27 August 2015

ஹஜ்ஜின் மாண்புகள்!




ஹஜ் எனும் புனித பயணம்!

உலகம் முழுவதும் ஹஜ் வணக்கத்தை நிறைவேற்றிட புனித கஅபாவை நோக்கி இலட்சக்கணக்கான முஸ்லிம்கள் பயணித்து வரும் நிலையில் இஸ்லாத்தின் இறுதிக் கடமையான  ‘ஹஜ்’ குறித்து சில விஷயங்ளை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். கிழக்கே சீனா முதல் மேற்கே அமெரிக்கா வரை உலகிலுள்ள எல்லா நாடுகளில் இருந்தும் முஸ்லிம்  சமுதாயத்தைச் சார்ந்த எல்லா மனிதர்களும் நிறம், இனம், தோற்றம், பணம், பதவி போன்ற பாகுபாடுகளுக்கு அப்பால் குறிப்பிட்ட இடத்தில் , குறிப்பிட்ட நாட்களில் ஒன்று கூடி, தங்களின் ஒரே இறைவனை ஒரே உடையில் மிகவும் எளிய தோற்றத்தில் வணங்கிடும் அமல் தான் ஹஜ்ஜுடைய அமலாகும்
.
ஹஜ் மற்ற  இஸ்லாமிய வணக்கங்களை காட்டிலும் பல்வேறு மகத்துவங்களை கொண்டதாகும்

இஸ்லாத்தின் அடிப்படை கடமைகளில் ஹஜ் தனிக்கவனம் பெறுகிறது.காரணம் அது உடல்,பொருள் இரண்டும் சார்ந்த கடமையாகும்.ஹஜ் கடமயாகுவதற்கு உடல் பலமும்,பொருள் வளமும் தேவையாகும்.

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் ஹஜ்ஜுடைய காலம் துவங்கி விட்டது.உலகெங்கிலும் இருந்து ஹாஜிகள் தங்களின் புனித பயணத்திற்கு தயாராகி வருகின்றனர்.நாற்பதாண்டு கனவு,ஐம்பதாண்டு கனவு நினைவாகும் காலம் நெருங்கி வருகிறது.

ஹஜ்ஜின் அவசியம் பற்றியும் அதன் சிறப்பு பற்றியும் இந்த உம்மத்துக்கு விளக்கவேண்டிய தேவையில்லை எனும் அளவிற்கு பரிட்சயமானது.

அல்லாஹுதஆலா இவ்வுலகில் தன் அடியார்கள் மீது விதியாக்கியுள்ள கடமைகள் ஒவ்வொன்றும் பல நோக்கங்களையும் குறிக்கோள்களையும் கொண்டமைந்தவை. இந்த வகையில் இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளுல் ஒன்றான ஹஜ்.
   
ஒவ்வொரு வருடமும் முஸ்லிம்கள் ஐந்து கண்டங்களிலிருந்தும் தரை வழியாகவும் கடல் வழியாகவும் வான் வழியாகவும் புனித மக்காவில் அமைந்துள்ள கஃபாவை நோக்கி ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக பெரும் வேட்கையோடு வருகின்றனர். உண்மையில் இந்த கஃபா அந்தளவுக்கு கண்ணியமானதும் கண்ணியப்படுத்துவதற்குமுறிய ஒரு இடம். அதனை நபிமார்களின் தந்தை இப்றாஹீம் (அலை) அவர்கள் கட்டினார்கள். அது சிலை வணக்கத்திற்கெதிரான போராட்டத்தின் பின் ஏகத்துவத்தின் கோட்டையாகவும் இறை வணக்கத்திற்கான இடமாகவும் அமைய வேண்டும் எனக் கட்டினார்கள். இப்றாஹீம் (அலை) அவர்கள் ஏகத்துவ வெற்றியை உறுதிப்படுத்தி நிராகரிப்பிற்கு முற்றுப் புள்ளியாக அவர்களும் அவரது புதல்வர் இஸ்மாயீல் (அலை) அவர்களும் கட்டினார்கள்.

இப்பூமியின் முதலாவது பள்ளிவாயல் இதுவாகும். இதற்குப் பிறகுதான் கிழக்கிலும் மேற்கிலும் பள்ளிவாயல்கள் கட்டப்பட்டன.
இந்த கண்ணியமிக்க பள்ளிவாயல் முஸ்லிம்களின் கிப்லாவாகக் காணப்படுகிறது. வழிபாடுகளில் ஹஜ் மிகப் பெரியதாகவும், வழிபடும் இடத்தால் ஹஜ்ஜிற்குரிய இடம் அருள் வளம் நிறைந்ததாகவும், ஹஜ்ஜிற்குரிய மாதமும் நாட்களும் மகத்துவமும் சங்கையும் நிறைந்ததாகவும் இருக்கின்றது.

உண்மையில் ஹஜ் என்பது எவ்வளவு மகத்துவம் வாய்ந்த ஓர் இறைவழிபாடு என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

1.ஆத்மாவை பரிசுத்தப்படுத்தி பக்குவத்தை தரும்.
பாவங்களில் இருந்தும், மனோஇச்சைகளில் இருந்தும் ஆத்மாவை பரிசுத்தப்படுத்தி மனித உள்ளத்தில் உலகப் பற்றின்மையை ஏற்படுத்தும் வலிமை ஹஜ்ஜுக்கு உண்டு.

உலக ஆசைகளில், சுகபோகங்களில் மூழ்கி கிடக்கும் மனிதனை பக்குவப்படுத்திடும் பல்வேறு விஷயங்கள் ஹஜ்ஜில் உண்டு.

இஹ்ராம் ஆடை : இஹ்ராம் உடை இச்சைகளில் இருந்து மனிதனை தடுக்கக்கூடியது.அத்துடன் அது ஆத்மாவின் இச்சைகளை விட அல்லாஹ்வையே அதிகம் சிந்திக்க வேண்டும் என்பதையும் உணர்த்தும்.
  
தல்பிய்யா: ‘இறைவா! உனக்கு அடிபணிந்து விட்டேன்’ எனும் சொல் அதற்கு சாட்சியமாக அமையும்.

தவாஃப்: மனிதனின் உள்ளம் அல்லாஹ்வை சுற்றியே இருக்க வேண்டும் என்பதை உணர்த்தும்.

சயீ: மனிதன் அல்லாஹ்வின் மன்னிப்பையும், ரஹ்மத்தையும் நோக்கி ஓடிக் கொண்டே இருக்க வேண்டும் என்பதை தெளிவுபடுத்தும்.

அரஃபா மஹ்ஷரையும், கல்லெறிதல் மட்டமான குணங்களை தூக்கியெறிய வேண்டும் என்பதையும், அறுத்து பலியிடுதல் அல்லாஹ்வுக்காக உயிரையும் தருவோம் என்பதையும் மனிதர்களுக்கு ஏற்டுத்தும்.

ஆக ஹஜ் மனிதனை பக்குவப்படுத்தும்.

ஹஜ்ஜின் மூலம் மனித சமூகம் அடையும் பயன்பாடுகள்.


