20 March 2015

இஸ்லாமிய பார்வையில் குழந்தை திருமண தடைச் சட்டம்!

வேகமாக சுழண்டு கொண்டிருக்கின்ற இந்த உலக வாழ்க்கையின் பல விஷயங்கள் ஆராயப்படுகிறது என்பதும் உண்மைதான். அதேபோன்று திருமண வாழ்க்கையை பற்றியும் ஆராயப்படுகிறது. அதுபோல்
திருமணம்........
நபி ஆதம் (அலை) அவர்கள் காலம் முதல் நபி முஹம்மது (ஸல்) அவர்கள் காலம் வரை திருமணங்கள் நடைபெற்றிருக்கின்றன. அந்த திருமணங்கள் பல வழிமுறைகளில் நடைபெற்று வந்துகொண்டிருந்தன இருதியாக முத்திரையாக வந்த முத்து முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வருகைக்குப்பின் ஒரே முறையில் திருமணங்கள் வரையறுக்கப்பட்டது.
أن عائشة زوج النبي صلى الله عليه وسلم أخبرته http://hadith.al-islam.com/App_Themes/Blue.ar/Images/Tree/MEDIA-H1.GIF أن النكاح في الجاهلية كان على أربعة أنحاء فنكاح منها نكاح الناس اليوم يخطب الرجل إلى الرجل وليته أو ابنته فيصدقها ثم ينكحها ونكاح آخر كان الرجل يقول لامرأته إذا طهرت من طمثها أرسلي إلى فلان فاستبضعي منه ويعتزلها زوجها ولا يمسها أبدا حتى يتبين حملها من ذلك الرجل الذي تستبضع منه فإذا تبين حملها أصابها زوجها إذا أحب وإنما يفعل ذلك رغبة في نجابة  - ص 1971 - الولد فكان هذا النكاح نكاح الاستبضاع ونكاح آخر يجتمع الرهط ما دون العشرة فيدخلون على المرأة كلهم يصيبها فإذا حملت ووضعت ومر عليها ليال بعد أن تضع حملها أرسلت إليهم فلم يستطع رجل منهم أن يمتنع حتى يجتمعوا عندها تقول لهم قد عرفتم الذي كان من أمركم وقد ولدت فهو ابنك يا فلان تسمي من أحبت باسمه فيلحق به ولدها لا يستطيع أن يمتنع به الرجل ونكاح الرابع يجتمع الناس الكثير فيدخلون على المرأة لا تمتنع ممن جاءها وهن البغايا كن ينصبن على أبوابهن رايات تكون علما فمن أرادهن دخل عليهن فإذا حملت إحداهن ووضعت حملها جمعوا لها ودعوا لهم القافة ثم ألحقوا ولدها بالذي يرون فالتاط به ودعي ابنه لا يمتنع من ذلك فلما بعث محمد صلى الله عليه وسلم بالحق هدم نكاح الجاهلية كله إلا نكاح الناس اليوم 
ஆயிஷா (ரழி) அவர்கள் கூறுகிறார்கள்: அறியாமை காலத்தில் திருமணங்கள் நான்கு விதங்களில் இருந்தன.எப்போது நபி (ஸல்)அவர்கள் சன்மார்க்கத்தைக் கொண்டு அனுப்பப்பட்டகளோ அப்போது இன்றைய திருமணத்தை தவிர அறியாமை காலத்திலுள்ள அனைத்து முறைகளையும் நீக்கி விட்டார்கள்.
ஆகவே நபி (ஸல்) அவர்கள் காலத்தில்தான் திருமணம் முடிவான முழுமையான ஒரு முறையாக்கப்பட்டது.
வயது வரம்பு........
