15 January 2015

இறுதி நபியின் இறுதி நாட்கள்





இறுதி நபியின் இறுதி நாட்கள்


ﻭَﻣَﺎ ﻣُﺤَﻤَّﺪٌ ﺇِﻟَّﺎ ﺭَﺳُﻮﻝٌ ﻗَﺪْ ﺧَﻠَﺖْ ﻣِﻦْ ﻗَﺒْﻠِﻪِ ﺍﻟﺮُّﺳُﻞُ ﺃَﻓَﺈِﻳْﻦ ﻣَﺎﺕَ ﺃَﻭْ ﻗُﺘِﻞَ ﺍﻧْﻘَﻠَﺒْﺘُﻢْ ﻋَﻠَﻰ ﺃَﻋْﻘَﺎﺑِﻜﻢْ ﻭَﻣَﻦْ ﻳَﻨْﻘَﻠِﺐْ ﻋَﻠَﻰ ﻋَﻘِﺒَﻴْﻪِ ﻓَﻠَﻦْ ﻳَﻀُﺮَّ ﺍﻟﻠَّﻪَ ﺷَﻴْﺌًﺎ ﻭَﺳَﻴَﺠْﺰِﻱ ﺍﻟﻠَّﻪُ ﺍﻟﺸَّﺎﻛِﺮِﻳﻦ (القرآن 3:144) إِنَّكَ مَيِّتٌ وَإِنَّهُمْ مَيِّتُونَ (القرآن 39:30)

அல்லாஹ் கூறினான்: முஹம்மது (நபி) ஒரு தூதரேயன்றி (இறக்காமல் இருக்கக் கூடிய இறைவன்) அல்ல. அவருக்கு முன்னரும் (இவ்வாறே) பல தூதர்கள் சென்றிருக்கின்றனர். அவர் இறந்துவிட்டால் அல்லது வெட்டப்பட்டு விட்டால் நீங்கள் புறங்காட்டிச் சென்று விடுவீர்களோ? (அவ்வாறு) எவரேனும் புறங்காட்டிச் சென்று விட்டால் அதனால் அவன் அல்லாஹ்வுக்கு ஒன்றும் நஷ்டம் உண்டாக்கி விடமாட்டான். நன்றி அறிபவர்களுக்கு அல்லாஹ் அதிசீக்கிரத்தில் (நற்)கூலியைத் தருவான். (அல்குர்ஆன் 3:144)  

இன்னொரு வசனத்தில் அல்லாஹ் கூறினான்: (நபியே!) நிச்சயமாக நீரும் மரணிக்கக்கூடியவரே அவர்களும் மரணிக்கக்கூடியவர்களே ஆவர். (அல்குர்ஆன் 39:30)

உலகில் படைக்கப்பட்ட எல்லா ஜீவராசிகளுக்கும் மரணம் என்பது உண்டு. இதில் யாருக்கும் விதிவிலக்கு அளிக்கப்படவில்லை. அந்த அமைப்பில், கண்மணி நாயகம் (ஸல்) அவர்களுக்கும் மரணம் தழுவியது. உலகிலுள்ள எல்லாம் அழிந்துவிடும் இறைவன் மட்டும் அழியாதவன் என்று திருக்குர்ஆன் சொல்லிக்காட்டும். ஆனாலும், நாயகம் (ஸல்) அவர்களுக்கு ஆயுள் சலுகையை அல்லாஹ் வழங்கினான். (புகாரி-3904, முஸ்லிம்-2382, திர்மி-3660) நபியவர்களோ அல்லாஹ் தேர்வு செய்தே அன்றே தன்னை ஒப்படைக்க முடிவு செய்துகொண்டார்கள்.


நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் பூர்ணத்துவம்:

நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் வாழ்க்கை பரிபூர்ணத்துவம் மிளிர்கிற ஒரு வாழ்க்கையாகும். எல்லா அம்சத்திலும். அவர்களுடைய இறுதி நிமிடங்களும் அப்படித்தான். பலருக்கு அவர்களுடைய இறுதி நாட்கள் மரியாதைக்குரியதாய் இருந்ததில்லை. சக்ரடீஸ் சிறையில் நஞ்சு கொடுக்கப்பட்டு கொல்லப்பட்டார். ரஷ்ய தத்துவ ஞானி லியோ டால்ஸ்டாய் இரயில் நிலைய பிளாட்பார பெஞ்சில் கேட்பாரற்று இறந்து போனார். நெப்போலியன் போனபர்ட் செயீன் ஹலீனா தீவில் தனிமைச் சிறையில் இறந்தான். முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள்தான், இறப்பதற்கு முன்பே அதற்கான அறிகுறிகளை உணர்ந்தார்கள். இறுதிப் பயணத்திற்கு தன்னை தயார்ப்படுத்திக் கொண்டார்கள். சஹாபாக்களுக்கு மறைமுகமாக உணர்த்தினார்கள். தள்ளாடும் பருவத்தை எட்டும் முன்பே மிக அமைதியாக மனைவி ஆயிஷா ரலி அவர்களின் செஞ்சில் சாய்ந்தவாறு உயர்ந்த நன்பனிடம் போகிறேன் என்று சொல்லி இறுதி மூச்சை விட்டார்கள். பெருமானார் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் 63 வயதில் வபாத்தானார்கள்.


ﻓﻘﺎﻝ ﺍﻹﻣﺎﻡ ﺍﻟﻨﻮﻭﻱ: " ﺗُﻮﻓﻲ ـ ﺻﻠﻰ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ـ ﻭﻟﻪ ﺛﻼﺙ ﻭﺳﺘﻮﻥ ﺳﻨﺔ، ﻭﻗﻴﻞ: ﺧﻤﺲ ﻭﺳﺘﻮﻥ ﺳﻨﺔ، ﻭﻗﻴﻞ : ﺳﺘﻮﻥ ﺳﻨﺔ، ﻭﺍﻷﻭﻝ 
ﺃﺻﺢ ﻭﺃﺷﻬﺮ،
63 வயது ஒரு பெரிய வயதல்ல. தள்ளாமைக்கு தள்ளப்படுவதிலிருந்து பாதுகாப்பது பெருமானாரின் பழக்கமாக இருந்தது


ﻭَﻓِﻲ ﺣَﺪِﻳﺚ ﺳَﻌْﺪ ﺑْﻦ ﺃَﺑِﻲ ﻭَﻗَّﺎﺹ ﻗَﺎﻝَ ﻛَﺎﻥَ ﺭَﺳُﻮﻝ ﺍﻟﻠَّﻪ ﺻَﻠَّﻰ ﺍﻟﻠَّﻪ ﻋَﻠَﻴْﻪِ ﻭَﺳَﻠَّﻢَ ﻳَﺘَﻌَﻮَّﺫ ﻳَﻘُﻮﻝ: ‏ ﻭَﺃَﻋُﻮﺫ ﺑِﻚ ﺃَﻥْ ﺃُﺭَﺩّ ﺇِﻟَﻰ ﺃَﺭْﺫَﻝ ﺍﻟْﻌُﻤُﺮ ‏. ( ﺍﻟْﺒُﺨَﺎﺭِﻱ)ّ
தள்ளாத முதுமை என்பதற்கு அலி ரலி அவர்கள் 75 வயது என பொருள் சொன்னார்கள்.

ﻭﺃﺧﺮﺝ ﺍﺑﻦ ﺟﺮﻳﺮ ﻋﻦ ﻋﻠﻲ ﻛﺮﻡ ﺍﻟﻠﻪ ﺗﻌﺎﻟﻰ ﻭﺟﻬﻪ ﺃﻥ " ﺃَﺭْﺫَﻝِ ﭐﻟْﻌُﻤُﺮِ ﺧﻤﺲ ﻭﺳﺒﻌﻮﻥ ﺳﻨﺔ؛ 
تسعون, وقيل: خمس وتسعون

எனினும் அறிஞர்களின் தீர்மாணம். தள்ளாமை என்பது ஆட்களை பொறுத்து மாறுபடும். தன் செயலகளை தானே செய்ய முடியாத நிலை தள்ளாமை.  அப்படி ஒரு நிலை வருவதற்கு முன்பே ரஸீல் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) வபாத்தானார்கள். முஸ்லிம்களுக்கு பெருமானாரின் மரணம் துக்க கரமானதாக இருந்தாலும், அது பெருமானாரது வாழ்க்கையின் கம்பீரத்திற்குரிய அம்சங்களில் ஒன்றாகிப்போனது. பெருமானார் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் ஹ்ஜிரி 11 ரபீஉல் அவ்வல் பிறை 12 திங்கட் கிழமை முற்பகல் நேரத்தில் வபாத்தானார்கள். பெருமானார் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களுக்கான காலம் நெருங்குவதை ஹிஜ்ரி 10 ரமலானிலியே பெருமானார் (ஸல்) உணர்ந்து கொண்டார்கள் ஒவ்வொரு ரமலானிலும் அதுவரை இறங்கியுள்ள குர்ஆன் வசனங்களை ஒரு முறை ஓதிக்காட்டும் ஜிப்ரயீல் அலை அந்த ரமலானில் இரு முறை ஓதிக் காட்டினார்கள். அந்த வருடம் நபியவர்கள் இருபது நாள் இஃதிகாப் இருந்தார்கள்.


