24 July 2015

மக்தப்களின் அவசியம்!

     




  ‌يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْۤا اِنَّ مِنْ اَزْوَاجِكُمْ وَاَوْلَادِكُمْ عَدُوًّا لَّكُمْ فَاحْذَرُوْهُمْ‌ۚ وَاِنْ تَعْفُوْا وَتَصْفَحُوْا وَتَغْفِرُوْا فَاِنَّ اللّٰهَ غَفُوْرٌ رَّحِيْمٌ‏ 
ஈமான் கொண்டவர்களே! நிச்சயமாக உங்கள் மனைவியரிலும், உங்கள் மக்களிலும் உங்களுக்கு விரோதிகள் இருக்கின்றனர்; எனவே அவர்களைப் பற்றி நீங்கள் எச்சரிக்கையாக இருங்கள்; அதையும் (அவர்களின் குற்றங் குறைகளை) மன்னித்தும், அவற்றைப் பொருட்படுத்தாமலும், சகித்துக் கொண்டும் இருப்பீர்களாயின் - நிச்சயமாக அல்லாஹ் மிகவும் மன்னிப்பவன். மிக்க கிருபையுடையவன்.(64:14)


 நமக்கு  அல்லாஹு வழங்கிய குழந்தை செல்வம் ஒரு  பெரும் அருட்கொடை.. அந்த குழந்தை செல்வத்தை நாம் எப்படி வளர்த்தோம், அவர்களை  எப்படி உருவாக்கினோம் என்று நாளை மறுமையில் விசாரிக்கபடுவோம்

ஒவ்வொருவரும் பொறுப்பாளர்கள் அவர்களின் பொறுப்பை பற்றி நாளை மறுமையில் விசாரிக்க படுவார்கள் என்ற நாயகத்தின் பிரபல்யமான நபிமொழி நமக்கு இதைதான் உணர்த்துகிறது.

அதிலும் குறிப்பாக நமக்கு அல்லாஹ் வழங்கியிருக்கிற மிக பெரும் செல்வமான நம் பிள்ளைகளை எப்படி வளர்த்தோம்  என்று நாம் அல்லாஹ்விடத்தில் பதில் சொல்லியாக வேண்டும்.

அவர்களுக்கு தரவேண்டிய நல்லொழுக்கம், அவர்களுக்கு தரவேண்டிய குர்ஆன் ஹதீஸ் பற்றிய ஞானம், மார்க்கம் சார்ந்த ஒழுங்குகள்,           தீனிய்யாத்துகள்  போன்வைகளை கொடுப்பதற்கு முன்னால்  நாம் மரணித்து விட்டாலும்  அல்லது அவர்கள் மரணித்து விட்டாலும்  அல்லாஹ்விடம் தப்பிக்க முடியாது.

இன்று குழந்தை வளர்ப்பு என்பது தவறாக புரிந்து கொள்ளப்படுகிறது.
குழந்தை வளர்ப்பு என்றால் ஊட்டி வளர்ப்பது நிறைய ஊட்டச்சத்துக்கள் கொடுத்து குழந்தையை குஷ்தியாக வளர்க்க வேண்டும் என்று என்னி கொன்டார்கள்.  

இன்று ஒவ்வொரு குழந்தையிக்கும்  புத்தாடைகள்  மட்டும்  பத்து பதினைந்து இருக்கிறது, பள்ளிகூட ஆடைகள்  மட்டும் நான்கு செட்டுக்கள் இருக்கிறது, பல ஜோடி செருப்புக்கள் இருக்கிறது இப்படியே கணக்கு பார்த்தால் குழந்தை வளர்ப்பு என்பதை நாம் தவறாக விளங்கி கொண்டோமோ என்று தானே என்ன தோன்றுகிறது.

நம் குழந்தைகளுக்கு தரக்கூடிய மற்ற எல்லா விஷயங்களிலும் மிக மிக கவனமாக இருக்கும் நாம் மார்க்க விஷயங்களில் எந்த அளவு கவனமாக இருக்கிறோம் என்பதை சற்று எண்ணிப்பார்க்க வேண்டும்.