24:32   وَأَنكِحُوا الْأَيَامَىٰ مِنكُمْ وَالصَّالِحِينَ مِنْ عِبَادِكُمْ وَإِمَائِكُمْ ۚ إِن يَكُونُوا فُقَرَاءَ يُغْنِهِمُ اللَّهُ مِن فَضْلِهِ ۗ وَاللَّهُ وَاسِعٌ عَلِيمٌ
24:32இன்னும், உங்களில் வாழ்க்கைத் துணை இல்லா (ஆடவர், பெண்டி)ருக்கும், அவ்வாறே (வாழ்க்கைத் துணையில்லா) ஸாலிஹான உங்கள் (ஆண், பெண்) அடிமைகளுக்கும் விவாகம் செய்து வையுங்கள்; அவர்கள் ஏழைகளாக இருந்தால், அல்லாஹ் தன் நல்லருளைக் கொண்டு அவர்களைச் சீமான்களாக்கி வைப்பான்; மேலும் அல்லாஹ் (கொடையில்) விசாலமானவன். (யாவற்றையும்) நன்கறிந்தவன்.
இந்த வசனத்தில் திருமணத்தின் அவசியத்தை கூறியிருப்பதின் மூலம் வயது வந்த உடன் திருமணம் செய்து வைப்பது பொறுப்பாளிகளின் கடமையாகும்.
மதுரை : குழந்தை திருமண தடை சட்டம் அனைத்து மதத்தினருக்கும் பொதுவானது எனக்கூறிய ஐகோர்ட், கீழ் கோர்ட் உத்தரவைஉறுதி செய்தது. பெரம்பலூரை சேர்ந்தவர் அப்துல்காதர். இவரது மனைவி ரகுமான் பீ. இவர்களது மகள் ஷர்மிளாபானு. இவர் 18.5.95ல் பிறந்தார். இவருக்கு கடந்த 17.11.2012ல் திருமண ஏற்பாடு நடந்தது. 18 வயது பூர்த்தியாகாத நிலையில் திருமணம் நடப்பதாக மாவட்ட சமூக நலத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. விரைந்து சென்ற சமூகநலத்துறை அதிகாரிகள் குழந்தை திருமண தடுப்பு சட்டத்திற்கு எதிரானது எனக்கூறி திருமணத்தை தடுத்து நிறுத்தினர். இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் 18 வயது நிறைவடையும் வரை திருமணம் செய்யக்கூடாது என பெரம்பலூர் மாஜிஸ்திரேட் கோர்ட் உத்தரவிட்டது. இந்த உத்தரவை ரத்து செய்யகோரி அப்துல்காதர், ரகுமான் பீ உள்ளிட்டோர் சென்னை ஐ கோர்ட்டில் சீராய்வு மனு தாக்கல் செய்தனர். மனுவில்,‘சமூக நலத்துறை அதிகாரி விளம்பரம் பெறும் நோக்கத்திலேயே நடவடிக்கை எடுத்துள்ளார்.
இஸ்லாமியர்களுக்கு தனி சட்டம் உள்ளது. அதன்படி, இஸ்லாமியப் பெண் ஒருவர் பருவம் அடைந்ததும் திருமணம் செய்து கொள்ளலாம். அரசின் குழந்தை திருமண தடுப்பு சட்டம் பொதுவானது. இது
இஸ்லாமியர்களுக்கு பொருந்தாது. இஸ்லாமிய பெண் 15 வயதை அடைந்து விட்டாலே பருவமடைந்ததாக கருதப்படும். எனவே
மாஜிஸ்திரேட் கோர்ட்உத்தரவை ரத்து செய்யவேண்டும்என
கூறப்பட்டிருந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி சி.டி.செல்வம் பிறப்பித்த உத்தரவு: குழந்தை திருமண தடுப்பு சட்டம், மதச்சார்பற்ற சட்டம்.
இதன்படி 18 வயது நிரம்பாத பெண்ணுக்கு திருமணம்செய்யமுடியாது. இந்த சட்டம் முஸ்லிம் மற்றும் இந்துக்களின் தனி சட்டங்களுக்கு அப்பாற்பட்டது. பல்வேறு சிறப்பு காரணங்களுக்காகத்தான் குழந்தை திருமண தடுப்பு சட்டம் கொண்டு வரப்பட்டது. குழந்தைகளின் உடல் நலன், கல்வி, வளர்ச்சி ஆகியவற்றை கருத்தில் கொண்டே இந்த சட்டம் நிறை வேற்றப்பட்டது.
