பிள்ளைகள் எதற்கு ?
·நாம் பிள்ளைகள் பெற்றுக்கொள்கிறோம்
·என்ன நிய்யத்தில் பெற்றெடுக்கிறோம். நம்மிடம் நிய்யத் இருக்கிறதா?
·எதற்கும் ஒரு நிய்யத் வேண்டுமல்லவா?
·நிய்யத்தை பொறுத்துத்தானே வாழ்க்கை மதிப்புப்பெறும்
பிள்ளைகள் எதற்கு ?
அந்தஸ்திற்கான அடையாளமா ?
நமக்கு உதவுவார்கள் என்பதற்காகவா?
ஆம்! பிள்ளைகளால் மதிப்பும் மரியாதையும் உண்டுதான்.
الْمَالُ وَالْبَنُونَ زِينَةُ الْحَيَاةِ
الدُّنْيَا
அல்லாஹ் இந்த கருத்தை மறுக்கவில்லை
அதே போல பிள்ளைகளால் உதவிகள் கிடைக்கும்தான் –
கிடைக்கவேண்டும் என்று எதிர்பார்க்கவும்
வேண்டும்.
இபுறாகீம் நபியின் வாழ்வை மதிப்புடையதாக்கியதில் இஸ்மாயீல்அலை) அவர்களின் பங்கைமறுக்க முடியாதே!
தனது மகன் தனக்கு உதவவேண்டும் என்று இபுறாகீம் என்று எதிர்பார்த்தார்.
அறுத்துப்பலியிடுதல் கஃபாவை கட்டுதல் போன்ற மகத்தான காரியங்களுக்கு மகன் உதவியாக இருத்தார்.
ஆகவே! பிள்ளைகள் விசயத்தில் அவநம்பிக்கையோ விரக்தியோ அவர்களுடைய உதவி எல்லாம் தேவையில்லை என்ற ஆங்காரமோ கூடாது. பல சந்தர்ப்பங்களிலும் பிள்ளைகளை நம்பாமல் – அல்லது சட்டைசெய்யாமல் அவமதிப்பது தான் பிள்ளைகள் சீர்கெடுவதற்கு காரணமாகிறது .
யாகூப் (அலை) அவர்கள் யூசுப்
நபியின் விசயத்தில் அவர்களுடைய சகோதரர்கள் பொறுப்பற்று நடந்து கொள்வார்கள் என்று நினைத்தார்.
அப்படியே அவர்கள் நடந்து கொண்டார்கள். யூசுப் (அலை) சகோதரர்கள் போட்ட ஓநாய் நாடகம் யாகூப் அலை அவர்களின்
நாவிலிருந்தே வந்ததாகும்.
وَأَخَافُ أَنْ يَأْكُلَهُ الذِّئْبُ وَأَنْتُمْ
عَنْهُ غَافِلُونَ(يوسف-13)
பெண் பிள்ளைகளையும் நியாயமின்றி
சந்தேகக்கண் கொண்டு பார்ப்பதை தவிர்க்க வேண்டும். பெற்றோரின் சந்தேகம்
குழந்தைகளை மன ரீதியாக பாதிக்கிறது என்று மனோதத்துவ அறிஞர்கள் சொல்கிறார்கள். நாம் நல்ல நம்பிக்கையோடு
சரியாக பிள்ளைகளை வளர்த்தால் அவர்களது நமது பெயரை விளங்கச் செய்வார்கள். நமக்கு உதவியாக
இருப்பார்கள். இதில் சந்தேகம் இல்லை, ஆனால் குழந்தைகள்
பெற்றுக்கொள்வதற்கும் வளர்ப்பதற்கும் அல்லாஹ் ஒரு நோக்கத்தை கற்றுத்தருகிறான்.
وَالَّذِينَ يَقُولُونَ رَبَّنَا هَبْ لَنَا
مِنْ أَزْوَاجِنَا وَذُرِّيَّاتِنَا قُرَّةَ أَعْيُنٍ وَاجْعَلْنَا لِلْمُتَّقِينَ
إِمَامًا(القرآن)
திருமணம் செய்து கொள்வதினுடையவும்
குழந்தைகள் பெற்றுக் கொள்வதினுடையவும் நோக்கத்தை இந்த துஆ முழுமையாக பிரதிபலிக்கிறது.1.கண்குளிர்ச்சி· 2. இறையச்சமுடைய மனிதசமுதாயத்தின் வளர்ச்சி. நம்முடைய பிள்ளைகள்
நமக்கு கண் குளிர்ச்சியாக திருப்தியையும் மகிழ்ச்சியையும் தருபவர்களாக இருக்க வேண்டும்
சில பெற்றோர்கள் தங்களுடைய
பிள்ளைகள் உயர்ந்த படிப்பு படித்தவர்களாக–நாகரீக வாழ்க்கை வாழ்கிறவர்களாக – உயர்ந்த சம்பளம் வாங்குகிறவர்களாக
இருக்க வேண்டும் என்று இலட்சியம் வைக்கிறார்கள், அதற்காக உருகி ஓடாய் தேய்கிறார்கள். கல்லூரி வாசல்களுக்கும் கம்பனி கதவுகளுக்கும் தூதரங்களின் விசாக்களுக்கும்
அலை மோதி பெற்றுத்தருகிறார்கள். அந்தப் பிள்ளைகள் படித்த பட்டம் பெற்று நல்ல வேலையில்
சேர்ந்த்தும் பெற்றோரை உள்நாட்டில் விட்டு விட்டு வெளி நாட்டில் செட்டில்ட் ஆகிவிடுகிறார்கள்.
இந்தப் பெற்றோர்களுக்கு தங்களது பிள்ளைகளை பற்றிய நோக்கம் நிறைவேறி விட்டது ஆனால் கண் குளிர்ச்சி கிடைத்ததா? இதென்ன வாழ்க்கை இது?
மனிதர்களுக்கு அல்லாஹ் வாழ்க்கையின்
எதார்த்த்தை கற்றுத்தருகிறான். வாழ்க்கையில் முக்கியம் மகிழ்ச்சி – திருப்தி நிறைந்த
மகிழ்ச்சி – அது தான் கண்குளிர்ச்சி.
நமது பிள்ளைகள் டாக்டராக வேண்டும்
இஞ்சினியராக வேண்டும் என்ற இலட்சியத்தைவிட நமது பிள்ளைகளால் நமக்கு கண் குளிர்ச்சி கிடைக்க வேண்டும் என்று
பெற்றோர்கள் நினைக்க வேண்டும். அதற்காகவே பிள்ளைகள் என்ற சிந்தனை வலுப்பெற வேண்டும்.
இரண்டாவதாக நமது பிள்ளைகளால்
இறையச்சமுடைய சமுதாயத்தின் எண்ணிக்கை பெருக வேண்டும். (وَاجْعَلْنَا
لِلْمُتَّقِينَ إِمَامًا ) இந்த வசனத்திற்கு
மதிப்பிற்குரிய உஸ்தாது சித்தனையன் கோட்டை கமாலுத்தீன் ஹஜ்ரத் அவர்கள் அருமையாக விளக்கம்
சொல்வார்கள் இறைவா! என்னுடைய குடும்பத்தை
தக்வாவுடைய குடும்பமாக ஆக்கி அதன் பொறுப்பாளியாக என்னை ஆக்குவாயாக என்பது இதன் கருத்து
என ஹஜ்ரத் அவர்கள் விவரிக்கும் அழகு இன்னும் என் கண்களில் நிற்கிறது.
ஒரு வரலாற்றுத்தகவலை இங்கே
குறிப்பிடுவது பொருந்தும்.
மூஸா அலை அவர்களை
நதியிலிருந்து கண்டெடுத்து பிர்அவ்னது முன்னே கொண்டு சென்ற ஆஸியா அம்மையார் இப்படித்தான்
சொன்னார்கள்.
وَقَالَتْ امْرَأَةُ فِرْعَوْنَ قُرَّةُ
عَيْنٍ لِي وَلَكَ لَا تَقْتُلُوهُ عَسَى أَنْ يَنفَعَنَا أَوْ نَتَّخِذَهُ وَلَدًا
وَهُمْ لَا يَشْعُرُونَ(9) امرأته آسية بنت مزاحم تخاصم عنه وتذب دونه
وتحببه إلى فرعون فقالت: "قرة عين لي ولك" فقال فرعون أما لك فنعم وأما لي فلا وقوله: "عسى أن ينفعنا" وقد حصل لها ذلك وهداها الله به وأسكنها
الجنه بسببه.
ஆஸியா அம்மையாரின் பேச்சுக்கு
பிர்அவ்ன் பதில் பேசாமல் இருந்திருந்தால் மூஸா (அலை) மூலமாக அவனும் கூட நேர்வழு பெற்றிருக்ககூடும்
அறிஞர்கள் கூறுகிறார்கள்.
எனவே குழந்தை வேண்டுவோர் , எனக்கு குழந்தை வேண்டும், அந்தக் குழந்தையால்
நான் மகிழ்ச்சியடைய வேண்டும். அந்தக் குழந்தையால் தகவாவுடைய சமுதாயம் செழிப்படைய வேண்டும்
என்று நிய்யத் வைக்க வேண்டும். இது வரை குழந்தை பெற்றுக் கொள்ளாதவர்கள் இந்த நிய்யத்தை நினைவில்
நிறுத்திக் கொள்ள வேண்டும். குழந்தை பெற்றவர்கள் நிய்யத்தை சரி செய்து கொள்ள வேண்டும். அல்லாஹ் நமது குடும்பத்தை
மகிழ்ச்சியான குடும்பமாக்கி தக்வாவுடைய சமுதாயத்திற்கு முன்னுதாரமான குடும்பமாக ஆக்கியருள்வானாக! இந்த இலக்கு நமக்கு
இருக்குமெனில் எண்ணிப்பாருங்கள்! நாம் பிள்ளைகளை வளர்க்கிற விதம் எப்படி இருக்கும்.
سهل بن عبد الله الطشتري சொல்கிறார் நான் சிறு
பிள்ளையாக இருக்கிற போது என் தாய் (الله حاضري الله ناضري الله شاهدي الله معي ) என்று சொல்லிக் கொடுத்து மனப்பாடம் செய்து வைத்தார். நான் பெரியவனான
போது இதன் அர்த்த்தை என்னிடம் கேட்ட பிறகு ஒரு நாள் இப்படிச் சொன்னார். (كان
الله معه وناظرا إليه وشاهده أ يعصيه)
என வாழ்வில் மறக்க முடியாத அறிவுரையாக அது அமைந்தது என்றார். தன்னுடைய குடும்பத்தை
சிறந்த குடும்பமாக – முன்னுதாரனமான குடும்பமாக
உருவாக்க ஒருவர் தீர்மாணித்து விட்டால் அவர் இப்படித்தானே செயல்படுவார்.
ஒரு முறை ஒரு பெண்மணி ரேடியோவில்
“வீட்டில் இருக்கிறவரை
எங்கள் பிள்ளைகள் நல்லவர்களாக இருக்கிறார்கள், வெளியே செல்லும் போது தான் தவறு செய்கிறார்கள். நாங்கள் அவர்கள்
பின்னாலேயே சென்று கொண்டிருக்க முடியுமா? என்று கேட்டார்.
நீங்களும் நானும் காலம் காலமாக
கேள்விப்ப்பட்ட ஒரு செய்தியை சொல்கிறேன். முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்) அவர்கள்
திருடர்களிடம் தன்னுடைய சட்டைப்பையில் 40 தீனார்கள் இருப்பதாக சொன்னார். இவ்வாறு உண்மை சொல்ல உன்னால்
எப்படி முடிந்தது என்று கேட்ட போது என் அம்மா சொன்ன அறிவுரை அது என்று சொன்னார். அம்மாவின் அறிவுரை
வீட்டு வாசலுக்கு அப்பாலும் ஒரு மகனுக்கு வழிகாட்டக் காரணம், அம்மாவின் கண்டிப்பு
அல்ல. அம்மாவின் அக்கறையாகும். தன் பிள்ளை நல்லபிள்ளையாக வளரவேண்டும் என்பதில் அம்மாவின் தூய
எண்ணமும் ஈடுபாடும் அவரது பிள்ளையிடம் அதற்குரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதே
உண்மை. நாம் அப்படி உருவாக்க
எண்ணுகிறோமா என்பது தான் இப்போதைய பிரச்சினை.
பிள்ளைகள் மீது அதிக அன்பு
வைத்திருக்கிறோம் சந்தேகமில்லை, வேண்டியதை வாங்கிக் கொடுக்கிறோம் சந்தேகமில்லை. அவர்களுக்கு விலை
உயர்ந்த பொருட்களை வாங்கித்தருவதை நமது சமூக அந்தஸ்தாக கருதுகிறோம். சந்தேககமில்லை. அடிப்படையில் நம்முடைய
பிள்ளைகள் நல்ல பிள்ளைகளாக இறையச்சமுடைய சம்தாயத்தின் பிரஞைகளாக வளரவேண்டும் என்ற அக்கறை
இருக்கிறதா என்ற விசயத்தில் நம்மிடம் தடுமாற்றம் இருக்கிறது தெளிவும் உறுதியும் இல்லை. அதனால் நம்முடையை
திட்டமிடுதல்கள் நம்முடைய பிள்ளைகளை எப்படி உருவாக்கி வைத்திருக்கிறது.
·
பெற்றோரின் செல்லத்தால்
எவரையும் மதிக்காத – திமிர் பிடித்த பிள்ளைகள்!
·
சதா இண்டெர்னெட்டிலும் பேஸ்புக்கிலும் உலாவுகிற இளசுகள்,
·
மார்க்கம் என்றால் ஒரு மார்க்கமாக பார்க்கிற பட்ட்தாரிகள்
நேற்றைக்கு முன் தினம் பத்ரிகைகளில்
ஒரு செய்தி. ஒரு பெண் தன்னுடைய
பேஸ்புக்கில் “இப்போது நான் தனியாக
வீட்டில் இருக்கிறேன்” என்று ஸ்டேட்டஸ் வெளியிட்டிருக்கிறாள்.
சற்று நேரத்தில் வீட்டுக்கு வந்த அவளுடை நண்பன் அவளை கற்பழித்து
விட்டு ஓடிவிட்டான்.
அல்லாஹ் நம்முடைய இல்லங்களை
காப்பாற்றுவானாக! நம்முடையை வீடு இப்படி இல்லை என்றால் அல்ஹம்துலில்லாஹ். ஒரு வேளை
இது போலவோ அல்லது இதற்கு கூடுதல் குறைவாகவோ இருக்கும் என்றால் அல்லாஹ்விடம் அதிகமதிகம்
ரப்பனா ஹப்லனா துஆவை ஓதிக்கொண்டு சீர்திருத்த முயற்சிகளை நாம் உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.
நான் மீண்டும் தெரியப்படுத்திக்
கொள்கிறேன், நல்ல குழந்தைகளைப்
பற்றிய சிந்தனை சாதாரணமாக எடுத்துக் கொள்ளத் தக்கதல்ல. திருமணமாகிறபோது பலரும் அசட்டையாக இருக்கிறார்கள். முதலிரவில் மனைவியை தொடுகிற முதல் தருணத்திலிருந்து குழந்தையைப் பற்றியசிந்தனை அவசியம். மனைவியை தொடும் முதல்
சந்தர்ப்பத்தில் சாத்தானிய தீண்டுதல் இல்லாத சந்ததிகளைப் பற்றிய நினைப்பை நபி (ஸல்)
அவர்கள் தம்பதிகளுக்கு ஊட்டினார்கள்.
ابن عباس - رضي الله عنه - قال : قال رسول
الله صلى الله عليه وسلم : لو أن أحدكم إذا أراد أن يأتي أهله قال : بسم الله ، اللهم
جنبنا الشيطان ، وجنب الشيطان ما رزقتنا ، فإنه إن قضي بينهما ولد من ذلك لم يضره الشيطان
أبدا ( متفق عليه)
குழந்தை வேண்டும் என்ற சிந்தனை
பொதுவாக இருப்பது கூடாது அது எப்படி இருக்க வேண்டும் என நபிமார்களின்பிரார்த்தனைய்லிருக்கிற
எச்சரிக்கையை நாம் கவனிக்க வேண்டும். (رَبِّ هَبْ لِي مِنَ الصَّالِحِينَ وَاجْعَلْهُ رَبِّ رَضِيًّا ) நம் குழந்தை தீய வழியில் சென்று
விடக்கூடாது என்பதில் முழு அக்கறை பெற்றோருக்கு வேண்டும்.
குழந்தைக்கு பெயர் வைத்த இம்ரானின்
மனைவி அடுத்ததாக செய்த பிரார்த்தனை
وَإِنِّي أُعِيذُهَا بِكَ وَذُرِّيَّتَهَا
مِنْ الشَّيْطَانِ الرَّجِيمِ(القرآن)
عن أبي هريرة قال: قال رسول الله صلى
"ما من مولود يولد إلا مسه الشيطان حين يولد فيستهل صارخا من مسه إياه إلا مريم
وابنها"
عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ
اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ صِيَاحُ الْمَوْلُودِ حِينَ يَقَعُ نَزْغَةٌ
مِنْ الشَّيْطَانِ – مسلم
நம்முடைய நிய்யத் சரியாக இருக்கும்
என்றால் அல்லாஹ் அதற்கான வழியை இலேசாக்குவான்.
நம்முடைய பிள்ளைகளை நல்லவர்களாக
வளர்க்க மார்க்கம் நமக்கு பல ஆலோசனைகளை வழங்கியிருக்கிறது
மகிழ்ச்சியை தருகிற நல்ல பிள்ளைகள்
என்ற நிய்யத்திற்கு அடுத்தபடியாக
கொளைகை அகீதா - வழிபாடுகள்
தீன் - பண்பாடு அக்லாக் - இந்த மூன்று விச்யத்திலும் பெற்றோர்களின் பங்களிப்பு இருக்க
வேண்டும்.
அல்லாஹ் ரஸுல் மறுமை போன்ற
மார்க்கத்தின் அடிப்படையான போதைகளை பெற்றோர் பிள்ளைகளுக்கு நினைவூட்டிக் கொண்டே இருக்க
வேண்டும் குறிப்பாக இஸ்லாத்தின் வழி காட்டுதல்களுக்கு மாற்றமான வற்றை கண்டித்து திருத்த
வேண்டும்.
நபிமார்கள் தங்களது குடும்பத்தினருக்கு
சொன்ன அறிவுரைகள் பலவற்றை குர் ஆன் எடுத்துக்காட்டுகிறது,
وَوَصَّى بِهَا إِبْرَاهِيمُ بَنِيهِ وَيَعْقُوبُ
يَابَنِيَّ إِنَّ اللَّهَ اصْطَفَى لَكُمْ الدِّينَ فَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ
مُسْلِمُونَ(القرآن)
أَمْ كُنتُمْ شُهَدَاءَ إِذْ حَضَرَ يَعْقُوبَ
الْمَوْتُ إِذْ قَالَ لِبَنِيهِ مَا تَعْبُدُونَ مِنْ بَعْدِي قَالُوا نَعْبُدُ إِلَهَكَ
وَإِلَهَ آبَائِكَ إِبْرَاهِيمَ وَإِسْمَاعِيلَ وَإِسْحَاقَ إِلَهًا وَاحِدًا وَنَحْنُ
لَهُ مُسْلِمُونَ(القرآن)
ஒரு தந்தை தன் மகனுக்கு செய்த
உபதேசங்களையே பிரதான மாக கொண்டு திருக்குர் ஆனில் லுக்மான் என்ற அத்தியாயம் அமைந்திருக்கிறது.
وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ
يَعِظُهُ يَابُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ(13)وَوَصَّيْنَا
الْإِنسَانَ بِوَالِدَيْهِ حَمَلَتْهُ أُمُّهُ وَهْنًا عَلَى وَهْنٍ وَفِصَالُهُ فِي
عَامَيْنِ أَنْ اشْكُرْ لِي وَلِوَالِدَيْكَ إِلَيَّ الْمَصِيرُ(14)وَإِنْ جَاهَدَاكَ
عَلى أَنْ تُشْرِكَ بِي مَا لَيْسَ لَكَ بِهِ عِلْمٌ فَلَا تُطِعْهُمَا وَصَاحِبْهُمَا
فِي الدُّنْيَا مَعْرُوفًا وَاتَّبِعْ سَبِيلَ مَنْ أَنَابَ إِلَيَّ ثُمَّ إِلَيَّ
مَرْجِعُكُمْ فَأُنَبِّئُكُمْ بِمَا كُنتُمْ تَعْمَلُونَ(15)يَابُنَيَّ إِنَّهَا إِنْ
تَكُنْ مِثْقَالَ حَبَّةٍ مِنْ خَرْدَلٍ فَتَكُنْ فِي صَخْرَةٍ أَوْ فِي السَّمَاوَاتِ
أَوْ فِي الْأَرْضِ يَأْتِ بِهَا اللَّهُ إِنَّ اللَّهَ لَطِيفٌ خَبِيرٌ(16)يَابُنَيَّ
أَقِمْ الصَّلَاةَ وَأْمُرْ بِالْمَعْرُوفِ وَانْهَ عَنْ الْمُنكَرِ وَاصْبِرْ عَلَى
مَا أَصَابَكَ إِنَّ ذَلِكَ مِنْ عَزْمِ الْأُمُورِ(17)وَلَا تُصَعِّرْ خَدَّكَ لِلنَّاسِ
وَلَا تَمْشِ فِي الْأَرْضِ مَرَحًا إِنَّ اللَّهَ لَا يُحِبُّ كُلَّ مُخْتَالٍ فَخُورٍ(18)وَاقْصِدْ
فِي مَشْيِكَ وَاغْضُضْ مِنْ صَوْتِكَ إِنَّ أَنكَرَ الْأَصْوَاتِ لَصَوْتُ الْحَمِيرِ(سورة
لقمان: 13-19) )
நபிகள் நாயகம் (ஸல்) சொன்னார்கள்;
إذا أفصح اولادكم فعلموهم لا إله إلاالله பேச முறபடும் போது லாயிலாக இல்ல்லாஹு சொல்லிக் கொடுங்கள். நேற்று ஒரு அம்மா தன் குழந்தையின் மழலை மொழியை பிறரிடம் அறிமுகப்படுத்தி பெருமைப்பட்டுக் கொண்டிருந்தாள்.
எங்கே பாடு :
பை பை
எங்கே ஓது
ரப்பனா ஆதினா
இந்த இரண்டுக்கும் சம்மான
இடத்தை நாம் தரும் போது குழந்தை எப்படி வளரும். இதில் நாம் கவனம் செலுத்த வேண்டும். நமது அக்கறை எப்படியோ
அப்படித்தான் எதுவும் அமையும். பிள்ளை வளர்ப்பும் அப்படித்தான
சிறுவர்களானதும் மார்க்க கடைமை
அறீமுகப்படுத்துங்கள்
وإذا صغروا فمروهم بالصلوة
தொடர்ந்து நற்பண்புகளை சொல்லிக்
கொடுங்கள்
நம்மில் எத்தனை பேர் குழந்தைகளுக்கு
அமைதியாக உயர் பண்பாடுகளை போதித்திருக்கிறோம்.
