10 April 2015

தர்மம் தலை காக்கும்


இன்றைக்கு பலபேர் மரணம் எந்த நிமிடமும் வரும் என்பதை மறந்து தன் வாழ்நாட்களை 90 வயது வரை வாழ்வதற்கு இறைவனிடம் ஒப்பந்தம் செய்திருப்பதைப் போன்று இளமையில் வசதி இருந்தும் தன் செல்வங்களை தேவையில்லாத காரியங்களுக்கும் தீய வழிகளிலும் செலவிடுகின்றனர்.
தன் வேர்வை சிந்தி உழைக்கும் பணத்தை நல்ல வழியில் பயன்னுள்ளதாக உபயோகிக்க வேண்டும் என்பதனை மறந்து விடுகின்றனர்.
தனக்கென்று ஒரு வேலைக் கிடைக்கும்வரை இறைவனிடம் அதற்காக பிரார்த்தனை செய்து அவனிடம் உதவி தேடுகின்றனர். இறைவன் தன் அருட்கொடைகளை அளித்த பின்பு பெரும்பாலானோர் அவனுக்கு நன்றி செலுத்துவதில்லை.
இறைவன் தன் திருமறையில் 'நிச்சயமாக மனிதன் தன் இறைவனுக்கு நன்றி கெட்டவனாக இருக்கிறான்'. (100:6)
ரு கோடீஸ்வரன் ஒருமுறை கப்பலில் பயணம் சென்றானாம். திடீரென புயலடிக்க ஆரம்பித்ததாம் கப்பல் மூழ்கிவிடும் நிலை பிரயாணிகள் எல்லோரும் இறைவனிடம் பிரார்த்திக்க ஆரம்பித்தார்களாம். இந்தக் கோடீஸ்வரன் கொஞ்ச நேரம் சும்மாதான் இருந்தான். ஆனால் புயலின் வேகம் அதிகரித்துக் கொண்டே சென்றதைப் பார்த்து இறந்துவிடுவோமோ என்ற பயம் இவனைத் தொற்றிக் கொண்டது. உடனே அவனும் இறைவா! எங்களைக் காப்பாற்று. காப்பாற்றிக் கரை சேர்த்து விட்டால் என் விலை உயர்ந்த மாளிகையை விற்று அந்தப் பணத்தை எல்லாம் ஏழைகளுக்கு தர்மம் செய்து விடுகிறேன் என்று உரக்க சொன்னான். எல்லார் காதிலும் அது விழுந்தது. சற்று நேரத்தில் புயல் ஓய்ந்தது. எல்லோருக்கும் எல்லையில்லாத மகிழ்ச்சி. இவனுக்கு மட்டும் ரொம்பக் கவலையாகி விட்டதாம். அடடா.. அவசரப் பட்டுவிட்டோமே கொஞ்சம் பொறுத்திருந்தால் எப்படியும் புயல் அமைதியாகி இருக்கும் வீணாக எல்லார் காதிலும் விழும்படியாக நேர்த்தி செய்துவிட்டோமே என்று கண் கலங்கினான். இதற்கும் அவனுடைய வேண்டுதல் பற்றி ஊரே பேசிக்கொண்டது. வேறு வழியின்றி இவனும் தன் மாளிகையை விற்பது என்று முடிவுக்கு வந்தான் ஒரு கோடி ரூபாய் பெறுமானமுள்ள அந்த மாளிகையை விற்க அவன் வித்தியாசமான விளம்பரம் செய்தான் அந்த மாளிகையில் ஒரு பூனையைக் கட்டிவைத்தான் அந்தப் பூனையின் விலை ஒரு கோடி ரூபாய். அந்த மாளிகையின் விலை ஒரு ரூபாய். ஆனால் இரண்டையும் சேர்த்துத்தான் வாங்க வேண்டும். இது நிபந்தனை.
ஏன் இந்த பைத்தியக்காரத்தனம் என்று யாருக்கும் புரியவில்லை. ஆனால் என்ன வாங்குபவர்களைப் பொறுத்தவரை இரண்டும் ஒன்றுதான் மொத்தத்தில் ஒரு கோடியே ஒரு ரூபாய்க்கு ஒரு மாளிகையும் ஒரு பூனையும் கிடைக்கிறது. ஒருவன் அந்த விலை கொடுத்து வாங்கிக் கொண்டான். இந்த கோடீஸ்வரன் என்ன செய்தான் தெரியுமா? பூனையின் விலையான ஒரு கோடி ரூபாயை தன் பாக்கெட்டுக்குள் போட்டுக் கொண்டான். மாளிகையின் விலையான ஒரு ரூபாயை வேண்டுதலின் படி ஏழைகளுக்கு தர்மம் செய்தான்.
ஆக இப்படித்தான் ஆபத்து வருகிறபோது பலர் இறைவனிடம் பல வாக்குறுதிகளை தருகின்றனர். அந்த ஆபத்து அகன்று விட்டால் இறைவனையே ஏமாற்றத் துணிகின்றனர்.
செல்வம் குவிகின்ற போது மனிதனிடம் கஞ்சத்தனம் , கருமித்தனம், வாக்குறுதி மீறல், அலட்சியம் போன்ற அழுக்குகள் மனதில் வந்து விடுகிறது.

அவர்களில் சிலர் 'அல்லாஹ் தன் அருட்கொடையிலிருந்து நமக்குச் செல்வத்தை அளித்தால் மெய்யாகவே நாம் (தாராளமாக தான) தர்மங்கள் செய்து நல்லடியார்களாகவும் ஆகிவிடுவோம் என்று அல்லாஹ்விடம் வாக்குறுதி செய்தார்கள்.

(அவ்வாறே) அவன் அவர்களுக்கு தன் அருட்கொடையிலிருந்து வழங்கிய போது அதில் அவர்கள் உலோபித்தனம் செய்து அவர்கள் புறக்கணித்தவர்களாக பின் வாங்கி விட்டனர். எனவே அவர்கள் அல்லாஹ்விடம் செய்த வாக்குறுதிக்கு மாறு செய்ததாலும் அவர்கள் பொய் சொல்லிக் கொண்டே இருந்ததினாலும் அல்லாஹ் அவர்களுடைய உள்ளங்களில் தன்னைச் சந்திக்கும் (இறுதி ) நாள் வரையில் நயவஞ்சகத்தைப் போட்டுவிட்டான். (9:75-77))
 முடிந்த அளவு சிறிய உதவியானாலும் அதை இறைவழியில் செலவிட்டு நன்றி கூற வேண்டும். தர்மம் செய்வதால் அவர் ஏழ்மைநிலைக்கு ஆளாகமாட்டார் என்று இறைவன் பல வசனங்களில் கூறியுள்ளான்.
அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை அடையவும் தங்கள் ஆத்மாக்களை உறுதியாக்கிக் கொள்ளவும் யார் தங்கள் செல்வங்களைச் செலவு செய்கிறார்களோ அவர்களுக்கு உவமையானது உயரமான (வளமுள்ள) பூமியில் ஒரு தோட்டம் இருக்கிறது. அதன் மேல் பெருமழை பெய்கிறது. அப்பொழுது அதன் விளைச்சல் இரட்டிப்பாகிறது. இன்னும் அதன் மீது அப்படிப் பெருமழை பெய்யாவிட்டாலும் பொடி மழையே அதற்குப் போதுமானது.அல்லாஹ் நீங்கள் செய்வதையெல்லாம் பார்க்கின்றவனாக இருக்கிறான். (2:265)
அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து அல்லாஹ்வின் தூதரே! அதிக நன்மையுள்ள தர்மம் எது எனக் கோட்டார். நீர் ஆரோக்கியமுள்ளவராகவும் பொருள் தேவை உடையவராகவும் வறுமைக்கு பயப்படுபவராகவும் செல்வத்தில் ஆசை உள்ளவராகவும் இருக்கும் நிலையில் தர்மம் செய்வதே நன்மை என்றார்கள். (ஆதாரம்: முஸ்லிம்)

நடுத்தர சம்பாத்தியம் உள்ளவர்கள் தர்மம் செய்தால் அதுவே சிறந்த தர்மம் என்று நபி ஸல் அவர்கள் கூறி இருக்கும் போது செல்வந்தர்கள் இதனை சிந்தித்து பார்க்க வேண்டும்.

