25 March 2015

ஏமாறாதே!!!! ஏமாற்றாதே!!!!



உலகில் மனிதன் மனிதனிடம் எதிர்பார்ப்பது நம்பகத்தன்மை. நம்பகத் தன்மையின் மூலமே பிறரை நாம் நண்பராக, நெருக்கமுள்ளவராக ஆக்கிக் கொள்ள முடியும். ஆனால் இன்நன்னடத்தை இக்கழி காலத்தில் எடுபட்டுப் போனது மிக வருத்தத்திற்குரிய செய்தியாகும்.
அதனால் தான் என்னவோ தெரியவில்லை. எக்காலமும் அறிந்த ரப்‌பு இறைமறையில் இப்படிக் கூறுகிறான்.  

إِنَّ وَعْدَ اللَّهِ حَقٌّ فَلَا تَغُرَّنَّكُمُ الْحَيَاةُ الدُّنْيَا وَلَا يَغُرَّنَّكُمْ بِاللَّهِ الْغَرُورُ
31:33

வருகின்ற ஏப்ரல் மாதம் 1ம் தேதி உலகம் முழுக்க அதிர்ச்சி அளிக்கும் செய்திகளை புனைந்து கூறி மக்களை ஏமாற்றி அதிர்ச்சி அடையச் செய்வது இன்று உலகம் காணும் நாகரீகம் என மெச்சுகிறார்கள். பிறரை ஏமாற்றுகின்றோம் என்றறியாமல் உண்மையில் தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொள்கிறார்கள். ஆண்டியாக இருந்தாலும் சரி அரசனாக இருந்தாலும் சரி பிறரை ஏமாற்றினால் நாளை மறுமையில் சுவனம் அவனுக்கு தடை செய்யப்படும்.

ஏமாற்றியதால் மறுமையின் ஏமாற்றம் 

عَنِ الْحَسَنِ، قَالَ: دَخَلَ عُبَيْدُ اللهِ بْنُ زِيَادٍ، عَلَى مَعْقَلِ بْنِ يَسَارٍ، وَهُوَ وَجِعٌ، فَسَأَلَهُ، فَقَالَ: إِنِّي مُحَدِّثُكَ حَدِيثًا لَمْ أَكُنْ حَدَّثْتُكَهُ إِنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «لَا يَسْتَرْعِي اللهُ عَبْدًا رَعِيَّةً، يَمُوتُ حِينَ يَمُوتُ وَهُوَ غَاشٌّ لَهَا، إِلَّا حَرَّمَ اللهُ عَلَيْهِ الْجَنَّةَ»، قَالَ: أَلَّا كُنْتَ حَدَّثْتَنِي هَذَا قَبْلَ الْيَوْمِ؟ قَالَ: «مَا حَدَّثْتُكَ»  (مسلم)
ஹசன் அல்பஸரி (ரஹ்) அவர்கள் கூறியதாவது: மஅகில் பின் யசார் (ரலி) அவர்கள் நோயுற்றிருந்தபோது (உடல்நலம் விசாரிப்பதற்காக) அவர்களிடம் (பஸ்ராவின் ஆளுநர்) உபைதுல்லாஹ் பின் ஸியாத் சென்றார். அப்போது உபைதுல்லாஹ்விடம் மஅகில் (ரலி) அவர்கள், ”முன்பு நான் உம்மிடம் அறிவித்திராத செய்தி ஒன்றை அறிவிக்கிறேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ”குடிமக்களில் சிலரை நிர்வகிக்கும் பொறுப்பை அல்லாஹ் ஓர் அடியாருக்கு வழங்கியிருக்க, அவர் அந்த மக்களை ஏமாற்றி மோசடி செய்த நிலையிலேயே இறந்துபோனால், அவருக்கு அல்லாஹ் சொர்க்கத்தைத் தடைசெய்யாமல் இருப்பதில்லை” என்று கூறினார்கள்” என்றார்கள். அப்போது உபைதுல்லாஹ், ”இதற்கு முன்பு இதை நீங்கள் எனக்கு அறிவிக்கவில்லையே?” என்று கேட்டார். மஅகில் (ரலி) அவர்கள், ”நான் உமக்கு (காரணத்தோடுதான்) அறிவிக்கவில்லை” என்று பதிலளித்தார்கள்.
ஸஹீஹ் முஸ்லிம் அத்தியாயம் : 1. இறைநம்பிக்கை

ஏமாற்றுபவனுக்கு அழிவு தான் மிஞ்சும் 

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: مَنْ أَخَذَ أَمْوَالَ النَّاسِ يُرِيدُ أَدَاءَهَا أَدَّى اللَّهُ عَنْهُ، وَمَنْ أَخَذَ يُرِيدُ
إِتْلاَفَهَا أَتْلَفَهُ اللَّهُ               (البخاري)

