29 April 2015

உழைப்பாளர்களின் உரிமைகள்

Image result for தொழிலாளர் உரிமைகள்


வருடத்திற்கொரு முறை மே 1 அன்று உலகம் முழுவதும் உழைப்பாளிகள் தினம் அனுசரிக்கப்படுகிறது.
அன்றைய தினத்தில் உழைப்பாளிகளின் கோரிக்கைகள், மாத ஊதியம், அவர்களின் அடிப்படைப்பிரச்சனைகள், அவர்கள் சந்திக்கும் அவலங்கள், இன்னும் இவை போன்ற உழைப்பாளிகளைப் பற்றிய பல விஷயங்கள் உலகம் முழுவதும் பேசப்படும் அல்லது அலசப்படும்.
ஆனால் அன்றைய தினத்திற்கு முன்போ அல்லது பின்போ உழைப்பாளிகளை ஆளும் வர்க்கத்தினர் எவரும் , எந்த முதலாளிகளும் கண்டு கொள்வதேயில்லை.
உலகம் முழுவதும் உழைப்பாளர்களுக்காக உழைப்பாளிகள் பட்ட கஷ்டங்களும் அதற்கான சான்றுகளும்
18ஆம் நூற்றாண்டின் இறுதியிலோ 19 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலோ பல வளர்ச்சி அடைந்த நாடுகளில் உழைப்பாளிகள் முதலாளிகளால் மிக மோசமான முறைகளில் நடத்தப்பட்டனர்.எந்தளவிற்கெனில் நாளொன்றுக்கு 12முதல் 18 மணி நேரம் கட்டாயம் உழைத்தே ஆக வேண்டும் என்றொரு நிலை அன்றிருந்தது.
இக்கொடுமைக்கெதிராக பல நாடுகளில் ஆங்காங்கே எதிர்ப்புக் குரல்களும் கண்டனக்கனைகளும் தோன்ற ஆரம்பித்தன.
இங்கிலாந்தில்
உழைப்பாளிகள் நாளொன்றுக்கு 10 மணி நேரம் தான் வேலை செய்வார்கள்என்ற 6 அம்சக்கோரிக்கைகளில் இதை பிரதான கோரிக்கையாக வைத்து சாசன இயக்கம்என்றொரு இயக்கம் தோற்றுவிக்கப்பட்டது.
ஃபிரான்ஸில்
1830 களில் நெசவுத்தொழிலாளிகள் 15 மணி நேரம் வேலையில் ஈடுபடுத்தப்பட்டனர். இதை எதிர்த்து 1834 ஆம் ஆண்டு ஜனநாயகம்அல்லது மரணம் என்றொரு கோஷத்தை முன்வைத்து நெசவுத்தொழிலாளிகள் பெரும் கிளர்ச்சியில் ஈடுபட்டனர் .
அமெரிக்காவில்
1832 ல் பொசுடனில் கப்பலில் பணியாற்றிக்கொண்டிருந்த தச்சுத்தொழிலாளிகள் 10 மணி நேர வேலை என்றொரு கோரிக்கையை முன்வைத்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
1835ல் பிலடெல்பியாவிலும்,பென்சில்வேனியாவிலும் இதே கோரிக்கையை முன்வைத்து உழைப்பாளிகளால் வேலை நிறுத்தம் செய்யப்பட்டது.
1877 ல் பென்சில்வேனியாவில் சுரங்கத்தொழிலாளிகளும், இரயில்வே தொழிலாளிகளும் குறைவான வேலை நேரத்தை வலியுறுத்தி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
1886 ல் பல்வேறு மாநிலங்களில் தொழிலாளர் இயக்கங்களை ஒன்றினைத்து அமெரிக்க தொழிலாளர் கூட்டமைப்பு என்ற இயக்கம் 8 மணி நேர வேலை என்ற கோரிக்கையை முன்வைத்து தொடர்ந்து வேலை நிறுத்தங்களில் ஈடுபட்டதோடு 1886 மே 1 அன்று நாடு தழுவிய வேலை நிறுத்தத்திற்கு அறை கூவல் விடுத்தது இதுவும் மே தினம் உருவாக முக்கிய காரணம் என்று சொல்லப்படுகிறது.
ஆஸ்திரேலியாவில்
1856 ல் 8 மணி நேர வேலை என்ற கோரிக்கையை முன்வைத்து மெல்போர்னில் கட்டிடத்தொழிலாளிகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வெற்றியும் பெற்றனர்.
ரஷ்யாவில்
1895 க்கும் 1899க்கும் இடைப்பட்ட காலங்களில் பல நூற்றுக்கணக்கான வேலை நிறுத்தங்கள் குறைவான நேரம் வேலை என்ற கோரிக்கையை முன்வைத்து நடைபெற்றன.
சிக்காக்கோவில்
1886 மே 3அன்று ஒரு பிரபலமான நிறுவனத்தின் வாசலில் 3000 க்கும் மேற்பட்ட உழைப்பாளிகள் கண்டனக்கூட்டம் நடத்திக்கொண்டிருக்கும்போது 4 தொழிலாளிகள் காவல் துறையினரால் சுடப்பட்டு பலியாயினர். இதைக் கண்டிக்கும் வகையில் மே4 அன்று ஏமார்க்கெட் சதுக்கத்தில் 2500 தொழிலாளிகள் கலந்து கொண்டு மாபெரும் கண்டனக்கூட்டத்தை நடத்திக்கொண்டிருக்கும்போது திடீரென்று கூட்டத்திற்குள் வெடிகுண்டு ஒன்று வீசப்பட்டதில் காவல்துறையினரில் ஒருவர் பலியாகவே, உடனே போலிஸார் கூட்டத்தை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தியதோடு மட்டுமல்லாமல் தொழிலாளர் தலைவர்களை கைதுசெய்து வழக்கும் தொடுத்து 1886 மே21 அன்று 8 பேருக்கு தூக்குத்தண்டணையும் பெற்றுக்கொடுத்தனர்.
1887 ஆம் ஆண்டு அந்த 7பேரும் தூக்கிலிடப்பட்டனர் இவர்களின் இறுதி ஊர்வலத்தில் 5 இலட்சம் பேர் கலந்துகொண்டனர்.
8 மணி நேர வேலைக்கான போராட்டமும் சிக்காக்கோ தியாகிகளின் தியாகமும் தான் இன்று மே 1 அன்று உழைப்பவர் தினமாக வருடந்தோறும் அனுசரிக்கப்படுகிறது.
பாரீசில்
1889 ஜீலை 14 அன்று பாரீசில் 18 நாடுகளில் இருந்து 400 பிரதிநிதிகள் கலந்து கொண்டகூட்டத்தில் 8 மணி நேர வேலை போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வது எனவும் சிகாகோ சதியை இம்மாநாடு வன்மையாகக் கண்டிப்பதோடு 1890 மே 1 அன்றிலிருந்து அனைத்து நாடுகளிலும் தொழிலாளர் இயக்கங்களை நடத்திட வேண்டும் என்றும் அறை கூவல் விடுக்கப்பட்டது.
அன்றிலிருந்துதான் வருடந்தோரும் மே 1 அன்று உலகம் முழுவதிலும் உழைப்பாளர் தினம் அனுசரிக்கப்படுகிறது.
                                                                           
