் கூறிச்சென்றார்கள்.

முஹர்ரம் மாதத்தின் படிப்பினை:
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உயிரோடு இருந்து முஹர்ரம் 10 அன்று மட்டும் நோன்பு வைத்திருந்தாலும் அவர்களின் எண்ணத்திற்கியைந்து 9 மற்றும் 10 ஆகிய இரு தினங்களில் ஆஷூரா நோன்பு வைக்கும் முஸ்லிம் சமூகம் அதன் பின்னணியில் உள்ள நபி (ஸல்) அவர்களின் உறுதியான சமுதாய சிந்தனையைக் குறித்து ஆழமாகச் சிந்திப்பதில்லை.

நபி (ஸல்) அவர்கள், "அடுத்த வருடம் உயிருடன் இருப்பின் 9 அன்றும் நோன்பு வைப்பேன்" என்று ஏன் கூறினார்கள்? அதற்கு நபி (ஸல்) அவர்களின் வாழ்வில் பல நிகழ்வுகள் தெளிவான பதிலைத் தருகின்றன.

யூத சமுதாயம் என்பது, உலகில் பல சமூகங்களை நேர்வழிப்படுத்த இறைவனால் அனுப்பப்பட்ட நபிமார்களின் எண்ணிக்கையை வைத்து மிகவும் அதிகமான நபிமார்களைப் பெற்றுக் கொண்ட சமுதாயமாகும். எனினும் தங்களுக்கு அனுப்பப்பட்ட பல நபிகளை நிராகரித்தது மட்டுமன்றி அவர்களுக்கு அனுப்பப்பட்ட நபிகளுள் அதிமானோரைக் கொடூரமாகக் கொலையும் செய்தவர்கள் யூதர்களாவர். இதனால் இறைவனின் கடும் சினத்திற்குரியவர்களாகி இறைவனால் சபிக்கப்பட்ட கூட்டமாக, இறைவனின் தீர்ப்பை எதிர்நோக்கி இருக்கும் கூட்டமாக அவர்கள் இருக்கின்றனர். இந்தக் காரணத்தினால் எப்பொழுதுமே தம்முடைய செயல்களில் எதுவும் யூதர்களுக்கு ஒப்பாக எவ்விஷயத்திலும் இருந்து விடக்கூடாது என்பதில் நபி (ஸல்) அவர்கள் அதிக சிரத்தை எடுத்துக் கொண்டனர். அதோடு தன் தோழர்களுக்கு சந்தர்ப்பம் கிடைக்கும் பொழுதெல்லாம் யூதர்களுக்கு மாறு செய்யும்படி வலியுறுத்தவும் செய்தனர். இதற்கு உதாரணமாகப் பல்வேறு வரலாற்று நிகழ்வுகளைக் குறிப்பிடலாம்.

அவற்றில் ஒன்றுதான் இந்த ஆஷூரா 9-ஆம் நாள் நோன்பும். எவ்விஷயத்திலும் யூதர்களின் செயலுக்கு, தான் ஒப்பாக இருந்து விடக்கூடாது என்பதில் கவனம் செலுத்திய நபி (ஸல்) அவர்கள் நன்மைகள் செய்வதிலும் நன்றி செலுத்துவதிலும் அவர்களைவிட மேலதிகமாக இருக்கும் முகமாக ஆஷூரா 9 அன்றும் நோன்பு வைக்க விழைந்தார்கள். இவ்வாறு தமது ஒவ்வொரு அசைவிலும் மாற்றாரின் கலாச்சாரத்தைப் பின்பற்றிவிடக்கூடாது என்பதில் நபி (ஸல்) அவர்கள் கவனமாக இருந்ததன் காரணம், இஸ்லாமியக் கலாச்சாரம் எவ்விதத்திலும் மற்ற கலாச்சாரங்களோடு ஒன்றி அழிந்து விடக்கூடாது; தனித்தன்மையும் திகழ வேண்டும் என்று கருதியேயாகும்.

ஆஷூராவின் சிறப்பு:
நபி (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வந்தபோது யூதர்கள் ஆஷுரா தினத்தில் நோன்பு நோற்று வந்ததைக் கண்டனர். அது பற்றி நபி (ஸல்) அவர்கள் யூதர்களிடம் வினவிய போது மூஸா (அலை) அவர்களையும், இஸ்ரவேலர்களையும் அவர்களின் எதிரி (பிர்அவ்ன்) இடமிருந்து அல்லாஹ் காப்பாற்றிய சிறந்த நாளாகும்என்று யூதர்கள் காரணம் கூறினர். உங்களை விட

மூஸா (அலை) அவர்களுக்கு நான்தான் அதிக உரிமை உள்ளவன் என்று நபி (ஸல்) அவர்கள் கூறி, அன்று நோன்பு வைக்குமாறும் உத்தரவிட்டனர். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரளி) நூல்கள்: புகாரி 3397, முஸ்லிம்.

இந்தக் கட்டளை மூலம் ஆஷுரா தினத்தில் நோன்பு நோற்பது கட்டாயக் கடமை என்று தெரிந்திருந்தாலும் ஆஷுரா நோன்புக் கட்டாயக் கடமை அல்ல. காரணம் நபி (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வந்தபோது ரமழான் நோன்பு கடமையாக்கப்படாத நேரத்தில் இந்த நோன்பைக் கடமையாக ஆக்கி இருந்தனர். ரமழான் நோன்புக் கடமையாக்கப்பட்டபின் ஆஷுரா நோன்பைக் கட்டாயம் நோற்க வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் வலியுறுத்தவில்லை.
நபி (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வந்தபோது ஆஷுரா தினத்தில் நோன்பு நோற்கும்படி கட்டளையிட்டிருந்தனர். ரமழான் நோன்பு கடமையாக்கப்பட்ட பின், “விரும்பியவர் இந்த ஆஷுரா தினத்தில் நோன்பு நோற்கட்டும்! விரும்பாதவர் விட்டு விடலாம்என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அன்னை ஆயிஷா (ரழி) நூல்கள்: புகாரி 1592, முஸ்லிம். இதே கருத்தை முஆவியா (ரளி) அவர்களும் அறிவிக்கின்றார்கள். (புகாரி, முஸ்லிம்)

ஆஷுரா தினத்தை யூதர்கள் கண்ணியப்படுத்தி நோன்பு நோற்கின்றனர்என்று நபி (ஸல்) அவர்களிடம் சில நபித்தோழர்கள் கூறியபோது, “அடுத்த ஆண்டு நான் உயிரோடு இருந்தால் (யூதர்களுக்கு மாற்றமாக) ஒன்பதாம் நாளும் நோன்பு நோற்பேன்என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆனால் அடுத்த ஆண்டு இந்த தினத்திற்கு முன்பே நபி(ஸல்) அவர்கள் வபாத்தாகி விட்டார்கள்.அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ்(ரழி) நூல்கள்: முஸ்லிம் 1916, 1917, அஹ்மத், அபூதாவூது.

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: ஆஷூரா எனும் இந்த நாளையும் (ரமலான்) என்னும் இந்த மாதத்தையும் தவிர வேறெதையும் ஏனையவற்றை விடச் சிறப்பித்து தேர்ந்தெடுத்து நபி (ஸல்) அவர்கள் நோன்பு நோற்பதை நான் பார்த்ததில்லை. நூல்: புகாரி 2006

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: முஹர்ரம் பத்தாவது நாளில் (ஆஷூரா) நோன்பு நோற்பதை அதற்கு முந்தைய ஓராண்டின் பாவத்திற்குப் பரிகாரமாக அல்லாஹ் ஆக்குவான் என நான் எதிர்பார்க்கிறேன். அறிவிப்பவர்: அபூகதாதா (ரலி) நூல்: முஸ்லிம் 1976

நபி (ஸல்) அவர்களிடம் ஆஷூரா நோன்பு பற்றிக் கேட்கப்பட்டது. அதற்கு, அது கடந்த ஆண்டின் பாவத்திற்குப் பரிகாரமாகும் என்றார்கள். அறிவிப்பவர்: அபூகதாதா (ரலி) நூல்: (முஸ்லிம் 1977)   மேற்கூறிய நபிமொழிகள் மூலம் முஹர்ரம் மாதம் ஒன்பதாம் நாளும், பத்தாம் நாளும், நோன்பு ஸுன்னத் என்பதை நாம் உணரலாம். இதுதான் ஆஷுரா நாளின் சிறப்பு.

ஆஷுரா நாளின் நாயகன் நபி மூஸா (அலை) வரலாறு:
முஹர்ரம் மாதத்தின் பத்தாம் நாள் சிறந்த மகத்தான ஒரு நாளாகும். ஆஷூரா நாள் என்றழைக்கப்படும் அந்த நாள் எப்படிப்பட்டது? அது பற்றி இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களின் அறிவிப்பு இவ்வாறு சொல்கின்றது.

நபி (ஸல்) அவர்கள் மதீனா வந்த போது யூதர்கள் ஆஷூரா நாளில் நோன்பு நோற்பதைக் கண்டார்கள். "இது என்ன நாள்?'' என்று கேட்டார்கள். "இது மாபெரும் நாள்! மூஸா (அலை) அவர்களை இந்த நாளில் தான் அல்லாஹ் காப்பாற்றினான். ஃபிர்அவ்னின் கூட்டத்தாரை (கடலில்) மூழ்கடித்தான். ஆகவே, மூஸா (அலை) அவர்கள் அல்லாஹ்விற்கு நன்றி செலுத்தும் விதத்தில் இந்நோன்பை நோற்றார்கள்'' என்று யூதர்கள் கூறினர். நபி (ஸல்) அவர்கள் "நான் அவர்களை விட மூஸாவுக்கு நெருக்கமானவன்'' என்று கூறிவிட்டு அந்த நாளில் தாமும் நோன்பு நோற்று தம் தோழர்களுக்கும் நோன்பு நோற்கும்படி கட்டளை இட்டார்கள். (அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி) நூல்: புகாரி-3397) இந்தச் சம்பவம் நமக்கு முற்காலத்தில் நடந்த ஒரு வரலாற்றை நினைவூட்டுகின்றது. அது என்ன?

பனீ இஸ்ரவேல் சமுதாயத்தவர்களைக் கொத்தடிமைகளாக்கி, கொடுமைப்படுத்திக் கொண்டிருந்த கொடுங்கோலன் ஃபிர்அவ்ன் என்பவனிடமிருந்து மூஸா (அலை) அவர்கள் அந்தச் சமுதாயத்தை மீட்ட வரலாறு தான் அது.

எகிப்து நாட்டின் சர்வாதிகாரியாக இருந்தவன் ஃபிர்அவ்ன் என்ற கொடுங்கோலன். தனக்கு வழங்கப்பட்ட ஆட்சியதிகாரத்தால் ஆணவத்தின் உச்சத்தில் இருந்தவன். நானே மகத்தான இறைவன் என்று பிரகடனப்படுத்தியவன். இவன் தனது நாட்டின் மக்களை உயர்ந்தவர், தாழ்ந்தவர் எனப் பிரித்து ஆட்சி செய்தான். அவனது ஆட்சியில் கொத்தடிமைகளாக்கப்பட்டு துன்புறுத்தப்பட்டவர்கள் இஸ்ரவேல் சமுதாயத்தினர்.

இந்த அக்கிரமக்கார அரசனிடம் இறைவனால் அனுப்பப்பட்ட தூதர்தான் மூஸா (அலை) அவர்கள். ஃபிர்அவ்னிடத்தில் ஓரிறைக் கொள்கையைப் பிரச்சாரம் செய்வதோடு, ஒடுக்கப்பட்ட இஸ்ரவேல் சமுதாயத்துக்காக உரிமைக் குரல் கொடுத்து, அம்மக்களை அடிமைத்தளையிலிருந்து மீட்கும் மாபெரும் பொறுப்பு மூஸா நபிக்கு வழங்கப்பட்டிருந்தது.


அல்லாஹ் தனது திருமறையில் பல்வேறு இடங்களில் அந்த வரலாற்றை எடுத்துக் கூறுகின்றான். திருக்குர்ஆன் கூறும் அந்த வரலாற்றை இப்போது பார்ப்போம்.


ஃபிர்அவ்னின் சர்வாதிகார ஆட்சி:
மூஸா மற்றும் ஃபிர்அவ்ன் பற்றிய உண்மையான செய்தியை நம்பிக்கை கொள்ளும் சமுதாயத்திற்காக உமக்கு கூறுகிறோம். ஃபிர்அவ்ன் பூமியில் ஆணவம் கொண்டிருந்தான். அதில் உள்ளவர்களைப் பல பிரிவுகளாக்கி அவர்களில் ஒரு பிரிவினரைப் பலவீனர்களாக ஆக்கினான். அவர்களில் ஆண் மக்களைக் கொன்றான். பெண்(மக்)களை உயிருடன் விட்டான். அவன் குழப்பம் செய்பவனாக இருந்தான். (அல்குர்ஆன்28:3,4)

மூஸா நபியின் பிறப்பு:
பனூ இஸ்ரவேலர்களை ஃபிர்அவ்ன் இவ்வாறு கொடுமைப் படுத்திக்கொண்டிருந்த போது, மூஸா (அலை) அவர்கள் பிறக்கின்றார்கள். மூஸா (அலை) அவர்கள் பிறந்த கால கட்டத்தில் ஃபிர்அவ்ன் அந்தச் சமுதாயத்தின் ஆண் மக்களைக் கொன்று குவித்துக் கொண்டிருந்தான். ஆனால் அல்லாஹ்வின் அற்புதம்! எல்லா ஆண் குழந்தைகளையும் கொன்ற ஃபிர்அவ்ன் பிற்காலத்தில் எதிரியாக வந்து, அவனை அழிக்கப் போகும் மூஸா (அலை) அவர்களை மட்டும் கொல்லாமல் விட்டு விட்டான்.

மூஸா நபியவர்கள் பிறந்தவுடன் ஃபிர்அவ்ன் அவனைக் கொன்று விடுவான் என்று எண்ணி அஞ்சிக் கொண்டிருந்த மூஸா நபியின் தாயாருக்கு அல்லாஹ் ஒரு செய்தியை உள்ளுணர்வாக அறிவித்துக்கொடுத்தான். அதன் அடிப்படையில் அவர்கள் மூஸா நபியவர்களை ஒரு பெட்டியில் வைத்து, கடலில் போட்டு அனுப்பி விடுகின்றார்கள். அதன் பின் அந்தக் குழந்தை (மூஸா நபி) ஃபிர்அவ்னிடமே வந்து சேர்கின்றது. இந்த வரலாற்றை அல்லாஹ் பின் வருமாறு கூறுகின்றான்.

தன் பகையை தானே வளர்த்த ஃபிர்அவ்ன்:
அறிவிக்கப்பட வேண்டியதை உமது தாயாருக்கு நாம் அறிவித்ததை எண்ணிப் பார்ப்பீராக! இவரை (இக்குழந்தையை) பெட்டிக்குள் வைத்து அதைக் கடலில் போடுவாயாக! கடல் அவரைக் கரையில் சேர்க்கும். எனக்கும் இவருக்கும் எதிரியானவன் இவரை எடுத்துக் கொள்வான்'' (என்று உமது தாயாருக்கு அறிவித்தோம்). எனது கண்காணிப்பில் நீர் வளர்க்கப்படுவதற்காக உம் மீது என் அன்பையும் செலுத்தினேன். உமது சகோதரி நடந்து சென்று, "இக்குழந்தையைப் பொறுப்பேற்பவரைப் பற்றி நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா?'' என்று கேட்டார். எனவே உமது தாயின் கண் குளிர்வதற்காகவும், அவர் கவலைப் படாமல் இருப்பதற்காகவும் அவரிடம் உம்மைத் திரும்பச் சேர்த்தோம். நீர் ஓர் உயிரைக் கொன்றிருந்தீர். உம்மைக் கவலையிலிருந்து காப்பாற்றினோம். உம்மைப் பல வழிகளில் சோதித்தோம். மத்யன் வாசிகளிடம் பல வருடங்கள் வசித்தீர். மூஸாவே! பின்னர் (நமது) திட்டப்படி வந்து சேர்ந்தீர். (அல்குர்ஆன்20:38-40)

"இவருக்குப் பாலூட்டு! இவரைப் பற்றி நீ பயந்தால் இவரைக் கடலில் போடு! பயப்படாதே! கவலையும் படாதே! அவரை உன்னிடம் நாம் திரும்ப ஒப்படைத்து, அவரைத் தூதராக ஆக்குவோம்'' என்று மூஸாவின் தாயாருக்கு அறிவித்தோம்.

தங்களுக்கு எதிரியாகவும், கவலையாகவும் ஆவதற்காக ஃபிர்அவ்னின் குடும்பத்தார் அவரை எடுத்துக் கொண்டனர். ஃபிர்அவ்னும், ஹாமானும் அவ்விருவரின் படையினரும் தப்புக் கணக்குப் போட்டு விட்டனர்.

"எனக்கும், உமக்கும் இவர் கண் குளிர்ச்சியாக இருக்கட்டும்! இவரைக் கொல்லாதீர்கள்! இவர் நமக்குப் பயன்படலாம். அல்லது இவரை மகனாக்கிக் கொள்ளலாம்'' என்று ஃபிர்அவ்னின் மனைவி கூறினார். அவர்கள் (விளைவை) அறியாதிருந்தனர். மூஸாவின் தாயாரின் உள்ளம் வெறுமையானது. அவரது உள்ளத்தை நாம் பலப்படுத்தியிருக்கா விட்டால் அவர் (உண்மையை) வெளிப் படுத்தியிருப்பார். அவர் நம்பிக்கை கொண்டோரில் ஒருவராக ஆவதற்கு இவ்வாறு செய்தோம்.

"நீ அவரைப் பின்தொடர்ந்து செல்!'' என்று மூஸாவின் சகோதரியிடம் (அவரது தாயார்) கூறினார். அவர்கள் அறியாத வகையில் தொலைவிலிருந்து அவள் பார்த்துக் கொண்டிருந்தாள்.

பாலூட்டும் பெண்களை முன்பே அவருக்கு (மூஸாவுக்கு) விலக்கியிருந்தோம். "உங்களுக்காக இக்குழந்தையைப் பொறுப்பேற்று வளர்க்கும் ஒரு குடும்பத்தினரைப் பற்றி நான் உங்களுக்குக் கூறட்டுமா? அவர்கள் இவரது நலனை நாடுபவர்கள்'' என்று அவள் கூறினாள்.

அவரது தாயார் கவலைப் படாமல் மனம் குளிரவும், அல்லாஹ்வின் வாக்குறுதி உண்மை என்பதை அவர் அறிவதற்காகவும் அவரிடம் அவரைத் திரும்பச் சேர்த்தோம். எனினும் அவர்களில் அதிகமானோர் (இதை) அறிய மாட்டார்கள். (அல்குர்ஆன்28:7-13)

அறியாமல் செய்த தவறு:
அவர் பருவமடைந்து சீரான நிலையை அடைந்த போது அவருக்கு அதிகாரத்தையும், கல்வியையும் அளித்தோம். நன்மை செய்வோருக்கு இவ்வாறே கூலி வழங்குவோம்.

அவ்வூரார் கவனமற்று இருந்த நேரத்தில் அவர் அங்கே சென்றார். அங்கே இரண்டு மனிதர்கள் சண்டையிட்டுக் கொண்டிருந்ததைக் கண்டார். ஒருவர் இவரது சமுதாயத்தைச் சேர்ந்தவர். இன்னொருவர் இவரது எதிரியின் சமுதாயத்தைச் சேர்ந்தவர். இவரது சமுதாயத்தைச் சேர்ந்தவர் எதிரிச் சமுதாயத்தைச் சேர்ந்தவருக்கு எதிராக இவரிடம் உதவி தேடினார். உடனே மூஸா ஒரு குத்து விட்டார். உடனே அவன் கதை முடிந்து விட்டது. "இது ஷைத்தானின் வேலை. அவன் வழி கெடுக்கும் தெளிவான எதிரி'' என்றார்.

"என் இறைவா! எனக்கே நான் தீங்கு இழைத்து விட்டேன். எனவே என்னை மன்னிப்பாயாக!'' என்றார். அவன் அவரை மன்னித்தான். அவன் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன். "என் இறைவா! நீ எனக்கு அருள்புரிந்ததால் குற்றவாளிகளுக்கு உதவுபவனாக இனிமேல் இருக்க மாட்டேன்'' என்றார்.

அந்நகரத்தில் பயந்தவராக (நிலைமையை) காலையில் கவனித்துக் கொண்டிருந்தார். அப்போது முதல் நாள் அவரிடம் உதவி தேடியவன் (மறுபடியும்) உதவி தேடி அழைத்தான். "நீ பகிரங்கமான வழிகேடனாக இருக்கிறாய்'' என்று அவனிடம் மூஸா கூறினார்.


பின்னர் இருவருக்கும் எதிரியாக இருந்தவனை அவர் பிடிக்க முயன்ற போது "மூஸாவே! நேற்று ஒருவரை நீர் கொலை செய்தது போல் என்னைக் கொல்ல நினைக்கிறீரா? இப்பூமியில் ஆதிக்கம் செலுத்துபவராக ஆக வேண்டும் என்றே நீர் விரும்புகிறீர். சீர்திருத்தம் செய்பவராக ஆக நீர் விரும்பவில்லை'' என்று அவன் கூறினான்.

அந்நகரத்தின் கடைக் கோடியிலிருந்து ஒரு மனிதர் விரைந்து வந்து "மூஸாவே! பிரமுகர்கள் உம்மைக் கொன்று விட ஆலோசித்துக் கொண்டிருக்கின்றனர். எனவே வெளியேறி விடுவீராக! நான் உமது நலம் நாடுபவன்'' என்றார்.

பயந்தவராக கவனத்துடன் அங்கிருந்து வெளியேறினார். "என் இறைவா! அநீதி இழைக்கும் கூட்டத்தை விட்டும் என்னைக் காப்பாற்றுவாயாக!'' என்றார். (அல்குர்ஆன்28:14-21)

மணம் முடித்தல்:
அவர் மத்யன் நகருக்கு வந்த போது "என் இறைவன் எனக்கு நேர் வழி காட்டக்கூடும்'' என்றார்.
மத்யன் நகரின் நீர்த்துறைக்கு அவர் வந்த போது மக்களில் ஒரு கூட்டத்தினர் தண்ணீர் இறைத்துக் கொண்டிருந்ததைக் கண்டார். அவர்களை விட்டு இரண்டு பெண்கள் ஒதுங்கி நிற்பதையும் கண்டு "உங்கள் விஷயம் என்ன?'' என்று கேட்டார். "மேய்ப்பவர்கள் விலகும் வரை நாங்கள் தண்ணீர் இறைக்க முடியாது. எங்கள் தந்தை வயதான முதியவர்'' என்று அவர்கள் கூறினர்.

