08 May 2015

கொஞ்சும் குழந்தைகளை கஞ்சம் கவனியுங்கள்!


ரப்புல் ஆலமீன் நமக்கு  நிறைய அருட்கொடைகளை வழங்கி இருக்கிறான் அவற்றில்  மிக உயர்ந்தது நமது பிள்ளை செல்வங்கள்தான். எனவே தான் அருள்மறையில் குழந்தை செல்வங்களை பற்றி பேசுகிற போது
لِلَّهِ مُلْكُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ يَخْلُقُ مَا يَشَاءُ يَهَبُ لِمَنْ يَشَاءُ إِنَاثًا وَيَهَبُ لِمَنْ يَشَاءُ الذُّكُورَ (49)

அல்லாஹ்வுக்கே வானங்களுடையவும் பூமியுடையவும் ஆட்சி சொந்தமாகும்; ஆகவே தான் விரும்பியவற்றை அவன் படைக்கின்றான்; தான் விரும்புவோருக்குப் பெண் மக்களை அளிக்கிறான்; மற்றும் தான் விரும்புவோருக்கு ஆண் மக்களை அளிக்கின்றான்..அல்லது அவர்களுக்கு அவன் ஆண்மக்களையும், பெண் மக்களையும் சேர்த்துக் கொடுக்கின்றான்; அன்றியும் தான் விரும்பியோரை மலடாகவும் செய்கிறான் - நிச்சயமாக, அவன் மிக அறிந்தவன்; பேராற்றலுடையவன்.(42:49,50)


அவனை தவிர வேறு யாராலும் இந்த செல்வத்தை நமக்கு கொடுக்கவே முடியாது என்பதை இந்த வசனம் நமக்கு உணத்துகிறது. இதற்கு அற்புதமான உதாரணம் செய்யதினா ஸகரிய்யா (அலைஹி) அவர்கள் தான்.

إِذْ نَادَى رَبَّهُ نِدَاءً خَفِيًّا (3) قَالَ رَبِّ إِنِّي وَهَنَ الْعَظْمُ مِنِّي وَاشْتَعَلَ الرَّأْسُ شَيْبًا وَلَمْ أَكُنْ بِدُعَائِكَ رَبِّ شَقِيًّا (4) وَإِنِّي خِفْتُ الْمَوَالِيَ مِنْ وَرَائِي وَكَانَتِ امْرَأَتِي عَاقِرًا فَهَبْ لِي مِنْ لَدُنْكَ وَلِيًّا (5) يَرِثُنِي وَيَرِثُ مِنْ آلِ يَعْقُوبَ وَاجْعَلْهُ رَبِّ رَضِيًّا (6) يَا زَكَرِيَّا إِنَّا نُبَشِّرُكَ بِغُلَامٍ اسْمُهُ يَحْيَى لَمْ نَجْعَلْ لَهُ مِنْ قَبْلُ سَمِيًّا (7) قَالَ رَبِّ أَنَّى يَكُونُ لِي غُلَامٌ وَكَانَتِ امْرَأَتِي عَاقِرًا وَقَدْ بَلَغْتُ مِنَ الْكِبَرِ عِتِيًّا (8) قَالَ كَذَلِكَ قَالَ رَبُّكَ هُوَ عَلَيَّ هَيِّنٌ وَقَدْ خَلَقْتُكَ مِنْ قَبْلُ وَلَمْ تَكُ شَيْئًا (9)