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: எவன் மக்களின் பணத்தை (அல்லது பொருட்களைத்) திருப்பிச் செலுத்தும் எண்ணத்துடன் கடன் வாங்குகிறானோ அவன் சார்பாக அல்லாஹ்வே அதனைத் திருப்பிச் செலுத்துவான். எவன் திருப்பிச் செலுத்தும் எண்ணமின்றி அதை (ஏமாற்றி) அழித்து விடும் எண்ணத்துடன் கடன் வாங்குகிறானோ அல்லாஹ்வும் அவனை அழித்து விடுவான். என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 43. கடன்


வியாபாரத்தில் ஏமாற்றுபவன் 

عَنِ الأَعْمَشِ، قَالَ: سَمِعْتُ أَبَا صَالِحٍ، يَقُولُ: سَمِعْتُ أَبَا هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، يَقُولُ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: " ثَلاَثَةٌ لاَ يَنْظُرُ اللَّهُ إِلَيْهِمْ يَوْمَ القِيَامَةِ، وَلاَ يُزَكِّيهِمْ، وَلَهُمْ عَذَابٌ أَلِيمٌ، رَجُلٌ كَانَ لَهُ فَضْلُ مَاءٍ بِالطَّرِيقِ، فَمَنَعَهُ [ص:111] مِنَ ابْنِ السَّبِيلِ، وَرَجُلٌ بَايَعَ إِمَامًا لاَ يُبَايِعُهُ إِلَّا لِدُنْيَا، فَإِنْ أَعْطَاهُ مِنْهَا رَضِيَ، وَإِنْ لَمْ يُعْطِهِ مِنْهَا سَخِطَ، وَرَجُلٌ أَقَامَ سِلْعَتَهُ بَعْدَ العَصْرِ، فَقَالَ: وَاللَّهِ الَّذِي لاَ إِلَهَ غَيْرُهُ لَقَدْ أَعْطَيْتُ بِهَا كَذَا وَكَذَا، فَصَدَّقَهُ رَجُلٌ " ثُمَّ قَرَأَ هَذِهِ الآيَةَ: {إِنَّ الَّذِينَ يَشْتَرُونَ بِعَهْدِ اللَّهِ وَأَيْمَانِهِمْ ثَمَنًا قَلِيلًا} [آل عمران: 77]

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். மூன்று பேரை மறுமை நாளில் அல்லாஹ் ஏறெடுத்துப் பார்க்கவும் மாட்டான்; அவர்களைத் தூய்மைப்படுத்தவும் மாட்டான். மேலும், அவர்களுக்குத் துன்பமிக்க வேதனையும் உண்டு. ஒருவன், (மக்களின் பயணப்) பாதையில், தேவைக்கு மிஞ்சிய தண்ணீரைப் பெற்றிருந்தும் வழிப்போக்கர்கள் அதைப் பயன்படுத்த விடாமல் தடுத்துவிட்டவன். இன்னொருவன், தன் (ஆட்சித்) தலைவரிடம் உலக ஆதாயத்திற்காகவே விசுவாசப் பிரமாணம் செய்தவன்; அவர் கொடுத்தால் (மட்டுமே) திருப்தியடைந்து, கொடுக்காமல்விட்டால் கோபம் கொள்பவன். மற்றொருவன், அஸர் தொழுகைக்குப் பிறகு (மக்கள் கடைவீதியில் திரளும் போது) தன் வியாபாரப் பொருளைக் காட்டி, “எவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறெவனும் இல்லையோ அவன் மீது சத்தியமாக! இந்தப் பொருளுக்காக (இதைக் கொள்முதல் செய்யும்போது) நான் இன்ன (அதிக) விலையைத் தந்தேன். என்று கூறி, அதை ஒருவர் உண்மையென நம்பும்படி செய்தவன் (இப்படி வாடிக்கையாளரிடம் பொய் கூறி அவரை ஏமாற்றி, சொன்ன விலைக்கு அதை விற்றவன்) ஆவான். இதைக் கூறிவிட்டு, “அல்லாஹ்வுடன் செய்த உடன்படிக்கையையும் தம் சத்தியங்களையும் அற்ப விலைக்கு விற்று விடுகிறவர்கள்...” என்னும் இந்த (திருக்குர்ஆன் 03:77 ஆம்) இறைவசனத்தை ஓதினார்கள். என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : (42. முஸாக்காத் - நீர்ப்பாசன அடிப்படையில் தோப்புகளைக் குத்தகைக்கு விடுதல்)

