1. யூனானி (கிரேக்க)
மருத்துவ முறை. இது 'ஒப்பாய்வு முறை' (Analogy) மருத்துவமாகும். 2. அரபு மற்றும் இந்திய
(ஆயுர்வேத) மருத்துவ முறை. இது 'அனுபவரீதியான' (Experimentel) மருத்துவ முறையாகும். நபி (ஸல்) அவர்கள் பெரும்பாலும் அரேபிய
மருத்துவ முறையையே கையாண்டார்கள். அதை 'திப்புன் நபி' (நபி மருத்துவம்) என்றே அரபியில் சொல்லப்படுகிறது. அவற்றில் சில
வேத அறிவிப்பிலிருந்து (வஹி) நபியவர்கள் கண்டறிந்த சிகிச்சை முறையும் உண்டு.
3. ஆங்கில மருத்துவ முறை. இது தற்காலத்தில் அதிவேகமாக பிரபலமடைந்து உலகெங்கிலும் நடைமுறை படுத்துப்பட்டு வருவதை நாம் அறிவோம். இது 'எதிர்முறை' (Allopathy) மருத்துவமாகும். இவை அல்லாமல்
சித்த மருத்துவம், அக்கு பஞ்சர் மருத்துவம், ஹோம்யோபதி மருத்துவம், மூலிகை மருத்துவம், மற்றும் கைவைத்தியம்-பாட்டிவைத்தியம் என பட்டியல் நீலுகிறது.
3. ஆங்கில மருத்துவ முறை. இது தற்காலத்தில் அதிவேகமாக பிரபலமடைந்து உலகெங்கிலும் நடைமுறை படுத்துப்பட்டு வருவதை நாம் அறிவோம். இது 'எதிர்முறை' (Allopathy) மருத்துவமாகும். இவை அல்லாமல்
சித்த மருத்துவம், அக்கு பஞ்சர் மருத்துவம், ஹோம்யோபதி மருத்துவம், மூலிகை மருத்துவம், மற்றும் கைவைத்தியம்-பாட்டிவைத்தியம் என பட்டியல் நீலுகிறது.
வயிற்று வலிக்கு தேன் சிறந்த
மருந்தாகும்:
عَنْ أَبِي سَعِيدٍ أَنَّ
رَجُلًا أَتَى النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: أَخِي
يَشْتَكِي بَطْنَهُ, فَقَالَ: اسْقِهِ عَسَلًا. ثُمَّ أَتَى الثَّانِيَةَ فَقَالَ:
اسْقِهِ عَسَلًا. ثُمَّ أَتَاهُ الثَّالِثَةَ فَقَالَ: اسْقِهِ عَسَلًا. ثُمَّ
أَتَاهُ فَقَالَ: قَدْ فَعَلْتُ فَقَالَ: صَدَقَ اللَّهُ وَكَذَبَ بَطْنُ أَخِيكَ,
اسْقِهِ عَسَلًا. فَسَقَاهُ فَبَرَأَ (بخارى-5684, مسلم-2217, ترمذى-2052, احمد-3:19)
அபூ ஸயீது (ரளி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
'ஒரு மனிதர் நபி (ஸல்)
அவர்களிடம் வந்து, 'என் சகோதரர் வயிற்று
வலியால் சிரமப்படுகிறார்'
என்று சொன்னார். முஹம்மது
(ஸல்) அவர்கள், 'அவருக்கு தேன் ஊட்டுங்கள்' என்று சொன்னார்கள்.
பிறகு இரண்டாம் முறையாக அவர் வந்தி(ந்து 'தேன் ஊட்டியதில் வயிற்றுப் போக்குதான் ஏற்பட்டது' என்று கூறி)டவே, மீண்டும். முஹம்மது
(ஸல்) அவர்கள், 'அவருக்குத் தேன் ஊட்டுங்கள்' என்று சொன்னார்கள்.
பிறகு மூன்றாம் முறையாக அவர் வர முஹம்மது (ஸல்) அவர்கள் அப்போதும், 'அவருக்கு தேன் ஊட்டுங்கள்' என்று சொன்னார்கள்.
பிறகு (நான்காம் முறை அவர்
வந்து), '(தாங்கள் சொன்னதையே)
நான் செய்தேன். (ஆனால் குணமாகவில்லை)' என்றார். அப்போது முஹம்மது (ஸல்) அவர்கள், '(தேனில் நிவாரணம் இருப்பதாக
குர்ஆனில்) அல்லாஹ் உண்மையே கூறியுள்ளான். உங்கள் சகோதரரின் வயிறுதான் பொய் சொல்கிறது. அவருக்கு
தேன் ஊட்டுங்கள்' என்று சொன்னார்கள்.
அம்மனிதர், மீண்டும் தம் சகோதரருக்குத்
தேன் ஊட்டினார்கள். அதையடுத்து அவர் குணமடைந்தார். (புகாரி-5684, முஸ்லிம்-2217, திர்மதி-2052, அஹ்மது-3:19)
தேன் ஓர் உணவாகவும் பயன்படும், மருந்தாகவும் பயன்படும்.
இந்த இரண்டு முறைகளிலும் தேனை நபி (ஸல்) அவர்கள் விரும்பிப் பயன்படுத்தியுள்ளார்கள்.
தேன் இரத்த நாளங்களிலும் குடலிலும் சேர்கின்ற அழுக்குகளை அகற்றி, கழிவுகளை வெளியேற்றும்
ஆற்றல் உடையதாகும். இரைப் பையின் கசடுகளைக் கழுவி, அதை சுறுசுறுப்பாக இயங்கச் செய்யும். இருதயம், ஈரல் ஆகியவற்றைத்
தூய்மைப்படுத்தும். சிறுநீர் அடைப்பு மற்றும் மலச்சிக்கலைப் போக்கும். கபத்தால் ஏற்படும்
இருமல் போன்ற நோய்களுக்குத் தேன் ஒரு சிறந்த நிவாரணி ஆகும். தேனுடன் காடியையும் (Vineger) சேர்த்துக்கொண்டால், மஞ்சள் பித்தநீர் நோய்களுக்குச் சிறந்த மருந்தாக அமையும். விஷக்கடி, நாய்க்கடி போன்றவற்றுக்கும்
தேன் ஒரு நிவாரணி ஆகும். மேலும் பல பயன்களும் தேனில் உண்டு. (ஃபத்ஹுல் பாரி)
மேலும், தேன் (Honey) என்பது, இனிப்பான, பிசுபிசுப்பான, பெரும்பாலும் பொன்னிறமான திரவ உணவாகும். தேனீக்கள், பல மலர்களிலிருந்து
உறிஞ்சி எடுத்து, தேனடையில் தேனைச்
சேகரிக்கின்றன. தேன், மிகப் பழைய காலத்திலிருந்தே
மனிதனின் ஊட்டச் சத்துணவில் மிக முக்கிய இடம்பெற்றுவருகிறது. தேன் மெழுகினாலும் தேன்
பிசினாலும் ஆன, ஒரே அளவான அறுகோண
வடிவில் அமைந்த இரு அடுக்குகளைக் கொண்ட கூட்டில் தேன் சேகரிக்கப்படுகிறது. ஒரு கிலோ
கிராம் தேனுக்கு ஒரு தேனீ சுமார் 4 மில்லியன் மலர்களின் தேனைச் சேகரிக்கிறது. இதற்காக பூமியை நான்கு
முறை சுற்றிவரும் அளவுக்கு அது பறக்கிறது. தேன்கூட்டிலுள்ள தேன், தேனீக்களுக்கும் தேனீ
இனஉயிரிகளுக்கும் குளிர்காலத்தில் உணவாகப் பயன்படுகிறது.