குழந்தைகளுக்கு திருமணம் செய்து வைப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும். அப்படி செய்வதன் மூலமே இந்த தீயபழக்கத்தை தடுக்கமுடியும். இதன் மூலம்தான் பெண்ணின் கவுரவத்தையும், மதிப்பையும் உயர்த்த முடியும்.
எனவே இதுபோன்ற குழந்தை திருமணங்களுக்கு தடைவிதிக்க நீதிமன்றத்துக்குஅதிகாரம் உண்டு. மத நம்பிக்கை என்பது வேறு, உரிமைகள் என்பது வேறு. குழந்தைகளுக்கு திருமணம்செய்து வைப்பதை உரிமையாக கோர முடியாது. பலதார திருமண முறை இருந்தாலும் பெரும்பாலானோர் அதை விரும்பவில்லை. குழந்தைகள் நலன், முன்னேற்றமா அல்லது குழந்தை திருமணமா என கேள்விகள் வரும்போது குழந்தைகளின் நலனும் முன்னேற்றமும்தான் முக்கியம் என்பதால், கீழ் நீதிமன்றத்தின் உத்தரவில் தலையிட வேண்டியதில்லை. இவ்வாறு சி.டி. செல்வம் தீர்ப்பளித்துள்ளார்.
15 வயது நிறைவடைந்த முஸ்லிம் பெண் திருமணத்திற்கு தகுதி வாய்ந்தவர்: குஜராத் ஐகோர்ட் தீர்ப்பு!Dec 07 / 2014 ஷரிஅத் சட்டப்படி வாழும் உரிமை முஸ்லிம் களுக்கானது என்றும், இஸ்லாமிய பெண்கள் 15 வயது நிறைவடைந்ததாலே திருமணம் செய்துகொள் ளலாம் என்றும் குஜராத் உயர்நீதி மன்றம் தீர்ப்பளித்துள்ளது.
குஜராத் மாநிலம் சூரத்தைச் சேர்ந்த யூசுப் லோகத் என்ற இஸ்லாமிய இளைஞர் கடந்த பிப்ரவரி மாதம் 17 வயது இளம் பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.
அப்பெண்ணின் தந்தை அளித்த புகாரின் பேரில் குழந்தை திருமண தடுப்பு சட்டம் 2006ன் கீழ் லோகத் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கில் இருந்து தன்ன விடுவிக்கக்கோரி யூசுப் லோகத் குஜராத் உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.இந்த மனு நீதிபதி ஜே.பி. பர்டி வாலா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி அளித்த தீர்ப்பில் கூறியிருப்பதாவது-
முஸ்லிம் பர்சனல் லா என்ற இஸ்லாமிய ஷரியத் சட்டப்படி பெண்ணின் திருமண வயது நிர்ணயிக் கப்பட்டுள்ளது. அந்த சட்டப்படி ஒரு பெண் பருவம் அடைந்து விட்டாலோ அல்லது 15 வயது பூர்த்தி அடைந்து விட்டாலோ இதில் எது முதலாவதாக வருகிறதோ அதை ஏற்று திருமணம் செய்து கொள்ளலாம். இஸ்லாமிய ஷரியத் சட்டத்தைப் பின்பற்றுவது முஸ்லிம்களின் விருப்பம் பெற்றோரின் சம்மதம் இல் லாமலும் இப்படிப்பட்ட திருமணங்களை செய்து கொள்ளலாம். இந்த வழக்கை பொருத்த வரையில் பெண் வீட்டாரின் ஒப்புதலும் பெறப்பட்டு விட்டதால் மேற்கொண்டும் இந்த வழக்கை நடத்தும் முகாந்திரம் இல்லை. இவ்வாறு குஜராத் உயர்நீதிமன்ற நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.
