Add caption |
இன்று உலகில் வாழும் அனைத்து ஜீவராசிகளை விட மனிதனை அல்லாஹ் கண்ணியப்படுத்தியுள்ளான். இறைவன் குர்ஆனில் கூறுகிறான் وَلَقَدْ كَرَّمْنَا بَنِي آَدَمَ وَحَمَلْنَاهُمْ فِي الْبَرِّ وَالْبَحْرِ وَرَزَقْنَاهُمْ مِنَ الطَّيِّبَاتِ وَفَضَّلْنَاهُمْ عَلَى كَثِيرٍ مِمَّنْ خَلَقْنَا تَفْضِيلًا
17:70
மனிதன் எப்படி கண்ணியமானவனாக இருக்க முடியும். ஒரு யானையின்
ஆற்றல் மனிதனுக்கு இருக்கிறதா? அது தனது துதிக்கையால் 700 கிலோ எடையை சாதாரணமாக தூக்கிவிடும். மனிதனால் இப்படி தூக்க
முடியுமா? நிச்சயம்
முடியாது. அப்படி என்றால் அல்லாஹ் ولقد كرمنا الفيل என்றல்லவா சொல்லியிருக்க வேண்டும். ஆனால் அல்லாஹ் ولقد كرمنا
بني ادم என்று ஏன் சொல்கிறான்.
அல்லது சிங்கத்தின் ஆற்றலுக்கு மனிதன் ஈடு கொடுக்க முடியுமா? அது தனது கரத்தால் சுவற்றை அடித்தால் சுவர் சுக்கு நூறாகிவிடும். அந்த அளவு ஆற்றல் மிக்க சிங்கத்தை ولقد كرمنا الاسد சிங்கத்தை கண்ணியப்படுத்தியுள்ளோம் என்று சிங்கத்தின் ஆற்றல் குறித்து பேசாமல் ولقد كرمنا بني ادم என்று ஏன் மனிதன் குறித்து பேசுகிறான். மீன் பிறந்த உடன் நீந்த கற்றுக் கொள்கிறது. ஆனால்.மனிதன் பிறந்து நடப்பதற்கு ஒரு வருடம் பேசுவதற்கு ஒன்றரை வருடம் ஆகிவிடுகிறது. பிறந்தவுடன் நீந்த வேண்டும் என்று தண்ணீரில் குழந்தையை போட்டால் என்னவாகும் யோசித்து பாருங்கள். ஆனால் குர்ஆனில் ولقد كرمنا السمك மீனை கண்ணியப்படுத்தியுள்ளோம் என்று கூறாமல் ولقد كرمنا بني ادم என்று கூறுகிறான். இது போன்று பல ஜீவராசிகள் மனிதனை விட பன்மடங்கு ஆற்றல் மிக்கதாக இருக்கின்றன. தேனி ஒரு நாளைக்கு 18 கிலோ மீட்டர் செல்கிற்து. எல்லா மனிதர்களாலும் தினந்தோறும் 18 கிலோ மீட்டர் நடந்து செல்வது சாத்தியமல்ல. மீன் பிறந்த உடன் நீந்த கற்றுக்கொள்கிறது. யார் அதற்கு கற்றுக்கொடுத்தது எதற்காக அல்லாஹ் மனிதனை கண்ணியப்படுத்த வேண்டும்.
அல்லது சிங்கத்தின் ஆற்றலுக்கு மனிதன் ஈடு கொடுக்க முடியுமா? அது தனது கரத்தால் சுவற்றை அடித்தால் சுவர் சுக்கு நூறாகிவிடும். அந்த அளவு ஆற்றல் மிக்க சிங்கத்தை ولقد كرمنا الاسد சிங்கத்தை கண்ணியப்படுத்தியுள்ளோம் என்று சிங்கத்தின் ஆற்றல் குறித்து பேசாமல் ولقد كرمنا بني ادم என்று ஏன் மனிதன் குறித்து பேசுகிறான். மீன் பிறந்த உடன் நீந்த கற்றுக் கொள்கிறது. ஆனால்.மனிதன் பிறந்து நடப்பதற்கு ஒரு வருடம் பேசுவதற்கு ஒன்றரை வருடம் ஆகிவிடுகிறது. பிறந்தவுடன் நீந்த வேண்டும் என்று தண்ணீரில் குழந்தையை போட்டால் என்னவாகும் யோசித்து பாருங்கள். ஆனால் குர்ஆனில் ولقد كرمنا السمك மீனை கண்ணியப்படுத்தியுள்ளோம் என்று கூறாமல் ولقد كرمنا بني ادم என்று கூறுகிறான். இது போன்று பல ஜீவராசிகள் மனிதனை விட பன்மடங்கு ஆற்றல் மிக்கதாக இருக்கின்றன. தேனி ஒரு நாளைக்கு 18 கிலோ மீட்டர் செல்கிற்து. எல்லா மனிதர்களாலும் தினந்தோறும் 18 கிலோ மீட்டர் நடந்து செல்வது சாத்தியமல்ல. மீன் பிறந்த உடன் நீந்த கற்றுக்கொள்கிறது. யார் அதற்கு கற்றுக்கொடுத்தது எதற்காக அல்லாஹ் மனிதனை கண்ணியப்படுத்த வேண்டும்.
