01 January 2015

நபிகளார் வழிகாட்டிய இளமைப் பருவம்


ஒரு சமுதாயத்தின் இணையற்ற பாரிய சக்தி அச்சமூதாயத்தின் இளைஞர்களே ஆவார்கள். ஒரு மனிதன் தனது வாழ்நாளில் மூன்று பருவங்களை கொண்டுள்ளான் என்பது நாம் அனைவரும் அறிந்தவிடயமாகும்.
வழுவற்ற குழந்தை பருவம், வயதுடைய முதுமை பருவம் ஒரு மனிதனுடைய வாழ் நாளின் மிகவும் பலவீனமான காலகட்டங்களாகும். இளமை பருவம் ஒரு சமூக மாற்றத்தில், புரட்சிகளில், போராட்டங்களில், அது போன்று சமூகத்துக்கு பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தக் கூடிய மிகவும் மோசமான விடயங்கள் என அனைத்து அம்சங்களிலும் மிக முக்கியமானதொரு பங்களிப்பை செலுத்திக் கொண்டிருப்பதை நம் யாராலும் மறுக்க முடியாத‌ உண்மையாகும். ஒரு சமூக மாற்றத்தில் இளைஞர்களின் பங்களிப்பு என்பது மிகவும் இன்றியமையாத அம்சமாகும்.

இஸ்லாமிய வரலாறுகளில் இஸ்லாத்தின் வளர்ச்சிகளுக்கு ஈடு இணையற்ற பங்களிப்பை செய்தவர்களும் இளைஞர்களே ஆவார்கள். இன்றைய எமது முஸ்லிம் இளைஞர் யுவதிகளின் நிலைமைகளை உற்று அவதானிக்கும் பொழுது மிகவும் கவலைக்குறிய ஒரு பாதாள நிலையை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பதை காணலாம். நவீன ஊடகங்களின் அபரிமிதமான வளர்ச்சிகளுக்குள் மடிந்து முஸ்லிம் சமூகத்தின் வீழ்ச்சிகளுக்கு துணைபோகக்கூடியதும், உன்னத மார்கத்துக்கு கலங்கம் விளைவிக்க கூடிய ஒரு சமுதாயமாகவே எமது முஸ்லிம் இளைஞர் சமுதாயம் மாறிக் கொண்டிருப்பதை காணலாம்.
யூசுப் கர்ளாவி அவர்கள் கூறும் ஒரு கருத்து இங்கு மிகவும் குறிப்பிட்டு கூறத்தக்கது. ” நிலங்கள் ஆக்கிரமிக்கப்படுவதை விட மூளைகளும், உணர்ச்சிகளும் ஆக்கிரமிக்கப்படுவது மிகவும் பயங்கரமானது”

கர்ளாவி அவர்கள் குறிப்பிடுவது போன்று எமது சமூகம் இது போன்றதொரு அபாய நிலையிலேயே சிக்கித் தவிக்கின்றது. ஆபாச இணையத்தளங்கள் ஊடாக உணர்சிகள் தூண்டப்பட்டு ஒரு சமூக கட்டமைப்பை சீரழிக்கக் கூடிய நிலைக்கு இட்டு செல்கின்றது. சமுக வளைத்தளங்கள் ஊடாக கால, நேரம் வீணாக்கப்படுவது மாத்திரமன்றி காதல், வழிகேடு என தவரிய பாதையின்பால் இட்டு செல்கின்றது. இது மாத்திரமன்றி நவீன கால ஜாஹிலிய கலாச்சாரங்களால் மூழ்கடிக்கப்பட்டு மூளைகள் மந்தமாக்கப்பட்டுக் கொண்டிருகின்றது. இஸ்லாம் பற்றிய அடிப்படை அறிவு கூட அற்ற, இஸ்லாமிய கடமைகளில் பராமுகமும், இஸ்லாம் அறிவு பற்றிய ஒரு இழிவான எண்ணமும், இஸ்லாமிய கலாச்சாரங்கள் பற்றிய ஒரு கேவலமான பார்வையும் கொண்ட ஒரு இளைஞர் கூட்டமே முஸ்லிம்கள் ஆகிய எம்மத்தியில் உருவாகிக் கொண்டிருப்பதை காணலாம்.
பெண்கள் சமூகத்தின் கண்கள் என்பார்கள்,                                                             

