27 November 2014

உடல் பருமன் பிரச்சனை: இஸ்லாம் கூறும் தீர்வு


 وكُلُواْ وَاشْرَبُواْ وَلاَ تُسْرِفُواْ إِنَّهُ لاَ يُحِبُّ الْمُسْرِفِينَ (القرآن7:31)  
உண்ணுங்கள் பருகுங்கள் வீண்விரையம் செய்யாதீர்கள். நிச்சயமாக வீண்விரயம் செய்வோரை அல்லாஹ் நேசிப்பதில்லை. (அல்குர்ஆன்)

 مَا مَلَأَ آدَمِيٌّ وِعَاءً شَرًّا مِنْ بَطْنٍ بِحَسْبِ ابْنِ آدَمَ أُكُلَاتٌ يُقِمْنَ صُلْبَهُ فَإِنْ كَانَ لَا مَحَالَةَ فَثُلُثٌ لِطَعَامِهِ وَثُلُثٌ لِشَرَابِهِ وَثُلُثٌ لِنَفَسِهِ . (ترمذى)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஆதமின் மகன் (மனிதன்) இட்டு நிரப்பக்கூடிய பைகளில் வயிற்றைவிட மோசமானது வேறெதுவுமில்லை. ஆதமின் மகனுக்கு, அவனது முதுகை நிமிர்த்தக்கூடிய சில கவளங்களே போதும். அதற்கு மேலும் உண்டேயாகவேண்டுமெனில், (வயிற்றில்) மூன்றிலொரு பாகத்தை தனது உணவுக்காகவும் இன்னொரு மூன்றிலொரு பாகத்தை தனது பானத்திற்காகவும் மற்றொரு மூன்றிலொரு பாகத்தை தனது சுவாசத்திற்காகவும் அவன் ஒதுக்கிக்கொள்ளட்டும். (திர்மிதி)

இறுதி காலத்தில் மக்களில் உடல் பெருத்தவர்கள் (குண்டர்கள்) அதிகமாக உலவுவார்கள்.(புஹாரி)

உடல் பருமன் ஏற்படாமல் காக்க சில ஆலோசனைகள்
• நஃப்ஸை (ஆசையை) கட்டுப்படுத்தவேண்டும்.
• குறைவாக உணவு உன்னவேண்டும்.
• பசித்து சாப்பிடவேண்டும்.
• அடிக்கடி கொறித்தலை தவிக்கவேண்டும்.
• எண்ணைப் பண்டங்களை தவிர்க்கவேண்டும்
• போதிய உடற்பயிற்சி வேண்டும்.

உடல் பருமனை குறைக்க 
இஸ்லாம் கூறும் வழி
 صوموا تصحوا (الجامع الصغير-5060)
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நோன்பு வையுங்கள் ஆரோக்கியம் பெறுங்கள். (ஜாமிவுஸ் ஸகீர்-5060)

• நோன்பு வைப்பதின் மூலமே உடல் பருமனை முழுமையாக குறைக்கலாம். (நோன்பு வைக்கிறோம் என்ற பெயரால் சஹருக்கும் இஃப்தாருக்கும் மூச்சு முட்ட சாப்பிட்டால் அந்த நோன்பின் மூலம் கிடைக்கும் பலன் மிகக்குறைவே என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும்.)

நோன்பின் மருத்துவக் குணங்கள்:
1. நோன்பு நோய்களை மட்டும் குணப்படுத்துவது அல்லாமல் நோய் வராமலும் தடுக்கிறது.

2. அதிக இரத்த அழுத்தம் (B.P) குறைகிறது.;

3. இரத்தத்தில் கொழுப்புகளையும், கொலஸ்ட்ராலையும் குறைக்கிறது.
4. இதய அடைப்பு ஏற்படுவதை தடுக்கிறது.
5. உடலில் இரத்த ஓட்ட சுழற்சியைச் சீராக்குகிறது.
6. இரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது.
7. மூட்டுவலி ஆஸ்த்துமா குறைகிறது.
8. மூச்சுக்குழல் அடைப்பு, உடல் எடை,செரிமானக் கோளாறுகள், மைக்ரோன் என்னும் தீராத தலைவலிமலச்சிக்கல்தோல் வியாதிகள் ஆகியவை குணமடைகின்றன.
9. உடல் நோய் எதிர்ப்பு சக்தி பெறுவதால் நோயின்றி நம்மைப் பாதுகாக்கிறது.
10. உடலில் ஏற்படும் காயங்கள், அறுவை சிகிட்சை காயங்கள், உடைந்த தசைகள் ஆகிவை துரிதமாகக் குணமடைகின்றன.