அவர்களுக்காக அவர் தண்ணீர் இறைத்துக் கொடுத்தார். பின்னர் நிழலை நோக்கிச் சென்று, "என் இறைவா! எனக்கு நீ வழங்கும் நன்மையில் தேவையுள்ளவனாக இருக்கிறேன்'' என்றார். அவர்களில் ஒருத்தி வெட்கத்துடன் நடந்து அவரிடம் வந்து, "நீர் எங்களுக்குத் தண்ணீர் இறைத்துத் தந்ததற்குரிய கூலியை உமக்குத் தருவதற்காக என் தந்தை உம்மை அழைக்கிறார்'' என்றாள். அவரிடம் வந்து (தன்னைப் பற்றிய) செய்திகளைக் கூறினார். "நீர் பயப்படாதீர்! அநீதி இழைக்கும் கூட்டத்திடமிருந்து நீர் வெற்றி பெற்று விட்டீர்'' என்று அவர் கூறினார்.

"என் தந்தையே! இவரைப் பணியில் சேர்த்துக் கொள்ளுங்கள்! ஏனெனில் வலிமையான நம்பகமானவரே நீங்கள் பணியில் சேர்ப்பதற்கு ஏற்றவர்'' என்று அவர்களில் ஒருத்தி கூறினாள். "எட்டு ஆண்டுகள் நீர் எனக்குக் கூலி வேலை செய்ய வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப் படையில் எனது இந்த இரு புதல்விகளில் ஒருத்தியை உமக்கு மண முடித்துத் தருகிறேன். பத்து ஆண்டுகளாக முழுமையாக்கினால் (அது) உம்மைச் சேர்ந்தது. நான் உமக்குச் சிரமம் தர விரும்பவில்லை. அல்லாஹ் நாடினால் என்னை நல்லவராகக் காண்பீர்'' என்று அவர் கூறினார்.

"இதுவே எனக்கும், உமக்கும் இடையே உள்ள ஒப்பந்தம். இரண்டு காலக் கெடுகளில் எதை நான் நிறைவேற்றினாலும் என் மீது குற்றமில்லை. நாம் பேசிக் கொண்டதற்கு அல்லாஹ்வே பொறுப்பாளன்'' என்று (மூஸா) கூறினார். (அல்குர்ஆன்28:22-28)

நபித்துவம் வழங்கப்படுதல்:
மூஸா அந்தக் காலக்கெடுவை முடித்து, தமது குடும்பத்தாருடன் இரவில் பயணம் மேற்கொண்ட போது தூர் மலையின் திசையில் ஒரு நெருப்பைக் கண்டார். "இருங்கள்! நான் ஒரு நெருப்பைக் கண்டேன். அது பற்றிய செய்தியையோ அல்லது நீங்கள் குளிர் காய்வதற்காக அதில் பந்தத்தையோ கொண்டு வருகிறேன்'' என்று தமது குடும்பத்தாரிடம் கூறினார்.
அவர் அங்கே வந்த போது பாக்கியம் பெற்ற இடத்தில், வலப்புறத்தில் இருக்கும் ஓடையில் உள்ள மரத்திலிருந்து "மூஸாவே! நான் தான் அகிலத்தின் இறைவனாகிய அல்லாஹ்'' என்று அழைக்கப்பட்டார். (அல்குர்ஆன்28:29-30)

இரு பெரும் அற்புதங்கள்:
உமது கைத்தடியைப் போடுவீராக! (என்றான்) அதைச் சீறும் பாம்பாகக் கண்ட போது திரும்பிப் பார்க்காது பின்வாங்கி ஓடினார். "மூஸாவே! முன்னே வாரும்! அஞ்சாதீர்! நீர் அச்சமற்றவராவீர்.''

உமது கையை உமது சட்டைப் பைக்குள் நுழைப்பீராக! எவ்விதத் தீங்கு மின்றி வெண்மையாக அது வெளிப்படும். பயத்தின் போது உமது விலாப்புறத்தை ஒடுக்கிக் கொள்வீராக! இவ்விரண்டும் உம் இறைவனிடமிருந்து ஃபிர்அவ்னுக்காகவும், அவனது சபையோருக்காகவும் உள்ள இரண்டு சான்றுகள். அவர்கள் குற்றம் புரியும் கூட்டமாக உள்ளனர். "என் இறைவா! அவர்களில் ஓர் உயிரைக் கொன்று விட்டேன். எனவே அவர்கள் என்னைக் கொன்று விடுவார்கள் என அஞ்சுகிறேன்'' என்று அவர் கூறினார்.

"என் சகோதரர் ஹாரூன் என்னை விட தெளிவாகப் பேசுபவர். எனவே அவரை என்னுடன் உதவியாக அனுப்பி வை! அவர் என்னை உண்மைப் படுத்துவார். என்னை அவர்கள் பொய்யெரெனக் கருதுவார்கள் என்று அஞ்சுகிறேன்'' (என்றும் கூறினார்). (அல்குர்ஆன்28:31-34)


துணைத் தூதராக்கப்பட்ட ஹாரூன் (அலை):
"உம் சகோதரர் மூலம் உமது தோளைப் பலப்படுத்துவோம். உங்களுக்குச் சான்றைத் தருவோம். அவர்கள் உங்களை நெருங்க மாட்டார்கள். நமது சான்று களுடன் (செல்லுங்கள்!) நீங்கள் இருவரும் உங்களைப் பின்பற்றியோருமே வெற்றி பெறுபவர்கள்'' என்று அவன் கூறினான். (அல்குர்ஆன்28:35)

நீரும், உமது சகோதரரும் எனது சான்றுகளுடன் செல்லுங்கள்! என்னை நினைப்பதில் சோர்வடையாதீர்கள்! இருவரும் ஃபிர்அவ்னிடம் செல்லுங்கள்! அவன் வரம்பு மீறி விட்டான். "அவனிடம் மென்மையான சொல்லையே இருவரும் சொல்லுங்கள்! அவன் படிப்பினை பெறலாம். அல்லது அஞ்சலாம்'' (என்றும் கூறினான்.)

"எங்கள் இறைவா! அவன் எங்களுக்குத் தீங்கிழைப்பான்; அல்லது அவன் எங்கள் மீது வரம்பு மீறுவான்; என அஞ்சுகிறோம்'' என்று இருவரும் கூறினர். "அஞ்சாதீர்கள்! நான் பார்த்துக் கொண்டும் கேட்டுக் கொண்டும் உங்களுடன் இருக்கிறேன்'' என்று அவன் கூறினான்.

"இருவரும் அவனிடம் சென்று நாங்கள் உனது இறைவனின் தூதர்கள். எனவே இஸ்ராயீலின் மக்களை எங்களுடன் அனுப்பி விடு! அவர்களைத் துன்புறுத்தாதே! உனது இறைவனிடமிருந்து உன்னிடம் சான்றைக் கொண்டு வந்துள்ளோம். நேர் வழியைப் பின்பற்றியோர் மீது நிம்மதி உண்டாகட்டும். பொய்யெனக் கருதிப் புறக்கணித்தவருக்கு வேதனை உண்டு என எங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது'' என்று கூறுங்கள்! (அல்குர்ஆன்20:42-48)

அநியாயக்காரனிடம் அழைப்புப்பணி:
தெளிவான ஒன்பது சான்றுகளை மூஸாவுக்கு வழங்கினோம். அவர்களிடம் அவர் வந்த போது (நடந்ததை) இஸ்ராயீலின் மக்களிடம் கேட்பீராக! "மூஸாவே! உம்மை சூனியம் செய்யப்பட்டவராகவே நான் கருதுகிறேன்'' என்று அப்போது அவரிடம் ஃபிர்அவ்ன் கூறினான்.

"இவற்றை வானங்களுக்கும், பூமிக்கும் அதிபதியே சான்றுகளாக அருளியுள்ளான் என்பதை நீ அறிந்திருக்கிறாய். ஃபிர்அவ்னே! நீ அழிக்கப்படுபவன் என்றே நான் கருதுகிறேன்'' என்று அவர் கூறினார். (அல்குர்ஆன்17:101-102)
"மூஸாவே! உங்களிருவரின் இறைவன் யார்?'' என்று அவன் கேட்டான். "ஒவ்வொரு பொருளுக்கும் அதற்குரிய தோற்றத்தை வழங்கி பின்னர் வழி காட்டியவனே எங்கள் இறைவன்'' என்று அவர் கூறினார்.
"முந்தைய தலைமுறையினரின் நிலை என்ன?'' என்று அவன் கேட்டான். "அது பற்றிய ஞானம் எனது இறைவனிடம் (உள்ள) பதிவேட்டில் இருக்கிறது. என் இறைவன் தவறிட மாட்டான். மறக்கவும் மாட்டான்'' என்று அவர் கூறினார். (அல்குர்ஆன்20:49-52)

ஒடுக்கப்பட்டோருக்காக உரிமைக் குரல்:
"ஃபிர்அவ்னே! நான் அகிலத்தாருடைய இறைவனின் தூதர்'' என்று மூஸா கூறினார். அல்லாஹ்வின் மீது உண்மை யைத் தவிர (வேறெதனையும்) கூறாதிருக்கக் கடமைப்பட்டவன். உங்கள் இறைவனிடமிருந்து தெளிவான சான்றை உங்களிடம் கொண்டு வந்துள்ளேன். எனவே என்னுடன் இஸ்ராயீலின் மக்களை அனுப்பு (எனவும் கூறினார்).

"நீர் உண்மை கூறுபவராக இருந்து, சான்றைக் கொண்டு வந்திருந்தால் அதைக் கொண்டு வா!'' என்று அவன் கூறினான். அப்போது அவர் தமது கைத்தடியைப் போட்டார். உடனே அது உண்மையாகவே பாம்பாக ஆனது. அவர் தமது கையை வெளியே காட்டினார். உடனே அது பார்ப்போருக்கு வெண்மையாகத் தெரிந்தது.

"இவர் தேர்ந்த சூனியக்காரராக உள்ளார். உங்கள் பூமியிலிருந்து உங்களை வெளியேற்ற இவர் எண்ணுகிறார். என்ன கட்டளையிடப் போகிறீர்கள்?'' என்று ஃபிர்அவ்னின் சமுதாயப் பிரமுகர்கள் கூறினர். (அல்குர்ஆன்7:104-110)

போட்டிக்கு வந்த சூனியக்காரர்கள்:
"இவருக்கும், இவரது சகோதரருக்கும் அவகாசம் அளிப்பீராக! (சூனியக்காரர்களைத்) திரட்டி வருவோரைப் பல ஊர்களுக்கும் அனுப்புவீராக! அவர்கள் தேர்ந்த சூனியக்காரர் ஒவ்வொருவரையும் உம்மிடம் கொண்டு வருவார்கள்'' என்றும் (ஃபிர்அவ்னிடம்) கூறினர்.

சூனியக்காரர்கள் ஃபிர்அவ்னிடம் வந்தனர். "நாங்கள் வெற்றி பெற்றால் எங்களுக்குப் பரிசு உண்டா?''என்று அவர்கள் கேட்டனர். அதற்கவன் "ஆம்! நீங்கள் (எனக்கு) நெருக்கமானவர்கள்'' என்று கூறினான்.

"மூஸாவே! (வித்தைகளை) நீர் போடுகிறீரா? நாங்களே போடட்டுமா?'' என்று கேட்டனர். "நீங்களே போடுங்கள்!'' என்று (மூஸா) கூறினார். அவர்கள் (தமது வித்தைகளைப்) போட்ட போது மக்களின் கண்களை வயப் படுத்தினார்கள். மக்களுக்கு அச்சத்தையும் ஏற்படுத்தினார்கள். பெரும் சூனியத்தை அவர்கள் கொண்டு வந்தனர்.

"உமது கைத்தடியைப் போடுவீராக!'' என்று மூஸாவுக்கு அறிவித்தோம். உடனே அது அவர்கள் செய்த வித்தையை விழுங்கியது. உண்மை நிலைத்தது. அவர்கள் செய்து கொண்டிருந்தவை வீணாயின. அங்கே அவர்கள் தோற்கடிக்கப் பட்டனர்; சிறுமையடைந்தனர். (அல்குர்ஆன்7:111-119)

இஸ்லாத்தை ஏற்ற சூனியக்காரர்கள்:
சூனியக்காரர்கள் ஸஜ்தாவில் விழுந்தனர். "அகிலத்தாரின் இறைவனாகிய மூஸா மற்றும் ஹாரூனின் இறைவனை நம்பினோம்'' என்றும் கூறினர். "நான் உங்களுக்கு அனுமதியளிப்பதற்கு முன் அவரை நம்பி விட்டீர்களா? இது, இந்த நகரத்திலிருந்து அதன் உரிமையாளர்களை வெளியேற்று வதற்காக இங்கே நீங்கள் நிகழ்த்திய சதி. (இதன் விளைவை) அறிந்து கொள்வீர்கள்!'' என்று ஃபிர்அவ்ன் கூறினான். "உங்களை மாறுகால் மாறுகை வெட்டுவேன். பின்னர் உங்கள் அனைவரையும் சிலுவையில் அறைவேன்'' (என்றும் கூறினான்) (அல்குர்ஆன்7:120-124)

ஈமானிய உறுதி:
"நாங்கள் எங்கள் இறைவனிடமே திரும்புபவர்கள்'' என்று அவர்கள் கூறினர். "எங்கள் இறைவனின் சான்றுகள் எங்களிடம் வந்த போது அதை நம்பினோம் என்பதற்காகவே எங்களை நீ தண்டிக்கிறாய்'' (என்று ஃபிர்அவ்னிடம் கூறி விட்டு) "எங்கள் இறைவா! எங்களுக்கு பொறுமையைத் தருவாயாக! எங்களை முஸ்லிம்களாக மரணிக்கச் செய்வாயாக!'' என்றனர்.

"இந்தப் பூமியில் குழப்பம் செய்வதற்காகவும், உம்மையும் உமது கடவுள்களையும் புறக்கணிப்ப தற்காகவும், மூஸாவையும் அவரது சமுதாயத்தையும் விட்டு வைக்கப் போகிறீரா?'' என்று ஃபிர்அவ்னுடைய சமுதாயத்துப் பிரமுகர்கள் கேட்டனர். "அவர்களின் ஆண் மக்களைக் கொல்வோம். பெண்(மக்)களை உயிருடன் விட்டு விடுவோம். நாம் அவர்கள் மீது ஆதிக்கம் செலுத்துபவர்கள்'' என்று ஃபிர்அவ்ன் கூறினான்.

"அல்லாஹ்விடம் உதவி தேடுங்கள்! பொறுமையாக இருங்கள்! பூமி அல்லாஹ்வுக்கே உரியது. தனது அடியார்களில் தான் நாடியோருக்கு அதை அவன் உரிமையாக்குவான். இறுதி முடிவு (இறைவனை) அஞ்சுவோர்க்கே சாதகமாக இருக்கும்'' என்று மூஸா தமது சமுதாயத்திடம் கூறினார்.

"நீர் எங்களிடம் வருவதற்கு முன்னரும், நீர் எங்களிடம் வந்த பின்னரும் தொல்லை கொடுக்கப்பட்டு வருகிறோம்'' என்று அவர்கள் கூறினர். "உங்கள் இறைவன், உங்கள் எதிரியை அழித்து உங்களைப் பூமியில் (அவர்களுக்குப்) பகரமாக்கி எவ்வாறு செயல்படுகின்றீர்கள் என்பதைக் கவனிப்பான்'' என்றும் கூறினார். (அல்குர்ஆன்7:125-129)

அல்லாஹ் வழங்கிய அடுக்கடுக்கான சோதனைகள்:
"படிப்பினை பெறுவதற்காகப் பல வகைப் பஞ்சங்களாலும் பலன்களைக் குறைப்பதன் மூலமும் ஃபிர்அவ்னுடைய சமுதாயத்தைத் தண்டித்தோம்''

அவர்களுக்கு ஏதேனும் நன்மை வந்தால் "அது எங்களுக்காக (கிடைத்தது)'' எனக் கூறுகின்றனர். அவர்களுக்குத் தீங்கு ஏற்படுமானால் மூஸாவையும் அவருடன் உள்ளவர்களையும் பீடையாகக் கருதுகின்றனர். "கவனத்தில் கொள்க. அவர்கள் பீடையாகக் கருதுவது அல்லாஹ்விடமிருந்து வந்துள்ளது. எனினும் அவர்களில் அதிகமானோர் இதனை அறிவதில்லை.''

"எங்களை வசியம் செய்வதற்காக நீர் எந்தச் சான்றைக் கொண்டு வந்த போதிலும், நாம் உம்மை நம்பப் போவதில்லை'' என்று அவர்கள் கூறினர். எனவே அவர்களுக்கு எதிராக வெள்ளப்பெருக்கு, வெட்டுக்கிளி, பேன், தவளைகள், இரத்தம் ஆகிய தெளிவான சான்றுகளை அனுப்பினோம். அவர்கள் ஆணவம் கொண்டனர். குற்றம் புரிந்த கூட்டமாகவே இருந்தனர்.

அவர்களுக்கு எதிராக, வேதனை வந்த போதெல்லாம் "மூஸாவே! உமது இறைவன் உம்மிடம் தந்த வாக்குறுதியின் படி அவனிடம் பிரார்த்திப்பீராக! எங்களை விட்டு இந்த வேதனையை நீர் நீக்கினால் உம்மை நம்புவோம். உம்முடன் இஸ்ராயீலின் மக்களை அனுப்பி வைப்போம்''என்று அவர்கள் கூறினர். அவர்கள் அடைந்து கொள்ளக் கூடிய காலக் கெடு வரை அவர் களுக்கு நாம் வேதனையை நீக்கிய உடனே அவர்கள் வாக்கு மாறினர். (அல்குர்ஆன்7:130-135)

மூஸா நபியும் பனூ இஸ்ரவேலர்களும்:
ஃபிர்அவ்ன், தங்களைத் துன்புறுத்துவான் என அவனுக்கும், அவனது சபையோருக்கும் பயந்ததால் அவரது சமுதாயத்தில் சிறு பகுதியினரைத் தவிர மற்றவர்கள் மூஸாவை நம்பவில்லை. ஏனெனில் ஃபிர்அவ்ன் அப்பூமியில் வலிமையுள்ளவன்; வரம்பு மீறுபவன்.

"என் சமுதாயமே! நீங்கள் அல்லாஹ்வை நம்பி, முஸ்லிம்களாக இருந்தால் அவனையே சார்ந்திருங்கள்!'' என்று மூஸா கூறினார். "அல்லாஹ்வையே சார்ந்து விட்டோம். எங்கள் இறைவா! அநீதி இழைத்த கூட்டத்தின் கொடுமைக்கு எங்களை ஆளாக்கி விடாதே!'' என்று அவர்கள் கூறினர். "உனது அருளால் (உன்னை) மறுக்கும் கூட்டத்திடமிருந்து எங்களைக் காப்பாற்றுவாயாக!'' (என்றும் கூறினர்)

"இருவரும், உங்கள் சமுதாயத்துக்காக எகிப்து நகரில் வீடுகளை அமைத்துக் கொடுங்கள்! உங்கள் வீடுகளை ஒன்றையொன்று எதிர் நோக்கும் வகையில் ஆக்குங்கள்! தொழுகையை நிலை நாட்டுங்கள்! நம்பிக்கை கொண்டோருக்கு நற்செய்தி கூறுவீராக!'' என்று மூஸாவுக்கும் அவரது சகோதரருக்கும் தூதுச் செய்தி அறிவித்தோம்.

"எங்கள் இறைவா! ஃபிர்அவ்னுக்கும், அவனது சபையோருக்கும் இவ்வுலக வாழ்க்கையில் அலங்காரத்தையும், செல்வங்களையும் அளித்திருக்கிறாய்! எங்கள் இறைவா! உன் பாதையிலிருந்து அவர்களை வழி கெடுக்கவே (இது பயன் படுகிறது). எங்கள் இறைவா! அவர்களின் செல்வங்களை அழித்து, அவர்களின் உள்ளங்களையும் கடினமாக்குவாயாக! துன்புறுத்தும் வேதனையைக் காணாமல் அவர்கள் நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்'' என்று மூஸா கூறினார். "உங்கள் இருவரின் பிரார்த்தனை ஏற்கப்பட்டது. இருவரும் உறுதியாக நில்லுங்கள்! அறியாதோரின் பாதையை இருவரும் பின்பற்றாதீர்கள்!'' என்று (இறைவன்) கூறினான். (அல்குர்ஆன்10:83-89)

ஃபிர்அவ்னின் ஆணவம்:
மூஸாவை நமது சான்றுகளுடனும், தெளிவான ஆற்றலுடனும் ஃபிர்அவ்ன், ஹாமான், காரூன் ஆகியோரிடம் அனுப்பினோம். "பெரும் பொய்யரான சூனியக்காரர்'' என்று அவர்கள் கூறினர். (அல்குர்ஆன்40:23-24)

"தன்னிடமிருந்து நேர்வழியைக் கொண்டு வந்தவன் யார் என்பதையும், யாருக்கு நல்ல முடிவு ஏற்படும் என்பதையும் என் இறைவன் நன்கறிந்தவன். அநீதி இழைத்தோர் வெற்றி பெற மாட்டார்கள்''என்று மூஸா கூறினார். "பிரமுகர்களே! என்னைத் தவிர உங்களுக்கு வேறு கடவுளை நான் அறியவில்லை'' என்று ஃபிர்அவ்ன் கூறினான். (அல்குர்ஆன்28:37-38)

நானே உங்களின் மிகப் பெரிய இறைவன் என்றான். (அல்குர்ஆன்79:24)

நம்மிடமிருந்து அவர்களிடம் உண்மையை அவர் கொண்டு வந்த போது "இவரை நம்பியோரின் ஆண் மக்களைக் கொன்று விடுங்கள்! அவர்களின் பெண்களை உயிருடன் விட்டு விடுங்கள்!'' எனக் கூறினர். (நம்மை) மறுப்போரின் சூழ்ச்சி தவறிலேயே முடியும்.

