19 November 2015

மழை அல்லாஹ்வின் அருள்

الَّذِي جَعَلَ لَكُمُ الْأَرْضَ فِرَاشًا وَالسَّمَاءَ بِنَاءً وَأَنزَلَ مِنَ السَّمَاءِ مَاءً فَأَخْرَجَ بِهِ مِنَ الثَّمَرَاتِ رِزْقًا لَّكُمْ ۖ فَلَا تَجْعَلُوا لِلَّهِ أَندَادًا وَأَنتُمْ تَعْلَمُونَ  ﴿2:22
 அவனே பூமியை நீங்கள் வசிக்கும் இடமாகவும், வானத்தை ஒரு முகடாகவும் அமைத்து, மேகத்திலிருந்து மழையைப் பொழிவித்து, அதனைக் கொண்டு (நீங்கள்) புசிக்கக்கூடிய கனி வர்க்கங்களையும் உங்களுக்கு வெளியாக்குகின்றான். ஆகவே (இவைகளையெல்லாம்) நீங்கள் தெளிவாக அறிந்துகொண்டே அல்லாஹ்வுக்கு எதனையும் இணையாக்காதீர்கள்.(அல் குர்ஆன் 2.22)
மனிதன் இறைவனால் சோதிக்கப்படுக்கப்படுகிறான் என்பது ஒப்புக்கொள்ளப்பட்ட உண்மை.
கவனமாகவும்,முன்னெச்சரிக்கையாகவும் தனது வாழ்வை நடத்த முற்படும்போது,சோதனைகள்,வேதனைகள் வராமல் மனிதனால் தப்பிக்க இயல்வதில்லை.ஜாதி,மதங்கள் பாராமல் எல்லா அடியார்களுக்கும் இறைவன் சோதனைகளையும்,வேதனைகளையும் அனுபவிக்கும்படிச் செய்கிறான்.
ஒவ்வொரு சோதனைகள்,வேதனையிலிருந்து பாடம் பெற்று வெற்றி பெற முயற்சிக்க வேண்டுமே தவிர இறைவனைப் பயந்து நடக்கும் நமக்கும் சோதனைகள் வந்து விட்டனவே என்று கைசேதப்படுவது மடைமையாகும்.
அறியாமையாகும்.
நம்மைப் பார்த்து இறைவன் இவ்வாறு கேள்வி எழுப்புகிறான்.
 أَحَسِبَ النَّاسُ أَن يُتْرَكُوا أَن يَقُولُوا آمَنَّا وَهُمْ لَا يُفْتَنُونَ
நாங்கள் ஈமான் கொண்டிருக்கின்றோம் என்று கூறினால் (போதும்)  அவர்கள் சோதிக்கப்படாமல் விட்டு விடப்படுவார்கள் என்று மனிதர்கள் எண்ணிக்கொண்டார்களா? (அல்குர்ஆன் 29:2)
எனவே அல்லாஹ்வின் சோதனை என்பது தவிர்க்க முடியாத ஒன்று.அது எப்படி நிகழும் என உறுதியிட்டுக் கூறமுடியாது.நமது முன்னேற்பாடுகளால் தடுத்து நிறுத்திட இயலாது.செல்வதைக் கொடுத்தும் சோதிக்கலாம்,செல்வங்களை அழித்தும் சோதிக்கலாம்,26-12-2014 அன்று இந்தோனிசியாவில் துவங்கி தமிழகத்தை உலுக்கிய கடல் கொந்தளிப்பு போன்றதைக் கொண்டும் சோதிக்கலாம்,.சுரங்கச் சொன்னால் நெருப்பு,காற்று,நீர்,நிலம் இவைகளைக் கொண்டும் சோதிக்கலாம்.
சில சோதனைகளை நாம் எளிதில் ஜீரணித்துக்கொள்ள முடிகிறது.சில சோதனைகள் நமது உள்ளம் தாங்க முடியா வேதனைகளாக மாறி விடுகிறது.நல்லடியார்களை பக்குவப்படுத்த சோதிக்கும் இறைவன் தனிமனித பாவங்கள்,.அனாச்சாரங்கள் பெருகும் போது மனிதனால் தாங்க முடியாத வேதனைகளை இறக்குகின்றான்.மனிதனக்கு எதாவது தீங்கு நேர்ந்தால் அது அவனாக சம்பாதித்துக் கொண்டதாகும்.அவனுக்கு எதாவது நன்மை ஏற்பட்டால் அது அல்லாஹ்விடமிருந்து கிடைத்ததாகும்.இது மகத்தான உண்மை.
திருமறையில் தெளிவாக அறிவிக்கப்பட்டுள்ளது
 مَّا أَصَابَكَ مِنْ حَسَنَةٍ فَمِنَ اللَّهِ ۖ وَمَا أَصَابَكَ مِن سَيِّئَةٍ فَمِن نَّفْسِكَ ۚ وَأَرْسَلْنَاكَ لِلنَّاسِ رَسُولًا ۚ وَكَفَىٰ بِاللَّهِ شَهِيدًا
நபியே நீர் கூறுவீராக(மனிதனே)உனக்குக் கிடைக்கும் எந்த நன்மையும் அல்லாஹ்விடமிருந்தே கிடைக்கின்றது.இன்னும் உனக்கு ஏதாவது ஒரு தீங்கு ஏற்பட்டால் அது உன்னால்தான் வந்தது.(4:79)  
பாவங்கள் பெருகும்போது இயற்கையின் சீற்றத்தைக் கொண்டே மனிதனை இறைவன் படிப்பினை பெறச்செய்கிறான்.முதலில் இயற்கை அனைத்தும்
இறைவனது கட்டுப்பாட்டுக்குள் தான் உள்ளது.என்பதையும் நாம் மனதில் இருத்திக்கொள்ளவேண்டும்.
மழை எப்படி உருவாகின்றது?
கடலில் இருந்தும் பிற நீர்நிலைகளில் இருந்தும், நீரானது சூரியனின் வெப்பத்தால் நீராவியாகி மேலெழுந்து சென்று மேகங்களை அடைகின்றது. அப்படி மேலெழுந்து சென்று மேகங்களை அடையும் பொழுது குளிர்வடைந்து நீராக மாறுகின்றது. பின்னர் இந்த நீர்தாங்கிய மேகங்களில் (கார்முகில்களில்) இருந்து நீரானது துளிகளாக, திவலைகளாக பூமியின் மேற்பரப்பில் விழும் போது மழையானது ஏற்படுகிறது. மழை வீழும் போது மொத்த நீரும் நிலத்தை அடைவதில்லை. அதில் ஒரு பகுதி நீராவியாகி விடுகிறது. பாலைவனம் போன்ற பகுதிகளில் மொத்த நீரும் ஆவியாகிவிடுவதும் உண்டு. இந்த அற்புதத்தைத் தான் அல்லாஹ் 'சூல் கொண்ட காற்றுகளை அனுப்புகிறோம். அப்போது வானிலிருந்து தண்ணீரை இறக்கி உங்களுக்கு அதைப் புகட்டுகிறோம். அதை (வானில்) நீங்கள் சேமித்து வைப்போராக இல்லை' (15:22) என்று கூறுகிறான்.

