கல்விக்கு அடிப்படையாக விளங்குவது
எழுத்தறிவு. இது ஒவ்வொருவரின் அடிப்படை உரிமை. எழுத்தறிவு பெற்றால்தான், ஜனநாயகத்தில் உரிமைகளை
நிலை நாட்ட முடியும். சமூக மற்றும் மனித முன்னேற்றத்துக்கு இது அவசியம். எனவே எழுத்தறிவு
பெறுவது ஒருவரின் கடமை;
அவசியம்; கட்டாயம். உலகில் அனைவரும் எழுத்தறிவு பெற வேண்டும் என்ற நோக்கத்துக்காக உலக எழுத்தறிவு தினம் கடைபிடிக்கப்படுகிறது. ஏதாவது ஒரு மொழியில், புரிதலுடன் சரியாக பேசவும், எழுதவும் தெரிந்தவரே எழுத்தறிவு பெற்றவர். மற்றபடி, எழுத்தறிவு பெற்றவராக கருத, குறிப்பிட்ட வகுப்பு வரை படித்திருக்க வேண்டும் என எந்த அளவும் தீர்மானிக்கப்படவில்லை.
அவசியம்; கட்டாயம். உலகில் அனைவரும் எழுத்தறிவு பெற வேண்டும் என்ற நோக்கத்துக்காக உலக எழுத்தறிவு தினம் கடைபிடிக்கப்படுகிறது. ஏதாவது ஒரு மொழியில், புரிதலுடன் சரியாக பேசவும், எழுதவும் தெரிந்தவரே எழுத்தறிவு பெற்றவர். மற்றபடி, எழுத்தறிவு பெற்றவராக கருத, குறிப்பிட்ட வகுப்பு வரை படித்திருக்க வேண்டும் என எந்த அளவும் தீர்மானிக்கப்படவில்லை.
எழுத்தறிவு, அடிப்படைக் கல்வியின்
இருதயமாக உள்ளது. எழுத்தறிவு பெறுவதன் மூலம் வறுமை, வேலைவாய்ப்பின்மை, பாலின வித்தியாசம்
உள்ளிட்ட முக்கிய பிரச்னைகளை தடுக்க முடியும். எழுத்தறிவு மூலம், அமைதி மற்றும் ஜனநாயகத்தை
நிலை நிறுத்த முடியும். இது இன, மொழி, வயது, சமூக பாகுபாடின்றி அனைவருக்கும் கிடைக்க வேண்டும். எழுத்தறிவு
பெற்ற பெற்றோர், குழந்தைகளை பள்ளிக்கு
அனுப்ப தயங்கமாட்டர். வயது வந்தோரில் 10 கோடி பேர் எழுத்தறிவு அற்றவர்களாக உள்ளனர். உலகில் எழுத்தறிவற்றவர்களில்
மூன்றில் 2 பேர் பெண்கள். எழுத்தறிவற்றவர்களில்
98 சதவீதம் பேர் வளரும்
நாடுகளில் உள்ளனர்.
ஆப்ரிகா கண்டத்தில், எழுத்தறிவு சதவீதம்
60-க்கும் குறைவு. வளரும்
நாடுகளில் 6 வயது முதல் 11 வயது வரை உள்ள குழந்தைகளில்
15 சதவீதம் பேர் பள்ளி
செல்லவில்லை என யுனெஸ்கோ ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 2011 சென்செஸ் கணக்கின் படி, இந்தியாவின் எழுத்தறிவு, 74 சதவீதமாக உள்ளது.
இதில் ஆண்கள் 82.14 சதவீதம், பெண்கள் 65.46 சதவீதம். இது 2001-ம் ஆண்டு கணக்கெடுப்பை
விட 9.2 சதவீதம் அதிகம்.
தமிழக எழுத்தறிவு சதவீதம்,
80.4 சதவீதமாக உள்ளது. இது 2001-ம் ஆண்டு கணக்கெடுப்பை விட 6.9 சதவீதம் அதிகம். எழுத்தறிவில் கேரளா முதலிடத்திலும், பீகார் கடைசி இடத்திலும்
உள்ளது. நாட்டில் எழுத்தறிவு சதவீதம் ஓரளவுக்கு அதிகரித்திருப்பது வரவேற்கத்தக்க விஷயம்.
இஸ்லாத்தில் எழுத்தறிவின் முக்கியம்
قال الله تعالى:
ن ۚ وَالْقَلَمِ وَمَا يَسْطُرُونَ ﴿68:1﴾ وفى آية اخرى: الَّذِي عَلَّمَ بِالْقَلَمِ
﴿96:4﴾
அல்லாஹ் கூறுகிறான்: நூன்; எழுதுகோல் மீதும் இன்னும் (அதன் மூலம்) அவர்கள் எழுதுவதின் மீதும்
சத்தியமாக! (அல்குர்ஆன் 68:1) மற்றொரு வசனத்தில், (அல்லாஹ்வாகிய) அவனே
எழுது கோலைக்கொண்டு கற்றுக் கொடுத்தான். (அல்குர்ஆன் 96:4)
நிற்க, அரபி, சுர்யானி இதர எல்லா எழுத்துக்களையும்
ஏற்படுத்திய முதல் மனிதர் ஹளரத் ஆதம் (அலை) அவர்களாவார்கள்.
