12 January 2015

மன்னிக்கும் மாண்பாளர் மாநபி (ஸல்)


وَلَوْ أَنَّهُمْ إِذْ ظَلَمُوا أَنْفُسَهُمْ جَاءُوكَ فَاسْتَغْفَرُوا اللَّهَ وَاسْتَغْفَرَ لَهُمُ الرَّسُولُ لَوَجَدُوا اللَّهَ تَوَّابًا رَحِيمًا (القرآن 4:64
அல்லாஹ் கூறுகிறான்: (நபியே!) அவர்கள் தமக்குத்தாமே தீங்கிழைத்தபோது உம்மிடம் வந்துஅல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோரிஅவர்களுக்காகத் தூத(ராகிய நீ)ரும் பாவமன்னிப்புக் கோரினால்மன்னிப்பை ஏற்பவனாகவும் மிகுந்த அன்புடையோனாகவும் அல்லாஹ்வை அவர்கள் காண்பார்கள். (அல்குர்ஆன் 4:64)

நபி (ஸல்) அவர்கள் முக்காலத்திலும் மன்னிப்பாளர் என்பது அஹ்லுஸ் ஸுன்னா வல்ஜமாஅத்தினர் சரியான கொள்கையாகும். ஆம்! நமது உயிருக்கும் மேலான கண்மனி நாயகம் (ஸல்) அவர்கள் மன்னித்தார்கள், (கடந்தகாலம்) மன்னிக்கிறார்கள் (நிகழ்காலம்) மற்றும் மன்னிப்பார்கள் (வருங்காலம்) ஆக முக்காலத்திலும் மன்னிக்கும் மாண்பாளராக திகழ்கிறார்கள்.

இரண்டு வகை மன்னிப்பு
1.            ஹுகூகுல்லாஹ்-   حقوق االله (அல்லாஹ்விற்கு செய்யவேண்டிய கடமைகள்) ஏதேனும் தவறு செய்துவிட்டால் அல்லாஹ் அடியானை மன்னிப்பது.  2. ஹுகூகுல் இபாதா  حقوق العبادة -(அடியார்களுக்கு செய்யவேண்டிய கடமைகள்) ஏதேனும் தவறு செய்துவிட்டால் ஒரு அடியான் இன்னொரு அடியானை மன்னித்தல் ஆகிய இரு வகைகள் உண்டு. இதில் முதலாவது வகையில்படைப்பினங்கள் ஏதேனும் பாவம் செய்துவிட்டால் அல்லாஹ்விடம் சிறு பாவமாக இருந்தால் இஸ்திஃபார் செய்யவேண்டும். பெரும்பாவங்களாக இருந்தால் தவ்பா செய்யவேண்டும். இரண்டாவது வகையில்மனிதனுக்கு மத்தியில் தவறு நிகழ்ந்துவிட்டால் உரியவனிடம் மன்னிப்பு கேட்கவேண்டும். அதை மற்றவன் மன்னிக்கவும் வேண்டும் என்பது நியதி. இப்பொழுது கேள்வி என்னவென்றால்மன்னிப்பு தேடுவதற்கு பயன்படுத்தப்படும் வார்த்தை  غفر الله அல்லாஹ்விடம் மன்னிப்பு தேடினான்,  غفر فلانا ஒருவனிடம் மன்னிப்பு தேடினான் என்பது பொருளாகும். இந்த வார்த்தையை அல்லாஹ் அல்லாதவர்களுக்கு பயன்படுத்தலாமாஎன்பது தெளிவாகிவிட்டால் உம்மத்தவர்கள் நபியிடம் பிழை பொருக்கத் தேடுவதில் தவறில்லை என்பது தெளிவாகிவிடும். அதற்கு பல ஆதாரங்களை தருகிறேன் இன்ஷா அல்லாஹ்.

وَالَّذِينَ يَجْتَنِبُونَ كَبَائِرَ الْإِثْمِ وَالْفَوَاحِشَ وَإِذَا مَا غَضِبُوا هُمْ يَغْفِرُونَ (القرآن 42:37) وَلَمَنْ صَبَرَ وَغَفَرَ إِنَّ ذَلِكَ لَمِنْ عَزْمِ الْأُمُورِ (القرآن 42:43)

