05 November 2015

பிற மதத்தை பின்பற்றுவோர் அம்மதத்தையே சார்ந்தவர்  

பிற மதத்தை பின்பற்றுவோர் அம்மதத்தையே சார்ந்தவர்
                       ஏழு வானத்தின் மேலிருந்து இறக்கப்பட்ட இஸ்லாமும் மனித புத்தியினால் உருவாக்கப்பட்ட அந்நிய வழிமுறைகளும் சமமாகாது. அவை கிழக்கிற்கும் மேற்கிற்கும் இடையில் உள்ள வித்தியாசத்தை விட தூரமானது.
                      இஸ்லாமியக் கொள்கையும் அதன் வழிமுறைகளும் அந்நியக் கொள்கைகளை விடவும் மேலோங்க செய்வதற்காக வேண்டி அல்லாஹுத்தாஆலா காலத்திற்க்குக் காலம் ரசூல்மார்களை அனுப்பினான். அவ்வகையில் இறுதியாக முஹம்மத் முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைத் தேர்ந்தெடுத்தான்.
நபி (ஸல்) அவர்கள்  தன் வாழ்வில் அனைத்து அறியாமைக் கொள்கைகளையும் குழிதோண்டிப் புதைக்க பாடுபட்டார்கள். தனது கடைசிக் காலத்தில் கஃபதுல்லாஹ்வைத் தூய்மையாக்கி அனைத்து அறியாமைகளையும் தன் காலுக்குக் கீழால் புதைத்து விட்டார்கள்.
                  அல்லாஹ்வின் நம்பிக்கை, வணக்க வழிபாடுகள், கல்வி, கலாச்சாரம், நாகரீகம், பொருளாதாரம், ஆடை, அலங்காரம் என எல்லா விஷயங்களிலும் காபிர்களுக்கும், முஷ்ரிகீன்களுக்கும் முரணாக செயல்பட்டு, இஸ்லாம் மார்க்கத்தையும் அந்நிய மார்க்கங்களையும் பிரித்துக் காட்டினார்கள். மேலும் அந்நிய மார்க்கங்களுக்கு ஒப்பாக நடப்பதை தடையும் செய்தார்கள்.
عَنِ ابْنِ عُمَرَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ تَشَبَّهَ بِقَوْمٍ فَهُوَ مِنْهُمْ»
                 யார் ஒரு கூட்டத்திட்கு ஒப்பாக நடக்கின்றாறோ அவர் அந்த கூட்டத்தை சேர்ந்தவராவார் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் இப்னு உமர் ரலியல்லாஹு அன்ஹு (ஆதாரம்: அபூதாவுத், அஹ்மத்)
                   யூதக் கிறிஸ்தவர்கள் அவர்களுக்கு  இறக்கப்பட்ட தவ்ராத்தையும் இன்ஜீலையும் அதன் சட்டதிட்டங்களைம் திரிவுபடுத்தி மாற்றி விட்டார்கள். இன்னும் அவர்களது சிந்தனைக்கு தென்பட்டவைகளை மார்க்கமாக ஆக்கிவிட்டார்கள். நபிமார்களினது கப்ருஸ்தலங்களை வணக்க வழிபாடு செய்யும் இடங்களாக மாற்றி விட்டார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இதனைவிட்டும் தனது சமூகத்தைத் தடுத்தார்கள்.
قَالَ: حَدَّثَنِي جُنْدَبٌ، قَالَ: سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَبْلَ أَنْ يَمُوتَ بِخَمْسٍ، وَهُوَ يَقُولُ: «إِنِّي أَبْرَأُ إِلَى اللهِ أَنْ يَكُونَ لِي مِنْكُمْ خَلِيلٌ، فَإِنَّ اللهِ تَعَالَى قَدِ اتَّخَذَنِي خَلِيلًا، كَمَا اتَّخَذَ إِبْرَاهِيمَ خَلِيلًا، وَلَوْ كُنْتُ مُتَّخِذًا مِنْ أُمَّتِي خَلِيلًا لَاتَّخَذْتُ أَبَا بَكْرٍ خَلِيلًا، أَلَا وَإِنَّ مَنْ كَانَ قَبْلَكُمْ كَانُوا يَتَّخِذُونَ قُبُورَ أَنْبِيَائِهِمْ وَصَالِحِيهِمْ مَسَاجِدَ، أَلَا فَلَا تَتَّخِذُوا الْقُبُورَ مَسَاجِدَ، إِنِّي أَنْهَاكُمْ عَنْ ذَلِكَ» رواه مسلم في صحيحه
                அறிந்துகொள்ளுங்கள் நிச்சயமாக உங்களுக்கு முன்னிருந்தவர்கள் அவர்களது நபிமார்களினதும் சாலிஹானவர்களினதும் கப்ருகளை பள்ளிவாசல்களாக எடுத்துக் கொண்டார்கள் . அறிந்துகொள்ளுங்கள் ! நீங்கள் கப்ருகளை பள்ளிவாசல்களாக எடுத்துக்கொள்ள வேண்டாம். அதைவிட்டும் நான் உங்களைத் தடுக்கிறேன், என நபி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அவரது மரணத்திற்கு 5 நாட்களுக்கு முன்னால் கூற நான் செவிமடுத்தேன் என ஜுன்துப் இப்னு அப்துல்லாஹ் அல் பஜலி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள் (ஆதாரம்: முஸ்லிம்) 
நபி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தொழுகை, நோன்பு, ஹஜ் திருமணம் போன்ற எல்லா வணக்க வழிபாடுகளிலும் யூத கிறிஸ்தவர்களுக்கு மாற்றம் செய்தார்கள். அதேபோன்று அவரது உம்மத்தாகிய எங்களுக்கும் யூத கிறித்தவர்களுக்கு மாற்றம் செய்யும்படி ஏவினார்கள்.
யூத கிறிஸ்துவம் என்றால் அவைகள் மட்டுமல்ல அவர்கள் அல்லாது வேறு எந்த மத சம்பிரதாயமும் செய்யக்கூடிய மதச் சடங்குகளை விட்டும் நாம் தனித்திருக்க வேண்டும். பிறர் மனம் புண்படக்கூடாது என்பதற்காக அவர்கள்  பூஜித்த பொருட்களை வாங்குதல் கூடாது. அப்படி வாங்கக் கூடிய நெருக்கடி ஏற்பட்டாலும்  பிற மத சமுதாயத்தாரிடம் கொடுத்துவிடவேண்டும்.
நாங்கள் தரும் பொருட்களை இஸ்லாமியர் வாங்குவதில்லை எனவே அவர்களிடம் சகோதர சகிப்புதன்மையில்லை என்றும் சிலர் வாதிடுகிறார்கள். இது சரியான வாதம் அல்ல. காரணம்இஸ்லாமியர்கள் உண்ணக்கூடிய இறைச்சியை ஒரு சைவ உணவு சாப்பிடும் நபரிடம் கொடுத்து இதை நீங்கள் சாப்பிடுங்கள் என்றால் சாப்பிடிடுவாராஅப்படி சாப்பிடவில்லை என்றால் அவரிடம் சகோதரத்துவமே இல்லையாநாங்கள் கொடுக்கும் இறைச்சியை தாங்கள் உண்ணவில்லை அதனால் சகோதரத்துவம் உங்களுக்கு இல்லை என்று இஸ்லாமியர்களாகிய  நாம் தான் கூற முடியுமா?
எனவே அதுஅது அவரவர் விருப்பம். இதில் யாரும் தலையிடக்கூடாது. நம் இஸ்லாத்திற்கு என்று சில விதிமுறைகளுள்ளது. மற்ற மதத்தில் உள்ள அநேக  விஷயங்கள்கலாச்சாரங்கள் நமக்கு தடை செய்யப்பட்டுள்ளது. இதை நாயகம் (ஸல்) அவர்கள் அழகுற கூறுவார்கள்.
عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: الدُّنْيَا سِجْنُ الْمُؤْمِنِ، وَجَنَّةُ الْكَافِرِ  
       இவ்வுலகம் மு மின்களுக்கு சிறைச்சாலையாகவும் காபிர்களுக்கு சுவனமாகவும்இருப்பதாக நாயகம் நவின்றுள்ளார்கள் என்பதை நினைவில் வைத்து வாழக் கற்றுக் கொல்ல வேண்டும்.