மேலே சென்ற நீராவி, அந்தரத்தில் மேகமாக எமக்குக் காட்சி தருகின்றது. மேகமானது இழுத்து இணைக்கப்பட்டு பெரும் பனிக்கட்டிகளாக உருமாறி விடுகின்றது. இந்தப் பனிக்கட்டிகள் 1000 அடி முதல் 30.000 அடி வரை உயர்கின்றது. இதனை இன்றைய விஞ்ஞானிகள் உறுதி செய்துள்ளனர். 30.000 அடி என்பது 9 கிலோ மீட்டரை விட அதிகமாகும். இது உலகின் பெரிய மலையான இமயமலையின் உயரத்தை விட அதிகமானதாகும். இன்றைய விஞ்ஞானிகளே வியக்கும் இந்தப் பேருண்மையை அல்லாஹ் அல்குர்ஆனில் சொல்வதைப் பாருங்கள்!

'அல்லாஹ் மேகங்களை இழுத்து அவற்றை ஒன்றாக்குவதையும், பின்னர் அதை அடுக்கடுக்காக அமைப்பதையும் நீர் அறியவில்லையா? அதன் மத்தியில் மழை வெளிப்படுவதைக் காண்கிறீர்! வானத்திலிருந்து அதில் உள்ள (பனி) மலைகளிலிருந்து ஆலங்கட்டியையும் இறக்குகிறான். தான் நாடியோருக்கு அதைப் பெறச் செய்கிறான். தான் நாடியோரை விட்டும் திருப்பி விடுகிறான். அதன் மின்னொளி பார்வைகளைப் பறிக்கப் பார்க்கிறது' (24:43)
இடி ஏற்படுவது எப்படி?
மழை பெய்யக்கூடிய கால கட்டங்களில் இடி இடிப்பதை நாம் உணர்கிறோம். இடி விழுந்து பலர் இறந்து போவதையும் பல கட்டடங்களை நொருங்கி விடுவதையும் மரங்கள் வயல் நிலங்கள் உருத்தெரியாமல் குலைந்து போவதையும் அடிக்கடி ஊடகங்களின் வாயிலாக தெரிந்து கொள்கின்றோம். இந்த இடி எவ்வாறு உருவாகின்றது? என்பதை அலசும் போது அல்லாஹ்வின் வல்லமையை நாம் உணரலாம். மழையும், வெயிலும் இல்லாமல் குளிர்ச்சியான காற்று திடீரென பூமியில் இருந்து மேலே எழும்பும். அந்தக் காற்று ஈரமாக இருப்பதால் அது மேலே செல்வதற்கு ஒரு சக்தி வேண்டும். அந்த சக்தியை குளிர்ந்த காற்று தனக்குள் இருந்தே எடுத்துக் கொள்ளும். இந்த ஈரக்காற்று குளிர்ச்சி அடைந்து நீர்த்துளிகள் அதாவது மேகங்கள் உருவாகின்றன. இந்த நீர்த்துளிகள் மேலே சென்று ஏற்கனவே அங்கிருக்கும் மேகங்களுடன் உராயும்போது 6 ஆயிரம் முதல் 7 ஆயிரம் டிகிரி செண்டிகிரேடு வரை வெப்பம் உருவாகும். இந்த வெப்பத்தினால் அந்தப் பகுதி விரிவடைந்து வெளிச்சமும், சத்தமும் உருவாகிறது. ஒளியை மின்னலென்றும், ஒலியை இடியென்றும் சொல்கிறோம். மேகங்கள் வேகமாக மோதிக்கொள்ளும் போது 10 மில்லியன் கிலோவோட்ஸ் அளவுக்கு மின்சக்தி உருவாகும்.