“செயல்களில் சிறந்தது எது?” என நபி (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. “அல்லாஹ்வையும் அவனது தூதரையும் நம்பிக்கை கொள்வது” என்றார்கள். “பின்னர் எது?” என்று கேட்கப்பட்டது. “அல்லாஹ்வின் பாதையில் போர் புரிவது” என்றார்கள். “பின்னர் எது?” என்று கேட்கப்பட்டது. “ஏற்றுக் கொள்ளப்படும் ஹஜ்” என்றார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி

சுவனமே பரிசு
“ஓர் உம்ரா செய்வது மறு உம்ரா வரையில் உள்ள பாவங்களின் பரிகாரமாகும். ஏற்றுக் கொள்ளப்பட்ட ஹஜ்ஜுக்கு சொர்க்கத்தைத் தவிர வேறு கூலியில்லை”

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி 1773

தவிடுபொடியாகும் தவறுகள்
அல்லாஹ் என்னுடைய உள்ளத்தில் இஸ்லாத்தை அருளிய போது நான் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! உங்களிடம் நான் உடன்படிக்கை செய்வதற்காக உங்கள் வலது கையை விரியுங்கள்” என்று கூறினேன். அவர்கள் தன் கையை விரித்து எனது கையைப் பிடித்துக் கொண்டு, “அம்ரே! உனக்கு என்ன நேர்ந்தது?” என்று கேட்டார்கள். “நான் நிபந்தனை விதிக்கப் போகின்றேன்” என்று கூறினேன். “என்ன நிபந்தனை விதிக்கப் போகின்றாய்?” என்று கேட்டார்கள். “நான்  மன்னிக்கப்பட வேண்டும்” என்று நான் பதிலளித்தேன். “அம்ரே! நிச்சயமாக இஸ்லாம் அதற்கு முன்னால் உள்ள பாவத்தைத் தகர்த்தெறிந்து விடுகின்றது. நிச்சயமாக ஹிஜ்ரத் அதற்கு முன்னால் உள்ள பாவத்தைத் தகர்த்தெறிந்து விடுகின்றது. நிச்சயமாக ஹஜ் அதற்கு முன்னால் உள்ள பாவத்தைத் தகர்த்தெறிந்து விடுகின்றது என்று உனக்குத் தெரியாதா?” என்று சொன்னார்கள்.
(அறிவிப்பவர்: அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) நூல்: முஸ்லிம் 173),


இஹ்ராமின் போது இறந்தவர் தல்பியா சொல்லி எழுவார்
(இஹ்ராம் அணிந்த) ஒருவர் அரஃபா மைதானத்தில் அல்லாஹ்வின் தூதருடன் தமது வாகனத்தின் மீதிருந்தார். திடீரென அவர் தனது வாகனத்திலிருந்து கீழே விழுந்து விட்டார். அது அவரது கழுத்தை முறித்து விட்டது. (அவர் இறந்து விட்டார்) அப்போது நபி (ஸல்) அவர்கள், “அவரது உடலை இலந்தை இலை கலந்த நீரால் குளிப்பாட்டி இரு ஆடைகளால் கஃபனிடுங்கள். அவரது உடலுக்கு நறுமணம் பூச வேண்டாம். அவரது தலையை மறைக்கவும் வேண்டாம். ஏனெனில் அவர் கியாமத் நாளில் தல்பியா சொல்லிக் கொண்டிருப்பவராக எழுப்பப் படுவார்” என்று கூறினார்கள்.

(அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல்: புகாரி 1266, முஸ்லிம் 2092)



1.மனிதன் தூய்மை நிலைக்கு சென்று விடுகின்றான்.

அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் கூறினார்கள்: “யார் அல்லாஹ்விற்காக இந்த ஆலயத்தை ஹஜ் செய்கிறார்களோ, மேலும், அதில் எந்த பாவத்தையும், தீங்கையும் செய்யவில்லையோ அவர் அன்று பிறந்த பாலகன் போன்றாகிறார்.”

ஹஜ் செய்யும் நாட்களும் மிகச் சிறப்பானது.

مَ خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ مِنْهَا أَرْبَعَةٌ حُرُمٌإِنَّ عِدَّةَ الشُّهُورِ عِنْدَ اللَّهِ اثْنَا عَشَرَ شَهْرًا فِي كِتَابِ اللَّهِ يَوْ
قوله تعالى: (مِنْها أَرْبَعَةٌ حُرُمٌ) الأشهر الحرم المذكورة في هذه الآية ذو القعدة وذو الحجة والمحرم ورجب

உண்மையாக, அல்லாஹ்விடத்தில் மாதங்களின் எண்ணிக்கை பன்னிரண்டாகும். வானங்களையும், பூமியையும் அவன் படைத்த நாள் முதல் அல்லாஹ்வின் பதிவேட்டில் இவ்வாறே உள்ளது. அவற்றில் நான்கு மாதங்கள் சங்கைக்குரியன ஆகும்.”

இதில் ஹஜ்ஜுக்குரிய மாதங்களான துல்கஅதா, துல்ஹஜ், முஹர்ரம், மற்றும் உம்ராவிற்குரிய மாதமான ரஜபும் ஆகும்.

சுவர்க்கமே கூலி.


நன்மையான ஹஜ்ஜுக்கு சுவனம் தான் கூலியாகும்”. என நபி {ஸல்} அவர்கள் அருளியதாக ஆதரப்பூர்வமான ஆறு கிரந்தங்களின் இமாம்களும் பதிவு செய்திருக்கின்றார்கள்.

3. மறுமையில் ஷஃபாஅத் செய்யும் பாக்கியம்.

عن أبي سعيد الخدري حديث الشفاعة الطويل (فو الذي نفسي بيده ما منكم من أحد بأشد مناشدة لله في استقصاء الحق من المؤمنين لله يوم القيامة لإخوانهم الذين في النار يقولون ربنا كانوا يصومون معنا ويصلون ويحجون فيقال لهم أخرجوا من عرفتم) الحديث.

நரகில் வேதனை செய்யப்படுகின்ற சில பாவிகளான முஃமின்களைப் பார்க்கும் சுவனத்து முஃமின்கள் அல்லாஹ்விடத்தில்யா அல்லாஹ்! இவர்கள் எங்களோடு தொழுதார்கள். எங்களோடு நோன்பும் பிடித்தார்கள். மேலும், ஹஜ்ஜும் செய்தார்கள்எனக் கூறுவார்களாம். அப்போது, அல்லாஹ் உங்களுக்கு அறிமுகமான அவர்களை அழைத்துச் செல்லுங்கள்என்று கூறுவான். என மாநபி {ஸல்} அவர்கள் கூறியதாக அபூ ஸயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அருள் மழையில் நனைகிறார்.

وعن ابن عباس رضي الله عنهما قال: قال رسول الله صلى الله عليه وسلم: "ينزل كل يوم على حجاج بيته الحرام عشرين ومائة رحمة ستين للطائفين وأربعين للمصلين وعشرين للناظرين". قال المنذري في الترغيب والترهيب رواه البيهقي بإسناد حسن

நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்: “பைத்துல்லாஹ்வை ஹஜ்ஜு செய்ய வருகை தந்திருக்கும் ஹாஜிகள் மீது அல்லாஹ் ஒவ்வொரு நாளும் 120 வகையான அருளை இறக்குகின்றான். கஅபாவை தவாஃப் செய்பவர்கள் மீது 60 ரஹ்மத்தும், கஅபாவில் தொழுபவர் மீது 40 வகை ரஹ்மத்தும், கஅபாவை பார்த்துக் கொண்டிருப்பவர் மீது 20 வகை ரஹ்மத்தையும் இறக்குகின்றான்.”

5. ஏழ்மையை விரட்டும், பாவங்களை அழித்திடும்.

(( تابعوا بين الحج والعمرة؛ فإنهما ينفيان الفقر والذنوب كما ينفي الكير خبث الحديد والذهب والفضة، وليس للحجة المبرورة ثواب إلا الجنة )) رواه الترمذي (810) وابن خزيمة في صحيحه (2512) والنسائي (2631)
ஹஜ்ஜையும், உம்ராவையும் தொடர்ச்சியாக செய்யுங்கள். ஏனெனில், அது கொல்லனின் நெருப்பு தங்கம், வெள்ளியில் இருக்கும் அழுக்கை அழிப்பது போன்று, வறுமையையும், பாவத்தையும் அழித்து விடும்.” என நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்.

6. முன் பாவங்கள் மன்னிக்கப்படும்.

(( أما علمت ـ يا عمرو! ـ أن الإسلام يهدم ما كان قبله؟ وأن الهجرة تهدم ما كان قبلها؟ وأن الحج يهدم ما كان قبله؟ )) رواه مسلم (321).