தமது மரணத்துக்கு முன்னூறு ஆண்டுகளுக்கு முன்னர் களி மண்ணில் அவற்றை எழுதி பின்னர்
அவற்றைச் சுருட்டி பத்திரப்படுத்தினார். பின்னர்
இத்ரீஸ் (அலை) அவர்கள் அந்த எழுத்துக்களை வெளிப்படுத்தினார்கள். மேலும் 'கத்துர்ரமல்' என்னும்
எழுத்து உருவாகத்தை முதன் முதலாக ஏற்படுத்தியவர் இத்ரீஸ் (அலை) ஆவார். பாரசீக அட்சரத்தை
முதன் முதலாக எழுதியவர் மூன்றாவது பாரசீக மன்னான 'தஹ்மூறது' என்பவராவர். கடிதங்களை ஏற்படுத்திய முதலாமவர் ஹளரத்
யூஸுஃப் (அலை) அவர்கள் என்று கஃபுல் அஹ்பார் (ரஹ்) அவர்கள் கூறியுள்ளார்கள். (தஃப்ஸீருல்
ஹமீது ஃபீ தஃப்ஸீரில் குர்ஆனில் மஜீது)
எழுத்தறிவுக்கு
வித்திட்ட அல்லாஹ்
عن أبي هريرة قال: سمعت رسول الله صلي الله عليه وسلم يقول: أول ما خلق الله القلم ثم خلق النون وهي الدواة وذلك قول تعالى: ن وَالْقَلَمِ ثم قال له اكتب قال: وما أكتب قال: ما كان وما هو كائن إلى يوم القيامة من عمل أو أجل أو رزق أو أثر فجرى القلم بما هو كائن إلى يوم القيامة- قال- ثم ختم فم القلم فلم ينطق ولا ينطق إلى يوم القيامة. (تفسير القرطبى)
அபூஹுரைரா (ரளி) அறிவிக்கிறார்கள்: முதலில் பேனாவை அல்லாஹ் படைத்தான். பிறகு மையைப்
படைத்தான். அதுதான் அல்லாஹ் தனது திருமறையில் 'நூன், வல்கலம்' என்பதாகும்.
பிறகு அந்த பேனாவை எழுது! என்றான். எதை எழுத வேண்டும்? என்று பேனா கேட்டது. செயல், தவணை, ரிஜ்க் மற்றும் ஆயுள் ஆகியவற்றின்
அனைத்தையும் இறுதிநாள் வரை என்ன நடக்கிறதோ, நடக்கப்போகிறதோ அனைத்தையும் எழுது என்றான். இறுதிநாள்
வரை நடக்க இருக்கின்ற அனைத்தையும் பேனா எழுதி முடித்தது. பிறகு அந்த பேனாவின் வாயில்
அல்லாஹ் முத்திரையிட்டான். இறுதிநாள் வரை (வேறு எதுவும்) பேசப்படாது என நபி (ஸல்) அவர்கள்
கூற நான் கேட்டேன் எனக்கூறினார்கள். (தஃப்ஸீருல் குர்துபீ)
அரிவாற்றலை அதிகரிக்கும்
பேனா
حدثنا قتيبة حدثنا عبيد الله بن الحرث عن عنبسة عن محمد بن زاذان عن أم سعد عن زيد بن ثابت قال : دخلت على رسول الله صلى الله عليه و سلم وبين يديه كاتب فسمعته يقول ضع القلم على أذنك فإنه أذكر للمملي
(ترمذى-2714)
ஜைது பின் தாபித் (ரளி) அறிவிக்கிறார்கள்:
நான் நபி (ஸல்) அவர்களிடம் சென்றேன். அவர்களிடம் ஒரு எழுத்தர் இருந்தார். அவர்களிடம்
நபியவர்கள்: பேனாவை உனது காதில் வைத்துக்கொள்! ஏனெனில், அது
எழுத்தருக்கு (மறந்தவைகளை) நினைவூட்டும் எனக்கூற நான் கேட்டேன் என்கிறார்கள். (திர்மிதி-2714)
தச்சர் வேலை செய்யும் ஆசாரிகள்
தங்களது பேனா, அல்லது பென்சிலை வேலையின்
இடையில் மார்க் பண்ணவேண்டியதை பண்ணிவிட்டு அதை தனது காதில் வைத்துக்கொள்வதை நாம் பார்த்திருக்கிறோம்.
அவர்கள் சாமான்களுக்கு இடையில் பேனா அல்லது பென்சிலை வைத்தால் காணாமல் போய்விடும் என்று
செய்கிறார்கள் என்றுதான் நினைத்தோம். ஆனால் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் நபிமொழியை படித்த
பிறகுதான். வியந்து போனோம். காதில் போனாவை வைப்பதற்கும் எவ்வளவு அர்த்தம் இருக்கிறது
என்று. இந்த அறிவை அண்ணலாரின் பொன்மொழியில் இருந்துதான் இவர்கள் பெற்றிருக்க வேண்டும்.
எப்படியானாலும். பேனாவை காதில் வைப்பதால் நினைவாற்றல் அதிகரிக்கிறது என்பது இந்த 21-ம் நூற்றாண்டின் அற்புதமான
அறிவியல் உலகிறக்கு ஒரு சவால்தான்.
படைத்தவன் பலகையில்
எழுதிய அறிவுரை
وَكَتَبْنَا لَهُ فِي الْأَلْوَاحِ مِن
كُلِّ شَيْءٍ مَّوْعِظَةً وَتَفْصِيلًا لِّكُلِّ شَيْءٍ فَخُذْهَا بِقُوَّةٍ وَأْمُرْ
قَوْمَكَ يَأْخُذُوا بِأَحْسَنِهَا ۚ سَأُرِيكُمْ دَارَ الْفَاسِقِينَ ﴿7:145﴾
7:145. மேலும் நாம் அவருக்கு பலகைகளில், ஒவ்வொரு விஷயம் பற்றிய
நல்லுபதேசங்களையும், (கட்டளைகளையும்,) ஒவ்வொன்றைப் பற்றிய
விளக்கங்களையும் எழுதி: “அவற்றை உறுதியாகப்
பற்றிப் பிடிப்பீராக! இன்னும் உம்முடைய சமூகத்தாரை அவற்றில் அழகானவற்றை எடுத்துக் கொள்ளுமாறு
கட்டளையிடுவீராக! அதிசீக்கிரம் பாவிகளின் தங்குமிடத்தை நான் உங்களுக்கு காட்டுவேன்” (என்று கூறினான்).
மூஸா (அலை) அவர்களுக்கு ஒவ்வொரு
விஷயம் குறித்தும் பலகைளில் தான் எழுதியதாகவும். அது அறிவுரையாகவும் ஒவ்வொன்றுக்கும்
விளக்கமாகவும் அமைந்ததாகவும் அல்லாஹ் குறிப்பிடுகிறான். ஏப்படியானாலும். எழுத்தறிவு
எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதற்கு இறைவனில் இந்த வசனம் ஒரு முக்கிய சான்றாக
விளங்கிறது என்றே சொல்லலாம்.