இப்படி உலகம் முழுவதும் தொழிலாளர்களுக்காக பட்ட கஷ்டங்கள் இன்று வரை தீர்ந்தபாடில்லை. மிக கைசேதத்திற்குறிய விஷயம் என்னவெனில் இது நாள் வரை பல நிறுவனங்களிலும் தொழிற்சாலைகளிலும் அலுவலகங்களிலும் உழைப்பாளிகள் கொத்தடிமைகளாகவும் அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டவர்களாகவும் மிகவும் பின்தங்கியவர்களாகவுமே நடத்தப்பட்டுக்கொண்டிருக்கின்றனர் அவர்களின் அடிப்படைப்பிரசச்னைகள் இன்றுவரை தீர்க்கப்படவில்லை. அவர்கள் செல்லொணாத்துன்பங்களை சந்தித்து வருகின்றனர் சிறுவர்கள் உழைப்பாளிகளாக கொத்தடிமைகளாக நடத்தப்பட்டுக்கொண்டிருக்கின்றனர். புத்தகங்களை சுமக்கிற வயதில் சுமைகளைத்தூக்குகின்ற அவல நிலை உழைப்பாளிகளுக்காக எப்படிப்பட்ட போராட்டங்கள் வேலை நிறுத்தங்கள் செய்யப்பட்டாலும் முதலாளிகளாலும் ஆளும் வர்க்கத்தினராலும் உழைப்பாளிகளுக்கு தீர்வுகள் கிடைக்கப் போவதில்லை.