"மூஸாவைக் கொல்வதற்கு என்னை விட்டு விடுங்கள்! அவர் தனது இறைவனை அழைக்கட்டும். உங்கள் மார்க்கத்தை அவர் மாற்றி விடுவார் என்றும் பூமியில் குழப்பத்தைத் தோற்றுவிப்பார் என்றும் அஞ்சுகிறேன்'' என்று ஃபிர்அவ்ன் கூறினான்.

"விசாரிக்கப்படும் நாளை நம்பாத ஒவ்வொரு அகந்தை கொண்டவனை விட்டும் உங்கள் இறைவனிடமும், எனது இறைவனிடமும் நான் பாதுகாப்புத் தேடுகிறேன்'' என்று மூஸா கூறினார். (அல்குர்ஆன்40:23-27)

இறைத்தூதருக்கு ஆதரவாகக் குரல் கொடுத்த இறை நம்பிக்கையாளர்:
"என் இறைவன் அல்லாஹ்வே'' என்று கூறும் ஒரு மனிதரைக் கொல்லப் போகிறீர்களா? உங்கள் இறைவனிடமிருந்து தெளிவான சான்றுகளை அவர் உங்களிடம் கொண்டு வந்துள்ளார். அவர் பொய்யராக இருந்தால் அவரது பொய் அவரையே சேரும். அவர் உண்மையாளராக இருந்தால் அவர் உங்களுக்கு எச்சரிப்பதில் ஏதேனும் உங்களுக்கு ஏற்பட்டு விடும். வரம்பு மீறும் பெரும் பொய்யருக்கு அல்லாஹ் நேர்வழி காட்ட மாட்டான்'' என்று ஃபிர்அவ்னுடைய சமுதாயத்தினரில் தனது நம்பிக்கையை மறைத்துக் கொண்டிருந்த நம்பிக்கை கொண்ட ஒருவர் கூறினார்.

"என் சமுதாயமே! இன்றைய தினம் ஆட்சி உங்களிடமே இருக்கிறது. பூமியில் மிகைத்து இருக்கிறீர்கள். அல்லாஹ்வின் வேதனை நமக்கு வந்து விடுமானால் அதிலிருந்து நம்மைக் காப்பாற்றுபவன் யார்?'' (எனவும் அவர் கூறினார்) அதற்கு ஃபிர்அவ்ன் "நான் (சரி) காண்பதையே உங்களுக்குக் காட்டுகிறேன். நேரான வழியைத் தவிர (வேறு எதையும்) நான் உங்களுக்குக் காட்டவில்லை'' என்று கூறினான்.

என் சமுதாயமே! மற்ற சமுதாயத்தினரின் கதியைப் போன்றும், நூஹுடைய சமுதாயம், ஆது சமுதாயம், ஸமூது சமுதாயம் மற்றும் அவர்களுக்குப் பின் வந்தோருக்கு ஏற்பட்ட கதி போன்றும் உங்கள் விஷயத்திலும் நான் அஞ்சுகிறேன் என்று நம்பிக்கை கொண்ட (அந்த) மனிதர் கூறினார். அல்லாஹ் அடியார்களுக்கு அநியாயத்தை நாடுபவன் இல்லை.

என் சமுதாயமே! அழைக்கப்படும் நாளை உங்கள் விஷயத்தில் நான் அஞ்சுகிறேன். அந்நாளில் புறங்காட்டி ஓடுவீர்கள். அல்லாஹ்விடமிருந்து உங்களைக் காப்பவன் இருக்க மாட்டான். யாரை அல்லாஹ் வழி கேட்டில் விட்டு விட்டானோ அவனுக்கு நேர் வழி காட்டுபவன் இல்லை.

முன்னர் யூஸுஃப் உங்களிடம் தெளிவான சான்றுகளைக் கொண்டு வந்தார். அவர் உங்களிடம் கொண்டு வந்ததில் சந்தேகத்திலேயே இருந்தீர்கள். அவர் மரணித்ததும் "இவருக்குப் பின் எந்தத் தூதரையும் அல்லாஹ் அனுப்பவே மாட்டான்'' எனக் கூறினீர்கள். வரம்பு மீறி சந்தேகம் கொள்பவனை அல்லாஹ் இப்படித் தான் வழி கெடுக்கிறான்.

அவர்கள் தங்களுக்கு எந்த ஆதாரமும் கிடைக்காமல் அல்லாஹ்வின் வசனங்களில் தர்க்கம் செய்கின்றனர். அல்லாஹ்விடமும், நம்பிக்கை கொண்டோரிடமும் இது பெரும் கோபத்தை ஏற்படுத்தக் கூடியது. இவ்வாறே பெருமையடித்து அடக்கியாளும் ஒவ்வொரு உள்ளத்தின் மீதும் அல்லாஹ் முத்திரையிடுகிறான்.

"ஹாமானே! எனக்காக உயர்ந்த கோபுரத்தை எழுப்பு! வழிகளை, வானங்களின் வழிகளை அடைந்து மூஸாவின் இறைவனை நான் பார்க்க வேண்டும். அவரைப் பொய் சொல்பவராகவே நான் கருதுகிறேன்'' என்று ஃபிர்அவ்ன் கூறினான். இவ்வாறே ஃபிர்அவ்னுக்கு அவனது தீய செயல் அழகாக்கிக் காட்டப் பட்டது. (நேர்) வழியை விட்டும் அவன் தடுக்கப்பட்டான். ஃபிர்அவ்னின் சூழ்ச்சி அழிவில் தான் முடிந்தது.

"என் சமுதாயமே! என்னைப் பின்பற்றுங்கள்! உங்களுக்கு நேர் வழி காட்டுகிறேன்'' என்று நம்பிக்கை கொண்ட ஒருவர் கூறினார். "என் சமுதாயமே! இவ்வுலக வாழ்க்கை அற்ப சுகமே. மறுமையே நிலையான உலகம்.'' யாரேனும் ஒரு தீமையைச் செய்தால் அது போன்றதைத் தவிர அவர் கூலி கொடுக்கப்பட மாட்டார். ஆண்களிலோ, பெண்களிலோ நம்பிக்கை கொண்டவராக நல்லறம் செய்வோர் சொர்க்கத்தில் நுழைவார்கள். அதில் கணக்கின்றி வழங்கப்படுவார்கள்.

என் சமுதாயமே! எனக்கென்ன? நான் உங்களை வெற்றிக்கு அழைக்கிறேன். நீங்களோ என்னை நரகிற்கு அழைக்கிறீர்கள்.

"நான் அல்லாஹ்வை மறுத்து எனக்கு அறிவில்லாத ஒன்றை அல்லாஹ்வுக்கு இணை கற்பிக்க வேண்டும்'' என்று என்னை அழைக்கிறீர்கள். நானோ உங்களை மிகைத்தவனாகிய மன்னிப்பவனிடம் அழைக்கிறேன்.

என்னை எதை நோக்கி அழைக்கிறீர்களோ அதற்கு இவ்வுலகிலும் மறுமையிலும் பிரார்த்திக்கப்படும் தகுதி இல்லை என்பதிலும், நாம் திரும்புவது அல்லாஹ்விடமே என்பதிலும், வரம்பு மீறுவோர் தான் நரகவாசிகள் என்பதிலும் எந்தச் சந்தேகமும் இல்லை. நான் உங்களுக்குக் கூறுவதைப் பின்னர் உணர்வீர்கள்! எனது காரியத்தை அல்லாஹ்விடம் ஒப்படைக்கிறேன். அல்லாஹ் அடியார்களைப் பார்ப்பவன். (என்றும் அவர் கூறினார்) (அல்குர்ஆன்40:28-44)

கடல் பிளந்தது! கொடியவன் கொல்லப்பட்டான்!:
அப்பூமியில் பலவீனர்களாகக் கருதப்பட்டோர் மீது அருள் புரியவும், அவர்களைத் தலைவர்களாக்கவும்,அப்பூமிக்கு உரிமையாளர்களாக்கவும், அப்பூமியில் அவர்களுக்கு ஆதிக்கத்தை ஏற்படுத்தவும்,ஃபிர்அவ்ன், ஹாமான் மற்றும் அவ்விருவரின் படையினரும் எதை அஞ்சினார்களோ அதை அவர்களுக்குக் காட்டவும் நாடினோம். (அல்குர்ஆன்28:5,6)

காலையில் அவர்களைப் பின் தொடர்ந்தனர். இரு கூட்டத்தினரும் நேருக்கு நேர் பார்த்துக் கொண்ட போது "நாம் பிடிக்கப்பட்டு விடுவோம்'' என்று மூஸாவின் சகாக்கள் கூறினர். "அவ்வாறு இல்லை. என்னுடன் என் இறைவன் இருக்கிறான். அவன் எனக்கு வழி காட்டுவான்'' என்று அவர் கூறினார். "உமது கைத்தடியால் கடலில் அடிப்பீராக'' என்று மூஸாவுக்கு அறிவித்தோம். உடனே அது பிளந்தது. ஒவ்வொரு பிளவும் பெரும் மலை போன்று ஆனது. அங்கே மற்றவர்களையும் நெருங்கச் செய்தோம். மூஸாவையும், அவருடன் இருந்த அனைவரையும் காப்பாற்றினோம். பின்னர் மற்றவர்களை மூழ்கடித்தோம். (அல்குர்ஆன்26:60-66)

காலம் கடந்த ஞானோதயம்:
இஸ்ராயீலின் மக்களைக் கடல் கடக்கச் செய்தோம். ஃபிர்அவ்னும், அவனது படையினரும் அக்கிரமமாகவும், அநியாயமாகவும் அவர்களைப் பின் தொடர்ந்தனர். முடிவில் அவன் மூழ்கும் போது "இஸ்ராயீலின் மக்கள் நம்பியவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை என நம்புகிறேன்; நான் முஸ்லிம்'' என்று கூறினான். இப்போது தானா? (நம்புவாய்!) இதற்கு முன் பாவம் செய்தாய்; குழப்பம் செய்பவனாக இருந்தாய். (அல்குர்ஆன்10:90-91)

அழியாத அத்தாட்சி:
உனக்குப் பின் வருவோருக்கு நீ சான்றாக இருப்பதற்காக உன் உடலை இன்று பாதுகாப்போம். (என்று கூறினோம்.) மனிதர்களில் அதிகமானோர் நமது சான்றுகளை அலட்சியம் செய்வோராகவே உள்ளனர். இஸ்ராயீலின் மக்களைச் சிறந்த நிலப்பரப்பில் குடியமர்த்தினோம். (அல்குர்ஆன்10:92-93)


படைத்தவனின் வாக்குறுதி பலித்த நாள்:
பனூ இஸ்ரவேலர்களை ஃபிர்அவ்ன் கொடுமைப் படுத்திய போது அவர்கள் மூஸா (அலை) அவர்களிடம் சென்று முறையிட்டனர். அப்போது மூஸா (அலை) அவர்கள் கூறிய வார்த்தைகள் இதோ: "உங்கள் இறைவன், உங்கள் எதிரியை அழித்து உங்களைப் பூமியில் (அவர்களுக்குப்) பகரமாக்கி "எவ்வாறு செயல்படுகின்றீர்கள்' என்பதைக் கவனிப்பான்'' என்று (மூஸா) கூறினார். (அல்குர்ஆன்7:129)

பலவீனர்களாகக் கருதப்பட்டு வந்த சமுதாயத்தை பாக்கியம் செய்த பூமியின் கிழக்கு மற்றும் மேற்குப் பகுதிகளுக்கு உரிமையாளர் களாக்கினோம். இஸ்ராயீலின் மக்கள் பொறுமையைக் கைக்கொண்டதால் உமது இறைவனின் அழகிய வாக்கு அவர்கள் விஷயத்தில் முழுமையாக நிறைவேறியது. ஃபிர்அவ்னும் அவனது சமுதாயத்தினரும் தயாரித்தவற்றையும், அவர்கள் உயரமாக எழுப்பியவற்றையும் அடியோடு அழித்தோம். (அல்குர்ஆன்7:137)

மூஸா (அலை) அவர்கள் மூலமாக இறைவன் பனூ இஸ்ரவேலர்களுக்கு அளித்த அந்த வாக்குறுதி நிறைவேறிய அந்த நன்னாள் தான் ஆஷூரா நாள் எனப்படும் முஹர்ரம் பத்தாம் நாளாகும். அந்தச் சிறப்பு நாள் இன்று முஸ்லிம்களால் கருப்பு நாளாகச் சித்தரிக்கப்பட்டு விட்டது.

திருக்குர்ஆன் கூறும் இந்த மாபெரும் வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்த நாள் கர்பலா நிகழ்ச்சியில் கரைந்து போய் விட்டது. ஆஷூரா நாள் என்றாலே ஹஸன், ஹுசைன் (ரலி) அவர்களுக்குச் சொந்தமான நாள் என்பது போன்ற மாயை மக்களிடம் தோற்றுவிக்கப்பட்டுவிட்டது.

இஸ்லாத்தில் வருட ஆரம்பமான முஹர்ரம் மாதம் அதிலும் குறிப்பாக ஆஷுரா நாள், பல்வேறு நபிமார்களின் சம்பவத்தில் தன்னை ஈடுபடுத்தி கொண்டுள்ளது. இந்த முஸ்லிம் சமுதாயம், உயிரினும் மேலான நபிகள் நாயகம் ஸல்... அவர்களை பின்பற்றும் இந்த சமூதாயத்திற்கு இந்த மாதம் எதை தந்தது.  நபிகள் நாயகம் (ஸல்) அவர்களால் ஆஷுரா நாளில் இரண்டு நோன்புகளை தந்தது. வேறு என்ன தந்தது? வேறு என்ன? இந்த சமூதாயத்திற்கு தலை குனிவை தான் தந்தது! காரணம் என்ன?

இந்த சமூதாயத்தில் யாரை கண்ணியப்படுத்த வேண்டும் என்று கூறப்பட்டதோ, யாரை நேசிப்பது ஈமான் என்று கூறப்பட்டதோ, யாருக்காக தொழுகையில் சலவாத் ஓதப்படுகின்றதோ, யார் சுவனத்து இளைஞர்களின் தலைவர் என்று நபிகளாரால் சொல்லப்பட்டதோ,
அல்லாஹ்வை நேசியுங்கள், என்னை நேசிப்பத்தின் மூலம் அல்லாஹ்வை நேசம் பெறுங்கள், என்னுடைய குடும்பத்தவர்களை நேசிப்பத்தின் மூலம் என் நேசத்தை பெறுங்கள் என்று கூறப்பட்டதோ, உங்களுக்கு அவர்களையே கொன்று சந்தோஷித்தால் பெருமையா? தலை குனிவா? அதுவும் முஸ்லிம்கள் என்ற பெயர் தாங்கிகள் மூலம் அது நடந்தது என்றால் கியாமத் நாள் வரை அந்த கரை நமது உடம்பில் படர்ந்து கொண்டு தான் இருக்கின்றது.

கர்பலா:
இற்றைக்கு 1400 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு சோக நிகழ்வு அது. நீதியும் அநீதியும் சத்தியமும் அசத்தியமும் மோதிக் கொண்ட நாள் அது. மனச்சாட்சிகளை உருகவைக்கும் அந்த நிகழ்வுதான் கர்பலா நிகழ்வு. ஹிஜ்ரி 61ம் ஆண்டு அண்ணல் நபி (ஸல்) அவர்களின் பேரர் இமாம் ஹூசைன்(ரலி) அவர்களும் அவர்களின் குடும்பத்தினரும் பனீ உமையா கூட்டத்தினரால் கர்பலா எனும் பாலைவனத்தில் மிகபரிதாபகரமான முறையில் படுகொலை செய்யப்பட்டார்கள்.

நபியவர்களினதும், தோழர்களினதும் அளப்பெரிய தியாகங்களுக்கும் அயராத உழைப்பிற்கு மத்தியில்; வளர்த்தெடுக்கப்பட்ட புனித இஸ்லாம், உமையாக்களினால் மாசுபடுத்தப்பட்டது.
குர்ஆனின்; விளக்கங்களும் நபியவர்களின் சுன்னாவும் அக்கொடியவர்களின் ஆட்சிக்கும் அதிகாரத்திற்கும் சாதகமாக வியாக்கியானம் செய்யப்பட்டன.

அநீதிகளும் அனாச்சாரங்களும் இஸ்லாத்தின் பெயரால் அரங்கேற்றப்பட்டன. இஸ்லாமிய நல்லொழுக்கங்களும் அதன் பெருமான விழுமியங்களும் சிதைக்கப்பட்டு சீரழிக்கப்பட்டன. நபியவர்களின் மார்க்கம் அழிக்கப்படும் அந்த அபாயகர நிலையை கண்டு அதனைப்பாதுகாக்கும் முழுநோக்குடன் இமாம் ஹூசைன்(ரலி) அவர்கள் கர்பலா நோக்கி புறப்பட்டார்கள். அவர்கள் தனது பயனத்தின் நோக்கம் பற்றிக் கூறுகையில் நான் சமூகத்தில் குளப்பத்தை ஏற்படுத்த இப்பயனத்தை மேற்கொள்ளவில்லை. எனது பாட்டனாரினது மார்க்கத்தில் சீர்திருத்தத்தை மேற்கொண்டு நன்மையை ஏவி தீமையைத்தடுக்கவே இதனை செய்கிறேன்எனக் கூறினார்கள். நபியவர்களின் மார்க்கம் யஸீதினால் குளிதோன்றி புதைக்கப்படுவதை சகித்துக் கொள்ளாத இமாம் ஹூசைன் அவர்கள் தனது குடும்பத்தாருடனும் தனது போராட்டத்திற்கு உதவிக்கரம் நீட்ட முன்வந்த வாக்கு மீறாத தோழர்களுடனும் கர்பலாவுக்கு வருகை தந்து அநியாயக்காரர்களுடன் போராடி தனதுயிரையும் தனது குடும்பம் மற்றும் தோழர்களின் உயிர்களையும் அல்லாஹ்வின் பாதையிலே தியாகம் செய்தார்கள்.

நபி (ஸல்) அவர்களின் பேரப்பிள்ளையான ஹுஸைன் (ரலி) அவர்களின் மரணம் (கொலை) யஸீத் பின் முஆவியா என்பவரால் நடத்தப்படுகின்றது. யஸீத் பின் முஆவியா தனி மனிதராக நின்று இந்த காரியத்தில் ஈடுபடவில்லை. அந்ந சம்பவம் நடக்கும் போது சம்பவம் நடந்த கர்பலா பகுதியில் யஸீத் பின் முஆவியா என்பவரே ஆளுனராக இருந்தார். அவருடைய ஆளுமைப் பகுதிகளுக்கு எதிராகவும் அவரது அதிகாரத்துக்கு எதிராகவும் நடந்தேறிய குழப்பங்களிலேயே ஹுஸைன் (ரலி) அவர்கள் கொல்லப்படுகிறார்கள். (முஹர்ரம் மாதம் 10 நாள் இந்த சம்பவம் நடக்கின்றது)

நபி (ஸல்) அவர்களின் அன்புக்கும் அளவுகடந்த நேசத்துக்கும் உரிய பேரரான இமாம் ஹுஸைன் (அலை) அவர்களும், பெண்கள் சிறுவர்கள் அடங்கிய அவர்களது உறவினர்களும் உமையா ஆட்சியாளனான யசீதினால் கர்பலாத் திடலில் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டு, ஈட்டி முனையில் சிரசுகள் குத்தி உயர்த்தப்பட்டு ஊர்வலம் எடுத்துச் செல்லப்பட்ட ஒரு கோரமான நிகழ்வை எதிர்கொண்ட கசப்பான அனுபவம் இந்த முஹர்ரம் மாதத்துக்கு உண்டு. வரலாற்றிலே ஒரு திருப்புமுனையாக அமைந்து, குறிப்பிட்டதொரு சகாப்தத்தையே உருவாக்கிய கர்பலா நிகழ்வில் பின்னிப் பிணைந்து காணப்படும் இமாம் ஹுஸைன் (அலை) அவர்களின் வாழ்க்கைத் தடங்கள் மிகுந்த அனுதாபத்திற்குரியனவாகும்.

இமாம் ஹுஸைன் (அலை) அவர்கள், சிறந்த சிந்தனையுடையோராயும் துணிச்சல் மிக்கோராயும் துன்பங்களையும் ஆபத்துகளையும் எதிர்நோக்கும் வல்லமை பெற்றோராயும் விளங்கினார்கள். சந்தர்ப்ப சூழ்நிலைகளால் உயிரையே இழக்க நேரிட்டாலும் அசைக்க முடியாத மனவுறுதியோடு எதையும் தாங்கும் மனத்திண்மை படைத்தோராய்த் திகழ்ந்தார்கள். இஸ்லாமியக் கொள்கைகளை, கோட்பாடுகளைக் காப்பாற்றிக் கொள்வதிலே அன்னார் காட்டிய வீரமும் மனவுறுதியும் சரியான தீர்மானங்களும் சிலாகிக்கத்தக்கவை.

வெறும் அரசியல் நோக்கிற்காக அல்லாமல், தூர்ந்து செல்லும் இஸ்லாமியத்தைப் பாதுகாக்கும் உயர் இலட்சியத்துடன் இமாம் ஹுஸைன் (அலை) அவர்கள், இந்நிகழ்வில் பங்கேற்றார்கள். ஆட்சியாளர்களை சீர்திருத்தம் செய்வதற்கு சமாதான முயற்சியைப் பயன்படுத்த முனைந்தார்கள். ஆனாலும், நிராயுதபாணியாக நின்ற அவர்களை, உமையாக்கள் கொடூரமாகக் கொன்றனர். தமது ஆட்சிக்கு எதிரான, அல்லது தமது ஆட்சியை விரும்பாத சக்திகளைக்களையும் உமையாக்களின் திட்டத்திற்கு இமாம் ஹுஸைனும் பலியாகிப் போனார்கள். முஹர்ரம் மாதம் பத்தாம் நாள் ஆஷுரா என்று வழங்கப் படுகின்றது. அந்த நாளை நபி (ஸல்) அவர்கள் சிறப்பித்துக் கூறியுள்ளனர். அதன் சரித்திரப் பின்னணியை நாம் காண்போம்.

