19 June 2015

ரமளானின் ரஹ்மத்தும், நோன்பின் சட்டங்களும்!

                                                      بسم الله الرحمن الرحيم 


சந்கைமிகுந்த ரமலான் நம்மை அலங்கரிக்க வந்திருக்கிறது. ரமலான் என்றாலே நம் உள்ளத்தில் ஒரு விதமான சந்தோஷம் ஏற்படுகிறது. இது தான் ஈமானிய உணர்வு
ரமழானின் முப்பது நாட்களை மூன்று பிரிவாக பிரித்துமுதல் பத்தில்
ல்லாஹ்வின் ரஹ்மத்தையும்இரண்டாம் பத்தில்பாவ மன்னிப்
பையும்மூன்றாமது பத்தில் நரக விடுதலையையும்வல்ல நாயனிடம் 
மன்றாடி கேட்க வேண்டுமென நபி {ஸல்}அவர்கள் கூறுவார்கள்.

ஓர் இறை நம்பிக்கையாளனை பொறுத்த வரையில்அவனுடைய 
வாழ்வில் அல்லாஹ்வின் அருள் என்பது மிகவும்ஆளுமைக்குரிய 
ஒன்றாகும்.

ஈருலகிலும் அல்லாஹ்வின் அருள் அவனைச் சூழ்ந்திருக்கவேண்டு
மென அவன் ஆசிப்பதும்நேசிப்பதும் ஈமானுக்கு அடுத்தபடி மிக 
முக்கியமான ஒன்றாகும்.

மேன் மக்களான அறிஞர் பெருமக்கள் சொல்வார்கள்: “ஓர்
இறை நம்பிக்கையாளன் நேர்வழியில் நடப்பதற்கும்வெற்றிக்கான
வாழ்க்கை வாழ்வதற்கும்சீதேவித்தனம் நிலைத்திருப்பதற்கும்,நல் 
அமல்கள் செய்வதற்கும்இன்னும் அல்லாஹ்வின் ஏவல்களை ஏற்று 
நடப்பதற்கும்விலக்கல்களை தவிர்ப்பதற்கும்,பாவங்கள் மன்னிக்கப்
படுவதற்கும்சுவனத்தில் நுழைவதற்கும்,நரகில் இருந்து ஈடேற்றம் 
பெறுவதற்கும் அல்லாஹ்வின் அருள்மிகவும் இன்றியமையாதது

சுருங்கச்சொன்னால் அல்லாஹ்வின் அருள்இல்லையென்றால் ஒட்டு 
மொத்த வாழ்க்கையும் இல்லை.

அல்லாஹ்வின் அருள் இல்லை என்றால்….

وَلَوْلَا فَضْلُ اللَّهِ عَلَيْكُمْ وَرَحْمَتُهُ لَاتَّبَعْتُمُ الشَّيْطَانَ إِلَّا قَلِيلًا

உங்கள் மீது அல்லாஹ்வின் அருளும்கருணையும் 
இல்லாமல் போயிருந்தால்உங்களில் சிலரைத்தவிர 
அனைவரும் ஷைத்தானையே பின் பற்றியிருப்பீர்கள்.”

فَلَوْلَا فَضْلُ اللَّهِ عَلَيْكُمْ وَرَحْمَتُهُ لَكُنْتُمْ مِنَ الْخَاسِرِينَ

உங்களின் மீது அல்லாஹ்வின் அருளும்கருணையும் 
இல்லாமல் போயிருந்தால்நீங்கள் நிச்சயம் 
எப்பொழுதோ பேரிழப்பிற்கு ஆளாகியிருப்பீர்கள்.”

وَلَوْلَا فَضْلُ اللَّهِ عَلَيْكُمْ وَرَحْمَتُهُ فِي الدُّنْيَا وَالْآخِرَةِ لَمَسَّكُمْ فِي مَا أَفَضْتُمْ فِيهِ عَذَابٌ عَظِيمٌ

உங்களின் மீது அல்லாஹ்வின் அருளும்கருணையும் 
இல்லாமல் போயிருந்தால்நீங்கள் எந்த விஷயங்களில்
மூழ்கியிருக்கின்றீர்களோ அதன்பயனாக இம்மையிலும்
மறுமையிலும் அல்லாஹ்வின் புறத்திலிருந்து பெரும் 
வேதனை ஏற்பட்டுவிடும்.”


