21 January 2016

நபி(ஸல்)அவர்களின் வழிமுறையும், ஆய்வாளர்களின் கூற்றும்.



 وَأَطِيعُواْ اللَّهَ وَرَسُولَهُ إِن كُنتُم مُّؤْمِنِينَ           
          
நீங்கள் நம்பிக்கை கொண்டிருந்தால் அல்லாஹ்வுக்கும்,அவனது     தூதருக்கும் கட்டுப்படுங்கள்! (அல் குர்ஆன் 8:1)

وَمَنْ يُطِعْ اللَّهَ وَرَسُولَهُ يُدْخِلْهُ جَنَّاتٍ تَجْرِي مِنْ تَحْتِهَا الْأَنْهَارُ خَالِدِينَ فِيهَا وَذَلِكَ الْفَوْزُ الْعَظِيمُ  
  • அல்லாஹ்வுக்கும்,அவனது தூதருக்கும் கட்டுப்படுவோரை சொர்க்கச் சோலைகளில் அவன் நுழையச்செய்வான். அவற்றின் கீழ்ப்பகுதியிலஆறுகள்ஓடும்.அதில்நிரந்தரமாக இருப்பார்கள்.இதுவே மகத்தான வெற்றி.(அல்குர்ஆன்4:13)
மனிதன் சீரான பாதையில் தன் வாழ்க்கையை அமைத்துக்கொள்ள வேண்டும் என்ற உயர்வான நோக்கத்தில் இறைவன் வையகத்தில் தீர்க்கதரசிகளை இறக்கி வைத்திருக்கிறான்.அவர்களின் மூலம்,அவர்கள் தம்கூட்டத்தவர்களுக்குஹநல்லொழுக்கங்களையும், நற்பண்புகளையும், ஓரிறைக்கொள்கைகளையும் எடுத்தோத வைத்திருக்கிறான் என்பதனை நோக்கும் பொழுது,தன்னால் படைக்கப்பெற்ற மானிடன்,தன்னை சந்திக்கும் நேரத்தில் நல்லவனாக நாணயமானவனாக சந்திக்க வேண்டும் என்ற மேலான எண்ணத்தில்தான்,அவ்வாறு செய்திருக்கிறான் என்பதைநினைத்து பேரானந்தம் அடைகின்றோம்.

வாழ்க்கையின் தத்துவங்களையும்,ஒழுக்கவியல்களையும்,நானிலம் சிறக்கும் அளவிற்கு வாழ்க்கையின் நெறிமுறைகளையும்,காண்பித்துக் கொடுத்த நபிமார்கள் ரசூல்மார்களின் அறிவுத்திறன்களும்,நடைமுறை விஷயங்கள் யாவும் இதயத்தில் நீங்கா இடம் பிடிக்கின்றன.

அறிஞனின் சிந்தனை ஓட்டத்தைக்காண,நபிமார்கள்,ரசூல்மார்களின் ஆற்றல்களைக் காணஉயர்வானதாகவும் எல்லை இல்லாததாகவும்,அனைத்து தரப்பு மக்களினாலும் ஏற்றுக்கொள்ள வல்லதாகவும்,அகில உலக மாந்தருக்கும் தூதுவரான,வாழ்வின் வழிகாட்டியாக அனுப்பப்பட்ட கருவிலே திருவான காத்தமுன் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வாக்கு இருக்கிறது.

நபி(ஸல்)அவர்களின் பொன் மொழிகளில்தான் எத்துணை வார்த்தை அழகுகள்!ஒழுக்கவியல்கள்,மனிதனைதூய்மையாக்கும்இலட்சியம், நட்பியல்,அறிவியல்,விஞ்ஞானம்,மருத்துவக்கருத்துக்கள்.உடல்கூறு ஆராய்சிகள்,இல்லறவியல்,அரசியல,பொருளாதாரக்கொள்கைகள், நாட்டுமேம்பாட்டுசித்தாந்தம்,நாட்டைக்காக்கும்இராணுவபோர் முறை நடவடிக்கைகள்,தலைமைத்துவகுணங்கள்,நீதிபரிபாலனம்போன்ற  ரத்தின கருத்துக்கள்.

தலைமுதல் பாதம் வரை உண்டான அனைத்து விஷயங்களையும் நபி (ஸல்)அவர்கள் உலகுக்கு அறிவித்து இருக்கின்றார்கள்.மானிட வர்க்கத்திற்கு மாண்பான ஒழுக்குநெறி முறைகளை எந்தளவிற்கு நுட்பமாக மொழிகின்றார்கள்!

அவன் அமரும் பொழுதும்,நிற்கும் நேரத்திலும்,நடக்கும் நடையிலும்,நீரை அருந்தும் பொழுதும்,உணவை உட்கொள்ளும் பொழுதும்,ஓய்வை நாடி உறங்கும் நேரத்திலும் ஆக பிறந்தது முதல் மூச்சை நிறுத்தும் வரை,கடைபிடிக்க வேண்டிய அனைத்து நெறிகளையும் தெளிவாக சொல்லியிருக்கிறார்கள். 

சுன்னத்கள்பின்பற்றப்படனும் 
–இஸ்லாமின் அடிப்படைகளை முழுமைப்படுத்துபவை சுன்னத்துகளே. சுன்னத்துக்கள் இல்லாத இஸ்லாம் கற்பனைக்கு அப்பாற்பட்டது. உயிரில்லாத உடல் போன்றது.அல்லது உடலில்லாத உயிர் போன்றது.

يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا أَطِيعُوا اللَّهَ وَرَسُولَهُ وَلَا تَوَلَّوْا عَنْهُ وَأَنْتُمْ تَسْمَعُونَ(20)  الانفال

مَنْ يُطِعْ الرَّسُولَ فَقَدْ أَطَاعَ اللَّهَ وَمَنْ تَوَلَّى فَمَا أَرْسَلْنَاكَ عَلَيْهِمْ حَفِيظًا(80) النساء

وَمَنْ يُطِعْ اللَّهَ وَرَسُولَهُ وَيَخْشَ اللَّهَ وَيَتَّقِيهِ فَأُوْلَئِكَ هُمْ الْفَائِزُونَ(52) النور

وَمَنْ يُطِعْ اللَّهَ وَرَسُولَهُ يُدْخِلْهُ جَنَّاتٍ تَجْرِي مِنْ تَحْتِهَا الْأَنْهَارُ وَمَنْ يَتَوَلَّ يُعَذِّبْهُ عَذَابًا أَلِيمًا(17) الفتح

உலகில் எத்தனையோ புரட்சியாளர்கள் சீர்திருத்தவாதிகள் தோன்றியுள்ளனர் மறைந்துள்ளனர்.அவர்களில் யாரும் தன் மரணத் தருவாயில் இப்படிச் சொன்னதில்லை:எனக்குப் பின்னால் என் வாழ்வை விட்டுச் செல்கிறேன் அதை அப்படியே பின்பற்றுங்கள் வெற்றி பெறலாம். இப்படி சொல்லும் அளவுக்கு யாருடைய வாழ்வும் முழுத் தகுதிள்ளதாக அமையவில்லை. ஆனால் அருமை நாயகம் (ஸல்)அவர்கள் தன் இறுதி காலத்தில் இப்படி கூறினார்கள்: நான் இரண்டை உங்களிடம் விட்டுச் செல்கிறேன் ஒன்று அல்லாஹ்வின் திருமறை மற்றொன்று எனது வழிமுறை இவற்றை யார் பின்பற்றி நடக்கிறாரோ அவர் வழிதவறமாட்டார்.

ُُ என் வாழ்வு உங்களுக்கு ஒரு முன்மாதிரி அதை பின்பற்றினால் வெற்றி உண்டு என்று உறுதியாக உரைக்கிற தகுதியும் நேர்மையும் அண்ணலாருக்கு நிச்சயம் உண்டு. அந்தளவுக்கு அவர்களின் வாழ்வு அமைந்திருந்தது என்பதை நாம் மட்டும் கூறவில்லை.மாற்றுமத அறிஞர்களும் ஒப்புக்கொள்கிற ஒரு உண்மை.

قُلْ إِن كُنتُمْ تُحِبُّونَ اللَّهَ فَاتَّبِعُونِي يُحْبِبْكُمُ اللَّهُ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ ۗ وَاللَّهُ غَفُورٌ رَّحِيم
سورة ال عمران

ஒருவர் அல்லாஹ்வை பிரியப்படுவதாகக் கூறிகொண்டு உண்மையில் நபியைப் பின்பற்றவில்லையானால் அவரது கூற்று பொய்யாகிறது.

நகம்வெட்டுவதுஎப்படிஎன்பதிலிருந்துநாடாளுவதுஎப்படிஎன்பதுவரை

சிறுநீர்கழிப்பதிலிருந்துசிம்மாசனம்அமர்வதுவரை எல்லாவற்றிற்கும்சரியானவழிகாட்டல்வள்ளல்நபிகளாரிடம்உண்டு.
بلغ من اتباع عبد الله ابن عمر سنة رسول الله عليه الصلاة والسلام انه إذا سافر من المدينة إلى مكة وقد كان في عهد رسول الله عليه الصلاة والسلام كان ابن عمر صغيرا اصغر من غيره ,وكان إذا سافر بعد ما كبر , بعد وفاة رسول الله عليه الصلاة والسلام كان ابن عمر يسأل الصحابة الكبار كان يقول من ايي مكان سارة ناقة النبي عليه الصلاة والسلام فيشيرون له إلى مواضع
يقولون نظن أن ناقته مشت من هنا أو من هنا , فكان ابن عمر يسير بناقته فوق هذا الطريق ويقول لعل خفا يقع على خف "لعل خف ناقتي يقع على خف ناقة رسول الله صل الله عليه وسلم " وكان ابن عمر في اثناء الطريق يسألهم اين كان النبي صل الله عليه وسلم يستريح , تحت أي شجرة ,فربما اشاروا له إلى بعض الشجر فيأتي ابن عمر وينزل ويستريح تحتها فعلا لفعل رسول الله عليه الصلاة والسلام


ஹழ்ரத் இப்னு உமர் ரலி அவர்கள் நபி ஸல் அவர்களின் சுன்னத்தை பின்பற்றுவதில் மிகவும் பேனுதல் உள்ளவர்கள்.நபி ஸல் அவர்களின் வபாத்திற்கு பிறகு மதீனாவிலிருந்து மக்கா பயணம் செய்தபோது பெரிய ஸஹாபிகளிடம் நாயகத்தின் பயணம் குறித்து கேட்பார்கள்.