அம்ர் இப்னுல் ஆஸ் (ரலி) அவர்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட போது நபி {ஸல்} அவர்கள்அம்ரே! ஒருவர் முஸ்லிமாகி விட்டால் அவரின் முன் பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன. ஒருவர் ஹிஜ்ரத் செய்தால் அவரின் முன் பாவங்கள் மன்னிக்கப் படுகின்றன. ஒருவர் ஹஜ் செய்தால் அவரின் முன் பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன.” என்று கூறினார்கள்.

ஹாஜி கடைபிடிக்கவேண்டிய சில  விஷயங்கள்

முதலாவதுஇறையச்சம் வேண்டும்.

அல்லாஹுத்தஆலா தன் அருள்மறையில் கூறுகிறான்

وتزودوا فإن خير الزاد التقوى

ஒரு ஹாஜி ஹஜ்ஜின் எல்லா அமல்களிலும் பக்தியை கடைபிடிக்க வேண்டும்.

كان السلف -رحمهم الله- إذا حجّوا أصابهم من الخشوع والخضوع

عن علي بن الفضيل أنه دخل الحرم ليطوف، فرأى سفيان الثوري ساجدًا عند الكعبة، فطاف شوطًا وسفيان لم يرفع رأسه، ثم طاف الثاني والثالث... حتى أكمل سبعة أشواط، وسفيان لم يرفع رأسَهُ من سجوده

அலி இப்னு புழைல் ரஹ் அவர்கள் தவாப் செய்வதற்க்காக ஹறமில் நுழைந்தபோது கஃபாவுக்கு பக்கத்தில் சுப்யானுஸ்ஸவ்ரி ரஹ் அவர்கள் ஸுஜூதில் இருக்க காண்கிறார்கள்.அவர்கள் ஏழு சுற்றை முடித்தும் அவர்கள் ஸுஜூதிலிருந்து எழவில்லை.

இரண்டாவது: நிய்யத்தை சரி செய்தல்.

நீர் கூறும்: “மெய்யாக என்னுடைய தொழுகையும், என்னுடைய குர்பானியும், என்னுடைய வாழ்வும், என்னுடைய மரணமும் எல்லாமே அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே சொந்தமாகும். “அவனுக்கே யாதோர் இணையுமில்லை - இதைக் கொண்டே நான் ஏவப்பட்டுள்ளேன் - (அவனுக்கு) வழிப்பட்டவர்களில் - முஸ்லிம்களில் - நான் முதன்மையானவன் (என்றும் கூறும்).(6:162,163)

எதற்காக ஹஜ்ஜுக்கு செல்கிறோம் என்ற எண்ணத்தை
சுத்தப்படுத்திக்கொள்ள வேண்டும்.

وقف عبد الله بن عمر مع أبيه عمر على جبل الصفا، فلما رأوا كثرة الناس والحجاج رأوا كثرة الملبين والمكبرين استبشر عمر بكثرتهم وفرح في عهده رضي الله عنه وقد كثر المسلمين وامتلأ الحرم بالحجاج..فرح.. فقال عبدالله بن عمر لأبيه: يا أبتِ ما أكثر الحاج! فقال له عمر: يا بني: الركب كثير لكن الحاج قليل..

ஹழ்ரத் இப்னு உமர் (ரலி) அவர்கள் தன் தந்தை உமர் ரலி அவர்களுடன்
சபா மலையில் நின்றுகொண்டு ஹாஜிகளின் கூட்டத்தை பார்த்து மகிழ்ந்து,தன் தந்தையிடம்,ஹாஜிகளின் கூட்டம் எவ்வளவு அதிகமாக இருக்கிறது? என்றார்கள்.அப்போது உமர் (ரலி) அவர்கள், மகனே! பயணிகள் அதிகம்.ஹாஜிகள் இதில் குறைவுதான்.என்றார்கள்.

அதாவது:
يا بني الركب كثير " لكن الله أعلم بالقلوب والنيات "لكن الحاج قليل

அவர்களின் உள்ளங்களின் எண்ணங்களை அல்லாஹ் அறிந்தவன்.

மூன்றாவது அல்லாஹ்வின் அடையாளச்சின்னங்களை கண்ணியப்படுத்துதல்.

وَمَن يُعَظِّمْ شَعَائِرَ اللَّهِ فَإنَّهَا مِن تَقْوَى الْقُلُوبِ

அந்த பூமி அல்லாஹ்வின் அருள் இறங்கிகொண்டிருக்கும் பூமியாகும்.ஒவ்வொரு நாளும் 120 ரஹ்மத்துக்கள் இறங்குகிறது.    
நம்முடைய கண்களுக்கு காட்சி தரும் அந்த கஃபா நபிமார்களின் ஒதுங்குமிடமாகும்.
கஃபாவைச்சுற்றி 300 க்கும் மேற்பட்ட நபிமார்களின் கப்றுகள் உள்ளது.
ருக்னுல் யமானி,ஹஜருல் அஸ்வத் ஆகிய இரண்டுக்கும் மத்தியில் மாத்திரம் எழுபது நபிமார்களின் கப்றுகள் உள்ளன.
ஹழ்ரத் இஸ்மாயீல் அலை .மற்றும் ஹாஜரா அலை ஆகிய இருவரின் கப்ருகளும் மீஸாபே ரஹ்மத் எனும் இடத்திற்கு கீழே இருப்பதாக சொல்லப்படுகிறது.

உலகில் அல்லாஹ்வின் தூதர்களாக வந்த அனைத்து நபிமார்களின் காலடிப்பட்ட இடமாகும்.எனவே அந்த இடங்களின் கண்ணியத்தை மனதில் அழுத்தமாக பதியவைக்க வேண்டும்



நான்காவது:
அங்கு தங்கிருக்கும் காலமெல்லாம் பொருமையை கடைப்பிடிக்க வேண்டும்.ஏனெனில் ஹஜ் கடமையானவர்களுக்கு அல்லாஹ் முதலாவது செய்யும் உபதேசம்

حَجِّالْحَجُّ أَشْهُرٌ مَعْلُومَاتٌ فَمَنْ فَرَضَ فِيهِنَّ الْحَجَّ فَلا رَفَثَ وَلا فُسُوقَ وَلا جِدَالَ فِي الْ

ஹாஜிகளின் உணர்வுகள் கூட அல்லாஹ்விடம் உற்றுநோக்கி கவைக்கப்படுகின்றது.
ஹாஜிகள் அல்லாஹ்விடம் கேட்டுக்கொண்டே இருக்க வேண்டிய துஆ
اللهم اجعل حجي مبرورا وذنبي مغفورا وسعيي مشكورا

அல்லாஹ்வின் கட்டளைகளை ஏற்று நடப்பதில் அறிவுக்கு முதலிடம் கொடுக்கக் கூடாது.


ஒரு பாவம் செய்து விட்டால் உடனடியாக அதற்குப் பரிகாரம் தேடிக் கொள்ள வேண்டும்.

பிறகு ஹஜ்ஜுடைய வணக்கத்தில் ஈடுபடுகிற ஒவ்வொரு ஹாஜியும் அதன் ஒவ்வொரு அர்கானிலும், கிளை இபாதத்களிலும், இஹ்ராமின் நிலைகளிலும் மிகச் சரியாக ஈடுபட வேண்டும்.

அவ்வாறு ஈடுபட முடியாது போகும் பட்சத்தில் அதற்காக கஃப்ஃபாரா குற்றப் பரிகாரத்தில் ஈடுபட வேண்டும்
கட்டளைகளை மீறுவதில் துணிவு கூடாது.
 
அறிவுலக மாமேதை இமாம் ஃகஸ்ஸாலி (ரஹ்) அவர்கள் கூறும் போது..

ஜகாத் மற்றும் நோன்பு, தொழுகை போன்ற இபாதத்களில் ஈடுபடுவதால் ஏற்படும் நன்மைகளையும் பயன்பாடுகளையும் அறிவால் ஒருவனால் விளங்கிக் கொள்ள முடிகிறது.