தேனில் வைட்டமின் ; B, J, K, உள்ளிட்டவை உள்ளன. சிறப்பாக வைட்டமின் B-2 அதிக அளவு உள்ளது.
இது கோழி இறைச்சியில் இருக்கும் வைட்டமினுக்கு நிகரானது. இது, ஆப்பிள் மற்றும் திராட்சைச்
சாறுகளில் உள்ள வைட்டமின் சக்தியைவிட 16 மடங்கு அதிகமாகும். வைட்டமின் டீ-2 ஆனது எண்ணெய், சர்க்கரை, புரதம் ஆகிய ஊட்டச்
சத்துக்கள் கொண்டதாகும். நாம் உட்கொள்ளும் உணவு வகைகளில் இந்த வைட்டமின் சத்து குறைந்தால்
குடற்புண், அழற்சி, பரு ஆகியன தோன்றும்.
களைப்பு நீங்க தேன் ஓர் அரிய
பானமாகும். ஒரு கிலோ தேனில் 31.2 கிலோ இறைச்சி, 12 கிலோ காய்கறிகளில் கிடைக்கும் சக்தி உள்ளது. தேனில் உள்ள குளுகோஸ்
சத்தே நோய் நிவாரணி ஆகிறது. இது உயிரணுக்களுக்கும் உடலுறுப்புகளுக்கும் சிறந்த உணவாகும்.
காயங்களுக்கும் தேன் சிறந்த மருந்தாகும். மூச்சுத் திணறல், குடல் நோய், இதய நோய் ஆகியவற்றுக்கும்
தேன் சிரஞ்சீவி ஆகும். (பிரிட்டானிகா தகவல் களஞ்சியம்)
பெரும்பாலும் வயிற்றுப்போக்கு
அஜீரணக் கோளாறினாலேயே ஏற்படுகிறது. இதற்கு தேன் ஒரு சிறந்த நிவாரணியாகும். இரைப்பையின்
மெல்லிய தோலில் ஒட்டிக்கொள்ளும் தாதுக்கள் ஒன்று சேர்ந்துவிட்டால், அவை இரைப்பையையும்
அதில் வந்து சேரும் உணவையும் கெடுத்துவிடும். இப்போது அந்தத் தாதுக்களை அகற்றித் தூய்மைபடுத்தும்
தன்மை கொண்ட மருந்து தேவை. தேனில் இத்தன்மை உண்டு. (தேனிலுள்ள சுண்ணகம் (Calcium) ஒட்டுத் தாதுக்களை அகற்றி இரைப்பையைத் தூய்மையாக்கும் சக்தி
உள்ளதாகும்.) அதிலும் குறிப்பாக தேனை வெந்நீருடன் கலந்து பயன்படுத்தும்போது நல்ல பலன்
தரும். (ஃபத்ஹுல் பாரி)
சீதோஷன ஒவ்வாமைக்கு ஒட்டகப்
பால்:
عَنْ أَنَسٍ أَنَّ نَاسًا كَانَ بِهِمْ سَقَمٌ, قَالُوا يَا رَسُولَ
اللَّهِ! آوِنَا وَأَطْعِمْنَا. فَلَمَّا صَحُّوا قَالُو: إِنَّ الْمَدِينَةَ
وَخِمَةٌ فَأَنْزَلَهُمْ الْحَرَّةَ فِي ذَوْدٍ لَهُ فَقَالَ اشْرَبُوا
أَلْبَانَهَا (بخارى-5685)
அனஸ் (ரளி) அறிவிக்கிறார்கள்:
(மதீனா வந்த 'உக்ல்' மற்றும் 'உரைனா' குலத்து) மக்கள் சிலருக்கு
நோய் ஏற்பட்டது. அவர்கள்,
'அல்லாஹ்வின் தூதரே! எங்களுக்கு அடைக்கலம் அளித்து உணவும் அளியுங்கள்' என்று கேட்டனர்.
(அவ்வாறே அவர்களுக்கு அடைக்கலம் தந்து உணவும் அளிக்கப்பட்டது. பசிப்பிணி நீங்கி) அவர்கள்
நலம் பெற்றபோது 'மதீனா(வின் தட்பவெப்ப
நிலை) எங்களுக்கு ஒத்துவரவில்லை' என்று கூறினர். அவர்களை நபி (ஸல்) அவர்கள் பாறைகள் நிறைந்த 'அல்ஹர்ரா' எனும் இடத்தில் தம்
ஒட்டகங்கள் சிலவற்றுடன் தங்கச்செய்து, 'இவற்றின் பாலை அருந்துங்கள்' என்று கூறினார்கள். (புகாரி-5685)
சர்க்கரை வியாதியை ஒட்டகப்பால்
குறைக்குமென புதியதொரு ஆராய்ச்சி முடிவு தெரிவித்துள்ளது. பிகானரியிலுள்ள 'டயபட்டிக்ஸ் அன்ட்
கேர் ரிசர்ச் சென்டரில்'
(Diabetes And Care Research Center) பணியாற்றும் மருத்துவர்
ராஜேந்திர அகர்வாள் நடத்திய இது தொடர்பான ஆய்வில் இம்முடிவு எட்டப்பட்டுள்ளது. எகிப்திலுள்ள
'கெய்ரோ பல்கலை கழகத்தில்' 54 சர்க்கரை நோயாளிக்கு
நடத்திய ஆய்விலும் ஒட்டகப்பால் சர்க்கரை நோயைக் குணமாக்கிறது என்பது உறுதியாகியுள்ளது.