ரஹ்மான் – அருளாளன் என்று அல்லாஹ் அல்குர்ஆனில் 54
இடங்களில் கூறுகின்றான்.

ரஹீம் – நிகரற்ற அன்புடையோன் என்று அல்லாஹ்அல்குர்ஆனில் 95 
இடங்களில் கூறுகின்றான்.

ரஹ்மான் ரஹீம் ஆகிய இந்த இரண்டின் மூலச்சொற்களும்
ரஹ்மத் என்பதாகும்.

ரஹ்மத் என்ற வார்த்தைக்கு ரிக்கத் - மென்மை
ஷஃபகத் -இரக்கம்தஅத்துஃப் - கிருபைஎன்று பொருள்.

கிட்ட தட்ட ரஹ்மான் ரஹீம் என்ற இந்த வார்த்தையை
தொழுகையில் தினந்தோரும் ஃபர்ளான 17 ரக்அத்தில் 27 தடவை
ஓதுகின்றோம்.

 இதுவே நாம் அல்லாஹ்வின் அருள் இன்றி இந்தஉலகத்தில் 
எதையும் சாதித்து விட முடியாது என்பதைஉணர்வதற்கு போது
மானதாகும்.

ஒவ்வொரு நாளும் ரப்புல் ஆலமீன் 120 ரஹ்மதுகளை 
கஃபாவின் மீது இறக்குகிறான் அதில் தவாஃப் 60 
அங்கு தொழுபவர்களுக்கு 40 கஃபாவை பார்பவர்களுக்கு 
19 மீதமுள்ள ஒன்று உலகில்ல எல்லோருக்கும் 
பிரித்து கொடுக்கப்படுகிறது என்று  நாயகம்(சல்லல்லாஹு 
அலைஹி வஸல்லம்)கல் சொன்னார்கள். 

இவ்வுலகிலும் சரி நாளை மறுமையிலும் சரி 
அல்லாஹ்வின் ரஹ்மத் இன்றி எந்த ஒரு முஃமினால் 
வாழ முடியாது.


روى الحاكم في المستدرك على الصحيحين ج4/ص278, قال رحمه الله:" أخبرني أحمد بن محمد بن سلمة العنزي ثنا عثمان بن سعيد الدارمي ثنا عبد الله بن صالح المقرئ ثنا سليمان بن هرم القرشي وحدثنا علي بن حمشاد العدل ثنا عبيد بن شريك ثنا يحيى بن بكير ثنا الليث بن سعد عن سليمان بن هرم عن محمد بن المنكدر عن جابر بن عبد الله رضي الله عنهما قال خرج علينا النبي صلى الله عليه وسلم فقال:" خرج من عندي خليلي جبريل آنفا فقال يا محمد والذي بعثك بالحق إن لله عبدا من عبيده عبد الله تعالى خمس مائة سنة على رأس جبل في البحر عرضه وطوله ثلاثون ذراعا في ثلاثين ذراعا والبحر محيط به أربعة آلاف فرسخ من كل ناحية وأخرج الله تعالى له عينا عذبة بعرض الأصبع تبض بماء عذب فتستنقع في أسفل الجبل وشجرة رمان تخرج له كل ليلة رمانة فتغذيه يومه فإذا أمسى نزل فأصاب من الوضوء وأخذ تلك الرمانة فأكلها ثم قام لصلاته فسأل ربه عز وجل عند وقت الأجل أن يقبضه ساجدا وأن لا يجعل للأرض ولا لشيء يفسده عليه سبيلا حتى بعثه وهو ساجد قال ففعل فنحن نمر عليه إذا هبطنا وإذا عرجنا فنجد له في العلم أنه يبعث يوم القيامة فيوقف بين يدي الله عز وجل فيقول له الرب أدخلوا عبدي الجنة برحمتي فيقول رب بل بعملي فيقول الرب أدخلوا عبدي الجنة برحمتي فيقول يا رب بل بعملي فيقول الرب أدخلوا عبدي الجنة برحمتي فيقول رب بل بعملي فيقول الله عز وجل للملائكة قايسوا عبدي بنعمتي عليه وبعمله فتوجد نعمة البصر قد أحاطت بعبادة خمس مائة سنة وبقيت نعمة الجسد فضلا عليه

