11 February 2016

பிரிவினை வேண்டாம்

"நீங்கள்(ஏகதெய்வக்கொள்கையுடைய சத்திய)மார்க்கத்தை நிலை நிறுத்துங்கள்: நீங்கள் அதில் பிரிந்து விடாதீர்கள்.(அல்குர்ஆன் 42:13) நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள்:
  أَلا أُخْبِرُكُمْ بِأَفْضَلَ مِنْ دَرَجَةِ الصِّيَامِ وَالصَّلاةِ وَالصَّدَقَةِ " , قَالُوا : بَلَى يَا رَسُولَ اللَّهِ , قَالَ :  صَلاحُ ذَاتِ الْبَيْنِ , قَالَ , فَإِنَّ فَسَادَ ذَاتِ الْبَيْنِ هِيَ الْحَالِقَةُ      
நோன்பு,தொழுகை,தான தர்மங்களை விடச் சிறந்த காரியத்தை நான் உங்களுக்கு சொல்லட்டுமா?என நபி(ஸல்)அவர்கள் கேட்க, "அவசியம் கூறுங்கள்"என ஸஹாபாக்கள் கூறினர்."மக்களுக்கிடையில் ஒற்றுமையை ஏற்படுத்துவது இவை அனைத்திலும் சிறந்தது.ஏனெனில் ஒற்றுமையின்றி இருப்பது தீனை(மார்க்கத்தை)ச் சிரைத்துவிடக் கூடியது"(சவரக்கத்தி)தலைமுடியை முழுமையாக சிரைத்துவிடுவது போலத் தமக்குள் சண்டையிட்டுக் கொள்வது தீனை இல்லாமலாக்கிவிடும்"என நபி(ஸல்)அவர்கள் சொன்னதாக ஹழ்ரத் அபூதர்தா(ரலி)அவர்கள் அறிவிக்கிறார்கள்.(நூல்:திர்மிதி)
இன்றைய நிலை............  
ஆம்!உண்மைதான் இன்று பிளவுபட்டு சிதறிப்போய் இருக்கின்றோம்.வாய் தகராறுலிருந்து தெருச் சண்டை,நணபர்களின் தேவையில்லாத சண்டை,கணவன் மனைவி சண்டை,வியாபாரச் சண்டை இப்படியாக உருவாகி இன்று தொப்பி போட்டவனா,போடாதவனா?ஃபாத்திஹாவுக்கு ஆமீன் சொல்பவனா,ஆமீன் சொல்லாதவனா? விரலை ஆட்டுபவனா?
ஆட்டாதவனா?இமாம்களை ஏற்றுக் கொள்பவனா?ஏற்காதவனா?   என்ற நிலை ஏற்பட்டு, நமக்கு (முஸ்லிம்களுக்கு) மத்தியில் மத்ஹப்பிரச்சனையால்,காவல்துறைவாசலில்,நீதிமன்றம் கூண்டில்,
கோஷத்தின் மூலம் பொது இடங்களில்,மேடை அமைத்தும் நமக்கு
நாமே திட்டுவதும்,ஏசுவதும்,அடி,உதைஇதனால்,கணவன் மனைவியின்
மீது சண்டை,பெற்றோர்கள் தம் பிள்ளைகளின் மீது சண்டை, என்ற  
நிலைமையும் உருவாகி, இறைவனுக்கு உருவம் உள்ளது என்பதை
நம்பிக்கை உள்ளவனா? நம்பிக்கைஇல்லாதவனா? என்ற நிலையே 
உருவாகிநாம்பிளவுபட்டு,ஒருவருக்கொருவர்நாங்கள்தான்உயர்ந்தவர்கள் என்றுமார்பு தட்டிஆனந்தம் அடைகிறோம்.ஆனால், ஆனந்தம் அடைவது நாமல்ல, 
மாறாக! நம் மார்க்கத்தை சுக்கு நூறாக்கும் கயவர்களுக்குத்தான்  ஆனந்தம்.
1097ம் ஆண்டு ஐரோப்பாவில் நடந்த ஒரு மகாநாட்டில் இவ்வாறு கூறப்பட்டது:
"தற்போது ஐரோப்பியர்களுக்கு,மத்திய கிழக்கு நாடுகளில் வாழும் முஸ்லிம்கள்தான் மிகப்பெரும் ஆபத்தானவர்கள்.எனவே அனைத்து முயற்சிகளையும் செய்து அவர்களின் ஒற்றுமையை சீர் குலைக்க வேண்டும்"என்று அம்மகாநாட்டில் முடிவு செய்யப்பட்டது.
(தர்பியஹ் பக்கம்:756)