ﺇﻧﻪ ﺗﺪﺍﺭﺳﻪ ﺟﺒﺮﻳﻞ ﺍﻟﻘﺮﺁﻥ ﻣﺮﺗﻴﻦ ، ﺍﻋﺘﻜﻒ ﻓﻲ ﺭﻣﻀﺎﻥ ﻣﻦ ﺍﻟﺴﻨﺔ ﺍﻟﻌﺎﺷﺮﺓ ﻋﺸﺮﻳﻦ ﻳﻮﻣﺎً، ﺑﻴﻨﻤﺎ ﻛﺎﻥ ﻻ ﻳﻌﺘﻜﻒ ﺇﻻ ﻋﺸﺮﺓ ﺃﻳﺎﻡ ﻓﺤﺴﺐ،

இரண்டு மாதம் கழித்து ஹஜ்ஜததுல் வதாவின் பொருத்தமான சந்தர்ப்பத்தில் அரபா மைதானத்தில் இலட்சக்கணக்கில் கூடியிருந்த மக்களின் முன்னிலையில் இதை சூசகமாக உணர்த்தினார்கள்,  ﻭﻗﺎﻝ ﻓﻲ ﺣﺠﺔ ﺍﻟﻮﺩﺍﻉ: ‏( ﺇﻧﻲ ﻻ ﺃﺩﺭﻱ ﻟﻌﻠﻰ ﻻ ﺃﻟﻘﺎﻛﻢ ﺑﻌﺪ ﻋﺎﻣﻲ ﻫﺬﺍ ﺑﻬﺬﺍ ﺍﻟﻤﻮﻗﻒ ﺃﺑﺪﺍً)‏ அதற்கடுத்த இரண்டு நாட்களில் மினாவில் வைத்து ஹஜ்ஜின் அமல்களை சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்கும் போதும்  ﻭﻗﺎﻝ ﻭﻫﻮ ﻋﻨﺪ ﺟﻤﺮﺓ ﺍﻟﻌﻘﺒﺔ (ﺧﺬﻭﺍ ﻋﻨﻲ ﻣﻨﺎﺳﻜﻜﻢ، ﻓﻠﻌﻠﻲ ﻻ ﺃﺣﺞ ﺑﻌﺪ ﻋﺎﻣﻲ ﻫﺬﺍ‏،)   அய்யாமுத்தஷ்ரீக்கின் நார்ட்களின்
நடுவே இதா ஜாஆ எனும் நஸ்ர் அத்தியாயம் அருளப்பட்டது.


ﻭﺃﻧﺰﻟﺖ ﻋﻠﻴﻪ ﺳﻮﺭﺓ ﺍﻟﻨﺼﺮ ﻓﻲ ﺃﻭﺳﻂ ﺃﻳﺎﻡ ﺍﻟﺘﺸﺮﻳﻖ، ﻓﻌﺮﻑ ﺃﻧﻪ ﺍﻟﻮﺩﺍﻉ.
இப்னு அப்பாஸ் ரலி அவர்கள் அந்த அத்தியாயம் பெருமானாரின் வயதை குறிக்கிறது என்று கூறினார்கள். இந்த அத்தியாயம் இறங்கிய பிறகு பெருமானார் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அல்லாஹ் நோக்கிய பயணத்திற்கு முழுக்க தன்னை தயார்ப்படுத்திக் கொண்டவர்களாக இருந்தார்கள். நோய் வயப்படல் தீடீரென்று ஏற்படக்கூடிய மரணத்திலிருந்தும் பெருமானார் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) பாதுகாப்பு தேடுபவராக இருந்தார்கள். அத்தகை மரணம் வாழ்க்கையின் ஒரு குறைவாகவே அமையும். இறுதி நேரத்தில் உணர வேண்டியதை உணரும் வாய்ப்பு அதில் கிடைக்காமல் போகும்.

இறைத் தூதரின் இறுதி கட்ட மணித்துளிகள்:
கண்கள் குளமாகின்றன, நம் நேசமிகு இறைத் தூதரின் இறுதி வேளையை நினைத்து. மரணத்தின் கடைசி மணித் துளிகளில் நடந்த நிகழ்வுகளைக் கொஞ்சம் நினைத்துப் பாருங்கள். கண்களின் நீரோட்டத்தை நம்மால் அடக்கிக் கொள்ள முடியாது.உங்களின் நினைவலைகளை ஓரிரு நிமிடங்கள் பின்னோக்கி நகர்த்தி, பெருமானார் வாழ்ந்த காலத்திற்கு சென்று இதை படியுங்கள். அவர்களுக்கே இந்த நிலை என்றால்... நமக்கு?


ﻋﻦ ﺃﺑﻲ ﺃﻣﺎﻣﺔ ﻗﺎﻝ: ﻛﺎﻥ ﺭﺳﻮﻝ ﺍﻟﻠﻪ ﺻﻠﻰ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﻳﺘﻌﻮﺫ ﻣﻦ ﻣﻮﺕ ﺍﻟﻔﺠﺄﺓ، ﻭﻛﺎﻥ ﻳﻌﺠﺒﻪ ﺃﻥ ﻳﻤﺮﺽ ﻗﺒﻞ ﺃﻥ ﻳﻤﻮﺕ. (ﺭﻭﺍﻩ ﺍﻟﻄﺒﺮﺍﻧﻲ ﻓﻲ ﺍﻟﻜﺒﻴﺮ)
ﻭﻓﻲ ﺍﻟﻴﻮﻡ ﺍﻟﺜﺎﻣﻦ ﺃﻭ ﺍﻟﺘﺎﺳﻊ ﻭﺍﻟﻌﺸﺮﻳﻦ ﻣﻦ ﺷﻬﺮ ﺻﻔﺮ ﺳﻨﺔ 11ﻫـ ـ ﻭﻛﺎﻥ ﻳﻮﻡ ﺍﻻﺛﻨﻴﻦ ـ ﺷﻬﺪ ﺭﺳﻮﻝ ﺍﻟﻠﻪ ﺻﻠﻰ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﺟﻨﺎﺯﺓ ﻓﻲ ﺍﻟﺒﻘﻴﻊ، ﻓﻠﻤﺎ ﺭﺟﻊ، ﻭﻫﻮ ﻓﻲ ﺍﻟﻄﺮﻳﻖ ﺃﺧﺬﻩ ﺻﺪﺍﻉ ﻓﻲ ﺭﺃﺳﻪ، ﻭﺍﺗﻘﺪﺕ ﺍﻟﺤﺮﺍﺭﺓ، ﺣﺘﻰ ﺇﻧﻬﻢ ﻛﺎﻧﻮﺍ ﻳﺠﺪﻭﻥ ﺳَﻮْﺭَﺗَﻬﺎ ﻓﻮﻕ ﺍﻟﻌِﺼَﺎﺑﺔ ﺍﻟﺘﻲ 
ﺗﻌﺼﺐ ﺑﻬﺎ ﺭﺃﺳﻪ.


ஹிஜ்ரி 11 சபர் பிறை 28 ம் நாள் ஜன்னத்துல் பகீல் நடந்த ஒரு ஜனாஸாவில் கலந்து கொண்டு திரும்புகிற போது பெருமானாருக்கு முதன் முதலாக கடும் தலைவலி ஏற்பட்டது அது காய்ச்சலாக மாறியது. சுமார் பத்து நாட்கள் உடல் நலக்குறைவுடனேயே முஹம்மது (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மக்களுக்கு தொழவைத்தார்கள். கடைசி பிரசங்கமும் இமாமத்தும் மவ்தாவதற்கு ஐந்து நாட்களுக்கு முன் லுஹர் தொழுகைக்கு முன்னதாக பெருமானார் மிம்பரில் ஏறி பிரசங்கம் செய்தார்கள். அதில் அன்சாரிகளை கவனித்துக் கொள்ளும் படி அறிவுறுத்தினார்கள்.

ﻋﻦ ﺃﻧﺲ ﺑﻦ ﻣﺎﻟﻚ ـ ﺭﺿﻲ ﺍﻟﻠﻪ ﻋﻨﻪ ـ ﻗﺎﻝ: ‏ ﻣﺮَّ ﺃﺑﻮ ﺑﻜﺮ ﻭﺍﻟﻌﺒﺎﺱ ـ ﺭﺿﻲ ﺍﻟﻠﻪ ﻋﻨﻬﻤﺎ ـ ﺑﻤﺠﻠﺲ ﻣﻦ ﻣﺠﺎﻟﺲ ﺍﻷﻧﺼﺎﺭ ﻭﻫﻢ ﻳﺒﻜﻮﻥ، ﻓﻘﺎﻝ: ﻣﺎ ﻳﺒﻜﻴﻜﻢ؟ ﻗﺎﻟﻮﺍ : ﺫﻛﺮﻧﺎ ﻣﺠﻠﺲ ﺍﻟﻨﺒﻲ ـ ﺻﻠﻰ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ـ ﻣﻨﺎ، ﻓﺪﺧﻞ ﻋﻠﻰ ﺍﻟﻨﺒﻲ ـ ﺻﻠﻰ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ـ ﻓﺄﺧﺒﺮﻩ ﺑﺬﻟﻚ، ﻗﺎﻝ : ﻓﺨﺮﺝ ﺍﻟﻨﺒﻲ ـ ﺻﻠﻰ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ـ ﻭﻗﺪ ﻋﺼﺐ ﻋﻠﻰ ﺭﺃﺳﻪ ﺣﺎﺷﻴﺔ ﺑﺮﺩ، ﻗﺎﻝ : ﻓﺼﻌﺪ ﺍﻟﻤﻨﺒﺮ، ﻭﻟﻢ ﻳﺼﻌﺪﻩ ﺑﻌﺪ ﺫﻟﻚ ﺍﻟﻴﻮﻡ، ﻓﺤﻤﺪ ﺍﻟﻠﻪ ﻭﺃﺛﻨﻰ ﻋﻠﻴﻪ، ﺛﻢ ﻗﺎﻝ ﺃﻭﺻﻴﻜﻢ ﺑﺎﻷﻧﺼﺎﺭ، ﻓﺈﻧﻬﻢ ﻛﺮﺷﻲ ﻭﻋﻴﺒﺘﻲ (ﺑﻄﺎﻧﺘﻲ ﻭﺧﺎﺻﺘﻲ‏) ، ﻭﻗﺪ ﻗﻀﻮﺍ ﺍﻟﺬﻱ ﻋﻠﻴﻬﻢ، ﻭﺑﻘﻲ ﺍﻟﺬﻱ ﻟﻬﻢ، ﻓﺎﻗﺒﻠﻮﺍ ﻣﻦ ﻣﺤﺴﻨﻬﻢ، ﻭﺗﺠﺎﻭﺯﻭﺍ ﻋﻦ ﻣﺴﻴﺌﻬﻢ ‏) ﺭﻭﺍﻩ ﺍﻟﺒﺨﺎﺭﻱ.

தொடர்ந்து தன் மீது யாருக்கும் குறை இருக்கும் எனில் அதை தீர்த்துக் கொள்ள அழைத்தார்கள் லுஹர் தொழுக்கைப் பிறகு மிம்பரில் அமர்ந்து மீண்டும் அழைப்பு விடுத்தார்கள்.