கடன் ஒப்பந்த விதிமுறைகளை
எழுதிவைத்து கொள்ளல்
يَا أَيُّهَا الَّذِينَ
آمَ نُوا إِذَا تَدَايَنتُم بِدَيْنٍ إِلَىٰ
أَجَلٍ مُّسَمًّى فَاكْتُبُوهُ ۚ وَلْيَكْتُب بَّيْنَكُمْ كَاتِبٌ بِالْعَدْلِ ۚ وَلَا
يَأْبَ كَاتِبٌ أَن يَكْتُبَ كَمَا عَلَّمَهُ اللَّهُ ۚ فَلْيَكْتُبْ وَلْيُمْلِلِ
الَّذِي عَلَيْهِ الْحَقُّ وَلْيَتَّقِ اللَّهَ رَبَّهُ وَلَا يَبْخَسْ مِنْهُ شَيْئًا
ۚ فَإِن كَانَ الَّذِي عَلَيْهِ الْحَقُّ سَفِيهًا أَوْ ضَعِيفًا أَوْ لَا يَسْتَطِيعُ
أَن يُمِلَّ هُوَ فَلْيُمْلِلْ وَلِيُّهُ بِالْعَدْلِ ۚ وَاسْتَشْهِدُوا شَهِيدَيْنِ
مِن رِّجَالِكُمْ ۖ فَإِن لَّمْ يَكُونَا رَجُلَيْنِ فَرَجُلٌ وَامْرَأَتَانِ مِمَّن
تَرْضَوْنَ مِنَ الشُّهَدَاءِ أَن تَضِلَّ إِحْدَاهُمَا فَتُذَكِّرَ إِحْدَاهُمَا الْأُخْرَىٰ
ۚ وَلَا يَأْبَ الشُّهَدَاءُ إِذَا مَا دُعُوا ۚ وَلَا تَسْأَمُوا أَن تَكْتُبُوهُ
صَغِيرًا أَوْ كَبِيرًا إِلَىٰ أَجَلِهِ ۚ ذَٰلِكُمْ أَقْسَطُ عِندَ اللَّهِ وَأَقْوَمُ
لِلشَّهَادَةِ وَأَدْنَىٰ أَلَّا تَرْتَابُوا ۖ إِلَّا أَن تَكُونَ تِجَارَةً حَاضِرَةً
تُدِيرُونَهَا بَيْنَكُمْ فَلَيْسَ عَلَيْكُمْ جُنَاحٌ أَلَّا تَكْتُبُوهَا ۗ وَأَشْهِدُوا
إِذَا تَبَايَعْتُمْ ۚ وَلَا يُضَارَّ كَاتِبٌ وَلَا شَهِيدٌ ۚ وَإِن تَفْعَلُوا فَإِنَّهُ
فُسُوقٌ بِكُمْ ۗ وَاتَّقُوا اللَّهَ ۖ وَيُعَلِّمُكُمُ اللَّهُ ۗ وَاللَّهُ بِكُلِّ
شَيْءٍ عَلِيمٌ ﴿2:282﴾
2:282. ஈமான் கொண்டோரே! ஒரு குறித்த தவனையின் மீது உங்களுக்குள்
கடன் கொடுக்கல் வாங்கல் செய்து கொண்டால், அதை எழுதி வைத்துக் கொள்ளுங்கள்; எழுதுபவன் உங்களிடையே
நீதியுடன் எழுதட்டும்; எழுதுபவன் எழுதுவதற்கு
மறுக்கக்கூடாது; (நீதமாக எழுதுமாறு)
அல்லாஹ் அவனுக்குக் கற்றுக் கொடுத்தபடி அவன் எழுதட்டும். இன்னும் யார் மீது கடன் (திருப்பிக்
கொடுக்க வேண்டிய) பொறுப்பு இருக்கிறதோ அவனே (பத்திரத்தின்) வாசகத்தைச் சொல்லட்டும்; அவன் தன் ரப்பான
(அல்லாஹ்வை) அஞ்சிக் கொள்ளட்டும்; மேலும், அ(வன் வாங்கிய)தில் எதையும் குறைத்து விடக் கூடாது; இன்னும், யார் மீது கடன் (திருப்பிக்
கொடுக்க வேண்டிய) பொறுப்பு இருக்கிறதோ அவன் அறிவு குறைந்தவனாகவோ, அல்லது (பால்யம், முதுமை போன்ற காரணங்களால்)
பலஹீனனாகவோ, அல்லது வாசகத்தைக்
கூற இயலாதவனாகவோ இருப்பின் அவனுடைய வலீ(நிர்வாகி) நீதமாக வாசகங்களைச் சொல்லட்டும்; தவிர, (நீங்கள் சாட்சியாக
ஏற்கக் கூடிய) உங்கள் ஆண்களில் இருவரை சாட்சியாக்கிக் கொள்ளுங்கள்; ஆண்கள் இருவர் கிடைக்காவிட்டால், சாட்சியங்களில் நீங்கள்
பொருந்தக்கூடியவர்களிலிருந்து ஆடவர் ஒருவரையும், பெண்கள் இருவரையும் சாட்சிகளாக எடுத்துக் கொள்ளுங்கள்; (பெண்கள் இருவர்) ஏனென்றால்
அவ்விருவரில் ஒருத்தி தவறினால், இருவரில் மற்றவள் நினைவூட்டும் பொருட்டேயாகும்; அன்றியும், (சாட்சியம் கூற) சாட்சிகள்
அழைக்கப்பட்டால் அவர்கள் மறுக்கலாகாது; தவிர, (கொடுக்கல் வாங்கல்) சிறிதோ, பெரிதோ அதை, அதன் கால வரையறையுடன் எழுதுவதில் அலட்சியமாக இராதீர்கள்; இதுவே அல்லாஹ்வின்
முன்னிலையில் மிகவும் நீதமானதாகவும், சாட்சியத்திற்கு உறுதி உண்டாக்குவதாகவும், இன்னும் இது உங்களுக்கு
சந்தேகங்கள் ஏற்படாமல் இருக்க சிறந்த வழியாகவும் இருக்கும்; எனினும் உங்களிடையே
சுற்றி வரும் ரொக்க வியாபாரமாக இருப்பின், அதை எழுதிக் கொள்ளாவிட்டலும் உங்கள் மீது குற்றமில்லை; ஆனால் (அவ்வாறு) நீங்கள்
வியாபாரம் செய்யும்போதும் சாட்சிகளை வைத்துக் கொள்ளுங்கள் - அன்றியும் எழுதுபவனையோ, சாட்சியையோ (உங்களுக்கு
சாதகமாக இருப்பதற்காகவோ, வேறு காரணத்திற்காகவோ)
துன்புறுத்தப்படக் கூடாது;
நீங்கள் அப்படிச்
செய்வீர்களாயின் அது உங்கள் மீது நிச்சயமாகப் பாவமாகும்; அல்லாஹ்வுக்கு அஞ்சிக்
கொள்ளுங்கள்; ஏனெனில் அல்லாஹ் தான்
உங்களுக்கு (நேரிய இவ்விதிமுறைகளைக்) கற்றுக் கொடுக்கின்றான். தவிர,அல்லாஹ்வே எல்லாப்
பொருட்களையும் பற்றி நன்கறிபவன். (அல்குரான் 2:182)
இந்த வசனத்தில் தவணை முறையில்
கொடுக்கல் வாங்கல் செய்யும்போது அதை எழுத்து வடிவில் பதிவு செய்துகொள்ள வேண்டும் என்பது
எழுத்தறிவின் முக்கியத்துவத்தை உலகிற்கு உணர்த்துகிறது. எந்த பிரச்சணைக்கும் (writing Documents) எழுத்து ஆவணங்கள்
மிக முக்கியமானது என்பது உலகம் அறிந்த உண்மை.