'இடி என்றால் என்ன? மின்னல் என்றால் என்ன?' என்று ஆராய்ச்சி செய்வதை நினைத்துக் கூடப் பார்க்காத அரேபிய சமுதாயத்தில் அன்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஓதிக்காட்டிய அருள்மறையில் 'இடி' பற்றி அல்லாஹ் இப்படிச் சொல்கிறான்.

அச்சத்தையும், எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தக் கூடியதாக அவனே மின்னலை உங்களுக்குக் காட்டுகிறான். பளுவான மேகங்களையும் அவன் உருவாக்குகிறான். இடியும் அவனைப் புகழ்ந்து போற்றுகிறது. அவனைப் பற்றிய அச்சத்தினால் வானவர்களும் (புகழ்ந்து போற்றுகின்றனர்). இடி முழக்கங்களையும் அவனே அனுப்புகிறான். தான் நாடியோரை அவற்றின் மூலம் தண்டிக்கிறான். அவர்களோ அல்லாஹ்வைப் பற்றி தர்க்கம் செய்கின்றனர். அவன் வலிமைமிக்கவன். (13:12,13)
மழை அல்லாஹ்வின் அருள்

'அவனே வானத்திலிருந்து உங்களுக்காகத் தண்ணீரை இறக்கினான். அதில் குடிநீரும் உண்டு. நீங்கள் மேய்ப்பதற்கான தாவரங்களும் அதனால் கிடைக்கின்றன.' (16:10)