உண்மை பேசுவதை - நாணயாமக்
நடப்பபதை - நல்லவர்களாக இருக்க வேண்டியதன் அவசியத்தை – கற்பொழுக்கம் பேணுவதை
-
أَنَسَ بْنَ مَالِكٍ يُحَدِّثُ عَنْ رَسُولِ
اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ أَكْرِمُوا أَوْلَادَكُمْ وَأَحْسِنُوا
أَدَبَهُمْ
عَنْ جَابِرِ بْنِ سَمُرَةَ قَالَ قَالَ
رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَأَنْ يُؤَدِّبَ الرَّجُلُ وَلَدَهُ
خَيْرٌ مِنْ أَنْ يَتَصَدَّقَ بِصَاعٍ قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ غَرِيبٌ
عن علي عن رسول الله صلى الله عليه وسلم أدبوا أولادكم على ثلاث خصال : على حب نبيكم ، و حب أهل بيته ، و على
قراءة القرآن ، فإن حملة القرآن في ظل الله يوم لا ظل إلا ظله ، مع أنبيائه و أصفيائه
" . رواه الديلمي ( 1/1/24)
"
عَنْ مُعَاذٍ قَالَ أَوْصَانِي رَسُولُ
اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِعَشْرِ كَلِمَاتٍ قَال لَا تُشْرِكْ بِاللَّهِ شَيْئًا وَإِنْ قُتِلْتَ وَحُرِّقْتَ , وَلَا
تَعُقَّنَّ وَالِدَيْكَ وَإِنْ أَمَرَاكَ أَنْ تَخْرُجَ مِنْ أَهْلِكَ وَمَالِكَ ,
وَلَا تَتْرُكَنَّ صَلَاةً مَكْتُوبَةً مُتَعَمِّدًا فَإِنَّ مَنْ تَرَكَ صَلَاةً مَكْتُوبَةً
مُتَعَمِّدًا فَقَدْ بَرِئَتْ مِنْهُ ذِمَّةُ اللَّهِ , وَلَا تَشْرَبَنَّ خَمْرًا
فَإِنَّهُ رَأْسُ كُلِّ فَاحِشَةٍ , وَإِيَّاكَ وَالْمَعْصِيَةَ فَإِنَّ بِالْمَعْصِيَةِ
حَلَّ سَخَطُ اللَّهِ عَزَّ وَجَلَّ , وَإِيَّاكَ وَالْفِرَارَ مِنْ الزَّحْفِ وَإِنْ
هَلَكَ النَّاسُ وَإِذَا أَصَابَ النَّاسَ مُوتَانٌ وَأَنْتَ فِيهِمْ فَاثْبُتْ ,
وَأَنْفِقْ عَلَى عِيَالِكَ مِنْ طَوْلِكَ وَلَا تَرْفَعْ عَنْهُمْ عَصَاكَ أَدَبًا
وَأَخِفْهُمْ فِي اللَّهِ – احمد . َ
நிறைவாக ஒன்றை சொல்லி முடிக்கிறேன், இமாம் ஷாபி எப்படி
வர வேண்டும் என்று அவரது தாயார் விரும்பினார்களோ அப்படி வந்தார். அன்னாரை இமாம் மாலிக்கிடம்
சிறுவயதிலேயே தாயார் அனுப்பி வைத்தார். தன் மகன் மக்காவின்
இமாமக வேண்டும் என்று தன்னுடைய தாய் துஆ செய்தாக மக்கள்
இதயங்களை கொள்ளை கொண்ட மக்காவின் இமாம் சுதைசி ஒரு பேட்டியில் சொல்லியிருக்கிறார். நமது பிள்ளைகள் விசயத்தில்
நமக்கு நல்ல நிய்யத்தும் அந்த நிய்யத்தை மெய்யாக்கும் நல்ல முயற்சிகளும்
நமக்கு வேண்டும்.
இயற்கை மார்க்கமான நமது இஸ்லாமிய
மார்க்கம் கண்ணியம், கட்டுப்பாடு மற்றும்
தனித மனித, சமூக ஒழுக்கங்களை
வலியுறுத்தக்கூடிய மார்க்கமாகும். கண்ணியமான வாழ்க்கைக்கும், ஒழுக்கமான செயல்பாடுகளுக்கும் இஸ்லாம் மிகுந்த முக்கியத்துவம்
தருகின்றது. ஏனெனில், ஒழுக்கமே மரியாதையின் மூலதனம். ஆதலால் கண்ணியமான வாழ்க்கை ஒரு
மனிதன் வாழ நாடி விட்டால் எல்லா வகையான பாவங்களை விட்டும், ஒழுக்கக் கேடுகளை
விட்டும் அவன் விலகி வாழ வேண்டும்.
ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும்.
மனிதன் கண்ணியமானவனாக வாழ வேண்டும் என்பதே படைத்த இறைவனின் விருப்பம். ஆதலால் தான்
மனிதனை கண்ணியமானவனாகவே அவன் படைத்துள்ளான். (قال الله تعالي: وَلَقَدْ كَرَّمْنَا بَنِي
آَدَمَ 17:70 ) மனிதன் தான் சூழ்நிலையின் காரணத்தினாலும், மனோ இச்சையின் காரணத்தினாலும் பாவத்திலும், தீமைகளிலும், ஒழுக்கக் கேடுகளிலும்
சிக்கிக் கொள்கிறான். எனவே, மார்க்க
ஒழுக்க நெறிகளில் நமது மழலையர்களை வளர்க்க அதிக கவனம் செலுத்த வேண்டும்.
நாம் வாழும் இவ்வுலகில்
ஒழுக்கக் கேடுகள் தலைவிரித்தாடுகின்றன.
‘நாகரிகம்’ என்ற பெயரில் உருவாகியுள்ள கலாச்சார சீர்கேடுகள் கண்ணியமான வாழ்க்கைக்கும், ஒழுக்கப் பண்பாடுகளுக்கும்
மிகுந்த சவாலையும், சோதனையையும் ஏற்படுத்தி
வருகின்றன.
வேதனைக்குரிய விஷயம், கண்ணியம் மற்றும்
ஒழுக்கத்திற்கு முன்னுதாரணமாக திகழ்ந்த முஸ்லிம் சமுதாயத்திற்குள்ளும் இத்தகைய கலாச்சார
சீர்கேடுகள் நுழைய ஆரம்பித்துள்ளன. இதன் விளைவு ஆங்காங்கே நமது முஸ்லிம் இளைஞர்களைப் பற்றியும், முஸ்லிம் இளம் பெண்களைப்
பற்றியும் கிடைத்து வரும் தகவல்கள் நமது ஈரலை கிழித்தெறிகின்றன.
பள்ளிக்கூடங்களுக்கும், கல்லூரிகளுக்கும்
ஆண்–பெண் பிள்ளைகளை அனுப்பக்கூடிய
சூழ்நிலையில், செல்போன், இன்டர்நெட் சாதனங்கள் தாராளமாக புழக்கத்திற்கு வந்துள்ள
நிலையில் ஆண் – பெண் பிள்ளைகளை கண்ணியமானவர்களாகவும், ஒழுக்கமானவர்களாகவும்
வளர்ப்பது அக்கறையுள்ள பெற்றொர்கள் ஒவ்வொருவருக்கும் சவாலான விஷயம்தான். கலாச்சார சீரழிவுகளில்
பிள்ளைகள் சிக்கிக் கொள்ளாமலிருக்க பெற்றோர்கள் பிள்ளைகளை அரண் போல் நின்று பாதுகாக்க
வேண்டும்.
1.
பிள்ளைகளின் தொழுகையில் அக்கறை செலுத்துதல்:
أَنَّ عَلِيَّ بْنَ أَبِي طَالِبٍ أَخْبَرَهُ
أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ طَرَقَهُ وَفَاطِمَةَ بِنْتَ
النَّبِيِّ عَلَيْهِ السَّلَام لَيْلَةً فَقَالَ أَلَا تُصَلِّيَانِ فَقُلْتُ يَا رَسُولَ
اللَّهِ أَنْفُسُنَا بِيَدِ اللَّهِ فَإِذَا شَاءَ أَنْ يَبْعَثَنَا بَعَثَنَا فَانْصَرَفَ
حِينَ قُلْنَا ذَلِكَ وَلَمْ يَرْجِعْ إِلَيَّ شَيْئًا ثُمَّ سَمِعْتُهُ وَهُوَ مُوَلٍّ
يَضْرِبُ فَخِذَهُ وَهُوَ يَقُولُ وَكَانَ الْإِنْسَانُ أَكْثَرَ شَيْءٍ جَدَلًا -
البخاري
2.
வீட்டிற்குள் இஸ்லாமிய நடைமுறைகளை பழக்கப்படுத்துதல்: – சலாம் – குர்ஆன் – திக்ர்
قَالَ كَانَ سَعْدٌ يُعَلِّمُ بَنِيهِ هَؤُلَاءِ
الْكَلِمَاتِ كَمَا يُعَلِّمُ الْمُعَلِّمُ الْغِلْمَانَ الْكِتَابَةَ وَيَقُولُ إِنَّ
رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَتَعَوَّذُ مِنْهُنَّ دُبُرَ
الصَّلَاةِ اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ الْجُبْنِ وَأَعُوذُ بِكَ أَنْ أُرَدَّ
إِلَى أَرْذَلِ الْعُمُرِ وَأَعُوذُ بِكَ مِنْ فِتْنَةِ الدُّنْيَا وَأَعُوذُ بِكَ
مِنْ عَذَابِ الْقَبْرِ - البخاري 2822
3.
நல்லொழுக்கப் பயிற்சிகளை நயமாக கற்பித்தல்:
·أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ
وَسَلَّمَ قَالَ مَا نَحَلَ وَالِدٌ وَلَدًا مِنْ نَحْلٍ أَفْضَلَ مِنْ أَدَبٍ- ترمذي
·عَنْ جَابِرِ بْنِ سَمُرَةَ قَالَ قَالَ رَسُولُ
اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَأَنْ يُؤَدِّبَ الرَّجُلُ وَلَدَهُ خَيْرٌ
مِنْ أَنْ يَتَصَدَّقَ بِصَاعٍ – ترمذي
·قَالَ مُصْعَبَ بْنَ سَعْدٍ: صَلَّيْتُ إِلَى جَنْبِ أَبِي فَطَبَّقْتُ
بَيْنَ كَفَّيَّ ثُمَّ وَضَعْتُهُمَا بَيْنَ فَخِذَيَّ فَنَهَانِي أَبِي وَقَالَ كُنَّا
نَفْعَلُهُ فَنُهِينَا عَنْهُ وَأُمِرْنَا أَنْ نَضَعَ أَيْدِينَا عَلَى الرُّكَبِ
– البخاري 790
4.
பெரியவர்களை மதிக்கும் இயல்பு –கட்டுப்பாட்டுக்குப் பழக்குதல்
ஒரு காலம்இருந்த்து வீட்டிற்கு பெரியவர்கள் வந்தால் குழந்தைகளை அறிமுகப்படுத்தி ஒதச்சொல்லி துஆ சொல்லச்சொல்லி உற்சாகப்படுத்துவார்கள்.
“துஆ செய்யுங்கள்” என்று கேட்கச் சொல்வார்கள்.
இப்போது சினிமா பாட்டுபாடச்சொல்லி ஆடச்சொல்லி உற்சாகப்படுத்துகிறார்கள். இப்போது வீட்டுக்கு வரும் பெரியவர்களை
குழந்தைகள் கண்டுகொள்வதே இல்லை. அதைப் பற்றிய அக்கறையும் நமக்கு இல்லை.
5.
குறைந்தபட்சம் பிள்ளைகள் கெட்டுப்போகாமல் இருப்பதில் கவனம் செலுத்தவேண்டும். அதிக செல்லம். தப்பு செய்தால் கண்டுகொள்ளாமல் இருப்பது. ஆதரிப்பது அதிகபணம்கொடுப்பது –முஸ்லிம்கள்தான் இந்த தீமையை சாதாரணமாக செய்கிறார்கள். பிரமாணர்கள் கல்லூரிக்கு போகிறபையனுக்கு 10
ரூபாய், தயிர்சாதம் கொடுத்தனுப்புகிறார்கள், முஸ்லிம்கள் பள்ளிக்கூடம் செல்கிற பையனுக்கு பைக் நூற்றுக்கணக்கில் பணம்கொடுக்கிறார்கள். எதற்காக பணம்? என்ன ஆச்சுமிச்சம்? எந்தக்கேள்வியும் கேட்பதில்லை.
6.
கண்காணிக்கத் தவறுவது
எங்களது பள்ளிவாசலில் ட்யூசனில் படிக்கிற பையன் வீட்டில் பீஸ் பணம் கொடுத்துவிட்டால் அதற்கு பானிபூரி வாங்கித்தின்றுவிட்டு ஒன்றும் தெரியாதவனைப்போல இருந்துவிட்டான், பலமாதத்திற்கு பிறகுதான் உண்மை தெரிந்தது.
பலஇடங்களிலும் பெண்பிள்ளைகளின் தவறான நடவடிக்கைகள் ஆரம்பத்திலேயே கண்காணிக்கத் தவறுவதே காரணமாகிறது. வீட்டைவிட்டு ஒடிப்போன பெண்களில் பலரை பற்றிய தகவல்களை விசாரித்தபோது அது பற்றிய விபரம்அம்மாக்களுக்கு ஓரளவு தெரிந்தே இருக்கிறது. இதுபோலவே ஆண்பிள்ளைகளின் பழக்கவழக்கங்கள் குறித்து நுணுக்கமாக ஆராயவேண்டும்.
இதில் தாய்மார்களின் பொறுப்பு
மிகவும் அதிகம், சிகெரட் உள்ளிட்ட
தீய பழக்கங்கள் கொண்ட பையன்கள், தேவையற்ற செல்போன் பேச்சுக்களில் ஈடுபடும் பிள்ளைகள் பற்றி அம்மாக்களுக்கு
தெரியாமல் இருக்க முடியாது. பிள்ளைகளின் மாற்றம் அம்மாக்களின் கண்களை விட்டு மறைய வாய்ப்பில்லை.
அவர்கள் இதை அசட்டை செய்வதும், பிள்ளைகளை நினைத்து பயப்படுவதுமே பிரச்சினைகளை பெரிதாக்கி விடுகிறது.
உரிய நேரத்தில் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் எனில் பல பிரச்சினைகளை தவிர்க்க முடியும்.
பிள்ளை வளர்ப்பு குறித்து
தாய்மார்களிடம் மறுமையில் விசாரிக்கப்படும்.
·قال رَسُول اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
: كُلُّكُمْ رَاعٍ وَكُلُّكُمْ مَسْئُولٌ عَنْ رَعِيَّتِهِ الْإِمَامُ رَاعٍ وَمَسْئُولٌ
عَنْ رَعِيَّتِهِ وَالرَّجُلُ رَاعٍ فِي أَهْلِهِ وَهُوَ مَسْئُولٌ عَنْ رَعِيَّتِهِ
وَالْمَرْأَةُ رَاعِيَةٌ فِي بَيْتِ زَوْجِهَا وَمَسْئُولَةٌ عَنْ رَعِيَّتِهَا وَالْخَادِمُ
رَاعٍ فِي مَالِ سَيِّدِهِ وَمَسْئُولٌ عَنْ رَعِيَّتِهِ – الخاري 894
குழந்தைகள் பெற்றவர்களிடம் ஒப்படைக்கப்பட்ட 'அமானிதம் ஆகும். அமானிதமோசடி செய்து மறுமையிலே இறைவனின்முன்பு நஷ்டவாளிகளாக ஆகிவிடக்கூடாது. குழந்தைகளை முறையாக வளர்க்கவில்லையெனில் அல்லாஹ்விடம் பதில்கூற வேண்டும்.
7.
சகஜமான உறவு முறை அவசியம்.
பிள்ளைகளை வளர்ப்பது என்றால்
அவர்களை மிரட்டி வைப்பது என பல தந்தைகளும் நினைக்கிறார்கள். மிரட்டுவது வளர்ர்பு அல்ல; அவர்களை மதித்துப்
பழகுவதே வளர்ப்பு.
عَنْ أَنَس بْن مَالِكٍ يُحَدِّثُ عَنْ
رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ أَكْرِمُوا أَوْلَادَكُمْ
وَأَحْسِنُوا أَدَبَهُمْ – إبن ماجة – 3661
சில குடும்பங்களில் பிள்ளைகள் வளர்ந்த பிறகும் அவர்களை குழந்தைகளாகவே நினைக்கிறார்கள், பிள்ளைகளின் கருத்துக்களை கேட்பதில்லை. இளம்பிள்ளைகளுக்கும் பெற்றோர்களுக்கும் ஒரு அன்னியத்தன்மை நிலவுகிறது, மூன்றாவது ஆளைவைத்து சொந்தபிள்ளையின் கருத்தை அறிய முயற்சி செய்கிறார்கள், இந்த நிலை தவறு.
பெற்றோர்கள் பிள்ளைகளுடன் உட்கார்ந்து சாப்பிடுவது, அவர்களோடு கலந்து கல்கலப்பாக பேசுவது, உங்களது நன்மைக்காகத்தான் நாங்கள் உழைத்துக்கொண்டிருக்கிறோம். “உங்களது விருப்பத்தை தாராளமாக எங்களிடம் சொல்லுங்கள்”என்று ஊக்கப்படுத்துவது பிள்ளைகள் பெற்றோர்களைவிட்டு அன்னியமாகாமல் இருக்க உதவும்.
நமது பிள்ளைகள் சம்பாதிப்பவர்களாக அல்லது வசதி படைத்தவர்களாக இருக்க வேண்டும்
என்பதில் மட்டுமே நாம் அதிகம் கவலைப்படுகிறோம். ஒன்றை மறந்து விடக்கூடாது.
பிள்ளைகள் சாலிஹானவர்களாக இருந்தால் மட்டுமே நமக்கும் சமுதாயத்திற்கும் பயன்படுவார்கள்.
عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ
صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِذَا مَاتَ الْإِنْسَانُ انْقَطَعَ عَنْهُ
عَمَلُهُ إِلَّا مِنْ ثَلَاثَةٍ إِلَّا مِنْ صَدَقَةٍ جَارِيَةٍ أَوْ عِلْمٍ يُنْتَفَعُ
بِهِ أَوْ وَلَدٍ صَالِحٍ يَدْعُو لَهُمسلم -3084
அதற்கு முதலில் பெற்றோர்கள்
பிள்ளைகளுக்கு ஒழுக்கத்தை கற்றுத்தர வேண்டும்.
حَدَّثَنَا نَصْرُ بْنُ عَلِيٍّ الْجَهْضَمِيُّ
حَدَّثَنَا عَامِرُ بْنُ أَبِي عَامِرٍ الْخَزَّازُ حَدَّثَنَا أَيُّوبُ بْنُ مُوسَى
عَنْ أَبِيهِ عَنْ جَدِّه أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ
وَسَلَّمَ قَالَ "مَا نَحَلَ وَالِدٌ وَلَدًا مِنْ نَحْلٍ أَفْضَلَ مِنْ أَدَبٍ
حَسَنٍ"ِ رواه الترمذي 1875 واحمد 14856
அண்ணல் நபி (ஸல்) அவர்கள்
கூறினார்கள்:“ஒரு தந்தை பிள்ளைக்கு
அழகிய ஒழுக்கத்தை விட சிறந்த ஒரு வெகுமதியை தந்திட இயலாது.” (நூல்: திர்மிதி-1875, முஸ்னத் அஹ்மது-14856)
பிள்ளைகளுக்கு விளையாட்டுச் சாமான்கள், மோட்டார் வாகனங்கள், வீடு வாசல்கள் வாங்கித் தருவதில் அலாதியான கவனம் செலுத்தும்
பெற்றோர்கள் ஒழுக்கத்தையும், கண்ணியத்தையும் பிள்ளைகளுக்கு
கற்றுத் தருவதில் கவனம் செலுத்த வேண்டும். ஏனெனில், ஒழுக்கமே பெற்றோர் தரும் பெரிய சொத்து என்கிறார்கள் பெருமானார்
(ஸல்) அவர்கள்.
நல்ல குழந்தைகள் உருவாக
12 வழிமுறைகள்!
உறவினரது இல்லம்.., உறவினரோடு அவர் பேசிக்
கொண்டிருக்கும் பொழுது அங்குள்ள சாப்பாட்டு மேஜையில் இருக்கும் தட்டை எடுத்து குழந்தை
விளையாட ஆரம்பிக்கின்றது. அப்பொழுது தந்தைக்கும் குழந்தைக்கும் இடையே நடைபெறும் சிறு
போராட்டம்..,
ஹேய்.. அதைத் தொடாதே..! என்று கூறி விட்டு தந்தை
உறவினரோடு பேசிக் கொண்டிருப்பதில் மும்முரமாகி விடுகின்றார். பின்னர் சற்று நேரம் கழித்துப்
பார்க்கின்றார்.., குழந்தை மீண்டும்
அந்த தட்டுகளை கையில் எடுத்துக் கொள்கின்றது.., மறுபடியும்.., ஹேய் அதைத் தொடாதே.., எடுக்காதேன்னு சொல்றேன்ல.., மீண்டும் தந்தை உறவினரோடு பேச்சைத் தொடர்கின்றார்.., சற்று நேரம் கழித்து
திரும்பிப் பார்க்கின்றார்.., மீண்டும் அந்தக் குழந்தை அதையே தான் செய்து கொண்டிருக்கின்றது.
தந்தை அதனைப் பார்த்து எதுவுமே சொல்லாமல் மீண்டும் பேச்சில் மும்முரமாகி விடுகின்றார்.
இதுவே பல சந்தர்ப்பங்களில் நடைபெறக் கூடிய நிகழ்வுகள்..!
குழந்தைகளுக்கு உத்தரவிட முடியும், அவர்கள் அதனைக் கேட்காத
பொழுது, மீண்டும் அதே உத்தரவை
இட்டுக் கொண்டே இராமல், குழந்தையைக் கண்டு
கொள்ளாமல் இருந்து விட வேண்டும். இது மாதிரியான சூழ்நிலைகள் பெற்றோர்கள் என்ன செய்ய
வேண்டும்? சிலர் அதைத் தடுத்து
நிறுத்த வேண்டும், சிலர் அடிக்க வேண்டும், சிலர் அது குழந்தை
தானே என்று விட்டு விட வேண்டும், குழந்தையிடம் அதிகம் எதிர்பார்க்க முடியாது என்றும் கூறுவார்கள்.