தேவைக்கேற்ற கூலி :
 வேலைக்குத் தகுந்த கூலியை வழங்குகின்ற தனிப்பட்ட முதலாளிகள் தனது தொழிலாளிகளின் எல்லாத் தேவைகளையும் நிறைவு செய்து கொடுக்க வேண்டும் என்று இஸ்லாம் கட்டாயப்படுத்தா விட்டாலும் அவர்களுக்கு வழங்கப்படுகின்ற கூலி அவர்களது நியாயமான தேவைகளை நிறைவு செய்யாத பட்சத்தில் முறையான ஆய்வுக்குப் பின் அரசு அவர்களது தேவைகளை சரிசெய்து கொடுக்க பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும் என்று இஸ்லாம் வலியுறுத்துகிறது.
இடைவேளை ஓய்வு :
 ஓடிக் கொண்டேயிருக்கும் ஒவ்வொன்றுக்கும் ஓய்வு அவசியம். ஒருவன் தொடர்ந்து ஒரு வேலையில் ஈடுபடுகிற போது ஒருவிதமான சோர்வுக்கும், விரக்திக்கும் உள்ளாகிறான்.
 ஓய்வே கொடுக்காமல் தொழிலாளர்களைத் தொடர்ந்து வேலைக்குட்படுத்தி அதனால் அவர்கள் மனநிலை பாதிப்புக்குள்ளாகி முறையாக பணியில் ஈடுபடாததால் மேலநாட்டுக் கம்பெனி ஒன்று நஷ்டத்தில் மூழ்கிப் போனதாக ஒரு செய்தி உண்டு.
 சுதாரண பொழுதுபோக்கு அம்சமான மூன்று மணிநேர சினிமாவுக்கே இன்டர்வெல் தேவைப்படுகிறபோது, உழைப்பினிடையே ஓய்வென்பது உறுதியான விஷயம்.
 இதைக் கருத்தில் கொண்டு தான் நபி (ஸல்) அவர்கள் இடையிடையே உங்கள் உடல்களுக்கு ஓய்வு கொடுப்பதின் மூலம் உங்களது உள்ளங்களை சந்தோசப்படுத்திக் கொள்ளுங்கள்" என்று நவின்றுள்ளார்கள்.
 இஸ்லாம் ஒரு பரிபூரண மார்க்கம் இதில் அலசப்படாத அம்சங்களே இல்லை எனலாம். இறைவனைப் பற்றி யோசிக்கின்ற மதங்கள் மனிதனைப் பொருட்படுத்துவதில்லை. மனிதனை யோசிக்கின்ற இடங்கள் இறைவனைப் பொருட்படுத்துவதில்லை. மனிதன், இறைவன் இரண்டையும் முறையாக வைத்துப் பார்க்கும் மார்க்கம் இஸ்லாம் மட்டுமே
 தொழிலாளர் வர்க்கப் போராட்டம் மிக நீண்ட வரலாற்றை உடையது. 8 மணி நேர வேலைகளை போராடி உயிர்த்தியாகம் செய்த அந்த தியாகிகளை கேலி செய்யும் விதமாக, வெற்றுக் கோஷ உரிமைகளாக இன்று மே தின போராட்டத்தை மாற்றிப் போட்டு விட்டார்கள்.
 இப்பொழுது மே தினம் வெறுமனே ஊர்வலங்களாகவும், கண்டனக் கூட்டங்களாகவும்,வெகு விமரிசையாகக் கொண்டாடப்படும் ஒரு விழாவாகவும் மாறிப் போய்விட்டது. மே தினத்தை ஊர்வலமாகக் கொண்டாடுவதின் மூலம் மட்டும் தொழிலாளர் வர்க்கத்தின் நியாயமான உரிமைகளை அடைந்துவிட முடியும் என்பது சாத்தியமற்ற ஒன்று.
 உழைப்பாளிகளின் உரிமைகளை உலகிற்கு உரிய முறையில் உரைத்தது இஸ்லாம் தான் என்று அவர்கள் தெரிந்து கொள்வார்களே யானால் மெய்மறந்து விடுவார்கள்.
கூலி உத்திரவாதம்:
 இன்றைய உலகில் சில முதலாளிகள்,தொழிலாளர்களிடம் குறிப்பிட்ட கூலி பேசிவிட்டு வேலை முடிந்த பின் குறைத்துக் கூலி தருவதையும்,அதிகப்படியான வேலை வாங்கிவிட்டு குறைவான கூலி கொடுப்பதையும், சிலர் கூலியே கொடுக்காமல் உழைப்பாளிகளை கொத்தடிமைகளாக வைத்து கொத்துப் பரோட்டாவைப்போல குத்திக் குதறுவதையும் கண்கூடாகக் கண்டு வருகிறோம்.
 ஃபாரினுக்கு உன்னை அனுப்புகிறேன்,பக்காவான வேலை வாங்கித் தருகிறேன்,பத்தாயிரம் சம்பளம் கிடைக்கும் என பந்தாவாய் அழைத்துக் கொண்டு போய் பாஷை தெரியா தேசத்தில் பாஸ்போர்ட்டை யும் பறித்துக் கொண்டு பாலைவனத்திலேயே ஒட்டகத்தோடு ஒரு ஒட்டகமாய் மனித வாழ்வை பாழ்பண்ணச் செய்யும் போலி புரோக்கர்கள் நிறைந்த உலகமிது.
 இதுமாதிரியான அக்கிரமங்களை இஸ்லாம் வன்மையாகக் கண்டிக்கின்றது. எந்த ஒரு சின்ன வேலையானாலும் கூலி பேசப்பட்டு விட்டால் அதில் குறைவு செய்திட எவருக்கும் அனுமதி இல்லை.
 கூலி வழங்குவதை முதலாளிமார் தொழிலார்களுக்குச் செய்யும் உபகாரம் என்று சொல்லவில்லை. அதை உழைப்பாளியின் உரிமை என பிரகடனப்படுத்துகிறது இஸ்லாம்.
இது மறுமைக்கு மட்டுமான செய்தியல்ல. இம்மையில் புரியப்படும் உடல் உழைப்புக்கும் சேர்த்துத்தான் என்பதை நாம் விளங்கியாக வேண்டும்.
 கூலி வழங்குவதால் முதலாளி மதிப்பிற்குரியவனுமல்ல. கூலி பெறுவதால் தொழிலாளி கேவலத்திற்குரியவனுமல்ல. எனவே,என்னிடம் கைநீட்டி சம்பளம் வாங்குபவன் தானே என்று ஒரு முதலாளி தன் தொழிலாளியை இளக்காரமாய் எண்ணக் கூடாது. அவ்வாறெண்ணுவது அறியாமைக் காலச் செயல் என்கிறது இஸ்லாம்.