ஆனால், ஸயீ செய்வது, ஷைத்தானுக்கு கல் எறிவது, ஸஃபா மர்வா மலைக்குன்றுகளுக்கு இடையே ஓடுவது போன்ற செயல்களைச் செய்யும் போது மனிதனின் உள்ளத்தால், மனிதனின் அறிவால் விளங்கிக் கொள்ள முடிவதில்லை.

அல்லாஹ் ஏவியிருக்கின்றான் செய்கிறோம். நபிகளார் {ஸல்} அவர்கள் செய்து காட்டியிருக்கின்றார்கள் செய்கிறோம் எனும் உணர்வு மாத்திரமே எழுகிறது.

ஹஜ்ஜிலே அறிவுக்குரிய அதிகாரம் நீக்கப்பட்டு, முழுமையாய் தன்னை அல்லாஹ்விற்கு முன் சரணடைத்தல், கீழ்ப்படிதல், அடிமைப்படுதல் போன்ற உயரிய பண்பாடுகளுக்கு முக்கியத்துவம் தரப்படுகிறது.

ஆதலால் தான், வேறெந்த இபாதத்துக்கும் (தொழுகை, நோன்பு, ஜகாத்) கற்றுத் தராத வாக்கியங்களை பெருமானார் {ஸல்} அவர்கள் ஹஜ்ஜுடைய வணக்கத்திற்கு மட்டும் கற்றுத்தந்தார்கள்.

லப்பைக், அல்லாஹும்ம லப்பைக்என்று.
                                           (
நூல்: இஹ்யா உலூமித்தீன்)

இறைவழிபாட்டில் தன்னை முழுமையாக சரணடைத்திட வேண்டும்.

உலகில் எந்த ஒரு பயணத்தை மனிதன் மேற்கொண்டாலும் அதனால் தனக்கு கிடைக்கும் உலகாதாய நோக்கங்களை வெகுவாகவே விரும்புகிறான்.

ஆனால், இங்கே ஹஜ்ஜிற்கான பயணத்தின் போதோ தம் உடல், உயிர், உறவுகள், வீடு, வியாபாரம், பொருளாதாரம், ஆசை, இன்பம் என தன்னுடைய உலகாதாயங்கள் அனைத்தையும் அல்லாஹ்விற்காக முற்றிலுமாய் சரணடைத்து விடுகின்றான்.

இந்த நிலை ஹஜ்ஜோடு நின்று விடாமல் மனிதனின் வாழ்க்கையில் ஒவ்வொரு பகுதியிலும் நீடித்திருக்க வேண்டும் என்பதை அல்லாஹ் விரும்புகின்றான்.

ஆதலால் தான் ஹஜ்ஜைப் பற்றிய அறிமுகம், அதன் சிறப்புகள், அதன் மகத்துவம் பற்றி பேசும் இறைவன் அந்த இறைவசனத்தின் முடிவிலே இப்படிக் கூறுவான்:

அல்லாஹ்விற்கு அஞ்சி அவனுடைய கட்டளைகளுக்கு மாறு செய்யாமல் வாழுங்கள். திண்ணமாக, அல்லாஹ் கடுமையாகத் தண்டிப்பவன் என்பதை நன்கு அறிந்து கொள்ளுங்கள்.”

                                                  (
அல்குர்ஆன்:2:196)
ஹஜ் எத்தனை முறை?

இன்றைக்கு சில அரைவேக்காடுகள் ஒரு ஹஜ் தான் செய்யவேண்டும். ஒரு உம்ரா தான் செய்யவேண்டும் என வாய்க்கு வந்தபடி உளறி வருகின்றனர். இவர்கள் ஹஜ்ஜின் உண்மையான தாத்பரியம் புரியாதவர்கள்.
மூன்று காரியங்கள் கடந்த கால பாவங்கள் அனைத்தையும் துடைத்துவிடும்
ஒன்று. இஸ்லாம்இரண்டு ஹிஜ்ரத் மூன்று ஹஜ்.

இளமையில் ஹஜ்

ஹஜ் என்பது அவசரமாகவும் ஆரோக்கியமாகவும் செய்ய வேண்டிய அமல் என்பதை மட்டும் இப்போதைக்கு சமுதாயத்துக்கு சொல்ல
வேண்டியது மிகவும் கட்டாயமானதாகும்.ஏனெனில் ஹஜ்ஜை இறுதிகாலத்தில் செய்யும் அமலாக இந்த உம்மத் ஆக்கிவிட்டது.

ஹஜ் கடமையாக்கப்பட்டதில் வேண்டுமானால் இறுதியாக இருக்கலாம் ஆனால் உண்மையில் ஹஜ் என்பது இறுதி அமல் அல்ல,இளமை அமல் என்பதை மறந்துவிடக்கூடாது.

இன்னும் வாழ்க்கை இருக்கிறது,நாம் செய்ய வேண்டிய கடமை இருக்கிறது.
குழந்தைகளின் திருமணத்தை பார்க்க வேண்டும்.வீடு கட்டி முடிக்க வேண்டும் பேரக்குழந்தைகளை காணவேண்டும். என்றெல்லாம் ஏமாற்று வார்த்தைகளை கொண்டு ஷைத்தான் இந்த உம்மத்தை ஏமாற்றிக்கொண் டிருக்கிறான்.

قال رسول الله صلى الله عليه وسلم : (( تعجلوا إلى الحج فإن أحدكم لا يدري ما يعرض له ))[رواه أحمد ]


ஹஜ் நிறைவேற்றாத மக்கள் குறித்து:
 
வசதி இருந்தும் ஹஜ்ஜை நிறைவேற்றாதவர்கள் பற்றி அல்லாஹ்வின் எச்சரிக்கை:

وجاء فيما يرويه الرسول صلى الله عليه وسلم عن ربه عز وجل قوله: « إن عبداً صححت له جسمه ووسعت عليه المعيشة يمضي خمسة أعوام لا يفد إليّ إنه لمحروم ».

அல்லாஹ் கூறுவதாக நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்.
ஓர்  அடியானுக்கு உடல் ஆரோக்கியத்தைக்கொடுத்து, வாழ்க்கையில் பல பரக்கத்துக்களையும் செய்து,அதே நிலையில் 5 வருடங்கள் கழிந்தும் ஹஜ்ஜின் மூலமாக என்னை சந்திக்காவிட்டால் மறுமைநாளில் என்னை சந்திப்பதை விட்டும் அவன் துர்ப்பாக்கியவனாக மாறிவிடுகிறான்.
ஹஜ்ஜு கடமையாக இருந்தும் அதை நிறைவேற்றாதவரின் ஈமான் மறுபரிசீலனைக்குரியது.

இவர்கள் குறித்து நபி (ஸல்) அவர்களின் எச்சரிக்கை:

" من ملك زاداً وراحلة تبلغه إلى بيت الله، ولم يحج، فلا عليه أن يموت يهودياً أو
نصرانياً

எவர் ஹஜ்ஜை நிறைவேற்றத் தேவையான அளவு பொருளை அல்லது வாகனத்தை பெற்றிருந்தும் ஹஜ்ஜை நிறைவேற்றவில்லையோ அவர் ஒரு யூதனாக அல்லது கிருஸ்துவனாக மரணிக்கட்டும்.