قال رسول الله صلى الله عليه وسلم : من تصدق بعدل تمرة من كسب طيب ، ولا يقبل الله إلا الطيب - وإن الله يتقبلها بيمينه ثم يربيها لصاحبه كما يربي أحدكم فلوه حتى تكون مثل الجبل. (بخارى-1410) 

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
யார் முறையான சம்பாத்தியத்தில் ஒரு பேரீச்சம் பழத்தின் மதிப்புக்குத் தர்மம் செய்தாரோ.. அல்லாஹ் பரிசுத்தமானவற்றைத் தவிர வேறெதையும் ஏற்றுக் கொள்வதில்லை - அதை நிச்சயமாக அல்லாஹ் தன்னுடைய வலது கரத்தால் ஏற்று, பிறகு நீங்கள் உங்களின் குதிரைக் குட்டியை வளர்ப்பது போன்று அதன் நன்மையை மலைபோல் உயரும் அளவுக்கு வளர்த்து விடுவான்."
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தர்மம் செய்யுங்கள்! ஏனெனில் உங்களிடையே ஒரு காலம் வரும். அப்போது ஒருவன் தன்னுடைய தர்மப் பொருளை எடுத்துக் கொண்டு அலைவான்; அதைப் பெறுவதற்கு யாரும் இருக்க மாட்டார். அப்போது ஒருவன், நேற்றே இதை நீ கொண்டு வந்திருந்தாலாவது நான் வாங்கியிருப்பேன்; இன்றோ அது எனக்குத் தேவையில்லையே! என்றும் கூறுவான்."

அபூ பக்ர் (ரலி) அவர்களின் தர்மம்

حَدَّثَنَا هَارُونُ بْنُ عَبْدِ اللَّهِ الْبَزَّازُ الْبَغْدَادِيُّ حَدَّثَنَا الْفَضْلُ بْنُ دُكَيْنٍ حَدَّثَنَا هِشَامُ بْنُ سَعْدٍ عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ عَنْ أَبِيهِ قَال سَمِعْتُ عُمَرَ بْنَ الْخَطَّابِ يَقُولُ أَمَرَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ نَتَصَدَّقَ فَوَافَقَ ذَلِكَ عِنْدِي مَالًا فَقُلْتُ الْيَوْمَ أَسْبِقُ أَبَا بَكْرٍ إِنْ سَبَقْتُهُ يَوْمًا قَالَ فَجِئْتُ بِنِصْفِ مَالِي فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا أَبْقَيْتَ لِأَهْلِكَ قُلْتُ مِثْلَهُ وَأَتَى أَبُو بَكْرٍ بِكُلِّ مَا عِنْدَهُ فَقَالَ يَا أَبَا بَكْرٍ مَا أَبْقَيْتَ لِأَهْلِكَ قَالَ أَبْقَيْتُ لَهُمْ اللَّهَ وَرَسُولَهُ قُلْتُ وَاللَّهِ لَا أَسْبِقُهُ إِلَى شَيْءٍ أَبَدًا قَالَ هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ رواه الترمذي3608

நபி (ஸல்) அவர்கள், தர்மம் செய்ய வேண்டும் என்று எங்களுக்கு கட்டளையிட்டார்கள். அந்நேரத்தில் செல்வம் என்னிடம் இருந்தது. இன்றைய தினம் நான் அபூபக்ரை முந்திவிட்டால் அவரை நான் முந்திவிடுவேன் என்று கூறிக்கொண்டேன். நான், என் செல்வத்தில் பாதியை கொண்டு சென்றேன். அப்போது நபிகளார், நீ உன் குடும்பத்தாருக்காக எவ்வளவு வைத்துள்ளீர் என்று கேட்டார்கள். இதைப் போன்றளவு என்று கூறினேன். அபூபக்ர் அவரிடமிருந்த அனைத்தையும் கொண்டு வந்தார். நபிகளார் அவரிடம், நீர் குடும்பத்தாருக்கு எவ்வளவு மீதம் வைத்துள்ளீர் என்று கேட்டார்கள். அல்லாஹ்வையும் அவன் தூதரையும் வைத்துள்ளேன் என்றார்கள். அல்லாஹ்வின் மீது ஆணையாக அவரை ஒரு போதும் எதிலும் முந்த முடியாது என்று கூறினேன்
நூல்கள் : திர்மிதீ (3608), அபூதாவூத் (1429), 

உண்மைதான். நல்ல காரியங்கள் எத்தனை உள்ளதோ அத்தனையிலும் முத்தால் இடத்தைப் பிடித்த அபூபக்கர் (ரலி) அவர்களின் ஆர்வத்தைப் பாருங்களேன்:-

قال رسول الله -صلى الله عليه وسلم- « من أصبح منكم اليوم صائما ». قال أبو بكر رضى الله عنه أنا. قال « فمن تبع منكم اليوم جنازة؟ ». قال أبو بكر رضى الله عنه أنا. قال « فمن أطعم منكم اليوم مسكينا؟ ». قال أبو بكر رضى الله عنه أنا. قال « فمن عاد منكم اليوم مريضا؟ ». قال أبو بكر رضى الله عنه أنا. فقال رسول الله -صلى الله عليه وسلم- « ما اجتمعن فى امرئ إلا دخل الجنة ». (مسلم-2421) 


ரகசிய தர்மம் விளைவித்த மாற்றம்:
இதுபற்றி நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒருவர் நான் தர்மம் செய்யப் போகிறேன் என யாருக்கும் தெரியாத வண்ணம் (இரவில்) தர்மத்துடன் வெளியே வந்து ஒரு திருடனிடம்(தெரியாமல்),கொடுத்துவிட்டார். காலையில் மக்கள், இன்றிரவு திருடனுக்குத் தர்மம் வழங்கப்பட்டுள்ளது எனப் பேசிக் கொண்டனர். (இதைக் கேட்ட) அவர், அல்லாஹ்வே! உனக்கே சகல புகழும். (நாளை) நான் தர்மம் செய்வேன் என்று கூறினார். மறுநாள் அவர் தர்மத்துடன் (இரவில்) வெளிவந்து அதை ஒரு விபச்சாரியிடம் கொடுத்துவிட்டார். மறுநாள் காலை மக்கள், இன்றிரவு விபச்சாரிக்குத் தர்மம் கொடுக்கப்பட்டுள்ளது எனப் பேசினர். (இதைக் கேட்ட) அவர் அல்லாஹ்வே! விபச்சாரிக்குத் தர்மம் செய்ததற்காக உனக்கே சகலப் புகழும்! (நாளையும்) நான் தர்மம் செய்வேன்! எனக் கூறினார். (மூன்றாம் நாள்) அவர் தர்மத்துடன் வெளிவந்து ஒரு பணக்காரனின் கையில் கொடுத்துவிட்டார். காலையில் மக்கள், பணக்காரருக்கு ஸதகா கொடுக்கப்பட்டள்ளது எனப் பேசினர். உடனே அவர், அல்லாஹ்வே! திருடனிமும் விபச்சாரியிடமும் செல்வந்தனிடமும் தர்மம் கொடுத்ததற்காக உனக்கே எல்லாப் புகழும் எனக் கூறினார். பிறகு அம்மனிதர் அன்றிரவு ஒரு கனவு காண்கிறார். அக்கனவில் ஒருவர் வந்து, நீர் திருடனுக்குக் கொடுத்த தர்மம் அவன் திருடுவதைவிட்டுத் திருந்தக் காரணமாகிவிட்டது. விபச்சாரிக்கு நீ கொடுத்த தர்மம், அவள் விபச்சாரத்திலிருந்து திருந்தி வாழ்வதற்கு வழியமைத்துவிட்டது. செல்வந்தனுக்குக் கொடுக்கப்பட்ட தர்மத்தினால் அவன் படிப்பினை பெற்று அதனால் அவன் தனக்கு அல்லாஹ் வழங்கியதிலிருந்து தர்மம் செய்யக் காரணமாகிவிட்டது" எனக் கூறினார். (நூல்: புகாரி)

எதை தர்மம் செய்யலாம்?
தனக்கு மிஞ்சியதைக் கொடுத்தால் அது தர்மம் \
தனக்கு என்று இருப்பதை வழங்கினால் தயாளம்
தன்னையே கொடுத்தால் அது தியாகம்

