12 February 2015

காதலர் தினமா? கழிசடை தினமா?


                          رُّبَمَا يَوَدُّ الَّذِينَ كَفَرُوا لَوْ كَانُوا مُسْلِمِينَ          
 தாங்களும் முஸ்லிம்களாக இருந்திருக்க வேண்டுமே, என்று காஃபிர்கள் (மறுமையில் பெரிதும்) ஆசைப்படுவார்கள்.(15:2) 
عن سفيان بن عبد الله قال:قلت يا رسول الله قل لى في الإسلام  قولا لا أسأل عنه أحدا بعدك :قال   قل آمنت بالله فاستقم

அல்லாஹ்வின் தூதரேஅவர்களே!இஸ்லாத்தில் ஒரு சொல்லை எனக்கு சொல்லித்தாருங்கள். உங்களுக்கு பிறகு அது பற்றி யாரிடமும் நான் கேட்கமாட்டேன் என்று கேட்டேன் அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டுள்ளேன் எனக்கூறி அதன் பிறகு அதில் நிலைத்திருப்பயாக என்று நபி (ஸல்)அவர்கள் கூறினார்கள்.(அறிவிப்பவர்:சுஃப்யான் பின் அப்துல்லாஹ் (ரலி)அவர்கள்)(நூல்:சஹீஹ் முஸ்லிம்)




உலகின் சங்கை மிகுந்த மார்கத்தை நாம் ஏற்றிருக்கிறோம். அல்ஹம்து லில்லாஹ்.

நம்மில் அநேகர் இந்த மார்க்கத்தை பிறப்பின் வழியாக பெற்றிருக்கிறோம். இன்னும் சிலர் இதை விளங்கி ஏற்றிருக்கிறோம்.

இந்த மார்கத்தை ஏற்றிருப்பதை விட அதிலேயே நிலைத்திருப்பது மிகமிக அவசியமான ஒன்று.

              الإستقامة خير من ألف كرامة 
ஒரு செயலில் நிலைத்து இருப்பது ஆயிரம் அற்புதங்களை விட மிக சிறந்தது என்று சொல்வார்கள். 

முஸ்லிமாக பிறந்தார் என்பதை விட முஸ்லிமாகவே கடைசி வரை வாழ்ந்தார் என்பது தான் மிக பெரும் நற்சான்றிதழ்.

குர்ஆன் நமக்கு தரும் மிக முக்கிய உபதேசம் என்னவெனில் ஈமானோடு கடைசி வரை வாழவேண்டும் என்பதுதான்.

(திரு குர்ஆனில் உள்ள மிக பிரபல்யமான வசனம் 

 إِنَّ الَّذِينَ قَالُوا رَبُّنَا اللَّهُ ثُمَّ اسْتَقَامُوا تَتَنَزَّلُ عَلَيْهِمُ الْمَلَائِكَةُ أَلَّا تَخَافُوا وَلَا تَحْزَنُوا وَأَبْشِرُوا بِالْجَنَّةِ الَّتِي كُنتُمْ تُوعَدُونَ

நிச்சயமாக எவர்கள் எங்கள் இறைவன் அல்லாஹ்தான் என்று கூறி அதன் மீது உறுதியாக நிலைத்து நின்றார்களோ நிச்சயமாக அவர்கள்பால் மலக்குகள் வந்து நீங்கள் பயப்படாதீர்கள் கவலையும் பட வேண்டாம் . உங்களுக்கு வாக்களிக்கப்பட்ட சுவர்க்கத்தைக் கொண்டு மகிழ்ச்சி பெறுங்கள்” (எனக் கூறியவாறு) இறங்குவார்கள்.(41:30) 

இந்த நல் உபதேசம் ஈமானோடு கடைசி வரை வாழ்பவருக்கு.

மிக பிரபல்யமான செய்தி ஒன்று நாயகத்தின் தலை முடி நரைத்து போனதற்கான காரணத்தை  சஹாபாக்களிடம் சொன்ன போது ஹுத் என்று ஒரு ஸூரா இரங்கி என் தலை முடியை நரைக்க செய்துவிட்டது என்பார்கள்.   அப்படியென்றால் அது என்ன வசனம் 

      فَاسْتَقِمْ كَمَا أُمِرْتَ وَمَن تَابَ مَعَكَ وَلَا تَطْغَوْا ۚ إِنَّهُ بِمَا تَعْمَلُونَ بَصِيرٌ

(நீரும் உம்மோடு திருந்தியவரும் ஏவப்பட்டவாறே உறுதியாக இருப்பீர்களாக;வரம்பு மீறி விடாதீர்கள். நிச்சயமாக அவன் நீங்கள் செய்வதை கவனித்தவனாக இருக்கின்றான்.(11:112)

சார்ந்திருக்கிற மார்க்கத்தில் நிலைத்திருப்பது மனிதனுக்கு நரை ஏற்படுவதை விட,மனிதனை நிலைகொலைய செய்வது  கடினம் ஆனாலும் அதிலே ஜெயம் பெறுபவர்கள் தான் வெற்றியாளர்கள். என்று குர்ஆன் சொல்கிறது.


பெருமானாரின் வணக்கங்களை பற்றி அன்னை ஆயிஷா (ரலி)அவர்கள் அறிவிக்கும் ஒரு ஹதீஸில்  நாயகம் ஒரு முறை தொழுகையில் மிக நீண்ட நேரம் சஜ்தாவில் இருந்ததை பார்த்த அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள்   நாயகம் மரணித்து விட்டார்களோ என்று சந்தேகித்து  சற்று குனிந்து பார்த்த போது  நாயகம் சஜ்தாவில் 

     اللهم يا  مقلب القلوب  ثبت قلبي على دينك    

உள்ளங்களை மாற்றுபவனே என் உள்ளத்தை உன்னுடைய மார்க்கத்தின் பக்கம் நிலைத்திருக்க செய்வாயாக என்ற துஆவை நீண்ட நேரம் கேட்டு கொண்டிருந்தார்கள் என்று அறிவிக்கிறார்கள்.