மாற்றாருக்கு வாழ்த்துக்கள் கூறலாமா?
முஸ்லிம்கள் மட்டும் வாழும் பகுதியில் இது போன்ற பிரச்சனைகளுக்கு இடமில்லை. மற்ற சமுதாய மக்களுடன் வாழும் போது அவர்கள் நம்முடைய பண்டிகைகளுக்கு வாழ்த்துச் சொல்லி அனபைப் பகிர்ந்து கொள்வதால் நாமும் அதற்கேற்ப நடக்க வேண்டும் என்ற எண்ணம் நமக்கு ஏற்படுகிறது. இது போன்ற பண்டிகைகளில் நமக்கு உடண்பாடு இல்லாவிட்டாலும் நாம் வாழ்த்துச் சொல்லாவிட்டால் நம்மை மத வெறியர்களாகக் கருத்தும் நிலை ஏற்படும். நாளை சத்தியத்தை அவர்களுக்கு எடுத்துச் சொல்வதற்கும் இது தடையாக அமைந்து விடும்.இதன் காரணமாகவே இது குறித்து கேள்விகள் எழுகின்றன. நம்முடைய மார்க்க வரம்பை மீறாமலும் அவர்கள் தவறாக எண்ணாமலும் இருக்கும் வகையிலான வழிமுறைகள் இருந்தால் அதைக் கடைப்பிடிப்பதில் தவறு இல்லை.

فَنَظَرَ نَظْرَةً فِي النُّجُومِ (88) فَقَالَ إِنِّي سَقِيمٌ (89)
பின்னர் நட்சத்திரங்களைக் கவனமாகப் பார்த்தார். நான் நோயாளி எனக் கூறினார். அவரை விட்டு விட்டு அவர்கள் சென்றனர்.திருக்குர் ஆன் 37:89 
       இவ்வசனத்தில் நான் நோயாளியாக இருக்கிறேன் என்று இப்ராஹீம் நபி சொன்னதாகக் கூறப்படுகிறது. இது இறைவனுக்காக இப்ராஹீம் நபி சொன்ன பொய் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விளக்கியுள்ளார்கள்.
عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: " لَمْ يَكْذِبْ إِبْرَاهِيمُ النَّبِيُّ عَلَيْهِ السَّلَامُ، قَطُّ إِلَّا ثَلَاثَ كَذَبَاتٍ، ثِنْتَيْنِ فِي ذَاتِ اللهِ، قَوْلُهُ: إِنِّي سَقِيمٌ، وَقَوْلُهُ: بَلْ فَعَلَهُ كَبِيرُهُمْ هَذَا، وَوَاحِدَةٌ فِي شَأْنِ سَارَةَ،
(நூல் : முஸ்லிம்

இப்ராஹீம் நபியவர்கள் நோயாளியாக இல்லாவிட்டாலும், இறைவனுக்காக நோயாளி என்று கூறியுள்ளார்கள் என்பது இந்த ஹதீஸிலிருந்து தெரிகின்றது. இது போல் ஒரு தீமையில் பங்கேற்காமல் இருப்பதற்காக இது போன்ற பொய்களை நாம் சொன்னால் அது குற்றமாகாது. பண்டிகைக்கும் வாழ்த்துக்கும் தான் நமக்கு அனுமதி இல்லை. ஆனால் முஸ்லிம் அல்லாத மக்கள் இவ்வுலகில் எல்லா வளமும் பெற்று வாழ இறைவனிடம் பிரர்த்தனை செய்ய அனுமதி இருக்கிறது. அது போல் அவர்கள் நேர்வழி சென்று மறுமை வெற்றி பெறுவதற்காக பிரார்த்தனை செய்வதற்கும் அனுமதி இருக்கிறது.