உண்மையில் நல்லொழுக்கமுள்ள குழந்தைகளை உருவாக்குவதற்கு
பெற்றோர்கள் முயற்சி செய்ய வேண்டும், இதுவே சமூகத்தின் எதிர்பார்ப்புமாகும். பெற்றோர்களைப் பொறுத்தவரை
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நோக்கம் இருக்கும், குணாதிசயங்கள் இருக்கும். இருப்பினும், குழந்தைகளை இப்படித்
தான் நடத்த வேண்டும் என்ற பொதுவானதொரு வழிமுறை இருக்கின்றது. அதனைப் பின்பற்றினால்
ஒழுக்கமுள்ள குழந்தைகளை உருவாக்க முடியும். நாம் நினைத்தமாதியெல்லாம் குழந்தைகளை வளர்த்து
விட முடியாது. திட்டமிட்ட அடிப்படையில் அவர்களை வழிநடத்தும் பொழுது, நல்லபல விளைவுகள்
ஏற்படும்.
இளமையில் கல்வி இந்த வயதில்
அதற்கு என்ன தெரியும் என்று அங்கலாய்ப்பவர்களைக் காண முடியும், ஆனால் குழந்தைகளில்
இளமைப் பருவம் தான் அவைகள் கற்றுக் கொள்ளக் கூடிய நல்லதொரு பருவமாகும், அவர்களை நல்லதொரு
வழித்தடத்தின் கீழ் பயணிப்பது எப்படி என்பதை பெற்றோர்கள் கற்றுக் கொடுக்க வேண்டிய தருணம், குழந்தைகளின் ஆரம்ப
நாட்களாகும். ஒருமுறை அவர்களிடையே நல்லதொரு பண்பாட்டை பழக்க வழக்கங்களை ஏற்படுத்தி
விட்டால், அது அவர்களது வாழ்நாள்
முழுவதும் தொடரும், அதிலிருந்து அவர்கள்
மாறமாட்டார்கள்.
கோபமான நிலையில் குழந்தைகளுக்கு
உத்தரவிடாதீர்கள் நீங்கள் உங்களது குழந்தையிடனோ அல்லது சாதாரணமாக எதற்காகவோ நீங்கள்
கோபமான நிலையில் இருந்து கொண்டிருக்கின்றீர்கள். அப்பொழுது உங்களது குழந்தைகளைத் திருத்த
நினைக்காதீர்கள். உங்களது குழந்தைக்கு நல்லதைத் தான் நாடுகின்றீர்கள். ஆனால் அதுவல்ல
இப்போது பிரச்னை.., நீங்கள் எந்த நிலையில்
அதனைச் சொல்கின்றீர்கள் என்பது தான் பிரச்னை. எனவே, கோபம் இல்லாத நிலையில் அதனைத் தொடருங்கள்.
பெற்றோர்கள் இணைந்து முடிவெடுத்துச்
செயல்படுங்கள் குழந்தைகளை எவ்வாறு நெறிப்படுத்துவது என்பது குறித்த திட்டத்தை குடும்பத்தலைவியும், தலைவனும் இணைந்து
தீர்மானிக்க வேண்டும். அதனை இருவரும் இணைந்து நிறைவேற்றுவதற்கு திட்டமிடல் வேண்டும்.
ஒருவர் கறாராகவும், இன்னொருவர் இலகுவாகவும்
நடந்து கொண்டால், இருவருக்கு மத்தியில்
குழந்தைகள் விளையாட ஆரம்பித்து விடும். பெற்றோர்களில் கறாரானவர் மறுக்கின்ற பொழுது, அடுத்தவரிடம் சென்று
அனுமதி கேட்க ஆரம்பித்து விடுவார்கள். இருவரும் ஒரு விசயத்தில் ஒத்த கருத்தில் இருந்தால்
தான் குழந்தைகளை நெறிப்படுத்த முடியும். பெற்றோர்களில் ஒருவர் சம்மதித்து இன்னொருவர்
சம்மதிக்கா விட்டால், பெற்றோரில் ஒருவரின்
மீது குழந்தைகளுக்கு வெறுப்புணர்வு ஏற்படும். எனவே, இது விசயமாக நாங்கள் கலந்தோலசித்து முடிவு சொல்கின்றோம்
என்று குழந்தைக்குக் கூறுங்கள். பின்னர், குழந்தைகள் இல்லாத சூழ்நிலைகளில் அந்த விவகாரத்தை கலந்தாலோசித்து
முடிவெடுங்கள். குழந்தைகளை வைத்துக் கொண்டு கலந்தாலோசனையில் ஈடுபடாதீர்கள். எடுத்த
முடிவில் இருவரும் உறுதியாக இருங்கள்.
உறுதியாக இருத்தல் பெற்றோர்கள்
தங்களது கொள்கைகளில் உறுதியைக் கடைபிடிக்க வேண்டும். அடிக்கடி சட்ட திட்டங்களை மற்றும்
எதிர்பார்ப்புகளை மாற்றிக் கொள்வது குழந்தைகளை குழப்பத்தில் ஆழ்த்தி விடும். உதாரணமாக, சுவரில் எழுதிக் கொண்டிருக்கின்ற
குழந்தையை இன்றைக்கு தடுப்பது, நாளைக்கு தடுக்காது எழுதட்டும் என அனுமதிப்பது, இப்படிப்பட்ட சூழ்நிலைகளில்
இனிவரும் நாளில் நாம் சுவற்றில் எழுதினால் பெற்றோர்கள் கண்டிப்பார்களா, கோபப்படுவார்களா என்ற
புரிந்துணர்வின்மை குழந்தைகளிடத்தில் தோன்றி விடும். உங்களது மனநிலைக்குத் தக்கவாறு
உங்களது சட்ட திட்டங்களையும் மாற்றிக் கொள்வது நல்லதல்ல. இவ்வாறான நிலையில், எந்தக் காரியத்தையேனும்
குழந்தை செய்ய ஆரம்பிக்கும் பொழுது, நீங்கள் அதனை அனுமதிப்பீர்களா மாட்டீர்களா, அதனால் கோபமடைவீர்களா
என்று உங்களைப் பரிசோதனை செய்ய ஆரம்பித்து விடும். எனவே தான் கூறுகின்றோம்.., குழந்தைகளை ஒரு விசயத்தின்
மீது அதனைச் செய்யாதே என்று தடுத்தால், அந்தத் தடை எப்பொழுதும் நீடிக்க வேண்டும். அப்பொழுது தான் ஓ.., இதைச் செய்வது நல்லதல்ல
என்று அந்தக் குழந்தை உடனே கற்றுக் கொள்ளும். அப்படியென்றால் சமய சந்தர்ப்பங்களுக்குத்
தக்கவாறு நம்மை மாற்றிக் கொள்ளக் கூடாதா என்றால், மாற்றிக் கொள்ளலாம்.., நீங்கள் ஏன் முதலில்
அனுமதி மறுத்தீர்கள்.., பின்னர் இப்பொழுது
ஏன் நீங்கள் அனுமதிக்கின்றீர்கள் என்பது குறித்து அந்தக் குழந்தைக்கு விளக்கம் அளிக்க
வேண்டியது அவசியமாகும். இன்னும் அதனை அதன் ஆரம்ப கட்டத்திலேயே விளக்கி விடுவது புரிந்துணர்வுக்கு
நல்லதாகும். பெற்றோர்களிடம் உறுதி இல்லை என்றால், அதுவே குழந்தைகளின் கட்டுப்பாடின்மைக்கான ஆணி வேராகும்.
குழந்தைகளிடம் பொய் பேசாதீர்கள்
பிள்ளைகளிடம் தப்பிப்பதற்காக வாய்ப்பாக பொய்யைப் பேசாதீர்கள், அவர்களிடம் வழங்கக்
கூடிய வாக்குறுதிகளை நிறைவேற்றுங்கள். நீங்கள் அடிக்கடி பொய் பேசக் கூடிய பெற்றோராக
இருந்தால்.., அவர்கள் உங்களது வார்த்தைக்கு
மதிப்புக் கொடுக்க மாட்டார்கள், நீங்கள் உண்மையையே பேசினாலும் கூட அவர்கள் நம்ப மாட்டார்கள்.
உதாரணமாக, உயரமான அலமாரியில்
உள்ள பொருள் ஒன்றை உங்களது குழந்தை எடுத்துக் கொண்டிருக்கின்றது. அதனை முறையாக எடுக்க
அதனால் இயலாது.., எனும் பொழுது சற்று
பொறு.. இதோ என்னுடைய வேலைகளை முடித்து விட்டு வந்து எடுத்துத் தருகின்றேன் என்று நீங்கள்
கூறுகின்றீர்கள். அவ்வாறு கூறி விட்டால் நீங்கள் உங்களது வேலைகளை உடனே முடித்துக் கொண்டு
உங்களது குழந்தைக்கு உதவுங்கள். மறக்க வேண்டாம்..! நீங்கள் கூறியதை நிறைவேற்ற வேண்டும்.
அவ்வாறில்லை என்றால் அந்தக் குழந்தை மீண்டும் அலமாரியில் உள்ள பொருளை எடுக்க முனையும்.
அதனால் இயலாத நிலையில், பொருட்கள் தவறிக்
கீழே விழுந்த பின்பு அந்தக் குழந்தையை கோபித்துப் பயன் என்ன? ஒன்று, அதனை இப்பொழுது எடுக்க
இயலாது. மற்ற வேலைகளைப் பாருங்கள், பின்பு எடுத்துக் கொள்ளலாம் என்று நீங்கள் கூறி இருந்தால், அந்தக் குழந்தை தன்னுடைய
முயற்சியைக் கைவிட்டு விட்டு வேறு வேலையின் பக்கம் தனது கவனத்தைத் திருப்பி இருக்கும்.
ஆனால், சற்று பொறு.., என்று நீங்கள் கூறிய
பின்பு.. சற்றுக் காத்திருந்து விட்டு நீங்கள் வரததால் அந்தக் குழந்தை முயற்சி செய்து
பார்த்திருக்கின்றது. தவறு உங்கள் மீது.., குழந்தையின் மீதல்ல. நீங்கள் அடிக்கடி இப்படி நடந்து கொள்பவர்
என்றால் பின்பு நீங்கள் சீரியஸாக எதனைச் சொன்னாலும், அதனை ஒரு பொருட்டாகவே குழந்தை எடுத்துக் கொள்ளாது
என்பதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள். பின்பு ஒரு காரியத்தைச் செய்ய ஆரம்பிக்கும்
பொழுது உங்களது குணம் எவ்வாறு மாறும், கோபிப்பீர்களா, மாட்டீர்களா என்று உங்களையே பரிசோதிக்க ஆரம்பித்து விடும்.
அடம் பிடித்து அழுகின்றதா.., விட்டு விடுங்கள்
குழந்தை அடம் பிடித்து அழுகின்றதா.., அவை எதையோ உங்களிடம் எதிர்பார்க்கின்றன..! அவ்வாறு அழும் குழந்தையின்
அழுகையை நிறுத்துவதற்கு எதையும் கொடுத்து சமாதானப்படுத்தாதீர்கள். பின்னர் ஒவ்வொரு
முறையும் அது விரும்புவதைப் பெறுவதற்கு அழ ஆரம்பித்து விடும். அழகையின் மூலமாக எதனையும்
பெற முடியாது என்பதனை அது அறிந்து கொள்ள வேண்டும். எவ்வளவு தான் அழுதாலும்.. சரியே.., விட்டு விடுங்கள்.
அழத் தொடங்கி விட்டால் அனர்த்தம் தான் என்கிறீர்களா.., பொறுமை மிகவும் அவசியம்.
எப்பொழுது அந்தக் குழந்தை அழுகையினால் எதையும் சாதிக்க முடியாது என்பதைக் கற்றுக் கொண்டு
விட்டதோ, வாழ்வே சந்தோஷம் தான்.
சில நாள் பொறுமை.., வாழ்வே இனிமை. தேர்வு
உங்களது கையில்..!
தவறிழைத்தால் மன்னிப்பு கேட்க
வேண்டும் என்பதைக் கற்றுக் கொடுங்கள் தவறிழைக்கக் கூடியது மனிதனின் சுபாவம். தவறிழைப்பவர்கள்
மன்னிப்புக் கேட்க வேண்டும் என்பது இறைவனின் கட்டளையுமாகும், அது சக மனிதனுக்குச்
செய்யக் கூடிய தவறாக இருப்பினும் சரி.., அல்லது இறைவனுக்கு மாறு செய்யக் கூடிய பாவங்களாக இருந்தாலும்
சரியே..! மன்னிப்புக் கோர வேண்டும் என்பதை குழந்தைகள் கற்றுக் கொள்ளும் பொழுது, தவறிழைக்க நேரும்
பொழுது மன்னிப்புக் கோர வேண்டும் என்ற உணர்வு அவர்களிடம் மிகுந்து காணப்படும்.
மன்னித்து விடுங்கள் குழந்தை
தவறு செய்து விட்டது, அதனை உணர்ந்து தனது
தவறுக்காக வருத்தம் தெரிவிக்கின்றது, உடனே அதனை மன்னித்து மறந்து விடுங்கள், மன்னித்து விட்டேன்
என்பதை நேரடியாகவே குழந்தையிடம் சொல்லுங்கள், நீங்கள் செய்யும் தவறுகளை அல்லாஹ் மன்னிப்பதில்லையா.., அதனைப் போல தவறிழைத்த
குழந்தை மன்னிப்புக் கேட்பதே அது சரியான பாதையில் பயணிக்கின்றது என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.
அல்லாஹ் மன்னிப்போனாக இருக்கின்றான், மன்னிப்பை விரும்புகின்றான்.., எனவே நீங்களும் குழந்தை
செய்யும் தவறுகளுக்காக உடனே பிரம்பைத் தூக்காதீர்கள். அவர்கள் மன்னிப்புக் கோரினால்
மன்னித்து விடுங்கள், இன்னும் நான் உன்னை
மிகவும் நேசிக்கின்றேன் என்பதை அடிக்கடி அவர்களிடம் கூறி வாருங்கள், அது உங்களது உள்ளத்தில்
இருந்து வர வேண்டும். இதன் காரணமாக பெற்றோர் பிள்ளைகள் உறவு மேலும் வலுவடையும்.
உங்களது தவறுக்கும் மன்னிப்புக் கோருங்கள் நீங்கள்
தவறிழைத்து விட்டீர்கள், நான் பெற்றவன், பிள்ளைகளிடம் எப்படி
மன்னிப்புக் கேட்பது என்று இறுமாப்புக் கொள்ளாதீர்கள். தவறிழைக்கப்பட்டவர்கள் யாராக
இருந்தாலும் சரியே.., நம்முடைய குழந்தையாக
இருந்தாலும் சரியே.., மன்னிப்புக் கோருங்கள், அதுவே நீதிக்குச்
சாட்சியம் பகர்வதாகும். அவ்வாறு நீங்கள் மன்னிப்புக்கோரவில்லை என்றால், அதுவே அடக்குமுறையின்
ஆரம்பமாகும்.
இளமையிலேயே இஸ்லாத்தை அறிமுகப்படுத்துங்கள்
சிறுபிராயத்திலிருந்து அவர்களுக்கு அல்லாஹ், இறைநம்பிக்கை, நபிமார்கள், நபித்தோழர்கள், நபித்தோழியர்கள் மற்றும் மார்க்க அறிஞர்கள், மாபெரும் தலைவர்கள்
ஆகியோரது வாழ்க்கை வரலாற்றை சிறு சிறு சம்பவங்களாக அவர்களுக்குச் சொல்லி வாருங்கள்.
அது போன்றதொரு உன்னத வாழ்க்கைக்கு ஆசைப்படும்படி அறிவுறுத்துங்கள். இறைத்தூதர் (ஸல்)அவர்களது
வாழ்க்கையில் நடைபெற்ற சம்பவங்கள், அபூபக்கர் (ரலி), உமர் (ரலி), உதுமான் (ரலி), அலி (ரலி) மற்றும் நேர்வழி பெற்ற நபித்தோழர்கள் பற்றிய சம்பங்கள்
குழந்தைகளின் உள்ளத்தை பண்படுத்த வல்லது. அவர்கள் வழிதவறும் பொழுதெல்லாம் மேற்கண்ட
சம்பவங்கள் அவர்களை பண்படுத்தப் பயன்படும். இஸ்லாத்தில் உறுதியாக இருப்பதற்கு வழியமைக்கும்.
இன்றைக்கு நம் குழந்தைகள் சக்திமான், இராமாயணம், மகாபாரதம் போன்ற கதைகள் மற்றும் வரலாற்றுத் தொடர்களால் பாதிக்கப்படுகின்றன.
அவர்களைப் போல அமானுஷ்யமான வாழ்க்கையை, பழக்க வழக்கங்களை பின்பற்றி வாழ வேண்டும் என்று கனவு காண்கின்றன.
அதனால் தான் மாடியிலிருந்து குதித்து சக்திமான் போல சகாசம் செய்யப் பார்க்கின்றன. சக்திமான்
வந்து காப்பாற்றி விடுவார் என்ற நம்பிக்கை தான் அவர்களை மாடியிலிருந்து குதிக்க வைக்கின்றது.
இது போன்ற கதைகளை விட.., இஸ்லாமிய வரலாற்று
நாயகர்களின் உண்மை வாழ்வு படிப்பினை மிக்கதாகும். இன்னும் நீங்களும் கூட அவர்களின்
வரலாற்றிலிருந்து படிப்பினை பெற்றுக் கொள்ளலாம்.
நல்லொழுக்கங்களைக் கற்றுக்
கொடுங்கள் உங்களது குழந்தைகளுக்கு நல்லொழுக்க போதனைகள் அவசியம். ஒழுக்கம் சார்ந்த இஸ்லாமிய
நூல்கள் ஏராளமாக இருக்கின்றன. அவற்றினை அவர்களுக்கு பரிசளியுங்கள். இப்பொழுது பள்ளி
ஆண்டு விழாக்கள் என்று கூறிக் கொண்டு சினிமாப் பாடல்களுக்கு ஆடும் கலாச்சாரத்தைப் பள்ளிக்
கூடங்களில் கற்றுக் கொடுக்கின்றார்கள். சினிமாக்களில் கதாநாயகனும், கதாநாயகியும் கட்டிப்பிடித்து
ஆடிப்பாடும் அசிங்கமான அங்க அசைவுகளை குழந்தைகளுக்கு கற்றுக் கொடுத்து, இவ்வாறான விழாக்களில்
ஆட வைத்து பெற்றவர்களும்,
மற்றவர்களும் ரசிக்கின்றார்கள்.
இதனை முஸ்லிம் பெற்றோர்கள் ஊக்கப்படுத்தக் கூடாது. அவ்வாறான போட்டிகள் தவிர்த்து ஏனைய
கட்டுரைப் போட்டிகள், பேச்சுப் போட்டிகள்
போன்றவற்றில் கலந்து கொள்ள ஊக்கப்படுத்துங்கள்.
கீழ்ப்படிதல் பெற்றோர்களுக்குக்
கீழ்படிதல் என்பது இறைவன் குழந்தைகள் மீது கடமையாக்கியதொன்று. தாயும், தந்தையும் இணைந்து
இதற்கான பயிற்சியை வழங்க வேண்டும். ஆனால் குடும்பங்களில் நடப்பது வேறு..! தந்தையை கரடி
போல பிள்ளைகளிடம் அறிமுகப்படுத்துவது.., அதாவது.., அப்பா வரட்டும்.., உன்னை என்ன செய்கிறேன் பார்.. என்று பிள்ளைகளை மிரட்டுவது தாய்மார்களது
வாடிக்கை. இது தவறான வழிமுறை..! முதலாவது, எப்பொழுது குழந்தை கீழ்ப்படியாமையைக் காட்டுகின்றதோ அப்பொழுதே
கீழ்ப்படிவது எப்படி என்பதைக் கற்றுக் கொடுக்கப்பட வேண்டும். தாமதப்படுத்தக் கூடாது.
தாமதப்படுத்தும் பொழுது ஒன்று அந்த சம்பவத்தையே குழந்தை மறந்திருக்கும் நிலையில், அவர்களைத் தண்டிக்கும்
பொழுது தான் எதற்காக தண்டிக்கப்படுகின்றோம் என்பது அதற்கு விளங்காது. இரண்டாவது, அந்தத் தவறை நிவர்த்தி
செய்வதற்கான சந்தர்ப்பம் அதற்குக் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும், குழந்தையும் தவறை
உணர்ந்து திருந்தியிருக்கும், குழந்தையைத் திருத்துவதற்கு தந்தை தான் வர வேண்டும் என்று தாய்
காத்திருக்க வேண்டியதில்லை. இதன் மூலம் தாயோ அல்லது தந்தையோ குழந்தையின் தவறைத் திருத்த
முனையும் பொழுது, இருவரது சொல்லுக்கும்
அது கட்டுப்பட்டு நடக்கும் பழக்கம் அதனிடம் ஏற்படும். மூன்றாவதாக, பெற்றோர்களில் யாராவது
ஒருவர் தான் குழந்தையின் தவறைக் கண்டிக்கும் பொறுப்பு வழங்கப்பட்டிருப்பவர் என்ற நிலை
வளர்ந்தால், தவறைக் கண்டிக்கும்
பெற்றோரை குழந்தைகள் நேசிப்பதில்லை, மாறாக கண்டிக்கும் தாயையோ அல்லது தந்தையையோ அவர்கள் வில்லனாகப்
பார்க்க ஆரம்பித்து விடுவார்கள். இதுவும் கூட குழந்தைகளிடம் கீழ்படியாமை வளர்வதற்குக்
காரணமாகி விடும். பெற்றோர்களில் இருவரது சொல்லுக்கும் கட்டுப்பட்டு நடக்க வேண்டும்
என்ற நிலை அவர்களிடம் உருவாகாது. பெரும்பாலான குடும்பங்களில் இது போன்ற தவறுகள் தான்
நிகழ்கின்றன. இது தவிர்க்கப்பட வேண்டும்.
விழுதுகளை விருட்சமாக்குவோம்!
சிறந்த தலைமுறையை கொண்டிருக்கிற ஓர் சமூகமே உயர்ந்த சமூகமாக இவ்வுலகில் பரிணமிக்கமுடியும். இன்றைய நவீன உலகில் வாழும் மனித சமூகத்திற்கு முன்னால் இருக்கிற மிகப்பெரும்சவாலே இதுதான். குறிப்பாக இஸ்லாமிய சமூகம் நல்லதோர் தலைமுறையை உருவாக்கவேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
ஏனெனில், கலை, கலாச்சாரம், கல்வி, பண்பாடு, சூழல், ஒழுக்கம் என அனைத்தும் மாசுபட்டு இருக்கிற காலச்சூழ்நிலையில் நாம் வாழ்ந்து வருகிறோம். அநாகரீகம்-நாகரீகமாகவும், பாவம்-நன்மையாகவும், அலட்சியம்-ஆரோக்கியமாகவும், ஒழுக்கச்சீரழிவுகள்-உயர்பண்பாடாகவும், கலாச்சாரசிதறல்கள்-மதிப்பின் அடையாளமாகவும் கருதப்படுகிற ஓர் அபாயகரமான பாதையில் எம்சமூகத்தின் தலைமுறையினர் பயணிக்கத் தொடங்கி இருக்கின்றனர்.
