04 December 2014

மஸ்ஜிதின் மாண்புகள்

  
   
இப்பூவுலகம் மனிதர்களின் சொர்க்கம் என்று கவிஞர்கள் பலர் பாட நாம் கேட்டிருப்போம். ஆனால் உண்மையில் இவ்வுலகின் சொர்க்கப்பூங்கா எது என்று இஸ்லாம் அற்புதமாக கூறுகிறது. அதில் நன்மை மட்டுமே விளையும். அதைத் தவிர அனாச்சாரங்களுக்கு அங்கு வேலையில்லை. அது நமக்கு தேவையுமில்லை.  

 وَأَنَّ الْمَسَاجِدَ لِلَّهِ فَلَا تَدْعُوا مَعَ اللَّهِ أَحَدًا
72:18 

எனவே பள்ளியில் நமக்கு  ரப்புடைய நினைவலைகள் நீக்கமற நிறைந்திருக்க வேண்டும். எப்படி பரீட்சையில் இருக்கும் போது கேள்வித்தாளைத் தவிர வேறு சிந்தனைக்கு இடமிருக்காதோ அதை விட பல மடங்கு பள்ளியில் வல்லோனின் நினைவு வலுத்திருக்க வேண்டும்.
      காருண்ய நபி கூறுவார்கள் 
 عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قال 
أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ الْإِحْسَانُ أَنْ تَعْبُدَ اللَّهَ كَأَنَّكَ تَرَاهُ فَإِنْ لَمْ تَكُنْ تَرَاهُ فَإِنَّهُ يَرَاكَ    
البخاي 4404 

இஹ்ஸான் என்பது  இறிவனைப் பார்ப்பதைப் போன்று நீ வணங்குவதாகும். நீ அவனை பார்க்க முடியாவிட்டால் அவன் உன்னைப் பார்க்கிறான் என்றாவது {நினைவில் கொண்டு} வணங்க வேண்டும். 
{புஹாரி:4404}
 அல்லாஹ்விற்கு பிடித்தமான இடம் 
عَنْ أَبِي هُرَيْرَةَ رضي أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ أَحَبُّ الْبِلَادِ إِلَى اللَّهِ مَسَاجِدُهَا وَأَبْغَضُ الْبِلَادِ إِلَى اللَّهِ أَسْوَاقُهَا              مسلم
    
{1076}
ஊர்களில் எல்லா இடங்களைக் காட்டிலும் அல்லாஹ்விற்கு பிடித்த இடம் பள்ளிவாசல்கள். வெறுப்பிற்குரிய இடம் கைடைவீதிகள் என்று நாயகத் திருமேணி {ஸல்} அவர்கள் கூறினார்கள் என்றால் எந்த அளவு தனது இல்லத்தின் மீது இறையோனோனின் ஈர்ப்பு இருக்கிறது என்பதை நாம் சிந்திக்க வேண்டும். 
 அல்லாஹ் பள்ளியை ஏன் இவ்வளவு            பிரியம் கொள்ள வேண்டும்.                       நம்முடைய வார்த்தையில்  இப்படிக் கூறலாம்.
பள்ளிவாசல் என்பது ஒரு பல்வளக் கருவூலம்,
பல்கலைக் கழகம், 
பண்பாட்டு மையம், 
ஆன்மீக மருத்துவமனை, 
மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், 
நீதிமன்றம், 
மெகா தொழிற்சாலை, 
நற்செயல்களின் கழனி, 
சட்ட மன்றம், 
சாந்தி நிலையம், 
ஒற்றுமை உருவாகுமிடம், 
மனிதநேய மன்றம், 
விருந்தினர் மாளிகை, 
ஏகத்துவக் கட்டுப்பாட்டுக் கோட்டை, 
யோகாசன பயிற்சி மையம், 
அருள் பெருகி இருள் மறையுமிடம், 

இது போன்று சொல்லிக் கொண்டே போகலாம். அதனால் தான் என்னவோ இறைவன் தனதில்லத்தை இவ்வளவு பிரியப்படுகிறான் என எண்ணத் தோன்றுகிறது.

பிரகாசத்தின் மறு பெயர் இறையில்லம் 
عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ:الْمَسَاجِدُ بُيُوتُ اللَّهِ فِي الأَرْضِ، تُضِئُ لأَهْلِ السَّمَاءِ كَمَا تُضِئُ نُجُومُ السَّمَاءِ لأَهْلِ الأَرْضِ.
10461:{طبراني

பூமியில் அல்லாஹுதஆலாவின் வீடுகள் பள்ளிகள்.பூமியில் இருப்போருக்கு நட்சத்திரங்கள் மின்னுவது போல் வானில் உள்ள்வர்களுக்கு பள்ளிகள் மின்னுகின்றன. {தபரானி}

பள்ளிவாசல்கள் பளிங்குக் கற்களால் மிளிர்ந்துக்கொண்டிருக்கின்றன. பலமாடிக்கட்டிடங்களாய் விண்ணை எட்ட வளர்ந்துக்கொண்டிருக்கின்றன. பள்ளிவாசல்களின் வளர்ச்சி முஸ்லிம்கள் மனதில் ஆனந்தத்தை அள்ளி விதைத்துக் கொண்டிருக்கின்றது.தனவந்தர்கள் பள்ளிவாசல்கள் கட்ட வாரி வாரி வழங்குகிறார்கள்.

