17 September 2015

அரஃபா - அடேங்கப்பா!

அல்லாஹ் அருள்மறைக் குர்ஆனில் சத்தியமிட்டு சிலாகித்துக் கூறும்
அற்புத நாள் அரஃபா.

வாக்களிக்கப்பட்ட நாளின் மீதும் சாட்சியின் மீதும் சாட்சி சொல்லவேண்டிய நாளின் மீதும் சத்தியமாக!’’ (அல்குர்ஆன் 85: 2,3)

இந்த வசனத்தில் வரும் முதலாவது நாள் மறுமை நாள். இரண்டாவது கூறப்பட்டது வெள்ளிக் கிழமை மூன்றாவது சத்தியம் செய்து கூறப்பட்ட நாள் அரஃபா நாளாகும். (திர்மிதி)*1

அதிசய பிராணி வெளியாகும் நாள்:
அல்லாஹ்வின் அற்புதங்களில் ஒன்றான ‘தாப்பத்துல் அர்ள் மக்காவிலிருந்த வெளியாகி மனிதர்களிடம் உரையாடி நல்லவர் கெட்டவரை அடையாள படுத்துமே அந்த அதிசய பிராணி வெளியாகும் நாள் இந்த அரஃபா தினம்தான். அல்லது அதற்கு முன்னால் பின்னாலுள்ள இரண்டு தினங்களில் வெளியாகும்
அறிவிப்பு இப்னு அப்பாஸ் ரலி.*2

துஆ அதிகம் கபூலாகும் நாள் :
அரஃபா தினத்தில் அசர் தொழுகையில் அருமை நாயகம் சல்லல்லாஹு அலைஹி வசல்லம் மன ஓர்மையோடு ஈடுபட்டிருந்தார்கள். நாய் ஒன்று குறுக்கே வந்து நாயகத்தின் தொழுகைக்கு இடையூறாக நடந்து செல்ல எத்தனித்தது. என்ன வியப்பு? உடனே அது இறந்து வீழ்ந்தது.
தொழுகை முடித்து தோழர்களிடம் தூய நபி வினவினார்கள்: இந்த நாய்க்கு எதிராக நாயனிடம் துஆ செய்தது யார்?’’
நான்தான் நாயகமே’’ என்றார் ஒரு தோழர்.  
 ஒரு மூமின் எது கேட்டாலும் அல்லாஹ் மறுக்காமல் தருகிற அருமையான நேரத்தில் துஆ செய்திருக்கிறீர்’’ என்றார்கள் நபி சல்லல்லாஹு அலைஹி வசல்லம்.3

ஷைத்தான் தன் தலையில் மண்ணை அள்ளிப் போட்டுக்கொண்டு அழுகிற நாள் அரஃபா. ‘எனக்கு ஏற்பட்ட அழிவே.. எனக்கு ஏற்பட்ட நாசமே!’’ என்று அவன் அழுகின்ற அந்த பரிதாப நிலை கண்டு மற்ற ஷைத்தான்கள் எல்லாம் “உனக்கு என்ன ஆயிற்று’’என்பார்கள். அறுபது எழுபது ஆண்டுகளாக நான் அழிவிலே (பாவத்திலே) போட்டு வைத்திருந்த ஒரு கூட்டத்தை அல்லாஹ் இன்று ஒரு நொடியிலே மன்னித்து விட்டான் அதை நினைத்துத்தான் அழுகிறேன் என்பானாம்.4

அரஃபா தினத்தின் மாலைப் பொழுதில் மாநபி சல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்கள் தன சமுதாயத்திற்கு மன்னிப்பு வேண்டியும் அருள் வேண்டியும் அதிக நேரம் துஆ செய்தார்கள். அல்லாஹ் அதற்கு உடனே செவி சாய்த்தான். “நாயகமே நான் ஏற்றுக் கொண்டேன். அதே நேரம் அவர்களுக்குள் ஒருவர் மற்றவருக்கு செய்த அநியாயத்தைத் தவிர.( பாதிக்கப்பட்டவன் மன்னித்தாலே தவிர).’’
“யா அல்லாஹ்! நீ நினைத்தால் பாதிக்கப்பட்டவனுக்கு நன்மையை வழங்கிவிட்டு பாவியை மன்னித்துவிடலாமே’’