இஸ்லாத்தின் போதனைகளை, வழிகாட்டும் நெறிமுறைகளை வணக்கவழிபாடுகளோடு நிறுத்திக்கொண்டதன்விளைவாக, நடைமுறை வாழ்க்கைக்கும், யதார்த்தமான உலகிற்குமான பண்பியல்களை அறியாத ஓர் மலட்டுச்சமூகத்தை சமீபகாலமாக இஸ்லாமிய உலகுகண்டு கொண்டிருக்கிறது.
எனவே, இனிவரும்காலங்களில் இதுபோன்ற மலட்டுச்சமூகம் உருவாகாமல் பாதுகாக்கவும், உருவாகியிருக்கிற மலட்டுச்சமூகத்தை செப்பனிடவும் தீவிரநடவடிக்கைகளில் இஸ்லாமிய சமூகம் தம்மை ஈடுபடுத்திக்கொள்ளவேண்டிய பொன்னான தருணம் இது.
ஒரு தலைசிறந்த சமூகத்தின் உருவாக்கம் என்பதும், ஒருதலைசிறந்த மனிதனின் உருவாக்கம் என்பதும் சிறுபிராயத்திலிருந்தே, குழந்தைப்பருவத்திலிருந்தே துவங்கப்படவேண்டும்.
தொட்டில் பழக்கம் கப்ரு வரை, ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது என்ற பழமொழிக்கு ஏற்ப இன்று உருவாக்கப்படும் சிறந்த குழந்தைகளே நாளைய சிறந்த தலைமுறையினர்! இன்று நன்கு கவனிக்கப்படும் விழுதுகளே – வேர்களே, நாளைய விருட்சங்கள் – பயன்கள் பல தரும் மரங்கள்! என்பதை மறந்துவிடக்கூடாது.
எனவே, நாம் நம்முடைய குழந்தைகளை, சிறார்களை இஸ்லாமிய ஒளியில் வார்த்தெடுப்போம். குழந்தைகளை நல்வழிப்படுத்தும் பணி எப்போது துவங்கப்படவேண்டும்? பெரும்பாலான பெற்றோர்களுக்கு தங்களின் குழந்தைகளை நல்வழிப்படுத்த வேண்டும் என்கிற எண்ணம் அவர்களின் 15 வயதிலிருந்து 25 வயதுக்கிடையில்தான் ஏற்படுகிறது.
இது முற்றிலும்தவறான ஒன்றாகும். ஏனெனில், இஸ்லாம் புதுமணத்தம்பதியர்களாக இணையும் அந்ததருணத்திலேயே துவங்கிவிடுவதாகக்கூறுகின்றது.
ஆரம்பமாக, அவர்கள் நல்ல குழந்தைகளை, பேறுபெற்ற நன்மக்களை பெற்றெடுக்கவேண்டும் என ஆசிக்குமாறும், அதையே பிரார்த்தனையாக வல்லரஹ்மானிடம் கேட்குமாறும் தூண்டுகிறது.
رَبِّ هَبْ لِي مِنَ الصَّالِحِينَ ()
“இறைவா! எனக்கு சந்ததியை வழங்குவாயாக! அந்தசந்ததி உத்தமர்களில் ஒருவராக இருக்கவேண்டும்.”( அல்குர்ஆன்: 37:100 )
இபாதுர்ரஹ்மான் – ரஹ்மானின் அடியார்களின் சிறப்புப்பண்புகளில் ஒன்றாக குர்ஆன் விமர்சிக்கும்போது…
وَالَّذِينَ يَقُولُونَ رَبَّنَا هَبْ لَنَا
مِنْ أَزْوَاجِنَا وَذُرِّيَّاتِنَا قُرَّةَ أَعْيُنٍ وَاجْعَلْنَا لِلْمُتَّقِينَ
إِمَامًا
()
“எங்கள் இறைவனே! எங்கள் துணைகளையும், எங்கள் குழந்தைகளையும் எங்கள் கண்களுக்குக்குளிர்ச்சி அளிக்கக்கூடியவர்களாய் விளங்கச்செய்வாயாக! மேலும், எங்களை இறையச்சமுடையோருக்குத் தலைவர்களாய் திகழச்செய்வாயாக!.”( அல்குர்ஆன்: 25:74 )
திருமணத்தன்றைய முதலிரவில் இருந்து எப்பொழுதெல்லாம் குழந்தை ஆசையோடு இல்லற வாழ்க்கைக்குள் தம்பதியர்கள் நுழைகின்றார்களோ அப்பொழுதெல்லாம் இப்படியான ஒரு பிரார்த்தனையைச்செய்யுமாறு ஏவுகிறது.
“அல்லாஹ்வின் பெயரால் தொடங்குகின்றேன். இறைவா! எங்களைவிட்டு ஷைத்தானை விலக்குவாயாக! எங்களுக்கு நீவழங்கப்போகும் குழந்தைச் செல்வத்தைவிட்டும் ஷைத்தானை விலக்குவாயாக!” இந்த துஆவைக்கொண்டு துவங்கப்பட்ட உறவின் மூலம் குழந்தைபாக்கியம் உண்டாகுமானால் ஒருக்காலமும் ஷைத்தான்அந்தகுழந்தையை நெருங்கமாட்டான்” என நபி {ஸல்}
அவர்கள் கூறினார்கள்.
அடுத்து குழந்தை பிறந்து பேச ஆரம்பித்ததிலிருந்து
7–வயது வரை உள்ளபருவம். ஏழுவயதிற்குள் அல்லாஹ்வைப்பற்றியுண்டான அறிவிலிருந்து துவங்கி, ஷரீஆவின் ஏவல், விலக்கல், ஹராம், ஹலால் வரைஉண்டான அனைத்து விஷயங்களையும் அந்தகுழந்தைக்கு ஓர் பெற்றோர் புகட்டிவிடவேண்டும்.
حدثنا حاجب بن الوليد حدثنا محمد بن حرب
عن الزبيدي عن الزهري أخبرني سعيد بن المسيب عن أبي هريرة أنه كان يقول قال رسول الله
صلى الله عليه وسلم ما من مولود إلا يولد على الفطرة فأبواه يهودانه وينصرانه ويمجسانه
كما تنتج البهيمة بهيمة جمعاء هل تحسون فيها من جدعاء ثم يقول أبو هريرة واقرءوا إن
شئتم فطرة الله التي فطر الناس عليها لا تبديل لخلق الله الآية حدثنا أبو بكر بن أبي
شيبة حدثنا عبد الأعلى ح وحدثنا عبد بن حميد أخبرنا عبد الرزاق كلاهما عن معمر عن الزهري
بهذا الإسناد وقال كما تنتج البهيمة بهيمة ولم يذكر جمعاء
ஏனெனில், நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்: “பிறக்கும் அனைத்துக் குழந்தைகளும் இயற்கை மார்க்கத்தின் மீதேபிறக்கின்றன.
எனினும், அவர்களின் பெற்றோர்களே அந்தக்குழந்தைகளை யூதனாகவோ, மஜூஸியாகவோ, கிறிஸ்துவனாகவோ மாற்றிவிடுகின்றார்கள்.”( நூல்: இப்னுகஸீர்
)
”உங்கள் குழந்தைகள் ஏழுவயதை அடைந்துவிட்டால் தொழுமாறு ஏவுங்கள்; அவர்கள் பத்துவயதை அடைந்துவிட்டால் தொழுகைக்காக அடியுங்கள்” என நபி {ஸல்}
அவர்கள் கூறினார்கள். ஏழுவயதானவுடன் தொழு என்று ஏவவேண்டுமானால் தொழுகையைப்பற்றி அந்தக்குழந்தை தெரிந்திருக்கவேண்டும். அத்தோடு ஏன்தொழுகிறோம் என்கிற அறிவும் அந்தக்குழந்தைக்கு சொல்லித்தரப்படவேண்டும்.
ஆக, குழந்தை பேச ஆரம்பித்ததிலிருந்து ஏழுவயதுக்குள் ஒருகுறிப்பிட்ட அளவிலான ஷரீஆவின் அறிவைப் பெற்றிருக்கவேண்டும்.
மர்யம் (அலை) அவர்களின் விவகாரம் குறித்த நீண்ட விளக்கத்தில் மர்யம் அத்தியாயத்தில்அல்லாஹ் குறிப்பிடும்போது, அந்தச்சமூகம் ஏதேனும் கேள்விகேட்டால் தொட்டிலில் கிடக்கும் குழந்தையை கைகாட்டுமாறு அல்லாஹ் மர்யம் (அலை) அவர்களுக்கு ஆணைபிறப்பித்தான்.
அதுபோன்றே அவர்களின் சமூகம் வினா எழுப்ப, மர்யம் (அலை) அவர்கள் தொட்டிலில் கிடந்த குழந்தையான ஈஸா (அலை) அவர்களை நோக்கி கையைகாண்பித்தார்கள்.
அப்போது, ஈஸா (அலை) அவர்கள்….
قَالَ إِنِّي عَبْدُ اللَّهِ آتَانِيَ الْكِتَابَ
وَجَعَلَنِي نَبِيًّا () وَجَعَلَنِي مُبَارَكًا أَيْنَ مَا كُنْتُ وَأَوْصَانِي بِالصَّلَاةِ
وَالزَّكَاةِ مَا دُمْتُ حَيًّا () وَبَرًّا بِوَالِدَتِي وَلَمْ يَجْعَلْنِي جَبَّارًا
شَقِيًّا () وَالسَّلَامُ عَلَيَّ يَوْمَ وُلِدْتُ وَيَوْمَ أَمُوتُ وَيَوْمَ أُبْعَثُ
حَيًّا. (القرآن 19:29-32) ()
“நான் அல்லாஹ்வின் அடிமைஆவேன். அவன் எனக்கு வேதம் அருளினான். என்னைத் தூதராகவும் ஆக்கினான்; பெரும்பாக்கியமுடையவனாகவும் ஆக்கினான் நான் எங்கிருந்தாலும்சரியே! தொழுகை மற்றும் ஜகாத்தை நிறைவேற்றுமாறும் அவன் எனக்கு கட்டளை பிறப்பித்துள்ளான், நான் உயிரோடு இருக்கும் காலம் வரை!
மேலும், என் தாயின் கடமையை நிறைவேற்றுபவனாகவும் என்னை ஆக்கியுள்ளான். மேலும், முரடனாகவும், துர்பாக்கியமுள்ளவனாகவும் என்னை அவன் ஆக்கவில்லை”.( அல்குர்ஆன்: 19: 29- 32 )
எப்படிப்பட்ட சூழ்நிலையில் ஈஸா (அலை) அவர்களை அல்லாஹ் பேசவைத்தான் என்பதை இதற்கு முன்னுள்ள வசனங்கள் குறிப்பிடுகின்றன. ஆனாலும், அவர்கள் அந்தச் சூழ்நிலையையோ, அல்லது தங்களின் அற்புதப் பிறப்புகுறித்தோ அவர்கள் பேசவில்லை.
அல்லாஹ் இங்கே மறைமுகமாக ஒன்றைச் சுட்டிக்காட்டுகின்றான்
“ஒரு குழந்தை பேச ஆரம்பித்தவுடன்தான் அல்லாஹ்வின் அடிமை என்பதில் துவங்கி இஸ்லாத்தின் உயர் கடமைகள், பெற்றோர் நலன்பேணுதல் ஆகியவை குறித்து நன்றாக போதிக்கப்படவேண்டும்” என்று. ஃபிர்அவ்ன் உடைய மகளுக்கும், மனைவிக்கும் சிகை அலங்கார பணி செய்த மாஷிதா (ரலி)
அவர்கள் வரலாறு வனப்பானதோர் எடுத்துக்காட்டாகும். அவர்கள் பெயர் அறியப்படாவிட்டாலும்
அவர்கள் செய்த பணியின் பெயராலேயே அவர்கள் வரலாற்றில் அறியப்படுகின்றார்கள்.
عن ابن عباس قال: قال رسول الله صلى الله
عليه وسلم: "لما أسري بي، مرت بي رائحة طيبة، فقلت: ما هذه الرائحة؟ قالوا: ماشطة
بنت فرعون وأولادها،
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள்
அறிவிக்கின்றார்கள்: “அல்லாஹ்வின் தூதர்
{ஸல்} அவர்கள் “ நான் மிஃராஜ் விண்ணுலகப்
பயணத்திற்காக அழைத்துச் செல்லப் பட்ட போது பைத்துல்முகத்தஸின் அருகே நறுமணம் கமழ்வதை
உணர்ந்தேன். அப்போது இங்கே நறுமணம் கமழ்வது ஏன்? என ஜிப்ரயீல் (அலை) அவர்களிடம் வினவினேன்.
அதற்கு, ஜிப்ரயீல் (அலை) அவர்கள்
“இந்த நறுமணம் ஃபிர்அவ்னுடைய
அரண்மனையில், ஃபிர்அவ்னுடைய மகளுக்கும், மனைவிக்கும் சிகை
அலங்காரம் செய்யும் பணிப்பெண்ணாக வேலை செய்த மாஷிதா அவர்களின் கப்ரிலிருந்தும், அவர்களின் குழந்தைகளின்
கப்ருகளில் இருந்தும் வருகின்றது.
சத்திய சன்மார்க்கத்திற்காக
பல்வேறு சித்ரவதைகளையும்,
கொடுமையையும் ஃபிர்அவ்ன்
அப்பெண்மணிக்கு இழைத்தான். அப்பெண்மணி பொறுமையை மேற்கொண்டு சத்திய தீனில் உறுதியாகவும்
இருந்த காரணத்திற்காக அல்லாஹ் இத்தகையப் பேற்றை வழங்கியிருக்கிறான்” என்று பதிலளித்தார்கள். ( நூல்: இப்னு கஸீர் )
وقال أبو جعفر الرازي، عن الربيع بن أنس،
عن أبي العالية قال: كان إيمانُ امرأة فرعونَ من قبل إيمان امرأة خازن فرعون، وذلك
أنها جلست تمشط ابنة فرعون، فوقع المشط من يدها، فقالت تعس من كفر بالله؟ فقالت لها
ابنة فرعون: ولك رب غير أبي؟ قالت: ربي ورب أبيك ورب كل شيء اللهُ. فلطمتها بنتُ فرعونَ
وضربتها، وأخبرت أباها، فأرسل إليها فرعون فقال: تعبدين ربا غيري؟ قالت: نعم، ربي وربك
ورب كل شيء الله. وإياه أعبد فعذبها فرعون وأوتد لها أوتادًا فشد رجليها ويديها وأرسل
عليها الحيات، وكانت كذلك، فأتى عليها يومًا فقال لها: ما أنت منتهية؟ فقالت له: ربي
وربك وربُ كل شيء الله. فقال لها: إني ذابح ابنك في فيك إن لم تفعلي. فقالت له: اقض
ما أنت قاض. فذبح ابنها في فيها، وإن روح ابنها بشرها، فقال لها: أبشري يا أمه، فإن
لك عند الله من الثواب كذا وكذا. فصبرت ثم أتى [عليها] فرعون يومًا آخر فقال لهامثل
ذلك، فقالت له، مثل ذلك، فذبح ابنها الآخر في فيها، فبشرها روحه أيضًا، وقال لها. اصبري
يا أمه فإن لك عند الله من الثواب كذا وكذا. قال: وسمعت امرأة فرعون كلامَ روح ابنها
الأكبر ثم الأصغر، فآمنت امرأةُ فرعونَ، وقبض الله روح امرأة خازن فرعون، وكشف الغطاء
عن ثوبها ومنزلتها وكرامتها في الجنة لامرأة فرعون حتى رأت فازدادت إيمانًا ويقينًا
وتصديقًا، فاطَّلع فرعون على إيمانها، فقال للملأ ما تعلمون من آسية بنت مزاحم؟ فأثنوا
عليها، فقال لهم: إنها تعبد غيري. فقالوا له: اقتلها. فأوتد لها أوتادًا فشد يديها
ورجليها، فدعت آسية ربها فقالت: { رَبِّ ابْنِ لِي عِنْدَكَ بَيْتًا فِي الْجَنَّةِ
} فوافق ذلك أن حضرها، فرعون فضحكت حين رأت بيتها في الجنة، فقال فرعون: ألا تعجبون
من جنونها، إنا نعذبها وهي تضحك، فقبض الله روحها، رضي الله عنها.
இமாம் அபூ ஜஅஃபர் அர்ராஸி
(ரஹ்) அவர்கள் அபுல் ஆலியா (ரஹ்) அவர்களின் வாயிலாக அறிவிக்கின்றார்கள்: “ஒரு நாள் ஃபிர்அவ்னுடைய
மகளுக்கு சிகை அலங்காரம் செய்து கொண்டிருந்த போது கையில் இருந்து தவறி சீப்பு கீழே
விழுந்தது. அதை மாஷிதா (ரலி) அவர்கள் “பிஸ்மில்லாஹ்” கூறி எடுத்தார்கள். இதைக்கவனித்த ஃபிர்அவ்னுடைய மகள் “பிஸ்மில்லாஹ்” வின் பொருள் குறித்து
விளக்கம் கேட்ட போது, ஏகத்துவ விளக்கத்தையும், தான் மூஸா (அலை) அவர்களின்
மார்க்கத்தை ஏற்றுக் கொண்டிருப்பதையும் விவரமாகக் கூறினார்கள்.
ஆணவம் பிடித்தவனின் மகளல்லவா? ஓங்கி ஓர் அடி அடித்து
விட்டு, தம் தந்தையிடம் வந்து
“தந்தையே! நம் அரண்மனையிலேயே
உம்மை இறைவனாக ஏற்றுக்கொள்ளாத ஒரு பெண்மணி இருக்கிறாள்” என்று கூறி நடந்த
சம்பவத்தைக் கூறினாள். இது கேட்டு வெகுண்டெழுந்த ஃபிர்அவ்ன், மாஷிதா (ரலி) அவர்களை
அழைத்து “என் அல்லாத வேறொரு
கடவுள் இருக்கின்றானாமே? அவனைத்தான் நீ வணங்குகின்றாயாமே? இது உண்மையா?” என்று கேட்டான்.
அதற்கு, மாஷிதா (ரலி) அவர்கள்
“ஆம்! என்னுடைய, உம்முடைய, இந்த பேரண்டம் முழுவதிலுமுள்ள
அனைத்தினுடைய ஏக இறைவனாக அல்லாஹ் ஒருவனே இருக்கின்றான். அவனையே நான் வணங்குகின்றேன்!
இனிமேலும் நான் வணங்குவேன்!” என்று பதிலளித்தார்கள்.
இது கேட்டு ஆத்திரத்தின் உச்சிக்கே
சென்ற ஃபிர்அவ்ன் கயிற்றாலும், சங்கிலியாலும் கட்டிப்போட்டு கடும் சித்ரவதைகளைச் செய்தான்.
இனிமேலும், உன் மார்க்கத்திலும்
கொள்கையிலும் நீ உறுதியோடு இருந்தால் நிறைய இழப்புக்களைச் சந்திக்க நேரிடும் என எச்சரித்தான்.
இறைநம்பிக்கையும், ஏகத்துவ எழுச்சியும்
இதயத்தில் நங்கூரமாய் பாய்ந்திருந்த காரணத்தால் மாஷிதா (ரலி) அவர்கள் அந்த சித்ரவதைகளைத்
தாங்கிக் கொண்டார்கள். ஒரு கட்டத்தில் மாஷிதா (ரலி) அவர்களின் இரண்டு ஆண் குழந்தைகளில் மூத்த ஆண் குழந்தையை அவர்களின் கண்முன்னே போட்டு கொடூரமாக அறுத்தான்.
தன் குழந்தை தன் கண்முன்னால்
அறுக்கப்படுவதைப் பார்த்த மாஷிதா (ரலி) அவர்கள் அதிர்ச்சியில் உறைந்து போயிருந்த போது
அறுக்கப்படும் அந்த சிறுவயது பாலகன் “உம்மாவே! அல்லாஹ்விடத்தில் உமக்கு பெரும் கூலி இருக்கின்றது
என்பதை சோபனமாகப் பெற்றுக் கொள்!” என்று கூறினான்.
அடுத்த நாள் அவர்களின் கண்முன்னால்
இரண்டாவது பாலகனும், அறுபடவே முன்பு போலவே
இந்தப் பாலகனும் தன் தாய்க்கு சோபனம் கூறினான். ”உம்மாவே! பொறுமையை மேற்கொள்ளுங்கள்! அல்லாஹ்விடத்தில் இன்னின்ன
அளவு உங்களுக்கு நற்கூலி வழங்கப்படும்” என்று. இறுதியாக, ஃபிர்அவ்ன் மாஷிதா (ரலி) அவர்களை கொடூரமான முறையில் கொலை செய்தான்.
சத்திய சன்மார்க்கத்தில் நிலைத்திருப்பதற்காக
மாஷிதா (ரலி) அவர்கள் வீர மரணத்தை விரும்பி தழுவினார்கள். மாஷிதா (ரலி) அவர்களின்
நிலைகுலையாமை, மற்றும் இஸ்திகாமத்
அங்கு நடந்த கொடுமைகளைப் பார்த்துக் கொண்டிருந்த ஃபிர்அவ்னின் மனைவியான ஆசியா அவர்களின்
மனதில் ஏகத்துவ சிறகை முளைக்கச் செய்தது.
அன்னை ஆசியா (ரலி) அவர்கள்
ஒரு நாள் உறக்கத்தில் கனவில் மாஷிதா (ரலி) அவர்கள் சுவனத்தில் வீற்றிருக்கக் கண்டார்கள். இந்தக் காட்சி அவர்களின்
ஈமானை இன்னும் உறுதிப்படுத்தியது. இவர்கள் ஈமான் கொண்டிருக்கிற விஷயமும் ஃபிர்அவ்னுக்குத்
தெரிய வரவே சித்ரவதைகளையும், கொடுங்கோன்மைகளையும் அரங்கேற்றினான். கொஞ்சம் கூட இசைந்து
கொடுக்காமல், சத்திய சன்மார்க்கத்திலேயே
நிலைத்து நின்றார்கள்.
ஒரு கட்டத்தில் கொடுமைகள்
அதிகரிக்கவே, அல்லாஹ்விடம் கையேந்தி
“இறைவா! எனக்காக உன்னிடத்தில்
– சுவனத்தில் ஓர் இல்லத்தை
அமைத்துத் தருவாயாக! மேலும், ஃபிர்அவ்னை விட்டும், அவனுடைய கொடுமையை விட்டும் என்னைக் காப்பாற்றுவாயாக! மேலும், கொடுமை புரியும் சமூகத்திலிருந்து
எனக்கு விடுதலை அளிப்பாயாக!” என்று இறைஞ்சினார்கள்.