தொழிலாளியே கூலி வாங்க மறந்திட்டாலும் அதைப் பத்திரப்படுத்தி பாதுகாத்து வைத்து உரிய நேரத்தில் ஒப்படைக்க வேண்டும். அது ஒரு அமானிதம். பனூ இஸ்வேலர் காலத்தில் குகையில் மாட்டிக் கொண்ட மூவரில் ஒருவர், தன்னிடம் வேலை செய்த கூலிக்காரனின் கூலியைப் பத்திரப்படுத்தி,அதற்கொரு ஆடு வாங்கி, அது ஆட்டு மந்தையாகி அவன் எதேச்சையாக திரும்பி வந்து கேட்ட போது,ஒப்படைத்த வரலாறும், அந்த நற்செயலால் ஆபத்திலிருந்து அவர் காப்பாற்றப்பட்டதும் நாம் அறிந்த ஒன்றே.
 சில நேரங்களில் விலை மதிப்புள்ள பொருட்களை அவசர நிமித்தம் குறைந்த விலைக்கு விற்க வேண்டிய நிர்ப்பந்த நிலைக்கு ஒரு மனிதன் உள்ளாக வேண்டியது வரும். அது மாதிரியான கட்டங்களில், வந்தது வரை சுருட்டுவோம் என்ற பாணியில் அவற்றை அடிமாட்டு விலைக்கு வாங்கி தன் அலமாரியில் வைத்து அழகு பார்க்கச் சொல்லவில்லை இஸ்லாம். அவனது சூழ்நிலை கருதி உரிய விலையையே வழங்கச் சொல்கிறது.
 இதுபோல, ஒரு தொழிலாளி நிர்ப்பந்த நிலையில் குறைந்த கூலிக்கு பணி செய்ய வருகிறபோது, ரொம்ப நல்லதாப் போச்சு என்று நினைத்து கூலியைக் குறைத்து விடக்கூடாது. அவனது நிர்ப்பந்த நிலை புரிந்து சற்று நிரப்பமாகவே அவனது திறமைக்கேற்ப கூலி வழங்கப்பணிக்கிறது.
அப்படி இல்லை என்றால் நாளை மறுமையில் அவனுக்கு எதிராக நாயகம் (ஸல்) அவர்கள் வாதாடுவார்கள் என்பதை நாம் நினைவில் வைக்க வேண்டும்.
ஏமாற்றப்பட்ட உழைப்பாளிக்காக நாளை நான் வாதிடுவேன்.
حَدَّثَنِى بِشْرُ بْنُ مَرْحُومٍ حَدَّثَنَا يَحْيَى بْنُ سُلَيْمٍ عَنْ إِسْمَاعِيلَ بْنِ أُمَيَّةَ عَنْ سَعِيدِ بْنِ أَبِى سَعِيدٍ عَنْ أَبِى هُرَيْرَةَ - رضى الله عنه - عَنِ النَّبِىِّ - صلى الله عليه وسلم - قَالَ « قَالَ اللَّهُ ثَلاَثَةٌ أَنَا خَصْمُهُمْ يَوْمَ الْقِيَامَةِ ، رَجُلٌ أَعْطَى بِى ثُمَّ غَدَرَ ، وَرَجُلٌ بَاعَ حُرًّا فَأَكَلَ ثَمَنَهُ ، وَرَجُلٌ اسْتَأْجَرَ أَجِيرًا فَاسْتَوْفَى مِنْهُ ، وَلَمْ يُعْطِ أَجْرَهُ »
{صحيح البخاري}

இவர்களெல்லாம் போராடுவதற்கு 1434 ஆண்டுகளுக்கு முன்னாலே உழைப்பாளிகள் எதற்காக பாடுபட்டார்களோ அவை அனைத்தையும் இஸ்லாம் வழங்கிவிட்டது ஆக இஸ்லாத்தால் மட்டுமே அவர்களின் அடிப்படைப் பிரச்சனைகளை தீர்க்க முடியும். இஸ்லாம் என்ற கொள்கையால் மட்டுமே அவர்களின் வாழ்வாதாரப்பிரச்னைகளை களைய முடியும்.
عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَعْطُوا الْأَجِيرَ أَجْرَهُ، قَبْلَ أَنْ يَجِفَّ عَرَقُه
தொழிலாளியின் வியர்வை உலறும் முன் அவனது கூலியை வழங்கிவிடுமாறு பணிக்கிறார்கள் நபி (ஸல்) அவர்கள். (இப்னுமாஜா) தினக்கூலி என்றால் பகலின் முடிவிலும், வாரக்கூலி என்றால் வாரத்தின் இறுதியில், மாதக்கூலி என்றால் மாதக் கடைசியில் சம்பளம் வழங்கப்பட்டாக வேண்டும். அதில் தாமதம் செய்யக்கூடாது.
 "வாக்களித்துவிட்டு மாறு செய்பவன்,சுதந்திரமனிதனை அடிமைச் சந்தையில் விற்று அதன் கிரயத்தை உண்டவன், வேலைக்கு ஒருவனை அமர்த்தி, குறிப்பிட்ட கூலியையும் பேசி,வேலையையும் வாங்கிவிட்டு பேசிய கூலியை "ஸ்வாஹா" செய்தவன் ஆக இம்மூன்று கிரிமினல்களுக்கெதிராக நின்று நாளை மறுமையில் நான் இறை நீதிமன்றத்தில் வழக்காடுவேன்" என்று நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள் (புகாரி)
 அநீதி இழைக்கப்பட்ட பாட்டாளி வர்க்கத்திற்கு ஆதரவாகவும், உரிய கூலியை வழங்க மறுத்த முதலாளி வர்க்கத்திற்கு எதிராகவும் நபி (ஸல்) அவர்கள் நிற்பார்கள் என்பதிலிருந்து தொழிலாளர் நலத்தில் இஸ்லாம் கொண்டுள்ள அதிகப்படியான அக்கறையை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது அல்லவா?
சக்திக்கேற்ற வேலை :
 வேலைக்கமர்த்திவிட்டோம், இனி அவன் நமது சொல்படியே நடக்க வேண்டும் என்ற ரீதியில் அதிக வேலை கொடுத்து தொழிலாளியை சக்கையாய் பிழிந்தெடுக்கக் கூடாது.

