10 September 2015

குர்பானியின் சிறப்புகளும், சட்டங்களும்


குர்பானியின் சிறப்புகளும், சட்டங்களும்
இஸ்லாத்தின் அடிப்படைக் கடமைகளில் ஒன்றான "ஹஜ்" கடமையை நிறைவேற்ற உலகின் அனைத்து திசைகளிலுமுள்ள இஸ்லாமியர்கள் கஃபத்துல்லாஹ்வை நோக்கிப் புனிதப் பயணத்தை மேற்கொண்டிருக்கும் இந்நிலையில், நாம் துல்ஹஜ் மாதத்தை விரைவில் (இன்ஷா அல்லாஹ்) அடைய இருக்கிறோம். 

இந்த துல்ஹஜ் மாதமானது ஹஜ் செய்யக்கூடியவர்களுக்கு மட்டும் வணக்கத்திற்குரிய‌ மாதமல்ல‌! நபி இப்ராஹீம்(அலை) மற்றும் அவர்களின் மைந்தரான‌ இஸ்மாயீல்(அலை)அவர்களின் தியாகத்தை நினைவு கூறும் விதமாக, உலக முஸ்லிம்கள் அனைவரும் இறைவனுக்காக ஆடு, மாடு, ஒட்டகம் போன்ற பிராணிகளை அறுத்துப் பலியிடும் ஒரு வணக்க‌த்தை நிறைவேற்றும் "ஈதுல் அள்ஹா" என்று சொல்லப்படும் தியாகத் திருநாளைக் கொண்டாடும் மாதமாகும்.
இஸ்மாயீல் (அலை) அவர்களைத் தனக்காக அறுத்துப் பலியிட வேண்டும் என்று இப்ராஹீம் (அலை) அவர்களுக்கு அல்லாஹ் கனவில் அறிவித்தான்.
இப்ராஹீம் (அலை) தள்ளாத வயதில் இஸ்மாயில் (அலை) அவர்களைப் பெற்றெடுத்ததால் அதிகப் பாசம் அவர்களிடம் இருந்தது. ஆனாலும் அல்லாஹ்வின் கட்டளையை நிறைவேற்ற வேண்டும் என்ற உறுதியில் மகனை அறுக்க முற்பட்டார்கள்.. அப்போது ஷைத்தான் அவர்களுடைய மனதில் தீய எண்ணங்களை ஏற்படுத்தினான். ஆனால் இப்ராஹீம் (அலை) ஷைத்தானிற்குக் கட்டுப்படாமல் இறைக் கட்டளையை நிறைவேற்றத் துணிந்தார்கள்.
அவர்களின் இந்தத் தியாகத்தை அல்லாஹ் ஏற்றுக்கொண்டு இஸ்மாயீல் (அலை) அவர்களைப் பலியிடுவதற்கு பதிலாக ஒரு பிராணியைப் பலியிடுமாறு கட்டளையிட்டான். இந்த விவரங்கள் திருக்குர்ஆனின் 37 வது அத்தியாயத்தில் 100 முதல் 111 வது வசனம் வரை கூறப்படுகிறது.
குர்பானியின் நோக்கம்
இந்த மாபெரும் தியாகத்திலிருந்து படிப்பினைகளை பெற வேண்டும் என்பதற்காக ஒவ்வொரு வருடமும் துல்ஹஜ் மாதத்தில் ஆடு, மாடு ஒட்டகங்களை அறுத்துப் பலியிடுமாறு நபி (ஸல்) அவர்கள் நமக்கு வழிகாட்டியுள்ளார்கள்.
குர்பானியின் நோக்கத்தைப் புரியாத பலர் புகழுக்காக இந்த வணக்கத்தை நிறைவேற்றுகிறார்கள். ஒரு வருடம் கொடுத்து அடுத்த வருடம் கொடுக்காவிட்டால் மற்றவர்கள் ஏளனமாகப் பார்ப்பார்கள் என்று நினைக்கிறார்கள். படைத்தவனின் திருப்தியை விட மனிதர்களின் திருப்திக்கே முன்னுரிமை தருகிறார்கள். நம்மிடம் இறைவன் எதை மிக முக்கியமாக எதிர்பார்க்கிறானோ அதில் தவறிழைத்து விடுகிறார்கள்.
உள்ஹிய்யா எனும் இந்த இபாதத்- மனிதன் இறைநெருக்கம் பெறுவதற்கும்,தியாக மனப்பான்மையை தன்னுள் வளர்த்துக்கொள்வதற்கும்,அல்லாஹ் தனக்கு வழங்கிய பொருளில் விசாலத்தன்மையை கடைபிடிப்பதற்கும் ,அதை தந்த இறைவனுக்கு நன்றி செலுத்துவதற்கும், -இந்த உம்மத்துக்கு தரப்பட்டிருக்கிறது.
அல்லஹுத்தஆலா திருக்குர்ஆனில் இரண்டு இடங்களில் உள்ஹிய்யா வை முதன்மை வணக்கமான தொழுகையுடன் சேர்த்து கூறுகிறான்.
يقول تعالي: فَصَلِّ لِرَبِّكَ وَانْحَرْ (التكاثر:2)
ويقول -جل شأنه-: (قُلْ إِنَّ صَلاَتِى وَنُسُكِى وَمَحْيَاىَ وَمَمَاتِى للَّهِ رَبّ الْعَـالَمِينَ * لاَ شَرِيكَ لَهُ) [الأنعام:162، 163
அது இந்த தீனின் அடையாளச்சின்னம் மாத்திரமல்ல, நபி இப்ராஹீம் அலை அவர்களுக்கும் இந்த உம்மதுக்கும் இருக்கிற ஆத்மார்த்த தொடர்பின் வெளிப்பாடாகும்.
இப்ராஹீம் அலை அவர்களின் ஷரீஅத்தில் இருந்த 40 சட்டங்கள், நபி ஸல் அவர்களின் உம்மத்துக்கும் சட்டமாக்கப்பட்டிருக்கிறது,அதில் குர்பானியும் ஒன்று என அல்லாமா பத்ர் ஆலம் தங்களின் தர்ஜுமான் சுன்னா என்ற நூலில் குறிப்பிடுகிறார்கள்
அதனால்தான் ஸஹாபிகள் நபி ஸல் அவர்களிடம் இந்த உள்ஹிய்யா என்ன? என்று கேட்கிறார்கள், இது உங்கள் தந்தை இப்ராஹீம் அலை அவர்களின் வழிமுறை என்றார்கள்.அதில் எங்களுக்கு என்ன? என மீண்டும் கேட்டபோது அதன் ஒவ்வொரு முடிக்கும் ஒரு நன்மை உண்டு என்றார்கள்.
عَنْ زَيْدِ بْنِ أَرْقَمَ، قَالَ: قَالَ أَصْحَابُ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: يَا رَسُولَ اللَّهِ مَا هَذِهِ الْأَضَاحِيُّ؟ قَالَ: «سُنَّةُ أَبِيكُمْ إِبْرَاهِيمَ» قَالُوا: فَمَا لَنَا فِيهَا يَا رَسُولَ اللَّهِ؟ قَالَ: «بِكُلِّ شَعَرَةٍ، حَسَنَةٌ» قَالُوا: " فَالصُّوفُ؟ يَا رَسُولَ اللَّهِ قَالَ: «بِكُلِّ شَعَرَةٍ مِنَ الصُّوفِ، حَسَنَةٌ» (ابن ماجة)