(அவர்) கூறினார்: “என் இறைவனே! நிச்சயமாக என் எலும்புகள் பலஹீனமடைந்து விட்டன; என் தலையும் நரையால் (வெண்மையாய்) இலங்குகிறது. என் இறைவனே! (இதுவரையில்) நான் உன்னிடம் செய்த பிரார்த்தனையில் பாக்கியம் இல்லாதவனாகப் போய்விடவில்லை..“இன்னும், எனக்குப் பின்னர் (என்) உறவினர்களைப்பற்றி நிச்சயமாக நான் அஞ்சுகிறேன்; மேலும், என் மனைவியோ மலடாக இருக்கிறாள்; ஆகவே, நீ உன் புறத்திலிருந்து எனக்கு வாரிசை அளிப்பாயாக! “அவர் எனக்கு வாரிசாகவும் இருப்பார், யஃகூபுடைய சந்ததியினருக்கு வாரிசாகவும் இருப்பார்; என் இறைவனே! அவரை (உன்னால்) பொருந்திக்கொள்ளப் பட்டவராகவும் நீ ஆக்கி வைப்பாயாக!”“ஜகரிய்யாவே! யஹ்யா என்ற பெயர் கொண்ட ஒரு புதல்வனை(த் தருவது) பற்றி நிச்சயமாக நாம் உமக்கு நற்செய்தி கூறுகிறோம். இதற்கு முன்னர் இப்பெயர் கொண்டவரை நாம் ஆக்கவில்லை” (என்று இறைவன் கூறினான்).(அதற்கு அவர்) “என் இறைவனே! என் மனைவியோ மலடாகவும், முதுமையின் தள்ளாத பருவத்தை நான் அடைந்தும் இருக்கும் நிலையில் எனக்கு எவ்வாறு ஒரு புதல்வன் உண்டாகுவான்?” எனக் கூறினார்.“(அது) அவ்வாறே (நடைபெரும்) என்று கூறினான். இது எனக்கு மிகவும் சுலபமானதே! முன்னர் நீர் ஒரு பொருளாகவும் இல்லாதிருந்த காலத்து, நானே உம்மை படைத்தேன்” என்று இறைவன் கூறினான். (அதற்கவர்) “என் இறைவனே! நீ எனக்கு ஓர் அத்தாட்சியை (இதற்காக) ஏற்படுத்துவாயாக!” என்று வேண்டினார்; “நீர் சவுக்கியத்துடன் இருக்கும் நிலையிலேயே மூன்று இரவு(பகல்)கள் நீர் மக்களுடன் பேச முடியாமலிருப்பீர்; (அதுவே) உமக்கு அத்தாட்சியாகும்” என்று கூறினான்.(19:2,,4,5,6,7,8,9,10)


இந்த வசனங்கள் நமக்கு அல்லாஹ்வின் ஆற்றலை தெளிவுபடுத்துவதோடு  குழந்தை செல்வம் என்பது அல்லாஹ்வால் மட்டும் தான் தரமுடியும் என்பதையும் மிக தெளிவாக உணத்துகிறது. 

எனவே அல்லாஹ்விடமிருந்து பெற்ற நம் பிள்ளை  செல்வங்களை மிக கவனமாக வளர்ப்பது ஒவ்வொரு பெற்றோரின் மீதும் கட்டாய கடமை.

ஏனென்றால் ரப்புல் ஆலமீன் நமக்கு நம் பிள்ளை செல்வங்களை தரும்போது  (பாவங்களை பார்க்கவோ,கேட்கவோ,உணரவோ,
செயல்படுத்தவோ) முடியாத நிலையில் மிக
பரிசுத்தமானவர்களாக  கொடுத்தான். அவனிடத்தில் நாம் அவர்களை திரும்ப கொடுக்கும் போதும் அப்படியே கொடுக்க வேண்டும் என்பதயும் ரப்புல் ஆலமீன் ஆசை படுகிறான்.

ஆனால் இன்று அவர்களை வெறும் புத்தகத்தை சுமப்பவர்களாக ஆக்கிவிட்டோம். காலையிலிருந்து மாலை வரை பள்ளிகூடத்தில் அவர்களின் நேரம் கழிகிறது என்றால் மாலை வீட்டுக்கு வந்த பிறகும் ஹோம் வொர்க், டியுஷன் என்று அதுவும் பள்ளிக்கூடம் சம்பந்தப்பட்டவைகளுக்காகவே கழிகிறது. எத்தனையோ தந்தைகளுக்கு  தன் பிள்ளை செல்வங்களிடம்ஒரு நாளில்  ஒரு முறை  கூட சிரித்து பேச நேரமே கிடைப்பதில்லை.  