பள்ளிவாசல்கள் கட்டுவதற்கு வெளிநாட்டு பணம் கூட கோடிக்கணக்கில் வந்து குவிந்துக்கொண்டிருக்கிறது. தெருவிற்கு இரண்டு பள்ளிவாசல்கள் அல்லது மூன்று பள்ளிவாசல்கள் என்றும் முளைத்துக்கொண்டிருக்கின்றன். இது நகரத்தின் நிலை. கிராமமப் புறங்களிலும் தொழுகைக்கு ஆள் இல்லாவிட்டாலும் பள்ளிவாசல்கள் மட்டும் பெரிதாக கட்டப்படுகின்றன. காலாலகாலமாய் ஒரு பள்ளிவாசலின் கட்டுக்கோப்பில் வாழ்ந்தவர்க்ள் பல பள்ளிவாசல்களாய் பிரிந்தும் நிற்கிறார்கள். கொள்கை ரீதியிலான பிரிவினை கொடிகட்டிப் பறந்துக்கொண்டிருக்கிறது. இந்தப்  பிரிவினையை முறியடித்து அனைவரையும் ஒரே குடையின் கீழ் கொண்டு வருவது ஆலிம்களின் கடமை. 

பள்ளியின் மூலம் கிடைக்கும் பட்டம் 
 عَنْ أَبِي سَعِيدٍ قَالَ
قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا رَأَيْتُمْ الرَّجُلَ يَعْتَادُ الْمَسْجِدَ فَاشْهَدُوا لَهُ بِالْإِيمَانِ قَالَ اللَّهُ تَعَالَى
{ إِنَّمَا يَعْمُرُ مَسَاجِدَ اللَّهِ مَنْ آمَنَ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ }
3018 {ترمذي}

அதிகமாகப் பள்ளிக்கு செல்பவரைக் கண்டால் அவர் ஈமான் உள்ளவர் என்று சாட்சி சொல்லுங்கள் 
{إِنَّمَا يَعْمُرُ مَسَاجِدَ اللَّهِ مَنْ آمَنَ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ} அல்லாஹ்வின் மீதும், மறுமை நாள் மீதும் ஈமான் கொண்டவர்களே பள்ளிகளைச் செழிப்பாக்கி வைப்பார்கள். {திர்மிதீ} 3018

இதன் மூலம் ஈமான்தாரி என்ற பட்டத்தை நமக்கு நபி {ஸல்} அவர்கள் அளிக்கிறார்கள்.   
                
           மாட்சார்பற்ற நாடா இந்தியா? 
அயோத்தி தீர்ப்பு வெறும் இடப்பிரச்சனையோ, ஆவணங்களின் அடிப்படையிலான பிரச்சனையோ அல்ல. மக்களின் உயிரோடும் உடமைகளோடும் தொடர்புடையது. சுயசரிதை எழுதுவோரின் இளவரசன் என்பதுதான் ஜஹருத்தீன் ஷா பாபருக்கு வழங்கிய பட்டப்பெயர். உலக தன்வரலாற்று ஆவணத்தின் உண்மைத்தன்மையில் இலக்கிய தரத்தில் ரூசோவுக்கும், செய்ண்ட அகஸ்டசுக்கும் அடுத்த இடம் பாபருக்குதான். னது பலவீனத்தை,தோல்வியை, தடுமாற்றத்தை பாபர் போல வேறு எந்த அரசனும் பதிவு செய்யவில்லை. டெல்லி தேசிய அருங்காட்சியகத்தில் இன்றும் தனது மகனுக்கு அவர் எழுதிய உயில் காட்சிக்கு உள்ளது. இந்துக்களின் மனம் புண்படாமல் இருக்க பசு மாமிசம் சாப்பிடுவதை தன் மகனை கைவிடச் சொல்கிறார் பாபர். மாற்று மத வழிபாட்டுத் தலங்களை அவமதித்து விடாதே என்றும் ஹிமாயூனுக்கு எழுதிய உயிலில் பாபர் கூறுகிறார். இப்படி இருக்க இந்துக்களின் கோவிலாக அது   இருந்திருக்குமென்றால் பாபர் அதை  இடித்திருப்பாரா? மற்றொரு விசயம் என்னவென்றால் திரேதா யுகம் முடிவுக்கு வந்தது கிமு 3102 இல்.  திரேதா யுகத்தில் பிறந்தவன் ராமன் என்கிறது இந்து மதம்.  ஆனால் கிமு 700 க்கு முன் அயோத்தியில் மனிதர்கள் வாழ்ந்ததற்கான சான்றே இல்லை என்கிறது அகழ்வாராய்ச்சி.

எனவே நீதியை நிலைநாட்ட வேண்டிய கட்டாயத்தில் இந்தியா நடுநிலமையைக் கைய்யாள வேண்டும். 

