08 January 2015

நபிகளாரின் குடும்ப வாழ்க்கை


   
மேன்மையுடைய மாதமான ரபீயுல் அவ்வல் மாதத்தில் நபிகளாரின் பல பருவங்களைப் பற்றி பார்த்து வரும் நாம் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டியது அவர்களின் குடும்ப வாழ்வு.
ஏனென்றால் சொல்லும் செயலும் ஒன்றே சேர்ந்து அமையப் பெற்றவர்கள் நபி (ஸல்) அவர்கள் மட்டுமே என்றால் அது மிகையாகாது. காந்தி இந்திய நாட்டுக்கு நல்ல தேசபிதாவாக இருந்தார். ஆனால் தன் மனைவி கஸ்தூரீபாயிடம் நல்ல கணவராக எல்லா காலத்திலும் இருந்தாரா? என்றால் நிச்சயம் கிடையாது.  
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்
عَنْ ابْنِ عَبَّاسٍ، عَنْ النَّبِيِّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - قَالَ: "خَيْرُكُمْ خيركم لِأَهْلِهِ، وَأَنَا خَيْرُكُمْ لِأَهْلِي                             ( ابن ماجة )
உங்களில் சிறந்தவர் அவர்தம் குடும்பத்தில் சிறந்தவரே. நான் என் குடும்பத்தில் சிறந்தவன்                            (இப்னு மாஜா) 

மனைவி விசயத்தில் பொருந்திக் கொள்வது
عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا يَفْرَكْ مُؤْمِنٌ مُؤْمِنَةً، إِنْ كَرِهَ مِنْهَا خُلُقًا رَضِيَ مِنْهَا آخَرَ» أَوْ قَالَ: «غَيْرَهُ»،   (مسلم)

ஒரு முஃமினான ஆண்  முஃமினான பெண்ணை கோபம் கொள்ள வேண்டாம். அவளிடம் ஒரு குணம் பிடிக்காவிட்டால் மறு குணத்தை அவன் பொருந்திக் கொள்ளட்டும். (முஸ்லிம்)

கணவன் மனைவி உறவு எப்படி இருக்க வேண்டும்??

கணவன் பால் எனில் மனைவி அதில் கலக்கப் படும் தண்ணீரைப் போல் இருந்திட வேண்டும். பாலில் எவ்வளவு தான் தண்ணீர் கலந்தாலும்,தண்ணீரை தனியே பிரித்துக் காட்டும் குணம் பாலுக்கில்லை. பாலை தனியே காட்டும் குணம் தண்ணீருக்கு இல்லை.
தண்ணீர் கலந்த பாலை அடுப்பில் வைக்கையில், தண்ணீர் நீராவியாகப் பிரிந்து செல்ல, அதை தாங்க  முடியாத பால் கோபத்தில் பொங்கி எழுந்து மேலே வரும். பொங்கி வரும் பாலில் சிறிது தண்ணீர் தெளிக்க தன்னை விட்டுச் சென்ற தண்ணீர் தன்னிடம் திரும்பியதும், பால் கோபம் தணிந்து பாத்திரத்தில் அடங்கும்.
ஒரு வேளை அப்படி தண்ணீர் தெளிக்கப்படவில்லை எனில் பால் பொங்கி ஊற்றி அடுப்பையே அணைத்துவிடும்.
கணவனும் மனைவியும் ஒருவருக்குள் ஒருவர் அடங்கி இருக்கும் வரையில் தான் குடும்பம் எனும் நெருப்பு அணையாமல் இருக்கும்.