எனவே  இந்த கோடைகால  விடுமுறையில் நம் பிள்ளை செல்வங்கள் நம்மோடு முழுமையாக இருக்கும் காலம். அவர்களுக்கு  ஹோம் வொர்கொ அல்லது டியுஷனோ அல்லது பள்ளிகூடத்தை பற்றிய எந்த ஒரு சிந்தனையும்மன அழுத்தமும்  இல்லாத காலம். இப்போது அவர்களோடு மிக நெருங்கி பழகி உண்மையிலேயே நாம் அவர்களுக்காகத்தான் உழைக்கிறோம் இவுலகில் பல சிரம்மங்களை மேற் கொள்கிறோம் என்பதை அவர்களுக்கு உணர்த்த வேண்டும்.

அதற்கு முதலில் நாம் செய்யவேண்டியது அவர்கள் மீது மிகுந்த பாசத்தோடு நடந்து கொள்ள வேண்டும்.இக்காலத்தில் நம் பிள்ளை செல்வங்களுக்கு மிக அவசியமான ஒன்று தான் நம் காட்டும் பாசம்.அவர்களிடம் பாசத்தோடும் பிரியத்தோடும் நடந்து கொள்வது காலத்தின் அவசியமாகும். நம் பாசத்தை எப்படி எல்லாம் காட்ட முடியுமோ அப்படி முழுமையாக காட்ட வேண்டும்.

முத்தம் என்பது பாசத்தின் வெளிப்பாடு.
அன்பின் வெளிப்பாடு.
கருணையின் வெளிப்பாடு.
நான் உன்மேல் பாசமாக இருக்கிறேன்.உன் உணர்வுகளை மதிக்கிறேன் என்பது போன்ற செயல்களை பிள்ளைகளிடம் வெளிப்படுத்த வேண்டும்.

நம்மில் எத்தனை பேர் பிள்ளைகளுக்கு முத்தம் கொடுக்கிறோம்....?
தோளில் தட்டி கொடுக்கிறோம்...?
தலையை வருடிக் கொடுக்கிறோம்.....?
மடியில் படுக்க வைத்து கொஞ்சுகிறோம்...?
செல்ல பெயர் வைத்து அழைக்கிறோம்...?
பிள்ளைகளின் தலையை வருடிக்கொடுப்பது அவர்களுக்கு நம்மீது இனம்புரியாத பாசத்தையும், ஈர்ப்பையும் ஏற்படுத்தும்.... இதெல்லாம் தாய் மட்டுமே செய்ய வேண்டிய செயல் அல்ல... தந்தைமார்களும் அன்பை வெளிப்படுத்த வேண்டும்.
தன் உள்ளம் கடினமாக இருக்கிறது என முறையிட்ட சஹாபியிடம்நபி ஸல் அவர்கள் அநாதையின் தலையை தடவிக் கொடுப்பீராக என ஆலோசனை கூறுகிறார்கள்.(முஸ்னத் அஹ்மத்-293)

அநாதைகளின் தலையை தடவிக் கொடுப்பது அன்பை பரிமாற்றம் செய்யக்கூடிய செயலாக அண்ணலார் வழிக்காட்டுகிறார்கள். அதே போல், தலையை தடவிகொடுப்பதன் மூலமாக பெற்றோர்,பிள்ளை இரண்டு பேருக்கும் ஒரே நேரத்தில் பாசம் ரீசார்ஜ் செய்யப்படுகிறது.
நபி ஸல் அவர்கள் கூறுகிறார்கள்:உங்கள் குழந்தைகள் ஏழு வயது எட்டும்வரைஅவர்களுடன் விளையாடுங்கள்.அடுத்த ஏழு வயதில் அவர்களுக்கு கல்வியூட்டுங்கள்.அடுத்த ஏழு வயதில் அவர்களுடன் இணக்கமாகுங்கள்.#அஹ்மத்,நஸயி.

சிறு பிள்ளைகள் மீது நாயகம் காட்டிய பாசம்!