தர்பியத் என்ற அரபி வார்த்தையிக்கு வளர்த்தல் என்று பொருள் அது ஊட்டி வளர்த்தல் அல்ல மார்கத்தை சரியாக போதிப்பது என்பது தான் சரியான பொருள்.

நம் குழந்தைகளுக்கு ஆங்கிலம் தெரிகிறது, ஹிந்தி தெரிகிறது, ஜப்பானிய மொழி தெரிகிறது, ஃபிரஞ்ச் மொழி தெரிகிறது, ஆனால் அரபி தெரிவதில்லை  அதற்கான முயற்சிகளையும் நாம் எடுப்பதில்லை. எதுவெல்லாம் கற்று கொள்ள மிக கடினமோ அது அனைத்தையும் கொடுத்து விடுகிறோம் எது கற்று கொள்ள மிக இலகுவோ அதை கொடுக்க மறந்து விடுகிறோம்.

மார்க்க அறிவை புகுட்டாமல் எத்தனை உலக அறிவை புகுட்டினாளும் அது ஏட்டு சுரக்காய் கூட்டுக்கு உதவவே உதவாது என்பதை நாம் விளங்க வேண்டும்.

எனவே இன்று நம் குழந்தைகளுக்கு மிக அவசியமாக கொடுக்க வேண்டியது மார்க்க கல்வி  அதிலும் குறிப்பாக ஒழுக்கத்தை போதிப்பது காலத்தின் கட்டாயமான ஒன்றாக இருக்கிறது. 

இன்று எந்த பள்ளிக்கூடங்களும் கல்லூரிகளும் ஒழுக்கத்தை பொதிப்பதில்லை . இன்று கல்லூரி மாணவர்களின் நிலை மிக மோசமாக இருக்கிறது பேருந்துகளில் தொங்கி கொண்டு பயணிப்பதையே வழக்கமாக ஆக்கிகொண்டார்கள்  புத்தகங்களை எடுக்காமல் கல்லுரியிக்கு செல்வதை பெருமையாக நினைக்கிறார்கள் ஆசிரியர்களுக்கு பட்ட பெயர்களை வைத்து அழைப்பதை கண்ணியமாக நினைக்கிறார்கள் இன்னும் கவலையான செய்தி என்னவெனில் சட்டக்கல்லூரி மாணவர்களின் கரங்களில் உருலகட்டைகள்  வருங்கால நீதிபதிகளின் நிலையே இப்படி என்றால்? மிக மோசமான காலத்தில் நாம் வாழ்கிறோம் என்பது தான் உண்மை.

எனவே நம் பிள்ளைகளுக்கு  மிக சரியான ஒழுக்கங்களை கற்று கொடுத்து வளர்ப்பது காலத்தின் அவசியம்.

ஒழுக்கம் என்பது நம் குழந்தைகளுக்கு இரண்டு இடங்களில் கிடைக்க வேண்டும் ஒன்று நம் வீட்டில் இன்னொன்று பள்ளி வாசல்கள் தோறும் இருக்கிற மதரஸாக்களில். 

முதலில் நம் வீட்டை பாப்போம்!

நம் குழந்தைகளுக்கு இவ்வுலகில் எத்தனை நபர்களை பிடித்திருந்தாலும் நம் குழந்தைகளுக்கு முதல் மாடல் (மாதிரி) நாம் தான் என்பதை  மறந்து விடக்கூடாது.

நாம் பொய் பேசினால் பிள்ளைகளும் கண்டிப்பாக பொய் பேசுவார்கள் நம் குழந்தைகளின் முன்னாள் நாம் செய்கிற சிறு சிறு தவறுகளை கூட அவர்கள் வெகு சீக்கிரம் பற்றி கொள்வார்கள் என்பதில் சந்தேகம் இல்லை. 

தொழுகை நேரத்தில் நாம் தொழ செல்லாமல் உறங்கினால் நம் குழந்தைகளுக்கும் அப்படி  செய்யலாம் என்பதை கற்று தருகிறோம்  என்பது பொருள்.

