26 June 2015

பாவமன்னிப்பு!





பாவம் செய்தல் மனிதனின் பிறப்பு அம்சங்களில் ஒன்று.மனிதன் மலக்கு அல்ல அவன் பாவத்தை அறியாமல்,தெரியாமல் இருப்பதற்கு.

இஸ்லாம் மனிதனை மனிதனாகத் தான் பார்க்கின்றது. அவன் நல்லதையும் அறிந்தவன்.கெட்டதையும் தெரிந்தவன் என்ற கண்ணோட்டத்தில் தான் மனிதனை அணுகுகிறது.
நல்லதை மட்டும் அறிந்த வானவர்களாக மனிதர்களை இஸ்லாம் பார்க்கவில்லை.அவ்வாறே நல்லது – கெட்டது எது? என்று அறியாத விலங்குகளின் பட்டியலிலும் அவர்களை சேர்க்கவில்லை.


பாவம் செய்யும் இயல்பில் மனிதன் படைக்கப்பட்டதாக கூறும் இஸ்லாம் பாவ மன்னிப்பின் வாசல்களை அவனுக்காக திறந்தே வைத்துள்ளது.


حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ حَدَّثَنَا شُعْبَةُ عَنْ عَمْرِو بْنِ مُرَّةَ قَالَ سَمِعْتُ أَبَا عُبَيْدَةَ يُحَدِّثُ عَنْ أَبِي مُوسَى

عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ يَبْسُطُ يَدَهُ بِاللَّيْلِ لِيَتُوبَ مُسِيءُ النَّهَارِ وَيَبْسُطُ يَدَهُ بِالنَّهَارِ لِيَتُوبَ مُسِيءُ اللَّيْلِ حَتَّى تَطْلُعَ الشَّمْسُ مِنْ مَغْرِبِهَا رواه مسلم


படைத்த ஏக இறைவன் அல்லாஹ் திருக்குர்ஆனில் பல இடங்களில் தன்னை‘மன்னிப்பாளன்’ என்று கூறுவதின் நோக்கமும் இது தான்.


பாவ மன்னிப்பு தேடுங்கள்!
பாவம் செய்த மனிதன் உடனே இறைவனிடம் மன்னிப்பு தேட வேண்டும் என்று வலியுறுத்தும் இஸ்லாம் பாவங்கள் மன்னிக்கப்படுவதற்கு மூன்று நிபந்தனைகளை கூறியுள்ளது.


1.செய்த பாவத்திற்காக வருந்துதல். இப்படியொரு பாவகரமான செயலை செய்து விட்டோமே என்று வருத்தப்படுவது.


நிச்சயமாக இது திருந்துவதற்கு வழிவகுக்கும். ஆதலால் தான் இவ்வாறு வருத்தப்பட வேண்டும் என்று இஸ்லாம் வலியுறுத்துகின்றது.


حَدَّثَنَا سُفْيَانُ عَنْ عَبْدِ الْكَرِيمِ قَالَ أَخْبَرَنِي زِيَادُ بْنُ أَبِي مَرْيَمَ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَعْقِلِ بْنِ مُقَرِّنٍ قَالَ

دَخَلْتُ مَعَ أَبِي عَلَى عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ فَقَالَ أَنْتَ سَمِعْتَ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ النَّدَمُ تَوْبَةٌ قَالَ نَعَمْ وَقَالَ مَرَّةً سَمِعْتُهُ يَقُولُ النَّدَمُ تَوْبَةٌ رواه احمد

2.ஏற்கனவே இருந்த நிலையை விட்டு நீங்குதல்

பாவம் செய்தவன் அவன் பாவ மன்னிப்பை இறைவனிடம் பெற வேண்டுமெனில், முதலில் தமது பாவத்தை கைவிட வேண்டும். பாவம் செய்து கொண்டே பாவ மன்னிப்பு தேடுதல் என்பது நகைப்புக்குரியதாகும்.


3. இனிமேல் அப்பாவத்தை செய்யவே கூடாது என்று உறுதி கொள்வதாகும்.


இம்மூன்றையும் பாவ மன்னிப்பு ஏற்கப்படுவதில் இஸ்லாம் நிபந்தனையிடுகிறது.இறைவனுக்கு இணை வைப்பதைத் தவிர எல்லா பாவங்களும் மன்னிக்கப்படுவதாகவே இஸ்லாம் கூறுகிறது.


பாவ மன்னிப்பு வாழ்க்கையில் ஒருமுறை மட்டும் தானா?

மனிதனுக்கு பாவ மன்னிப்பினை ஒருமுறை மட்டும் இஸ்லாம் வழங்கவில்லை.

மனிதன் எத்தனை முறை பாவங்கள் செய்தாலும் அத்தனை முறையும் பாவ மன்னிப்பின் வாசல்களை இஸ்லாம் திறந்தே வைத்துள்ளது.


حَدَّثَنَا أَحْمَدُ بْنُ إِسْحَاقَ حَدَّثَنَا عَمْرُو بْنُ عَاصِمٍ حَدَّثَنَا هَمَّامٌ حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ عَبْدِ اللَّهِ سَمِعْتُ عَبْدَ الرَّحْمَنِ بْنَ أَبِي عَمْرَةَ قَالَ سَمِعْتُ أَبَا هُرَيْرَةَ قَالَ

سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِنَّ عَبْدًا أَصَابَ ذَنْبًا وَرُبَّمَا قَالَ أَذْنَبَ ذَنْبًا فَقَالَ رَبِّ أَذْنَبْتُ وَرُبَّمَا قَالَ أَصَبْتُ فَاغْفِرْ لِي فَقَالَ رَبُّهُ أَعَلِمَ عَبْدِي أَنَّ لَهُ رَبًّا يَغْفِرُ الذَّنْبَ وَيَأْخُذُ بِهِ غَفَرْتُ لِعَبْدِي ثُمَّ مَكَثَ مَا شَاءَ اللَّهُ ثُمَّ أَصَابَ ذَنْبًا أَوْ أَذْنَبَ ذَنْبًا فَقَالَ رَبِّ أَذْنَبْتُ أَوْ أَصَبْتُ آخَرَ فَاغْفِرْهُ فَقَالَ أَعَلِمَ عَبْدِي أَنَّ لَهُ رَبًّا يَغْفِرُ الذَّنْبَ وَيَأْخُذُ بِهِ غَفَرْتُ لِعَبْدِي ثُمَّ مَكَثَ مَا شَاءَ اللَّهُ ثُمَّ أَذْنَبَ ذَنْبًا وَرُبَّمَا قَالَ أَصَابَ ذَنْبًا قَالَ قَالَ رَبِّ أَصَبْتُ أَوْ قَالَ أَذْنَبْتُ آخَرَ فَاغْفِرْهُ لِي فَقَالَ أَعَلِمَ عَبْدِي أَنَّ لَهُ رَبًّا يَغْفِرُ الذَّنْبَ وَيَأْخُذُ بِهِ غَفَرْتُ لِعَبْدِي ثَلَاثًا فَلْيَعْمَلْ مَا شَاءَ رواه البخاري

யாரின் பாவங்களையும் யாரும் சுமக்க மாட்டார்.


قال الله تعالي: وَلَا تَزِرُ وَازِرَةٌ وِزْرَ أُخْرَى 6:164

இவ்வசனம் திருக்குர்ஆனில் ஐந்து இடங்களில் பெறுகிறது. யாரும் யாருடைய பாவங்களையும் சுமக்கவில்லை என்றே திருக்குர்ஆன் அறுதியிட்டு கூறுகிறது. ஒவ்வொருவரும் அவரவர் பாவத்திற்கு அவரவரே பொறுப்பு என்றே திருக்குர்ஆன் கூறுகிறது.

இவ்வுலக வாழ்வில் ஒருவரின் பாவத்திற்கு இன்னொருவர் பொறுப்பேற்க இயலாது.அவரவர் பாவத்திற்கு அவரவரே பொறுப்பு.


கிறிஸ்தவத்தில்‘எல்லோரின் பாவங்களுக்காகவும் இயேசு சிலுவையில் தன்னை மாய்த்தார்’ என்ற நம்பிக்கை காணப்படுகின்றது.


வ்வாசகத்தை யோசித்து பார்த்தே ‘தான் இஸ்லாத்தை ஏற்றதாக கூறுவார்’தற்போது அமெரிக்காவில் இஸ்லாமிய அழைப்பாளராக பணியாற்றி வரும் ஜெர்மெய்ன் போடி அவர்கள். (இவர் இஸ்லாத்தை ஏற்றதற்கான காரணத்தை இம்மாத  (மே 2013 ) வைகறை வெளிச்சம் பத்திரிக்கையில் ‘நான் ஏன் முஸ்லிமானேன்’ எனும் தலைப்பில் விரிவாக வந்துள்ளது.)