கொடுக்கல் வாங்கலை
எழுதிவைத்து கொள்ளல்
كِتَابَةُ
الْمُعَامَلاتِ الَّتِي تَجْرِي بَيْنَ النَّاسِ وَسِيلَةٌ لِتَوْثِيقِهَا، أَمَرَ
اللَّهُ سُبْحَانَهُ وَتَعَالَى بِهَا فِي قَوْلِهِ : {إِذَا تَدَايَنْتُمْ بِدَيْنٍ
إِلَى أَجَلٍ مُسَمًّى فَاكْتُبُوهُ} وَقَدْ وَثَّقَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ
وَسَلَّمَ بِالْكِتَابَةِ فِي مُعَامَلاتِهِ ، فَبَاعَ وَكَتَبَ ، وَمِنْ ذَلِكَ الْوَثِيقَةُ
التَّالِيَةُ :
هَذَا مَا اشْتَرَى الْعَدَاءُ بْنُ خَالِدٍ
بْنِ هَوْذَةَ مِنْ مُحَمَّدٍ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ اشْتَرَى
مِنْهُ عَبْدًا أَوْ أَمَةً ، لا دَاءَ ، وَلا غَائِلَةَ ، وَلا خِبْثَةَ ، بَيْعُ
الْمُسْلِمِ مِنَ الْمُسْلِمِ.
كَذَلِكَ أَمَرَ
النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِالْكِتَابِ فِيمَا قَلَّدَ فِيهِ عُمَّالَهُ
مِنَ الأَمَانَةِ ، وَأَمَرَ بِالْكِتَابِ فِي الصُّلْحِ فِيمَا بَيْنَهُ وَبَيْنَ
الْمُشْرِكِينَ. وَالنَّاسُ تَعَامَلُوهُ مِنْ لَدُنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ
عَلَيْهِ وَسَلَّمَ إِلَى يَوْمِنَا هَذَا. (الموسوعة الفقهة)
ஆயிஷா (ரலி) கூறினார். ”நபி (ஸல்) அவர்களுக்குத்
துவக்கத்தில் இறைச்செய்தி தூக்கத்தில் தோன்றும் நல்ல கனவுகளிலேயே வந்தது. அப்போது அவர்கள்
எந்தக் கனவு கண்டாலும் அது அதிகாலைப் பொழுதின் விடியலைப் போன்று தெளிவாக இருக்கும்.
பின்னர் தனிமையிலிருப்பது அவர்களின் விருப்பமாயிற்று. ஹிரா குகையில் அவர்கள் தனித்திருந்தார்கள்.
தங்களின் குடும்பத்தாரிடம் திரும்பி வருவதற்கு முன் பல இரவுகள் (அங்கே தங்கியிருந்து)
வணக்க வழிபாடுகளில் ஈடுபட்டிருந்தார்கள். அந்த நாள்களுக்கான உணவைத் தம்மோடு கொண்டு
செல்வார்கள். (அது முடிந்ததும்) மீண்டும் (தங்களின் துணைவியார்) கதீஜா (ரலி) அவர்களிடம்
திரும்புவார்கள். அதே போன்று பல நாள்களுக்குரிய உணவைக் கொண்டு செல்வார்கள். இந்த நிலை
ஹிரா குகையில் அவர்களுக்கு சத்தியம் வரும் வரை நீடித்தது. (ஒருநாள்) ஒரு வானவர் அவர்களிடம்
வந்து, “ஓதும்“ என்றார். அதற்கவர்கள்
“நான் ஓதத் தெரிந்தவனில்லையே!“ என்றார்கள். இறைத்தூதர்(ஸல்)
அவர்கள் இந்நிலையைப் பின் வருமாறு விளக்கினார்கள். ”அவர் என்னைப் பிடித்து நான் சிரமப்படும் அளவிற்கு
இறுகக்கட்டியணைத்தார். பிறகு என்னைவிட்டுவிட்டு மீண்டும் “ஓதும்“ என்றார். (அப்போதும்)
நான் ஓதத் தெரிந்தவனில்லையே! என்றேன். இரண்டாவது முறையும் அவர் என்னைப் பிடித்து நான்
சிரமப்படும் அளவிற்கு இறுகக்கட்டி அணைத்து என்னைவிட்டுவிட்டு மீண்டும் “ஓதும்“ என்றார். (அப்போதும்)
நான் ஓதத் தெரிந்தவனில்லையே! என்றேன். அவர் என்னைப் பிடித்து மூன்றாவது முறையும் கட்டி
அணைத்துவிட்டுவிட்டு, “படைத்தவனாகிய உம்முடைய
இரட்சகனின் திருப்பெயரால் ஓதும்! அவனே மனிதனை “அலக்“கில் (கருவளர்ச்சியின் ஆரம்பநிலை) இருந்து படைத்தான். ஓதும்!