இந்த மூன்றும் இப்ராஹீம் அலை அவர்களிடம் இருந்தது. இரண்டாவது குணம் சில வள்ளல் களிடம் இருந்தது
அரபு நாட்டு வள்ளல் ஹாத்திம் தாயைப் பற்றி அறிந்திருப்போம் இல்லைஎன்று தம் இல்லம் மிதித்த யாருக்கும இல்லைஎன்று அவர் சொன்னதில்லை கேட்டு வந்துருக்கேல்லாம் கொடுத்து கொடுத்து கறைந்து போன அவர் ஒரு கட்டத்திலே இருக்க ஒரு இல்லமும் வாகனிக்க ஒரு வாகனமுமாய் இருந்த போது
நன்கொடை கேட்டு நான்கு பேர் அவரிடத்தில் வந்தனர் வந்தவர்களை வரவேற்று விருந்தளித்தார் விருந்து முடிந்து இருந்து பேசிக்கொண்டிருந்தபோது வந்தவர்கள் தன நோக்கத்தை சொன்னார்கள் அதைக்கேட்ட ஹாத்திம் தாய் என்னிடத்தில் இருப்பாதாய் பார்த்து கேளுங்கள் நான் இதுவரை யாருக்கும் இல்லைஎன்று சொன்னதில்லை இல்லாததைக் கேட்டு இல்லை எனற அந்த வார்த்தையை சொல்ல வைத்து விடாதீர்கள்
அவர்கள் சொனார்கள் இல்லை உங்களிடம் இருப்பதைத்தான் கேட்கப்போகிறோம் நாங்கள் உள்ளே வரும்போது வாசலில் பார்த்தோமே அந்த குதிரை. அரபு நாட்டிலேயே விலை உயர்ந்த அதிசய குதிரை அதையாவது நன்கொடை கொடுங்கள் என்று கேட்டபோது ஹாத்திம் தாய் அழுதார் நான் இதுவரைக்கும் சொல்லாத வார்த்தையை சொல்ல வைத்துவிட்டீர்களே அந்த குதிரை நீங்கள் வரும்போது வாசலில் இருந்தது உண்மைதான் ஆனால் பாசத்தோடு வந்த நீங்கள் பசியோடு செல்லக் கூடாதே என்று அதை அறுத்து உங்களுக்கு விருந்து வைத்துவிட்டேன் என்றார்
அவசிய தேவை இருந்தும் அதில் அடுத்தவருக்கு முன்னுரிமை அளித்தவர்கள் அந்த மேன்மக்கள் .இதுதான் உயர்ந்த உள்ளம் என்பது .
நபியவர்கள் வேகமாக வீசும் காற்றைவிட அதிகமதிகம் வாரி வழங்கும் வள்ளலாகத் திகழ்வார்கள். மொத்தத்தில் நபி (ஸல்) அவர்களிடம் யாராவது ஒருவர் ஒன்றைக் கேட்டு அதை அவர்கள் தராமல், 'இல்லை'என்று சொன்ன சரித்திரம் இல்லை.

எந்த அளவுக்கென்றால்...மற்றவர்கள் அவர்களுக்குப் பிரியத்தோடு வழங்கிய அன்பளிப்புகளைக் கூட அடுத்த விநாடியே அதை விரும்பக்கூடிய ஒருவருக்கு இன்முகத்துடன் கொடுத்து விடுவார்கள்.

ஒருமுறை பெண்ணொருத்தி நபி (ஸல்) அவர்களுக்கு ஒரு சால்வையை அன்பளிப்பாக வழங்கினார். உடனே அதை நபியவர்கள் அணிந்தார்கள். அழகாக இருந்தது.
அதைக்கண்ட நபித்தோழர் ஒருவர்இறைத்தூதர் அவர்களே...! இது மிகவும் அழகாக உள்ளது. எனக்குப் பிடித்துள்ளது. நான் அதை அணிய விரும்புகிறேன். எனக்குத் தந்து விடுங்களேன் என்று கேட்டார்.

உடனே மறுபேச்சில்லாமல் நபி (ஸல்) அவர்கள் 'இதோஎன்று அதைக் கழற்றி அவரிடம் தந்து விட்டார்கள். அருகிலிருந்த தோழர்களுக்கு கடும் வருத்தம் ஏற்பட்டுஅவரைப் பார்த்துக் கூறினார்கள்: நபி (ஸல்) அவர்கள் எதைக் கேட்டாலும் தந்து விடுவார்கள் என்ற துணிச்சலில்தானே,அதைக்கேட்டுப் பெற்றாய்இப்போதுதான் அதை பிரியமுடன் நபியவர்கள் அணிந்தார்கள்பார்க்க அழகாகவும் இருந்தது. உடனே அதைக் கேட்டுப் பெற வேண்டுமாஒருநாள் கழிந்த பின்பாவது கேட்டிருக்கலாமே என்று கடிந்து கொண்டார்கள்.
அதற்கு அந்தத் தோழர் என்ன சொன்னார் தெரியுமாதோழர்களே...! நபியவர்களிடமிருந்து அதைப்பறிக்க வேண்டும் என்ற சாதரண எண்ணத்தில்அதை நான் அவர்களிடம் கேட்கவில்லை. மாறாக... நான் இறந்த பின்புஎன் மீது போர்த்தப்படும் கஃபன் துணியாகஅது இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். அந்த எண்ணம் தான் அதைக் கேட்கத் தூண்டியது.

நபியவர்களுக்குத்தான் எவ்வளவு உயர்ந்த உள்ளம். அந்த தோழருக்குத்தான் எவ்வளவு தூய எண்ணம்.
நாம் நமக்கு என்று இருப்பதைத் தருவது இருக்கட்டும். தமக்கு மிஞ்சியதை யாவது தான் செய்யலாமே!
இறைவன் தன் திருமறையில்
(நபியே ! தர்மத்திற்காக எவ்வளவில்) எதைச் செலவு செய்ய வேண்டும் என்று அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர். (உங்கள் தேவைக்கு வேண்டியது போக) மீதமானவற்றைச் செலவு செய்யுங்கள் என்று கூறுவீராக. (2-219)
இன்று தன் தேவைக்கு போக மீதம் இருப்பதை பிறருக்கு கொடுத்து உதவாமல் பிற்காலத்தில் நமக்கு இல்லாமல் போய் விடுமோ என்று பயந்து கஞ்சத்தனம் செய்கிறார்கள். இவர்களை பார்த்து இறைவன் தன் திருமறையில் கூறுகிறான்
அல்லாஹ் தன் அருளினால் தங்களுக்குக் கொடுத்திருக்கும் பொருட்களில் யார் உலோபித்தனம் தெய்கிறார்களோ அது தமக்கு நல்லது என்று (அவர்கள்) நிச்சயமாக எண்ண வேண்டாம். அவ்வாறன்று அது அவர்களுக்கு தீங்குதான் அவர்கள் உலோபத்தனத்தால் சேர்த்து வைத்த (பொருட்கள்) எல்லாம் மறுமையில் அவர்கள் கழுத்தில் அரிகண்டமாக போடப்படும். (3-180)
நபி (ஸல்) அவர்களும் கஞ்சத்தனம் செய்பவர்களை ஒரு உதாரணத்துடன் கூறியிருக்கிறார்கள்.
அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் நபி (ஸல்) அவர்கள் கூறியதாக, (தர்மம் செய்யாது) கருமித்தனம் செய்பவர் மற்றும் தர்மம் செய்பவருக்கு உதாரணம் அவ்விருவரின் மீதும் இரும்பினால் ஆன கேடயம் (முழக்க அவ்விருவரையும் ழூடிக் கொண்டவாறு) உள்ளது. (அந்நிலையிலிருக்கும்) தர்மம் செய்து கொண்டிருந்தவர் ஒரு தர்மத்தை செய்ய நாடுவாரானால் அது அவருக்கு விஸ்தீரணமாகிக் கொடுக்கும். முடிவாக அவரிலிருந்து ஏற்பட்ட தவறுகளின் அடிச்சுவடுகளை அது அழித்து விடும். கருமித்தனத்தை உடையவர் ஒரு தர்மத்தை செய்ய நாடுவாரனால் (அவர் மீது இருக்கும்) கவசமானது அவரை நெருக்கும். அவருடைய இரு கைகளும் அவரது கழுத்தின்பால் இணைந்து கொள்ளும் (அதிலுள்ள) ஒவ்வொரு வளையமும் அவரை இருக்கிக் கொள்ளும். அதை அவர் விசாலமாக்கிக் கொள்ள அவர் பெரிதும் முயல்வார் ஆனால் அதற்கு சக்தி பெறமாட்டார். (ஆதாரம்: முஸ்லிம்)