அபூ ஹுரைரா(ரலி) அறிவிகிறார்கள்: இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (தம் பேரரான)  ஹஸன் இப்னு அலீயை முத்தமிட்டார்கள்.  அப்போது அவர்கள் அருகில் அமர்ந்துகொண்டிருந்த அக்ரஉ இப்னு ஹாபிஸ் அத்தமீமீ(ரலி), 'எனக்குப் பத்துக் குழந்தைகள் இருக்கிறார்கள்.   ஒருவரைக் கூட நான் முத்தமிட்டதில்லை' என்றார்.  அவரை ஏறெடுத்துப் பார்த்த இறைத்தூதர்(ஸல்) அவர்கள் 'அன்பு காட்டாதவர்  அன்பு காட்டப்படமாட்டார்' என்று கூறினார்கள்.புகாரி-5997

நாயகத்திடம் அன்னை கதீஜா அம்மையார்  அன்பளிப்பாக வழங்கிய ஸைத் இப்னு ஹாறிஸா (ரலி) அவர்களும் தன் தந்தையும்  சிறிய தந்தையும் தன்னோடு அழைத்த போது கூட  ஸைத் இப்னு ஹாறிஸா (ரலி) அவர்கள் செல்ல மறுத்தது நாயகம் அவர்கள் மீது காட்டிய பாசம் தான்.

பெருமானார் ஒரு முறை பிரசங்கம் செய்து கொண்டிருந்த போது சிறு பிள்ளையாக இருந்த  செய்யதினா ஹஸன் (ரலி) அவர்கள் தன் தந்தை ஹழ்ரத் அலி (ரலி) அவர்களின் சட்டையை அணிந்து கொண்டு மஸ்ஜிதுன் நபவிக்குள் தட்டு தடுமாறி வருவதை பார்த்த நாயகம் மெம்பரிலிருந்து இரங்கி தன்னுடைய பேரரை தூக்கி கொண்டு மீண்டும் மெம்பரின் மீது ஏறி பிரசங்கம் செய்தார்கள் என்று நாம் ஹதீஸ் கிதாபுகளில் பார்க்கிறோம். இதுவெல்லாம் நமக்கு நம் நாயகம்சிறு  பிள்ளைகளின் மீது  எந்தளவிற்கு பாசமாக இருந்திருக்கிறார்கள் என்பதை காட்டுகிறது.

எனவே நம் பிள்ளை செல்வங்கள் மீது நாம் காட்டும்  பாசம் என்பது மிக அவசியமான ஒன்று.

யார் நம்மில் பெரியவருக்கு மரியாதை செய்யாமலும் சிறியவருக்கு இரக்கம் காட்டாமலும் (மார்க்க) அறிஞரின் தகுதியை அறிந்து (அதற்குத்தக்கவாறு அவரிடம் நடந்து) கொள்ளாமல் இருக்கிறார்களோ அவர்கள் எனது சமுதாயத்தைச் சார்ந்தவர்கள் அல்ல என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறி‎விப்பவர் : உபாதா பின் அஸ்ஸாமித் (ர­) அவர்கள்
நூல் : அஹ்மத் (21693)

பெற்றோர்கள் பிள்ளைகளுடன்உட்கார்ந்து சாப்பிடுவது,அவர்களோடு கலந்து கலகலப்பாக பேசுவது, உங்களது நன்மைக்காகத்தான் நாங்கள் உழைத்துக்கொண்டிருக்கிறோம். “உங்களது விருப்பத்தை தாராளமாக எங்களிடம் சொல்லுங்கள்” என்று ஊக்கப்படுத்துவது பிள்ளைகள் பெற்றோர்களை விட்டுஅன்னியமாகாமல் இருக்க உதவும்.

சில குடும்பங்களில் பிள்ளைகள் வளர்ந்த பிறகும் அவர்களை குழந்தைகளாகவே நினைக்கிறார்கள், பிள்ளைகளின் கருத்துக் களை கேட்பதில்லை.இளம் பிள்ளைகளுக்கும்பெற்றோர்களுக்கும் ஒருஅன்னியத்தன்மை நிலவுகிறது,மூன்றாவது ஆளை வைத்து சொந்த பிள்ளையின் கருத்தை அறியமுயற்சி செய்கிறார்கள், இந்த நிலைதவறு.