எவ்வகையிலும் துன்பம் தராத தூய நபி
مُحَمَّدَ بْنَ قَيْسِ بْنِ مَخْرَمَةَ يَقُولُ: سَمِعْتُ عَائِشَةَ تُحَدِّثُ، قَالَتْ: أَلَا أُحَدِّثُكُمْ عَنِّي، وَعَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ؟ قُلْنَا: بَلَى، قَالَتْ: لَمَّا كَانَتْ لَيْلَتِي الَّتِي هُوَ عِنْدِي ـ تَعْنِي النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ـ انْقَلَبَ فَوَضَعَ نَعْلَيْهِ عِنْدَ رِجْلَيْهِ، وَبَسَطَ طَرَفَ إِزَارِهِ عَلَى فِرَاشِهِ، فَلَمْ يَلْبَثْ إِلَّا رَيْثَمَا ظَنَّ أَنِّي قَدْ رَقَدْتُ، ثُمَّ انْتَعَلَ رُوَيْدًا، وَأَخَذَ رِدَاءَهُ رُوَيْدًا، ثُمَّ فَتَحَ الْبَابَ رُوَيْدًا، وَخَرَجَ رُوَيْدًا
(نسائي)
ஆயிஷா நாயகி தனக்கும் நாயகத்துக்கும் நடந்த சுவையான விஷயத்தை கூறுகிறார்கள். என்னிடம் தங்க  வேண்டிய நாளில் நாயகம் (ஸல்) அவர்கள்  எனது காலுக்கருகில் தங்கள் காலணியைக் கழற்றி விரிப்பில் சிறிது  நேரம் தான் அமர்ந்திருந்தார்கள். நான் உறங்கிவிட்டேன் என எண்ணி انْتَعَلَ رُوَيْدًا மெதுவாக செருப்பணிந்தார்கள். وَأَخَذَ رِدَاءَهُ رُوَيْدًا மெதுவாக தான் மேலங்கியை எடுத்தார்கள். ثُمَّ فَتَحَ الْبَابَ رُوَيْدًا மெதுவாக கதவை திறந்தார்கள். وَخَرَجَ رُوَيْدًا மெதுவாக வெளியில் சென்றுவிட்டார்கள்.     ( நஸாயீ )

செருப்பை அணிவது, ஆடையை எடுப்பது, கதவை திறப்பது, வெளியில் செல்வது இது போன்ற ஒவ்வொரு செயலும் தன் மனைவியின் தூக்கத்தை கெடுத்துவிடக்கூடாது என்பதற்காக நாயகம் நடந்து கொண்ட முறை நம்மை மெய்சிலிர்க்க வைக்கிறது.
சகோதரர்களே நாம் யோசித்து பார்க்கவேண்டும். நாம் ஸலாம் சொல்லி மனைவி கதவைத் திறக்க தாமதமாகிவிட்டால் எவ்வளவு கடுமையாக கதவைத் தட்டுகிறோம். எதிர்த்த வீட்டுக்காரர் தன் வீடுதான் தட்டப்படுகிறதோ என்று எண்ணி நம் வீட்டு கதவை எட்டிப் பார்க்கிறார். இதற்கு காரணம் நம் வீடு நம் மனைவி நம் பேச்சைத்தான் அவள் கேட்க வேண்டும் என்ற நம்முடைய எண்ணம் நம்மிடம் மேலோங்கி இருக்கிறது. 