இன்சுலின் ஊசி மருந்து தினசரி உபயோகித்துக்கொண்டிருந்த 27 பேருக்குத் தினசரி
அரை லிட்டர் ஒட்டகப்பால் கொடுத்து சோதிக்கப்பட்டது. இந்த 27 பேருக்கும் சர்க்கரை
வியாதி நாளுக்கு நாள் குறைந்து வருவது உறுதியானது. ஒட்டகப்பால் குடிக்காத மற்ற 27 நோயாளிகளின் நோயில்
மாற்றமில்லை. ஒட்டகப்பாலில் இரும்பு, துத்தநாகம், தாமிரம் முதலான தனிமங்களும் வைட்டமின் ஊ யும் அதிக அளவில் அடங்கியுள்ளது.
'கெய்ரோ நேசனல் நியூட்ரீசியன்
இன்ஸ்டிடியூட்டில்' நடத்திய சோதனையில்
கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இப்புதிய கண்டுபிடிப்புக்கும் அரபு நாடுகளில் வசிப்போருக்குச்
சர்க்கரை நோய் அதிக அளவில் இல்லாமல் இருப்பதற்கும் தொடர்பிருக்கலாம் என்ற கருத்து வலுவாகியுள்ளது.
பசும்பால் எல்லா நோய்களுக்கும்
நிவாரணி:
عَن ِابْنِ مَسْعُوْدٍ رَضِىَ الله ُعَنْهُ, اَن َّالنَّبِىَّ صَلَّى اللهُ
عَلَيْهِ وَسَلَّمَ قاَلَ:ماَ اَنْزَلَ اللهُ داَءً اِلاَّ وَاَنْزَلَ لَهُ
دَواَءً, جَهَلَهُ مَنْ جَهَلَهُ
وَعَلِمَهُ مَنْ عَلِمَهُ, وَفِى اَلْباَنِ الْبَقَرِ شِفاَءٌ مِنْ كُلِّ دَاءٍ
فَعَليَكْمُ ْبِاَلْباَنِ الْبَقَرِ فَاِنَّهاَ تَرْتِمُ مِنْ كُلِّ الشَّجَرِ. (مستدرك
حاكم-7529, مصنف عبد الرزاق-17144)
இப்னு மஸ்வூது (ரளி) அறிவிக்கிறார்கள்:
'எந்த நோயையும் அதற்குரிய
மருந்துடனேயேத்தவிர அல்லாஹ் படைக்கவில்லை. அந்த நிவாரணியை அறிந்தவர் அறிந்துக்கொண்டார். அறியாதவர் அறியாமையிலேயே
இருக்கிறார். பசுமாட்டின் பாலில் அனைத்து நோய்களுக்கும் நிவாரணமிருக்கிறது. ஏனெனில், அது அனைத்து மரங்களின்
இலைகளையும் சாப்பிடுகிறது எனவே, அதை அருந்துங்கள்' என நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். (முஸ்தத்ரக் ஹாக்கிம்-7529, முஸன்னஃப் அப்திர்
ரஜ்ஜாக்-17144)
பால் சுவையான சத்துள்ள பானமாகும். மனிதர்களின் முக்கிய
உணவாகும். வெள்ளாடு, செம்மறியாடு, பசுமாடு, எருமை, ஒட்டகம் போன்ற விலங்குகளிலிருந்து
பால் கிடைக்கிறது. பால் என்பது கொழுப்புக் கரைசல், நீர்மப் புரதம், கரைந்த சர்க்கரை, கால்சியம், பாஸ்பரஸ் உள்ளிட்ட தாதுக்கள், வைட்டமின் டீ உள்ளிட்ட வைட்டமின்கள் போன்றவை கலந்து
குழம்பு நிலை திரவமாகும். கொழுப்பு நீக்காத பாலில் சுமார் 3.5%; கொழுப்பு இருக்கிறது.
இதை ஒரு கொள்கலத்திட்டு, பாலாடையைத் தனியாகப்
பிரித்து, கொழுப்பு குறைவான
(1-2%;) பால் தயாரிக்கலாம்.
நுண்மையான துளைகளின் வழியாகப் பீச்சப்படுவதால், கொழுப்புச் சத்து சமமாகப் பரவி, எளிதில் செரிக்கக்கூடிதாகப்
பால் உள்ளது. பாலில் இருந்து வெண்ணைய், பாலாடைக்கட்டி, தயிர் போன்ற பால் பொருட்கள் கிடைக்கின்றன. (பிரிட்டானிகா தகவல்
களஞ்சியம்)
மன உளைச்சலுக்கு (தல்பீனா)
பால் பாயாசம்:
عَنْ عُرْوَةَ, عَنْ
عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا أَنَّهَا كَانَتْ تَأْمُرُ بِالتَّلْبِينِ
لِلْمَرِيضِ وَلِلْمَحْزُونِ عَلَى الْهَالِكِ وَكَانَتْ تَقُولُ: إِنِّي سَمِعْتُ
رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: إِنَّ التَّلْبِينَةَ
تُجِمُّ فُؤَادَ الْمَرِيضِ, وَتَذْهَبُ بِبَعْضِ الْحُزْنِ (بخارى-5689)
உர்வா பின் அஜ்ஜுபைர் (ரளி)
அறிவிக்கிறார்கள்: '(என் சிறிய தாயார்)
ஆயிஷா (ரளி) அவர்கள் நோயளிக்கும், இறந்துபோனவரை எண்ணி வருந்துபவருக்கும் 'தல்பீனா' (பால் பாயாசம்) தயாரித்துக்
கொடுக்கும்படி பணித்துவந்தார்கள். மேலும், 'அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், 'தல்பீனா நோயாளியின்
உள்ளத்திற்கு ஆறுதல் அளிக்கும்¢ கவலைகளில் சிலவற்றை போக்கும்' என்று கூறக்கேட்டுள்ளேன்' என்பார்கள். (புகாரி-5689)
'அத்தல்பீனா' என்பது மாவு, பால் ஆகியவற்றைக் கலந்து தயாரிக்கப்படும் பாயசம் அல்லது கஞ்சியாகும்.
பாலுக்குப் பதிலாகத் தேன் சேர்க்கப்படுவதுமுண்டு. இதைக் கோதுமைக் குறுணையால் தயாரிப்பதே
அக்கால வழக்கமாகும். இது ஒரு மிருதுவான உணவாதலால் நோயாளிக்கு ஏற்றதாகும். சூடாக இதை
அருந்தினால் உடல் வெப்பம் சீரடைய இது உதவும். நோயாளியானாலும், துக்கத்தில் இருப்பவரானாலும்
அவர்களுக்கு உணவு குறைந்துவிடுவதால் இரப்பை உள்ளிட்ட உறுப்புகளில் காய்வு நிலை காணப்படும்.
