16 April 2015

வதந்தி(தீ)களை பரப்பாதீர்

சமீப காலமாக இ.மெயில், வாட்ஸ் அப், டெலிகிராம், பேஸ்புக், டுவிட்டர் மற்றும் ஊடகங்களில் அதிகமாக வதந்திகள் பரப்பப்படுகிறது.  இதில் குறிப்பாக மரண செய்திகள், இஸ்லாமியப் பெண்கள் அன்னிய மதத்தவர்களோடு தொடர்ப்பு உள்ளதைப் போன்ற செய்திகள் அதிகமாக உலா வருகின்றன.
இந்த வதந்தியைப் பருப்புவோர், அச்செய்தியைப் போட்டுவிட்டு இதை அதிகமாக ஷேர் செய்யவும் என்ற ஒரு வாசகத்தையும் சேர்த்து போட்டுவிடுவார். நம்மவர்களுக்கு அவ்வளவுதான், நன்மையைதானே செய்கிறோம் என்ற பெயரில், அந்த தவகல் உண்மையானதா? அல்லது முஸ்லிம்களை விமர்சிக்கவேண்டும் என்பதற்காக பாசிஸ சக்திகளால் உருவாக்கப்பட்டதா? என்பதைப் பற்றியெல்லாம் கொஞ்சமும் சிந்திப்பதர்க்கு அவகாசம் எடுத்துக்கொள்வதே இல்லை. எந்த விஷயத்தை சொன்னாலும் குர்ஆனில் இருக்கிறாதா? ஹதீஸில் இருக்கிறதா? என்று ஆதாரம் கேட்பவர்கள் இந்த வதந்திகளை மட்டும் செய்தி உண்மையா? என எவ்வித ஆதாரமும் தேடாமல் ஷேர் செய்வது வியப்பாகத்தான் இருக்கிறது?

கடந்த சில வருடங்களாக, மறைந்த மர்ஹும் இ.எம் நாகூர் ஹனீபாவை பலமுறை இந்த சமுதாயத்தவர்கள் மவ்தாக்கினார்கள். இந்த செய்தி ஊடகங்களில் இரவு பகலாக உலாவந்தது. பிறகுதான் தெரிந்தது இது வதந்தி. எந்த அளவுக்கு அன்னாரின் மரண செய்தியாக வதந்தி பரவியது என்றால், அவர் உண்மையிலேயே மரணித்துவிட்டார். இந்த செய்தி உண்மையா? என்று கேட்கின்ற அளவுக்கு அவர் மவ்தாகுவதற்க முன்பே பலதடவை அவரை மவ்தாக்கியது. இது போன்ற செய்திகள் வரும்போது தீர விசாரிக்கவேண்டும். ஷேர் செய்யவும் என்ற உடன் ஷேர் செய்து வதந்தியைப் பரப்பி பாவிகளாக இனிமேலும் ஆகக்கூடாது என்பதை கவனத்தில் வையுங்கள்.

ஊர்கள் மீது வதந்தியை பரப்புதல்
இவ்வாறே, கடந்த வாரம் சமூக வலைதளங்களில் புகைப்படம் ஒன்றும், வாய்ஸ் மெஸேஜ் ஒன்றும் மிக வேகமாக பரவி வருகிறது. அந்தப் புகைப்படத்தில் ஆண் ஒருவர் முக்காடு அணிந்த பெண்மணி ஒருவருக்கு முத்தம் கொடுப்பது போல காட்சி உள்ளது. அந்த புகைப்படத்தை தொடர்ந்து வரக்கூடிய வாய்ஸ் மெஸேஜில் புகைப்படத்தில் உள்ளவர்களை பற்றி ஒரு சகோதரர் விளக்கம் அளிக்கிறார். புகைப்படத்தில் உள்ள பெண்மணி ஓர் ஊரைச் சார்ந்தவர் என்றும், அவர் முஸ்லிம் சமூகத்தைச் சார்ந்தவர் என்றும், அவரை சகோதர சமுதாயத்தைச் சார்ந்த ஒருவர் இழுத்துச் சென்றுவிட்டதாகவும், அந்தப் புகைப்படத்தையும், வாய்ஸ் மெஸேஜையும் அதிகமாக ஷேர் செய்யுங்கள் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்தச் செய்தியை கேள்விபட்டதிலிருந்து நம் மனது சங்கடமாகவே இருந்தது. இதைப்பற்றி ஊர்க்காரர்களிடம் விசாரித்துப் பார்த்ததில், இப்படியொரு சம்பவம் நடைபெறவில்லை என்றும், இது இட்டுக்கப்பட்ட பொய் என்றும், அந்த ஊரின் மீது அவதூறை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் இது பரப்பப்பட்டு வருவதாகவும் அவர்கள் நமக்கு தெரிவித்தனர். அந்த தெளிவான விளக்கத்திற்க்குப் பின் தான் நம் மனது சற்று நிம்மதி பெருமூச்சு விட்டது. இதனிடையே இந்த விஷயத்தைப் பற்றி பல்வேறு சகோதரர்கள் நேரிலும், இன்பாக்ஸ் வாயிலாகவும் நம்மிடத்திலே இது போன்று உங்களூரில் நடந்ததா? என்று கேள்விகளை கேட்டு வருகின்றனர். இப்படியொரு சம்பவம் நடைபெறவில்லை என்றும், இது பொய் என்றும், இதை யாரும் நம்ப வேண்டாம் என்றும் நாம் அவர்களுக்கு தெரிவித்து வருகின்றோம்.

அந்தப் புகைப்படமும், வாய்ஸ் மெஸேஜில் உள்ள செய்தியும் உண்மையாக இருக்குமேயானால் அது நிச்சயமாக கண்டிக்கப்பட வேண்டியது என்பதில் நமக்கு எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. அதே நேரத்தில் இதை ஷேர் செய்ய வேண்டும் என்று சொல்லுவது நம்மீது நாமே மண்ணை வாரி போட்டுக் கொள்வதற்க்கு சமமாகும். ஒரு குறிப்பிட்ட ஊரின் மீது அவதூறை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் உண்மைக்கு மாறான தகவல்களை மக்கள் மத்தியில் பரப்பிய அந்தச் சகோதரரை நாம் வன்மையாக கண்டிக்கிறோம். இனிமேலாவது உண்மைக்கு மாற்றமான செய்திகளை யாரும் மக்கள் மத்தியில் பரப்பவும் வேண்டாம்; நம்பவும் வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்கிறோம். இறுதியில் அந்த போட்டோ ஒரு நடிகை புர்கா போட்டிருக்க நடிகன் முத்தம் தரும் சினிமா போஸ் காட்சி என்பது நிரூபனமானது. 