பாடம் புகட்டிய நீதிபதி 
ஹக்கம் என்னும் அரசன் ஸ்பெயினை ஆண்டு கொண்டிருந்த காலம்.
ஒருநாள் அவர் நகரை வலம் வந்தபோது ஒரு அழகான நிலத்தைப் பார்த்தார். அதனால் கவரப்பட்ட அவர் அந்த இடத்திலே தமக்கென மாளிகை ஒன்றை கட்டிக் கொள்ள விரும்பினார்
அந்த நிலம் ஒரு கிழவிக்கு உரியது. அதிலே ஒரு குடிசை அமைத்து குடியிருந்தாள். அந்த நிலத்திற்கு நியாமான ஒரு விலையைக் கொடுக்க அரசர் முன்வந்தார் அக்கிழவி விற்க மறுத்துவிட்டாள். 'தன் கணவரோடு வாழ்ந்த குடிசையே தனக்கு அரண்மனை' என்றாள்.
அரசருக்கு ஆத்திரம் வந்தது.
அக்குடிசையைப் பிடுங்கி எறிந்து அவளை அந்த நிலத்திலிருந்து விரட்டினார். அங்கே ஓர் அரச மாளிகையும் அழகிய பூங்காவையும் அமைத்தார்
கிழவி உடனே நீதிபதியிடம் சென்று அரசருக்கு எதிராக முறையிட்டாள்.
சில நாட்கள் சென்றது. அரசர் தனது புதிய மாளிகையை வந்து பார்க்கும்படி நீதிபதிக்கு அழைப்பு விடுத்தார். குறித்த நேரத்தில் ஒரு கழுதையுடனும் வெறும் சாக்குகள் சிலவற்றுடனும் நீதிபதி அரசமாளிகைக்கு வந்து சேர்ந்தார்.
அரசருக்கு ஆச்சரியமாக இருந்தது
கழுதையும் சாக்குப் பையும் ஏன்?'' என்றார்.
''இந்த தோட்டத்திலிருந்து சிறிது மண் வெட்டிக் கொண்டு போவதற்கு அனுமதி தாருங்கள்'' என்றார்
இந்த வினோதமான கோரிக்கை அரசருக்கு வியப்பாக இருந்தது எனினும் அனுமதி வழங்கினார். நீதிபதி மண்ணை வெட்டி அந்த சாக்குகளை நிரப்பினார்.
பின்னர் அவற்றை கழுதையின் மேல் வைப்பதற்கு தமக்கு உதவும்படி கேட்டுக் கொண்டார் அரசருக்கு இன்னும் வியப்பாக இருந்தது. என்றாலும் மகிழ்ச்சியுடன் உதவ அவர் முனவந்தார்
எவ்வளவு முயன்றபோதிலும் ஒரு சாக்கைக் கூட அவரால் தூக்க முடியவில்லை.
நீதிபதி அரசரை நோக்கி கூறினார்:

''அரசே! இன்று உங்களால் ஒரு சாக்கு மண்ணைக் கூட தூக்க முடியவில்லை. மறுமைநாளில் அந்த கிழவியிடமிருந்து நீங்கள் அநீதியாக அபகரித்த இந்த தோட்டம் முழுவதையும் சுமக்கும்படி அல்லாஹ் ஆணையிட்டால் என்ன செய்வீர்கள்?

அரசர் தமது செயலுக்காக வெட்கப்பட்டார். அந்த கிழவியை உடனே வரவழைத்து , தாயே! நான் பெரும் பிழை செய்துவிட்டேன். இன்றிலிருந்து இந்த மாளிகையும் தோட்டமும் உங்களுக்குரியதே!'' என்றார்.

மோசடி செய்பவர்களுக்கு இம்மையிலும் மறுமையிலும் நஷ்டம்தான் .
இம்மையில் என்ன நஷ்டம்?

 அந்த சமுதாயத்தில் அச்சமும் பீதியும் நிலவும்
 ஈமான் இழப்பு கூட ஏற்படாலம்


நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

''எந்த சமுதாயத்தில் மோசடி பரவலாக இடம் பெறுகின்றதோ அவர்களுக்கு மத்தியில் அச்ச உணர்வு தோற்றுவிக்கப்படும்"". (முஅத்தா மாலிக் -26)
 ''உங்களில் ஒருவர் மோசடி செய்கையில் அவர் முஃமினாக இருக்க மாட்டார். உங்களை நான் அப்படியான நிலையை விட்டும் கடுமையாக எச்சரிக்கிறேன்"". (முஸ்லிம் - கிதாபுல் ஈமான் - 103)

மறுமையில் என்ன நஷ்டம்?

பொதுச் சொத்தில் மோசடி செய்வோர் அமானிதத்தை வீனாக்குவோர் ஏமாற்றுவோர் யாரும் தப்பிக்க முடியாது. மறுமையில் அவர்கள் மோசடி செய்த அந்த பொருளே அவர்களுக்கு பெரும் சுமையாக மாறி அவர்களை திணறடிக்கும். அப்போது யாரையும் உதவிக்கு அழைக்க முடியாது

عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَامَ فِينَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ذَاتَ يَوْمٍ فَذَكَرَ الْغُلُولَ فَعَظَّمَهُ وَعَظَّمَ أَمْرَهُ ثُمَّ قَالَ ‏ "‏ لاَ أُلْفِيَنَّ أَحَدَكُمْ يَجِيءُ يَوْمَ الْقِيَامَةِ عَلَى رَقَبَتِهِ بَعِيرٌ لَهُ رُغَاءٌ يَقُولُ يَا رَسُولَ اللَّهِ أَغِثْنِي ‏.‏ فَأَقُولُ لاَ أَمْلِكُ لَكَ شَيْئًا قَدْ أَبْلَغْتُكَ ‏.‏ لاَ أُلْفِيَنَّ أَحَدَكُمْ يَجِيءُ يَوْمَ الْقِيَامَةِ عَلَى رَقَبَتِهِ فَرَسٌ لَهُ حَمْحَمَةٌ فَيَقُولُ يَا رَسُولَ اللَّهِ أَغِثْنِي ‏.‏ فَأَقُولُ لاَ أَمْلِكُ لَكَ شَيْئًا قَدْ أَبْلَغْتُكَ ‏.‏ لاَ أُلْفِيَنَّ أَحَدَكُمْ يَجِيءُ يَوْمَ الْقِيَامَةِ عَلَى رَقَبَتِهِ شَاةٌ لَهَا ثُغَاءٌ يَقُولُ يَا رَسُولَ اللَّهِ أَغِثْنِي ‏.‏ فَأَقُولُ لاَ أَمْلِكُ لَكَ شَيْئًا قَدْ أَبْلَغْتُكَ ‏.‏ لاَ أُلْفِيَنَّ أَحَدَكُمْ يَجِيءُ يَوْمَ الْقِيَامَةِ عَلَى رَقَبَتِهِ نَفْسٌ لَهَا صِيَاحٌ فَيَقُولُ يَا رَسُولَ اللَّهِ أَغِثْنِي ‏.‏ فَأَقُولُ لاَ أَمْلِكُ لَكَ شَيْئًا قَدْ أَبْلَغْتُكَ ‏.‏ لاَ أُلْفِيَنَّ أَحَدَكُمْ يَجِيءُ يَوْمَ الْقِيَامَةِ عَلَى رَقَبَتِهِ رِقَاعٌ تَخْفِقُ فَيَقُولُ يَا رَسُولَ اللَّهِ أَغِثْنِي ‏.‏ فَأَقُولُ لاَ أَمْلِكُ لَكَ شَيْئًا قَدْ أَبْلَغْتُكَ ‏.‏ لاَ أُلْفِيَنَّ أَحَدَكُمْ يَجِيءُ يَوْمَ الْقِيَامَةِ عَلَى رَقَبَتِهِ صَامِتٌ فَيَقُولُ يَا رَسُولَ اللَّهِ أَغِثْنِي فَأَقُولُ لاَ أَمْلِكُ لَكَ شَيْئًا قَدْ أَبْلَغْتُكَ.‏


அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு நாள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடையே நின்று (போர்ச் செல்வங்கள் உள்ளிட்ட) பொதுச் சொத்துகளில் மோசடி செய்வது குறித்துக் கூறினார்கள். அது கடுங்குற்றம் என்பதையும் அதன் தண்டனை கொடியது என்பதையும் எடுத்துரைத்தார்கள்.

பிறகு (பின்வருமாறு) கூறினார்கள்: மறுமை நாளில் கத்திக்கொண்டிருக்கும் ஒட்டகத்தைத் தமது கழுத்தில் சுமந்து கொண்டுவந்து, "அல்லாஹ்வின் தூதரே! என்னைக் காப்பாற்றுங்கள்" என்று (அபயம் தேடி) அலறும் நிலையில் உங்களில் யாரையும் நான் காணவேண்டாம். ஏனெனில், அப்போது நான் "உனக்கு எந்த உதவியும் என்னால் செய்ய முடியாது. உனக்கு நான் (சொல்ல வேண்டியதை உலகத்திலேயே) சொல்லிவிட்டேன்" என்று கூறிவிடுவேன்.

இவ்வாறே, மறுமை நாளில் கனைத்துக் கொண்டிருக்கும் குதிரையைத் தமது கழுத்தில் சுமந்து வந்து, "அல்லாஹ்வின் தூதரே! என்னைக் காப்பாற்றுங்கள்" என்று (அபயம் தேடி) அலறும் நிலையில் உங்களில் யாரையும் நான் காணவேண்டாம். ஏனெனில், அப்போது நான் "உனக்கு எந்த உதவியும் என்னால் செய்ய இயலாது. உனக்கு நான் (சொல்ல வேண்டியதை உலகத்திலேயே) சொல்லிவிட்டேன்" என்று கூறிவிடுவேன்.
இவ்வாறே, மறுமை நாளில் கத்திக்கொண்டிருக்கும் ஆட்டைத் தமது கழுத்தில் சுமந்து வந்து, "அல்லாஹ்வின் தூதரே! என்னைக் காப்பாற்றுங்கள்" என்று (அபயம் தேடி) அலறும் நிலையில் உங்களில் யாரையும் நான் காணவேண்டாம். ஏனெனில், அப்போது நான் "உனக்கு எந்த உதவியும் என்னால் செய்ய முடியாது. உனக்கு நான் (சொல்ல வேண்டியதை உலகிலேயே) சொல்லி விட்டேன்" என்று கூறிவிடுவேன்.