இந்தக் கஞ்சி ஈரத்தை ஏற்படுத்தி வலுவூட்டும். அத்துடன் நோயாளியின் இரைப்பையில் சேர்ந்துவிடுகிற
பித்த நீர், கபம் ஆகியவற்றை இது
அழித்துவிடும். (ஃபத்ஹுல் பாரி)
அடிநாக்கு அழற்சிக்கும் விலா
வலிக்கும் கோஷ்டக் குச்சி:
عَنْ أُمِّ قَيْسٍ بِنْتِ مِحْصَنٍ قَالَتْ: سَمِعْتُ النَّبِيَّ
صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: عَلَيْكُمْ بِهَذَا الْعُودِ
الْهِنْدِيِّ, فَإِنَّ فِيهِ سَبْعَةَ أَشْفِيَةٍ. يُسْتَعَطُ بِهِ مِنْ
الْعُذْرَةِ, وَيُلَدُّ بِهِ مِنْ ذَاتِ الْجَنْبِ (بخارى-5692)
உம்மு கைஸ் பின் மிஹ்ஸன்
(ரளி) அறிவிக்கிறார்கள்: 'நீங்கள் இந்த இந்திய
(கோஷ்ட)க் குச்சியை அவசியம் பயன்படுத்துங்கள். ஏனெனில், அதில் ஏழு நிவாரணங்கள்
உள்ளன. அடிநாக்கு அழற்சிக்காக அதை(த் தூளாக்கி எண்ணையில் குழைத்து) மூக்கில் சொட்டு
மருந்தாக இடப்படும். (மார்புச் தசை வாதத்தால் ஏற்படும்) விலா வலிக்கு அதை வாயின் ஒரு
பக்கத்தில் சொட்டு மருந்தாக கொடுக்கப்படும். (புகாரி-5692)
நறுமணப் பொருளாகவும் மருந்தாகவும்
பயன்படுத்தப்படும் ஒரு வகை மரமே (ஊது) கோஷ்டம் அல்லது கோட்டம் (Costus Root) என்பது. இம்மரம்
இமய மலையின் வடமேற்கு நாடுகளில் பயிராகிறது. இது இரு வகைப்படும். 1. இந்தியக் கோஷ்டம்
(செய் கோஷ்டம்). இது கறுப்பாகவும் அதிக வெப்பமுள்ளதாகவும் இருக்கும். 2. கடல் கோஷ்டம் (வெண்கோஷ்டம்).
இது வெண்மையானதாக இருக்கும். இதன் குச்சியில் நெருப்பிட்டு வாசனைப் புகை பிடிக்கலாம்.
இதை ஊறவைத்து அதன் சாற்றைத் தண்ணீர், அல்லது தேனுடன் குடிக்கலாம். இதைத் தேய்த்து பத்துப் போடவும்
செய்யலாம். இதைப் பொடியாக்கி அதன் தூளைப் பயன்படுத்தவதும் உண்டு. கோஷ்டத்தால் அநேக
மருத்துவப் பலன்கள் உள்ளன. இந்த ஹதீஸில், கோஷ்டத்தில் ஏழு வகை நிவாரணங்கள் உள்ளதாக நபி (ஸல்) அவர்கள்
தெரிவிக்கிறார்கள். தொண்டை வலிக்கும், மார்புச் சதை வாதத்தால் ஏற்படும் விலா வலிக்கும் (Pleurodynia) கோஷ்டம் நிவாரணியாகும்.
மாதவிடாய் போக்கையும் சிறுநீர்
ஓட்டத்தையும் கோஷ்டம் சீராக்கும். குடற்புழுக்களைக் கொல்லும், விட்டுவிட்டு வரும்
காய்ச்சல் (Quartan
Fever), தோலைச் சிவக்க வைக்கும்
கடுமையான காய்ச்சல் (Rose Fever) ஆகியவற்றுக்கும் கோஷ்டம் சிறந்த நிவாரணியாகும்.
இரப்பையைச் சூடாக்கிச் சீர்படுத்தும், முகப்பரு மற்றும் தேமலைப் போக்கும். (நூல்: ஃபத்ஹுல் பாரி) கோஷ்ட
வேரை மென்றாலோ, காய்ச்சி வாய் கொப்பளித்தாலோ, வாய் நாற்றம் அகலும்.
நீருடன் கலந்து அதை அருந்தினால் நுரையீரல் வலி, விலா வலி, குடற்புண் ஆகியவற்றுக்கு நல்லது. 5 கிராம் அளவு கோஷ்ட
வேரைச் சாப்பிட்டால் இரைப்பை அழற்சிக்கு நிவாரணம் கிடைக்கும். (நூல்: உம்ததுல் காரீ)
மன்னு (சமையல் காளான்) கண்ணுக்கு
நல்லது:
سَعِيدَ بْنَ زَيْدٍ
قَالَ: سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ:
الْكَمْأَةُ مِنْ الْمَنِّ, وَمَاؤُهَا شِفَاءٌ لِلْعَيْنِ (بخارى-5708,
ترمذى-1268, ابن ماجه-3455, احمد-2:511)
சயீது பின் ஜைது (ரளி) அறிவிக்கிறார்கள்:
'சமையல் காளான் 'மன்னு'வகையைச் சேர்ந்தது
ஆகும். அதன் சாறு கண்ணுக்கு நிவாரணமாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி-5708, திர்மிதி-1268, இப்னுமாஜா-3455, அஹ்மது-2:511)
'மன்னு' (Manna) என்பது பாலைவிட
வெண்மையானதும் தேனைவிட இனிமையானதுமான பனிக்கட்டி போன்றதொரு சுவையான உணவுப் பொருளாகும்.
இது 'தீஹ்' எனும் பாலை வெளியில்
பல்லாண்டு காலம் நாடோடிகளாக அலைந்து தரிந்துக்கொண்டிருந்த இஸ்ரவேலர்களுக்கு இலவசமாக
இறைவன் வழங்கிய உணவாகும். இது கண் நோய்க்கு நிவாரணியாகும் என்ற கருத்து ஹதீஸை அடிப்படையாகக்
கொண்டதாகும். 'சமையல் காளான் (Truffle) 'மன்னு' வகையைச் சேர்ந்ததாகும்.
சமையல் காளானின் சாறு கண் நோய்க்கு நிவாரணியாகும்' என இந்த ஹதீஸ் கூறுகிறது. அதாவது, 'மன்னு' எனும் உணவு இஸ்ரவேலர்களுக்கு
இலவசமாகக் கிடைத்ததைப் போன்றே காளான் வகையும் இலவசமாகக் கிடைக்கிறது. அல்லது இஸ்ரவேலர்களுக்குக்
கிடைத்துவந்த 'மன்னு' வகை உணவுகளில் சமையல்
காளானும் ஒன்றாகும். நீர்வளம் குறைந்த மணல் பிரதேசமான 'தீஹ்' பகுதியில் காளான்
அதிகம் முளைத்தது. அதை எடுத்து அவர்கள் சமைத்து உண்டார்கள்.