திருமறையில் இப்படி கூறிக்காட்டுவான் . قُلْ هَلْ يَسْتَوِي الَّذِينَ يَعْلَمُونَ
وَالَّذِينَ لَا يَعْلَمُونَ إِنَّمَا يَتَذَكَّرُ أُولُو الْأَلْبَاب
39:9 அறிந்தவரும்
அறியாதவரும் சமமாவார்களா?
நம் வீட்டில்
வளர்க்கும் பூனையை அழைத்து தட்டிலே பாலை ஊற்றி கொஞ்சம் விஷத்தயும் கலந்து
கொடுத்தால்
அது குடித்து இறந்துவிடும். ஆனால் மனிதனை அழைத்து இதே போன்று செய்தால் குடிப்பானா? காரணம் அவனுடைய பகுத்தறிவு வேலை செய்கிறது. அது விஷம் என்று. எனவே இறைவன் மனிதனை கண்ணியப்படுத்த காரணம் அவனுடைய அறிவு தான்.
அது குடித்து இறந்துவிடும். ஆனால் மனிதனை அழைத்து இதே போன்று செய்தால் குடிப்பானா? காரணம் அவனுடைய பகுத்தறிவு வேலை செய்கிறது. அது விஷம் என்று. எனவே இறைவன் மனிதனை கண்ணியப்படுத்த காரணம் அவனுடைய அறிவு தான்.
கடைசி காலத்தில் அறிவீனர்களின் மார்க்கத்தீர்ப்பு
حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ أَبِي أُوَيْسٍ قَالَ حَدَّثَنِي مَالِكٌ
عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ عَنْ أَبِيهِ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرِو بْنِ الْعَاصِ
قَال سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ إِنَّ
اللَّهَ لَا يَقْبِضُ الْعِلْمَ
انْتِزَاعًا يَنْتَزِعُهُ مِنْ الْعِبَادِ وَلَكِنْ يَقْبِضُ الْعِلْمَ
بِقَبْضِ الْعُلَمَاءِ حَتَّى إِذَا لَمْ يُبْقِ عَالِمًا اتَّخَذَ النَّاسُ
رُءُوسًا جُهَّالًا فَسُئِلُوا فَأَفْتَوْا بِغَيْرِ عِلْمٍ فَضَلُّوا وَأَضَلُّوا
البخاري
அடியார்களிடமிருந்து
அல்லாஹ் இல்மை (உள்ளத்திலிருந்து) முழுமையாக கைப்பற்றமாட்டான். என்றாலும்
உலமாக்களை மரணமடைய செய்து இல்மை கைப்பற்றிக்கொள்வான். கடைசியாக ஆலிம்கள் யாரும்
இருக்கமாட்டார்கள் மக்கள் மடையர்களை தலைவர்களாக ஆக்கி கொள்வார்கள். அவர்களிடம்
(மார்க்கம் சம்பந்தமாக) கேள்வி கேட்கப்படும். மார்க்க அறிவின்றி ஃபத்வா
கொடுப்பார்கள். தானும் கெட்டு பிறரையும் வழிகெடுப்பார்கள். (புஹாரி)
கியாமத் நாளின் அடையாளம் இல்மு குறைவு
عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ
قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا تَقُومُ السَّاعَةُ حَتَّى
يُقْبَضَ الْعِلْمُ وَتَكْثُرَ الزَّلَازِلُ
البخاري
கல்வி கைப்பற்றப்பட்டு நிலநடுக்கம் அதிகமாகும் போது கியாமத் நாள் நெருங்கும். புஹாரி
மனிதன் அனைத்தையும் விட சிறப்பாக காரணம் அவனுடைய கல்வி மட்டுமே ஏனென்றால் ஒரு
ஆடோ, மாடோ
பிறக்கும்பொழுது என்ன அறிவு இருக்குமோ அதே அறிவு தான் இறக்கும்பொழுதும் இருக்கும். ஆனால் மனிதன் பிறக்கும்பொழுது ஒன்றும் அறியாதவனாக பிறந்து இறக்கும் நேரத்தில் ஒரு ஆலிமாக, ஹாஃபிழாக, வக்கீலாக, மருத்துவாராக இப்படி பல துறைகளில் பரிணாமம் பெற்று ஒரு முழு
மனிதனாக மரணமடைகிறான். இந்த அறிவின் காரணமாக எல்லா உயிரினங்களையும் தனது
கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறான்.