இறுதியாக, அன்னை ஆஸியா (ரலி)
அவர்களும் ஷஹீத் வீரமரணத்தைத் தழுவினார்கள். அவர்களின் உயிர் பிரியும் போது அவர்களுக்காக
அல்லாஹ் கட்டி வைத்திருக்கிற சுவனத்து மாளிகையைக் கண்டு ஆனந்தப்பட்டவர்களாக, சிரித்த நிலையிலேய
உயிரைத் துறந்தார்கள். ( நூல்: இப்னு கஸீர்
)
தன் தாய் தான் அறுபடுகிற போது
சஞ்சலப்பட்டு இஸ்லாத்தை விட்டு விடக்கூடாது என்பதற்காக அந்த இரு குழந்தைகளும் தன் தாய்க்கு
சோபனம் சொன்னார்கள் என்றால் அந்தத் தாய் அந்தக் குழந்தைகளுக்கு எந்த அளவு அந்த சிறு
வயதிலேயே இறைநம்பிக்கையை ஊட்டியிருக்க வேண்டும் என்பதை இந்த வரலாறு நமக்கு உணர்த்துகின்றது.
அடுத்து ஏழு வயதிலிருந்து
பதினைந்து வரையிலான பருவம். குழந்தைகள் விஷயத்தில் கண்டிப்பும் கவனமும், விழிப்புணர்வும் கொண்டிருக்க
வேண்டிய மிக முக்கியமான பருவமும் கூட. இங்கு நாம் சரியாக அவர்களை கண்காணிக்கவில்லை, கண்டிக்கவில்லை என்றால்
இனி ஒரு போதும் அவர்களைச் சரி செய்யவோ, நல்வழிப்படுத்தவோ முடியாது.
நபித்தோழர்களில் பலர் இந்த
வயதில் தான் பல துறைகளில் சாதனை படைத்து சிறந்த முன் மாதிரியை விட்டுச் சென்றிருக்கின்றனர். இன்றைய காலத்து நமது
சிறார்கள் விளையாட்டுக்காகவும், வேடிக்கைக்காகவும் புறப்பட்டுச் செல்கிற இதே பருவத்தில் வாளேந்தி
யுத்தகளத்திற்குச் செல்லவும் தயங்கவில்லை நபிகளார் காலத்து சிறார்கள்.
இமாம் புகாரி (ரஹ்), இமாம் ஷாஃபிஈ (ரஹ்), இமாம் அஹ்மத் இப்னு
ஹம்பல் (ரஹ்) ஆகியோர் தங்களின் பதினைந்து வயதுகளில் ஹதீஸ்கலையில் பிரபல்யமானவர்களாக
மதிக்கப்பட்டனர்.
அம்ர் இப்னு ஹஸ்ம்
(ரலி) அவர்களை நஜ்ரான் வாசிகளுக்கு மார்க்கப் போதனைகளுக்காகவும், இமாமத்திற்காகவும்
நபி {ஸல்} அவர்கள் தேர்ந்தெடுத்த
போது அவர்களின் வயது 11.
ஹஸன், ஹுஸைன் (ரலி – அன்ஹுமா) இருவரும்
ஒருமுறை நபி {ஸல்} அவர்கள் சபையில் விளையாடிக்
கொண்டிருந்தனர். அப்போது,
அண்ணலாரிடத்தில் ஸதகாவாக
சிறிதளவு பேரீத்தம் பழம் கொண்டுவரப்பட்டது.
அதில் ஒன்றை எடுத்து இருவரில்
ஒருவர் வாயில் போட்டு விடவே, அண்ணலார் வாயில் கைவிட்டு அதை வெளியே எடுத்து வீசிவிட்டு தர்மப்பொருள்
நம் குடும்பத்துக்கு அனுமதிக்கப்படவில்லை. அது ஹராமாகும்” என்று கூறினார்கள். இதன் விளைவாக இருவரும்
புடம் போட்ட தங்கமாக வாழ்வில் ஜொலித்ததை வரலாறு பதிவு செய்திருக்கின்றது.
ஒரு நாள் மதிய நேரம், லுஹர் தொழுகைக்குப்
பின்னர் நபி {ஸல்} அவர்கள் தனதருமை மகள்
ஃபாத்திமா (ரலி) அவர்கள் வீட்டிற்கு பேரக்குழந்தைகளைக் காணச் சென்றிருந்தார்கள். இருவரும் இல்லை. மகளிடம்
விசாரிக்கின்றார்கள். எங்காவது விளையாடச் சென்றிருப்பார்கள். இன்னும் சிறிது நேரத்தில்
வந்து விடுவார்கள் என்று ஃபாத்திமா (ரலி) அவர்கள் கூறினார்கள்.
நீண்ட நேரமாகியும் இருவரும்
வீட்டிற்கு வராததால் கலக்கமடைந்த நபி {ஸல்}
அவர்கள் பேரக்குழந்தைகளைத்
தேடி புறப்பட்டார்கள். மதீனாவின் எந்த ஒரு பகுதியிலும் இருவரையும் காணவில்லை. மதீனாவிற்கு வெளியே
பாலைவனத்தை நோக்கி நபி {ஸல்} அவர்கள் ஒரு வித பதற்றத்தோடு
அங்கு வருவோர் போவோரிடம் விசாரித்த வண்ணம் சென்றார்கள். ஓரிடத்தில் ஆடு மேய்த்துக்
கொண்டிருந்த ஒருவர் நபி {ஸல்} அவர்களின் முகத்தில்
இருந்த பதற்றத்தைக் கண்டு அருகில் வந்து என்ன ஏது? என்று விசாரித்தார். நபி {ஸல்} அவர்கள் விஷயத்தைக்
கூறினார்கள்.
அப்போது, நாயகமே! கவலைப்பட
வேண்டாம், இதோ இங்கு எங்காவது
தான் அவர்கள் இருவரும் இருப்பார்கள். சற்று முன்னர் தான் இங்கு அவர்களை நான் கண்டேன்” என்று கூறிய அவர்
அல்லாஹ்வின் தூதரே! ஒரு விஷத்தை நான் உங்களிடம் நான் சொல்லலாமா” என வேண்டினார். நபி {ஸல்} அவர்கள் அனுமதி தரவே, அவர் கூறினார் “அல்லாஹ்வின் தூதரே!
சற்று முன்னர் தான் இருவரும் இங்கே வந்தனர். அவர்கள் முகத்தில் நான் பசியின் ரேகை படர்ந்திருந்ததை
பார்த்து விட்டு, என் ஆட்டிலிருந்து
பால் கறந்து தரவா? என்று இருவரிடமும்
கேட்டேன்.
அப்போது, அவர்கள் இருவரும்
”நீங்கள் இந்த மந்தையின்
உரிமையாளரா?” என்று கேட்டார்கள்.
நான் இல்லை என்றேன். அப்படியென்றால் உங்கள் உரிமையில் இல்லாத இந்த மந்தையில் உள்ள ஆட்டில்
இருந்து பால் அருந்துவது எங்களுக்கு ஹலால் அல்ல” என்று கூறி மறுத்து விட்டு, அதோ அங்கிருக்கிற
பேரீத்தம் மரம் நிறைந்த தோட்டத்தை நோக்கி இருவரும் சென்றார்கள்” என்றார் அந்த இடையர். நபி {ஸல்} அவர்கள் அந்த தோடத்திற்கு
வந்து பார்க்கின்றார்கள். அங்கே ஓர் மரத்தின் நிழலில் இருவரும் பசிமயக்கத்தில் உறங்கிக்
கொண்டிருந்தனர்.
அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் இருவரையும்
எழுப்பி, வாரி அணைத்து முத்தமிட்டு
இருதோள் புஜங்களிலும் இருவரையும்
சுமந்தவர்களாக தங்களது மகளார் ஃபாத்திமா (ரலி) அவர்களின் வீட்டிற்கு வந்து “ஃபாத்திமாவே! உம்
தந்தை முஹம்மதை விட மிக அழகிய முறையில் குழந்தைகளை உருவாக்கியிருக்கின்றாய்! என ஆனந்தக்
கண்ணீரோடு கூறினார்கள். ( நூல்: துர்ரியத்துத் தாஹிரா )
அடுத்து, இந்தப் பருவத்திலேயே
நற்பண்புகளையும், நல்லொழுக்கத்தையும்
கற்றுத்தந்திட வேண்டும். பெற்றோர், உறவினர், சகோதரன், சகோதரி, சகமுஸ்லிம்கள் ஆகியோரின் உரிமைகள் என்ன? யார் யாரிடத்தில்
எப்படி நடந்து கொள்ள வேண்டும்? என்பதையும் கற்றுக்கொடுக்க வேண்டும்.
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لِيَسْتَأْذِنْكُمُ
الَّذِينَ مَلَكَتْ أَيْمَانُكُمْ وَالَّذِينَ لَمْ يَبْلُغُوا الْحُلُمَ مِنْكُمْ
ثَلَاثَ مَرَّاتٍ مِنْ قَبْلِ صَلَاةِ الْفَجْرِ وَحِينَ تَضَعُونَ ثِيَابَكُمْ مِنَ
الظَّهِيرَةِ وَمِنْ بَعْدِ صَلَاةِ الْعِشَاءِ ثَلَاثُ عَوْرَاتٍ لَكُمْ.
(القرآن)
“இறைநம்பிக்கை கொண்டவர்களே! உங்களுடைய அடிமைகளான ஆண்களும், பெண்களும் பருவ வயதை
அடையாத உங்கள் சிறார்களும் மூன்று நேரங்களில் உங்களிடையே வருவதற்கு அனுமதி பெற்றுக்
கொள்ளவேண்டும்.
அதிகாலைத் தொழுகைக்கு முன்னர்; மதிய வேளையில் உங்கள்
ஆடைகளின் மீது நீங்கள் கவனம் இல்லாமல் இருக்கும் போது; இஷா தொழுகைக்குப்
பின்னர். இம்மூன்று நேரங்களும் நீங்கள் மறைவாக இருக்க வேண்டிய நேரங்களாகும். ( அல்குர்ஆன்: 24:58 )
ஜாபிர் பின் அப்தில்லாஹ்
(ரலி) நபி {ஸல்} அவர்களின் தனிப்பெரும்
நேசத்திற்குரிய இளம் நபித்தோழர்களில் ஒருவர். ஒரு நாள் அல்லாஹ்வின்
தூதர் {ஸல்} அவர்களும், ஜாபிர் (ரலி) அவர்களும்
உரையாடிய நெகிழ்ச்சியான சம்பவம்…
عن جابر بن عبد الله قال: خرجت مع رسول
الله صلى الله عليه وسلم إلى غزوة ذات الرقاع من نخل على جمل لي حفيف فلما قفل رسول
الله صلى الله عليه وسلم قال: جعلت الرفاق تمضي وجعلت أتخلف حتى أدركني رسول الله صلى
الله عليه وسلم فقال: ما لك يا جابر؟ قال: قلت: يا رسول الله أبطأ بي جملي هذا قال:
أنخه قال: فأنخته وأناخ رسول الله صلى الله عليه وسلم ثم قال: أعطني هذه العصا من يدك
أو اقطع لي عصا من شجرة قال: ففعلت قال: فأخذها رسول الله صلى الله عليه وسلم فنخسه
بها نخسات ثم قال: اركب فركبت فخرج والذي بعثه بالحق يواهق ناقته مواهقة.
قال: وتحدثت مع رسول الله صلى الله عليه
وسلم فقال لي: أتبيعني جملك هذا يا جابر؟ قال: قلت: يا رسول بل أهبه لك قال: لا ولكن
بعنيه قال: قلت: فسمنيه يا رسول الله قال: قد أخذته بدرهم قال: قلت: لا إذن تغبنني
يا رسول الله! قال: فبدرهمين قال: قلت: لا قال: فلم يزل يرفع لي رسول الله صلى الله
عليه وسلم في ثمنه حتى بلغ الأوقية قال: فقلت: أفقد رضيت يا رسول الله؟ قال: نعم قلت:
فهو لك قال: قد أخذته قال: ثم قال يا جابر هل تزوجت بعد؟ قال: قلت: نعم يا رسول الله
قال: أثيباً أم بكراً؟ قال: قلت: لا بل ثيباً قال: أفلا جارية تلاعبها وتلاعبك! قال:
قلت: يا رسول الله إن أبي أصيب يوم أحد وترك بنات له سبعاً فنكحت امرأة جامعة تجمع
رءوسهن وتقوم عليهن.
தாதுர்ரிகாஃ ஹிஜ்ரி நான்கில் பனூஃகத்ஃபான் கிளையாரை எதிர்த்துப்போரிட மாநபி{ஸல்} அவர்களின் தலைமையில் நபித்தோழர்கள் சென்றனர். பெரிய அளவில் போரெல்லாம் நடைபெறவில்லை. முஸ்லிம்கள் வெற்றியோடு திரும்பினார்கள். போர் முடிந்து எல்லோரும் கிளம்பிச்சென்று கொண்டிருந்தனர். இறுதியாக, அல்லாஹ்வின்தூதர் {ஸல்} அவர்களும் ஜாபிர் {ரலி} அவர்களும் எஞ்சியிருந்தனர்.
மெதுவாகப் பேச்சை துவக்கினார்கள் பெருமானார் {ஸல்} அவர்கள்”என்னஜாபிர்? ஏன் இவ்வளவு தாமதம்?” அதுவா? அல்லாஹ்வின் தூதரே!? கிழட்டு ஒட்டகம் ஆதலால்தான் தாமதம் என்றார்கள் ஜாபிர் {ரலி}. கீழிறங்கி என்னிடம் தாருங்கள் என்று ஜாபிரிடம் கூறிவிட்டு, அதைவாங்கிய அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் ஒட்டகத்தின்மீதேறி, பிஸ்மில்லாஹ் கூறி தடவிக்கொடுத்தார்கள்.
ஒட்டகம் வேகமாகச் செல்ல ஆரம்பிக்கின்றது. அதன்பின்னர் அல்லாஹ்வின் ரஸூல் ஜாபிர் அவர்களிடம் ஒட்டகத்தைக்கொடுத்தார்கள். அதன்மீதேறி அமர்ந்த ஜாபிர் {ரலி} ஒட்டகம் வேகமாகச் செல்வதைக் கண்டதும் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார்கள். மீண்டும் பேச்சைத் தொடர்கின்றார்கள் நபி {ஸல்} அவர்கள்“ஜாபிர் திருமணம் முடித்துவிட்டீர்களா?”
ஆம்! என்றார் ஜாபிர் {ரலி}. ”கன்னிப்பெண்ணா? விதவைப்பெண்ணா?” என்று நபிகளார் கேட்டார்கள். அதற்கவர்“விதவைப்பெண்ணை திருமணம் செய்திருக்கின்றேன்” என்றார்கள். ஏன் ஒரு கன்னிப்பெண்ணை திருமணம் செய்திருக்கலாமே? மணவாழ்வு மகிழ்ச்சிமிக்கதாய் அமைந்திருக்குமே? “ என்று மாநபி {ஸல்} அவர்கள்கேட்டார்கள்.
ஜாபிர் {ரலி} சொன்னார்கள்“இல்லை அல்லாஹ்வின் தூதர்அவர்களே! எனக்கு ஒன்பது சகோதரிகள். தந்தை உஹதில் ஷஹீதாகிவிட்டார்.
கடனும் ஏராளமாய் இருக்கின்றது.
இந்நிலையில் நான் என்சகோதரிகளின் ஒத்தவயதினில் உள்ள ஒருகன்னிப்பெண்ணை திருமணம் செய்தேனென்றால் அதுநன்றாக இருக்காது, மேலும், என் சகோதரிகள் விஷயத்தில் நல்ல முறையில் நடந்து கொள்ள வேண்டும்
என்ற காரணத்திற்காகத்தான் விதவைப்பெண்னை மணம்முடித்திருகின்றேன்”. என்று கூறினார்கள். (நூல்: தஹ்தீப் ஸீரத் இப்னு ஹிஷாம்)
எவ்வளவு பொறுப்பான ஓர் பதிலை
ஜாபிர் (ரலி) அவர்கள் கூறினார்கள். ஆகவே, அந்தந்தப் பருவங்களில் எப்படி குழந்தைகள் வளர்க்கப்பட வேண்டுமோ
அப்படி வளர்க்கப்பட்டு விட்டால் நல்லதோர் தலைமுறை இந்த சமூகத்தில் உருவாக்கம் பெறுவார்கள்.
அண்ணலாரும் அன்னை
ஃபாத்திமா(ரழி)யும்
இது விஷயத்தில் அன்னை பாத்திமா
(ரழி) அவர்களை இச்சமுதாயம்,
குறிப்பாக முஸ்லிம்
இளம் பெண்கள் நினைத்துப் பார்க்க வேண்டும். அன்னை ஃபாத்திமா
(ரழி) அவர்கள் உச்சகட்டமான ஒழுக்கக் கேடுகள் தலைவிரித்தாடிய காலத்தில் வாழ்ந்தவர்கள். இன்றைய நவீன ஜாஹிலிய்யாவை
விட பண்டைய ஜாஹிலிய்யா மிக மோசமானதே. திருமண வாழ்க்கைக்கும்- விபச்சாரத்திற்கும் வித்தியாசமில்லாத
காலம் அது. அக்காலத்தில் ஒழுக்கக்
கேடுகளுக்கு அஞ்சி ,கண்ணியமான குடும்பத்தார்கள்
பெண் பிள்ளைகளை சிறு வயதிலேயே திருமணம் செய்து கொடுத்து விடுவார்கள். அத்தகைய மோசமான காலத்தில்
மிக ஒழுக்கமாக வாழ்ந்தவர்கள் தான் அன்னை ஃபாத்திமா (ரழி) அவர்கள். இத்தனைக்கும் அவர்களின்
திருமணம் மிக தாமதாகவே நடந்தது. இன்னும் சொல்வதெனில், நபி (ஸல்) அவர்களின் பெண் பிள்ளைகளிலேயே மிகவும் தாமதமாக அவர்களுக்கு
தான் திருமணம் நடந்தது.
திருமணத்தின் போது அவர்களின்
வயது 20 ஆகும். (ஏனெனில்
ஹிஜ்ரி இரண்டாம் ஆண்டு பத்ரு போருக்கு பின்பு தான் அவர்களுக்கு திருமணம் நடந்தது. நபி
(ஸல்) அவர்கள் மரணமடைந்து ஆறு மாதத்திற்குள் அவர்கள் மரணமடைந்தார்கள். மரணித்தின் போது வயது 28 ) திருமணம் பேசி வைக்கப்பட்டு, நாளும் குறிக்கப்பட்ட பிறகு ஓடிப் போகும் பெண்கள்
அன்னை ஃபாத்திமா (ரழி) அவர்களை நினைத்துப் பார்க்க வேண்டும்.
மக்கா வாழ்க்கையில் அன்னை
ஃபாத்திமா (ரழி) அவர்கள் திருமணம் குறித்து நினைத்துக் கூட பார்க்க முடியாமல் இருந்தது. திருமணம் அவர்களுக்கு
கானல் நீராகவே இருந்தது. அவர்களின் வீட்டில் ஏற்கனவே திருமணம் செய்து கொடுக்கப்பட்டு, கொடியவன் அபூலஹபின்
இரு மகன்களால் காழ்ப்புணர்ச்சின் காரணமாக தலாக் விடப்பட்ட இரண்டு சகோதரிகள் (ருகையா-
உம்மு குல்சூம்) இருக்க, வயதுக்கு வந்த பருவ
மங்கையாக இருந்த அவர்களுக்கு திருமணம் நினைத்துக் கூட பார்க்க முடியாமல் இருந்தது.
தாய் உயிருடன் இல்லை. தந்தையின்
உயிருக்கு விலை வைக்கப்பட்டிருந்தது. திருமணத்திற்கான எந்த அறிகுறியும் இல்லை. ஆனால்
ஒழுக்கமாகவும் , பொறுமையாகவும் வாழ்ந்தார்கள்
அன்னை ஃபாத்திமா (ரழி) அவர்கள். சிறிதளவு அவர்கள் பிசகியிருந்தால் கூட எதிரிகள் நபி (ஸல்) அவர்களை
கேவலப்படுத்துவதற்கு ஒரு வாய்ப்பாக பயன்படுத்தி இருப்பார்கள்.
நபி (ஸல்) அவர்களுக்கோ மக்கா
வாழ்க்கையில் மகளின் திருமணத்தைப் பற்றி யோசிப்பதற்கு கூட நேரமில்லாமல் இருந்தது. அவ்வளவு
நெருக்கடிகள் அங்கே அவர்களுக்கு தரப்பட்டு வந்தன. அன்னை ஃபாத்திமா
(ரழி) அவர்கள் பொறுமையாக இருந்ததற்கும், ஒழுக்கமாக இருந்ததற்கும் காரணம் எது தெரியுமா? நபி (ஸல்) அவர்கள்
ஊட்டிய இறையச்சமும், ஒழுக்கப் பயிற்சியும்
தான்.
அன்னை ஃபாத்திமாவுக்கு ஐந்து
வயதாக இருக்கும் பொழுது நபி (ஸல்) அவர்களுக்கு நபித்துவம் தரப்பட்டது. சிறுமியான அன்னை
ஃபாத்திமாவுக்கும் ஈமானிய பயிற்சியை நபி (ஸல்) அவர்கள் தரவே செய்தார்கள். நபி (ஸல்) அவர்கள்
ஃபாத்திமாவிடம் இவ்வாறு பிரச்சாரம் செய்ததாக ஹதீஸ்களில் நாம் காணலாம்.
يَا فَاطِمَةُ أَنْقِذِي نَفْسَكِ مِنْ
النَّارِ فَإِنِّي لَا أَمْلِكُ لَكُمْ مِنْ اللَّهِ شَيْئًا غَيْرَ أَنَّ لَكُمْ رَحِمًا
سَأَبُلُّهَا بِبَلَالِهَارواه مسلم 303
இது இஸ்லாத்தின் ஆரம்ப காலத்தில்
நடந்த பிரச்சாரமாகும். மரணத்திலும் ஒழுக்கத்தை கட்டிக் காத்த அன்னை இவ்வுலக வாழ்க்கையில்
ஒழுக்கமாக வாழ்ந்த அன்னை ஃபாத்திமா (ரழி) அவர்கள் மரணத்திற்கும் பின்பு தமது ஒழுக்கத்தை
சிந்தித்தார்கள்.