சமையல் காளானைப் பிழிந்து
சாறு எடுத்து, அதைக் கண் நோய் மருந்துடன்
கலந்து பயன்படுத்தினால் நல்ல பலன் கிடைக்கும். சமையல் காளானின் இதழ்களை எடுத்து தீக்கங்கின்மேல்
வைத்து அதன் சாறு சூடானபின், அஞ்சனக் (சுர்மா) குச்சியால் கண்ணுக்குத் தீட்டினால் கண்நோய்
விலகும். அஞ்சனம் போன்றவற்றுடன் காளான் சாற்றைத் கலந்தே உபயோகிக்க வேண்டும் என்றும், தனியாகக் காளான் சாற்றை
பயன்படுத்தலாகாது என்றும் சிலர் கூறுகின்றனர். (ஃபத்ஹுல் பாரி)
மரணத்தைத் தவிர எல்லா நோய்களுக்கும்
கருஞ்சீரகம் நிவாரணம்:
فَإِنَّ عَائِشَةَ
حَدَّثَتْنِي أَنَّهَا سَمِعَتْ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
يَقُولُ: إِنَّ هَذِهِ الْحَبَّةَ السَّوْدَاءَ شِفَاءٌ مِنْ كُلِّ دَاءٍ إِلَّا
مِنْ السَّامِ, قُلْتُ: وَمَا السَّامُ قَالَ الْمَوْتُ (بخارى-5687, مسلم-2215,
ترمذى-2041, ابن ماجه-3447, احمد-2:241)
காலித் பின் ஸயீது (ரளி) அறிவிக்கிறார்கள்:
'ஆயிஷா (ரளி) அவர்கள்
என்னிடம், நபி (ஸல்) அவர்கள்
இந்தக் 'கருஞ்சீரகம்' எல்லா நோய்க்கும்
நிவாரணமாகும். 'சாமை'த் தவிர என்று கூறியதை
நான் கேட்டுருக்கிறேன். 'சாம் என்றால் என்ன?' என்று அவர்களிடம்
கேட்டேன். அதற்கு அவர்கள் 'மரணம்' என்று பதிலளித்தார்கள்.
(புகாரி-5687, முஸ்லிம்-2215, திர்மிதி-2041, அஹ்மது-2:241)
கருஞ்சீரகம் (Black Cumin)
எல்லா நோய்களுக்கும்
மருந்தாகும் என நபி (ஸல்) அவர்கள் தெரிவித்தார்கள். குறிப்பாக குளிர்ச்சியால் ஏற்படும்
நோய்களுக்குக் கருஞ்சீரகம் நல்ல நிவாரணியாகும். கருஞ்சீரகத்தை வறுத்து தூளாக்கி எண்ணையில்
ஊறவைத்துப் பிறகு மூக்கில் மூன்று சொட்டுகள் விட்டால் கடுமையான ஜலதோசம் குணமாகும்.
கபம், குளிர் காய்ச்சல், குறட்டை, மூக்கடைப்பு ஆகியவற்றுக்கும்
கருஞ்சீரகம் நல்ல பலன் தரும் கருஞ்சீரகத்தை தூளாக்கி, தேனில் கலந்து வெந்நீருடன்
சாப்பிட்டால் மூத்திரக் கல்லைக் கரைத்து சிறுநீர் அடைப்பை அகற்றும். மாதவிடாய்ப் போக்கையும்
சீராக்கும். கருஞ்சீரகப் பொடியை ஒரு துண்டுத்துணியில் கட்டி உறிஞ்சுவது ஜலதோசத்திற்கு
நல்லது. தாய்ப் பாலில் ஏழு கருஞ்சீரக வித்துகளை ஊறவைத்து பொடியாக்கி உறிஞ்சிவந்தால்
மஞ்சள் காமாலை நோய் குணமாகும். 5 கிராம் கருஞ்சீரகத்தை தண்ணீருடன் கலந்து சாப்பிட்டால் சுவாசக்
கோளாறு சீரடையும். கருஞ்சீரகத்தை அரைத்துப் பத்துப் போட்டால் தலைவலிக்கு நல்லது. கருஞ்சீரகத்தை
காடியுடன் (Vineger) வேகவைத்து வாய்
கொப்பளித்தால் பல்வலிக்கு நல்ல பலன் தரும். (ஃபத்ஹுல் பாரி)
கரும்பித்தம் மற்றும் கபத்தால்
ஏற்படும் அஜீரணக் கோளாறை அகற்றுவது கருஞ்ஜீரகத்தின் தனிச்சிறப்பாகும். காஞ்சிரைப் பூண்டின்
சாறுடன் கருஞ்ஜீரகத்தை குழைத்துச் சாப்பிட்டால் நுண் கிருமிகள் வெளியேறிவிடும். கருஞ்ஜீரகத்தை
வறுத்துத் தூளாக்கி மெழுகு மற்றும் அல்லி எண்ணெயுடன் கலந்து தலையில் தேய்த்தால் தலைமுடி
உதிர்வதை தடுக்கலாம். கருஞ்ஜீரக எண்ணெய் பக்கவாத நோய்க்குச் சிறந்த மருந்தாகும். இவையன்றி
நாய்க்கடி, மாதவிடாய் மற்றும்
பிரசவ இரத்தப் போக்குத் தடங்கல், கருப்பை வலி, சிரங்கு, கண்வலி போன்ற நோய்களுக்கும் கருஞ்ஜீரம் சிறந்த நிவாரணியாகும்.
(உம்ததுல் காரி)
விஷத்திற்கும் சூனியத்திற்கும்
அஜ்வா பேரிச்சம்பழம் மருந்தாகும்:
عَامِرُ بْنُ سَعْدٍ عَنْ
أَبِيهِ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ
تَصَبَّحَ كُلَّ يَوْمٍ سَبْعَ تَمَرَاتٍ عَجْوَةً, لَمْ يَضُرَّهُ فِي ذَلِكَ
الْيَوْمِ سُمٌّ وَلَا سِحْرٌ (بخارى-5445)
ஸஃது பின் அபீவக்காஸ் (ரளி)
அறிவிக்கிறார்கள்: 'தினந்தோறும் காலையில்
(வெறும் வயிற்றில்) ஏழு 'அஜ்வா' (ரகப்) பேரீச்சம் பழங்களைச்
சாப்பிடுகின்றவருக்கு, அந்த நாள் எந்த விஷமும்
இடரளிக்காது. எந்தச் சூனியமும்
அவருக்கு இடையூறு செய்யாது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்'. (புகாரி-5445)
மினரல்கள்: பேரிச்சம்பழத்தில்
மினரல், கொழுப்பு சத்து, நார்ச்சத்து, புரச்சத்து மற்றும்
கலோரி உள்ளது. 100 கிராம் பேரிச்சம்பழத்தின்
சதைப்பகுதியில் 648 மி.கிராம், பொட்டாசியம் 59 மி.கிராம், கால்சியம் மற்றும்
இரும்பு சத்து 1.3 மி.கிராம் உள்ளன.