"நபி (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வந்தபோது யூதர்கள் ஆஷுரா தினத்தில் நோன்பு நோற்று வந்ததைக் கண்டனர். அது பற்றி நபி (ஸல்) அவர்கள் யூதர்களிடம் வினவிய போது "மூஸா (அலை) அவர்களையும், இஸ்ரவேலர்களையும் அவர்களின் எதிரி (பிர்அவ்ன்) இடமிருந்து அல்லாஹ் காப்பாற்றிய சிறந்த நாளாகும்" என்று யூதர்கள் காரணம் கூறினர். "உங்களை விட மூஸா (அலை) அவர்களுக்கு நான்தான் அதிக உரிமை உள்ளவன் என்று நபி (ஸல்) அவர்கள் கூறி, அன்று நோன்பு வைக்குமாறும் உத்தரவிட்டனர். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரழி) நூல்கள்: புகாரி 3397, முஸ்லிம்.

இந்தக் கட்டளை மூலம் ஆஷுரா தினத்தில் நோன்பு நோற்பது கட்டாயக் கடமை என்று தெரிந்திருந்தாலும் ஆஷுரா நோன்புக் கட்டாயக் கடமை அல்ல. காரணம் நபி (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வந்தபோது - ரமழான் நோன்பு கடமையாக்கப்படாத நேரத்தில் - இந்த நோன்பைக் கடமையாக ஆக்கி இருந்தனர். ரமழான் நோன்புக் கடமையாக்கப்பட்டபின் ஆஷுரா நோன்பைக் கட்டாயம் நோற்க வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் வலியுறுத்தவில்லை.

"நபி (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வந்தபோது ஆஷுரா தினத்தில் நோன்பு நோற்கும்படி கட்டளையிட்டிருந்தனர். ரமழான் நோன்பு கடமையாக்கப்பட்ட பின், "விரும்பியவர் இந்த ஆஷுரா தினத்தில் நோன்பு நோற்கட்டும்! விரும்பாதவர் விட்டு விடலாம்" என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அன்னை ஆயிஷா (ரழி) நூல்கள்: புகாரி 1592, முஸ்லிம். இதே கருத்தை முஆவியா (ரழி) அவர்களும் அறிவிக்கின்றார்கள். (புகாரி, முஸ்லிம்)

"ஆஷுரா தினத்தை யூதர்கள் கண்ணியப்படுத்தி நோன்பு நோற்கின்றனர்" என்று நபி (ஸல்) அவர்களிடம் சில நபித்தோழர்கள் கூறியபோது, "அடுத்த ஆண்டு நான் உயிரோடு இருந்தால் (யூதர்களுக்கு மாற்றமாக) ஒன்பதாம் நாளும் நோன்பு நோற்பேன்" என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆனால் அடுத்த ஆண்டு இந்த தினத்திற்கு முன்பே நபி(ஸல்) அவர்கள் வபாத்தாகி விட்டார்கள்." அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ்(ரழி) நூல்கள்: முஸ்லிம் 1916, 1917, அஹ்மத், அபூதாவூது.

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: ஆஷூரா எனும் இந்த நாளையும் (ரமலான்) என்னும் இந்த மாதத்தையும் தவிர வேறெதையும் ஏனையவற்றைவிடச் சிறப்பித்து தேர்ந்தெடுத்து நபி (ஸல்) அவர்கள் நோன்பு நோற்பதை நான் பார்த்ததில்லை. நூல்: புகாரி 2006

 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: முஹர்ரம் பத்தாவது நாளில் (ஆஷூரா) நோன்பு நோற்பதை அதற்கு முந்தைய ஓராண்டின் பாவத்திற்குப் பரிகாரமாக அல்லாஹ் ஆக்குவான் என நான் எதிர்பார்க்கிறேன். அறிவிப்பவர்: அபூகதாதா (ரலி) நூல்: முஸ்லிம் 1976

 நபி (ஸல்) அவர்களிடம் ஆஷூரா நோன்பு பற்றிக் கேட்கப்பட்டது. அதற்கு, அது கடந்த ஆண்டின் பாவத்திற்குப் பரிகாரமாகும் என்றார்கள். அறிவிப்பவர்: அபூகதாதா (ரலி) நூல்: முஸ்லிம் 1977

மேற்கூறிய நபிமொழிகள் மூலம் முஹர்ரம் மாதம் ஒன்பதாம் நாளும், பத்தாம் நாளும், நோன்பு ஸுன்னத் என்பதை நாம் உணரலாம். இதுதான் ஆஷுரா நாளின் சிறப்பு. நோன்பு வைப்பவர்கள் பிறை 9-ம், 10-ம் வைக்க வேண்டும், பத்திலும் பதினொன்றிலும் வைக்க எது வித ஆதாரமுமில்லை.
இதே ஆஷுரா தினத்தில் நபி(ஸல்) அவர்கள் திருப்பேரர் ஹுஸைன் (ரழி) அவர்கள் கொல்லப்பட்டது, இஸ்லாமிய வரலாற்றில் ஒரு சோகமான நிகழ்ச்சியாகும். கல் நெஞ்சமும் கரைந்துவிடக் கூடிய அந்த நிகழ்ச்சி இந்த தினத்தில்தான் ஏற்பட்டது. இஸ்லாமியன் மட்டுமல்ல, மனிதாபிமானம் உள்ள எவரும் அந்த நிகழ்ச்சியைக் கேள்வியுறும்போது கண்கலங்காமல் இருக்க முடியாது.

'கர்பலா' என்ற இடத்தில் நபி (ஸல்) அவாகளின் பேரர் ஹுஸைன் (ரழி) அவர்கள் கொல்லப்பட்டார்கள் என்பதற்காக, நபி (ஸல்) அவர்கள் சிறப்பித்துக் கூறிய ஆஷுரா நாளை சோகமயமாக ஆக்கிக் கொள்ள நமக்கு அனுமதி கிடையாது. இந்த நாளில் இரண்டு போராட்டங்கள் நடந்தன. ஒன்று பிர்அவுனுக்கும், மூஸா (அலை) அவர்களுக்கும் நடந்தது. அதில் மூஸா (அலை) வென்றார்கள். அதே ஆஷுரா நாளில் நடந்த இன்னொரு போராட்டத்தில் இமாம் ஹுஸைன் (ரழி) அவர்கள் ஷஹீதாக்கப்பட்டார்கள்.

ஓர் உண்மையான முஸ்லிம் அந்த நாளில் நடந்த நல்லதை நினைத்துத் தன்னைத் தேற்றிக் கொள்ள வேண்டும். நபி (ஸல்) அவர்கள் காட்டிய வழிமுறைப்படி அந்த நாளில் நோன்பு நோற்க வேண்டும். கர்பலா நிகழ்ச்சிகூட ஒரு நன்மைதான் என்று கருத வேண்டும். அல்லாஹ்வுக்காகத் தன்னுயிரை அர்ப்பணம் செய்த தியாகிகள் என்போர் நபிமார்களுக்கு அடுத்தபடியாக உயர்ந்த பதவியை அடைவார்கள் என்பது எவரும் அறிந்த உண்மை. தனது நபியின் திருப்பேரருக்கு அந்த மகத்தான அந்தஸ்தை அல்லாஹ் வழங்க நாடி அவர்களை ஷஹீதாக்கி விட்டான். அந்த மாபெரும் அந்தஸ்தை ஹுஸைன் (ரழி) அடைவதற்குக் கர்பலாதான் காரணமாக இருந்தது.

இந்த உலக வாழ்வை மட்டும் குறிக்கோளாகக் கொண்டவர்கள்தாம், இதுபோன்ற சந்தர்ப்பங்களில் அழுது புலம்புவர். மறுஉலக வாழ்க்கை உண்டு என்பதில் உறுதியான நம்பிக்கை கொண்டோர், "நாம் மறு உலக வாழ்வில் ஹுஸைன் (ரழி) அவர்களை மிக உயர்ந்த அந்தஸ்துடன் சந்திக்க இருக்கிறோம்" என்று, தம்மைத் தேற்றிக் கொள்வர்.

"தங்களுக்கு ஏதேனும் முஸீபத் (சோதனை) ஏற்படும்போது நாங்களும் அல்லாஹ்வுக்கு உரியவர்களே; நாங்கள் அவனிடமே திரும்பிச் செல்ல இருக்கிறோம் என்று கூறி பொறுமையை மேற்கொண்டவர்களுக்கு (நபியே!) நீர் நற்செய்தி கூறுவீராக!" (அல்குர்ஆன் 2:156) என்று அல்லாஹ் கூறியதற்கிணங்க வாழும்போதுதான் இறைவனின் திருப் பொருத்தத்துக்கு நாம் ஆளாக முடியும்.

அதற்காக, ஒப்பாரி வைப்பதும், மாரடித்துக் கொள்வதும், பஞ்சா எடுப்பதும், தீ மிதிப்பதும், ஊர்வலங்கள் நடத்துவதும், யஸீதையும் மற்றவர்களையும் ஏசுவதும், நமக்குத் தேவையில்லாதவற்றைப் பேசுவதும், ஒரு முறை ஹுஸைன் (ரழி) அவர்கள் கொல்லப்பட்டதை வர்ணனையுடன் பல பொய்களைக் கலந்து சொல்லி ஆண்டுதோறும் அவர்களைக் கொலை செய்வதும், இஸ்லாம் காட்டிய மரபு அல்ல.

"கன்னத்தில் அறைந்து கொண்டு, சட்டைகளைக் கிழித்துக் கொண்டு அறியாமைக் காலத்துக் கூப்பாடு போட்டுக் கொண்டிருப்பவன் நம்மைச் சேர்ந்தவனில்லை" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ்(ரழி), ஆதாரம்: புகாரி, முஸ்லிம், திர்மிதி, இப்னுமாஜா, அஹ்மத்.

"உள்ளத்தினாலும் கண்களாலும் சோகத்தை வெளிப்படுத்துவது இறைவன் புறத்திலிருந்து உள்ளதாகும். கைகளாலும் நாவினாலும் சோகத்தைக் காட்டுவது ஷைத்தானின் வேலையாகும்" என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரழி) நூல்: அஹ்மத்

இன்றைக்கு நடந்து கொண்டிருக்கின்ற பெரும்பாலான நிகழ்ச்சிகள் அறியாமைக் காலத்து நடைமுறைகள்தாம். இவற்றைச் செய்வதன் மூலம் நபி (ஸல்) அவர்களைச் சேராதவர்களாக நாம் ஆகிவிடாமல் நம்மை அல்லாஹ் காப்பாற்றுவானாக. இது அல்லாஹ்வோ, அவனது தூதரோ காட்டித் தராத விஷயமாகும். மேலும் இது மூட நம்பிக்கையைத் தவிர வேறில்லை. அல்லாஹ் ஹலாலாக்கிய திருமண உறவைக்கூட சில நாட்கள் ஹராமாக்க எவருக்கும் உரிமை இல்லை. இவ்வாறு செய்வதன் மூலம், அல்லாஹ்வின் அதிகாரத்தில் நேரடியாகத் தலையிட்ட மாபெரும் குற்றத்திற்கு நாம் ஆளாக நேரிடும்.

மூஸா நபியை அல்லாஹ் இந்த நாளில்தான் காப்பாற்றினான் என்று எண்ணிக் கொண்டு, அந்தப் பெரும் பாக்கியத்துக்கு நன்றி செலுத்தும் பொருட்டு நபி (ஸல்) அவர்கள் காட்டிய பிரகாரம் ஒன்பது, பத்து ஆகிய இரு நாட்களும் நோன்பு வைத்து ஏனைய சடங்குகளை விட்டொழிப்போமாக!


ஏன் நடந்தது இந்த கர்பலா?
நேர்வழி பற்றி நடந்த சஹாபா பெருமக்களின் ஆட்சிக்காலத்தில் இஸ்லாத்தில் எப்படியோ நுழைந்து விட்ட புல்லுருவிகள், அந்த நேர்வழி நடந்த சஹாபாக்களின் ஹழ்ரத் சித்தீக் ரழி... அவர்களை தவிர ஏனைய மூன்று சஹாபாக்களையும் ஷஹீதாக்கிய பின்னும் அந்த வெறி தணியவில்லை.

பின்னரும் அந்த புல்லுருவிகளின் தாகம் தணியவில்லை. பிறகு இமாம் ஹசன் (றழி.) அவர்கள் ஆட்சியை உமையாக்களின் கையில் ஒப்படைத்த பின்னும் அவர்களையும் விடவில்லை. அவர்களின் மனைவியான ஜ'அதா வை பணத்தால் வளைத்து உலக ஆசையை காட்டி இமாம் ஹசன் (றழி). அவர்கள் தூங்கும் போது விஷம் கொடுத்து ஷஹீதாக்கியது.

அதற்க்கு பின் தான் அந்த வெறியர்களின் பார்வை ஹழ்ரத் இமாம் ஹுஸைன் (றழி) அவர்கள் மேல் பட்டது. எந்த வம்பிற்கும் போகாததால் ஒன்றும் செய்ய முடியவில்லை, மேலும் ஹழ்ரத் இமாம் ஹசன் (ரளி) அவர்களை போல் சாந்த குணத்தில் இல்லாமல், வீரம் நிறைந்தவர்கள் என்பதால் இக்கொடியவர்கள் ஹழ்ரத் இமாம் ஹுஸைன் (ரளி). அவர்களை நெருங்க யோசிக்க வைத்தது.

ஆனாலும் இவர்கள் உயிரோடு இருந்தது இவர்களின் கண்களை உருத்தி கொண்டு தான் இருந்தது. இந்த நேரத்தில் தான் உமையாக்களின் சார்பில் முஆவியா விற்கு பின்னால் யஜீது ஆட்சிக்கு வந்தான். முஆவியாவாலே அமீராக பிரகனப்படுத்தப்பட்டான். (இஸ்லாமிய ஜனநாயக ஆட்சி, மன்னராட்சியில் நுழைந்தது)

இவன் குடிகாரனாக இருந்தான். ஒரு முறை சஹாபாக்களின் குழந்தைகளோடு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தான். அப்போது மதுவும் பரிமாறப்பட்டது. சஹாபாக்களின் குழந்தைகள் என்ன இது என்று யஜீதிடம் கேட்ட போது கிருஸ்தவ மதத்தில் இது ஆகுமாக்கப்பட்டது தான். அதனால் இன்று ஒரு நாள் மட்டும் ஈசாவின் மதத்தில் மாறி இதை குடித்துக்கொள்ளுங்கள் என்றான்.  மேலும் இஸ்லாம் தடை செய்து இருந்தும், ஒரு சேர இரு சகோதரிகளை திருமணம் முடித்து இருந்தான். இப்படிப்பட்ட யஜீதை இமாம் ஹுஸைன் (றழி) அவர்கள் பை'அத் செய்ய மறுத்து விட்டார்கள்.

இமாம் ஹுஸைன் (ரளி) அவர்களோடு ஹழ்ரத் அப்துர் ரஹ்மான் பின் அபூபக்கர் (ரளி) ஹழ்ரத் அப்துல்லாஹ் இப்னு உமர் (ரளி) ஹழ்ரத் அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரளி) ஹழ்ரத் அப்துல்லாஹ் பின் ஜுபைர் (ரளி) ஆகியோரும் இந்த குடிகாரன் யஜீதை பை'அத் செய்ய மறுத்துவிட்டார்கள்.

ஜனநாயகம் தழைக்க வந்தது தான் இஸ்லாம். இஷ்டம் இருந்தால் தான் பை'அத் செய்ய முடியும். ஆனால் இந்த யஜீத் மற்றவர்கள் பை'அத் செய்ய வேண்டும் என்று கண்டிப்பாக்கினான்.

அன்றைய தினம் மதீனா வின் கவர்னராக இருந்த வலீத் பின் உத்பா என்பவர்கள், இமாம் ஹுஸைன் (றழி) அவர்கள் நபியின் குடும்பமாக இருந்த காரணத்தால் மென்மையை தேர்ந்தெடுத்தார்கள், ஆனால் நபிகளாரின் லஃனத் ல் பிறந்த மர்வான் இமாம் ஹுஸைன் மீது கடுமை காட்ட கூறினான். அதை இவர்கள் மறுத்து விட்டார்கள்.

மேலும் மேலும் நெருக்கடி கொடுக்கப்படவே ஹழ்ரத் அப்துல்லாஹ் பின் ஜுபைர் (ரளி) அவர்களை போன்றே மக்கா நோக்கி பயணம் மேற்கண்டார்கள். அங்கு கவர்னராக இருந்தவன் அமர் பின் சயீத் பின் ஆஸ். இவனும் இமாம் அவர்களுக்கு நெருக்கடி கொடுத்தான்.

இது ஒரு பக்கம் இருக்க இராக் தேசத்தில் இருந்து இமாம் ஹுஸைன் (ரளி). அவர்களை அழைத்து கடிதம் வர ஆம்பித்து விட்டது. இந்த கடிந்தங்களில் எங்களுக்கு தொழுக வைக்க சரியான இமாம் இல்லை. எங்களுக்கு மார்கத்தை போதிக்க சரியான வழிகாட்டி இல்லை. அதனால் நீங்கள் வாருங்கள் என்று எழுதி இருந்தார்கள்.  ஆரம்பத்தில் சிறிதளவே வந்து கொண்டிருந்த இக்கடிதங்கள் பின்னால் மூட்டை, மூட்டையாக வர ஆரம்பித்து விட்டது. பின்னர் கூட்டம் கூட்டமாக ஆட்களும் வந்து அழைக்க ஆரம்பித்தனர்.

(இதை இமாம் ஹுஸைன் (றழி). அவர்கள் ஹழ்ரத் ஹுர் பின் யஜீத் (றழி). அவர்களிடமும், கர்பலாவில் எதிராக போரிட வந்த அந்த கயவர்களிடமும் காட்டினார்கள். இமாம் அவர்களுக்கு கடிதம் எழுதியவர்களே அங்கு போரிடவும் வந்து இருந்தார்கள், சில தோழர்களை தவிர).  சிலர் இமாம் ஹுஸைன் (றழி). அவர்களோடு தோல் கொடுத்தார்கள். அவர்களுள் ஹழ்ரத் முஸ்லிம் (றழி) ஹழ்ரத் ஹபீப் பின் மழாஹிர் (றழி) ஆகியோர் அடக்கம்.

சரியான இமாம் ஏன் இல்லை என்று ஈராக் வாசிகள் எழுதினார்கள் என்று சரித்திரங்களை புரட்டினால் கீழ் காணும் சம்பவங்கள் காட்சி அளிக்கின்றது.  அவை, உமையாக்களின் ஆட்சியில் ஷரீஅத் காற்றில் பறக்க விடப்பட்டது. எகிப்தில் கவர்னராக இருந்த அப்துல்லாஹ் பின் அபீ சர்ஹ் ஆமிரி (முர்தத் ஆகி ஒரு அன்சாரி தோழரை கொன்றவன். மக்கா வெற்றியின் போது காபாவின் திரையை பற்றி இருந்தான், அவனை இழுத்து வரும் படி நபிகளார் கூறினார்கள், ஹழ்ரத் உஸ்மான் (றழி) அவர்களுக்காக மன்னிப்பு பெற்றவன்) என்பவன் ஸுபுஹ் உடைய தொழுகையை காலை 10.00 மணிக்கு நேரத்தை மாற்றி அமைத்தான். கூபா வின் கவர்னராக இருந்த வலீத் பின் அகபா பின் அபீ முயீத் என்பவன் நன்றாக குடித்து விட்டு ஸுபுஹ் தொழுகையை நான்கு ரக்'அத் தொழ வைத்தான்.

அங்கு நிறைந்து இருந்த சஹாபாக்களின் பிள்ளைகள் எல்லாம் என்ன இப்படி செய்கின்றாயே என்று கேட்டதற்கு இதற்க்கு மேலும் தொழ வைக்கவா என்று கேட்டான். (அல் பிதாயா வன் நிஹாயா, புகாரி, முஸ்லிம், அபூதாவூத், இன்னும் பல கிதாபுகள்).

மேலும் ஹழ்ரத் அலீ (றழி) அவர்களையும், குடும்பத்தவர்களையும் ஜும்மாவின் குத்பாவில் திட்டும் வழக்கம் முஆவியாவின் ஆட்சி முதல் நடைபெற்றுக்கொண்டிருந்தது. ஹழ்ரத் உமர் பின் அப்துல் அஜீஸ்(றழி) அவர்கள் தான் இவ்வழக்கத்தை நீக்கி,

إِنَّ اللَّهَ يَأْمُرُ بِالْعَدْلِ وَالْإِحْسَانِ وَإِيتَاءِ ذِي الْقُرْبَىٰ وَيَنْهَىٰ عَنِ الْفَحْشَاءِ وَالْمُنكَرِ وَالْبَغْيِ ۚ يَعِظُكُمْ لَعَلَّكُمْ تَذَكَّرُونَ
என்ற வசனத்தை ஓதும் பழக்கம் ஆரம்பித்து வைத்தார்கள். ஹழ்ரத் அலீ ரழி... உடைய குடும்பத்தவர்களும், உறவினர்களும், தோழர்களும் காதால் கேட்டு கொண்டு தான் இருந்தனர். (தபரீ பாகம்: 4 , பக்கம்: 188, இப்னுல் அசீர்: பாகம்: 3 பக்கம்: 234. அல்பிதாயா வன் நிஹாயா பாகம்: 8 பக்கம்: 259; பாகம்: 9 பக்கம்: 80; )


நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், ஹழ்ரத் உம்முல் பழ்ல் (றழி) அவர்களிடம் கூறுகின்றார்கள் என்னுடைய இந்த மகன் எனது சமூகத்தாலேயே கொல்லப்படுவான், உம்முல் மூமினீன் அன்னை ஆயிஷா (ரளி) மற்றும் உம்முல் மூமினீன் அன்னை உம்மு சல்மா (ரளி) ஆகியோரிடம் இந்த மண்ணில் தான் ஷஹீதாக்கப்படுவான் என்று அந்த மண்ணும் கொடுக்கப்படுகின்றது.

என்னுடைய மகன் ஹுஸைன் கர்பலா என்று சொல்லக்கூடிய இடத்தில் தான் கொல்லப்படுவான். இவை எல்லாம் ஹதீசுகளில் பதியப்பட்டவைகள். சொந்த கருத்து, சோக கருத்து அல்ல. இவ்வளவும் தெரிந்துமா இமாம் ஹுஸைன் (றழி) அவர்கள் பதவிக்காக சென்று இருப்பார்கள்! நாம் யோசிக்க வேண்டாமா?