திட்டமிட்டு அவதூறு பரப்புவோரின் முகம் கிழிந்தது!
திருப்பூரைச் சார்ந்த ஒருவன் தன் முகநூல் பக்கத்தில் பள்ளி மாணவனை இழுத்துக் கொண்டு ஓடிய ஆசிரியை கோதை லக்ஷ்மி இஸ்லாமியர் என்று ஆதாரம் இல்லாமல் அவதூறு பரப்பி இருக்கிறான். அவன் எடுத்த வாந்தியை அப்படியே நக்கி குடித்து விட்டு அப்படியே தன் முகநூல் பக்கத்திலும் நேதாஜி சுபாஷ் என்பவன் பதிந்து பொய்களையும் அவதூறுகளையும் பரப்பிக் கொண்டு இருக்கிறான் செய்தியின் ஆதாரம் கொடுத்தால் தான் பதிந்த பதிவை நீக்குவதாகவும் கூறி இருக்கிறான். இன்னும் இது போன்று பல பத்திரிக்கைகளிலும் வந்து இருக்கின்றது.

தேவையற்ற சந்தேகமும், அவதூறு பரப்புதலும். மனிதர்களுக்கு மத்தியில் ஒருவரை ஒருவர் வெறுப்பதற்கும், இதமான உறவுஇல்லாமல் போவதற்கும்,  புரிதலில் தெளிவற்று தவறான புரிதல்கள் உருவாகுவதற்கும் காரணமா இருப்பது தேவையற்ற சந்தேகங்களும், அவதூரு பரப்புதலும் தான் என்றால் அதுமிகையில்லை. வாழ்வில் பல சந்தர்ப்பங்கள் நம்முடைய மனதில் அடுத்தவர்களைப் பற்றிய தீய எண்ணங்களை சுமந்து கொள்ளும் அந்த தீய எண்ணங்கள் குரோதமாக மாறி, தான் கொண்ட தவரான எண்ணத்தை அவதூராக பரப்பும் நிலைக்கு கொண்டுவந்து நிறுத்தி விடும். இஸ்லாமிய மார்க்கத்தை ஏற்றுக் கொண்டு, தன்மை முஸ்லிமாக பிரகடனம் செய்து தன் வாழ்வை அழகிய இஸ்லாமிய மார்க்கத்தில் இணைத்துக் கொண்டவர்கள் தேவையற்ற சந்தேகத்தையும், அதன் மூலம் உருவெடுக்கும் அவதூறு பரப்புதலையும் கண்டிப்பாக தவிர்ந்து கொள்ள வேண்டும். ஷைத்தான் மனிதனை பாவத்தின் பக்கம் கொண்டு செல்ல வேண்டும் என்பதற்குக் கையாலும் மிக எளிய முறை தீய எண்ணங்களை உருவாக்குவது என்று புரிந்து கொள்ள முடியும். அல்லாஹ் தவிர்ந்து கொள்ளும்படி மிகவும் கண்டித்துக் கூறும் பாவங்களில் மிக முக்கிய பாவமாக இந்த பாவங்கள் அமைந்திருக்கின்றன.

யூகங்களை நம்புவதை கண்டிக்கும் இஸ்லாம்
ஒரு செய்தியை தீர விசாரித்து நம்ப வேண்டும். எதையும் விசாரிக்காமல் நம்பக்கூடாது. பரப்பக்கூடாது. பொய்யான செய்திகள் தீமைக்கு வழிகோலும். அதனால் அப்பாவி மனிதர்கள் பாதிக்கப்பட்டுவர். வதந்தியை பரப்புவதை இஸ்லாம் கண்டிக்கிறது.

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اجْتَنِبُوا كَثِيرًا مِنَ الظَّنِّ إِنَّ بَعْضَ الظَّنِّ إِثْمٌ وَلَا تَجَسَّسُوا وَلَا يَغْتَبْ بَعْضُكُمْ بَعْضًا أَيُحِبُّ أَحَدُكُمْ أَنْ يَأْكُلَ لَحْمَ أَخِيهِ مَيْتًا فَكَرِهْتُمُوهُ وَاتَّقُوا اللَّهَ إِنَّ اللَّهَ تَوَّابٌ رَحِيمٌ (القرآن 49:12)   
நம்பிக்கை கொண்டோரே! ஊகங்களில் அதிகமானதை விட்டு விலகிக் கொள்ளுங்கள்! சில ஊகங்கள் பாவமாகும். துருவித் துருவி ஆராயாதீர்கள்! உங்களில் ஒருவர் மற்றவரைப் புறம் பேசாதீர்கள்! உங்களில் எவரேனும் இறந்த தமது சகோதரனின் மாமிசத்தைச் சாப்பிட விரும்புவாரா? அதை வெறுப்பீர்கள். அல்லாஹ்வை அஞ்சுங்கள்! அல்லாஹ் மன்னிப்பை ஏற்பவன்; நிகரற்ற அன்புடையோன். (அல்குர்ஆன் 49:12)

புண்படுத்தாதீர்! குறைகூறாதீர்!! (துருவித் துருவி) ஆராயாதீர்!!!
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வின் அடியார்களைப் புண்படுத்தாதீர், அவர்களைக் குறைகூறாதீர், அவர்களின் குறைகளை (துருவித் துருவி) ஆராயாதீர். யார் குறையை (துருவித் துருவி) ஆராய்கிறாரோ அவரது குறையை (ஒன்றுவிடாமல்) அல்லாஹ் ஆராய்வான். அவன் வீட்டுக்குள் (ஒளிந்து) இருந்தபோதும் அவனைக் கேவலப்படுத்திவிடுவான். (முஸ்னது அஹ்மது)

எஸ்.எம்.எஸ். அல்லது இ.மெயிலில் வந்த இந்தச் செய்தி, அல்லாஹ் பட்டியலிட்டுக் காட்டும், 1. ஊகம், 2. துருவித் துருவி ஆராய்தல், 3. புறம் ஆகிய மூன்று அடுக்கடுக்கான பாவங்களில் கொண்டு போய் சேர்த்து விடுகின்றது.