குர்பானியின் முறைகளில் சிறிது மாற்றம் இருந்தாலும் எல்லா சமூகத்திலும் இந்த அமல் வழக்கத்தில் இருந்து வந்திருக்கிறது என்பதை திருக்குர்ஆன் தெளிவுபடுத்துகிறது.                 وَلِكُلِّ أُمَّةٍ جَعَلْنَا مَنْسَكًا  ( 22:34)

{وَلِكُلِّ أُمَّة} أَيْ جَمَاعَة مُؤْمِنَة سَلَفَتْ قَبْلكُمْ {جَعَلْنَا مَنْسَكًا} بِفَتْحِ السِّين مَصْدَر وَبِكَسْرِهَا اسْم مَكَان أَيْ ذَبْحًا قُرْبَانًا أَوْ مَكَانه (تفسير الجلالين)

I. குர்பானியின் சிறப்புகள்:  
لَنْ يَنَالَ اللَّهَ لُحُومُهَا وَلَا دِمَاؤُهَا وَلَكِنْ يَنَالُهُ التَّقْوَى مِنْكُمْ كَذَلِكَ سَخَّرَهَا لَكُمْ لِتُكَبِّرُوا اللَّهَ عَلَى مَا هَدَاكُمْ وَبَشِّرِ الْمُحْسِنِينَ 22:37

{لَن يَنَالَ الله} لن يصل إِلَى الله {لُحُومُهَا وَلاَ دِمَآؤُهَا} وَكَانُوا فِي الْجَاهِلِيَّة يضْربُونَ لحم الْأَضَاحِي على حَائِط الْبَيْت ويتلطخون بدمها فنهاهم الله عَن ذَلِك وَيُقَال لَا يقبل الله لحومها وَلَا دماءها {وَلَكِن يَنَالُهُ التَّقْوَى مِنكُمْ} وَلَكِن يقبل الْأَعْمَال الزاكية الطاهرة مِنْكُم

அறியாமைக் காலத்தில் குர்பானி பிராணியின் இறைச்சியை தங்கள் வீட்டுச் சுவர்களிலும், மேனிகளிலும் பூசிக் கொள்வார்கள். அல்லாஹ் அதை தடை செய்து அவற்றின் மாமிசங்களோ, அவற்றின் இரத்தங்களோ அல்லாஹ்வை அடைவதில்லை. மாறாக உங்களிடமுள்ள (இறை) அச்சமே அவனைச் சென்றடையும். (22 : 37)
என்ற வசனத்தை இறக்கினான்.

அன்றைய தினத்தின் சிறந்த அமல்
عَنْ عَائِشَةَ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَا عَمِلَ ابْنُ آدَمَ يَوْمَ النَّحْرِ عَمَلًا أَحَبَّ إِلَى اللَّهِ عَزَّ وَجَلَّ، مِنْ هِرَاقَةِ دَمٍ، وَإِنَّهُ لَيَأْتِي يَوْمَ الْقِيَامَةِ، بِقُرُونِهَا، وَأَظْلَافِهَا، وَأَشْعَارِهَا، وَإِنَّ الدَّمَ، لَيَقَعُ مِنَ اللَّهِ عَزَّ وَجَلَّ، بِمَكَانٍ قَبْلَ أَنْ يَقَعَ عَلَى الْأَرْضِ، فَطِيبُوا بِهَا نَفْسًا» (ابن ماجة)

நஹ்ருடைய நாளில் ஆதமுடைய மகன் செய்யும் செயலில் அல்லாஹ்விற்கு பிடித்தமான செயல் இரத்தத்தை ஓட்டுவது ஆகும். மறுமையில் அப்பிராணி கொம்புகள், கால் குளம்புகள், முடிகள் இருக்கும் நிலையில் வரும். (அவன் ஓட்டிய) இரத்தம் தரையில் விழுவதற்கு முன்பு அல்லாஹ்விடத்தில் ((بِمَكَانٍ) يُرِيدُ الْقَبُولَ) அது ஏற்றுக் கொள்ளப்படும். எனவே நல்ல முறையில் இரத்தத்தை ஓட்டுங்கள்.

பாவம் மன்னிக்கப்படும்
عَنْ عِمْرَانَ بْنِ حُصَيْنٍ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: " يا فاطمة قومي إلى أضحيتك فاشهديها فإنه يغفر لك عند أول قطرة من دمها كل ذنب عملتيه
                                                               ( المستدرك علي الصحيحين للحاكم)
பாத்திமாவே எழுந்து உமது குர்பானி பிராணிற்கு அருகில் ஆஜராகுவாயாக, இரத்தத்திலிருந்து விழக்கூடிய  ஒவ்வொரு துளிக்கும் உமக்கு பாவம் மன்னிக்கப்படும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
II. குர்பானியின் சட்டங்கள்
குர்பானி கொடுப்பவர் கடைபிடிக்க வேண்டியவை
குர்பானி கொடுக்க நாடியவர் துல்ஹஜ்ஜு மாதம் பிறை ஒன்று முதல் குர்பானி கொடுக்கும் வரை நகம், முடி இவற்றில் எதையும் வெட்டக் கூடாது.
நீங்கள் குர்பானி கொடுப்பவராக இருந்து துல்ஹஜ்ஜு பிறையைக் கண்டால் குர்பானி கொடுக்கும் வரை தனது முடியை, நகத்தை வெட்ட வேண்டாம்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : உம்மு ஸலமா (ரலி) நூல் : முஸ்லிம் (3655),
குர்பானிப் பிராணிகள்
ஒட்டகம், ஆடு, மாடு இம்மூன்றும் குர்பானி கொடுக்கத் தகுதியான பிராணிகள். இதைத் தவிர வேறு எதையும் குர்பானி கொடுக்கக் கூடாது.
கால்நடைகளை அவர்களுக்கு அல்லாஹ் வழங்கியதற்காக அறியப்பட்ட நாட்களே அல்லாஹ்வின் திருநாமத்தை அவர்கள் துதிப்பார்கள். அதில் இருந்து நீங்களும் உண்ணுங்கள், வறிய ஏழைகளுக்கும் வழங்குங்கள்.
(அல்குர்ஆன் 22 : 28)
இந்த வசனத்தில் குர்பானிக்கான பிராணிகளைப்பற்றி அல்லாஹ் குறிப்பிடும் பொழுது அன்ஆம் என்ற வார்த்தையைப் பயன்படுத்துகின்றான். அன்ஆம் என்றால் ஆடு, மாடு, ஒட்டகம் ஆகிய மூன்று பிராணிகளை மாத்திரம் குறிக்கும். எனவே ஆடு, மாடு, ஒட்டகம் ஆகியவற்றையே குர்பானி கொடுக்க வேண்டும்.
ஆடுகளில் சில இனத்தைக் கொடுக்கக் கூடாது என்ற தவறான நம்பிக்கை நிலவுகிறது. வெள்ளாடு செம்மறியாடு ஆகிய எதுவானாலும் கொடுப்பதில் குற்றமில்லை..
குர்பானி கொடுப்பதற்கு பெண் பிராணியை பெரும்பாலும் யாரும் தேர்வு செய்வதில்லை. பெண் பிராணியை அறுத்துப் பலியிடுவது தவறானது என்று நினைக்கிறார்கள். தடுக்கப்பட்ட பிராணிகளின் தன்மையை நபி (ஸல்) அவர்கள் விளக்கும் போது பெண்ணினத்தை பலியிடக்கூடாது என்று கூறவில்லை.
நபி (ஸல்) அவர்கள் அவ்வாறு கூறாத போது நாமாக நிபந்தனைகளை விதிப்பது முறையல்ல. பலியிடப்பட வேண்டிய பிராணிகளைப் பற்றி அல்லாஹ் குறிப்பிடும் போது பெண்ணினத்தையும் சேர்த்தே குறிப்பிடுகிறான்.
ثَمَانِيَةَ أَزْوَاجٍ ۖ مِّنَ الضَّأْنِ اثْنَيْنِ وَمِنَ الْمَعْزِ اثْنَيْنِ ۗ قُلْ آلذَّكَرَيْنِ حَرَّمَ أَمِ الْأُنثَيَيْنِ أَمَّا اشْتَمَلَتْ عَلَيْهِ أَرْحَامُ الْأُنثَيَيْنِ ۖ نَبِّئُونِي بِعِلْمٍ إِن كُنتُمْ صَادِقِينَ
(நபியே! அம்மக்களிடம்) கால்நடைகளில் எட்டு வகைகள் உள்ளன - செம்மறி ஆட்டில் (ஆண், பெண்) இரு வகை வெள்ளாட்டில் (ஆண், பெண்) இரு வகை அவன் (அல்லாஹ்) ஆண் இரண்டையும் ஹராமாக்கி விட்டானா? அல்லது பெட்டை இரண்டையும் ஹராமாக்கி விட்டானா? அல்லது அவ்விரு வகைகளிலுமுள்ள பெண்களின் கர்ப்பங்களில் உள்ளவற்றையா (அவன் தடுத்திருக்கிறான்?) நீங்கள் உண்மை கூறுபவர்களாக இருந்தால், (இதனை) ஆதாரத்துடன் எனக்கு அறிவியுங்கள் என்று கேட்பீராக.
(அல்குர்ஆன் : 6:143)