இன்றைய யுவதிகள் நாளைய தாய்மார்கள் என்பார்கள் நமது வருங்கால‌ தாய்மார்களின் நிலை என்ன? ஒரு குழந்தையின் வளர்ப்பில் பாரியதொரு தாக்கத்தை செலுத்தும் இவர்களது இஸ்லாம் பற்றிய தெளிவு என்ன? சினிமா, சின்னத்திரை, இணைய‌த்தளம், நாவல்கள், சஞசிகைகள் போன்றவற்றின் ஆபாச கருத்துக்களால், தவரிய‌ முன்மாதிரிகளால், வழித்தவறி தடுமாறிக் கொண்டிருகின்றது. இன்னும் சமூக வளைத்தளங்களின் மாயைகளில் சிக்குண்டு காதல், தவரிய நட்பு என அலைக்கழிந்து கொண்டிருப்பதை காணாலாம்.

இளைஞர்களுக்கு
முறையான
வழி காடுதல்கள்
இல்லாததால்
அவர்கள்
வழி தவறி போகிற
சூழல்
ஏற்படுகிறது.

குறிப்பாக
இஸ்லாமிய
வட்டாரத்தில்.
முதியோர்களின்
முதுமை
அனுபவம் எப்படி
சமூகத்திற்கு
தேவையோ
அதுபோல
அல்லது அத்துடன்
இளம்
இளைஞர்களின்
பலமும் தேவை.
முதுமை
அனுபவம் சமூக
வளர்ச்சியின்
திட்டம் ஆனால்
இளைஞர்களின்
பலமோ அதை
செயல்படுத்தும்
ஆயுதம்.
எனவே முதுமை
இளமை ஒரு
சமூகத்தின்
வளர்ச்சியின்
இரண்டு
உண்மையான
ஆயுதங்கள்.
பெருமானார்
இந்த இரண்டு
பலன்களுக்கும்
தன்னுடைய
சபைகளில்
மரியாதை
தந்தார்கள்.
பத்ருபோருக்கு
பழிவாங்கும்
நோக்கத்தில்
குறைஷிகள்
படையை
திரட்டினார்கள்.
இந்த செய்தி
பெருமா
னாருக்கு வந்தது
. என்ன செய்யலாம்
என ஆலோசனை
செய்தார்கள்
ஒரு கூட்டம்
சொன்னது நாம்
மதீனாவிலே
இருப்போம்
அவர்கள் நம்
ஊருக்குள் வந்த
போர் செய்வோம்
என்று. மறு கூட்டம்
சொன்னது நாம்
மதீனாவிற்கு
சென்று
போர்செய்வோம்
என்று. முதல்
கூட்டம்
முதியோர்களின்
கூட்டம். இரண்டாம்
கூட்டம் அது
இளைஞர்களின்
கூட்டம்.
இப்படி
பெரியோர்களின்
கருத்துகளுக்கு
மதிபளிப்பதோடு இளைஞர்களின்
உணர்வுகளுக்கும்
பெருமானார்
மதிப்பு தந்தார்கள்.
இளமை பருவம்
கத்தியை
போன்றது அதை
வைத்து
காயப்படுத்தவும்
முடியும், அதன்
கூர்மையை
வைத்து பல
தேவைகளை
நிறைவு செய்து
கொள்ளவும்
முடியும்.
பயன்படுத்தும்
விதத்தை
பொருத்து தான்
உள்ளது.
அதனால் தான்
பெருமானார்
இளமையை நல்ல
முறையில்
பயன்படுத்த
உபதேசம்
செய்தார்கள்.
ஒரு நபருக்கு
ஐந்து பொன்
மொழிகளை
பெருமானார்
உபதேசம்
செய்தார்கள் அதில்
ஒன்று உன்
முதுமைக்கு
முன் இளமையை
பயன்படுத்திகொள்
.