அல்லாஹ் கூறுகிறான்: (அல்லாஹ்வை நம்பிய) அவர்கள் பெரும்பாவமான காரியங்களையும்மானக்கேடான விஷயங்களையும் விட்டு விலகி (இருப்பதுடன்பிறரின் தகாத செயல்களால்) கோபமடையும் சமயத்திலும் (கோபமூட்டியவரை) மன்னித்துவிடுவார்கள். (அல்குர்ஆன் 42:37)  எவரேனும் (பிறர் செய்த தீங்கைப்) பொறுத்துக்கொண்டு மன்னித்துவிட்டால்நிச்சயமாக இது வீரமிக்க செயலாகும். (அல்குர்ஆன் 42:43)

    عن زياد بن علاقة قال: سمعت جريرا يقول: قال رسول الله صلى الله عليه وسلم " ومن يغفر لا يغفر له. (مسند احمد-18447, مجمع الزوائد- 17478)  لا يغفر لمن لا يغفر. (ادب المفرد-372, الزهد لابى داود-82)

ஜியாத் பின் அலாகாத் (ரளி) அவர்கள் ஜரீர் (ரளி) அவர்கள் கூற தான் கேட்டதாக அறிவிக்கிறார்கள்: (பிறரை) மன்னிக்காதவன் மன்னிக்கப்படமாட்டான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்னது அஹ்மது-18447, மஜ்மவுஜ் ஜவாயிது-17478) (பிறரை) மன்னிக்காதவன் மன்னிக்கப்படமாட்டான் (அதபுல் முஃப்ரது-372, அஜ்ஜுஹ்து-அபீதாவூது-82)

மேலே கூறப்பட்டுள்ள திருவசனங்கள் மற்றும் நபிமொழிகளில் அடியார்களுக்கு இடையிலான மன்னித்தல் என்பதில் غَفَرَ,  يَغْفِرُونَ, يغفر,  போன்ற வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டுள்ளதை வாசகர்கள் கவனத்தில் கொள்ளவேண்டும். தன்னிடம் மன்னிப்பு கேட்பதற்கம் அதே வார்த்தை¢ அடியார்களுக்கு மத்தியில் நிகழ்ந்துவிட்ட தவறுக்காக மன்னிப்பு கேட்கின்றபோதும் அதே வார்த்தையை பயன்படுத்துவதை அல்லாஹ்வும் அவனது தூதருமாகிய நபி (ஸல்) அவர்களும் கூறியுள்ளதை கவனத்தில் கொள்ளுங்கள்.

1. கடந்த காலத்தில் நபியவர்கள் மன்னித்தார்கள்
فَتَلَقَّى آدَمُ مِن رَّبِّهِ كَلِمَاتٍ فَتَابَ عَلَيْهِ إِنَّهُ هُوَ التَّوَّابُ الرَّحِيمُ (القرآن 2:37)
அல்லாஹ் கூறுகிறான்: பின்னர் ஆதம் (அலை) சில வாக்கியங்களை தன் இறைவனிடமிருந்து கற்றுக்கொண்டார். (அவ்வாக்கியங்களைக் கொண்டு அவர் பிரார்த்தனை செய்த வண்ணமாகவே இருந்தார்.) அதனால் அவரை அல்லாஹ் மன்னித்துவிட்டான். நிச்சயமாக அவன்தான் மிக மன்னிப்பவனும் அளவற்ற அன்புடையவனுமாக இருக்கின்றான். (அல்குர்ஆன் 2:37)

عن عمر بن الخطاب قال  قال رسول الله صلى الله عليه وسلم : لما أذنب آدم الذنب الذي أذنبه ، رفع رأسه إلى السماء فقال : أسألك بحق محمد إلا غفرت لي؟ فأوحى الله إليه : ومن محمد؟ فقال : تبارك اسمك . لما خلقتني رفعت رأسي إلى عرشك فإذا فيه مكتوب  لا إله إلا الله محمد رسول الله  فعلمت أنه ليس أحد أعظم عندك قدراً ممن جعلت اسمه مع اسمك . فأوحى الله إليه : يا آدم انه آخر النبين من ذريتك ، ولولا هو ما خلقتك. (طبراني في المعجم الصغير والحاكم وأبو نعيم والبيهقي)