ஹஜ் தாமதம் - ஒரு பெரும் அபாயம் யார் அறிவார் அடுத்த ஹஜ் வரை நாம் இருப்போம் என்று. பொருளாதாரம் இருக்கிறது  அல்ஹம்துலில்லாஹ்,
உடலில் வலிமையும் இருக்கிறது அல்ஹம்து லில்லாஹ்,
வாகன வசதியும் இருக்கிறது அல்ஹம்து லில்லாஹ்,
ஆனால் இன்னும் 40-50-வயது கூட ஆகவில்லை  அதற்குள் எதற்கு  ஹஜ்ஜெல்லாம் என்றுபலரும் சொல்கிறார்கள்.
மரணம் எப்போது வரும் என்று  நமக்குத் தெரியாது  மார்க்கத்தைப் பொறுத்த வரை வயசு வரணும் என்றால் பருவம் அடைவது மட்டும் தான். அறுபது, எழுபதைத் தொடுகிற வயசு அல்ல. இந்த உம்மத்துக்கு சராசரி வயதே அறுபது தான். அதற்குள் மரணம்.பிறகு  எங்கே ஹஜ் செய்வது?
அல்லாஹ் மன்னிப்பானாக! மனிதர்களிடம் சாக்குப்போக்கு சொல்லலாம். அல்லாஹ்விடம் சொல்ல முடியுமா? தொழுகை - தினசரி கடமை. நோன்பும், ஸகாத்தும் வருடாந்திர கடமை. ஹஜ், ஆயுளில் ஒரே ஒரு தடவை கடமை. கட்டாயக் கடமை. பூமியில் முதலில் கட்டப்பட்ட மஸ்ஜிது கஃபத்துல்லாஹ்வை வலம் வந்து வணக்கங்கள் புரிய மக்கா நகரம் செல்வது ஒரு முஸ்லிமின் அடிப்படை கடமை. இஸ்லாமின் தூண்களில் ஒன்று இது.
“எவர்கள் அங்கு சென்று அந்த கடமையை  செய்ய சக்தியுடையவர்களாக உள்ளார்களோ, அப்படிப்பட்ட மனிதர்கள் மீது அல்லாஹ்வுக்காக (அங்கு சென்று) அவ்வீட்டை ஹஜ் செய்வது கடமையாகும். எவரேனும் (இதை) நிராகரித்தால் அப்போது (அதனால் அல்லாஹ்வுக்கு ஒன்றும் குறைந்துவிடுவதில்லை. காரணம்) நிச்சயமாக அல்லாஹ் அகிலத்தாரை விட்டும் தேவையற்றவன்.” (அல்குர்ஆன் 3:97)
அல்லாஹ் வசதி இருந்தும் ஹஜ் செய்யாதவர்களை எச்சரிக்கிறான் .

கடமையான ஹஜ்ஜை விரைவாக நிறைவேற்றிவிடுங்கள். ஏனெனில், உங்களில் ஒருவருக்கு என்ன தடை நேரும் என்பதை அவர் அறியமாட்டார் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(அறிவிப்பவர் : இப்னு (ரலி), நூல் : அஹ்மத்)

மற்றொரு அறிவிப்பில், உடல்நிலை பாதிக்கப்பட்டவர்கள் வசதி உள்ளவர்களாக இருந்தால் தனது சார்பாக ஒருவரை நியமித்து ஹஜ் செய்வது கடமையாகும் என்பதை கீழ் வரும் ஹதில் மூலமாக அறியலாம்.

ஒரு பெண் பெருமானார் (ஸல்) அவர்களிடம் கூறினார்கள், என்னுடைய தந்தை மீது ஹஜ் கடமையாகிவிட்டது. ஆனால் வாகனத்தில் மீது அமர இயலாது. அவர் சார்பாக நான் ஹஜ் செய்யலாமா? நபி(ஸல்) கூறினார்கள், ஆம் (ஹஜ் செய்யுங்கள்). நூல் : புகாரி

இந்த நகரங்களுக்கு சிலரை அனுப்பி, பொருளாதார வசதியுள்ள அனைவரையும் கண்டறிந்து, அதில் ஹஜ் செய்யாதவர் மீது ஜிஸ்யா வரி விதிக்கலாம் என நினைக்கின்றேன். ஏனெனில், அவர்கள் முஸ்லிம்கள் இல்லை! அவர்கள் முஸ்லிம்கள் இல்லை! என்று கோபப்படுகிறார்கள் உமர்(ரலி) அவர்கள்.

சக்தி பெற்றிருந்தும் ஹஜ்ஜை நிறைவேற்றாது விட்டவன் யூதனாகவோ கிறித்தவனாகவோ மரணிப்பதில் ஆச்சரியமில்லை என்கிறார்கள் அலீ (ரலி) அவர்கள்.

இமாம் மாலிக் (ரஹ்) மற்றும் அபு ஹனிபா (ரஹ்) அவர்கள் “ஹஜ் என்பது வசதி உள்ளவர்கள் மீது உடனடியாக கடமையாகும். இதற்கு வயது வரம்பு இல்லை. வசதி வந்தவுடன் தாமதமின்றி ஹஜ் கடமையை நிறைவேற்றப்பட வேண்டும்.

நம் முன்னோர்களின் ஹஜ்

இமான் நாபிஉ ரஹ் அவர்கள் கூறுகிறார்கள்
நான் இப்னு உமர் ரலி அவர்களுடன் முப்பதுக்கும் மேற்பட்ட ஹஜ் மற்றும் உம்ரா செய்துள்ளேன் என கூறுகிறார்கள்.

وحج الحسن خمس عشرة مرة، وحج كثيرا منها ماشيا من المدينة إلى مكة ونجائبه تقاد معه
ஹழ்ரத் ஹஸன் ரலி 15  தடவை ஹஜ் செய்துள்ளார்கள்.அதில் அதிகமாக மதீனாவிலிருந்து மக்காவுக்கு நடந்துவந்து ஹஜ்ஜை நிறைவேற்றினார்கள்.


وعن هلال بن خباب، قال: كان سعيد بن جبير يحرم في كل سنة مرتين، مرة للحج ومرة للعمرة.)

ஹழ்ரத் ஸயீது இப்னு ஜுபைர் ரலி அவர்கள் ஒவ்வொரு ஆண்டும் இரண்டு தடவை இஹ்ராம் கட்டுவார்கள்.ஒன்று உம்ராவுக்கும் மற்றொன்று ஹஜ்ஜுக்காக என ஹிலால் அவர்கள் அறிவிக்கிறார்கள்.

قال ابن حبان: كان طاووس من عباد أهل اليمن، ومن سادات التابعين، مستجاب الدعوة، حج أربعين حجة.

ஹழ்ரத் தாவூஸ் ரஹ் அவர்கள் யமன் வாசிகளில் மிகச்சிறந்த வணக்கசாலி களில் ஒருவர்.தாபியீன்களின் தலைவர்.துஆ ஒப்புக்கொள்ளப்படும் நபர். அவர்கள் 40 ஹஜ் செய்துள்ளார்கள்.


ஹஜ் செய்யாமல் ஹஜ் கூலி பெற்ற மாமனிதர்

அப்துல்லாஹ் இப்னு முபாரக் (ரஹ்) அவர்கள் ஹதீஸ் கலையில் மிகப்பெரிய வல்லுநர். ஒரே நேரத்தில் அவருடைய வகுப்பிலே ஆயிரக்கணக்கான மாணவர்கள் ஹதீஸ் பாடம் பயில அமர்ந்திருப்பார்கள்.ஒரு ஆண்டும் ஹஜ் மற்றும் நபிகளாரை ஜியாரத் செய்யவும் அடுத்த ஆண்டு அல்லாஹ்வின் பாதையில் போருக்காக செல்வதையும் வழக்கமாகக் கொண்டிருந்தார்கள்.
அவ்வாறெ அந்த ஆண்டு ஹஜ் செய்ய முடிவெடுத்து, தம் தோழர்களோடு பயணம் செய்ய ஆயத்தமானார்கள்.
பயணம் செய்வதற்காக ஒரு வாகனத்தை வாங்க சந்தைக்கு வருகின்றார்கள். வழியில் அப்துல்லாஹ் இப்னு முபாரக் (ரலி) அவர்கள் கண்ட காட்சி அவர்களின் இதயத்தை ரணமாக்கி, இரு விழிகளில் இருந்தும் கண்ணீரை வரவழைத்து விட்டது.