ﻣﻦ ﻛﻨﺖ ﺟﻠﺪﺕ ﻟﻪ ﻇَﻬْﺮًﺍ ﻓﻬﺬﺍ ﻇﻬﺮﻱ ﻓﻠﻴﺴﺘﻘﺪ ﻣﻨﻪ، ﻭﻣﻦ ﻛﻨﺖ ﺷﺘﻤﺖ ﻟﻪ ﻋِﺮْﺿﺎً ﻓﻬﺬﺍ ﻋﺮﺿﻲ ﻓﻠﻴﺴﺘﻘﺪ ﻣﻨﻪ ﺛﻢ ﻧﺰﻝ ﻓﺼﻠﻰ ﺍﻟﻈﻬﺮ، ﺛﻢ ﺭﺟﻊ ﻓﺠﻠﺲ ﻋﻠﻰ ﺍﻟﻤﻨﺒﺮ، ﻭﻋﺎﺩ ﻟﻤﻘﺎﻟﺘﻪ ﺍﻷﻭﻟﻲ ﻓﻲ ﺍﻟﺸﺤﻨﺎﺀ ﻭﻏﻴﺮﻫﺎ . ﻓﻘﺎﻝ ﺭﺟﻞ : ﺇﻥ ﻟﻲ ﻋﻨﺪﻙ ﺛﻼﺛﺔ ﺩﺭﺍﻫﻢ، ﻓﻘﺎﻝ : ‏(ﺃﻋﻄﻪ ﻳﺎ ﻓﻀﻞ‏) ، ﺛﻢ ﺃﻭﺻﻲ ﺑﺎﻷﻧﺼﺎﺭ ﻗﺎﺋﻼً:

யாரையாவது நான் அடித்திருந்தால் இதோ என் முதுகு தயாராக இருக்கிறது யாரையாவது திட்டி இருந்தால் அவர் பழி தீர்த்துக் கொள்ள்லாம். ஒரு நபித்தோழ்ர தனக்கு மூன்று திர்ஹம்கள் வரவேண்டியிருப்பதாக கூறினார், அதை கொடுக்கும் படி தன் பெரிய தந்தையின் மகன் பழ்ல் ரலியிடம் கூறினார்கள்.


அன்றைய மஃரிபில்:
ﻭﻛﺎﻥ ـ ﺻﻠﻮﺍﺕ ﺍﻟﻠﻪ ﻭﺳﻼﻣﻪ ﻋﻠﻴﻪ ـ ﻗﺪ ﺻﻠﻰ ﺑﺎﻟﻨﺎﺱ ﻣﻐﺮﺏ ﻫﺬﺍ ﺍﻟﻴﻮﻡ ﻭﻗﺮﺃ ﺑﺎﻟﻤﺮﺳﻼﺕ، ﻓﻌﻦ ﺃﻡ ﺍﻟﻔﻀﻞ ﺑﻨﺖ ﺍﻟﺤﺎﺭﺙ ﻗﺎﻟﺖ: ‏(ﺳﻤﻌﺖ ﺍﻟﻨﺒﻲ ـ ﺻﻠﻰ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ـ ﻳﻘﺮﺃ ﻓﻲ ﺍﻟﻤﻐﺮﺏ ﺑﺎﻟﻤﺮﺳﻼﺕ ﻋﺮﻓﺎ، ﺛﻢ ﻣﺎ ﺻﻠﻰ ﻟﻨﺎ ﺑﻌﺪﻫﺎ ﺣﺘﻰ ﻗﺒﻀﻪ ﺍﻟﻠﻪ) ﺭﻭﺍﻩ ﺍ ﻟﺒﺨﺎﺭﻱ.

அன்றைய இஷாவிற்கு பள்ளிக்கு வர முயற்சி செய்தார்கள்:

ﻭﻋﻨﺪ ﺍﻟﻌﺸﺎﺀ ﺯﺍﺩ ﺛﻘﻞ ﺍﻟﻤﺮﺽ، ﺑﺤﻴﺚ ﻟﻢ ﻳﺴﺘﻄﻊ ﺍﻟﺨﺮﻭﺝ ﺇﻟﻰ ﺍﻟﻤﺴﺠﺪ. ﻗﺎﻟﺖ ﻋﺎﺋﺸﺔ:  ﻓﻘﺎﻝ ﺍﻟﻨﺒﻲ ﺻﻠﻰ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ: ‏( ﺃﺻَﻠَّﻰ ﺍﻟﻨﺎﺱ؟‏) ﻗﻠﻨﺎ: ﻻ ﻳﺎ ﺭﺳﻮﻝ ﺍﻟﻠﻪ، ﻭﻫﻢ ﻳﻨﺘﻈﺮﻭﻧﻚ. ﻗﺎﻝ : ‏(ﺿﻌﻮﺍ ﻟﻲ ﻣﺎﺀ ﻓﻲ ﺍﻟﻤِﺨْﻀَﺐ‏) ، ﻓﻔﻌﻠﻨﺎ، ﻓﺎﻏﺘﺴﻞ، ﻓﺬﻫﺐ ﻟﻴﻨﻮﺀ ﻓﺄﻏﻤﻲ ﻋﻠﻴﻪ. ﺛﻢ ﺃﻓﺎ ﻕ، ﻓﻘﺎﻝ : ‏( ﺃﺻﻠﻰ ﺍﻟﻨﺎﺱ؟‏) ـ ﻭﻭﻗﻊ ﺛﺎﻧﻴﺎً ﻭﺛﺎﻟﺜﺎً ﻣﺎ ﻭﻗﻊ ﻓﻲ ﺍﻟﻤﺮﺓ ﺍﻷﻭﻟﻲ ﻣﻦ ﺍﻻﻏﺘﺴﺎﻝ ﺛﻢ ﺍﻹﻏﻤﺎﺀ ﺣﻴﻨﻤﺎ ﺃﺭﺍﺩ ﺃﻥ ﻳﻨﻮﺀ ـ ﻓﺄﺭﺳﻞ ﺇﻟﻰ ﺃﺑﻲ ﺑﻜﺮ ﺃﻥ ﻳﺼﻠﻲ ﺑﺎﻟﻨﺎﺱ،

மவ்தாவதற்கு ஐந்து நாட்களுக்கு முன் அன்றைய மஃரிபை பெருமானார் ஸல் அவர்கள் தொழ வைத்ததே அவர்கள் இமாமாக நின்ற கடைசி தொழுகையாக இருந்தது. மூன்று நாட்களுக்கு முன் நோய்ப்படுக்கையில் சமூகத்தைப் பற்றிய கவலை தேவையான அறிவுரைகளை சொல்லிக் கொண்டே இருந்தார்கள்.


ﻭﻗﺒﻞ ﻣﻮﺗﻪ ـ ﺻﻠﻰ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ـ ﺑﺜﻼﺛﺔ ﺃﻳﺎﻡ ﺃﻭﺻﻰ ﺑﺈﺣﺴﺎﻥ ﺍﻟﻈﻦ ﺑﺎﻟﻠﻪ، ﻭﺇﺧﺮﺍﺝ ﺍﻟﻤﺸﺮﻛﻴﻦ ﻣﻦ ﺟﺰﻳﺮﺓ ﺍﻟﻌﺮﺏ، ﻗﺎﻝ ﺟﺎﺑﺮ ـ ﺭﺿﻲ ﺍﻟﻠﻪ ﻋﻨﻪ ـ : ‏(ﺳﻤﻌﺖ ﺭﺳﻮﻝ ﺍﻟﻠﻪ ـ ﺻﻠﻰ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ـ ﻳﻘﻮﻝ ﻗﺒﻞ ﻣﻮﺗﻪ ﺑﺜﻼﺙ : ﺃﺣﺴﻨﻮﺍ ﺍﻟﻈﻦ ﺑﺎﻟﻠﻪ ﻋﺰ ﻭﺟﻞ) ﺭﻭﺍﻩ ﻣﺴﻠﻢ.
ﻋﻦ ﻋﺒﻴﺪ ﺍﻟﻠﻪ ﺑﻦ ﻋﺒﺪ ﺍﻟﻠﻪ ﺃﻥ ﺍﺑﻦ ﻋﺒﺎﺱ ﻭﻋﺎﺋﺸﺔ ﺃﺧﺒﺮﺍﻩ ﺃﻥ ﺭﺳﻮﻝ ﺍﻟﻠﻪ ـ ﺻﻠﻰ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ـ ﻟﻤﺎ ﺣﻀﺮﺗﻪ ﺍﻟﻮﻓﺎﺓ ﺟﻌﻞ ﻳﻠﻘﻲ ﻋﻠﻰ ﻭﺟﻬﻪ ﻃﺮﻑ ﺧﻤﻴﺼﺔ، ﻓﺈﺫﺍ ﺍﻏﺘﻢ ﺑﻬﺎ ﻛﺸﻔﻬﺎ ﻋﻦ ﻭﺟﻬﻪ ﻓﻘﺎﻝ ﻭﻫﻮ ﻛﺬﻟﻚ : ‏(ﻟﻌﻨﺔ ﺍﻟﻠﻪ ﻋﻠﻰ ﺍﻟﻴﻬﻮﺩ ﻭﺍﻟﻨﺼﺎﺭﻯ ﺍﺗﺨﺬﻭﺍ ﻗﺒﻮﺭ ﺃﻧﺒﻴﺎﺋﻬﻢ ﻣﺴﺎﺟﺪ) ﺗﻘﻮﻝ ﻋﺎﺋﺸﺔ :(ﻳﺤﺬﺭ ﻣﺜﻞ ﺍﻟﺬﻱ ﺻﻨﻌﻮﺍ) ﺭﻭﺍﻩ ﻣﺴﻠﻢ.

அல்லாஹ்வை போற்றிப் புகழ்ந்துவிட்டு 'மக்களே! என்னிடம் வாருங்கள்' என்று கூறியபோது மக்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை நோக்கி விரைந்து வந்தனர். அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியவற்றில் இதுவும் ஒன்று. யூத கிருஸ்தவர்கள் மீது அல்லாஹ்வின் சாபம் ஏற்படட்டும்! தங்களின் தூதர்களுடைய அடக்கத் தலங்களை வணக்கத்தலங்களாக மாற்றி விட்டனர். (முஸ்லிம்)

இரண்டு நாட்களுக்கு முன் அபூபக்கர் (ரலி) அவர்களின் அருகே நின்று லுஹர் தொழுகையை தொழுதார்கள். மஸ்ஜிதுன்னபவியில் அவர்கள் தொழுத கடைசி தொழுகை அது.