மேலும் நபி(ஸல்) அவர்கள் ஒட்டகம், ஆடு, மாடு ஆகியவற்றை மட்டும் குர்பானி கொடுத்ததாக ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் கூறுகின்றன. எனவே இம்மூன்று பிராணிகள் மட்டுமே குர்பானிப் பிராணிகளாகும்.
எருமை மாட்டை குர்பானிக் கொடுப்பதில் அறிஞர்களுக்கிடையே கருத்து வேறுபாடு நிலவுகிறது. நபி (ஸல்) அவர்கள் வாழ்ந்த பூமியில் எருமை மாடு இல்லாததால் குர்ஆன் ஹதீஸில் இதைப் பற்றி தெளிவாகக் குறிப்பிடப்படவில்லை. எனவே சிலர் ஹதீஸ்களில் இல்லாததை குர்பானி கொடுக்கக்கூடாது என்கின்றனர். இன்னும் சிலர் எருமை மாடு மாட்டு இனத்தில் உள்ளதால் மாட்டை எப்படிக் கொடுக்கலாமோ அதைப் போன்று இதையும் கொடுக்கலாம் என்கின்றனர்.
அல்லாஹ் மிக அறிந்தவன்.
சில ஊர்களில் ஈதுப் பெருநாளில் சேவல், கோழி போன்றவற்றை குர்பானி கொடுக்கின்றனர். இவ்வாறு செய்வது கூடாது. இதற்கு ஹதீஸ்களில் எந்த ஆதாரமும் கிடையாது.
பிராணிகளின் தன்மைகள்
குர்பானிப் பிராணிகள் நல்ல திடகாத்திரமானதாகவும், ஆரோக்கியமானதாகவும் இருக்க வேண்டும். பொதுவாக எந்தக் குறையும் இல்லாததாகவும்  இருக்க வேண்டும்.
தெளிவாகத் தெரியும் நொண்டி, தெளிவாகத் தெரியும் பார்வைக் குறை, தெளிவாகத் தெரியும் நோய், எலும்பில் மஜ்ஜை இல்லாத மெலிவு ஆகிய குறைபாடுகளுடையவற்றைக் குர்பானி கொடுப்பது கூடாது என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அல்பரா பின் ஆசிப் (ரலி) நூல் : திர்மிதீ (1417),
 நபி (ஸல்) அவர்கள் தெளிவாகக் குறை தெரியும் பிராணியைத் தடை செய்துள்ளார்கள். உதாரணமாக குருடு நொண்டி போன்ற குறைகள் இருக்கக் கூடாது. அவர்கள் கூறிய தெளிவாகத் தெரியும் என்ற வாசகம் குறை மறைமுகமாகவும் சிறியதாகவும் இருந்தால் பிரச்சனையில்லை என்பதை காட்டுகிறது. எனவே சிறிய அளவில் வெளிப்படையாகத் தெரியாத குறையுள்ள ஆட்டைக் குர்பானிக் கொடுப்பதில் குற்றமில்லை.
நபி(ஸல்) அவர்கள் கொம்புள்ள, கருப்பு நிறத்தால் நடக்கக் கூடிய, கருப்பு நிறத்தால் அமரக் கூடிய, கருப்பு நிறத்தால் பார்க்கக் கூடிய (அதாவது முட்டுக்கால், கால், கண்பகுதி, கருப்பு நிறமுடைய) ஆட்டை குர்பானிக் கொடுக்க வாங்கி வருமாறு கட்டளையிட்டார்கள்.
அறிவிப்பவர் : ஆயிஷா(ரலி)         நூல் : முஸ்லிம் (3637)
நபி (ஸல்) அவர்கள் உட்பகுதியில் பாதி கொம்பு உடைந்த ஆடு குர்பானி கொடுக்கப்படுவதை தடுத்தார்கள்.
நூல் : நஸயீ (4301)        அறிவிப்பாளர் : அலீ (ரலி)
தலையின் உட்பகுதியில் பாதியளவு கொம்பு உடைந்த ஆட்டிற்கு அல்பா என்று சொல்லப்படும். இவ்வகை பிராணியை குர்பானி கொடுக்க நபி (ஸல்) அவர்கள் தடை செய்துள்ளார்கள். வெளிப்பகுதியில் கொம்பு உடைந்திருந்தால் அதை குர்பானி கொடுப்பதில் தவறில்லை. ஏனென்றால் தடைசெய்யப்பட்ட பிராணிகளின் தன்மைகளை பற்றி நபி (ஸல்) அவர்கள் குறிப்பிடும் போது வெளிப்புறத்தில் கொம்பு உடைந்ததை கொடுக்கக்கூடாது என்று தடைவிதிக்கவில்லை.
இந்த ஹதீஸ்களின் அடிப்படையில் ஆடு வாங்குபவர்கள் பெரிய கொம்புள்ள, முகம், மூட்டுக்கால், கண் பகுதி கருப்பு நிறமுடையதாக வாங்குவது சிறப்புக்குரியதாகும். ஆனால் கட்டாயமில்லை.
இறைச்சி அதிகமாகவும் ருசியாகவும் உள்ள பிராணிகளைத் தேர்வு செய்ய வேண்டும். ஆடுகளின் எண்ணிக்கையை விட ஆட்டின் தரம் தான் முக்கியம். அபூபுர்தா என்ற நபித்தோழர் தொழுகைக்கு முன்பே குர்பானி கொடுத்து விட்டார். அதற்குப் பதிலாக இரண்டு ஆட்டின் இறைச்சியை விட அதிக இறைச்சியை கொண்ட ஆடு உள்ளதாக அவர் கூறியபோது இந்த ஆடே முன்பு கொடுத்த ஆட்டைவிட சிறந்தது என்று கூறினார்கள்.
அபூபுர்தா பின் நியார் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்கள் அறுப்பதற்கு முன்பே அறுத்துவிட்டார்கள். அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் (வந்து) அல்லாஹ்வின் தூதரே இந்த நாள் இறைச்சி அதிகமாக விரும்பப்படும் நாள். (ஆகையால்) எனது வீட்டார்களுக்கும் எனது அண்டை வீட்டாருக்கும் எனது உறவினர்களுக்கும் உண்ணக் கொடுப்பதற்காக எனது குர்பானிப் பிராணியை அவசரப்பட்டு அறுத்து விட்டேன் என்று கூறினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் மீண்டும் அறுப்பீராக என்று கூறினார்கள். அவர் அல்லாஹ்வின் தூதரே என்னிடத்தில் ஆறுமாதம் பூர்த்தியான பெண் வெள்ளாட்டுக் குட்டி உள்ளது. அது (அதிக) இறைச்சியுடைய இரு ஆடுகளை விட சிறந்தது என்று கூறினார். அதற்கு நபியவர்கள் உனது இரு குர்பானிப் பிராணியில் இதுவே சிறந்ததாகும் உமக்குப் பின்னால் யாருக்கும் ஆறுமாதக் குட்டி போதுமாகாது என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : பராஃ பின் ஆசிப் (ரலி) நூல் : முஸ்லிம் (3625)
பெரும்பாலான இடங்களில் அல்லாஹ்விற்காக வாங்கப்பட்ட பிராணிகளுக்கிடையே சண்டையை ஏற்படுத்தி போட்டி வைக்கிறார்கள். இதனால் அப்பிராணிகளின் கொம்புகள் உடைந்து விடுகின்றது. அவற்றுக்கு பலத்த காயமும் ஏற்படுகிறது. இது போன்று குறைகளை ஏற்படுத்தி குர்பானிக் கொடுத்தால் இதில் எள் அளவும் பயனில்லை. இக்கேளிக்கையில் ஈடுபடுபவர் உயிரினங்களை கொடுமைப்படுத்திய குற்றத்தின் கீழ் சேர்க்கப்படுவார். பிராணியை அறுக்கும் போது அதற்குச் சிரமம் ஏற்படாமல் இருப்பதற்காக கத்தியை கூர்மையாக்கிக் கொள்ளும்படி வலியுறுத்தும் நம்மார்க்கம் பிராணிகளுக்கு இழைக்கப்படும் இந்த சித்தரவதையை ஒருபோதும் ஏற்காது.
பாலூட்டும் பிராணி
குட்டியை ஈன்று பால் கொடுத்துக் கொண்டிருக்கும் பிராணியை அறுக்க வேண்டாம் என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். ஏனென்றால் தாயை அறுத்து விட்டால் குட்டி பாசத்திற்கும் பாலிற்கும் ஏங்கக்கூடிய நிலை ஏற்படும். குர்பானி கொடுப்பவர்கள் இதை கவனத்தில் கொண்டு குட்டிபோட்டு பால்தரும் பிராணிகளை அறுப்பதை தவிர்க்க வேண்டும்.
(ஒரு அன்சாரித் தோழர் நபி (ஸல்) அவர்களுக்காக ஆடு அறுப்பதற்காக) கத்தியை எடுத்தார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பால்தரும் ஆட்டை அறுக்க வேண்டாம் என நான் உம்மை எச்சரிக்கிறேன் என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)   முஸ்லிம் : (3799)
குர்பானிப் பிராணியை பயன்படுத்தலாமா?
அவசியம் ஏற்படும் போது குர்பானிப் பிராணிகளை பயன்படுத்திக் கொள்வது தவறல்ல. ஆனால் கொடுமை செய்யாமல் அதன் சக்திக்கு உட்பட்டவாறு அழகிய முறையில் அதைக் கையாள வேண்டும்.
ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்களிடம் பலிப்பிராணியில் ஏறிச் செல்வதைப் பற்றிக் கேட்கப்பட்டது., நீங்கள் அதில் ஏறிச் செல்ல வேண்டிய நிலைக்குக் கட்டாயப்படுத்தப்பட்டால் பயண வாகனம் கிடைக்கும் வரை முறையோடு அதில் ஏறிச் செல்க என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதை நான் கேட்டுள்ளேன் என அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : இப்னு ஜுரைஹ் (ரஹ்) நூல் : முஸ்லிம் (2562 , 2563),
عَنْ أَنَسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ: أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ رَأَى رَجُلًا يَسُوقُ بَدَنَةً فَقَالَ: «ارْكَبْهَا»، قَالَ: إِنَّهَا بَدَنَةٌ قَالَ: «ارْكَبْهَا» قَالَ: إِنَّهَا بَدَنَةٌ قَالَ: «ارْكَبْهَا» ثَلاَثًا             ( البخاري)