அங்கே ஒரு பெண்மணி செத்துப் போன ஒரு வாத்து, அல்லது கோழியின் இறக்கைகளை உறித்துக் கொண்டும், அதன் இறைச்சியை எடுத்து தான் கொண்டு வந்திருந்த பாத்திரத்தில் போட்டுக் கொண்டிருப்பதையும் கண்டார்கள்.

அப்பெண்மணியின் அருகே சென்ற இப்னு முபாரக் (ரஹ்) அவர்கள் அப்பெண்மனியை நோக்கி அல்லாஹ்வின் அடிமையே! என்ன காரியம் செய்து கொண்டிருக்கின்றாய்?” என்று கேட்டார்கள்.

அதற்கு, அப்பெண்மணிபடைத்தவனுக்கும், படைக்கப்பட்ட ஒரு படைப்புக்கும் தொடர்பான விவகாரம் இது! இதில் தலையிட உமக்கு அதிகாரமில்லை, உம் வேலையைப் பார்த்து விட்டுச் செல்லும்!” என்றார்.

அதற்கு, அப்துல்லாஹ் (ரஹ்) அவர்கள்அல்லாஹ்வை முன்னிறுத்திக் கேட்கிறேன்! உம்மைப் பற்றி எமக்கு நீங்கள் அவசியம் சொல்ல வேண்டும்என்றார்கள்.

அப்பெண்மணி வாயைத் திறந்து வார்த்தைகளைக் கொட்டும் முன்பாக, அவர்களின் கண்கள் கண்ணீரை கொண்டு வந்து கொட்டியது.

தழுதழுத்த குரலில் அப்பெண்மணிஅல்லாஹ் என் போன்ற ஒன்றுமில்லாத ஏழைகளுக்கு இந்த செத்துப்போன பிராணிகளை ஹலாலாக ஆக்கியிருக்கின்றான்.

நானோ கணவன் இல்லாத விதவைப்பெண், அங்கே என் வீட்டிலோ என்னுடைய நான்கு பெண்மக்களும் உண்ண உணவில்லாமல் பசியால் குடல் வெந்து துடித்துக் கொண்டிருக்கின்றார்கள்.

நானும், என்னைச் சுற்றியிருக்கிற மனிதர்கள் அனைவரிடத்திலும் உதவி கேட்டு மன்றாடி விட்டேன். ஒருவரின் இதயத்தில் கூட இரக்கம் சுரக்கவில்லையே!?”

ஏதோ, அல்லாஹ்வாவது எங்களின் இந்த பரிதாப நிலை கண்டு, அருள் புரிந்து இந்த செத்தப் பிராணியை தந்திருக்கின்றான்.

ஆனால், நீரோ இப்போது என்னிடம் வந்து தர்க்கித்துக் கொண்டிருக்கின்றீர்என்று கூறினாள்.

இதைக் கேட்டதும் தான் தாமதம் அப்துல்லாஹ் இப்னு முபாரக் (ரஹ்) அவர்கள் தாரை தாரையாய் கண்ணீர் வடித்தார்கள்.

ஒரு வழியாக, நிதானித்து விட்டு தம் கையிலிருந்த பணப்பையை அந்தப் பெண்மணியிடத்திலே கொடுத்து விட்டு உடனடியாக திரும்பி விட்டார்கள்.

அப்பெண்மணியோ நன்றிப் பெருக்கோடும், மகிழ்ச்சியோடும் அப்துல்லாஹ் (ரஹ்) அவர்கள் செல்லும் திசை நோக்கி அவர்களின் உருவம் மறையும் வரை பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

அப்துல்லாஹ் இப்னு முபாரக் (ரஹ்) அவர்களை எதிர் பார்த்துக் காத்துக் கொண்டிருந்த நண்பர்கள் குழு நீண்ட நேரமாகியும் அப்துல்லாஹ் (ரஹ்) அவர்கள் வராததால் வழியில் வந்து சேர்ந்து கொள்வார் எனக் கருதி ஹஜ்ஜுக்கு புறப்பட்டுச் சென்று விட்டனர்.
ஹஜ்ஜுடைய காலம் முடிந்து ஹஜ்ஜுக்குச் சென்ற அவர்களின் நண்பர்கள் ஊர் திரும்பினர்.

வீட்டில் இருந்த அப்துல்லாஹ் இப்னு முபாரக் (ரஹ்) அவர்களைச் சந்தித்த நண்பர்கள் ஒவ்வொருவரும்அப்துல்லாஹ்வே! அல்லாஹ் உமக்கு அருள் புரியட்டும்! உம்முடைய வழிகாட்டலால் தான் நாங்கள் எங்களின் ஹஜ்ஜை மிக எளிமையாக அமைத்துக் கொள்ள முடிந்தது.

கஅபாவில் வைத்து நீர் எங்களோடு நடந்து கொண்ட அந்த அழகிய பண்பாடுகள் இருக்கிறதே இப்போது நாங்கள் நினைத்தாலும் ஒரு வித சிலிர்ப்பு ஏற்படுகிறது.

அல்லாஹ் உமக்கு வழங்கிய கல்வியறிவைக் கொண்டு எங்களின் எல்லோருடைய ஹஜ்ஜையும் மிகச் சரியாக அமைத்துக் கொள்ள உதவி புரிந்தீர்!

அதே நேரத்தில், ஹஜ்ஜுடைய காலத்தில் நீர் உம்முடைய ரப்பை வணங்கிய அந்த முறை, வணக்க வழிபாட்டில் காட்டிய ஈடுபாடு, ஹஜ்ஜுடைய கிரியைகளில் நீர் செலுத்திய கவனத்தைப் போன்று வேறெவரும் செலுத்தியதை நாங்கள் பார்த்ததில்லை.

மொத்தத்தில் உம்மைப் போன்று ஓர் சிறந்த மனிதரை இந்த உலகத்தில் நாங்கள் பார்த்ததே இல்லை!” என்று கூறி நன்றி சொல்லிக் கொண்டனர்.

அப்துல்லாஹ் இப்னு முபாரக் (ரஹ்) அவர்களுக்கு ஒரே குழப்பமாக இருந்தது. என்ன இவர்களுக்கு என்ன ஆகிவிட்டது? நான் எங்கே ஹஜ்ஜுக்கு சென்றேன்? வந்தார்கள், வாழ்த்தினார்கள், நன்றி கூறினார்கள் என்ன நடக்கிறது?” என்று தமக்குத் தாமே பேசிக் கொண்டார்கள்.

அன்றைய இரவு கனவில் பெருமானார் {ஸல்} அவர்களைக் கனவில் காணும் அரும்பாக்கியத்தை, பெரும்பேற்றை பெற்றார்கள் அப்துல்லாஹ் இப்னு முபாரக் (ரஹ்) அவர்கள்.

கனவில் வந்த பெருமானார் {ஸல்} அவர்கள்அப்துல்லாஹ்வே உமக்கு அல்லாஹ்வின் புறத்திலிருந்து சாந்தியும் சமாதானமும் நிலவட்டும்! நான் யார் என்று நீர் அறிவீரா? நான் தான் முஹம்மது {ஸல்} இந்த உலகத்தில் நீர் நேசிக்கின்ற, நாளை மறுமையில் உமக்கு பரிந்துரை செய்யவிருக்கின்ற உம்முடைய நபி!

ஆரம்பமாக, என் உம்மத்தினரின் சார்பாக உமக்கு அல்லாஹ் நல்ல நலவுகளைத் தர வேண்டுமென நான் துஆ செய்கிறேன். அப்துல்லாஹ் இப்னு முபாரக் அவர்களே! நீர் ஓர் ஆதரவற்ற குடும்பத்திற்கு சந்தோஷத்தை வழங்கியது போன்று அல்லாஹ் உமக்கும் சந்தோஷத்தை வழங்குவான்! நீர் அவர்களின் நிலையைக் கண்டு, அவர்களுக்கு உதவியதை மறைத்தது போன்று அல்லாஹ் நாளை மறுமையில் உம்முடைய குறைகளையும் மறைப்பான்!