 ﺃﺧﺒﺮﻧﻲ ﺍﻟﺤﺴﻦ ﺑﻦ ﺣﻜﻴﻢ

ﺍﻟﻤﺮﻭﺯﻱ ﺃﻧﺒﺄ ﺃﺑﻮ ﺍﻟﻤﻮﺟﻪ ﺃﻧﺒﺄ

ﻋﺒﺪﺍﻥ ﺃﻧﺒﺄ ﻋﺒﺪ ﺍﻟﻠﻪ ﺑﻦ ﺃﺑﻲ ﻫﻨﺪ

ﻋﻦ ﺃﺑﻴﻪ ﻋﻦ ﺍﺑﻦ ﻋﺒﺎﺱ ﺭﺿﻲ ﺍﻟﻠﻪ

ﻋﻨﻬﻤﺎ ﻗﺎﻝ : ﻗﺎﻝ ﺭﺳﻮﻝ ﺍﻟﻠﻪ

ﺻﻠﻰ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭ ﺳﻠﻢ ﻟﺮﺟﻞ ﻭ

ﻫﻮ ﻳﻌﻈﻪ : ﺍﻏﺘﻨﻢ ﺧﻤﺴﺎ ﻗﺒﻞ

ﺧﻤﺲ : ﺷﺒﺎﺑﻚ ﻗﺒﻞ ﻫﺮﻣﻚ ﻭ

ﺻﺤﺘﻚ ﻗﺒﻞ ﺳﻘﻤﻚ ﻭ ﻏﻨﺎﻙ ﻗﺒﻞ

ﻓﻘﺮﻙ ﻭ ﻓﺮﺍﻏﻚ ﻗﺒﻞ ﺷﻐﻠﻚ ﻭ

ﺣﻴﺎﺗﻚ ﻗﺒﻞ ﻣﻮﺗﻚ


ﺍﻟﻤﺴﺘﺪﺭﻙ ﻋﻠﻰ ﺍﻟﺼﺤﻴﺤﻴﻦ

ﻟﻠﻨﻴﺴﺎﺑﻮﺭﻱ /4 341

7846


 முதுமை அறிவுரைகளையும்
அனுபவங்களையும்
சற்று ஓய்வோடு
செய்யவேண்டும்
என்பது போன்ற
பருவம்.
எனவே இளமை
பருவம் மட்டும்
தான் துடிப்பும்
தன்னபிகையின்
வெளிப்பாடும்
உள்ள பருவம்.
ஆரம்பத்தில்
இஸ்லாத்தை
தழுவியவர்களில்
இளைஞர்கள் தான்
அதிகம்.
இஸ்லாத்தின்
ஆரம்பத்தில்
முஷ்ரிக்குகள்
மூலமாக பல
தொல்லைகள்
கிடைத்தது.
அவைகள்
அனைத்தையும்
எதிர்த்தும்
அல்லது சகித்தும்
இஸ்லாத்தில்
இருக்க வேண்டிய
சூழ்நிலை
ஏற்பட்டது. அந்த
எல்லா
கஷ்டங்களையும்
தாங்கி
இஸ்லாத்தில்
இருந்தவர்கள்
பலரும்
இளைஞர்கள்.
மூசா
அலைஹிஸ்
ஸலாம் அவர்களின்
இஸ்லாத்தை பனூ
இஸ்ராயீல்களுக்கு எடுத்து
சொன்னபோது
அதை சிலர்கள்
ஏற்றுகொண்டார்க
ள் சிலர் பிர்வ்னின்
கொடுமையை
பயந்து
ஒதுங்கினார்கள்.
அவர்களை பற்றி
குர்ஆனில்
அல்லாஹ்
சொல்கிறான்.