எல்லா பாவங்களும் மன்னிக்கப்படும் ஷிர்க்கைத் தவிர


حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ أَبِي عَدِيٍّ عَنْ شُعْبَةَ عَنْ قَتَادَةَ عَنْ أَبِي الصِّدِّيقِ النَّاجِيِّ عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ رَضِيَ اللَّهُ عَنْهُ

عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ كَانَ فِي بَنِي إِسْرَائِيلَ رَجُلٌ قَتَلَ تِسْعَةً وَتِسْعِينَ إِنْسَانًا ثُمَّ خَرَجَ يَسْأَلُ فَأَتَى رَاهِبًا فَسَأَلَهُ فَقَالَ لَهُ هَلْ مِنْ تَوْبَةٍ قَالَ لَا فَقَتَلَهُ فَجَعَلَ يَسْأَلُ فَقَالَ لَهُ رَجُلٌ ائْتِ قَرْيَةَ كَذَا وَكَذَا فَأَدْرَكَهُ الْمَوْتُ فَنَاءَ بِصَدْرِهِ نَحْوَهَا فَاخْتَصَمَتْ فِيهِ مَلَائِكَةُ الرَّحْمَةِ وَمَلَائِكَةُ الْعَذَابِ فَأَوْحَى اللَّهُ إِلَى هَذِهِ أَنْ تَقَرَّبِي وَأَوْحَى اللَّهُ إِلَى هَذِهِ أَنْ تَبَاعَدِي وَقَالَ قِيسُوا مَا بَيْنَهُمَا فَوُجِدَ إِلَى هَذِهِ أَقْرَبَ بِشِبْرٍ فَغُفِرَ لَهُ

رواه البخاري


திருந்தியவனை குறை கூறக்கூடாது!

கடந்த காலத்தில் தவறு செய்து விட்டு பின்பு ஒருவன் திருந்தி வாழ தொடங்கி விட்டான் எனில், அவனை கடந்த கால தவறுகளை சுட்டிக் காட்டி குறை கூறுவதை இஸ்லாம் ஏற்கவில்லை..


و حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ نُمَيْرٍ ح و حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ نُمَيْرٍ وَتَقَارَبَا فِي لَفْظِ الْحَدِيثِ حَدَّثَنَا أَبِي حَدَّثَنَا بَشِيرُ بْنُ الْمُهَاجِرِ حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ بُرَيْدَةَ عَنْ أَبِيهِ

أَنَّ مَاعِزَ بْنَ مَالِكٍ الْأَسْلَمِيَّ أَتَى رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ إِنِّي قَدْ ظَلَمْتُ نَفْسِي وَزَنَيْتُ وَإِنِّي أُرِيدُ أَنْ تُطَهِّرَنِي فَرَدَّهُ فَلَمَّا كَانَ مِنْ الْغَدِ أَتَاهُ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ إِنِّي قَدْ زَنَيْتُ فَرَدَّهُ الثَّانِيَةَ فَأَرْسَلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَى قَوْمِهِ فَقَالَ أَتَعْلَمُونَ بِعَقْلِهِ بَأْسًا تُنْكِرُونَ مِنْهُ شَيْئًا فَقَالُوا مَا نَعْلَمُهُ إِلَّا وَفِيَّ الْعَقْلِ مِنْ صَالِحِينَا فِيمَا نُرَى فَأَتَاهُ الثَّالِثَةَ فَأَرْسَلَ إِلَيْهِمْ أَيْضًا فَسَأَلَ عَنْهُ فَأَخْبَرُوهُ أَنَّهُ لَا بَأْسَ بِهِ وَلَا بِعَقْلِهِ فَلَمَّا كَانَ الرَّابِعَةَ حَفَرَ لَهُ حُفْرَةً ثُمَّ أَمَرَ بِهِ فَرُجِمَ قَالَ فَجَاءَتْ الْغَامِدِيَّةُ فَقَالَتْ يَا رَسُولَ اللَّهِ إِنِّي قَدْ زَنَيْتُ فَطَهِّرْنِي وَإِنَّهُ رَدَّهَا فَلَمَّا كَانَ الْغَدُ قَالَتْ يَا رَسُولَ اللَّهِ لِمَ تَرُدُّنِي لَعَلَّكَ أَنْ تَرُدَّنِي كَمَا رَدَدْتَ مَاعِزًا فَوَاللَّهِ إِنِّي لَحُبْلَى قَالَ إِمَّا لَا فَاذْهَبِي حَتَّى تَلِدِي فَلَمَّا وَلَدَتْ أَتَتْهُ بِالصَّبِيِّ فِي خِرْقَةٍ قَالَتْ هَذَا قَدْ وَلَدْتُهُ قَالَ اذْهَبِي فَأَرْضِعِيهِ حَتَّى تَفْطِمِيهِ فَلَمَّا فَطَمَتْهُ أَتَتْهُ بِالصَّبِيِّ فِي يَدِهِ كِسْرَةُ خُبْزٍ فَقَالَتْ هَذَا يَا نَبِيَّ اللَّهِ قَدْ فَطَمْتُهُ وَقَدْ أَكَلَ الطَّعَامَ فَدَفَعَ الصَّبِيَّ إِلَى رَجُلٍ مِنْ الْمُسْلِمِينَ ثُمَّ أَمَرَ بِهَا فَحُفِرَ لَهَا إِلَى صَدْرِهَا وَأَمَرَ النَّاسَ فَرَجَمُوهَا فَيُقْبِلُ خَالِدُ بْنُ الْوَلِيدِ بِحَجَرٍ فَرَمَى رَأْسَهَا فَتَنَضَّحَ الدَّمُ عَلَى وَجْهِ خَالِدٍ فَسَبَّهَا فَسَمِعَ نَبِيُّ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ سَبَّهُ إِيَّاهَا فَقَالَ مَهْلًا يَا خَالِدُ فَوَالَّذِي نَفْسِي بِيَدِهِ لَقَدْ تَابَتْ تَوْبَةً لَوْ تَابَهَا صَاحِبُ مَكْسٍ لَغُفِرَ لَهُ ثُمَّ أَمَرَ بِهَا فَصَلَّى عَلَيْهَا وَدُفِنَتْ رواه مسلم


அல்லாஹ்வின் அருள்நிறைந்த ரமலானின் இரண்டாவது பத்து  நாட்கள் இறை மன்னிப்பிற்கு சொந்தமான நாட்களாகும்.ரமலான் என்றால் பாவங்களை கரிக்கும் என்றுதான் பொருள்.இந்த மாதத்திற்கு தவ்பாவின் மாதம் என்றொரு பெயரும் உண்டு என்பதை நாமறிந்துள்ளோம்.

அல்லாஹ்வின் அருள் இன்றி மன்னிப்பு ஏது?எனவே தான் ரமலானின் ஆரம்ப நாட்களில் அல்லாஹ்வின் ரஹ்மத்தை நினைவு கூறிவிட்டு மன்னிப்பை கேட்கும்படி தூண்டுகிறான்.

அல்லாஹ்வின் படைப்புக்கள் நான்கு வகை.


நன்மை மட்டும் செய்யும் வானவர்கள்.

பாவம் மட்டும் செய்யும் ஷைத்தான்கள்

நன்மையும் பாவமும் செய்யும் மனிதர்கள்

நன்மையும் பாவமும் செய்யத்தெரியா உயிரினங்கள்.


மனிதன் தன் பலஹீனத்தால் பாவம் செய்துவிடுகிறான்.ஆனால் தன் புத்திசாலித்தனத்தால் அல்லாஹ்விடம் மன்னிப்புத்தேடி அதை சரி செய்துகொள்கிறான்.

அல்லாஹ்விடம் நாம் பாவங்களுக்காக மன்னிப்பு கேட்கும் முன் அவனின் அருளின் விசாலத்தன்மையை தெரிந்துகொள்ளவேண்டும்.


இமாம் ராஸி ரஹ் அவர்கள் கூறுகிறார்கள்.


அல்லாஹ் தன் அருளில் 100 ல் ஒரு சதவீதமே இந்த பூமியில் இறக்கி வைத்திருக்கிறான்.அந்த ஒரு சதவீதத்தால் பூமியில் எத்தனை பேருக்கு ஈமான் கிடைத்திருக்கிறது?அப்படியானால் மீதமுள்ள 99பற்றி என்ன சொல்ல?


அல்லாஹ்வுக்கு 99திருநாமங்கள் உண்டு.அவை ஒவ்வொன்றும் அவனின் ஒவ்வொரு தன்மையை குறிப்பதாகும்.ஆனால் ரஹ்மத் எனும் அவனின் அருளை குறிப்பதற்கு ரஹ்மான்,ரஹீம் என்ற இரு பெயர்கள் உள்ளன.இதன் மூலம் அல்லாஹ்வின் அருளின் விசாலத்தன்மையை புரிந்துகொள்ள முடியும்.