பிறருக்கு கொடுத்து உதவுவதால் இறைவனின் அருட்கொடைகள் அவனுக்கு மென்மேலும் அதிகரிக்கும் வறுமை ஏற்பட்டு விடுமோ என்று பயப்படுவது ஷைத்தானின் வேலையாகும் என்று இறைவன் தன் திருமறையில் கூறுகிறான்.
(தான தர்மங்கள் செய்வதினால் ) வறுமை (உண்டாகிவிடும் என்று அதைக்) கொண்டு உங்களை ஷைத்தான் பயமுறுத்துகிறான். ஒழுக்கமில்லாச் செயல்களைச் செய்யுமாறும் உங்களை ஏவுகிறான். ஆனால் அல்லாஹ்வோ (நீங்கள் தான தருமங்கள் செய்தால்) தன்னிடமிருந்து மன்னிப்பும் (அருளும், பொருளும்) மிக்க செல்வமும் (கிடைக்கும் என்று) வாக்களிக்கின்றான். நிச்சயமாக அல்லாஹ் விசாலமான (கொடையுடையவன்) யாவற்றையும் நன்கறிபவன். (2-268)
எங்கு நமக்கு இல்லாமல் போய்விடுமோ என்று பயப்படாமல் தூய்மையான உள்ளத்துடன் பிறருக்கு தரும்போது இம்மையில் அவர்களுக்கு மிக்க செல்வமும் மறுமையிலும் செல்வந்தனாகவே இறைவன் வைப்பான். இப்னு மஸ்வூத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். ஒரு மனிதர் அல்லாஹ்வின் பாதையில் கடிவாளமிடப்பட்ட குதிரையை தர்மம் செய்தார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் அந்த மனிதர் மறுமை நாளில் கடிவாளமிடப்பட்ட எழுநூறு குதிரைகளோடு வருவார் என்றார்கள். (ஆதாரம்: நஸாயீ)
இன்னும் சிலபேர் பிறருக்கு உதவுவதில் கணக்கிட்டுக் கொண்டிருப்பார்கள். இவர்களை பார்த்து நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். ஆயிஷா (ரலி) அவர்கள் தர்மம் செய்ததின் அளவை கூறியபோது நபி (ஸல்) அவர்கள் நீ தர்மம் செய். அதை வரையறுத்து விடாதே அவ்வாறு கணக்கிட்டால் அல்லாஹ் உம்மீது வழங்கும் அருட்கொடையை கணக்கிட்டு விடுவான் என்றார்கள். ஆதாரம்: அபூதாவுத். அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

அஸ்மா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். நபி (ஸல்) அவர்கள் இவ்வளவுதான் என்று வரையறுத்து தர்மம் செய்யாதே. அல்லாஹ் உம்மீது பொழியும் அருளை வரையறுத்து விடுவான் என்றார்கள் .

யார் தங்கள் பொருள்களை (தான தர்மங்களில் )இரவிலும், பகலிலும் இரகசியமாகவும் பகிரங்கமாகவும் செலவு செய்கின்றார்களோ அவர்களுக்கு அவர்களுடைய இறைவனிடத்தில் நற்கூலி இருக்கிறது. அவர்களுக்கு அச்சமும் இல்லை. அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள். (2:274)


ஜாபிர் இப்னு அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள் நோன்புப் பெருநாளில் எழுந்து தொழுதார்கள். தொழுகையை முதலில் நடத்தி விட்டு பிறகு உரை நிகழ்த்தினார்கள். உரை முடித்து இறங்கி பெண்களிடம் சென்று பிலாலுடைய கையில் சாய்ந்து கொண்டு அவர்களுக்கு உபதேசம் செய்தார்கள். பிலால் (ரலி) தம்முடைய ஆடையை ஏந்திக் கொண்டிருந்தார்கள். பெண்கள் (தங்களின்) தர்மத்தை அதில் போடலானார்கள். நான் (ஜாபிர் இப்னு அப்தில்லா அவர்கள்) அதாஃ (ரலி) இடம் பித்ரு (பெருநாள்) சதக்காவையா என்று கேட்டேன். அதற்கவர் இல்லை அப்போது அவர்களாக விரும்பிச் செய்த தர்மத்தையே போட்டனர். கால் விரவில் அணிந்து கொள்ளும் மெட்டிகளையும் அவர்கள் போட்டுள்ளார்கள் எனக் கூறினார். (ஆதாரம்: புகாரி)

இப்பெண்கள் அனைவரும் மிக வசதிபடைத்த செல்வந்தார்கள் இல்லை. ஒரு வேளை உணவுக்காக உழைத்துச் சாப்பிடக் கூடியவர்களாக இருந்தார்கள். இந்த பெண்களுக்கு கொடுக்க கூடிய மணம் இருந்தது. இந்த பெண்களுக்கு கொடுக்க கூடிய மணம் இருந்ததால் தான் எந்த தடைகளும்மின்றி நபித் தோழர்களும் பிறருக்கு உதவி செய்யும் மனதை பெற்று இருந்தார்கள்.
நபி (ஸல்) அவர்கள் மற்றொரு நபிமொழியில் மனிதர்களுக்கு செல்வத்தை தர்மம் செய்து நரகில் இருந்து தப்பித்துக்கொள்ளும் வழியை கூறி சென்றுள்ளர்கள்.

ஆதி இப்னு ஹாதம் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். நபி (ஸல்) அவர்கள் உங்களில் ஒருவர் பேரிச்சம் பழத்தின் ஒரு துண்டையாவது தர்மம் செய்து நரக நெருப்பிலிருந்து பாதுகாத்து கொள்ள முடியுமாயின் அதை அவர் செய்துக் கொள்ளட்டும் என்று கூறினார்கள். (ஆதாரம்: புகாரி)

யார், இறைவன் செல்வத்தை தனக்கு கொடுத்துள்ளான். அவன் வழியில் செலவிட்டால் தன் செல்வத்தை மென்மேலும் அதிகரிக்கச் செய்வான் என்று தூய்மையான உள்ளத்துடன் வாரி வழங்குகிறார்களோ அவர்களுக்கு இம்மையில் அளவு கடந்த நற்பலன்களை தருகின்றான். இறைவன் தன் திருமறையில், தமது செல்வங்களை அல்லாஹ்வின் பாதையில் செலவிடுவோருக்கு உதாரணம் ஒரு தானியம் அது ஏழு கதிர்களை முளைக்கச் செய்கிறது ஒவ்வொரு கதிரிலும் நூறு தானியங்கள் உள்ளன. தான் நாடியோருக்கு அல்லாஹ் பன்மடங்காகக் கொடுக்கிறான். அல்லாஹ் தாராளமானவன் அறிந்தவன் (2:261)

மறுமையில் மிகப்பெரிய கூலியை பெறுகிறார்கள். அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் நபி (ஸல்) அவர்கள் கூறியதாக, எவன் இறைவனின் பாதையில் ஏதேனும் பொருளை செலவழித்தாரோ அவரை சொர்க்கவாயில்களின் காவலர்கள் ஒவ்வொருவரும் இன்னாரே இங்கே வாரும் என்று அழைப்பார். (ஆதாரம்: முஸ்லிம்)

நபி (ஸல்) அவர்களும் சஹாபாக்களும் ஏழ்மை நிலையில் இருந்த போதிலும் தன்னால் முடிந்த அளவு போட்டி பிறருக்கு பொருளால் உதவி இருக்கிறார்கள்.

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். நபி(ஸல்) அவர்கள் நல்லதை வாரி வழங்குபவர்களாக இருந்தனர். ஜிப்ரயீல் (அலை) அவர்கள் ரமளான் மாதத்தின் ஒவ்வொரு இரவும் ரமலான் முடியும் வரை சந்திப்பார்கள். அவ்வேளையில் மழைகாற்றை விட வேகமாகவும் அதிகமாகவும் வாரி வழங்குவார்கள். (ஆதாரம்:புகாரி)

இறுக்கமும் இரக்கமும்

ﻋﻦ ﻋﺒﺪ ﺍﻟﻠﻪ ﺑﻦ ﻋﻤﺮﻭ ﺭﺿﻰ ﺍﻟﻠﻪ ﻋﻨﻪ ﻗﺎﻝ ﻗﺎﻝ ﺭﺳﻮﻝﺍﻟﻠﻪ ﺻﻠﻰ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﺳﻠﻢ ﺍﻟﺮﺍﺣﻤﻮﻥ ﻳﺮﺣﻤﻬﻢ ﺍﻟﺮﺣﻤﻦ ﺍﺭﺣﻤﻮﺍ ﻣﻦ ﻓﻰ ﺍﻻﺭﺽ ﻳﺮﺣﻤﻜﻢ ﻣﻦ ﻓﻰ ﺍﻟﺴﻤﺎﺀ

உயிருக்குயிரான உயிரினும் மேலான சத்தியத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அப்துல்லாஹ் இப்னு அம்ர் அவர்கள்அறிவிக்கிறார்கள் " இரக்கம்
காட்டுபவர்கள் மீது இறைவன் இரக்கம் காட்டுவான்,பூமியில் உள்ளவர்கள் மீது இரக்கம் காட்டுங்கள் வானில் உள்ளவன் உங்கள் மீது இரக்கம் காட்டுவான். உலகிற்கு அருட்கொடையாக வந்த நபிகள் கோமான் இப்படி கூறினார்கள் ஒரு தாகித்த நாய்க்கு தண்ணீர் புகட்டியதற்காக ஒரு விபச்சாரி சுவனத்தில் நுழைந்தால் என்ற செய்தி நம் கவனித்தில் பதியப்பட வேண்டிய ஒன்றே. மனித கண்ணுக்கு மறைவாக இருக்கும் இறைவனின் இரக்கம் கிடைக்கவேண்டும் என்றால், அவனுக்கு முன்னால் கண்ணுக்கு தெரிகிற கோடானகோடி படைப்பினங்களில் அவன் அன்பு செலுத்தி பழகவேண்டும்.