பெருமானாரின் ஒட்டகம் எங்கெல்லாம் நின்றதோ அங்கெல்லாம் தங்களின் ஒட்டகத்தை நிறுத்துவார்கள்.எந்த இடங்களிலெல்லாம் நாயகம் ஒய்வெடுத்தார்களோ அங்கு தாங்களும் ஓய்வெடுப்பார்கள்.எந்த பாதை வழியாக நாயகத்தின் ஒட்டகம் சென்றதோ அந்த வழியாக செல்வார்கள்.

மக்கா வெற்றி பெற்றபோது கஃபாவின் கதவை திறந்து உள்ளே சென்ற நபி ஸல் அவர்கள் சிறிது நேரம் கழித்து வெளியே வந்தார்கள்.
அதைபார்த்த இப்னு உமர் ரலி அவர்கள் கஃபாவின் உள்ளே சென்று பிலால் ரலி அவர்களிடம் நாயகம் எங்கே தொழுதார்கள்?என்பதை கேட்டறிந்து தாங்களும் அந்த இடத்தில் இரண்டு ரக்கஅத் தொழுதார்கள்.

நபிமார்களுக்குப்பின் இந்த உலகில் மிகச்சிறந்த மனிதரான ஹழ்ரத் அபூபக்கர் ரலி அவர்கள் கூறுகிறார்கள்.


يقول أبو بكر الصديق -رضي الله عنه- أفضل هذه الأمة بعد نبيها: لست تاركا شيئا كان رسول الله -صلى الله عليه وسلم- يعمل به إلا عملت به، وإني لأخشى إن تركت شيئا من أمره أن أزيغ.

நபி ஸல் அவர்கள் எதைச்செய்தாலும் அதை நான் விட்டதேயில்லை.அவர்களின் உத்தரவில் எதையேனும் நான் விட்டால் நான் வழிகெட்டுப்போகிவிடுவேன்.

சுன்னத்துக்கள் தான் இந்த உம்மத்தின் முகவரி.எந்த சமூகமும் அதன் தனித்துவத்தை இழந்தால் தன் கடந்த கால வரலாற்றை இழந்துவிடும்.

எப்படி வேண்டுமானாலும் வாழலாம் என்ற சமூகங்களுக்கு மத்தியில் இப்படித்தான் வாழவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டவர்கள் நாம்.

நபி ஸல் அவர்களின் சுன்னத்தை தம் வாழ்வில் கடைபிடிக்கும் விஷயத்தில் ஸஹாபாக்களிடத்திலும்,தாபியீன்களிட்த்திளும் இருந்த பேனுதல் நமக்கு அழகிய முன்மாதிரியாகும்.

நபி(ஸல்)அவர்களின் வழிமுறை 
சாப்பிடும் முன்பு இரு கைகளை கழுகுவது
ஹள்ரத் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் : நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் குளிப்பு கடமையான நிலையில் தூங்க நாடினால் உளூ செய்து கொள்வார்கள். மேலும் சாப்பிட நாடினால் தங்களது கையை கழுகிக் கொள்வார்கள்.       (நூல் : நஸாயீ)
விஞ்ஞானிகளின் கூற்று.......
விஞ்ஞானம் : மனிதன் கரங்களை பல இடங்களில் உபயோகிப்பதால் அவற்றில் கண்ணுக்குத் தெரியாத நுண் (Invisible Rays) ஒன்று சேர்ந்திருக்கும். கைகளை கழுகாமலேயே சாப்பிட ஆரம்பித்தால் அக்கிருமிகள் உள்ளே சென்று பல கோளாறுகளுக்கு அடித்தளமிடுகிறது.
நபி(ஸல்)அவர்களின் வழிமுறை
வலது கையால் உண்போம்!
ஹள்ரத் உமர் இப்னு அபீ ஸலமா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் : “நான் சாப்பிடும் பொழுது தட்டில் எனது கை முறையின்றி உலாவிக் கொண்டிருந்ததைக் கண்ட நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் “சிறுவனே! அல்லாஹ்வின் பெயர் ‘பிஸ்மில்லாஹ்’ கூறி உண்ணு! உனது வலது கரத்தினால் சாப்பிடு! (இங்கொன்றும் அங்கொன்றுமாக கையை உலாவாமல் ஒரு பக்கத்திலிருந்து) தட்டில் உனக்கு அருகில் உள்ளவற்றிலிருந்து சாப்பிடு” என்று எனக்கு கற்றுக் கொடுத்தார்கள்.            (நுல் : புஹாரி)
இடது கையால் சாப்பிடுவது கூடாது :
ஹள்ரத் ஸலமதுப்னு அக்வஃ (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் : ஒரு மனிதர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களருகிலே அமர்ந்து இடது கையால் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அதைக் கண்ட நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வலது கையினால் சாப்பிடு என்று கூறினார்கள். அதற்கு அவர் எனக்கு (வலது கையால்) சாப்பிட முடியவில்லை என்று (பொய்) சொன்னார். (அவர் பொய் கூறியதினால் கோபமுற்ற நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்) நீ வலது கையை உபயோகிக்க முடியாமல் ஆகுக! உனது பெருமைதான் உன்னைத் தடுத்து விட்டது” என்று கூறினார்கள்.
(சிலருக்கு அவர்களின் தவற்றை சுட்டிக்காட்டினால் அதை ஏற்றுக் கொள்வதை தனக்கு கௌரவக் குறைவு என்றெண்ணி அதற்கு சப்பைக்கட்டு கட்டுவார்கள். அதே போல் தான் இந்த மனிதர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதை ஏற்காமல் என்னால் முடியாது என்று பொய்யான காரணம் சொன்னார். அவரின் பெருமையை உணர்த்த நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உன்னால் இனி வலது கையை உபயோகிக்க முடியாமல் ஆகுக என்று கூறிவிட்டார்கள். வேறு ரிவாயத்தில் அதற்கு பின்னால் அவரது வலது கை வேலை செய்ய வில்லை. அவர் அதை தூக்க நினைத்தாலும் முடியாமல் ஆகிவிட்டது என்று வந்துள்ளது).          (நூல் : முஸ்லிம்)