அதிக இரத்த அழுத்தம் உடையவர்களுக்கு பேரிச்சம்பழம் மிகவும் நல்லது. சிலவகை கடும் நோய்களில்
இருந்து தற்காத்துக்கொள்ள பேரிச்சம்பழம் உதவுகின்றன.
கொழுப்பு சத்து: பேரிச்சம்பழத்தின்
சதைப்பகுதியில் மிகவும் குறைவாக, 0.2மூ முதல் 0.5மூ வரையே கொழுப்பு சத்து உள்ளது.
நார்ச்சத்து: பேரிச்சம்பழத்தில்
பெக்டின் மற்றும் செல்லுலோஸ் என்ற நார்ச்சத்துகள் உள்ளன. 100 கிராம் பேரிச்சம்பழத்தின்
சதைப்பகுதியில் 6.5 கிராம் முதல் 11.5 கிராம் வரையிலான
நார்ச்சத்துகள் நிறைந்துள்ளன. பிற பழங்களைவ விட அதிகமாக, பேரிச்சம்பழங்களின்தான்
3.5% முதல் 5.5% வரையிலான அளவு
பெக்டின் நிறைந்துள்ளது. பெக்டின், ரத்தத்தில் கொழுப்பின் அளவை குறைக்க உதவுகிறது.
புரச்சத்து: 100 கிராம் பேரிச்சம்பழத்தின்
சதைப்பகுதயில் 2.5 கிராம் புரச்சத்து
உள்ளது. 7 பேரிச்சம்பழங்கள்
சாப்பிட்டால், அதனால் 1 கிராம் புரச்சத்து
கிடைக்கிறது.
கலோரி: ஒரு கிராம் பேரிச்சம்பழத்தில், மூன்று கிலோ கலோரிக்கு
சற்று குறைவாக உள்ளது. 100 கிராம் பேரிச்சம்பழத்தில், 280 கிலோ கலோரி உள்ளது.
30 வயது முதல் 60 வயதுக்கு இடைப்பட்டவர்கள்
தினமும் 38 கிராம் பேரிச்சம்பழம்
சாப்பிடலாம்.
இரத்தம் வழிவதை நிறுத்த சாம்பல்
சிறந்த மருந்தாகும்:
عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ
السَّاعِدِيِّ قَالَ: لَمَّا كُسِرَتْ عَلَى رَأْسِ رَسُولِ اللَّهِ صَلَّى
اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْبَيْضَةُ, وَأُدْمِيَ وَجْهُهُ, وَكُسِرَتْ
رَبَاعِيَتُهُ, وَكَانَ عَلِيٌّ يَخْتَلِفُ بِالْمَاءِ فِي الْمِجَنِّ, وَجَاءَتْ
فَاطِمَةُ تَغْسِلُ عَنْ وَجْهِهِ الدَّمَ, فَلَمَّا رَأَتْ فَاطِمَةُ عَلَيْهَا
السَّلَام الدَّمَ يَزِيدُ عَلَى الْمَاءِ كَثْرَةً, عَمَدَتْ إِلَى حَصِيرٍ
فَأَحْرَقَتْهَا وَأَلْصَقَتْهَا عَلَى جُرْحِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ
عَلَيْهِ وَسَلَّمَ, فَرَقَأَ الدَّمُ (بخارى-5722)
சஹ்ல் பின் ஸஃது அஸ்ஸாயிதீ
(ரளி) அறிவிக்கிறார்கள்: '(உஹுத் போரில்) அல்லாஹ்வின்
தூதர் (ஸல்) அவர்களின் தலைக் கவசம் அவர்களது தலையில் வைத்தே உடை(த்து நொறு)க்கப்பட்டது.
அவர்களுடைய முகத்தில் இரத்தம் வழிந்தது. அவர்களுடைய (முன்வாய்ப் பற்களில் கீழ் வரிசையில்
வலப்புறப்) பல் ஒன்று உடைக்கப்பட்டது. அப்போது அலீ (ரளி) அவர்கள் தமது கேடயத்தில் தண்ணீர்
எடுத்து வந்து போய்க்கொண்டு இருந்தார்கள். ஃபாத்திமா (ரளி) அவர்கள் நபி (ஸல்) அவர்களின்
முகத்திலிருந்த இரத்தத்தை கழுவிக்கொண்டிருந்தார்கள். இரத்தம் தண்ணீரையும் மீறி அதிகமாகக்
கொட்டுவதைக் கண்ட ஃபாத்திமா (ரளி) அவர்கள் பாய் ஒன்றை எடுத்து, அதை எரித்து (அது
சாம்பலானதும்) அதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் காயத்தின் மீது அழுத்தி வைத்தார்கள். உடனே இரத்தம் (வழிவது) நின்றுவிட்டது'. (புகாரி-5722, இப்னுமாஜா-3464)
அக்காலத்தில், காயத்திலிருந்து வழியும்
இரத்தத்தை உடனடியாக நிறுத்த அந்த இடத்தில் சாம்பலை வைப்பார்கள். பொதுவாக சாம்பல் எதுவாயினும்
உடனடியாக அது இரத்த ஓட்டத்தை நிறுத்திவிடும். பாயை எரித்து அதன் சாம்பலை வைப்பதே அக்கால
வழக்கமாக இருந்துள்ளது. நறுமணக் கோரப்புல் வகையால் தயாரிக்கப்பட்ட பாயாக இருப்பின்
இரத்தமும் நிற்கும்¢ நறுமணமும் கிடைக்கும்.