உம்முடைய இரட்சகன் கண்ணியம் மிக்கவன்“என்றார்.” மேலும், ஆயிஷா(ரலி) கூறினார். பிறகு இதயம் படபடத்தவர்களாக அந்த வசனங்களுடன்
(தம் துணைவியார்) குவைலிதின் மகள் கதீஜா (ரலி) விடம் நடந்த செய்தியைத் தெரிவித்துவிட்டுத்
தமக்கு ஏதும் நேர்ந்து விடுமோ என தாம் உறுதியாக அஞ்சுவதாகவும் கூறினார்கள். அப்போது
கதீஜா (ரலி) அவர்கள் “அவ்வாறு கூறாதீர்கள்; அல்லாஹ்வின் மீது
ஆணையாக உங்களை ஒருபோதும் அல்லாஹ் இழிவுபடுத்தமாட்டான்; (ஏனெனில்) தாங்கள்
உறவினர்களுடன் இணங்கி இருக்கிறீர்கள்; (சிரமப்படுவோரின்) சுமைகளைத் தாங்கள் சுமந்து கொள்கிறீர்கள்; வறியவர்களுக்காக உழைக்கிறீர்கள்; விருந்தினர்களை உபசரிக்கிறீர்கள்; உண்மையான சோதனைகளில்
(ஆட்பட்டோருக்கு) உதவி புரிகிறீர்கள்“ என்றார்கள். பின்னர் நபி(ஸல்) அவர்களைத் தம் தந்தையின் உடன்
பிறந்தவரான நவ்ஃபல் என்பவரின் மகன் “வராக“விடம் அழைத்துச் சென்றார்கள். நவ்ஃபல், அசது என்பவரின் மகனும்
அசது, அப்துல் உஸ்ஸாவின்
மகனுமாவார். “வராக“அறியாமைக் காலத்திலேயே
கிறித்தவ சமயத்தைத் தழுவியவராக இருந்தார். மேலும் அவர் ஹீப்ரு மொழியில் எழுதத் தெரிந்தவராகவும்
இஞ்ஜீல் வேதத்தை, ஹீப்ரு மொழியில் அவர்
எழுத வேண்டும் என்று அல்லாஹ் நாடிய அளவுக்கு எழுதுகிறவராகவும் கண் பார்வையற்ற பெரும்
வயோதிகராகவும் இருந்தார். அவரிடம் கதீஜா (ரலி), “என் தந்தையின் சகோதரன்
மகனே! உம் சகோதரன் மகன் கூறுவதைக் கேளுங்கள்“ என்றார்கள். அப்போது வரகா நபி (ஸல்) அவர்களிடம், “என் சகோதரர் மகனே!
நீர் எதைக் கண்டீர்?“ எனக் கேட்டார். நபி
(ஸல்) அவர்கள் தாம் பார்த்த செய்திகளை அவரிடம் கூறினார்கள். (அதைக் கேட்டதும்) வரகா, (நபி (ஸல்) அவர்களிடம்)
“இவர்தாம், மூஸாவிடம் இறைவன்
அனுப்பிய “நாமூஸ்“ (ஜிப்ரீல்) ஆவார்“ என்று கூறிவிட்டு, “உம்முடைய சமூகத்தார்
உம்மை உம்முடைய நாட்டிலிருந்து வெளியேற்றும் சமயத்தில் நான் உயிருடன் திடகாத்திரமான
இளைஞனாக இருந்திருக்க வேண்டுமே!“ என்றும் அங்கலாய்த்தார். அப்போது நபி (ஸல்) அவர்கள், “மக்கள் என்னை வெளியேற்றவா
போகிறார்கள்?“ என்று கேட்டார்கள்.
அதற்கவர்கள் “ஆம்! நீர் கொண்டு
வந்திருப்பது போன்ற சத்தியத்தைக் கொண்டு வந்த எந்த மனிதரும் (மக்களால்) பகைத்துக் கொள்ளப்படாமல்
இருந்ததில்லை. (நீர் வெளியேற்றப்படும்) அந்நாளை நான் அடைந்தால் உமக்குப் பலமான உதவுவேன்“ என்று கூறினார். அதன்பின்னர்
வரகா நீண்ட நாள் வாழாமல் இறந்துவிட்டார். இந்த முதற் செய்தியுடன் வஹீ (இறைச்செய்தி)
சிறிது காலம் நின்று போயிற்று. (ஸஹீஹ் புகாரி)
இரண்டு வகை
மனிதர்கள்
ஹுதைஃபா பின்
அல்யமான் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
தஜ்ஜாலுடன் என்ன இருக்கும் என்பதை அவனைவிட நான் நன்கறிவேன். ஓடுகின்ற இரு நதிகள் அவனிடம் இருக்கும். அவற்றில் ஒன்று வெளிப்பார்வைக்கு வெண்மையான நீராகக் காட்சி தரும். மற்றொன்று வெளிப்பார்வைக்கு கொழுந்துவிட்டெரியும் நெருப்பாகக் காட்சி தரும்.
அந்த இடத்தை அடைபவர் நெருப்பாகக் காட்சியளிக்கும் நதிக்குச் சென்று, கண்ணை மூடிக் கொண்டு, தலையைத் தாழ்த்தி அதிலிருந்து சிறிது அருந்தட்டும். ஏனெனில், அது குளிர்ந்த நீராகும். தஜ்ஜால் ஒரு கண் தடவப்பட்டவன் ஆவான். அவ(னது கண்ணி)ன் மீது கெட்டியான தோல் ஒன்று (மூடி) இருக்கும். அவனுடைய இரு கண்களுக்கிடையில் "காஃபிர்" (இறை மறுப்பாளன்) என்று எழுதப்பட்டிருக்கும். எழுத்தறிவுள்ள, எழுத்தறிவற்ற ஒவ்வோர் இறை நம்பிக்கையாளரும் அதை வாசிப்பார் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்-5624)
தஜ்ஜாலுடன் என்ன இருக்கும் என்பதை அவனைவிட நான் நன்கறிவேன். ஓடுகின்ற இரு நதிகள் அவனிடம் இருக்கும். அவற்றில் ஒன்று வெளிப்பார்வைக்கு வெண்மையான நீராகக் காட்சி தரும். மற்றொன்று வெளிப்பார்வைக்கு கொழுந்துவிட்டெரியும் நெருப்பாகக் காட்சி தரும்.