 இப்னு உமர் (ரளி) அறிவிக்கிறார்கள்: ஆதம் (அலை) அவர்கள் தவறு செய்துவிட்டபோது, (உலகிற்கு அனுப்பப்பட்டார்கள். தன் தவறுக்காக மன்னிப்பு தேடநாடி) வானத்தின் பக்கம் தலையை உயர்த்தி, (யாஅல்லாஹ்!) முஹம்மது (ஸல்) அவர்களின் பொருட்டால் என்னை மன்னிப்பாயாக என்றார்கள். அதற்கு அல்லாஹ், (தான் அறிந்துகொண்டே) யார் அந்த முஹம்மதுஎன்று கேட்டான். அதற்கு ஆதம் (அலை) அவர்கள், (யாஅல்லாஹ்!) உனது பெயர் மகத்துவமானது. நீ என்னை படைத்தபோது என் தலையை உர்த்தி (முதலாவதாக) உன் அர்ஷை பார்த்தேன். அதில் 'லாயிலாஹ இல்லல்லாஹ் முஹம்மதுர் ரஸுலுல்லாஹ்என்று எழுதப்பட்டிருந்தது. உன்னிடத்தில் சங்கைமிக்க ஒருவரின் பெயரைத்தான் உன் பெயரோடு நீ சேர்த்திருப்பாய் என்பதை நான் புறிந்துகொண்டேன் என்று கூறினார்கள். அதற்கு அல்லாஹ், (ஆம்!) ஆதமே! அவர் உன்னுடைய சந்ததியின் இறுதி நபியாவார்கள். அவர் இல்லையென்றால் உம்மையே படைத்திருக்கமாட்டேன் என பதில் கூறியதாக நபி (ஸல்) கூறினார்கள். (தப்ரானி-முஃஜமிஸ் ஸகீர்ஹாகிம்அபூநுஐம்பைஹகி) எனவேஆதம் (அலை) அவர்களின் பாவன்னிப்பு நபி (ஸல்) அவர்களைக் கொண்டுதான் ஒப்புக்கொள்ளப்பட்டது. இது அவர்களின் கடந்தகால மன்னிப்பை தெளிவுபடுத்தவில்லையா?

கிராம அரபியை மன்னித்த நபி (ஸல்)
العُتْبي، قال: كنت جالسا عند قبر النبي صلى الله عليه وسلم، فجاء أعرابي فقال: السلام عليك يا رسول الله، سمعت الله يقول: {وَلَوْ أَنَّهُمْ إِذْ ظَلَمُوا أَنْفُسَهُمْ جَاءُوكَ فَاسْتَغْفَرُوا اللَّهَ وَاسْتَغْفَرَ لَهُمُ الرَّسُولُ لَوَجَدُوا اللَّهَ تَوَّابًا رَحِيمًا} وقد جئتك مستغفرا لذنبي مستشفعا بك إلى ربي ثم أنشأ يقول: يا خيرَ من دُفنَت بالقاع أعظُمُه ... فطاب منْ طيبهنّ القاعُ والأكَمُ ... نَفْسي الفداءُ لقبرٍ أنت ساكنُه ... فيه العفافُ وفيه الجودُ والكرمُ ... ثم انصرف الأعرابي فغلبتني عيني، فرأيت النبي صلى الله عليه وسلم في النوم فقال: يا عُتْبى، الحقْ الأعرابيّ فبشره أن الله قد غفر له. (تفسير ابن كثير

அல்உத்பீ (ரளி) அவர்கள் அவர்கள் கூறியதாவது: நான் நபி (ஸல்) அவர்களின் மண்ணறைக்கு அருகில் அமர்ந்திருந்தேன். அப்போது ஒரு கிராம அரபி வந்தார். நபி (ஸல்) அவர்களுக்கு ஸலாம் கூறிவிட்டு இந்த வசனத்தை (4:64) ஓதினார். மேலும், 'இப்போது நான் என் பாவங்களுக்காக இறைவனிடம் மன்னிப்புக் கோரி உங்கள் சமூகம் வந்துள்ளேன். நீங்கள் என் இறைவனிடம் பரிந்துரைக்க வேண்டும்என்று கூறிவிட்டு பின்வரும் கவிதைகளையும் பாடினார்.
மண்ணில் புதைக்கப்பட்டவர்களில் சிறந்தவரே!
உங்கள் எலும்புகளின் நறுமணத்தால்
மண்ணும் மலைக்குன்றும் மணம் கமழ்கின்றன.
நீங்கள் துயிலுறும் இந்த மண்ணரைக்கு என் உயிர் அர்ப்பணம்!
தன்னடக்கம் இங்குதான் அடங்கியிருக்கிறது
தயாள குணமும் பெருந்தன்மையும் இங்குதான் உறங்குகின்றன.

