கேள்வி :
குர்ஆனுடைய வசனங்களை கொண்டு ஓதி பார்ப்பதும் அதனை எழுதிக்கொடுப்பதும் கூடுமா ?
حامدا و مصليا
பதில் :
குர்ஆனுடைய வசனங்களை கொண்டு ஓதி பார்ப்பதும் அதனை எழுதிக்கொடுப்பதும் கூடும்.
ஆனால் கழிவறைக்குள் செல்லும்போது கழற்றி விடவேண்டும். என்றாலும் பின்வரும் மூன்று
நிபந்தனைகளுக்கு உட்பட்டு இருக்க வேண்டும் :
1. முழுக்க
முழுக்க குர்ஆனுடைய வசனங்களாகவோ அல்லது அல்லாஹ்வுடைய திருநாமங்களாகவோ இருக்க
வேண்டும்.
2. அரபி மொழியில்
இருக்க வேண்டும். இன்னும் அதனுடைய பொருள் அணைத்து வழிகளிலும் விளங்கக்கூடியதாக
இருக்க வேண்டும். இறைநிராகரிப்பான வார்த்தைகள் இருக்க கூடாது.
3. அதனை (ஓதி
பார்ப்பதும், எழுதிக்கொடுப்பதும்) கொண்டு எந்த பிரதிபளிப்பும் இல்லையென்றும்,
அல்லாஹ்வை கொண்டுதான் அந்த பிரதிபளிப்பு ஏற்படுகிறது என்ற கொள்கை இருக்க வேண்டும்.
ஆதாரங்கள் :
1. "و لا بأس بتعليق التعويذ و لكن ينزعه عند الخلاء" :-
(الفتاوي الهندية :- ج : 5؛ ص : 356؛)
2. "و أما ما كان من القرآن أو شيئ من الدعوات و لا بأس به" :-
(رد المحتار :- ج: 6؛ ص:336؛)
3. " وقد أجمع العلماء على جواز الرقى عند اجتماع ثلاثة شروط : أن يكون بكلام الله - تعالى - أو بأسمائه وصفاته ، وباللسان العربي أو بما يعرف معناه من غيره ، وأن يعتقد أن الرقية لا تؤثر بذاتها بل بذات الله تعالى" :-
(فتح الباري :- ج : 10؛ ص : 206؛)
و الله أعلم بالصواب.
0 comments:
Post a Comment