சில தருணங்களில் மனைவியின் பேச்சையும் கேட்க வேண்டும்


, நபி(ஸல்) அவர்கள் ஒப்பந்தப் பத்திரத்தை எழுதி முடித்த பின்பு தம் தோழர்களை நோக்கி, “எழுந்து சென்று குர்பானி கொடுத்துவிட்டு தலைமுடி களைந்து கொள்ளுங்கள்” என்று உத்தரவிட்டார்கள். ஆனால், அவர்களில் ஒருவர் கூட எழுந்திருக்கவில்லை. எனவே, நபி(ஸல்) அவர்கள் மூன்று முறை இவ்வாறு கூறினார்கள். இருந்தும், அவர்களில் எவரும் எழுந்திருக்காத காரணத்தால் (தம் துணைவியார்) உம்மு  ஸலமா(ரலி) அவர்களிடம் சென்று மக்களிடமிருந்து தாம் சந்தித்த அதிருப்தியை(யும், அதனால் அவர்கள் தமக்குக் கீழ்ப்படியாமலிருப்பதையும்) சொன்னார்கள். உடனே உம்மு ஸலமா(ரலி), “இறைத்தூதர் அவர்களே! தியாகப் பிராணியை அறுத்துவிட்டுத் தலைமுடி களைந்து கொள்ள வேண்டும் என்பதை விரும்புகிறீர்களா? (நீங்கள் தியாகப் பிராணிகளை அறுத்து முடி களையப் புறப்படுங்கள். நீங்கள் (தியாகப் பிராணிகளான) குர்பானி ஒட்டகங்களை அறுத்துவிட்டு உங்கள் நாவிதரை அழைத்து, அவர் உங்கள் முடியைக் களையும் வரை அவர்களில் எவருடனும் ஒரு வார்த்தையும் பேசாதீர்கள்” என்று (ஆலோசனை) கூறினார்கள். உடனே, நபி(ஸல்) அவர்கள் புறப்பட்டு ஒட்டகங்களை குர்பானி கொடுத்துவிட்டு, தம் நாவிதரை அழைத்துத் தலைமுடியைக் களைந்தார்கள். அதுவரை அவர்களில் எவரிடமும் நபியவர்கள் பேசவில்லை. இவற்றைக் கண்டவுடன் மற்ற நபித்தோழர்களும் எழுந்து சென்று தியாகப் பிராணிகளை அறுத்து, ஒருவர் மற்றவரின் தலைமுடியைக் களையத் தொடங்கினார்கள். ஒருவர் மற்றவரை நெரிசலால் சாகடித்து விடுவார்களோ எனும் அளவிற்குப் போட்டி போட்டுக் கொண்டு (தியாகப் பிராணிகளை அறுக்கவும் முடிகளையவும்) சென்றனர்.
                                                                                                    (  புஹாரி :2731,2732)
நபி (ஸல்) அவர்கள் இது போன்று சில நல்ல விசயங்களில் மனைவியின் பேச்சை கேட்டுள்ளார்கள்.
ஒழுக்க விஷயத்தில் கண்டிப்பு
عَنْ أُمِّ سَلَمَةَ، قَالَتْ: كُنْتُ عِنْدَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَعِنْدَهُ مَيْمُونَةُ، فَأَقْبَلَ ابْنُ أُمِّ مَكْتُومٍ وَذَلِكَ بَعْدَ أَنْ أُمِرْنَا بِالْحِجَابِ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «احْتَجِبَا مِنْهُ»، فَقُلْنَا: يَا رَسُولَ اللَّهِ، أَلَيْسَ أَعْمَى لَا يُبْصِرُنَا، وَلَا يَعْرِفُنَا؟ فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَفَعَمْيَاوَانِ أَنْتُمَا [ص:64]، أَلَسْتُمَا تُبْصِرَانِهِ»، قَالَ أَبُو دَاوُدَ: «هَذَا لِأَزْوَاجِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ خَاصَّةً                                                         (أَبُو دَاوُدَ)
உம்மு ஸலமஹ்( ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்:
நபியவர்களிடம் நானும் மைமூனா( ரலி) அவர்களும் இருந்த அச்சந்தர்ப்பத்தில் இப்னு உம்மி மக்தூம் ( ரலி) அவர்கள் அங்கே வருகை தந்தார்கள்.நபியவர்கள் எங்கள் இருவர்களைப் பார்த்து அந்நபித் தோழரை விட்டும் உங்களை மூடி மறைத்துக் கொள்ளுங்கள் என்றார்கள்.அதற்கு நாங்கள்,அல்லாஹ்வின் தூதரே! அவருக்குத்தான் கண்பார்வை இல்லையே? எங்களை அறியவும் மாட்டார்,எங்களைப் பார்க்கவும் மாட்டார்,எங்களைப் பார்க்கவும் முடியாது என்றோம்.அதற்கு நபியவர்கள் நீங்கள் இருவரும் பார்வை உடையவர்களல்லவா என்று கூறினார்கள்.
)                                                                                                                 அபூதாவூத்(
وَقَرْنَ فِي بُيُوتِكُنَّ وَلَا تَبَرَّجْنَ تَبَرُّجَ الْجَاهِلِيَّةِ الْأُولَى وَأَقِمْنَ الصَّلَاةَ وَآتِينَ الزَّكَاةَ وَأَطِعْنَ اللَّهَ وَرَسُولَهُ إِنَّمَا يُرِيدُ اللَّهُ لِيُذْهِبَ عَنْكُمُ الرِّجْسَ أَهْلَ الْبَيْتِ وَيُطَهِّرَكُمْ تَطْهِيرًا
33:33
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குள் தனிச்சிறப்புக்களில் ஒன்று     அவர்களுடைய பெயர் சொல்லப்படுகிறஇடங்களில் அவருடையை     குடும்பத்தாரும் வாழ்த்தப்படுவார்கள்.

பெருமானார் (ஸல்) ) அவர்களுடைய குடும்பத்தாரை வாழ்த்துவதும்     கண்ணியப்படுத்துவதும் முஸ்லிம்களின்கடமையாகும்.

தன் மீது எப்படி சலவாத்து வாழ்த்துச் சொல்வது என்பதை விவரித்த நபி (ஸல்) அவர்கள். இவ்வாறுசொல்லித்தந்தார்கள்.

இறைவா! முஹம்மதின் மீதும் அவருடைய குடும்பத்தினர் மீதும்           அருட்செய்வாயாக! இபுறாகீமின் மீதும்அவருடைய குடும்பத்தினர்        மீதும் அருட்செய்த்து போல. முஹம்மதின் மீதும் அவருடைய குடும்பத்தினர்மீதும் பாக்கியங்களை பொழிவாயாக! இபுறாகீமின் மீதும் அவருடைய குடும்பத்தின்ர் மீது பொழிந்தது போல!