இப்படியெல்லாம் நம் ஈமானை பாதுகாக்க அல்லாஹ்வும் ரஸூலும் சொல்லி கொடுத்திருக்க இன்று நம் ஈமானின் நிலைகள் என்ன?


முன்பு வறுமைக்காக இஸ்லாத்தை விட்டார்கள், நாயகத்தின் மரணத்தின் போது சிலர்கள் இஸ்லாத்தை விட்டார்கள், ஆட்சி அதிகாரத்திற்காக சிலர்கள் இஸ்லாத்தை விட்டார்கள், ஆனால் இன்று அற்ப சுகத்திராகாக காதல் என்ற பெயரில்  நம் வாலிப ஆண்களும் பெண்களும் இஸ்லாத்தை விட்டு வெளியேறுகிறார்கள்.

உலக மக்கள் கூட்டம் கூட்டமாக விலாசம் விசாரித்து நம் மார்க்கத்தை ஏற்கும் காலத்தில் இங்குள்ளவர்கள் அர்ப்ப சுகத்திர்காக நம் மார்கத்தை தூக்கி எறிகிறார்கள்.

இந்த ஈன செயல்களுக்கு காதல் என்று பெயரை வைத்துகொண்டு அதற்காக உலகமுழுக்க ஒரு தினம் கொண்டாடுவது தான் கொடுமையிலும் கொடுமை.

முதலில் காதலர் தினம் என்றால் என்ன என்பது பற்றி பார்போம்!

பிப்ரவரி 14 அன்று காதலர்தினம் உலகம் முழுவதும் அனுஸ்டிக்கப்படுகிறது. காதல் என்றால் ஒரு பெண்ணும்-ஆணும் விரும்புவது என்ற ஒன்றுதான் அர்த்தம் என்ற ரீதியில் அர்த்தம் செய்யப்படுகிறது. ‘லவ்என்ற இந்த வார்த்தைக்கு அன்பு, நேசம், காதல் என்ற அர்த்தங்கள் உண்டு. இந்த காதலர்தினம் எவ்வாறு உருவாக்கப்பட்டது என்பதை முதலில் அறிநதுகொண்டு, இந்த தினம் பற்றிய இஸ்லாத்தின் நிலைப்பாடு என்ன என்பதை பார்ப்போம்.


இந்த நாளை அப்படிக் கொண்டாட காரணம் என்ன? இதற்குப் பின்னணியாக ஒரு வரலாற்று சம்பவம் உள்ளது.
வேலன்டைன் டே' என்று பிப்ரவரி 14 தினத்தைக் காதலர் தினம் என்று உலகம் முழுவதும் ஆண்டு தோறும் கொண்டாடப்படுகிறது அது கி. பி.270 நடந்தது. 

ரோமனியத்தை கிளாடியஸ் ஆண்டு வந்தான். அங்கே வேலன்டைன் எனும் பாதிரியார் வாழ்ந்து வந்தார். கிளாடியஸ் தனது படையை பலப்படுத்த எண்ணினான். இளையோர்களைப் படையில் சேர அழைத்தான். தமது காதலியையும் இளம் மனைவிமாரையும் விட்டு வர இளையோர் விரும்பவில்லை. மன்னனுக்குக் கோபம் வந்தது. திருமணத் தடைச் சட்டம் கொண்டு வந்தான். 
வேலன்டைன் இதற்கு உடன்படவில்லை. இரகசியமாக இளைஞர்களுக்குத் திருமணம் நடத்தி 
வைத்தார். மன்னனுக்கு எப்படியோ தெரிந்து விட்டது. பாதிரியாருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. சிறையில் பாதிரியார் இருந்தார். அப்போது சிறை அதிகாரியின் மகள்(பார்வையற்றவள்) வேலன்டைனைச் சந்திக்க வந்தாள். பிடித்துப் போக,சந்திப்பு தினமும் தொடர்ந்தது. இருவருக்கும் இடையே நட்பு உருவானது. பிறகு காதலாகக் கசிந்தது. மரண தண்டனை நாளில் காதலிக்கு Love from your Valentine எனும் கவிதையை எழுதி வைத்து இறந்தான். அந்த நாள் தான் பிப்ரவரி 14.
காதலர் தினம்என்றாலே அன்று வலுக்கட்டாயமாக எவருக்கேனும் ப்ரோபோஸ் செய்வது அல்லது ப்ரொபோஸை  ஏற்றுக்கொள்வது என்ற வாடிக்கை, நம் இளைய தலைமுறையினர் மீது திணிக்கப்பட்டுவிட்டது. இந்த மாயையில் சிக்குண்டு ஆராய்ந்து பாராமல் பலர் தங்கள் வாழ்க்கையை தொலைத்துக்கொள்கின்றனர் என்பதே உண்மை. திருமண பந்தம் என்பது ஆயிரங்காலத்து பயிர் அல்லவா? அதை இப்படி ஆராயாமல் கைகொள்ளலாமா?