இங்கு நமக்குள் வார்த்தையாலும்,ஆயுதத்தாலும் சண்டை போட்டுக்கொள்வதெல்லாம், அவர்களுக்கு பக்கபலமாகும்.நமக்கு மத்தியில் பிரிவினையால்,அவர்கள் (சமூகம்) விரிவடைவதை நாம் யோசிப்பதை மறந்து விடுகிறோம்.
عن أبي هريرة وثوبان قالا، قال رسول الله صلى الله عليه وسلم: "يوشك أن تداعى عليكم الأمم من كل أفق، كما تداعى الأكلة إلى قصعتها"، قيل: يا رسول الله: فمن قلة نحن يومئذ؟ قال: لا، بل أنتم يومئذ كثير،ولكنكم غثاء كغثاء السيل،ولينزعن الله من صدور عدوكم المهابة منكم، وليقذفن الله في قلوبكم الوهن" فقال قائل: يا رسول الله، وما الوهن؟ قال: "حب الدنيا، وكراهية الموت".
அல்லாஹ்வின்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்,
உண்ணுதல் நிமித்தம் மக்கள் ஒன்றுகூடுவது போலவே (பல்வேறு) சமுதாயத்து மக்கள் உங்களுக்கு எதிராக வெகுவிரைவில் ஒன்றுகூடுவார்கள்!  ‘அந்நாட்களில் நாங்கள் குறைவான எண்ணிக்கையில் இருப்பதின் காரணமாகவா?’ என்று வினவப்பட்டது. ‘இல்லை! அந்நாட்களில் நீங்கள் அதிகமான எண்ணிக்கையில் இருப்பீர்கள்! எனினும் கடல் நுரையை போன்று (பலவீனமாக) இருப்பீர்கள்! அல்லாஹ் உங்களை பற்றிய அச்சத்தை உங்கள் எதிரிகளிடமிருந்து அகற்றிவிட்டு உங்கள் இதயங்களில் வஹ்னை போட்டு விடுவான்!’ என்று கூறினார்கள். ‘அல்லாஹ்வின்தூதர்(ஸல்) அவர்களே! வஹ்ன் என்றால் என்ன?’ என்று வினவப்பட்டது. ‘உலக வாழ்க்கையின் மீதுள்ள (ஆழமான) விருப்பம் மற்றும் மரணத்தின் மீதுள்ள (கடுமையான) வெறுப்பு!’ என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்  (நூல் : அஹ்மது, அபூதாவூது)
திருமறை கூறுகிறது 
ولا تنازعوا فتفشلوا وتذهب ريحكم واصبروا ان الله مع الصابرين
நீங்கள் உங்களுக்குள் பிணங்கிக் கொள்ள வேண்டாம்.அவ்வாறு பிணங்கிக் கொண்டால் நீங்கள் கோழையாகி,துணிவை இழந்து விடுவீர்கள்.உங்கள் வலிமை குன்றி விடும்.ஆகவே நீங்கள் பொறுமையாக இருங்கள்.நிச்சியமாக அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருகின்றான்.(அல் குர்ஆன் 8:46)
நமக்குள் கருத்து வேறுபாடு இருக்கலாம்,அனால் அதுவே ஆபத்தாகி விடக்கூடாது.
“கருத்துவேறுபாடு” தான் சமூகத்தில்நிலவுகிற ஒற்றுமையின்மைக்கு காரணமாகஅமைந்திருப்பதாக குற்றம் சுமத்துகின்றார்கள்.
இதே கருத்து வேறுபாடுநபித்தோழர்களுக்கு மத்தியில் இருந்திருக்கிறது,தாபியீன்களுக்கு மத்தியில் இருந்திருக்கிறது,இமாம்களுக்கு மத்தியில் இருந்திருக்கிறதுஆனால், அவர்கள் பிரிந்து போகவில்லை.சமூகத்தை பிரித்துக் கொண்டும் போகவில்லை.பின்னர் ஏன் நாம் பிரிந்துபோயிருக்கின்றோம்? அவர்கள்கருத்துவேறுபாட்டின் போது எத்தகையஇஸ்லாமிய ஒழுக்க நெறிகளைகையாண்டார்களோ அத்தகைய ஒழுக்கநெறிகளை நாம் கையாளவில்லை.