சரி! பதவிக்காக தான் சென்றார்கள் என்று இவர்களின் வாதத்தை ஏற்றுக்கொண்டால், இமாம் அவர்களை பின்பற்றும் அனைவரையும் அல்லவா அழைத்து சென்றிருக்க வேண்டும். பிள்ளை குட்டிகளை எதற்கு அழைத்து சென்றார்கள். அவர்களின் குடும்பத்தவர்கள் மட்டும் தானே மக்காவில் இருந்து பயணப்பட்டார்கள்.
மேலும், அங்கு சென்றும், நான் எங்கிருந்து வந்தேனோ அங்கேயே செல்ல அனுமதியுங்கள் என்று தானே சொன்னார்கள், என்னிடம் பை'அத் செய்யுங்கள் என்று எங்கே சொன்னார்கள்? இமாம் அவர்களை பற்றி பேசும் போது நாவை அடக்கி வாசியுங்கள்! வஹ்ஹாபிகளே! நபிகளாரின் கோபத்தை பெற்று மறுமை வாழ்க்கையை அழித்து விடாதீர்கள்.

நமது நிலை என்ன?
ஒவ்வொரு கர்பலாவிற்கு பின்னும் இஸ்லாம் உயிர் பெறுகின்றது - அல்லாமா இக்பால். என்று சொன்னதற்கு ஏற்ப, கர்பலா என்பது இஸ்லாத்தை உயிர்பிக்க நடந்ததே தவிர பதவிக்காக இல்லை.

அப்படி பதவிக்காக செல்பவர்கள் 6 மாத குழந்தை அலி அஸ்கர் ஷஹீதாக்குவார்களா? , 1 வயது குழந்தை அப்துல்லாஹ்வை முத்தமிட்டவாறு ஷஹீதாக்குவார்களா?? 18 வயதுடைய வாலிபரான அலி அக்பரை ஷஹீதாக்குவார்களா? உயிர் கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் சென்று விட்டால் குழந்தை என்ன? குட்டி என்ன? வாலிபன் என்ன? கிழவன் என்ன? என்றவாறு அல்லாஹ்வின் பாதையில் உயிர் துறந்தார்கள் என்பது தான் உண்மை.

இமாம் ஹுஸைன் (ரளி) உண்மையில் ஈராக் வாசிகள் உள்ளமையோடு அழைக்கின்றார்களா, இல்லை குழப்பம் விளைவிக்க அழைக்கின்றார்களா என்று அறிவதற்காக இமாம் முஸ்லிம் பின் அகில் (ரளி). அவர்களை அனுப்பி வைத்தார்கள். அவர்கள் சென்று குழப்பம் விளைவிக்க அல்ல, உண்மையில் தான் அழைக்கின்றார்கள் என்று கூறிய பின், ஹழ்ரத் அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரளி) அவர்கள் தடுத்தும், குழந்தை குட்டிகளை விட்டுச்செல்லுங்கள் என்று கூறியும் கேளாமல்,

உங்களுடைய நிலை ஹழ்ரத் உஸ்மான் (ரளி) போன்றே பெண்கள், குழந்தைகள் முன்னாள் ஷஹீதாக்க்ப்படுவீர்கள் என்று கூறப்பட்டும் கேளாமல், நபிகளாரின் சொல்லப்பட்ட ஹதீசுகளை உண்மை படுத்த துல்ஹஜ் மாதம் 8 ம் தேதி மக்காவை விட்டு ஹழ்ரத் இமாம் ஹுஸைன் (ரளி) புறப்பட்டார்கள்.

வழியில் இமாம் அவர்களின் பெரிய தந்தையின் மகனாரும், இமாம் அவர்களின் தங்கையான ஹழ்ரத் ஜைனப் (ரளி) அவர்களை மணந்த ஹழ்ரத் அப்துல்லாஹ் பின் ஜஃபர் (ரளி). அவர்கள், இமாம் அவர்கள் ஈராக்கை நோக்கி செல்ல வேண்டாம் என்ற கோரிக்கை கடிதம் வந்தது. அதற்க்கு பதில் அளித்த இமாம் அவர்கள், "நான் ஒரு கனவை கண்டேன். என்னிடம் நபிகள் நாயகம் ஸல்... அவர்கள் ஒரு வேலையை ஏவி இருக்கின்றார்கள். அது என்னவென்று அல்லாஹ்வை சந்திக்கும் வரை கூற மாட்டேன்" என்று தான் ஷஹீதாக போவதை சூசகமாக அறிவித்து விட்டு மக்காவை விட்டு ஈராக்கை நோக்கி பிரயாணப்பட்டார்கள்.

இந்த நேரத்தில் கூபாவில் கவர்னராக இருந்த ஹழ்ரத் நுஃமான் பின் பஷீர் அன்சாரி (ரளி) அவர்கள் டிஸ்மிஸ் செய்யப்பட்டு யஜீதின் சகோதரனான இப்னு ஜியாத் என்பவன் நியமிக்கப்பட்டான். இமாம் ஹுஸைன் (ரளி) அவர்களை ஷஹீதாக்கும் வரை நிம்மதியாக உறங்கவும் கூடாது, சரியாக உண்ணவும் கூடாது என்று யஜீதால் கட்டளை இடப்பட்டது.

கவர்னராக நியமிக்கப்பட்ட இப்னு ஜியாத் முதலில் ஹழ்ரத் ஹானி பின் உர்வா (ரளி) அவர்களை பிடித்து இமாம் முஸ்லிம் (ரளி) அவர்களை ஒப்படைக்குமாறு கூறினான். அவர்கள் மறுத்துவிடவே வயது முதிர்ந்த இந்த சஹாபியை சிறையில் அடைத்தான். இதை கேள்விப்பட்டு படையை திரட்டி வந்தார்கள் ஹழ்ரத் முஸ்லிம் (ரளி) அவர்கள். அந்த படை இப்னு ஜியாதின் பயம் கலந்த பேச்சில் பயந்து இமாம் முஸ்லிம் (ரளி) யை விட்டு கிளம்பினார்கள்.

இறுதியாக தனித்து விடப்பட்ட ஹழ்ரத் முஸ்லிம் (ரளி). அவர்கள் ஒரு வீட்டில் தஞ்சம் அடைந்தார்கள். அதையும் கேள்வியுற்ற இப்னு ஜியாத் 450 பேர் கொண்ட படையை ஹழ்ரத் முஸ்லிம் (ரளி) அவர்களை பிடித்துவர அனுப்பினான். அதில் அநேகம்பேரை பந்தாடினார்கள் ஹழ்ரத் முஸ்லிம் (ரளி) நேரிடையாக இமாம் முஸ்லிம் அவர்களை எதிர்க்க துணிவில்லாத அந்த படை நாளா புறமும் சுற்றி வளைத்து கற்களால் அடிக்க ஆரம்பித்தது.

இதில் சோர்வடைந்த இமாம் முஸ்லிம் (ரளி) அவர்களை பிடித்து, இப்னு ஜியாத் முன் அழைத்து சென்றது. அங்கு ஹழ்ரத் அமீருல் மூமினீன் அலீ முர்தழா கர்... அவர்களையும், ஹழ்ரத் இமாம் ஹுஸைன் அவர்களையும் லஃனத் செய்தான் இப்னு ஜியாத்.  பின்பு ஹழ்ரத் முஸ்லிம் (ரளி) அவர்களை ஷஹீதாக்கும் படி உத்தரவிட்டு அது நடந்தேறியது. பின்பு ஹழ்ரத் ஹானி பின் உர்வா (ரளி). அவர்களை சிலாட்டரில் ஆடுகளை அறுப்பதை போன்று அறுக்குமாறு உத்தரவிட்டான்.

அவர்களின் உடல்கள் தெரு தெருவாக கயிறு கட்டி இழுக்கப்பட்டது. இறந்தவர்களின் உடலை சின்னாபடுத்த்ப்படும் வழமையும் உமையாக்களின் ஆட்சியில் இருந்து தான் ஆரம்பித்தது. மேலும் ஷஹீதானவர்களின் தலையும் தெரு தெருவாக பார்வையக்கப்பட்டதும் இந்த ஆட்சிகளில் தான். வழியிலேயே இமாம் முஸ்லிம் (ரளி) அவர்கள் கோரிக்கைப்படி இமாம் ஹுஸைன் (ரளி) அவர்களுக்கு கூபாவின் பக்கம் வர வேண்டாம், இவர்களின் மனம் மாறிவிட்டது என்று எழுதப்பட்ட கடிதமும் வந்து சேர்ந்தது.

ஜுபாலா என்னும் இடத்தில் இமாம் முஸ்லிம் (ரளி) மற்றும் ஹழ்ரத் ஹானி பின் உர்வா (ரளி) ஆகியோரின் ஷஹீதான செய்தியும் வந்து சேர்ந்தது. மேலும் இமாம் ஹுஸைன் (ரளி) அவர்களின் வருகையை தெரிந்து கொண்ட இப்னு ஜியாத் ஹழ்ரத் ஹுர் (ரளி) அவர்களை பறக்கும் படையாக அனுப்பி பிடித்து வருமாறு கட்டளை இட்டான்.

வரும் வழியில் இமாம் ஹுஸைன் (ரளி) அவர்களை ஹழ்ரத் ஹுர் அவர்கள் சுற்றி வளைத்து இமாம் அவர்களோ நான் வந்தது உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் என்னை விட்டு விடுங்கள் நான் எங்கிருந்து வந்தேனோ அங்கே திரும்பி விடுகின்றேன் என்று ஹழ்ரத் இமாம் ஹுர் இடம் கூறினார்கள். அதற்க்கு மறுத்த ஹழ்ரத் ஹுர், இப்னு ஜியாதை சந்திக்க வைப்பது தான் தன்னுடைய பணி என்றும் அது தான் தனக்கு இடப்பட்ட கட்டளை என்றும் கூறினார்கள். அதற்கு இமாம் அவர்கள் அவனை சந்திப்பதை விட இறப்பதே மேல் என்று கூறினார்கள்.

இமாம் ஹுஸைன் (ரளி) அவர்கள் முன்னேறி செல்லும் போது இப்னு ஜியாத் இடம் இருந்து ஹழ்ரத் ஹுர் அவர்களுக்கு கடிதம் வந்தது. அதில் இமாம் ஹுசைன் அவர்களையும், அவர்களோடு இருப்பவர்களையும் மரம் இல்லாத, கட்டிடம் இல்லாத, ஆறோ, குளமோ, குட்டையோ, ஏரியோ இல்லாத இடத்தில் இறக்குமாரும், விரைவில் தமது படை வந்து எதிர் கொள்ளும் என்றும் எழுதப்பட்டிருந்தது. இதை வைத்து கர்பாலாவில் இமாம் அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டார்கள்.

மறுமையில் யாரு கௌசர் தண்ணீர் நமக்கு தருவார்களோ, அந்த குடும்பத்தவர்களே மூன்று நாட்கள் பச்சை தண்ணீர் கூட அருந்த வில்லை. இமாம் ஹுஸைன் (ரளி) நினைத்து இருந்தால் எத்தனையோ நீரூற்றுக்களை கண்சிமிட்டும் நேரம் கொண்டு வர முடியும்.  ஆனாலும் அல்லாஹ் ஜல்... வின் பொறுத்தத்திற்காக பொறுமை காத்தார்கள். ஹழ்ரத் உஸ்மான் ரழி... அவர்களுக்கு பகரமாக இமாம் ஹுஸைன் (ரளி) அவர்களை பழி வாங்குகின்றார்களாம். சிறு குழந்தைகள் உட்பட யாருக்கும் தண்ணீர் வழங்கப்படவில்லை.

எத்தனை பேரிடத்தில் அதுவும் அஹ்லே பைத்திடம் ஹழ்ரத் உஸ்மான் (றழி) அவர்களுக்காக பழிவாங்குவார்கள் என்பது தெரியவில்லை. ஹழ்ரத் இமாம் அலீ (றழி) அவர்களோடும் இதே காரணங்களை கூறி போரிடப்பட்டது, குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இப்னு ஜியாத் இடம் இருந்து காபிர்களை நோக்கி போரிட இருந்த படை (அந்த படையினரின் கெட்ட நேரம்) இமாம் ஹுஸைன் (றழி) அவர்களை நோக்கி அனுப்பப்பட்டது.

இமாம் அவர்களோ நான் வந்தது உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் என்னை விட்டு விடுங்கள் நான் எங்கிருந்து வந்தேனோ அங்கே திரும்பி விடுகின்றேன் என்றார்கள். மேலும் கடிதம் எழுதிய அநேகம் பேர் அங்கிருந்தார்கள், அவர்களின் கடிதங்களை காட்டும் போது, இன்றைய வஹ்ஹாபிகளை போன்றே அவர்களும், அவர்கள் எழுதிய கடிதத்தையே மறுத்தார்கள்.

போர் மூண்டது முதலில் போரிட்ட முஸ்லிம் என்ற நபீகளாரின் சஹாபி ஷஹீதானார்கள், பிறகு இமாம் ஹுஸைன் (றழி) அவர்களின் உயிர் (தியாகம் செய்யும்) நண்பர்கள் ஒவ்வொருவராக வந்து அப்படியே தங்களின் இன்னுயிரை தியாகம் செய்தார்கள். போர் நடந்து கொண்டிருக்கும் போது முஸ்லிம் என்ற பெயரில் எதிரிப்படை இருந்த நிலையிலும் ஹழ்ரத் இமாம் ஹுஸைன் (ரளி) அவர்கள் தொழுகை நடத்த அனுமதி கேட்டும் மறுக்கப்பட்டது.

போர் நடந்து கொண்டிருக்கும் போது, பெண்கள் தங்கியிருந்த கூடாரத்தில் புகுந்த ஷும்ர் தலைமையிலானா கொள்ளைக்கூட்டம் (இப்னு ஜியாதின் படையினர்) அங்கிருந்த பொருட்களை கொள்ளையடிக்க ஆரம்பித்தது (அங்கு ஒன்றும் கிடைக்கவில்லை. காரணம் அங்கு ஒன்றும் இருக்க வில்லை).

நண்பர் வட்டம் முடிந்த பிறகு அஹ்லுல் பைத்யிலிருந்து இமாம் ஹுஸைன் (ரளி) அவர்களின் மகனான ஹழ்ரத் இமாம் அலி அக்பர் (ரளி) அவர்கள் களம் புகுந்தார்கள். அந்த நேரத்திலும் ஒரு கவிதையை படித்தார்கள்.

انا علي ابن الحسين ابن علي
نحن وبيت الله اولى بالنبي
تالله لايحكم في نبن البغي بدعي
كيف ترون ستري عن ابي

நான் அலீயாவேன், ஹழ்ரத் ஹுஸைனின் மகன், ஹழ்ரத் அலீயின் பேரமகன். நாங்களும் (அஹ்ல பைத்) இறை இல்லமாம் க'பாவும் நபிகள் ஸல்... அவர்களால் முதன்மை படுத்தப்பட்டோம்.

அல்லாஹ்வின் மீது ஆணையாக ராஜ துரோகியின், காட்டுமிராண்டியின் (மற்றொரு அறிவிப்பில் பித்'அத் வாதியின் மகன்) மகன் யஜீத் எங்கள் மீது ஆட்சி செய்வதை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம். நான் என்னுடைய தகப்பனாரை எவ்வாறு பாதுகாப்பாக (போரிட்டவாறு) இருக்கின்றேன் பார்த்தீரா? என்று பாடிய வண்ணம் போர் களத்தில் புகுந்தார்கள். (அல் பிதாயா வன் நிஹாயா.)

இமாம் அலீ அக்பர் (ரளி) அவர்களின் அடியை தாங்க முடியாத எதிரிப்படை சிதறுண்டது. அதனால் இமாம் அலீ அக்பர் ரழி... அவர்கள் மீது கொடூரத்தாக்குதல் நடத்தி கீழே சாய்த்தார்கள். பின்பு அவர்களின் உடல் கண்டம் துண்டமாக வெட்டப்பட்டது. அதன் பிறகு அஹ்லே பைத்திலிருந்து ஒவ்வொருவராக வந்து தங்கள் இன்னுயிரை தியாகம் செய்தார்கள். அதில் ஹழ்ரத் இமாம் ஹஸன் (ரளி) அவர்களின் மகனார் ஹழ்ரத் காசிம் (ரளி). அவர்களும் ஷஹீதானவர்களில் அடக்கம்.

இமாம் காசிம் (ரளி) அவர்களை எதிரிப்படையை தலைமை தாங்கி கொண்டிருந்த உமர் அல்லது அமர் என்பவன் ஷஹீதாக்கினான். எனது சிறிய தந்தையே என்று சப்தமிட்டார்கள். ஓடோடி வந்த இமாம் ஹுஸைன் (ரளி) உமர் மீது தாக்கினார்கள். அவன் அதை கையால் தடுத்ததால் அவன் கை துண்டானது. அஹ்லே பைத்திலிருந்து மொத்தம் 17 நபர்கள் ஷஹீதானார்கள். அவர்களுள் சிறு குழந்தைகளான ஹழ்ரத் அலீ அஸ்கர் ரழி... மற்றும் ஹழ்ரத் அபூபக்கர் ரழி... ஆகியோரும் அடக்கம்.

இமாம் ஹுஸைன் (றழி) அவர்களுக்கு முன் கடைசியாக பெரியவர்களில் ஷஹீதானவர்கள் இமாம் ஹுஸைன் (றழி) அவர்களின் பதாகையை சுமந்து கொண்டிருந்த இமாம் அவர்களின் சகோதரர் ஹழ்ரத் அப்பாஸ் (ரளி) ஆவர்கள். இவர்களின் ஷஹாததிற்கு பின் இமாம் ஹுஸைன் (ரளி) அவர்கள் தனித்து விடப்பட்டார்கள். ஆனாலும் அந்த நிலையிலும் எதிரிகள் இமாம் அவர்களை நோக்கி முன்னேற தயங்கினார்கள். காரணம் இமாம் அவர்கள் வீரம் மிகுந்தவர்கள். இரண்டாவது காரணம் மன உறுத்தல், நாம் தானே அழைத்தோம், இப்படியாகி விட்டதே. இமாம் ஹுஸைன் (ரளி) அவர்கள் பெண்களோடு அவர்கள் தங்களுக்கு பின் எப்பிடி நடந்து கொள்ள வேண்டும் என்று அறிவித்துக்கொண்டிருந்தார்கள்.

அப்போது அங்கு இருந்து சிறு குழந்தையான அபுபக்கரை மடியில் வைத்துக்கொஞ்சி கொண்டிருந்தார்கள். அப்போது ஹுர்முளா என்ற ஒரு கயவன் அம்பை எய்தினான். அது அந்த குழந்தையின் கழுத்தில் குத்தியது. இமாம் அவர்களின் மடியிலேயே அக்குழந்தை ஷஹீதாகியது.  பின்பு இமாம் அவர்கள் வெளியில் வந்து ஷஹீதாகிய சடலங்களை ஒன்று சேர்த்துக்கொண்டிருந்தார்கள். எதிரிகள் இமாம் அவர்களை நெருங்கவே இல்லை. பிறகு பெண்கள் பக்கம் நெருங்கினார்கள்.

அப்போது அங்கிருந்த அலி அஸ்கர் என்ற குழந்தையை கொஞ்சிக்கொண்டிருந்தார்கள். எதிரிகளில் மூகிதுன் நார் என்பவன் அம்பு எய்த அது இமாம் அலீ அஸ்கரின் தொண்டையில் இறங்கியாது. அம்பை பிடுங்கிய இமாம் அவர்கள் இரத்தத்தை பிடித்து அல்லாஹ்விடம் சாட்சியாக்கினார்கள். பிறகு இமாம் அவர்கள் வெளியேறினார்கள். புறாத் ஆற்றை நோக்கி சென்றார்கள். அங்கு தண்ணீர் எடுத்து குடிக்கும் போது ஒரு அம்பு இமாம் அவர்களை நோக்கி வந்தது. இமாம் அவர்களின் வாயில் குத்தியது.

இமாம் அவர்கள் அம்பை பிடுங்கி பீறிட்டு வந்த குருதியை அல்லாஹ்விடம் சாட்சியாக்கி, அல்லாஹ்விடம் இவர்களின் கணக்கை மறுமையில் வைத்துக்கொள்வாயாக என்று பிரார்த்தித்தார்கள். அம்பு எய்தவனையும் சபித்தார்கள். அதன் காரணமாக அவனுக்கு தாகம் ஏற்பட்டது. அதன் கடுமையாலே மரணத்தை தழுவினான். பிறகு இமாம் அவர்கள் போர்க்களம் சென்றார்கள். யாரும் இமாம் அவர்களை எதிர்க்க துணிவில்லை.

இமாம் அவர்கள் , ஹழ்ரத் உஸ்மான் (ரளி) அவர்களுக்காக பழி வாங்குகின்றோம் என்று கூறப்பட்டதால் தான் யார் என்று ஒரு கவிதையை இமாம் ஹுஸைன் (ரளி) அங்கே படித்தார்கள்.

اَنَا ابْنُ عَلِيّ الْخَيْرِ مِنْ الِ هَاشِمِ
كَفَانِيْ بِهذَا مَفْخَرٌ حِيْنَ اَفْخُرُ
وَجَدّيْ رَسُوْلُ اللهِ اَكْرَمُ مَنْ مَشى
وَنَحْنُ سِرَاجُ اللهِ فىِ النَّاسِ يَزْهُرُ
وَفَاطِمَةٌ اُمّيْ سُلاَلَةُ اَحْمَدِ
وَعَمّيَ يُدْعى ذَالْجَنَاحَيْنِ جَعْفَرُ
وَفِيْنَاكِتَابُ اللهِ اُنْزِلَ صَادِقًا
وَفِيْنَا الْهُدى وَالْوَحْيُ وَالْخَيْرُ يُذْكَرُ
وَنَحْنُ اَمَانُ اللهِ لِلْخَلْقِ كُلّهِمْ
نَقُوْلُ بِهذَا لِلاَمَانِ وَنَجْهَرُ
وَشِيْعَتُنَا وَاللهِ اَكْرَمُ شِيْعَةِ
وَمُبْغِضُنَا يَوْمَ الْقِيَامَةِ يُخْسَرُ

இதில் தனது தந்தை யார், தாய் யார், பாட்டனார் யார், பெரிய தந்தை யார், யாரிடம் குர்'ஆன் இறக்கப்பட்டது. எங்களை இந்த சமூதாயத்தில் அமானிதமாக ஒப்படைத்தார்கள் நபிகளார் என்றும், அதுவே ஈமான் என்றும், எங்கள் மீது யார் பொறாமை கொள்வாரோ அவரின் மறுமை வாழ்வு அழிக்கப்படும் என்று பொருள் பட இக்கவிதையை படித்தார்கள்.