யா ஸமது!
ஒரு சிலைவணக்கம் செய்யும் ஒருவன் கடுமையான சோதனையில் மாட்டிக்கொள்கிறான்.தன் சிலையிடம் தன் தேவையை இரவு பகலாக முறை யிடுகிறான்.விழிப்பிலும் தூக்கத்திலும் يا صنم என்று கூப்பிடுகிறான்.

அப்படி ஒரு தடவை தூக்கத்தில்يا صنم என்று அழைப்பதற்கு பதிலாக நாவு தடுமாறி يا صمدஎன்று கூப்பிடுகிறான்.இதை கேட்டதும் அல்லாஹுத்தஆலா  لبيك يا عبدي (என் அடியானே இதோ பதில் சொன்னேன்) என்று பதில் கூறுகிறான்.  உடனே வானவர்கள்-யா அல்லாஹ்!இவன் ஒரு சிலை வணக்கம் செய்பவன்.  நாவு தடுமாறி யா ஸமத் என்று சொன்னதற்காக நீ பதில் கூறுகிறாயே! எங்களுக்கு ஆச்சரியமாக உள்ளது என்றார்கள்.

அதற்கு அல்லாஹ் ரப்புல் இஸ்ஸத் இப்படி சொன்னானாம்.
இவன்  يا صنم பலதடவை அழைத்தான்.ஆனால் அவைகள் பதில் கூறவில்லை ஆனால் ஒரு தடவைதான் என்னை அழைத்தான் நான் பதில் சொல்லி விட்டேன்.நானும் பதில் சொல்லவில்லையானால் எனக்கும் அந்த சிலைக்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது?
என்று கேட்டானாம்.

பானையை உடைத்து விடுங்கள்
நபி நூஹ் அலை அவர்களின் துஆவை ஏற்று அல்லாஹ் இந்த உலகத்தை மொத்தமாக அழித்து துடைத்து விட்டான்.
கப்பலில் பயணம் செய்த சுமார்80 முஸ்லிம்களை தவிர ஒட்டுமொத்த மனித சமூகமும் ஒரு நபியின் துஆவுக்கு பழியாக்கப்பட்டது.
வெள்ளப்பிரளயமாக பெருக்கெடுத்த தண்ணீர் வற்றி நூஹ் அலை அவர்களும் அவர்களுடன் முஃமின்களும் பயணம் செய்த கப்பல் தரை தட்டியபோது  நபி நூஹ் அலை அவர்கள் அல்லாஹ்விடம்,
யா அல்லாஹ்! இப்போது நான் என்ன செய்ய வேண்டும் என வினவினார்கள்  அதற்கு அல்லாஹ் ஆங்காங்கே கிடைக்கிற களிமண்ணைக்கொண்டு மண் பாத்திரம் செய்யுங்கள் என்று கூறினாம்.
மிகுந்த சிரமத்திற்கு இடையில் மண்பாத்திரங்கள் செய்து முடித்து அல்லாஹ்  விடம் இப்போது என்ன செய்வது?என மீண்டும் வினவியபோது அந்த பாத்திரங்கள் அனைத்தையும் போட்டு உடைக்கச்சொன்னானாம்.
துடித்துப்போன நபி நூஹ் அலை அவர்கள் யா அல்லாஹ்!நான் இத்துனை சிரமங்கள் எடுத்து இதை செய்துள்ளேன்.ஒரு நொடியில் இதை உடைக்கச்சொல்கிறாயே?என்றதும் அருளாளனான அல்லாஹ் சொன்னானாம்
நூஹே! என் அடியார்கள் அனைவரையும் ஒரு நொடியில் ஒட்டுமொத்தமாக அழிக்கச்சொல்லி துஆச்செய்தாயே எனக்கு எப்படி இருக்கும்? என்று அல்லாஹ் நூஹ் அலை அவர்களை பார்த்து கேட்டான்.


وَلَوْ يُؤَاخِذُ اللَّـهُ النَّاسَ بِمَا كَسَبُوا مَا تَرَكَ عَلَىٰ ظَهْرِهَا مِن دَابَّةٍ

பூமியில் மனிதர்கள் செய்யும் குற்றங்களுக்காக அல்லாஹ் பிடிக்க ஆரம்பித்தால் பூமியில் ஒரு உயிரினம் மிஞ்சாது என்று அல்லாஹ் தன் திரு மறையில் கூறுவான்.

அல்லாஹ்வின் அடியார்களே!
அல்லாஹ்வின் அருள் நிறைந்த ரமலான். மன்னிப்பின் பக்கம் அழைக்கிறது வாருங்கள்.நாம் செய்த பாவம் வானத்தை விட பெரியதாக இருக்கலாம்.  ஆனால் அவனின் அருள் அதைவிடவும் விசாலமானது.

அல்லாஹ் மூன்று கடவுளில் மூன்றாவது கடவுள் என்று கூறி இணைவைக்கும் கூட்டமான கிருஸ்துவ கூட்டத்தை நோக்கி அவனின் தவ்பா அழைப்பை பாருங்கள்


أَفَلَا يَتُوبُونَ إِلَى اللَّـهِ وَيَسْتَغْفِرُونَهُ ۚ وَاللَّـهُ غَفُورٌ رَّحِيمٌ


இவர்கள் அல்லாஹ்வின் பக்கம் திரும்பி தவ்பா செய்து,அவனிடம் மன்னிப்புத் தேட மாட்டார்களா? அல்லாஹ் மிக்க மன்னிப்பவனாகவும் பெருங்கருணையாளனாகவும் இருக்கிறான்.

ஈமான் கொண்டதற்காக ஒரு ஊர் மக்களை ஒட்டு மொத்தமாக கொளுத்திய அந்த அநியாயக்கார கூட்டத்தை நோக்கி அல்லாஹ் தவ்பாவின் கரம் நீட்டுகிறான்.இதோ பாருங்கள்..
  إِنَّ الَّذِينَ فَتَنُوا الْمُؤْمِنِينَ وَالْمُؤْمِنَاتِ ثُمَّ لَمْ يَتُوبُوا فَلَهُمْ عَذَابُ جَهَنَّمَ وَلَهُمْ عَذَابُ الْحَرِيقِ

நிச்சயமாக, எவர்கள் முஃமினான ஆண்களையும்,முஃமினான பெண்களையும் துன்புறுத்திப் பின்னர், தவ்பா செய்யவில்லையோ அவர்களுக்கு நரக வேதனை உண்டு மேலும், கரித்துப் பொசுக்கும் வேதனையும் அவர்களுக்கு உண்டு(85:10)

ஆண்டுக்கு ஒரு தடவை அல்லது இரு தடவை சோதனைகள் மூலம் தவ்பாவின் பக்கம் தன் அடியானை திசைதிருப்புவதாக திருக்குர்ஆன் கூறுகிறது.

நன்மையை வீணாக்க மாட்டேன்


وفي البخاري أن حكيم بن حزام رضي الله عنه أقبل على رسول الله صلى الله عليه وسلم فقال :

أي رسول الله .. أرأيت أموراً كنت أتحنث بها في الجاهلية .. من صدقة أو .. عتِاقة .. أو صلة رحم .. أفيها أجر ؟

فقال رسول الله صلى الله عليه وسلم : ( أسلمت على ما أسلفت من خير


நபி ஸல் அவர்களின் கரம் பற்றி இஸ்லாமாக வந்த ஹகீம் இப்னு ஹிஸாம் ரலி அவர்கள் நபி ஸல் அவர்களிடம்,

அல்லாஹ்வின் தூதர் அவர்களே!அறியாமை காலத்தில் நான் தர்மம்,அடிமையை உரிமை விடுதல்,சொந்தங்களை அரவணைக்குதல் போன்ற நற்காரியங்களை செய்துள்ளேன்.

இப்போது நான் இஸ்லாமாகிவிட்டேன்.

அந்த நற்காரியங்களின் நிலை என்ன?என கேட்டார்கள்.அதற்கு அல்லாஹ்வின் தூதர் ஸல் அவர்கள்,(அவை வீணாகாமல்)  அந்த நன்மையுடன் இஸ்லாத்திற்கு வந்துள்ளீர் என்றார்கள்.

அல்லாஹு அக்பர்.
இஸ்லாம் கடந்த கால பாவத்தை அழித்து சுத்தப்படுத்துகிறது.அதேநேரம் நன்மையை பாதுகாக்கிறது.அல்லாஹ்வின் தாராள தன்மையை என்னவென்று சொல்வேன்?

நபி ஸல் அவர்கள் கூறுகிறார்கள்.
ஒரு அடியான் ஒரு பாவத்தை செய்து விடுகிறான்.வானவர்கள் அதை பதிவு செய்யட்டுமா?என அல்லாஹ்விடம் அனுமதி கேட்கிறார்கள்.