அதேபோல முருங்கையை முறித்து வளர்க்க வேண்டும் பிள்ளையை அடித்து வளர்க்க வேண்டும் என்று  தமிழில் ஒரு பழமொழி சொல்வார்கள். இதற்கும் இஸ்லாத்திற்கும் சம்மந்தமே இல்லை. நாயகம் பத்து வயதாகியும் தோழ செல்லாத பிள்ளைகளை மட்டும் தான் அடிக்க சொன்னார்களே தவிர எதற்கெடுத்தாலும் அடித்து அவர்களின் வாழ்வை வினாக்க சொல்லவில்லை. பிள்ளைகளை அடிப்பதென்பது  நம்மை விட்டு அவர்களை  தூரமாக்கும் செயல். சிறு வயதிலிருந்தே நம் பிள்ளை செல்வங்களை அடித்து அடித்து நம்மை விட்டு தூரமாக்கி விட்டு வாலிபனாகிய பிறகு நம் பேச்சை கேட்க்க வில்லை என்று புலம்புவது அறிவாளிகளின் செயல் அல்ல.

நாம் கஷ்டப்பட்டு சம்பாதிப்பதே  நம் பிள்ளை செல்வங்களுக்காகத்தான் என்பதை அவர்கள் உணர வேண்டும் என்றால் அவர்களின் மீது நாம் பாசத்தோடும் அன்போடும் நடந்து கொள்ள வேண்டும்.
இன்று எத்தனையோ இல்லங்களில் பிள்ளை செல்வங்களுக்கு தாயோடு இருக்கும் நெருக்கம் தந்தையோடு இருப்பதில்லை காரணம்? அவர்களோடு நாம் நடந்து கொள்ளும் விதம் தான் அவர்களை அப்படி மாற்றி விட்டது.

திருகுர்ஆனில் செய்யதினா இப்ராஹிம் (அலை) அவர்கள் கண்ட கனவு பற்றி இறைவன் சொல்லும் வேளையில் அவர்களின் மகனார் செய்யதீனா இஸ்மாயில் (அலை)அவர்களின் பதிலையும் பதிவு செய்யும் காரணம் என்ன?


قَالَ يَا بُنَيَّ إِنِّي أَرَىٰ فِي الْمَنَامِ أَنِّي أَذْبَحُكَ فَانظُرْ مَاذَا تَرَىٰ ۚ قَالَ يَا أَبَتِ افْعَلْ مَا تُؤْمَرُ ۖ سَتَجِدُنِي إِن شَاءَ اللَّهُ مِنَ الصَّابِرِينَ

“என்னருமை மகனே! நான் உன்னை அறுத்து பலியிடுவதாக நிச்சயமாகக் கனவு கண்டேன். இதைப்பற்றி உம் கருத்து என்ன என்பதைச் சிந்திப்பீராக!” (மகன்) கூறினான்; “என்னருமைத் தந்தையே! நீங்கள் ஏவப்பட்டபடியே செய்யுங்கள். அல்லாஹ் நாடினால் - என்னை நீங்கள் பொறுமையாளர்களில் நின்றுமுள்ளவனாகவே காண்பீர்கள்.”(37:102)


இந்த வசனத்தில் நாம் கவனிக்க வேண்டியது  தன் தந்தை கண்ட கனவையே நிறைவேற சொன்னது. இன்று நானோ நீங்களோ அப்படி சொல்ல முடியுமா அல்லது நம் பிள்ளை செல்வங்களிடத்தில் தான் சொல்ல முடியுமா? வெறும் குர்ஆணின் வார்த்தைகளாக தானே அந்த வசனங்கள் இப்போதோ காட்சி அளிக்கிறது இன்னும் நம் வாழ்க்யாக மாற வில்லைதானே அதற்கு மிக முக்கிய காரணம் நம் பிள்ளை செல்வங்களின் மீது நாம் காட்டாத பாசமும் அன்பும் தான் என்றால் அது மிகையான வார்த்தை அல்ல.