பணி நேரத்தைத் தாண்டி வேலை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டால், அதற்கான ஓ.டி. சம்பளம் கொடுக்கப்பட வேண்டும். காரணம், "தொழிலாளிகளை நீங்கள் சிரமத்திற்குள்ளாக்க வேண்டாம். அதிகப் படியான சிரமம் என்றால் அதில் அவர்களுக்கு உதவி செய்யுங்கள்" என் பது நபிமொழி.
 பளுவான சுமையை தூக்க முடியாமல் தொழிலாளி சிரமப்படுகிற போது பார்த்துக் கொண்டு சும்மாயிருக்காதீர்கள். நீங்களும் சேர்ந்து அவனுக்கு உதவி செய்யுங்கள் وَلَا تُكَلِّفُوهُمْ مَا يَغْلِبُهُمْ فَإِنْ كَلَّفْتُمُوهُمْ فَأَعِينُوهُمْ (بخاري) என்பதும் நபிமொழியே.
இன்னும் இறை மறையில் சொல்லும் போது
لَا يُكَلِّفُ اللَّهُ نَفْسًا إِلَّا وُسْعَها அல்லாஹ் எந்த மனிதரையும் அவனது சக்திக்கு அதிகமாக (பொறுப்புகளைச் சுமத்தி) சிரமப்படுத்துவதில்லை. (அல்பகரா:286) (தொழுகை,நோன்பு, ஹஜ், இன்னபிற) வணக்க வழிபாடுகளில் கூட சக்திக்கு மீறிய அளவில் உங்களை நான் சிரமப்படுத்த மாட்டேன் என்று இறைவன் தன் திருமறையில் கூறுகிறபோது, தொழிலாளர்களை கசக்கிப் பிழிந்து வேலை வாங்கும் கொடுமையை எங்ஙனம் அவன் சகித்துக் கொள்வான்?
 உலகம் முழுவதும் எட்டு மணி நேர வேலை என உறுதி செய்யப்பட்டு நடைமுறைப் படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது. அதைத் தாண்டி அலுவலகத்தில் ஒரு தொழிலாளியை அமர வைத்து அலைக்கழிக்கக் கூடாது. அவனுக்கென்று குடும்பம் உள்ளது. அன்றாட அலுவல்கள் காத்திருக்கின்றன. அவற்றை அவன் ஆற்றுவதற்கு எந்த வகையிலும் இடையூறு தரக்கூடாது.
.அவன் தேவையை நிறைவேற்றுவது
وَحَدَّثَنِى أَبُو الطَّاهِرِ أَحْمَدُ بْنُ عَمْرِو بْنِ سَرْحٍ أَخْبَرَنَا ابْنُ وَهْبٍ أَخْبَرَنَا عَمْرُو بْنُ الْحَارِثِ أَنَّ بُكَيْرَ بْنَ الأَشَجِّ حَدَّثَهُ عَنِ الْعَجْلاَنِ مَوْلَى فَاطِمَةَ عَنْ أَبِى هُرَيْرَةَ عَنْ رَسُولِ اللَّهِ -صلى الله عليه وسلم- أَنَّهُ قَالَ « لِلْمَمْلُوكِ طَعَامُهُ وَكِسْوَتُهُ وَلاَ يُكَلَّفُ مِنَ الْعَمَلِ إِلاَّ مَا يُطِيقُ ».
{صحيح مسلم}
ஷுஐப் (அலை) மூசா நபிக்கு சொன்னது
أعوذ بالله من الشيطان الرجيم {قَالَتْ إِحْدَاهُمَا يَا أَبَتِ اسْتَأْجِرْهُ إِنَّ خَيْرَ مَنِ اسْتَأْجَرْتَ القَوِيُّ الأَمِينُ * قَالَ إِنِّي أُرِيدُ أَنْ أُنْكِحَكَ إِحْدَى ابْنَتَيَّ هَاتَيْنِ عَلَى أَنْ تَأْجُرَنِي ثَمَانِيَ حِجَجٍ فَإِنْ أَتْمَمْتَ عَشْرًا فَمِنْ عِنْدِكَ وَمَا أُرِيدُ أَنْ أَشُقَّ عَلَيْكَ سَتَجِدُنِي إِنْ شَاءَ اللهُ مِنَ الصَّالِحِينَ * قَالَ ذَلِكَ بَيْنِي وَبَيْنَكَ أَيَّمَا الأَجَلَيْنِ قَضَيْتُ فَلا عُدْوَانَ عَلَيَّ وَاللهُ عَلَى مَا نَقُولُ وَكِيلٌ} [القصص: 26 – 28]..