இந்த அனுமதிக்கு உட்பட்டு நல் வழி நடந்து எல்லா நாட்களும் எல்லா வளமும் உங்களுக்குக் கிடைக்க இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன் என்று (இதே வார்த்தையை அல்ல) இது போன்ற கருத்தைத் தரும் வார்த்தைகளைத் தேர்வு செய்து கூறினால் அவர்கள் அதை வாழ்த்து என்று புரிந்து கொள்வார்கள். நாமும் வரம்பு மீறியவராக மாட்டோம்.

இன்னும் சொல்லப் போனால் அவர்கள் பயன்படுத்தும் வாழ்த்துக்களை விட இது அதிக மன நிறைவைத் தரும். நம்முடைய துஆ அல்லாஹ்வால் ஏற்கப்பட்டால் அவர்கள் இஸ்லாத்தில் ஈர்க்கப்படவும் வாய்ப்பு உண்டு. மேலும் அந்தப் பண்டிகை தினத்தில் மட்டும் இன்றி அவ்வப்போது இது போல் பயன்படுத்திக் கொண்டால் பண்டிகைக்காக வாழ்த்தியதாக ஆகாது.

பட்டாசுகளால்  மாசு மற்றும் சுகாதாரக் கேடு  
சென்ற வருட செய்தி: சென்னை: முடிந்த போன தீபாவளியால் நாம் சுவாசிக்கும் சுத்தமான காற்று அதிகபட்சமாக மாசு அடைந்து போய் இருக்கிறது. இந்த மாசு இன்னும் 2 நாட்கள் காற்றில் கலந்து இருக்கும். அவ்வாறு அசுத்தம் பெற்ற நகரங்கள் பட்டியலில் ஆமதாபாத் முதலிடத்திலும், சென்னை 2 வது இடத்திலும் அங்கம் பெற்றுள்ளது. 
ஆனாலும் நம்மை அறியாமல், நமக்கு வெளிப்படையாக தெரியாமல் நமது மக்கள் காற்றை மாசு படிய செய்துள்ளனர். இதன்மூலம் பல ஒவ்வாமை நோய்கள் பலருக்கு தொந்தரவை தந்துள்ளது. தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், தீபாவளி கொண்டாட்டத்தால் ஏற்படும் காற்று மற்றும் ஒலி மாசு அளவுகளை அறியும் ஆய்வுகளை, நடத்தியது.
சேலம், சாரதா மந்திர் மெட்ரிக் பள்ளி பகுதியில் நடத்தப்பட்ட ஆய்வில், காற்றில் மிதக்கும் மின் துகள்கள், 30லிருந்து, 168; சேலம் சிவா டவரில், 47லிருந்து, 197 மைக்ரோ கிராமாகவும் அதிகரித்து காணப்படுகிறது. டில்லியில் நடத்திய ஆய்வில், 1 கியூபிக் மீட்டர் காற்றில் 210 மைக்ரோகிராம் நைட்ரஜன் டை ஆக்ஸைடும், குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் சல்பர் டை ஆக்ஸைடு அதிக பட்சமாக 503 மைக்ரோ கிராமாகவும், சென்னையில் 393 மைக்ரோ கிராமாகவும், இருந்தது.
        இது குறித்து அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மைய எக்ஸ்கியூடிவ் டைரக்டர் அனுமித்தா ராய்சவுத்திரி கூறுகையில், கடந்த 2 நாட்களாக காற்றில் மிகுந்த மாசு கலந்திருப்பதை பார்க்க முடிந்தது. தட்ப வெப்ப சூழல் குளிராக இருந்ததால் காற்று ஏதுமில்லை. இதனால் இந்த காற்றில் கலந்த புகை மாசுக்கள் எளிதில் கடந்து செல்ல முடியாமல் இருந்தது. இந்த மாசுக்கள் காற்றில் இன்னும் இரண்டு நாட்கள் கலந்து தான் இருக்கும். தற்போதைய காற்று மாசு எங்களுக்கு கவலை தருகிறது என்றார்.   நன்றி : தினமலர்
மத்திய அரசுக்கு கண்டனம்:
பட்டாசு வெடிப்பதனால் ஏற்படும் ஒலி மாசு, உடல்நல சீர்கேடுகள் குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மத்திய அரசு போதிய விளம்பரம் செய்யவில்லை என உச்ச நீதிமன்றம் தனது கண்டனத்தை தெரிவித்தது
.வழக்கு பின்னணி:
முன்னதாக, டெல்லியைச் சேர்ந்த 6 மாத குழந்தைகளான அர்ஜுன் கோயல், அவுரவ் பண்டாரி மற்றும் 14 மாத குழந்தையான ஜோயா ராவ் பாசின் ஆகியோர் சார்பில் அவர்களது பெற்றோர் உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தனர். அதில், தீபாவளி, தசரா பண்டிகைகளின்போது அதிக அளவில் பட்டாசு வெடிக்கப்படுகிறது. இதன்மூலம் ஏற்படும் ஒலி மாசு, சுற்றுச்சூழல் மாசு பல்வேறு நோய்களுக்கு காரணமாக அமைகிறது. உலகில் அதிக மாசு ஏற்படும் நகரமாக கடந்த 2 ஆண்டுகளாக டெல்லி பட்டியலிடப்பட்டுள்ளது. உடல் உறுப்புகள் இன்னும் வளராத நிலையில் உள்ள எங்களுக்கு இதுபோன்ற பட்டாசுகளின் வெடிச் சத்தத்தால் பாதிப்பு ஏற்படுகிறது.