சாம்பலில் காய்வுத் தன்மை இருக்கும் அதே நேரத்தில் கரிக்கும் தன்மை குறைவாக உள்ளது
குறிப்பிடத் தக்கதாகும். (ஃபத்ஹுல் பாரி)
வெட்டு காயத்திற்கு மருதாணியே
சிறந்த மருந்தாகும்:
عَنْ عَلِيِّ بْنِ عُبَيْدِ اللَّهِ عَنْ جَدَّتِهِ سَلْمَى,
وَكَانَتْ تَخْدُمُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَتْ: مَا
كَانَ يَكُونُ بِرَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَرْحَةٌ
وَلَا نَكْبَةٌ, إِلَّا أَمَرَنِي رَسُولُ اللَّهِ
صَلَّى اللَّهُ عَلَيْهِ
وَسَلَّمَ أَنْ أَضَعَ عَلَيْهَا الْحِنَّاءَ (ترمذى- 2054, ابن ماجه-3502)
அலி பின் உபைதுல்லாஹ் (ரளி)
அறிவிக்கிறார்கள்: 'ஸல்மா (ரளி) அவர்கள்
நபி (ஸல்) அவர்களுக்கு பணிவிடை செய்துக்கொண்டிருந்தார்கள். நபியவர்களுக்கு (வாளல் ஏற்பட்ட)
வெட்டு காயம், (கல் அல்லது முள்ளால்
ஏற்பட்ட) காயம் இவை போன்றவைகளுக்கு மருதாணியை அதில் தடவுமாறு எனக்கு சொல்லக்கூடியவர்களாக
இருந்தார்கள் என்று கூறினார்கள்';. (திர்மிதி-2054, இப்னுமாஜா-3502)
மருதாணி இலை நாசினி. கண்ணுக்குப்
புலப்படாத பல கிருமிகளை அழிக்க வல்லது. நகசுத்தி வராமல் தடுக்கும். புண்ணை ஆற்றவும்
நல்ல மருந்து. கை, கால், விரல் நகங்களுக்கு
அரைத்துப் பூசி அழகூட்டுவார்கள். மருதாணிப் பூவினை ஒரு துணிணில் சுற்றி, தலைமாட்டில் வைத்துப்
படுத்தால் தூக்கம் வரும். பூவின் மணம் தூக்கத்தை வரவழைக்கும். ஒருசிலருக்கு இம்மணம் தலைவலியை உண்டாக்கும். இதன்
வேர்ப்பட்டையை அரைத்துப் பற்றிட கால் ஆணி, புண் குணமாகும். இதன் தைலம் முடி வளர்க்கும் இள நரையை அகற்றும்.
இரும்பு வாணலில் தேங்காய்,
நெய் 500 மி.லிட்டர் விட்டு
இதன் இலை 100 கிராம் போட்டு பொரித்து
எடுக்கவும். இலையின் சாறு எண்ணெயில் சேர்த்து சிவப்பாக மாறிவிடும். நறுமணத்திற்காக
10 கிராம் சந்தனத்தூள்
போடலாம். அரைத்துப் போட்டுக் காய்ச்சலாம். இந்த தைலத்தை நாளும் தலைத்த் தேய்க்க முடி
வளரும் நரைமாறும். ஆறாத வாய்ப்புண், அம்மைப்புண் ஆகியவற்றிகு இதன் இலையை அரைத்து நீரில் கரைத்து வடித்து வாய் கொப்பளிக்கலாம். அரைத்து
அம்மைப் புண்களுக்குப் பூசலாம். 3-5 நாளில் குணமாகும். கட்டிகளுக்கும் அரைத்துப்பற்றிடலாம். பவுடராக
வரும் இந்த மருதாணியில் எந்த அளவு அதன் மருத்துவ குணங்கள் அழிக்கபடாமல் வரும் என்பது
கேள்விக்குறியே. முடிந்த அளவு மருதாணி இலைகளை பறித்து உபயோகித்துப் பாருங்கள்.
தலைவலிக்கு மருதாணியே சிறந்த
மருந்து:
أنَّ النبى صلى الله عليه وسلم كان إذا صُدِع، غَلَّفَ رأسَه
بالحنَّاءِ، ويقول: "إنَّهُ نافعٌ بإذنِ الله من الصُّداعِ (ابن ماجه)
'நபி (ஸல்) அவர்களுக்கு தலைவலி ஏற்பட்டால், மருதாணியை தலையில்
பத்துபோடுவார்கள்¢ மேலும், அல்லாஹ்வின் நாட்டத்தின்
படி மருதாணி தலைவலிக்கு பலன் தரும் என்றும் கூறுவார்கள்'. (இப்னுமாஜா)
தேள்கடி விஷத்திற்கு உப்பு
தண்ணீர் சிறந்த மருந்தாகும்:
عنَ عَلىٍّ قاَلَ: بَيْناَ رَسُولُ اللهِ صَلىَّ اللهُ عَلَيْهِ
وَسَلَّمَ ذاَتَ لَيْلَةٍ يُصَلىِّ, فَوَضَعَ يَدَهُ عَلىَ الْاَرْضِ فَلَدَغَتْهُ
عَقْرَبٌ, فَناَوَلهَاَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَليَهْ وَسَلَّمَ بِنَعْلِهِ
فَقَتَلَهاَ. فَلَماَّ اِنْصَرَفَ قاَلَ: "لَعَنَ اللهُ الْعَقْرَبَ, ماَ تَدْعُ
مُصَلِّياً وَلاَ غَيْرَهُ – اَوْ نَبِياًّ وَغَيْرَهُ" ثُمَّ دَعاَ بِمِلْحٍ
وَماَءٍ, فَجَعَلَهُ فِى اِناَءٍ, ثُمَّ جَعَلَ يَصُبُّهُ عَلىَ اِصْبَعِهِ حَيْثُ
لَدَغَتْهُ وَيَمْسَحُهاَ وَيُعَوِّذُهاَ بِالمْعُوِّذَتَيْنِ (بيهقى-2575)
அலி (ரளி) அறிவிக்கிறார்கள்:
'ஒரு நாள் இரவு நபி
(ஸல்) அவர்களோடு தொழுதுகொண்டிருந்தோம். அப்போது நபியவர்கள் தமது கையை தரையில் வைத்தபோது
ஒரு தேள் அவர்களை கடித்துவிட்டது. அதை தனது காலால் பிடித்து கொண்றுவிட்டார்கள். பிறகு, எங்கள் பக்கம் திரும்பி, தேளை அல்லாஹ் சபிப்பானாக!
ஏனெனில் அது தொழகையாளியையோ மற்றவர்களையோ அல்லது நபியையோ மற்றவர்களையோ (கடிக்காமல்)
விட்டு வைப்பதில்லை எனக்கூறினார்கள். பிறகு, உப்பையும் (சிறிது) தண்ணீரையும் கேட்டார்கள். அவையினை ஒரு பாத்திரத்தில்
போட்டு (கரைத்து அந்த உப்புநீரை தேள் கடித்த) விரலின் மீது ஊற்றி நன்கு தேய்த்தார்கள்.