நீர் செய்த காரியம் அல்லாஹ்வை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. அதன் பலனாக அல்லாஹ் உம்முடைய தோற்றத்தில் ஒரு வானவரை அனுப்பி, உமக்குப் பகரமாக ஹஜ் கிரியைகளைச் செய்ய வைத்தான்.

மேலும், உம் ஊரிலிருந்து ஹஜ்ஜுக்காக சென்ற அத்துணை பேர்களின் ஹஜ்ஜுடைய கூலியை உமக்கு வழங்கி உம்மை கௌரவித்து இருக்கின்றான்.

சமத்துவத்திற்கான பகிரங்கமான அறைகூவல்

சமத்துவத்திற்கான பகிரங்கமான அறைகூவலே ஹஜ் வழிபாடாகும்.
இஸ்லாத்தின் எல்லா வணக்க வழிபாடுகளும் சமத்துவத்தை மையமாக கொண்டவையே. தொழுகையும், நோன்பும் சமத்துவத்தின் அடையாளங்களே. அவ்வாறே ஜகாத்தும் மனிதர்களுக்கிடையிலான ஏற்றத்தாழ்வுகளை களையக் கூடியது தான். என்றாலும் இறுதிக் கடமையான ஹஜ்ஜில் சமத்துவம் சூரியனைப் போன்று பிரகாசிக்கும்.

மனிதர்களுக்கு மத்தியில் சமத்துவத்தை ஏற்படுத்த நினைப்பவர்கள் ஹஜ்ஜை நினைத்துப் பார்க்க வேண்டும். (ஆட்சியாளர் – பாமரர், கருப்பர் – வெள்ளையா், சொந்த நாட்டுக்காரா் – வெளிநாட்டுக்காரர் என்ற பாகுபாடு ஹஜ்ஜில் இருப்பதில்லை) வி.ஐ.பி முறையோ, சிறப்பு கட்டண சலுகை வழிபாடோ அங்கே கிடையாது.

ஜாஹிலிய்யா காலத்தில் குரைஷிகள் தங்களை உயர்வாக நினைத்து அரஃபாவுக்கு செல்லாமல் தவிர்த்து வந்தனர்.தங்களை ‘உறுதிமிக்கவர்கள்’ என்று நினைத்ததே அதற்கு காரணம். இஸ்லாம் வந்த பிறகு அவர்களின் இச்செயல் ஏற்கப்பட வில்லை. ‘ஹஜ்ஜில் எல்லோரும் சமமானவர்கள் தான். எல்லோரையும் போன்று நீங்களும் நடந்து கொள்ளுங்கள்’ என்று அல்லாஹ் வசனம் இறக்கி வைத்தான்.

4158 - حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ خَازِمٍ حَدَّثَنَا هِشَامٌ عَنْ أَبِيهِ عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا
كَانَتْ قُرَيْشٌ وَمَنْ دَانَ دِينَهَا يَقِفُونَ بِالْمُزْدَلِفَةِ وَكَانُوا يُسَمَّوْنَ الْحُمْسَ وَكَانَ سَائِرُ الْعَرَبِ يَقِفُونَ بِعَرَفَاتٍ فَلَمَّا جَاءَ الْإِسْلَامُ أَمَرَ اللَّهُ نَبِيَّهُ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يَأْتِيَ عَرَفَاتٍ ثُمَّ يَقِفَ بِهَا ثُمَّ يُفِيضَ مِنْهَا فَذَلِكَ قَوْلُهُ تَعَالَى
{ ثُمَّ أَفِيضُوا مِنْ حَيْثُ أَفَاضَ النَّاسُ } رواه البخاري
 தமிழ் புகாரி 4520

ஏற்றத்தாழ்வு என்பது அன்றைய அரபுகளின் இரத்தத்தில் ஊறிய பழக்கமாக இருந்தது. இனப்பாகுபாடு, நிறப்பாகுபாடு மட்டுமல்ல.. மொழிப்பாகுபாடும் அவர்களிடம் அதிகமாக இருந்தது. அரபி பேசத் தெரியாவர்களை அவர்கள் அஜமிகள் (வாயில்லாத பிராணிகள்) என்றே அழைத்தனர்.
தங்களுக்கு சமமாக அரபி அல்லாத ஒருவரை நிறுத்துவதையோ, அரபி அல்லாத ஒருவருக்கு தங்களை சமமாக்கி பேசுவதையோ கனவிலும் கூட அவர்கள் ஒத்துக் கொள்ள மாட்டார்கள்.

அந்தளவுக்கு மொழி வெறி அவர்களிடம் தலைவிரித்தாடியது.
இஸ்லாத்திற்கு வந்த பிறகும் கூட அவர்களில் சிலரிடம் இந்த எண்ணம் இருக்கவே செய்துள்ளது. பின்வரும் நபிமொழி இதற்கு ஆதாரம்.

5590 - حَدَّثَنِي عُمَرُ بْنُ حَفْصٍ حَدَّثَنَا أَبِي حَدَّثَنَا الْأَعْمَشُ عَنْ الْمَعْرُورِ
هُوَ ابْنُ سُوَيْدٍ عَنْ أَبِي ذَرٍّ قَالَ
رَأَيْتُ عَلَيْهِ بُرْدًا وَعَلَى غُلَامِهِ بُرْدًا فَقُلْتُ لَوْ أَخَذْتَ هَذَا فَلَبِسْتَهُ كَانَتْ حُلَّةً وَأَعْطَيْتَهُ ثَوْبًا آخَرَ فَقَالَ كَانَ بَيْنِي وَبَيْنَ رَجُلٍ كَلَامٌ وَكَانَتْ أُمُّهُ أَعْجَمِيَّةً فَنِلْتُ مِنْهَا فَذَكَرَنِي إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ لِي أَسَابَبْتَ فُلَانًا قُلْتُ نَعَمْ قَالَ أَفَنِلْتَ مِنْ أُمِّهِ قُلْتُ نَعَمْ قَالَ إِنَّكَ امْرُؤٌ فِيكَ جَاهِلِيَّةٌ قُلْتُ عَلَى حِينِ سَاعَتِي هَذِهِ مِنْ كِبَرِ السِّنِّ قَالَ نَعَمْ هُمْ إِخْوَانُكُمْ جَعَلَهُمْ اللَّهُ تَحْتَ أَيْدِيكُمْ فَمَنْ جَعَلَ اللَّهُ أَخَاهُ تَحْ
تَ يَدِهِ فَلْيُطْعِمْهُ مِمَّا يَأْكُلُ وَلْيُلْبِسْهُ مِمَّا يَلْبَسُ وَلَا يُكَلِّفُهُ مِنْ الْعَمَلِ مَا يَغْلِبُهُ فَإِنْ كَلَّفَهُ مَا يَغْلِبُهُ فَلْيُعِنْهُ عَلَيْهِ رواه البخاري

அவர்களின் இரத்தத்துடன் ஊறிப்போயிருந்த இந்த எண்ணத்தை வேரோடும், வேரடி மண்ணோடும் அகற்ற அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தேர்ந்தெடுத்த களம் அவர்களின் இறுதி ஹஜ் என்றால் மிகையில்லை.
இறுதி ஹஜ்ஜில் அரஃபாவில் வைத்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) ஆற்றிய உரை நாகரிக உலகின் முதல் சமத்துவ பிரகடனமாகும்.