மேலும் இருமல், நுரையீரல் நோய்களுக்கும் பட்டாசு புகை மூலம் ஏற்படும் மாசு காரணமாக அமைகிறது. சுவாச கோளாறு இருப்பவர்களுக்கு இதன்மூலம் நோய் அதிகரிக்கிறது. பெங்களூரு நகரில் 2013-ம் ஆண்டு எடுத்த கணக்கெடுப்பின்படி, தீபாவளி பண்டிகையின்போது முந்தைய ஆண்டைக் காட்டிலும் 32 சதவீதம் மாசு அதிகரித்துள்ளது. தீபாவளி பண்டிகையின்போது, சுவாசக் கோளாறு நோய் பாதிப்பு 40 சதவீதம் அதிகரிப்பதாக புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.
தீபாவளி பண்டிகையின்போது, மாசு ஏற்படாமல் தடுக்க பட்டாசு தயாரிப்பாளர்கள், விற்பனையாளர்களுக்கு எந்த விதிமுறைகளும் வகுக்கப்படவில்லை. அரசியல் சாசன சட்டப்பிரிவு 21-ன் கீழ், சுத்தமான, சுகாதாரமான சூழலில் வளர்வது எங்களது அடிப்படை உரிமை. சுகாதாரமான காற்று எங்களது எனவே, அதிக ஒலி எழுப்பும் பட்டாசுகள் விற்க உரிமம் வழங்கும் அரசுக்கு தடை விதித்து உத்தரவிட வேண்டும்" எனக் குறிப்பிட்டிருந்தனர்.
இன்று வரை எத்தனை குழந்தைகள்கர்பிணிப் பெண்கள்வயது முதிர்ந்தவர்கள்நோயாளிகள் இந்த வெடி பொருட்களால் அவதிப்படுகிறார்கள் என்பதை யோசித்து நாமும் தவிர்ந்து பிறருக்கும் இதனுடைய கெடுதிகளை எடுத்துச் சொல்ல வேண்டும்.
சிறந்த முஸ்லிம் யார் முஃமின் யார் என்று கேட்டதற்கு
عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو، أَنَّ رَجُلًا، قَالَ: يَا رَسُولَ اللَّهِ، مَنِ الْمُسْلِمُ؟ قَالَ: «مَنْ سَلِمَ الْمُسْلِمُونَ مِنْ لِسَانِهِ وَيَدِهِ» ، قَالَ: فَمَنِ الْمُؤْمِنُ؟ قَالَ: مَنْ أَمِنَهُ النَّاسُ عَلَى أَمْوَالِهِمْ وَأنْفُسِهِمْ
யாருடையநாவு கரம் இவற்றிலிருந்து முஸ்லிம்கள்  சலாமத் பெறுகிறார்களோ அவனே முஸ்லிம் ஆவான்.  யாரிடமிருந்து மக்களின்  பொருள் ஆன்மா நிம்மதி பெறுமோ அவனே முஃமின் என்று காருண்ய நபி (ஸல்) கூறினார்கள்.
தீபாவளி நமக்கல்ல
       நம்முடைய இந்து சகோதரர்கள் தீபாவளிக் கொண்டாட்டத்திற்காக தயாராகி வருகிறார்கள்.பட்டாசு வெடிப்பப்து  வானவேடிக்கைகள் செய்வது அவர்களது கொண்டாட்டம். அது அவர்கள் வணக்கம்.
                  உலகில் சிலை வணக்கம் எங்கு இருக்கிறதோ அங்கெல்லாம் இந்த கேலிக் கூத்துக்கள் நடந்ததும் நடப்பதும் வாடிக்கை. ஆபாசம், ஆட்டம் பாட்டம், தேவையின்றி சப்தமெழுப்ப இசைக்கருவிகள் வானவேடிக்கைகள் செய்தல் பணத்தை ஒரு பயனும் இல்லாத வழிகளில் செலவழித்தல் இவை அனைத்தும் சிலை வணக்கத்தின் ஒரு பகுதியே!
                  ஜாஹிலிய்யாக் காலத்தில் மக்காவாசிகள் தவாபு செய்கிற போது சீட்டியடிக்கிற பழக்கமும் கைதட்டுகிற பழக்கமும் கொண்டிருந்தனர், வீணான வழிகளில் காசு பணத்தை விரயம் செய்தனர், அதைத்தான் அல்லாஹ் அன்பால் அத்தியாயத்தில் 35, 36 வசன்ங்களில் கண்டிக்கிறான்.
وَمَا كَانَ صَلَاتُهُمْ عِنْدَ الْبَيْتِ إِلَّا مُكَاءً وَتَصْدِيَةً فَذُوقُوا الْعَذَابَ بِمَا كُنتُمْ تَكْفُرُونَ(35)إِنَّ الَّذِينَ كَفَرُوا يُنْفِقُونَ أَمْوَالَهُمْ لِيَصُدُّوا عَنْ سَبِيلِ اللَّهِ فَسَيُنفِقُونَهَا ثُمَّ تَكُونُ عَلَيْهِمْ حَسْرَةً ثُمَّ يُغْلَبُونَ وَالَّذِينَ كَفَرُوا إِلَى جَهَنَّمَ يُحْشَرُونَ(36)