ﻭﻳﻮﻡ ﺍﻟﺴﺒﺖ ﺃﻭ ﺍﻷﺣﺪ ﻭﺟﺪ ﺍﻟﻨﺒﻲ ﺻﻠﻰ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﻓﻲ ﻧﻔﺴﻪ ﺧﻔﺔ، ﻓﺨﺮﺝ ﺑﻴﻦ ﺭﺟﻠﻴﻦ ﻟﺼﻼﺓ ﺍﻟﻈﻬﺮ، ﻭﺃﺑﻮ ﺑﻜﺮ ﻳﺼﻠﻲ ﺑﺎﻟﻨﺎﺱ، ﻓﻠﻤﺎ ﺭﺁﻩ ﺃﺑﻮ ﺑﻜﺮ ﺫﻫﺐ ﻟﻴﺘﺄﺧﺮ، ﻓﺄﻭﻣﺄ ﺇﻟﻴﻪ ﺑﺄﻻ ﻳﺘﺄﺧﺮ، ﻗﺎﻝ : ‏(ﺃﺟﻠﺴﺎﻧﻲ ﺇﻟﻰ ﺟﻨﺒﻪ‏) ، ﻓﺄﺟﻠﺴﺎﻩ ﺇﻟﻰ ﻳﺴﺎﺭ ﺃﺑﻲ ﺑﻜﺮ، ﻓﻜﺎﻥ ﺃﺑﻮ ﺑﻜﺮ ﻳﻘﺘﺪﻱ ﺑﺼﻼﺓ ﺭﺳﻮﻝ ﺍﻟﻠﻪ ﺻﻠﻰ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﻭﻳﺴﻤﻊ ﺍﻟﻨﺎﺱ ﺍﻟﺘﻜﺒﻴﺮ.

ஒரு நாளைக்கு முன் தனது அடிமைகளை விடுதலை செய்தார்கள். தன்னிடமிருந்த 7 தீனார்களை தர்மம் செய்தார்கள். ஆயிஷா ரலி தன் வீட்டின் விளக்கை மற்ற மனவியரிடம் அனுப்பி எண்ணை வழங்குமாறு கேட்டார்கள்.


ﻭﻗﺒﻞ ﻳﻮﻡ ﻣﻦ ﺍﻟﻮﻓﺎﺓ ـ ﻳﻮﻡ ﺍﻷﺣﺪ ـ ﺃﻋﺘﻖ ﺍﻟﻨﺒﻲ ﺻﻠﻰ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﻏﻠﻤﺎﻧﻪ، ﻭﺗﺼﺪﻕ ﺑﺴﺘﺔ ﺃﻭ ﺳﺒﻌﺔ ﺩﻧﺎﻧﻴﺮ ﻛﺎﻧﺖ ﻋﻨﺪﻩ، ﻭﻭﻫﺐ ﻟﻠﻤﺴﻠﻤﻴﻦ ﺃﺳﻠﺤﺘﻪ، ﻭﻓﻲ ﺍﻟﻠﻴﻞ ﺃﺭﺳﻠﺖ ﻋﺎﺋﺸﺔ ﺑﻤﺼﺒﺎﺣﻬﺎ ﺍﻣﺮﺃﺓ ﻣﻦ ﺍﻟﻨﺴﺎﺀ ﻭﻗﺎﻟﺖ: ﺃﻗﻄﺮﻱ ﻟﻨﺎ ﻓﻲ ﻣﺼﺒﺎﺣﻨﺎ ﻣﻦ ﻋُﻜَّﺘِﻚ ﺍﻟﺴﻤﻦ، ﻭﻛﺎﻧﺖ ﺩﺭﻋﻪ ﺻﻠﻰ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﻣﺮﻫﻮﻧﺔ ﻋﻨﺪ ﻳﻬﻮﺩﻱ ﺑﺜﻼﺛﻴﻦ ﺻﺎﻋﺎً ﻣﻦ ﺍﻟﺸﻌﻴﺮ.

பெருமானார் (ஸல் அவர்கள் மவ்தாகிற போது அவர்களது கவச ஆடை முப்பது படி கோதுமைக்கு அடகு வைக்கப்பட்டிருந்தது. அந்தக் கடைசி நாள் ஹ்ஜிரி 11 ரபீஉல் அவ்வல் பிறை 12 காலை சுபுஹ் தொழுகையில் சமுதாயத்தை கடைசிப் பார்வை பார்த்தார்கள்.


ﺭﻭﻯ ﺃﻧﺲ ﺑﻦ ﻣﺎﻟﻚ ـ ﺭﺿﻲ ﺍﻟﻠﻪ ﻋﻨﻪ ـ: ‏( ﺃﻥ ﺍﻟﻤﺴﻠﻤﻴﻦ ﺑﻴﻨﺎ ﻫﻢ ﻓﻲ ﺻﻼﺓ ﺍﻟﻔﺠﺮ ﻳﻮﻡ ﺍﻻﺛﻨﻴﻦ ﻭﺃﺑﻮ ﺑﻜﺮ ﻳﺼﻠﻲ ﺑﻬﻢ ﻟﻢ ﻳﻔﺠﺄﻫﻢ ﺇﻻ ﺭﺳﻮﻝ ﺍﻟﻠﻪ ـ ﺻﻠﻰ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ـ ﻛﺸﻒ ﺳﺘﺮ ﺣﺠﺮﺓ ﻋﺎﺋﺸﺔ ﻓﻨﻈﺮ ﺇﻟﻴﻬﻢ، ﻭﻫﻢ ﻓﻲ ﺻﻔﻮﻑ ﺍﻟﺼﻼﺓ، ﺛﻢ ﺗﺒﺴﻢ ﻳﻀﺤﻚ، ﻓﻨﻜﺺ ﺃﺑﻮ ﺑﻜﺮ ﻋﻠﻰ ﻋﻘﺒﻴﻪ، ﻟﻴﺼﻞ ﺍﻟﺼﻒ، ﻭﻇﻦ ﺃﻥ ﺭﺳﻮﻝ ﺍﻟﻠﻪ ـ ﺻﻠﻰ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ـ ﻳﺮﻳﺪ ﺃﻥ ﻳﺨﺮﺝ ﺇﻟﻰ ﺍﻟﺼﻼﺓ، ﻓﻘﺎﻝ ﺃﻧﺲ : ﻭﻫﻢّ ﺍﻟﻤﺴﻠﻤﻮﻥ ﺃﻥ ﻳﻔﺘﺘﻨﻮﺍ ﻓﻲ ﺻﻼﺗﻬﻢ ﻓﺮِﺣﺎ ﺑﺮﺳﻮﻝ ﺍﻟﻠﻪ ـ ﺻﻠﻰ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ، ﻓﺄﺷﺎﺭ ﺇﻟﻴﻬﻢ ﺑﻴﺪﻩ ﺭﺳﻮﻝ ﺍﻟﻠﻪ ﺻﻠﻰ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﺃﻥ ﺃﺗﻤﻮﺍ ﺻﻼﺗﻜﻢ ﺛﻢ ﺩﺧﻞ ﺍﻟﺤﺠﺮﺓ ﻭﺃﺭﺧﻰ ﺍﻟﺴﺘﺮ ‏) ﺭﻭﺍﻩ ﺍﻟﺒﺨﺎﺭﻱ، ﺛﻢ ﻟﻢ ﻳﺄﺕ ﻋﻠﻰ ﺭﺳﻮﻝ ﺍﻟﻠﻪ ـ ﺻﻠﻰ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ـ ﻭﻗﺖ ﺻﻼﺓ ﺃﺧﺮﻯ.

அனஸ் (ரலி) கூறினார் (அபூ பக்கர் (ரலி) இமாமாக நிற்க முஸ்லிம்கள் ஃபஜ்ருத் தொழுது கொண்டிருந்தபோது, நபி(ஸல்) அவர்கள் ஆயிஷா (ரலி) யின் அறையிலுள்ள திரையை விலக்கி மக்கள் அணிவகுத்து நிற்பதைப் பார்த்தார்கள். அது மக்களுக்குத் திடுக்கத்தை ஏற்படுத்தியது. நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் புன்னகை  செய்தார்கள். நபி (ஸல்) அவர்கள் பள்ளிக்கு வரப்போகிறார்கள் என்று எண்ணி அபூ பக்கர் (ரலி) பின்னால் நகர்ந்து வரிசையில் சேர்ந்து கொள்ள முற்பட்டார்கள். தங்கள் தொழுகைகளே குழம்பிப் போகுமோ என்று முஸ்லிம்கள் எண்ணலானார்கள். உங்கள் தொழுகையைப் பூரணமாக்குங்கள்! என்று நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் சைகை செய்துவிட்டுத் திரையைத் தொங்கவிட்டார்கள். அன்றைய தினத்தின் இறுதியில் நபி (ஸல்) அவர்கள் மரணமடைந்தார்கள். (ஸஹீஹ் புகாரி)

கடைசி உபதேசம்:

ﻭﻋﻦ ﺃﻧﺲ ﺑﻦ ﻣﺎﻟﻚ ـ ﺭﺿﻲ ﺍﻟﻠﻪ ﻋﻨﻪ ـ ﻗﺎﻝ: ( ﻛﺎﻧﺖ ﻋﺎﻣﺔ ﻭﺻﻴﺔ ﺭﺳﻮﻝ ﺍﻟﻠﻪ ـ ﺻﻠﻰ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ـ ﺣﻴﻦ ﺣﻀﺮﺗﻪ ﺍﻟﻮﻓﺎﺓ ﻭﻫﻮ ﻳﻐﺮﻏﺮ ﺑﻨﻔﺴﻪ : ﺍﻟﺼﻼﺓ ﻭﻣﺎ ﻣﻠﻜﺖ ﺃﻳﻤﺎﻧﻜﻢ ‏) ﺭﻭﺍﻩ ﺍﺑﻦ ﻣﺎﺟﻪ.  
கடைசி நிமிடங்கள்:

ﻭﺑﺪﺃﺕ ﺳﺎﻋﺔ ﺍﺣﺘﻀﺎﺭﻩ ـ ﺻﻠﻰ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ـ ﻓﺄﺳﻨﺪﺗﻪ ﻋﺎﺋﺸﺔ ـ ﺭﺿﻲ ﺍﻟﻠﻪ ﻋﻨﻬﺎ ـ ﺇﻟﻰ ﺻﺪﺭﻫﺎ ﻭﻛﺎﻧﺖ ﺗﻘﻮﻝ: ‏( ﺇﻥ ﻣﻦ ﻧﻌﻢ ﺍﻟﻠﻪ ﻋﻠﻰَّ ﺃﻥ ﺭﺳﻮﻝ ﺍﻟﻠﻪ ـ ﺻﻠﻰ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ـ ﺗُﻮﻓﻲ ﻓﻲ ﺑﻴﺘﻲ ﻭﻓﻲ ﻳﻮﻣﻲ ﻭﺑﻴﻦ ﺳَﺤْﺮِﻱ ﻭﻧَﺤْﺮِﻱ ‏(ﻋﻠﻰ ﺻﺪﺭﻱ ‏)، ﻭﺃﻥ ﺍﻟﻠﻪ ﺟﻤﻊ ﺑﻴﻦ ﺭﻳﻘﻲ ﻭﺭﻳﻘﻪ ﻋﻨﺪ ﻣﻮﺗﻪ، ﺩﺧﻞ ﻋﺒﺪ ﺍﻟﺮﺣﻤﻦ ﺑﻦ ﺃﺑﻲ ﺑﻜﺮ ﻭﺑﻴﺪﻩ ﺍﻟﺴﻮﺍﻙ، ﻭﺃﻧﺎ ﻣﺴﻨﺪﺓ ﺭﺳﻮﻝ ﺍﻟﻠﻪ ـ ﺻﻠﻰ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ـ ﻓﺮﺃﻳﺘﻪ ﻳﻨﻈﺮ ﺇﻟﻴﻪ، ﻭﻋﺮﻓﺖ ﺃﻧﻪ ﻳﺤﺐ ﺍﻟﺴﻮﺍﻙ، ﻓﻘﻠﺖ: ﺁﺧﺬﻩ ﻟﻚ ؟ ﻓﺄﺷﺎﺭ ﺑﺮﺃﺳﻪ ﺃﻥ ﻧﻌﻢ، ﻓﺘﻨﺎﻭﻟﺘﻪ ﻓﺎﺷﺘﺪ ﻋﻠﻴﻪ، ﻭﻗﻠﺖ : ﺃﻟﻴﻨﻪ ﻟﻚ؟ ﻓﺄﺷﺎﺭ ﺑﺮﺃﺳﻪ ﺃﻥ ﻧﻌﻢ، ﻓﻠﻴﻨﺘﻪ ﻓﺄﻣﺮَّﻩ ‏(ﺍﺳﺘﺎﻙ ﺑﻪ‏) ،ﻭﺑﻴﻦ ﻳﺪﻳﻪ ﺭﻛﻮﺓ ﺃﻭ ﻋﻠﺒﺔ - ﺷﻚ ﺍﻟﺮﺍﻭﻱ - ﻓﻴﻬﺎ ﻣﺎﺀ، ﻓﺠﻌﻞ ﻳﺪﺧﻞ ﻳﺪﻳﻪ ﻓﻲ ﺍﻟﻤﺎﺀ ﻓﻴﻤﺴﺢ ﺑﻬﺎ ﻭﺟﻬﻪ ﻳﻘﻮﻝ: ﻻ ﺇﻟﻪ ﺇﻻ ﺍﻟﻠﻪ ﺇﻥ ﻟﻠﻤﻮﺕ ﺳﻜﺮﺍﺕ، ﺛﻢ ﻧﺼﺐ ﻳﺪﻩ ﻓﺠﻌﻞ ﻳﻘﻮﻝ : ﻓﻲ ﺍﻟﺮﻓﻴﻖ ﺍﻷﻋﻠﻰ ﺣﺘﻰ ﻗُﺒِﺾ ﻓﻤﺎﻟﺖ ﻳﺪﻩ ـ ﺻﻠﻰ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ـ ‏) ﺭﻭﺍﻩ ﺍﻟﺒﺨﺎﺭﻱ.  

கடைசி நிமிடம் வரை சுய நினைவோடு தனது கொள்கை வழியை நிலை நாட்டியவர்களாக பிரியமான மனைவியின் மடியில் பெருமானார் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) வபாத்தானார்கள்.


நபியின் இறுதி நேரம்:

 இறுதி நேரம் நெருங்கவே ஆயிஷா (ரழி) நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களைத் தனது நெஞ்சோடு அணைத்துக் கொண்டார்கள். இதைப் பற்றி ஆயிஷா (ரழி) கூறுவதாவது: ஆயிஷா (ரலி) அறிவித்தார். நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களைக் கொண்டு சென்றவன் மேல் ஆணையாக! அஸருக்குப் பின் இரண்டு ரகஅத்களை இறைவனைச் சந்திக்கும் வரை நபி (ஸல்) அவர்கள் விட்டுவிடவில்லை. தொழுவதற்குச் சிரமப்படும் நிலையை அடைந்த பிறகே மரணம் அடைந்தார்கள். அஸருக்கு பின்னுள்ள இரண்டு ரகஅத்களை பெரும்பாலும் உட்கார்ந்தே தொழுபவர்களாக இருந்தனர். தம் உம்மத்தினருக்குச் சிரமத்தை ஏற்படுத்துவதை அஞ்சிப் பள்ளியில் அந்த இரண்டு ரகஅத்களை தொழ மாட்டார்கள். தம் உம்மத்தினருக்கு இலேசானதையே நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் விரும்புவார்கள். (ஸஹீஹ் புகாரி)



“நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) என் அறையில் எனக்குரிய தினத்தில் எனது கழுத்துக்கும் நெஞ்சுக்குமிடையில் மரணமானார்கள். அவர்களது மரண நேரத்தில் எனது எச்சிலையும் அவர்களது எச்சிலையும் ஒன்று சேர்த்தேன். எனது சகோதரர் அப்துர் ரஹ்மான் அறைக்குள் வந்தார். அவரது கரத்தில் மிஸ்வாக் இருந்தது. நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களை எனது மடியில் கிடத்தியிருந்தேன். அப்துர் ரஹ்மான் கரத்திலுள்ள மிஸ்வாக்கை நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் பார்த்தார்கள். அவர்கள் மிஸ்வாக் செய்ய விரும்புகிறார்கள் என புரிந்து கொண்டேன். “நான் உங்களுக்கு அதனை வாங்கித் தரவா?” என்று கேட்டபோது, “ஆம்!என தலை அசைத்தார்கள். அதனை வாங்கிக் கொடுத்தேன். அது அவர்களுடைய பற்களுக்கு சிரமமாக இருந்தது. நான் அதனை மிருதுவாக்கி தரட்டுமா?” என்று கேட்டேன். தலை அசைத்து ஆம்!என்றார்கள். நான் அதனை மிருதுவாக்கிக் கொடுத்தேன்.

இன்னொரு அறிவிப்பில் வருவதாவது: நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) மிக அழகிய முறையில் அக்குச்சியால் பல் துலக்கினார்கள். அவர்களுக்கருகில் நீர் நிரம்பிய குவளை இருந்தது. அதில் கைகளை விட்டு முகத்தில் தடவிக் கொண்டார்கள். )லாஇலாஹஇல்லல்லாஹ் இன்னலில் மவ்த்தி சகராத்- வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை. மரணத்திற்குப் பல மயக்கங்கள் இருக்கின்றன( என்றார்கள். (ஸஹீஹுல் புகாரி)


பல் துலக்கிய பின்பு தங்களது கையை அல்லது விரலை உயர்த்தினார்கள். அவர்களது பார்வை முகட்டை நோக்கியது. அவர்களது உதடுகள் அசைந்தன. அவர்கள் என்ன கூறுகிறார்கள் என ஆயிஷா (ரழி) செவிதாழ்த்திக் கேட்டார்கள்.


நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அப்போது இறைத்தூதர்கள், வாய்மையாளர்கள், இறைப்போர் தியாகிகள், நல்லோர்கள் ஆகிய நீ அருள் செய்தோருடன்... அல்லாஹ்வே! என்னை மன்னிப்பாயாக! என்மீது கருணை காட்டுவாயாக! உயர்ந்த நண்பனுடன் என்னைச் சேர்த்து வைப்பாயாக! அல்லாஹ்வே! உயர்ந்த நண்பனை... (ஸஹீஹுல் புகாரி)


நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் இறுதி கட்ட வேளையில் (மரணத்திற்கு முன் 4 x 5 நாட்களுக்குள்) அவர்கள் பேசிய இறுதி வாக்கியங்கள்:

தன்னிடம் பழிதீர்த்துக் கொள்ள மக்களிடம் தன்னை ஒப்படைத்தார்கள். யாரையாவது நான் முதுகில் அடித்திருந்தால் இதோ எனது முதுகை தந்து விட்டேன். பழி தீர்க்கட்டும். யாரையாவது கண்ணியம் குலைய திட்டியிருந்தால் இதோ நான் முன் வந்துள்ளேன். அவர் பழிதீர்த்துக் கொள்ளட்டும்.

அப்போது ஒருவர் எழுந்து 'எனக்கு நீங்கள் மூன்று திர்ஹம் தர வேண்டும்' என்று கூறவே, 'ஃபழ்லே! நீங்கள் அதைக் கொடுத்து விடுங்கள்' என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்.


'அன்சாரிகளைப் பற்றி நான் விசேஷமாக அறிவுரை கூறுகிறேன். அவர்கள் எனது ஈரலும் இதயமும் ஆவார்கள். அவர்கள் தங்களது கடமையை நிறைவேற்றி விட்டார்கள். அவர்களுடைய உரிமையும், சலுகையும் மீதமிருக்கிறது. அவர்களில் நல்லோர்களின் செயலை ஏற்றுக் கொள்ளுங்கள். அவர்களில் தவறிழைப்போரை மன்னியுங்கள்.'


மேலும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்: 'தனது நட்பாலும் பொருளாலும் எனக்கு மக்களில் அதிகமதிகம் உபகாரம் செய்தவர் அபூபக்கர் ஆவார். என் இறைவனே! உன்னைத் தவிர மற்றெவரையும் உற்ற நண்பனாக ஆக்கிக் கொள்வதாக இருந்தால் அபூபக்கரை உற்ற நண்பராக ஆக்கியிருப்பேன்.