இந்த கோரிக்கைக்கு அப்போது பதில் கிடைக்கவில்லை. அனாலும் நபிகளார் விடவில்லை. மறுநாள் மீண்டும் அதே கோரிக்கையை முன் வைத்தார்கள். அல்லாஹ் அதையும் ஏற்றுக் கொண்டான். நபியே! உங்கள் உம்மத்திற்கு மன்னிப்பு வழங்கிவிட்டேன்’’ என்றான்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம் முகம் மலர்ந்தார்கள்.
தோழர்கள் வினவினார்கள்: “அல்லாஹ்வின் தூதரே! என்றைக்குமில்லாத புன்சிரிப்பும் பூரிப்பும் பூமானே தங்கள் பூவிதழ்களில் தெரிகிறதே?’’
“இப்லீஸின் இழிநிலை கண்டுதான் இந்த சிரிப்பு! என் சமூகத்திற்கு நான் வைத்த கோரிக்கையை நாயன் அல்லாஹ் ஏற்றுக் கொண்டதை அறிந்த இப்லீஸ் தாங்க முடியாமல் தன் தலையிலே மண்ணை அள்ளிப் போட்டுக்கொண்டு கதறி அழுகிற காட்சியைக் கண்டுதான் புன்சிரிக்கிறேன்’’ என்றார்கள்.5

அல்லாஹ் அவனது மார்க்கத்தை சம்பூரணமாக்கிய சரித்திர நாள்:
ஒரு யூதன் கலீபா உமர் ரலி அவர்களிடம் வந்து அமீருல் முஃமினீன் அவர்களே! உங்கள் வேதத்தில் ஒரு வசனம் இருக்கிறது. அதை நீங்கள் ஓதவும் செய்கிறீர்கள். அது மட்டும் எங்கள் யூத சமூகத்திற்கு இறங்கி இருந்தால் அந்த நாளைப் பெருநாளாகக் கொண்டாடி இருப்போம்என்று கூறினார். அது எந்த வசனம் என்று கலீபா கேட்க,அதற்கு அவர்‘’இன்றையதினம் நாம் உங்களுக்கு உங்களது மார்க்கத்தை முழுமையாக்கி வைத்து எனது அருளையும் உங்கள் மீது நிரப்பாக்கினோம். உங்களுக்கு இஸ்லாத்தை மார்க்கமாக்கி திருப்தியடைந்தோம். (அல்குர்ஆன் 5:3) என்ற வசனத்தை எடுத்துக் கூறினார்.
அப்போது கலீபா உமர் ரலி அவர்கள் அந்த வசனம் இறங்கிய நாளும் வேளையும் இடமும் கூட எங்களுக்குத் தெரியுமே. வெள்ளிக்கிழமை அரஃபாவில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நின்று கொண்டிருக்கும்போதுதான் அவ்வசனம் இறங்கியது.’’ அதாவது அது இறங்கிய தினத்தைப் பெருநாளாகக் கொண்டாட வேண்டிய அவசியமில்லை. அது இறங்கியதே பெருநாள் தினத்தில்தான் என பதிலளித்தார்கள். (புஹாரி:45) 6

நரக விடுதலை அதிகமாக நடைபெறும் நாள்:
அல்லாஹ் நரகவிடுதலை அளிப்பதில் அரஃபா தினத்தைவிட அதிகமாக வேறு தினங்களில் அளிப்பதில்லை. அன்று அல்லாஹ் அடியார்களிடம் நெருங்கி பிரசன்னமாகிறான். அவர்களைக்குறித்து அமரர்களிடம் சிலாகித்து பெருமை பாராட்டுகிறான். இவர்களுக்கு என்ன தேவை? என்று பிரியத்தோடு கேட்கிறான்.7

அல்லாஹ் தன் அடியார்கள் குறித்து பெருமிதம் அடைகிற நாள்:
ஆயிஷா ரலி-அன்ஹா கூறுவார்களாம்: அரஃபா நாள் பெருமிதத்திற்குரிய நாள்’’ என்று. அப்படிஎன்றால் என்ன? என்று மக்கள் விளக்கம் கேட்கிறபோது, அன்னை கூறுவார்களாம்:
அரஃபா அன்று அல்லாஹ் உலக வானிற்கு வந்து அமரர்களை அழைத்து, “இதோ பாருங்கள் என் அடியார்களை! இவர்களுக்கு ஒரு தூதரை அனுப்பினேன். அவரை நம்பினார்கள். வேதத்தை அனுப்பினேன் அதையும் நம்பினார்கள். தற்போது உலகின் எல்லா பாகங்களிலிருந்தும் என்னிடம் வந்திருக்கிறார்கள் நரக விடுதலையை என்னிடம் வேண்டுகிறார்கள். இதோ நான் தந்துவிட்டேன். அரஃபா நாளைவிட அதிகமாக நரகவிடுதலையை காண முடியாது” என்று கூறுகிறான்.8