ஆராயாமல் காதலித்து, மணமுடித்து, திருமண வாழ்க்கையில் ஒருவேளை தோல்வி ஏற்பட்டு ஒற்றை ஆளாக நிற்க நேர்ந்தால், அந்த பெண்ணிற்கு வாழ்க்கை தர, மறுமணம் செய்துகொள்ள, எத்தனை பேர் இங்கே முன்வருவார்கள்? ஆழமாக யோசிக்கவேண்டிய விஷயம் இது. எனவே நமது கலாச்சாரத்திற்குகாதலர் தினம்ஒத்துவராத ஒன்று.
முதலாவது இது கிறிஸ்தவர்களால் உருவாக்கப்பட்டது. இஸ்லாம் காட்டித்தராத பிறமத கலாச்சாரத்தை பின்பற்றுவதை பற்றி நபி[ஸல்] கூறினார்கள்;

அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார்கள்;
“உங்களுக்கு முன்னிருந்த (யூதர்கள் மற்று கிறிஸ்த)வர்களின் வழிமுறைகளை நீங்கள் அங்குலம் அங்குலமாக, முழம் முழமாகப் பின்பற்றுவீர்கள். எந்த அளவிற்கென்றால் அவர்கள் ஓர் உடும்பின் பொந்துக்குள் புகுந்திருந்தால் கூட நீங்கள் அதிலும் புகுவீர்கள்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். நாங்கள், ‘இறைத்தூதர் அவர்களே! (நாங்கள் பின்பற்றக் கூடியவர்கள் என்று) யூதர்களையும் கிறிஸ்தவர்களையுமா நீங்கள் குறிப்பிடுகிறீர்கள்?’ என்று நாங்கள் கேட்டோம். அதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘வேறெவரை?’ என்று பதிலளித்தார்கள்.
நூல்;புஹாரி,எண் 3456

சுப்ஹானல்லாஹ்! இன்றைய முஸ்லிம்களில் சிலர், சமாதானம் என்ற பெயரிலும், விழாக்கள் என்ற பெயரிலும் பிறமத கலாச்சாரத்தை பின்பற்றுபவர்களை பற்றி அன்றே அல்லாஹ்வின் தூதர்[ஸல்] அவர்கள் அறிவித்துள்ளதை காண்கிறோம். மேலும் இவ்வாறு பிற மதகலாச்சாரத்தை பின்பற்றுபவர்களை பற்றி நபி[ஸல்] அவர்கள் கடுமையாக கண்டித்து,

யார் பிற சமுதாயக்காலச்சாரத்தை பின்பற்றுகிறார்களோ; அவர்கள் அவர்களை சேர்ந்தவர்கள். என கூறினார்கள் [அஹ்மத்]


காதலர்தினம் கொண்டாடும் முஸ்லிம்கள் இந்த பொன்மொழியை கவனத்தில் கொள்ளவேண்டும். மேலும், இஸ்லாத்தில் ஈகைத்திருநாள், தியாகத்திருநாள் என்ற இரு பெருநாட்களைத்தவிர, வேறு கொண்டாடப்படக்கூடிய நாட்களை யார் உருவாக்கினாலும் அவைகளை முஸ்லிம்கள் புறக்கணிக்கவேண்டும். மாறாக அவைகளை கொண்டாடினால் அவர்கள் அந்தவிசயத்தில் அவர்களை சார்ந்தவர்களே!


இதற்கெல்லாம் காரணம் காதல் என்ற பெயரில் நடைபெறும் அநாச்சாரங்கங்கள் மற்றும் அசிங்கங்கள்  பற்றிய விழிப்புணர்வும் இஸ்லாம் எந்த அளவிற்கு இதை தடை செய்துள்ளது என்ற அறிவும் நம் பெற்றோர்களிடத்திலும் பிள்ளைகளிடத்திலும், இல்லாமையே.

”விபச்சாரத்தில் ஆதமுடைய மகனுக்குள்ள பங்கை இறைவன் எழுதியுள்ளான். அதை அவன் அடைந்தே தீருவான். கண் செய்யும் விபச்சாரம் பார்வையாகும். நாவு செய்யும் விபச்சாரம் பேச்சாகும். மனம் ஏங்குகின்றது. இச்சை கொள்கின்றது. பிறப்பு உறுப்பு இவை அனைத்தையும் உண்மையாக்குகின்றது; அல்லது பொய்யாக்குகின்றது” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி 6243)

தவறான பார்வையையும், சிந்தனையையும், பாலியல் தொடர்பான பேச்சுக்களையும் விபச்சாரத்தின் ஒரு பகுதி என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள்.

எனவே காதல் என்ற பெயரில் நடந்து வரும் விளையாட்டுகளுக்கு இஸ்லாத்தில் எள்ளளவும் அனுமதி இல்லை.

ஒருவர் ஒரு பெண்ணை மணம் முடிக்க விரும்பினால் அந்தப் பெண்ணின் பொறுப்பாளர்களிடம் போய் பேசி, மணம் முடித்துக் கொள்ள வேண்டும். இது தான் இஸ்லாம் கூறும் வழிமுறை.

திருமணத்திற்கு முன்பு பெண்ணைப் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.