ஒரு செய்தி வந்தவுடன் முதலில் ஏற்படுவது ஊகம் தான். இப்படி இருக்குமோ? அப்படி இருக்குமோ? என்று கற்பனை செய்து, முடிவில் புறத்தில் விழுந்து விடுகின்றார். பொதுவாக, தன்னல்லாதவர் விவகாரம் என்றால் ஒரு மனிதனுக்கு மிக மிகச் சுவையான ஒன்றாகும். அது தேனை விடத் தித்திப்பாகி விடுகின்றது. தேனாவது கொஞ்ச நேரத்தில் திகட்டி விடும். ஆனால் இது திகட்டாது. அதனால் இதில் மனிதன் புகுந்து விளையாட ஆரம்பிக்கின்றான். இதன் காரணமாகவே அல்லாஹ் இதை இறந்தவரின் பிணத்தைச் சாப்பிடுவதுடன் ஒப்பிடுகின்றான். அதாவது வதந்தியைப் பரப்பியவர் இறந்து போன தன் சகோதரனின் பிணத்தைச் சாப்பிட்டவர் போலாகி விடுகின்றார். இது வதந்தியை நம்புவதால் ஏற்படும் முதல் தீய விளைவாகும்.

செய்தியை தெளிவு படுத்திக்கொள்ளுங்கள்
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِن جَاءكُمْ فَاسِقٌ بِنَبَأ فَتَبَيَّنُوا أَن تُصِيبُوا قَوْمًا بِجَهَالَةٍ فَتُصْبِحُوا عَلَى مَا فَعَلْتُمْ نَادِمِين. (القرآن 49:6)
நம்பிக்கை கொண்டோரே! குற்றம் புரிபவன் உங்களிடம் ஒரு செய்தியைக் கொண்டு வந்தால் ஒரு சமுதாயத்திற்கு அறியாமையால் நீங்கள் தீங்கு இழைக்காதிருப்பதற்காக அதைத் தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள்! (இல்லையேல்) நீங்கள் செய்ததற்காகக் கவலைப்படுவீர்கள். (திருக்குர்ஆன் 49:6)

இந்த வசனம் இறங்கியதன் பின்னணி
ﻗﻴﻞ: ﺇﻥ ﻫﺬﻩ اﻵﻳﺔ ﻧﺰﻟﺖ ﻓﻲ اﻟﻮﻟﻴﺪ ﺑﻦ ﻋﻘﺒﺔ ﺑﻦ ﺃﺑﻲ ﻣﻌﻴﻂ. ﻭﺳﺒﺐ ﺫﻟﻚ ﻣﺎ ﺭﻭاﻩ ﺳﻌﻴﺪ ﻋﻦ ﻗﺘﺎﺩﺓ ﺃﻥ اﻟﻨﺒﻲ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﺑﻌﺚ اﻟﻮﻟﻴﺪ ﺑﻦ ﻋﻘﺒﺔ ﻣﺼﺪﻗﺎ»ﺇﻟﻰ ﺑﻨﻲ اﻟﻤﺼﻄﻠﻖ، ﻓﻠﻤﺎ ﺃﺑﺼﺮﻭﻩ ﺃﻗﺒﻠﻮا ﻧﺤﻮﻩ ﻓﻬﺎﺑﻬﻢ- ﻓﻲ ﺭﻭاﻳﺔ: ﻹﺣﻨﺔ ﻛﺎﻧﺖ ﺑﻴﻨﻪ ﻭﺑﻴﻨﻬﻢ-، ﻓﺮﺟﻊ ﺇﻟﻰ اﻟﻨﺒﻲ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﻓﺄﺧﺒﺮﻩ ﺃﻧﻬﻢ ﻗﺪ اﺭﺗﺪﻭا ﻋﻦ اﻹﺳﻼﻡ. ﻓﺒﻌﺚ ﻧﺒﻲ اﻟﻠﻪ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﺧﺎﻟﺪ ﺑﻦ اﻟﻮﻟﻴﺪ ﻭﺃﻣﺮﻩ ﺃﻥ ﻳﺘﺜﺒﺖ ﻭﻻ ﻳﻌﺠﻞ، ﻓﺎﻧﻄﻠﻖ ﺧﺎﻟﺪ ﺣﺘﻰ ﺃﺗﺎﻫﻢ ﻟﻴﻼ، ﻓﺒﻌﺚ ﻋﻴﻮﻧﻪ ﻓﻠﻤﺎ ﺟﺎءﻭا ﺃﺧﺒﺮﻭا ﺧﺎﻟﺪا ﺃﻧﻬﻢ ﻣﺘﻤﺴﻜﻮﻥ ﺑﺎﻹﺳﻼﻡ، ﻭﺳﻤﻌﻮا ﺃﺫاﻧﻬﻢ ﻭﺻﻼﺗﻬﻢ، ﻓﻠﻤﺎ ﺃﺻﺒﺤﻮا ﺃﺗﺎﻫﻢ ﺧﺎﻟﺪ ﻭﺭﺃﻯ ﺻﺤﺔ ﻣﺎ ﺫﻛﺮﻭﻩ، ﻓﻌﺎﺩ ﺇﻟﻰ ﻧﺒﻲ اﻟﻠﻪ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﻓﺄﺧﺒﺮﻩ، ﻓﻨﺰﻟﺖ ﻫﺬﻩ اﻵﻳﺔ، ﻓﻜﺎﻥ ﻳﻘﻮﻝ ﻧﺒﻲ اﻟﻠﻪ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ اﻟﺘﺄﻧﻲ ﻣﻦ اﻟﻠﻪ ﻭاﻟﻌﺠﻠﺔ ﻣﻦ اﻟﺸﻴﻄﺎﻥ. (تفسير ابن كثير)
வலீது பின் உக்பா (ரளி) என்பவரை நபி (ஸல்) அவர்கள் ஜகாத்தை வசூல் செய்வதற்காக பனூ முஸ்தலக் கோத்திரத்தாரிடம் அனுப்பினார்கள். பனூ முஸ்தலக் கோத்திரத்தாருக்கும் இவருக்கும் மத்தியில் இஸ்லாத்திற்கு முன்னுள்ள கொலை சம்பந்தமான ஒரு பகை இருந்தது. இஸ்லாம் மார்க்கத்தை தழுவிய பிறகு அந்தப் பகை நீங்கிவிட்டது. ஆயினும், இவருக்கு மனதுக்குள் பீதியோ பகையோ இருந்திருக்கலாம். ஆனால், அந்தக் கோத்திரத்தார் இதனை ஞாபகத்தில் வைக்காமல் மறந்துவிட்டனர். ஜகாத் பணத்தை வசூல் செய்ய வருகிறார் என்பதை அவர்கள் அறிந்து, வாகனங்களுடனும் அவர்களை வரவேற்க கூட்டமாக வந்தார்கள்.