நபித்தோழர்களின் கருத்துவேறுபாடும்… அவர்களின் ஒற்றுமையும்…

1. உமர் (ரலி) அவர்களும்… இப்னுமஸ்வூத் (ரலி) அவர்களும்…
ولقد ذكر ابن القيم في "إعلام الموقعين " أن المسائل الفقهية التي خالف فيها ابن مسعود عمر رضي
الله عنهما بلغت مائة مسألة وذكر أربعاً منها.
அல்லாமா இப்னுல் கைய்யூம் அல் ஜவ்ஸீ(ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்: “உமர் (ரலி)அவர்களுக்கும் இப்னு மஸ்வூத் (ரலி)அவர்களுக்கும் இடையே நூறு மஸ்அலாக்களில்கருத்து வேறுபாடு இருந்தது.
وكان ابن مسعود يرى في قول الرجل لامرأته: "أنت عَلَيَّ حرام " أنه يمين، وعمر يقول: هي طلقة واحدة.
ஒரு கணவன் தன் மனைவியைப்பார்த்து"أنت عَلَيَّ حرام "  “நீ என் மீது ஹராம்”என்று சொல்லி விட்டால் என்ன சட்டம் என இப்னுமஸ்வூத் (ரலி) அவர்களிடம் வினவப்பட்ட போது”சத்தியத்திற்குரிய சட்டம் என்னவோ அது தான்இதற்குரிய சட்டம் என்று கூறினார்கள்.
சத்தியத்தை முறித்ததற்கான பரிகாரம் –கஃப்ஃபாரா கொடுத்து விட்டால் மீண்டும் கணவன்மனைவியோடு சேர்ந்து வாழலாம்” என்றுகூறினார்கள்.

இதே விஷயத்தில் உமர் (ரலி) அவர்கள்நிலைப்பாடு என்னவெனில் “அது ஒரு தலாக்விடுவதற்குச் சமம். முதல் தலாக் நிகழ்ந்து விடும்.எனவே, தலாக்கிற்கான இத்தா முடிந்த பிறகுமீண்டும் கணவன் தன் மனைவியோடு சேர்ந்துவாழலாம்” என்று கூறினார்கள்.
وكان ابن مسعود يقول في رجل زنى بامرأة ثم تزوجها: لا يزالان زانيين ما اجتمعا، وعمر لا يرى ذلك، ويعتبر أوله سفاحاً وآخره نكاحاً.
இதே போன்று, ஒருவன் தான் விபச்சாரம்செய்த பெண்ணையே திருமணம் செய்துகொண்டு வாழ்கிறானெனில் அவர்கள் இருவரும்சேர்ந்து வாழும் காலமெல்லாம் விபச்சாரக்குற்றத்திலேயே வாழ்கின்றார்கள்” எனும்கருத்தைக் கொண்டிருந்தார்கள் இப்னு மஸ்வூத்(ரலி) அவர்கள்.
ஆனால், உமர் (ரலி) அவர்களோ ”முந்தையஉறவை குற்றமென்றும், பிந்திய உறவைதிருமணம் என்றும்” கூறினார்கள்.
وعمر رضي الله عنه معروف من هو في فقهه وجلالة قدره، وقد كان ابن مسعود أحد رجال عمر رضي الله عنهما في بعض الأعمال،
ஆனால், பெரும்பாலான நேரங்களிலும்,முக்கியமான சட்டப் பிரச்சனைகளின் போதும்உமர் (ரலி) அவர்கள் இப்னு மஸ்வூத் (ரலி)அவர்களின் சட்ட முன் வடிவுக்கே முன்னுரிமைதந்திருக்கின்றார்கள்.
ومع ذلك فإن اختلافهما هذا ما نقص من حب أحدهما لصاحبه، وما أضعف من تقدير ومودة أي منهما للآخر،
மேலும், இப்னு மஸ்வூத் (ரலி) அவர்கள் மீதுஉமர் (ரலி) அவர்களுக்கும், உமர் (ரலி) அவர்கள்மீது இப்னு மஸ்வூத் (ரலி) அவர்களுக்கும் எவ்விதகாழ்ப்புணர்ச்சியும், குரோதமும் ஏற்பட்டதுகிடையாது. ஒருவருக்கொருவர் அதிக நட்போடும்,அன்போடும் வாழ்ந்து வந்தார்கள்.

உமர் (ரலி) அவர்களுக்கும் அபூபக்ர் (ரலி)அவர்களுக்கும் பல்வேறு விஷயங்களில் கருத்துவேறுபாடுகள் இருந்தன.
كما اختلفا في قسمة الأراضي المفتوحة: فكان أبو بكر يرى قسمتها وكان عمر يرى وقفها ولم يقسمها.
அபூபக்ர் (ரலி) அவர்கள் இஸ்லாமியப்படைகள் வெற்றி கொள்கிற பூமியில் கிடைக்கிறநிலங்களை படைவீரர்களுக்கு பங்கு வைத்துகொடுத்தார்கள். உமர் (ரலி) அவர்கள் தங்கள்ஆட்சிக்காலத்தில் சில காலம் இதைக் கடைபிடித்தபோதும் பின்நாளில் வெற்றி கொள்ளப்பட்டபூமியில் கிடைக்கிற நிலங்களைபைத்துல்மாலுக்கு வக்ஃப் செய்து விட்டார்கள்.
وكذلك اختلفا في المفاضلة في العطاء، فكان أبو بكر يرى التسوية في الأعطيات حين كان يرى عمر المفاضلة وقد فاضل بين المسلمين في أعطياتهم.