அல்லாஹ்வின் அருள் அதிகமாகப் பொழியும் நாள்:
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ''சுவனத்தில் முத்து மாணிக்கம் மரகதம் பவளங்களால் ஆன ஒரு மாளிகை உண்டு''.
ஆயிஷா (ரலி): ''யா ரசூலல்லாஹ் அது யாருக்கு?''
நபி: ''அரஃபா நாளில் நோன்பு வைப்பவருக்கு!''
அரஃபா நாளில் நோன்பு வைத்தவருக்கு அன்று காலையில் அல்லாஹ் நன்மையின் வாசல்களில் 30ஐ திறக்கிறான்தீமையின் வாசல்களில் 30ஐ அடைக்கிறான்.” 9
இந்த நாளில் என்னவெல்லாம் செய்யலாம்?
  • நோன்பு
  • துஆ 
  • பாவமன்னிப்பு 
  • புலன்களை அடக்கி பாவத்தைத் தவிர்ந்து கொள்ளுதல் 

அரபா நாள் நோன்பு பிடிப்பது முன்பின் இரண்டு வருடப் பாவங்களுக்குப் பரிகாரமாகும் என்று அல்லாஹ்விடம் நான் ஆதரவு வைக்கிறேன் . (முஸ்லிம்: அபூதாவூது) 10

அன்று அதிமகமாக துஆவில் ஈடுபடவேண்டும்.
''அரஃபா நாளில் செய்யும் துஆ சிறந்த துஆவாகும்.''11

அலி ரலி அறிவிக்கிறார்கள் நபிகள் சல்லல்லாஹு அலைஹி வசல்லம் கூறினார்கள்: நானும் எனக்கு முன்னுள்ள நபிமார்களும் அரஃபாவில் அதிகம் ஓதிய துஆ: 
لاَ إِلَهَ إِلَّا اللَّهُ ، وَحْدَهُ لاَ شَرِيكَ لَهُ ، لَهُ الْمُلْكُ ، وَلَهُ الْحَمْدُ ، وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ ، اللَّهُمَّ اجْعَلْ فِي سَمْعِي نُورًا ، وَفِي بَصَرِي نُورًا ، وَفِي قَلْبِي نُورًا ، اللَّهُمَّ اشْرَحْ لِي صَدْرِي ، وَيَسِّرْ لِي أَمْرِي ، وَأَعُوذُ بِكَ مِنْ وَسْوَاسِ الصُّدُورِ ،12


ஐம்புலன்களைப் பாதுக்காக்கவேண்டும்.
யார் அரஃபா நாளில் தன் செவி, பார்வை, நாவு இவற்றைப் பாதுகாக்கிறாரோ அவரை இந்த அரஃபாவிலிருந்து அடுத்த அரஃபா வரை அல்லாஹ் பாதுகாக்கிறான்.’’13