அல்லாஹ்தஆலா கொஞ்சம் பொருங்கள்,அவன் தவ்பா செய்யலாம் என்கிறான்.
மீண்டும் இரண்டாவது ஒரு பாவத்தை செய்கிறான்.இப்போதும் மலக்குகள் பதிவு செய்ய அனுமதி வேண்டி நிற்கின்றனர். அப்போதும் அல்லாஹுத்தஆலா கொஞ்சம் பொருமையாக இருக்கச்சொல்கிறான்.
இப்படி ஐந்து தடவை அந்த அடியான் பாவம் செய்து விடுகிறான்.ஆறாவது தடவை ஒரு நல்ல காரியத்தை செய்கிறான்.இப்போது அல்லாஹ் தஆலா அவன் செய்த ஒரு நன்மைக்கு பத்தை பதிவு செய்யுங்கள்.அந்த பத்தில் ஐந்தை கொண்டு அவனின் ஐந்து பாவத்தை அழித்துவிடுங்கள் என்று கூறுகிறான்.இதை செவிமடுத்த ஷைத்தான் தன் தலையில் கைவைத்து ,நான் இவனை பாவம் செய்ய வைக்க எவ்வளவு கஷ்டப்பட்டேன்.ஒரு நன்மையால் அத்தனையும் அழிந்து விட்டதே என்று புலம்புகிறான்.

உன் அடியார்களை பாவம் செய்ய தூண்டிக்கொண்டே இருப்பேன். இது ஷைத்தான் அன்று சொன்னது.நான் அடியார்களை மன்னித்து கொண்டே இருப்பேன்.இது அல்லாஹ் அவனுக்கு பதில் சொன்னது.

நிச்சயமாக தவ்பா செய்வதை விட்டும் நாம் சடையும் வரை அல்லாஹ் சலைக்க மாட்டான்.

இமாம் ஹஸன் ரஹ் அவர்களிடம் ஒருவர் வந்து ,இமாம் அவர்களே!  நம்மில் ஒருவர் பாவம் செய்கிறார்.பின்னர் தவ்பா செய்கிறார்.மீண்டும் பாவம் செய்கிறார். பின்னர் அதற்கு தவ்பா செய்கிறார். 
இப்படியே தொடர்ந்து கொண்டிருந்தால் நல்லாவா இருக்கிறது?என்றார்.

هذا ود الشيطان  இது தான் ஷைத்தானின் ஆசை.உங்களை எப்படியாவது நிறாசைய டையச் செய்யவேண்டும் என்று ஆசைப்படுகிறான் என்றார்கள்.

அடியானுக்கும் அல்லாஹ்வுக்கும் உள்ள உறவு தாயிக்கும் குழந்தைக்கும் உள்ள உறவாகும்.

ஒரு குழந்தை எத்தனை தவறு செய்தாலும் தன் தாயிடமே தஞ்சமடையும்.    அதனால் தான் 
ஒரு தாயை தன் குழந்தையை நெஞ்சில் அணைத்துவைத்திருந்ததை காட்டி நபி ஸல் அவர்கள்,


أتُرَون هذه .. طارحة ولدها في النار


இவள் தன் குழந்தையை நெருப்பில் போடுவாளா?என கேட்டார்கள்.அதற்கு நபி தோழர்கள்


كيف تطرحه في النار

قالوا : لا .. والله .. يا رسول الله .. لا تطرحه في النار

எப்படி போடுவாள்? அல்லாஹ்வின் தூதர் அவர்களே நிச்சயமாக போடமாட் டாள் என்றார்கள்.
அப்போது ஸல் அவர்கள்


والله .. لله .. أرحم بعباده من هذه بولدها

அல்லாஹ்வின் மீது சத்தியம்.அல்லாஹ் தன் அடியார்கள் மீது இந்த தாயை விட இரக்கமுள்ளவன் என்றார்கள்.


وذكر ابن قدامة في التوابين ..

أن بني إسرائيل .. لحقهم قحط على عهد موسى عليه السلام .. فاجتمع الناس إليه ..

فقالوا : يا كليم الله .. ادع لنا ربك أن يسقينا الغيث ..

فقام معهم .. وخرجوا إلى الصحراء .. وهم سبعون ألفاً أو يزيدون ..

فقال موسى عليه السلام : إلهي .. اسقنا غيثك .. وانشر علينا رحمتك .. وارحمنا بالأطفال الرضع .. والبهائم الرتع .. والمشايخ الركع ..

فما زادت السماء إلا تقشعاً .. والشمس إلا حرارة ..

فقال موسى : إلهي .. اسقنا ..

فقال الله : كيف أسقيكم ؟ وفيكم عبد يبارزني بالمعاصي منذ أربعين سنة .. فناد في الناس حتى يخرج من بين أظهركم .. فبه منعتكم ..

فصاح موسى في قومه : يا أيها العبد العاصي .. الذي يبارز الله منذ أربعين سنة .. اخرج من بين أظهرنا .. فبك منعنا المطر ..

فنظر العبد العاصي .. ذات اليمين وذات الشمال .. فلم ير أحداً خرج .. فعلم أنه الم
طلوب ..

فقال في نفسه : إن أنا خرجت من بين هذا الخلق .. افتضحت على رؤوس بني إسرائيل .. وإن قعدت معهم منعوا لأجلي .. فانكسرت نفسه .. ودمعت عينه ..

فأدخل رأسه في ثيابه نادماً على فعاله .. وقال : إلهي .. وسيدي .. عصيتك أربعين سنة ..وأمهلتني .. وقد أتيتك طائعاً .. فاقبلني .. وأخذ يبتهل إلى خالقه ..

فلم يستتم الكلام .. حتى ارتفعت سحابة بيضاء ..فأمطرت كأفواه القرب ..

فعجب موسى وقال : إلهي .. سقيتنا .. وما خرج من بين أظهرنا أحد ..

فقال الله : يا موسى سقيتكم بالذي به منعتكم ..

فقال موسى : إلهي .. أرني هذا العبد الطائع ..

فقال : يا موسى .. إني لم أفضحه وهو يعصيني .. أأفضحه وهو يطيعني ..


நபி மூஸா அலை அவர்களின் காலத்தில் பனீஇஸ்ரவேலர்களுக்கு பெரும் பஞ்சம் ஏற்பட்டது.அப்போது மக்கள் நபி மூஸா அலை அவர்களிடம் வந்து மழைக்காக துஆச்செய்யும்படி வேண்டினார்கள்.
சுமார் எழுபதாயிரம் மக்களை ஒரு பாலைபெருவெளியில் ஒன்று திரட்டிய நபி மூஸா அலை அவர்கள்,
யா அல்லாஹ்!எங்களுக்கு மழை பொழிவாயாக.உன் அருளை எங்கள் மீது இறக்கிவைப்பாயாக.பால் குடிக்கும் குழந்தைகள்.மேய்ந்து திரியும், கால்நடைகள்,வணக்கங்களில் ஈடுபடும் பெரியவர்களின் பொருட்டால் எங்களுக்கு இறக்கம் காட்டுவாயாக என்று எவ்வளவு கெஞ்சியும் வானம் தன் உஷ்னத்தை குறைக்கவில்லை. அப்போது அல்லாஹ் தஆலா சொன்னான். நாற்பது ஆண்டுகள் பாவம் செய்த ஒருவன் உங்கள் கூட்டத்தில் இருக்கிறான்.  அவனால் உங்களின் மழை தடுக்கப்பட்டிருக்கிறது. முதலில் அவனை வெளியேற்றுங்கள் என்று கூறினான்.
அதை செவியுற்ற நபி மூஸா அலை அவர்கள்,
பாவியே!நீ இந்த கூட்டத்தை விட்டு வெளியேறு என்று கூறியதும் பாவம் செய்தவன் தன் இருபுறத்திலும் பார்த்தான் யாரும் வெளியேறவில்லை. எனவே தன்னைதான் கூறுகிறார்கள் என்று அவன் விளங்கிக்கொண்டான்.   இந்த கூட்டத்தில் இருந்தால் மழை தடுக்கப்படும்.இப்போது வெளியேறிவிட்டால் கேவலமாகிவிடும்.என்ன செய்வது?என்று யோசித்தவன் அல்லாஹ்விடம் தவ்பா செய்ய முடிவெடுத்தான்.தன் தலையை தன் ஆடையில் நுழைத்து யாருக்கும் தெரியாமல் யா அல்லாஹ்!நான் நாற்பது வருடம் உனக்கு மாறு செய்தேன்.என்னை தண்டிக்காமல் தாமிதப்படுத்தினாய்.இப்போது தவ்பா செய்ய உன் படி ஏறி யிருக்கிறேன் என்னை மன்னித்து ஏற்றுக்கொள்ள மாட்டாயா?என்று அழுது கண்ணீர் வடிக்கிறார்.
அவரின் கண்ணீர் பூமியை தொடும் முன்னர் வானத்திலிருந்து அருள்மழை பூமியை நனைக்க ஆரம்பித்துவிட்டது.யாரும் வெளியாகாமல் எப்படி மழை பொழிந்தது?என ஆச்சரியப்பட்டு, நபி மூஸா அலை அவர்கள் அல்லாஹ்விடம் கேட்டபோது, மழை தடுக்கப்பட்டவரே மழை பொழிய காரணம் என்று சொன்னானாம்.அவர் திருந்தி என் பிரியமான அடியாராக மாறிவிட்டார் என்றும் கூறினான்.
அப்போது நபி மூஸா அலை அவர்கள்
யா அல்லாஹ்!இப்போதாவது அந்த அடியாரை எனக்கு அடையாளம் காட்டு என்று வேண்டுகிறார்கள்.அதற்கு அல்லாஹ் ரப்புல் ஆலமீன் அவர் எனக்கு மாறுசெய்த அடியாராக இருக்கும்போதே நான் கேவலப்படுத்தவில்லை. இப்போது அவர் என் பிரியமான அடியாராக மாறிவிட்டார் இப்போது கேவலப்படுத்துவேனா?என்றானாம்.