இது போன்றே, அபூபக்ர் (ரலி) அவர்கள்பைத்துல் மாலிலிருந்து செய்கிற உதவியாகட்டும்,அல்லது ஃகனீமத் பொருளை பங்கு வைக்கிறவிதமாக இருக்கட்டும் அனைவருக்கும் சமமாகவே பங்கு வைப்பார்கள்.


ويسأل بعضهم أمير المؤمنين علياً عن "أهل الجمل " أمشركون هم؟ فيقول رضي الله عنه: من الشرك فرُّوا .
قال: أمنافقون هم؟ فيقول رضي الله عنه: إن المنافقين لا يذكرون الله إلاّ قليلا   .

فيقال: فمن هم إذن؟ فيقول كرَّم الله وجهه: إخواننا بغوا علينا.

 

ஒரு சமயம் சிலர் அலீ (ரலி) அவர்களிடம் வந்து உங்களை எதிர்த்த ஜமல் கலகக்காரர்கள்“முஷ்ரிக்குகளா?” என்று கேட்டனர்.
அதற்கு அலீ (ரலி) அவர்கள்“அவர்களுக்கும் இணைவப்பிற்கும் துளியளவு கூட சம்பந்தமில்லை. அவர்கள் இணைவைப்பிலிருந்து விலகி ஓடியவர்கள்” என்றார்கள்.
அப்படியானால், ”அவர்கள் நயவஞ்சகர்களா?” என்று கேட்டார்கள். அதற்கு,அலீ (ரலி) அவர்கள் “நயவஞ்சகர்கள் அல்லாஹ்வை கொஞ்சமாகத்தானே நினைவு கூறுவார்கள். ஆனால், இவர்களோ படைத்த ரப்பை அதிகமதிகம் நினைவு கூர்பவர்கள் ஆயிற்றே”என்றார்கள்.
அப்படியானால், ”அவர்கள் யார்?” என்று கேட்டார்கள். அதற்கு, அலீ (ரலி) அவர்கள்“அவர்கள் நம் சகோதரர்கள் தான், எனினும் நமக்கு எதிராக துணிந்து விட்டவர்கள்” என்றார்கள்.

இரு மத்ஹபுகளை உருவாக்கிய தலைவர்களான இமாம் அபூஹனீபா,
இமாம் மாலிக் ரஹ்மத்துல்லாஹ் அலைஹிமா ஆகிய இருவரும்
ஒன்றாக சேர்ந்து இரவு முழுவதும் மார்க்க சம்பந்தமான சட்டங்களை பகிர்ந்துக் கொண்டுள்ளனர்.
ஆனால், இன்றோ கருத்து வேறுபாடு கொண்டிருக்கிற இருவேறு தலைவர்கள், இருவேறு இயக்கத்தினர்கள் ஒருவர் 
மற்றொருவரை எந்த அளவு கீழ்த்தரமாக விமர்சிக்கின்றார்கள். முஷ்ரிக் என்றும் காஃபிர் என்றும் கொஞ்சம் கூட நா கூசாமல் பொது மேடைகளில் முழங்கி வருகின்றார்கள் என்பதை நாம் சிந்திக்க கடமை பட்டிருக்கின்றோம்.
மேலும், இருவேறு கருத்து கொண்டவர்கள் ஜமாத் தொழுகையை புறக்கணிப்பதும், தனியாக ஜமாத் நடத்துவதும், தனிப்பள்ளி அமைப்பதும் பரவலாகி வருவதையும் பார்த்து வருகின்றோம்.
மீண்டும் ஞாபகம்......
நமக்குள் கருத்து வேறுபாடு இருக்கலாம்,அனால் அதுவே ஆபத்தாகி விடக்கூடாது.
திருமறை கூறுகிறது
وَلَا تَكُوْنُوْا كَالَّذِيْنَ تَفَرَّقُوْا وَاخْتَلَفُوْا مِنْۢ بَعْدِ مَا جَآءَهُمُ الْبَيِّنٰتُ‌ؕ وَاُولٰٓٮِٕكَ لَهُمْ عَذَابٌ عَظِيْمٌۙ‏ 
(இறைவனின்) தெளிவான ஆதாரங்கள் தங்களிடம் வந்த பின்னரும், யார் தங்களுக்குள் பிரிவையுண்டுபண்ணிக் கொண்டு, மாறுபாடாகி விட்டார்களோ, அவர்கள் போன்று நீங்களும் ஆகிவிடாதீர்கள்; அத்தகையோருக்குக் கடுமையான வேதனை உண்டு.(அல் குர்ஆன் 3:105)