இவ்வாறே, மறுமை நாளில் கத்திக்கொண்டிருக்கும் ஓர் உயிரினத்தைத் தமது கழுத்தில் சுமந்து கொண்டுவந்து "அல்லாஹ்வின் தூதரே! என்னைக் காப்பாற்றுங்கள்" என்று (அபயம் தேடி) அலறும் நிலையில் உங்களில் யாரையும் நான் காணவேண்டாம். ஏனெனில், அப்போது நான் "உனக்கு எந்த உதவியும் என்னால் செய்யமுடியாது; உனக்கு நான் (சொல்ல வேண்டியதை உலகிலேயே) சொல்லிவிட்டேன்" என்று கூறிவிடுவேன்.
இவ்வாறே, மறுமை நாளில் (காற்றில்) அசையும் துணிகளைத் தமது கழுத்தில் சுமந்து கொண்டுவந்து, "அல்லாஹ்வின் தூதரே! என்னைக் காப்பாற்றுங்கள்" என்று கூறி (அபயம் தேடி) அலறும் நிலையில் உங்களில் யாரையும் நான் காணவேண்டாம்.ஏனெனில், அப்போது நான் "உனக்கு எந்த உதவியும் என்னால் செய்ய இயலாது. உனக்கு (சொல்ல வேண்டியதை உலகி லேயே) சொல்லிவிட்டேன்" என்று கூறிவிடுவேன்.
இவ்வாறே, மறுமை நாளில் பொன்னையும் வெள்ளியையும் தமது கழுத்தில் சுமந்து கொண்டுவந்து, "அல்லாஹ்வின் தூதரே! என்னைக் காப்பாற்றுங்கள்" என்று கூறி (அபயம் தேடி) அலறும் நிலையில் உங்களில் யாரையும் நான் காணவேண்டாம்.ஏனெனில், அப்போது நான் "என்னால் உனக்கு எந்த உதவியும் செய்ய முடியாது. உனக்கு நான் (சொல்ல வேண்டியதை உலகிலேயே) சொல்லிவிட்டேன்" என்று கூறிவிடுவேன்.
 (ஸஹீஹ் முஸ்லிம் 4839)

இவ்வுலகில் அனைத்திலும் மோசடி, ஏமாற்று, பித்தலாட்டம் என பல்கிப் பெருகி இருக்கிறது. கல்வியில், காதல் எனும் கலவியில், குடும்பத்தில், சொத்து சுகங்களில், நட்பில், அரசியலில், ஆன்மீகத்தில், மருத்துவத்தில், உணவகத்தில், வணிகத்தில் இப்படி பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.

உதாரணத்திற்கு:
கடவுளின் பெயரில் ஏமாற்றலாமா? எனும் தலைப்பில் லலிதா ஜுவல்லரி என்ற நிறுவனம் முழுப் பக்க விளம்பரம் ஒன்றை ஏடுகளில் கொடுத்துள்ளது.

அதில் குறிப்பிடப்பட்டுள்ள வாசகம் வருமாறு:

கிராமுக்கு ரூ.52 தள்ளுபடி!... சவரனுக்கு ரூ.520 தள்ளுபடி!... இலவசப் பரிசு! என்று அட்சய திருதியை நன்னாளை முன்னிட்டு, பல நகைக் கடைகள் விளம்பரப்படுத்திக் கொண்டிருக்கும் சலுகைகளை நீங்கள் காணலாம். தீர விசாரிக்கும் பொழுதுதான் இதில் உள்ள தந்திரம் தெரியும்! கிராமுக்கும், சவரனுக்கும் தள்ளுபடி அளிக்கும் இக்கடைகள், நகைகளின் சேதாரத் தொகையை அளவிற்கு அதிகமாக வசூலித்து இதுபோன்ற தள்ளுபடியில் அதை மறைக்கிறார்கள் என்பதுதான் உண்மை மேலும் பல சலுகைகள் நிபந்தனைகளுக்கு உட்பட்டதாகவே இருக்கும்.

எனவே, இதுபோன்ற அட்சயதிருதியை ஆஃபர்களைக் கண்டு மயங்காமல், நீங்கள் கொடுக்கும் தொகை என்ன, அதற்கு உங்களுக்கு எவ்வளவு கிராம் தங்கம் கிடைக்கிறது என்பதைக் கணக் கிடுங்கள் என்று விளம்பரம் செய்துள்ள அந்த நிறுவனம் தனது நிறுவனத்தின் நம்பகத்தன்மை குறித்து விவரிக்கிறது.
பம்படியில் வம்படி என்பார்களே, அது போல வியாபாரத்தில் போட்டி என்று வந்துவிட்டால் இதுபோன்ற மோசடிகள் வெளி வருகின்றன என்பதை எடுத்துக் கொள்ள வேண்டும்.