عن ابن عباس في قوله "وما كان صلاتهم عند البيت إلا مكاء وتصدية" قال كانت قريش تطوف بالبيت عراة تصفر وتصفق والمكاء الصفير والتصدية التصفيق
.சீனர்கள் நிஜக்காசை கொடுத்து போலிக் காசுகளை வாங்கி அதை தீயில் போடுவார்கள். இறந்து போன பிரதேத்த்துடன் கட்டுக்கட்டாக அக்காசுகளை வைப்பார்கள். முஸ்லிம்களது பெருநாட்களில் இஸ்லாமின் ஏகத்துவ தத்துவமும் சகோதரத்துவ கோட்பாடும் அமைதி மார்க்கத்தின் அடையாளங்களும் மிளிர்வதைப் போலவே பிற சமூகத்தினரின் விசேச நாட்களில் அவர்களுடைய தத்துவங்களும் கோட்பாடுகளும் வெளிப்படும் என்பதை சிந்திக்கிற யாரும் அறிந்து கொள்ளலாம்.
இந்துக்களின் கொண்டாட்டமான தீபாவளியும் அப்படித்தான். இந்து மதத்தின் கற்பனையான பொய்யான கோட்பாடுகளையும் அசமஞ்சத்தனமான தத்துவங்களையும் பிரதிபலிக்கிறது.
தீபாவளி பற்றி இந்துமத நூல்கள் குறிப்பிடுகிற செய்திகளை கொஞ்சம் கவனியுங்கள். அதன் தத்துவங்களிலும் நடைமுறைகளிலிலும் குப்ரு ஷிர்கின் அனைத்து அம்சங்களும் அதில் இருப்பதை உணரலாம்.
தீபம்' என்றால் ஒளி, விளக்கு. 'ஆவளி' என்றால் வரிசை. வரிசையாய் விளக்கேற்றி, இருள் நீக்கி, ஒளி தரும் பண்டிகையே தீபாவளி ஆகும். தீபத்தில் பரமாத்மாவும், நெருப்பில் ஜீவாத்மாவும் வாசம் செய்து அருள் தருவதாய் ஐதீகம்.
தீபாவளியன்று நீராடுவதை மட்டும் புனித நீராடல் என்று சொல்வதற்கு காரணம், அன்றைய தினம், அதிகாலையில் எல்லா இடங்களிலும், தண்ணீரில் கங்கையும், எண்ணெயில் லட்சுமியும் அரப்பில் சரஸ்வதியும், குங்குமத்தில் கௌரியும், சந்தனத்தில் பூமாதேவியும், புத்தாடைகளில் மஹாவிஷ்ணுவும் வசிப்பதாக கருதப்படுவதேயாகும்.. அன்றைய தினம், எல்லா நதிகள், ஏரிகள், குளங்கள், கிணறுகளிலும், நீர்நிலைகளும் "கங்கா தேவி" வியாபித்து இருப்பதாக ஐதீகம்.
புராணக் கதைகளின் படி, கிருஷ்ணனின் இரு மனைவியருள் ஒருவளான நிலமகளுக்கு பிறந்த மகன் ஒரு அசுரன் . அப்போது கிருசுணன் வராக(பன்றி) அவதாரம் எடுத்திருந்தான். பிறந்த அசுரனின் பெயர் நரகன். அந்நரகன், தன் அன்னையால் மட்டுமே தனக்கு இறப்பு ஏற்பட வேண்டும் என்று வரம் வாங்கியிருந்தான். அவனின் அநீதிகளை நிறுத்த வேண்டி, கிருஷ்ணன் தனதுத்திறமையால் அந்நரகாசுரனை இறக்க வைக்கிறான்.
கிருஷ்ணர், நரகாசுரன் என்ற அசுரனைக் கொன்ற போது, அவன் தான் இறக்கும் தினத்தை மக்கள் கொண்டாட வேண்டும் என்று கேட்ட வரத்திற்கிணங்க தீபாவளி மகிழ்ச்சியாகக் கொண்டாடப்படுகின்றது.
திருக்குர்ஆன்  சொல்வது போல எந்த ஆதரமும் இன்றி செய்யப்படும் இது போன்ற நடவடிக்கைகள் சிலை வணக்கத்திற்கு மக்களை தூண்டும் சைத்தான் அழகுபடுத்திக் காட்டும் நடவடிக்கைகளாகும். இத்தகைய திருவிழாக்களை கண்டு மனதில் வெருப்பு கொள்வதும் விலகி நிற்பதும் ஈமானிய குணமாகும்.
நமது ஈமான தூய்மையானதாக இருக்க வேண்டும்.
                தவ்ஹீதின் தளகர்த்தரான நபி இபுறாகீம் (அலை) மக்களின் முன்னிலையில் தன்னுடைய ஈமானை இப்படிப் பிரகடணப்படுத்தினார்கள்.
إِنِّي وَجَّهْتُ وَجْهِي لِلَّذِي فَطَرَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ حَنِيفًا وَمَا أَنَا مِنْ الْمُشْرِكِين
ஷாபி மத்ஹபில் தொழுகைக்கு தக்பீர் கட்டியவுடன் இது ஓதப்படுகிறது. தொழுகையை தொடங்குவதற்கு முன் அல்லாஹ்விற்கு அடியார்கள் கொடுக்கிற உறுதிமொழியாக இது அமைந்திருக்கிறது.