 ﻓَﻤَﺎ ﺁﻣَﻦَ ﻟِﻤُﻮﺳَﻰ ﺇِﻻ ﺫُﺭِّﻳَّﺔٌ ﻣِﻦْ

ﻗَﻮْﻣِﻪِ ﻋَﻠَﻰ ﺧَﻮْﻑٍ ﻣِﻦْ ﻓِﺮْﻋَﻮْﻥَ

ﻭَﻣَﻠَﺌِﻬِﻢْ ﺃَﻥْ ﻳَﻔْﺘِﻨَﻬُﻢْ ﻭَﺇِﻥَّ ﻓِﺮْﻋَﻮْﻥَ

ﻟَﻌَﺎﻝٍ ﻓِﻲ ﺍﻷﺭْﺽِ ﻭَﺇِﻧَّﻪُ ﻟَﻤِﻦَ

ﺍﻟْﻤُﺴْﺮِﻓِﻴﻦَ

ஃபிர்அவ்னும்,
அவனுடைய
பிரமுகர்களும்
தங்களைத்
துன்புறுத்துவார்களே என்ற
பயத்தின்
காரணமாக,
மூஸாவின்
மீது அவருடைய
சமூகத்தாரின்
சந்ததியினர்
சிலரைத் தவிர
(வேறு) ஈமான்
கொள்ளவில்லை,
ஏனெனில்,
நிச்சயமாக
ஃபிர்அவ்ன் அந்த
பூமியில்
வலிமை
மிக்கவனாக
இருந்தான்; வரம்பு
மீறிக் (கொடுமை
செய்பவனாகவும்)
இருந்தான்.
இஸ்லாத்தை ஏற்ற
சில மக்கள்
இளைஞர்கள்.
காரணம் பிர்வ்னின்
கொடுமையை
பயந்து பலர்
இஸ்லாத்திற்கு
முன் வர
பயந்தார்கள்.

ﺗﻔﺴﻴﺮ ﺍﺑﻦ ﻛﺜﻴﺮ ‏( /4 287 )

ﻳﺨﺒﺮ ﺗﻌﺎﻟﻰ ﺃﻧﻪ ﻟﻢ ﻳﺆﻣﻦ

ﺑﻤﻮﺳﻰ، ﻋﻠﻴﻪ ﺍﻟﺴﻼﻡ، ﻣﻊ ﻣﺎ

ﺟﺎﺀ ﺑﻪ ﻣﻦ ﺍﻵﻳﺎﺕ ‏( 1‏) ﺍﻟﺒﻴﻨﺎﺕ

ﻭﺍﻟﺤﺠﺞ ﺍﻟﻘﺎﻃﻌﺎﺕ ﻭﺍﻟﺒﺮﺍﻫﻴﻦ

ﺍﻟﺴﺎﻃﻌﺎﺕ، ﺇﻻ ﻗﻠﻴﻞ ﻣﻦ ﻗﻮﻡ

ﻓﺮﻋﻮﻥ، ﻣﻦ ﺍﻟﺬﺭﻳﺔ -ﻭﻫﻢ

ﺍﻟﺸﺒﺎﺏ

குர்ஆனில்
அல்லாஹ்
மற்றொரு
இளைஞர்
கூட்டத்தை பற்றி
சொல்கிறான்.

 இளமைப் பருவம்:

முனித வாழ்வு பல பருவங்களைக் கடந்து செல்கிறது. குழந்தைப் பருவத்திலிருந்து சிறு பிராயத்தை அடைந்து, அதிலிருந்து வளர்ச்சியுருகின்ற பருவமாக இளமைப் பருவம் உள்ளது. இப்பருவம் வாழ்வுக்கான பொறுப்புணர்ச்சியை வழங்க வேண்டியுள்ளது. வாழ்வின் திசை எது என்பதை தீர்மானிக்க வேண்டிய பருவமாகவும் உள்ளது. இக்காலப்பிரிவிலே இளைஞனது உடல், உள்ளம், புலன்கள், உணர்வுகள் என்பன மிகத்துடிப்புடன் செயற்படுகின்றமையால் வளப்படுத்தப்படல் வேண்டும்.

இளமையின் பண்பு:

இளைஞர்கள் உடல் வலிமைமிக்கவர்கள்; பெருமளவு உடல் ஆரோக்கியமானவர்கள்; உள்ளம் தெளிவானவர்கள்; உணர்வுகள் விறுவிறுப்பானவர்கள்; புலன்கள் துடிதுடிப்பாகச் செயற்படுகின்றவர்கள். எனவே, ஆவல்களும் வேட்கைகளும் அதிக ஆசைகளும் உடையவர்கள். எல்லா வகையிலும் உயிரோட்டமுடனும், துடிதுடிப்புடனும் செயற்படுகின்ற தன்மையுடையவர்கள். முpக இலகுவிலேயே உணர்ச்சி வசப்பட்டு, அதன்படியாய் செயற்பட முனைந்துவிடுவார்கள். இக்கால கட்டத்தில், இளைஞர்கள்; பெற்றோர், உறவினர்கள் போன்ற பிறரில் தங்கி நிற்பதில் இருந்து தன்னில் சுயமாக தங்கி நிற்க பிரயத்தனப்படுவர். இது, இளமையின் முக்கிய பண்பாக கானப்படுகிறது. 'ஒரு கொள்கைக்காக ஆயத்தப்படுத்துகின்ற, வாழ வைக்க முனைகின்ற, பக்குவப்படுத்துகின்ற பருவமாக உள்ளது' என உளவியலாளர்கள் கருதுகின்றனர்.
இலட்சியக் கனவு காணும் பருவம்:
இளமை பருவத்தின் இன்னொரு முக்கிய பண்பாக எதிர்காலத்தைப் பற்றிய இலட்சியக் கனவு காணல் அமைகிறது. இளமைக் காலத்திலே துடிப்போடும், கற்பனை வளமிக்க தன்மையுடனும் இருக்கின்ற இளைஞர்கள், தனிப்பட்ட தன் சுய முன்னேற்றம் பற்றியும், குடும்ப உயர்வு பற்றியும் இலட்சியக் கனவு காண்பார்கள். இப்பருவத்தில் தன்னுடைய முன்னேற்றம் பற்றி மட்டும் சிந்திப்பவர்கள் இருப்பார்கள். குடும்ப மேம்பாடு பற்றி மட்டும் சிந்திப்பவர்கள் இருப்பார்கள். பல்வேறு சிந்தனை வேறுபாடுடைய இளைஞர்கள் இருப்பார்கள். சுயநலத்தை மறந்து சமூக மேம்பாடு பற்றிச் சிந்திப்பவர்கள் மிகக் குறைவாகவே இன்றுள்ளனர்

பயனுள்ள பருவம்:

எதிர் காலத்தை பற்றிய சிந்தனை உருவாகும் இப்பருவத்தில், இளைஞர்களின் ஆளுமையை வளர்த்து, பண்புகளை பருவமடையச் செய்வது சமூகத்திற்கு பயனளிக்கும். உறங்கிக் கிடக்கும் உன்னத உணர்வுகளைத் தட்டி எழுப்பி, ஒரு கொள்கைக்காக வாழத் திருப்பிவிடுவது என்பது இப்பருவத்தில் இலேசான காரியம். எனவேதான், அரசியல்வாதிகள் இளைஞர்களை தமது சுயநலத்தின் கருவிகளாக, ஆயுதங்களாக பயன்படுத்திக் கொள்கின்றனர். துர்பாக்கியம் என்னவென்றால், இஸ்லாமிய இயக்கங்கள், அமைப்புக்கள் இளைஞர்களை பயன்படுத்தவும் அதிகளவு தவறிவிட்டன.சில  இயக்கங்கள் இப்போது உணர்ந்து செயற்படத் தொடங்கியுள்ளன. ஆனால், பல அமைப்புகள் இன்னும் உணரவில்லை. இந்நிலை மாறுமானால், இஸ்லாமிய சமூகத்தில் மகத்தான மாற்றம் ஏற்படும் ; முஸ்லிம் உம்மத் உலகளாவிய அளவில் உயர்ச்சி பெறும்.

ﻧَﺤْﻦُ ﻧَﻘُﺺُّ ﻋَﻠَﻴْﻚَ ﻧَﺒَﺄَﻫُﻢْ ﺑِﺎﻟْﺤَﻖِّ ﺇِﻧَّﻬُﻢْ

ﻓِﺘْﻴَﺔٌ ﺁﻣَﻨُﻮﺍ ﺑِﺮَﺑِّﻬِﻢْ ﻭَﺯِﺩْﻧَﺎﻫُﻢْ ﻫُﺪًﻯ

‏(13‏)