தர்மத்தின் பல பயன்கள்:
1. ரகசிய தர்மம் இறைவனின் சினத்தை அணைத்துவிடுகிறது:

أنّها تطفىء غضب الله سبحانه وتعالى كما في قوله صلى الله عليه وسلم: «إن صدقة السر تطفىء غضب الرب تبارك وتعالى» [صحيح الترغيب].
2. பாவத்தை அழித்துவிடுகிறது:

 أنّها تمحو الخطيئة، وتذهب نارها كما في قوله صلى الله عليه وسلم: «والصدقة تطفىء الخطيئة كما تطفىء الماء النار» [صحيح الترغيب].

நபிசல் கூறினார்கள்: தண்ணீர்நெருப்பைஅணைத்துவிடுவதுபோல தர்மம்
 பாவத்தை அழித்துவிடுகிறது.

3. நரக நெருப்பிலிருந்து பாதுக்காக்கிறது. பெருநரகை விட்டு காக்கும் சிறு பேரீச்சம்பழம்.
«فاتقوا النّار، ولو بشق تمرة».
அல்லாஹ் மறுமை நாளில் உங்களில் ஒவ்வொருவருடனும் பேசாமல் இருப்பதில்லை. அப்போது அல்லாஹ்வுக்கும் உங்களுக்கும் இடையில் மொழி பெயர்ப்பாளர் எவரும் இருக்க மாட்டார். பிறகு அவர் கூர்ந்து பார்ப்பார். தமக்கு முன்புறம் எதையும் அவர் காண மாட்டார். பிறகு தமக்கு எதிரே பார்ப்பார். அப்போது அவரை (நரக) நெருப்பு தான் வரவேற்கும். ஆகவே முடிந்தால்பேரீச்சம் பழத்தின் சிறு துண்டையேனும் தர்மம் செய்து நரகத்தி ருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அதீ பின் ஹாத்திம் (ர லி)நூல்: புகாரி 6539

4. மஹ்ஷரில் நிழல் தருகிறது:

 أنّ المتصدق في ظل صدقته يوم القيامة كما في حديث عقبة بن عامر رضي الله عنه قال: سمعت رسول الله صلى الله عليه وسلم يقول: «كل امرىء في ظل صدقته، حتى يقضى بين الناس». قال يزيد: "فكان أبو مرثد لا يخطئه يوم إلا تصدق فيه بشيء ولو كعكة أو بصلة"، قد ذكر النبي صلى الله عليه وسلم أن من السبعة الذين يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله: «رجل تصدق بصدقة فأخفاها، حتى لا تعلم شماله ما تنفق يمينه» [في الصحيحين].

மறுமையில் மக்களெல்லாம்மஹ்ஷர் மைதானத்தின் வாட்டும்வெயிலில் வாடி வதங்கும்பொழுதுகொடைவள்ளல் தனது தர்மத்தின்நிழலில் சொகுசாக நிம்மதியாகஇருப்பார்.


5. உடல் பிணிகளுக்கு கூடமருந்தாக அமைகிறதாம் தர்மம்.

 أنّ في الصدقة دواء للأمراض البدنية كما في قوله صلى الله عليه وسلم: «داووا مرضاكم بالصدقة».

''உங்கள் வியாதிகளுக்கு தர்மத்தின் மூலம் சிகிச்சை செய்யுங்கள்''

பல வைத்தியம் பார்த்தும் பலனில்லாமல் கிணறு தோண்டி மக்களுக்கு தண்ணீரை தர்மம் செய்ததால் முட்டுக்காலில் நீண்ட நாட்களாக வடிந்துகொண்டிருந்த சீழ் நின்ற அற்புதமான வரலாறு

 يقول ابن شقيق: "سمعت ابن المبارك وسأله رجل: عن قرحةٍ خرجت في ركبته منذ سبع سنين، وقد عالجها بأنواع العلاج، وسأل الأطباء فلم ينتفع به، فقال: اذهب فأحفر بئرًا في مكان حاجة إلى الماء، فإني أرجو أن ينبع هناك عين ويمسك عنك الدم، ففعل الرجل فبرأ". [صحيح الترغيب].

6. மனவியாதிகளுக்கும் மருந்து:

 إنّ فيها دواء للأمراض القلبية كما في قوله صلى الله عليه وسلم لمن شكى إليه قسوة قلبه: «إذا إردت تليين قلبك فأطعم المسكين، وامسح على رأس اليتيم» [رواه أحمد].

அல்லாஹ்வின் தூதரே.. என்உள்ளம் கடினமாக இருக்கிறதுஎன்று முறையிட்ட தோழருக்கு நபிசொன்ன ஆலோசனை: உன்உள்ளத்தை மிருதுவாக்க நீர்நாடினால் ஏழைகளுக்குஉணவளியும்; அனாதையைஆதரியும்!


7. தர்மம் தலைகாக்கும் தக்கசமயத்தில் உயிர் காக்கும்.
قال رسول الله صلى الله عليه و سلم إن الصدقة لتطفئ غضب الرب وتدفع عن ميته السوء. (ترمذى-664)
 சதகா கெட்ட மரணத்திலிருந்து தடுக்கும் கேடயம்.

யஹ்யா அலை தன் சமுதாயத்திற்குதந்த உபதேசங்களில் ஒன்று: ''தானதர்மம் தாராளமாகஅளியுங்கள். ஏனெனில் அதுஉங்களை எல்லா ஆபத்துகளைவிட்டும் காக்கும். இதற்குஉதாரணம்: உங்களில் ஒருவரைஎதிரி பிடித்து சிறைவைத்தான்;பிறகு கழுத்துடன் கைகளைப்பிணைத்தான்; கழுவில்ஏற்றுவதற்காக அவன்முனைந்தபொழுது நீங்கள்சுதாரித்துக்கொண்டு ஏதேனும் ஒருசில பொருளை பிணையாககொடுத்து தப்பிவிட்டீர்கள்.அதுபோல உங்களின் தர்மம்உங்களைத் தக்க தருணத்தில்காப்பாற்றுகின்ற பிணைத்தொகையாகும்.''

فالصدقة لها تأثير عجيب في دفع أنواع البلاء ولو كانت من فاجرٍ أو ظالمٍ بل من كافر فإنّ الله تعالى يدفع بها أنواعًا من البلاء، وهذا أمر معلوم عند النّاس خاصتهم وعامتهم وأهل الأرض مقرون به لأنّهم قد جربوه.

ஃபிர்அவ்ன் ''தானே கடவுள்'' என்றுகூறியதோடு மட்டுமல்லாமல்அனேக அட்டூழியங்களைப்புரிந்தவன். ஒரு கட்டத்திலே மூசாஅலை அவர்களே, ''யா அல்லாஹ்இனியும் ஏன் அவனைவிட்டுவைத்திருக்கிறாய்'' என்றுபொறுமையிழந்துவினவியபொழுது அல்லாஹ்இப்படிக் கூறினானாம்: ''என்னசெய்வது நபியே.. அவன் ஒரு பக்கம்அநியாயம் புரிந்தாலும் மறுபக்கம்தான தர்மங்கள் தாராளமாகதருகிறான். அதனால் அவனைஇன்னும் சிறிதுகாலத்திற்குவிட்டுவைத்திருக்கிறேன்''

அப்படியானால் தர்மம்தண்டனைகளைக் கூடதாமதப்படுத்துகிறது அல்லவா?

ஒரு விறகுவெட்டி தலையில்விறகுச் சுமையுடன் வீடுதிரும்பிக்கொண்டிருந்தான். வரும்வழியில் எதிரில் ஒருதுறவிம்வருவதைப் பார்த்தான்.அவருக்கு வழி விடுவதற்காகபாதையின் ஓரத்தில் ஒதுங்கிநின்றான். ஆனால் அவரோதிடீரென, ''விறகு சுமையை உடனேகீழே எறி'' என்றார். அவனுக்குஒன்றுமே புரியவில்லை.காலையிலிருந்து கஷ்டப்பட்டுவெட்டிக்கொண்டு வந்த விறகுகள்அவை. அவற்றை விற்றால்தான்அன்று அவனுக்கு உணவு. அந்தகட்டை எறியச் சொல்லுகிறாரே?