குர்பானி கொடுப்பதற்கு முன்னதாக இதை ஓதுகிறோம், இந்த வாசகத்தில் உள்ள ஹனீபன் என்ற வாசகம் மிக முக்கிய கவனத்திற்குரியது. அசத்தியமான அனைத்து வழிகளை விட்டு விலகி சத்தியமான வழியின் பால முழுச் சார்பு கொண்டவனாக அல்லாஹ்வை வணங்குகிறேன் என்பது இதன பொருளாகும்.
வஜ்ஜஹ்துவில் இடம் பெற்றுள்ள இரண்டு வாசகங்கள் ஹனீபன் என்பதன் பொருளை விளக்குகின்றன,
وَمَا أَنَا مِنْ الْمُشْرِكِينَ
وَأَنَا أَوَّلُ الْمُسْلِمِينَ

இஸ்லாம் முஸ்லிம்களிடம் இரண்டு அம்சங்களை எதிர்பார்க்கிறதுது,
அவர்கள் முஸ்லிம்களாக நடக்க வேண்டும்
அவர்களிடம் முஷ்ரிகின்  அம்சங்கள் இருக்க கூடாது.
            முஹம்மது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு உன்னதமான உயர்வான - இறைவனுக்கு முற்றிலும் அடிபணிகிற ஒரு தூய சமூகத்தை உருவாக்க நினைத்தார்கள். அந்த சமூகத்தில் பிற மதங்களின் அர்த்தமற்ற இறை விருப்பத்திற்கு மாறான கோட்பாடுகள் அனைத்திலிருந்தும் தன்னுடைய சமுதாயம் வேறுபட்டு நிற்க வேண்டும் என்று விரும்பினார்கள் வலியுறுத்தினார்க:ள்

عن المسور بن مخرمة رضي الله عنهما، أن رسول الله صلى الله عليه وسلم قال: هَدْيُنَا مُخَالِفٌ لِهَدْيِهِمْ  يعني: المشركين.-  حاكم
 வணக்க வழிபாடுகளில் தொடங்கி தாடி மீசை வைப்பதில் தொடர்ந்து ஆடை அணிவது வரை அனைத்து விச்யங்களிலும் முஷ்ரிகின் அடையாங்களை விட்டு விலகி இருக்க வேண்டியது முஸ்லிம்களின் கடமையாகும் என வலியுறுத்தினார்கள். உதாரணமாக நிறைய விசயங்களை சுட்டிக் காட்ட முடியும்

முஹர்ரம் 9 ம் நாளில் நோன்பு பிடிக்க பெருமானார் (ஸல்) சொன்னது
யூதர்களிடமிருந்து வித்தியாசப்பட வேண்டும் என்பதற்காக!
عَبْدَ اللهِ بْنَ عَبَّاسٍ رَضِيَ اللهُ عَنْهُمَا، يَقُولُ: حِينَ صَامَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمَ عَاشُورَاءَ وَأَمَرَ بِصِيَامِهِ قَالُوا: يَا رَسُولَ اللهِ إِنَّهُ يَوْمٌ تُعَظِّمُهُ الْيَهُودُ وَالنَّصَارَى فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «فَإِذَا كَانَ الْعَامُ الْمُقْبِلُ إِنْ شَاءَ اللهُ صُمْنَا الْيَوْمَ التَّاسِعَ» قَالَ: فَلَمْ يَأْتِ الْعَامُ الْمُقْبِلُ، حَتَّى تُوُفِّيَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ. رواه مسلم
நரை முடிக்கு சாயம் பூச பெருமானார் (ஸல்) அவர்கள் உத்தரவிட்டதும் இதன் அடிப்படையிலேயே!
 عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِنَّ الْيَهُودَ وَالنَّصَارَى لَا يَصْبُغُونَ، فَخَالِفُوهُمْ»   . رواه مسلم
وَعَنْ أَبِي أُمَامَةَ الْبَاهِلِيِّ رضي الله عنه قَالَ: " خَرَجَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم عَلَى مَشْيَخَةٍ مِنْ الْأَنْصَارٍ بِيضٌ لِحَاهُمْ , فَقَالَ: يَا مَعْشَرَ الْأَنْصَارِ , حَمِّرُوا وَصَفِّرُوا , وَخَالِفُوا أَهْلَ الْكِتَابِ ", فَقَالُوا: يَا رَسُولَ اللهِ , إِنَّ أَهْلَ الْكِتَابِ يَتَسَرْوَلَونَ (1) وَلَا يَأتَزِرُونَ , فَقَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم: " تَسَرْوَلُوا وَائْتَزِرُوا , وَخَالِفُوا أَهْلَ الْكِتَابِ "
  
இந்த  நபிமொழியில் யூதர்கள் சுர்வால்  பேண்ட்  மட்டுமே அணிகிறார்கள். நீங்கள் யூதர்களுக்கு மாற்றமாக பேண்டும் அணியுங்கள், வேட்டியும் கட்டுங்கள் என்ற அறிவுரையும் சேர்ந்திருக்கிறது. செருப்புடனும் மோசாவுடனும் தொழலாம் என்று பெருமானார் (ஸல்) அவர்கள் அனுமதித்ததும் இதன் அடிப்படையிலேயே!