ஒருவர் தமது குர்பானி ஒட்டகத்தை இழுத்துக் கொண்டு செல்வதைப் பார்த்த நபி (ஸல்) அவர்கள் அதில் ஏறிக் கொள்ளும் என்றார்கள். அதற்கவர் இது குர்பானி ஒட்டகமாயிற்றே என்றதும் (பரவாயில்லை) அதில் ஏறிக் கொள்ளும் என்றார்கள். மீண்டும் அவர் இது குர்பானி ஒட்டகமாயிற்றே என்றதும் (பரவாயில்லை) அதில் ஏறிக்கொள்ளும் என மூன்றாம் தடவையும் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அனஸ் (ரலி) நூல் : புகாரி (1690)
சில பிராணிகள் நம் கட்டளைகளுக்கு அடங்காமல் மிரண்டு ஓடும். இப்ராணிகளைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்காக அவற்றை அடிப்பதில் தவறேதும் இல்லை. அடங்காத பிராணிகளை அம்பெய்து கட்டுப்படுத்த நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டுள்ளார்கள்.
அடங்காத பிராணிகளை கையாள்வது
எங்களுக்கு சில ஒட்டகங்களும் ஆடுகளும் போர்ச் செல்வமாகக் கிடைத்தன. அவற்றிலிருந்து ஓர் ஒட்டகம் மிரண்டு ஓடிவிட்டது. உடனே (நபித்தோழர்களில்) ஒருவர் அந்த ஒட்டகத்தைக் குறிவைத்து அம்பெய்து அதை ஓடவிடாமல் தடுத்து நிறுத்தினர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வனவிலங்குகளில் கட்டுக்கடங்காதவை இருப்பதைப் போன்றே இந்தப் பிராணிகளிலும் கட்டுக்கடங்காதவை சில உள்ளன. இவற்றில் உங்களை மீறிச் செல்பவற்றை இவ்வாறே (அம்பெய்து நிற்கச்) செய்யுங்கள்.
அறிவிப்பவர் : ராஃபிஉ பின் கதீஜ் நூல் : புகாரி (2488)
குர்பானி கொடுக்க அனுமதிக்கப்பட்ட நாட்களும். குர்பானி கொடுப்பது மக்ரூஹாக கருதப்படும் நேரமும்
الأضحية جَائِزَةٌ فِي ثَلَاثَةِ أَيَّامٍ : يَوْمُ النَّحْرِ وَيَوْمَانِ بَعْدَهُ وَقَالَ الشَّافِعِيُّ : ثَلَاثَةُ أَيَّامٍ بَعْدَهُ لِقَوْلِهِ عَلَيْهِ الصَّلَاةُ وَالسَّلَامُ { أَيَّامُ التَّشْرِيقِ كُلُّهَا أَيَّامُ ذَبْحٍ } وَلَنَا مَا رُوِيَ عَنْ عُمَرَ وَعَلِيٍّ وَابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمْ أَنَّهُمْ قَالُوا : أَيَّامُ النَّحْرِ ثَلَاثَةٌ أَفْضَلُهَا أَوَّلُهَا- وَيَجُوزُ الذَّبْحُ فِي لَيَالِيِهَا إلَّا أَنَّهُ يُكْرَهُ لِاحْتِمَالِ الْغَلَطِ فِي ظُلْمَةِ اللَّيْلِ (الهداية)
ஷாபி மத்ஹபின் படி பிறை 10, 11, 12, 13 நாட்களில் குர்பானி கொடுக்கலாம். ஹனபி மத்ஹபின் படி பார்க்கும் போது பிறை 10, 11, 12 நாட்கள் மட்டுமே. அவற்றில் முதலாவது நாள் கொடுப்பது சிறந்தது என்று நபி ஸல் அவர்கள் கூறி இருக்கிறார்கள். இரவில் கொடுப்பது கூடும் என்றாலும் அது மக்ரூஹ் ஆகும்.
ஈத் தொழுகை முடிந்த பின்பே குர்பானி கொடுக்க வேண்டும்.
عَنْ الْبَرَاءِ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ أَوَّلَ مَا نَبْدَأُ بِهِ فِي يَوْمِنَا هَذَا أَنْ نُصَلِّيَ ثُمَّ نَرْجِعَ فَنَنْحَرَ مَنْ فَعَلَهُ فَقَدْ أَصَابَ سُنَّتَنَا وَمَنْ ذَبَحَ قَبْلُ فَإِنَّمَا هُوَ لَحْمٌ قَدَّمَهُ لِأَهْلِهِ لَيْسَ مِنْ النُّسُكِ فِي شَيْءٍ (بخاري)
பராஉ இப்னு ஆஸிப்(ரலி) கூறினார் (ஈதுல் அள்ஹா பெருநாள் உரையில்) நபி(ஸல்) அவர்கள், “இன்றைய தினம் நாம் முதலாவதாகச் செய்ய வேண்டியது யாதெனில், முதலில் நாம் (பெருநாள் தொழுகை) தொழுவோம்; பிறகு (தொழுகையிலிருந்து திரும்பிச் சென்று குர்பானிப்பிராணிகளை அறுப்போம். இதை செய்கிறவர் நம்முடைய வழியைப் பின்பற்றியவராவார். (பெருநாள் தொழுகைக்கு) முன்பே (குர்பானிப் பிராணியை) அறுக்கிறவருக்கு அது, தம் குடும்பத்தாருக்காக முன்கூட்டியே தயார் செய்த (சாதாரண) இறைச்சியாகவே அமையும்; அது (குர்பானி) வழிபாட்டில் எதிலும் சேராது என்று கூறினார்கள்.
சீக்கிரம் குர்பானி கொடுப்பது நல்லது. குத்பா முடிந்து மிம்பரிலிருந்து கீழே இறங்கியுடன் நபி ஸல் குர்பானி கொடுத்துள்ளார்கள்
عَنْ جَابِرِ رضي الله عنه قَالَ شَهِدْتُ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْأَضْحَى بِالْمُصَلَّى فَلَمَّا قَضَى خُطْبَتَهُ نَزَلَ مِنْ مِنْبَرِهِ وَأُتِيَ بِكَبْشٍ فَذَبَحَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِيَدِهِ وَقَالَ بِسْمِ اللَّهِ وَاللَّهُ أَكْبَرُ هَذَا عَنِّي وَعَمَّنْ لَمْ يُضَحِّ مِنْ أُمَّتِي (ابوداود