தம்மைக் கொல்லத்தான் வருகிறார்கள் என இவர் எண்ணி, பீதி அடைந்து திரும்பி ஓடி வந்துவிட்டார். குற்றமுள்ள நெஞ்சு அல்லவா? என்றாலும் நபி(ஸல்) அவர்களிடம் திரும்பி வந்து உண்மையைக் கூறாமல், அவர்கள் மதம் மாறிவிட்டார்கள்.  ஜகாத்தை கொடுக்க மறுத்துவிட்டார்கள். என்னைக் கொல்லவும் முயற்சித்தார்கள் என்று தகவல் கொடுத்தார். ஆதலில் அவர்களுடன் போரிட வேண்டுமென நாடினார்கள். அச்சமயத்தில் இவ்வாயத் அருளப்பட்டது.

தவிர, நபி (ஸல்) அவர்கள் உடனே போர் தொடுக்காமல், காலிதுப்னுல் வலீது (ரளி) அவர்களிடம் ஒரு படையை ஒப்படைத்து, படைகளுடன் செல்வதை அவர்கள் அறியாவண்ணம் இரவில் செல்லவேண்டும். இஸ்லாமியப் பண்பாடுகள் இருந்தால் ஜகாத்தை வசூல் செய்து வரவேண்டும். அவர்களிடம் இஸ்லாமிய அடையாளம் இல்லாமல் இருந்தால் காஃபிர்களுடன் நடந்து கொள்வதைப் போன்று அவர்களிடமும் நடந்துக்கொள்ள வேண்டும் என உத்தரவிட்டு அனுப்பினார்கள். நபி (ஸல்) அவர்களிது கட்டளைப்படி மக்ரிப் நேரத்தில் சென்றனர். அவர்கள் மக்ரிலும் இஷாவிலும் பாங்கு சொல்வதைச் செவியேற்றனர். இறைவன் கட்டளைக்குக் கீழ்ப்படிந்து நற்காரியங்களில் அவர்கள் முனைந்திருப்பதையும் கண்டனர். ஆகவே, அவர்களிடம் ஜகாத்தை வசூல் செய்து கொண்டு திரும்ப வந்து, நபி (ஸல்) அவர்களிடம் விஷயத்தைக் கூறினார்கள். அச்சந்தர்ப்பத்தில் இவ்வயாத்து அருளப்பட்டது. (தஃப்ஸீருல் ஹமீது)

பொய்யனுக்கு இலக்கணம் என்ன?
حفص بن عاصم رضي الله عنه قال : قال رسول الله صلى الله عليه وسلم: " كفى بالمرء كذبا أن يحدّث بكل ما سـمع " (رواه مسلم)
ஹப்ஸ் பின் ஆஸிம் (ரலி) அறிவிக்கிறார்கள்: கேள்விப்படுவதை எல்லாம் எடுத்துச் சொல்பவன் பொய்யன் என்ற நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் (முஸ்லிம்-6)

நபி (ஸல்) அவர்கள், மக்களிலேயே அழகானவர்களாக, வீரமிக்கவர்களாக இருந்தார்கள். மதீனா நகர மக்கள் ஓர் இரவு (எதிரிகள் படையெடுத்து வருவதாக வதந்தி பரவி) பீதிக்கு உள்ளானார்கள். எனவே, நபி (ஸல்) அவர்கள் சத்தம் வரும் திசையை நோக்கிப் புறப்பட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், அதற்குள் செய்தியைத் தீர விசாரித்து விட்டு அபூ தல்ஹா (ரலி) அவர்களின் சேணம் பூட்டப்படாத குதிரை மீது சவாரி செய்தவர்களாக வந்து கொண்டிருந்தார்கள். அவர்களின் கழுத்தில் வாள் (மாட்டப்பட்டுத்) தொங்கிக் கொண்டிருந்தது. அவர்கள், ‘பயப்படாதீர்கள். பயப்படாதீர்கள்என்று கூறிக் கொண்டு இருந்தார்கள். பிறகு, ‘நாம் இந்தக் குதிரையைத் தங்குதடையின்றி வேகமாக ஓடக் கூடியதாகக் கண்டோம்என்று கூறினார்கள். அல்லது, ‘இந்தக் குதிரை தங்குதடையின்றி வேகமாக ஓடக் கூடியதுஎன்று கூறினார்கள். (புஹாரி : 2908 அனஸ் (ரலி).

முகமது நபி (ஸல்) அவர்கள் இறை நாட்டப்படி மக்கமாநகரத்தை விட்டு மதினா சென்றார். அப்போது அவரையும், அவரை இறைத்தூதர் என்று ஏற்றுக் கொண்டவர்களையும் அழித்தொழித்துவிட வேண்டும் என்ற நோக்கத்துடன் பெரும் படை வந்தது. அவர்களுடன் தற்காப்பு போர்க்களங்கள் பலவற்றை எதிர்கொள்ளக் கூடிய நிலை முகமது நபி (ஸல்) அவர்களுக்கு வந்தது. அப்படி எதிர்கொண்ட போர்க்களங்களில் உஹது போரும் ஒன்று. அந்தப் போரில் ஆயிரக்கணக்கான போர் வீரர்கள் வந்தார்கள். அவர்களை இறைவனின் உற்ற துணையுடன் குறைவான வீரர்களோடு சந்தித்தார்கள் முகமது நபி (ஸல்) அவர்கள். போரில் முகமது நபி (ஸல்) அவர்களின் வெற்றி தவிர்க்க முடியாதது என்று நினைத்த எதிரிகள் ஒரு வதந்தியை பரப்பி விட்டார்கள். போர்க்களத்தில் முகம்மது நபி (ஸல்) அவர்கள் மரணித்துவிட்டார்கள் என்ற வதந்திதான் அது. 