  وفي سنن أبي عَنْ يَعْلَى بْنِ شَدَّادِ بْنِ أَوْسٍ، عَنْ أَبِيهِ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «خَالِفُوا الْيَهُودَ فَإِنَّهُمْ لَا يُصَلُّونَ فِي نِعَالِهِمْ، وَلَا خِفَافِهِمْ»
__________
 மீசையை  கத்த்ரித்து தாடியை வளர்க்க பெருமானார் சொல்லும் போதும் இப்படியே சொன்னார்கள்.
عَنِ ابْنِ عُمَرَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: " خَالِفُوا المُشْرِكِينَ: وَفِّرُوا اللِّحَى، وَأَحْفُوا الشَّوَارِبَ " وَكَانَ ابْنُ عُمَرَ: إِذَا حَجَّ أَوِ اعْتَمَرَ قَبَضَ عَلَى لِحْيَتِهِ، فَمَا فَضَلَ أَخَذَهُ                                                                                                        البخاري
மாதவிடாய் பெண்ணுடன் பரிமாறும் விச்யத்திலும் யூதர்களுக்கு மாற்றம் செய்ய பெறுமானார் கூறினார்கள். அது யூதர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியது.
عَنْ أَنَسٍ أَنَّ الْيَهُودَ كَانُوا إِذَا حَاضَتِ الْمَرْأَةُ فِيهِمْ لَمْ يُؤَاكِلُوهَا، وَلَمْ يُجَامِعُوهُنَّ فِي الْبُيُوتِ فَسَأَلَ أَصْحَابُ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَنْزَلَ اللهُ تَعَالَى {وَيَسْأَلُونَكَ عَنِ الْمَحِيضِ قُلْ هُوَ أَذًى فَاعْتَزِلُوا النِّسَاءَ فِي الْمَحِيضِ} [البقرة: 222] إِلَى آخِرِ الْآيَةِ، فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «اصْنَعُوا كُلَّ شَيْءٍ إِلَّا النِّكَاحَ» فَبَلَغَ ذَلِكَ الْيَهُودَ، فَقَالُوا: مَا يُرِيدُ هَذَا الرَّجُلُ أَنْ يَدَعَ مِنْ أَمْرِنَا شَيْئًا إِلَّا خَالَفَنَا فِيهِ                                                                                                   رواه: المسلم )
தொழுகைக்கான அழைப்பில் யூத கிருத்துவர்களின் வழியை பின்பற்ற பெருமானார் விரும்பவில்லை
أَخْبَرَنِي نَافِعٌ، أَنَّ ابْنَ عُمَرَ، كَانَ يَقُولُ: كَانَ الْمُسْلِمُونَ حِينَ قَدِمُوا الْمَدِينَةَ يَجْتَمِعُونَ، فَيَتَحَيَّنُونَ الصَّلَاةَ، وَلَيْسَ يُنَادِي بِهَا أَحَدٌ، فَتَكَلَّمُوا يَوْمًا فِي ذَلِكَ، فَقَالَ بَعْضُهُمْ: اتَّخِذُوا نَاقُوسًا مِثْلَ نَاقُوسِ النَّصَارَى، وَقَالَ بَعْضُهُمْ: بَلْ قَرْنًا مِثْلَ قَرْنِ الْيَهُودِ، فَقَالَ عُمَرُ: " أَوَلَا تَبْعَثُونَ رَجُلًا يُنَادِي بِالصَّلَاةِ؟ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «يَا بِلَالُ، قُمْ [ص:426] فَنَادِ بِالصَّلَاةِ»      مسند احمد
பிற மத்த்தவர்களின் வழிபாட்டுக்கு ஒப்பாகி விடக் கூடாது என்பதற்காக சூரியன் உதிக்கிற மறைகிற நேரங்களில் தொழுவதை பெருமானார் தடுத்தார்கள்.
ونهى صلى الله عليه وسلم عن الصلاة وقت طلوع الشمس ووقت غروبها حسماً لمادة المشابهة للكفار ,
சஹர் சாப்பாட்டை வலியுறுத்தியதிலும் இதே கோட்பாடு வலியுறுத்தப்பட்டது.
ورغَّب صلى الله عليه وسلم في أكلة السَّحَرِ مُخالفةً لليهود والنصارى , فقال صلى الله عليه وسلم : ( فَصْلُ ما بينَ صيَامِنَا وصيَامِ أَهلِ الْكِتَابِ أَكلَةُ السَّحَرِ رواه الإمام مسلم 1096.
பிறமத்தவரின் சமய நடவடிக்கைகளை முஸ்லிம் கள் பின்பற்றக் கூடாது என்று பெருமானார் கடுமையாக எச்சரித்தார்கள்
عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «لَيْسَ مِنَّا مَنْ [ص:57] تَشَبَّهَ بِغَيْرِنَا، لَا تَشَبَّهُوا بِاليَهُودِ وَلَا بِالنَّصَارَى، فَإِنَّ تَسْلِيمَ اليَهُودِ الإِشَارَةُ بِالأَصَابِعِ، وَتَسْلِيمَ النَّصَارَى الإِشَارَةُ بِالأَكُفِّ» - الترمذي
பிற நாடுகள் வெற்றி கொள்ளப்படும் போது அங்குள்ள சமய அடையாளங்கள் முஸ்லிம்களிடம் பாதிப்பை ஏற்படுத்தி விடக்கூடாது என்பதில் உமர் ரலி எச்சரிக்கையாக இருந்தார்கள்.