தன் இரு மகள்களுக்கு மூஸா அலை உதவி செய்த காரணத்தினால் நாடுபெயர்ந்து ஓர் நாடோடியாக வந்த மூஸா அலை அவர்களை தன்னிடத்தில் வேலைக்கு சேர்க்கின்றபோது ஷுஐப் அலை அவர்கள் மூஸா அலை அவர்களை பார்த்து கூறிய வார்த்தை. நீங்கள் நாடினால் என்னிடத்தில் பத்தாண்டோ அல்லது எட்டாண்டோ வேலை செய்யலாம். அது உங்களது விருப்பம். உங்களை சிரமத்தில் ஆக்குவதை நான் விரும்பவில்லை என்று ஷுஐப் அலை கூறிய வார்த்தைகளை இன்றைக்கிருக்கின்ற முதலாளிகள் யோசிக்கவேண்டும். தொழிலாளியின் மீது அளவுக்கு அதிகமான, சக்திக்கு அப்பாற்பட்ட வேலை மூட்டைகளை சுமத்தி , அட்டையாய் உழைப்பாளிகளின் இரத்தத்தை தள்ளுகின்ற முதலாளிகளே இன்று அதிகம்.
தொழிலாளர்களிடத்தில் மென்மையோடு நடந்து கொள்ளுதல்
பத்து ஆண்டுகாலம் பணி செய்த பாலகன் அனஸிடத்தில் ஏன் செய்தாய் எதற்கு செய்தாய் என்று கேள்விக்கனைகளை தொடுக்காத காருண்ய நபி
عن ثابت البناني عن أنس قال ما مسست بيدي ديباجا ولا حريرا ولا شيئا كان ألين من كف رسول الله صلى الله عليه وسلم ولا شممت رائحة قط أطيب من ريح رسول الله صلى الله عليه وسلم ولقد خدمت رسول الله صلى الله عليه وسلم عشر سنين فوالله ما قال لي أف قط ولا قال لشيء فعلته لم فعلت كذا ولا لشيء لم أفعله ألا فعلت كذا . هذا حديث صحيح .
{معجم ابن عساكر}
வாய்க்கு வந்தபடி திட்டிய அபுதர் ரலி அவர்களை கண்டித்த பெருமானார்.
حديث أَبِي ذَرٍّ عَنِ الْمَعْرُورِ، قَالَ: لَقِيتُ أَبَا ذَرٍّ بِالرَّبَذَةِ، وَعَلَيْهِ حُلَّةٌ وَعَلَى غُلاَمِهِ حُلَّةٌ، فَسَأَلْتُهُ عَنْ ذلِكَ، فَقَالَ: إِنِّي سَابَبْتُ رَجُلاً فَعَيَّرْتُهُ بِأُمِّهِ، فَقَالَ لِيَ النَّبِيُّ صلى الله عليه وسلم: يَا أَبَا ذَرٍّ أَعَيَّرْتَهُ بِأُمِّهِ إِنَّكَ امْرُؤٌ فِيكَ جَاهِلِيَّةٌ، إِخْوَانُكُمْ خَوَلُكُمْ جَعَلَهُمُ اللهُ تَحْتَ أَيْدِيكُمْ، فَمَنْ كَانَ أَخُوهُ تَحْتَ يَدِهِ فَلْيُطْعِمْهُ مِمَّا يَأْكُلُ، وَلْيُلْبِسْهُ مِمَّا يَلْبَسُ، وَلاَ تُكَلِّفُوهُمْ مَا يَغْلِبُهُمْ، فَإِنْ كَلَّفْتُمُوهُمْ فَأَعِينُوهُمْ
{صحيح البخاري}
அபுதர் ரலி அவர்கள் ஒரு மனிதனை தகாத வார்த்தைகளால் திட்டிவிடுகிறார்கள். பிறகு பெருமானார் ஸல் அவர்கள் அபுதரே அவருடைய அம்மாவை வைத்து அவரை நீ திட்டிவிட்டாயா. உன்னிடத்தில் அய்யாமுல் ஜாஹிலிய்யாவின் பழக்கம் இருக்கிறது என்று பெருமானார் எச்சரித்து விட்டு உங்களுடைய பணியாளர்கள் உங்களது சகோதரர்களாக இருக்கிறார்கள் அல்லாஹ் அவர்களை உங்களது கட்டுப்பாட்டின் கீழே ஆக்கியுள்ளான் எனவே எவருடைய சகோதரர் அவரது கட்டுப்பாட்டின் கீழ் இருக்கின்றாரோ அவர் சாப்பிடுகின்ற உணவை அவருக்கு கொடுக்கட்டும், அவர் உடுத்துகின்ற ஆடையை அவருக்கு வழங்கட்டும் இன்னும் அவரால் இயலாத காரியத்தை அவர் மீது சுமத்த வேண்டாம் என்று கூறுவார்கள்.

இங்கு பெருமானார் ஸல் அவர்கள் சகோதர்ர்களை பணியாளர்களுக்கு ஒப்பிட்டுவிட்டு பிறகு பணியாளர்களுக்கு ஒரு முதலாளி எந்த உரிமைகளை தவறாமல் வழங்கவேண்டுமோ அதே உரிமையை உன் சகோதரனுக்கும் வழங்கு என்று சூசகமாக உணர்த்திக்காட்டுகிறார்கள்.