இருந்தாலும் அவர்மீதுள்ளமரியாதைக்காக விறகுக்கட்டைகீழே போட்டான். போட்ட வேகத்தில்கயிறு அறுந்து விறகுகள் சிதறின.அதற்குள்ளே இருந்து ஒரு கருநாகம்நெளிந்து ஓடியது. விறகுவெட்டிவியப்பாலும் அச்சத்தாலும்உறைந்து நின்றுவிட்டான். உடனேசுதாரித்துக்கொண்டு ''அய்யா.நீங்கள் எனது உயிரைக்காப்பாற்றினீர்கள்'' என்றான். ''உன்னைக் காப்பாற்றியது நான்அல்ல; நீ செய்த தர்மம். இன்றுஏதாவது தர்மம் செய்தாயா?'' என்றுகேட்டார் துறவி. ''நான் பரம ஏழை.விறகுவெட்டிப் பிழைப்பவன். தர்மம்செய்யும் சக்தி எனக்கு ஏது?என்றான்.

''நன்றாக யோசித்துப் பார்''. அவன்சிறிதுநேரம் சிந்தித்துப் பார்த்தான்.அவனுக்கு நினைவுக்குவந்துவிட்டது ''ஆமாம் அய்யா!இன்று பகல் விறகு வெட்டிக்களைத்துப் போய் ஒரு மரத்தடியில்அமர்ந்தேன். கடுமையான பசி.கேழ்வரகு கூழ் கொஞ்சம் கொண்டுவந்திருந்தேன் அதை அருந்தநினைக்கும்போது அங்கே ஒருபயணி வந்தார். ''நான் இரண்டுநாளாக பட்டினி. எனக்கு ஏதாவதுசாப்பிடக் கொடுங்கள்'' என்றார்.நான் என் கூழில் பாதியைஅவருக்கு கொடுத்தேன். இதுதான்நான் செய்தது. இது என்னைமரணத்திலிருந்து காப்பாற்றுகிறஅளவுக்கு பெரிய தர்மமா?ஆச்சரியமாக இருக்கிறதே''என்றான்.

துறவி, '' இன்று நீ பாம்பு கடித்துஇறந்து போகக்கூடியவன். நீ செய்ததர்மம் உன்னைக்காப்பாற்றியது'' என்றார்.

விறகு வெட்டி கொடுத்ததுகொஞ்சம் கூழ்தானே. அது ஒருபெரிய தர்மமா என்று கேட்கலாம்.அவன் என்ன கொடுத்தான் என்பதுமுக்கியமல்ல. யாருக்கு.. எந்தநேரத்தில் கொடுத்தான்என்பதுதான் முக்கியம். பயணிஇரண்டு நாள் பட்டினி என்றுசொன்னான் விறகு வெட்டிகூழ்கொடுத்திராவிட்டால் ஒருவேளைஅவன் இறந்துபோயிருக்கலாம்.எனவே பயணிக்கு விறகு வெட்டிகொடுத்தது கூழ் அல்ல; உயிர்.

அவன் ஒரு உயிரைக்காப்பாற்றினான். அந்த தர்மம்அவனின் உயிரைக்காப்பாற்றிவிட்டது.

ஆம். விதியையே மாற்றக்கூடியவல்லமை தர்மத்திற்கு உண்டுஅதனால்தான் திருவள்ளுவர்உயிருக்கு நன்மை தருவதுஅறத்தைவிட வேறு எது? என்கிறார்

சிறப்பு ஈனும் செல்வமும் ஈனும் அறத்தின் ஊங்கு  ஆக்கம் எவனோ உயிர்க்கு.
பி ஈஸா (அலை) அவர்கள் காலத்தில் ஒரு துணி துவைக்கரகும் ஓர் வண்ணான் இருந்தான் அவன் ஆற்றில் துவைத்த துணியின் மூலமாக அசுத்தங்கள் ஆற்றில் கலந்தது இதை ஊர் மக்கள் அவனிடம் எவ்வளவோ எடுத்து சொல்லியும் கேட்கவில்லை இதை நபி ஈஸா அலை அவர்களிடம் எத்தி வைத்தனர்

நபி ஈஸா(அலை) அவர்கள் அவனை பக்கத்திலுள்ள ஊருக்கு அனுப்பிவிட்டார்கள்

சில நாட்களுக்கு பின் அடுத்த ஊர்கார்களும் நபி ஈசா(அலை) அவர்களிடம் உங்க ஊர் காப்பாற்றி எங்க ஊர் தண்ணீர் வீனாகுதே என்றனர்.

உடனே ஊர் மக்கள் அவன் மக்களுக்கு இடையூறாக இருக்கிறான்.
அவனை மவ்தாக தூஆ செய்யுங்கள்.

இதை கேட்ட ஈஸா(அலை) அவர்கள்
ஒரு பாம்பிடம் அவன் அழுக்கு துணிகளுக்குள் நுழைந்து மூட்டையை பிறிக்கும் போது அவனை கொத்தி மவ்த்தாக்கிவிடு என்று கூறி பாம்பை அனுப்பி வைத்தார்கள்

அந்த பாம்பும் அதன்படி மூட்டைக்குல் நுழைந்தது.

அவன் மூட்டையை கட்டி செல்லும் போதல்லாம் ஒரு பாத்திரத்தில் உணவு கொண்டு செல்வது வழக்கம்.

வேலை முடித்தபின் அதைசாப்பிடுவான்.

இவ்வாறு செல்லும் போது வழியில் பிச்சைகாரன் பசிக்க ஏதோ கேட்க உடனே அவன் தான் வைத்துருந்த உணவை அவனிடம் கொடுத்துவிட்டான்
பின்புவேலையல்லாம் முடித்து விட்டு திரும்பினான்.
அவன் வருவதை பார்த்த ஈஸா(அலை) அவர்களுக்கு அதிர்ச்சி
பின்பு அந்த பாம்பிடம் விசாரிக்கும் போது அவன் தர்மம் செய்தான் அதனால் அல்லாஹ் அவனை தீன்டுவதை விட்டு தடுத்து விட்டான். (நூல் நபிமார்களின் சரிதை)

8. இறைவனின் திருப்பொருத்தம் கிடைக்கிறது:
மறுமை நாளில் அல்லாஹ் ஒருஅடியானை அழைத்து கேட்பான்;நான் உன் வீட்டுவாசலில் வந்துஉணவு கேட்டேனே நீ ஏன்தரவில்லை?

அடியான், ''யா அல்லாஹ். உனக்குபசி என்பது இல்லை; அப்படி இருக்கநீ வந்து என்னிடம் உணவுகேட்டாயா? என்ன இது வியப்பாகஉள்ளதே '' ஆமாம் அன்றொருநாள்ஒரு யாசகன் உன் வீட்டுவாசலில்வந்து உணவு கேட்டான் நீதரவில்லை. நீ அங்கு வந்து உணவுதந்திருந்தால் அந்த ஏழையிடம்என்னைக் கண்டிருப்பாய். சரிமற்றொருநாள் உன்னிடம் தண்ணீர்கேட்டேனே ஏன் தரவில்லை"?

யா அல்லாஹ் உனக்கு தாகம்என்பதே இல்லையே நீ என்னிடம்தண்ணீர் கேட்டாயா?''

ஆமாம் அன்றொருநாள் ஒருயாசகன் உன் வீட்டுவாசலில் வந்துதண்ணீர் கேட்டான் நீ தரவில்லை. நீஅங்கு வந்து தண்ணீர்தந்திருந்தால் அந்த ஏழையிடம்என்னைக்கண்டிருப்பாய்........இப்படியே அந்தஹதீஸ் தொடருகிறது. ஆக,ஏழைக்கு தரும் கொடையைதனக்குத் தருவதாக அல்லாஹ்ஏற்றுக்கொள்கிறான்.
ஒரு அரசன் சிவபக்தன். ஒரு சமயம்கடவுளுக்கு பிரமாண்டமானபாலாபிஷேகம் செய்யநினைத்தான். நாடு முழுதும்உத்தரவு போட்டான். இன்றுஎல்லோரும் பால் கறந்து கொண்டுவந்து அரண்மனையில் உள்ள இந்தபெரிய அண்டாவில்ஊற்றவேண்டும். யாரும்அருந்தவோ விற்கவோ கூடாது.மொத்தப் பாலையும் கடவுளுக்கேஅற்பணிக்கவேண்டும் என்ற கடும்கட்டளை. மக்கள் சாரைசாரையாககொண்டு வந்து ஊற்றினர்.நிரம்பவே இல்லை. இறுதியாக ஒருபெண்மணி ஒரு சிறிய செம்பில்கொண்டு வந்து ஊற்றினாள்.உடனே நிரம்பி வழிந்தது மன்னன்வியப்புடன் கேட்டான்: மக்கள்அத்தனை பேரும் குடம் குடமாகஅண்டா அண்டாவாககொண்டுவந்து ஊற்றியும் நிரம்பாதஇந்த பாத்திரம் நீ கொண்டு வந்தஒரு சிறிய பாத்திரப் பாலைஊற்றியதும் எப்படியம்மாநிரம்பியது?
அவள் தயக்கத்தோடு கூறினாள்:மன்னா.. நீங்கள் என்னைமன்னிப்பதாக இருந்தால் அந்தரகசியத்தை கூறுகிறேன்''