'வானத்திலிருந்து அவன் தண்ணீரை இறக்கினான். அது வாய்க்கால்களின் அளவுக்கேற்ப ஓடுகிறது. மிதக்கும் நுரைகளை வெள்ளம் சுமக்கிறது. நகை அல்லது தளவாடம் செய்வதற்காக நெருப்பில் அவர்கள் உருக்குவதிலும் இது போன்ற நுரை ஏற்படுகிறது. இவ்வாறே உண்மைக்கும், பொய்க்கும் அல்லாஹ் உதாரணம் காட்டுகிறான். நுரையோ வீணாகிப் போய்விடுகிறது 
(ஆனால்)மனிதர்களுக்குப் பயன்தரக் கூடியதோ நிலத்தில் தங்கி விடுகிறது. அல்லாஹ் இவ்வாறே உதாரணங்களைக் கூறுகிறான்' (13:17)
ஹழ்ரத் அனஸ் (ரலி)அவர்கள் கூறியதாவது:
நபி(ஸல்)அவர்களது காலத்தில் மதினவாசிகளை பஞ்சம் பீடித்தது..(அந்தக் காலக்கட்டத்தில்)நபி(ஸல்)அவர்கள் ஒரு ஜுமுஆ நாளில் உரை நிகழ்த்திக் கொண்டிருந்த போது ஒரு(நாட்டுப்புற)மனிதர் எழுந்து அல்லாஹ்வின் தூதரே!(பஞ்சத்தால்)குதிரைகள் அழிந்து விட்டன.ஆடுகளும் அழிந்து விட்டன.ஆகவே அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்அவன் மழை பொழியச் செய்வான் என்று கேட்டார்.உடனே .நபி(ஸல்)அவர்கள் தமது கையை உயர்த்திப் பிரார்த்தனைச் செய்தார்கள்.அப்போது வானம் (மேகங்கள் இல்லாமல்)கண்ணாடியைப்போன்றிருந்து.நபி(ஸல்)அவர்கள் பிரார்தித்தவுடன் காற்று ஒன்று வேகமாக வீசி மேகக்கூட்டத்தை தோற்றுவித்தது.பிறகு அந்த மேகக்கூட்டம் ஒன்று திரண்டு மழையைப்பொழிவித்தது.நாங்கள்தண்ணீரில் மூழ்கியபடி (பள்ளிவாசலிருந்து)வெளியே வந்து எங்கள் இல்லங்களை அடைந்தோம்.அடுத்த ஜுமுஆ (நாள்)வரை எங்களுக்கு மழை பொழிந்து கொண்டேயிருந்தது.அந்த மனிதர் அல்லது வேறொரு மனிதர் நபி(ஸல்)அவர்களது முன் எழுந்து நின்று அல்லாஹ்வின் தூதரே!(அடைமழையின் காரணத்தால்)வீடுகள் இடிந்து விட்டன.ஆகவே அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்.அவன் மழையை நிறுத்திவிடுவான்.என்று சொன்னார்.அதைக் கேட்ட நபி(ஸல்)அவர்கள் புன்னகை புரிந்து اللَّهُمَّ حَوَالَيْنَا ، وَلا عَلَيْنَا
இறைவா!எங்களைச் சுற்றிலும் (எங்களுக்கு நன்மை ஏற்படும் விதத்தில்)
மழையை பொழியவை!எங்கள் மீது (எங்களுக்கு கேடு நேரும் விதத்தில்)மழையை பொழியைச் செய்யாதே!என்று பிரார்த்தித்தார்கள்.நான் மேகத்தை நோக்கினேன் அது பிளவுபட்டு மதீனாவைச் சுற்றிலும் ஒரு மாலைபோல் வலையமிட்டிருந்தது
(.நூல் :புகாரி)
நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: (சூறாவளிக்) காற்று, மழைமேகம் ஆகியவை மிகுந்துள்ள நாட்களில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் முகத்தில் (ஒரு விதமான கலக்கம்) தென்படும்; முன்னும் பின்னும் நடப்பார்கள். (நிம்மதியற்று ஒருவிதத் தவிப்புடன் காணப்படுவார்கள்.) மழை பொழிந்துவிட்டால் அந்த (தவிப்பு) நிலை அவர்களைவிட்டு நீங்கிவிடும்; மகிழ்ச்சி வந்துவிடும். நான் அவர்களிடம் (இது குறித்துக்) கேட்டதற்கு, ”அது என் சமுதாயத்தார்மீது சாட்டப்பட்ட (இறைவனின்) வேதனையாக இருக்குமோ என்று நான் அஞ்சினேன்” என்று விடையளித்தார்கள். அவர்கள் மழையைக் காணும்போது ”(இது இறைவனின்) அருள்” என்று கூறுவார்கள்.
(ஸஹீஹ் முஸ்லிம்)
நபி அவர்கள் கூறினார்கள்: ஒரு மனிதர் காட்டுப்பகுதியில் இருக்கும்போது இன்னாரின் தோட்டத்திற்கு நீர் பொழிவாயாக என்ற சப்தத்தைக் மேகத்திலிருந்து கேட்டார். உடனே அந்த மேகம் அங்கிருந்து நகர்ந்து கருங்கற்கள் நிறைந்த பகுதியில் மழை கொட்டியது. உடனே அங்கிருந்த வாய்க்கால் ஒன்றில் அந்த தண்ணீர் நிரம்பி ஓடலாயிற்று . அம்மனிதர்அந்த தண்ணீரை பின் தொடர்ந்து சென்றார். அங்கு ஒருவர் தனது தோட்டத்தில் நின்று கொண்டு மண்வெட்டியால் அத்தண்ணீரைத் தன் தோட்டத்திற்குத் திருப்பிவிட்டுக் கொண்டிருந்தார். அவரிடம் அல்லாஹ்வின் அடியானே! உனது பெயர் என்ன? என்று கேட்டார், அதற்கு அவர் மேகத்தில் கேட்ட அதே பெயரைக் கூறினார். பின்பு அவர், அல்லாஹ்வின் அடியானே! எனது பெயரை ஏன்கேட்கிறீர்? என்று கேட்டார். அதற்கு அவர், இத்தண்ணீரைப் பொழிந்த மேகத்தில் இன்னாரின் தோட்டத்திற்கு தண்ணீர் ஊற்றுவாயாக! என்று உமது பெயரை குறிப்பிட்டு ஒரு சப்தத்தை நான் செவியேற்றேன்.
இத்தோட்டத்தில் (மழை பொழிய) நீர் என்னசெய்வீர்?எனக் கேட்டார். அதற்கு அந்த மனிதர், அது பற்றிக் கேட்டு விட்டதால் கூறுகிறேன். நான் இதிலிருந்து கிடைக்கும் விளைச்சலை மூன்று பாகங்களாகப் பிரித்து, அதில் ஒன்றை தர்மம் செய்து விடுகிறேன்; மற்றொரு பாகத்தை நானும் எனது குடும்பத்தினரும் உண்ணுகிறோம், மீதமுள்ள ஒன்றை இந்நிலத்தில் (பயிரிட) போட்டு விடுகிறேன் என்று கூறினார். (முஸ்லிம்) மழை பொழிய உண்மையான காரணம்
மழை வருவதும் வராமல் இருப்பதும் வானியல் நிலை மாறிவிடுவதாலோ அல்லது பருவக்காற்று பலமாக வீசுவதாலோ அல்ல. மாறாக, அல்லாஹ்வின் உத்தரவின்படி அது பொழிகிறது. அல்லாஹ்வின் உத்தரவின்படி அது நின்றுவிடுகிறது. இதைத்தான் அல்லாஹ் இப்படிக் கேட்கிறான்: நீங்கள் குடிக்கும் நீரை கவனித்தீர்களா? மேகத்திலிருந்து அதை நீங்கள் இறக்கினீர்களா? அல்லது நாம் இறக்கினோமா? நாம் நாடினால் அதை உப்புக் கரிக்கும் நீராக ஆக்கியிருப்போம். (இவற்றுக்கு) நீங்கள் நன்றி செலுத்தவேண்டாமா? (அல்குர்ஆன் 56:68-70) அல்லாஹ்வின் உத்தரவு அடியார்களின் செயலுக்கேற்றவாறு மாறுபடுகிறது. அடியார்கள் நற்செயல்கள் புரியும்போது மழையைப் பொழிய வைக்கிறான்.

இதுவும் அல்லாஹ்வின் அருள் மழை.
(நூல்:முஸ்லிம்) 
அருள் மழையின்றி அழியும் மழையா?

ஆம்!பாவம் செய்யும்போது......