தலை சிறந்த விஞ்சானி  தாமஸ் ஆல்வா எடிசனின் தலை சற்று கோணலாக இருந்ததால் அவரின் பள்ளி பருவத்தில் ஆசிரியர் அவரை பள்ளி கூடத்திளிருந்து துரத்தி விட்டார் பிறகு அவரின் தாயின் பாசத்தின் வெளிபாடே அவரை விஞ்சானியாக மாற்றியது.

எனவே நாம் காடும் பாசம் தான் நாம் அவர்களுக்காகத்தான் உழைக்கிறோம் என்பதை நம் பிள்ளை செல்வங்களை உணர வைக்கும். நாம் அன்பையும் பாசத்தையும் காட்டிய பிறகு உபதேசம் செய்தால் அந்த உபதேசத்தில் அவர்களுக்கு ஆயிரம் ஆயிரம் பலன்கள் இருப்பதாக உணர்வார்கள் இல்லை என்றால் அவர்களுக்கு நம் உபதேசம் வெறுப்பாகத்தான் தெரியும்.


அதே நேரத்தில் நம் பிள்ளைகளுக்கு செல்லம் கெடுத்து விட கூடாது!
பாசம் வேறு! செல்லம் வேறு! நாம் காட்டும் பாசமும் அன்பும் அவர்களின் வாழ்கையை சீராக்கும். நாம் கொடுக்கும் செல்லம் அவர்களின் வாழ்கையை அளித்து நாசமாக்கி விடும். அதில் மிக கவனமாக இறுக்க வேண்டும்.

மேலும் சில உபதேசங்கள்!

1.   பிள்ளைகளின் தொழுகையில்அக்கறை செலுத்துதல்


أَنَّ عَلِيَّ بْنَ أَبِي طَالِبٍ أَخْبَرَهُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ طَرَقَهُ وَفَاطِمَةَ بِنْتَ النَّبِيِّ عَلَيْهِ السَّلَام لَيْلَةً فَقَالَ أَلَا تُصَلِّيَانِ فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ أَنْفُسُنَا بِيَدِ اللَّهِ فَإِذَا شَاءَ أَنْ يَبْعَثَنَا بَعَثَنَا فَانْصَرَفَ حِينَ قُلْنَا ذَلِكَ وَلَمْ يَرْجِعْ إِلَيَّ شَيْئًا ثُمَّ سَمِعْتُهُ وَهُوَ مُوَلٍّ يَضْرِبُ فَخِذَهُ وَهُوَ يَقُولُ وَكَانَ الْإِنْسَانُ أَكْثَرَ شَيْءٍ جَدَلًا  - البخاري


2.   வீட்டிற்குள் இஸ்லாமியநடைமுறைகளை பழக்கப்படுத்துதல் – சலாம் – குரான் –திக்ர்

قَالَ كَانَ سَعْدٌ يُعَلِّمُ بَنِيهِ هَؤُلَاءِ الْكَلِمَاتِ كَمَا يُعَلِّمُ الْمُعَلِّمُ الْغِلْمَانَ الْكِتَابَةَ وَيَقُولُ إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَتَعَوَّذُ مِنْهُنَّ دُبُرَ الصَّلَاةِ اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ الْجُبْنِ وَأَعُوذُ بِكَ أَنْ أُرَدَّ إِلَى أَرْذَلِ الْعُمُرِ وَأَعُوذُ بِكَ مِنْ فِتْنَةِ الدُّنْيَا وَأَعُوذُ بِكَ مِنْ عَذَابِ الْقَبْرِ - البخاري 2822


3.   நல்லொழுக்கப் பயிற்சிகளை நயமாக கற்பித்தல்

·        أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَا نَحَلَ وَالِدٌ وَلَدًا مِنْ نَحْلٍ أَفْضَلَ مِنْ أَدَبٍ-  ترمذي

·        عَنْ جَابِرِ بْنِ سَمُرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَأَنْ يُؤَدِّبَ الرَّجُلُ وَلَدَهُ خَيْرٌ مِنْ أَنْ يَتَصَدَّقَ بِصَاعٍ – ترمذي