முகீரத் இப்னு ஷுஃபா ரலியல்லாஹு அன்ஹு, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து தனக்கு மணம் பேசி முடிக்கப்பட்ட செய்தியைக் கூறினார். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், ”நீ அந்தப் பெண்ணைப் பார்த்தாயா?” என்று கேட்டார்கள். அவர் இல்லை என்று கூறினார். உடனே நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், ”பெண்ணை நீ போய் பார். அது உங்கள் இருவருக்கிடையில் நட்பு வளருவதற்குச் சிறந்ததாக இருக்கும்” என்று கூறினார்கள். (நூல்: நஸயீ 3183)

காதலர் தினம் எனும் கலாச்சார சீரழிவு


காதலர் தினம் என்ற பெயரில் நடைபெறும் கூத்துக்கள் சொல்லிமாளாது. காதல் என்ற பெயரில் காமம் மட்டும் விஞ்சி நிற்கிறது. இந்த தினத்தில் பொதுமக்கள் கூடும் இடம் என்று கூட பார்க்காமல் இவர்கள் அடிக்கும் காமக்கூத்துக்கள், கலாச்சார சீரழிவின் அடையாளமாக உள்ளது. எனவே இத்தகைய கலாச்சார சீரழிவிற்கு வழிவகுக்கும் கொண்டாட்டங்களை தடுக்க அரசும், சமூக ஆர்வலர்களும் முன்வரவேண்டும். மேலும் முஸ்லிம்கள் நாகரீகம் என்ற பெயரில் இந்த நாசகார சகதியில் விழுந்துவிடக்கூடாது என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும்.

கிறிஸ்துவ போதகர் வேலன்டைன் என்பவரின் நினைவாக ரோம பாரம்பரியத்தின் வாயிலாக உருவானது தான் இந்த வேலன்டைன் தினம். பிப்ரவரி 14 ஆம் தேதி கொண்டாடப்படும் இந்த நாளை வணிகமயாக்குவதற்காகவே மேற்கத்திய நாடுகள் இதை காதலர் தினமாக அறிவித்துள்ளனர்.

எதற்காக பிப்ரவரி 14 தேர்வு செய்யப்பட்டது என்பதற்கு எந்த சரியான வரலாறும் இல்லாத இந்த நாள், இன்றைக்கு பல பெண்களின் கற்பு பரிபோகும் நாளாக மாறிவிட்டது.

நமது இந்தியாவும் இதற்கு விதிவிளக்கல்ல! மேற்கத்திய கலாச்சாரத்தை இங்கும் கடைபிடிக்கின்றனர்,

இன்றைக்கு உள்ள மீடியாக்கள் காதலை ஊக்கப்படுத்தும் வண்ணம் தனியாக பல்வேறு நிகழ்ச்சிகளை தயாரித்து வழங்கும் அளவிற்கு காதல் சாதரண விஷயம் என்பதையும் தாண்டி,

”அடப்பாவி உனக்கு கேல் ஃபிரண்ட் இல்லையா? அப்ப நீ வேஸ்ட்” என்று கூறும் அளவிற்கு கவுரமான விஷயமாக மாறி விட்டது.

உங்க லவ்வரோட பேர டைப் பண்ணி  அப்டி எஸ்.எம் எஸ் அனுப்பு இப்டி எஸ்.எம்.எஸ் அனுப்பு ஒரு எஸ்.எம்.எஸ் க்கு 3 ரூபாய் என்று கூறி காதலர் தினம் என்ற பெயரில் இளைஞர்களிமிடருந்து பணத்தை அபகரிக்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் வருடா வருடம் அதிகரித்துக் கொண்டு தான் இருக்கிறது.

இஸ்லாமிய இளைஞர்களும் இளைஞிகளும் இந்த காதல் எனும் சமூக சீர்கேட்டில் விழுந்து விடுகின்றனர்.

மேற்கூரிய அறிவுரைகளை பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு சிறுவயது முதல் கூறி இந்த காதல் எனும் சீர்கேட்டில் பிள்ளைகள் விழுந்து விடாமல் பாதுகாக்க வேண்டும்.

ஆனால் மாணவ, மாணவியர் எப்படிக் காதலிக்க வேண்டும் என்ற கேடு கெட்ட கலாச்சாரத்தை டி.வி.க்கள் கற்றுக் கொடுக்கின்ற போது. பெற்றோரும் சேர்ந்து கொண்டு தான் அதை பார்க்கின்றனர்.

விளைவு, பிள்ளைகள் பரீட்சையில் பெயிலாகுவது ஒருபுறமிருக்க யாருடனேனும் ஓடிப்போகும் போது பெற்றோர்கள் அவமானப்பட்டு தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு சென்று விடுகின்றனர்.

பெற்றோர் செய்கின்ற மற்றொரு பெரிய தவறு, தங்கள் பிள்ளைகளுக்கு செல்போன்கள் வாங்கிக் கொடுப்பதாகும்.

செல்போன் பிள்ளைகளின் ஒழுக்க வாழ்வையும் பாழாக்கிக் கொண்டிருக்கிறது. பல்வேறு முனைகளில் செல்போன்கள் நமது பிள்ளைகளை ஒழுக்கக் கேட்டிற்கும், சீரழவிற்கும் இழுத்துச் செல்கின்றன.

செல்போன்களில்  நடமாடும் பாலியல் வக்கிர, ஆபாச செயல்கள் இளைஞர் மற்றும் இளைஞிகளிடையே இன்றைக்கு சர்வசாதாரனமாக நடைபெற்று கொண்டிருக்கின்றது.

தங்கு தடையற்ற காதல் பேச்சுக்கள் இந்த செல்ஃபோன்களில் தான் நடைபெறுகின்றது: எந்த ஓர் ஆணும், பெண்ணும் நேரில் சந்திக்கும் போது, அவர்களது வெட்க உணர்வுகள் அவர்களிடமிருந்து வார்த்தைகள் வெளிவருவதைத் தடுத்து விடும். அத்துடன் சமுதாயத்தின் கழுகுப் பார்வைகள், சமூகக் கட்டுப்பாடுகள் பெரிய திரைகளாக நின்று, பெரும் தீமைகள் நடைபெறாமல் காக்கின்றன.

ஆனால் இந்த வெட்கத் தடைகளையும், சமூகத் தடைகளையும் செல்போன்கள் தகர்த்தெறிந்து, தங்கு தடையற்ற செக்ஸ் பேச்சுக்களைப் பரிமாற்றம் செய்வதற்குத் துணை புரிகின்றன.