நபி ஸல் மிம்பரிலிருந்து இறங்கியவுடன் ஆடொன்று கொண்டு வரப்பட்டது. பிஸ்மில்லாஹி வல்லாஹு அக்பர் இது எனக்கும் என் உம்மத்தில் குருபானி கொடுக்காதவர்களுக்காகவும் அறுக்கிறேன் என்று அண்ணலார் அறுத்து பலியிட்டார்கள்.
ஒரு குடும்பத்தலைவர் வயது வந்த தன் பிள்ளைகளுக்காகவோ, அல்லது தன் மனைவிக்காகவோ குர்பானி கொடுப்பது கட்டாயமில்லை. கொடுத்தால் கூடும். தன் சிறு பிள்ளைகளுக்காக கொடுப்பது கடமையா என்பதில் கருத்து வேறுபாடு உள்ளது
وَلَيْسَ عَلَى الرَّجُلِ أَنْ يُضَحِّيَ عَنْ أَوْلَادِهِ الْكِبَارِ،وَلَا عَنْ امْرَأَتِهِ.لِأَنَّ عَلَيْهِمْ أَنْ يُضَحُّوا عَنْ أَنْفُسِهِمْ فَلَا يَجِبُ عَلَيْهِ أَنْ يُضَحِّيَ عَنْهُمْ وَتَجِبُ عَنْ نَفْسِهِ وَعَنْ وَلَدِهِ الصَّغِيرِ لِأَنَّهُ فِي مَعْنَى نَفْسِهِ فَيَلْحَقُ بِهِ كَمَا فِي صَدَقَةِ الْفِطْرِ .وَهَذِهِ رِوَايَةُ الْحَسَنِ عَنْ أَبِي حَنِيفَةَ رَحِمَهُمَا اللَّهُ .وَرُوِيَ عَنْهُ أَنَّهُ لَا تَجِبُ عَنْ وَلَدِهِ وَهُوَ ظَاهِرُ الرِّوَايَةِ ،وَإِنْ كَانَ لِلصَّغِيرِ مَالٌ يُضَحِّي عَنْهُ أَبُوهُ أَوْ وَصِيُّهُ مِنْ مَالِهِ عِنْدَ أَبِي حَنِيفَةَ وَأَبِي يُوسُفَ رَحِمَهُمَا اللَّهُ (الهداية
وَلَوْ كَانَتْ التَّضْحِيَةُ عَنْ أَوْلَادِهِ وَاجِبَةً لَأَمَرَ بِهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَمَا أَمَرَ بِصَدَقَةِ الْفِطْرِ (المبسوط)
ஹாஜிகள் தங்களுடைய ஹஜ்ஜில் குர்பானி கொடுப்பது அல்லாமல் பிறை 10-இல் அவருடைய ஊரில் அவருக்காக குர்பானி தர வேண்டுமா ?
والصحيح إن شاء الله أن هدي الحاج له بمنزلة الأضحية للمقيم ، ولم ينقل أحد أن النبي {صلى الله عليه وسلم} ولا أصحابه جمعوا بين الهدي والأضحية بل كان هديهم هو أضاحيهم فهو هدي بِمِنَى وإضحية بغيرها ، (مشكاة المصابيح مع شرحه مرعاة المفاتيح)
குர்பானிப் பிராணியை அறுக்கும் போது நிய்யத்துடன் வஜ்ஜஹ்த்து, பிஸ்மில்லாஹ் ஓதி தக்பீர் சொல்வது
عَنْ جَابِرِ رضي الله عنه قَالَ:ضَحَّى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم بِكَبْشَيْنِ فِى يَوْمِ الْعِيدِ فَقَالَ حِينَ وَجَّهَهُمَا (إِنِّى وَجَّهْتُ وَجْهِىَ لِلَّذِى فَطَرَ السَّمَوَاتِ وَالأَرْضَ حَنِيفاً وَمَا أَنَا مِنَ الْمُشْرِكِينَ) (إِنَّ صَلاَتِى وَنُسُكِى وَمَحْيَاىَ وَمَمَاتِى لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ لاَ شَرِيكَ لَهُ وَبِذَلِكَ أُمِرْتُ وَأَنَا أَوَّلُ الْمُسْلِمِينَ اللَّهُمَّ مِنْكَ وَلَكَ عَنْ مُحَمَّدٍ وَأُمَّتِهِ ثُمَّ سَمَّى اللَّهَ وَكَبَّرَ وَذَبَحَ (نسائ وتستحب الصلاة على النبيصلى الله عليه وسلم عند الذبح (الأم للشافعي)
எந்தப்பிராணியை அறுத்தாலும் அறுக்கும் முன் கத்தியை தீட்டுவது, அறுத்தவுடன் உடனே உரிக்காமல் சூடு ஆற விடுவது
عَنْ شَدَّادِ بْنِ أَوْسٍ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِنَّ اللَّهَ كَتَبَ الْإِحْسَانَ عَلَى كُلِّ شَيْءٍ فَإِذَا قَتَلْتُمْ فَأَحْسِنُوا الْقِتْلَةَ وَإِذَا ذَبَحْتُمْ فَأَحْسِنُوا الذَّبْحَ وَلْيُحِدَّ أَحَدُكُمْ شَفْرَتَهُ فَلْيُرِحْ ذَبِيحَتَهُ (مسلم) قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا قُطِعَ مِنْ الْبَهِيمَةِ وَهِيَ حَيَّةٌ فَهِيَ مَيْتَةٌ1 (أحمد
எல்லாப் பொருட்களின் மீதும் நல்ல முறையில் நடந்து கொள்வதை அல்லாஹ் கடமையாக்கியுள்ளான். நீங்கள் (கிஸாஸ் பழிக்குப் பழி வாங்கும் போது) கொலை செய்தால் அழகிய முறையில் கொலை செய்யுங்கள். நீங்கள் பிராணிகளை அறுத்தால் அழகிய முறையில் அறுங்கள். உங்கள் கத்தியை நீங்கள் கூர்மையாக்கிக் கொள்ளுங்கள்! (விரைவாக) அறுப்பதன் மூலம் அதற்கு நிம்மதியைக் கொடுங்கள் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : ஷிதாத் இப்னு அவ்ஸ்(ரலி)  அஹ்மது(16490)
அறுக்கப்படும் பிராணிக்கு முன்னால் கத்தியை தீட்டுவது அதனை பல முறை சாகடிப்பதாகும்
عن ابن عباس رضي الله عنه أن رجلا أضجع شاة وهو يحد شفرته2 فقال النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أتريد أن تُمِيتَها موتاتٍ هَلاَّ حَدَدْتَ شَفْرَتك قبل أن تُضْجِعَها (مستدرك الحاكم) كتاب الاضحية)