பின்பு அந்த கிராமப்புற அரபி சென்றுவிட்டார். நான் அயர்ந்து உறங்கினேன். கனவில் நபி (ஸல்) அவர்களைக் கண்டபோதுஅவர்கள் என்னிடம், 'அல்உத்பீ! அந்த கிராமவாசியிடம் சென்று அவருடைய பாவங்களை அல்லாஹ் மன்னித்துவிட்டான் என்று நற்செய்தி கூறும்!என்று சொன்னார்கள். (இப்னு கஸீர்)

கப்ரிலிருந்தே மன்னிப்பு வழங்கல்
عن علي قال: قدم علينا أعرابي بعد ما دفنا رسول الله صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بثلاثة أيام، فرمى بنفسه على قبر رسول الله صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وحثا على رأسه من ترابه، فقال: قلت يا رسول الله فسمعنا قولك، ووعيت عن الله فوعينا عنك، وكان فيما أنزل الله عليك (وَلَوْ أَنَّهُمْ إِذْ ظَلَمُوا أَنْفُسَهُمْ) الآية، وقد ظلمت نفسي وجئتك تستغفر لي. فنودي من القبر أنه قد غفر لك. (تفسير القرطبى

அலி (ரளி) அறிவிக்கிறார்கள்: 'நபி (ஸல்) அவர்களை அடக்கம் செய்து மூன்று நாட்கள் கழிந்தபிறகு ஒரு கிராம அரபி வந்துநபி (ஸல்) அவர்களின் கப்ரின் மீது விழுந்தார். தலையில் மண் படிந்திருந்தது. 'யாரஸுலல்லாஹ்! உமது சொல்லுக்கு கட்டுப்பட்டுள்ளேன். அல்லாஹ் இறக்கி அருளிய (4:64) வசனத்தை உங்கள் மூலம் கேட்டுள்ளேன். எனக்கு நானே அநீதி இழைத்துக்கொண்டுவிட்டேன். ரப்பிடத்தில் எனக்காக தாங்கள் மன்னிப்பு கோரவேண்டும் என்று (இதோ!) இப்போது உங்கள் தருபாருக்கு வந்துள்ளேன். எனக்காக மன்னிப்பு கோருவீராக! என்றார். அப்போதுஉமது பாவம் மன்னிக்கப்பட்டது என்று நபி (ஸல்) அவர்களின் ரவ்ளாவி(மண்ணரையி)லிருந்தே சப்தம் வந்தது.' (தஃப்ஸீர் குர்துபி)

2.            நிகழ்காலத்தில் நம்மை மன்னிக்கும் நாயகம் (ஸல்)
قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم : حَيَاتِي خَيْرٌ لَكُمْ تُحَدِّثُونَ وَنُحَدِّثُ لَكُمْ ، وَوَفَاتِي خَيْرٌ لَكُمْ تُعْرَضُ عَلَيَّ أَعْمَالُكُمْ ، فَمَا رَأَيْتُ مِنَ خَيْرٍ حَمِدْتُ اللَّهَ عَلَيْهِ ، وَمَا رَأَيْتُ مِنَ شَرٍّ اسْتَغْفَرْتُ اللَّهَ لَكُمْ. (رواه البزار-1925, كنزل العمال-31903, جامع الصغير-,3770, مجمع الزوائد-14250)
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: எனது வாழ்வும் உங்களுக்கு நன்மையே. எனது மரணமும் உங்களுக்கு நன்மையே. நீங்கள் என்னைப்பற்றி பேசுகிறீர்கள். நாங்கள் உங்களைப்பற்றி (ஆலமுல் பர்ஜகில்) பேசுகிறோம். ஊங்களுடைய அமல்கள் எனக்கு எடுத்துக்காட்டப்படுகிறது. அது நல்லதாக இருந்தால். அவருக்காக அல்லாஹ்வை புகழ்கிறேன். அது தீயதாக இருந்தால் அவருக்காக நான் அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு தேடுகிறேன். (பஜ்ஜார்-1925, கன்ஜுல் உம்மால்-31903, ஜாமிவுஸ் ஸகீர்-3770, மஜ்மவுஜ் ஜவாயித்-14250)

3. வருங்காலத்திலும் நம்மை மன்னிக்க இருக்கும் நபி (ஸல்)
وَلَسَوْفَ يُعْطِيكَ رَبُّكَ فَتَرْضَى (القرآن 93:5) وَلَسَوْفَ يُعْطِيك رَبّك ' فِي الْآخِرَة مِنْ الْخَيْرَات عَطَاء جَزِيلًا  فَتَرْضَى بِهِ فَقَالَ صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ : إِذْن لَا أَرْضَى وَوَاحِد مِنْ أُمَّتِي فِي النَّار (تفسير الجلالين)
அல்லாஹ் கூறுகிறான்: உங்களது இறைவன் உங்களுக்கு மென்மேலும் (பல உயர் பதவிகளை) உங்களுக்கு அளிப்பான். அவைகளைக் கொண்டு நீங்கள் திருப்தி அடைவீர்கள். (அல்குர்ஆன் 93:5) உங்கள் இறைவன் மறுமையில் உங்களுக்கு சிறந்த உயர் பதவிகளைத் தருவான் அதை நீங்கள் பொருந்திக் கொள்வீர்கள் என்ற வசனம் இறங்கிபோது நபியவர்கள்என் உம்மதவர்களில் ஒருவர் நரகத்தில் இருந்தால்கூட நான் பொருந்திக்கொள்ளமாட்டேன் எனக்கூறினார்கள். (தஃப்ஸீருல் ஜலாலைனி)