ஆண், பெண் பிள்ளைகளுக்கு செல்ஃபோன்கள் வழங்கினால் இருபாலரும் செல்ஃபோன்களை செக்ஸ் ஃபோன்களாக பாவிக்காமல் கண்காணிக்க வேண்டும். கண்கானிக்க இயலாவிட்டால் அவர்களுக்கு செல்ஃபோன் வாங்கிக்கொடுக்காமல் இருப்பது சிறந்தது.

பிள்கைளுக்கு செல்ஃபோன் வாங்கி கொடுப்பதை நிறுத்தினால் பிப்வரி 14 உங்கள் பிள்ளையின் கற்பு பறிபோகும் நாளாக மாறாமல் தடுக்கலாம்.
அவ்வளவு ஏன்?, ஒரு பென்ணை காதலிக்கும் இளைஞன் தான், தன் அக்காவையோ அல்லது தங்கையையோ யாரேனும் காதலித்தால் முதலில் சன்டைக்கு போவான்.

அடுத்தவன் பிள்ளை நாசமா போனா பறவாயில்லை உன் அக்கா தங்கை நாசமாகிவிடக்கூடாது என்று சுய நலத்தோடு யோசிக்கும் இளைஞர்களே சமுதாய அக்கரையோடு நடந்து கொள்ளுங்கள்!

சமுதாய அக்கரையுள்ள இளைஞர்களும், பிள்ளைகைள் ஒழுக்கத்துடன் இருக்க வேண்டும் என்று நினைக்கும் பெற்றோர்களும் இந்த பிப்ரவரி 14-ஐ புறக்கணித்தால் உயிர் பலிகளும் சமூக சீர்கேடுகளும் அசிங்கங்களும் மற்றும் திருணமத்திற்கு முன்பே கற்பு பறிபோகும் நிலையும் ஏற்படாமல் நமது சமுதாயத்தை காப்பாற்றலாம்!

பிப்ரவரி 14-ம் டிசம்பர் 1-ம் நம்மை பொறுத்வரை ஒன்று தான். எய்ட்ஸ் எனும் உயிர்க் கொல்லி நோய்காக்காக டிசம்பர் 1 உலக எய்ட்ஸ் நாளாக அறிவிக்கப்பட்டு அதில் எஸ்ட்ஸ் பற்றிய விழிப்புர்ணபு பிரச்சாரம் செய்யப்டுகின்றது(தனி நாள் ஒதுக்காமல் அனைத்து நேரங்களிலும் நன்மையை ஏவி தீமையை தடுக்க வேண்டும் என்பதே நமது நிலை).
அதே போன்று தான் பிப்ரவரி 14 ல் காதல் கொண்டாட்டங்கள் நடைபெறாமல் தடுக்க காதல் எனும் உயிர் கொல்லி பற்றி விழிப்புணர்வு பிரச்சாரங்கள் செய்யப்பட வேண்டும்....


காதலர் தினம் தலைப்பின் கீழ் ஒரு வார இதழில் பதிவு செய்த செய்தி: அமெரிக்க நாட்டில் ஓர் இளம் பெண்ணும்,நடுத்தர வயதுள்ள ஒரு ஆணும் காதலித்து கல்யாணம் செய்வதற்கு தயாராகி விட்டனர்.அப்பெண் தன் தாயிடம் விஷயத்தைக் கூறினாள்.சரி உன் காதலனை  வீட்டுக்கு அழைத்து வா என்று அந்த தாய் கூற,அப்பெண்ணும் தன் காதலனை அழைத்து வந்தாள்.தன் மகளின் காதலனைப பார்த்த அந்தத் தாய் அதிர்ச்சி அடைந்தாள்.காரணம் அந்தக் காதலன் தான் மகளின் தந்தை.உடனே அந்தத் தாய் தன் மகளிடம் தான் இளமைக் காலத்தை முழுமையாக எடுத்துக் கூறிய போது  அதனை செவியுற்ற மகள் " பரவாயில்லை பழைய விஷயங்களைப் பற்றி எங்களுக்கு கவலயில்லை நாங்கள் இருவரும் மணமுடித்து வாழ்க்கை துவங்க உள்ளோம்" என்று உறுதியாக கூறினாள்.இதனை எதிர்த்து அந்தத் தாய் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தாள்.
நீதிமன்றத்தில் அந்த தாயிடம் முறைப்படி இவரிடம் திருமணம் முடித்துக் கொண்டதற்கான ஆதாரத்தைக் கேட்டனர்.அதற்கு  அந்த தாய் நான் இவரை மணமுடித்து கொள்வதற்கு முன்னால் ஒரு குழந்தைக்கு கர்ப்பபாகி சண்டையில் பிரிந்து விட்டோம் என்று கூறினாள்.கணவன் மனைவி என்பதற்கு சரியான ஆதாரம் இல்லாத காரணத்தினால் உறவு முறையில் இவர்கள் தந்தையும்,மகளுமாக இருந்தாலும் அதை நாங்கள் தடை செய்ய முடியாது. இவர்கள் தாரளமாக மணமுடித்துக் கொள்ளலாம் என்று தீர்ப்பளித்து விட்டது.தந்தையும்,மகளுமான அவர்கள் மணமுடித்து வாழ்க்கை துவங்கினார்கள்.
காதலின் விளைவு  "அசிங்கம் அரங்கேறியது" மேலை நாட்டு வாழ்க்கை முறைக்கு இது ஒரு உதாரணம்.