 அலா ஆலிஹி  என்ற வார்த்தைக்கு அவருடைய குடும்பத்தார் என்று பொருள்,

ஷாபி மத்ஹபில் அதிகாலை பஜ்ரு தொழுகையின் போது ஓதப்படுகிற குனூத்தில் பெருமானாரின் மீதுசலாத் சொல்ல வேண்டும் அதற்காக    நிற்க வேண்டும் என்பது போல பெருமானாரின் குடும்பத்தினர் மீது சலவாத் சொல்ல வேண்டும் அதற்காக நிற்கவேண்டும் என்று சட்டம் சொல்லப் பட்டிருக்கிறது.

பெருமானாரின் குடும்பத்தை நேசிப்பது அவர்கள் விச்யத்தில் நல்லெண்ணம் கொள்வது நிபாக்கிலிருந்துகாப்பாற்றும் என்று தஹாவி கூறுகிறார்,

ويبين الطحاوي أن البراءة من النفاق لا تكون إلا بسلامة المعتقد في آل البيت فيقول: (ومن أحسنَ القولَ في أصحاب رسول الله وأزواجه الطاهرات من كل دنس، وذرياته المقدسين من كل رجس، فقد برئ من النفاق).
- متن العقيدة الطحاوية

பெருமானாரின் குடும்பத்தார் விஷயத்தில்  அலட்சியம் காட்டுவது     நிபாக்காகி விடும்.
பெருமானாரின் குடும்பம் எது?

நபிகள் நாயகத்தின் முப்பாட்டனார் ஹாஷிமுடைய வாரிசுகளில்          உள்ள முஸ்லிம்கள் அனைவரும் நபிகள்நாயகத்தின் குடும்பம் என்று  கருதப்படுவர். இதன்படி அப்பாஸ் (ரலி) அபூதாலிபின் மகன்களான அலீ ஜாபர்உகைல் ஆகியோரும் நபியின் குடும்பத்தினர்களாக கருதப்படுவார்கள்.

அஹ்லுஸ் ஸூன்னத் வல்ஜமாத்தின் கருத்தின் படி பின்வருவோர்      அனைவரும் பெருமானாரின்குடும்பத்தினராக கருதப் படுவர்.
·         நபி (ஸல்)
·         அவர்களுடைய குழந்தைகள்
·         அவர்களுடைய மனைவியர்
·         பெருமானாருடைய பாட்டனார் ஹாசிம் குடும்பத்தைச் சார்ந்த
·         அப்பாஸ் பின் அப்துல் முத்தலிபின் வாரிசுகள்
·         அகீல் பின் அபீதாலிபின் வாரிசுகள்
·         ஜஃபர் பின் அபீதாலிபின் வாரிசுகள்
·         அலீ பின் அபீதாலிபின் வாரிசுகள்
·         ஹாரிஸ் பின் அப்துல் முத்தலிபின் வாரிசுகள்
·         அபூலஹ்பு பின் அப்துல் முத்தலிபின் வாரிசுகள்
·     இவர்களின் வாரிசுகளில் இன்று வரையுள்ள உறுப்பினர்கள்.
·         சல்மான் பார்ஸி (ரலி) 

இவர்களில் சல்மான் (ரலி) அவர்கள் பெருமானாரின் குடும்பத்தினரோடு நேரடித் தொடர்புடையவர் அல்ல.பாரசீகத்திலிருந்து ஒரு சத்திய நெறியைத் தேடி நீண்ட நெடிய பயணம் செய்த பிறகு நபி ( ஸல்)அவர்களைத் தேடிக் கண்டுபிடித்து இஸ்லாமைத் தழுவியவர். அகழ் யுத்தத்தின்    போது மதினாவின்வாசலில் அகழி தோண்டி தற்காப்புச் செய்து கொள்ள பெருமானாருக்கு ஆலோசனை வழங்கியவர். அகழிதோண்டுவதற்காக மக்காவிலிருந்து குடிபெயர்ந்து வந்த முஹாஜிர்களும், மதீனாவை     தாயகமாக கொண்டஅன்சாரிகளும் தனித்தனியாக அணிபிரிக்கப்பட்ட போது பாரசீகத்தைச் சேர்ந்த சல்மான் தனியாக நின்றார். மக்காவைச் சேர்ந்த முஹாஜிர் தோழர்களும் மதீனாவைச் சேர்ந்த அன்சாரித் தோழர்களும் இவர் எங்களவர்என்று அவரைச் சொந்தம் கொண்டாட போட்டியிட்டார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் குறிக்கிட்டுசல்மானும் மின்னா மின் அஹ்லில் பைத்சல்மான எங்களைச் சேர்ந்தவர். எங்களது குடும்பத்தில் ஒருவர்என்று சொன்னார்கள். அந்த ஒரு வார்த்தையின் காரணமாக சல்மான் (ரலி) பெருமானாரின்குடும்பத்தவர்களில்     ஒருவராக கருதப்படுகிறார்.