தன்னை கணவர் அலீ (ரழி) மற்றும்
சிறிய தந்தையின் மனைவி அஸ்மா பின்த் உமைஸ் (ரழி) இருவர் மட்டுமே குளிப்பாட்ட வேண்டும், சன்தூக் (பெட்டி)
யில் வைத்து தூக்கி செல்ல வேண்டும், இரவில் அடக்கம் செய்ய
வேண்டும் என மூன்று வஸிய்யத்கள் செய்து இருந்தார்கள்.
ولما حضرها الموت قالت لأَسْمَاء بِنْت
عميس: يا أَسْمَاء، إني قد استقبحت ما يُصنع بالنساء، يطرح على المرأة الثوب فيصفها.
قالت أَسْمَاء يا ابنة رسول الله صلّى الله عليه وسلّم، ألا أريك شيئاً رأيته بأرض
الحبشة؟ فدعت بجرائد رطبة فحنتها، ثم طرحت عليها ثوباً. فقالت فاطِمَة: ما أحسن هذا
وأجمله! فإذا أنا متُّ فاغسليني أنت وعليّ، ولا تُدخلي عليَّ أحداً. فلما توفيت جاءت
عائشة، فمنعتها أَسْمَاء، فشكتها عائشة إلى أبي بكر وقالت: هذه الخثعمية تحول بيننا
وبين بِنْت رسول الله صلّى الله عليه وسلّم، وقد صنعت لها هودجاً؟! قالت: هي أمرتني
ألاّ يدخل عليها أحد، وأمرتني أن أصنع لها ذلك. قال: فاصنعي ما أمرتك. وغسَّلها عليّ
وأَسْمَاء. وهي أول من غُطّي نعشها في الإسلام، ثم بعدها زينب بِنْت جحش. وصلى عليها
علي بن أبي طالب. وقيل: صلى عليها العَبَّاس. وأوصت أن تدفن ليلاً، ففعل ذلك بها.
( اسد الغابة)
குளிப்பாட்டும் இடத்துக்கு
அன்னை ஆயிஷா (ரழி) அவர்கள் கூட அனுமதிக்கப்படவில்லை என்பது கவனிக்கத்தக்கது.
ஒழுக்கமான வாழ்வே
வாழ்வில் உயர்வை தரும்
ஃபாத்திமாவுக்காக மறுமையில்
எல்லோரும் பார்வையை தாழ்த்துவார்கள்
4711 - أخبرنا أبو بكر محمد بن عبد الله بن عتاب
العبدي ، ببغداد ، وأبو بكر بن أبي دارم الحافظ ، بالكوفة ، وأبو العباس محمد بن يعقوب
، وأبو الحسين بن ماتي ، بالكوفة ، والحسن بن يعقوب ، العدل ، قالوا : ثنا إبراهيم
بن عبد الله العبسي ، ثنا العباس بن الوليد بن بكار الضبي ، ثنا خالد بن عبد الله الواسطي
، عن بيان ، عن الشعبي ، عن أبي جحيفة ، عن علي عليه السلام قال : سمعت النبي صلى الله
عليه وسلم يقول : « إذا كان يوم القيامة نادى مناد من وراء الحجاب : يا أهل الجمع ،
غضوا أبصاركم عن فاطمة بنت محمد صلى الله عليه وسلم حتى تمر » « هذا حديث صحيح على
شرط الشيخين ، ولم يخرجاه » رواه الحاكم والطبراني)
சுவர்க்கத்தின் தலைவி எனும்
உயர்வு
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ حَدَّثَنَا
مُحَمَّدُ بْنُ خَالِدٍ ابْنُ عَثْمَةَ قَالَ حَدَّثَنِي مُوسَى بْنُ يَعْقُوبَ الزَّمْعِيُّ
عَنْ هَاشِمِ بْنِ هَاشِمٍ أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ وَهْبٍ أَخْبَرَهُ أَنَّ أُمَّ
سَلَمَةَ أَخْبَرَتْهُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ دَعَا فَاطِمَةَ
يَوْمَ الْفَتْحِ فَنَاجَاهَا فَبَكَتْ ثُمَّ حَدَّثَهَا فَضَحِكَتْ قَالَتْ فَلَمَّا
تُوُفِّيَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ سَأَلْتُهَا عَنْ بُكَائِهَا
وَضَحِكِهَا قَالَتْ أَخْبَرَنِي رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
أَنَّهُ يَمُوتُ فَبَكَيْتُ ثُمَّ أَخْبَرَنِي أَنِّي سَيِّدَةُ نِسَاءِ أَهْلِ الْجَنَّةِ
إِلَّا مَرْيَمَ ابْنَةَ عِمْرَانَ فَضَحِكْتُ (رواه الترمذي-3808)
ஆண்களில் நபி மூஸா (அலை) , நபி யூசுஃப் (அலை)
ஆண்களில் நபி மூஸாவுக்கு அவர்களின்
கண்ணியமான நடத்தையே கண்ணியமான மனைவியும், நபித்துவமும் கிடைப்பதற்கு காரணமானது.
قال الله تعالى: (فَجَاءَتْهُ إِحْدَاهُمَا
تَمْشِي عَلَى اسْتِحْيَاءٍ)
قال أبو حازم سلمة بندينار: لما سمع ذلك
موسى أراد أن لا يذهب، ولكن كان جائعًا فلم يجد بُدًا من الذهاب، فمشت المرأة ومشى
موسى خلفها، فكانت الريح تضرب ثوبها فتصف ردفها، فكره موسى أن يرى ذلك منها، فقال لها:
امشي خلفي ودليني على الطريق إن أخطأتُ، ففعلت ذلك،( تفسير البغوي)
திருமணமாகாத வாலிப பருவத்திலும்
மூஸா நபியின் கண்ணியம் அவர்களுக்கு நபித்துவத்தை தந்தது.
யூசுஃப் நபிக்கு அவர்களின்
ஒழுக்கம் தான் கனவுக்கு விளக்கம் சொல்லும் பாக்கியம், நபித்துவம், நாடாளும் பாக்கியத்தை
தந்தது.
قال الله تعالى: قَالَ مَعَاذَ اللَّهِ
إِنَّهُ رَبِّي أَحْسَنَ مَثْوَايَ إِنَّهُ لَا يُفْلِحُ الظَّالِمُونَ. (القرآن-12:23)
ஒழுக்கத்தை பிள்ளைகளுக்கு
தந்து விட்டால் பெற்றோர்கள் பயப்படாமல் இருக்கலாம்
பெண் பிள்ளைகளை விட்டு விட்டு மரணித்த இப்னு மஸ்ஊது (ரழி)
وقال أبو ظبية: مرض عبد الله، فعاده عثمان
بن عفان، فقال: ما تشتكي؟ قال: ذنوبي! قال: فما تشتهي؟ قال: رحمة ربي. قال: ألا آمر
لك بطبيب؟ قال: الطبيب أمرضني. قال: ألا آمر لك بعطاء؟ قال: لا حاجة لي فيه. قال: يكون
لبناتك. قال أتخشى على بناتي الفقر، إني أمرت بناتي أن يقرأن كل ليلة سورة الواقعة،
إني سمعت رسول الله صلى الله عليه وسلم يقول: " من قرأ الواقعة كل ليلة لم تصبه
فاقة أبداً "( اسد الغابة)
தாராளமாகச் செலவிடுவார்
பெற்றோர்கள் தங்களது பிள்ளைகள் மீது இயற்கையாகக்
காட்டும் அன்பும் பரிவும் மட்டும் போதுமானதல்ல. சில நேரத்தில் வாழ்வில் சிரமமும் நெருக்கடியும்
வறுமையும் ஏற்படும்போது பிள்ளைகளை மறந்து விடலாம். அவர்களுக்கு ஏற்படும் செலவினங்களை
எண்ணி மனம் சோர்வடையலாம். இக்காரணத்தை முன்னிட்டுத்தான் பெற்றோர்கள் செய்யும் தியாகத்திற்கு
மகத்தான நன்மை உண்டு என்று இஸ்லாம் உற்சாகமூட்டுகிறது. அல்லாஹ் வழங்கும் நன்மையை எண்ணும்போது
பிள்ளைகளுக்காக சிரமத்தை சகித்துக் கொள்வதும், தியாகம் செய்வதும், அதனால் ஏற்படும் சோதனையும் பெற்றோர்களுக்கு சுலபமாகிவிடுகின்றன.
உம்மு ஸலமா (ரழி) அவர்கள் கூறினார்கள்: நான் நபி
(ஸல்) அவர்களிடம் "அல்லாஹ்வின் தூதரே! ஸலமாவின் பிள்ளைகளுக்கு நான் செலவிடுவதற்கு
எனக்கு நற்கூலி உண்டா? நான் அவர்களை இவ்வாறு
(வீணாக) விட்டுவிட முடியாது. ஏனென்றால் அவர்கள் எனக்கும் குழந்தைகள்'' என்று கூறினேன். நபி
(ஸல்) அவர்கள் "ஆம்! நீ அவர்களுக்குச் செலவிடுவதில் உனக்கு நற்கூலி உண்டு'' என்று கூறினார்கள்.
ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)
அபூ மஸ்வூத் அல்பத்ரி (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
"ஒரு மனிதர் தனது குடும்பத்தாருக்கு அல்லாஹ்வின் திருப்தியை நாடி செலவிடுவாரானால்
அது அவருக்கு தர்மமாகும்''
என நபி (ஸல்) அவர்கள்
கூறினார்கள். ஸஹீஹுல் புகாரி, ஸஹ்ீஹ் முஸ்லிம்)
மேலும் ஒருவர் தனது குடும்பத்தினருக்காகச் செலவிடுவதை
செலவுகளிலெல்லாம் மிகச் சிறந்த செலவாக இஸ்லாம் கூறுகிறது. இதற்கான முன்னுதாரணத்தை நபிமொழியில்
காண்கிறோம். நபி (ஸல்) அவர்கள்
கூறியதாக அபூஹுரைரா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: "நீ அல்லாஹ்வின் பாதையில்
செலவிட்ட தீனார், அடிமையை உரிமை விடுவதற்காகச்
செலவிட்ட தீனார், எழை ஒருவனுக்காகச்
செலவிட்ட தீனார், உனது குடும்பத்துக்காகச்
செலவிட்ட தீனார், இவை அனைத்திலும் மிக
மகத்தான நன்மை பெற்றது உனது குடும்பத்தினருக்காகச் செலவிட்ட தீனார் அகும்.'' ஸஹீஹுல் புகாரி)
ஸஹீஹ் முஸ்லிமின் மற்றோர் அறிவிப்பில்: நபி
(ஸல்) அவர்கள் கூறினார்கள்: "மனிதன் செலவிடும் தீனார்களில் மிகச் சிறந்தது தனது
குடும்பத்தினருக்காகச் செலவு செய்யும் தீனாரும், அல்லாஹ்வின் பாதையில் வாகனத்துக்காகச் செலவு செய்யும்
தீனாரும், அல்லாஹ்வின் பாதையில்
தனது தோழர்களுக்காகச் செலவு செய்யும் தீனாரும் ஆகும்.''
முஸ்லிம் தனது குடும்பத்தினருக்குச்
செலவிடுவதில் அளவற்ற ஆனந்தம் அடைவார். தனது குடும்பத்தினருக்காகவோ அல்லது பிறருக்காகவோ
அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை நாடி செலவிடும்போது அதற்கு அல்லாஹ் மகத்தான நற்கூலியை
வழங்குவான். எந்தளவுக்கென்றால் ஒரு மனிதர் பாசத்துடன் தனது மனைவியின் வாயில் ஒரு கவளம்
உணவை ஊட்டுவாரானால் அதிலும் அவருக்கு நற்கூலி உண்டு.
ஸஃது இப்னு அபீவக்காஸ் (ரழி)
அவர்களிடம் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "அல்லாஹ்வின் திருப்தியை நாடி நீர்
ஒன்றை செலவிட்டால் நிச்சயமாக அதற்கு நற்கூலியைப் பெறுவீர். உமது மனைவியின் வாயில் ஊட்டிவிடும்
ஒரு கவள உணவிற்காகவும் நன்மை அளிக்கப்படுவீர்.'' ஸஹீஹுல் புகாரி, ஸஹ்ீஹ் முஸ்லிம்)
முஸ்லிம் தனது குடும்பத்தினரை
விட்டு விலகி அவர்களை துன்பத்திலும் பசியிலும் வாடும் நிலையில் விட்டு விடக்கூடாது.
குடும்பத்தினரின் நியாயமான தேவைகளைப் புறக்கணிக்கும் ஆண்களை கடுமையான தண்டனையைக் கொண்டு
எச்சரித்து நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "தான் உணவளிக்க வேண்டியவர்களை வீணடிப்பது
ஒரு மனிதனுக்கு பாவத்தால் போதுமானதாகும்.'' (ஸஹீஹ் முஸ்லிம்)
கருத்து:- தன்னுடைய பிள்ளைகள், குடும்பம் என்று தனது
ஆதரவில் வாழ்ந்து வருபவர்களை அலட்சியப்படுத்தி, அவர்களை சிரமத்தில் விட்டுவிடுவது ஒரு பெரும் குற்றமாகும்.
"பாவத்தால் போதுமானது'' என்பதற்கு பொருள், அல்லாஹ்வின் கோபத்திற்கும் தண்டனைக்கும் ஆளாக இந்தப் பாவமே
போதுமானது என்பதாகும்.
ஆண், பெண்ணிடையே வேறுபாடு
காட்டமாட்டார்:
பெண் குழந்தைகள் பிறந்தால் சிலர் சஞ்சலமடைந்து, பிள்ளைகளெல்லாம் ஆண்
குழந்தைகளாக பிறந்திருக்க வேண்டுமே என்று அதங்கப்படுகின்றனர். பெண் குழந்தைகளைப் பெற்று
அவர்கள் மீது அன்பும் பரிவும் காட்டி, முறையாக வளர்த்து ஆளாக்குபவர்களுக்கு அல்லாஹ் தரும் வெகுமதியை
அவர்கள் அறிந்து கொள்ளவில்லை. அப்படி அறிந்திருந்தால், அந்த நன்மையை அடைய
பெண் குழந்தைகள் வேண்டுமென ஆசை கொண்டிருப்பார்கள்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"எவருக்கு மூன்று பெண் மக்கள் இருந்து அவர்கள் மீது பொறுமை காத்து, நல்ல முறையில் தனது
உழைப்பிலிருந்து அவர்களுக்கு உணவு பானம், உடையளித்து வருகிறாரோ அவருக்கு அப்பெண் மறுமை நாளில் நரக நெருப்பிலிருந்து
காக்கும் திரையாக ஆவார்கள்.'' (முஸ்னத் அஹ்மத்)
மற்றோர் அறிவிப்பில் நபி
(ஸல்) அவர்கள், "எவருக்கு மூன்று பெண்
மக்கள் இருந்து அவர்களை அரவணைத்து, தேவைகளை நிறைவேற்றி, கருணை காட்டி வருவாரோ அவருக்கு நிச்சயமாக சுவனம் உறுதியாகிவிட்டது'' என்று கூறியபோது
கூட்டத்திலிருந்த ஒரு மனிதர் கேட்டார்: "இரு பெண் மக்கள் இருந்தாலுமா இறைத்தூதரே?'' நபி (ஸல்) அவர்கள், "ஆம்! இரு பெண் மக்கள்
இருந்தாலும்'' என்றார்கள்.
அல்லாஹ்விடமுள்ள மகத்தான நற்கூலியை
தெரிந்த பின்னும் தனது பெண் மக்களை பராமரிப்பதில் யார்தான் அசட்டை செய்ய முடியும்? இஸ்லாம் மிக நுட்பமான
மார்க்கம். மனித வாழ்வின் எல்லாக் காலங்களிலும் சூழ்நிலைகளிலும் அவனுக்கு ஏற்படும்
பிரச்னைகளுக்கு சரியான, அறிவுப்பூர்வமான தீர்வை
அளிக்கிறது. சில சமயங்களில் திருமணம் செய்து கொடுக்கப்பட்ட பெண் பிள்ளை "தலாக்' கூறப்பட்டு தாய் வீடு
திரும்புவாள். அப்போது வீட்டில் குழந்தைகள் அதிகமாக இருப்பதாலோ அல்லது வருமானக் குறைவினாலோ
தந்தை மிகுந்த சிரமத்திலும் நெருக்கடியிலும் இருப்பார். அந்நேரத்தில் இஸ்லாம் தந்தையின்
புண்பட்ட உள்ளத்திற்கு அறுதல் அளித்து, பெண்ணுக்கு ஏற்பட்ட துன்பத்தையும் களைகிறது. தலாக் விடப்பட்டு
திருப்பி அனுப்பப்பட்ட பெண்ணுக்கு செலவு செய்வதும் அவளைப் பராமரிப்பதும் மிக உயர்ந்த
தர்மத்தைச் சேர்ந்தது என்று இஸ்லாம் அறிவுறுத்துகிறது.
நபி (ஸல்) அவர்கள், சுராகா அப்னு ஜுஃஷும்
(ரழி) அவர்களிடம் "நான் உமக்கு மகத்தான தர்மத்தை அறிவிக்கட்டுமா?'' என்று கேட்டார்கள்.
அவர் "ஆம் இறைத்தூதரே!'' என்றபோது நபி (ஸல்) கூறினார்கள்: "(கணவன் வீட்டிலிருந்து)
திருப்பி அனுப்பப்பட்ட உமது மகள். உம்மைத் தவிர அவளுக்கு சம்பாதித்து தரக்கூடியவர்
ஒருவருமில்லை'' (அந்நிலையில் அப்பெண்ணை
பராமரித்துக் காப்பது தர்மங்களில் மகத்தான தர்மமாகும்.) (அல் அதபுல் முஃப்ரத்)
நேசம் மிகுந்த இஸ்லாமிய உலகில்
குழந்தைகள் அடையும் இத்தகைய பராமரிப்பு எங்கே! பொருளியலை மையமாகக் கொண்ட மேற்கத்திய
உலகில் குழந்தைகள் அனுபவிக்கும் துன்பங்கள் எங்கே! இரண்டும் நிச்சயமாக சமமாக முடியாது.
அங்கு ஆணோ பெண்ணோ பதினெட்டு வயதை அடைந்துவிட்டால் பெற்றோரின் கண்காணிப்பி லிருந்து
விலகிச் சென்று விடுகிறார்கள். கடுமையான பொருளாதார வாழ்க்கையைச் சந்தித்து, பொருளீட்டுவதில்
பல கஷ்டங்களை அனுபவிக்கிறார்கள். அவர்கள் மீண்டும் பெற்றோரின் அரவணைப்புக்கு திரும்புவதோ, அவர்களின் அன்பை அடைவதோ
மிகச் சிரமமான ஒன்றாகி விடுகிறது.
மனிதனின் வெற்றிக்காகவும்
நற்பாக்கியத்திற்காகவும் அல்லாஹ் வினால் அருளப்பட்ட மார்க்கத்துக்கும், குறையுள்ள மனிதனின்
கேடு விளைவிக்கும் வாழ்க்கை நெறிக்குமிடையேதான் எத்துனை தூரம்!
மேற்கத்திய நாடுகளில் பொருளியல்
சார்ந்த வாழ்க்கை நெறியின் விளைவாக கட்டுப்பாடற்ற, ஒழுங்கீனம் நிறைந்த வாலிபர்களும், திருமணம் செய்துகொள்ளாமல்
கர்ப்பமடைந்து குழந்தை பெற்றுக் கொண்டு வாழ்வை அழித்துக் கொள்ளும் இளம் பெண்களும்
நிறைந்திருப்பதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. அவ்வாறான ஆண் பெண்களின் எண்ணிக்கை ஒவ்வொரு
நாளும் அதிகரித்து வருகிறது.
சிந்தனை, செயலில் எற்படும்
மாற்றங்களைக் கண்காணிப்பார்
மார்க்கப் பற்றுள்ள முஸ்லிம்
தனது மக்களைக் கண்காணித்து,
எதைப் படிக்கிறார்கள், எழுதுகிறார்கள் என்பதை
அறிந்து கொள்ள வேண்டும். தங்களுக்கென எப்படிப்பட்ட விஷயங்களில் ஆர்வம் காட்டுகிறார்கள்
என்பதையும், அவர்கள் தங்களை அறியாமலேயே
எப்படிப்பட்ட செயல்களில் ஈடுபடுகிறார்கள் என்பதையும் கவனிக்க வேண்டும். தமது மக்களுடன்
எல்லா நேரங்களிலும் அல்லது பெரும்பாலான நேரங்களில் இணைந்திருக்கும் அவர்களது நண்பர்களைப்
பற்றியும், ஒய்வு நேரங்களில்
எப்படிப்பட்ட இடங்களுக்குச் செல்கிறார்கள் என்பதையும் அறிந்து கொள்வதற்காக அவர்கள்
அறியாத வகையில் கண்காணிக்க வேண்டும்.
அந்நிலையில் அவர்களது படிப்பில், விருப்பங்களில் எதேனும்
மாற்றங்கள் தெரிந்தால் அல்லது தீய நண்பர்களுடனான தொடர்பு அல்லது சந்தேகத்திற்கிடமான
இடங்களுக்குச் செல்வது அல்லது புகைபிடித்தல், சூதாடுவது போன்ற தீய பழக்கங்களைக் கொண்டிருந்தால் அல்லது நேரத்தை
வீணாக்கி, உடலை பலவீனப்படுத்தும்
வீண் விளையாட்டுகளில் ஆர்வம் காட்டினால் அம்மக்களை மென்மையான, அறிவுப்பூர்வமான அணுகுமுறையின்
மூலம் தடுத்து நேர்வழியின் பக்கம் அவர்களைத் திருப்ப வேண்டும்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"ஒவ்வொரு குழந்தையும் இஸ்லாம் என்ற இயற்கையிலேயே பிறக்கின்றது. அதன் பெற்றோர்களே
அக்குழந்தையை யூதர்களாக அல்லது கிருஸ்துவர்களாக அல்லது நெருப்பை வணங்குபவர்களாக மாற்றி
விடுகிறார்கள்.'' ஸஹீஹுல் புகாரி)
பிள்ளைகளின் அறிவை வளர்த்து, நற்பயிற்சிகளால் அவர்களை
சிறந்தவர்களாக உருவாக்குவது பெற்றோர்களின் கடமையாகும். படிப்பதற்கென தமது மக்கள் தேர்ந்தெடுக்கும்
நூல்கள், அவர்களது அறிவுக்
கண்களைத் திறப்பதாகவும் உயரிய பண்புகளை அவர்களிடம் உருவாக்குவதாகவும் இருக்க வேண்டும்.
அந்நூல்கள் அறிவை அழித்து,
நல்லியல்புகளைச் சிதைத்து, மனதில் நன்மையின்
மீதான ஆர்வத்தை அனைக்கக் கூடியதாக அமைந்துவிடக்கூடாது என்பதில் மிகவும் எச்சரிக்கையுடன்
இருக்க வேண்டும்.