''சரி மன்னித்துவிட்டேன். சொல்..அந்த ரகசியம் என்ன? ''

மன்னா. நான் தங்களின்ஆணைப்படி பாலைக் கறந்துமுழுவதையும் இங்குதான்கொண்டுவந்து கொண்டிருந்தேன்.குடிக்கவுமில்லை; விற்கவுமில்லை.வரும் வழியில் சில ஏழைக்குழந்தைகள் பசியில் துடித்துக்கொண்டிருந்த அலறலைக்கேட்டேன். என்னால்தாங்கமுடியவில்லை. ஒருபுறம்தங்களின் ஆணை. மறுபுறம் அந்தகுழந்தைகளின் கொடூரமான பசி.உடனே அந்த குழந்தைகளுக்குகொஞ்சம் பால் கொடுத்து பசியைத்தணித்துவிட்டு மீதியைத்தான்இங்கு கொண்டுவந்துஊற்றினேன்.'' என்றாள். மன்னன்உணர்ந்தான்; மக்கள் உணர்ந்தனர்:பாலாபிஷேகம் என்ற பெயரில்பாலை கீழே கொட்டிவீணாக்குவதை விட கடவுளின்பெயரால் ஏழைகளுக்குவழங்குவதே இறைவனைத்திருப்திப்படுத்தும் என்று.
''ஏழையின் சிரிப்பில் இறைவனைக்காண்போம்''
9. கொடுக்க கொடுக்கபெருகுகிறது:

 أنّ صاحب الصدقة يبارك له في ماله كما أخبر النبي صلى الله عليه وسلم عن ذلك بقوله: «ما نقصت صدقة من مال» [في صحيح مسلم].
"சதக்கா செய்வதால் பொருள் குறையாது."

ஒரு பெரியவர் தர்மப் பிரபுவாக வாழ்ந்தார். ஒருநாள் தன்மனைவியிடம் ''யார் வந்து யாசகம்கேட்டாலும் தாராளமாக கொடு''என்று சொல்லிவிட்டு சென்றார்.மனைவியும் தாராளமாக தானம்செய்தார். பிறகு கணவர் வீட்டுக்குவந்தார். சிறிது நேரத்தில் ஒருவண்டி நிறைய தானிய மூட்டைகள்வந்து இறங்கின. இதுவெல்லாம்உங்களுக்கு அன்பளிப்புகளாகஇன்னாரிடமிருந்துஅனுப்பப்பட்டுள்ளது'' என்று கூறிமூட்டைகளை வீட்டுக்குள்அடுக்கிவிட்டுப் போனார்கள். இவர்மனைவியிடம் கேட்டார்: நீஎதையாவது தர்மம் செய்யாமல்விட்டாயா?'' ஆமாம். வீட்டிலுள்ளதானியங்களை எல்லாம் தர்மம்செய்தேன். மாவரைக்கும்திருகையை மட்டும் தேவைப்படும்என வைத்துக்கொண்டேன்.என்றார். கணவர் சொன்னார்:அதையும் நீ தர்மம் செய்திருந்தால்கோதுமைக்குப் பதிலாக மாவாகவந்திருக்கும். இனி நீயே உட்கார்ந்துஅந்த திருகையில் கோதுமையைஅரைத்து அரைத்துக் களைத்துப்போ!''
10. பாவமற்ற பரிசுத்தமானவானவர்களின் துஆகிடைக்கிறது:

«ما من يوم يصبح العباد فيه إلا ملكان ينزلان فيقول أحدهما: اللهم أعط منفقًا خلفاً، ويقول الآخر: اللهم أعط ممسكًا تلفًا» [في الصحيحين].


நபி (சல்) கூறினார்கள்: ஒவ்வொருநாளும் அதிகாலையில் இருவானவர்கள் பூமிக்கு வந்து யாஅல்லாஹ்.. கொடுப்பவருக்குவளத்தைக் கொடு. தடுப்பவருக்குஅழிவைக் கொடு.'' என்றுபிரார்த்திக்கின்றனர்.



12. தர்மம் செய்வோருக்குமறுமையிலும் மகத்தானபன்மடங்கு கூலிகாத்திருக்கிறது:

 {إِنَّ الْمُصَّدِّقِينَ وَالْمُصَّدِّقَاتِ وَأَقْرَضُوا اللَّهَ قَرْضاً حَسَناً يُضَاعَفُ لَهُمْ وَلَهُمْ أَجْرٌ كَرِيمٌ} [سورة الحديد: 18]. وقوله سبحانه: {مَّن ذَا الَّذِي يُقْرِضُ اللّهَ قَرْضاً حَسَناً فَيُضَاعِفَهُ لَهُ أَضْعَافاً كَثِيرَةً وَاللّهُ يَقْبِضُ وَيَبْسُطُ وَإِلَيْهِ تُرْجَعُونَ} [سورة البقرة: 245].

பொறாமைப் படத்தக்க பாக்கியம்:

 أنَّ النبَّي صلى الله عليه وسلم جعل الغنى مع الإنفاق بمنزلة القرآن مع القيام به، وذلك في قوله صلى الله عليه وسلم: «لا حسد إلاّ في اثنين: رجلٌ آتاه الله القرآن فهو يقوم به آناء الليل والنهار، ورجل آتاه الله مالًا فهو ينفقه آناء الليل والنهار»، فكيف إذا وفق الله عبده إلى الجمع بين ذلك كله؟ نسأل الله الكريم من فضله.

நமது பொருளை சுத்தமாக்கி பாதுகாப்பைத் தரும்:

 أنَّ الصدقة مطهرة للمال، تخلصه من الدَّخن الذي يصيبه من جراء اللغو، والحلف، والكذب، والغفلة فقد كان النَّبي صلى الله عليه وسلم يوصي التَّجار بقوله: «يا معشر التجار، إنَّ هذا البيع يحضره اللغو والحلف فشوبوه بالصدقة» [رواه أحمد والنسائي وابن ماجة، صحيح الجامع].


وأخرج الزبير بن بكار في الموفقيات عن عبدالله بن أبي عبيدة بن محمد بن عمار بن ياسر قال : « قدم خالد بن الوليد من ناحية أرض الروم على النبي صلى الله عليه وسلم بأسرى ، فعرض عليهم الإِسلام فأبوا ، فأمر أن تضرب أعناقهم ، حتى إذا جاء إلى آخرهم قال النبي صلى الله عليه وسلم : » يا خالد كف عن الرجل « قال : يا رسول الله ما كان في القوم أشد عليّ منه . قال : » هذا جبريل يخبرني عن الله أنه كان سخيّاً في قومه فكف عنه « وأسلم الرومي » .

 ரோமார்களை எதிர்த்து போர் செய்வதற்கு சென்ற ஹாலித் (ரலி) அவர்கள் அங்கிருந்து சில எதிரிகளை கைதிகளாக நாயகம் (ஸல்) அவர்கள் இடம் கொண்டு வந்தார்கள் நாயகம் (ஸல்) அவர்கள் இஸ்லாத்தை எடுத்து சொன்னார்கள் அவர்கள் இஸ்லாத்தை ஏற்க மறுத்தார்கள். எனவே நாயகம் (ஸல்) அவர்கள் அவர்கள் அந்த கைதிகளின் பல்வேறு குற்றங்கள் முன் வைத்து அவர்கள் அனைவரையும் கொல்லும் படி உத்தரவிட்டார்கள். அவர்கள் அனைவருக் கொல்லப்பட்டார்கள். அந்த கைதிகளிடம் கடைசி நபரை ஹாலித் அவர்கள் கொல்வதற்காக முற்பட்டபோது நாயகம் (ஸல்) அவர்கள் இந்த மனிதரை விட்டு விடுங்கள் என்றார்கள். அப்போது ஹாலித் நாயகம் (ஸல்) அவர்கள் இடம் நாயகமே அந்த கூட்டத்தில் மிகவும் கொடியவர் இவர்தான் என்று கூறியபோது பெருமானார் (ஸல்) அவர்கள் சொன்னார்கள். இவரை பற்றி இப்போது தான் ஜிப்ரீல் (அலை) எனக்கு தகவல் தந்தார்கள். இவர் அந்த கூட்டத்தில் மிகப்பெரிய கொடை வல்லாளாக இருகின்றார் எனவே இவரை விட்டு விடுங்கள் என்று சொன்னார். இந்த தகவலை கேட்டவுடன் ஹாலித் (ரலி) அவரை விட்டு விட்டார்கள். உடனே அந்த ரோம் நாட்டு கைதி முஸ்லிமாகி விட்டார் .
நூல்: (துர்ருல் மன்சூர்)