அச்செய்தியைக் கேட்டவுடன், வீரத்துடன் போரிட்டுக் கொண்டிருந்த இஸ்லாமிய தோழர்கள் மத்தியில் கவலையும், வேதனையும் தோன்றியது. போரில் முழுக் கவனமும் செலுத்த முடியாதவர்களாக தடுமாறினார்கள். அந்தச் சந்தர்ப்பத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட எதிரிகள் இஸ்லாமிய போர் வீரர்களுக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தினார்கள். இதையறிந்த முகம்மது நபி(ஸல்) அவர்கள் அருகில் நின்று போரிட்டுக் கொண்டிருந்த தோழர்கள் சிலர் குதிரையில் ஏறி போர்க்களத்தின் நடுப்பகுதிக்கு வந்தனர். "வதந்தியை நம்ப வேண்டாம். அவர்கள் செய்யும் சூழ்ச்சி இது. நம் உயிரினும் மேலான முகம்மது நபி(ஸல்) நலமுடன் இருக்கிறார்கள். போர் முனையில் தோழர்களுடன் தீரத்துடன் போரிட்டுக் கொண்டிருக்கிறார்கள்' என்று அறிவிப்பு செய்து கொண்டே இருந்தார்கள். ஆனால் அதற்குள் போரின் போக்கையே அந்த வதந்தி மாற்றிவிட்டது.

தோழர்கள் பலர் வீர மரணம் அடைந்தனர். பெரும் பொருள் சேதம் ஏற்பட்டது. போர்க்களம் வெற்றியும், தோல்வியும் இல்லாத நிலையையே ஏற்படுத்தியது. இதற்கிடையில் இந்த வதந்தி மதினா நகருக்கு பரவியவுடன் மக்கள் என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்து நின்றார்கள். ஒரு பெண்மணி மிக வேகமாக போர்க்களம் நோக்கி ஓடி வந்தார்கள். போர் வாசலை அடைந்தவுடன் அந்தப் பெண்மணியிடம் அங்கிருந்தவர்கள் "உங்கள் மகன் இந்தப் போரில் வீர மரணம் அடைந்து விட்டான்' என்று சொன்னார்கள். அதை காதில் வாங்கிக் கொண்ட அப்பெண் "முகமது நபி(ஸல்) அவர்கள் எப்படி இருக்கிறார்கள்?'' என்று கேட்டபடியே வேகமாக போர்க்களத்தின் நடுப்பகுதிக்கு சென்றார்கள். அங்கு அவரிடம் "இப்போரில் உங்களின் சகோதரர் மறைந்து விட்டார்' என்று சொன்னார்கள். அச்செய்தியையும் காதில் வாங்கிக் கொண்ட பெண்மணி அப்போதும் "முகம்மது நபி(ஸல்) எப்படி இருக்கிறார்கள்? அவர்களிடம் என்னை அழைத்துச் செல்லுங்கள் அவர்களை என் கண்ணால் பார்த்தால்தான் நான் நிம்மதி அடைவேன்' என்றார்கள். பிறகு நபி அவர்களைப் பார்த்த பிறகுதான் அந்தப் பெண்மணி சாந்தம் அடைந்தார்கள். 

தான் பெற்ற மகன், உடன் பிறந்த சகோதரர் இறந்தது கூட அப்பெண்மணிக்கு பெரிதாகத் தெரியவில்லை. நபிகள் நாயகத்தின் நலம்தான் அவர்களுக்கு உயர்வாக தென்பட்டது. இவ்வளவு உயர்வாக முகமது நபி (ஸல்) அவர்கள் நேசிக்கப்படுவதற்கு அவர்களின் தூய்மையான வாழ்க்கை முறை, கருணை மிகுந்த செயல்கள், மனித நேயம் போன்றவையன்றோ காரணம்.

அல்லாஹ் நேசிப்பதும் வெறுப்பதும்
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ''நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்கு மூன்று குணங்களை விரும்புகிறான், மூன்று குணங்களை வெறுக்கிறான். உங்களிடம் அவன் விரும்பும் மூன்று குணங்கள்:

1. அவனையே நீங்கள் வணங்க வேண்டும் 2. அவனுக்கு எதையும் இணைவைக்கக் கூடாது 3. நீங்கள் அல்லாஹ்வின் கயிற்றைப் பற்றிப் பிடித்துக்கொள்ள வேண்டும், நீங்கள் பிரிந்துவிடக் கூடாது.
அல்லாஹ் உங்களிடம் வெறுக்கும் மூன்று குணங்கள்: 1. 'அவர் சொன்னார். (இவ்வாறு) சொல்லப்பட்டது' என்பது போன்ற வதந்திகளில் ஈடுபடுவது 2. அதிகமாக கேள்விகள் கேட்பது 3. செல்வத்தை வீணடிப்பது.'' (ஸஹீஹ் முஸ்லிம்)

வதந்திகளை பரப்புவோருக்கு வதைக்கும் வேதனை
إِنَّ الَّذِينَ يُحِبُّونَ أَنْ تَشِيعَ الْفَاحِشَةُ فِي الَّذِينَ آمَنُوا لَهُمْ عَذَابٌ أَلِيمٌ فِي الدُّنْيَا وَالْآخِرَةِ وَاللَّهُ يَعْلَمُ وَأَنْتُمْ لَا تَعْلَمُونَ (القرآن 24:19)   
விசுவாசங்கொண்டோர்கிடையில் இவ்வாறான மானக்கேடான விஷயம் பரவ வேண்டும் என விரும்பிகிறார்களோ நிச்சயமாக அத்தகையோர்களுக்கு இம்மை, மறுமையில் இழிவான வேதனை அவர்களுக்கு உண்டு. (அல்குர்ஆன் 24:19)

வீண் வதந்திகளை பரப்பவும் வேண்டாம்! நம்பவும் வேண்டாம்!!
வதந்தியை நம்புபவர், அதைப் பரப்புபவர் பற்றி நபி (ஸல்) அவர்களின் தெளிவான தீர்ப்பைப் பாருங்கள். "பிறர் மீது கெட்ட எண்ணம் கொள்வது குறித்தும் உங்களை நான் எச்சரிக்கின்றேன். ஏனெனில் கெட்ட எண்ணம் தான் பேச்சுக்களிலேயே மிகவும் பொய்யானதாகும். (மற்றவர்களின் குறைகளை) துருவித் துருவி ஆராயாதீர்கள். ஒட்டுக் கேட்காதீர்கள். ஒருவரோடொருவர் பகைத்துக் கொள்ளாதீர்கள். சகோதரர்களாய் இருங்கள்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அபூஹுரைரா (ரலி) நூல்: புகாரி 5143)

 இது வதந்தியினால் ஏற்படும் இரண்டாவது தீய விளைவாகும். எனவே ஊகத்தின் அடிப்படையில் நாம் அல்லாஹ்வின் முன்னிலையில் பொய்யனாகலாமா? இதற்காகவா நாம் இந்தக் கொள்கையை ஏற்றோம்?