قال رسولُ الله صلى الله عليه وسلم: ((كلُّ بني آدَمَ خطّاء، وخيرُ الخطّائين التوّابون)) أخرجه أحمد والترمذي وابن ماجه.

மனிதர்கள் தவறு செய்பவர்கள்.அவர்களில் சிறந்தவர்கள் தவ்பா செய்பவர்கள் என நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.

தவ்பா செய்பவர் அல்லாஹ்வின் அன்பை பெற்றுவிடுகிறார்.காரணம் தவ்பா செய்வது நபிமார்களின் சுன்னத்தாகும்.அது தனிப்பட்ட முறையில் மிகப்பெரும் இபாதத்தாகும்.


قال بعض العلماء: «دعوتُ الله سبحانه وتعالى ثلاثين سنة أن يرزقني توبةً نصوحاً ثم تعجبتُ في نفسي وقلت: سبحان الله، حاجةٌ دعوتُ اللهَ فيها ثلاثين سنة فما قُضيت إلى الآن، فرأيت فيما يرى النائم قائلاً يقول لي: أتعجبُ من ذلك؟ أتدري ماذا تسألُ الله تعالى؟ إنما تسأله سبحانه أن يحبك، أما سمعت قول الله تعالى (إِنَّ اللهَ يُحِبُّ التَّوَّابِينَ وَيُحِبُّ المُتَطَهِّرِينَ ) [البقرة:222](5).

ஒரு அறிஞர் கூறுகிறார்.

நான் அல்லாஹ்விடம் முப்பது ஆண்டுகளாக தவ்பா செய்து வருகிறேன்.   சுப்ஹானல்லாஹ்!அல்லாஹ்விடம் ஒரு தேவையையும் முப்பதாண்டுகளாக கேட்டு வருகிறேன்.ஆனால் இதுவரையும் அது நிறைவேறவில்லை.
ஒருநாள் கனவில் ஒருவர் வந்து நீ ஏன் ஆச்சரியப்படுகிறாய்?நீ அல்லாஹ்விடம் என்ன கேட்டாய்?அவனின் அன்பை கேட்கிறாய்.அல்லாஹ் உன் மீது அன்பு வைத்துவிட்டான் என்பதற்கு அடையாளம் அவனிடம் நீ தவ்பா செய்வது தான்.
நிச்சயமாக அல்லாஹ் தவ்பா செய்பவர்களை நேசிக்கிறான் என்று குர்ஆனில் இல்லையா?என்றார்.

ஒருவர் இமாம் ஹஸன்பஸரி ரஹ் அவர்களிடம் வந்து பாவத்தை முறையிட்டார்.
தவ்பா செய்யுங்கள் என்றார்கள்.
இன்னொருவர் வந்து,தன் ஊரில் மழை பொழிய வேண்டும் என்றார்கள். அவருக்கும் தவ்பா செய்யுங்கள் என்றார்கள். மூன்றாவது ஒருவர் வந்து,வறுமை நீங்க என்ன செய்ய வேண்டும் என்று வினவினார். அவருக்கும் தவ்பா செய்யுங்கள் என்றார்கள். நான்காவதாக ஒருவர் வந்து,குழந்தை இல்லை.பிள்ளை பாக்கியம் கிடைக்க என்ன செய்ய வேண்டும்?என்றார்.
அவருக்கும் தவ்பா செய்யுங்கள் என்று கூறினார்கள். அதை பார்த்துக்கொண்டிருந்த ஒருவர் நான்கு வெவ்வேறு தேவையுடன் வந்த நான்கு நபர்களுக்கும் ஒரே பதிலை சொல்கிறீர்களே?என்று கேட்டபோது ஹ்ஸன் ரஹ் அவர்கள் இதை நான் சொல்லவில்லை, அல்லாஹ் சொல்கிறான் என்றார்கள்.


فَقُلْتُ اسْتَغْفِرُوا رَبَّكُمْ إِنَّهُ كَانَ غَفَّارًا

يُرْسِلِ السَّمَاءَ عَلَيْكُم مِّدْرَارًا

وَيُمْدِدْكُم بِأَمْوَالٍ وَبَنِينَ وَيَجْعَل لَّكُمْ جَنَّاتٍ وَيَجْعَل لَّكُمْ أَنْهَارًا


மேலும், "நீங்கள் உங்களுடைய இறைவனிடம் மன்னிப்புத் தேடுங்கள்; நிச்சயமாக அவன் மிகவும் மன்னிப்பவன்" என்றுங் கூறினேன்.

"(அப்படிச் செய்வீர்களாயின்) அவன் உங்கள் மீது தொடர்ந்து மழையை அனுப்புவான்.

அன்றியும் அவன் உங்களுக்குப் பொருள்களையும்,புதல்வர்களையும் கொண்டு உதவி செய்வான்; இன்னும்,உங்களுக்காகத் தோட்டங்களை உண்டாக்குவான்;உங்களுக்காக ஆறுகளையும் (பெருக்கெடுத்து ஓடுமாறு) உண்டாக்குவான்.


قال أبو هريرة رضي الله عنه: ما رأيتُ أكثرَ استغفارًا من رسول الله صلى الله عليه وسلم


நபி ஸல் அவர்களை அதிகமாக இஸ்திஃபார் செய்பவர்களாக யாரையும் நான் பார்த்ததில்லை என அபூ ஹுரைரா ரலி அவர்கள் கூறுகிறார்கள்.


والله، إني لأستغفِر الله وأتوب إليه في اليومِ أكثرَ من سبعين مرة)) أخرجه البخاريّ،


ஒரு நாளைக்கு 100 தடவை நான் தவ்பா செய்கிறேன் என்று நபி ஸல் அவர்கள் கூறுகிறார்கள்.