ஜாபிர் இப்னு அப்துல்லாஹ் (ரலிஅவர்கள் அறிவிக்கின்றார்கள்: “ஒரு நாள் நாங்கள் குழுமியிருந்த சபைக்கு வருகை தந்த அண்ணல் நபி {ஸல்எங்களை நோக்கிதோழர்களேகொஞ்ச நேரத்திற்கு முன்பாகத்தான் என் நண்பர் ஜிப்ரயீல் (அலைஅவர்கள் வருகை தந்து வியத்தகு வரலாறு ஒன்றைக் கூறி என்னை நெகிழ்ச்சியில் ஆழ்த்திப்போனார்” என்று கூறி விட்டு எங்களிடம் “என்னிடம் வருகை தந்த ஜிப்ரயீல்(அலைஅவர்கள் “முஹம்மத் {ஸல்அவர்களேசத்தியத்தைக் கொண்டு உங்களை நபியாக அனுப்பிய அல்லாஹ்வின் மீது ஆணையாகஅல்லாஹ்வின் அடியார்களில் ஒரு நல்லடியார் இருந்தார்.

அந்த அடியார் நாற்புறமும் கடலால் சூழப்பட்ட மலைப்பிரதேசத்தில் மலையின் உச்சியில் 500 ஆண்டு காலம் அல்லாஹ்வை வணங்கி வழிபடுவதிலேயே கழித்து வந்தார்.

கடல் சூழ்ந்த – உப்பு நீர் நிறைந்த அந்தப் பகுதியிலும் கூட அல்லாஹ் அவருக்கு மதுரமான ஓர் நீரூற்றை ஓடச் செய்தான்.அருகில் ஓர் மாதுளை மரத்தையும் உருவாக்கிக் கொடுத்தான்.

தினமும் மாலை நேரத்தில் மலையின் உச்சியிலிருந்து கீழிறங்கு வரும் அவர் அந்த மாதுளை மரத்திலிருந்து ஒரு கனியை உண்டு விட்டுஅந்த நீரூற்றிலிருந்து சிறிது நீர் அருந்தி விட்டு உளூ செய்து விட்டு மீண்டும் மலை உச்சிக்கு சென்று வணக்க வழிபாடுகளில் ஈடுபட்டு விடுவார்.

ஒரு நாள் அந்த நல்லடியார் அல்லாஹ்விடம் பிரார்த்திக்கும் போது “யாஅல்லாஹ்என் உயிர் பிரியும் தருவாயில் என் ரூஹ் உனக்கு நான் ஸஜ்தா செய்யும் நிலையிலேயே பிரிய வேண்டும் என ஆசிக்கின்றேன்மேலும்என் உடலை மறுமை நாள் பரியந்தம் வரையில் அந்த நிலையிலேயே நீ பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும்மேலும்அதே நிலையிலேயே நான் எழுப்பப்பட வேண்டும்என்னுடைய இந்த ஆசையை நீ நிறைவேற்றித் தர வேண்டும்” என்று கோரினார்.

அல்லாஹ்வும் அவரின் கோரிக்கைக்கு செவி சாய்த்து அப்படியே செய்தான்.

வானவர்களாகிய நாங்கள் விண்ணுலகத்திலிருந்து பூமிக்கு வரும் போதும்பூமியிலிருந்து விண்ணுலகிற்கு செல்லும் போதும் அவரை அதே நிலையிலேயேக் கண்டோம்.

தொடர்ந்து ஜிப்ரயீல் (அலைஅவர்கள் கூறினார்கள்: “நாளை மறுமையில் மஹ்ஷர் பெருவெளியில் மக்களோடு மக்களாக அந்த நல்லடியார் அல்லாஹ்வின் சந்நிதானத்தில் நின்றிருப்பார்.