மேலும் ஹள்ரத் ஜாபிர் இப்னு அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் : ஹள்ரத் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். “இடது கையால் உண்ணாதீர்கள். நிச்சயமாக ஷைத்தான் தான் இடது கையால் உண்ணுவான்.” (நூல் : முஸ்லிம்)
விஞ்ஞானிகளின் கூற்று.......
விஞ்ஞானம் : இயற்கையாக மனிதனின் கரங்களில் INVISIBLE RAYS சுரக்கிறது. ஆனால் வலது கரத்தில் சுரப்பது நன்மைக்குரியதாகும். இடது கையில் சுரப்பது தீங்கு சுரப்பியாகவும் உள்ளது. எனவே வலது கரத்தால் சாப்பிடும் போது அந்த திரவமும் உள் சென்று மனிதனுக்கு நன்மை பயக்கிறது. மட்டுமின்றி இடது கையை அசுத்தமான மல, ஜலம் சுத்தம் செய்தல் போன்ற செயல்களுக்கு ஈடுபடுத்துவதால் அவற்றால் உண்ணுவது உடலுக்கு ஆரோக்கியமல்ல.            (நூல் : சுன்னதே நபவீ அவ்ர் ஜதீத் சையின்ஸ்)
நபி(ஸல்)அவர்களின் வழிமுறை...
மிகவும் சூடான உணவை உண்ணாதீர்!
ஹள்ரத் சுஹைப் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் : நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மிக சூடான உணவை சாப்பிடுவதை விட்டும் எங்களை தடுத்து சூடு தணிந்த பின்பு உண்ணச் சொல்லியுள்ளார்கள்.       (நூல் : ஷுஃபுல் ஈமான் லில் பைஹகீ)



ஹள்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் : உணவை சற்று ஆற வைத்து சாப்பிடுங்கள். ஏனெனில் மிகச் சூடான உணவில் பரக்கத் இருப்பதில்லை என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.        (நூல் : மஜ்மவுஸ் ஸவாயித்)

விஞ்ஞானிகளின் கூற்று.......
சூடான உணவை உண்பதால் பற்சிதைவு, நாவின் ருசிக்கும் திறனின் குறைபாடு, வாய்ப்புண்கள், குடல் சம்பந்தமான கெடுதிகள் ஏற்படுவது டன் உணவுக்குழாயும் வெகு சீக்கிரம் சேதமடைந்து விடுகிறது.
நபி(ஸல்)அவர்களின் வழிமுறை...
தண்ணீர் நின்று கொண்டு குடிக்கலாமா?
ஒருவர் நின்று கொண்டு தண்ணீர் அருந்துவதை நபி (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள். அறிவிப்பவர் : அனஸ் (ரலி), நூல் : முஸ்லிம் 
உங்களில் யாரும் நின்று கொண்டு அருந்த வேண்டாம். மறந்து (அருந்தி) விட்டால் வாந்தி எடுக்கட்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), நூல் : முஸ்லிம்.

நீங்கள் நீர் அருந்தினால் அவசர அவசரமாக ஒட்டகம் அருந்துவது போல்
ஒரே மூச்சில் அருந்த வேண்டாம். (நூல்;திர்மிதி)
விஞ்ஞானிகளின் கூற்று....... 
நின்று கொண்டே தண்ணீரைக் குடிக்கும் போது, நீரானது குடலில் நேராக பாய்வதோடு, குடல் சுவற்றை வேகமாக தாக்குகிறது. இப்படி தாக்குவதால் குடல் சுவர் மற்றும் இரைப்பை குடல் பாதை முழுவதும் பாதிக்கப்படும். இப்படியே நீண்ட நாட்கள் நின்றவாறு நீரைக் குடித்து வந்தால், இரைப்பை குடல் பாதையின் மீள்தன்மை அதிகரித்து, அதனால் செரிமான பாதையில் செயல் பிறழ்ச்சி ஏற்படக்கூடும்.
தண்ணீரை நின்றவாறோ அல்லது நடந்தவாறோ குடித்தால், சிறுநீரகங்களின் வடிகட்டும் செயல்முறை குறைந்துவிடும். இப்படி சிறுநீரகத்தின் செயல்முறை பாதிக்கப்பட்டால், அதனால் சிறுநீரங்கள், சிறுநீர்ப்பை அல்லது இரத்தத்தில் நச்சுக்கள் அப்படியே தங்கி, அதனால் சிறுநீரகம் மற்றும் சிறுநீர்ப்பை தொடர்பான நோய்களின் தாக்கம் அதிகரிக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளது.
ஆனால் அதுவே உட்கார்ந்து குடித்தால், நீரானது உடலின் அனைத்து இடங்களிலும் நுழைந்து நச்சுக்களை அடித்துக் கொண்டு சிறுநீரகங்களுக்கு கொண்டு சென்று, நச்சுக்களை உடலில் இருந்து முறையாக வெளியேற்றிவிடும்.
நின்று கொண்டே தண்ணீர் குடிப்பதால், ஆர்த்ரிடிஸ் ஏற்படும் வாய்ப்பு அதிகரிப்பதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்து.. அதுவும் தண்ணீரை நின்றவாறு குடிப்பதால், அது உடலின் மூட்டுப் பகுதிகளில் உள்ள நீர்மங்களின் சமநிலைக்கு இடையூறை ஏற்படுத்துகிறது.
இப்படியே நீண்ட நாட்கள் இப்பழக்கத்தைக் கொண்டால், நாளடைவில் அது மூட்டு வலிக்கு உட்படுத்தி, ஆர்த்ரிடிஸ் ஏற்பட வழிவகுத்துவிடும்.
உடலின் மெட்டபாலிசம் சீராக நடைபெற, போதிய அளவில் தண்ணீரை
உட்கார்ந்து குடிக்க வேண்டும்.
அதேபோல்.....