ஆனால் இதற்கு நேர் மாற்றமாக இஸ்லாத்தின் கூற்றை கவனியுங்கள்.

 قُل لِّلْمُؤْمِنِينَ يَغُضُّوا مِنْ أَبْصَارِهِمْ وَيَحْفَظُوا فُرُوجَهُمْ ۚ ذَٰلِكَ أَزْكَىٰ لَهُمْ ۗ إِنَّ اللَّهَ خَبِيرٌ بِمَا يَصْنَعُونَ


وَقُل لِّلْمُؤْمِنَاتِ يَغْضُضْنَ مِنْ أَبْصَارِهِنَّ وَيَحْفَظْنَ فُرُوجَهُنَّ وَلَا يُبْدِينَ زِينَتَهُنَّ إِلَّا مَا ظَهَرَ مِنْهَا ۖ وَلْيَضْرِبْنَ بِخُمُرِهِنَّ عَلَىٰ جُيُوبِهِنَّ ۖ وَلَا يُبْدِينَ زِينَتَهُنَّ إِلَّا لِبُعُولَتِهِنَّ أَوْ آبَائِهِنَّ أَوْ آبَاءِ بُعُولَتِهِنَّ أَوْ أَبْنَائِهِنَّ أَوْ أَبْنَاءِ بُعُولَتِهِنَّ أَوْ إِخْوَانِهِنَّ أَوْ بَنِي إِخْوَانِهِنَّ أَوْ بَنِي أَخَوَاتِهِنَّ أَوْ نِسَائِهِنَّ أَوْ مَا مَلَكَتْ أَيْمَانُهُنَّ أَوِ التَّابِعِينَ غَيْرِ أُولِي الْإِرْبَةِ مِنَ الرِّجَالِ أَوِ الطِّفْلِ الَّذِينَ لَمْ يَظْهَرُوا عَلَىٰ عَوْرَاتِ النِّسَاءِ ۖ وَلَا يَضْرِبْنَ بِأَرْجُلِهِنَّ لِيُعْلَمَ مَا يُخْفِينَ مِن زِينَتِهِنَّ ۚ وَتُوبُوا إِلَى اللَّهِ جَمِيعًا أَيُّهَ الْمُؤْمِنُونَ لَعَلَّكُمْ تُفْلِحُونَ




நபியே!) முஃமின்களான ஆடவர்களுக்கு நீர் கூறுவீராக: அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும்; தங்கள் வெட்கத் தலங்களைப் பேணிக்காத்துக் கொள்ள வேண்டும்; அது அவர்களுக்கு மிகப் பரிசுத்தமானதாகும்; நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்பவற்றை நன்கு தெரிந்தவன்.

இன்னும்; முஃமினான பெண்களுக்கும் நீர் கூறுவீராக: அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும்; தங்கள் வெட்கத் தலங்களைப் பேணிக்காத்துக் கொள்ள வேண்டும்; தங்கள் அழகலங்காரத்தை அதினின்று (சாதாரணமாக வெளியில்) தெரியக் கூடியதைத் தவிர (வேறு எதையும்) வெளிக் காட்டலாகாது; இன்னும் தங்கள் முன்றானைகளால் அவர்கள் தங்கள் மார்புகளை மறைத்துக் கொள்ள வேண்டும்; மேலும், (முஃமினான பெண்கள்) தம் கணவர்கள், அல்லது தம் தந்தையர்கள், அல்லது தம் கணவர்களின் தந்தையர்கள் அல்லது தம் புதல்வர்கள் அல்லது தம் கணவர்களின் புதல்வர்கள், அல்லது தம் சகோதரர்கள் அல்லது தம் சகோதரர்களின் புதல்வர்கள், அல்லது தம் சகோதரிகளின் புதல்வர்கள், அல்லது தங்கள் பெண்கள், அல்லது தம் வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்கள், அல்லது ஆடவர்களில் தம்மை அண்டி வாழும் (பெண்களை விரும்ப முடியாத அளவு வயதானவர்கள்) பெண்களின் மறைவான அங்கங்களைப் பற்றி அறிந்து கொள்ளாத சிறுவர்கள் ஆகிய இவர்களைத் தவிர, (வேறு ஆண்களுக்குத்) தங்களுடைய அழகலங்காரத்தை வெளிப்படுத்தக் கூடாது; மேலும், தாங்கள் மறைத்து வைக்கும் அழகலங்காரத்திலிருந்து வெளிப்படுமாறு தங்கள் கால்களை (பூமியில்) தட்டி நடக்க வேண்டாம்; மேலும், முஃமின்களே! (இதில் உங்களிடம் ஏதேனும் தவறு நேரிட்டிருப்பின்,) நீங்கள் தவ்பா செய்து (பிழை பொறுக்கத் தேடி), நீங்கள் வெற்றி பெறும் பொருட்டு, நீங்கள் அனைவரும் அல்லாஹ்வின் பக்கம் திரும்புங்கள்.(24:,30,31)

திரு குர்ஆன் கூறும் இவ்விரு வசனங்களும்  பார்வை முதல் கொண்டு தூய்மையாக இறுக்க வேண்டும் என்பதை எச்சரிக்கிறது. 