அவ்ஸ்,ஹஸ்ரஜ்(اوس خزرج)என்ற இரு சாராருக்கும் மத்தியில் 120வருடங்கள் பகைமை இருந்து வந்தது.அந்த பகைமையை புனித இஸ்லாம் அறவே அழித்ததோடு மட்டுமன்றி உலக சரித்திர ஆசிரியர்களே வாயில் விரலை வைத்து ஆச்சிரியப்படும் அளவிற்கு அவ்விரு சரார்களுக்கும் மத்தியில் சகோதரத்துவத்தை ஏற்படுத்தியது.ஒரு சில சந்தர்ப்பங்களில் ஒற்றுமையை இழந்ததன் காரணமாக முஸ்லிம்கள் தோல்வியையும் சந்தித்து உள்ளார்கள்.உதாரணத்திற்கு உஹ்துடைய யுத்தத்தை பார்க்கலாம்.இந்த யுத்தத்தின் முஸ்லிம்கள் கருத்து வேற்றுமை எல்லைமீறி கொண்டதின் காரணமாக ஒற்றுமை படவில்லை.அதனால் முஸ்லிம்களுக்கு ஆரம்பத்தில் தோல்வி ஏற்பட்டது.பிறகு வெற்றி கிடைத்தது மறுபக்கம்.

ஸ்பெயின் நாட்டை இஸ்லாமியர்கள் 800 ஆண்டுகளாக அரசாட்சி செய்தனர். ஸ்பெயின் நாட்டு முஸ்லிம்கள் எவரும் - ஸ்பெயின் நாட்டில் உள்ள மாற்று மதத்தவரை இஸ்லாமிய மார்க்கத்திற்கு மாறச் சொல்லி வாள் கொண்டு நிர்ப்பந்திக்கவில்லை. ஆனால் பின்னால் வந்த கிறிஸ்தவர்கள் சிலுவைப் போர் என்ற பெயரில் ஸ்பெயினில் உள்ள முஸ்லிம்கள் அனைவரையும் அழித்தனர். இன்றைக்கு ஸ்பெயினில் இறைவனை தொழுவதற்கு அழைக்கவென ஒரு முஸ்லிம் கூட இல்லை.
காரணம்!அன்று ஸ்பெயினில் வாழ்ந்த முஸ்லிம்களுக்கிடையில் கிறிஸ்தவர்களால் தூண்டிவிடப்பட்ட சாதாரண நம் மார்க்க மஸாயில்களில் ஏற்பட்ட விளைவுதான் 800 ஆண்டுகள் செய்த அரசாட்சி பிரிவினையால் பறிபோனது.

முன் பின் தெரியாத ஒரு ஊருக்கு ஒருவர் சென்றார் . தொழுகை நேரம் வந்தவுடன் அங்கிருந்தவர்களிடம் பள்ளி வாசல் எங்கே இருக்கிறது என்று அவர் பொதுவாக கேட்டு விட்டார். உடனே அங்கிருந்தவர்கள் “இப்படி பொதுவாக கேட்டால் நாங்கள் எப்படி வழி சொல்ல முடியும். இங்கேJAHQ பள்ளிவாசல் இருக்கிறது, ஷியா பள்ளிவாசல் இருக்கிறது, அஹ்லே ஹதீஸ் பள்ளிவாசல் இருக்கிறது சுன்னத் ஜமாஅத்
பள்ளிவாசல்இருக்கிறது, T.N.T.Jபள்ளிவாசல் இருக்கிறது நீங்கள் எந்த பள்ளி வாசலுக்குப் போக வேண்டும். என்றவுடன் வந்தவருக்கு ஒரு மாதிரி ஆகி விட்டது. ஆக முஸ்லிம்களுக்குள் இருந்து கொண்டே முஸ்லிம்களை பிளவு படுத்தும் தீய சக்திகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. ஆள் பலமும், பண பலமும் சிறிதளவு கிடைத்து விட்டாலே ஒட்டு மொத்த சமூகத்தின் தமக்குப் பின்னால் இருப்பதாக எண்ணி சமூகத்தை பிளவு படுத்துகின்றனர்.   