நீங்கள் நீர் அருந்தினால் அவசர அவசரமாக ஒட்டகம் அருந்துவது போல்
ஒரே மூச்சில் அருந்த வேண்டாம். (நூல்;திர்மிதி)
இந்த அற்புத ஹதீஸில் ஒருவன் மூச்சுவிடாமல் அவசர அவசரமாக குடிப்பதும்,உணவு உட்கொள்வதும் இரண்டிற்கும் உரியதாக உள்ளது.
மனிதனின் இயற்கை நியதி என்னவென்றால் நீராகரமோ,உணவோ,
மனிதனின் தொண்டையை அடையும் பொழுது,அத்தொண்டையில் இரண்டு வகையான குழாய்களை இறைவன் நியமித்து வைத்து இருக்கின்றான்.
ஒன்று மனிதன் உயிர்வாழ அத்தியாவசியமான மூச்சுக்குழாயை அமைத்து மூச்சு இழுக்கவும்,விடவும் வைத்துள்ளான்.
மற்றொன்று உணவுக்குழாய்,இதன் வழியாகத்தான் உண்ணும் உணவும்,பருகும் நீரும் வயிற்றுக்குள் சென்று ஆகாரப்பையை அடைகிறது.
உணவோ,நீரோ தொண்டை வழியாக இறங்கும் பொழுது மூச்சுக் குழாயின் ஆரம்பத்தில் epiglottis(எபிகுளோட்டிஸ்)என்ற மூடி மூச்சுக்குழாக்குள் உணவோ,நீரோ செல்ல விடாமல் தடுத்துக் கொள்கிறது.இது மனித உடலமைப்பாகும்
இதற்கு மாறாக அவசர அவசரமாக உண்ணும் பொழுதும்,பருகும் பொழுதும்,அந்த மூச்சுக்குழாயின் மூடி,நம் அவசர நிலைக்கு ஈடுகொடுக்க முடியாமல் போகிறது.
அதனால் எற்படும் விளைவுதான் "பொறை ஏறுதல்"நாம் சாதரணமாக காற்று அடங்கிய சக்கரத்தில் காற்று வெளியாகும் பொழுது விரலை வைத்தால் நம் விரல்களை மேல்நோக்கி தள்ளிவிடும் சக்தி கொண்டது.
அதுபோலவே உணவோ,நீரோ மூச்சுக் குழாயின் வழியாக சென்றால் அவைகளை வெளியே வேகமாக தள்ளுவதால்,அவ்வுணவுகள் மூக்கின் வழியாக வெளியேறி மாபெரும் வேதனைகளை ஏற்படுத்தவும் செய்கின்றது.அதனின் உச்சகட்டம் உயிரையே பறித்து விடும்அளவிற்கு போய் விடுகிறது.
நபி(ஸல்)அவர்களின் வழிமுறை...
தண்ணீரில் மூச்சு விட்டு குடிப்பது ஆகுமா ?
இப்னு அப்பாஸ்(ரலி)அவர்கள் அறிவிக்கின்றார்கள்:
நபி(ஸல்) அவர்கள் "நீர் அருந்தும்பொழுது மூச்சு விடுவதையும்,தண்ணீர் பாத்திரத்தில் ஊதுவதையும் தடுத்துள்ளார்கள்.(நூல்:அபூதாவூத்)
அபூசயீது(ரழி) அவர்கள் மர்வான் அரசரிடம் சென்றனர். “பாத்திரங்களில் ஊதுவதைப் பற்றி நபி(ஸல்) அவர்கள் தடைசெய்ததைத் தாங்கள் அறிவீர்களா?’ என்று மன்னர் கேட்டார்.
“ஆம்’, “ஒரே மூச்சில் தண்ணீர் குடிப்பதால் தாகம் நமக்குத் தீருவதில்லை’ என்றும், “பாத்திரத்தில் மூச்சு விடலாமா?’ என்றும் ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் வினவினார்.
“உம் வாயை விட்டு பாத்திரத்தை நகர்த்திக் கொண்டு பிறகு மூச்சு விடவும்’ என்று நபி(ஸல்) அவர்கள் கூறினர்.
“தண்ணீரில் தூசிகள் இருக்கக் காண்கிறேன். வாயால் ஊதி அதனை ஒதுக்கிவிடலாமா? என்று அவர் மேலும் கேட்டார்.
“அதை(சிறிது) கீழே ஊற்றுவதால் அது போய் விடும்’ என்று நபி(ஸல்) அவர்கள் எடுத்துரைத்தார்கள். அறிவிப்பாளர்: அபுல் முஸன்னல் ஜுஹ்னிய்யீ ஆதாரம்: முஅத்தா, அபூதாவூத், திர்மிதீ.
“உங்களில் எவரும் எதையாவது அருந்தினால், அதன் பாத்திரத்தில் மூச்சு விட வேண்டாம்” என்று நபி(ஸல்)அவர்கள் கூறினர். அறிவிப்பார்: அபூ கதாதா(ரழி) நூல்: புகாரீ, முஸ்லிம், திர்மிதீ, நஸயீ.
“நபி(ஸல்) அவர்கள் எதையாவது குடிக்கும் பொழுது (தம் வாயை அருந்தும் பாத்திரத்திலிருந்து எடுத்து) 3 முறை மூச்சு விட்டு வந்தனர்” அறிவிப்பாeர்: அனஸ்(ரழி) நூல்:புகாரீ, முஸ்லிம்,அபூதாவூத், திர்மிதீ.
“ஒட்டகம் தண்ணீர் குடிப்பது போன்று, ஒரே மூச்சில் நீங்கள் நீர் அருந்தாதீர்கள் என்றாலும், இரண்டு மூன்று முறை மூச்சு விட்டு அல்லது எடுத்து எடுத்து தண்ணீர் அருந்துங்கள். மேலும், நீர் அருந்தும் போது “பிஸ்மி’யும் கூறுங்கள். நீர் அருந்தி விட்டால் “அல்ஹம்துலில்லாஹ்’ என்றும் கூறுங்கள்’ என நபி(ஸல்) அவர்கள் கூறினர். அறிவிப்பாளர்: இப்னு அப்பாஸ்(ரழி) நூல்: திர்மிதீ
மேற்குறிப்பிட்டுள்ள ஹதீஸ்களிலிருந்து குடிக்கும் பானங்களில் ஊதிக் குடிக்கக் கூடாது என்று அறிய முடிகிறது.
பானங்களின் அதிகமான சூட்டைக் குறைப்பதற்காக, பானங்களை மற்றொரு பாத்திரத்தின் உதவியுடன் ஆற்றிக் குடியுங்கள். அல்லது பானங்கள் உள்ள பாத்திரத்தைக் கையால் அசைத்து அசைத்து சூட்டைக் குறைத்துக் கொள்ளுங்கள். சூட்டைக் குறைப்பதற்காக வாயால் பானங்களில் ஊதாதீர்கள்.
ஏன் ஊதக் கூடாது என்று அடுத்த வினாவைத் தொடுக்கிறீர்கள்.
அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கட்டளையிட்டதை ஏற்று அப்படியே செயல்படுவதுதான் விசுவாசிகளின் பணி.அக்கட்டளைகளில் நிறை பொருட்கள் செறிந்து இருக்கும். இருப்பினும் எமக்குத் தெரிந்ததைத் தெரிவிக்கிறோம்.