அப்போதுஅல்லாஹ் வானவர்களிடம்அவரை நோக்கிஇதோ என்னுடைய இந்த அடியானை என் அருளின் துணை கொண்டு சுவனத்திற்கு அழைத்துச் செல்லுங்கள்” என்பான்.

அதற்குஅவர் அல்லாஹ்விடம் “அல்லாஹ்வேநான் செய்த என்னுடைய அமலின் துணை கொண்டு என்னை சுவனத்திற்கு அழைத்துச் செல்லுமாறு வானவர்களுக்கு நீ ஆணையிடுவாய் என்றல்லவா நான் எதிர் பார்த்தேன்ஆனால்,நீயோ உன் அருளின் துணை கொண்டு சுவனத்திற்கு அழைத்துச் செல்லுமாறு ஆணையிடுகின்றாய்அப்படியானால்என்னுடைய500 ஆண்டு கால இபாதத் என்னவாயிற்று?” என்று வினவுவார்.

அப்போதுஅல்லாஹ் தன் வானவர்களுக்கு “இந்த அடியானுக்கு நான் வழங்கிய அருட்கொடைகளையும்இந்த அடியான் செய்த இபாதத்களையும் கணக்குப் பாருங்கள்” என்று கட்டளையிடுவான்.

அப்போது வானவர்கள் “இவரின் 500 ஆண்டு கால இபாதத் அனைத்தும் நீ அவருக்கு வழங்கிய அருட்கொடைகளில் ஒன்றான கண்பார்வைக்கு ஈடாகி விட்டது.

நீ வழங்கிய மற்றெந்த அருட்கொடைகளுக்கும் ஈடாக வேறெந்த அமலும் அவரின் பதிவேட்டில் இல்லை” என்று அல்லாஹ்விடம் கூறுவார்கள்.

فيقول أدخلوا عبدي النار قال فيجر إلى النار فينادي رب برحمتك أدخلني الجنة فيقول ردوه فيوقف بين يديه فيقول يا عبدي من خلقك ولم تك شيئا فيقول أنت يا رب فيقول كان ذلك من قبلك أو برحمتي فيقول بل برحمتك فيقول من قواك لعبادة خمس مائة عام فيقول أنت يا رب فيقول من أنزلك في جبل وسط اللجة وأخرج لك الماء العذب من الماء المالح وأخرج لك كل ليلة رمانة وإنما تخرج مرة في السنة وسألتني أن أقبضك ساجدا ففعلت ذلك بك فيقول أنت يا رب فقال الله عز وجل فذلك برحمتي وبرحمتي أدخلك الجنة أدخلوا عبدي الجنة فنعم العبد كنت يا عبدي فيدخله الله الجنة قال جبريل عليه السلام إنما الأشياء برحمة الله تعالى يا محمد". هذا حديث صحيح الإسناد
  
அது கேட்ட அல்லாஹ் வானவர்களிடம் “இதோ இந்த அடியானை நரகத்திற்கு இழுத்துச் செல்லுங்கள்” என்பான்.

அவர் நரகத்திற்கு இழுத்து செல்லப்படுவார்வழி நெடுக அவர் “இறைவாஉன் அருளின் துணை கொண்டே என்னை சுவனத்தில் நுழையச்செய்!” என அலறுவார்.

அந்த அலறலைக் கேட்டதும் அல்லாஹ் வானவர்களிடம்அந்த அடியானை என் முன் கொண்டு வந்து நிறுத்துங்கள்!”என்பான்அவர் அல்லாஹ்வின் திருமுன் நிறுத்தப்படுவார்.

அப்போதுஅல்லாஹ்வுக்கும் அந்த அடியானுக்கும் இடையே நடக்கின்ற அந்த உரையாடல் இதோ….

அல்லாஹ்என் அடியானேஒன்றுமே இல்லாமல் இருந்த உன்னை படைத்தது யார்?

அடியான்நீ தான் என் இறைவா!

அல்லாஹ்என் அடியார்களிலேயே 500 ஆண்டு கால ஆயுளையும்வணக்க வழிபாடுகள் செய்கிற ஆற்றலையும் கொடுத்து உன்னை வாழ வைத்தது யார்?

அடியான்நீ தான் என் இறைவா!