(நபியே!) நாம்
உமக்கு
அவர்களுடைய
வரலாற்றை
உண்மையைக்
கொண்டு
அறிவிக்கிறோம்;
நிச்சயமாக அவர்கள்
இளைஞர்கள் -
தங்கள் இறைவன்
மீது ஈமான்
கொண்டார்கள்;
இன்னும் நாம்
அவர்களை நேர்
வழியில்
அதிகப்படுத்தினோம்.
அன்றைய
காலத்து அரசனை
எதிர்த்த
நபர்களை குர்ஆன்
அவர்களின் வயதின்
காலத்தையும்
குறிபிடுகிறது
. எனவே இளமை
பருவம்
ஒரு நாட்டையும்
ஒரு பெரும்
அரசனியும் கூட
எதிர்த்து நிற்கிற
துணிவு கொண்ட
ஒரு அற்புதமான
பலம் மிக்க பருவம்.
அதை சரியான
முறையில்
பயன்படுத்த
வழி காட்டப்பட
வேண்டும்.
மேற்படி உள்ள
வசனத்தில் குர்ஆன்
அவர்களுக்கு
நேர்வழியை
அதிக
ப்படுதினோம் என
சொல்வதை
விதை
அவர்களுக்கு நல்ல
வழிகாட்டுதல்
தேவை
படுகிறது.
நபி இப்ராஹிம்
அலைஹிஸ்
ஸலாம் அவர்களின்
சிற்சில
சம்பவங்களை
அல்லாஹ்  குர்ஆனில்
சொல்கிறான்.
அவர்களின் இளமை
பருவத்தையும்
அல்லாஹ்
குர்ஆனில்
சொல்கிறான்
இப்ராஹிம்
அலைஹிஸ்
ஸலாம் அவர்கள்
ஊரின்
திருவிழா வந்த
நாளில் அதற்கு
செல்லாமல்
அவர்கள் ஊறில்
தங்கி
விடுகிறாகள்.
அவர்களின் ஊரில்
சிலை வணக்கங்கள்
அதிகம். பேசாத
கேட்காத இந்த
சிலைகளிடத்தில்
இந்த மக்கள்
எதை கோரிக்கை
வைக்கிறார்கள் என
இப்ராஹீம்
அலைஹிஸ்
ஸலாம் அவர்கள்
வியந்தார்கள்.
சிலை வணக்கத்தை
ஒழிக்கும் முதல்
முயற்சியாக
மக்களுக்கு
விழிப்புணர்வை
கொண்டு வர
எண்ணி அவர்களின்
சிலை
ஆலயங்களுக்கு
சென்று அங்குள்ள
எல்லா
சிலைகளையும்
உடைத்து விட்டு
பெரிய
சிலையின்
கழுத்தில்
கோடரியை
மாறிவிட்டு
வந்துவிட்டார்கள்.
திருவிழா
முடிந்து மக்கள்
திரும்பி வந்த
பார்க்கும் பொது
கொந்தளித்
துவிட்டர்கள்.
காரணம் தங்கள்
தெய்வங்களை
சிலைகளை
யாரோ உடைத்து
விட்டார்கள் என்று.
இதை அரசனிடம்
சொல்ல
இப்படி யார்
செய்தது என
விசாரிக்க பலரும்
தெளிவாக
ஒரு கருத்தை
சொன்னார்கள்
அதை குர்ஆனில்
அல்லாஹ்
சொல்கிறான்

ﻗَﺎﻟُﻮﺍ ﺳَﻤِﻌْﻨَﺎ ﻓَﺘًﻰ ﻳَﺬْﻛُﺮُﻫُﻢْ ﻳُﻘَﺎﻝُ

ﻟَﻪُ ﺇِﺑْﺮَﺍﻫِﻴﻢُ ‏(60‏)

இப்ராஹிம் என்று
சொல்லப்படுகிற
ஒரு இளைஞர்.
இப்ராஹீம்
அலைஹிஸ்
ஸலாம் அவர்களை
விசாரித்த
போது  அவர்கள்
சொன்னார்கள்
பெரிய
சிலையின்
கழுத்தில் கோடரி
இருக்கிறது அதை
வைத்து
பார்க்கும்போது
பெரிய
சிலை இந்த சிறிய
சிலைகளை
உடைத்திருக்கும்
என்றார்கள்.
அசைவற்ற
சிலைகள் எப்படி
உடைத்திருக்கும்
என்ற கேள்விக்கு
பதிலை அவர்களின்
தவறான
கொள்கை புரிய
வைக்க
காரணமாகி
போனது.
அசைவற்ற
சிலைகள் எனில்
மற்ற சிலைகளை
உடைக்க கூட
சக்தி பெறாது
எனில் நீங்கள்
சொல்கிற
கோரிக்கைகளை
மாதிரம்
எப்படி அந்த
சிலைகள் செவி
ஏற்க முடியும்
என்ற பதில்கள்
அவர்களுக்கு
விளக்கப்பட்டது.
ஒரு அரசனை ஒரு
ஊர்
மக்களை எதிர்த்த
ஒரு இளைஞரின்
வரலாற்றை
குர்ஆனில் அல்லாஹ்
சொல்கிறான்.
இளமைப்பருவத்தில்
இருந்தே தன்னை
வணக்கத்தில்
ஈடுபடுத்திக்
கொள்பவருக்கு
அல்லாஹ் தரும்
கண்ணியம்..