குலப் பெருமை கோலோச்சிக் கொண்டிருந்த அன்றைய அரபகத்தின்    சூழலில் ஒரு அன்னியரைதம்மவராக்கிக் கொண்ட பெருமானாரின்    பெருந்தன்மை புரட்சிகரமானது. குலப்பெருமையின் ஆணிவேரையேஅசைத்துப் போட்ட்து.

மனிதக் குடும்பங்களில் சிறந்த பரிசுத்தமான குடும்பம்
عَنْ أَبِي عَمَّارٍ شَدَّادٍ، أَنَّهُ سَمِعَ وَاثِلَةَ بْنَ الْأَسْقَعِ، يَقُولُ: سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «إِنَّ اللهَ اصْطَفَى كِنَانَةَ مِنْ وَلَدِ إِسْمَاعِيلَ، وَاصْطَفَى قُرَيْشًا مِنْ كِنَانَةَ، وَاصْطَفَى مِنْ قُرَيْشٍ بَنِي هَاشِمٍ، وَاصْطَفَانِي مِنْ بَنِي هَاشِمٍ»
(مسلم)

தர்மப் பெருளை  சாப்பிடக் கூடாது
قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ هَذِهِ الصَّدَقَاتِ إِنَّمَا هِيَ أَوْسَاخُ النَّاسِ، وَإِنَّهَا لَا تَحِلُّ لِمُحَمَّدٍ، وَلَا لِآلِ مُحَمَّدٍ                       
(مسلم)

என்னே ஆச்சரியமான சிறப்பு பாருங்கள்!
தலைவரின் குடும்பம் என்றால் வகை தொகை இல்லாமல்                         சாப்பிடலாம்.


இன்று, சீக்கிரமாக பெருமளவில் பிரம்மாண்டமாக காசு சம்பாதிக்கிற   எளிய வழியாக சமயம் ஆகிவிட்டது. மில்லியனராவதற்கு பள்ளிக் கூடம் தொடங்குங்கள்; மல்டி மில்லியனராவதற்கு சாமியாராகி விடுங்கள் என்றுசொல்லப்படுமளவு சமயத்     தொண்டு என்பது இன்று பொருளாதார மயமாகிவிட்டது. ஆனால்            ண்மையானசமயச் சான்றோர்களான இறைத்தூதர்களின் இயல்பும்     எதார்த்தமும் தர்மப் பொருளையும் தங்களதுகுடும்பத்தை விட்டு தள்ளிவைப்பதாகவே இருந்தது.

தலைவரின் குடும்பத்தின்ர் அந்த செல்வாக்கைப் பயன்படுத்தி பெருமளவில் காசு பணம் சம்பாதித்துவிடுவதை வரலாற்றுக் கால்ந்தொட்ட    இன்று வரை நாம் பார்த்து வருகிறோம். முஹம்மது (ஸல்) அவர்களோ தம்து குடும்ப்த்தினர் எவரும் தர்மப் பொருட்களைதொடக்கூடாது என்று தடை செய்தார்கள்.

ஒரு முறை சதகாவாக நபிகள் நாயகத்தின் வீட்டு முற்றத்தில் வைக்கப் பட்டிருந்த பேரீத்தம் பழங்களில்ஒன்றை நாயகத்தின் பேரர் ஹசன் (ரல்) அவர்கள் எடுத்து வாயில் போட்டு விட்டார். இதைப் பார்த்தநபியவர்கள் வேகமாகாக வந்து அவரை அதை துப்பும் படி செய்தார்கள்.