ارْفَعْ رَأْسَكَ سَلْ تُعْطَهْ وَقُلْ يُسْمَعْ وَاشْفَعْ تُشَفَّعْ فَأَرْفَعُ رَأْسِي فَأَحْمَدُ رَبِّي بِتَحْمِيدٍ يُعَلِّمُنِي ثُمَّ أَشْفَعُ فَيَحُدُّ لِي حَدًّا ثُمَّ أُخْرِجُهُمْ مِنْ النَّارِ وَأُدْخِلُهُمْ الْجَنَّةَ (بخارى-6565, مسلم-500, سنن الكبرى-7604, نسائ-1043, ابن ماجه-1050, ترمذى-444, دارمى-52)

 அபூஸயீதுல் குத்ரீ (ரளி) அறிவிக்கிறார்கள்: (முஹம்மதே!) உங்கள் தலையை உயர்த்துங்கள். கேளுங்கள்¢ உங்களுக்கு கொடுக்கப்படும். சொல்லுங்கள்¢ செவியேற்கப்படும். பரிந்துரை செய்யுங்கள்¢ உங்கள் பரிந்துரை ஏற்கப்படும் என்று என்னிடம் கூறப்படும். உடனே நான் எனது தலையை உயர்த்தி இறைவன் எனக்குக் கற்றுத்தரும் புகழ் மொழிகளைக் கூறி அவனைப் புகழ்வேன். அப்போது இறைவன் எனக்கு வரம்பு விதிப்பான். அவர்களை நான் நரகத்திலிருந்து வெளியேற்றி சொர்க்கத்திற்கு அனுப்பிவைப்பேன் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி-6565, முஸ்லிம்-500, சுனனுல் குப்ரா-7604, நஸாயி-1043, திர்மிதி-444, தாரமி-52)

عِمْرَانُ بْنُ حُصَيْنٍ  رضى الله عنهما  عَنِ النَّبِىِّ صلى الله عليه وسلم قَالَ يَخْرُجُ قَوْمٌ مِنَ النَّارِ بِشَفَاعَةِ مُحَمَّدٍ - صلى الله عليه وسلم - فَيَدْخُلُونَ الْجَنَّةَ ، يُسَمَّوْنَ الْجَهَنَّمِيِّينَ (بخارى- 6566, ابن ماجه-4306, مسند ابى يعلى-3206)
இம்ரான் பின் ஹுசைன் (ரள) அறிவிக்கிறார்கள்: முஹம்மதின் பரிந்துரையால் ஒரு கூட்டம் நரகத்திலிருந்து வெளியேறி சொர்க்கம் செல்வார்கள். அவர்கள் 'ஜஹன்னமிய்யூன்' (நரக விடுதலை பெற்றோர்) என்று பெயரிட்டு அழைக்கப்படுவார்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் (புகாரி-6566, இப்னுமாஜா-4306, அபீயஃலா-3206)

உம்மத்தினரின் பாவத்ததை மன்னிப்பவர்கள்
  انت غفار الخطايا ﴿﴾ والذنوب الموبقات
 (நாயகமே!) தவறுகளையும்எங்களை அழிக்கும் பாவங்களையும்
மன்னிக்கும் தகுதி வழங்கப்பட்ட மாண்பாளர் தாங்களன்றோ! (சுப்ஹான மவ்லித்)

أن لي خمسة أسماء : أنا محمد و أنا أحمد و أنا الماحي الذي يمحو الله بي الكفار و أنا الحاشر الذي يحشر الناس على قدمي و أنا العاقب و العاقب ليس بعده نبي (شعب الايمان للبيهقى-1397)
எனக்கு ஐந்து பெயர்கள் உண்டு. நான் முஹம்மதாக இருக்கிறேன். நான் அஹ்மதாக இருக்கிறேன். என்னைக்கொண்டே இறைநிராகரிப்பை அல்லாஹ் அழிப்பதால் நானே அழிக்கக்கூடியவராக இருக்கிறேன்.  எனக்கு கீழே மக்கள் எழுப்பப்படுவார்கள் என்பதால் நானே எழுப்பக்கூடியவராக இருக்கிறேன். எனக்கு பின்னால் நபி கிடையாது எனவே நானே இறுதியானவராக இருக்கிறேன் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஷுஃபுல் ஈமான்பைஹகி-1397)