அளவோடு பொழிந்தால் அருள் என்பதுபோன்றே அத்துமீறிப் பெய்ந்தால் அது சோதனையாக மாறிவிடும். நூஹ் நபியின் சமூகம் கொடூரமாக மழை பொழிந்து ஏற்பட்ட வெள்ளத்தின் மூலம்தான் அழிக்கப்பட்டார்கள். மழைவரும்போது நபியவர்களின் நிலை பற்றி ஆயிஷா (ரலி) கூறுவதை அவதானியுங்கள். மேகத்தையோ அல்லது (சூறாவளிக்) காற்றையோ கண்டால், நபி(ஸல்) அவர்களின் முகத்தில் (ஒருவிதமான கலக்கத்தின்) ரேகை தென்படும். (ஒருநாள்) நான், 'இறைத்தூதர் அவர்களே! மக்கள் மேகத்தைக் காணும்போது அது மழை மேகமாக இருக்கலாம் என்றெண்ணி மகிழ்ச்சியடைகின்றனர். ஆனால், தாங்கள் மேகத்தைக் காணும்போது ஒருவிதமான கலக்கம் தங்கள் முகத்தில் தென்படக் காண்கிறேனே (ஏன்)?' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், 'ஆயிஷா! அதில் (அல்லாஹ்வின்) வேதனை இருக்கலாம் என்பதால் என்னால் கலக்கமடையாமல் இருக்க இயலவில்லை. ('ஆத்' எனும்) ஒரு சமூகத்தார் (சூறாவளிக்) காற்றினால் வேதனை செய்யப்பட்டனர். (அந்தச்) சமூகத்தார் (மேகமாக வந்த) அந்த வேதனையைப் பார்த்துவிட்டு, 'இது நமக்கு மழையைப் பொழிவிக்கும் மேகம்' என்றே கூறினர்' என பதிலளித்தார்கள்.” (புஹாரி)
இதனால்தான் அதிகமாக மழை பெய்யும்போது எமக்குப் போதும் ஏனைய பகுதிகளுக்கு அதனைப் பொழியச்செய்வாயாகஎன்று கூறுமாறுதான் நபிகளார் اللَّهُمَّ حَوَالَيْنَا ، وَلا عَلَيْنَا
 அல்லாஹும்ம ஹவாலைய்னா, வல அலைனாஎன்ற துஆவைக் கற்றுத்தந்தார்கள்.
நாம் செய்யும் பாவத்தின் காரணமாக, அருள் மழை அழியும் மழையாக பொழியும் நிலை உருவாகும் சூழ்நிலை.இக்கால சூழ்நிலை மிகவும் மோசமான பாவத்தின் உச்சக்கட்டங்கள்(.நஊது பில்லாஹ்)
பாவங்கள் புரியும்போது மழையை தடுத்துவிடுகிறான். 
இப்னு உமர் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: ஒருமுறை நபி அவர்கள் எங்களை நோக்கி, ஓ முஹாஜிரீன்களே! ஐந்து காரியங்கள் உள்ளன. அல்லாஹ் காப்பாற்றுவானாக! அவற்றில் நீங்கள் மூழ்கிவிட்டால் வேதனைக்கு உள்ளாக்கப்படுவீர்கள். அவை:
1) எந்த சமுதாயத்தில் விபச்சாரம் பகிரங்கமாக நடைபெறும் அளவிற்கு பரவலாகிவிடுமோ அப்போது முன்னால் கேள்விப்படாத காலரா போன்ற புதுமையான நோய்கள் பரவும்.
2) அளவு, நிறுவைகளில் குறைபாடு செய்பவர்களுக்கு பஞ்சம், சிரமம் ஏற்படும். மேலும் அநியாயக்கார அரசன் சாட்டப்படுவான்.
3) ஜகாத் கொடுக்காமல் தடுத்து வைத்துக் கொண்டால் வானிலிருந்து வரும் மழை அவர்களுக்கு தடுக்கப்படும். மிருகங்கள் மட்டும் இல்லையெனில் அவர்களுக்கு அறவே மழை பொழியாது.
4) அல்லாஹ் மற்றும் அவனது தூதருடன் செய்து கொண்ட வாக்குறுதியை முறித்துவிட்டால் அவர்கள் மீது அல்லாஹ் விரோதிகளை சாட்டிவிடுவான். அவர்களிடமுள்ளதை விரோதிகள் கைப்பற்றிக் கொள்வார்கள்.
5) அல்லாஹ்வின் வேதத்தின்படி இல்லாமல் தங்களின் மனோ இச்சைபடி தலைவர்கள் தீர்ப்பு வழங்கினால் அல்லாஹ் அவர்களுக்கிடையே சண்டைகளை உண்டாக்கிவிடுவான். (இப்னுமாஜா)
பாவத்திற்கு தண்டனை உண்டு இந்த நபிமொழியில் மழை பொழியாமல் வறட்சி, பஞ்சம் ஏற்படுவதற்கு இரு காரணங்கள் கூறப்பட்டுள்ளன. ஒன்று அளவு, நிறுவைகளில் மோசடி செய்வது. இரண்டு, ஜகாத் கொடுக்காமல் இருப்பது. இவ்விரு காரணங்களிலும் அடுத்தவர்களுக்குச் சேரவேண்டியதை ஏதேனும் ஒரு வழியில் அபகரித்து அமுக்கிக் கொள்வதையே குறிக்கப்பட்டுள்ளது. எனவே திருடுவது, ஏமாற்றுவது, கொள்ளையடிப்பது, கலப்படம் செய்வது, மோசடி செய்வது போன்ற எந்த வழியில் அடுத்தவர் பொருளை அபகரித்துக் கொண்டாலும் அவையனைத்தும் இந்த நபிமொழி எச்சரிக்கையின் கீழ் வந்துவிடும். மனிதன் பாவம் செய்தால் அதற்குரிய தண்டனையைப் பெற்றே தீருவான். மழை தடுக்கப்படுவதும், வறட்சி, பஞ்சம் ஏற்படுவதும் அல்லாஹ்வின் தண்டனைகளில் ஒன்றாகும். ஃபிர்அவ்னின் கூட்டத்தார் நல்லுணர்வு பெறுவதற்காக, பஞ்சம் பிடிக்கச் செய்து, விவசாயப் பலன்களைக் குறைத்து தண்டித்தோம் (7:130) என்று அல்லாஹ் திருமறையில் கூறுகிறான். மழை பொழிய பாவமன்னிப்பு அவசியம் தௌபா செய்து பாவத்திலிருந்து மீண்டு, பாவமன்னிப்புக் கோரினால்தான் அடியானின் பாவங்கள் மன்னிக்கப்படும். பாவங்கள் மன்னிக்கப்பட்டுவிட்டால் தண்டனைகள் விலக்கிக் கொள்ளப்படும். அப்போது மழை பொழியும். எனவேதான் நபியவர்களுக்கு முன்னால் வந்த நபிமார்களும் மழை தடுக்கப்பட்டிருக்கும் காலத்தில் தனது சமுதாயத்தாரிடம் பாவமன்னிப்புத் தேடுமாறு கோரினார்கள்.
  فقلت استغفروا ربكم إنه كان غفارا يرسل السماء عليكم مدرارا ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا
மேலும், "நீங்கள் உங்களுடைய இறைவனிடம் மன்னிப்புத் தேடுங்கள்; நிச்சயமாக அவன் மிகவும் மன்னிப்பவன்" என்றுங் கூறினேன்
  (அப்படிச் செய்வீர்களாயின்) அவன் உங்கள் மீது தொடர்ந்து மழையை அனுப்புவான்.
அன்றியும் அவன் உங்களுக்குப் பொருள்களையும், புதல்வர்களையும் கொண்டு உதவி செய்வான்; இன்னும், உங்களுக்காகத் தோட்டங்களை உண்டாக்குவான்; உங்களுக்காக ஆறுகளையும் (பெருக்கெடுத்து ஓடுமாறு) உண்டாக்குவான்.(அல் குர்ஆன் 71-10,11,12)
மழையை திட்டாதீர்கள் 