எல்லாம் வல்ல அல்லாஹ் தனக்குத் தானே ஒரு விதியை ஏற்படுத்தி இருக்கின்றான். அதன்படி அவனுடைய அடியார்கள் அவனுக்கு எவ்வளவு பெரிய பாவத்தைச் செய்திருந்தாலும் அந்தப் பாவத்தை அவன் நினைத்தால் மன்னிக்கத் தயாராக இருக்கின்றான். ஆனால் ஓர் அடியான் மற்றோர் அடியானுக்குத் தீங்கிழைத்தால் சம்பந்தப்பட்ட அந்த அடியான் மன்னிக்காத வரை அல்லாஹ் மன்னிப்பதில்லை.
"அல்லாஹ்வின் பாதையில் உயிர் தியாகம் செய்த ஷஹீதுக்கு கடனை தவிர எல்லாப் பாவங்களும் மன்னிக்கப்பட்டுவிடுகின்றன'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) நூல்: முஸ்லிம் 3498)

அல்லாஹ்வின் பாதையில் உயிர் தியாகம் செய்த ஷஹீதுக்குக்கூட கடன் இருந்தால் அதை அல்லாஹ் மன்னிப்பதில்லை. ஏனெனில் அது அவர் மற்றொரு அடியாருக்குச் செய்த பாவம் என்பதால்தான். ஷஹீதுக்கே இந்த நிலை என்றால், வதந்தியைப் பரப்பி அதன் மூலம் சாபத்தைப் பெறுபவர்களின் நிலை என்ன என்பதைச் சிந்திக்க வேண்டும். இது வதந்தியால் ஏற்படும் மூன்றாவது விளைவாகும்.
மறுமையில் பணம், பந்தம், பாசம் எதுவும் இருக்காது. அந்த நாளில் உதவுகின்ற மதிப்பு மிக்க ஒரேயொரு செலவாணி அமல்கள் தான். அந்த அமல்களை அந்நாளில் யாருமே இழக்க முன்வர மாட்டார்கள். அமல்களை இழப்பவர் ஒருவர் உண்டெனில் அவர் அடுத்தவரின் விவகாரங்களில் தவறான முறையில் தலையிட்டவர் தான்.

திவாலான மனிதன் யார்?
"திவாலாகிப் போனவர் யார் என்று நீங்கள் அறிந்திருக் கின்றீர்களா?'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கேட்ட போது, "யாரிடத்தில் பணமும், பண்ட பாத்திரங்களும் இல்லாமல் இருக்கின்றதோ அவர் தான்'' என்று நபித்தோழர்கள் பதிலளித்தனர். அப்போது நபி (ஸல்) அவர்கள், "எனது சமுதாயத்திலிருந்து திவாலாகிப் போனவர் மறுமை நாளில் தொழுகை, நோன்பு, ஜகாத் ஆகியவற்றைக் கொண்டு வருவார். மேலும் அவர் இன்னொருவரைத் திட்டியிருப்பார். அவர் மீது அவதூறு சொல்லியிருப்பார். அவரது பொருளைச் சாப்பிட்டிருப்பார். அவரது ரத்தத்தை ஓட்டியிருப்பார். அவரை அடித்திருப்பார். எனவே (பாதிக்கப்பட்ட) அவருக்கு இவரது நன்மைகளிலிருந்து அல்லாஹ் வழங்கி விடுவான். இன்னாருக்கு அவரது நன்மைகளை வழங்கி விடுவான். அவர் மீது உள்ள வழக்கு தீர்க்கப்படும் முன் அவரது நன்மைகள் தீர்ந்து போய் விட்டால் (பாதிக்கப்பட்ட) அவர்களின் பாவங்கள் எடுக்கப்பட்டு இவர் மீது எறியப்பட்டுப் பின்னர் நரகத்தில் தூக்கி எறியப்படுவார்'' என்று சொன்னார்கள். (அபூஹுரைரா (ரலி) நூல்: முஸ்லிம் 4678)

குறை சொல்லிப் புறம் பேசித் திரியும் ஒவ்வொருவனுக்கும் கேடுதான். (அல்குர்ஆன் 104-1)
இதோ அவதூறு பரப்புவது பற்றி அல்லாஹ்வின் எச்சரிக்கைகள்
ஈமான் கொண்டவர்களே! மூஸாவை(ப் பற்றி அவதூறு கூறி) நோவினை செய்தவர்களைப் போன்று நீங்கள் ஆகிவிடாதீர்கள்; ஆனால் அவர்கள் கூறியதை விட்டு அல்லாஹ் அவரைப் பரிசுத்தமானவராக்கி விட்டான்; மேலும் அவர் அல்லாஹ்விடத்தில் கண்ணிய மிக்கவராகவே இருந்தார். (அல்குர்ஆன் 33-69)

அவதூறு பரப்புபவர்களுக்கு அல்லாஹ்வின் சாபம்
இன்னும் அவர்களின் நிராகரிப்பின் காரணமாகவும், மர்யமின் மீதுமாபெரும் அவதூறு கூறியதின் காரணமாகவும் (அவர்கள் சபிக்கப்பட்டனர்). (அல்குர்ஆன் 4-156)