عَنْ عَائِشَةَ أُمِّ الْمُؤْمِنِينَ أَنَّهَا أَخْبَرَتْهُ أَنَّهَا اشْتَرَتْ نُمْرُقَةً فِيهَا تَصَاوِيرُ ، فَلَمَّا رَآهَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم قَامَ عَلَى الْبَابِ، فَلَمْ يَدْخُلْهُ، فَعَرَفْتُ فِى وَجْهِهِ الْكَرَاهِيَةَ، فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ! أَتُوبُ إِلَى اللَّهِ وَإِلَى رَسُولِهِ (مسلم-4287)

ஆயிஷா (ரளி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நான் (உயிரினங்களின்) உருவப் படங்கள் உள்ள திண்டு ஒன்றை விலைக்கு வாங்கினேன். (வீட்டுக்கு வந்த) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அதைக் கண்டதும் வாசற்படியிலேயே நின்றுவிட்டார்கள். உள்ளே வரவில்லை. அவர்களது முகத்தில் அதிருப்தியை நான் அறிந்துக்கொண்டேன். அல்லது அறியப்பட்டது. உடனே நான்அல்லாஹ்வின் தூதரே! நான் அல்லாஹ்விடமும் அவனுடைய தூதரிடமும் மன்னிப்புக் கோருகிறேன் என்று கூறினார்கள். (முஸ்லிம்-4287)

அன்பான வாசகர்களே! மேலே உள்ள இரண்டு ஹதீஸின் வாசகங்களை நான்றாக படித்தீர்களா?   انت غفار الخطايا (நபியே! நீங்கள் பாவத்தை மன்னிக்கக்கூடியவர்கள்) என்று சொல்வதே ஷிர்க் (இணை) என்று வஹ்ஹாபில் கொக்கரிக்கிறார்கள். ஆயிஷா (ரள) அவர்களோأَتُوبُ إِلَى اللَّهِ وَإِلَى رَسُولِهِ (நான் அல்லாஹ்விடம் அவனுடைய தூதரிடமும் மன்னிப்புக் கோருகிறேன்) என்று தவ்பா என்ற வார்த்தையை உபயோகித்திருக்கிறார்கள். 

அப்படியானால் ஆயிஷா (ரளி) அவர்கள் ஷிர்க் செய்துவிட்டார்கள் என்று கூறப்போகிறீர்களாஅல்லது ஆயிஷா (ரளி) அவர்களுக்கு இஸ்திஃபார்-தவ்பா இரண்டுக்கும் பொருள் தெரியவில்லை என்று சொல்லப்போகிறீர்களாஆககைருல்லாஹ்விற்கும் இஸ்திஃபார்-தவ்பா பொன்ற வார்த்தைகளினால் மன்னிப்பு கேட்களாம் என்பதுதானே இந்த நபிமொழி தெளிவு படுத்துகிறது. அஹ்லுஸ் ஸுன்னா வல் ஜமாஆத் ஆகியவர்களான எங்களிடம் எந்த பிழையும் இல்லை. நாங்கள் இரண்டும் ஒன்று என்றும் சொல்ல மாட்டோம். அல்லாஹ்விடம் கேட்கவேண்டிய தவ்பாவை அல்லாஹ்விடமும்¢ ரஸுலிடம் கேட்கவேண்டிய மன்னிப்பை ரஸுலிடமும் ஆயிஷா (ரளி) கேட்டார்கள் என்றுதான் நாங்கள் பொருள் கொள்வோம். 'أَتُوبُ إِلَى اللَّهِஎன்பது    حقوق الله  வைச்சார்ந்த மன்னிப்பு ஆகும். أَتُوبُ إِلَى رَسُولِهِ  என்பது حقوق العبادة வைச்சார்ந்த மன்னிப்பு ஆகும்.