அதே போல தனது சொத்துக்களுக்கு யாருக்கும் வாரிசுரிமையாக்           கிடைக்காது என்றும். தான் விட்டுச்செல்கிற சொத்துக்கள் முஸ்லிம்களின் பொது தர்ம காரியங்களுக்கு பயன்படுத்தப் பட வேண்டும் எனவும்நபிகள் நாயகம் (ஸல்)  உத்தரவிட்டார்கள். (அவர் தனக்கென பெரிதாக சொத்து எதையும்சேர்க்கவில்லையும்          அவரது குடும்பம் பசியிலும் பட்டினியிலும் வாடியபடிதான் பல காலம் வாழ்ந்த்துஎன்பதும் வேறு விசயம்)

நபியின் வாரிசு வாரிசுதாரராகமாட்டார்

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «لاَ يَقْتَسِمُ وَرَثَتِي دِينَارًا، مَا تَرَكْتُ بَعْدَ نَفَقَةِ نِسَائِي وَمَئُونَةِ عَامِلِي، فَهُوَ صَدَقَةٌ»

   அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்
என் வாரிசுகள் ஒரு தீனாரைக் கூட (வாரிசு) பங்காக பெறமாட்டார்கள். என் மனைவிமார்களுக்கு சேரவேண்டிய வாழ்க்கைச் செலவு என் பிரதிநிதியின் ஊதியமும் போக நான் விட்டுச் செல்பவையெல்லாம் தருமமேயாகும்). இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்

فَقَالَ أَبُو بَكْرٍ سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ لَا نُورَثُ مَا تَرَكْنَا صَدَقَةٌ – البخاري

அஹ்லு பைத்துகள் அமைதியின் சின்னங்கள்

أَلَا أَيُّهَا النَّاسُ فَإِنَّمَا أَنَا بَشَرٌ يُوشِكُ أَنْ يَأْتِيَ رَسُولُ رَبِّي فَأُجِيبَ، وَأَنَا تَارِكٌ فِيكُمْ ثَقَلَيْنِ: أَوَّلُهُمَا كِتَابُ اللهِ فِيهِ الْهُدَى وَالنُّورُ فَخُذُوا بِكِتَابِ اللهِ، وَاسْتَمْسِكُوا بِهِ " فَحَثَّ عَلَى كِتَابِ اللهِ وَرَغَّبَ فِيهِ، ثُمَّ قَالَ: «وَأَهْلُ بَيْتِي أُذَكِّرُكُمُ اللهَ فِي أَهْلِ بَيْتِي، أُذَكِّرُكُمُ اللهَ فِي أَهْلِ بَيْتِي، أُذَكِّرُكُمُ اللهَ فِي أَهْلِ بَيْتِي          (مسلم)


எனக்கும் மரண தூதர் வருவார். எனக்குப் பின் கிதாபையும் எனது குடும்பத்தினரையும் பற்றிக்கொள்ளுங்கள். என்னுடைய அஹ்லே பைத் என்னுடைய அஹ்லே பைத் என நபி (ஸல்) மூன்று முறை கூறிக்காட்டினார்கள்.


நபியின் குடும்பத்தார் விசயத்தில் - சமுதாயத்தின் கடமை என்ன?

عَنْ أَبِي بَكْرٍ رَضِيَ اللَّهُ عَنْهُمْ، قَالَ: «ارْقُبُوا مُحَمَّدًا صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي أَهْلِ بَيْتِهِ» (بخاري  3713)
 அபூபக்கர் (ரலி) கூறினார்:
நபியின் குடும்பத்தார் விசயத்தில் முஹம்மது (ஸல்) அவர்களிடம்        கவனமாக நடந்து கொள்ளுங்கள்.

وَالْمُرَاقَبَةُ لِلشَّيْءِ الْمُحَافَظَةُ عَلَيْهِ يَقُولُ احْفَظُوهُ فِيهِمْ فَلَا تُؤْذُوهُمْ وَلَا تسيئوا إِلَيْهِم              (فتح الباري لابن حجر)   7:79
முஹ்ம்மது (ஸல்) அவர்கள் குடும்பத்தினர் விசயத்தில் எச்சரிக்கையாக நட்ந்து கொள்வதன் மூலம்பெருமானரின் உணர்வுகளை பாதுகாத்துக் கொள்ளுங்கள். அவர்களுக்கு தொல்லை தந்து விடாதீர்கள்.தீங்கிழைத்து விடாதீர்கள். என்பது இந்த வாசகத்தின் கருத்து என புகாரியின் விரிவுரையாளர் இபுனு ஹஜர்கூறுகிறார்.

நேசித்தல்

பெருமானாரின் குடும்பத்தினரை நேசிப்பது இரண்டாவதுகடமையாகும். ஒருவரை நேசிப்பதன் முழுஅடையாளம் அவரது குடும்பத்தை நேசிப்பதன் மூலமே நிறைவடைகிறது.

