23 March 2015

வினா விடை 6-12

வினா 6: குர்ஆனில் கராத்தே பற்றி ஒரு வசனம் வருகிறது. அது எந்த வசனம் ?
சூரா அன்பால் 12வது வசனம்  ﻓﺎﺿﺮﺑﻮﺍ ﻓﻮﻕ ﺍﻟﺎﻋﻨﺎﻕ ﻭﺍﺿﺮﺑﻮا ﻣنهم ﻛﻞ ﺑﻨﺎﻥ
சரியான விடை தந்தவர் :
Moulana Rasheed Ahmed

வினா 7: முதன் முதலில் சிலைவணக்கம் செய்தவர்கள் யார்?? அந்த சிலைகளின் பெயர்கள் என்ன ??
முதலில் சிலைவணக்கம் செய்தவர்கள் நூஹ் நபியின் கூட்டத்தார்கள் சிலைகளின் பெயர்கள் ود سواع يغوث يعوق نسر ( வத் ஸுவாஹ் யவூக் யகூஸ் நஸ்ர்.)

وَقَالُوا لَا تَذَرُنَّ آلِهَتَكُمْ وَلَا تَذَرُنَّ وَدًّا وَلَا سُوَاعًا وَلَا يَغُوثَ وَيَعُوقَ وَنَسْرًا

71:23. மேலும் அவர்கள்: உங்கள் தெய்வங்களை விட்டுவிடாதீர்கள்; இன்னும் வத்து, ஸுவாஉ, யகூஸு, யஊக், நஸ்ரு ஆகியவற்றை நிச்சயமாக நீங்கள் விட்டுவிடாதீர்கள் என்றும் சொல்கின்றனர்

சரியான விடை தந்தவர்கள்:
Moulana  Shafiullah manbayee]
Moulana mohammed Ismail Khairi]

வினா 8: فاضربوه عشرين (இருபது கசையடி அடியுங்கள்!) என்ற வார்த்தையை நபியவர்கள் யாரைக் குறித்துக் கூறினார்கள் ??

ஒருவர் மறறொருவரைப் பார்த்து يا يهودي (ஓ யூதனே!) என்றோ يا مخنث (ஓ அரவாணியே!) எனறோ கூறினால் அதற்கு தண்டணையாக பூமான் நபி (ஸல்) அவர்கள் فاضربوه عشرين அவரை இருபது கசையடி அடியுங்கள்! என்று கூறினார்கள்.

عن ابن عباس عن النبي صلى الله عليه وسلم قال إذا قال الرجل للرجل يا يهودي فاضربوه عشرين وإذا قال يا مخنث فاضربوه عشرين ومن وقع على ذات محرم فاقتلوه

சரியான விடை தந்தவர்கள் :
Moulana Rasheed Ahmed
 Moulana Abu Suhail Riyazy
Moulana Syed Althaf

வினா 9: நபியவர்கள் உலகின் துளசி மலர்கள் என்று இருவரைப்பற்றி கூறினார்கள். அவர்கள் யார் ?
  
حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا غُنْدَرٌ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ مُحَمَّدِ بْنِ أَبِي يَعْقُوبَ، سَمِعْتُ ابْنَ أَبِي نُعْمٍ، سَمِعْتُ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ، وَسَأَلَهُ، عَنِ الْمُحْرِمِ،، قَالَ شُعْبَةُ أَحْسِبُهُ يَقْتُلُ الذُّبَابَ فَقَالَ أَهْلُ الْعِرَاقِ يَسْأَلُونَ عَنِ الذُّبَابِ وَقَدْ قَتَلُوا ابْنَ ابْنَةِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم، وَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم ‏ "‏ هُمَا رَيْحَانَتَاىَ مِنَ الدُّنْيَا ‏"‏‏.‏

 Narrated Ibn Abi Nu'm: A person asked `Abdullah bin `Umar whether a Muslim could kill flies. I heard him saying (in reply). "The people of Iraq are asking about the killing of flies while they themselves murdered the son of the daughter of Allah's Messenger () . The Prophet () said, They (i.e. Hasan and Husain) are my two sweet basils in this world."


Sahih Bukhari
Reference: Sahih al-Bukhari 3753 (Companions of the Prophet)
In-book reference:Book 62, Hadith 100

நபி(ஸல்) அவர்கள், "அவர்கள் இருவரும் (ஹஸன் - ரலி - அவர்களும் ஹுசைன் -ரலி - அவர்களும்) உலகின் இரண்டு துளசி மலர்கள் ஆவர்" என்று (அவர்களைக் குறித்து) கூறினார்கள்.

சரியான விடை தந்தவர்கள்:
Moulana mohammed Ismail Khairi
Moulana Shafiullah manbayee
Moulana Mdaly Nil


வினா 10:  ﻋﺒﺪ ﺍﻟﻜﻌﺒﺔ என்றால் யார் ??
அறியாமை காலத்தில் ஹழ்ரத் அபூபக்ர் (ரலி) அவர்களின் பெயர்
ﻋﺒﺪ ﺍﻟﻜﻌﺒﺔ  என்று இருந்தது. அதை நபி (ஸல்) அண்ணவர்கள் عبد الله என்று மாற்றி வைத்தார்கள்.
ஹழ்ரத் عبد الرحمن بن عوف (ரலி) அவர்களுக்கும்جاهلية அறியாமைக்  காலத்தில்
ﻋﺒﺪ ﺍﻟﻜﻌﺒﺔ  என்று பெயர் இருந்ததாக ஒரு குறிப்பு உள்ளது.

சரியான விடை தந்தவர்:
MOULANA RASHEED AHMED 


வினா 11: ஷம்வீல் என்றால் யார்அதன் அர்த்தம் என்ன
இவர் எந்த நபியின் வாரிசு ?

ஷம்வீல் என்பவர் ஒரு நபியாகும்.
இவர் நபி தாவூத் (அலை ) அவர்களின் காலத்தில் வாழ்ந்தவர்கள்.
ஷம்வீல் என்ற பெயர் இப்ரானி மொழியைச் சார்ந்தது
ஷம்வீல் என்ற பெயரின் அர்த்தம் என் அழைப்பை அல்லாஹ் செவி மடுத்தான் என்பதாகும்.
இவர்கள் நபி ஹாரூன் (அலை) அவர்களுடைய பரம்பரையில் வந்தவர்.
இவர்கள் தந்தையின் பெயர் பாலி இப்னு அல் கமஹ் என்பதாகும்.

இவர்களின் பெயர் விஷயத்தில் முபஸ்ஸிரீன்களில் சிலர் அஷ்மவீல் என்றும் சிலர் ஷம்ஊன் என்றும் சிலர் யூஷஃ என்றும் கூறுகிறார்கள்.
வினா தொடுத்தவரும் விடை கொடுத்தவரும்:

வினா 12: பனி இஸ்ராயீலில் உள்ள ஒரு நபருக்காக மூஸா அலைஹிஸ் ஸலாம் அவர்கள் எதிரிப்படையின் ஒரு நபரை ஒரு அடி அடித்தார்கள். அவர் இறந்து விட்டார். அந்த நபர் யார்?
அவர் தொழில் என்ன? எந்த கிளயைச் சேர்ந்தவர்?
அந்த நபர் கிப்தி கிளையைச் சார்ந்தவர்
அவர் தொழில் பிர்அவ்னுக்கு சமைப்பது, மற்றும் விறகு வெட்டி கொண்டுவருவது. இவர் பெயர் பல்யசூன் என்பதாகும்.
வினா தொடுத்தவரும் விடை கொடுத்தவரும்:

0 comments:

Post a Comment