மரணத்திற்கு நான்கு நாட்களுக்கு முன், வியாழக்கிழமை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு வலி கடுமையானது. மக்களை நோக்கி 'வாருங்கள்! நான் உங்களுக்கு ஒன்றை எழுதித் தருகிறேன். அதன்பின் ஒருக்காலும் நீங்கள் வழி தவறமாட்டீர்கள்' என்று கூறினார்கள்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இறப்பதற்கு மூன்று நாட்களுக்கு முன்பு கூற, தான் கேட்டதாக ஜாபிர் ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள்: 'அறிந்து கொள்ளுங்கள்! உங்களில் எவரும் அல்லாஹ்வின் மீது நல்லெண்ணம் கொண்டவராகவே தவிர மரணிக்க வேண்டாம்.' (நூல்கள்: தபகாத் இப்னு ஸஅது, முஸ்னத் அபூதாவூது, முஸ்னத் அபூ யஃலா)


இந்நிகழ்ச்சி பற்றி பின்பு ஒரு நாள் ஃபாத்திமாவிடம் விசாரித்தோம். எனக்கு ஏற்பட்ட இதே வலியினாலே நான் இறந்து விடுவேன் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியபோது நான் அழுதேன். அவர்களது குடும்பத்தாரில் நான்தான் முதலில் அவர்களை சென்றடைவேன் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியபோது நான் சிரித்தேன்' என்று ஃபாத்திமா ரளியல்லாஹு அன்ஹா பதில் கூறினார்கள். (நூல்: ஸஹீஹுல் புகாரி)

மேலும், 'அகில உலக பெண்களின் தலைவி ஃபாத்திமா' என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் நற்செய்தி கூறினார்கள். (ரஹ்மத்துல் லில் ஆலமீன்)


நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு ஏற்பட்ட கடுமையான நிலைமையைக் கண்ட ஃபாத்திமா ரளியல்லாஹு அன்ஹா 'எனது தந்தைக்கு ஏற்பட்ட கஷ்டமே!' என்று வேதனைப்பட்டார்கள். உன் தந்தைக்கு இன்றைக்குப் பிறகு என்றுமே சிரமம் இருக்காது என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஆறுதல் கூறினார்கள். (நூல்: ஸஹீஹுல் புகாரி)

ஹசன், ஹுசைனை (ரளியல்லாஹு அன்ஹும்) வரவழைத்து அவர்களை முத்தமிட்டு அவர்களுடன் நல்ல முறையில் நடந்து கொள்ள வேண்டுமென அறிவுறுத்தினார்கள். மனைவிமார்களை அழைத்து அவர்களுக்கும் உபதேசமும் அறிவுரையும் நல்கினார்கள்.


முன்பை விட வேதனை அதிகமானது. கைபர் போரின் போது உட்கொண்ட உணவில் கலக்கப்பட்ட விஷத்தின் விளைவை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் உணர ஆரம்பித்தார்கள். 'ஆயிஷாவே! கைபர் தினத்தில் நான் உண்ட உணவின் வேதனையை அனுபவித்துக் கொண்டிருக்கிறேன். இந்த நேரத்தில் அந்த விஷத்தினால் எனது நரம்புகள் துண்டாவதை நான் உணர்கிறேன்' என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள். (நூல்: ஸஹீஹுல் புகாரி)


இந்நிலையில் சிலவற்றை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள். அதுவே அவர்களது கடைசி பேச்சாகும். அதாவது: அல்லாஹ்வின் சாபம் யூத, கிறிஸ்தவர்கள் மீது உண்டாகட்டும்! அவர்கள் தங்களது இறைத்தூதர்களின் அடக்கத்தலங்களை வணங்குமிடமாக மாற்றிக் கொண்டார்கள். அரபிகளின் பூமியில் இரண்டு மார்க்கங்கள் இருக்கக் கூடாது.' (நூல்கள்: ஸஹீஹுல் புகாரி, தபகாத் இப்னு ஸஅத்)


தொழுகையையும் நீங்கள் உரிமையாக்கிக் கொண்டவர்களையும் (அடிமைகள்) பேணுங்கள் என்று பலமுறை அறிவுறுத்தினார்கள். (நூல்: ஸஹீஹுல் புகாரி)


கடைசி வார்த்தையை மட்டும் மூன்று முறை நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) கூறினார்கள். உயர்த்திய அவர்களுடைய கை சாய்ந்தது. உயர்ந்தோனிடம் சென்றார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். ஹிஜ்ரி 11, ரபீஉல் அவ்வல் பிறை 12, திங்கட்கிழமை முற்பகல் முடியும் நேரத்தில் அவர்களுக்கு மரணம் ஏற்பட்டது. அப்போது நபி (ஸல்) அவர்களுக்கு 63 வயது, 4 நாட்கள் ஆகியிருந்தன.

நபியின் மரணமும் அல்லாஹ்வின் இரங்கலும்:
لما مرض رسول الله صلى الله عليه وسلم أتاه جبريل فقال: "يا محمد! إن الله أرسلني إليك تكريما لك, وتشريفا لك, خاصة لك يسألك عما هو أعلم به منك يقول: كيف تجدك؟ قال: أجدني يا جبريل! مغموما وأجدني يا جبريل مكروبا". ثم جاءه اليوم الثاني, فقال له ذلك فرد عليه النبي صلى الله عليه وسلم كما رد أول يوم, ثم جاءه اليوم الثالث, فقال له كما قال أول يوم ورد عليه كما رد عليه, وجاء معه ملك يقال له و: إسماعيل على مائة ألف ملك, كل ملك على مائة ألف ملك فاستأذن عليه, فسأله عنه. ثم قال جبريل: هذا ملك الموت يستأذن عليك. ما استأذن على آدمي قبلك, ولا يستأذن على آدمي بعدك. فقال: ائذن له, فأذن له فسلم عليه, ثم قال: يا محمد! إن الله أرسلني إليك فإن أمرتني أن أقبض روحك قبضت, وإن أمرتني أن أتركه تركته فقال: وتفعل يا ملك الموت؟ قال: نعم بذلك أمرت, وأمرت أن أطيعك. قال: فنظر النبي صلى الله عليه وسلم إلى جبريل عليه السلام, فقال جبريل: يا محمد! إن الله قد اشتاق إلى لقائك, فقال النبي صلى الله عليه وسلم لملك الموت: " امض لما أمرت به" فقبض روحه فلما توفي رسول الله صلى الله عليه وسلم وجاءت التعزية سمعوا صوتا من ناحية البيت : السلام عليكم أهل البيت ورحمة الله وبركاته إن في الله عزاء من كل مصيبة وخلفا من كل هالك ودركا من كل فائت فبالله فثقوا وإياه فارجوا فإنما المصاب من حرم الثواب . فقال علي : أتدرون من هذا ؟ هو الخضر عليه السلام. (بيهقى فى دلائل النبوة-7:267)

நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவாகள் நோய்வாய்ப்பட்டிருந்த போது ஜிப்ரீல் (அலை) அவர்கள் (நலம் விசாரிக்க) வந்து, முஹம்மதே! உங்களுக்கு சங்கையும் மரியாதையும் செய்யுமாறு அல்லாஹ் என்னை உம்மிடம் அனுப்பியுள்ளான். குறிப்பாக உம்மைப்பற்றி முழுமையாக அவன் அறிந்திருந்தும் உம்மை நலம் விசாரித்து வரும்படியாக கூறினான். ஆகவே, (சொல்லுங்கள் முஹம்மதே!) உடல் நிலை எப்படி இருக்கிறது? என்று (முதல்நாள்) கேட்டார்கள். அதற்கு நபியவர்கள், ஜிப்ரயீலே! எனக்கு ஒரே மயக்கமாகவும் கஷ்டமாகவும் இருக்கிறது என்றார்கள். (ஜிப்ரயீல் சென்றுவிட்டார்.) இரண்டாம் நாள் வந்து, முஹம்மதே! உடல் நிலை எப்படி இருக்கிறது? என்று ஜிப்ரயீல் (அலை) கேட்டதற்கு முதல்நாள் இருந்ததைப்போலத்தான் இன்றும் இருக்கிறது என்றார்கள். (ஜிப்ரயீல் சென்றுவிட்டார்.)  மூன்றாம் நாள், முஹம்மதே! உடல் நிலை எப்படி இருக்கிறது? என்றார்கள். முன்புள்ளநாள் போலத்தான் இருக்கிறது என்றார்கள். (மூன்றாம் நாளில் ஜிப்ரயீலோடு) ஒரு மலக்கும் வந்திருந்தார். அவர் பெயர் 'இஸ்மாயீல்' என்பதாகும். அவர் தன்னோடு ஒரு இலட்சம் மலக்கு(வானவர்)களை அழைத்து வந்திருந்தார். இந்த ஒரு இலட்சம் மலக்குகளில் ஒவ்வொருவருக்கும் (உதவிக்கு) ஒரு இலட்சம் மலக்குகள் இருந்தார்கள். அ(ந்த இஸ்மாயில் என்ற வான)வர் நபி (ஸல்) அவர்களிடம் செல்ல அனுமதி கேட்டார். இவர் யார்? என்று நபியவர்கள் (ஜிப்ரயீலிடம்) கேட்டார்கள். இவர்தான் மலகுல் மவ்த் (உயிரை கைபற்றும் வானவர்) ஆவார். உங்கள் முபாரக்கான உயிரை கைபற்ற உம்மிடம் அனுமதி கேட்கிறார் என்றார்கள். இவர் உமக்கு முன்புள்ள எந்த மனிதர்களிடமும்  அனுமதி கேட்டதுமில்லை¢ உமக்கு பின்னுள்ள எந்த மனிதர்களிடம் அனுமதி கேட்கவும் மாட்டார் என்றும் கூறினார். அவர்களை அனுமதியுங்கள் என்று நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள். (அந்த மலக்குல் மவ்த்) நபியவர்களுக்கு ஸலாம் கூறிக்கொண்டார். பிறகு, முஹம்மதே! அல்லாஹ் என்னை தங்களிடம் அனுப்பிவைத்தான். நீங்கள் உங்கள் உயிரை கைப்பற்ற சொன்னால் கைபற்றுவேன்¢ கைபற்ற வேண்டாம் என்றால் கைபற்றமாட்டேன் என்று கூறினார். அவருக்கு நபியவர்கள், மலகுல் மவ்தே! சொன்னபடியே கைபற்றுவீரா? என்று கேட்டார்கள். அதற்கவர் ஆம்! அவ்வாறுதான் எனக்கு கட்டளை. ஆனாலும் (முஹம்மதே!) உங்களுக்கு கட்டுப்படுமாறும் அல்லாஹ் ஏவியிருக்கிறான் என்றார். நபியவர்கள், ஜிப்ரயீலைப் பார்த்தார்கள். ஜிப்ரயீல் (அலை) அவர்கள், 'முஹம்மதே! அல்லாஹ் உம்மை சந்திக்க ஆசையாக இருக்கிறான் என்றார்கள்.' அப்போது நபியவர்கள் மலகுல் மவ்திடம், உமக்கு கட்டளையிடப்பட்டதை செய்வீராக என்றார்கள். அதற்குபிறகுதான் பூமான் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் பரிசுத்தமான உயிரை அவர் கைப்பற்றினார். அப்பொழுது, அந்த வீட்டின் மூளையிலருந்து 'அஸ்ஸலாமு அலைக்கும் அஹ்லல் பைத் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹு' என்று இறங்கள் சப்தம் கேட்டது. அந்த சப்தத்தை (அங்கிருந்தோர் அனைவரும்) கேட்டனர். (அந்த இறங்களில்) ஒவ்வொரு சோதனைக்கும் ஒர் இறங்கள் உண்டு, ஒவ்வொரு அழிவுக்கும் ஒரு பகரம் உண்டு மற்றும் ஒவ்வொரு இழப்பிற்கும் ஓர் இழப்பீடு உண்டு. எனவே, அல்லாஹ்வை பயந்துக்கொள்ளுங்கள், அவனையே ஆதரவு வையுங்கள். நன்மை தடுக்கப்பட்டவனே சோதனைக்கு ஆளக்கப்பட்டவனாவான் (என்று அந்த இறங்கள் சப்தம் இருந்தது) இது யாருடைய சப்தம் என்று உங்களுக்கு தெறியுமா? என்று அலி (ரளி) அவர்கள் கேட்டுவிட்டு, இது களிர் (அலை) அவர்களுடைய சப்தமாகும் என்று கூறினார்கள். (பைஹகீ-ஃபீ தலாயிலுன் நுபுவத் 7:267)