தொடர்ந்து பெய்யும் மழையை யாரும் சனியன் புடிச்ச மழை விடமாட்டேன்குது என்று திட்டாதீர்கள்.
இறைவனின் அருட்கொடை மழை ரூபத்தில் நமக்கு இறங்கிகொண்டு இருக்கிறது.
இந்த மழையினால் ஏற்படும் உயிர் இழப்புகள் மற்றும் பொருளாதார இழப்புகளுக்கு மனிதனின் தவறுதான் காரணம்.மழையை குற்றம் சொல்லகூடாது.
மனிதன் தன்னுடைய சுயநலத்திற்காக குளங்களையும்,ஏரிகளையும் மேடாக்கி வீடு,தொழில்சாலை கட்டிகொள்கிறான்.நீர் வழித்தடங்களை முறையாக சுத்தம் செய்து தூர் வாராமல் விட்டதால் சென்னை போன்ற பெருநகரங்கள் சிறு மழை பெய்தாலே நரகங்களாக மாறிவிடுகிறது.
20 வருங்களுக்கு முன்பு பெய்த மழை அளவில் 20% கூட இப்போது மழை பொழிவதில்லை.ஆனால் இழப்புகள் மட்டும் மிக அதிகமாகி விட்டது.

இறைவன் தன் திருமறையில் أأنتم أنزلتموه من المزن ام نحن المنزلين 

அதை மேகத்திலிருந்து  நீங்கள் இறக்குகின்றீர்களா? அல்லது  நாம்தாம் இறக்கிவைப்பவர்களா?

لَوْ نَشَاءُ جَعَلْنَاهُ أُجَاجًا فَلَوْلَا تَشْكُرُونَ 

நாம் நாடினால் அதனை (நீங்கள் குடிக்க முடியாத)உப்பு நீராக்கி இருப்போம்.(இதற்கு)நீங்கள் நன்றி செலுத்தவேண்டாமா?
                                               அல் குர்ஆன்:56-69,70)
சுகாதாரம் இல்லாததால் வந்த விளைவுகள் 
இயற்கையின் அமைப்பில் ஒரு கோளாறும் இல்லை. மழை பெய்ய வேண்டிய காலத்தில் தான் பெய்கிறது.
மழை தண்ணீர் போக்கில் குறுக்கிடாமல் இருந்திருந்தால் இவ்வளவு கடுமையான சேதம் இருந்திருக்காது.
ஏரிகளையும், கண்மாய்களையும், குளங்களையும் பிளாட் போட்டு விற்று விட்டோம்.
ஆற்றங்கரைகளையும், ஏரிக்கரைகளையும், குளக்கரைகளையும், வாய்க்கால், வடிகால் கரைகளையும் ஆக்கிரமித்துவிட்டோம். ஆறுகளும், ஏரிகளும், குளங்களும், வாய்க்கால் ,வடிகால்களும் இன்று சுருங்கிவிட்டன.
முன்பு ஊருக்கு குறைந்தது பத்து குட்டைகளாவது இருக்கும், அவையெல்லாம் எங்கே?
பின் மழைநீர் எங்குதான் செல்லும்?