நாம் எதை செய்கிறோமோ அதை அப்படியே நம் குழந்தைகள் செய்வார்கள் அது தான் இயற்கையும் கூட. 

உதாரணத்திற்கு சொல்லுவதென்றால் நம் குழந்தைகளுக்கு ஒழு செய்யும் முறையை வரிசையாக  சொல்லி கொடுத்து விட்டு திரும்ப கேட்டால் அவர்கள் சொல்வதற்கு சற்று நேரம் ஆகும்.ஆனால் அதையே நாம் செய்து காட்டினாள் உடனே செய்வார்கள் இது குழந்தைகளின் சைகாலேஜி. எனவே நம் இல்லங்கள் நம் குழந்தைகளுக்கு ஒழுக்கங்களை போதிக்கும் முதல்  இடமாக இருக்கவேண்டும்.

இரண்டாவது இடம் மதரஸாக்கள் தான்! 

இன்று நம் பிள்ளைகளை ஒரு உன்னத நேர்கோட்டில் கொண்டு செல்லவேண்டுமென்றால் அதற்கு அவர்களை மதரஸாக்களுக்கு அனுப்பி அங்கு போதிக்கிற மார்க்கம் சார்த்த விஷயங்களை அவர்களை கற்றுக்கொள்ள வைக்க வேண்டும்.

உண்ணுவதின் ஒழுக்கம் என்ன? உறங்குவதின் ஒழுக்கம் என்ன? கழிவறைக்கு செல்வதின் ஒழுக்கம் என்ன? இப்படி சிறு சிறு விஷயத்தில் ஆரம்பித்து நம் பெற்றோர்கள், உறவினர்கள், நண்பர்கள், அண்டை வீட்டார்கள் போன்றவர்களிடம் எப்படி நடந்து கொள்ளவேண்டும் அதே போல நம் நாயகத்தை எப்படி நேசிக்க வேண்டும், சத்திய சஹாபாக்களை எப்படி மதிக்க வேண்டும், கண்ணியம் நிறைந்த இமாம்களை எப்படி கண்ணியப்படுத்த வேண்டும், மார்க்க அறிஞர்களிடம் எப்படி நடந்து கொள்ளவேண்டும், எல்லாவற்றுக்கும் மேலாக படைத்த ரப்பை எப்படி பயப்பட வேண்டும் இப்படி மார்க்கம் சார்ந்த எல்லா விஷயங்களும் இன்றைய மதரஸாக்களில் போதிக்க படுகிறது.  நம் குழந்தைகளை மதரஸாக்களுக்கு அனுப்பி இவைகளை கற்று கொள்ள வைக்க வேண்டும்.

நம் முன்னோர்கள் இவைகளில் மிக கவனமாக இருந்தார்கள்.

இமாம் ஷாஃபி (ரஹ்)அவர்கள்  முழு குர்ஆனை ஏழு வயதில் மணனம் செய்து விட்டார்கள். பத்து வயதில் அப்போதிருந்த முஅத்தா மாலிக் என்ற ஹதீஸ் கிதாபை முழுமையாக மணனம் செய்து விட்டார்கள்.

 இது தான் ஒரு அழகான குழந்தை வளர்புக்கு உதாரணம்.

இவுலகின் எல்லா செல்வங்களையும் நம் குழந்தைகளுக்கு கொடுத்து மார்க்க அறிவை கொடுக்காவிட்டால் அவை அனைத்தும் வீண் தான். 