அவர்களது பழக்க வழக்கங்கள்
அவர்களிடம் நன்மையை வளர்க்கக் கூடியதாக இருக்க வேண்டும்; தீமையை அல்ல. சத்தியத்தின்
பிரகாசத்தைத் தூண்ட வேண்டும்; அசத்தியத்தின் நெருப்புக் கங்குகளை அல்ல. நற்குணங்களை வளர்க்க
வேண்டும்; கெட்ட குணங்களை அல்ல.
நண்பன் சுவனத்தின்பால் அழைத்துச் செல்பவராக இருக்க வேண்டும்; நரகத்தின்பால் அல்ல.
சத்தியத்தின்பால் வழிகாட்ட வேண்டும்; அசத்தியத்தின்பால் அல்ல. நேர்மை, வெற்றி, நன்மை, உயர்வுக்கு வழிகாட்ட
வேண்டும்; வழிகேடு, அழிவு, நஷ்டம், பிறருக்கு நோவினை
யளித்தல் போன்ற தீய செயல்களுக்கு அல்ல.
எத்தனையோ நண்பர்களின் நட்பு
அவர்களை தீமையில் வழுக்கி விழச் செய்கிறது, தீமைப் படுகுழியினுள் வீழ்த்திவிடுகிறது. அழிவான சிந்தனைகளை
இதயத்தினுள் திணித்து விடுகிறது. ஆனால் இதைக் கவனிக்க வேண்டிய அவர்களது பெற்றோர்களோ
அலட்சியத்தில் அழ்ந்திருக்கிறார்கள். அவ்வாறு முஸ்லிம் தனது பிள்ளைகளை வளர்த்து பரிபாலிப்பதில்
அவர்களுக்குரிய நூல்கள், நாளிதழ்கள், நண்பர்கள், பொழுதுபோக்குகள், கல்விக்கூடம், ஆசிரியர்கள், சபைகள், செய்தி உடகங்கள் ஆகியவைகளைக்
கண்காணிக்க வேண்டும். அவைகளைத் தேர்வு செய்வதில் மிகக் கவனமாக இருக்கவேண்டும். மேலும்
அவர்களது பண்புகளில் அல்லது கொள்கைகளில் மாற்றம் ஏற்படுவதைக் கண்காணிக்க வேண்டும்.
அவசியம் எற்படும்போது அப்பிள்ளைகள்
விரும்பினாலும் வெறுத்தாலும் அவர்களது காரியங்களில் தலையிட்டு அவர்களுக்கு எந்தப் பாதிப்பும்
எற்படாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சில குடும்பங்கள் தங்களது
பிள்ளைகளை வளர்ப்பதில் வெற்றியடைவதின் ரகசியத்தையும் சில குடும்பங்கள் தோல்வியடைவதின்
ரகசியத்தையும் மேற்கூறிய விளக்கத்திலிருந்து நாம் தெரிந்து கொள்ளலாம்.
பிள்ளை வளர்ப்பு விஷயத்தில்
தங்களது பொறுப்பை உணர்ந்து அதற்கு முக்கியத்துவம் கொடுத்த பெற்றோர்களின் பிள்ளைகள்
அவர்களுக்கும் அவர்கள் வாழும் சமுதாயத்திற்கும் நற்பயன் அளிப்பவர்களாகத் திகழ்கிறார்கள்.
அவ்வாறு பொறுப்பை உணராமல் அக்கடமையை பாழாக்கியவர்களின் பிள்ளைகள் அவர்களுக்கும் சமுதாயத்திற்கும்
கேடாக அமைந்து, இவ்வுலக, மறு உலக வாழ்வின்
சோதனையாக மாறிவிடுகிறார்கள்.
"விசுவாசிகளே! உங்கள்
மனைவிகளிலும் உங்கள் சந்ததிகளிலும் நிச்சயமாக உங்களுக்கு விரோதிகளும் இருக்கின்றனர்''. ஆகவே அவர்களைப் பற்றி
நீங்கள் எச்சரிக்கையாக இருந்து கொள்ளுங்கள்... (அல்குர்அன் 65:14)
பெற்றோர்கள் நேரான வழியில்
உறுதியாக இருந்து, பிள்ளை வளர்ப்பில்
தங்களது கடமைகளை அறிந்து,
முறையாக அந்தப் பொறுப்புகளை
நிறைவேற்றினால் பிள்ளைகள் ஒருபோதும் அவர்களுக்கு விரோதியாக மாட்டார்கள்.
சமத்துவம் பேணுவார்:
முஸ்லிம் தந்தையின் அறிவார்ந்த
நடைமுறைகளில் ஒன்று அவர் தனது மக்களிடையே சமத்துவம் பேணுவதாகும். எல்லா விஷயங்களிலும்
அவர்களில் ஒருவரை விட மற்றவருக்கு தனிச்சிறப்பு வழங்கக்கூடாது. ஏனெனில், தமக்கும் பிற சகோதரர்களுக்குமிடையே
காட்டப்படும் சமத்துவத்தையும், நீதத்தையும் உணரும் பிள்ளை சீரான சிந்தனையைக் கொண்டிருப்பார்.
குறைபாடுகளிலிருந்து நீங்கி, ஏனைய சகோதரர்கள் மீது பொறாமை கொள்ளாமல் இருப்பார். சமத்துவமாக
வளர்க்கப்படும் பிள்ளைகளிடத்தில் பிறரை நேசித்தல், தன்னைவிட பிறரைத் தேர்ந்தெடுத்தல், பிறருக்கு உபகாரம்
செய்தல் போன்ற நற்குணங்கள் குடிகொள்ளும். அதனால்தான் பிள்ளைகளிடையே சமத்துவத்தைப்
பேணுமாறு இஸ்லாம் வலியுறுத்துகிறது.
நுஃமான் அப்னு பஷீர் (ரழி)
அவர்களின் தந்தை நுஃமான் (ரழி) அவர்களை நபி (ஸல்) அவர்களிடம் அழைத்து வந்து கூறினார்கள்:
"எனது அந்த மகனுக்கு ஒர் அடிமையை அன்பளிப்பாக தந்துள்ளேன்.'' நபி (ஸல்) அவர்கள்
கேட்டார்கள்: "உங்களது அனத்து பிள்ளைகளுக்கும் அது போன்ற அன்பளிப்புச் செய்தீரா? அவர் "இல்லை' என்றார். நபி (ஸல்)
அவர்கள், "அந்த அடிமையைத் திரும்ப
வாங்கிக்கொள்' என்றார்கள்.
மற்றோர் அறிவிப்பில் நபி
(ஸல்) அவர்கள் "இதை உமது அனத்து பிள்ளைகளுக்கும் செய்தீரா?'' என்று கேட்டார்கள்.
அவர் "இல்லை'' என்றார். நபி (ஸல்)
அவர்கள், "அல்லாஹ்வை அஞ்சிக்
கொள்ளுங்கள். உங்களது பிள்ளைகளிடையே நீதமாக நடந்து கொள்ளுங்கள்'' என்று கூறினார்கள்.
நுஃமான் (ரழி) கூறினார்கள்: உடனே எனது தந்தை இல்லத்திற்கு வந்து அந்த அன்பளிப்பை திரும்பப்
பெற்றுக்கொண்டார்.
மற்றோர் அறிவிப்பில் நபி
(ஸல்) அவர்கள்: "பிஷ்ரே! உமக்கு இவரைத் தவிர வேறு குழந்தைகள் இருக்கிறார்களா?'' என்று கேட்டார்கள்.
அவர் "ஆம்'' என்றார். நபி (ஸல்)
அவர்கள் "உமது எல்லா மக்களுக்கும் அவ்வாறு அன்பளிப்புச் செய்தீரா?'' என்று கேட்டார்கள்.
அவர் "இல்லை'' என்றார். அப்போது
நபி (ஸல்) அவர்கள் "என்னை சாட்சியாக்காதீர்கள். நான் ஒரு குற்றச்செயலுக்கு சாட்சியாக
இருக்க மாட்டேன்'' என்றார்கள். பின்பு
கேட்டார்கள்: "உம்மக்கள் அனைவரும் உமக்கு உபகாரம் செய்வதில் சமமாக இருக்க வேண்டுமென
ஆசைப்படுகிறீரா?'' அவர் "ஆம்'' என்றார். நபி (ஸல்)
அவர்கள் "அப்படியானால் அதைச் செய்யாதீர்'' என்று கூறினார்கள். ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)
உண்மை முஸ்லிம் தமது பிள்ளைகளுக்கு
செலவிடுதல், அன்பளிப்பு செய்தல்
போன்ற எல்லா விஷயங்களிலும் ஒருவரைவிட மற்றவருக்கு முன்னுரிமை அளிக்கக்கூடாது. அப்போதுதான்
பிள்ளைகள் அனவரும் பெற்றோருக்காக துஆ செய்து உண்மையான அன்பையும், கண்ணியத்தையும் வெளிப்படுத்துவார்கள்.
உயர்பண்புகளை வளர்ப்பார்:
உபகாரம், மகிழ்ச்சி, போதுமென்ற தன்மை
ஆகிய குணங்களால் அலங்காரம் பெற்ற உள்ளங்களைக் கொண்டுதான் பிள்ளைகளை மிக உயர்ந்த ஸ்தானத்திற்கு
பெற்றோர்களால் கொண்டுபோக முடியும். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நற்பாக்கியம் அல்லாஹ் விடமிருந்து
கிடைக்கிறது. ஒழுக்கம் பெற்றோரிடமிருந்து கிடைக்கிறது.'' (அல் அதபுல் முஃப்ரத்)
மார்க்க அறிவுள்ள முஸ்லிம்
தமது பிள்ளையின் உள்ளத்தினுள் நுட்பமான வழிகளைக் கொண்டு ஊடுருவி உயர் பண்புகளையும்
நல்லறிவையும் எப்படி விதைப்பது என்று அறிந்திருப்பார்.
குழந்தை வளர்ப்பின் நுட்பமான
வழிமுறைகள்:
1. பெற்றோர் தன்னை அழகிய முன்மாதிரியாக ஆக்க வேண்டும்.
2. பிள்ளைகளுடன் மனம் விட்டு கலந்து பழகவேண்டும்.
3. அவர்களை முகமலர்ச்சியுடன் அரவணைத்து அன்பு காட்ட வேண்டும்.
4. அவர்களுக்கு ஊக்கமளித்து உற்சாகமூட்ட வேண்டும்.
5.அனைத்து பிள்ளைகளுடனும் அன்புடன் நடந்து நீதத்தையும் சமத்துவத்தையும்
பேணவேண்டும்.
6.முற்றிலும் பலவீனமடைந்துவிடாமல் நளினமாகவும், கொடூரத்தனமின்றி
சற்று கடினமாகவும் அவர்களுக்கு உபதேசித்து நேர்வழிகாட்டி செம்மைப்படுத்த வேண்டும்.
நேர்மையான, திறந்த சிந்தனையுள்ள, பொறுப்புகளை ஏற்றுக்
கொள்வதற்கு தகுதியான, தயாளத்தன்மை பெற்ற
நல்ல பிள்ளைகளை அதுபோன்ற சூழ்நிலைதான் உருவாக்க முடியும். இஸ்லாமிய அடிப்படையையும்
குர்ஆனின் கட்டளைகளையும் பின்பற்றும் நல்ல குடும்பங்களில் அவ்விஷயத்தை தெளிவாகக் காணலாம்.
அல்லாஹ்வின் மார்க்கத்தையே
நாங்கள் பின்பற்றுவோம். அல்லாஹ்வை விட மார்க்கத்தால் மிக அழகானவன் யார்? நாம் அவனையே வணங்குவோம்
என்றும் கூறுவீராக! (அல்குர்அன் 2:138)
பெற்றோர்களே பிள்ளைகளை
கண்காணிக்கிறீர்களா?
பெற்றோர்கள் தமது பிள்ளைகளை
கண்காணித்து கணினியில் எதைப்படிக்கிறார்கள் எழுதுகிறார்கள் என்பதையும் எதனைப் பார்க்கிறார்கள்
என்பதையெல்லாம் கவனமாக கவனித்துக்கொண்டே வரவேண்டும். அவர்கள் எதில் ஆர்வம் காட்டுகிறார்கள்
எப்படிப்பட்ட செயல்களில் ஈடுபாடு காட்டுகிறார்கள் என்பதையும் கவனிப்பதுடன் பிள்ளைகளுடன்
சேர்ந்து உட்கார்து உறையாடி அவர்களின் நன்பர்களைப் பற்றியும் பள்ளி முடிந்ததும் வேறு
எங்கும் செல்கிறார்களா என்பதையும் கண்கானிக்க வேண்டும்.
அவர்கள் படிக்கும் நிலையில் அவர்களுக்கு படிப்பின் மீது ஆர்வம் இல்லாமலிருந்தால்
அதற்கான காரணத்தை கண்டறிவதுடன் அவர்கள் தீய நண்பர்களுடன் தொடர்பு கொண்டிருக்கின்றனரா
தீய இடங்களுக்கு செல்கின்றனரா புகை பிடித்தல் பழக்கம் உள்ளனவா என அவர்கள் அறியாத வண்ணம்
கண்கானித்து பிள்ளைகளிடம் மென்மையான முறையில் தீய பழக்கத்தின் கெடுதிகளை உணர்த்தி நேர்
வழியின் பக்கம் கொண்டு வரவேண்டும்.
எனவே தான் நபி ஸல் அவர்கள்
பின்வருமாறு கூறினார்கள்:“ஒவ்வொரு குழந்தையும்
இஸ்லாத்தில் தான் பிறக்கிறது. அதனது பெற்றோர்களே அதனை யஹூதியாக, கிறிஸ்தவராக, நெருப்பு வணங்கியாக
மாற்றி விடுகின்றன.” (ஸஹீஹுல் புகாரி)
பிள்ளைகள் படிப்பதற்காக தேர்ந்தெடுக்கும்
நூல்கள் அவர்களது அறிவைப் பெருக்கும் நூல்களா அல்லது சினிமா அல்லது ஆபாசம் கலந்த கதைகளை
படிக்கின்றனரா எனவும் கண்கானிக்க வேண்டும்.
சில நூல்கள் அறிவை அழித்து நற்பண்புகளை சிதைக்கக்கூடியதான நூல்களை படிப்பதிலிருந்து
குழந்தைகளை பாதுகாக்க வேண்டும். அவர்களது பழக்க வழக்கங்கள்
பொழுது போக்குகள் அவர்களிடம் நன்மையை வளர்க்கக்கூடியதாக இருக்க வேண்டும். நன்பர்கள் நன்மையின் பக்கம் செல்பவர்களாகவும் தீமையை
வெறுக்கக்கூடியவர்களாகவும் இருக்க வேண்டும். எத்தனையோ நன்பர்களின் நட்பு அவர்களை தீமையின்
பக்கம் சென்று வழி தவறிவிடுகிறார்கள். இதனை
கண்காணிக்க வேண்டிய பெற்றோர்கள் அலட்சியத்தில் ஆழ்ந்து விடுகிறார்கள்.
பெற்றோர்கள் அவசியம் ஏற்படும்பொழுது
அந்தப் பிள்ளைகள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அவர்கள் நடத்தையில் ஏற்படும் மாற்றத்தையும்
கண்கானித்து அவர்களது காரியங்களில் தலையிட்டு அவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாமல்
உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். சில குடும்பங்கள் தங்களது
பிள்ளைகளை வளர்ப்பதில் வெற்றியடைவதின் ரகசியத்தையும் சில குடும்பங்கள் தோல்வியடைவதின்
ரகசியத்தையும் இந்த விளக்கத்திலிருந்து நாம் தெரிந்து கொள்ளலாம்.
பிள்ளை வளர்ப்பு விஷயத்தில்
தங்களது பொறுப்பை உணர்ந்த பெற்றோர்கள் அதற்கு முக்கியத்துவம் கொடுத்ததினால் அவர்கள்
வாழும் சமுதாயத்திற்கும் நன்மை செய்தவர்களாகவும், இவ்வாறு பொருப்பை உணராமல் அந்த கடமையைப் பாழாக்கியவர்களின்
பிள்ளைகள் சமுதாயத்திற்கு கேடாக அமைந்து இவ்வுலகிலும் மறு உலகிலும் துன்பமே அடைவார்கள்.
“நிச்சயமாக உங்கள் செல்வமும், உங்கள் குழந்தைகளும் (உங்களுக்குச்) சோதனையாக இருக்கின்றன; நிச்சயமாக அல்லாஹ்விடத்தில்
தான் மிகவும் உயர்ந்த நற்கூலி உண்டு” என்பதை நீங்கள் நன்கு அறிந்து கொள்ளுங்கள். (அல்குர்ஆன் 8:28) பெற்றோர்கள் நேரான வழியில் உறுதியாக இருந்து பிள்ளைகளை வளர்ப்பதில் தங்கள் கடமைகளை பொறுப்புகளை
முறையாக நிறைவேற்றினால் அந்தப் பிள்ளைகள் ஒரு போதும் அவர்களுக்கு எதிரியாக மாட்டார்கள்.
காலத்தின் தேவையும்,பெற்றோர்களின் அவசியமும்
குழந்தை வளர்ப்பு...
இறைவன் நமக்கு அளித்த செல்வங்களில்
மிகச் சிறந்த செல்வம் 'குழந்தைகள்' என்று சொன்னால் அது
மிகையன்று. திருமணம் ஆனதும் அடுத்ததாக புதுமணத் தம்பதிகளின் எதிர்ப்பார்ப்பு குழந்தைக்குத்தான். சிலருக்கு இறைவனின்
கருணையால் குழந்தைப் பேறும் கிடைத்துவிடுகின்றது. ஆனால் கிடைத்த குழந்தைகளை நல்ல முறையில்
வளர்த்து ஆளாக்குகிறார்களா?
குழந்தை வளர்ப்பு என்பது அந்தக்
குழந்தையை பாலூட்டி, சீராட்டி, நடை பயிலும் காலம்வரை
கண்காணிப்பது மட்டுமல்ல. உண்மையிலேயே பால்குடிப் பருவம் முதல் நடை பயின்று பள்ளிப்
பருவம் வரை அன்போடு வளர்ந்த எத்தனையோ குழந்தைகள் பெரியோர்கள் ஆனதும் ஒழுங்கீனத்தில்
ஊற்றுக்கண்களாக நடப்பு சமுதாயத்தில் கெட்ட முன்மாதிரியாக உருவெடுப்பதைக் காணமுடிகின்றது.
இன்னும் சிலர், பெற்றோர்களோ பெருமிதம்
கொள்ளும் அளவிற்கு நன்நடைத்தைகளும், தொழுகை போன்ற வணக்கங்களிலும் சிறந்து விளங்குவதைப் பார்க்கின்றோம்.
அவர்களது பழக்க வழக்கங்கள்
பொழுது போக்குகள் அவர்களிடம் நன்மையை வளர்க்கக்கூடியதாக இருக்க வேண்டும். நன்பர்கள்
நன்மையின் பக்கம் செல்பவர்களாகவும் தீமையை வெறுக்கக்கூடியவர்களாகவும் இருக்க வேண்டும்.
எத்தனையோ நன்பர்களின் நட்பு அவர்களை தீமையின் பக்கம் சென்று வழி தவறிவிடுகிறார்கள்.
இதனை கண்காணிக்க வேண்டிய பெற்றோர்கள் அலட்சியத்தில் ஆழ்ந்து விடுகிறார்கள்.
பெற்றோர்கள் அவசியம் ஏற்படும்பொழுது
அந்தப் பிள்ளைகள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அவர்கள் நடத்தையில் ஏற்படும் மாற்றத்தையும்
கண்கானித்து அவர்களது காரியங்களில் தலையிட்டு அவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாமல்
உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்.
சில குடும்பங்கள் தங்களது
பிள்ளைகளை வளர்ப்பதில் வெற்றியடைவதின் ரகசியத்தையும் சில குடும்பங்கள் தோல்வியடைவதின்
ரகசியத்தையும் . இன்று உலக அளவில் பார்க்கிறோம்.
பிள்ளை வளர்ப்பு விஷயத்தில்
தங்களது பொறுப்பை உணர்ந்த பெற்றோர்கள் அதற்கு முக்கியத்துவம் கொடுத்ததினால் அவர்கள்
வாழும் சமுதாயத்திற்கும் நன்மை செய்தவர்களாகவும், இவ்வாறு பொருப்பை உணராமல் அந்த கடமையைப் பாழாக்கியவர்களின்
பிள்ளைகள் சமுதாயத்திற்கு கேடாக அமைந்து இவ்வுலகிலும் மறு உலகிலும் துன்பமே அடைவார்கள்.
“நிச்சயமாக உங்கள் செல்வமும், உங்கள் குழந்தைகளும் (உங்களுக்குச்) சோதனையாக இருக்கின்றன; நிச்சயமாக அல்லாஹ்விடத்தில்
தான் மிகவும் உயர்ந்த நற்கூலி உண்டு” என்பதை நீங்கள் நன்கு அறிந்து கொள்ளுங்கள். (அல்குர்ஆன்
8:28)
பெற்றோர்கள் நேரான வழியில்
உறுதியாக இருந்து பிள்ளைகளை வளர்ப்பதில் தங்கள் கடமைகளை பொறுப்புகளை முறையாக நிறைவேற்றினால்
அந்தப் பிள்ளைகள் ஒரு போதும் அவர்களுக்கு எதிரியாக மாட்டார்கள்.
உங்கள் குழந்தையை ஏழு வயதை
அடைந்தால் தொழும்படி ஏவுங்கள் 10 வயது அடைந்தால் அடித்தாவது தொழ வையுங்கள் என்று நபி(ஸல்) அவர்கள்
கூறினார்கள். நூல் அஹ்மத். லுக்மான் (அலை) அவர்கள் தன்
மகனுக்கு, மகனே! தொழுகையை நிலை
நாட்டுவாயாக (அல்குர்ஆன் 31:17)
குழந்தைக்கு கல்வி
குழந்தைகள் முதலில் கற்கும்
கல்வி தாயிடமே. அந்த தாய் எதை சொல்லி தருகிறாளோ அதுவே பசு மரத்தாணி போல் உள்ளத்தில்
பதிந்து விடும். ஒரு தாய் நினைத்தால் தன் குழந்தையை எப்படிப்பட்டவர்களாகவும் உருவாக்க
முடியும் இது தாயின் கடமையும் கூட. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்
ஒவ்வொருவரும் உங்களின் பொறுப்புகளைப் பற்றி விசாரிக்கப்படுவீர்கள் ஒரு பெண் தன் கணவனின்
வீட்டிற்கும், அவனின் குழந்தைகளுக்கும்
பொறுப்பாளி ஆவாள். அறிவிப்பாளர் உமர் (ரலி) அவர்கள் (புகாரி 2554.)