ஆதம் நபியை
மேன்மைப்படுத்தியது அன்னாரின் கல்வி
وَعَلَّمَ آَدَمَ الْأَسْمَاءَ كُلَّهَا ثُمَّ عَرَضَهُمْ عَلَى
الْمَلَائِكَةِ فَقَالَ أَنْبِئُونِي بِأَسْمَاءِ هَؤُلَاءِ إِنْ كُنْتُمْ
صَادِقِينَ
2:31
وَعَلَّمَءَادَمَ الأسمآء كُلَّهَا أي أسماء المسمّيات كلها قال ابن عباس:
علّمه اسم كل شيء حتى القصعة والمغرفة
(صفوة التفاسير)
தட்டு முதல் அறிகரண்டி வரை ஆதம் நபிக்கு அல்லாஹ் கற்றுக்கொடுத்தான் என இப்னு அப்பாஸ் ரலி அவர்கள் இந்த வசனத்திற்கு விளக்கம் அளிக்கிறார்கள்.
மார்க்கக் கல்வியால் மறுமையில் கிடைக்கும் பரிசு
عَنْ سَهْلِ بْنِ مُعَاذٍ الْجُهَنِيِّ عَنْ أَبِيهِ
أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَنْ
قَرَأَ الْقُرْآنَ وَعَمِلَ بِمَا فِيهِ أُلْبِسَ وَالِدَاهُ تَاجًا يَوْمَ
الْقِيَامَةِ ضَوْءُهُ أَحْسَنُ مِنْ ضَوْءِ الشَّمْسِ فِي بُيُوتِ الدُّنْيَا
لَوْ كَانَتْ فِيكُمْ فَمَا ظَنُّكُمْ بِالَّذِي عَمِلَ بِهَذَا
البخاري
யார் குர்ஆன் ஓதி அதன் படி அமல் செய்வாரோ அவரின் பெற்றோருக்கு நாளை மறுமையில் கிரீடம்
அணிவிக்கப்படும். அதனுடைய ஒளி உங்கள் வீட்டில் சூரியன் நுழைந்தால் எப்படி
இறுக்குமோ அவ்வளவு பிரகாசமாக இருக்கும் என சொல்லிவிட்டு ஓதி அமல் செய்தவரின் பெற்றோருக்கு இவ்வளவு சிறப்பு என்றால் அமல் செய்த
நபருக்கு அல்லாஹ் கொடுக்கும் வெகுமதியைப் பற்றி உங்களின் எண்ணம் தான் என்ன? என்று நபி ஸல்
அவர்கள் கேட்டார்கள். (புஹாரி)
إِنَّ فِي خَلْقِ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَاخْتِلَافِ اللَّيْلِ
وَالنَّهَارِ وَالْفُلْكِ الَّتِي تَجْرِي فِي الْبَحْرِ بِمَا يَنْفَعُ النَّاسَ
2:164
ويل لمن قرأ هذه الاية فمج بها: أي لم يتفكر فيها ولم يعتبرها
{ تفسير قرطبي}
குர்ஆனில் இந்த வசனத்தை ஓதி யார் சிந்திக்கவில்லையோ படிப்பினை பெறவில்லையோ அவருக்கு
நாசம் உண்டாகட்டும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் (தஃப்சீர் குர்துபி)
எனவே குர்ஆனை ஓதும்பொழுது பொருள் உணர்ந்து ஓதுவது முஃமினுக்கு இம்மையிலும்
மறுமையிலும் பயனளிக்கும்.
மார்க்க மற்றும் உலக கல்வி இரண்டும் மனிதனுக்கு மிகவும் அத்தியாவசியமானது. பத்ருப் போரில் கைதியாக பிடிக்கப்பட்டவர்களை
முஸ்லிம்களுக்கு கல்வி கற்று கொடுக்கச் சொல்லி நபி (ஸல்)
அவர்கள் காஃபிர்களுக்கு கட்டளையிட்டார்கள். இதிலிருந்து ஈருலக கல்வியும் முக்கியம்
என்பது புலானாகிறது.
زيد بن ثات (ரலி) அவர்களை யூத மொழியான சுர்யானி பாஷையை கற்குமாரு நபி (ஸல்) அவர்கள்
ஏவினார்கள். எனவே زيد بن ثابت ரலி அவர்கள் 17 நாட்களில் சுர்யானி பாஷையை
கற்று முடித்தார்கள்.