மணிச்சுடர் தலையங்கம்
பெண்கள் திருமண வயது குறித்து நாடு தழுவிய அளவிலும், பல்வேறு நீதிமன்றங்களிலும் அவ்வப்போது விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நீதியரசர்கள் எஸ். மணிக்குமார், வி.எஸ் ரவி ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்த வழக்கில் பெண்களின் திருமண வயதை 18 வயதிலிருந்து 21 ஆக அதிகரிக்க வேண்டும் என ஆலோசனை வழங்கினர். இது சர்ச்சையை எழுப் பியது. இதுகுறித்து மணிச்சுடர்நாளிதழ் 10-10-2014-ல் வெளியிட்ட தலையங்கத்தில், இந்தியன் மெஜரிடி ஆக்ட், (இந்திய பருவம் ஏய்தும் வயது சட்டம்) ஆங்கிலேய அரசு காலத்தில் 1875ல் நிறை வேற்றப்பட்டு இன்றளவும் நடைமுறையில் உள்ளது. அத்துடன் சைல்டு மேரேஜ் ரெஸ்ட்ரைஙடு ஆக்ட், (சிரார் திருமண தடை சட்டம்,) நாட்டில் அமுலில் இருக்கிறது. ஆணுக்கு 21 வயதும், பெண்ணுக்கு 18 வயது திருமண வயதாக சட்டம் இயற்றப்பட்டுள்ளது.
இந்த இரு வயது அடிப்படையும் எந்த நிலையில் நிர்ணயம் செய்தனர் திருமண வயது நிர்ணயம் செய்வதற்கு உரியவர் யார்? என கேள்வி எழுப்பியதோடு, இந்த வயது வரையறை இயற்கைக்கு முரணாக உள்ளது. ஏனெ னில், ஆண்கள் 15 வயது 16 வயதிலேயே ஆண்மைக்குரிய தன்மையை அடைந்து விடுகிறார்கள்; பெண்கள் 12 வயதிலிருந்தே பூப்பெய்து விடுகிறார்கள். ஆணோ, பெண்ணோ பருவம் அடைந்து விட்டால் அவர்கள் திருமணத்திற்கு தயாராக உள்ளனர் என்பது இயற்கையான உடற்கூறாகும். வயது வந்த பெண்ணை பாதுகாத்து அன்போடும், அரவணைப்போடும் ஆண் துணையுடன் ஒப்படைக்கும் வரையிலும் இரவு தூக்கம் இல்லாதவர்களாகவே குடும்பத்தினர் இருக்கின் றனர். சமூக வலைதளங்கள் உள்ளிட்ட இணைய தளங்கள் அபரிமிதமானவளர்ச்சி அடைந்து விட்ட இந்தகாலத்தில் பாலியல்விவரங்களை அனைவரும்நன்றாகவே அறிந்துவிடுகிறார்கள்.
திருமண ஆசை வந்த ஆணோ, பெண்ணோ காலம் கடந்த ஆசை நெருப்பாகிஅதுவே பகையாகி, சாதி மோதல் வரை சென்று விடுகின்றன.இதற்கு காரணம் திருமண வயதை நிர்ணயிப்பதுன்,யார் திருமணம்செய்ய விரும்புகிறாரோஅவர் களுக்கு தடைவிதிப்பதுன் என்பதே என்றவிளக்கங்கள் அந்ததலையங்கத்தில் விரிவாக இடம் பெற்றிருந்தன.
தினந்தந்தி தலையங்கம்........