அந்த இடத்தை அடைபவர் நெருப்பாகக் காட்சியளிக்கும் நதிக்குச் சென்று, கண்ணை மூடிக் கொண்டு, தலையைத் தாழ்த்தி அதிலிருந்து சிறிது அருந்தட்டும். ஏனெனில், அது குளிர்ந்த நீராகும். தஜ்ஜால் ஒரு கண் தடவப்பட்டவன் ஆவான். அவ(னது கண்ணி)ன் மீது கெட்டியான தோல் ஒன்று (மூடி) இருக்கும். அவனுடைய இரு கண்களுக்கிடையில் "காஃபிர்" (இறை மறுப்பாளன்) என்று எழுதப்பட்டிருக்கும். எழுத்தறிவுள்ள, எழுத்தறிவற்ற ஒவ்வோர் இறை நம்பிக்கையாளரும் அதை வாசிப்பார் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்-5624)
எழுதப்பட்ட
ஹுதைபிய்யா சமாதான ஒப்பந்தம்
1)
நபியவர்கள் இந்த
ஆண்டு திரும்பிச் செல்ல வேண்டும். மக்காவிற்குள் நுழையக் கூடாது. அடுத்த வருடம்
முஸ்லிம்கள் உம்ராவிற்கு வந்து மக்காவில் மூன்று நாட்கள் தங்கிக் கொள்ளலாம். சாதாரணமாக
ஒரு பயணி தன்னுடன் வைத்திருக்கும் ஆயுதங்களை எடுத்து வரலாம். ஆனால், அவற்றை உறைக்குள் வைத்துக் கொள்ள வேண்டும். முஸ்லிம்களுக்கு எவ்வகையிலும்
எந்தவித தொந்தரவும் கொடுக்கப்பட மாட்டாது.
2) பத்து ஆண்டுகளுக்கு இரு தரப்பிலும் போர் நடவடிக்கை எதுவும் எடுக்கக் கூடாது. அக்காலங்களில் அனைவரும் அச்சமற்று இருப்பார்கள். யாரும் எவருக்கும் எவ்வித தீங்கும் செய்யக் கூடாது.
3) யாரொருவர் முஹம்மதுடைய ஒப்பந்தத்திலும் உடன்படிக்கையிலும் சேர்ந்து கொள்ள விரும்புகிறாரோ அவர் அதில் சேர்ந்து கொள்ளலாம். குறைஷிகளின் ஒப்பந்தத்திலும் உடன் படிக்கையிலும் சேர்ந்து கொள்ள விரும்புகிறவர் அதில் சேர்ந்து கொள்ளலாம். எந்த ஒரு கிளையினரும் இந்த இரு வகுப்பால் ஒருவருடன் சேர்ந்து கொள்கிறாரோ அவர் அந்த வகுப்பாரையே சேர்ந்தவராவார். அதற்குப் பின் அந்தக் கிளையினருடன் யாராவது அத்துமீறி நடந்து கொண்டால் அது அந்த வகுப்பினர் அனைவர் மீதும் அத்துமீறியதாகும்.
4) குறைஷிகளில் யாராவது தனது பாதுகாவலரான நெருங்கிய உறவினன் அனுமதியின்றி, தப்பித்து முஹம்மதிடம் வந்து சேர்ந்தால் முஹம்மது அவரை குறைஷிகளிடம் திருப்பி அனுப்பி விடவேண்டும். ஆனால், முஹம்மதிடம் உள்ளவர்களில் யாராவது தப்பித்து குறைஷிகளிடம் வந்துவிட்டால் அவரை முஹம்மதிடம் திருப்பி அனுப்பப்பட மாட்டாது.
இவற்றை எழுதுவதற்காக நபியவர்கள் அலீயை அழைத்து வாசகங்களைக் கூற அலீ (ரழி) எழுத ஆரம்பித்தார்கள். முதலாவதாக “பிஸ்மில்லார்ரஹ்மானிர்ரஹீம் -அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்-” என்று கூறினார்கள். அதைக் கேட்ட சுஹைல் “அல்லாஹ்வின் மீது சத்தியமாக! ரஹ்மான் என்றால் யார்? என்று எங்களுக்குத் தெரியாது. எனவே, பிஸ்மிக்கல்லாஹும்ம -அல்லாஹ்வே உனது பெயரால்-” என்று எழுதும்படி கூறினார். அதை ஏற்று நபியவர்கள் அலீயிடம் அவ்வாறே எழுதச் சொன்னார்கள். பின்பு “இது அல்லாஹ்வின் தூதர் முஹம்மது செய்யும் சமாதான உடன்படிக்கையாகும்” என்று எழுதும்படி அலீயிடம் கூற அவர்களும் அவ்வாறே எழுதினார்கள். ஆனால், சுஹைல் அந்த வாசகத்தை ஏற்றுக் கொள்ளவில்லை. “நீர் அல்லாஹ்வின் தூதர் என்று எங்களுக்குத் தெரிந்திருந்தால் நாம் உம்மை அவனது வீட்டிலிருந்து தடுத்திருக்க மாட்டோம். உம்மிடம் போர் செய்திருக்க மாட்டோம். எனவே, முஹம்மதிப்னு அப்துல்லாஹ் என்று எழுதுங்கள்” என்று கூறினார். (அர்ரஹீக்குல் மக்தூம்)
2) பத்து ஆண்டுகளுக்கு இரு தரப்பிலும் போர் நடவடிக்கை எதுவும் எடுக்கக் கூடாது. அக்காலங்களில் அனைவரும் அச்சமற்று இருப்பார்கள். யாரும் எவருக்கும் எவ்வித தீங்கும் செய்யக் கூடாது.