"ஆஹா! மழை நன்றாக பொழிகிறது , விவசாயம் தழைக்கட்டும்,   நிலத்தடி நீர் மட்டம் உயரட்டும், குடிநீர் தட்டுப்பாடு நீங்கட்டும் என்று நினைக்கவோ, வாழ்த்தவோ ஆளில்லை."

ஐயோ மழை கொட்டுகிறது, ஐயய்யோ தண்ணீர் புகுந்துவிட்டது என்று எல்லா தொலைக்காட்சி சேனல்களிலும் ஒரே புலம்பல். இது என்ன எண்ணம்? என்ன நேர்ந்துவிட்டது நமக்கு ? (விடாது மழை பெய்யும்  (கேரளா போன்று) மாநிலங்களில் இந்த புலம்பல் இல்லை. இது எங்கே போய் முடியப்போகிறதோ.

"மழை பொழியட்டும் தமிழ்நாடு தழைக்கட்டும்"   விண்ணிலிருந்து வரும் மழையால் உலகம் இயங்கி வருவதலால் அது அழியா வாழ்வை நல்கும் அமிழ்தத்திற்கு இணையானது என்பதை
உணர வேண்டும். 
நன்மை செய்யும் நன்மக்களாக இருப்பின் 
அருள் மழை,
பாவங்கள் செய்ய செய்ய 
அழியும் மழை.
யா அல்லாஹ்!எங்களுக்கு அருள் மழையை தருவாயாக!
மழை வேண்டி துஆ  
 اللهم اسقنا غيثاً مغيثاً مريئاً مَريعاً نافعاً غير ضار ، غير آجل
யா அல்லாஹ்! உதவியாக இருக்கக்கூடிய செழிப்படையச் செய்யக்கூடிய, பச்சை பசுமையை ஏற்படுத்தக்கூடிய இடறு செய்யாத பலன் தரக்கூடிய மழையாக தாமதமின்றி துரிதமாக எங்களுக்கு மழை பெய்யச் செய்வாயாக!
 மழை பெய்கின்ற போது 
 اللهم صبيا نافعا 
யன் தரக்க்கூடிய மழையாக யா அல்லாஹ் (நீ ஆக்கி வைப்பாயாக!)
இடி இடிக்கின்றபோது 
 سُبحانَ الذي يُسبّحُ الرعدُ بحمدهِ والملائكةُ من خِيفتهِ
அவன் தூயவன் எத்தகையவென்றால் அவனின் புகழைக்கொண்டு இடி துதிக்கிறது. மற்றும் வானவர்கள் அவனின் பயத்தால் துதிக்கின்றனர். நூல்: முஅத்தா 2/992
காற்று வீசுகின்றபோது
اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ خَيْرَهَا ، وَأَعُوذُ بِكَ مِنْ شَرِّهَا
யா அல்லாஹ்! நிச்சயமாக அ(க் காற்றான)தன் நன்மையை உன்னிடம் நான் கேட்கிறேன்; அதன் தீமையிலிருந்தும் உன்னைக்கொண்டு நான் காவல் தேடுகிறேன். நூல்கள்: அபூதாவூத் 4/326 இப்னுமாஜா 2/1228
மேலும் பல தகவல்கள்:-
Naseer Bisbaahi, [௧௬.௧௧.௧௫ ௨௩:௦௩]
S S AHAMED BAQAVI: மழை நீர் மாபெரும் அருட்கொடை
http://ssahamedbaqavi.blogspot.in/2013/12/blog-post_1402.html?m=1

Naseer Bisbaahi, [௧௬.௧௧.௧௫ ௨௩:௦௬]
வெள்ளிமேடை منبر الجمعة: மரம் நடுவோம்; நன்மை மழை பெறுவோம்
http://vellimedai.blogspot.in/2015/10/blog-post_88.html?m=1

Naseer Bisbaahi, [௧௬.௧௧.௧௫ ௨௩:௦௭]
கம்பம்வெள்ளிமேடை: பூமியின் நீர் ஊற்றுகளில் ஓடுவது மழை நீரே!!!
http://cumbumvellimetai.blogspot.in/2011/08/blog-post_3091.html?m=1

Naseer Bisbaahi, [௧௬.௧௧.௧௫ ௨௩:௧௧]
வெள்ளிமேடை منبر الجمعة: வடிகால் வரம்
http://vellimedai.blogspot.in/2011/11/blog-post_10.html?m=1

Naseer Bisbaahi, [௧௬.௧௧.௧௫ ௨௩:௧௨]
Vellimedai: மழை
http://googleweblight.com/?lite_url=http://www.maslahi.in/2012/11/blog-post_4091.html?m%3D1&ei=PexNUpuY&lc=en-IN&s=1&m=760&ts=1447518780&sig=APONPFltNsaYoBFr6dJ5A0AuHjCqGXH4lQ

Naseer Bisbaahi, [௧௭.௧௧.௧௫ ௦௮:௩௬]
Vellimedai: மழை நீர் -அறிவியலும் அல்குர்ஆனும்
http://googleweblight.com/?lite_url=http://www.maslahi.in/2012/12/blog-post_7693.html?m%3D1&ei=yY0Vz_GF&lc=en-IN&s=1&m=760&ts=1447729514&sig=APONPFmbfpAgFWwMUub4pHbKB5NqH10--A