ஒரு பாவமும்செய்யாத அந்த பூமான் நபி ஸல் அவர்கள் தவ்பா செய்யும் போது பாவத்திலேயே வாழ்வை கழிக்கும் நம் போன்றவர்கள் எத்துனை தடவை தவ்பா செய்யலாம்.?வாருங்கள் நம்பிக்கையுடன் தவ்பா செய்வோம்.   ரமலானில் தவ்பா நஸீப் இல்லாதவன் சாபத்திற்குரியவன். அல்லாஹ் நம்மையும் நம் குடும்பத்தையும் ரமலானின் அருள் கொண்டு மன்னிப்பானாக.
அறிந்தோ, அறியாமலோ பாவம் செய்வது மனிதனின் இயல்பு. ஆனால் அதிலிருந்து திருந்தி தவ்பா செய்பவனே முஃமின்
عن أَبي هُرَيْرَةَ رضي الله عنه قُلْنَا يَا رَسُولَ اللَّهِ إِنَّا إِذَا رَأَيْنَاكَ رَقَّتْ قُلُوبُنَا وَكُنَّا مِنْ أَهْلِ الْآخِرَةِ وَإِذَا فَارَقْنَاكَ أَعْجَبَتْنَا الدُّنْيَا وَشَمَمْنَا النِّسَاءَ وَالْأَوْلَادَ قَالَ لَوْ تَكُونُونَ أَوْ قَالَ لَوْ أَنَّكُمْ تَكُونُونَ عَلَى كُلِّ حَالٍ عَلَى الْحَالِ الَّتِي أَنْتُمْ عَلَيْهَا عِنْدِي لَصَافَحَتْكُمْ الْمَلَائِكَةُ بِأَكُفِّهِمْ وَلَزَارَتْكُمْ فِي بُيُوتِكُمْ وَلَوْ لَمْ تُذْنِبُوا لَجَاءَ اللَّهُ بِقَوْمٍ يُذْنِبُونَ كَيْ يَغْفِرَ لَهُمْ رواه أحمد وفي رواية مسلم "وَلَجَاءَ بِقَوْمٍ يُذْنِبُونَ فَيَسْتَغْفِرُونَ اللَّهَ فَيَغْفِرُ لَهُمْ (مسلم)
عن أَبي هُرَيْرَةَ رضي الله عنه قَالَ سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِنَّ عَبْدًا أَصَابَ ذَنْبًا وَرُبَّمَا قَالَ أَذْنَبَ ذَنْبًا فَقَالَ رَبِّ أَذْنَبْتُ وَرُبَّمَا قَالَ أَصَبْتُ فَاغْفِرْ لِي فَقَالَ رَبُّهُ أَعَلِمَ عَبْدِي أَنَّ لَهُ رَبًّا يَغْفِرُ الذَّنْبَ وَيَأْخُذُ بِهِ غَفَرْتُ لِعَبْدِي ثُمَّ مَكَثَ مَا شَاءَ اللَّهُ ثُمَّ أَصَابَ ذَنْبًا أَوْ أَذْنَبَ ذَنْبًا فَقَالَ رَبِّ أَذْنَبْتُ أَوْ أَصَبْتُ آخَرَ فَاغْفِرْهُ فَقَالَ أَعَلِمَ عَبْدِي أَنَّ لَهُ رَبًّا يَغْفِرُ الذَّنْبَ وَيَأْخُذُ بِهِ غَفَرْتُ لِعَبْدِي ثُمَّ مَكَثَ مَا شَاءَ اللَّهُ ثُمَّ أَذْنَبَ ذَنْبًا وَرُبَّمَا قَالَ أَصَابَ ذَنْبًا قَالَ قَالَ رَبِّ أَصَبْتُ أَوْ قَالَ أَذْنَبْتُ آخَرَ فَاغْفِرْهُ لِي فَقَالَ أَعَلِمَ عَبْدِي أَنَّ لَهُ رَبًّا يَغْفِرُ الذَّنْبَ وَيَأْخُذُ بِهِ غَفَرْتُ لِعَبْدِي ثَلَاثًا....(بخاري) باب قَوْلِ اللَّهِ تَعَالَى ( يُرِيدُونَ أَنْ يُبَدِّلُوا كَلاَمَ اللَّهِ ) كتاب التوحيد
عَنْ أَنَس رضي قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم:كُلُّ بَنِى آدَمَ خَطَّاءٌ وَخَيْرُ الْخَطَّائِينَ التَّوَّابُونَ (ابن ماجة) باب ذكر التوبة- كتاب الزهد
தவ்பா செய்யாமல் பாவத்தின் மீதே நிலைத்திருப்பது உள்ளத்தை மரணிக்கச் செய்து விடும்
عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرِو بْنِ الْعَاصِ رض عَنِ النَّبِىِّ صلى الله عليه وسلم أَنَّهُ قَالَ.. وَيْلٌ لِلْمُصِرِّينَ الَّذِينَ يُصِرُّونَ عَلَى مَا فَعَلُوا وَهُمْ يَعْلَمُونَ (احمد)عَنْ أَبِى هُرَيْرَةَ رضي الله عنه أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ: إِنَّ الْمُؤْمِنَ إِذَا أَذْنَبَ كَانَتْ نُكْتَةٌ سَوْدَاءُ فِى قَلْبِهِ فَإِنْ تَابَ وَنَزَعَ وَاسْتَغْفَرَ صُقِلَ قَلْبُهُ فَإِنْ زَادَ زَادَتْ فَذَلِكَ الرَّانُ الَّذِى ذَكَرَهُ اللَّهُ فِى كِتَابِهِ (كَلاَّ بَلْ رَانَ عَلَى قُلُوبِهِمْ مَا كَانُوا يَكْسِبُونَ(المطففين14) ابن ماجة- بَاب ذِكْرِ الذُّنُوبِ-كِتَاب الزُّهْدِ
மரணம் வரும் வரை பாவங்களை நிறைய செய்து விட்டு மரண வேளையில் தவ்பா செய்தால் ஏற்கப்படுமா ?
وَلَيْسَتِ التَّوْبَةُ لِلَّذِينَ يَعْمَلُونَ السَّيِّئَاتِ حَتَّى إِذَا حَضَرَ أَحَدَهُمُ الْمَوْتُ قَالَ إِنِّي تُبْتُ الآنَ وَلا الَّذِينَ يَمُوتُونَ وَهُمْ كُفَّارٌ أُولَئِكَ أَعْتَدْنَا لَهُمْ عَذَاباً أَلِيماً (النساء18قال الله في قصة فرعون)حَتَّى إِذَا أَدْرَكَهُ الْغَرَقُ قَالَ آمَنتُ أَنَّهُ لا إِلِهَ إِلاَّ الَّذِي آمَنَتْ بِهِ بَنُو إِسْرَائِيلَ وَأَنَاْ مِنَ الْمُسْلِمِينَ-آلآنَ وَقَدْ عَصَيْتَ قَبْلُ وَكُنتَ مِنَ الْمُفْسِدِينَ(الانفال
அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமான செயல் தன் அடியான் தன்னிடம் பாவமன்னிப்பு தேடுவது
عَنِ عَبْدِ اللَّهِ رضي الله عنه قَالَ قال رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم لَلَّهُ أَشَدُّ فَرَحًا بِتَوْبَةِ عَبْدِهِ الْمُؤْمِنِ مِنْ رَجُلٍ فِى أَرْضٍ دَوِيَّةٍ مَهْلَكَةٍ مَعَهُ رَاحِلَتُهُ عَلَيْهَا طَعَامُهُ وَشَرَابُهُ فَنَامَ فَاسْتَيْقَظَ وَقَدْ ذَهَبَتْ فَطَلَبَهَا حَتَّى أَدْرَكَهُ الْعَطَشُ ثُمَّ قَالَ أَرْجِعُ إِلَى مَكَانِى الَّذِى كُنْتُ فِيهِ فَأَنَامُ حَتَّى أَمُوتَ فَوَضَعَ رَأْسَهُ عَلَى سَاعِدِهِ لِيَمُوتَ فَاسْتَيْقَظَ وَعِنْدَهُ رَاحِلَتُهُ وَعَلَيْهَا زَادُهُ وَطَعَامُهُ وَشَرَابُهُ فَاللَّهُ أَشَدُّ فَرَحًا بِتَوْبَةِ الْعَبْدِ الْمُؤْمِنِ مِنْ هَذَا بِرَاحِلَتِهِ وَزَادِهِ رواه مسلم-باب التوبة
ஷைத்தானை கதிகலங்கச் செய்யும் இஸ்திஃபார்
عن أبي بكر رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال:عليكم بلا إله إلا الله والاستغفار فأكثروا منهما فإن إبليس قال: أهلكتُ الناس بالذنوب وأهلكوني بلا إله إلا الله والاستغفار فلما رأيتُ ذلك أهْلَكتُهم بالأهواء فهم يحسبون أنهم مهتدون"(تفسيرابن كثير) عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ عَن النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
قَالَ "قَالَ إِبْلِيسُ أَيْ رَبِّ لَا أَزَالُ أُغْوِي بَنِي آدَمَ مَا دَامَتْ أَرْوَاحُهُمْ فِي أَجْسَادِهِمْ فَقَالَ الرَّبُّ عَزَّ وَجَلَّ لَا أَزَالُ أَغْفِرُ لَهُمْ مَا اسْتَغْفَرُونِي (احمد)
பஞ்சத்தை நீக்க, கவலைகளைப் போக்க, குழந்தை பாக்கியம் பெற, வீடு,தோட்டம் செழிக்க இஸ்திஃபார் தான் சிறந்த வழி
وَيَا قَوْمِ اسْتَغْفِرُوا رَبَّكُمْ ثُمَّ تُوبُوا إِلَيْهِ يُرْسِلِ السَّمَاءَ عَلَيْكُمْ مِدْرَارًا وَيَزِدْكُمْ قُوَّةً إِلَى قُوَّتِكُمْ وَلَا تَتَوَلَّوْا مُجْرِمِينَ (52) سورة هود- فَقُلْتُ اسْتَغْفِرُوا رَبَّكُمْ إِنَّهُ كَانَ غَفَّارًا-يُرْسِلِ السَّمَاءَ عَلَيْكُمْ مِدْرَارًا-وَيُمْدِدْكُمْ بِأَمْوَالٍ وَبَنِينَ وَيَجْعَلْ لَكُمْ جَنَّاتٍ وَيَجْعَلْ لَكُمْ أَنْهَارًا (12سورة نوح
قال مقاتل: لما كذبوا نوحا زمانا طويلا حبس الله عنهم المطر وأعْقَمَ أرحام نسائهم أربعين سنة فهلكتْ مواشيهم وزروعهم فصاروا إلى نوح عليه السلام واستغاثوا به فقال:استغفروا ربكم إنه كان غفارا -قال الشعبي:خرج عُمَررض يستسقي فلم يزد على الاستغفارحتى رجع فأُمْطِرُوا فقالوا مارأيناك استسقيت؟فقال لقد طلبت المطر بمجاديح السماء التي يستنزل بها المطرثم قرأ:استغفروا ربكم إنه كان غفارا يرسل السماء عليكم مدرارا(القرطبي قال الأوزاعي :خرج الناس يستسقون فقام فيهم بلال بن سعد فحمد الله وأثنى عليه ثم قال: اللهم إنا سمعناك تقول: }ما على المحسنين من سبيل{ )التوبة91 وقد أقررنا بالإساءة فهل تكون مغفرتك إلا لمثلنا ؟ اللهم اغفر لنا وارحمنا واسقنا فرفع يديه ورفعوا أيديهم فسُقُوْا (تفسير القرطبي) وقال ابن صبيح : شكا رجل إلى الحسن الجدُوْبَة فقال له : اِسْتَغْفِرِ الله وشكا آخر إليه الفقر فقال له : استغفر الله وقال له آخر : اُدْعُ الله أن يرزقني ولدا فقال له :اِسْتَغْفِرِ الله وشكا إليه آخر جفاف بستانه فقال له: استغفر الله فقلنا له في ذلك ؟ فقال :ما قلتُ من عندي شيئا (القرطبي) عَنْ حُذَيْفَةَ قَالَ كَانَ فِى لِسَانِى ذَرَبٌ عَلَى أَهْلِى وَكَانَ لاَ يَعْدُوهُمْ إِلَى غَيْرِهِمْ فَذَكَرْتُ ذَلِكَ لِلنَّبِىِّ صلى الله عليه وسلم فَقَالَ أَيْنَ أَنْتَ مِنَ الاِسْتِغْفَارِ تَسْتَغْفِرُ اللَّهَ فِى الْيَوْمِ سَبْعِينَ مَرَّةً رواه ابن ماحة (الذرب : الفحش) وقال قتادة رحمه الله القرآن يدلكم عن دائكم ودوائكم أما داؤكم فالذنوب وأما دواؤكم فالاستغفار (احياء علوم الدين)
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا تُوبُوا إِلَى اللَّهِ تَوْبَةً نَصُوحًا عَسَى رَبُّكُمْ أَنْ يُكَفِّرَ عَنْكُمْ سَيِّئَاتِكُمْ وَيُدْخِلَكُمْ جَنَّاتٍ تَجْرِي مِنْ تَحْتِهَا الْأَنْهَارُ يَوْمَ لَا يُخْزِي اللَّهُ النَّبِيَّ وَالَّذِينَ آمَنُوا مَعَهُ نُورُهُمْ يَسْعَى بَيْنَ أَيْدِيهِمْ وَبِأَيْمَانِهِمْ يَقُولُونَ رَبَّنَا أَتْمِمْ لَنَا نُورَنَا وَاغْفِرْ لَنَا إِنَّكَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ(8)
 