علاج السمنة ( البدانة ) بالاعشاب والطب البديل

التعريف بالمرض:
الكثير منا يصاب بالسمنة والبدانة بسبب كثرة الاكل والنهم وحبه للطعام وخاصة الاطعمة الدسمة مثل الوجبات السريعة والغنية بالدهون والسكريات ، وقلة أكل الخضار والفاكهه الطازجة ، وقد يكون السبب هو استعداد فطري عند الانسان نتيجة خلل في الغدد والهرمونات ، واحيانا بسبب قلة ممارسة الرياضة والمشي

الاعراض:
زيادة الوزن بشكل ملحوظ بحيث لا يتناسب مع الطول لدى الشخص  1.

الاسباب :
قد يكون سبب وراثي 1.
كثرة الاكل الدسم والدهون والسكريات والنشويات 2.
الخمول وقلة الحركة وعدم لعب الرياضة وخاصة
 المشي على الاقل  3.
دوام النوم بعد الاكل مباشرة  4.
5. كبر حجم الوجبات الغذائية الثلاث ،
وادخال الطعام على الطعام بين الوجبات  


பருமன் பிரச்சினை அதிகரிப்பு என்கிறது ஆய்வு

உலக அளவில் உடல் பருமன் அதிகரித்து வருகிறது என்று ஒரு புதிய ஆய்வு தெரிவித்துள்ளது. அதிகரித்துவரும் இந்த போக்கை குறைப்பதில் கடந்த முப்பது ஆண்டுகளில் எந்த ஒரு நாடும் வெற்றிபெறவில்லை என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 190 நாடுகளில் நடத்தப்பட்ட இந்த ஆய்வு லான்ஸட்என்ற மருத்துவ சஞ்சிகையில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. அதில் இந்த உலகில் உள்ள மக்கள் தொகையில் 30 சதவிகிதம் பேர் அதிக எடை உள்ளவர்கள் அல்லது பருமனானவர்கள் என்று கருதலாம் என்று கண்டறிப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை பெரியவர்கள் மற்றும் குழந்தைகள்ஆண்கள் மற்றும் பெண்கள் என எல்லா தரப்பு மக்களிடையேயும் அதிகரித்து வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வளர்ந்த நாடுகளிலும் வளரும் நாடுகளிலும் இந்த எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

பொதுவாக வருமானங்கள் அதிகரிக்க அதிகரிக்க இந்த உடல் எடையும் அதிகரிப்பதாக அந்த ஆய்வு தெரிவித்துள்ளது. அமெரிக்காவில் முப்பது சதவிகத மக்கள் பருமனான உடல் மிக்கவர்கள் என்பது குறிப்பிடதக்கது. அதே அமெரிக்காவில் மற்றொரு முப்பது சதவிகித மக்கள் உடல் எடை அதிகமாக உள்ளவர்களாக கருதப்படுகின்றனர்.

உடல் பருமனைக் குறைக்க உணவுமுறைகள் உடல் கூடுவதற்கான முக்கிய காரணமே நம் உணவு பழக்க வழக்கங்கள் தான். உணவுக்கேற்ற வேலையோ வேலைக்கேற்ற உணவு நம்மில் பலருக்கு கிடையாது. உடல் எடையை உடனே குறைப்பது என்பது இயலாத காரியம். பருமனாக உள்ளவர்கள் எடையை குறைக்க வேண்டும் என்பதற்காக முழுவதுமாக சாப்பாட்டை நிறுத்தி விடுகிறார்கள். இது தவறு. உணவு கட்டுப்பாடு தான் தேவையே யொழிய முழுவதுமாக உணவை தவிர்க்க கூடாது.

உடல் எடை குறைய நடைபயிற்சி

ஒருவரது உடல் எடை எவ்வளவு இருக்க வேண்டும் என்பதை அவரது மூளை பதிவு செய்து வைத்து செயலாற்றும். திடீரென 10 நாட்கள் சாப்பிடாமல் இருந்து எடையை குறைக்க வேண்டும் என்று எண்ணினால் அதற்கு மூளை இடம் கொடுக்காது.

தினமும் காலை 20 முதல் 30 நிமிடங்கள் வரை நடைபயிற்சியை மேற்கொள்ள வேண்டும். இது தொப்பையை குறைத்து விடும். அதற்கடுத்து முதுகுப் புறம்இடுப்புப்பகுதிவயிற்றுப்பகுதி என இவைகளுக்கென்று தனியாக உடற்பயிற்சிகள் உள்ளன. அவற்றை எளிதாக செய்யலாம். இவ்வாறு உடற்பயிற்சி தொடர்ச்சியாக மேற்கொண்டால் மூன்று மாதங்களில் எடையை குறைக்கலாம். அதற்கு மாத்திரைமருந்துகள் எதுவுமே கிடையாது. வெறும் உடற்பயிற்சி மட்டும் தான்.

உடல் எடை குறைய உணவு கட்டுப்பாடு!