·        قَالَ مُصْعَبَ بْنَ سَعْدٍ  : صَلَّيْتُ إِلَى جَنْبِ أَبِي فَطَبَّقْتُ بَيْنَ كَفَّيَّ ثُمَّ وَضَعْتُهُمَا بَيْنَ فَخِذَيَّ فَنَهَانِي أَبِي وَقَالَ كُنَّا نَفْعَلُهُ فَنُهِينَا عَنْهُ وَأُمِرْنَا أَنْ نَضَعَ أَيْدِينَا عَلَى الرُّكَبِ – البخاري 790


4.  பெரியவர்களை மதிக்கும்இயல்பு – கட்டுப்பாட்டுக்குப்பழக்குதல்


ஒரு காலம் இருந்த்து. வீட்டிற்குபெரியவர்கள் வந்தால்குழந்தைகளை அறிமுகப் படுத்திஒதச் சொல்லி துஆ சொல்லச்சொல்லி உற்சாகப் படுத்துவார்கள். “ துஆ செய்யுங்கள்” என்று கேட்கச் சொல்வார்கள்.    இப்போது சினிமாபாட்டு பாடச் சொல்லி ஆடச்சொல்லி உற்சாகப்படுத்துகிறார்கள்.

இப்போது வீட்டுக்கு வரும் பெரியவர்களை குழந்தைகள் கண்டுகொள்வதே இல்லை. அதைப் பற்றிய அக்கறையும் நமக்கு இல்லை.


5.   குறைந்த பட்சம் பிள்ளைகள் கெட்டுப் போகாமல்இருப்பதில் கவனம் செலுத்தவேண்டும்

அதிக செல்லம்.தப்பு செய்தால் கண்டு கொள்ளாமல் இருப்பது.அதிக பணம் கொடுப்பது முஸ்லிம்கள் தான் இந்த தீமையைசாதாரணமாக செய்கிறார்கள். பிரமாணர்கள் கல்லூரிக்கு போகிறபையனுக்கு 10 ரூபாய், தயிர் சாதம் கொடுத்தனுப்புகிறார்கள்,முஸ்லிம்கள் பள்ளிக் கூடம் செல்கிறபையனுக்கு பைக் நூற்றுக்கணக்கில் பணம்கொடுக்கிறார்கள்.
எதற்காக பணம் ? மீத பணம் என்னானது ? எந்தக் கேள்வியும்கேட்பதில்லை.


6.  கண்காணிக்கத் தவறுவது

·         எங்களது பள்ளிவாசலில்ட்யூசனில் படிக்கிறபையன்  வீட்டில் பீஸ் பணம்கொடுத்து விட்டால் அதற்குபானி பூரி வாங்கித் தின்றுவிட்டு ஒன்றும்தெரியாதவனைப் போலஇருந்து விட்டான், பலமாதத்திற்கு பிறகுதான்உண்மை தெரிந்தது.

·         பல இடங்களிலும் பெண்பிள்ளைகளின் தவறான நடவடிக்கைகள் ஆரம்பத்திலேயே கண்காணிக்கத்தவறுவதே காரணமாகிறது. வீட்டை விட்டு ஒடிப்போன பெண்களில் பலரை பற்றிய தகவல்களை விசாரித்த போது அது பற்றிய விபரம் அம்மாக்களுக்கு ஓரளவு தெரிந்தே இருக்கிறது.

·         இது போலவே ஆண்பிள்ளைகளின் பழக்கவழக்கங்கள் குறித்து நுணுக்கமாக ஆராயவேண்டும்.

·         இதில் தாய்மார்களின் பொறுப்பு மிகவும் அதிகம், சிகெரட் உள்ளிட்ட தீய பழக்கங்கள் கொண்ட பையன்கள், தேவையற்ற செல்போன் பேச்சுக்களில் ஈடுபடும் பிள்ளைகள் பற்றி அம்மாக்களுக்கு தெரியாமல் இருக்க முடியாது. பிள்ளைகளின் மாற்றம் அம்மாக்களின் கண்களை விட்டு மறைய வாய்ப்பில்லை. அவர்கள் இதை அசட்டை செய்வதும், பிள்ளைகளை நினைத்து பயப்படுவதுமே பிரச்சினைகளை பெரிதாக்கி விடுகிறது. உரிய நேரத்தில் உடனடியாக நடவடிக்கை எடுக்கப் படும் எனில் பல பிரச்சினைகளை தவிர்க்க முடியும்.