உலமாக்கள் மீது வசைபாடி எதனை சாதித்தீர்கள்..?
கண்ணியமிக்க உலமாக்கள் மீது வீண் பலி, அவதூறுகளை சுமத்தி வசைபாடி ஏதோ சாதித்துவிட்டோம் என இறுமாப்போடு இருக்கும் வாலிபர்களே...! சிந்தியுங்கள்...!! வாழ்கையில் சுமார் பாதிக்கு மேல் இஸ்லாமிய சட்ட அறிவை தேடுவதிலும் கற்பதிலும் செலவுசெய்த மார்க்க மேதைகள், இஸ்லாமிய சட்ட வல்லுனர்கள் மற்றும் மார்க்க அறிஞர்கள் போன்றவர்களுக்கு வழங்கவேண்டிய கண்ணியம் மரியாதை என்பவற்றை ஒதுக்கிவிட்டு ஒப்பீட்டு ரீதியில் கால் சுண்டு அறிவு கூட இல்லாத சிலர் முகநூல்களிளும் இணையங்களிளும் தாம் பிரபல்யம் அடையவேண்டும் என்பதற்காக கண்ணியமிக்க உலமாக்கள் மீது பொய், வீண்பழி, அவதூறு போன்றவற்றை சுமத்தி தகாத வார்த்தைகளை பிரயோகித்து வசைபாடி கட்டுரைகளும் பின்னூட்டங்களும் எழுதி முகநூல்களிளும் இணையங்களிளும் பதிவேற்றி ஏதோ சாதித்துவிட்டோம் என இறுமாப்போடு இருக்கும் வாலிபர்களே நீங்கள் அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள்.

அவ்வாறு முகநூல்களில் அவதூறை வாரிவீசும் அப்பாவி வாலிபர்கள் ஒருகணம் அல்லாஹ்வை பயந்துகொள்ளட்டும். புத்திஜீவிகள், அத்துறையில் பாண்டித்தியம் பெற்ற அறிஞர்கள் மார்க்க மேதைகள் மற்றும் சட்ட வல்லுனர்கள் போன்ற பல குழுக்கள், இணைந்து கலந்து ஆலோசித்து தீர விசாரித்து மசூரா எனும் அடிப்படையில் எடுக்கப்பட்ட ஏகோபித்த ஒருமுடிவை தனிப்பட்ட முறையில் குறிப்பிட்ட ஒருவரை நோக்கி அவதூறுகளை வாரிவீசி வசைபாடி பல்வேறு வகையான விமர்சனங்கள் செய்வது மட்டுமல்லாமல் இணையங்களில் குறிப்பிட்ட நபரின் புகைப்படங்களை பயன்படுத்தி எதிராக கட்டுரைகளும் ஒழுங்கற்ற முறையில் பின்னூட்டங்களும் எழுதுவதும் எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல. நமது மார்க்கம் நமக்கு கற்றுத்தந்த வழிமுறையும் அல்ல.
தான்தோன்றித்தனமாக குறிப்பிட்ட தனி நபரை தூற்றி வசைபாடிய ஒவ்வொருவரும் தன் கூலியை பெற்றே ஆகவேண்டும். மேலும் குறிப்பிட்ட ஒரு மனிதனின் மனதை அநியாயமாகப் புண்படுத்தி தங்களுடைய ஆத்திரத்தை தாங்களே வீணாக்க கொள்ள வேண்டாம். இது குறித்து ஒவ்வொருவரும் அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளட்டும். அவ்வாறு உண்மைக்கு புறம்பாக அவதூறு பரப்புவோர்களுக்கு எதிராக தண்டிக்க இறைவன் போதுமானவன் என்பதை ஒருகணம் சிந்தித்து தான் செய்த தவறை உணர்ந்து அல்லாஹ்விடம் கையேந்தி அழுது புலம்பி மன்றாடி பாவ மன்னிப்பு பெறவேண்டும்.

قال عمر رضي الله عنه : إياكم والفتن فإن وقع اللسان فيها مثل وقع السيف.
உமர் (ரளி)  அவர்கள் கூறினார்கள்: குழப்பத்தை விட்டும் உங்களை  எச்சரிக்கிறேன். குழப்பத்தில் உங்கள்  நாவை ஈடுபடுத்துவது வாளை (பிறர்மீது அனீதமாக) வீசவது போலாகும்.


لما هاجر الصحابة من مكة إلى الحبشة وكانوا في أمان ، أُشيع أن كفار قريش في مكة أسلموا فخرج بعض الصحابة من الحبشة وتكبدوا عناء الطريق حتى وصلوا إلى مكة ووجدوا الخبر غير صحيح ولاقوا من صناديد قريش التعذيب . وكل ذلك بسبب الإِشاعة .
மக்காவிலிருந்து அபிஸீனியா(எத்தியோப்பியா)விற்கு ஹிஜ்ரத் செய்த முஸ்லிம்கள் நிம்மதியாக இருந்தனர். மக்கா குரைஷிகள் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டுவிட்டனர் என்று வதந்தியை பரப்பினர். அதனால் அபினிஸீ(எத்தியோப்பி)யாவிலிருந்து சில நபித்தோழர்கள் நம்பி மக்காவிற்கு திரும்பிவிட்டனர். மக்கா வரும் வழியிலேதான் (அந்த செய்தி வதந்தி) என்று அறிந்துக்கொண்டனர். அதனால் அவர்களிள் பல துன்பங்களை அனுபவித்தனர். இது வந்தியினால் ஏற்பட்ட காரணமே.

கேட்பவற்றை விசாரிக்காமல் எத்தி வைப்பது பொய்யனாக்கி விடும்
وحَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُعَاذٍ الْعَنْبَرِيُّ حَدَّثَنَا أَبِي ح و حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ قَالَا حَدَّثَنَا شُعْبَةُ عَنْ خُبَيْبِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ عَنْ حَفْصِ بْنِ عَاصِمٍ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَفَى بِالْمَرْءِ كَذِبًاأَنْ يُحَدِّثَ بِكُلِّ مَا سَمِعَ
وحَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ حَدَّثَنَا عَلِيُّ بْنُ حَفْصٍ حَدَّثَنَا شُعْبَةُ عَنْ خُبَيْبِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ عَنْ حَفْصِ بْنِ عَاصِمٍ عَنْ أَبِي هُرَيْرَةَ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِمِثْلِ 
ذَلِكَ. (رواه مسلم)