அதோடு சூரத்துல் முஅவ்விததைனைக் (குல் அவூது பிரப்பில் ஃபலக், குல் அவூது பிரப்பின்
நாஸ் ஆகிய இரண்டு சூராவையும் ஓதியதைக்) கொண்டு பாதுகாவல் தேடினார்கள்';. (பைஹகி-2575)
கண்பார்வை தெளிவுக்கும் இமை
நன்கு வளரவதற்கும் சுர்மா மருந்தாகும்:
عَنْ ابْنِ عَبَّاسٍ, أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ
وَسَلَّمَ قَالَ: اكْتَحِلُوا بِالْإِثْمِدِ, فَإِنَّهُ يَجْلُو الْبَصَرَ
وَيُنْبِتُ الشَّعْرَ. (ترمذى, 1757, ابوداود-3878)
இப்னு அப்பாஸ் ரளி அறிவிக்கிறார்கள்:
'அஞ்சனக் (சுர்மா)
கல்லால் அஞ்சனமிட்டு(சுர்மாயிட்டு)க்கொள்ளுங்கள். அது கண்பார்வையைத் தெளிவாக்கும். இமையை முளைக்க வைக்கும்
என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்'. (திர்மதி-1757, அபூதாவூது-3878)
கண் வலி, கண் வீக்கம், கண் எரிச்சல் உள்ளிட்ட
கண் நோய்களுக்கு அஞ்சனம் அல்லது சுர்மா (Antimony) சிறந்த நிவாரணிகும். அஞ்சனக் கல்லை உரசி, அதிலிருந்து வரும் தூளைக் கண்ணின் கீழ்பாகத்தில் தேய்த்துக்கொள்வது
கண் நோய்க்கு நல்லது.
கடுமையான உஷ்ண காய்ச்சலுக்கு
குளிர்ந்த நீரே மருந்தாகும்:
عَنْ ابْنِ عُمَرَ
رَضِيَ اللَّهُ عَنْهُمَا عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
قَالَ: الْحُمَّى مِنْ فَيْحِ جَهَنَّمَ, فَأَطْفِئُوهَا بِالْمَاءِ (بخارى-5723)
இப்னு உமர் (ரளி) அறிவிக்கிறார்கள்:
'காய்ச்சல் நரகத்தின்
வெப்பக் காற்றால் உண்டாகிறது. ஆகவே, அதைத் தண்ணீரால் (குளிர்வித்துத்) தணியுங்கள் என நபி (ஸல்) அவர்கள்
கூறினார்கள்'. (புகாரி-5723)
சில வகைக் காய்ச்சல்கள் கடுமையாகும்போது
பனிக்கட்டியை அல்லது குளிந்த நீரில் தோய்த்த துணியை நோயாளியின் நெற்றியில் வைத்து உஷ்ணத்தை
தணிக்குமாறு மருத்துவர்கள் கூறுகிறார்கள். காய்ச்சல் கண்டவர்கள் குளிர்ந்த நீரில் குளிக்க
வேண்டும் என்பது இந்த நபிமொழியின் கருத்தன்று. காய்ச்சல் எந்த வகையானது? அது எத்தனை டிகிரி
உள்ளது? அதைக் குளிர்ந்த நீரால், அல்லது பணிக்கட்டியால்
எந்த முறையில் தணிக்கலாம் என்பதையெல்லாம் அறிந்த மருத்துவர்களின் பரிந்துரைக்கேற்ப
செயல்பட வேண்டும் என்பதே இங்கு கருத்தாகும். (ஃபத்ஹுல் பாரி)
ஈ விழுந்த பொருட்களுக்கு மருந்து
என்ன?
عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ رَسُولَ اللَّهِ
صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: إِذَا وَقَعَ الذُّبَابُ فِي إِنَاءِ
أَحَدِكُمْ, فَلْيَغْمِسْهُ كُلَّهُ, ثُمَّ لِيَطْرَحْهُ فَإِنَّ فِي أَحَدِ
جَنَاحَيْهِ شِفَاءً, وَفِي الْآخَرِ دَاءً (بجارى- 5782)
அபூஹுரைரா (ரளி) அறிவிக்கிறார்கள்:
'உங்கள் பாத்திரத்தில்
'ஈ' விழுந்துவிட்டால், அதை முழுமையாக அமிழ்த்தி
எடுங்கள். பிறகு அதை எடுத்தெறிந்துவிடுங்கள். ஏனெனில், அதன் இரு இறக்கைகளில்
ஒன்றில் நோயும் மற்றொன்றில் (அந்நோயிக்கு) நிவாரணமும் இருக்கிறது என நபி (ஸல்) அவர்கள்
கூறினார்கள்'. (புகாரி-5782)
ஈயின் ஒரு இறக்கையில் விஷமும், மற்றொன்றில் விஷமுறிவும்
உண்டு. அது உணவுப்பொருட்களில் வந்து அமரும்போது விஷமுள்ள இறக்கையை அமிழ்த்துவதால் விஷமுறிவுள்ள
மற்றோர் இறக்கையையும் நாம் அமிழ்த்துவிட்டால் நிவாரணம் கிடைத்துவிடும். விஷமுள்ள இறக்கை
ஈயின் இடப் பக்கத்திலும்,
விஷமுறிவு வலப்பக்கத்திலும்
இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. (ஃபத்ஹுல் பாரி)
2 comments:
assalamu alaikkum
கோஷ்டம்
அரபியில் qust al hindi உருதுவில் qust e shirin
என்கிறார்களே அதுவா
காரம் ,துவர்ப்பு சுவை கொண்டது
மேலும் தங்களுக்காக தெரிந்தால் விளக்க மாக
கூறவும்
jajakallh kair
ஆதவன் சித்தாஸ்ரம் வைத்திய சாலை,
சென்னை - மதுரை - திருச்சி - பாண்டிச்சேரி - கரூர்
சித்த மருத்துவர் அருண் சின்னையா அவர்களின் ஆதவன் சித்தாஸ்ரம் வைத்திய சாலை,
சர்க்கரை, சொரியாசிஸ், மூட்டு வலி, பக்கவாதம், ஆஸ்துமா, உடல் பலவீனம்,
ஆண்மைக்குறைவு, குழந்தையின்மை, பால்வினைநோய்கள், விறைப்பின்மை
விந்து முந்துதல், உயிரணுக்கள் குறைபாடு, பெண்களுக்கு உண்டாகும் மாதவிடாய்கோளாறுகள்
நீர்க்கட்டி,சினைப்பைக்கட்டி போன்ற பிரச்னைகளுக்கு மருத்துவ ஆலோசனை பெறலாம்...
எங்களது சித்த மருந்துகளை வாங்க http://www.drarunchinniah.in/
தொடர்புக்கு:
ஆதவன் சித்தாஸ்ரம் வைத்திய சாலை,
சென்னை - மதுரை - திருச்சி - பாண்டிச்சேரி - கரூர்
+91.8608400035, +91.8608400041
Aadhavan Siddha Groups +91.8754473544
Post a Comment