அல்லாஹ்கடலும் –உப்பு நீரும் சூழ்ந்த இடத்தில் மதுரமான நீரூற்றையும்புற்பூண்டுகளே முளைத்திடாத பாறையிலிருந்து மாதுளை மரத்தையும் உனக்குக் கொடையாக வழங்கியது யார்?

அடியான்நீதான் என் இறைவா!

அல்லாஹ்உன் ரூஹ் ஸஜ்தா – சிரம் பணிந்த நிலையில் பிரிய வேண்டும் என்று நீ ஆசித்த போது உன் விருப்பத்தை நிறைவேற்றிக் கொடுத்தது யார்?

அடியான்நீதான் என் இறைவா!

இந்த உரையாடலை முடித்து வைக்கும் முகமாக,இறுதியாக அல்லாஹ் அந்த அடியானிடம் “என் அடியானேஇவை அனைத்தும் என் அருளின் மூலமாகத்தான் நீ பெற்றாய்!இப்போதும்நீ என் அருளின் துணை கொண்டு தான் சுவனத்திற்கும் செல்ல இருக்கின்றாய்அடியானேஎன் அடியார்களில் நீ நல்லவனே” என்று கூறி விட்டு வானவர்களை நோக்கி “இதோ இந்த என் அடியானை என் அருளின் துணை கொண்டு சுவனத்தில் கொண்டு போய் விட்டு விடுங்கள்!” என்பான்.

இதைக் கூறி விட்டு ஜிப்ரயீல் (அலைஅவர்கள் என்னிடம்முஹம்மத் {ஸல்அவர்களேஓர் அடியானைச் சுற்றி ஈருலகிலும் நடைபெறும் அத்துனை காரியங்களும் அல்லாஹ்வின் அருளின் துணை கொண்டே தான் அமையப் பெறுகின்றது” என்று கூறி விடை பெற்றுச் சென்றார்” என்று நபி {ஸல்அவர்கள் எங்களிடம் கூறினார்கள்.                 ( நூல்முஸ்தத்ரக் அலஸ் ஸஹீஹைன் )

இப்படி பட்ட ரஹ்மத்தை தான் ரப்புல் ஆலமீன் நாம் வீட்டிருக்கும் இந்த முதல் பத்தில் தருவதாக சொல்கிறான். நம்மில் எத்தனை நபர்கள்  அதை சரியாக பெற்று கொள்கிறம். 

எல்லா நப்பிமார்களும் ரப்பிடத்தில் ரஹ்மத்தை வேண்டிருக்கிறார்கள்.

ஆதம் (அலை) கேட்ட ரஹ்மத் 

قَالَا رَبَّنَا ظَلَمْنَا أَنفُسَنَا وَإِن لَّمْ تَغْفِرْ لَنَا وَتَرْحَمْنَا لَنَكُونَنَّ مِنَ الْخَاسِرِينَ

அதற்கு அவர்கள்: “எங்கள் இறைவனே! எங்களுக்கு நாங்களே தீங்கிழைத்துக் கொண்டோம் - நீ எங்களை மன்னித்துக் கிருபை செய்யாவிட்டால், நிச்சயமாக நாங்கள் நஷ்டமடைந்தவர்களாகி விடுவோம்” என்று கூறினார்கள்.7:23. 

மூஸா (அலை) கேட்ட ரஹ்மத் 

 قَالَ رَبِّ اغْفِرْ لِي وَلِأَخِي وَأَدْخِلْنَا فِي رَحْمَتِكَ  ۖ وَأَنتَ أَرْحَمُ الرَّاحِمِينَ

“என் இறைவனே! என்னையும் என் சகோதரரையும் மன்னிப்பாயாக! உன் ரஹ்மத்தில் (நற்கிருபையில்) - பிரவேசிக்கச் செய்வாயாக! ஏனெனில், நீயே கிருபையாளர்களிலெல்லாம், மிக்க கிருபையாளன்” என்று (பிரார்த்தித்துக்) கூறினார்.7:151

ரஹ்மத்தை பெற்றுக்கொள்ள சில வழிமுறைகளை அபூ ஹுரைரா (ரலி) அவர்களுக்கு  நாயகம் கற்று தந்தார்கள்.