இது தொடர்பாக தினத்தந்தி நாளிதழ் 13.10.2014 தலையங்கத்தில் திருமண வயது பிரச்சனை என்பது முள்ளின் மேல் விழுந்த சீலை போன்றது .இதை பக்குவமாகத்தான் கையாள வேண்டும். இது மிகவும் சிக்கலான பிரச்சனை. திருமண வயது என்பது ஊருக்கு ஊர், சமுதாயத்திற்கு, சமுதாயம் வேறு படுகிறது. இது கலாச்சாரம் சம்மந்தப் பட்ட விஷயம். அவரவர் உணர்வுகள் குடும்ப சூழ்நிலை. குடும்ப பாதுகாப்பு போன்ற காரணங்களால் தங்கள் குழந்தைகளுக்கு இளம் வயதில் திருமணம் செய்ய வேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது. திருமண வயது தொடர் பாக நாட்டில் சட்டம் தெளிவாக இல்லை. ஒரு சட்டம் 18 வயது என்கிறது., இந்திய தண்டனை சட்டம் 375வது பிரிவில் 16 வயதிற்கு குறைந்தவர்களுடன் உடல் உறவு கொள்வது கற்பழிப்பு . அதே சமயம் அவள் மனைவியாகி இருந்த நிலையில் 15, 16 வயதாக இருந்தால் அது கற்பழிப்பு ஆகாது என்று குழப்பப்பட்டு இருக்கிறது. எனவே, எந்த வயதில் வயது வந்த தங்கள் பிள்ளைகளுக்கு திருமணம் செய்யும் உரிமையை பெற்றோர்களிடமே விட்டு விட வேண்டும் எனவும் கூறப்பட்டு இருந்தது. இந்த தலையங் கங்களுக்கு ஆதரவாகவே குஜராத் உயர்நீதி மன்றம் திருமண வயது தொடர்பாக தனது தீர்ப்பை வழங்கியுள்ளது. எனவே, மத்திய அரசு திருமண வயது விஷயத்தில் தெளிவான சட்டத்தை வரையறுத்து திருமணம் நடைபெறும் சமயத்தில் அதிகாரிகள் மேற்கொள்ளும் சட்ட நடவடிக்கையில் இருந்து குடும்பங்களை காப்பாற்ற வழி ஏற்படுத்த வேண்டும் என பொது மக்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
விழிப்புணர்வு என்ற பெயரில்.........
குழந்தை திருமணத் தடை சட்டம் பற்றி மாணவிகளுக்கு விழிப்புணர்வு ராமநாதபுரம்: மாவட்டத்தில் சமூக நலத்துறை சார்பில் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி மாணவிகளுக்கு "குழந்தை திருமணத் தடை சட்டம்" குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை, 18 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. பெண் 18 வயதும், ஆண் 21 வயதும் நிறைவடையாத நிலையில் செய்யப்படும் திருமணம், குழந்தை திருமணமாகும். வறுமை, சமூகத்தில் பெண்களுக்கு ஆண்களினால் வரும் பாலியல் தொல்லையில் இருந்து திருமணமே பாதுகாப்பு என்ற போலியான நம்பிக்கை போன்று பல்வேறு காரணங்களால் பெண் குழந்தைகளுக்கு பெற்றோர் சீக்கிரம் திருமணம் செய்து வைக்கின்றனர். இதனால், அவர்களது கல்வி பாதிக்கப்படுவதோடு, சிறியவயதில் கருவுறுதல் நிலை ஏற்படும். ஆனால், இளம் வயது என்பதால் கர்ப்பபை முழுவளர்ச்சி அடையாததின் காரணமாக அடிக்கடி கருச்சிதைவு மற்றும் கருக்கலைப்பு ஆவதால் உடல் பாதிக்கப் படும்.
சட்டம் என்ன சொல்கிறது?.........
குழந்தை திருமணம் தடுப்பு சட்டம் 2006ன்படி, குழந்தை திருமணம் சட்டப்படி குற்றமாகும். குற்றம் புரிந்தவர்களுக்கு 2 ஆண்டு கடுங்காவல் தண்டனை அல்லது ஒரு லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்படும், அல்லது இரண்டும். 18 வயது பூர்த்தியடையாத பெண் குழந்தையை திருமணம் செய்து கொண்ட வாலிபர் குற்றவாளியாவர். குழந்தை திருமணத்தை நடத்தியவர், தூண்டியவர், நெறிப்படுத்தியவர் அனைவரும் குற்றவாளிகள் ஆவர்.