கவலையில் நபித்தோழர்கள்:

நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் மரணச் செய்தி எங்கும் பரவியது. மதீனா இருண்டுபோனது. இதைப் பற்றி நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) எங்களிடம் வந்த தினத்தை விட மிக அழகிய, ஒளிமிகுந்த நாளை நான் கண்டதில்லை. நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) மரணித்த தினத்தைவிட இருண்ட, வெறுப்பான நாளை நான் கண்டதில்லைஎன அனஸ் (ரழி) கூறுகிறார்கள். (முஸ்னத் தாரமி, மிஷ்காத்)


ஃபாத்திமா (ரழி) எனது தந்தையே! அழைத்த இறைவனுக்கு பதில் அளித்துவிட்டீரே! எனது தந்தையே! ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் தங்களின் தங்குமிடமாயிற்றே! எனது தந்தையே! உங்களின் மரணச் செய்தியை நாங்கள் ஜிப்ரயீலிடம் கூற வேண்டுமேஎனக் கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி)

உமரின் நிலை:

உமர் (ரழி) எழுந்து நின்று சில நயவஞ்சகர்கள் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) இறந்துவிட்டார்கள் என்று நினைக்கின்றனர். நிச்சயமாக அல்லாஹ்வின் தூதர் மரணிக்கவில்லை மூஸா பின் இம்ரான் (அலை) அல்லாஹ்வைச் சந்திக்கச் சென்று நாற்பது நாட்கள் தனது சமூகத்தாரை விட்டு மறைந்து இருந்த போது மக்கள் மூஸா மரணித்து விட்டார் என எண்ணினார்கள். ஆனால், மூஸா (அலை) திரும்பி வந்தார்கள். அவ்வாறே நபியவர்களும் தன் இறைவனைச் சந்திக்கச் சென்றுள்ளார்கள். அல்லாஹ்வின் மீது ஆணையாக! நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) நிச்சயம் திரும்ப வருவார்கள். தான் மரணித்து விட்டதாகக் கூறியவர்களின் கைகளையும் கால்களையும் வெட்டுவார்கள்?” எனக் கூறினார்கள். (இப்னு ஹிஷாம்)

அபூபக்ரின் நிலை:

أَنَّ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا زَوْجَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَخْبَرَتْهُ قَالَتْ أَقْبَلَ أَبُو بَكْرٍ رَضِيَ اللَّهُ عَنْهُ عَلَى فَرَسِهِ مِنْ مَسْكَنِهِ بِالسُّنْحِ حَتَّى نَزَلَ فَدَخَلَ الْمَسْجِدَ فَلَمْ يُكَلِّمْ النَّاسَ حَتَّى دَخَلَ عَلَى عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا فَتَيَمَّمَ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ مُسَجًّى بِبُرْدِ حِبَرَةٍ فَكَشَفَ عَنْ وَجْهِهِ ثُمَّ أَكَبَّ عَلَيْهِ فَقَبَّلَهُ ثُمَّ بَكَى فَقَالَ بِأَبِي أَنْتَ يَا نَبِيَّ اللَّهِ لَا يَجْمَعُ اللَّهُ عَلَيْكَ مَوْتَتَيْنِ أَمَّا الْمَوْتَةُ الَّتِي كُتِبَتْ عَلَيْكَ فَقَدْ مُتَّهَا (بخارى)
அபூபக்கர் (ரழி) இந்நேரத்தில் மஸ்ஜிது நபவியிலிருந்து சற்று தொலைவிலுள்ள சுன்ஹ்என்ற இடத்திலுள்ள வீட்டில் தங்கியிருந்தார்கள். இந்தத் துக்கமானச் செய்தியைக் கேட்டவுடன் தனது குதிரையில் ஏறி மஸ்ஜிது நபவிக்கு வந்து, யாரிடமும் பேசாமல் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களைக் காண்பதற்காக ஆயிஷாவின் அறை நோக்கி நடந்தார்கள். நபி (ஸல்) ஹிபரா நாட்டு ஆடையால் போர்த்தப்பட்டிருந்தார்கள். நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் முகத்திலிருந்து போர்வையை அகற்றி முகத்தைக் கட்டிப்பிடித்து முத்தமிட்டு அழலானார்கள். (நாயகமே!) என் தாயும் தந்தையும் தங்களுக்கு அர்ப்பணமாகட்டும்". அல்லாஹ் தங்களுக்கு இரண்டு மரணத்தைத் தரமாட்டான். அல்லாஹ் உங்களுக்கு விதித்த முதல் மரணத்தையே நீங்கள் அடைந்து கொண்டீர்கள்என்றும் கூறினார்கள்.

பின்பு அறையிலிருந்து வெளியேறி அபூபக்கர் (ரழி) மஸ்ஜிது நபவிக்கு வந்தார்கள். அங்கு உமர் (ரழி) மக்களிடம் பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது அபூபக்கர் (ரழி) உமரே! அமருங்கள்என்றுரைத்தும் உமர் (ரழி) அமர மறுத்துவிட்டார்கள். அபூபக்கர் (ரழி) மிம்பரில் ஏறி சப்தமிட்டு தஷஹ்ஹுத் முழங்கினார். மக்கள் உமர் (ரழி) அவர்களை விட்டு நீங்கி அபூபக்கர் (ரழி) அவர்களை நோக்கி விரைந்தனர். அப்போது அபூபக்கர் (ரழி) உங்களில் யார் முஹம்மதை வணங்கிக் கொண்டிருந்தாரோ! நிச்சயம் முஹம்மது மரணித்தார் என்பதைத் தெரிந்து கொள்ளட்டும்! உங்களில் யார் அல்லாஹ்வை வணங்கினாரோ! நிச்சயமாக அல்லாஹ் என்றென்றும் உயிருடன் இருப்பவன் மரணிக்க மாட்டான். அல்லாஹ் கூறுகிறான்:

முஹம்மது (நபி) ஒரு தூதரேயன்றி (இறக்காமல் இருக்கக் கூடிய இறைவன்) அல்ல. அவருக்கு முன்னரும் (இவ்வாறே) பல தூதர்கள் சென்றிருக்கின்றனர். அவர் இறந்துவிட்டால் அல்லது வெட்டப்பட்டு விட்டால் நீங்கள் புறங்காட்டிச் சென்று விடுவீர்களோ? (அவ்வாறு) எவரேனும் புறங்காட்டிச் சென்று விட்டால் அதனால் அவன் அல்லாஹ்வுக்கு ஒன்றும் நஷ்டம் உண்டாக்கி விடமாட்டான். நன்றி அறிபவர்களுக்கு அல்லாஹ் அதிசீக்கிரத்தில் (நற்)கூலியைத் தருவான். (அல்குர்ஆன் 3:144) என்று உரையாற்றினார்கள். (புகாரி)

இப்னு அப்பாஸ் (ரழி) கூறுகிறார்கள்: அபூபக்கர் (ரழி) இந்த வசனத்தை ஓதிக் காட்டும் வரை அல்லாஹ் இதனை இறக்கி வைத்ததை மக்கள் அறியாதது போல் இருந்தனர். அபூபக்கரிடமிருந்து அதை செவியேற்ற மக்கள் அதனையே திரும்பத் திரும்ப ஓதினர்.