நமது வாழ்வு எவ்வளவு வேகமாக கடந்து செல்கிறது என்பதை ரமலான் அப்பட்டமாக உணர்த்துகிறது. 

ஒரு நாளின் / ஒரு மாதத்தின் தொடக்கத்தையும் இறுதியையும் அடிக்கடி கணக்கு கூட்டி சரி பார்ப்பவரே வெற்றி கரமான வியாபாரியாகிறார். 

சிறந்த நிர்வாகிகள் நிர்வாகத்தின் நடவடிக்கையை கலாண்டுக்கு ஒரு தடவை சரி பார்த்து தவறுகள் இருப்பின் உடனடியாக திருத்திக் கொள்ள முயற்சி செய்கிறார்கள். அறிவுறுத்துகிறார்கள். 
தோல்வி அடையாமல் இருக்கவும். ஒரு வேளை தோல்வி அடைந்திருந்திருந்தால் அதன பாதிப்பை குறைக்கவும் தேவையான ஏற்பாடு என நிர்வாக இயல் இதை புகழ்கிறது. 

ஈமனிய வாழ்க்கைகைகும் இத்தகைய திரும்பிப்பார்தல் அவசியம், ஈமானை பாதுகாக்கவும் தக்கவைக்கவும் இது அவசியம்

ரமலானின் நடுப்பகுதியை மன்னிப்பிற்குரியது என்று சொன்ன பெருமானார் (ஸல்) அவர்கள் மன்னிப்புக் கேட்பது பற்றி யோசிக்கத் தூண்டுகிறார்கள். 

ரமலானில் அல்லாஹ் மக்களுக்கு மன்னிப்பை வாரி வழங்குகிறான். 

من صام رمضان إيماناً واحتساباً غفر له ما تقدم من ذنبه - صحيح البخاري


ரமலானின் நடுப்பகுதியில் அந்த மன்னிப்பு இன்னும் நிறையக் கிடைக்கும். 
தவறு செய்வது இயல்பு, அதற்கு மன்னிப்பு பெற முயற்சிப்பது புத்திசாலித்தனம் 
எவ்வளவு பெரிய நிலையிலும் மனிதன் தவறு செய்கிறான். மன்னிப்புக் அவனை பாதுகாக்கிறது.

عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ قَالَ لَوْ كَانَ لِابْنِ آدَمَ وَادٍ مِنْ ذَهَبٍ أَحَبَّ أَنَّ لَهُ وَادِيًا آخَرَ وَلَنْ يَمْلَأَ فَاهُ إِلَّا التُّرَابُ وَاللَّهُ يَتُوبُ عَلَى مَنْ تَابَ - مسلم

இன்றைய நிர்வாகப் படிப்பு இப்படிச் சொல்கிறது

தவறு செய்து விட்டீர்களா? யோசிக்கவே செய்யாதீர்கள்! மன்னிப்புக் கேடு விடுங்கள். 
அது உங்களுக்கு கீழே வேலை செய்பவரிடமாக இருந்தாலும் சரி.இதில் உங்களது அந்தஸ்து உயரவே செய்யும் , மற்றும் உறவு சீராகும் மனிதர்களிட்த்திலே இப்படி என்றால் அல்லாஹ்விடம் ?
அல்லாஹ் மன்னிப்பை வாரி வழங்குபவன் – கோபிப்பதை விட மன்னிப்பதையே அவன் விரும்புகிறான்





عَنْ أَبِي هُرَيْرَةَ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِيمَا يَحْكِي عَنْ رَبِّهِ عَزَّ وَجَلَّ قَالَ أَذْنَبَ عَبْدٌ ذَنْبًا فَقَالَ اللَّهُمَّ اغْفِرْ لِي ذَنْبِي فَقَالَ تَبَارَكَ وَتَعَالَى أَذْنَبَ عَبْدِي ذَنْبًا فَعَلِمَ أَنَّ لَهُ رَبًّا يَغْفِرُ الذَّنْبَ وَيَأْخُذُ بِالذَّنْبِ ثُمَّ عَادَ فَأَذْنَبَ فَقَالَ أَيْ رَبِّ اغْفِرْ لِي ذَنْبِي فَقَالَ تَبَارَكَ وَتَعَالَى عَبْدِي أَذْنَبَ ذَنْبًا فَعَلِمَ أَنَّ لَهُ رَبًّا يَغْفِرُ الذَّنْبَ وَيَأْخُذُ بِالذَّنْبِ ثُمَّ عَادَ فَأَذْنَبَ فَقَالَ أَيْ رَبِّ اغْفِرْ لِي ذَنْبِي فَقَالَ تَبَارَكَ وَتَعَالَى أَذْنَبَ عَبْدِي ذَنْبًا فَعَلِمَ أَنَّ لَهُ رَبًّا يَغْفِرُ الذَّنْبَ وَيَأْخُذُ بِالذَّنْبِ اعْمَلْ مَا شِئْتَ فَقَدْ غَفَرْتُ لَكَ 


பாவ மன்னிப்பு கேட்பவர்கள் புன்னியவான்கள்

عَنْ أَنَسٍ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ كُلُّ ابْنِ آدَمَ خَطَّاءٌ وَخَيْرُ الْخَطَّائِينَ التَّوَّابُونَ – ترمذي 

ஆணால் தவறை உணராதோர்

عَنْ أَبِي هُرَيْرَةَ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِنَّ الْعَبْدَ إِذَا أَخْطَأَ خَطِيئَةً نُكِتَتْ فِي قَلْبِهِ نُكْتَةٌ سَوْدَاءُ فَإِذَا هُوَ نَزَعَ وَاسْتَغْفَرَ وَتَابَ سُقِلَ قَلْبُهُ وَإِنْ عَادَ زِيدَ فِيهَا حَتَّى تَعْلُوَ قَلْبَهُ وَهُوَ الرَّانُ الَّذِي ذَكَرَ اللَّهُ كَلَّا بَلْ رَانَ عَلَى قُلُوبِهِمْ مَا كَانُوا يَكْسِبُونَ قَالَ هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ- ترمذي 

மன்னிப்புக் கோரும்படி பெருமானாரின் வலியுறுத்தல்

عَنْ ابْنَ عُمَرَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَا أَيُّهَا النَّاسُ تُوبُوا إِلَى اللَّهِ فَإِنِّي أَتُوبُ فِي الْيَوْمِ إِلَيْهِ مِائَةَ مَرَّةٍ – مسلم 4871