ஆம் இஸ்லாம் காதல் எனும் இக்காமத்தை களையெடுக்க ஆழமான அற்புதமான கட்டளைகளை பிறப்பித்துள்ளது.
1.காதலின் மூல காரணமான பார்வையை தாழ்த்தும் படி ஆடவருக்கும் பெண்களுக்கும் பணிக்கிறது.
2.ஆடவர் அந்நிய பெண்ணுடன் தனித்திருப்பதை தடை செய்கிறது.
3.அவசியமில்லாமல் ஆடவருடன் பெண் பேசுவதையும்,அவ்வாறு பேசும் நிலை ஏற்பட்டால் குழைந்து பேசுவதை குற்றம் என்கிறது.
4.அவசியமில்லாமல் பெண் வெளியில் செல்ல வேண்டாமென்று வேண்டுகிறது.
5.மஹ்ர மில்லாமல் பயணம் செய்வதை கூடாதென்கிறது.
6.ஓசை கொடுக்கும் ஆபரணங்களை அணிந்து கொண்டோ, நறுமணம் பூசிக் கொண்டோ அலங்கரிக்க வேண்டாம் என அறுதியிட்டு சொல்கிறது.
7.பர்தாவை பேணச்சொல்லி பாங்காய் உரைக்கிறது.
8.பிள்ளைகளை கண் காணிக்கும்படி பெற்றோருக்கு கட்டளையிடுகிறது.
9. படிப்பாளியாக ஆக வேண்டும் என்ற அக்கரையோடு, பண்பாளர்களாக ஆக்கும் அக்கறை அவசியம் வேண்டும் என்கிறது.

நம் நாயகத்தின் எச்சரிக்கைகள்.

மர்ஸத் பின் அபீ மர்ஸத்( ரலி) அவர்கள் மக்காவுக்கு ஒரு தேவைக்காக சென்றார்கள். (இஸ்லாத்திற்கு முந்திய கால)  காதலியான அனாக் என்பவளை அங்கு ஒரு சுவரின் நிழலில் கண்டார்.அப்போது அவள்,வாரும் இன்றிரவை நாம் இன்ப மயமாகாக் கழிப்போம் என்று கூறினாள்.ஆனால் அவர் மறுத்து விட்டார்.மதீனாவுக்கு திரும்பி பின்னர் நபி         (ஸல்) அவர்களிடம் அனாக் என்பவளை நான் திருமணம் செய்யலாமா?என்று அவர் வினவயபோது, அண்ணலார் மெளனமாக இருந்தார்கள்.அப்போது கீழ் வரும் வசனம் அருளப் பெற்ற பின்னர் அண்ணலார் மர்ஸதே!அவளை மணமுடிக்காதீர் என்றார்கள்.
அருளப் பெற்ற வசனம்

 الزَّانِي لَا يَنكِحُ إِلَّا زَانِيَةً أَوْ مُشْرِكَةً وَالزَّانِيَةُ لَا يَنكِحُهَا إِلَّا زَانٍ أَوْ مُشْرِكٌ ۚ وَحُرِّمَ ذَٰلِكَ عَلَى الْمُؤْمِنِينَ
24:3 நூல்; அபூதாவூத்2051  
நஸயீ3230



நபி( ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஓர் ஆணின் தோள் அந்நியப் பெண்ணின் தோள் மீது உரசுவதை விடச் சேற்றில் புரளும் பன்றியின் மீது அவன் தோள் உராய்வது சிறந்ததாகும்.நூல்: தப்ரானி)


 ஈமானியப்பெண் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதையும் அல்குர்ஆன் கற்பிக்கிறது.(மர்யம்) தன் ஜனங்களை விட்டும் ஒதுங்கி ஒரு திரையைப்போட்டு (மறைத்து) கொண்ட சமயத்தில் நம்முடைய தூதரை (ஜிப்ரீல் (அலை) அவரிடம் அனுப்பிவைத்தோம்.அவர் சரியான மனிதருடைய தோற்றத்தில் காட்சியளித்தார்.நீர் இறையச்சமுடையவராக இருந்தால் உம்மை விட்டும் அளவற்ற அருளாளனிடம் நான் பாதுகாவல் தேடுகிறேன் என்று (மர்யம் ஜிப்ரீலை நோக்கி) கூறினார்.(19:17-18)     

ஓர் அந்நிய ஆணிடம் ஓர் பெண் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதை இவ்வசனம் படம்பிடித்துக்காட்டுகிறது.

ஆனால் இன்றைய நமது சமூகத்திலுள்ள நிலைமையினை நாம் ஆராய்ந்து பார்த்தோமானால் தலைகீழாக மாறிப்போயிருப்பதை பார்க்க முடியும். கற்பொழுக்கம் பேணவேண்டிய நமது இஸ்லாமியப் பெண்களே இன்று வானொலி, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிள் நேரடியாகக் கலந்துகொண்டு வெட்க சுபாவம் என்பதை அணுவளவும்

வெளிக்காட்டிக்கொள்ளாமல் அந்நியர்களின் விரசமான பார்வைகளுக்குத் தங்களை ஆளாக்கிகொள்கின்றன அதுமாத்திரமல்லாமல் வானொலி நிகழ்ச்சிகளில்  தொலைபேசிகள் மூலம் தொடர்புகொண்டு அந்நிய மத ஆண்களுடன் கொஞ்சிக் குலாவுவதும், தான் ஓர் இஸ்லாமியப்பெண் என்பதையும் மறந்து அவ்வறிவிப்பாளர்களின்  மூலம் விபச்சாரத்தின் வாசலை திறந்து விடக்கூடியகாட்சிகளையும் நாம் அவதானிக்கிறோம். இதில் இன்னும் பரிதாபமான விடயம்,பிள்ளைகளைப்பெற்ற பெற்றோர்களே இவ்வாறான ஹராமான செயற்பாடுகளுக்கு வழிகளை அமைத்து கொடுத்து  அதன் மூலம் தங்கள் பிள்ளைகளின் செயற்பாட்டை நினைத்து பெருமையாகப் பேசிக்கொள்வதுமாகும். ஆனால் பரிதாபம், தங்கள்பிள்ளைகளின் விடயங்களில் இவ்வாறு பாராமுகமாக இருகின்ற பெற்றோர்கள் நாளை அவர்களின் செயல்பாடுகளில் ஷைத்தானிய தூண்டுதல்கள் ஏற்படுகின்றபோது இவ்வுலகில் தலைகுனிந்து நாளை மறுமயில் கைசேதப்பட வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்குத்தள்ளப்படுவார்கள் என்பதும் யதார்த்தமான, கசப்பான ஓர் உண்மையாகும். 