عن عمر بن الخطاب رضي الله عنه أنه كتب إلى المسلمين المقيمين ببلاد فارس: (إياكم والتنعم وزي أهل الشرك
முஸ்லிம்கள் தங்களுடைய எந்த ஆவலை பூர்த்தி செய்யும் போதும் அதில் பிற மதக்கலப்புக்கள் இல்லாதவாறு பார்த்துக் கொள்ள பெருமானார் (ஸல்) அறிவுறுத்தினார்கள்
فعن ثَابِتُ بْنُ الضَّحَّاكِ، قَالَ: نَذَرَ رَجُلٌ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يَنْحَرَ إِبِلًا بِبُوَانَةَ فَأَتَى النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: إِنِّي نَذَرْتُ أَنْ أَنْحَرَ إِبِلًا بِبُوَانَةَ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «هَلْ كَانَ فِيهَا وَثَنٌ مِنْ أَوْثَانِ الْجَاهِلِيَّةِ يُعْبَدُ؟» قَالُوا: لَا، قَالَ: «هَلْ كَانَ فِيهَا عِيدٌ مِنْ أَعْيَادِهِمْ؟»، قَالُوا: لَا، قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَوْفِ بِنَذْرِكَ، فَإِنَّهُ لَا وَفَاءَ لِنَذْرٍ فِي مَعْصِيَةِ اللَّهِ، وَلَا فِيمَا لَا يَمْلِكُ ابْنُ آدَمَ»                               رواه: ابو داود

قال العلاَّمة علي القاري : ( وهذا كلُّه احترازٌ من التشبُّه بالكفَّار في أفعالهم )
இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட பின் அறியாமைக் கால சமய நடைமுறைகளை கடை பிடிப்பதை பெருமானார் வன்மையாக கண்டித்தார்கள்
عَنِ ابْنِ عَبَّاسٍ أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: " أَبْغَضُ النَّاسِ إِلَى اللَّهِ ثَلاَثَةٌ: مُلْحِدٌ فِي الحَرَمِ، وَمُبْتَغٍ فِي الإِسْلاَمِ سُنَّةَ الجَاهِلِيَّةِ، وَمُطَّلِبُ دَمِ امْرِئٍ بِغَيْرِ حَقٍّ لِيُهَرِيقَ دَمَهُ "  رواه البخاري 6882
பிற மத்த்தவரின் சமயத்திருவிழாக்களில் கலந்து கொள்ளக்கூடாது என்பதே : {وَالَّذِينَ لَا يَشْهَدُونَ الزُّورَ   என்பதின் பொருள் என அறிஞர்கள் கூறுகிறார்கள்

: وَالَّذِينَ لَا يَشْهَدُونَ الزُّورَ وَإِذَا مَرُّوا بِاللَّغْوِ مَرُّوا كِرَاماً }.
قال بعضُ السلف : كابن عباس رضي الله تعالى عنهما, وأبو العالية , والضحاك بن مزاحم الهلالي, ومجاهد ت , وطاووس بن كيسان, ومحمد بن سيرين , والربيع بن أنس , وعبد الملك بن حبيب, وأحمد بن حنبل, وغيرهم : أنَّ المرادَ بالزور في هذه الآية : أعياد المشركين .

பிற மதத்தவர்களின் திருவிழாக் காலங்களில் அவர்களுடைய சடங்குகளில் பங்கேற்பது அல்லாஹ்வுடைய கோபத்திற்கு காரணமாகி விடும் என்று உமர் (ரலி) எச்சரித்துள்ளார்கள்

قال عمر بن الخطاب رضي الله عنه : ( .. ولا تدخلوا على المشركينَ فِي كنائسهم يومَ عيدهم , فإنَّ السُّخطَةَ تَنْزِلُ عليهم - البيهقي في الكبرى
இந்தியா போன்ற பன்முக சமய நம்பிக்கைகளை கொண்ட நாட்டில் வாழ்கிற முஸ்லிம்கள் மார்க்கத்தின் இந்த அறிவுரைகளையும் எச்சரிக்கைகளையும் மிக முக்கியமாக நினைவில் கொள்ள வேண்டும். இல்லை எனில் நமது இஸ்லாமிய வாழ்வு கேள்விக்குறியதாகிவிடும்,
ஒரு பட்டாசு வெடிப்பதால் என்ன பாதிப்பு ஏற்பட்டு விடப்போகிறது? என்று அலட்சியமாக கேட்பது இஸ்லாத்தின் நாடித்துடிப்பை புரிந்து கொள்ளாத கேள்வியாகவே அமையும். இஸ்லாமிய வாழ்வில் அக்கறை கொள்ளாத தன்மையாகிவிடும் (அல்லாஹ் நம்மை காப்பானாக!)
குழந்தை களுக்காக என்ற சமாதானமும் ஏற்கத் தகுந்ததல்ல. இது நம்முடைய மார்க்கம் அனுமதிக்காத விசயம் என்று குழந்தைகளுக்கு புரிய வைப்பது சிரமம் அல்ல. அக்கறை இருந்தால் போதுமானது.
காசு விரயம் என்பதற்கு அப்பால் இதில் சமய நம்பிக்கையின் கலப்பு நம் ஈமானை பாதித்து விடக் கூடியது என்பதையும் முஸ்லிம் உம்மத்தை தூய்மையானதாக உருவாக்க நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எடுத்துக் கொண்ட அக்கறையையும் நினைத்துப் பார்க்கிற எவரும் பிற சமயத்தவரின் சடங்குகளிலிருந்து கூடுமானவரை தள்ளியே இருப்பார்கள்; இருக்க வேண்டும்.முஸ்லிமன் ஹனீபன் என்பதற்கான அடையாளம் அது.
அல்லாஹ் நம் அனைவரையும் மார்க்கத்தை விளங்கிமற்றும் விளங்கி நடக்கக்கூடிய தவ்பீக்கை தந்தருள்புரிவானாக.

குறிப்பு வழங்கியவர்கள் : மௌலவி : நஸீர் மிஸ்பாஹி
                         மௌலவி : சுல்தான் ஸலாஹி
                         மௌலவி : அப்பாஸ் ரியாஜி
வெள்ளிமேடை மற்றும் சில இணைய தளங்களிலிருந்து மேலதிக தகவலோடு வெளியிட்டவர்
பீர் பைஜி 


1 comments:

ஜும்ஆ கட்டுரை அறுமை. மாஷா அல்லாஹ்.

Post a Comment