இந்த உடற்பயிற்சிகளோடு உணவு கட்டுப்பாடு தேவை. அதாவது நொறுக்குதீனியை விட்டு விட வேண்டும். இவைகள் பெரும்பாலும் எண்ணெயில் பொறிக்கப்பட்டவையாக தான் இருக்கும். 

மற்ற உணவை ஒருவேளை என பிரித்துக் கொள்ள வேண்டும். எப்போதுமே நம் வயிறு அரை வயிறு உணவுகால் வயிறு தண்ணீர்கால் வயிறு காற்று என நிரம்பி இருக்க வேண்டும். பழைய உணவுகள்குழம்புகள் என எதையுமே சாப்பிடுவதை தவிர்த்திட வேண்டும். சிப்ஸ்பஜ்ஜிபோண்டாமிக்சர்இனிப்பு வகைகள்காபி உள்ளிட்டவைகளை தவிர்க்க வேண்டியது முக்கியமானது.

சிறந்த உணவு முறைகளை மேற்கொண்டால் உடல் எடை சாதாரணமாக இருக்கும். உணவு முறையின் கட்டுப்பாடு இல்லாததால் தான் உடல் பருமனடைகிறது.

குழந்தைகளுக்கு உடல் பருமனை உண்டாக்கும் மரபணு கண்டுபிடிப்பு

இன்றைய நவீன சமூகத்தை பாதிக்கும் பிரச்சினைகளில் உடல் பருமன் பிரச்சினை மிகப்பெரிதாக உருவெடுத்துள்ளது. அதிலும் குறிப்பாககுழந்தை பருவத்திலேயே ஏற்படும் உடல் பருமன் சமீப காலமாக அதிகரித்து வருகிறது.

உடல் பருமன் பிரச்சினை இறப்பு ஏற்படும் அளவிற்கு தீவிரமானது. உணவுப் பழக்கவழக்கம்சோம்பேறித்தனம் ஆகியவை உடல் பருமன் நோய்க்கு முக்கிய காரணிகளாக இருக்கின்றன.

இந்நிலையில் உடல் பருமனை ஏற்படுத்தக்கூடிய மரபணுவை ஓர் ஆய்வின் மூலம் கண்டுபிடித்துள்ளனர். உடல் பருமனிற்கான மரபணுவை கண்டறிய உலக அளவில் ஆய்வுகள் நடைபெற்று வந்தன. இந்த அமைப்பிற்கு அமெரிக்க தேசிய சுகாதார நிறுவனம் ஒரு பகுதி நிதியை ஒதுக்கியிருந்தது.

முன்னதாக ஐரோப்பிய நாடுகள்ஆஸ்திரேலியா மற்றும் வட அமெரிக்க நிறுவனங்கள் நிதி உதவியளித்தன என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக நடைபெற்ற 14 ஆய்வுகளின் அடிப்படையில் சுமார் 5,530 குழந்தைகளிடம் உடல் பருமனைக் ஏற்படுத்தும் மரபணுவைக் கண்டறியும் ஆய்வு நடத்தப்பட்டது.

இந்த ஆய்வின் முடிவில் குழந்தைகளின் உடல் பருமனுக்கு காரணமான மரபணுக்களை கண்டறிந்தனர். குரோமோசோம் 13-ல்,ஓ.எல்.எப்.எம். 4 எனும் ஒரு மரபணுவையும்குரோமோசோம் 17-ல் எச்.ஓ.எக்ஸ்.பீ 5 எனும் மற்றொரு மரபணுவையும் கண்டறிந்துள்ளனர்.

இக்கண்டுபிடிப்பு உடல் பருமன் நோயை குணப்படுத்துவதற்கு ஓர் வரப்பிரசாதமாக இருக்கும் என பிலடெல்பியா குழந்தைகள் மருத்துவமனையில் உள்ள சென்டர் பார் அப்ளைடுஜினோம்களின் இணை இயக்குனர் ஆஸ்ட்ரான் கிராண்ட் தெரிவித்தார். இந்நோயை கட்டுப்படுத்தவும் சிகிச்சையளிக்கவும்.

இந்த கண்டுபிடிப்பு மிக உதவியாக இருக்குமெனவும்இதை நடைமுறைக்கு கொண்டு வர மேலும் பல ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.


எவ்வளவு நாட்கள் வாழ்வது என்பது முக்கியமல்ல! நோய் இல்லாமல் வாழ்வதுதான் முக்கியம்.

உலகின் மிகச் சிறந்த உணவாக சீன உணவைக் குறிப்பிடுகின்றனர் பலர். இந்த உணவு முறையைப் பின்பற்றினால் நீண்ட நாள் வாழலாம் என்று கூறுகின்றனர் உணவு ஆய்வாளர்கள். நமது உடம்பில் ஆரோக்கியத்தை முடக்குவதில் அதிக பங்கு வகிப்பது கொழுப்புதான் என்பது மருத்துவர்களின் கருத்து.