யாராவது ஒருவர் இன்னொரு சகோதரரைச் சுட்டிக் காட்டி எனக்கு அவரை நல்லா புடிக்கும். ஆனல் அவரதுகுடும்பத்தை பிடிக்காது என்று சொன்னால் அது முழுமையான பற்றல்ல

சமுதாயம் கற்றுக் கொள்ளவேண்டிய ஒரு தனிப்பட்ட பாடம் இது. ஒருவரை நாம் நேசிப்பதன் முழுஅடையாளம் அவரைச் சார்ந்த அவரது குடும்பத்தினரையும் நேசிப்பதாகும். அப்போதுதான் நாம் யாரைநேசிக்கிறமோ அவர் நம்மை முழுமையாக நேசிப்பார். இல்லை என்றால் இரயில் சிநேகம் போல் அதுஅழுத்தமற்ற நட்பாகத்தான் இருக்கும். உறவினர்கள் நண்பர்கள் அனைவர் விசயத்திலும் இது பொருந்தும்.

அந்த வகையில் நபியை நேசிப்பது போல அவரது குடும்பத்தினரை நேசிக்க நாம் பழகவும் முயலவும்வேண்டும். நபியின் குடும்பத்தினர் ஒருவர் உறுதியாக அடையாளம் காணப்படுகிற பட்சத்தில் அவர் மீதும்நாம் நேசம் கொள்ள வேண்டும்.அதுவே நாம் நபியைநேசிப்பதன் சரியான அடையாளமாகும்.

நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்:

عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ أَحَبَّ الْحَسَنَ وَالْحُسَيْنَ فَقَدْ أَحَبَّنِي، وَمَنْ أَبْغَضَهُمَا فَقَدْ أَبْغَضَنِي»     (ابن ماجة)
__________
 எனது பேரர் ஹசன் ஹுசைன் (ரலி) ஆகியோரை நேசிப்பவர் என்னை நேசிக்கிறார். அவ்விருவரைகோபிக்கிறவர் என்னையே கோபிக்கிறார்.

உமர் (ரலி) காட்டிய நேசம்
وقال عمر للعباس-رضي الله عنهما-:(والله، لإسلامك يوم أسلمت كان أحب إليَّ من إسلام الخطاب لو أسلم؛ لأن إسلامَك كان أحبَّ إلى رسول الله من إسلام الخطاب)..
என் தந்தை ஹத்தாப் இஸ்லாத்தை ஏற்பதை விட நபி ஸல் அவர்களின் சிறிய தந்தையாகிய தாங்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்வதே பிரியம் என்று உமர் ரலி கூறினார்கள் என்றால் எந்த அளவு நபி ஸல் அவர்களின் குடும்பத்தின் மீது பிரியம் வைத்திருப்பார்கள் என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

நபியின் குடும்பத்தில் ஒருவர் இறந்து போனால் அதை பெரிய விசய்மாக நபித்தோழர்கள்கருதினார்கள்

؛ فقد قيل لابن عباس -رضي الله عنهما-بعد صلاة الصبح: ماتت فلانة، لبعض أزواج النبي فسجد، قيل له: أتسجد في هذه الساعة ؟ فقال: أليس قال رسول الله:(إذا رأيتم آية فاسجدوا)، فأي آية أعظم من ذهاب أزواج النبي-صلى الله عليه وسلم-                                                              (ترمذي)

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் குடும்பத்தினரை பழிப்பதோ,     இவர்களெல்லாம் என்ன வாரிசுகள் என்றுஇழிவாகப் பேசவோ, வேறு   வகைகளில் அவர்கள் மனம் புண்படுமாறு நடந்து கொள்ளவோ     கூடாது.  
அவர்களிடம் ஏதேனும் ஒரு குறை தென்பட்டால் பெருமானாரின்     குடும்பம் என்பதை தொடர்பு படுத்தியோ சுட்டிக்காட்டியோ பேசிவிடக்கூடாது. இவ்வாறு நடந்து கொள்ள   வேண்டியது ஈமானிய பண்பு என்பதைகவனத்தில் கொள்ளவேண்டும்