ஒருவர் ஆட்டை அறுப்பதற்காக அதைப் படுக்க வைத்துக் கொண்டு கத்தியைத் தீட்டிக் கொண்டிருந்தார். நபி (ஸல்) அவர்கள் (அவரிடம்) இப்பிராணியைப் பலமுறை கொல்வதை நீ நாடுகிறாயா? இதை நீ படுக்கவைப்பதற்கு முன்பாகவே உன் கத்தியை நீ கூர்மைப்படுத்தியிருக்கக் கூடாதா? என்று கூறினார்கள்.  அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)                நூல் : ஹாகிம் பாகம் : 4 பக்கம் : 257
 இறக்கம் காட்டு இறக்கம்  காட்டப்படுவாய்
عن معاوية بن قرة عن أبيه : أن رجلا قال : يا رسول الله إني لأرحم الشاة أن أذبحها فقال رسول الله صلى الله عليه و سلم : إن رَحِمْتَها رحِمَك الله (مستدرك الحاكم) كتاب الاضحية)
மென்மையாக அழைத்துச்செல்வதும், தண்ணீர் கொடுப்பதும், ஒரு ஆட்டின் முன் மற்றொரு ஆட்டை அறுக்காமலிருப்பதும்
والأولى أن تساق إلى المذبح برفق وتضجع برفق ويعرض عليها الماء قبل الذبح ولا يحد الشفرة قِبَالتها ولا يذبح بعضها قِبالة بعض (بحر الرائق)
மென்மையாக இழுத்துச் சென்று மென்மையாக படுக்க வைத்து அறுப்பதற்கு முன் நீர் புகட்ட வேண்டும் பிராணிக்கு முன் கத்தியை தீட்டவும் கூடாது. ஒரு பிராணிக்கு முன் இன்னொரு பிராணியை அறுக்கவும் கூடாது.
 عنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ رض قَالَ مَرَّ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِرَجُلٍ وَهُوَ يَجُرُّ شَاةً بِأُذُنِهَا فَقَالَ دَعْ أُذُنَهَا وَخُذْ بِسَالِفَتِهَا3 (ابن ماجة)
மாநபி அருகில் ஆட்டின் காதை  இழுத்துக் கொண்டு சென்ற நபரைப் பார்த்து காதை  விடும் கழுத்தைப் பிடித்து மென்மையாக கொண்டு செல்லும் என்று நபியவர்கள் கூறினார்கள்.
அறுக்கும் போது குர்பானிப் பிராணியை கிப்லாவை முன்னோக்கி வைத்து அறுப்பது
استقبال الذابح القبلة وتوجيه الذبيحة إليها وذلك في الهدي والأضحية أشد استحبابا لأن الاستقبال مستحب في القربات وفي كيفية توجيهها ثلاثة أوجه أصحها يوجه مذبحها إلى القبلة ولا يوجه وجهها ليمكنه هو أيضا الاستقبال والثاني يوجهها بجميع بدنها والثالث يوجه قوائمها5(مجموع(
அறுக்கத் தெரிந்தால் முடிந்த வரை தானே அறுப்பது, அல்லது அறுப்பவருக்கு பக்கத்தில் நிற்பது
الْأَوْلَى في الْقُرَبِ أَنْ يَتَوَلَّاهَا الْإِنْسَانُ بِنَفْسِهِ وَإِنْ أَمَرَ بِهِ غَيْرَهُ فَلَا يَضُرُّ لِأَنَّهُ عليه الصَّلَاةُ وَالسَّلَامُ سَاقَ مِائَةَ بَدَنَةٍ فَنَحَرَ بيده نَيِّفًا وَسِتِّينَ ثُمَّ أَعْطَى الحِرْبَةَ عَلِيًّا فَنَحَرَ الْبَاقِيَ وَإِنْ كان لَا يُحْسِنُ ذلك فَالْأَحْسَنُ أَنْ يَسْتَعِينَ بِغَيْرِهِ كيلا يَجْعَلَهَا مَيْتَةً وَلَكِنْ يَنْبَغِي أَنْ يَشْهَدَهَا بِنَفْسِهِ لِقَوْلِهِ عليه الصَّلَاةُ وَالسَّلَامُ لِفَاطِمَةَ رضي اللَّهُ عنها قَوْمِي فَاشْهَدِي أُضْحِيَّتَكِ فإنه يُغْفَرُ لَك بِأَوَّلِ قَطْرَةٍ من دَمِهَا كُلُّ ذنبه (سنن الكبري للبيهقي) ضَعِيفٌ
குர்பானிப் பிராணியில் கூட்டு சேர்ந்து கொண்ட ஏழு பேர் அதனை அறுக்கும்போதும் கூட்டாக அறுத்த சம்பவம்
عن أَبي الأَسَدِّ السُّلَمِىّ عَنْ أَبِيهِ عَنْ جَدِّهِ رضي الله عنه قَالَ :كُنْتُ سَابِعَ سَبْعَةٍ مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَأَمَرَنَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَجَمَعَ كُلُّ رَجُلٍ مِنَّا دِرْهَمًا فَاشْتَرَيْنَا أُضْحِيَّةً بِسَبْعَةِ دَرَاهِمَ فَقُلْنَا يَا رَسُولَ اللَّهِ لَقَدْ أَغْلَيْنَا بِهَا6 فَقَالَ النَّبِىُّ صلى الله عليه وسلم: إِنَّ أَفْضَلَ الضَّحَايَا أَغْلاَهَا وَأَنْفَسُهَا فَأَمَرَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم رَجُلاً يَأْخُذُ بِيَدٍ وَرَجُلاً بِيَدٍ وَرَجُلاً بِرِجْلٍ وَرَجُلاً بِرِجْلٍ وَرَجُلاً بِقَرْنٍ وَرَجُلاً بِقَرْنٍ وَذَبَحَهَا السَّابِعُ وَكَبَّرْنَا عَلَيْهَا جَمِيعًا (مستدرك الحاكم) كتاب الاضحية) (معجم الاوسط للطبراني)
பிராணியின் கழுத்தின் இருபக்கமுள்ள இரத்தக்குழாய்கள், மூச்சுக்குழல், உணவுக்குழல் ஒரே நேரத்தில் அறுபட வேண்டும் இம்முறையில் அறுப்பதால் இரத்தம் விரைவாக வெளியேறி இறைச்சியும் சுத்தமாகும். கத்தி கூர்மையாக இருப்பதால் விரைவாக அறுக்க முடியும். அதனால் பிராணி வலியை உணர்வதில்லை. உதாரணமாக கூர்மையான பிளேடினால் ஏற்படும் காயம் உடனே வலியைத் தோற்றுவிப்பதில்லை. இரத்தம் வழிந்து சிறிது நேரம் கழித்தே வலியை உணர்கிறோம். இஸ்லாமிய முறையி்ல் பிராணியை அறுக்கும் போது அது வலியை உணர்வதில்லை என்றால் பிராணி ஏன் துடிக்கிறது ?