விஞ்ஞானிகளின் கூற்று.......
நாம் வெளிவிடும் மூச்சில் உலோகத் தொடர்பில்லாத கரியம் (அணு எண் 6) வெளியாகும். இது கரியமிலம் (CORBONIC ACID) அல்லது கரியமில வாயு (CORBONIC ACID GAS) என்று அழைக்கப்படுகிறது.
நீர்மத்திலிருந்து காற்றூட்ட அழுத்தம் குறைவால் குமிழாக வெளிவரும் “கரிய-அமில-ஆவி’ இது. இதனை உட்கொள்வதால் ஆரோக்யம் பாதித்திடும்; தாகம் தீராது; செரிமனத்தைத் தடுக்கும். எனவே, பானங்களில் ஊதிக் குடிக்கக் கூடாது என்பதை அறிவோமாக.

நபி(ஸல்)அவர்களின் வழிமுறை...
சாப்பிட்ட பின் விரல்களை நன்றாக சூப்புவதும் தட்டை நன்றாக வழிப்பதும்:
ஹள்ரத் அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் : நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் “உங்களில் ஒருவர் சாப்பிட்டு (முடிக்கு)ம் போது விரல்களை சூப்பட்டும். ஏனெனில் அவைகளில் எதில் இறைவனுடைய பரக்கத் (அருள்) இருக்கிறதென அவர் அறிய மாட்டார். இன்னும் கூறினார்கள் “(சாப்பிட்டு முடிக்கும் போது) தட்டை (நன்றாக) வழிக்கட்டும். ஏனெனில் உங்களுடைய உணவில் எதில் பரக்கத் இருக்கும் என்பதை அவர் அறியமாட்டார்.” என்று கூறினார்கள்.                     (நூல்: முஸ்லிம்)

விஞ்ஞானிகளின் கூற்று.......

பொதுவாக உணவில் வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் மேலும் (Mineral Salts) தாது உப்புக்கள் அதிகம் இருந்தாலும் சாப்பிடும் பொழுது உணவின் அடிப்பகுதியிலும் விரல்களிலும் போய் சேர்ந்து விடுகிறது. எனவே தட்டை வழித்து விரல்களை சூப்பி சாப்பிடும் பொழுது இந்தச் சத்துக்கள் உடம்பினுள் சென்று செரி மானத்தை அதிகப்படுத்தி மனிதனுக்கு ஆரோக்கியத்தை கொடுக்கிறது. மட்டுமின்றி மன அழுத்தத்தையும் நீக்குகிறது.          (நூல் : சுன்னதே நபவீ அவ்ர் ஜதீத் சையின்ஸ்)

நபி(ஸல்)அவர்களின் வழிமுறை...