22391 - حَدَّثَنَا إِسْمَاعِيلُ حَدَّثَنَا سَعِيدٌ الْجُرَيْرِيُّ عَنْ أَبِي نَضْرَةَ حَدَّثَنِي مَنْ
سَمِعَ خُطْبَةَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي وَسَطِ أَيَّامِ التَّشْرِيقِ فَقَالَ يَا أَيُّهَا النَّاسُ أَلَا إِنَّ رَبَّكُمْ وَاحِدٌ وَإِنَّ أَبَاكُمْ وَاحِدٌ أَلَا لَا فَضْلَ لِعَرَبِيٍّ عَلَى أَعْجَمِيٍّ وَلَا لِعَجَمِيٍّ عَلَى عَرَبِيٍّ وَلَا لِأَحْمَرَ عَلَى أَسْوَدَ وَلَا أَسْوَدَ عَلَى أَحْمَرَ إِلَّا بِالتَّقْوَى أَبَلَّغْتُ قَالُوا بَلَّغَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ثُمَّ قَالَ أَيُّ يَوْمٍ هَذَا قَالُوا يَوْمٌ حَرَامٌ ثُمَّ قَالَ أَيُّ شَهْرٍ هَذَا قَالُوا شَهْرٌ حَرَامٌ قَالَ ثُمَّ قَالَ أَيُّ بَلَدٍ هَذَا قَالُوا بَلَدٌ حَرَامٌ قَالَ فَإِنَّ اللَّهَ قَدْ حَرَّمَ بَيْنَكُمْ دِمَاءَكُمْ وَأَمْوَالَكُمْ قَالَ وَلَا أَدْرِي قَالَ أَوْ أَعْرَاضَكُمْ أَمْ لَا كَحُرْمَةِ يَوْمِكُمْ هَذَا فِي شَهْرِكُمْ هَذَا فِي بَلَدِكُمْ هَذَا أَبَلَّغْتُ قَالُوا بَلَّغَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لِيُبَلِّغْ الشَّاهِدُ الْغَائِبَ رواه احمد

பெருமானாரின் இச்சமத்துவ பிரகடனம் இன்று வரை அமலில் இருப்பதற்கு பகிரங்கமான சாட்சியமே ஹஜ்ஜாகும்.

19-ம் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்து இருபதாம் நூற்றாண்டின் மத்திய பகுதி வரை உலகம் முழுவதும் பெரும்பான்மையான  நாடுகளில் நிறவெறி தலைவிரித்தாடியது. கருப்பர் – வெள்ளையர் பாகுபாடு உச்சகட்டத்தை அடைந்திருந்தது. அது வெள்ளை இனவாதத்தை எதிர்த்து மால்கம் X போன்ற கருப்பின தலைவர்கள் போராடிய காலம். நிறவெறி கொழுந்து விட்டெரிந்த அக்காலத்தில் கூட ஹஜ்ஜில் நிறவெறி இருக்கவில்லை. மால்கம் X இஸ்லாத்தை ஏற்று, ஹஜ்ஜுக்கு வந்த பொழுது வெண்ணிறமான அரபுத் தலைவர்கள் அவரை கைகுலுக்கி வரவேற்றார்கள். (நூல் – மால்கம் X)
   
ஹாஜியை வழியனுப்புகையில் அவரிடம் எங்களுக்காக துஆ செய்யுங்கள் என்று கேட்பது பெரமானாரின் வழிமுறை.

ஊமர் (ரல) அவர்களிடம்  உங்களுடைய பிரார்த்தனையில் எங்களை மறந்துவீடாதீர் சகோதரரே என்று கேட்டுக் கொண்டுள்ளார்கள்.

வழியனுப்புவோர் பல்வேறுபட்ட கோரிக்கைகளுக்காக பிரார்த்தன செய்ய கேட்டுக்கொள்வார்கள். ஆனால் ஹாஜிகள் அத்தனைபேரும் ஒரே ஒரு கோரிக்கை முன்வைத்து மற்றவர்களை தங்களுக்காக பிராத்திக்க சொல்வார்கள். எங்களது ஹஜ் அல்லாஹ்வால் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஹஜ்ஜாக அமைய வேண்டும் அதற்காக துஆ செய்யுங்கள் என்றே கேட்பார்கள். ஹஜ் அங்கீகரிக்ப்படுவது என்பது இரண்டாம் மனிதரின் பிராத்தனையோடு சம்பந்தப்பட்டிருப்பதை விட ஹஜ்ஜுக்கு செல்வோரின் சிந்தனையோடும் செயலோடும் தான் அதிக தொடர்பு கொண்டிருக்கிறது என்பதை ஹாஜி புரிந்து கோள்ள வேண்டும்.

ஒரு நற்செயல் இறைவனது அங்கீகாரத்தை பெறவேண்டுமானால் அதைற்கு தேவையான அம்சங்கள் என்ன? என்பது குறித்து மழு விழிப்புணர்வும் அவரிடம் இருக்க வேண்டும்.
 
ஹஜ்ஜின் போது மேற்கொள்ள கொள்ள வேண்டிய விஷேசமான கட்டுப்பாடுகள் குறித்தும் அவர் எச்சரிக்கை அடைய வேண்டும். இந்த விழிப்புணர்வும் எச்சரிக்கையும் தான்  அங்கீகரிக்ப்பட்ட நல்ல ஹஜ் என்ற அந்தஸத்திற்கு எடுத்துச் செல்லக் கூடியவை.

ரப்புல் ஆலமீன் அவனது அளப்பெரும் கிருபையால் இவ்வருடம் ஹஜ் செய்கிற எல்லா ஹாஜிகளின் ஹஜ்ஜையும் மக்பூலான மப்ரூரான ஹஜ்ஜாக ஆக்குவானாக.


குறிப்பு வழங்கியவர்கள்: நஸீர் மிஸ்பாஹி ஹழ்ரத், புதுகை ஜபருல்லாஹ் முனீரி ஹழ்ரத், இல்யாஸ் மிஸ்பாஹி ஹழ்ரத், வாட்சப்பில் பரகத் அலி பாகவி ஹழ்ரத். கோர்வை அப்பாஸ் ரியாஜி 



 ஹஜ் பற்றிய மேல் ஆதிக்க தகவல்களுக்கு:


அதிரை எக்ஸ்பிரஸ்: ஹஜ் எனும் அரும்பேறு அல்லது அருட்பேறு !
http://www.adiraixpress.in/2012/10/blog-post_8649.html?m=1
ஹஜ்ஜின் வரலாறுhttp://www.chenaitamilulaa.net/t26389-topic
ஹஜ் « சுவனப்பாதை
http://www.suvanam.com/portal/?tag=%E0%AE%B9%E0%AE%9C%E0%AF%8D
கான் பாகவி: 10/01/2011 - 11/01/2011
http://khanbaqavi.blogspot.in/2011_10_01_archive.html?m=1
அதிரை எக்ஸ்பிரஸ்: ஹஜ்ஜின் சிறப்புகள்
http://www.adiraixpress.in/2009/11/blog-post_22.html?m=1
(ஹஜ்)உன்னை தேடி வந்துவிட்டேன் இறைவா...!! | தூய வழி
http://www.thuuyavali.com/2013/10/blog-post_1.html?m=1
ஹஜ் பயணம் ஒரு சுற்றுலா அல்ல...http://tmmk.in/index.php?option=com_content&view=article&id=1458:hajj-journy-is-not-a-tour&catid=83:world&Itemid=200
அதிரை ஆலிம்: ஹஜ் செய்வது எப்படி
http://adirai-aalim.blogspot.com/2010/10/blog-post_17.html?m=1
நபி வழியில் முழுமையான ஹஜ் வழிகாட்டி
http://chittarkottai.com/haj/haj1.html
தியாகத்தின் பயணம் | Kulasai - குலசை
https://kulasaisulthan.wordpress.com/2013/09/24/தியாகத்தின்-பயணம்/
தியாகத்தின் மறுபெயர் ஹஜ் | இஸ்லாம்கல்வி.காம்
http://www.islamkalvi.com/?p=5118
தியாகத்தின் மறுபெயர் ஹஜ் | இஸ்லாம்கல்வி.காம்
http://www.islamkalvi.com/?p=5118















1 comments:

Post a Comment