பிறரை ஏமாற்றிய பொருள் நமக்கு ஆகுமானதல்ல என்பதை விளங்கியிருந்த ஸஹாபாக்கள் 

عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا، قَالَتْ: " كَانَ لِأَبِي بَكْرٍ غُلاَمٌ يُخْرِجُ لَهُ الخَرَاجَ، وَكَانَ أَبُو بَكْرٍ يَأْكُلُ مِنْ خَرَاجِهِ، فَجَاءَ يَوْمًا بِشَيْءٍ فَأَكَلَ مِنْهُ أَبُو بَكْرٍ، فَقَالَ لَهُ الغُلاَمُ: أَتَدْرِي مَا هَذَا؟ فَقَالَ أَبُو بَكْرٍ: وَمَا هُوَ؟ قَالَ: كُنْتُ تَكَهَّنْتُ لِإِنْسَانٍ فِي الجَاهِلِيَّةِ، وَمَا أُحْسِنُ الكِهَانَةَ، إِلَّا أَنِّي خَدَعْتُهُ، فَلَقِيَنِي فَأَعْطَانِي بِذَلِكَ، فَهَذَا الَّذِي أَكَلْتَ مِنْهُ، فَأَدْخَلَ أَبُو بَكْرٍ يَدَهُ، فَقَاءَ كُلَّ شَيْءٍ فِي بَطْنِهِ "                         (البخاري)

அபூபக்ர்(ரலி) அவர்களுக்கு (ஓர் எஜமானனுக்கு அடிமை செலுத்த வேண்டிய சம்பாத்தியத்தில்) நிர்ணயிக்கப்பட்ட தொகையைச் செலுத்தி வந்த அடிமையொருவன் இருந்தான். அபூ பக்ர்(ரலி) அவன் செலுத்தும் தொகையிலிருந்து உண்டு வந்தார்கள். ஒரு நாள் அவன் ஏதோ ஒரு பொருளைக் கொண்டு வந்தான். அதிலிருந்து அபூ பக்ர்(ரலி) சிறிது உண்டார்கள். அப்போது அந்த அடிமை அவர்களிடம், “இது என்ன என்று உங்களுக்குத் தெரியும்?“ என்று கேட்டான். அபூ பக்ர்(ரலி), “இது என்ன?“ என்று கேட்டார்கள். அவன், “நான் அறியாமைக் காலத்தில் ஒரு மனிதருக்குக் குறி சொல்லிவந்தேன்; எனக்கு நன்றாகக் குறி சொல்லத் தெரியாது; ஆயினும் (குறி சொல்லத் தெரிந்தவன் போல் நடித்து) அவரை நான் ஏமாற்றி விட்டேன். அவர் அதற்காக எனக்குக் கூலி கொடுத்தார். நீங்கள் உண்டது (குறி சொன்னதற்காக) எனக்குக் கூலியாகக் கிடைத்த அந்தப் பொருளிலிருந்து தான்” என்று சொன்னான். உடனே அபூ பக்ர்(ரலி) தம் கையை (வாய்க்குள்) நுழைத்துத் தம் வயிற்றிலிருந்து அனைத்தையும் வாந்தியெடுத்துவிட்டார்கள்.
ஷஹீஹ் புகாரி அத்தியாயம் : 63. அன்சாரிகளின் சிறப்புகள்

இந்த வரலாற்றில் குறி சொல்வது கூடாது என்று ஒருபுறமிருந்தாலும் பிறரை ஏமாற்றி கிடைக்க கூடிய பொருட்களும் நமக்கு கூடாது என்பதை உணர்த்துகிறது...

ஏமாறுவது முஃமினுடைய பண்பல்ல  

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ قَالَ: «لاَ يُلْدَغُ المُؤْمِنُ مِنْ جُحْرٍ وَاحِدٍ مَرَّتَيْنِ» (مسلم)

நபியவர்கள் ஒரு முஃமின் ஒரே பொந்தில் இரண்டு முறை கொட்டு பெறமாட்டான் என்று கூறினார்கள்.