فَبِمَا رَحْمَةٍ مِنَ اللَّهِ لِنْتَ لَهُمْ وَلَوْ كُنْتَ فَظًّا غَلِيظَ الْقَلْبِ لَانْفَضُّوا مِنْ حَوْلِكَ فَاعْفُ عَنْهُمْ وَاسْتَغْفِرْ لَهُمْ وَشَاوِرْهُمْ فِي الْأَمْرِ فَإِذَا عَزَمْتَ فَتَوَكَّلْ عَلَى اللَّهِ إِنَّ اللَّهَ يُحِبُّ الْمُتَوَكِّلِينَ (القرآن 3:159) فاعف عنهم فيما يتعلق بحقوقك (تفسير الآلوسى

அல்லாஹ் கூறுகிறான்: (நபியே!) நீர் அல்லாஹ்வின் அருள் காரணமாகவே அவர்களிடம் நளினமாக நடந்துகொண்டீர். நீர் (மட்டும்) கடுகடுப்பானவராகவும் கல் நெஞ்சம் படைத்தவராகவும் இருந்திருந்தால்உம்மிடமிருந்து அவர்கள் விலகி (ஓடி)யிருப்பார்கள். எனவேஅவர்களை மன்னிப்பீராக. அவர்களுக்காக (இறையிடம்) மன்னிப்புக் கோருவீராக. (முக்கியமான) பிரச்சனைகளில் அவர்களுடன் கலந்தாலோசிப்பீராக. (அதன்பின் ஒன்றை) நீர் முடிவு செய்துவிட்டால் அல்லாஹ்வையே சார்ந்திருப்பீராக. (தன்னையே) சார்ந்திருப்போரை அல்லாஹ் நேசிக்கிறான். (அல்குர்ஆன் 3:159)

இந்த வசனத்திற்கு அல்லாமா ஆலூஸி (ரஹ்) அவர்கள், (நபியே!) உமக்கு செய்யவேண்டிய உரிமைகள் விஷயத்தில் (குறையிருப்பின்) அவர்களை மன்னிப்பீராக! என்று விளக்கம் தந்துள்ளார்கள். (தஃப்ஸீருல் ஆலூஸி)

எனவேநபியவர்களுக்கு செய்யவேண்டிய உரிமைகளை உம்மத்தவர்கள் செய்யவில்லை என்பதற்காக மன்னிக்கும்படி அல்லாஹ்வே சொல்லியிருப்பதால்தான். நபியே! நீங்கள் உங்கள் உம்மத்தவர்களின் பிழைகளை மன்னிக்கக்கூடியவர்கள். எனவேஎங்களை மன்னிப்பீராக என்று சொல்கிறோம். இதை இறையடியார்களின் கடமைகள் என்றுதான் எடுத்துக்கொள்ளவேண்டும். உலக நடைமுறையில் மூச்சுக்கு முன்னூறு தடைவ நாம் செய்துவிட்ட தவறுக்கு நமக்கு மத்தியில் Excuse Me, I am Sorry,  (என்னை மன்னித்துக்கொள்) என்று மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம். ஒரு தவறை செய்துவிட்டால் இன்மேல் அந்த தவறை மறுபடியும் செய்யமாட்டேன் என்று   Apology Letter (மன்னிப்பு கடிதம்) எழுதிக் கொடுக்கிறோம். நமக்கு மத்தியில் சமாதானம் செய்தபிறகு மன்னிப்புகேள் என்கிறோம். அவர்கள் ஒவ்வொருவரும் Forgive Me, (என்னை மன்னித்துக்கொள்) என்று மன்னிப்பு கேட்டுக்கொள்கின்றனர். வலக்கறிஞர் நீதிபதியைப் பார்த்து  My Lord (என் கடவுள்) என்கிறார். அப்படி சொன்னதால் நீதிபதி கடவுளாக ஆகிவிடுவாராஇவ்வளவு வார்த்தைகளால் மன்னிப்பை பறிமாறுகிறவர்கள்   انت غفار الخطايا (நபியே! நீங்கள் பாவத்தை மன்னிக்கக்கூடியவர்கள்) என்று சொன்னால் மட்டும் ஷிர்க் (இணை) என்று வஹ்ஹாபில் கொக்கரிக்கரிப்பது எவ்வகையில் நியாயம்அண்ணலார் (ஸல்) அவர்கள் கஃபாவில் தொழுது கொண்டிருந்த போது குரைஷுகள் இளைத்த கொடுமைகளை மன்னிக்கவில்லையா?  தாயிஃப் மக்கள் கொடுத்த துன்பங்களை மன்னிக்கவில்லையாதன்னையே கொல்லவேண்டும் என்று வீட்டை முற்றுகையிட்ட குரைஷிகளை மன்னிக்கவில்லையாதன் மகளாரை ஈட்டியால் குத்தி சாகடித்த உத்பாவை மன்னிக்கவில்லையாஉலக அற்ப ஆசைப் பொருளுக்காக அண்ணலார் (ஸல்)அபூபக்கர் (ரளி) ஆகிய இருவரையும் பிடித்துக்கொடுக்கவந்த சுராக பின் மாலிகை மன்னிக்கவில்லையாமக்கா வெற்றி நாளின்போது முஹம்மது (ஸல்) அவர்களது கையில் ஆட்சி வந்துவிட்டது. நாம் அவர்களுக்கு கொடுத்த தொல்லைக்காக நம்மை என்ன செய்யப் போகிறார்களோ என்று பயந்து ஓடி ஒளிந்தவர்களை மன்னிக்கவில்லையாஇந்த மனித சமுதாயத்திற்கு இவ்வளவு மன்னிப்பை வழங்கிய நபியவர்களை மன்னிப்பாளர் என்று சொல்வதில் என்னதான் தவறு இருக்கிறதாக இவர்கள் கண்டார்கள்எனவேஇது இவர்களின் அறியாமை என்றும் சொல்லலாம். அல்லது நபியின் மீது இவர்களுக்கு உள்ள ஏற்றுக்கொள்ளமுடிhயத பொறாமை என்றும் சொல்லாம்.