சாப்பிட்டு முடித்ததும் கைகளை கழுகுவது
ஹள்ரத் ஸல்மான் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் :  நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: நிச்சயமாக சாப்பிடும் முன்பும் பின்பும் கைகளை கழுவிக்கொள்வதால்  உணவில் பரகத் ஏற்படுகிறது.                                 
 (நூல் : அபூதாவூத்)

விஞ்ஞானிகளின் கூற்று.......
 
சாப்பிட்ட பின் டிஸ்ஸு பேப்பரால் கைகளை துடைப்பதாலோ அல்லது கைகளை சூப்பி விட்டு கழுகாமல் அப்படியே விட்டுவிடுவதாலோ கிருமிகள் விரல் இடுக்குகளிலும் நக இடுக்குகளிலும் ஒன்று சேர்ந்து Septic ஆக வாய்ப்புள்ளது. இப்பழக்கம் தொடர்ந்தால் வெகு சீக்கிரம் தோல் வியாதிகளும் ஏற்படும்.

நபி(ஸல்)அவர்களின் வழிமுறை...

திரையில்லா வான வெளியில் படுத்து உருங்குவதை நபி(ஸல்)அவர்கள் தடுத்துள்ளார்கள்.(நூல்:திர்மிதி) 



விஞ்ஞானிகளின் கூற்று.......

படுத்துறங்கும்  மனிதனுக்கு மேலாக மறைப்போ அல்லது கூரையோ,அல்லது சிமெண்ட் போன்ற பொருள்,துணி மற்றும் கயிறினால் கூட அமைந்திருக்கலாம்.மறைப்பு இல்லாமல் உறங்குவது தவறு,கூடாது என்பதனை இவ்வற்புத நபி மொழி நவில்கிறது.ஏன்?

இரவின் பிற்பகுதியில் வானமேடையில் பறவை ஒன்று பறக்கும்.அப்பறவையின் நிழல் இம்மனிதனின் மீது பட்டுவிட்டால்,தீராத நோய்களுக்கு ஆளாகின்றான்.அவனின் உயிரையும் உறிஞ்சிவிடும் அளவிற்கு வியாதியை,இறைவன் அப்பறவைக்கு கொடுத்து இருக்கிறான்.
 
மேலும் சில விஷயங்களில்.......
மனிதன் என்ன உண்கிறானோ – அதனுடைய தாக்கம் அவனது நடவடிக்கைகளில் தென்படும் என்பது அறிவியல் கூற்று. அப்படி இருக்கும்போது – இஸ்லாம் புலால் உணவு உண்ண அனுமதியளிப்பது எப்படி? ஏனெனில் – புலால் உணவு உண்ணுவது மனிதனை வன்முறையாளனாகவும் – மூர்க்கமானவனாகவும் மாற்றுமே! எப்படி?

பதில்:

1. இஸ்லாமிய மார்க்கம் – தாவர உண்ணிகளான ஆடு மாடு ஒட்டகம் போன்ற கால்நைடகளை மாத்திரம் மனிதர்கள் உணவாக உட்கொள்ள அனுமதியளித்துள்ளது.

மனிதன் என்ன உண்கிறானோ – அதனுடைய தாக்கம் அவனது நடவடிக்கைகளில் தென்படும் என்பதை நான் ஏற்றுக் கொள்கிறேன். எனவேதான் இஸ்லாமிய மார்க்கம் – மாமிச உண்ணிகளான சிங்கம் – புலி – சிறுத்தை போன்ற விலங்கினங்களை மனிதர்கள் உணவாக உட்கொள்வதை தடை செய்துள்ளது. ஏனெனில் மேற்படி விலங்கினங்கள் மூர்க்க குணம் கொண்டவை. மேற்படி விலங்கினங்களின் இறைச்சியை உண்பவர்கள் மூர்க்கக் குணம் கொண்டவர்களாக மாறலாம். அதனால்தான் இஸ்லாம் தாவர உண்ணிகளான ஆடு – மாடு – ஒட்டகம் போன்ற பிரானிகளின் இறைச்சியை மனிதர்கள் உணவாக உட்கொள்ள அனுமதித்துள்ளது. மேற்படி பிராணிகள் – அமைதியானதும் – பணிவானதும் ஆகும். இஸ்லாமியர்களான நாங்கள் – அமைதியான பிராணிகளான – ஆடு – மாடு – ஒட்டகம் போன்றவைகளை உணவாக உட்கொள்கிறோம். எனவேதான் நாங்கள் அமைதியை விரும்புகிறவர்களாக – இருக்கின்றோம்.
மாமிசம் உண்ணும் பிராணிகளை மனிதர்கள் உணவாக உட்கொள்ளத் தடை பற்றி நபி (ஸல்) அவர்கள் அறிவித்த செய்தி:

முஹம்மது நபி (ஸல்) அவர்கள் அறிவித்ததாக இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கும் மேற்படி செய்தி ஸஹீஹுல் புஹாரி – ஸஹீஹுல் முஸ்லிம் (ஹதீஸ் எண் 4752) ஸுனன் இப்னு மாஜா (ஹதீஸ் எண் – 3232 முதல் 3234 வரை) போன்ற ஹதீஸ் (செய்தி) நூல்களில் இடம்பெற்றுள்ளன.