    நீதியோடு நடக்க நபிக்கு கட்டளை 
يَا دَاوُودُ إِنَّا جَعَلْنَاكَ خَلِيفَةً فِي الْأَرْضِ فَاحْكُمْ بَيْنَ النَّاسِ بِالْحَقِّ وَلَا تَتَّبِعِ الْهَوَى فَيُضِلَّكَ عَنْ سَبِيلِ اللَّهِ إِنَّ الَّذِينَ يَضِلُّونَ عَنْ سَبِيلِ اللَّهِ لَهُمْ عَذَابٌ شَدِيدٌ بِمَا نَسُوا يَوْمَ الْحِسَابِ
38:26 

           தீர்ப்பு வழங்கும் முறை 
عَنْ عَلِيٍّ قَالَ
قَالَ لِي رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا تَقَاضَى إِلَيْكَ رَجُلَانِ فَلَا تَقْضِ لِلْأَوَّلِ حَتَّى تَسْمَعَ كَلَامَ الْآخَرِ فَسَوْفَ تَدْرِي كَيْفَ تَقْضِي قَالَ عَلِيٌّ فَمَا زِلْتُ قَاضِيًا بَعْدُ
           قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ 
1252 {ترمذي}  

உம்மிடம் இருவர் வந்தால் ஒருவரிடம் மட்டும் கேட்டு மற்றவரிடம் வழக்கை கேட்காமல் தீர்ப்பு செய்யாதீர். {இருவரிடமும் விசாரணை நடத்தினால்} எப்படி தீர்ப்பளிப்பது என்பதை அறிந்து கொள்வீர். {திர்மிதீ}

      இஸ்லாமிய ஆட்சியில் மாற்று              மதத்தினருக்கு கிடைத்த நீதி   

وأخرج الدراج في جزئه المشهور بسند مجهول عن ميسرة عن شريح القاضي قال: لما توجه علي إلى صفين افتقد درعًا له، فلما انقضت الحرب ورجع إلى الكوفة أصاب الدرع في يد يهودي، فقال لليهودي: الدرع درعي لم أبع ولم أهب، فقال اليهودي: درعي وفي يدي، فقال: نصير إلى القاضي، فتقدم علي فجلس إلى جنب شريح وقال: لولا أن خصمي يهودي لاستويت معه في المجلس، ولكني سمعت رسول الله -صلى الله عليه وسلم- يقول: "أصغروهم من حيث أصغرهم الله". فقال شريح: قل يا أمير المؤمنين؟ فقال: نعم هذه الدرع التي في يد اليهودي درعي لم أبع ولم أهب، فقال شريح: أيش تقول يا يهودي؟ قال: درعي وفي يدي، فقال شريح: ألك بينة يا أمير المؤمنين؟ قال: نعم، قنبر والحسن يشهدان أن الدرع درعي، فقال شريح شهادة الابن لا تجوز للأب، فقال علي: رجل من أهل الجنة لا تجوز شهادته؟ سمعت رسول الله -صلى الله عليه وسلم- يقول: "الحسن والحسين سيدا شباب أهل الجنة". فقال اليهودي: أمير المؤمنين قدمني إلى قاضيه وقاضيه قضى عليه، أشهد أن هذا هو الحق وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدًا رسول الله، وإن الدرع درعك.                                                تاريخ الخلفاء:1/142
மேலுள்ள சம்பவத்தில் சொர்க்கவாதிகளாக இருக்கின்ற ஹஸன் {ரலி} ஹுஸைன் {ரலி} அவர்களின் சாட்சியை உங்கள் மகனாக இருப்பதால் ஏற்றுக்கொள்ள முடியாது என்று சொன்ன இஸ்லாமியத் தீர்ப்பு எங்கே? இப்போது உள்ள இந்தியாவின் தீர்ப்பு எங்கே
இதை பார்க்கும் போது هَلْ يَسْتَوِي الْأَعْمَى وَالْبَصِيرُ أَفَلَا تَتَفَكَّرُونَ இந்த வசனம் தான் நினைவு வருகிறது.


    இறுதியாக நபியின் வாக்கை கூறி                    முடிக்கிறேன் 
  عن أبي سعيد قال : قال رسول الله صلى الله عليه وسلم :  من ألف المسجد ألفه الله
6567 {طبراني}
 யார் பள்ளியை நேசிப்பாரோ அவரை அல்லாஹ் நேசிக்கிறான். எனவே சமநீதி கேட்டு பள்ளியை மீட்டெடுப்போம். இன்று போனால் போகட்டும் ஒரு பள்ளி தானே என்று அசட்டையாக விட்டுவிட்டால் நாளை டெல்லி ஜும்ஆ மஸ்ஜித் இருந்த இடத்தில் எங்களுடைய இன்ன கடவுள் இருந்தார் என்று சொம்பு  தூக்கிகள் வருவார்கள் என்பது திண்ணம். வல்லோன் ரப்‌புல் ஆலமீன் நம் சமுதாயத்தையும், நம் அடையாளச் சின்னங்களையும்நம்  பள்ளிகளையும் காத்தருள்புரிவானா. ஆமீன் 0 comments:

Post a Comment