3) யாரொருவர் முஹம்மதுடைய ஒப்பந்தத்திலும் உடன்படிக்கையிலும் சேர்ந்து கொள்ள விரும்புகிறாரோ அவர் அதில் சேர்ந்து கொள்ளலாம். குறைஷிகளின் ஒப்பந்தத்திலும் உடன் படிக்கையிலும் சேர்ந்து கொள்ள விரும்புகிறவர் அதில் சேர்ந்து கொள்ளலாம். எந்த ஒரு கிளையினரும் இந்த இரு வகுப்பால் ஒருவருடன் சேர்ந்து கொள்கிறாரோ அவர் அந்த வகுப்பாரையே சேர்ந்தவராவார். அதற்குப் பின் அந்தக் கிளையினருடன் யாராவது அத்துமீறி நடந்து கொண்டால் அது அந்த வகுப்பினர் அனைவர் மீதும் அத்துமீறியதாகும்.
4) குறைஷிகளில் யாராவது தனது பாதுகாவலரான நெருங்கிய உறவினன் அனுமதியின்றி, தப்பித்து முஹம்மதிடம் வந்து சேர்ந்தால் முஹம்மது அவரை குறைஷிகளிடம் திருப்பி அனுப்பி விடவேண்டும். ஆனால், முஹம்மதிடம் உள்ளவர்களில் யாராவது தப்பித்து குறைஷிகளிடம் வந்துவிட்டால் அவரை முஹம்மதிடம் திருப்பி அனுப்பப்பட மாட்டாது.
இவற்றை எழுதுவதற்காக நபியவர்கள் அலீயை அழைத்து வாசகங்களைக் கூற அலீ (ரழி) எழுத ஆரம்பித்தார்கள். முதலாவதாக “பிஸ்மில்லார்ரஹ்மானிர்ரஹீம் -அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்-” என்று கூறினார்கள். அதைக் கேட்ட சுஹைல் “அல்லாஹ்வின் மீது சத்தியமாக! ரஹ்மான் என்றால் யார்? என்று எங்களுக்குத் தெரியாது. எனவே, பிஸ்மிக்கல்லாஹும்ம -அல்லாஹ்வே உனது பெயரால்-” என்று எழுதும்படி கூறினார். அதை ஏற்று நபியவர்கள் அலீயிடம் அவ்வாறே எழுதச் சொன்னார்கள். பின்பு “இது அல்லாஹ்வின் தூதர் முஹம்மது செய்யும் சமாதான உடன்படிக்கையாகும்” என்று எழுதும்படி அலீயிடம் கூற அவர்களும் அவ்வாறே எழுதினார்கள். ஆனால், சுஹைல் அந்த வாசகத்தை ஏற்றுக் கொள்ளவில்லை. “நீர் அல்லாஹ்வின் தூதர் என்று எங்களுக்குத் தெரிந்திருந்தால் நாம் உம்மை அவனது வீட்டிலிருந்து தடுத்திருக்க மாட்டோம். உம்மிடம் போர் செய்திருக்க மாட்டோம். எனவே, முஹம்மதிப்னு அப்துல்லாஹ் என்று எழுதுங்கள்” என்று கூறினார். (அர்ரஹீக்குல் மக்தூம்)
எழுத்தறிவில் இந்தியாவின்
நிலை என்ன?
நாட்டில் சமீபத்தில்
வெளியிடப்பட்ட 15-வது மக்கள் தொகை
கணக்கெடுப்பின் படி, இந்தியாவின் எழுத்தறிவு, 74 சதவீதமாக உள்ளது.
இதில் ஆண்கள் 82.14 சதவீதம், பெண்கள் 65.46 சதவீதம். இது 2001ம் ஆண்டு கணக்கெடுப்பை
விட 9.2 சதவீதம் அதிகரித்துள்ளது.
தமிழக எழுத்தறிவு சதவீதம் 80.4 சதவீதமாக உள்ளது.
இது 2001ம் ஆண்டு கணக்கெடுப்பை
விட 6.9 சதவீதம் அதிகம்.
இப்பட்டியலில் இருந்து பெண்கள் எந்தளவுக்கு எழுத்தறிவில் பின்தங்கியுள்ளனர் என்பதை
அறிந்து கொள்ளலாம். பெண்கள் எழுத்தறிவு பெற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அனைவருக்கும் கல்வி: உலகில்
2015ம் ஆண்டுக்குள் அனைத்து
நாடுகளும் 15 வயதுக்குட்பட்ட அனைவருக்கும்
கல்வி அளிப்பதை உறுதி செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலும்
"அனைவருக்கும் இலவச மற்றும் கட்டாயக் கல்வி' அறிமுகப்படுத்தப்பட்டது. நாட்டின் மக்கள் தொகையில்
35 சதவீதத்தினர் 15 வயதுக்கு உட்பட்டோர்.
இத்திட்டத்தை அரசு உறுதியோடு செயல்படுத்தினால் நூறு சதவீத எழுத்தறிவு என்ற இலக்கை அடையலாம்.
கல்விக்காக செலவிடும் தொகை ஆண்டுதோறும் அதிகரித்து வந்தாலும், அது மக்களிடையே பெரும்
மாற்றத்தை ஏற்படுத்தவில்லை. எனவே அனைவருக்கும் தரமான கல்வியை தர அரசு முனைப்புடன் செயல்பட
வேண்டும். இதற்காக, கல்விக்கு கடன் தந்து
ஊக்குவிக்கவும் வேண்டும். கிராமப்புற மாணவர்களின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்க வேண்டும்.
எழுத்தறிவில் தமிழகத்தின்
நிலை என்ன?
இந்தியாவில் உள்ள மாநிலங்களில் எழுத்தறிவு பெற்றவர்களின் எண்ணிக்கையில் தமிழகம் (80.33
சதவீதம்) 14வது இடத்தில் உள்ளது.
முதலிடத்தில் கேரளா (93.91 சதவீதம்) உள்ளது. கடைசி இடத்தில் பீகார் (63.82 சதவீதம்) உள்ளது.