 நமக்குள் ஒற்றுமை வேண்டும்                           
                                    :
قال الرسول صلى الله عليه وآله و سلم  أن رجلا زار أخا له في قرية أخرى . فأرصد الله له ، على مدرجته ، ملكا . فلما أتى عليه قال : أين تريد ؟ قال : أريد أخا لي في هذه القرية . قال : هل لك عليه من نعمة تربها ؟ قال : لا . غير أني أحببته في الله عز وجل . قال : فإني رسول الله إليك ، بأن الله قد أحبك كما أحببته فيه.
صحيح مسلم         

ஒருவர் தன்னுடைய (முஸ்லிம்) சகோதரரைச் சந்திக்க மற்றொரு ஊருக்குச் சென்றார்.அல்லாஹுத்தஆலா அவர் செல்லும் பாதையில் ஒரு மலக்கை அமரச் செய்தான்.அம்மனிதர் அந்த மலக்கை சமீபாக சென்றதும்,"நீர் எங்கு செல்கிறீர்?என மலக்கு கேட்க,நான் இந்த ஊரிலுள்ள என்னுடைய ஒரு சகோதரரைச் சந்திக்கச் செல்கிறேன் என்று அம்மனிதர் கூறினார்.அவர் உமக்கு கொடுக்க வேண்டியதை எதையேனும் வாங்கச் செல்கிறீரா?என மலக்கு வினவ,இல்லை !நான் அல்லாஹுத்தஆலாவுக்காக அவரை நேசிக்கும் காரணத்தினால் தான் அங்குசெல்கிறேன்"என அவர் பதிலளித்தார்."எவ்வாறு நீர் அல்லாஹுத்தஆலாவுக்காக அந்தச் சகோதரரை நேசிக்கிறீரோ அவ்வாறே அல்லாஹுத்தஆலாவும் உம்மை நேசிக்கிறான் என்பதைச் சொல்ல என்னை உம்மிடம் அல்லாஹுத்தஆலா அனுப்பி வைத்தான்.என்று அந்த மலக்கு கூறினார் என நபி(ஸல்)அவர்கள் கூறியதாக ஹழ்ரத் அபூஹுரைரா (ரலி)அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(நூல் :முஸ்லிம்)

عن المعرور بن سويد قال: لقيت أبا ذر بِالرَّبَذَةِ وعليه حلة وعلى غلامه حلة، فسألته عن ذلك فقال: إني ساببت رجلا فعيرته بأمه، فقال لي النبي صلى الله عليه وسلم: يا أبا ذر أعيرته بأمه ؟! إنك امرؤ فيك جاهلية، إِخْوَانُكُمْ خَوَلُكُمْ جعلهم الله تحت أيديكم، فمن كان أخوه تحت يده فليطعمه مما يأكل، وليلبسه مما يلبس، ولا تكلفوهم ما يغلبهم، فإن كلفتموهم فأعينوهم . رواه الشيخان البخاري ومسلم
ஹழ்ரத் மஃரூர்رحمة الله அவர்கள் கூறுகிறார்கள்,"நான் ஹழ்ரத் அபூதர்(ரலி)அவர்களை "ரபதா"என்ற இடத்தில் சந்தித்த போது அவர்களும்,அவர்களுடைய அடிமையும் ஒரே வகையான ஆடைகளை அணிந்திருந்தனர்.தங்களின் உடைகளுக்கும்    தங்களின்         அடிமையின் உடைகளுக்குமிடையே எந்த வித்தியாசமும் இல்லையே!  காரணம் என்ன?என்று அவர்களிடம் கேட்டேன்,"ஒரு முறை நான்,என்னுடைய அடிமையைத் திட்டிவிட்டேன்,அவரது தாயாரைத் திட்டி ரோஷ மூட்டினேன்.இந்த செய்தி ரசூலுல்லாஹி (ஸல்)அவர்களுக்குத் தெரிந்துவிட்டது "அபூதர்ரே,நீர் இவரைத் திட்டி,இவரது தாயாரைத் திட்டி ரோஷமூட்டினீரா?அறியாமைக் காலத்தின் பழக்கம் இன்னும் உம்மில் குடிக்கொண்டிருக்கிறது.உம்முடைய அடிமைகள் உம்முடைய சகோதரர்கள் !அல்லாஹுத்த ஆலா அவர்களை உமது ஆதிக்கத்தில் வைத்துள்ளான்.எனவே,அடிமையைச் சகோதரராகப் பெற்று இருக்கிறாரோ,அவர்  தான் உண்பதையே அவருக்கும் உண்ணக்கொடுக்கவும்,தான் அணிவதையே அவருக்கும் அணியக்கொடுக்கவும்,நீங்கள் பாரமான வேலையை அவர்கள் மீது சுமத்தாதீர்கள்.அவர்களிடம் சிரமமான வேலையை ஒப்படைத்தால் அவர்களுடன் ஒத்துழையுங்கள்"என்று நபி (ஸல்)அவர்கள் கூறினார்கள் என ஹழ்ரத் அபூதர்(ரலி)அவர்கள் என்னிடம் கூறினார்கள்.
(நூல் :புகாரி)
ஒற்றுமைக்காக 
தன் மனைவியைக் கூட இழக்க முன் வந்தார்கள்.
عَنْ أَبِيهِ عَنْ جَدِّهِ قَالَ
لَمَّا قَدِمُوا الْمَدِينَةَ آخَى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بَيْنَ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَوْفٍ وَسَعْدِ بْنِ الرَّبِيعِ قَالَ لِعَبْدِ الرَّحْمَنِ إِنِّي أَكْثَرُ الْأَنْصَارِ مَالًا فَأَقْسِمُ مَالِي نِصْفَيْنِ وَلِي امْرَأَتَانِ فَانْظُرْ أَعْجَبَهُمَا إِلَيْكَ فَسَمِّهَا لِي أُطَلِّقْهَا فَإِذَا انْقَضَتْ عِدَّتُهَا فَتَزَوَّجْهَا قَالَ بَارَكَ اللَّهُ لَكَ فِي أَهْلِكَ وَمَالِكَ
அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப்(ரலி) அறிவிக்கிறார்கள்..
முஹாஜிர்களான நாங்கள் மதீனாவுக்கு வந்தபோது நபி(ஸல்) அவர்கள் என்னையும் ஸஅத் இப்னு ரபீஉ(ரலி) அவர்களையும் சகோதரர்களாக ஆக்கினார்கள். ஸஅத்(ரலி) 'நான் அன்ஸாரிகளில் அதிகச் செல்வமுடையவன் எனவே, என் செல்வத்தில் பாதியை உமக்குப் பிரித்துத் தருகிறேன்
என்னுடைய இரண்டு மனைவியரில் நீர் யாரை விரும்புகிறீர் என்று பாரும்! அவரை உமக்காக விவாகரத்துச் செய்கிறேன். அவரின் இத்தா முடிந்ததும் அவரை உமக்கு மணம் முடித்துத் தருகிறேன்!" என்று கூறினார். அப்போது நான், 'இது எனக்குத் தேவையில்லை! வியாபாரம் நடைபெறுகிற கடைவீதி ஏதும் (இங்கு) இருக்கிறதா?' எனக் கேட்டேன். .
மரண நேரத்திலும் மனித நேயம்
யர்முக் போரில் படுகாயமுற்று மரணத் தறுவாயில் தண்ணீர் தண்ணீர் என்று குரல் கொடுத்த தோழருக்கு தண்ணீருடன் நெருங்கியபோது மற்றொரு தோழருடைய குரல்கேட்டு அவருக்கு கொடுங்கள் என்று கூறி மரணத் தறுவாயில் கூட மற்றவரின் தேவைக்கு முன்னுரிமை கொடுத்த நபித்தோழர்கள்களின்சம்பவத்தைவும் பார்க்க முடிகிறது.