இப்னுல் முஸய்யப் (ரழி) கூறுகிறார்: அல்லாஹ்வின் மீது ஆணையாக! அபூபக்ர் (ரழி) அந்த வசனத்தை ஓதியவுடன் அவர்கள் கூறுவதுதான் உண்மை என நான் அறிந்து கொண்டேன். என்னுடைய கால்கள் சோர்ந்து என்னால் நிற்க இயலவில்லை. அப்படியே பூமியில் சாய்ந்து விட்டேன். நபி (ஸல்) இறந்து விட்டார்கள் என்பதையும் அறிந்து கொண்டேன்.” (ஸஹீஹுல் புகாரி)

அஸ்வத் இப்னு யஸீத் (ரஹ்) அறிவித்தார் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் அலீ (ரலி) அவர்களிடம் (தமக்குப் பின் ஆட்சியாளராக இருக்கும்படி) இறுதிவிருப்பம் (வஸிய்யத்) தெரிவித்துவிட்டார்களாமேஎன்று ஆயிஷா (ரலி) அவர்களிடம் கூறப்பட்டது. அதற்கவர்கள், “இதைச் சொன்னவர் யார்?“ என்ற கேட்டுவிட்டு, “(நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் இறுதி வேளையில்) நான் அவர்களை என் நெஞ்சோடு அணைத்துக்கொண்டிருந்தேன். அப்போது அவர்கள் (எச்சில் துப்புவதற்காகப்) பாத்திரம் கொண்டு வரும்படி கூறிவிட்டு அப்படியே ஒரு பக்கம் சரிந்து இறந்துபோய்விட்டார்கள். (அவர்கள் இறந்ததைக் கூட) நான் உணரவில்லை. (நடந்தது இவ்வாறிருக்க) அலீ அவர்களுக்கு (ஆட்சிப் பொறுப்பை) எப்படி அவர்கள் சாசனம் செய்திருப்பார்கள்?“ என்று கேட்டார்கள். (ஸஹீஹ் புகாரி)  


நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் மரணிப்பதற்கு ஒரு நாள் முன்பு, அதாவது ஞாயிற்றுக்கிழமை தங்களிடமுள்ள அடிமைகளை அனைத்தையும் உரிமையிட்டார்கள். மேலும், தங்களிடமுள்ள ஆறு அல்லது ஏழு தங்கக் காசுகளைத் தர்மம் செய்தார்கள். தங்களுடைய ஆயுதங்களையும் முஸ்லிம்களுக்கு அன்பளிப்பாக வழங்கினார்கள்.

அன்றிரவு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வீட்டிலுள்ள விளக்கில் எண்ணெய் தீர்ந்து போகவே அதை ஒரு பெண்ணிடம் கொடுத்தனுப்பி அண்டை வீட்டாரிடம் எண்ணெயிட்டுத் தரும்படி ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா கூறினார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் கவச ஆடை முப்பது சாஃ கோதுமைக்காக ஒரு யூதனிடம் அடைமானமாக வைக்கப்பட்டிருந்தது. (நூல்கள்: ஸஹீஹுல் புகாரி, தபகாத் இப்னு ஸஅது, முஸ்னது அஹ்மது)


அடக்கம் செய்ய ஏற்பாடுகள்: நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களை அடக்கம் செய்வதற்கு முன்னதாக முஸ்லிம்களின் காரியங்களை நிர்வகிக்கும் கலீஃபாவை நிர்ணயம் செய்வதில் மக்கள் ஈடுபட்டனர். பனூ சாம்தாவின் வீட்டு வராண்டாவில் இது தொடர்பாக நடந்த விவாதங்களுக்கும் கருத்து பரிமாற்றங்களுக்கும் பிறகு, முஹாஜிர்களும் அன்சாரிகளும் ஒரு மனதாக அபூபக்ரை கலீஃபாவாக நிர்ணயித்தனர். இந்த வேலையில் திங்கட்கிழமையின் பகல் முழுதும் முடிந்து இரவும் முழுமையாக முடிந்தது. அது வரை நபி (ஸல்) அவர்களின் புனித உடல் ஹிபரா போர்வையுடன் இருந்தது. நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் குடும்பத்தார்கள் அறையை மூடி வைத்திருந்தனர். செவ்வாய் பகல் அன்று நபி (ஸல்) அவர்களின் ஆடையைக்களையாமல் அப்படியே குளிப்பாட்டினர். இப்பணியில் அப்பாஸ், அலீ, ஃபழ்ல் இப்னு அப்பாஸ், குஸம் இப்னு அப்பாஸ், நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் முன்னாள் அடிமை ஷுக்ரான், உஸாமா இப்னு ஜைத், அவ்ஸ் இப்னு கவ்லீ (ரழி) ஆகியோர் ஈடுபட்டனர். அப்பாஸ், ஃபழ்ல், குஸம் (ரழி) ஆகியோர் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் உடலைப் புரட்ட, உஸாமாவும் ஷுக்ரானும் நீர் ஊற்ற, அலீ (ரழி) குளிப்பாட்டினார்கள். அவ்ஸ் (ரழி) நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களை தனது நெஞ்சின் மீது சாய்த்திருந்தார்கள். (இப்னு மாஜா)


நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் புனித உடல் ஹிபரா போர்வையுடன் இருந்தது. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் குடும்பத்தார்கள் அறையை மூடி வைத்திருந்தனர். செவ்வாய் பகல் அன்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ஆடையைக் களையாமல் அப்படியே குளிப்பாட்டினர்.

அப்பாஸ், ஃபழ்ல், குஸம் ரளியல்லாஹு அன்ஹு ஆகியோர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் உடலைப் புரட்ட, உஸாமாவும் ஷுக்ரானும் நீர் ஊற்ற, அலீ ரளியல்லாஹு அன்ஹு குளிப்பாட்டினார்கள்.


இவ்வாறே இலந்தை இலை கலந்த நீரால் மும்முறை குளிப்பாட்டினார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைக் குளிப்பாட்டுவதற்காக ஸஅதுப்னு கைஸமாவுக்குச் சொந்தமான ஷகர்ஸ் என்ற கிணற்றிலிருந்து நீர் கொண்டு வரப்பட்டது. இந்நீரையே நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் வாழ்நாளில் அருந்தி வந்தார்கள். (நூல்: தபகாத் இப்னு ஸஅத்)


இவ்வாறே இலந்தை இலை கலந்த நீரால் மும்முறை குளிப்பாட்டினார்கள். நபி (ஸல்) அவர்களைக் குளிப்பாட்டுவதற்காக ஸஅதுப்னு கைஸமாவுக்குச் சொந்தமான கர்ஸ்என்ற கிணற்றிலிருந்து நீர் கொண்டு வரப்பட்டது. இந்நீரையே நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) வாழ்நாளில் அருந்தி வந்தார்கள். (தபகாத் இப்னு ஸஅத்)

நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களை வெள்ளை நிற யமன் நாட்டு பருத்தி ஆடையினால் (கஃபன்) போர்த்தினார்கள். அதில் தைக்கப்பட்ட சட்டையோ தலைப்பாகையோ ஏதுமில்லை. (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)


அடக்கம் செய்வது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களை எங்கு அடக்கம் செய்வது என்று கேள்வி எழுந்தது. அப்போது அபூபக்கர் (ரழி) இறைத்தூதர்களின் உயிர் எங்கு பிரிகிறதோ அங்குதான் அவர்கள் அடக்கம் செய்யப்படுவார்கள் என்று நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) கூற, நான் கேட்டிருக்கிறேன் என்றார்கள். உடனடியாக நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) மரணித்த இடத்திலுள்ள விரிப்பை அகற்றி அங்கேயே அபூ தல்ஹா (ரழி) குழி தோண்டி அதில் பக்கவாட்டில் ஒரு குழி அமைத்தார்கள். மக்கள் பத்து பத்து பேர் கொண்ட கூட்டம், கூட்டமாக நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் அறைக்குள் சென்று தனித்தனியாக தொழுதார்கள். முதலில் நெருங்கிய குடும்பத்தார்களும், பின்பு முஹாஜிர்களும், அடுத்து அன்சாரிகளும், தொடர்ந்து சிறுவர்களும், பின்னர் பெண்களும் தொழுதனர். சிலர், பெண்கள் முதலிலும் அடுத்து சிறுவர்களும் தொழுததாக அறிவிக்கின்றனர். (முவத்தா மாலிக், தபகாத் இப்னு ஸஅத்)


'இரவின் நடுநிசியில் மண்வெட்டிகளின் சப்தத்தை வைத்தே நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அடக்கம் செய்யப்பட்டதை அறிந்து கொண்டோம்.' இரவின் கடைசிப் பகுதியில் நல்லடக்கம் நடைபெற்றதாகவும் ஓர் அறிவிப்பு உள்ளது. (நூல்: முஸ்னது அஹ்மது)


மண்ணில் புதைக்கப்பட்டவர்களில் சிறந்தவரே!
உங்கள் எலும்புகளின் நறுமணத்தால்
மண்ணும் மலைக்குன்றும் மணம் கமழ்கின்றன.
நீங்கள் துயிலுறும் இந்த மண்ணரைக்கு என் உயிர் அர்ப்பணம்!
தன்னடக்கம் இங்குதான் அடங்கியிருக்கிறது
தயாள குணமும் பெருந்தன்மையும் இங்குதான் உறங்குகின்றன. (இப்னு கஸீர்)


எனவே, இந்த உலகைவிட்டும் நம் உயிர் பிறிவதற்கு முன்பாகவே, மறைந்தும் வாழும் மாநபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களை பலமுறை ஜியாரத் செய்யும் பாக்கியத்தையும் அவர்களின் ரவ்ளாவிற்கு முன்நின்று அவர்கள்மீது அதிகமதிகம் ஸலவாத்தையும் ஸலாமையும் கூறும் பாக்கியத்தையும். அதைக்கொண்டு அவர்களது அன்பைப்பெற்று மறுமையில் அவர்களது திருக்கரத்தால் ஹவ்லுள் கவ்ஸர் தடாகத்திலிருந்து நீர் அருந்தும் பாக்கியத்தையும் நம் அனைவருக்கும் அல்லாஹ் வழங்கியருள்வானாக! அவர்களோடு சுவர்க்கத்தில் இருக்கும் உயர்ந்த பாக்கியத்தையும் நம்மவர்களுக்கு தந்தருள் புரிவானாக! ஆமீன்!! யாரப்பல் ஆலமீன்.!!!


தகவல் வழங்கியவர்கள்: நஸீர் மிஸ்பாஹி,  ஷேக் ஆதம் ஹள்ரத், முஹம்மது இலியாஸ் ஹள்ரத், அப்துர் ரஹ்மான் ஹசனி ஆகியோர்  மற்றும் வெள்ளிமேடையிளிருந்து சில தகவல்.
மேலதிக தகவலோடு தொகுத்து வழங்கியவர்: ஹனீப் ஜமாலி.



3 comments:

மாஷாஅல்லாஹ்

மாஷாஅல்லாஹ் மிகவும் அற்புதம் வாய்ந்த குறிப்பு குறிப்புகள் வழங்கிய கோர்வை செய்த ஆலிம் பெருமக்களுக்கும் அல்லாஹ் நற்கூலியை வழங்கி உயர்ந்த சுவனபதியை வழங்கிடுவானாக...
ஆமீன்

கண்ணீர் வடிக்க வைத்த இறுதி கட்டம்,மிக அற்புதம்

Post a Comment