இந்தியாவில் ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை சென்செஸ் கணக்கெடுக்கப்படுகிறது. இதில் நாட்டின்
மக்கள் தொகை, மக்கள் அடர்த்தி, ஆண்கள், பெண்கள் பிறப்பு விகிதம், எழுத்தறிவு ஆகிய தகவல்கள் கணக்கெடுக்கப்படுகிறது. இதன்படி நாட்டின் 15வது சென்செஸ் விவரம் சமீபத்தில் வெளியிடப்பட்டது.
இதில் நாட்டின் மொத்த மக்கள் தொகை 121 கோடியே 19 லட்சத்து
3
ஆயிரத்து 422 பேர். இதில் 7 வயதுக்கு மேல் உள்ளவர்களின் எண்ணிக்கை 105 கோடியே 14 லட்சத்து 4 ஆயிரத்து 135. இதில் 77 கோடியே 84 லட்சத்து 54 ஆயிரத்து 120 பேர் எழுத்தறிவு பெற்றவர்கள். மீதமுள்ள 27 கோடியே 29 லட்சத்து 50 ஆயிரத்து 15 பேர் எழுத்தறிவு பெறாதவர்கள்.
எழுத்தறிவில் பெண்கள் குறைவு நாட்டின் சராசரி எழுத்தறிவு சதவீதம் 74.04.
இதில் ஆண்கள் 82.14 சதவீதமும், பெண்கள் 65.46 சதவீதமும்
உள்ளனர். 2001ம்
ஆண்டு சென்சசில் நாட்டின் சராசரி எழுத்தறிவு சதவீதம் 64.83 ஆக இருந்தது. தற்போது பத்து ஆண்டுகளில் 9.21
சதவீதம் அதிகரித்துள்ளது.எழுத்தறிவில் ஆண்களுக்கும், பெண்களுக்கும் உள்ள இடைவெளி (16.68 சதவீதம்) தொடர்வது பின்னடைவான விஷயம்.
கேரளா ஆதிக்கம்மாநிலங்களின்
வரிசையில் எழுத்தறிவு பெற்றவர்களின் எண்ணிக்கையில், வழக்கம் போல கேரளா முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது.
இம்மாநிலத்தின் எழுத்தறிவு
சதவீதம் 93.91.
ஆண்களின் எழுத்தறிவு சதவீதத்தில் லட்சத்தீவு
(96.11 சதவீதம்) முதலிடத்திலும், பெண்களின் எழுத்தறிவு சதவீதத்தில் கேரளா
(91.98 சதவீதம்) முதலிடத்திலும்
உள்ளது. இப்பட்டியலில் தமிழகம் முறையே 16 மற்றும் 15 ஆகிய இடங்களில் உள்ளது.
டாப் 10' மாநிலங்கள்
ரேங்க் மாநிலம்/யூனியன் பிரதேசம், சதவீதம் 1 கேரளா - 93.912 லட்சத்தீவு
-
92.283 மிசோரம் - 91.584
திரிபுரா - 87.755 கோவா - 87.406 டாமன், டையூ - 87.077 புதுச்சேரி - 86.558 சண்டிகார் - 86.439 புதுடில்லி - 86.3410 அந்தமான் நிகோபர் தீவுகள் - 86.27.
ஜார்ஜியா அதிகம்: உலகில் முழு
எழுத்தறிவு பெற்ற ஒரே நாடு என்ற பெருமையை ஜார்ஜியா பெற்றுள்ளது. இந்தியா 134-வது இடத்தில் உள்ளது.
பேனா வாளின் கூற்மையை விட
வலிமையானது அது சரியானால் சகாப்தம் படைக்கும். உமர் (ரலி) அவர்களின் ஒரு வரி எழுத்து
ஆண்டாண்டு காலமாக நடந்தேரிய நரபலியை தடுத்து நிருத்தியது. நின்று போன நதியை ஓட வைத்தது
,பேனாவின் கூற்மை தடமாரினால் அதன் நுனியின் வழியாக கசிகிற ஒரு
"மை" துளி அடுத்து சிந்தப்படுகிற பல இரத்தத்துளிகளின் முதன்மையான துளி, நீதிமான்களின் கரம்
பிடித்திற்க்கும் பேனா அதன் ஒரு துளி "மை" நீதம் வாழும் உயிர் துளி. நமது
தேசத்தில் முஸ்லிம் என்றால் "மை"கூட உன்மையை மருக்குமோ என என்னம் எழுகிறது.
எத்தனையோ அப்பாவி இஸ்லாமிய கைதிகள் அவர்கள் நிருபராதிகள் என எழுதுவதற்க்கு அப்பேனாக்களின்
"மை" கள் இன்னும் கசியவில்லையோ ஆனால் இங்கே எத்தனை கண்ணீர் துளிகள் .நீதத்தை
எழுத மருப்பதும், எழுதியதில் "கை"யாடல் செய்வதும் ஒரு பேரழிவின்
துவக்கம் اقبل என்ற வார்த்தையில் اقتل என "கை"யாடல்
செய்ததால் "கர்பளா" களம் இரத்தக்கரையானது, آية الدين வாழ்வில் முக்கிய
நிகழ்வுகளைகுறித்து வைத்துக்கொள்ளும் அவசியத்தை கூறும். لوح المحفوظ எனும் ஏடு எழுத்தறிவுக்குக்கிடைத்த
முதல் அங்கிகாரம், كراما كاتبين எழுத்தறிவின் உன்னதமான
அடையாளங்கள் ,عرش ன் வாயிலில் كلمة طيبة لوح المحفوظ كراما كاتبين அமல்களின் ஏடுகள்
இவைகளெல்லாம் எழுத்தறிவின் மான்பை உணர்த்தும் உன்னத தூன்கள் ஆனால் இன்றைய அதி நவின
கண்டு பிடிப்புகளால் "பேனா" வை பிடித்த விரல்களெல்லாம் "கீ" பேடை
தட்டுகின்றன.
3 comments:
அல்ஹம்து லில்லாஹ் அற்புதமான பயான். அல்லாஹ் உங்கள் எழுத்தாற்றலை அதிகப்படுத்துவானாக.
நல்ல பல தகவல்கள்
அருமையான தகவல் குறிப்ப தந்த அனைவருக்கும் அல்லாஹ் இல்மை அதிகம் தருவானாக
ஆமீன்.............
Post a Comment