இந்த ஹதீஸூக்கு நவவீ இமாம் விளக்கம் கூறுகிறார்கள்: 

أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم أسر أبا غرة الشاعر يوم بدر فمن عليه وعاهده أن لايحرض عليه ولايهجوه وَأَطْلَقَهُ فَلَحِقَ بِقَوْمِهِ ثُمَّ رَجَعَ إِلَى التَّحْرِيضِ وَالْهِجَاءِ ثُمَّ أَسَرَهُ يَوْمَ أُحُدٍ فَسَأَلَهُ الْمَنَّ فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْمُؤْمِنُ لايلدغ مِنْ جُحْرٍ مَرَّتَيْنِ
(شرح النووي علي مسلم)

  ابوغرة என்பவன் நபி (ஸல்) அவர்களை தவறான கொச்சையான கவிதைகளால் பத்ரு போரில் திட்டி வந்தான். அவனை நபி ஸல் சிறைபிடித்தார்கள். தன்னுடைய ஏழ்மையை எடுத்துக் கூறினான். மாநபி அவனை மன்னித்தார்கள். மீண்டும் உகது போரில் கலந்து கொண்டு தவறாக நபியவர்களை வசைபாடினான். மறுபடியும் அவனை நபி ஸல் சிறைபிடித்தார்கள். இப்போதும் தன் ஏழ்மையை அவன் கூறிய போது  நபியவர்கள் ஒரு முஃமின் ஒரே பொந்தில் இரண்டு முறை கொட்டு பெறமாட்டான் என்று கூறினார்கள்.

எத்தனை நபர்கள் ஏமாற்றப்பட்டாலும் விழிப்புணர்வு பெறாத சமுதாயம் 

ஏமாற்றி விற்கப்படும் பாலிசிகள்!ஏஜென்ட்டுகளுக்கு ஐஆர்டிஏ கிடுக்கிப்பிடிஇரா.ரூபாவதி
இன்றைக்கு இன்ஷூரன்ஸ் துறையில் அடிக்கடி உச்சரிக்கும் வார்த்தையாக மாறி இருக்கிறது 'மிஸ்செல்லிங்’.  இன்ஷூரன்ஸ் பாலிசிகள் பற்றி தவறான தகவல்களையும், வாக்குறுதிகளையும் தந்து விற்கப்படுவதுதான் 'மிஸ்செல்லிங்’. கடந்த எட்டு ஆண்டுகளில் தவறான தகவலையும் வாக்குறுதியையும் தந்து, ஏமாற்றி விற்கப்பட்ட பாலிசிகள் ஒன்று, இரண்டு அல்ல. சில உதாரணங்களை மட்டும் பார்ப்போம்.
மனோகரனின் கதை!
திருவள்ளூரைச் சேர்ந்தவர் மனோகரன் (பெயர் மாற்றப்பட் டுள்ளது). அவரது பக்கத்து வீட்டில் பகுதி நேர இன்ஷூரன்ஸ் ஏஜென்ட் ஒருவர் இருந்தார். 'எஃப்டி-யைவிட அதிக வருமானம் தரும் இன்ஷூரன்ஸ் திட்டங்கள் உள்ளன. வருடம்  ரூ.10 ஆயிரம் என அடுத்த மூன்றாண்டு களுக்கு முதலீடு செய்தால், உங்களுக்கு ரூ.75 ஆயிரம் கிடைக்கும்’ என்று சொல்லி, ஒரு இன்ஷூரன்ஸ் பாலிசியைத் தந்தார்.  
மனோகரனுக்கு எழுத, படிக்கத் தெரியாது. மேலும், ஏஜென்டை சிறுவயதிலிருந்தே தெரியும் என்பதால் அவர் சொன்னதை அப்படியே நம்பினார். சரியான நேரத்தில் பிரீமியத் தொகையை வசூலித்த ஏஜென்ட், அதன்பிறகு மனோகரனின் கண்ணில் தென்படவே இல்லை.
இதனிடையே, தனது மகளின் திருமணச் செலவுக்காக இன்ஷூரன்ஸ் பாலிசியிலிருந்த பணத்தை எடுக்க விரும்பினார் மனோகரன். ஒருவழியாக ஏஜென்ட்டைத் தேடிப்பிடித்து விஷயத்தைச் சொல்ல,   'நீங்களே சென்று வாங்கிக்கொள்ளுங்கள்’ என்றார்.  ஆனால், பணத்தை எடுக்கப்போன மனோகரனுக்குத்தான்  அதிர்ச்சி. அவர் செலுத்திய தொகையைவிடக் குறைவான தொகைதான் அவருக்குக் கிடைத்தது. ரூ.75 ஆயிரம் கிடைக்கும் என்று போனவருக்கு, வெறும் ரூ.25 ஆயிரம்தான் கிடைத்தது. தன் தலையில் கட்டப்பட்ட பாலிசி யூலிப் வகையைச் சேர்ந்தது. இதில் போட்ட பணம் பங்குச் சந்தையில் முதலீடு செய்யப்படும். பங்குச் சந்தையின் ஏற்ற இறக்கத்துக்கேற்பவே இந்த பாலிசியிலிருந்து வருமானம் கிடைக்கும் என்கிற தகவல்கள் மனோகரனுக்கு சொல்லப்படவே இல்லை. ஆனால், தவறான வாக்குறுதிகளை மட்டும் அள்ளிவிட்டிருக்கிறார் அந்த பலே ஏஜென்ட்.
                                                            ( நன்றி : நாணயம் விகடன் (ஜுலை 6, 2014)
164. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நமக்கெதிராக ஆயுதம் ஏந்தியவர் நம்மைச் சார்ந்தவர் அல்லர்; நம்மை வஞ்சித்தவரும் நம்மைச் சார்ந்தவர் அல்லர். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. - அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஓர் உணவு(தானிய)க் குவியலைக் கடந்து சென்றார்கள். (விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த) அந்தக் குவியலுக்குள் தமது கையை அவர்கள் நுழைத்தார்கள். அப்போது (தானியக் குவியலில் இருந்த) ஈரம் அவர்களின் விரல்களில் பட்டது. உடனே அவர்கள் ”உணவு (தானியத்தின்) உரிமையாளரே! என்ன இது (ஈரம்)?” என்று கேட்டார்கள். அதற்கு அவர், ”இதில் மழைச்சாரல் பட்டுவிட்டது, அல்லாஹ்வின் தூதரே!” என்றார். அப்போது அவர்கள், ”ஈரமானதை மக்கள் பார்க்கும் விதமாக உணவு (தானியத்து)க்கு மேலே வைத்திருக்கக் கூடாதா?” என்று கேட்டுவிட்டு, ”மோசடி செய்தவர் என்னைச் சார்ந்தவர் அல்லர்” என்று கூறினார்கள். இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
ஸஹீஹ் முஸ்லிம் அத்தியாயம் : 1. இறைநம்பிக்கை