இதை படித்ததும் எதிரிகள் இமாம் அவர்களை தாக்க துணிந்தார்கள். இமாம் அவர்களும் தாக்கினார்கள். இமாம் அவர்களின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் கூட்டம் சிதறுண்டது.  பிறகு ஒன்று பட்டு ஒட்டு மொத்தமாக இமாம் அவர்களை சுற்றி நின்று தாக்க ஆரம்பித்தார்கள். இமாம் அவர்கள் அணிந்திருந்த ஹெல்மெட் உடைக்கப்பட்டது. தலைப்பாகையை அணிந்த இமாம் அவர்கள் மீண்டும் போரிட்டார்கள். அப்படியே இமாம் அவர்களின் இடது கையும் துண்டிப்பட்டது. இமாம் அவர்கள் வலது கையில் வாளை எடுத்து போரிட்டார்கள்.

சினான் பின் அனஸ் என்பவன் இமாம் அவர்கள் புனித மிகு நெஞ்சத்தில் ஈட்டியை பாய்ச்சினான். நிலை தடுமாறி இமாம் அவர்கள் கீழே விழுந்தார்கள். சுதாரித்து எத்தனிக்கையில் ஷுமர் என்பவன் இமாம் அவர்களின் புனிதமிகு நெஞ்சில் அமர்ந்து கழுத்தை அறுக்க முனைந்தான். அப்போது இமாம் அவர்கள் "நபிகளார் (ஸல்) அவர்கள் உண்மை கூறினார்கள்" என்று உரைத்தார்கள்.

அது என்ன? நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள் "எனது அஹ்லே பைத் உடைய ரத்தத்தை ஒரு மரநாய் குடிக்கும்" என்றார்கள். இந்த ஷுமர் வெண்குஷ்டரோகி. அதனால் மரநாய் என்று குறிப்பிட்டார்கள். இமாம் அவர்களை ஷுமர் ஷஹீதாக்கினான்.

இமாம் மற்றும் ஷுஹதாக்களின் தலைகள் ஈட்டியில் எந்தப்பட்டு தெருக்களில் பார்வையாக்கப்பட்டது. யார் மூலம் பர்தா இந்த உலகத்தில் அறிமுக மானதோ அந்த குடும்பத்தின் பெண்கள் தெருக்களில் பர்தா இல்லாமல் அலைக்களிக்கப்பட்டனர்.

யார் நபிகளாரின் மீது சவாரி செய்து நபிகளார் சவாரி மட்டும் சிறந்தது அல்ல சவாரி செய்பவரும் சிறந்தவர் (திர்மிதி) என்று கூறினார்களோ, அந்த புனித உடல்களின் மீது குதிரைகள் ஒட்டப்பட்டு, உடல்கள் சின்னா படுத்தப்பட்டன. (தபரீ, பிதாயா) ஷியாக்களின் அறிவிப்பு என்று இதை கூற முடியவில்லை.

காரணம் ஷுஹாதாக்களின் தர்காக்கள் தொலைவில் இருக்கின்றது. இமாம் ஔன் என்ற இடம், இமாம் ஹுர் உடைய மகாம், ஹழ்ரத் ஹபீப் பின் மழாஹிர் உடைய தர்பார் (இமாம்களோடு இருந்து போர் புரிந்தவர்கள்) எல்லாம் தொலைவில் இருக்கின்றது.

இமாம் அவர்களின் புனித தலை இப்னு ஜியாதின் மத்தியில் கொண்டு வரப்பட்ட போது, அவன் இமாம் அவர்களின் மூக்கில் கம்பை வைத்து (இமாம் ஹுஸைனை) போல அழகை நான் பார்க்கவில்லை என்று கூறினான் (ஹழ்ரத் அனஸ் பின் மாலிக் ரழி..., திர்மிதி).

இறந்தவர்கள் எப்பிடி இழிவு படுத்தப்பட்டார்கள் பாருங்கள். மேலும் ஹழ்ரத் இமாம் ஹுஸைன் (றழி) அவர்களின் இரு உதடிற்கு மத்தியில் அந்த கைத்தடியை வைத்தான் அதற்க்கு அங்கிருந்து சஹாபா பெருமக்கள் வாக்குவாதமே செய்தார்கள். அவர்களையும் தரக்குறைவாக பேசினான் என்பதையும் வரலாற்றில் பார்க்கலாம்.

அஹ்லே பைத்களின் மீது நாம் உண்மையாக பாசம் வைக்க வேண்டும். கர்பலா வின் நோக்கமே, அதிகாரம் தனியாக இருக்க வேண்டும். அந்த காலத்தில் அதிகாரி யாரோ அவர் தான் தொழ வைக்க வேண்டும் என்ற நிலை இருந்தது. அது மாற வேண்டும்.

இமாம் ஹுஸைன் (ரளி) அவர்கள் ஈராக் வந்து தான் ஆட்சி பிடிக்க வேண்டும் என்பதல்ல. மக்காவில் இருந்த வண்ணம் எப்பிடி ஹழ்ரத் இப்னு ஜுபைர் (ரளி)ஆட்சி பிடித்தார்களோ அப்படி பிடித்திருக்க முடியும் (ஹழ்ரத் இப்னு ஜுபைர் கூட இமாம் ஹுஸைன் (ரளி) அவர்களை தலைமை தாங்க சொன்னார்கள். இமாம் அவர்கள் ஆட்சியை விரும்பவில்லை.

நபிகளாரின் குடும்பத்தவர்களின் சிறப்பானது, அவர்களுக்கு சதகா பொருளும், ஜகாத் பொருளும் ஹராமானவை. இன்று இருக்கின்ற சாதாத் மார்கள், சையது மார்கள், மௌலானாக்கள், தங்கள் கள் அனைவருக்கும் இந்த சட்டம் இன்றளவும் இருக்கின்றது.

நமது இமாம்களை பாருங்கள், ஹழ்ரத் இமாம் ஷாபிஈ ரழி... அவர்கள் நபியின் குடும்பத்தவர்களே உங்களுக்கு இருக்கின்ற ஒரு சிறப்பை கூறினாலே மக்கள் உங்கள் சிறப்பு என்ன வென்று தெரிந்து கொள்வார்கள். அது என்ன தெரியுமா?
من لم يصلي عليكم فلا صلوة له
உங்கள் மீது யாரு ஒருவன் தொழுகையின் போது சலவாத் கூறவில்லையோ அவனது தொழுகை (பரிபூரணமான) தொழுகையே அல்ல.

அல்லாஹ் குர்'ஆனில் நபிகளாரை தாங்கள் செய்த மார்க்க தியாகத்திற்காக ஒரு உபகாரத்தை எதிர்பார்த்து, கேட்குமாறு கூறுகின்றான்.
قُل لَّا أَسْأَلُكُمْ عَلَيْهِ أَجْرًا إِلَّا الْمَوَدَّةَ فِي الْقُرْبَىٰ
நான் உங்களிடம் என்னுடைய குடுமததவர்களின் மீது உபகாரம் செய்வதை தவிர வேறு ஒன்றையும் எதிர்பார்க்க வில்லை. (42:23).

இமாம் அஹமத் அவர்களின் மகனார் இமாம் அஹமதிடம் யஜீதை ல'அனத் அனுப்புவதைப்பற்றிய தங்களின் கருத்து என்ன என்று கேட்கும் போது, அல்லாஹ் எவனை சபிக்கின்றானோ, அவனை நான் சபிக்காமல் இருப்பேனா என்று கேட்டார்கள். (பிதாயா வன் நிஹாயா).

மேலும் ஹழ்ரத் உமர் பின் அப்துல் அஜீஸ் (ரஹ்...) அவர்களின் அவையில் ஒரு மனிதர் யஜீதை அமீருல் மூமினீன் என கூறினார். அதை கேட்ட ஹழ்ரத் உமர் யஜீதை போய் அமீருல் மூமினீன் என்கின்றாயே என கேட்டு 20 கசையடி வழங்கினார்கள் (தஹ்தீபுத் தஹ்தீப்). அதனால் யஜீதை திட்டலாம் என்பதை தெரிந்து கொள்ளலாம்.

யஜீதுடைய ஆட்சிக்காலத்தில் நடைபெற்றாலும் அவன் இதில் நேரிடையாக ஈடுபடவில்லை அதனால் அவனை திட்டக்கூடாது என்று சிலர் கூறுகின்றார்கள்.  அவன் ஆட்சியில் நடைபெற்றால் அவன் சம்பந்தமில்லையா. இதே நேரத்தில் ஏதாவது ஒரு நல்ல காரியம் நடந்தால் அது யஜீத் ஆட்சியில் தான் நடைபெற்றது என்று சொந்தம் கொண்டாட வர மாட்டார்களா?

(அவன் தான் இந்த சம்பவத்தை நடத்தினான் என்பது வேறு விஷயம்). இந்த சம்பவத்தால் யஜீத் சந்தோஷித்தான் என்பது தான் அவன் பாடிய எங்கே என்னோடு மூதாதையர்கள்? பத்ரில் கொல்லப்பட்டார்களே அவர்கள்! அவர்களுக்கு பகரம் வாங்கி உள்ளேன் என்று பாடிய கவிதை இன்றும் பாதுகாக்கப்பட்டு அவனுடைய முகத்திரையை கிழித்துக் கொண்டிருக்கின்றதே?

பத்ருப்போருக்கு பகரம் என்ற இவனின் வார்த்தை இவனின் ஈமானையும் கேள்வி குறி ஆக்கிக்கொண்டிருக்கின்றதே? மேலும் ஹழ்ரத் இமாம் ஹுஸைன் (ரளி) அவர்களுடைய இரு உதடுகளுக்கு மத்தியில் கம்பை வைத்து இது தான் எனக்கும் ஹுஸைன்க்கும் மத்தியில் உள்ள தரஜா என்று கூறினானே இதை எல்லாம் என்னவென்பது. யஜீதை திட்டக்கூடாது, தாபிஈ என்பவர்கள் என்ன பதில் சொல்ல போகின்றார்கள் என்பது தெரியவில்லை.

கர்பலா குடியரசுக்கான ஒரு போராட்டம்.  இந்தியா குடியரசு தினத்திற்காக தயாராகிவருகிறது. நம்முடைய நாடு, உலக அளவில் சிறந்த மக்களாட்சி நடைபெறுகிற நாடு என்பதில் சந்தேகமில்லை. இந்திய குடிமக்கள் கல்வியறிவில் பின் தங்கியிருந்த போதும் நமது குடியரசு பாதுகாப்பாகவே இருக்கிறது.  ஒரு இராணுவப் புரட்சியோ, சர்வாதிகாரமோ இங்கு தலை தூக்கவில்லை. மக்கள் விரும்புகிறவர் ஆளுகிறார், இல்லையேல் வீழ்கிறார். இங்கு பல்வேறுபட்ட சிக்கல்கள் இருந்த போதும் குடியரசு ஜனநாயகம் பாதுகாப்பாகவே இருக்கிறது. இந்திய மக்களான நாம் பெறுமைப் பட்டுக்கொள்ள தக்க விசயம் இது. நம்மோடு சுதந்திரம் பெற்ற பல நாடுகளில் இப்போது மக்களாட்சி இல்லை.

பர்மா சிலதில் அரைகுறையாக இருக்கிறது.- பாகிஸ்தான் அதே நேரத்தில் இதில் இன்னும் விழிப்போடு நாம் நடந்து கொள்ள வேண்டும். குடியரசு என்பதற்கு பல விளக்கங்கள் சொல்லப் படுகின்றன. அவற்றில் பிரதானமானது. மக்களால் தேர்ந்தெடுக்கப் படுகிறவர் மக்களை ஆள்வது. குடியரசு என்ற சொல்லுக்கு இன்னும் யாரும் உறுதியாக விளக்கம் சொல்லவில்லை. மக்களை இரும்புக் கொண்டு அடக்கியாள்கிற சைனா தன்னை ஒரு மக்கள் குடியரசு என்றுதான் சொல்லிக் கொள்கிறது. பண்டைய வரலாற்றில் கிருத்துவுக்கு சில் ஆயிரம் வருடங்களுக்கு முன்பு இந்தியா உள்ளிட்ட சில பகுதிகளில் மக்கள் தாம் விரும்பும் ஆட்சியாளரை தேர்ந்தெடுக்கும் வழக்கம் இருந்த்தாக செய்திகள் தெரிவிக்கின்றன. ஆனால் நமக்கு கிடைக்கிற வரலாற்று ஆதாரங்களின் படி பார்த்தால் உலகத்திற்கு சிறந்த மக்களாட்சி நடைமுறையை அமுல்படுத்திக் காட்டியது இஸ்லாமாகும். இஸ்லாத்திற்கு முன் உலகம் முழுவதுதிலும் குடும்ப அல்லது குல மன்னராட்சி முறையே நடைமுறையில் இருந்தது.

இஸ்லாத்தின் மீது காழ்ப்புணர்வு கொண்டவர்கள் கலீபாக்களின் ஜனநாயக ஆட்சியை கவனத்தில் எடுத்துக் கொள்ளாமல் இருபதாம் நூற்றாண்டிலிருந்துதான் மக்களாட்சித் தத்துவம் வடிவம் பெற்றதாக கூறுகிறார்கள்.உண்மையில் இஸ்லாத்தின் கலீபாக்கள் மிக அற்புதமான குடியாடி முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். கலீபா அபூபக்கர் சித்தீக் (ரலி) அவர்கள் தேர்வு செய்யப்பட்ட காட்சியை எடுத்துப் பாருங்கள்! ஒரு மக்கள் தலைவர் சில சிக்கல்களை தாண்டி எவ்வாறு அற்புதமாக தேர்வு செய்யப் பட்டார் என்பதை அறிவீர்கள்.! ஆலோசனையின் அடிப்படையில் தகுதி குறித்த விவாத்த்திற்குப் பின் அபூபக்கர் சித்தீக் (ரலி) தேர்வு செய்யப்பட்டார். ஆட்சித்தலைமைக்காக மனித வரலாற்றில் நடைபெற்ற மிக முக்கியமான தேர்வு அது.
ﻟﻤﺎ ﻋﻠﻢ ﺍﻟﺼﺤﺎﺑﺔ ﺭﺿﻲ ﺍﻟﻠﻪ ﻋﻨﻬﻢ ﺑﻮﻓﺎﺓ ﺭﺳﻮﻝ ﺍﻟﻠﻪ ﺍﺟﺘﻤﻊ ﺍﻷﻧﺼﺎﺭ ﻓﻲ ﺳﻘﻴﻔﺔ ﺑﻨﻲ ﺳﺎﻋﺪﺓ ﻓﻲ ﺍﻟﻴﻮﻡ ﻧﻔﺴﻪ ﻭﻫﻮ ﻳﻮﻡ ﺍﻻﺛﻨﻴﻦ ﺍﻟﺜﺎﻧﻲ ﻋﺸﺮ ﻣﻦ ﺷﻬﺮ ﺭﺑﻴﻊ ﺍﻷﻭﻝ ﻣﻦ ﺍﻟﺴﻨﺔ ﺍﻟﺤﺎﺩﻳﺔ ﻋﺸﺮ ﻟﻠﻬﺠﺮﺓ، ﻭﺗﺪﺍﻭﻟﻮﺍ ﺍﻷﻣﺮ ﺑﻴﻨﻬﻢ ﻓﻲ ﺍﺧﺘﻴﺎﺭ ﻣﻦ ﻳﻠﻲ ﺍﻟﺨﻼﻓﺔ ﻣﻦ ﺑﻌﺪﻩ ﻭﺍﻟﺘﻒ ﺍﻷﻧﺼﺎﺭ ﺣﻮﻝ ﺯﻋﻴﻢ ﺍﻟﺨﺰﺭﺝ ﺳﻌﺪ ﺑﻦ ﻋﺒﺎﺩﺓ ﻭﻟﻤﺎ ﺑﻠﻎ ﺧﺒﺮ ﺍﺟﺘﻤﺎﻉ ﺍﻷﻧﺼﺎﺭ ﻓﻲ ﺳﻘﻴﻔﺔ ﺑﻨﻲ ﺳﺎﻋﺪﺓ ﺇﻟﻰ ﺍﻟﻤﻬﺎﺟﺮﻳﻦ ﻗﺎﻝ ﻋﻤﺮ : ﻓﺎﻧﻄﻠﻘﻨﺎ ﺣﺘﻰ ﺃﺗﻴﻨﺎﻫﻢ ﻓﻲ ﺳﻘﻴﻔﺔ ﺑﻨﻲ ﺳﺎﻋﺪﺓ، ﻓﺈﺫﺍ ﺭﺟﻞ ﻣﺰﻣِّﻞُ ﺑﻴﻦ ﻇﻬﺮﺍﻧﻴﻬﻢ، ﻓﻘﻠﺖ: ﻣﻦﻫﺬﺍ؟ ﻓﻘﺎﻟﻮﺍ : ﻫﺬﺍ ﺳﻌﺪ ﺑﻦ ﻋﺒﺎﺩﺓ، .. . ﻓﻠﻤﺎ ﺟﻠﺴﻨا ﻗﻠﻴﻼً ﺗﺸﻬَّﺪ ﺧﻄﻴﺒﻬﻢ ﻓﺄﺛﻨﻰ ﻋﻠﻰ ﺍﻟﻠﻪ ﺑﻤﺎ ﻫﻮ ﺃﻫﻠﻪ، ﺛﻢ ﻗﺎﻝ: ﺃﻣﺎ ﺑﻌﺪ ﻓﻨﺤﻦ ﺃﻧﺼﺎﺭ ﺍﻟﻠﻪ ﻭﻛﺘﻴﺒﺔ ﺍﻹﺳﻼﻡ ﻭﺃﻧﺘﻢ ﻣﻌﺸﺮ ﺍﻟﻤﻬﺎﺟﺮﻳﻦ- ﺭﻫﻂ، ﻭﻗﺪ ﺩﻓﺖ ﺩﺍﻓﺔ ﻣﻦ ﻗﻮﻣﻜﻢ، ﻓﺈﺫﺍ ﻫﻢ ﻳﺮﻳﺪﻭﻥ ﺃﻥ ﻳﺨﺘﺰﻟﻮﻧﺎ ﻣﻦ ﺃﺻﻠﻨﺎ ﻭﺃﻥ ﻳﺤﻀﻨﻮﻧﺎ ﻣﻦ ﺍﻷﻣﺮ، ﻓﻠﻤﺎ ﺳﻜﺖ ﺃﺭﺩﺕ ﺃﻥ ﺃﺗﻜﻠﻢ- ﻭﻛﻨﺖ ﻗﺪ ﺯﻭَّﺭﺕُ ﻣﻘﺎﻟﺔ ﺃﻋﺠﺒﺘﻨﻲ ﺃﺭﻳﺪ ﺃﻥ ﺃﻗﺪّﻣﻬﺎ ﺑﻴﻦ ﻳﺪﻱ ﺃﺑﻲ ﺑﻜﺮ- ﻭﻛﻨﺖ ﺃﺩﺍﺭﻱ ﻣﻨﻪ ﺑﻌﺾ ﺍﻟﺤﺪِّ، ﻓﻠﻤﺎ ﺃﺭﺩﺕ ﺃﻥ ﺃﺗﻜﻠﻢ ﻗﺎﻝ ﺃﺑﻮ ﺑﻜﺮ : ﻋﻠﻰ ﺭﺳﻠﻚ . ﻓﻜﺮﻫﺖ ﺃﻥ ﺃﻏﻀﺒﻪ، ﻓﺘﻜﻠﻢ ﺃﺑﻮ ﺑﻜﺮ، ﻓﻜﺎﻥ ﻫﻮ ﺃﺣﻠﻢ ﻣﻨﻲ ﻭﺃﻭﻗﺮ، ﻭﺍﻟﻠﻪ ﻣﺎ ﺗﺮﻙ ﻣﻦ ﻛﻠﻤﺔ ﺃﻋﺠﺒﺘﻨﻲ ﻓﻲ ﺗﺰﻭﻳﺮﻱ ﺇﻻ ﻗﺎﻝ ﻓﻲ ﺑﺪﻳﻬﺘﻪ ﻣﺜﻠﻬﺎ ﺃﻭ ﺃﻓﻀﻞ ﻣﻨﻬﺎ ﺣﺘﻰ ﺳﻜﺖ. ﻓﻘﺎﻝ ﻣﺎﺫﻛﺮﺗﻢ ﻓﻴﻜﻢ ﻣﻦ ﺧﻴﺮ ﻓﺄﻧﺘﻢ ﻟﻪ ﺃﻫﻞ، ﻭﻟﻦ ﻳُﻌﺮﻑ ﻫﺬﺍ ﺍﻷﻣﺮ ﺇﻻ ﻟﻬﺬﺍ ﺍﻟﺤﻲِّ ﻣﻦ ﻗﺮﻳﺶ، ﻫﻢ ﺃﻭﺳﻂ ﺍﻟﻌﺮﺏ ﻧﺴﺒﺎً ﻭﺩﺍﺭﺍً. ﻭﻗﺪ ﺭﺿﻴﺖ ﻟﻜﻢ ﺃﺣﺪ ﻫﺬﻳﻦ ﺍﻟﺮﺟﻠﻴﻦ ﻓﺒﺎﻳﻌﻮﺍ ﺃﻳﻬﻤﺎ ﺷﺌﺘﻢ - ﻓﺄﺧﺬ ﺑﻴﺪﻱ ﻭﻳﺪ ﺃﺑﻲ ﻋُﺒﻴﺪﺓ ﺑﻦ ﺍﻟﺠﺮﺍﺡ ﻭﻫﻮ ﺟﺎﻟﺲ ﺑﻴﻨﻨﺎ- ﻓﻠﻢ ﺃﻛﺮﻩ ﻣﻤﺎ ﻗﺎﻝ ﻏﻴﺮﻫﺎ، ﻭﺍﻟﻠﻪ ﺃﻥ ﺃﻗﺪّﻡ ﻓﺘﻀﺮﺏ ﻋﻨﻘﻲ ﻻﻳُﻘﺮِّﺑﻨﻲ ﺫﻟﻚ ﻣﻦ ﺇﺛﻢ ﺃﺣﺐ ﺇﻟﻲَّ ﻣﻦ ﺃﻥ ﺃﺗﺄﻣﺮ ﻋﻠﻰ ﻗﻮﻡ ﻓﻴﻬﻢ ﺃﺑﻮ ﺑﻜﺮ، ﺍﻟﻠﻬﻢ ﺇﻻ ﺃﻥ ﺗُﺴَﻮِّﻝ ﺇﻟﻲَّ ﻧﻔﺴﻲ ﻋﻨﺪ ﺍﻟﻤﻮﺕ ﺷﻴﺌﺎً ﻻﺃﺟﺪﻩ ﺍﻵﻥ ﻓﻘﺎﻝ ﻗﺎﺋﻞ ﻣﻦ ﺍﻷﻧﺼﺎﺭ ﻣﻨﺎ ﺃﻣﻴﺮ ﻭﻣﻨﻜﻢ ﺃﻣﻴﺮ ﻳﺎﻣﻌﺸﺮ ﻗﺮﻳﺶ، ﻓﻜﺜﺮ ﺍﻟﻠﻐﻂ، ﻭﺍﺭﺗﻔﻌﺖ ﺍﻷﺻﻮﺍﺕ، ﺣﺘﻰ ﻓﺮﻗﺖ ﻣﻦ ﺍﻻﺧﺘﻼﻑ ﻓﻘﻠﺖ: ﺃﺑﺴﻂ ﻳﺪﻙ ﻳﺎ ﺃﺑﺎ ﺑﻜﺮ، ﻓﺒﺴﻂ ﻳﺪﻩ، ﻓﺒﺎﻳﻌﺘﻪ ﻭﺑﺎﻳﻌﻪ ﺍﻟﻤﻬﺎﺟﺮﻭﻥ ﺛﻢ ﺑﺎﻳﻌﺘﻪ ﺍﻷﻧﺼﺎﺭ. . :

-

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டகுடியரசுத் தத்துவம் நிலை நாட்டப் பட்ட ஒரு முறை இது. 2 ஆண்டுகள் 3 மாதம் 13 நாட்கள் அவரது ஆட்சி நீடித்தது. அபூபக்கர் சித்தீக் (ரலி) அவர்கள் தனது இறுதி நேரத்தில் உமர் (ரலி) அவர்களை அடுத்த தலைவராக தான் தேர்வு செய்தார். உறவோ, நட்போ, அதற்கு காரணமல்ல. தகுதி மட்டுமே காரணமாக இருந்தது. மரண தருவாயில் பல தோழர்களிடம் ஆலோசித்தார். பலரும் அவருடை கருத்தை ஏற்பதாக கூறினர். உமர் (ரலி) அவர்களின் பெய்ரை முன் மொழிந்தார். அனைவரும் ஏற்றனர்.