விசாரிக்காமல் பரப்பி விடுபவன் மக்கள் தலைவராக இருக்க தகுதியற்றவன்
: حدثنا يحيى بن معين ، فذكره في حكاية ذكرها. وقد روينا عن الأوزاعي أنه قال : كنا نسمع الحديث فنعرضه على أصحابنا كما يعرض الدرهم الزيف ، فما عرفوا منه أخذنا ، وما أنكروا تركنا . قال الشيخ أحمد : وفي مثل هذا والله أعلم ورد عن حفص بن عاصم ، عن أبي هريرة قال : قال رسول الله صلى الله عليه وسلم : «كفى بالمرء كذبا – وفي رواية أخرى إثما – أن يحدث بكل ما سمع » وروينا أيضا عن عمر وعبد الله بن مسعود من قولهما ، وقال مالك بن أنس : ليس يسلم رجل يحدث بكل ما سمع ، ولا يكون إماما أبدا وهو يحدث بكل ما سمع قال الشيخ أحمد : وفي هذا ما دل على أنه ينبغي لصاحب الحديث أن يمسك عن رواية المناكير ، ويقتصر على رواية المعروف ، ويتوقى فيها ويجتهد حتى تكون روايته على الإثبات والصحة ، 
وبالله التوفيق. (رواه البيهقي في معرفة السنن والآثار)

பொய்யான செய்தியை மனித உருவத்தில் ஷைத்தானும் பரப்புவதுண்டு.
وحَدَّثَنِي أَبُو سَعِيدٍ الْأَشَجُّ حَدَّثَنَا وَكِيعٌ حَدَّثَنَا الْأَعْمَشُ عَنْ الْمُسَيَّبِ بْنِ رَافِعٍ عَنْ عَامِرِ بْنِ عَبَدَةَ قَالَ قَالَ عَبْدُ اللَّهِ إِنَّ الشَّيْطَانَ لِيَتَمَثَّلُ فِي صُورَةِ الرَّجُلِ فَيَأْتِي الْقَوْمَ فَيُحَدِّثُهُمْ بِالْحَدِيثِ مِنْ الْكَذِبِ فَيَتَفَرَّقُونَ فَيَقُولُ الرَّجُلُ مِنْهُمْ سَمِعْتُ رَجُلًا أَعْرِفُ وَجْهَهُ وَلَا أَدْرِي مَا اسْمُهُ يُحَدِّثُ. (رواه مسلم في مقدمته)
அப்துல்லாஹ் (ரளி) கூறினார்கள்: ஷைத்தான் மனித உருவத்தில் ஒரு சமூகத்தாரிடம் வந்து பொய்யான செய்திகளை கூறிவான். அதனால் அவர்கள் பிறிந்துவிடுவார்கள். அவர்களில் ஒருவர் இந்த செய்தியை நான் ஒருவனிடமிருந்து கேட்டேன். அவனுடைய முகம் மட்டும் எனக்கு ஞாபகம் இருக்கிறது, அவன் பெயர் எனக்கு தெறியாது என்று கூறுவார். (முஸ்லிம்)

நபியவர்கள் கொல்லப்பட்ட வதந்தி - அதன் விளைவு!
في غزوة أحد لما قتل مصعب بن عمير أُشيع أنه الرسول صلى الله عليه وسلم، قُتل رسول الله فانكفأ جيش الإِسلام بسبب الإِشاعة ، فبعضهم هرب إلى المدينة وبعضهم ترك القتال .
உஹதுப் போரில் முஸஅப் பின் உமைர் (ரளி) கொல்லப்பட்டபோது, நபி (ஸல்) அவர்கள் கொல்லப்பட்டார்கள் என்று எதிரிகள் வதந்தியைப் பரப்பினர். (முஸ்அப் பின் உமைர் (ரளி) தோற்றத்தில் நபி (ஸல்) அவர்களை போன்று இருந்தார்கள்) இந்த வதந்தியால் இஸ்லாமியப்படை உறுதி குலைந்தது. அவர்களில் சிலர் மதீனா திரும்பிவிட்டனர். மற்றும் சிலர் போரை நிறுத்திவிட்டனர்.

إشاعة حادثة الإِفك التي اتهمت فيها عائشة البريئة الطاهرة بالفاحشة وما حصل لرسول الله صلى الله عليه وسلم والمسلمين معه من البلاء، وكل ذلك بسبب الإِشاعة .
பரிசுத்தமான நமது முஃமீன்களின் தாயாகியகிய ஆயிஷா (ரளி) அவர்களின் மீது அவதூறு பரப்பியதும்  நபியவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் ஏற்பட்ட சோதனை என்றே கூறலாம். இந்த அவதூறு பரப்பப்பட்டதிற்கும் வதந்தியே காரணம் ஆகும்.

எனவே, செல்போன், இணையதளம் போன்ற அறிவியல் சாதனங்களை நற்காரியங்களுக்கு பயன்படுத்த வேண்டும். வீண் வதந்திகளுக்கு பயன்படுத்தக்கூடாது. எந்த ஒரு செய்தி வந்தாலும் அதை தீர விசாரித்த பிறகே பிறருக்கு எத்திவைக்கின்ற நல்ல பழக்கத்தை இப்போதிலிருந்தே நாம் கடைபிடித்து சமூகத்தின் மான மறியாதையை பாதுகாக்க முயற்சிப்போம். வதந்திகளை பரப்புவதை கைவிடுவோம். வதந்தி என்றால் அது வாந்தி என்பதை நினைவில் கொள்வோம். அத்தகைய நல்லவர்களாக வாழ வல்ல ரப்புல் ஆலமீன் நம் அனைவருக்கும் நல்லருள் புறிவானாக! ஆமீன் யாரப்பல் ஆலமீன்!


தகவல் வழங்கியோர்: மவ்லவி, நஸீர் மிஸ்பாஹி, முஃப்தி முஹம்மது தாஜுத்தீன் காஸிமி, மவ்லவி முஹம்மது இலியாஸ், மவ்லவி, அப்துல்லாஹ் அன்வரி, மவ்லவி, ஷேக் ஆதம் தாவூதி, தொகுத்து வழங்கியவர் ஹனீப் ஜமாலி. 

3 comments:

வெரிகுட் மாஷா அல்லாஹ்

அல்ஹம்துலில்லாஹ் நல்ல தகவல் குழப்பமான இந்நேரத்தில்

த.த.ஜ விற்கு தக்க பதிலடி


மாஷா அல்லாஹ்

தகவல் கொடுத்த அனைத்து உலமாக்களுக்கு அல்லாஹ் அவர்களின் என்னங்களை பூர்த்தி செய்வானாக ஆமீன்.........

Post a Comment