ஒரு மனிதன் தவ்பா கேட்கிற போது அல்லாஹ்விற்கு ஏற்ப்டும் மகிழ்ச்சி 





عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَلَّهُ أَشَدُّ فَرَحًا بِتَوْبَةِ أَحَدِكُمْ مِنْ أَحَدِكُمْ بِضَالَّتِهِ إِذَا وَجَدَهَا – 
قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللّ

َهُ عَلَيْهِ وَسَلَّمَ التَّائِبُ مِنْ الذَّنْبِ كَمَنْ لَا ذَنْبَ لَهُ – إبن ماجة 

மனிதனின் மன்னிப்பை பெற பெரு முயற்சி தேவை. அப்படியே மன்னித்தாலும் முழு மனதுடனான மன்னிப்பா என்பது சந்தேகமாகவே இருக்கும் 

மன்னிப்பு கோருவதற்கான கால அவகாசம் நிறைய உண்டு
عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ تَابَ قَبْلَ أَنْ تَطْلُعَ الشَّمْسُ مِنْ مَغْرِبِهَا تَابَ اللَّهُ عَلَيْهِ - مسلم 

عَنْ ابْنِ عُمَرَ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِنَّ اللَّهَ يَقْبَلُ تَوْبَةَ الْعَبْدِ مَا لَمْ يُغَرْغِرْ - ترمذي

ஆனால் நமக்குள்ள வாய்ப்பை தவற விட்டு விடக் கூடாது.

அல்லாஹ்வின் மன்னிப்ப்பை பெற சிறு முயற்சி போதும்


عَنْ أَبِي سَعِيدٍ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَنْ قَالَ حِينَ يَأْوِي إِلَى فِرَاشِهِ أَسْتَغْفِرُ اللَّهَ الْعَظِيمَ الَّذِي لَا إِلَهَ إِلَّا هُوَ الْحَيَّ الْقَيُّومَ وَأَتُوبُ إِلَيْهِ ثَلَاثَ مَرَّاتٍ غَفَرَ اللَّهُ لَهُ ذُنُوبَهُ وَإِنْ كَانَتْ مِثْلَ زَبَدِ الْبَحْرِ وَإِنْ كَانَتْ عَدَدَ وَرَقِ الشَّجَرِ وَإِنْ كَانَتْ عَدَدَ رَمْلِ عَالِجٍ وَإِنْ كَانَتْ عَدَدَ أَيَّامِ الدُّنْيَا – ترمذي

மன்னிப்புக் கேட்பது எப்படி? 
நம்மில் பலரது நினைப்பு நான் எதுக்காக மன்னிப்புக் கேட்கனும் என்பது போல இருக்கிறது. முதலில் தவறுகள் பாவங்களைப் பற்றிய பிரக்ஞை வேண்டும். அதுவே மன்னிப்பை தேடிய மேற்கொள்ளும் ஒரு சரியான முயற்சியாகும்





عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ كَانَ فِي بَنِي إِسْرَائِيلَ رَجُلٌ قَتَلَ تِسْعَةً وَتِسْعِينَ إِنْسَانًا ثُمَّ خَرَجَ يَسْأَلُ فَأَتَى رَاهِبًا فَسَأَلَهُ فَقَالَ لَهُ هَلْ مِنْ تَوْبَةٍ قَالَ لَا فَقَتَلَهُ فَجَعَلَ يَسْأَلُ فَقَالَ لَهُ رَجُلٌ ائْتِ قَرْيَةَ كَذَا وَكَذَا فَأَدْرَكَهُ الْمَوْتُ فَنَاءَ بِصَدْرِهِ نَحْوَهَا فَاخْتَصَمَتْ فِيهِ مَلَائِكَةُ الرَّحْمَةِ وَمَلَائِكَةُ الْعَذَابِ فَأَوْحَى اللَّهُ إِلَى هَذِهِ أَنْ تَقَرَّبِي وَأَوْحَى اللَّهُ إِلَى هَذِهِ أَنْ تَبَاعَدِي وَقَالَ قِيسُوا مَا بَيْنَهُمَا فَوُجِدَ إِلَى هَذِهِ أَقْرَبَ بِشِبْرٍ فَغُفِرَ لَهُ

இந்த ஆண்டு நான் என்ன தவறுகள் செய்தேன் என்று ஒரு பட்டியலை மனதுக்குள் தயார் செய்து கொண்டால் இறவனிடம் கண்ணீர் பொங்க கையேந்துகிற மனோ நிலை தானாக வரும். 

இந்த ரமலானில் வாழ்க்கையின் கசப்பான பகுதிகளை கொஞ்சம் திருப்பிப்பாருங்கள்,, அல்லாஹ்வின் முன்னிலையில் அழுவதற்கான காரணங்கள் அடுக்கடுக்காக தோன்றும்
அந்தப் பாவங்களை எந்த மனிதனிடமும் சொல்லிப் புலம்ப வேண்டியதில்லை. சொல்லக் கூடாது. அல்லாஹ்விடம் முறையிட  வேண்டும்.
எப்படி முறையிட வேண்டும்
செய்வதையெல்லம் செய்து விட்டு கங்கையில் குளித்து விட்டால் பாவம் போய்விடும் என்று இந்து மதம் சொல்கிறது. ஊரைக் கொள்ளை யடித்து சாமி உண்டியலில் காணிக்கை போட்டு விட்டால் போதும் என்று ஆசாமிகள் நினைக்கிறார்கள். 

நீ செய்கிற பாவத்திற்கெல்லாம் சேர்த்து இயேசு சிலுவையில் அறையப் பட்டு விட்டார். அதனால பாதிரியாரிடம் பாவத்தை சொல்லி மன்னிப்பை பெற்றுக் கொள் என்று கிருத்துவம் சொல்கிறது. 

பெரும் பாவத்திற்கு தண்டனை மரணமே என்று யூத மதம் சொல்கிறது. 
இவை எதுவும் தவறு செய்யும் மனிதனை திருத்தவோ, அவனுக்கு உணர்த்தவோ அவனை மீட்சி பெறச் செய்வதாகவோ இல்லை. 
பாவ மன்னிப்பு பெறுவதற்கு இஸ்லாமிய வழிகாட்டுதல் அற்புதமானது. 

قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ النَّدَمُ تَوْبَةٌ -– إبن ماجة 

பாவமன்னிப்புக்கோரும் இஸ்லாமின் வழி

தவறுகளிலிருந்து விலக வேண்டும் 
செய்தது தவறு என்பதை உணர்ந்து வருந்த வேண்டும்

இனி இந்த தவறு செய்ய மாட்டேன் என்று உறுதியேற்க வேண்டும்

இதுவே தவ்பதுன்னஸூஹா 

இந்த மூன்று அம்சங்களும் இருந்தால் எந்த மனிதனிடமும் தன் பாவத்தை சொல்லி புலம் வேண்டியதில்லை. காசை கொட்டி செலவழிக்க வேண்டியதில்லை. உட்கார்ந்த இடத்திலிருந்தே அல்லாஹ்வின் மன்னிப்பை அளவின்றி பெறலாம். வாய்ப்புக்க கிடைக்கிற போது அந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளாவிட்டால் நாம் புத்திசாலிகளாக இருக்க முடியாது. 

எச்சரிக்கை: 

அல்லாஹ் மிக நல்லவன் அதே நேரம் மிக்க வல்லவனும் கூட நம்மையே நமகெதிராக மாற்றும் சக்தி படைத்தவன் பிர் அவ்னிடம் ஒரு தடவை – நானே எகிப்தின் அரசன் என்று ஒருத்தன் சொன்னால் என்ன செய்வது என்று கேட்கப்பட்டது. உயிரோடு அவனை கடலில் மூழ்கடிக்க வேண்டும் என்று அவன் சொன்னான். அவனது பதிலே அவனுக்கு வினையாக அமைந்தது.

புனித மிக்க ரமலானில் நமது தவறுகளை எண்ணிப் பார்த்து அல்லாஹ்விடம் இறைஞ்சுவோம். கருணை மிக்க ரஹ்மான் நமது தவறுகளை சரி செய்ய போதுமானவன்.



குறிப்பு வழங்கியவர்கள்: நஸீர் மிஸ்பாஹி ஹழ்ரத், பீர் ஃபைஜி ஹழ்ரத், ஹனிஃப் ஜமாலி ஹழ்ரத், புதுகை முனீரி ஹழ்ரத் 





5 comments:

I am Muslim I am Indian I am

மாஷாஅல்லாஹ்
மிக அருமையான கட்டுரை

𝘼𝙡𝙝𝙖𝙢𝙙𝙪𝙡𝙞𝙡𝙡𝙖𝙝...

ماشاء الله بارك الله فيكم جميعا

மாஷா அல்லாஹ்

Post a Comment