ﻭﻛﺬﻟﻚ ﺍﺳﺘﺸﺎﺭ ﺳﻌﻴﺪ ﺑﻦ ﺯﻳﺪ ﻭﻋﺪﺩﺍً ﻣﻦ ﺍﻷﻧﺼﺎﺭ ﻭﺍﻟﻤﻬﺎﺟﺮﻳﻦ، ﻭﻛﻠﻬﻢ ﺗﻘﺮﻳﺒﺎً ﻛﺎﻧﻮﺍ ﺑﺮﺃﻱ ﻭﺍﺣﺪ ﻓﻲ ﻋﻤﺮ ﺇﻻ ﻃﻠﺤﺔ ﺑﻦ ﻋﺒﻴﺪﺍﻟﻠﻪ ﺧﺎﻑ ﻣﻦ ﺷﺪﺗﻪ، ﻓﻘﺪ ﻗﺎﻝ ﻷﺑﻲ  ﺑﻜﺮ ﻣﺎﺃﻧﺖ ﻗﺎﺋﻞ ﻟﺮَﺑِّﻚ ﺇﺫﺍ ﺳﺄﻟﻚ ﻋﻦ ﺍﺳﺘﺨﻼﻓﻚ ﻋﻤﺮ ﻋﻠﻴﻨﺎ ﻭﻗﺪ ﺗﺮﻯ ﻏﻠﻈﺘﻪ؟ ﻓﻘﺎﻝ ﺃﺑﻮ ﺑﻜﺮ : ﺃﺟﻠﺴﻮﻧﻲ  ﺃﺑﺎﻟﻠﻪ ﺗﺨﻮﻓﻮﻧﻲ؟ ﺧﺎﺏ ﻣﻦ ﺗﺰﻭَّﺩَ ﻣﻦ ﺃﻣﺮﻛﻢ ﺑﻈﻠﻢ ﺃﻗﻮﻝ ﺍﻟﻠﻬﻢ ﺍﺳﺘﺨﻠﻔﺖ ﻋﻠﻴﻬﻢ ﺧﻴْﺮَ ﺃﻫْﻠﻚَ  ﻭﺑﻴﻦ ﻟﻤﻦ ﻧﺒﻬﻪ ﺇﻟﻰ ﻏﻠﻈﺔ ﻋﻤﺮ ﻭﺷﺪﺗﻪ ﻓﻘﺎﻝ : ﺫﻟﻚ ﻷﻧﻪ ﻳﺮﺍﻧﻲ ﺭﻗﻴﻘﺎً ﻭﻟﻮ ﺃﻓﻀﻰ ﺍﻷﻣﺮ ﺇﻟﻴﻪ ﻟﺘﺮﻙ ﻛﺜﻴﺮﺍ ﻣﻤﺎ ﻋﻠﻴﻪ ﺛﻢ ﻛﺘﺐ ﻋﻬﺪﺍً ﻣﻜﺘﻮﺑﺎً ﻳﻘﺮﺃ ﻋﻠﻰ ﺍﻟﻨﺎﺱ ﻓﻲ ﺍﻟﻤﺪﻳﻨﺔ ﻭﻓﻲ ﺍﻷﻧﺼﺎﺭ ﻋﻦ ﻃﺮﻳﻖ ﺃﻣﺮﺍﺀ ﺍﻷﺟﻨﺎﺩ ﻓﻜﺎﻥ ﻧﺺ ﺍﻟﻌﻬﺪ ﺑﺴﻢ ﺍﻟﻠﻪ ﺍﻟﺮﺣﻤﻦ ﺍﻟﺮﺣﻴﻢ ﻫﺬﺍ ﻣﺎﻋﻬﺪ ﺃﺑﻮ ﺑﻜﺮ ﺑﻦ ﺃﺑﻲ  ﻗﺤﺎﻓﺔ ﻓﻲ ﺁﺧﺮ ﻋﻬﺪﻩ ﺑﺎﻟﺪﻧﻴﺎ ﺧﺎﺭﺟﺎً ﻣﻨﻬﺎ، ﻭﻋﻨﺪ ﺃﻭﻝ ﻋﻬﺪﻩ ﺑﺎﻵﺧﺮﺓ ﺩﺍﺧﻼً ﻓﻴﻬﺎ، ﺣﻴﺚ ﻳﺆﻣﻦ ﺍﻟﻜﺎﻓﺮ، ﻭﻳﻮﻗﻦ ﺍﻟﻔﺎﺟﺮ، ﻭﻳﺼﺪﻕ ﺍﻟﻜﺎﺫﺏ، ﺇﻧﻲ ﺃﺳﺘﺨﻠﻔﺖ ﻋﻠﻴﻜﻢ ﺑﻌﺪﻱ  ﻋﻤﺮ ﺑﻦ ﺍﻟﺨﻄﺎﺏ ﻓﺎﺳﺘﻤﻌﻮﺍ ﻟﻪ ﻭﺃﻃﻴﻌﻮﺍ، ﻭﺇﻧﻲ ﻟﻢ ﺁﻝُ ﺍﻟﻠﻪ ﻭﺭﺳﻮﻟﻪ ﻭﺩﻳﻨﻪ ﻭﻧﻔﺴﻲ، ﻭﺇﻳﺎﻛﻢ ﺧﻴﺮﺍً، ﻓﺈﻥ ﻋَﺪَﻝَ ﻓﺬﻟﻚ ﻇﻨﻲ ﺑﻪ ﻭﻋﻠﻤﻲ ﻓﻴﻪ، ﻭﺇﻥ ﺑﺪﻝ ﻓﻠﻜﻞ ﺍﻣﺮﺉ ﻣﺎﺍﻛﺘﺴﺐ، ﻭﺍﻟﺨﻴﺮ ﺃﺭﺩﺕ ﻭﻻﺃﻋﻠﻢ ﺍﻟﻐﻴﺐ }ﻭَﺳَﻴَﻌْﻠَﻢُ  ﺍﻟَّﺬِﻳﻦَ ﻇَﻠَﻤُﻮﺍ ﺃَﻱَّ ﻣُﻨْﻘَﻠَﺐٍ ﻳَﻨْﻘَﻠِﺒُﻮﻥَ { ‏(ﺳﻮﺭﺓ ﺍﻟﺸﻌﺮﺍﺀ، ﺁﻳﺔ 227:‏).  :

மக்களுக்காக தேர்ந்தெடுக்கப் படும் குடியரசுத் தத்துவத்தின் இரண்டாம் அணுகுமுறை இது. 10 ஆண்டுகள் 5 மாதம் 28 நாட்கள் உமர் (ரலி) ஆட்சி செய்தார். உமர் (ரலி) அவர்கள் தன்னுடைய இறுதி நேரத்தில் ஆறு நபர்களிடம் பொறுப்பை ஒப்ப்டைத்தார்.

ﺇِﻧِّﻲ ﻟَﺎ ﺃَﻋْﻠَﻢُ ﺃَﺣَﺪًﺍ ﺃَﺣَﻖَّ ﺑِﻬَﺬَﺍ ﺍﻟْﺄَﻣْﺮِ ﻣِﻦْ ﻫَﺆُﻟَﺎﺀِ ﺍﻟﻨَّﻔَﺮِ ﺍﻟَّﺬِﻳﻦَ ﺗُﻮُﻓِّﻲَ ﺭَﺳُﻮﻝُ ﺍﻟﻠَّﻪِ ﺻَﻠَّﻰ ﺍﻟﻠَّﻪُ ﻋَﻠَﻴْﻪِ ﻭَﺳَﻠَّﻢَ ﻭَﻫُﻮ ﻋَﻨْﻬُﻢْ ﺭَﺍﺽٍ ﻓَﻤَﻦْ ﺍﺳْﺘَﺨْﻠَﻔُﻮﺍ ﺑَﻌْﺪِﻱ ﻓَﻬُﻮَ ﺍﻟْﺨَﻠِﻴﻔَﺔُ  ﻓَﺎﺳْﻤَﻌُﻮﺍ ﻟَﻪُ ﻭَﺃَﻃِﻴﻌُﻮﺍ ﻓَﺴَﻤَّﻰ ﻋُﺜْﻤَﺎﻥَ ﻭَﻋَﻠِﻴًّﺎ ﻭَﻃَﻠْﺤَﺔَ  ﻭَﺍﻟﺰُّﺑَﻴْﺮَ ﻭَﻋَﺒْﺪَ ﺍﻟﺮَّﺣْﻤَﻦِ ﺑْﻦَ ﻋَﻮْﻑٍ ﻭَﺳَﻌْﺪَ ﺑْﻦَ ﺃَﺑِﻲ ﻭَﻗَّﺎﺹٍ ﻓَﻠَﻤَّﺎ ﻓُﺮِﻍَ ﻣِﻦْ ﺩَﻓْﻨِﻪِ ﺍﺟْﺘَﻤَﻊَ ﻫَﺆُﻟَﺎﺀِ ﺍﻟﺮَّﻫْﻂُ ﻓَﻘَﺎﻝَ ﻋَﺒْﺪُ ﺍﻟﺮَّﺣْﻤَﻦِ ﺍﺟْﻌَﻠُﻮﺍ ﺃَﻣْﺮَﻛُﻢْ ﺇِﻟَﻰ ﺛَﻠَﺎﺛَﺔٍ ﻣِﻨْﻜُﻢْ ﻓَﻘَﺎﻝَ ﺍﻟﺰُّﺑَﻴْﺮُ ﻗَﺪ ﺟَﻌَﻠْﺖُ ﺃَﻣْﺮِﻱ ﺇِﻟَﻰ ﻋَﻠِﻲٍّ ﻓَﻘَﺎﻝَ ﻃَﻠْﺤَﺔُ ﻗَﺪْ ﺟَﻌَﻠْﺖُ ﺃَﻣْﺮِﻱْ ﺇِﻟَﻰ ﻋُﺜْﻤَﺎﻥَ ﻭَﻗَﺎﻝَ ﺳَﻌْﺪٌ ﻗَﺪْ ﺟَﻌَﻠْﺖُ ﺃَﻣْﺮِﻱ ﺇِﻟَﻰ ﻋَﺒْﺪ ﺍﻟﺮَّﺣْﻤَﻦِ ﺑْﻦِ ﻋَﻮْﻑٍ ﻓَﻘَﺎﻝَ ﻋَﺒْﺪُ ﺍﻟﺮَّﺣْﻤَﻦِ ﺃَﻳُّﻜُﻤَﺎ ﺗَﺒَﺮَّﺃَ ﻣِﻦْ ﻫَﺬَﺍ ﺍﻟْﺄَﻣْﺮِ ﻓَﻨَﺠْﻌَﻠُﻪُ ﺇِﻟَﻴْﻪِ ﻭَﺍﻟﻠَّﻪُ ﻋَﻠَﻴْﻪِ ﻭَﺍﻟْﺈِﺳْﻠَﺎﻡُ ﻟَﻴَﻨْﻈُﺮَﻥَّ ﺃَﻓْﻀَﻠَﻬُﻢْ ﻓِﻲ ﻧَﻔْﺴِﻪِ ﻓَﺄُﺳْﻜِﺖَ ﺍﻟﺸَّﻴْﺨَﺎﻥِ ﻓَﻘَﺎﻝَ ﻋَﺒْﺪُ ﺍﻟﺮَّﺣْﻤَﻦِ ﺃَﻓَﺘَﺠْﻌَﻠُﻮﻧَﻪُ ﺇِﻟَﻲَّ ﻭَﺍﻟﻠَّﻪُ ﻋَﻠَﻲَّ ﺃَﻥْ ﻟَﺎ ﺁﻝُ ﻋَﻦْ ﺃَﻓْﻀَﻠِﻜُﻢْ ﻗَﺎﻟَﺎ ﻧَﻌَﻢْ ﻓَﺄَﺧَﺬَ ﺑِﻴَﺪِ ﺃَﺣَﺪِﻫِﻤَﺎ ﻓَﻘَﺎﻝَ ﻟَﻚَ ﻗَﺮَﺍﺑَﺔ ﻣِﻦْ ﺭَﺳُﻮﻝِ ﺍﻟﻠَّﻪِ ﺻَﻠَّﻰ ﺍﻟﻠَّﻪُ ﻋَﻠَﻴْﻪِ ﻭَﺳَﻠَّﻢَ ﻭَﺍﻟْﻘَﺪَﻡُ ﻓِﻲ ِ ﺍﻟْﺈِﺳْﻠَﺎﻡِ ﻣَﺎ ﻗَﺪْ ﻋَﻠِﻤْﺖَ ﻓَﺎﻟﻠَّﻪُ ﻋَﻠَﻴْﻚَ ﻟَﺌِﻦْ ﺃَﻣَّﺮْﺗُﻚَ ﻟَﺘَﻌْﺪِﻟَﻦَّ ﻭَﻟَﺌِﻦْ ﺃَﻣَّﺮْﺕُ ﻋُﺜْﻤَﺎﻥَ ﻟَﺘَﺴْﻤَﻌَﻦَّ ﻭَﻟَﺘُﻄِﻴﻌَﻦَّ ﺛُﻢَّ ﺧَﻠَﺎ ﺑِﺎﻟْﺂﺧَﺮِ ﻓَﻘَﺎﻝَ ﻟَﻪُ ﻣِﺜْﻞَ ﺫَﻟِﻚَ ﻓَﻠَﻤَّﺎ ﺃَﺧَﺬَ ﺍﻟْﻤِﻴﺜَﺎﻕَ ﻗَﺎﻝَ: ﺍﺭْﻓَﻊْ ﻳَﺪَﻙَ ﻳَﺎ ﻋُﺜْﻤَﺎﻥُ ﻓَﺒَﺎﻳَﻌَﻪُ ﻓَﺒَﺎﻳَﻊَ ﻟَﻪُ ﻋَﻠِﻲٌّ ﻭَﻭَﻟَﺞَ ﺃَﻫْﻞُ ﺍﻟﺪَّﺍﺭِ ﻓَﺒَﺎﻳَﻌُﻮﻩُ .

இன்றைய ஜனாதிபதி எம் பி எம் எல் ஏ க்களால் தேர்ந்தெடுக்கப் படுவது போல மக்களது பிரதிநிதிகளால் பிரமுகர்களால் ஆட்சித்தலைவர் தேர்ந்தெடுக்கப் பட்ட மூன்றாவது நடைமுறை இது. 12 ஆண்டுகள் அன்னாரது ஆட்சி தொடர்ந்தது. உஸ்மான் (ரலி) அவர்கள் எதிர்பாராமால் கொலை செய்யப் பட்ட சூழ்நிலையில் மக்கா மதீனா மற்றும் ஹிஜாஸ் பகுதி பிரமுகர்கள் அலி (ரலி) அவர்களை அடுத்த ஆட்சியாளராக தேர்ந்தெடுத்தார்கள். இஸ்லாம் வெகு தூரத்திற்கு பரவி இருந்த சூழலில் அதன் பிறகு சில பிரச்சினைகள் ஏற்பட்டன. ஜனாதிபதிக்கும் சிரியா மாநில ஆளுநர் முஆயா (ரலி) அவர்களுக்கும் கருத்துவேறுபாடு எழுந்தது. முஸ்லிம்களுக்கு இடையே சண்டைகள் நடந்தன. முஆவியா (ரலி) யிடம் சிறந்த ஆளூமை திறன் பிறந்தது. அதனால் தான் அவரை சிரியாவின் ஆளூநராக உமர் (ரலி) நியமித்தார்.

இறுதியில் அலி (ரலி) அவர்கள அரசியலில் தான் தோன்றித்தனமான கருத்துக் கொண்ட ஹாரிஜிய்யாக்களாக் கொல்லப் பட்டார். 4 ஆண்டுகள் 9 மாதம் அவர் ஆட்சி செய்தார். அதன் பிறகு அலி (ரலி) மகன் ஹஸன் (ரலி அவர்களுக்கு மக்கள் சத்தியப் பிரமாணம் செய்து கொடுத்தார்கள். முஆவியா (ரலி) யுடன் சண்டை தொடர்ந்த்து. முஸ்லிம்கள் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொல்வதை விரும்பாத ஹஸன் (ரலி) அவர்கள் அதிகாரத்தை திறமை மிக்க முஆவியா (ரலி) அவர்களுக்கு விட்டுக் கொடுத்தார். உலக வரலாற்றில் மிக அற்புதமான மனிதராக ஹஸன் (ரலி) அவர்கள் திகழ்கிறார்.

ஹஸன் (ரலி) அவர்கள் தான் விரும்பிய ஷரத்துக்களை எழுதிக் கொள்வதற்காக முஆவியா (ரலி) வெற்றுத் தாளில் கையெழுத்திட்டு வழங்கினார். முஆவியா (ரலி) தன்னுடை மரணத்திற்குப் பிறகு ஆட்சியை ஹஸன் (ரலி) அவர்களிடம் தருவதாக ஒப்புக் கொண்டார். ஹஸன் (ரலி) 6 மாதம் ஆட்சிப் பொறுப்பில் இருந்தார்.
ﻭﺑﻌﺪ ﻭﻓﺎﺓ ﻋﻠﻲّ ﺑﻮﻳﻊ ﻻﺑﻨﻪ ﺍﻟﺤﺴﻦ ﺑﺎﻟﺨﻼﻓﺔ ﻓﻲ ﺍﻟﻌﺮﺍﻕ، ﻟﻜﻦ ﻣﺎ ﻟﺒﺚ ﺍﻟﺤﺴﻦ ﺃﻥ ﺗﻨﺎﺯﻝ ﻟﻤﻌﺎﻭﻳﺔ ﺗﺠﻨﺒﺎً ﻹﺭﺍﻗﺔ ﺩﻣﺎﺀ ﺍﻟﻤﺴﻠﻤﻴﻦ ﻓﻲ ﺣﺮﺏ ﺩﺍﺧﻠﻴﺔ، ، ﻭﻛﺎﻥ ﺍﻟﺬﻳﻦ ﺑﺎﻳﻌﻮﺍ ﺍﻟﺤﺴﻦ 40000 ﺃﻭ ﻧﺤﻮ ﺫﻟﻚ ﻣﻦ ﺃﻫﻞ  ﺍﻟﻌﺮﺍﻕ ﻟﻜﻨﻪ … ﺭﺃﻯ ﺃﻥ ﺍﻟﺤﺮﺏ ﺍﻟﺪﺍﺧﻠﻴﺔ ﺗﻀﻌﻒ ﺍﻟﻤﺴﻠﻤﻴﻦ ﺇﺫ ﻗﺘﻞ ﻛﺜﻴﺮ ﻣﻦ ﻛﺒﺎﺭ ﺍﻟﺼﺤﺎﺑﺔ ﻓﻲ ﻣﻮﻗﻌﺔ ﺍﻟﺠﻤﻞ ﻭﺻﻔﻴﻦ ﺑﺴﺒﺐ ﺍﻟﻨﺰﺍﻉ ﻋﻠﻰ ﺍﻟﺨﻼﻓﺔ، ﻭﺃﺧﻴﺮﺍً ﻗﺘﻞ  ﺃﺑﻮﻩ ﻏﺪﺭﺍً ﻓﺂﺛﺮ ﺍﺟﺘﻨﺎﺏ ﺍﻟﺤﺮﺏ ﺑﺄﻥ ﺗﺮﻙ ﺍﻷﻣﺮ ﻟﻤﻌﺎﻭﻳﺔ ﺑﻌﺪ ﺃﻥ ﺍﺷﺘﺮﻁ ﻋﻠﻴﻪ ﺷﺮﻭﻃﺎً ﻗﺒﻞ ﺑﻌﻀﻬﺎ ﻭﺭﻓﺾ ﺍﻟﺒﻌﺾ  ﺍﻵﺧﺮ ﻭﺍﻧﺘﻘﻞ ﺇﻟﻰ ﺍﻟﻤﺪﻳﻨﺔ ﺗﺎﺭﻛﺎً ﻛﻞ ﻋﺪﺍﺀ، ﺍﺷﺘﺮﻁ ﺍﻟﺤﺴﻦ ﻋﻠﻰ ﻣﻌﺎﻭﻳﺔ ﺃﻥ ﺗﻜﻮﻥ ﻟﻪ ﺍﻟﺨﻼﻓﺔ ﺑﻌﺪﻩ.