மன்னிக்கும் உள்ளம் வேண்டும்.
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ سَعِيدٍ الْهَمْدَانِىُّ وَأَحْمَدُ بْنُ عَمْرِو بْنِ السَّرْحِ - وَهَذَا حَدِيثُ الْهَمْدَانِىِّ وَهُوَ أَتَمُّ - قَالاَ حَدَّثَنَا ابْنُ وَهْبٍ قَالَ أَخْبَرَنِى أَبُو هَانِئٍ الْخَوْلاَنِىُّ عَنِ الْعَبَّاسِ بْنِ جُلَيْدٍ الْحَجْرِىِّ قَالَ سَمِعْتُ عَبْدَ اللَّهِ بْنَ عَمْرٍو يَقُولُ جَاءَ رَجُلٌ إِلَى النَّبِىِّ -صلى الله عليه وسلم- فَقَالَ يَا رَسُولَ اللَّهِ كَمْ نَعْفُو عَنِ الْخَادِمِ فَصَمَتَ ثُمَّ أَعَادَ عَلَيْهِ الْكَلاَمَ فَصَمَتَ فَلَمَّا كَانَ فِى الثَّالِثَةِ قَالَ « اعْفُوا عَنْهُ فِى كُلِّ يَوْمٍ سَبْعِينَ مَرَّةً »
{سنن ابي داؤد}

பெருமானாரிடத்தில் ஒர நபர் வந்து பணியாளர்களை ஒரு பொழுதுக்கு எவ்வளவு மன்னிக்கவேண்டும் என்று கேட்டார். பெருமானார் மௌனமாக இருந்தார்கள். மீண்டும் கேட்டார். மீண்டும் மௌனமாக இருந்தார்கள். மூன்றாவது முறையாக கேட்டபோது ஒரு பொழுதுக்கு எழுவது முறை மன்னித்துவிடுமாறு கூறினார்கள்.

பெருமானார் கேட்டவுடன் பதில் கூறாமல் மௌனம் சாதித்ததிலிருந்தும் பிறகு எழுபது முறை என்று கூறியதிலிருந்தும் நாம் விளங்கவேண்டிய செய்தி பணியாளர்கள் தவறு செய்தால் திருத்தலாமே தவிற திட்டுவது, கடுகடுப்பது, கோபத்தை கக்குவது போன்ற செயல்பாடுகளில் இறங்குவது இஸ்லாமிய வழிகாட்டுதலுக்கு எதிரானதும் பெருமானாரின் சுன்னத்திற்கு முரனானதும் கூட. பசியின் கோரத்தால், வருமையின் வாட்டத்தால் வேறு வழியில்லாமல் கடைகளுக்கு வருகின்ற சிறுவர்களை கசக்கி புளிவதோடு நிற்காமல் வசைபாடுவது, அடித்து நொறுக்குவது, சிறுந்தவறுகளும் மலை போன்று பார்க்கப்படுவது உழைப்பாளிகளை தெருநாயை விடக் கேவலமாக நடத்துவதற்குச் சமம் என்பது மட்டுமல்ல மனித நேயமற்ற, ஈவு இறக்கமற்ற செயல்களுல் கட்டுபட்டுதும் ஆகும். பெருமானாரிடத்தில் சிறுவராக வேலை செய்த அனஸ் ரலி அவர்களை பெருமானார் நடத்திய விதம், அனுகிய முறை, பழகிய பழக்கம் இன்றைக்கு உலகத்தில் நம்பர் ஒன் வியாபாரியாக இருக்கக்கூடியவர்களுக்கும் பாடம் கற்பிக்கின்றது. இஸ்லாம் உழைத்து வாழச் சொல்கிறது, உழைப்பவனை கண்ணியப்படுத்துகிறது, உழைப்பாளிகளின் உரிமையை காக்குகிறது. இந்த அகிலமும் உழைப்பாளின் உரிமைகளை காக்கவும் சிறக்கவும் அல்லாஹ் நல்லருள் புரிவானாக.
உழைப்புக்கு ஊதியம் எந்த அளவு துரிதமாக கொடுக்க வேண்டுமோ அதே போன்று வியர்வை வெளியேறும் அளவுக்கு நன்றாக முதலாளிக்கு உழைத்தும் கொடுக்க வேண்டும்
عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ، قَالَ:
قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَعْطُوا الْأَجِيرَ أَجْرَهُ، قَبْلَ أَنْ يَجِفَّ عَرَقُه
 என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்
இஸ்லாம் ஹலாலான உழைப்பை வலியுறுத்துகிறது.இறைமறையில் (ஜுமுஆ)தொழுகை முடிந்தவுடன் பூமியில் பரவி சென்று இறையருளை தேடுங்கள் (63:10)
 தனது கையால் உழைத்துச் சாப்பிடுகின்ற உணவைவிட சிறந்த உணவை வேறு யாரும் சாப்பிட முடியாது
 நபிமார்களும் உழைத்துள்ளார்கள்
ஆதம்(அலை)விவசாயம்
இப்றாஹிம் நபி விவசாயம்
லூத் நபி விவசாயம்
யஸஃ நபி விவசாயம்
ஸாலிஹ் நபி வியாபாரம்
ஹாரூன் நபி வியாபாரம்
நூஹ் நபி தச்சுத் தொழில்
ஜகரிய்யா நபி தச்சுத் தொழில் இஸ்மாயீல் நபி வேட்டையாடுதல்
யஃகூப் நபி ஆடு மேய்தல்
ஷூஐப் நபி ஆடுமேய்தல்
மூஸா நபி ஆடு மேய்தல்
லுக்மான் நபி ஆடுமேய்தல்
நபி(ஸல்) ஆடுமேத்தல்
 சரித்தரத்தை உற்று நோக்கும் போது நபிமார்களும், வலிமார்களும்,அறிஞகர்க ளும் உழைத்துள்ளார்கள்.
ஹரமான உழைப்பால் ஏற்படுகின்ற நஸ்டம்
 1.நல்ல அமல் செய்ய வாய்ப்பு கிடைக்காது
2.அவ்வாறு செய்தால் அதில் இன்பம் இருக்காது
3.நற்செயல்கள் ஏற்கபடாது
4.தூஆ ஒப்புக்கொள்ளபடாது
5.செல்வத்தில் பரகத் இருக்காது
6.கெட்ட செய்ய தூண்டும்
7.குழந்தைகள் மோசமாகிவிடும்
8.ஹராமான பனம் வந்த வேகத்தில் சென்றுவிடும்
9.ஹராமான உணவால் வந்த சதை நரகத்திற்கே
10.அதை சாப்பிவதால் அல்லாஹ், நபி(ஸல்) வின் சாபம்
11.சுவனம் புகமாட்டான்
என எண்ணற்ற தீமைகள்
சக்தி இருந்தும் சுயமாக சம்பாதிக்காமல் எப்போதும் அடுத்தவர்களின் சம்பாத்தியத்தில் உட்கார்ந்து சாப்பிடுபவன் நரகவாதி