ﻋَﻦْ ﺃَﺑِﻲ ﻫُﺮَﻳْﺮَﺓَ ﺭﺽ ﻋَﻦْ ﺍﻟﻨَّﺒِﻲِّ

ﺻَﻠَّﻰ ﺍﻟﻠَّﻪُ ﻋَﻠَﻴْﻪِ ﻭَﺳَﻠَّﻢَ ﻗَﺎﻝَ ﺳَﺒْﻌَﺔٌ

ﻳُﻈِﻠُّﻬُﻢْ ﺍﻟﻠَّﻪُ ﻳَﻮْﻡَ ﺍﻟْﻘِﻴَﺎﻣَﺔِ ﻓِﻲ ﻇِﻠِّﻪِ

ﻳَﻮْﻡَ ﻟَﺎ ﻇِﻞَّ ﺇِﻟَّﺎ ﻇِﻠُّﻪُ ﺇِﻣَﺎﻡٌ ﻋَﺎﺩِﻝٌ

ﻭَﺷَﺎﺏٌّ ﻧَﺸَﺄَ ﻓِﻲ ﻋِﺒَﺎﺩَﺓِ ﺍﻟﻠَّﻪِ ﻭَﺭَﺟُﻞٌ

ﺫَﻛَﺮَ ﺍﻟﻠَّﻪَ ﻓِﻲ ﺧَﻠَﺎﺀٍ ﻓَﻔَﺎﺿَﺖْ ﻋَﻴْﻨَﺎﻩُ

ﻭَﺭَﺟُﻞٌ ﻗَﻠْﺒُﻪُ ﻣُﻌَﻠَّﻖٌ ﻓِﻲ ﺍﻟْﻤَﺴْﺠِﺪِ

ﻭَﺭَﺟُﻠَﺎﻥِ ﺗَﺤَﺎﺑَّﺎ ﻓِﻲ ﺍﻟﻠَّﻪِ ﻭَﺭَﺟُﻞٌ ﺩَﻋَﺘْﻪُ

ﺍﻣْﺮَﺃَﺓٌ ﺫَﺍﺕُ ﻣَﻨْﺼِﺐٍ ﻭَﺟَﻤَﺎﻝٍ ﺇِﻟَﻰ

ﻧَﻔْﺴِﻬَﺎ ﻗَﺎﻝَ ﺇِﻧِّﻲ ﺃَﺧَﺎﻑُ ﺍﻟﻠَّﻪَ ﻭَﺭَﺟُﻞٌ

ﺗَﺼَﺪَّﻕَ ﺑِﺼَﺪَﻗَﺔٍ ﻓَﺄَﺧْﻔَﺎﻫَﺎ ﺣَﺘَّﻰ ﻟَﺎ

ﺗَﻌْﻠَﻢَ ﺷِﻤَﺎﻟُﻪُ ﻣَﺎ ﺻَﻨَﻌَﺖْ ﻳَﻤِﻴﻨُﻪُ

‏( ﺑﺨﺎﺭﻱ

 இந்த இளமை
பருவத்தின் காலம்
பத்திலிருந்து
துளிர்
விட்டு நாற்பது
வரை வீர நடை
போடுகிறது.
அந்த
இளமை பருவற்றை
நாம்
பாதுகாத்து நல்ல
வழியில்
பயன்படுத்துவோம்!

இந்த வார பாயானுக்கு குறிப்பு கொடுத்தவர்கள் 
மவ்லவி. ஷேக் ஆதம்      தாவூதீ  
மவ்லவி. நசீர்               மிஸ்பாஹி
மவ்லவி. அப்துர் ரஹ்மான் ஹஸனீ 

தொகுத்தவர் 
மவ்லவி . பீர் முஹம்மது ஃபைஜீ

0 comments:

Post a Comment