நம் இஸ்லாமிய அரசாங்கத்தின் பத்தாவது கலிஃபா உமர் இப்னு அப்துல் அஜீஸ் (ரஹ்)அவர்கள் இரண்டாவது உமர் என்று அழைக்கப்பட்டார்கள். மிக நீதமான ஆட்சி செய்தவர்கள். வீட்டில் இருந்து அரசவைக்கு நடந்தே சென்ற கலிஃபா. அவர்களுக்கு பதினொரு பிள்ளைகள் எந்த சொத்துகளையும்  செல்வங்களையும் தன் பிள்ளைகளுக்காக   சேர்த்து வைத்து கொடுக்க வில்லை ஆனால் பதினொரு பிள்ளைகளையும் மார்க்க விற்பன்னர்களாக ஆக்கினார்கள். கலிஃபா உமர் இப்னு அப்துல் அஜீஸ் (ரஹ்) அவர்கள் மரணிக்கும் நேரத்தில் கஃபன் துணி வாங்க மட்டும் தான் பணம் இருந்தது அவர்களை சந்திக்க அரச குடும்பத்தை சார்ந்த மர்வான் வந்தார்கள் இத்தனை ஆண்டுகாலம் நாட்டின் ஜனாதிபதியாக இருந்து விட்டு உங்களின் பிள்ளைகளுக்கு கூட எந்த செல்வத்தையும் விட்டு செல்லாமல் செல்குறீர்களே என்று கேட்ட போது அந்த கடைசி நேரத்திலும் கூட உமர் இப்னு அப்துல் அஜீஸ் (ரஹ்) அவர்கள் (நால்லடியார்களுக்கு இறைவனே பொறுப்பு) என்ற இறை வசனத்தை ஓதி விட்டு மரணித்தார்கள்.  ஆனால் என்ன நடந்தது? காலப்போக்கில் அரச குடும்பத்தை சார்ந்த மர்வானுடைய பிள்ளைகள் இராக்கின் பள்ளி வாசல்களின் வெளியே கையேந்துபவர்களாக ஆனார்கள். கலிஃபா உமர் இப்னு அப்துல் அஜீஸ் (ரஹ்) அவர்களின் பிள்ளைகள் நாட்டின் ஜனாதிபதிகளாக ஆனார்கள் என்பது வரலாறு. 

நம் பிள்ளைகளுக்கு உலக செல்வங்களை சொத்துக்களை ஆட்சி அதிகாரங்களை கொடுப்பதை விட ஒழுக்க நெறிகளோடு சரியான மார்க்க அறிவை கொடுத்து விட்டால்  இன்ஷா அல்லாஹுல் அஜீஸ் நாளைய உலகின் இஸ்லாமிய கலிஃபாக்களாக அவர்கள் மின்னுவார்கள் என்பது நிச்சயம்.

நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் காலத்தில் எல்லா வீட்டு குழந்தைகளுக்கும் ஐந்து விஷயங்களை  கண்டிப்பாக சொல்லித்தருவார்கள். முதலாவது  (அர்கானுல் இஸ்லாம்) இஸ்லாத்தின் கடமைகள் ஏதோ கலிமா தொழுகை போன்றல்ல எல்லா கடைமைகளின் முழு விபரங்கள், இரண்டாவது நம் நாயகத்தின் வரலாறு, மூன்றாவது குர்ஆணை பார்த்து ஒதவும் மனனம் செய்வதும், நான்காவது துஆக்கள் அனைத்தையும் மனனம் செய்வது, ஐந்தாவது இஸ்லாமிய ஒழுக்க நெறிகள். இவை அனைத்தும் ஒவ்வொரு இல்லத்தில் உள்ள எல்ல பிள்ளைகளுக்கும் கற்று கொடுக்கப்பட்டது.

எனவே தான் அன்னை ஆயிஷா (ரலி) அவர்களின்  சிறு பருவத்தில் இறக்கைகள் உள்ள குதிரையை வைத்து விளையாடி கொண்டிருந்த போது குதிரைகளுக்கு  இறக்கைகள் இருக்குமா என்று நம் நாயகம் கேட்க சையதினா சுலைமான் (அலை)அவர்களின் காலத்தில்  குதிரைகளுக்கு இறக்கைகள் இருந்ததே என்று பதில் சொன்னார்கள் என்றால் அந்த சிறு பருவத்திலேயே முன் காலத்தில் வாழ்ந்த நபிமார்களின் வரலாருகள் உட்பட போதிக்கட்டிருக்கிறது என்பது தானே பொருள்.