கழுத்தின் இரு புறமுள்ள இரத்தக்குழாய்கள் துண்டிக்கப்பட்டவுடன் மூளைக்குச்செல்லும் இரத்தம் தடைபடுகிறது.உடன் பிராணிநினைவை இழந்து விடுகிறது. முதுகந்தண்டு சிதையாமல் இருப்பதால் மூளை அதன் பின் உணர்வுகளை இதயத்திற்கு அனுப்பி வைத்து உடனே மூளைக்கு அதிக இரத்தத்தை அனுப்பித் தருமாறு கோருகிறது. ஆகவே தான் அறுக்கப்பட்டவுடன் பிராணி துடிக்கிறது.அதனால் உடலின் பல பாகங்களிலிருந்தும் இரத்தம் துரிதமாக இதயத்தை அடைந்து அங்கிருந்து மூளைக்கு செலுத்தப்படுகிறது.ஆனால் இரத்தக் குழாய்கள் துண்டிக்கப்பட்டிருப்பதால் இரத்தம் மூளைக்குச் சென்றடையாமல் வெளியேறி விடுகிறது. பிராணி துடிப்பதைப் பார்ப்பவர் அது வலியால் துடிக்கிறது என்று கருதி விடுவார். ஆனால் அது வலியினால் ஏற்படும் துடிப்பு அல்ல. ஏனெனில் ஏற்கெனவே நினைவிழந்திருப்பதால் பிராணி வலியை உணர்வதில்லை. உடல் துடிப்பின் மூலம்
இரத்தம் முழுவதும் வெளியேறி விடுகிறது. இதனால் தான் பிராணியின் உடல் துடிப்பு நின்று இரத்தம் முற்றிலும் வெளியேறும் வரை தோலை உரிக்கவோ, தசையை வெட்டவோ அனுமதி இல்லை. இவ்விதம் பெறப்படும் இறைச்சி இரத்தம் நீங்கிய தூய்மையான இறைச்சியாகி விடுகிறது. பிராணியும் வேதனையின்றி உயிரிழக்கிறது.
மேலை நாடுகளில் பின்பற்றப்படும் ஸ்டன்னிங் என்ற முறையால் கறியும் சுத்தமாகாது. பிராணியும் வேதனையை உணரும்
இம்முறைப்படி பிராணியின் தலையில் ஓங்கி அடிக்கப்படுகிறது. உடனே பிராணி செயலிழந்து விடுகிறது. ஆனால் நினைவை இழப்பதில்லை. பிராணி செயலிழந்து விடுவதால் அதற்கு எவ்வித வலியும் ஏற்படுவதில்லை எனக் கருதலாம். ஆனால் உண்மையில் பிராணி மிகுந்த வேதனையுடன் இருக்கிறது. மூளையும், நரம்பு மண்டலமும் செயலிழந்து விடுவதால் உடலில் துடிப்பு ஏற்படுவதில்லை. அதன் காரணமாக இரத்தம் உடலிலேயே தங்கி விடுகிறது. விரைவாக தசைகளை வெட்டுவதால் சிறிது இரத்தமே வெளியேறக்கூடும். எனவே இறைச்சி சுத்தமற்றதாக ஆகி விடுகிறது. அதன் தோற்றமும் மாறுபடுகிறது. சுவையும் குறைந்து விடுகிறது
ஆகுமாக்கப்பட்ட பிராணிகளில் சாப்பிட தடுக்கப்பட்ட ஏழு பொருட்கள். அவற்றில் இரத்தம் ஹராம். மற்றவை மக்ரூஹ்
1. இரத்தம், 2. பித்தப்பை, 3. ஆண்குறி, 4. பெண்குறி, 5. இரு விதைகள், 6. மூத்திரப்பைகள், 7. கழலை
عَنِ ابْنِ عُمَرَ ، قَالَ : كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَكْرَهُ مِنَ الشَّاةِ سَبْعًا : الْمَرَارَةَ ، وَالْمَثَانَةَ ، وَالْمحيَاةَ ، وَالذَّكَرَ ، وَالأُنْثَيَيْنِ ، وَالْغُدَّةَ ، وَالدَّمَ ، وَكَانَ أَحَبَّ الشَّاةِ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مُقَدَّمُهَا ، قَالَ : وَأُتِيَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِطَعَامٍ ، فَأَقْبَلَ الْقَوْمُ يُلْقِمُونَهُ اللَّحْمَ ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : إِنَّ أَطْيَبَ اللَّحْمِ لَحْمُ الظَّهْرِ (طبراني في المعجم الاوسط)
குர்பானி இறைச்சியை வீணாக்காமல் காய வைத்துக் கொள்வது பற்றி... அய்யாமுத்தஷ்ரீக் என்றாலே காய வைக்கும் நாட்கள்..
قال النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ ضَحَّى مِنْكُمْ فَلَا يُصْبِحَنَّ بَعْدَ ثَالِثَةٍ وَبَقِيَ فِي بَيْتِهِ مِنْهُ شَيْءٌ فَلَمَّا كَانَ الْعَامُ الْمُقْبِلُ قَالُوا يَا رَسُولَ اللَّهِ نَفْعَلُ كَمَا فَعَلْنَا عَامَ الْمَاضِي قَالَ كُلُوا وَأَطْعِمُوا وَادَّخِرُوا فَإِنَّ ذَلِكَ الْعَامَ كَانَ بِالنَّاسِ جَهْدٌ فَأَرَدْتُ أَنْ تُعِينُوا فِيهَا (بخاري) وفي رواية "أَلَا وَإِنَّ هَذِهِ الْأَيَّامَ أَيَّامُ أَكْلٍ وَشُرْبٍ وَذِكْرِ اللَّهِ عَزَّ وَجَلَّ (ابوداود) كِتَاب الضَّحَايَا-
عَنْ ثَوْبَانَ رض مَوْلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ قَالَ لِى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَنَحْنُ بِمِنًى أَصْلِحْ لَنَا مِنْ هَذَا اللَّحْمِ فَأَصْلَحْتُ لَهُ مِنْهُ ، فَلَمْ يَزَلْ يَأْكُلُ مِنْهُ حَتَّى بَلَغْنَا الْمَدِينَةَ. (نسائ)