{سير اعلام النبلاء}
மருத்துவர்களின் இளவரசர் என்று அடைமொழி சூட்டப்பட்ட அலி இப்னு சீனா (980 - 1036) மருத்துவத்துறையில்
மாமேதையாக விளங்கினார். இவர் மூளைக் கோளாறு, மனக்கோளாறு, எலும்புறுக்கி
போன்ற பல நோய்களைப் பற்றி சுமார் 150 நூல்கள்
எழுதியுள்ளார். அதில் { القانون في الطب
} மருத்துவ விதிமுறை
எனும் நூல் உலகப் புகழ் பெற்றவை.
கற்றவர்கள் எப்படி இருக்க வேண்டும்
فَقَالَ جُنْدُبٌ، قَالَ رَسُولُ اللهِ صَلَّى
اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَثَلُ الْعَالِمِ الَّذِي يُعَلِّمُ النَّاسَ
الْخَيْرَ ويَنْسَى نَفْسَهُ كَمَثَلِ السِّرَاجِ يُضِيءُ لِلنَّاسِ ويَحْرِقُ
نَفْسَهُ»
{طبراني}
நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஜூன்துப் (ரலி) அறிவிக்கிறார்கள். தன்னை மறந்து மற்றவர்களுக்கு
நல்ல விஷயங்களை கற்றுக் கொடுப்பவர்களுக்கு உதாரணமாகிறது தன்னை எரித்து மக்களுக்கு
ஒளி கொடுக்கக் கூடிய விளக்கைப் போன்று என நபி (ஸல்) கூறினார்கள். இந்த ஹதீஸில் கற்றறிந்த ஆலிம் எப்படி பிரயோஜனமளிப்பவராக இருக்க வேண்டும் என்பதை நபி {ஸல்} இந்த ஹதீஸில்
உணர்த்துகிறார்கள்.
கற்றவர் பிறருக்கு எடுத்துச் சொல்லாவிட்டாலும்
ஏற்படும் நிலை
عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: قَالَ رَسُولُ
اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:"أَشَدُّ النَّاسِ عَذَابًا
يَوْمَ الْقِيَامَةِ عَالِمٌ لَمْ يَنْفَعْهُ عِلْمُهُ
{طبراني}
ஹழரத் பெருமானார் {ஸல்} கூறியதாக அபூஹூரைரா {ரலி} அவர்கள் அறிவிக்கிறார்கள். கியாமத் நாளில் வேதனையில் கடினமானவர்கள் கல்வியயைக்
கற்று அதன் மூலம் பிரயோஜனம் கொடுக்காதவர்கள். {அல் மு ஃஜமுல்
கபீர் லித்தபரானி}
உலக ஆதாயங்களுக்காக கல்வியைத் தேடக்கூடாது
عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ
قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ
عَلَيْهِ وَسَلَّمَ مَنْ تَعَلَّمَ عِلْمًا مِمَّا يُبْتَغَى بِهِ وَجْهُ اللَّهِ
لَا يَتَعَلَّمُهُ إِلَّا لِيُصِيبَ بِهِ عَرَضًا مِنْ الدُّنْيَا لَمْ يَجِدْ
عَرْفَ الْجَنَّةِ يَوْمَ الْقِيَامَةِ قَالَ سُرَيْجٌ فِي حَدِيثِهِ يَعْنِي
رِيحَهَا
}احمد{
அல்லாஹ்வின் பொருத்தத்தை நாடியே கற்றுக் கொள்ளப்படும் கல்வியை யார் உலக
ஆதாயங்களுக்காக கற்கிறாரோ கியாமத் நாளில் சுவர்க்கத்தின் காற்றைக் கூட பெற
முடியாது
மற்றொரு ஹதீஸில்
عَنْ ابْنِ عُمَرعَنْ النَّبِيِّ صَلَّى
اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَنْ تَعَلَّمَ عِلْمًا لِغَيْرِ اللَّهِ أَوْ
أَرَادَ بِهِ غَيْرَ اللَّهِ فَلْيَتَبَوَّأْ مَقْعَدَهُ مِنْ النَّار
{ترمذي}
யார் அல்லாஹ்வின்
பொருத்தமின்றி மற்றவைகளுக்காக கல்வியை தேடுகிறாரோ அல்லது அந்த கல்வியைக் கொண்டு
மற்றவைகளை நாடுகிறாரோ அவர் செல்லுமிடம் நரகமாகும். {திர்மிதீ}
எனவே மார்க்கக் கல்வியை அல்லாஹ்வுக்காகவே கற்க வேண்டும். அல்லாஹ்வுக்காகவே
பிறருக்கு கற்றுக்கொடுக்க வேண்டும். அல்லாஹ் நாம் அனைவருக்கும் அவன் திருப்
பொருத்தத்தை நாடி கற்க, கற்றுக்கொடுக்க கிருபை செய்வானாக. ஆமீன்.
}
1 comments:
ماشالله
Post a Comment