உம்மத்தினரின் குறைகளை மறைப்பவர்கள்
انت ستار المساوى ﴿﴾ ومقيل العثرات.
எங்கள் தீயசெயல்களை திரையிட்டு மறைத்து
எங்கள் மானம் காக்கும் மனித நேயரும் தாங்களன்றோ!
எங்களின் தொல்லைகளைத் துடைக்கும்
தூய வள்ளலும் தாங்களன்றோ! (சுப்ஹான மவ்லித்) 

عَنْ أَبِى هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ...... وَمَنْ سَتَرَ مُسْلِمًا سَتَرَهُ اللَّهُ فِى الدُّنْيَا وَالآخِرَةِ (رواه مسلم-7028, ابن ماجه-221, ترمذى-2869, مصنف ابن تبى شيبة-26567, مسند احمد-7118, المسند الجامع-14095, كنز العمال-43560,شعب الايمان-1572)

அபூஹுரைரா (ரளி) அறிவிக்கிறார்கள்: யார் முஸ்லிமின் (குறையை) மறைப்பாரோ அவருடைய குறையை அல்லாஹ் இவ்வுலகிலும் மறுஉலகிலும் மறைப்பான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்-7028, இப்னுமாஜா-221, திர்மிதி-2869, முஸன்னஃப் இப்னு அபீஷைபா-26567, முஸ்னது அஹ்மது-7118, அல்முஸ்னதுல் ஜாமிவு-14095, கன்ஜுல் உம்மால்-43560, ஷுஃபுல் ஈமான்-1572)

யார் பிறருடைய குறையை மறைப்பாரோ அவரை ساتر (ஸாதிர்) அல்லது ستار (ஸத்தார்) என்றுதான் அரபு மொழியில் சொல்லப்படும். சராசரி மனிதருக்கே ستار (சத்தார்-மறைப்பவர்) என்று சொல்லாம் என்று நபிமொழி இருக்கும் போது நபியவர்களை انت ستار المساوى ﴿﴾ ومقيل العثرات. (எங்கள் தீயசெயல்களை திரையிட்டு மறைத்து எங்கள் மானம் காக்கும் மனித நேயரும் தாங்களன்றோ! எங்களின் தொல்லைகளைத் துடைக்கும் தூய வள்ளலும் தாங்களன்றோ!) என்று சொல்வதில் என்ன பிழை ஏற்பட்டுவிட்டது. இது ஊனக்கண்களுக்கு மட்டுமே தெறியும் தவறு என்றுதான் சொல்லவேண்டும்.

எனவேஎங்கள் கண்மனியே நாங்கள் உங்களுடைய எத்தனையோ சுன்னத்தை விட்டிருக்கிறோம். எங்களை மன்னிப்பீராக! எங்களை உங்கள் அருள் கண்கொண்டு பார்ப்பீராக! மருமையில் உங்களது திருக்கரத்தால் எங்களுக்கு ஹவ்ளுல் கவ்ஸர் தடாகத்திலிருந்து நீர் புகட்டுவீராக! சுவர்க்கத்தில் உங்களோடு இருக்கும் ஈடு இணையற்ற பாக்கியத்தை அல்லாஹ் வழங்க பரிந்துரைப்பீராக!! அல்லாஹ் அருள் புறிவான்!!! ஆமீன்!!




0 comments:

Post a Comment