குறைஷியர் கொடுத்த மதிப்பு

عَنِ الْعَبَّاسِ بْنِ عَبْدِ الْمُطَّلِبِ، قَالَ: كُنَّا نَلْقَى النَّفَرَ مِنْ قُرَيْشٍ وَهُمْ يَتَحَدَّثُونَ فَيَقْطَعُونَ حَدِيثَهُمْ، فَذَكَرْنَا ذَلِكَ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: «مَا بَالُ أَقْوَامٍ يَتَحَدَّثُونَ، فَإِذَا رَأَوُا الرَّجُلَ مِنْ أَهْلِ بَيْتِي قَطَعُوا حَدِيثَهُمْ، وَاللَّهِ لَا يَدْخُلُ قَلْبَ رَجُلٍ الْإِيمَانُ حَتَّى يُحِبَّهُمْ لِلَّهِ وَلِقَرَابَتِهِمْ مِنِّي»
                                                                   (ابن ماجة)
நபிகள் நாயகத்தின் பெரிய தந்தை அப்பாஸ் கூறுகிறார்:
நாங்கள் குறைஷியரில் ஒரு குழுவினரை சந்தித்தோம். எங்களைப் பார்த்ததும் அவர்கள் பேசுவதை நிறுத்திக்கொண்டார்கள். இதைப் பற்றி நபி (ஸ்ல்) அவர்களிடம் நாங்கள் கூறினோம். அதற்கவர்கள் என்னுடையகுடும்பத்தினரை நேசிக்கிற போதுதான் ஒருவருடைய உள்ளத்தில் ஈமான் நுழையும்.அல்லாஹ்விற்காகவும் என்னிடமிருக்கிற நெருக்கத்திற்காகவும் அவர்களை அவர் நேசிக்க வேண்டும்என்றார்கள் (இப்னுமாஜா)

பெருமானாரின்
 குடும்பத்தாரை மதிப்பதும் நேசிப்பதும் ஈமானிய குணம், அவர்களை அலட்சியப்படுத்துவதும் துன்புறுத்துவம் ஈமானிற்கு எதிரான குணம் என்பதை நினைவில் கொள்கிற அதே நேரத்தில்பெருமானாரின் குடும்பத்தின் மீதான நேசம் என்ற பெயரில் இஸ்லாமின் வரையறைகளை தாண்டிச் சென்றுவிடக்கூடாது என்பதை மறந்து விடலாகாது.

நாம் அனைவரையும் பெருமானாரின் குடும்பத்தை நேசிப்பவர்களாக ஆக்கி அருள்புரிவானாக 
தனது மகன் இபுறாகீம் (ரலி) தீடீரென இறந்த போது பெருமானார் அதிகம் கவலைப் பட்டார்கள். துயரம்தாளாது அழுதார்கள். இந்த சந்தர்ப்பத்தில் சூரிய கிரகணம் ஏற்பட்ட்து. பெருமனாரின் மீது அலாதியானநேசம் கொண்ட சில நபித்தோழர்கள். பெருமானாரின் குழந்தை இறந்ததற்காக சூரியன் துக்கம்அனுஷ்டிக்கிறது என்று பேசிக் கொண்டார்கள். தோழர்களின் இந்த நம்பிக்கையை கண்ட பெருமானார் (ஸல்)அவர்கள் தனது சொந்த துக்கத்தை பொருட்படுத்தாமல் தோழர்களை ஒன்று கூட்டி யாருடையமரணத்திற்காகவும் கிரகணம் பிடிப்பதில்லை.  அது இறைவனது வல்லமைக்கான சான்றுகளில்  ஒன்றுஎன்று தெரிவித்தார்கள்.

ஒரு அரசியல் தலைவராக மக்களின் அனுதாபத்தை லாபமாக்கிக் கொள்ள நினைக்காமல் ஒரு சம்யத்தின்தலைவராக மக்களின் நம்பிக்கையை சுத்தப் படுத்திய நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தம் மீதானஅன்பை,அல்லது தனது குடும்பத்தினர் மீதான அன்பை வெளிப்படுத்துவதில் சமுதாயம் எல்லை கடந்துவிடக்கூடாது என்பதில் எச்சரிக்கையாக இருந்திருக்கிறார்கள் பாருங்கள்!

எனவே நாமும் நபி (ஸல்) அவர்களின் குடும்பத்தினர் மீதும் அதிகமான நேசம் வைக்கும் பாக்கியத்தை அல்லாஹ் நம் அனைவருக்கும் தந்தருள்புரிவானாக. 


 குறிப்பு வழங்கிய உலமாப் பெருமக்கள் 
மவ்லானா.  நசீர்                    மிஸ்பாஹி
மவ்லானா.  ஷேக் ஆதம்           தாவூதி
மவ்லானா. முஹம்மது இல்யாஸ்
மவ்லானா. சுல்தான்                சலாஹி
மவ்லானா. முஹ்யித்தீன்          சிராஜி
மவ்லானா. அப்‌பாஸ்                ரியாஜி

தொகுத்தவர்
மவ்லானா. பீர் முஹம்மது       ஃபைஜி          











0 comments:

Post a Comment