சில காலம் கடந்த நிலையில். இஸ்லாம் பெருமளவில் வளர்ச்சியுற்ற சூழலில் முஆவியா (ரலி) வுக்கு அவரது மகன் யஜீதை அடுத்த ஆட்சியாளராக நியமிக்குமாறு ஆலோசனை கூறினார் முகீரது பின் ஷுஅபா (ரலி) இஸ்லாமிய அரசியலில் மன்னராட்சிக்கான முதல் வித்து விதைக்க்ப பட்டது. அதன் நோக்கம் பரந்துபட்ட அரசை பாதுகாப்பதற்காக என்று சொல்லப் பட்டது. அப்போது டமாஸ்கஸை தலைமையமாகக் கொண்டு இஸ்லாம் வெகு தூரத்திற்கு பரவி இருந்தது. முஆவியா (ரலி) பெருமானாருக்கு வஹி எழுதுபவராக இருந்தவர்.

முகீரா ஹுதைபிய்யாவின் போது பெருமானார் (ஸல்) அவர்களிடம் பைஅத் செய்து கொடுத்தவர்களில் ஒருவர். இவர்களில் எவரையும் குறை கூறலாகாது. அரசியல் என்பது இப்படித்தான் சூழ்ச்சித் திறன் நிறைந்தது. அரசியலில் பயன்படுத்தப்படும் டிப்ளமஸி என்ற வார்த்தைக்கு சூழ்ச்சித் திறன என்பது பொருள். இதில் யார் வெளியே தெரியாதவாறு காரியம் ஆற்றுகிறாறோ அவர் சிறந்த அரசியல் வாதி ஆகிறார். சூழ்ச்சித் திறன் இல்லாதவர்கள் பெரிய ஆட்சியாளர்களாக இருக்க முடியாது.

முஆவியாவுக்குப் பிறகு அவரது மகன் யஜீத் ஆட்சிப் பொறூப்பேற்றார். இதை ஏற்காத ஏராளமான மக்கள் பழைய தலைநகரான கூபாவிலிருந்து இராக்கின் மற்ற பகுதியிலிருந்தும் ஹுசைன் (ரலி) அவர்களுக்கு கடிதம் எழுதினர். ஹுசைன் (ரலி அவர்கள் முன்வந்தால் தாங்கள் அவருடன் சேர்ந்து போராடுவதாக கூறினர். சுமார் 12 ஆயிரம் கடிதங்கள் வந்தன.

ﻓﺎﺟﺄ ﻣﻌﺎﻭﻳﺔ ﺑﻦ ﺃﺑﻲ ﺳﻔﻴﺎﻥ ﺍﻷﻣﺔ ﺍﻹﺳﻼﻣﻴﺔ ﺑﺘﻌﻴﻴﻦ ﺍﺑﻨﻪ ﻳﺰﻳﺪ ﺑﻦ ﻣﻌﺎﻭﻳﺔ ﻟﻠﺨﻼﻓﺔ ﻣﻦ ﺑﻌﺪﻩ ﻣﺨﺎﻟﻔﺎ ﺍﻟﺼﻠﺢ ﺍﻟﺬﻱ ﻋﻘﺪﻩ ﻣﻊ ﺍﻟﺤﺴﻦ ﺑﻦ ﻋﻠﻲ، ﻭﺑﺪﺃ ﻓﻲ ﺃﺧﺬ ﺍﻟﺒﻴﻌﺔ ﻟﻪ ﻓﻲ ﺣﻴﺎﺗﻪ ﺗﺮﻏﻴﺒﺎ ﻭﺗﺮﻫﻴﺒﺎ، ﻓﻲ ﺳﺎﺋﺮ ﺍﻷﻗﻄﺎﺭ ﺍﻹﺳﻼﻣﻴﺔ، ﻭﻟﻢ  ﻳﻌﺎﺭﺿﻪ ﺳﻮﻯ ﺃﻫﻞ ﺍﻟﺤﺠﺎﺯ، ﻭﺗﺮﻛﺰﺕ ﺍﻟﻤﻌﺎﺭﺿﺔ ﻓﻲ ﺍﻟﺤﺴﻴﻦ ﺑﻦ ﻋﻠﻲ، ﻭﻋﺒﺪ ﺍﻟﻠﻪ ﺑﻦ ﻋﻤﺮ، ﻭﻋﺒﺪ ﺍﻟﻠﻪ ﺑﻦ ﺍﻟﺰﺑﻴﺮ [2] [3] . ﻭﺿﻊ ﺍﻹﻣﺎﻡ ﺍﻟﺤﺴﻴﻦ ﻧﺼﺐ ﻋﻴﻨﻴﻪ ﻧﺼﻴﺤﺔ ﺃﺑﻴﻪ ﻋﻠﻲ ﺑﻦ ﺃﺑﻲ ﻃﺎﻟﺐ  ﻋﻨﺪﻣﺎ ﺃﻭﺻﺎﻩ ﻭﺍﻹﻣﺎﻡ ﺍﻟﺤﺴﻦ ﻗﺒﻞ ﻭﻓﺎﺗﻪ ﻗﺎﺋﻼً ‏« ﺃﻭﺻﻴﻜﻤﺎ ﺑﺘﻘﻮﻯ ﺍﻟﻠﻪ ﻭﻻ ﺗﻄﻠﺒﺎ ﺍﻟﺪﻧﻴﺎ ﻭﺇﻥ ﻃﻠﺒﺘﻜﻤﺎ ﻭﻻ ﺗﺄﺳﻔﺎ ﻋﻠﻰ ﺷﻲﺀ ﻣﻨﻬﺎ ﺯﻭﻱ  ﻋﻨﻜﻤﺎ ﺍﻓﻌﻼ ﺍﻟﺨﻴﺮ ﻭﻛﻮﻧﺎ ﻟﻠﻈﺎﻟﻢ ﺧﺼﻤﺎً ﻭﻟﻠﻤﻈﻠﻮﻡ ﻋﻮﻧﺎً ‏»  :

ﺗﻮﻓﻲ ﻣﻌﺎﻭﻳﺔ ﺑﻦ ﺃﺑﻲ ﺳﻔﻴﺎﻥ ﺳﻨﺔ 60ﻫـ، ﻭﺧﻠﻔﻪ ﺍﺑﻨﻪ ﻳﺰﻳﺪ؛ ﻓﺒﻌﺚ ﻳﺰﻳﺪ ﺇﻟﻰ ﻭﺍﻟﻴﻪ ﺑﺎﻟﻤﺪﻳﻨﺔ ﻷﺧﺬ ﺍﻟﺒﻴﻌﺔ ﻣﻦ ﺍﻟﺤﺴﻴﻦ ﺍﻟﺬﻱ ﺭﻓﺾ  ﺃﻥ ﻳﺒﺎﻳﻊ " ﻳﺰﻳﺪ " ﻛﻤﺎ ﺭﻓﺾ- ﻣﻦ ﻗﺒﻞ- ﺗﻌﻴﻴﻨﻪ ﻭﻟﻴًﺎ ﻟﻠﻌﻬﺪ ﻓﻲ ﺧﻼﻓﺔ ﺃﺑﻴﻪ ﻣﻌﺎﻭﻳﺔ، ﻭﻏﺎﺩﺭ ﻣﻦ ﺍﻟﻤﺪﻳﻨﺔ ﺇﻟﻰ ﻣﻜﺔ ﻟﺤﺞ ﺑﻴﺖ ﺍﻟﻠﻪ ﺍﻟﺤﺮﺍﻡ،  ﻓﺄﺭﺳﻞ ﺇﻟﻴﻪ ﻳﺰﻳﺪ ﺑﺄﻧّﻪ ﺳﻴﻘﺘﻠﻪ ﺇﻥ ﻟﻢ ﻳﺒﺎﻳﻊ ﺣﺘﻰ ﻭﻟﻮ ﻛﺎﻥ ﻣﺘﻌﻠّﻘﺎ ﺑﺄﺳﺘﺎﺭ ﺍﻟﻜﻌﺒﺔ . ﻓﺎﺿﻄﺮ ﺍﻻﻣﺎﻡ ﺍﻟﺤﺴﻴﻦ ﻋﻠﻴﻪ ﺍﻟﺴﻼﻡ ﻟﻘﻄﻊ ﺣﺠّﺘﻪ  ﻭﺗﺤﻮﻳﻠﻬﺎ ﺇﻟﻰ ﻋﻤﺮﺓ ﻓﻘﻂ ﻭﺧﺮﺝ ﻭﻣﻌﻪ ﺃﻫﻞ ﺑﻴﺘﻪ ﻭﺃﻛﺜﺮ ﺇﺧﻮﺗﻪ ﻭﺃﻃﻔﺎﻟﻪ ﻣﻦ ﻣﻜﺔ ﻗﺎﺻﺪﺍ ﺍﻟﻜﻮﻓﺔ  ﺑﻌﺪﻣﺎ ﺃﺭﺳﻞ ﻟﻪ ﺍﻵﻻﻑ ﻣﻦ ﺃﻫﻠﻬﺎ ﺍﻟﺮﺳﺎﺋﻞ ﺑﺄﻥ ﺃﻗﺪﻡ ﻓﻠﻴﺲ ﻟﻨﺎ ﻭﺍﻟﻌﺎﺩﻝ ﻭﺇﻧﺎ ﺑﺤﺎﺟﺔ ﺇﻟﻰ ﺇﻣﺎﻡ ﻧﺄﺗﻢ ﺑﻪ
.
ﻓﺴﺎﺭ ﻭﻣﻌﻪ ﻧﻔﺮ ﻗﻠﻴﻞ ﻣﻦ ﺃﻫﻠﻪ ﻭﺻﺤﺒﻪ ﻭﻟﻢ ﻳﻌﺒﺄ ﺑﺮﺃﻱ ﻣﻦ ﻧﺼﺤﻪ ﺑﺎﻟﻌﺪﻭﻝ ﻋﻦ ﺍﻟﻤﺴﻴﺮ، ﻓﻠﻤﺎ ﻋﻠﻢ ﻳﺰﻳﺪ ﺑﺬﻟﻚ ﻭﻟَّﻰ ﻋﺒﻴﺪ ﺍﻟﻠﻪ ﺑﻦ ﺯﻳﺎﺩ ﻋﻠﻰ ﺍﻟﻜﻮﻓﺔ ﻭﻋﺰﻝ ﺍﻟﻨﻌﻤﺎﻥ ﺑﻦ ﺑﺸﻴﺮ ﺇﺫ ﻗﻴﻞ ﻋﻨﻪ ﺇﻧﻪ ﺿﻌﻴﻒ ﻭﻋﻴّﻦ ﺍﺑﻦ  ﺯﻳﺎﺩ ﻋﻤﺮ ﺑﻦ ﺳﻌﺪ ﻗﺎﺋﺪﺍً ﻋﻠﻰ ﺟﻴﺶ ﻳﺒﻠﻎ ﻋﺪﺩﻩ  ﻟﻤﺤﺎﺭﺑﺔ ﺍﻟﺤﺴﻴﻦ، ﻓﺤﺎﺭﺑﻪ ﻓﻲ ﻛﺮﺑﻼﺀ ﻭﻫﻲ   4000 ﻗﺮﻳﺔ ﻋﻠﻰ ﺑُﻌﺪ 25 ﻣﻴﻼً ﻣﻦ ﺷﻤﺎﻝ ﻏﺮﺑﻲ ﺍﻟﻜﻮﻓﺔ ﻭﻛﺎﻧﺖ ﻗﻮﺍﺕ ﺍﻟﺤﺴﻴﻦ ﺗﺘﺄﻟﻒ ﻣﻦ 32 ﻓﺎﺭﺳﺎ ﻭ  ﺭﺍﺟﻼ ﻭﺃﻋﻄﻰ ﺭﺍﻳﺘﻪ ﺃﺧﺎﻩ ﺍﻟﻌﺒﺎﺱ ﺑﻦ ﻋﻠﻲ 40 ﻭﻗﺒﻞ ﺃﻥ ﺗﺒﺪﺃ ﺍﻟﻤﻌﺮﻛﺔ ﻟﺠﺄ ﺟﻴﺶ ﺍﺑﻦ ﺯﻳﺎﺩ ﺇﻟﻰ ﻣﻨﻊ ﺍﻟﻤﺎﺀ ﻋﻦ ﺍﻻﻣﺎﻡ ﺍﻟﺤﺴﻴﻦ ﻭﺃﻫﻞ ﺑﻴﺘﻪ ﻭ ﺻﺤﺒﻪ، ﻓﻠﺒﺜﻮﺍ ﺃﻳﺎﻣﺎً ﻳﻌﺎﻧﻮﻥ ﺍﻟﻌﻄﺶ ﻓﻲ ﺟﻮ ﺻﺤﺮﺍﻭﻱ ﺷﺪﻳﺪ ﺍﻟﺤﺮﺍﺭﺓ ﻓﻘﺘﻞ ﺍﻟﺤﺴﻴﻦ ﻓﻲ ﻫﺬﻩ ﺍﻟﻤﻌﺮﻛﺔ ﺑﻌﺪ ﺃﻥ ﺟﺮﺡ ﺟﺮﺍﺣﺎﺕ ﻛﺜﻴﺮﺓ ﻭﻗﺘﻞ ﻣﻦ ﻛﺎﻥ ﻣﻌﻪ ﻭﺃﺭﺳﻞ ﺭﺃﺳﻪ ﺇﻟﻰ ﻳﺰﻳﺪ ﺑﺪﻣﺸﻖ ﻭﻛﺎﻧﺖ ﻧﺘﻴﺠﺔ ﺍﻟﻤﻌﺮﻛﺔ ﻭﻣﻘﺘﻞ ﺍﻟﺤﺴﻴﻦ ﻋﻠﻰ ﻫﺬﺍ ﺍﻟﻨﺤﻮ ﻣﺄﺳﺎﺓ ﻣﺮﻭﻋﺔ ﺃﺩﻣﺖ ﻗﻠﻮﺏ ﺍﻟﻤﺴﻠﻤﻴﻦ  ﻭ ﻏﻴﺮ ﺍﻟﻤﺴﻠﻤﻴﻦ ﻭﻫﺰﺕ ﻣﺸﺎﻋﺮﻫﻢ ﻓﻲ ﻛﻞ ﺍﻧﺤﺎﺀ ﺍﻟﻌﺎﻟﻢ.  



பெருமானார் (ஸல்) அவர்களது பேர்ர் ஹுசைன் (ரலி) அவர்கள் கொல்லப் பட்டது மிகவும் துக்ககரமானது. சோகமயமானது. இதை பயன்படுத்தி இஸ்லாமின் எதிரிகள் தீனில் ஷியா என்ற ஒரு பிரிவை உண்டு பண்ணி விட்டனர். ஆனால் அல்லாஹ் முஸ்லிம் உம்மத்தை பாதுகாத்தான். அவர்கள் ஹுசைன் (ரலி) அவர்களின் கொல்லப் பட்டதில் கடும் துயரமடைந்த போதும், தீனின் முன்னோடிகளுக்கு எதிராக திரும்பவில்லை. இதை ஒரு அரசியல் சோகம் என்ற அளவில் எடுத்துக் கொண்டனர். அப்படித்தான் எடுத்துக் கொள்ள வேண்டும்.

இஸ்லாமிய அரசியல் வரலாற்றில் இது போல ஏராளமான துய்ரச் சம்பவங்கள் உள்ளன. சுமைய்யா (ரலி) அம்மார் (ரலி) ஹம்ஸா (ரலி) போன்றவர்களுக்கு ஏற்பட்ட சோகமும் இது போன்றதே! கர்பலாவில் இமாம் ஹிசைன் (ரலி) கொல்லப் பட்டது குடியரசுக்கான – மக்களாட்சிக்கான போராட்டத்தில் மக்கள் குறிப்பாக முஸ்லிம்கள் எந்த அளவு ஈடுபாடு காட்ட வேண்டும் என்பதற்கு முன்னுதாரணாமாகிவிட்டது.

ﺗﺮﻛﺖ ﻭﺍﻗﻌﺔ ﻛﺮﺑﻼﺀ ﺗﺄﺛﻴﺮﺍ ﺑﻠﻴﻐﺎ ﻋﻠﻰ ﺃﻓﻜﺎﺭ ﺑﻨﻲ ﺍﻹﻧﺴﺎﻥ ﺣﺘﻰ ﻏﻴﺮ ﺍﻟﻤﺴﻠﻤﻴﻦ ﻣﻨﻬﻢ. ﻓﻌﻈﻤﺔ ﺍﻟﺜﻮﺭﺓ ﻭﺫﺭﻭﺓ ﺍﻟﺘﻀﺤﻴﺔ، ﻭﺍﻟﺼﻔﺎﺕ ﺍﻷﺧﺮﻯ ﺍﻟﺘﻲ  ﻳﺘﺤﻠﻰ ﺑﻬﺎ ﺍﻟﺤﺴﻴﻦ ﻭﺃﻧﺼﺎﺭﻩ ﺃﺩّﺕ ﺇﻟﻰ ﻋﺮﺽ ﺍﻟﻜﺜﻴﺮ ﻣﻦ ﺍﻵﺭﺍﺀ ﺣﻮﻝ ﻫﺬﻩ ﺍﻟﺜﻮﺭﺓ ﺍﻟﻤﻠﺤﻤﻴﺔ ﻗﺎﻝ ﻏﺎﻧﺪﻱ، ﺯﻋﻴﻢ ﺍﻟﻬﻨﺪ:  ﻟﻘﺪ ﻃﺎﻟﻌﺖ ﺣﻴﺎﺓ ﺍﻹﻣﺎﻡ ﺍﻟﺤﺴﻴﻦ، ﺷﻬﻴﺪ ﺍﻹﺳﻼﻡ ﺍﻟﻜﺒﻴﺮ، ﻭﺩﻗﻘﺖ ﺍﻟﻨﻈﺮ ﻓﻲ ﺻﻔﺤﺎﺕ ﻛﺮﺑﻼﺀ ﻭﺍﺗﻀﺢ ﻟﻲ ﺃﻥ ﺍﻟﻬﻨﺪ ﺇﺫﺍ ﺃﺭﺍﺩﺕ ﺇﺣﺮﺍﺯ ﺍﻟﻨﺼﺮ، ﻓﻼ ﺑﺪ ﻟﻬﺎ ﻣﻦ ﺍﻗﺘﻔﺎﺀ ﺳﻴﺮﺓ ﺍﻹﻣﺎﻡ ﺍﻟﺤﺴﻴﻦ. .

இந்தியா சுதந்திரம் மடைய விரும்பினார் ஹுசைன் (ரலி) அவர்களின் வரலாறு போதும் என்றார் காந்தி . பிரபல அமெரிக்க வரலாற்றாசிரியர் வாஷிங்டன் இர்விங்சொன்னார்; இமாம் ஹிசைன் விரும்பி இருந்தால் சரணடைந்து எளிதாக தப்பித்திருக்கலாம்.

ஆனால் பனூ உமய்யா குடும்ப ஆட்சிக்கு இஸ்லாம் கட்டுப்பட்டு வதிலிருந்து காப்பதற்காக எந்த துயரத்தையும் தாங்கிக் கொள்ள அவர் தயாரானார். கர்பலாவின் மணற்பரப்பில் ஹுசைன் (ரலி) அவர்களின் உடல் சரிந்தாலும். அவரது ஆன்மா இன்னும் எஞ்சியிருக்கிறது, சிறந்த குடியரசுத்தலைவர்களை உருவாக்கியது மட்டுமல்லாது. குடியரசை பாதுகாப்பதற்கான முயற்சிக்கும் மிக உன்னதமான முன்னுதாரனங்களை இஸ்லாம் உல்கிறகு வழங்கியுள்ளது. நமது நாட்டின் குடியரசு அமைப்பை பாதுகாப்பதற்காக நமக்குள்ள கடப்பாட்டை நாம் உணர வேண்டும். அதுவே கர்பலா தரும் பாடமாகும்.

இமாம் ஹுஸைன் (ரளி) அவர்களின் சிறப்புகள்.
         சுவனத்து இளைஞர்களின் தலைவர்.
         மணம்தரும் நறு மலர்.
         ஹுஸைன் என்னிலிருந்தும் நான் ஹுஸைன் யிலிருந்தும் இருக்கின்றோம்.
         ஹுசைனை யார் நேசிப்பாரோ அவரை அல்லாஹ் நேசிப்பான்.
         யார் என்னையும், இந்த இருவரையும், இவர்களின் தந்தை, மற்றும் தாயையும் யார் நேசிப்பரோ அவரும் நானும் சுவனத்தில் ஒரே இடத்தில் இருப்போம்.
         யா அல்லாஹ் இவர்களை நான் நேசிக்கின்றேன், நீயும் நேசிப்பாயாக, யார் இவர்களை நேசிக்கின்றாரோ அவரை நானும் நேசிக்கின்றேன், நீயும் நேசிப்பாயாக.
         எனக்கு பின்னால் இரண்டை விட்டு செல்கின்றான். அதை பின்பற்றி நடக்கும் காலம் எல்லாம் வழி தவற மாட்டீர்கள். 1. இறை வேதம் 2. எனது குடும்பத்தவர்கள். என்னிடம் ஹவுளுள் கவுசரில் என்னிடம் சேர்க்கும் வரை இவர்கள் உங்களை விட்டு இவர்கள் பிரிய மாட்டார்கள். இப்படி கூறிக்கொண்டே செல்லலாம். நேரமும் காலமும் பத்தாது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எந்தக் காரணத்திற்காக இந்த நாளை நோன்பு நோற்று கண்ணியப்படுத்தச் சொன்னார்களோ அந்த உண்மையை உணர்ந்து நோன்பு நோற்போமாக! மேலும், யா அல்லாஹ்! எங்களை அஹ்லே பைத் மீது முஹப்பத் வைக்கும் கூட்டத்தில் ஆக்குவாயாக. இவர்களை பழிக்கும் கூட்டத்தை விட்டு தூரமக்குவாயாக. எங்களை இமாம் ஹுஸைன் ரழி... அவர்களோடு எழுப்புவாயாக. ஆமீன், ஆமீன் யா ரப்பல் ஆலமீன்.

தொகுத்து வழங்கியவர் னீப் ஜமாலி.

0 comments:

Post a Comment