அறம் செய்தோர் அர்ஷின் நிழலில்..
அல்லாஹ்வுடைய நிழலைத் தவிர வேறு நிழல் இல்லாத நாளான மறுமை நாளில் அல்லாஹ் தனது நிழலை ஏழு பேருக்கு அளிக்கின்றான். அவர்கள்: நீதியை நிலை நாட்டும் தலைவர், அல்லாஹ்வுடைய வணக்க வழிபாட்டில் ஊறிய இளைஞர், பள்ளிவாசல்களுடன் தமது உள்ளத்தைத் தொடர்பு படுத்திக் கொண்ட ஒரு மனிதர், அல்லாஹ்விற்காகவே இணைந்து அல்லாஹ்விற்காகவே பிரிகின்ற இரு நண்பர்கள், உயர் அந்தஸ்திலுள்ள அழகான ஒரு பெண் தவறான வழிக்குத் தம்மை அழைக்கின்ற போது நான் அல்லாஹ்வை அஞ்சுகின்றேன்என்று சொல்லும் மனிதர், தம்முடைய வலக்கரம் செய்யும் தர்மத்தை இடக்கரம் அறியாதவாறு இரகசியமாக தர்மம் செய்பவர், தனிமையில் அல்லாஹ்வை நினைத்து கண்ணீர் சிந்துபவர் ஆகியோர் ஆவர். அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), நூல் : புகாரி 660


இறுக்கினால் இறுகி விடும்
நபி (ஸல்) அவர்கள் என்னிடம் நீ (தர்மம் செய்யாமல்) முடிந்து வைத்துக் கொள்ளாதே! அவ்வாறு செய்தால் (இறைவனின் அருள்) உனக்கு (வழங்கப் படாமல்) முடிந்து வைத்துக் கொள்ளப்படும்என்று கூறினார்கள்.
அப்தாவின் அறிவிப்பில், ”நீ (இவ்வளவு தான்) என்று வரையறுத்து (தர்மம்) செய்யாதே! அல்லாஹ் (உன் மீது பொழியும் அருளை) வரையறுத்து விடுவான்என்று கூறியதாக உள்ளது. அறிவிப்பவர்: அஸ்மா (ர லி), நூல்: புகாரி 1433, 1434
இறைவனிடம் கையேந்தும் இரு மலக்குகள்
ஒவ்வொரு நாளும் இரண்டு மலக்குகள் இறங்குகின்றனர். அவ்விருவரில் ஒருவர், ”அல்லாஹ்வே! தர்மம் செய்பவருக்குப் பிரதிபலனை அளித்திடுவாயாக!என்று கூறுவார். இன்னொருவர், ”அல்லாஹ்வே! (தர்மம் செய்யாமல்) தடுத்து வைத்துக் கொள்பவர்களுக்கு அழிவை ஏற்படுத்துவாயாக!என்று கூறுவார் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ர லி), நூல்: புகாரி 1442
சுவனத்தின் ஸதகா வாசல்:
"ஒருவர் அல்லாஹ்வின் பாதையில் ஒரு ஜோடிப் பொருட்களைச் செலவு செய்தால் அவர் சொர்க்கத்தின் வாசல்களி ருந்து, "அல்லாஹ்வின் அடியாரே! இது நன்மையாகும். (இதன் வழியாகப் பிரவேசியுங்கள்)என்று அழைக்கப் படுவார். தொழுகையாளிகளாக இருந்தவர்கள் தொழுகையின் வாசல் வழியாக அழைக்கப்படுவர். அறப்போர் புரிந்தவர்கள் ஜிஹாத் எனும் வாசல் வழியாக அழைக்கப்படுவர். நோன்பாளிகளாய் இருந்தவர்கள் ரய்யான் எனும் வாசல் வழியாக அழைக்கப்படுவர். தர்மம் செய்தவர்கள் ஸதகா எனும் வாசல் வழியாக அழைக்கப்படுவர்என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அப்போது அபூபக்கர் (ர லி) அவர்கள், ”அல்லாஹ்வின் தூதரே! என் தாயும் தந்தையும் உங்களுக்கு அர்ப்பணமாகட்டும். இந்த வாசல்கள் அனைத்தி ருந்தும் அழைக்கப்படும் ஒருவருக்கு எந்தத் துயரும் இல்லையே! எனவே எவரேனும் எல்லா வாசல்கள் வழியாகவும் அழைக்கப்படுவாரா?” என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ”ஆம்! நீரும் அவர்களில் ஒருவராவீர் என்று நான் நம்புகின்றேன்என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ர லி), நூல்: புகாரி 1897
அல்லாஹ் சொல்லும் சேதி
ஆதமின் மகனே! (மற்றவர்களுக்காக) செலவிடு! உனக்கு நான் செலவிடுவேன்என்று அல்லாஹ் கூறியதாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ர லி), நூல்: புகாரி 5352
தர்மமே நமது சொத்து
நபி (ஸல்) அவர்கள், ”உங்களில் யாருக்காவது தமது செல்வத்தை விட தமது வாரிசுகளின் செல்வம் விருப்பமுடையதாக இருக்குமா?” என்று கேட்டார்கள். தோழர்கள், ”அல்லாஹ்வின் தூதரே! எங்கள் அனைவருக்குமே எங்களின் செல்வம் தான் விருப்பமானதாகும்என்று பதிலளித்தார்கள். அவ்வாறாயின் ஒருவர் (இறப்பதற்கு முன் அறவழியில்) எதைச் செலவிட்டாரோ அது தான் அவரது செல்வமாகும். (இறக்கும் போது) எதைச் விட்டுச் செல்கின்றாரோ அது அவருடைய வாரிசுகளின் செல்வமாகும்என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ர லி), நூல்: புகாரி 6442
அல்லாஹ்வின் மன்னிப்பு
மிஸ்தஹ் பின் உஸாஸா என்பவர் தமது உறவினர் என்பதால் அபூபக்கர் (ர லி) அவர்கள் அவருக்காக செலவிட்டு வந்தார்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! (என் மகள்) ஆயிஷா குறித்து (அவதூறு) கூறிய பின்பு ஒரு போதும் நான் மிஸ்தஹுக்காக எதையும் செலவிட மாட்டேன்என்று அபூபக்ர் (ர லி) கூறினார்கள்.
அப்போது அல்லாஹ், ”உறவினர்களுக்கும், ஏழைகளுக்கும், அல்லாஹ்வின் பாதையில் ஹிஜ்ரத் செய்தோருக்கும் உதவ மாட்டோம்என்று செல்வமும், வசதியும் உடையோர் சத்தியம் செய்ய வேண்டாம். மன்னித்து அலட்சியம் செய்யட்டும். அல்லாஹ் உங்களை மன்னிக்க வேண்டும் என்று விரும்ப மாட்டீர்களா? அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்எனும் (24:22) வசனத்தை அருளினான்.
அபூபக்கர் (ரலி) அவர்கள், ”ஆம்! அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ் எனக்கு மன்னிப்பளிக்க வேண்டும் என்று நான் விரும்புகின்றேன்என்று கூறிவிட்டு மிஸ்தஹுக்கு ஏற்கனவே தாம் செலவிட்டு வந்ததைத் திரும்பவும் தொடரலானார்கள். மேலும், ”அல்லாஹ்வின் மீதாணையாக! அவருக்கு (செய்யும் இந்த உதவியை) ஒரு போதும் நான் நிறுத்த மாட்டேன்என்று கூறினார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா (ர லி), நூல்: புகாரி 6679-
மொத்தத்தில் இத்தனை சிறப்புகள் வாய்ந்த இந்த தர்மத்தை தாராளமாக வழங்கி ஆபத்துகளிலிருந்து பாதுகாப்பு பெறுவோம்; அபரிமிதமான அருட்பேறுகளை அடைவோம்.

குறிப்பு வழங்கிய பெருமக்கள் :
Moulana Haneef JamaliMoulana Peer Faizy, Moulana Sulthan Salahi, Moulana AbbasRiyaziMoulana Shahul Faizy, Moulana Naseer Misbahi,  Moulana Badhuru Althafi, Moulana puthukai muneeri , Moulana Shaik Adham Dhawoodhi 
தொகுத்து வழங்கியவர் நபிப் பித்தன் .

0 comments:

Post a Comment