மோசடி என்பதும் ஏமாற்றுவதின் ஒரு வகைதான். மோசடி என்ற இந்த ஏமாற்று குணம் யாரிடம் இருக்குமோ அவர் "என்னைச் சார்ந்தவரல்ல" என்று நபி ஸல் அவர்கள் சொன்ன வார்த்தை இந்த இடத்தில் அவசியம் கவணிக்கத் தக்கதாகும்.
عَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ: «نَهَى النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ النَّجْشِ»      البخاري

விலையேற்றம் செய்வதை தடை செய்துள்ளார்கள்.

ஆனால் உண்மையாக ஏமாற்றம் இம்மையின் ரப்‌பின் கட்டளைகளை மீறி நடப்பவருக்கு நாள் மறுமையில் மகத்தான வேதனை உண்டு. அல்லாஹ் நம்மை எச்சரிக்கக்கூடிய ஏமாற்றுக்காரனை பற்றி குர்ஆனில் குறிப்பிடும் போது 
 يَعِدُهُمْ وَيُمَنِّيهِمْ وَمَا يَعِدُهُمُ الشَّيْطَانُ إِلَّا غُرُورًا        4:120


மேலும் பார்க்க : 17:64,  33:12,  35:40, 3:185, 31;33,

தீய நடத்தையால்  எண்ணற்ற ஏமாற்றங்கள் நடந்தேறி தான் வருகிறது. இவ்வுலகில் ஏமார்ந்துவிட்டால் சரிகட்டி விடலாம். ஆனால் மறுமையின் ஏமாற்றம் மிகப் பெரிய கைசேதத்தை தரும்.

அல்லாஹ்வின் கட்டளைகளையும் அவன் தூதரின் கட்டளைகளையும் அணுபிசகாது வாழ அருள்பாலிப்பானாக. பிறரை ஏமாற்றி மறுமையில் நாம் ஏமாறாமல் இருக்க வல்லோன் அல்லாஹ் வழிவகை செய்வானாக. இது போன்ற ஏமாற்று குணங்களை விட்டும் அல்லாஹ் நம் அனைவரையும் பாதுகாப்பானாக!!! ஆமீன் ஆமீன் யாரப்‌ல் ஆலமீன்  
தகவல் வழங்கியவர்கள்:             
நஸீர்   மிஸ்பாஹி,ஹள்ரத்                                             
பாதுஷா ஹள்ரத்
ஷேக் ஆதம் ஹள்ரத்,                                   
முஹம்மது இலியாஸ் ஹள்ரத்,                              
அஜீஸ் ஃபைஜீ 

 மற்றும் சில இணையதளங்களிலிருந்து மேலதிக தகவலோடு தொகுத்து வழங்கியவர்: பீர் முஹம்மது,ஃபைஜீ 

4 comments:

அல்ஹம்து லில்லாஹ்

அல்ஹம்து லில்லாஹ் மிக அருமையான பதிவு. இதற்காக உதவிய எல்லோருக்கும் JAZAAKALLAH. ரப்புல் ஆலமீன் நம்முடைய இந்த முயற்சியை ஏற்றுக்கொண்டு தக்க சன்மானங்களை வழங்குவானாக ஆமீன்

இன்றைய காலத்திற்கு ஏற்ற அற்புதமான நவீன கருத்துக்களை மிகவும் இலகுவாக பதிந்த மௌலவி அப்பாஸ் ரியாழி அவர்களுக்கு பாராட்டும் துஆவும் .

Post a Comment