சமூக பாதுகாப்பு அலுவலர் மணிமேகலை கூறியதாவது: மாவட்டத்தில், குழந்தை திருமணம் குறித்த விழிப்புணர்வு குறைவால், இதுபோன்ற திருமணங்கள் கிராமப்புறங்களில் அதிகமாக நடக்கிறது. உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
"சைல்டு லைன்" மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர், அந்தந்த ஊராட்சி தலை வர்கள் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர்கள் பங்கேற்று வருகின்றனர். இதனால், எதிர்காலத்தில் மாவட்டத்தில் குழந்தைகள் திருமணம் குறைய வாய்ப்பு உள்ளது, என்றார்.
முஸ்லிம் தனியார் சட்ட மறுசீரமைப்பும் நீதி அமைச்சரும் முஸ்லிம் தனியார் சட்ட மறுசீரமைப்பும் நீதி அமைச்சரும் சில கவனயீர்ப்புக்குறிப்புகள்
இஸ்லாம் முஸ்லிம் பெண்ணின் திருமண வயதை வரையறைசெய்யவில்லை. பருவமடைந்த பெண்களுக்கு திருமணம் முடிப் பதைத் தாமதிக்க வேண்டாம் என வந்துள்ள ஹதீஸ்களை நாம் தவறாகவே விளங்கி வைத்துள்ளோம். 12 வயதிலுள்ள ஒரு சிறுமி இன்னொரு குழந்தையைச் சுமக்கும் உடற் பக்குவம் பெற்றிருப்பாளா என்பதை நாம் சிந்திக்கத் தவறுகின்றோம். எனவே, தனியார் சட்ட மறுசீரமைப்பில் இந்தப் பரிந்துரையை யும் கவனத்தில் எடுப்பது இன்றியமையாதது. இனப்பெருக்கத் தொகுதியின் வளர்ச்சி மட்டுமே திருமணத்திற்கான தகுதி எனக்  கொள்ள முடியாது. ஏனெனில், மனித ஆளுமையின் முதிர்ச்சி வேறு பல பக்கங்களையும்கொண்டுள்ளது.
சமூக அனுபவங்க ளால்தான் ஆளுமை முழு வளர்ச்சி அடைகின்றது. பருவ வயதை அடைதலும் ஒரு தகுதியே ஒழிய அது மட்டுமே முழுத் தகுதி எனக் கொள்ள முடியாது. ஒருவரது கலாசார, அறிவு, குடும்பப் பின்னணி களைப் பொறுத்து தகுந்த வயது தீர்மானிக்கப்பட வேண்டும்.இது குறித்த இஸ்லாமியக் கண்ணோட்டத்தினையும் உளவியல் கண்ணோட்டத்தையும் கட்டுரையின் விரிவஞ்சி இங்கு தவிர்த்துள்ளேன்.


2 comments:

கடுமையான வேலைகளிலும் ஒரு அற்புதமான விளக்கத்தை தந்த ரஷாதி ஹழ்ரத் அவர்களுக்கு மிக மிக நன்றி. ரப்புல் ஆலமீன் தங்களின் எல்லா தேவைகளையும் நிறைவேற்றி தருவதோடு தங்களின் சிரமங்களை இல்லாமல் ஆக்குவானாக.இக்கட்டான சூழலிலும் நீங்கள் எங்களுக்கு உதவி செய்தது போல் ரப்புல் ஆலமீன் தங்களுக்கு உதவி செய்வானாக

இக்கட்டான சூழலிலும் நீங்கள் எங்களுக்கு உதவி செய்தது போல் ரப்புல் ஆலமீன் தங்களுக்கு உதவி செய்வானாக

Post a Comment