·         பிள்ளை வளர்ப்பு குறித்து தாய்மார்களிடம் மறுமையில் விசாரிக்கப் படும்.

·         قال رَسُول اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ :  كُلُّكُمْ رَاعٍ وَكُلُّكُمْ مَسْئُولٌ عَنْ رَعِيَّتِهِ الْإِمَامُ رَاعٍ وَمَسْئُولٌ عَنْ رَعِيَّتِهِ وَالرَّجُلُ رَاعٍ فِي أَهْلِهِ وَهُوَ مَسْئُولٌ عَنْ رَعِيَّتِهِ وَالْمَرْأَةُ رَاعِيَةٌ فِي بَيْتِ زَوْجِهَا وَمَسْئُولَةٌ عَنْ رَعِيَّتِهَا وَالْخَادِمُ رَاعٍ فِي مَالِ سَيِّدِهِ وَمَسْئُولٌ عَنْ رَعِيَّتِهِ – الخاري  894

·         குழந்தைகள்பெற்றவர்களிடம்ஒப்படைக்கப்பட்ட'அமானிதம் ஆகும்.அமானித மோசடி செய்துமறுமையிலேஇறைவனின் முன்புநஷ்டவாளிகளாகஆகிவிடக்கூடாது.குழந்தைகளை முறையாகவளர்க்கவில்லையெனில்அல்லாஹ்விடம் பதில் கூறவேண்டும்.

இவை அனைத்திற்கும் மேலாக நம் பிள்ளை செல்வங்களுக்கு இப்போது காலத்தின் அவசியம் மக்தபபுக்கு அனுப்புவது. கடந்த இருபது ஆண்டுகளாக மக்தப் மதரஸாவில் நாம் காட்டாத அக்கறை தான் நம் பிள்ளை செல்வங்கள்  இன்று  நம்  உயிரிலும் மேலான கண்மணி நாயகத்தை நாகூசாமல் அலட்சிய படுத்துகிறார்கள். அல்லது அப்படி பேசுபவர்களுக்கு ஆதரவு தருகிறார்கள். எனவே அது விஷயத்தில் மிக மிக கவனமாக இருப்பது காலத்தின் அவசியமாகி விட்டது. இன்று நிறைய சுன்னத் ஜமாஅத் பள்ளிவாசல்களில் கோடைகால மதரஸா நடை பெறுகிறது அதில் நம் பிள்ளை செல்வங்களை சேர்த்து விட்டு அல்லாஹ்வின் மீது பரிபூரண அச்சத்தையும்  நம் நாயகத்தின் மீது முழுமையான பாசத்தையும் சங்கை மிகுந்த இமாம்களின் மீது முழுமையான மரியாதையையும்  ஏற்படுத்த வேண்டும் இல்லை என்றால் இன்று நாயகத்தின் ரவ்லாவின் மீது எழுப்பப்பட்டுள்ள குப்பாவை இடிக்க சொன்னவன் ஒரு நாள் நாயகத்தின் ரவ்லாவையே இடிக்க சொன்னாலும் அல்லது நாயகத்தின் பள்ளிவாசலை இடிக்க சொன்னாலும் அதற்கும் ஆதரவு தருபவர்களாக நம் பிள்ளைகள் ஆளாகிவிடுவார்கள் (நவூது பில்லாஹ்)

எனவே கோடைகால வகுப்புகளை பயன் படுத்தி கொள்ள வேண்டும். ரப்புல் ஆலமீன் நம் பிள்ளை செல்வங்களை அவனுக்கு பிடித்த வகையில் உருவாக்குவானாக.ஆமீன்

0 comments:

Post a Comment