அ. மாமிசம் உண்ணக்கூடிய கூரிய பற்களையும் நகங்களையும் உடைய காட்டு விலங்குகளான – சிங்கம் புலி நாய் ஓநாய் போன்றவைகள்.

ஆ. கொறித்துத் திண்ணக்கூடிய பற்களை உடைய எலி பெருச்சாலி அணில் போன்றவைகள்

இ. ஊர்ந்து திரியக் கூடிய பாம்பு முதலை போன்ற பிராணிகள்

ஈ. கூரிய அலகுகளையும் – கால் நகங்களையும் உடைய கழுகு பருந்து காகம் ஆந்தை போன்ற பறவைகள் ஆகியவை மனிதர்கள் உணவாக உட்கொள்ள தடை செய்யப்பட்ட பிராணிகள் மற்றும் பறவைகள் ஆகும்.
 
                                                وأنزلنا إليك الذكر لتُبيّن للناس ما نُزِّل إليهم
 
மக்களுக்கு அருளப்பட்டதை நீர் அவர்களுக்கு விளக்க வேண்டும் என்பதற்காகவும் இந்தப் போதனையை உமக்கு அருளினோம்.
அல் குர்ஆன் 16;44

அதனால் தான் வேதங்களுடன் நபிமார்களும் மனித சமூகத்திற்கு தேவைப்பட்டனர்.
من يعش منكم بعدي فسيرى اختلافاً كثيراً، فعليكم بسنتي

எனவே குழப்பமான காலத்தில் என் சுன்னத்தை வலுவாக பிடித்துக் கொள்ளுங்கள் என நபி ஸல் அவர்கள் கூறுகிறார்கள்.

قال -صلى الله عليه وسلم-: "إن من ورائكم زمان صبر، للمتمسك فيه أجر خمسين شهيداً منكم" الطبراني وصححه الألباني.
பின்னால் ஒரு காலம் வரும்,அதில் சுன்னத்தை பற்றி பிடிப்பவருக்கு 50 ஷஹீத்களின் நன்மை கிடைக்கும்.என்று நபி ஸல் அவர்கள்

கூறினார்கள்.

قال عبد الله الديلمي: إن أول ذهاب الدين ترك السنة، يذهب الدين سُنةً سُنةً كما يذهب الحبل قوة قوة.


இந்த தீனின் அழிவு சுன்னதை விடுவதிலிருந்து ஆரம்பிக்கும் என அப்துல்லாஹ் தைலமி ரஹ் அவர்கள் கூறுகிறார்கள்.

பிறப்பு முதல் இறப்பு வரை மிகச்சிறந்த வழிகாட்டுதலை தரப்பட்ட இந்த உம்மத் தன் சுய முகவரியை இழந்துவிடாமல் இருக்க சுன்னத்துக்களை பின் பற்றி நடப்போமாக!

என் வழிமுறையை நேசிப்பவர் என்னை நேசிப்பவர்.

என்னை நேசிப்பவர் என்னுடன் சுவனத்தில் இருப்பார். 
(நபி ஸல் அவர்கள்)

 

மேலும் பல தகவலுக்கு கீழே உள்ள நிகர இணைப்பில்தெரிந்து கொள்ளலாம்.
[Forwarded from Naseer Misbaahi]
A.R LION HEAD NEWS: எச் ஐ வி தொற்றை கத்னா (சுன்னத்) குறைக்கும்
http://googleweblight.com/?lite_url=http://arlionnews.blogspot.com/2011/08/blog-post_21.html?m%3D1&ei=7KKe_Ria&lc=en-IN&s=1&m=161&ts=1453267553&sig=ALL1Aj4EI4JxsC5G_AvTxdgt8kJxTVpOMQ

vkalathurone.com: மிஸ்வாக் செய்வதின் பலன்கள்...
http://googleweblight.com/?lite_url=http://vkalathurone.blogspot.com/2013/09/blog-post_2.html?m%3D1&ei=suBedxkt&lc=en-IN&s=1&m=161&ts=1453271803&sig=ALL1Aj4f6ZMK2x2ep4-i2vho08FNk7XHgw

[Forwarded from Naseer Misbaahi]
Yousuf kashifi: மிஸ்வாக்
http://googleweblight.com/?lite_url=http://yousufkashifi.blogspot.com/2013/09/blog-post.html?m%3D1&ei=wOZ3W_7C&lc=en-IN&s=1&m=161&ts=1453271926&sig=ALL1Aj7K0hqrebEt1ed_bNWDlpinlmuEvQ

[Forwarded from Naseer Misbaahi]
இஸ்லாத்தில் தாடி வளர்ப்பதின் நண்மைகள்.. | தூய வழி
http://googleweblight.com/?lite_url=http://www.thuuyavali.com/2014/04/blog-post.html?m%3D1&ei=ffaSTasP&lc=en-IN&s=1&m=161&ts=1453272148&sig=ALL1Aj68YmBc17PLYgtyoWsnxwoZ1GWpTg

குறிப்பு வழங்கியவர்கள்:
மௌலவி நஸீர் மிஸ்பாஹி
மௌலவி இல்யாஸ் மிஸ்பாஹி.

தொகுத்து வழங்கியவர்;
 
மௌலவி கம்பம் 
சுல்தான் முஹைத்தீன் ஸலாஹி.











   

  

 



 

 




 

0 comments:

Post a Comment