இறுதியாக…..     
அல்லாஹ் தன் திருமறையில் ஒரு அத்தியாயத்திற்கு எறும்பு என்று பெயர் வைத்து எறும்புடைய செய்தியையும் நமக்கு சொல்கிறானே அதன் நோக்கமென்ன.

حَتَّىٰ إِذَا أَتَوْا عَلَىٰ وَادِ النَّمْلِ قَالَتْ نَمْلَةٌ يَا أَيُّهَا النَّمْلُ ادْخُلُوا مَسَاكِنَكُمْ لَا يَحْطِمَنَّكُمْ سُلَيْمَانُ وَجُنُودُهُ وَهُمْ لَا يَشْعُرُونَ
فَتَبَسَّمَ ضَاحِكًا مِّن قَوْلِهَا وَقَالَ رَبِّ أَوْزِعْنِي أَنْ أَشْكُرَ نِعْمَتَكَ الَّتِي أَنْعَمْتَ عَلَيَّ وَعَلَىٰ وَالِدَيَّ وَأَنْ أَعْمَلَ صَالِحًا تَرْضَاهُ وَأَدْخِلْنِي بِرَحْمَتِكَ فِي عِبَادِكَ الصَّالِحِينَ

இறுதியாக, எறும்புகள் நிறைந்த இடத்திற்கு அவர்கள் வந்த போது ஓர் எறும்பு (மற்ற எறும்புகளை நோக்கி:) எறும்புகளே! நீங்கள் உங்கள் புற்றுகளுக்குள் நுழைந்து கொள்ளுங்கள்; ஸுலைமானும் அவருடைய சேனைகளும், அவர்கள் அறியாதிருக்கும் நிலையில் உங்களை நசுக்கி விடாதிருக்கும் பொருட்டு (அவ்வாறு செய்யுங்கள்)என்று கூறிற்று.
அப்போது அதன் சொல்லைக் கேட்டு, அவர் புன்னகை கொண்டு சிரித்தார்.

 இன்னும், “என் இறைவா! நீ என் மீதும், என் பெற்றோர் மீதும் புரிந்துள்ள உன் அருட்கொடைகளுக்காக, நான் நன்றி செலுத்தவும், நீ பொருந்திக் கொள்ளும் விதத்தில் நான் நன்மைகள் செய்யவும், எனக்கு அருள் செய்வாயாக! இன்னும் உம் கிருபையைக் கொண்டு என்னை உன்னுடைய நல்லடியார்களில் சேர்த்தருள்வாயாக!என்று பிரார்த்தித்தார்.