ஆகவே, தாய் குழந்தைகளுக்கு
முதலில் மார்க்க கல்வியை கற்று தரவேண்டும் அதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இதில்
தான் மறுமை வெற்றி உண்டு தினமும் காலை மாலை குர்ஆன் பாடம் சொல்லி கொடுக்க வேண்டும்
இரவில் தூங்கும் போது குழந்தைகளுக்கு (முன்னோர்கள்) பாட்டி கதை சொல்வார்கள் தற்போதுள்ள
குழந்தை சினிமா, சீரியல், கிரிக்கெட் இன்னும்
பல. இதை தவிர்த்துவிட்டு குழந்தைகளுக்கு நபி (ஸல்) அவர்களின் போதனைகளை அழகிய முறையில் எடுத்துச் சொல்ல வேண்டும்.
உதாரணமாக குகைவாசிகள் ஹதீஸ்
உள்ளது. மூவர் பாறைக்குள் நுழைந்து கொண்டார்கள் பாறை மூடியது அப்போது ஒவ்வொருவடைய பிரார்த்தனையால்
வெளிவே வந்தார்கள் அதில் ஒருவர் தன் தாய்க்கும், தந்தைக்கும் செய்த பணிவிடையால் பாறை விலகியது. இந்த
ஒரு செய்தியை மட்டும் வைத்து அழகாக சொல்லலாம். அப்படியே குழந்தைகள் உள்ளத்தில் பதிந்து
விடும். பிறகு பாருங்கள் அந்த குழந்தை தாய் தந்தையருக்கும் செய்ய வேண்டிய முதல் கடமையை
சிறு வயது முதல் அறிந்து கொள்வார்கள். இஸ்லாத்தில் முதல் வணக்கம் அல்லாஹ்வுக்கு அடுத்த
தாய் தந்தையர்களுக்குதான் என்று 17:23 என்ற வசனத்தில் அல்லாஹ் எச்சரிக்கின்றான்.
அடுத்து குழந்தைகள் மார்க்க
கல்வி பயில சரியாக செல்கிறார்களா பள்ளிக்கூடம் சரியாக போகிறார்களா நல்ல நண்பர்களோடு
பழகுகிறார்களா? காசை வீண்விரயம் செய்யாமல்
நல்ல செலவு செய்கிறார்களா?
என்று பல அம்சங்களை
கவனிக்க வேண்டும் மேலும் நேற்றைய படிப்புக்கும் இன்றைய படிப்புக்கு குழந்தையிடம் என்ன
வித்தியாசம் உள்ளது என்று கவனிக்க வேண்டும். புதிய நண்பர்கள் உருவாகும் போது அவர்களுடைய
பழக்கங்களையும் ஆராய வேண்டும் முதலில் தொழுகை உள்ளதா? என்று கவனிக்க வேண்டும்
எந்த அளவிற்கு குழந்தையை கவனிக்கிறீர்களோ அந்த அளவிற்கு குழந்தையின் வெற்றியை காண்பீர்கள்.
எவருக்கேனும் பிள்ளை பிறந்தால், அப்பிள்ளைக்கு நல்ல
பெயர் வைக்கவும், நல்ல ஒழுக்கங்களைக்
கற்றுக் கொடுக்கவும், வாலிப வயதை அடைந்து
விட்டால் மணமுடித்து வைக்கவும். பருவமடைந்த பின்னரும்(தனது அலட்சியப் போக்கின் காரணமாக)
மகனுக்கு மணமுடித்து வைக்கவில்லையென்றால், அவன் பாவத்தில் வீழ்ந்துவிட்டால் அந்த பாவம் அவனுடைய தந்தையைச்
சேரும். பைஹகி-401
நபி ஸல் அவர்கள் கூறுகிறார்கள்:உங்கள்
குழந்தைகள் ஏழு வயது எட்டும்வரைஅவர்களுடன் விளையாடுங்கள்.அடுத்த ஏழு வயதில் அவர்களுக்கு
கல்வியூட்டுங்கள்.அடுத்த ஏழு வயதில் அவர்களுடன் இணக்கமாகுங்கள். அஹ்மத், நஸயி.
அல்லாஹ்வின் தூதர் எவ்வளவு
அழகிய ஒரு வழிகாட்டலை குழந்தை வளர்ப்பில் ஒரு வரைபடம் போல காட்டிஉள்ளார்கள்... குழந்தைகளுடன் விளையாட
வேண்டுமாம்...
எத்தனை வயது வரை????
நன்றாய் கேளுங்கள்....?
7 வயது வரை.....!!!!
நாம் தான் 2 வயது ஆன உடனே குழந்தையின்
சேட்டைகளை ரசிக்காத கல் நெஞ்சம் கொண்டவர்கள் ஆயிற்றே!!!!! உடனே பிளே ஸ்கூல் எங்கே இருக்குனு
தேடிப் பிடித்து கொண்டு போய் சிறை வைத்து விடுகிறோமே???
அடுத்த ஏழு வயதில் கல்வி கொடுக்கணுமாம்?!
அதற்கு அடுத்த ஏழு வயது அதி
முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய பருவ வயது அல்லவா!! அந்த வயதில்தான் நாம் செல்போன்,லேப்டாப் தனியாக வாங்கி கொடுக்கிறோம்.....
அப்பொழுதுதான் இணக்கமாக இருக்க ஒவ்வொரு பெற்றோருக்கும் அறிவுரை சொல்கிறார்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொருவருக்கு
பொறுப்பாளிகள். உங்களின் பொறுப்பை பற்றி கேள்வி கேட்கப்படுவீர்கள். புகாரி.
பருவ வயதில் நம் பிள்ளைகள்
வழி தவறியதென்றால் பெற்றோர்களிடம் அல்லாஹ் விசாரிப்பான் என்ற அச்சம் நம் அனைவருக்கும்
வேண்டும். இன்னும் நமது குழந்தைகளுக்கு நாம் வழங்க வேண்டியவை ஏராளம். அன்பு, ஆதரவு, பாராட்டு, சுதந்திரம், வெற்றி என பல விசயங்கள்
அதில் அடங்கும்...
பிள்ளைகளை ஸ்கூலுக்கு அனுப்பும்
முன்பே வீட்டிலேயே தாய் சிறிய துஆக்கள், குட்டி குட்டி சூராக்கள், சலவாத் சொல்வது நற்பண்புகளை வளர்க்கும் ஹதீஸ்கள்
போன்றவற்றை சொல்லி வளர்ப்பது கட்டாயமாகும்.... இன்னும் ஆண்களுக்கு
நபி ஸல் அவர்கள் இடும் கட்டளை....உங்கள் தொழுகைகளை சிலவற்றை வீட்டில் மேற்கொள்ளுங்கள்.
உங்கள் வீடுகளை மண்ணறைகளாக ஆக்கிவிடாதீர்கள்.புகாரி
உலகத்தில் எல்லா பெற்றோர்களும்
தம் குழந்தைகள் மீது பாசம்,
அன்பு, நேசம், அக்கறை கொண்டிருப்பார்கள்.
இது இயற்கையான ஒன்று, இந்த அன்பில், அக்கறையில் எந்த கலப்படமும், வேறுபாடும் இருக்காது.
ஆனால் எல்லா பெற்றோர்களுக்கும் கருத்துக்கள், எண்ணங்கள், ஆசைகள், விருப்பங்கள், கனவுகள், பண்பாடுகள், யுக்திகள் இப்படி எல்லாமே வித்தியாசப்படும். அவரவர் விருப்பப்படி
தம் குழந்தைகளை வளர்ப்பார்கள். குழந்தைகளின் வளர்ப்பில் பலவித யுக்திகளை கையாள்வார்கள்.
இப்படி குழந்தைகளின்
வளர்ப்பில் பல வித்தியாசங்கள்
காணப்படும். இதில் சரியான முறையில் வளர்ப்பவர்கள் யார்? யார்? இதனால் பெற்றோருக்கு
என்ன லாபம், தொடர்பு இவைகளை நாம்
காணலாம்.என்னைப் பொருத்தவரையில் எனது கருத்துப்படி எல்லா பெற்றோர்களுக்கும் சில தகுதிகள்
அவசியம் தேவை. அது முதலில் அவரவர் தத்தம் குழந்தைகளின் மனதை நன்கு அறிந்தவர்களாக இருக்க
வேண்டும். அப்போதுதான் குழந்தைகளின் நல்ல
குணங்களை கண்டறிந்து ஊக்கமளித்து
வழிநடத்தி செல்ல முடியும். அதுபோன்ற ஊக்கமும், ஒத்துழைப்புகளும்தான் அவர்களை வாழ்க்கையில் மென்மேலும் உயரச்செய்யும்.
இது போன்ற நற்காரியங்கள்தான் ஒரு பெற்றோரை நல்லவர்கள் என அடையாளங் காட்டும்
தகுதிகள்
ஒரு நல்ல பெற்றோருக்கு அவசியம்
சில தகுதிகள் வேண்டும். அது போன்ற தகுதிகள் தான் அவர்கள், குழந்தைகளை வளர்த்து
பெரிய மனிதர்களாகச் செய்வதுடன் நல்ல குடும்ப தலைவர்களாகவும் நல்ல கணவன், மனைவியாகவும் இருக்கச்
செய்யும்.
ஒரு நல்ல பெற்றோர் எப்போதும்
தனது குழந்தைகளை அடுத்தவர் முன்பு தரம் தாழ்த்தி பேச மாட்டார்கள் என்பது என்னுடைய கருத்து.
மற்றவர் முன்பு தம் குழந்தைகளை குறைத்து மதிப்பிடுவது தரம் தாழ்த்தி பேசுவது மரியாதைக்
குறைவாக பேசுவது, குற்றம் சொல்வது, கிண்டல், கேலி இதுபோன்ற காரியங்கள்
குழந்தைகளின் மனநிலையை பாதிப்பதுடன் பெற்றோர்கள் மீது வெறுப்பையும், இடைவெளியையும் உண்டாக்கும்.
அதுபோல் ஒரு குழந்தையை மற்றொரு குழந்தையுடன் ஒப்பிட்டு பேசுவதும் கூடாது.
மேலும் பெற்றோர்கள் தங்கள்
விருப்பங்கள், ஆசைகளை பிள்ளைகள்
மீது திணிக்கக்கூடாது, அவ்வாறு கட்டாயப்படுத்துவதால்
அவர்களால் எதையும் ஒழுங்காக செய்ய இயலாமல் போய்விடும். எனவே குழந்தைகளின் மனதை நன்கு
அறிந்து அவர்கள் விருப்பத்தை ஆதரித்து ஊக்கமளிக்க வேண்டும். சிலர் குழந்தைகளிடம் சரிசமமாக
‘இந்த சிறு வயதில்
உனக்கு இவ்வளவு பிடிவாதமா?’
‘உனக்கு என்ன தைரியம் எங்களைவிட நீ பெரிய மனுஷனா’ என்று வாதம் செய்வதுண்டு. இது மிகவும் நல்லதல்ல
குழந்தைகளின் அறிவையும் முடக்கிவிடும். குழந்தைகள் தானே என்று குறைவாக எண்ணாமல் அவர்களை
அவர்கள் விருப்பத்திற்கேற்ப செயல்பட விடவேண்டும். அவர்களையும் மதித்து சிறுவயதில் அவர்களை
மரியாதையோடு நடத்தினால் அதற்கான பெருமைகள் அனைத்தும் பெற்றோரையே சாரும்.
மேலும் ஒரு குறிப்பிட்ட வயதிற்கு
பிறகு குழந்தைகளிடம் நம்முடைய குடும்ப விஷயங்கள் அனைத்தையும் பற்றி பேசுவது, விவாதிப்பது, ஆலோசனைகள் செய்வது, தீர்மானம் எடுப்பது, பொதுவான விஷயங்கள்
பற்றியும் மனம் விட்டு பேசுவது, நல்லது மற்றும் கெட்டது போன்றவற்றை விவாதிப்பது போன்ற காரியங்கள்
குடும்பத்தில் நன்மையை உண்டாக்கும். அதுமட்டுமல்லாமல் பெற்றோருக்கும், பிள்ளைகளுக்கும் இடைவெளியை
விட்டு நெருக்கத்தை உண்டாக்குவது மட்டுமல்லாமல் பிள்ளைகள் சமுதாயத்தில், பொது இடங்களில் பேச, பழக தைரியத்தையும்
உண்டாக்கும். மேலும் குழந்தைகள் முன் பெற்றோர்கள் சண்டையிட்டுக் கொள்வது தவறாகப் பேசிக்கொள்வதும்
கூடாது, இதுவும் குழந்தைகளின்
மனதை பாதிக்கும். குழந்தைகளிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும், எப்படி நடந்து கொள்ளக்
கூடாது போன்றவைகளும் பெற்றோர்களின் முக்கியமான தகுதிகள் ஆகும்.
பெற்றோர்களின் முக்கியமான
கடமைகள்
பெற்றோர்களின் மிக முக்கியமான
கடமையாவது, தாம் பெற்ற குழந்தைகளுக்கு
உண்ண உணவு, உடுக்க உடை, தங்குவதற்கு இடம், அறிவு, கல்வி, ஆதரவு, அன்பு மற்றும் பாசம்
போன்றவைகளை அளிப்பது மிக முக்கியமான கடமைகளாகும். எத்தனையோ பெற்றோர்கள் எவ்வளவு பெரிய
கஷ்டத்திலும், தாங்கள் கஷ்டப்பட்டாலும்
தங்களின் பிள்ளைகள் கஷ்டப்படக் கூடாது என்று அவர்களுக்கு கஷ்டம் தெரியாமல் நல்லபடியாக
படிக்க வைத்து அவர்களை நல்வழியில் வழிநடத்தி பெரிய மனிதர்களாகவும் நல்ல மனிதர்களாகவும், செய்வதுண்டு. இது
பெற்றோர்களின் தியாகம் மட்டுமல்ல இதுவும் கடமைகளில் ஒன்று. என்பது எனது கருத்து.
மேலும், ஒருவருக்கு இரண்டு
குழந்தைகளோ அதற்கு மேற்பட்டோ இருப்பின் ஒரு குழந்தைக்கும் மற்றொரு குழந்தைக்கும் இடையில்
பாகுபாடு காட்டக்கூடாது. இது மனித இயல்பு நம்மில் எல்லோர்க்குமே ஒன்றின் மீது மட்டுமே
ஆசையும், கவனமும் அதிகம் இருக்கும்
அவ்வாறு ஒரு குழந்தையின் மீது மட்டும் நாம் அதிக பாசம், அன்பு கொள்ளலாம் அவ்வாறு
இருப்பினும் நாம் அதை அதிகம் வெளியில் காட்டிக் கொள்ளக் கூடாது. எல்லோரையும் ஒரே சமமாக
நடத்தவேண்டும் அது அவர்களின் மனநிலையை அதிகம் பாதிப்பதுடன் தாழ்வு மனப்பான்மையை உண்டாக்கும்.
நாம் நம் குழந்தையை கண்டிப்பாக
நம்ப வேண்டும். அவ்வாறு நம்புவதால் மட்டுமே குழந்தைகள் சரியாக இருக்கும் என்று அர்த்தம்
கொள்ள முடியாது. ஆதலால் நாம் அவசியம் அவர்களை படிக்கின்ற இடம், விளையாடுகின்ற இடம், பழகுகின்ற இடம், பழகும் நண்பர்களையும்
கண்கானித்து வரவேண்டும். நம்புவதும் நம்பிக்கையை வளர்ப்பதும் பெற்றோர்களின் கடமைகளில்
ஒன்று. பெற்றோர்கள் முடிந்தவரை பெற்றோராக, தாயாக, தந்தையாக, அவர்களே சகோதர, சகோதரிகளாக, நண்பர்களாக, நல்ல ஆலோசகராக, ஆசிரியர்களாக, வழிகாட்டியாக, சில நேரங்களில் குழந்தையாக நடந்து கொள்வதும் பெற்றோர்களின் கடமையாகும்
இஸ்லாமியப் பார்வையில்
ஒரு நல்ல பெற்றோர்
எல்லா மதமும் அன்பையே போதிக்கின்றன.
ஆனால் இஸ்லாத்தின் சட்டதிட்டங்கள் எல்லாவற்றிற்கும் நேர் மாறானது. உண்மையும்கூட, உலகத்தில் உள்ள சட்டதிட்டங்கள்
அனைத்தும் மனிதர்களால் மனிதர்களுக்;காக உண்டாக்கியது. ஆனால் இஸ்லாமிய சட்டதிட்டங்களோ இறைவனால் மக்களுக்காக
இறக்கி வைக்கப்பட்டது. மற்ற மதங்களைப்போல இஸ்லாமியர்கள் அவரவர் விருப்பத்திற்கு வாழமுடியாது.
அல்லாஹ்வினால் அனுப்பிவைக்கப்பட்ட இறைத்தூதர் நபிகள் நாயகம் முஹம்மது(ஸல்) அவர்களின்
வழியே நடக்க வேண்டியது கட்டாயமாகும்.
ஒரு நல்ல பெற்றோர் எப்படி
இருக்கவேண்டும். உண்மையான,
அன்பான, முறையான கணவன் மனைவியாக
இறைவனை ஜந்து வேளை தொழுது குழந்தைகளையும் சிறு வயது முதலே தொழவும், ஓதவும், தீன் வழியில் ஈடுபடவும்
செய்ய வேண்டும். இஸ்லாத்தின் கடமைகளை பெற்றோர்களும் பின்பற்றி பிள்ளைகளையும் கட்டாயமாக
பின்பற்றச் செய்ய வேண்டும். இஸ்லாத்தின் மார்க்க விஷயங்களை பிள்ளைகளுக்கு போதித்து
அதை முறையாக பின்பற்ற செய்யவைப்பது பெற்றோர்களின் மிகப்பெரிய கடமை மார்க்க விஷயங்களைக்
கற்று அதைப் பின்பற்றச் செய்வதில் பிள்ளைகளை ஆர்வம் காட்ட வேண்டும்.
நாமும் நல்ல கணவன்-மனைவியாக
நல்ல பெற்றோராக பிள்ளைகளிடம் இருப்பதுடன் இஸ்லாத்தின் மார்க்க வழிப்படி பிள்ளைகளை வளர்ப்பதுடன்
அதுபோல வாழவும் செய்ய வேண்டும். மறுமை நாளில் பெற்றோரின்; கடமையாக இறைவன் எதை
எதிர்ப்பார்க்கின்றானோ அதை சரிவர அறிந்து செய்ய வேண்டும். இஸ்லாம் என்ற போர்வையில்
பிள்ளைகளை சமுதாயத்தின் வெளியே தெரியாமல் வீட்டிலேயே முடங்கிக் கிடக்க வைப்பதும் தவறு.
இஸ்லாத்தின் முறைப்படி முஸ்லிம்கள் எல்லாத் துறையிலும் படித்து வளர்த்து எல்லோரும்
இஸ்லாமிய நெறிமுறைகளை பின்பற்றுவதுடன், சமுதாயத்தில் நியாயமான, முறையான, உண்மையான முறையில் நல்ல அந்தஸ்தில் முஸ்லிம்களும் வளர்ந்து வர
வேண்டும். முடங்கிக் கிடக்காமல் முஸ்லிம்கள் முன்னேறி வர வேண்டும்.
இன்றைய காலத்தில் முஸ்லிம்கள்
ஓரளவு முன்னேறி வருவது வரவேற்கத்தக்கது இதை மென்மேலும் அதிகரிக்க வேண்டும். இஸ்லாமிய
சட்டதிட்டங்களையும், நெறிமுறைகளையும் மீறாமல்
இஸ்லாமிய சட்டதிட்டங்களுக்கு கட்டுப்பட்டு இஸ்லாமிய ஆண்களும், பெண்களும் எல்லா துறைகளிலும்
வளர்ந்து பங்காற்ற வேண்டும். இதை எல்லா பெற்றோர்களும் முறைப்படி பின்பற்ற வேண்டும்.
உலகத்தில் எல்லோரும் நல்ல
பெற்றோரே! இருப்பினும் எல்லோருக்கும் ஒரு மதிப்பீடு உண்டு. நூறு சதவிகிதம் யாரையும்
மதிப்பிட முடியாது எல்லா பெற்றோரும் ஒரு சில தவறு செய்வதுண்டு நூறு சதவிகிதம் சரியாக
இருப்பது ஒரு சில பெற்றோர்களே! பாசம், நேசம், அன்பு, அக்கறை, எண்ணங்கள், விருப்பம், கனவு, திட்டம், ஆசைகள், இப்படி எல்லோருக்கும் பலவிதமான கருத்துக்கள் பலவாறு வித்தியாசப்படும்.
அவ்வாறு அவரவர்கள் யுக்திப்படி தங்களின் குழந்தைகளை வளர்ப்பதுண்டு இதில் முறையாக பின்பற்றி
வெற்றி பெறும் பிள்ளைகளும் உண்டு. பின்பற்றாமல் தோல்வியுறும் பிள்ளைகளும் உண்டு. தவறான
வழிகாட்டல்களை கொடுக்கும் பெற்றோரை பின்பற்றி தோல்வியுறும் பிள்ளைகளும் உண்டு. பின்பற்றாமல்
வெற்றி பெறும் பிள்ளைளும் உண்டு. அது அவரவர் சூழ்நிலைக்கேற்ப உண்டாகும்.
ஒருவர் நல்ல பெற்றோரா இல்லையா
என்பது அந்த பிள்ளைகளை பொறுத்தே தீர்மானிக்கப்படும். பிள்ளைகள் செய்யும் நற்காரியங்கள், புகழ், பதவி, பணம், உதவி இவைகளும் பெறறோரை
நல்லவர்களாக்கலாம் பெற்றோர்களின் உண்மையான வாழ்க்கை, தாம்பத்தியம், நல்ல குழந்தைகளை பெற்று வளர்ப்பது, உதவி செய்தல், தர்மம் செய்தல் இஸ்லாத்தை
முறையாக பின்பற்றுவதும் கூட நல்ல பெறறோருக்கு அடையாளமாகும். குழந்தைகள் செய்யும் சில
தவறுகள் கூட பெற்றோருக்கு கெட்ட பெயர் வாங்கித் தரும்.
எனவே, நமது மழலைச் செலவங்களை மார்க்க நெறியில் வளர்த்து பெற்றோருக்கும் மற்றோருக்கும் கண்குளிர்ச்சியானவர்காளக, சிறந்தவர்களாக சமுதாயத்தின் முகெலும்பானவர்களாக திகழ வல்ல ரப்புல் ஆலமீன் அருன் புறிவானாக! ஆமீன் யாரப்பல் ஆலமீன்!!
குறிப்பு வழங்கியோர்: மவ்லவி நஸீர் மிஸ்பாஹி, மவ்லவி ஷாகுல் ஹமீது, மவ்லவி முஹம்மது இலியாஸ், மவ்லவி, மவ்லவி முஹம்மது அப்பாஸ், சுல்தான் ஸலாஹி. தொகுத்து வழங்கியவர் ஹனீப் ஜமாலி.
0 comments:
Post a Comment