ஆனால் இன்று நம் நிலை என்ன? என்பதை யோசிக்க வேண்டும்.
நம் பிள்ளைகளுக்கு எல்லா ANDROID முபைல் முதல் கம்பியுட்டர் வரை எல்லாவற்றையும் ஆராய தேறிகிறது.  நம் பிள்ளைகள் உறங்க செல்லும்போது டிவி யின் ரிமோட்டோ அல்லது கம்பியுட்டரின் மௌசோ அல்லது முறம் அளவுள்ள முபைலோ தான் கையில் இருக்கிறது.

இன்று எத்தனையோ தந்தைகள் தன் பிள்ளைகளின் அன்றாட செயல்களை பற்றி விசாரிக்கும் போது சுகூல் சென்றாயா, டியுஷன் சென்றாயா, கராத்தே கிளாஸ் சென்றாயா, ஹிந்தி கிளாஸ் சென்றாயா, என்று கேட்கும் தந்தைகள் பள்ளிவாசலுக்கு தொழுகைக்கு சென்றாயா, மதரஸாவிற்கு ஒத சென்றாயா, என்று கேட்பதில்லை தானே! ஏன்  என்று கேட்டால் அதற்கு நமக்கு நேரம் இல்லை என்று பதில் சொல்கிறோம்.

நம் முன்னோர்கள் மார்க்க அறிவை கற்று கொள்வதற்காக காலம் முழுக்க பசியோடும் பட்டினியோடும்  செலவு செய்தார்கள். 

இன்று நாம் எந்த ஹதீஸை தொட்டாலும் அதிலே சையதினா அபு ஹுரைரா (ரலி) அவர்களின் பெயர் இடம் பெறாமல் இருப்பதில்லை என்றால் அவர்கள் மேற்கொண்ட கஷ்டங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. 
 பசியின் காரணமாக மயக்கம் வந்து கீழே விழுந்த போதும்  மார்க்க கல்வியின்  மீது இருந்த மோகம் அந்த கல்வியை கற்பதை விட்டும் சையதினா அபு ஹுரைரா (ரலி) அவர்களை  தடை செய்ய வில்லை.
  
இப்படியெல்லாம் சிரமப்பட்டு நம் முன்னோர்கள் மார்க்க கல்வியை அன்று கற்று கொண்டார்கள்.ஆனால் இன்று எந்த சிரமமும் இல்லாமல் நம்மிடம் பணம் கூட வசூலிக்காமல் மிக இலகுவாக கற்று கொடுக்க முன் வந்தாலும் நமக்கு கற்று கொள்ள நேரம் இல்லை.

மனிதர்கள் இவ்வுலகில் உயிர் வாழ மிக முக்கிய தேவையான  காற்று, தண்ணீர் நெருப்பு போன்றவைகளை இறைவன்  இலவசமாக கொடுக்கிறான். எதுவெல்லாம் இல்லாமல் நம்மால் உயிர் வாழ முடியுமோ அதுவெல்லாம் மிக அதிகமான விலையில் விற்கப்படுக்கிறது தங்கம் கார் சொகுசான வீடு போன்றவைகள். இப்படி தான் நாம் உயிர் வாழ்வதற்கு அவசியதேவையான மார்க்க கல்வி அது இலவசமாக கிடைக்கிறது. உலக கல்வி ஆடம்பர வாகையை போன்று மிக அதிகமா விலையில் விற்கப்படுகிறது. 

நம் நாயகம் 63 ஆண்டுகள் பேசிய அரபி மொழியை கற்பது ஒவ்வொரு முஸ்லிமிற்கும் மிக முக்கியாமான சுன்னத் என்பதை நாம் விளங்கி கொள்வோம் நம் பிள்ளைகளுக்கு மார்க்க அறிவை கொடுப்பதில் கவனம் செலுத்துவோம் அதற்காக நம் பிள்ளை செல்வங்களை மதரஸாக்களுக்கு அனுப்பிவைப்போம் வல்லோன் அல்லாஹ் நம் சமூகத்தை குர்ஆனோடு நெருங்கிய தொடர்புள்ளவர்களாக ஆக்குவானாக ஆமீன்.














 















 

















 















1 comments:

நிறைவாக இல்லை அனாலும் அல்ஹம்துலில்லாஹ்

Post a Comment