எனவே இஸ்லாமிய மார்க்கம் என்பது ஏனைய மதங்களை, சித்தாந்தங்களை விடவும் தனித்துவமானது. பல சிறப்புக்கள் பொருந்தியது. மேற்கத்திய வாதிகள் கூறுவது போல் இஸ்லாம் கடுமையான சித்தாந்தங்களை உடையதோ, பழமையான  கோட்பாடுகளை உடையதோ அல்ல மாறாக அது ஓர் மனிதனுக்கு உச்சபட்ச பாதுகாப்பு அரணாக இவ்வுலகிலும் மறுவுலகிலும் செயற்படுகிறது.ஆனால் அதன் புனிதத்துவத்தைக்  காப்பதில்தான் நமது சமூகம் கோட்டை விட்டுள்ளது. மேற்குறிப்பிட்டது போன்ற  இஸ்லாமிய மார்க்கத்தில் மட்டுமல்லாது முழு மனித சமுதாயத்தின் நாகரீக  விழுமியங்களையே குழிதோண்டி புதைகின்ற இவ்வாறான கீழ்த்தரமான நிகழ்வுகளில்  இருந்து முஸ்லிம்களாகிய நாம் விலகிக்கொள்ள எத்தனிக்க வேண்டும். விபச்சாரம்  என்பது இன்று முழு உலகிலும் பரவி இருக்கக்கூடிய ஓர் சாபக்கேடு என்பதில்  மாற்றுக்கருத்துக்கள் இல்லை. எல்லாம் வல்ல இறைவன் தனது திருமறையில்


     ﻭَﻟَﺎ ﺗَﻘْﺮَﺑُﻮﺍ ﺍﻟﺰِّﻧَﺎ ۖ ﺇِﻧَّﻪُ ﻛَﺎﻥَ ﻓَﺎﺣِﺸَﺔً ﻭَﺳَﺎﺀَ ﺳَﺒِﻴﻠًﺎநீங்கள் விபச்சாரத்தைநெருங்காதீர்கள்; நிச்சயமாக அது மானக்கேடானதாகும்.மேலும், (வேறு கேடுகளின் பக்கம் இழுத்துச் செல்லும்) தீய வழியாகவும் இருக்கின்றது.(17:32)

ஆக விபச்சாரம் என்பதை இஸ்லாம் தடைசெய்வதற்கு முன்னால் அதன் பக்கம் நெருங்க வேண்டாம் என்ற கட்டளையையே பிறப்பிக்கின்ற அந்த வகையில் இவ்வாறான காதலர் தினம் போன்ற தினங்களைக் கொண்டாடுதல், அந்நிய பெண்களைப் பார்த்து இரசித்தல், ஒட்டி உறவாடுதல் போன்ற விபச்சாரத்தின் பக்கம் தள்ளிவிடக்கூடியசெயற்பாடுகளில் இருந்து முதலில் விலகிக்கொள்ள வேண்டும்.ஓர் மனிதனின் இவ்வுலக வாழ்வின் கௌரவத்தையும் கண்ணியத்தையும் இழக்கச் செய்வதில் விபச்சாரத்திற்கே அதிக பங்கு உண்டு என்பதையும் மேலேயுள்ள இறைவசனம் கோடிட்டுக்காடுவதுடன்அதனை நாம் நிதர்சனமாகவும் கண்டு வருகிறோம். ஆகவே, புனித இஸ்லாமிய மார்க்கத்தின் விழுமியங்களையும், கண்ணியமான போத னைகளையும் நமது வாழ்வில் முற்றாகக் கடைப்பிடிப்பதோடு ஷைத்தானிய சிந்தனைகளில் இருந்து நாமும் நம்மைச்சார்ந்த அனைவரும் விலகி கொள்ள வேண்டும். 

காதல் என்ற வார்த்தையின் அர்த்தமே காமம் என்பதுதான் அது ஒரு போதும் வாழ்க்கை ஆகாது. 
இது போன்ற அசிங்கமான தினங்களை கொண்டாடுவதை விட்டும் நம் சமூக மக்களை பாதுகாப்பது நம் கடமை.

ஈமானுக்காக எல்லாவற்றையும் இழக்கலாம் ஆனால் எதற்காகவும் ஈமானை இழக்க கூடாது 

எனவே ஈமானோடு பிறந்தது போல் ஈமானிய வாழ்கையை வாழ்ந்து மரணிக்கும் போது ஈமானோடு மரணிக்கும் பாக்கியத்தை எல்லாம் வல்ல இறைவன் நம் அனைவருக்கும் அருள்புரிய வேண்டும்.

குறிப்பு வழங்கியவர்கள் : ஷேக் ஆதம் ஹள்ரத்,  ஹாஃபிஸ் அஹ்மது ஹள்ரத், சுல்தான் ஹள்ரத்,ஜபருல்லா ஹள்ரத், நஸீர் மிஸ்பாஹி,ஹள்ரத், பீர் முஹம்மது, ஃபைஜீ ஹள்ரத்,
மேலதிக தகவலோடு தொகுத்து வழங்கியவர்:அப்பாஸ் ரியாஜி.

0 comments:

Post a Comment