தொந்தி மற்றும் பல கொலஸ்ட்ரால் ஏற்பட காரணம் பல உண்டு என்றாலும்நாம் சாப்பிடும் உணவால் தான் ஏற்படுகிறது. உடல் பருமனை அளவிடுவதில் ஒரு முக்கிய விஷயத்தை டாக்டர்கள் கவனத்தில் கொள்கின்றனர். தொந்தி பெருத்தாலும்கொலஸ்ட்ரால் அதிகமாக இருப்பதாகவோசர்க்கரை வியாதி வரும் என்றோ கூற முடியாது. ஆனால்அடிவயிறு பெருத்தால் தான் ஆபத்து. முதலில், வளையம் போல கோடு விழும். அதன்பின்வெளிப்படையாக அடிவயிறு பெருத்திருப்பது தெரியும். இதை தெரிந்து கொண்டால், உடனே டாக்டரிடம் போய் சோதனை செய்து கொள்வது மிக நல்லது. இந்தியர்களை பொறுத்தவரைஅடிவயிற்று கொழுப்பு அளவை வைத்தேஅவர்களுக்கு பாதிப்பை மதிப்பிட்டு விடலாம் என்று டாக்டர்கள் கருதுகின்றனர்.

ஹாங்காங்கின் சீனப் பல்கலைக்கழகப் பேராசிரியர் டாக்டர் ஊகாம்ஸாங் என்பவர் தனது ஆய்வின் முலம் பல உண்மைகளைக் கண்டுபிடித்துள்ளார். அதன் மூலம்  தங்களது உணவான சீன உணவே சிறந்தது என்கிறார்.

சீனர்கள் ஹாங்காங்சிட்னிசான்பிரான்ஸிஸ்கே ஆகிய நகரங்களில் பெருமளவில் வாழ்கின்றனர். பத்து ஆண்டுகள் மேற்கத்திய உணவுமுறைகளைப் பின்பற்றிய சீனர்களை அல்ட்ரா சவுண்டு முலம் பரிசோதித்ததில் இவர்களின் ரத்தக்குழாய்களில் 5ல் ஒரு பங்கு என்ற விதத்தில் தடிப்பாகிவிட்டது தெரிந்தது. எனவேஇவர்கள் இதயநோய் அபாயத்தில் உள்ளனர்.

வெளிநாடு சென்று கடந்த பத்தாண்டுகளுக்குப்பிறகு சீனா திரும்பிய 417 பேர் இதய நோய் அபாயத்தில் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. டாக்டர் ஊசீனர்களின் மெயின்லாண்ட் பகுதி மக்கள் தாங்கள் சாப்பிடும் உணவில் பாதி இறைச்சியாகவும்மிகச்சிறிய அளவிலேயே பால் சம்பந்தப்பட்ட பொருட்கள் சாப்பிடுவதையும் கண்டு பிடித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறும்போது, “சீனர்கள் தங்களின் மரபு வழி உணவுத் திட்டத்தையே பின்பற்ற வேண்டும். சோயா தயிரில் உள்ள `லெசித்தின்’ என்னும் நார்ப்பெருள் உடலில் கொழுப்பு சேராமல் பார்த்துக் கொள்கிறது. இதனால் இதய நோய் அபாயம் இல்லை. உடலும் கொழுத்து பருமனாக உருவாகாது” என்கிறார்.

மேலும் கூறுகையில், “ஹாங்காங்கில் வறுத்த கோழிக்கறி என்ற மேற்கத்திய உணவால் இங்குள்ள சீனர்கள் குண்டாக உள்ளனர். செல்வச் செழிப்பான சிங்கப்பூரில் வாழும் சீன இளைஞர்கள் 25 வயதுக்குள்ளேயே ரத்தக் கொதிப்புநீரிழிவுஇதய நோய்கள் போன்ற அபாயத்தில் உள்ளனர்” என்கிறார் டாக்டர்.

எனவே, நஃப்ஸை (ஆசையை) கட்டுப்படுத்தி, உணவை குறைத்து, போதிய உடற்பயிற்ச்சியை செய்வதின் மூலம் உடல் பருமனை தவிற்கலாம் என்ற இஸ்லாம் கூறும் ஆலோசனையை ஒவ்வொருவரும் கடைபிடிப்போம்! ஆரோக்கியமாக வாழ்வோம்!! மாரடைப்பை தவிர்ப்போம்!!! xx xxx போன்ற பெரிய அளவு ஆடைகளுக்கு டாட்டா கட்டுவோம்!!!! அல்லாஹ் அருள்பாளிப்பானாக ஆமீன் யாரப்பல் ஆலமீன்.




0 comments:

Post a Comment