----------------------------------
1-عن أبي هريرة قال قال رسول الله صلى الله عليه وسلم اليوم الموعود يوم القيامة واليوم المشهود يوم عرفة والشاهد يوم الجمعة(ترمذي)
2- عن ابن عباس ، رضي الله عنهما قال : « الدابة التي يخرج الله عز وجل من الأرض هي الثعبان الذي كان في البيت ، تخرج قبل التروية  بيوم ، أو يوم التروية ، أو يوم عرفة ، أو يوم النحر » أخبار مكة للفاكهي 2270
3-عن إسحاق بن عبد الله قال : كان رسول الله صلى الله عليه وسلم في صلاة العصر يوم عرفة يوم جمعة إذا كلب يريد أن يمر بين يديه فسقط ميتا ، فلما قضى الصلاة قال صلى الله عليه وسلم : « أيكم دعا على الكلب ؟ » فقال رجل : أنا دعوت عليه . فقال : « دعوت في ساعة ما سأل الله عز وجل فيها مؤمن شيئا إلا استجاب له » وكان الدعاء : لا إله إلا الله الحليم الكريم ، لا إله إلا الله العلي العظيم ، سبحان الله رب السماوات السبع والأرض رب العرش العظيم ، والحمد لله رب العالمين  أخبار مكة للفاكهي  
4-عن جابر بن عبد الله رضي الله عنهما قال : قال رسول الله صلى الله عليه وسلم : « المغفرة تنزل على أهل عرفة مع الحركة الأولى ، فإذا كانت الدفعة الأولى فعند ذلك يضع الشيطان التراب على رأسه يدعو بالويل والثبور » . قال : « فتجتمع إليه شياطينه فيقولون : ما لك ؟ فيقول : قوم قد قتلتهم منذ ستين وسبعين سنة غفر لهم في طرفة عين » أخبار مكة للفاكهي 2681
5-إن رسول الله صلى الله عليه وسلم دعا لأمته عشية عرفة بالمغفرة والرحمة فأكثر الدعاء . قال : فأجابه الله عز وجل أني قد فعلت ، إلا ظلم بعضهم بعضا ، فأما ذنوبهم فما بيني وبينهم فقد غفرتها لهم . فقال : يا رب إنك قادر أن تثيب هذا المظلوم من مظلمته أو تغفر لهذا الظالم . قال : لم يجبه تلك العشية ، فلما كان غداة  المزدلفة أعاد الدعاء ، فأجابه الله عز وجل أني قد غفرت لهم ، ثم تبسم رسول الله صلى الله عليه وسلم ، فقال له بعض أصحابه : يا رسول الله ، تبسمت في ساعة لم تكن تبسم فيها ؟ فقال صلى الله عليه وسلم : « تبسمت من عدو الله إبليس لما علم أن الله عز وجل قد استجاب لي في أمتي هو يدعو بالويل والثبور (2) ويحثي التراب على رأسه » أخبار مكة للفاكهي 2682
6-عن عُمَر بن الخطَّابِ رضي الله عنه أنَّ رَجُلاً من اليهودِ قال له : يا أميرَ المؤمِنينَ آيةٌ في كتابكم تقرؤونها ، لو علينا مَعْشَرَ يَهُودٍ نَزَلَتْ لاتَّخَذْنَا ذلِكَ اليومَ عِيداً ، قال : أيُّ آيةٍ ؟ قال : ( الْيَوْمَ أَكْمَلْتُ لَكُمْ دِينَكُمْ وَأَتْمَمْتُ عَلَيْكُمْ نِعْمَتِي وَرَضِيتُ لَكُمُ الأِسْلاَمَ دِيناً ( قال عُمَرُ : قَدْ عرفْنَا ذلك اليوم والمكانَ الذي أنْزِلَتْ فيه على النبي ( صلى الله عليه وسلم ) وهو قائِمٌ بِعَرَفَةَ يوم جمعة
7-قالت عائشة: إن رسول الله (صلى الله عليه وآله) قال: ما
من يوم أكثر من أن يعتق فيه عبدا من النار من يوم عرفة، وإنه ليدنو
ثم يباهي بهم الملائكة فيقول: ما أراد هؤلاء ؟
8-عن عائشة رضي الله عنها قالت : يوم عرفة يوم المباهاة . قيل لها : وما يوم المباهاة ؟ قالت رضي الله عنها : ينزل الله تبارك وتعالى يوم عرفة إلى السماء الدنيا يدعو ملائكته ويقول : انظروا إلى عبادي شعثا غبرا ، بعثت إليهم رسولا فآمنوا به ، وبعثت إليهم كتابا فآمنوا به ، يأتونني من كل فج عميق يسألوني أن أعتقهم من النار ، فقد أعتقتهم . فلم ير يوم أكثر أن يعتق فيه من النار من يومعرفة أخبار مكة للفاكهي2685
9-عن عائشة رضي الله عنها عن النبي صلى الله عليه وسلم قال إن في الجنة قصورا من در وياقوت وزبرجد وذهب وفضة قلت يا رسول الله لمن هي قال لمن صام يوم عرفة يا عائشة من أصبح صائما يوم عرفة فتح الله عليه ثلاثين بابا من الخير وأغلق عنه ثلاثين بابا من الشر (نزهة المجالس)

10-أن النبي صلى الله عليه وسلم قال صيام يوم عرفة إني احتسب على الله أن يكفر السنة التي قبله والسنة التي بعده أخرجه الترمذى (3/124 ، رقم 749) وقال : حسن . وابن ماجه (1/551 ، رقم 1730) ، وابن حبان (8/95 ، رقم 3632) ، والبيهقى فى شعب الإيمان (3/387 ، رقم 3844) . وأخرجه أيضًا : مسلم (2/818 ، رقم 1162) ، وأبو داود (2/321 ، رقم 2425) .
11--خير الدعاء دعاء يوم عرفة وخير ما قلت أنا والنبيون من قبلى لا إله إلا الله وحده لا شريك له ، له الملك وله الحمد وهو على كل شىء قدير (الترمذى - حسن غريب - عن عمرو بن شعيب عن أبيه عن جده)
أخرجه الترمذى (5/572 ، رقم 3585)

2 comments:

Post a Comment