 படைப்பில் சிறியதான பகுத்தறிவில்லாத சிறு எறும்பு தன் இனத்தின் மீது சகோதரபாசத்தோடு கவலைப்படுகிறதே மனிதனே நீ உன் இனத்தின் மீது கவலைப்பட வேண்டாமா உன் இனத்தை உண்மையாக நேசிக்க வேண்டாமா என்பதை அல்லாஹ் நமக்கு உணர்த்துவதற்காகத்தான் பதிவு செய்திருக்கிறான்.
அல்லாஹ் நம்மிடம் உண்மையான அன்பை ஏற்படுத்தி உள்ளத்தால் ஒன்று பட்டு சகோதரர்களாக வாழ வழிசெய்வானாக
 
وَلا تَكُونُوا كَالَّذِينَ تَفَرَّقُوا وَاخْتَلَفُوا مِنْ بَعْدِ مَا جَاءَهُمُ الْبَيِّنَاتُ وَأُولَئِكَ لَهُمْ عَذَابٌ عَظِيمٌ

(இறைவனின்) தெளிவான ஆதாரங்கள் தங்களிடம் வந்த பின்னரும், யார் தங்களுக்குள் பிரிவை யுண்டுபண்ணிக் கொண்டு, மாறுபாடாகி விட்டார்களோ, அவர்கள் போன்று நீங்களும் ஆகிவிடாதீர்கள்; அத்தகையோருக்கு கடுமையான வேதனை உண்டு.  (அல்குர்ஆன் 3:105)
 அல்லாஹ் நம் அனைவரையும் ஒன்றுபட்ட சமுதாயமாக ஆக்கி அருள் புரிவானாக! ஆமீன்.

மேலும் தகவலுக்கு 
ெள்ளிமேடை منبر الجمعة: பிளந்த பாதையும் பிளவு படாத மக்களும்
http://googleweblight.com/?lite_url=http://vellimedai.blogspot.com/2015/10/blog-post_51.html?m%3D1&ei=U6NCvCXp&lc=en-IN&geid=10&s=1&m=6&ts=1454861978&sig=ALL1Aj4GnDkR20ZhHvROlYuheVD0ZS3gEA


Tamilnadu Jamaathul Ulama Sabai
http://googleweblight.com/?lite_url=http://ulama.in/JummaUrai/300&ei=U6h2unK5&lc=en-IN&geid=10&s=1&m=6&ts=1454862640&sig=ALL1Aj4U7sQrvacJuXfhXAqYtsdeoLJYbw


பிரிவினை சக்திகளுக்கு இடம் தர வேண்டாம். கேரள மக்களுக்கு ஜெயலலிதா வேண்டுகோள் | suriyantv.com
http://googleweblight.com/?lite_url=http://suriyantv.com/?p%3D17825&ei=vkvN1kIk&lc=en-IN&geid=10&s=1&m=6&ts=1454863456&sig=ALL1Aj5k81ZE9S241FpuQPgxxogG4s9JQQ


இஸ்லாமிய ஒற்றுமை!
http://googleweblight.com/?lite_url=http://www.readislam.net/portal/archives/3057&ei=jm5rQHds&lc=en-IN&geid=10&s=1&m=6&ts=1454863576&sig=ALL1Aj5dHdd0u84WYUpdlXpfpDFzM2o7Hg


எம்.ஜே.எம். றிம்சி : இஸ்லாம் கூறும் சமூக ஒற்றுமை!
http://googleweblight.com/?lite_url=http://mjmrimsi.blogspot.com/2012/10/blog-post_26.html?m%3D1&ei=1-lccdn-&lc=en-IN&geid=10&s=1&m=6&ts=1454863688&sig=ALL1Aj6K1qySwml-pbDgb26SbR8OLq5E9g


முஸ்லிம்+ஒற்றுமை = இஸ்லாம்
http://googleweblight.com/?lite_url=http://www.readislam.net/portal/archives/6397&ei=1-lccdn-&lc=en-IN&geid=10&s=1&m=6&ts=1454863688&sig=ALL1Aj4rPckx_mykW1Jb3C979KLDWQkY1w



குறிப்பு வழங்கியவர்கள்:
மௌலவி நஸீர் மிஸ்பாஹி
மௌலவி தாஜுத்தீன் காசிமி.

தொகுத்து வழங்கியவர் 
கம்பம் சுல்தான் ஸலாஹி.


 

3 comments:

மாஷா அல்லாஹ் நல்ல தகவல்கள்

மாஷா அல்லாஹ் நல்ல தகவல்கள்

Post a Comment