அய்யாமுத் தஷ்ரீக் உடைய நாட்களில் தக்பீர் கூறுவது பற்றி..
عن جابر كان رسول الله صلى الله عليه و سلم إذا صلى الصبح من غداة عرفة يقبل على أصحابه فيقول على مكانكم ويقول الله أكبر الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد فيكبر من غداة عرفة إلى صلاة العصر من آخر أيام التشريق (دار قطني)
عن ابن مسعود رضي الله عنه أنه كان يكبر أيام التشريق:الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد(مصنف ابن أبي شيبة) سند صحيح
அரஃபா நோன்பு என்பது நமக்கு பிறை 9 என்றைக்கு வருமோ அந்த நாள் தான் என்பதைப்பற்றியும்,
விடுபட்ட களா நோன்பு இருந்தால் அதை துல்ஹஜ் 1- முதல் 9 வரை களா செய்வது சிறந்தது என்பதைப் பற்றியும்
عن أَبِي قَتَادَةَ مرفوعا"إِنَّ صَوْم عَاشُورَاء يُكَفِّر سَنَةً وَإِنَّ صِيَام يَوْم عَرَفَة يُكَفِّر سَنَتَيْنِ (مسلم) أَنَّ عُمَرَ رَضِ قَالَ مَا مِنْ أَيَّامٍ أَحَبَّ إِلَىَّ أَنْ أَقْضِىَ فِيهَا شَهْرَ رَمَضَانَ مِنْ أَيَّامِ الْعَشْرِ - سَأَلَ أَبَا هُرَيْرَةَ رَجُلٌ "إِنَّ عَلَىَّ رَمَضَانَ وَأَنَا أُرِيدُ أَنْ أَتَطَوَّعَ فِى الْعَشْرِ قَال"لاَ بَلِ ابْدَأْ بِحَقِّ اللَّهِ فَاقْضِهِ ثُمَّ تَطَوَّعْ بَعْدُ مَا شِئْتَ (بيهقي)
பிக்ஹ் நூல்கள் அனைத்திலும் அரஃபா நாள் என்பது துல்ஹஜ் 9-ம் நாள் என்றே கூறப்பட்டுள்ளது. அரஃபாவில் ஹாஜிகள் தங்கும் நாள் என்று கூறப்படவில்லை. ஆகவே அரஃபா நாள் ஹாஜிகளுக்கும், நமக்கும் மாறுபடுவது அல்லாஹ்வின் விதி.
எனவே உல்ஹிய்யாவின் சட்டங்கள் அனைத்தையும் விளங்கி பரிபூரணமான நன்மையைப் பெற்று அல்லாஹ்வின் அருளைப் பெறுவோமாக. அனைவருக்கும் மேலாண்மைக்குழு சார்பாக ஈதுப் பெருநாள் நல்வாழ்த்துக்கள்.
குறிப்பு வழங்கியவர்கள்:
மௌலவி : நஸீர் மிஸ்பாஹி
மௌலவி : முஹம்மது இல்யாஸ்
மௌலவி : சுல்தான் சலாஹி  
மௌலவி : ஜபருல்லாஹ் முனீரீ 
மௌலவி : அப்துர் ரஹ்மான் ஹசனீ
மௌலவி : ஷாகுல் ஹமீது
மௌலவி : உமர் பாரூக் முனீரீ
மௌலவி : ஹஸன்
மௌலவி : பஹ்ருதீன் ஷேக் முஹம்மது
மௌலவி : ஜல்வத்
மற்றும் பல இணைய தளங்களிலிருந்து மேலதிக தகவலோடு கோர்வை செய்தவர் பீர் முஹம்மது, பைஜி

2 comments:

Post a Comment