عَنْ عِيَاضِ بْنِ حِمَارٍ الْمُجَاشِعِيِّ رضي الله عنه قَالَ وَأَهْلُ الْجَنَّةِ ثَلَاثَةٌ ذُو سُلْطَانٍ مُقْسِطٌ مُتَصَدِّقٌ مُوَفَّقٌ وَرَجُلٌ رَحِيمٌ رَقِيقُ الْقَلْبِ لِكُلِّ ذِي قُرْبَى وَمُسْلِمٍ وَعَفِيفٌ مُتَعَفِّفٌ ذُو عِيَالٍ قَالَ وَأَهْلُ النَّارِ خَمْسَةٌ الضَّعِيفُ الَّذِي لَا زَبْرَ لَهُ الَّذِينَ هُمْ فِيكُمْ تَبَعًا لَا يَبْتَغُونَ أَهْلًا وَلَا مَالًا وَالْخَائِنُ الَّذِي لَا يَخْفَى لَهُ طَمَعٌ وَإِنْ دَقَّ إِلَّا خَانَهُ وَرَجُلٌ لَا يُصْبِحُ وَلَا يُمْسِي إِلَّا وَهُوَ يُخَادِعُكَ عَنْ أَهْلِكَ وَمَالِكَ وَذَكَرَ الْبُخْلَ أَوْ الْكَذِبَ وَالشِّنْظِيرُ الْفَحَّاشُ (مسلم) بَاب الصِّفَاتِ الَّتِي يُعْرَفُ بِهَا فِي الدُّنْيَا أَهْلُ الْجَنَّةِ وَأَهْلُ النَّارِ- كِتَاب الْجَنَّةِ وَصِفَةِ نَعِيمِهَا وَأَهْلِهَا
பொருள்- மூன்று சாரார் சுவனவாசிகள் 1, நற்காரியங்கள் செய்வதற்கு வாயப்பு வழங்கப்பட்ட, நீதமான, தர்ம் சிந்தனை கொண்ட அரசர். 2, சொந்த பந்தங்களுக்கு உதவும் இரக்க குணமுள்ள செல்வந்தர் 3,குடும்பச் சுமைகள், செலவுகள் அதிகமாக இருந்தாலும் அதற்காக ஹராமான வழியை நாடாமல் தன் சிரமத்தை சகித்துக் கொண்டு வாழும் ஏழை
நான்கு சாரார் நரக வாதிகள் – 1,பலவீனமானவர்- (சோம்பேறி) இவருக்கென சுய சம்பாத்தியம் இல்லாமல் எப்போதும் உங்களைப் பின் தொடர்வார். இப்படிப்பட்டவர்கள் (செலவுக்கு அஞ்சி) திருமணம் செய்யவும் மாட்டார்கள். சம்பாதிக்கும் வழியையும் தேட மாட்டார்கள். 2,மோசடிக்காரன்- இவன் அடுத்தவர்களை ஏமாற்றியே தனது எல்லா ஆசைகளையும் நிறைவேற்றிக் கொள்வான். அற்பமான பொருளாக இருந்தாலும் இவன் அடுத்தவர்களை ஏமாற்றித் தான் அதை அடைவான் 3, (கூடவே இருந்து குழி பறிக்கும்) துரோகி- இவன் காலையிலும், மாலையிலும் (எந்த நேரமும்) உன்னுடைய பொருள் விஷயத்திலும், உன் வீட்டார் விஷயத்திலும் உனக்கு துரோகம் செய்வான். 4,கஞ்சன் அல்லது பொய்யன் 5,அசிங்கமான வார்த்தைகளைப் பேசும் ஒழுக்கமற்றவன்
                                                                وَأَنْ لَيْسَ لِلإنْسَانِ إِلا مَا سَعَى                       
எனவே மனிதன் அவன் முயற்சித்தது தான் அவனுக்கு கிடைக்கும். ஆகையால் உழைக்கும் வர்க்கமாக, உழைப்பாளிகளை கண்ணியப்படுத்தி அவர்தம் உரிமைகளை நிறைவேற்றும்  சமூகமாக அல்லா நம் அனைவரையும் ஆக்குவானாக ஆமீன் ஆமீன் யா ரப்பால் ஆலமீன்.

குறிப்பு வழங்கியவர்கள் " நஸீர் மிஸ்பாஹீ , ஷேக் ஆதம் தாவூதி,  மௌலானா நூருல் அமீன், அப்பாஸ் ரியாஜி, ஜபருல்லாஹ் முனீரி, TMT மௌலானா மேலும் சில இணைய தளங்களிலிருந்து மேலதிக தகவலோடு பீர் FAIZY


0 comments:

Post a Comment