1)அபூ ஹுரைராவே நீங்கள் சொந்த பந்தத்தோடு சேர்ந்து வாழ்கிற போதும் நன்மையான காரியங்களை செய்கிற போதும் அல்லாஹ் உமக்கு ரஹ்மத் செய்வான். 

2)எல்லா செயல்களுக்கும் அல்லாஹ்வின் பக்கம் நெருங்கவேண்டும்  குர்ஆனை அதிகமாக ஓத வேண்டும்.

3)அனாதை(எதீம்)களுக்காக சம்பாதிப்பவருக்கும் அல்லாஹ்வின் ரஹ்மத் கிடைக்கும்.

4) யார் தன்னுடைய நாவை  (பொய், புறம், கோல்  பாதுகாகிராரோ அவருக்கு அல்லாஹ்வின் ரஹ்மத் கிடைக்கும்.

5)பேசினால் உண்மை பேசுவாபவர் அல்லது மௌனமாக இருபாவருக்கு அல்லாஹ்வின் ரஹ்மத் கிடைக்கும்.

6)ஹலாலான வியாபாரம் செய்பவர் வீண்விரயம் இல்லாமல் கஞ்ச தனம் இல்லாமல்  செலவுகள் செய்பவர் கஞ்ச தனம் இல்லாமல் தான தர்மங்கள் செய்பவருக்கு  அல்லாஹ்வின் ரஹ்மத் கிடைக்கும்.

7) ஹதீஸ்கலை கேட்டு அதை மணனம் செய்து அதை பிறருக்கு சொல்லி கொடுப்பவருக்கு அல்லாஹ்வின் ரஹ்மத் கிடைக்கும்.

8)அஸர் தொலுகைக்கு முன்னாள் நான்கு ராகாஅத் சுன்னத் தொழுபவருக்கு அல்லாஹ்வின் ரஹ்மத் கிடைக்கும்.

9)தன் பிள்ளைகளை சீராக ஒழுக்கத்தோடு  வளர்பதற்காக வீட்டில் சாட்டையை தொங்கவிடுபவருக்கு  அல்லாஹ்வின் ரஹ்மத் கிடைக்கும்.

10)மார்க்க விஷயங்களில் சிலவற்றை கற்று அவற்றை அமல்செய்பவருக்கு  அல்லாஹ்வின் ரஹ்மத் கிடைக்கும்.

11)இரவுநேரத்தில் எழுந்து தொழுபவர் தன் குடும்பத்தாரை தோழ எழுப்புபவருக்கு அல்லாஹ்வின் ரஹ்மத் கிடைக்கும்.

12)அல்லாஹ்வின் பயத்தால் அழுத கண்களுக்கு  அல்லாஹ்வின் ரஹ்மத் கிடைக்கும்.

13)அல்லாஹ்வின் பாதையில் விழித்த கண்களுக்கு 
அல்லாஹ்வின் ரஹ்மத் கிடைக்கும்.

14)நற்செயல்களின் பக்கம் தன் பிள்ளைகளுக்கு உதவுபவருக்கு அல்லாஹ்வின் ரஹ்மத் கிடைக்கும்.

15)யார் என் சுன்னத்தை பின்பற்றி அதை மக்களுக்கு எத்திவைபவருக்கு அல்லாஹ்வின் ரஹ்மத் கிடைக்கும்.

16) யார் சஹர் சாப்பிடுகிறாரோ அவருக்கு  அல்லாஹ்வின் ரஹ்மத் கிடைக்கும்.

இவைகள் அனைத்தையும் பின்பற்றி புனித ரமலானில் அல்லாஹ்வின் ரஹ்மத்தை பெரும் நன்மக்களாக அல்லாஹ் நம்மை ஆக்குவானாக ஆமீன்.



குறிப்பு வழங்கியவர்கள்: நஸீர் மிஸ்பாஹி  ஹழ்ரத் பீர் ஃபைஜி  ஹழ்ரத் புதுகை புனிரி ஹழ்ரத் நிஜாம் யூசுஃபி  சதக் மஸ்லஹி  ஹழ்ரத்













1 comments:

அல்ஹம்து லில்லாஹ்
அருமையான கோர்வை

Post a Comment