Naseer Bisbaahi, [௧௭.௧௧.௧௫ ௦௮:௪௫]
BILALIA ULAMA'S ASSOCIATION'S VELLIARANGAM வெள்ளி அரங்கம்: நீரின்று அமையாது உலகு
http://googleweblight.com/?lite_url=http://velliarangam.blogspot.com/2014/03/blog-post.html&ei=uL-RIgKy&lc=en-IN&s=1&m=760&ts=1447730073&sig=APONPFn_J65ZffsKnHt2yPNqyJZMdqkzFg

Naseer Bisbaahi, [௧௭.௧௧.௧௫ ௧௫:௪௯]
albahre.com - فضيلة الشيخ زيد بن مسفر البحري - تفسير البسملة ( 20 ) : تفسير [ الرحمن الرحيم ] ( 7 ) / من معاني الرحمة : [ المطر ( 1) ]
http://googleweblight.com/?lite_url=http://www.albahre.com/publish/article_5494.php&ei=-rtXpmBF&lc=en-IN&s=1&m=760&ts=1447755425&sig=APONPFnylZrSEGTzjKPKRRDxz9w8V0L7jw

Naseer Bisbaahi, [௧௭.௧௧.௧௫ ௧௫:௫௦]
المطر: أحكام وعبر
https://googleweblight.com/?lite_url=https://saaid.net/mktarat/sh/4.htm&ei=-rtXpmBF&lc=en-IN&s=1&m=760&ts=1447755425&sig=APONPFmMrHfApoyqchrTdP6tQMxnC06HdA

Naseer Bisbaahi, [௧௮.௧௧.௧௫ ௦௮:௫௪]
மழை பற்றித் தெரிந்து கொள்வோம்! தொடர்-01
http://googleweblight.com/?lite_url=http://ntjweb.com/new/index.php/en/2015-03-28-18-51-43/articlesmn/otherarticlesmn/263-aakkangal-32&ei=taMk9kR3&lc=en-IN&s=1&m=760&ts=1447785292&sig=APONPFlVpJpYRTffg2omLTDJoWQc6LsPzQ

Naseer Bisbaahi, [௧௮.௧௧.௧௫ ௦௮:௫௭]
மழைநீர் சேமிப்பு {Save Water} | Kulasai - குலசை
https://googleweblight.com/?lite_url=https://kulasaisulthan.wordpress.com/2013/09/21/%25E0%25AE%25AE%25E0%25AE%25B4%25E0%25AF%2588%25E0%25AE%25A8%25E0%25AF%2580%25E0%25AE%25B0%25E0%25AF%258D-%25E0%25AE%259A%25E0%25AF%2587%25E0%25AE%25AE%25E0%25AE%25BF%25E0%25AE%25AA%25E0%25AF%258D%25E0%25AE%25AA%25E0%25AF%2581-save-water/&ei=0WDMJkWE&lc=en-IN&s=1&m=760&ts=1447786217&sig=APONPFkCa_iaPjDLfC0PgL73JwNmZdcF8g

Naseer Bisbaahi, [௧௮.௧௧.௧௫ ௦௯:௦௨]
என் கண்ணில்.!!: மழை பற்றி அல்குர்ஆனும் விஞ்ஞானமும்
http://googleweblight.com/?lite_url=http://aliaalifali.blogspot.com/2014/11/blog-post_9.html?m%3D1&ei=hqoM_PYW&lc=en-IN&s=1&m=760&ts=1447785696&sig=APONPFk47nCr-D_D3P4BA4cHAtYzKxJ4Lg

Naseer Bisbaahi, [௧௮.௧௧.௧௫ ௧௦:௧௫]
அஷ்ரப்: மழை - அல்லாஹ்வின் அருள்கொடை மழையின் இரகசியம் மற்றும் மழை எவ்வாறு உருவாகின்றது ? என்பது பற்றி அல்லாஹ் குர்ஆனிலே தெளிவாக சொல்லியுள்ளதை நாம் அறிந்திருகிறோமா ?..
http://googleweblight.com/?lite_url=http://ashrafpallapatti.blogspot.com/2013/11/blog-post_9077.html&ei=qYEddwLZ&lc=en-IN&s=1&m=760&ts=1447821823&sig=ALL1Aj4kaEZlEYfpYDZRw6KmcNMO8epURg

Naseer Bisbaahi, [௧௮.௧௧.௧௫ ௧௫:௧௨]
மிஹ்ராப் மலர்கள் أزهارالمحراب: மழை வேண்டும் ரஹ்மானே!
http://dglyousufigal.blogspot.in/2014/04/blog-post_1326.html?m=1

Naseer Bisbaahi, [௧௮.௧௧.௧௫ ௧௫:௫௩]
مصابيح المحراب : மழை செய்த பிழையா?
http://googleweblight.com/?lite_url=http://vellimedaiplus.blogspot.in/2015/11/blog-post.html%3Fm%3D1&lc=en-IN&s=1&m=760&ts=1447842026&sig=ALL1Aj4araLx8vX4F-wB0b-FhxcjGigs1g

குறிப்புகளை வழங்கியவர்கள்:–
மௌலவி நஸீர் மிஸ்பாஹி 
மௌலவி ஷாகுல் ஹமீது 
மௌலவி மஹ்மூதுல் ஹஸன் தாவூதி 

தொகுத்து வழங்கியவர்:—
மௌலவி கம்பம் 
சுல்தான் ஸலாஹி.









 








0 comments:

Post a Comment